இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

மீண்டும் ஓரு விடியல் கதை திரி

Matharasi

Moderator
அத்தியாயம் 23

“ அம்மாடி சாரதா நீ திலகாவையும் பாரதியையும் வீட்டுக்கு அழைத்துச் செல், குடிக்க ஏதாவது கொடு, விளக்கத்தை நான் வந்து தருகிறேன்”, என்று அவர் கூற, “ மாமா”, என்று சாரதா அம்மா அகிலனை பார்க்க, “ உன் மகன் தான், தொலைந்த என் பேரன் தான், உன் தாய்மை என்றும் பொய் உரைக்க வில்லை, அந்த தெய்வமும் நம்மை கை விடவில்லை”, என்றார் அவர் பரிதவிப்புடன். “ அகிலா”, என்ற தன் மகவை பூரிப்போட அனைத்துக் கொண்டார் அவனின் அன்னை. இதில் முற்றிலும் மூர்ச்சை ஆகிப்போனது திலகாவும் அகிலனும்தான்.

தாத்தா, “ பரதா”, என்றவுடன் அதுவரை அமைதியாக நின்றவன், “ தாத்தா”,என்று அவரை ஆழத் தழுவிக் கொண்டான். “ ஏன்டா ஒரு பிரச்சனை என்றால் கூட, என்னை அழைக்கவில்லை”, என்றார் குற்றச்சாட்டாக . “அது”, என்று அவன் தயங்க, “ சில விஷயங்கள் அது பெரியவர்கள் சொன்னால் தான்”, என்று அவர் கூற உங்களின் அனுபவம் கூட என் வயது கிடையாது தாத்தா”, என்று பரதன் தன் தவறை ஒப்புக் கொண்டான் . “என்னடா உன்னோட தம்பி இந்த உலகத்திலேயே இல்லையோ”, என்று அகிலனை அவர் வம்பு இழுக்க, “ நீங்கள் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் அவர்கள் விடுபடவில்லை”, என்றான் பரதன்.

“ விளக்கங்கள் கொடுத்தால் தான் அதிர்ச்சி விலகும், அதற்கு முன் நீங்கள் குடிக்க வேண்டிய காரியத்தை கவனியுங்கள் அவன் நம் பாதுகாவலர்கள் பிடியில் இருக்கிறான். நாளை மறுநாள் மருத்துவ பரிசோதனைக்கு முன் உங்களைப் பற்றி முழு விவரம் வெளிவந்துவிடும் ஆதலால் கவனம் தேவை”, என்று பரதன் இடம் கூறியவர் ,சாரதா அம்மாவிடம் திரும்பி, “ நீ அவர்களை அழைத்து செல், மதிய உணவு வந்துவிடும், நான் இங்கே சில அலுவல்களை இவர்களுடன் முடித்துவிட்டு வருகிறேன்”, என்று பரதனையும் அக்கிலனையும் அழைத்துக் கொண்டு முதல்வர் அறையை நோக்கி சென்றார்.

அங்கே சென்றும் கூட அகிலன் அமைதியாகவே இருந்தான். அவனால் எதையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எல்லாவற்றையும் விட இதற்கு எப்படி ரியாக்ட் செய்வது என்று அவனுக்கு சத்தியமாக தெரியவில்லை. பரதன் பெரிய வசதியான இடத்தை சேர்ந்தவன் என்று அவனின் அனுபவம் அவனுக்கு கூறியது தான். ஆனால் இவ்வளவு பெரியது என்று நினைக்கவில்லை. ஒரு நேரம் அவனுக்கு தோன்றும் இவரோடு நாம் பிறந்திருப்போமா என்று ,மறு நேரம் ரொம்ப ஆசை வளர்க்காதே அகிலா அவர்கள் ஏதோ நல்ல மனிதர்கள் உன்னை தன் உடன் பிறந்தவன் போலவும் மகனாகவும் நடத்துகிறார்கள். அதற்காக அது உண்மையாக இருக்கும் என்று பேராசைப்படாதே என்று அவன் மனது அவனை சமாதானப்படுத்தும். ஆனால் இன்று அது அனைத்தும் உண்மை நீ இந்த வீட்டு வாரிசு தான் என்று அவனுக்கு அங்கீகாரம் கொடுத்து விட்டார்கள். நீ இனிமேல் அனாதை இல்லை, என் பேரன், மகன் ,தம்பி என்று என்னை கொண்டாட என்னை சுற்றி எத்தனை உறவுகள் ,என்று அவன் நினைக்கும் போதே அவன் மனதில் இவ்வளவு நாள் குடிகொண்டிருந்த அந்த அனாதை என்ற எண்ணம் கொடுத்த வலிகள் அத்தனையும் கண்ணீராக வெளி வந்தது .

அவனையே பார்த்துக் கொண்டிருந்த பரத்வாஜ் தாத்தாவிற்கு புரிந்தது. அவர்களின் பின்னாடியே வந்த முதல்வரை, “ சார் நீங்க மதிய உணவிற்கான அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்து விட்டு வாருங்கள்”, என்று கூறி அவரை அனுப்பினார் .அவரும் இவர்களுக்கு தனிமை தேவை என்று அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அகிலனின் அசைவற்ற பார்வையும் அவனின் கண்களில் இருந்து வளிந்த கண்ணீரும் அவனின் இத்தனை நாள் போராட்டத்தை எடுத்துரைக்க. எவ்வளவு செல்வ செழிப்போடும் பாசமலையில் வளர்ந்திருக்க வேண்டியவன் என்ற உண்மை அவரின் முகத்தில் அறைய, “ தாத்தாவை மன்னிப்பாயா அகிலா”, என்று அவரின் குரலில் அவரிடம் அடைக்கலம் புக நினைத்த மனதை, மூளை சற்று தயக்கத்தை உண்டாக்க, அவரை நெருங்காமல் தள்ளி நிற்க. இந்த உணர்வு போராட்டத்திலும், இனி நடக்கப் போகும் பிரச்சனைகளின் யோசனையிலும் இருந்த பரதனை அவர்களின் உணர்ச்சி தழும்பிய குரல் கலைத்தது .தானும் நடப்புக்கு வர, “ தாத்தா” என்ற தன் தம்பியின் ஒதுக்கத்திற்கு காரணம் புரிய, அவனை ஒரு கை வளைவுக்குள் வைத்து அனைத்து மற்றொரு கைகளால் அவரையிம் சேர்த்து அனைத்துக் கொண்டான் .

அந்த அனைப்பில் திடம்பெற்ற அகிலன், விலகி அவரின் கால்களில் பணிந்தான். அவரும் பரதனும் பதறிக் கொண்டு அவனை தடுத்து மீண்டும் அவனை அனைத்துக் கொண்டனர் .கொஞ்சம் கொஞ்சமாக மீண்டான் அகிலன் , மீண்டவன் அவனே , “நமக்கு நிறைய முக்கிய அலுவல்கள் இருக்கிறது”, என்று கூறி அந்த உணர்ச்சி போராட்டத்திற்கு ஒரு முடிவையும் கொண்டு வந்தான்.

அதில் பரதன் புன்னகைத்துகொண்டு, “ இதுதான் என் அகிலன், என்னை விட பொறுப்பானவன்”, என்று அவனை பாசத்தோடு பார்த்தான். “டேய் அவன் அப்படியே என் மகனைப் போன்று, இவனின் புகைப்படத்தை முதலில் பார்த்தபோது எனக்கு தோன்றியது இவன் என் பேரன் தான் என்று, ஏன்னென்றால் இவனிடம் உன் அப்பாவின் நிமிர்வு இருந்தது. அதேபோல் அவனின் வாழ்க்கை முறை, திலகாவை காப்பாற்றி பேணிய குணம் , அவளைப் பற்றி அறிந்தும் அவளை விட்டு ஒதுங்காமல் இன்றுவரை அவளுக்கு பக்கபலமாக நின்றது, அனைத்தும் தான் என் நினைப்பு உண்மை என்று உறுதி செய்தது. அதுபோக உன் அன்னையின் பரிதவிப்பு நீ அவனிடம் கண்ட பிடிப்பு .அது அனைத்தும் 100% என்று உணர்த்தியது. இது எல்லாம் நம் உணர்வு தான் ஆனால் நம் பங்குதாரருக்கு குடும்ப உறவுகளுக்கு இது போதாது .அதனால் அதற்கான ஆதாரம் நீங்கள் நேற்று எடுத்துக் கொண்ட பரிசோதனையின் முடிவு. கிட்டத்தட்ட 99% டி என் ஏ ஒத்துப் போயிருக்கிறது”, என்றார் ஒரே மூச்சாக .பரதன் அவரை கர்வமாக பார்க்க ,அகிலன் பிரம்மிப்பாக பார்த்தான்.

“ எவ்வளவு நிதானம் எங்கே இருந்தாலும் அவரின் கண் பார்வைக்கு அனைவரையும் அரவனைக்கும் பண்பு”,என்று அவரை பிரம்மிப்பாக பார்த்தவனை , “ டேய் இது நாம் நம் ஒருவரை ஒருவர் புகழ்கிற நேரம் கிடையாது. நாம் ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம். எனக்கு என்னவோ நம்மை சுற்றி மிகப்பெரிய சதிவலை பின்னப்பட்டிருப்பது போல் தெரிகிறது. அதுபோக திலகாவின் கொழுந்தன் மிகவும் மோசமான பயங்கரமானவன் .சும்மா இருக்க மாட்டான் திலகாவும் குழந்தைகளும் பத்திரம். எப்படியும் நாளை அல்லது மறுதினம் உங்களைப் பற்றின தகவல் வெளியே வந்துவிடும் .அதற்குள் நாம் முந்திக் கொள்ள வேண்டும்”, என்று முடித்தார்.

“ தாத்தா அந்த மருத்துவ பரிசோதனை முடிந்து அப்புறம் எங்களை பற்றின தகவல் வெளியே வரட்டுமே ,ஏற்கனவே இதில் எத்தனை மாணவர்கள் சிக்கி இருக்கிறார்கள் என்று தெரியாது .அதிலும் அவர்களை அது எத்தனை சதவீதம் பாதித்திருக்கிறது என்ற தெரிந்த பின்பு தான் அவர்களின் பெற்றோர்களிடம் பேசிய அவர்களை சிகிச்சைக்காக அழைக்க முடியும் .இப்போது தெரிந்தால் அவன் வெளியே வர மாட்டான்”, என்று பரதன் கூற, அதற்கு அகிலனோ , “நிச்சயம் நாம் யார் என்று வெளியே தெரிந்தால் அவன் வருவான் .இன்னும் வேகமாக செயல்படுவான் நம்மை அழிக்க”, என்றான் அவன் உறுதியாக , “எப்படி சொல்கிறாய்”, என்றான் பரதன் கேள்வியாக, “ அண்ணா ஏற்கனவே இந்த விஷயத்தில் அவன் திட்டம் கிட்டத்தட்ட வெற்றி பெற்றது போல் .அதுபோக நாம் பரிசோதனை என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. ஆதலால் நம் இவ்வழியில் அவனை சந்தேகப்படுகிறோம் என்று அவனுக்கு தெரியாது. அதனால் நிச்சயம் நம்மை அழிப்பதில் அவன் பின்வாங்க மாட்டான். முதலில் நம்மிடம் சிக்கி உள்ள கையால்லை நன்றாக கவனிக்க வேண்டும் .ஏதாவது தெரியுமா என்று பார்க்க வேண்டும்”, என்றான் அகிலன் பதிலாக.

“நம் தொழில் முறையில் இவ்வளவு கேடு தனமான செயல்கள் செய்யும் அளவுக்கு எதிரிகள் யாரும் இல்லை. எல்லோரையும் நன்கு கண்காணித்தும் விசாரித்தும் விட்டேன்”, என்றார் பெரியவர். “ தாத்தா அவள் வள்ளியை நீங்கள் விசாரித்த போது சொன்னீங்கதானே ஒருத்தர் என்று பின் எதுவுமே தெரியவில்லையா”, என்றான் பரதன் அவருக்கு முன் நடந்ததை நினைவூட்டும்,விதமாக.

“ விசாரித்தேன் ,ஆனால் அப்போது உன்னை மீட்டு எடுக்கவே எனக்கு நேரம் சரியாக இருந்தது .அதனால அதை ரொம்பவும் விசாரிக்கவில்லை”, என்றார் கவலையோடு. அகிலன் நினைவு வந்தவனாக , “அண்ணா உங்களுக்கு எதிரி யாரும் எதிலும்”, என்று பரதனிடம் கேட்க, “ எனக்கு எங்கேடா இருக்க போகிறார்கள், நான் முதலில் மட்டுமே இங்கே படித்தேன். மற்றது அமெரிக்காவில் அல்லவா” என்று அவன் கூறிக் கொண்டே இருக்கும் போது, “ டேய் பரதா நீ கோகோ வீரனாக பள்ளியிலும் கல்லூரிலும் இருக்கும்போது ஒருவன் அடிக்கடி பிரச்சினை பண்ணுவான் அல்லவா”, என்று அவன் பெயர் தெரியாமல் அவர் தடுமாறினார்.

“ யாரை சொல்கிறீர்கள்”, என்று பரதன் யோசிக்க , “அவன் கூட ஏதோ ஒரு மில் ஓனர் மகன்தான் நமது கோவையில்”, என்று இருவரும் யோசிக்க, “ ஆமா தாத்தா பி ஆர் பி மில் ஓனர் மகன் கார்த்திகேயன்”, என்றான் பரதன் நினைவு வந்தவனாக, “ ஆனால் அவன் அந்த கடைசி போட்டியில் என்னிடம் தோற்றபோது ,கத்தி விட்டு சென்றவன் தான் பின் அவனை நான் எங்கும் பார்க்கவில்லை, அவனா”, என்று யோசித்த பரதன், “ டேய் அப்போ அவன்……. திலகாவையும் பிள்ளையையும் ஓட ஓடத் துரத்திய திலகா மாமனாரின் தம்பி மகன் கார்த்திகேயனும் இவனும் ஒரே ஆளா”, என்று தாத்தா கேட்க, “ தெரியலையே தாத்தா நான் அவனை எல்லாம் ஒரு ஆளாக கூட நினைக்கவில்லை”, என்றான் பரதன்.

“ அண்ணா அப்படி இல்லை, தாத்தா சொல்லியது போல அவன் நல்லவன் இல்லை என்பதை விட கேடுகெட்டவன்”,என்ற அகிலன், “ தாத்தா எதற்கும், அண்ணனின் மீது பகை கொண்டவனும் இந்த கார்த்திக்கேயனும் ஒன்றா என்று விசாரிக்க சொல்லுங்கள்”, என்றான் அவனே தொடர்ந்து. “ சரி”, என்றார் தாத்தா, “ பரதா திலகா விஷயம்”, என்று தாத்தா ஆரம்பிக்க, “ அது தாத்தா”, என்று அவன் தயந்த , “நீ கையில் விழுவாயோ காலில் விழுவாயோ, ஆனால் இன்னும் ஒரு பத்து நாள் தான் உனக்கு அவகாசம் ,அதற்குள் நம் குல வழக்கப்படி கோயம்பத்தூரில் மருதமலை முருகன் கோயிலில் திருமணம் நடைபெற்றால்தான், நாம் நம் தொழில்முறை உறவுகளுக்கும் குடும்ப உறவுகளுக்கும் முறைப்படி அதை அறிவிக்க முடியும். அவர்கள் இருவருக்கும் தகுந்த மதிப்பு அப்போதுதான் கிடைக்கும்”,என்றார் பொறுப்பான குடும்பத் தலைவராக.

“ ஆமா அண்ணா அந்நேரம் அவர்கள் அதிர்ச்சியில் இருந்தார்கள் அக்கா”, என்று அகிலன் ஆரம்பிக்க, பரதன் பார்த்த தீ பார்வையில், “ சரி சரி அண்ணி, இப்போ அது தெளிந்திருக்கும். அதனால் வேண்டுமானால் நான் தாத்தா அம்மா நீங்கள் அவர்கள் காலில் விழுவதற்கு வசதியாக வெளியே எங்காவது”, என்று அகிலன் நகைக்க, “டேய் நானே அவளை எப்படி சமாளிப்பது, என்று யோசித்தால் நீ வேறு ஏண்டா”, என்று பரதனை அன்பாகத் கடிந்தான்.

“டேய் 32 வயது காளை என் பேரன் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தால் ,நீ என்னடா”, என்று அவர் மேலும் பரதனை கிண்டல் செய்தார். ஒருவாறு அவர்கள் இருவரும் அந்த ஆசிரியரை காணச் செல்ல தாத்தா வீட்டை நோக்கி சென்றார்.

தொடரும்
 

Matharasi

Moderator
அத்தியாயம் 24

சாரதா அம்மாவுடன் சென்ற பிறகு விட்டத்தை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தால் திலகா. அவர் எவ்வளவு கூறியும் அவர் கொடுத்த பழச்சாற்றை அருந்த மறுத்துவிட்டால். அவளால் நம்ப முடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை .அவளுக்கு பரதன் நினைப்பு தெரியும் ,ஆனால் அவன் வீட்டு பெரியவர்களும் இதற்கு இசைந்து போவார்கள் என்று . ஒரு நிமிடத்தில் அனைத்தையும் மாற்ற முடியும் என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவள் மனதோ ஒரு நொடியில் தானே உன் வாழ்க்கை தலைகீழாக மாறியது என்று எடுத்துரைக்க,அவள் மனதிற்குள் புலம்பித் தவித்து தான் போனால். இன்னும் ஒரு எண்ணமாக அந்த கொடியவனிடம் இருந்து தன்னையும் தன் குழந்தையும் பாதுகாத்துக் கொள்ள இது ஒரு சிறந்த வழி தான், ஆனால் இது இதோடு நின்று விடக்கூடியது இல்லையே, பரதனின் தனிப்பட்ட வாழ்வு, என்னதான் பாரதியை அவர்கள் பேத்தி கொள்ளுப்பேத்தி என்று ஏற்றுக் கொண்டாலும், என்று அனைத்து உண்மையும் நிதர்சனமாக அவளை குழப்ப தன்னிலை இழந்தவல் தன் பழைய வாழ்க்கைக்குள் பயணிக்கத் தொடங்கினால் .

ஒரே மகளாக ராஜேந்திரன் ராசாத்தி தம்பதியருக்கு பிறந்தவள். செல்வத்தில் மிகுதி இல்லை என்றாலும் ,இருப்பதை வைத்து அவளை சந்தோஷமாகவும் நிறைவாகவும் எந்த ஒரு குறைவும் இல்லாமல் நல்ல ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளியிலும் கோவையில் பிரசித்தி பெற்ற கல்லூரியிலும் அவளைப் படிக்க வைத்தனர். படிப்பை அவள் முடிக்கும் வருடம் அவளுக்கு திருமணம் கைகூடி வந்தது. மாப்பிள்ளையும் செல்வ செழிப்பு மிக்க குடும்பம் ராமர் சீதாவின் ஓரே புதல்வன் ராகேஷ். தன் குடும்பத் தொழிலான பி எஸ் ஆர் துணி மில் ஆலையை நடத்தி வந்தான். மாப்பிள்ளையிடம் எந்த ஒரு குறையும் இல்லாமல் போக ராஜேந்திரனுக்கு மறுக்கும் எண்ணம் எழவில்லை. அவள் இறுதி வருட முடிக்கும் முன்னே திருமணம் நடைபெற்றது. அது முடிந்த கையோடு திலகா கருவுற அவளால் தன் மீது படிப்பை முடிக்க முடியாமல் போனது. இரு குடும்பமும் பெறும் ஆவளாக குழந்தையை எதிர்பார்த்து இருந்தது. ராகேஷ் பொறுப்பான மகனாகவும் கணவனாகவும் நடந்து கொண்டான். ஆனால் அந்த வாழ்க்கையில் காதல் இருந்ததா என்று கேட்டால் அவளுக்கு தெரியவில்லை.

அவளுக்கும் அந்நேரம் அவ்வளவு புரிதல் முதிர்வு இருக்கவில்லை. அந்நேரம் ராகேஷுக்கு வெறும் 24 வயது தான் .அவ்வளவு முதிர்வு அவனுக்குமே இருக்கவில்லை. பாரதியும் பிறந்தால் .இரண்டு குடும்பத்து பெரியவர்களும் அவளை தாங்கினார்கள். ராகேஷுக்கு அவள் ரொம்பவும் செல்லம். வீட்டில் இருக்கும் நேரம் எல்லாம் அவளோடு தான். இந்நிலையில்தான் வினையாக வந்தனர் ராமனின் தம்பி சேகரின் குடும்பம் .தன் தொழிலை அனைத்தையும் இழந்து . அவர்களும் துணி மில் தான். அதுவும் பிரசித்தி பெற்றது தான்.

ஆனால் தன் மகன் கார்த்திகேயனின் நடவடிக்கையால் அனைத்தையும் இழந்து வந்தனர். அவனையும் தன் மகனாக ஏற்றுக் கொண்டார் ராமன். அவன் திருந்தி விட்டான் என்பதை நம்பினார். ராகேஷ் பிறந்ததிலிருந்து தனிமனிதனாக இருந்ததால், அண்ணா என்று பிரியமும் காட்டியவனை முழுமனதாக ஏற்றான்.

அவனை தொழில் பங்குதாராக இணைந்தும் கொண்டான். அந்த கால பழமொழி போல் நாய் வாலை நிமிர்த்த முடியாது உண்மையாகிப் போனது. கார்த்திகேயன் கெட்ட குணம் அவனை இருக்க விடவில்லை. ராகேஷிடம் நன்றாகவே நடந்து கொண்டாலும் மனதிற்குள் பொறாமை உணர்வு தலைவிரித்து ஆடியது. திலகாவிற்கு இவர்கள் வருகை ஏதோ அவளுக்கு நெருடலாகவே இருந்தது. சீதா அவளை நன்றாக இன்னுமொரு அன்னை போல் நடத்துவார். ஆனால். சேகரின் மனைவி அப்படி இல்லை என்னதான் தேன்னொழுக பேசினாலும் அவளுக்கு மனதிற்கு பிடிக்கவில்லை.

அதை விட கார்த்திகேயன் பார்வை அவளுக்கு ஆச்சத்தையே கிளப்பியது. பயந்த சுபாவம் நிறைந்த அவளால், அதை தன் கணவனிடம் கூட பகிர முடியவில்லை .அந்த அளவுக்கு இருவருக்கும் புரிந்தலும் இருக்கவில்லை. பாரதியும் நாள் ஒரு வண்ணமாக வளர்ந்தாள். அவளுக்கு சரியாக ஐந்து வயது முடிந்து மேலும் ஒரு இரண்டு மாதங்கள் இருக்கும், பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் அடி எடுத்து வைத்திருந்தாரல். புத்திசாலியான குழந்தை .

அன்று ராகேஷ் அவளையும் குழந்தையும் அழைத்துக் கொண்டு ஒரு திருமண வரவேற்பு சென்று திரும்பி கொண்டிருந்தனர். திடீரென வண்டியில் ப்ரேக் பிடிக்கவில்லை போல். வாகனம் ராகேஷின் கட்டுப்பாட்டில் இல்லை. அதனால் எதிரே வந்து லாரி தட்டி விட, வண்டி மொத்த கட்டுப்பாடு இழந்தது. வண்டி ஒரு மரத்தின் மோதி நின்றது.

குழந்தை பாரதி பின்னால் தூங்கிக் கொண்டு இருக்க, அவள் சாய்ந்து விழுகாதவாறு ஏற்கனவே பேபி சீட்டர் உதவியால் அவள் நகராத வண்ணம் லாக் செய்யப்பட்டு இருந்ததுனால் அவளுக்கு சேதாரம் இல்லை. ஆனால் திலகாவிற்கு அதிர்ச்சி மயக்கம் தான் . ராகேஷ்ஷுக்கு பலமான அடி மார்பில், முதலுதவி கிடைக்கப்பெற்று இருந்தால் பிழைத்திருப்பான். ஆனால் காலத்தின் விந்தை அவன் விதி முடிந்தது .ஒரு இரண்டு மூன்று நாளில் அனைத்து காரியமும் முடிய அப்போதுதான் பிரச்சனை ஆரம்பித்தது. இருகுடுமத்தாரும் உடைந்து போய் இருக்க, சேகர் மற்றும் அவரின் மனைவி ஆதிக்கத்தில் வீடு வந்தது. கார்த்திகேயன் மில்லை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டான் .ஆனால் அவர்கள் எதிர்பாராத ஒன்று, ராகேஷ் ஏதோ ஒன்றின் காரணமாக அனைத்தையும் பாரதி பெயரில் எழுதி திலகாவை கார்டியனாக ஆக்கி இருந்தான். என்னதான் கார்த்திகேயன் பாட்னராக ஆக்கப்பட்டு இருந்தாலும், அனைத்து உரிமையும் முடிவும் திலகா உடையதே இறுதியானது.



ஏற்கனவே அவள் பயந்த சுபாவம் பற்றி அறிந்த இருந்ததால் அவனுக்கு அவளைக் கைப்பாவையாக ஆக்கிவிட்டால் அனைத்தையும் சுலபமாக அடைந்து விடலாம் என்று திட்டம் தீட்டினான். முதலில் நல்லவன் போல் அவளுக்கு வாழ்வு தேவை என்று எல்லோர் மனதையும் கலையச் செய்தான். மனதளவில் அவனை எல்லோரிடமும் நல்லவனாகவே காட்டினான். இப்படி இருக்க முப்பது நாள் முடிந்த உடன் கோயிலில் வைத்து திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவானது. திலகாவும் அனைத்தையும் மறந்த நிலையில் இருந்தால். சீதாவுக்கும் ராசாத்திக்கும் இதில் உடன்பாடு வர மறுத்தது .ஏன் இந்த அவசரம் என்றே தோன்றியது. ஆனால் ஆண்கள் இருவரும் அவளுக்கும் குழந்தைக்கும் இதுதான் பாதுகாப்பு என்று கருதினர் .

திருமணத்திற்கு அனைத்து வேலைகளும் நடக்க ஆரம்பிக்க மில்லில் ஆதி காலம் முதல் பணியாற்றி வந்த சுவாமிநாதன் கணக்கர் கணக்குகள் முன்னுக்கு பின் இருப்பதாக ராமரை தனியை யாரும் அறியாத வண்ணம் சந்தித்து கூறிச் சென்றார் .அவரின் மேல் ராமருக்கு அதிக அளவு நம்பிக்கை. எப்போதும் இல்லாத வண்ணம் அவர் இப்போது வந்து கூறியது அவருக்கு நெருடலை தர தன் கவலைகளை பின்னுக்கு தள்ளி அலுவலகம் செல்ல ஆரம்பித்தார். சேக்கரும் எவ்வளவோ நல்லவிதமாக அவரை தடுக்க வர ராமருக்கு சங்கேகம் வலுத்தது. தன் நம்பிக்கை கூறிய ஆட்கள் இடம் விசாரித்த போது கார்த்திகேயன் சேகர் மேல் தவறு இருப்பது உறுதியானது. பாவம் மனிதன் சற்றே அதிர்ந்து தான் போனார். அவர்களை நேரே கூப்பிட்டு விசாரிக்க சுயம் வெளியே வந்தது.

அடியாட்களை வைத்து அனைவரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான் கார்த்திக். திலகாவையும் பாரதியும் தனியாக சிறை எடுத்தான். அவளை அவன் நெருக்கம் முயல பொங்கி எழுந்தால் பெண்ணவள். ஆனால் குழந்தையை வைத்து அவளுக்கு பயத்தை மூட்டினான். இறுதியில் நல்லபடியாக திருமணம் செய்து கொண்டால் மட்டுமே உயிர் தப்பிக்க முடியும் என்ற நிலைக்கு அவளை தள்ளினான்.

அரும்பாடுபட்டு நாலு பேரும் ஒன்றாக சேர்ந்து அங்கே இருந்தவர்களை திசை திருப்பி குழந்தையையும் அவளையும் மதுரை செல்லும் இரவு ரயிலில் ஏற்றினர் .ஆனால் அவளின் துரதஷ்டம் ரயில் மதுரையை அடையும் முன்னே கார்த்திகேயனின் ஆட்கள் ரயிலுக்குள் உள்ளே புகுந்தனர்.

அவள் எப்படியோ அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடும் ரயிலில் இருந்து அவள் கீழே குதித்தால். அவள் குதித்த இடம் ரொம்ப தாழ்வாக இல்லாததால் சிறு சிறு காயங்களோடு பிள்ளையுடன் அவள் பிழைத்தாள். எங்கு செல்வது என்று அறியாமல் ஒரு இரவு ஒரு பகலை மரங்கள் நிறைந்த பகுதியில் கழித்தால். அடுத்த இரவு தான் அகிலனின் கையில் கிடைத்தால்.

அகிலன் என்று நினைத்தவுடன் எப்போதும் ஏற்படும் பிரமிப்பு இப்போதும் வந்தது. அவளை பூ போல் தாங்கியவன். மகளைப் போல் பாதுகாத்தவன். அன்னையை இருந்து அரவணைத்தவன். நிச்சயம் அவனுக்காவது வாழ வேண்டும் என்ற முடிவோடு தான் அவன் கூறியவற்றை பழகிக்கொண்டு அவனோடு நடை பயின்றால். அதில் வெற்றியும் பெற்றாள். இவ்வாறு அவள் அவளுக்குள் உழன்று கொண்டிருக்கா, “ பாப்பா”, என்று அவளுக்குள் எப்போதும் ஒலிக்கும் குரல்கள் ஒலிக்க ஆரம்பிக்க, அவளின் சிந்தனையை தடை செய்தது, “ திலகமா”, என்று கூப்பிட்டு அவள் தலையை வாஞ்சையுடைய தடவிய அந்த முதியவரின் குரல்.

அதில் தன்னிலை அடைந்தவள் ,இந்த குரலின் சொந்தக்காரருக்கு மரியாதை கொடுக்கும் விதமாக எழுந்து நின்றால். ஆனாலும் அவளின் பார்வை ஏன் இப்படி செய்தீர்கள் என்று அவரை குற்றம் சாட்டியது போல் இருக்க , “அம்மாடி இன்று நான் உனக்கு செய்தது தவறாக இருக்கலாம் .ஆனால் என்றாவது ஒருநாள் நிச்சயம் உனக்கு நான் நல்லது செய்ததை உணர்வாய் . நான் இப்படி கூறவில்லை என்றால் பிரச்சனை பெரிதாக ஆகியிருக்கும். அந்த கயவனுக்கும் நீங்கள் இருக்கும் இடம் தெரிந்திருக்கும். நீ கேட்கலாம் பரதன் தானே இவ்வாறு நடந்ததற்கு காரணம் என்று, ஆனால் காரணம் இல்லாமல் காரியம் கிடையாது அவன் பக்கத்தை அவன் வந்து கூறுவான்”, என்றவரை எதுவுமே கூறாமல் வெறுத்து பார்த்துக் கொண்டிருந்தாள். “ உனக்கு உன் அம்மா அப்பா அத்தை மாமாவை பார்க்கனும் போல் இருக்கிறதா”, என்றார் கேள்வியாக .

அவள் நினைக்காத நாளில்லை, அந்த கயவன் அவர்களை உயிரோடு விட்டு வைத்திருப்பான் ,என்ற நம்பிக்கையும் அவளுக்கு சிறிதும் இல்லை .அவள் ஆமாம் என்பது போல் தலையை அசைக்க, உடனே தன் கைபேசி எடுத்து யாருக்கோ அழைத்தார். மறுமுனையில் தொடர்பு கிடைத்ததும் ராமரிடம் கைபேசியை கொடுக்குமாறு கூறினார். அவரின் நிமிர்ந்த பேச்சே அவர், அவரின் ஆட்களிடம் பேசுகிறார் என்பதை கூறியது.

“ நல்லா இருக்கிறாயா”, என்று இவர் கேட்க அங்கு என்ன கேட்கப்பட்டதோ கூறப்பட்டதோ, “ நன்றாக இருக்கிறாள். என் பேத்தியாக என் வீட்டு மருமகளாக இன்னும் அதிக பாதுகாப்போடு இருப்பாள்”, என்றார் இவர், இவளை பார்த்துக் கொண்டே. பின் அவரே, “ நீ எதற்கும் கவலைப்படாதே, சிங்கமாக சிறுத்தையாக பிள்ளைகள் பரதன் அகிலன் இருக்கிறார்கள். அவள் யார் என்று தெரியும் முன்னரே அவர்களை பாதுகாத்துவன் அகிலன் .இப்போது அவள் அண்ணி அம்மாவின் மறு உருவம், பாரதி தன் மகவு விட்டுவிடுவானா என்ன, எல்லாவற்றையும் மேல் அவர்கள் பரதனின் சொந்த உடமை ஆதலால் இனிமேல் பயமில்லை. நீ பேசு அவளிடம் அவள் திகைத்து மிரண்டு இருக்கிறாள்”, என்று கூறி கைப்பேசியை அவளிடம் நீட்டினார்.

கைகள் நடுங்கிக்கொண்டே அதை பெற்றவள் அதை செவியில் வைக்க, “ திலகா”, என்று அவரின் குரலில் நடுக்கத்தை உணர்ந்தவள் எவ்வளவு நாள் ஆகிவிட்டது அதை கேட்டு. இனிமேல் வாழ்நாளிள் கேட்க முடியுமா என்றூ பரிதவித்த ஒரு குரல். நித்தம் மனதிற்குள் அவர்களின் பாதுகாப்பிற்காக வேண்டிக் கொண்டே இருக்கிறாள் அல்லவா. அவர்கள் நலமோடு இருக்கிறதாக பறைசாற்றியது இந்த குரல். இவள் மௌனமாக இருக்கவும் அவர் மறுபடி அழைக்க, அதில் அவள் கால்கள் நடுங்கி அப்படியே கீழே சரிந்து அமர்ந்தால் .

அதில் , “திலகமா”, என்று முதியவர் அவளை தாங்க வர, அவரின் குரலில் சாரதா அம்மா வந்து அவளோடு அமர்ந்த ஆதரவாக முதுகை நீவீனார். இவர்களின் பதட்டமான குரல் அங்கும் பதற்றத்தை கொடுக்கச் செய்ய , “அம்மாடி மாமா டா ஏதாவது பேசு”, என்று அவளிடம் மன்றாட ஆரம்பிக்க, அவள் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது .மொத்தமாக மூர்ச்சையாகிப் போனால். அப்படியே சாரதாம்ம் மீது மயங்கி சரிந்தால்.
தொடரும்
 

Matharasi

Moderator
அத்தியாயம் 25

கைபேசியை வாங்கியவர், “ ராமா அவள் உணர்ச்சியின் பிடியில் தவிக்கிறாரள். பரதன் ஒரு முக்கிய அலுவல்களுக்காக வெளியே சென்று இருக்கிறான் வந்தவுடன் அவன் இருக்கும் தருணம் பேச சொல்கிறேன்”, என்றார் , அங்கு என்ன சொல்லப்பட்டதோ, “ பாப்பு குட்டி”, என்று இவர் அழைக்க, உள்ளே தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த பாரதி சிட்டாக பறந்து வந்து, “ என்ன கோல்ட் கிராண்ட் பா”, என கேட்டது அவரின் அருகில் வந்து நின்று.

அதன் பின் தான் தன் தாய் மயங்கி படுத்திருப்பதை பார்த்ததும் , சிறிதும் அலட்டாமல், “ அகிமா அம்மா இப்படி இருந்தால் தண்ணீர் தெளிக்கணும் ,முகத்தை தண்ணீர் வைத்து துடைக்கணும் என்று சொல்வார்”, என்று கூறி மேஜையின் மீது இருந்த தண்ணீரை எடுத்து அவள் கூறியதை செய்தும் காட்டியது. அதில் திலகா கண் விழித்தால். பாரதியின் செயலில் முதியவர், சாரதா அம்மா ,கைபேசியில் இருந்த ராமருக்கு தன் பேத்தியின் தெளிவு ஆச்சரியத்தை கொடுத்தது.

திலகா எழுந்தவல் கைபேசியை அவரிடம் இருந்து பற்றி, “ மாமா” என்றால். அந்த குரலில் இருந்த பாசத்திலும் பரிதவிப்பிலும் ராமர் மூர்ஜனையாகிக் போனார் .தன் மகனை இழந்து மற்றும்மின்றி தன் மருமகளையும் பேத்தியும் பாதுகாக்காமல் முடியாமல் அவர்களையும் துளைத்து, நித்தமும் துடித்த மனதிற்கு இன்று ஒரு முடிவு வந்தது.

“ அம்மாடி நீ குழந்தை நன்றாக பத்திரமாக இருக்கிறாயா”, என்றார் தன் மனவேதனையை கட்டுப்படுத்தி. “நான் உங்களிடம் பேசுவதே அதற்கு சான்று. மாமா , அத்தை, அம்மா, அப்பா உங்களுக்கு ஒன்று ஆகவில்லயே”, என்ற அவள் வினாவ, “ நாங்கள் இருக்கிறோம்மா, என்றாவது உன்னையும் குழந்தையும் பார்ப்போம் என்று நம்பிக்கையோடு, உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்”, என்றார் அவர் விட்டெருத்தியாக.

“ நீங்க எப்படி அவன்”, என்ற அந்த கயவனின் நினைவில் அகமுமம் புறமும் நடுங்க அவள் கேட்க , “அம்மாடி”, என்றவர் , “நாங்கள் நீ போன ஒரு மாதத்தில் அவன் பிடியிலிருந்து பரத்வாஜ் அய்யா எங்களை காப்பாற்றிவிட்டார். ஆனாலும் நாங்கள் அவன் இடத்தில் தான் இருக்கிறோம் .எங்களை அவனால் ஒன்றும் செய்ய முடியாது.ஐயா உன்னை தேடாத இடமும் இல்லை”, என்று அவர் அனைத்தையும் கூற ,அவள் நன்றி மிகுந்த விழிகளோடு அவரை நோக்கினார். அதை ஏற்க்கும் விதமாக அவரும் தன் கண்களை மூடி திறந்தார்.

“ அம்மாடி அவன் வெறிகொண்ட மிருகம் போல் அந்த சொத்திற்காக உன்னையும் குழந்தையும் தேடிக் கொண்டிருக்கிறான். அதனால் தான் எங்களால் வெளிப்படையாக உன்னை தேட முடியவில்லை. நீ ஐயா சொல்வதைப் போல் கேட்டு நட ,அதுதான் உனக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பும் கூட. நான் அதிகநேரம் பேசவும் முடியாது. அவன் கண்காணித்துக் கொண்டே இருப்பான்”, என்றார் அவளுக்கு சூழ்நிலையில் எடுத்துரைப்பது போல்.

பின் அவரே தொடர்ந்து, எனக்கு அத்தைக்கு உன் அம்மா அப்பாவும் நீயும் பரதனும் சேர்வதில் சந்தோஷம்தான். பாரதிக்கும் அதுதான் நல்லது”, என்றவர், “ குழந்தை”, என்றார் தயகத்தோடு, அவரின் பரிதவிப்பை புரிந்து கொண்டவள் , “பாரதி”, என்று அழைக்க, “ என்ன மா”, என்று அவளிடம் அவள் கேட்க, “ உன் தாத்தா பேசுகிறார்”, என்றால் அவள் .பாரதிக்கு யார் புதுசாக என்று நினைத்தாலும் தாயின் முகத்தில் இருந்த உணர்வு அவரிடம் பேசச் சொல்லியது.

“தாத்தா”, என்ற அவள் அழைக்க, கைபேசி வாயில் அதை கேட்ட அந்த தாத்தா அந்த குரலில் உடைந்து தான் போனார். “பாப்பா குட்டிமா”, என்று கொஞ்சி தீர்த்தார், அதற்குள் அருகே இருந்தவன் , “சார் அவர் வந்து விடுவார்”, என்று கூற , “அம்மாடி அம்மா கிட்ட நல்ல பிள்ளையாக இரு ,அம்மாவ பாத்துக்கோ. தாத்தா அப்புறமா பேசுறேன்”, என்று கூறி வைத்து விட்டார். இவள், “ அம்மா போன் கட் ஆகிவிட்டது”, என்று கூறி அவளிடம் கொடுத்துவிட்டு தோட்டத்திற்குள் புகுந்து கொண்டால்.

இவள் என்னவென்று முதியோரை பார்க்க, “ அந்த நாய் வந்து விடும் அதனால், அவர்கள் பாதுகாப்பு தான் இருக்கிறார்கள், நீ இதை குடிக்க ஓய்வுவெடு”, என்ற அவர் கூற அவள் தயங்க, “ உன்னோட சத்தியாகிரக போராட்டத்தை எல்லாம் உன் கணவனிடம் வைத்துக் கொள். அவன் தாங்குவான், நாங்கள் பாவம்”, என்று அவர் சிரித்து முகமாக கூறினாலும் ,அதில் பரதன் உன் கணவன் அதை நீ ஏற்க வேண்டும் என்று பொருள் ஒளிந்து இருப்பதை உணர்ந்தவள், மறுத்தும் இனி ஒரு பயனும் இல்லை என்று அதை வாங்கி குடித்தால் .

அதில் அவர் முகம் மலர்ந்தது. அதை கவனித்தவள், “ இதை நான் குடிப்பதனால் ,எதையும் ஒப்புக் கொள்கிறேன் ,என்று அர்த்தம் இல்லை”, என்றால் அவளும் மறைமுகமாக ,அதை சரியாக புரிந்து கொண்டவர் , “கணவன் மனைவி உறவுகுள் நாங்கள் தலையிட மாட்டோம். ஆனால் நான் இன்று பள்ளி அறிய அறிவித்ததை ,நாளையும் மறுநாள் உலகம் அறிய அறிவித்து விடுவேன். ஆதலால் அதற்கு ஏற்ப உங்கள் உறவை இருவரும் சீர்திருத்திக் கொள்வது உங்கள் கையில் இருக்கிறது. பாரதியின் வாழ்க்கையும் அடங்கும். அதில் அகிலனின் நிம்மதியும் அடங்கும்”, என்றார் .

அவரின் அனுபவம் அவளின் எண்ணோட்டத்தை அவள் எதை சொன்னால் யோசிப்பால் என்று அவர் அறிந்து கூறியதை உணர்ந்தவள், அவரை அவள் நிமிர்ந்து பார்த்தால். “ அம்மாடி நான் உன் மாமியாரின் மாமனார், என் மருமகளை தனியாக தவிக்க விட்டது போல் உன்னை விடமாட்டேன். அந்த காலத்தின் வரைமுறை என்னை தடுத்தது. அவளை தனிமையில் துயரிலிருந்து அவளை என்னால் மீட்க முடியவில்லை. ஆனால் உன்னை நிச்சயம் விடமாட்டேன். உனக்கு நான் இப்போது உன்னை கட்டாயப்படுத்துவது போல் உனக்கு தெரியலாம். நாளை உனக்கு நிச்சயம் நன்மையை பயக்கும்” என்றார். “ போ மா போய் ஓய்வெடு. நான் சொன்னதையும் சிந்தித்துப் பார்”, என்றார்.

அவள் அசையாமல் இருக்கவும், அவள் அருகே வந்த சாரதாம்மா, “ மனதை அலைப்பாய விடாதே, எதையும் யோசிக்காதே.நடப்பது நல்லது என்பதை மட்டுமே உறுதியாக நம்பு”, என்று அவளை அழைத்துக்கொண்டு போய் பாரதனின் அறையில் விட்டு வந்தார், அவள் அங்கு காலை வைத்தவுடன் அவனின் குரல் காதில் ஒலித்தது . முதல் முறையாக இவனிடம் இன்னும் ஜாக்கிரதியாக இருந்திருக்க வேண்டுமோ என்று தாமதமாகவே உணர்ந்தால். உரிமை இல்லாதபோதே அப்படி ஆடுவான் இனிமேல் தன்னை என்ன செய்வானோ என்று தோன்ற கட்டிலில் தோய்ந்த அமர்ந்தால்.

ஒன்றே ஒன்று நன்றாக அவளுக்கு விளங்கியது ,இந்த இடத்திலிருந்து மட்டுமல்ல இந்த உறவுகளிடத்தில் இருந்தும் இனிமே தள்ளிப் போக முடியாது. போனால் அவளே அகிலனை மறுபடியும் அனாதை ஆக்கியது போல் ஆகிவிடும். அவளுக்கு நன்றாக தெரியும் அவள் இன்றி அவன் இங்கு இருக்க மாட்டான். மற்றொன்று பாரதியை அனைவரும் நன்றாக பார்த்துக் கொள்கின்றனர். காலையில் அவள் கண்ட பாரதி பரதனின் உறவில் அவன் அவளிடம் தகப்பனார்ரின் அரவனைப்பையும் கண்டிப்பையும் அவனுக்கு பாரதி மேல் இருப்பதை கண்டு கொண்டால்.

இவர்கள் இருவருக்கும்காக அவள் இந்த வாழ்க்கையை வாழ்ந்துதான் ஆக வேண்டும். ஆனால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, ராகேஷ் உடன் வாழ்ந்த வாழ்க்கையை மறந்து பரதனிடம் என்று யோசிக்கும்போதே அவளுக்கு மூச்சு முட்டியது.

அவன் கார்த்திகேயனை நினைத்தவுடன் அவள் உடல் நடுங்க ஆரம்பிக்க, என்னை எதுவும் செய்ய முடியாது அகிலனும் பரதனும் விடமாட்டார்கள். எப்போதும் அகிலன் மட்டுமே நினைவு வரும் இந்த விஷயத்தில் இப்பொழுது பரதனும் அலையாமல் வந்தான். அதில் சோர்ந்து அப்படியே தன் கண்களை மூடினால். அவளுக்குள் அவர்கள் இருவர் இருக்கிறார்கள். ரொம்ப நாள் இருந்த வேதனை தன்னை பெற்றவர்களும் மாமனார் மாமியாரும் நன்றாக பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்ற உணர்வு அவளுக்கு தூக்கத்தை கொடுத்தது.

பரதனும் அகிலனும் இருவரும் ஒன்றாக அந்த பள்ளியின் தேவையில்லாத பொருட்களை சேகரித்து வைத்திருக்கும் அறைக்குள் நுழைந்தனர் .அவனை சுற்றி இருந்த நான்கு பாதுகாவலர்களுக்கும் பரதன் தன் கண்ணை காட்ட அவர்கள் அந்த அறையை விட்டு வெளியேறினர்.

ஏற்கனவே அவன் திலகாவை பேசியதில் பரதனிடம் வாங்கிய அடி அவனுக்கு நினைவுக்கு வர நடுங்கித்தான் போனான். பெரியவர் பேசியதில் அவர்களுக்குள் இருக்கும் உறவு புரிந்தது. அதுமட்டுமில்லாமல் அவன் செய்த செயல் இங்கே தெரிந்துவிட்டது என்றவுடன் தப்பிக்க தான் வழி தேடினான். ஆனால் அவன் அவர் பாதுகாவலரிடம் சிக்கிக் கொண்டான்.

இப்போது சீரும் சிங்கமாக இரு வேங்கைகள்ளாக உள்ளே நுழைந்தவர்களை கண்டு, அவனுக்கு அவன் எதிர்காலம் தெரிந்து போயிற்று .காரியத்தை முடிக்காமல் வெளியே சென்றால் அவன் கொன்று விடுவான். இப்போது இவர்கள் கையில் தான் அவசரப்பட்டு செய்த செயலால் மாற்றிக் கொண்டோமே என்று தன் அவசரத்தால் நேர்ந்த விபரீதத்தை உணர்ந்து புலம்பினான்.

“ சார் நான் தெரியாமல் செய்துவிட்டேன்”, என்று வாய்விட்டு கெஞ்ச ஆரம்பித்தான், ஏற்கனவே அவனின் கைப்பேசியை கைப்பற்றி அந்த துப்பறியும் நிறுவனத்தினரிடம் பாதுகாவலர்கள் மூலம் கொடுத்து அனுப்பி அதை பரிசோதனை செய்து அறிக்கை கேட்டிருந்தான் பரதன். அவன் வாய்விட்டு புலம்பவும் காதை இருவரும் ஒன்றாக குடைந்தனர். “என்ன அண்ணா ஆடு ரொம்ப புலம்புது. இன்னும் திருவிழா ஆரம்பிக்காமல் பூஜை போடாமல் எப்படி பலியிடுவது”, என்று நக்கலாக அவனைப் பார்த்து உரும்னான் என்று தான் சொல்ல வேண்டும். பரதனோ, “ நீ தான் டா, எப்ப ஆடு சிக்குனு காத்துகிட்டு இருந்த”, என்றான் தன் தம்பியை பார்த்து , “ஆமா காத்துகிட்டு தான் இருந்தேன், என்ன வேலை பார்த்திருக்கிறது ஆடு .எவ்வளவு தைரியம் என் காவலில் இருந்த என் அண்ணியை தப்பா பார்த்திருப்பான் பேசியிருப்பான். வேலைக்கு வந்தா எப்படி வேணும்னாலும் பேசுவானா. இவன் தன்னை பெற்றவளும் கூட பிறந்தவள் மட்டும் பெண் இல்லை வெளியே இருக்கிறவர்களும் பெண்தான். அதைக் கூட மண்ணிக்கலாம். ஆனால் பச்சை பயிறுங்க நாளைய சமுதாயத்தை சீர்கெடுத்து நாசமாக்கி இருக்கிறான். அதை மண்ணிக்கவே முடியாது”, என்றவன் தன் இரும்பு கால்களால் அவன் வயிற்றில் ஒரு உதை விட, நாற்காளியுடன் கட்டுப்பட்டு இருந்ததால் அப்படியே சரிந்து தன் உயிர் போக கத்தினான்.

“ சரிடா நீ உன்னோட ஆத்திரம் போக அடி ,ஆனால் நமக்கு இவன் யாருடைய அம்பு என்று மட்டும் தெரியனும்”, என்று கூடி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான் பரதன். ஏற்கனவே இவனிடம் அவன் வாங்கியதால், முதலில் அகிலன் கோபத்திற்கு பரதனுக்கும் இவன் தேவலை என்று அவன் கருதி இருக்க, அகிலனின் ஒற்றை உதையில் அவனின் சர்வமும் அடங்கியது இன்றும் நாம் நடந்ததை கூறவில்லை என்றால் நாம் இவர்களிடம் இருந்து பிழைக்க மாட்டோம் என்பது அவனுக்கு சர்வ நிச்சயம் ஆக தெரிந்து போயிட்டு.

“ சார் சார் நான் சொல்லி விடுகிறேன் என்னை ஏதும் செய்து விடாதீர்கள்”, என்று அவன் கெஞ்ச அகிலன் கட்டை அவிழ்க்க , அகிலனை தள்ளிவிட்டு அவன் ஓட பார்க்க, “ யாரிடம் உன் புத்தியை காட்டுகிறாய்”, என்று பரதன் தன் கோபத்தில் அவனின் மார்பில் ஓங்கி ஒரு குத்து விட அப்படியே நின்ற இடத்திலேயே ஒடுங்கி அமர்ந்தான் .அவனை மேலும் அகிலன் ஒரு உதைவிட, “ சார் போதும் கூறிவிடுகிறேன்”, என்றான் கெஞ்சலாக.

தொடரும்
 

Matharasi

Moderator
அத்தியாயம் 26

“நான் என் ஊர் சென்னை, வேலை இல்லாமல் இருந்தபோது , இந்த பள்ளியில் வேலை வாய்ப்பு உள்ளதாக செய்தித்தாள்ளிள் பார்த்து, இங்கே வந்து பணி அமர்ந்தேன் .அப்போதுதான் நான் இரவு பார்க்கு போகும்போது தன்ராஜ் என்பவரின் நட்பு கிடைத்தது. அவன் தான் எனக்கு வாங்கி தர ஆரம்பித்தான். எனக்கு செலவுக்கு காசு பணம் கொடுத்தான். அப்படி இருக்கும் போது தான் ஒரு மருந்தை கொடுத்து இங்கே மாணவர்களுக்கு பழக்க படுத்து மாறு கூறினான். நிறைய பணம் தருவதாகவும் கூறினான். பணத்துக்கு ஆசை பட்டு”, என்று அவன் கூற ஆரம்பிக்க ,அகிலன் அவன் வாயில் ஒரு குத்து குத்த அவன் வாயிலிருந்து ரத்தம் கொட்டியது.

“ சம்பாதிப்பதற்கு வழியா இல்லை இப்படி பிள்ளைகளை பாழாக்கி”, என்று அவன் கண்கள் கோபத்தில் ரத்தச் சிவப்பு ஏற, “சார் சார் சத்தியமா இனிமே இப்படி செய்ய மாட்டேன்”, என்றவன் அகிலனின் கால்களைப் பிடித்து கெஞ்ச ஆரம்பித்தான் .இவை அனைத்தையுமே மௌனமாகவே பார்த்துக் கொண்டிருந்தான் பரதன்.

“ சார் பரதன் சார் ப்ளீஸ் நான் இனிமேல் செய்ய மாட்டேன்”, என்று பரதனை பார்த்து கெஞ்ச, அவன் சட்டையை பிடித்து தூக்கியா அகிலன், “ டேய் நானாவது இதோடு உன்னை விடலாமா என்று யோசிக்கவாது செய்வேன். ஆனால் என் அண்ணன் உன்னை கொன்றுவிட்டு தான் மறு வேலை பார்ப்பார்”, என்று அவன் முடித்தான். “அவ்வளவுதானா அகிலா”, என்று அகிலனை பார்த்து பரதன் கேட்க, “ அண்ணா இவனை எய்தவனை முதலில் பார்ப்போம்”, என்று அவன் கூற நான், “ உன்னிடம் இன்னும் எதிர்பார்த்தேன்”, என்று தன் எதிர்ப்பை தெரிவித்தான் பரதன்.

“ அண்ணா நீங்கள் எதற்கு கூறுகிறீர்கள் என்று எனக்கு தெரிகிறது. அண்ணியை பேசியதற்கு எனக்கு இருக்கும் கோபத்திற்கு இவனை கொன்று இருக்கனும், ஆனால் இன்று எனக்கும் அவர்களுக்கும் கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரத்திற்கு இவனும் ஒரு வழியில் காரணம்தானே, அதனால் தான்”, என்றான் புன்னகையோடு, அதில் அந்த கயவனின் முகத்தில் இருந்த அச்சம் குறைய அதை ஒருவித கொடூர சிரிப்போடு பார்த்த பரதன், “ ஆனால் பாரேன் அகிலா எனக்கு உன்னை போல் எல்லாம் நல்ல மனது கிடையாது”, அதனால் என்று பரதன் அந்த கயவனை பார்க்க ,அவனுக்கு முதுகு தண்டுவடம் கூட பயத்தில் சில் என்றானது. பரதன் அதே பார்வையில் அவனின் நெருங்க, “ சார் சார் என்னை ஒன்னும் செய்து விடாதீங்க”, என்று அவன் கெஞ்சி கொண்டே பின்னோக்கி நகர, ஏன்னென்றால் அவனை எழுந்திருக்க முடியாத வண்ணம் அகிலனின் அடி அவனை முடக்கி இருந்தது.

பரதன் மௌனமாகவே நடந்து கொண்டு அவனின் பேண்ட் பாக்கெட்டில் இருந்து சிறு ஊசியையும் மருந்தையும் எடுக்க அதில் மேலும் அவனின் உடல் நடுங்கியது. “ சார் ப்ளீஸ் எதுவும் வேண்டாம்”, என்று கெஞ்ச அவனைப் பார்த்துக் கொண்டே மருந்தை ஊசியில் ஏற்றினான் பரதன். நகர்ந்து கொண்டே சென்றவனை அகிலன் பிடித்து தூக்கி அவன் அமர்ந்திருந்த நாற்காலியில் போட, பரதன் சிறிதும் அவன் மன்றாடலுக்கு செவி கொடுக்காமல் அந்த ஊசியை அவன் நரம்பில் ஏற்றினான். “சார் சார் இது என்று அவன் அலற ,ஒன்றும் இல்லை ஒரு சாம்பிள் எங்களால் அனைத்தும் செய்ய முடியும் என்று”, என்றான் பரதன் அசால்டாக. ஒரு பத்து நிமிடத்தில் அவனின் கை, கால்கள் அனைத்தும் முடக்கப்பட்டது, உயிர் மட்டுமே இருந்தது.

“ சூப்பர் அண்ணா இப்படியே நாம் இவனை எய்தவனை கண்டுபிடிக்கும் வரை கிடக்கட்டும்”, என்றான் அகிலன் பரதனிடம், “ காட்ஸ்”, என்று பரதன் அழைக்க அவனின் பாதுகாவலர்கள் அனைவரும் ஒன்றாக வந்தனர் உள்ளே. “ ஒருவர் இங்கே இருங்கள். மற்ற மூவரும் இவன் சொல்லும் பார்ருக்கு சென்று அந்த தன்ராஜை கண்டுபிடித்து இழுத்து வாருங்கள்”, என்று கட்டளையிட்டு இருவரும் வீட்டை நோக்கி நடந்தனர். வீட்டுக்குள்ளே செல்ல அங்கே அவனது தாத்தாவும் அன்னையும் பேசிக்கொண்டு அமர்ந்திருந்தனர். திலகாவின் குடும்பத்தை பற்றியும் அவளுக்கு நேர்ந்த அவலங்களையும் அவர் தன் மருமகளிடம் கூறிக் கொண்டு இருந்தார். இவர்கள் வந்தவுடன், “ டேய் கை கால்களை கழுவிவிட்டு வாருங்கள்”, என்றவாறு சாரதா அம்மா உணவு உண்ண ஆயத்தமாக்க சமையலறையை நோக்கிச் சென்றார். “ சரி அம்மா”, என்று இருவரும் ஒன்றாக கூற, அந்த அன்னைக்கு மனது நிறைந்து தான் போனது. எவ்வளவு கால தவம் என்று தன் நன்றியை அந்த ஆண்டவனுக்கு மனதிற்குள் செலுத்திக் கொண்டே இருக்கிறார். இவர்கள் இருவரின் குரலில் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த பாரதி, “ அகிமா”, என்ற ஓடி வந்து தாவிக்கொண்டது அவன் மேல் .எப்போதும் இப்படி தொடக்கூடாது என்று தடை போடும் அகிலன் கூட இன்று அவளை உரிமையோடு அனைத்து கொண்டான்.

இதை பார்த்துக் கொண்டிருந்த பரந்தனுக்கு என்று இவள் தன்னை இவ்வளவு உரிமையாக அனைப்பால் என்ற எண்ணம் எழ அவன் முகம் வாடியது. ஏன்னென்றால் அவனுக்கு தெரியும் திலகா என்று அவனுக்கு அந்த உரிமையை தருகிறாளோ அன்றுதான் இவள் தன்னிடம் அந்த உரிமையை பாராட்டுவாள் என்று .அதில் அவனது மூளை திலகாவை எப்படி சரி கட்டுவது என்று யோசிக்க ஆரம்பித்தது. அவன் எதுவும் கூறாமல் அசையாமல் நிற்கவும், “ அண்ணா”, என்று அகிலன் குரல் கொடுக்க அதில் அவன் சிந்தனை கலைந்தது. என்னடா என்பது போல் அவனை பார்த்தான், “ இந்தாங்க”, என பாரதியை அவனிடம் நீட்டினான்.

அதில் அவன் கண்கள் விரிய பாரதி சங்கடப்பட ஆனாலும் பாரதியின் கண்களில் அதை மீறிய சந்தோசத்தை பார்க்க அவளை சகல வித உரிமையோடு ஆசையாக வாங்கிக் கொண்டான். தன் கைகளில் அவள் ஸ்பரிசம்பட்டு உடன் அவன் உள்ளத்தில் சந்தோஷம் பூத்தது. அவளுக்கு அவனை என்ன சொல்ல என்று தெரியவில்லை. காலையிலிருந்து நடந்து கொண்டிருப்பதை வைத்து அவன் யார் தனக்கு என்று அவளுக்கு புரியத்தான் செய்தது. ஆனால் அது தன் தாய் மூலம் வரவேண்டும் என்று அவள் மனது நினைத்தது.

அதனால், “ பிரண்ட”,என்று பழைய மாதிரியே அழைத்தாள். பெரியவர் அதை தடுக்க வர , “தாத்தா அவளாக சொல்ல வேண்டும் .அதை அவள் என்னிடம் உணர வேண்டும். அதை நான் அவளுக்கு உணர்த்தும் விதமாக நடந்து கொள்ள வேண்டும்”,என்று அவரிடம் கூறியவன் தன் அறையை நோக்கிச் சென்றான்.

அங்கே தூங்கி கொண்டிருப்பவளை பார்த்து அதிர்ந்தான். குறைந்தபட்சம் தன் கண்களில் அவள் இப்போது சிக்க மாட்டாள் என்று நினைத்திருந்தான் .பார்த்தால் அவள் இங்கே அறையிலே தூங்கிக் கொண்டிருப்பது அவனுக்கு ஒரு நிம்மதியையும் சந்தோஷத்தையும் கொடுத்தது, “ரதி மா, பசிக்குது அம்மாவை எழுப்பு”, என்று பாரதியிடம் கூறி அவளை இறக்கி விட்டான். “ நான் சாப்பிட்டேன்”, என்று பாரதி கூற, “ டேய் உன்னோட பிரண்டுக்கு பசிக்குது, அம்மாவுக்கும் பசிக்கும்”, அதனால் என்று கூறி தன் துண்டை எடுத்துக்கொண்டு ஓய் வறைக்கு சென்று விட்டான்.

“ திலகமா”, என்று கூறிக் கொண்டே அவள் அருகே சென்று அவள் தொட, தன் மகளின் ஸ்பரிசத்தில் அவள் கண் விழித்தால்.முதலில் எழுந்து நின்றவள் , என்னவென்று பாரதியை பார்க்க, “ பிரண்டு தான் மா உனக்கு பசிக்கும் என்று சொன்னாரு”,என்று பாரதி கூறுவதற்கும் பரதன் ஓய்வறையில் இருந்து வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது. அவனை பார்க்கவும் மனதில் ஒரு வலி எடுக்க மீண்டும் மனதில் கலக்கம் உண்டாகியது அவளுக்கு அதில் அவள் தள்ளாட அதை பார்த்த பரதன் வேகமாக வந்த அவளை பிடித்து நிறுத்தி, “ இப்போ எதுக்கு இந்த கலக்கம் நீயும் கலங்கி குழந்தையும் மிரல்கிறாள் பார்”, என்று அவளை கடித்துக் கொண்டே , “உனக்கு எதை கேட்க, சொல்ல வேண்டும் என்றாலும் அது குழந்தை முன் வேண்டாம், இப்போ வா சாப்பிட”, என்று அவனே தொடர்ந்து கூறிவிட்டு, “ ரதி ,அம்மாவை கையைப் பிடித்து அழைத்து வா “,என்று கூறி அங்கிருந்து நகர்ந்துவிட்டான்.

அவனை பின்தொடர்ந்து பாரதியும் அவன் கூறியது போல் அவளை இழுத்துச் சென்றது. அங்கே ஏற்கனவே அனைவரும் அமர்ந்திருக்க பரதன் அகிலன் அருகில் இரு நாற்காலிகள் மட்டுமே மீதம் இருக்க, இவள் எங்கே அமர்வது என்று தயங்கி நிற்க, பரதனோ ஒருவித சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்தான். அகிலனோ திலகாவின் நினைப்பு அறிந்து, “ ரதிமா இங்கே வா”, என்று அவன் பக்கத்து நாற்களில் இழுத்து விட, அவளும் அதுக்கு தகுந்தார் போல் ரதி அவனின் அழைப்பில் சந்தோஷமாக சென்று அமர்ந்து கொண்டது .இவள் அகிலனின் குறிப்பில் தன் கால்களை மெல்லமாக நகர்த்தி பரந்தனின் பக்கத்து இருக்கையில் அமர்ந்தால், அதில் பரதனின் முகத்தில் சிறு புன்னகை பூத்தது.

அதை தன் ஓர் விழியால் கண்டு கொண்டவளுக்கு மனதில் தோன்றிய சிறு கலக்கம் இப்போது பெரும் சஞ்சலமாக மாறியது. இந்த குடும்பம் மட்டும் அல்ல அவளின் குடும்பமும் இதையே தானே விரும்புகிறது. சாரதாம்மா அனைவருக்கும் பரிமாற, அவளால் ஒரு பருக்கையை கூட உண்ண முடியவில்லை. கஷ்டபட்டு அவள் உணவை உள்ளேதள்ள அதை அனைவரும் பார்த்தும் காணாதது போல் இருந்து கொண்டனர் .அனைவரும் சாப்பிட்டு முடிக்க, “ பரதா”, என்று அழைத்தார் தாத்தா.

“ என்ன தாத்தா”, என்று அவன் அவரிடம் கேட்க. , “நீங்கள் இருவரும் ஒரு முடிவை கூறினால், நான் அதற்கான வேலைகளை பார்க்க வேண்டும். எதையும் முறையாக செய்தால்தான் அந்த கயவனின் பிடியிலிருந்து நாம் அவர்களையும் இவர்களையும் மீட்க முடியும்”, என்று அவர் திலகாவை பார்த்துக் கொண்டே கூற. அவளோ அவரின் பேச்சு அவளுக்கு புரிந்தாலும் ,அவள் மௌனத்தையே பதிலாக தந்தாள் .

“தாத்தா அந்த சொத்து நமக்கு எதற்கு ,என் மகளுக்கும் மனைவிக்கும் என் சம்பாத்தியம் போதும்”, என்று பரதன் அவன் மனதைக் கூற, “ டேய் யாருடா நீ, அந்த சொத்து நமக்கு தேவையில்லை. அது ராமருக்கு நியாயமாக சேர வேண்டியது ,சொந்த வீட்டில் சிறை கைதியாக மூன்று ஆண்டுகளாக வாழ்கிறார்கள். அதற்கு தீர்வு என்ன”, என்று அவர் கேட்க, ‘ ஏன் தாத்தா உங்களால் அவர்களை”, என்று அகிலன் கேட்க ,பின் அவரே தொடர்ந்து, “ நான் பல பிரச்சனைகளை உருவாக்கியதால் மட்டுமே அவர்களை அவன் உயிரோடு விட்டு வைத்திருக்கிறான். அவர்களை முழுவதுமாக காப்பாற்றி விடுவிக்க உன் அண்ணி தான் அவனை எதிர்த்து நிற்க வேண்டும், ஏன்னென்றால் அனைத்தும் பாரதி பெயரில், அதற்கு காட்டியனாக இவள்”, என்றார் அவர் .

இவளோ மௌனமாக எழுந்து கைகழுவி விட்டு திரும்பி அவன் அறைக்குள் சென்றாள், அதைக் கண்ட பரதனோ கோபத்தில் பல்லை கடித்தான் . “அண்ணா”, என்று அகிலன் அவனை கூப்பிட, “ டேய் நான் உன் அண்ணியை எதுவும் செய்து விட மாட்டேன், அவள் அவளை ஓட ஓட துரத்தியவனை ஓட விட வேண்டாமா”, என்று பரதம் கேட்க, “ அது ஆமாம் அண்ணா, குழந்தையோடு ,அன்று அவர்கள் நின்ற விதம் இன்று நினைத்தாலும்”, என்று அவன் பல்லை கிடைக்க, “அப்போ இந்த திருமணம் நடந்து சட்டப்படி திலகா பாரதி பரதனின் உடமை ஆகட்டும். அதுபோக அந்த கயவனும் உன்னிடம் தோற்று கார்த்திகேயனும் ஒன்றுதான், என்று இப்போதுதான் தகவல் வந்தது. ஆனால் இப்போது பள்ளியில் நடக்கும் குழப்பங்களுக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இருக்கிறதா இல்லையா, என்று தெரியவில்லை”, என்றார் தாத்தா.

“ அப்போ அவன் தான் இதற்கும் நிச்சயமாக காரணமாய் இருக்க வேண்டும்”, என்றான் முடிவாக அகிலன். இவர்கள் பேச ஆரம்பித்தவுடன் பாரதியை அழைத்துக்கொண்டு சாராதாமா ஓய்வெடுக்க சென்று விட்டதால் இவர்களுக்கு பள்ளி விஷயம் பேசுவது வசதியாக போயிற்று.

“ எப்படி சொல்கிறாய் அகிலன்” என்றான் பரதன். “ உங்களிடம் தோற்ற வெறி உங்களை முதலில் சருக்க செய்தது இப்போது பள்ளியில்”, என்று அவன் கூற, “ எதற்கும் தன்ராஜ் மாட்டட்டும்”, என்று பரதன் தன் அறையை நோக்கி நகர்ந்தான்.

திலகா கட்டிலில் அமர்ந்திருக்க இவன் அறைக்குள் வந்து கதவை தாளிட்டு மூடி, “ சொல்லுங்க மேடம்”, என்றான் அவளையே பார்த்துக் கொண்டே கதவுகளில் சாய்ந்து நின்றான். “ நீங்கள் நினைத்ததை சாதித்து விட்டீர்கள் அல்லவா”, என்றால் கண்களில் கண்ணீரோடு .அவளின் சோர்ந்த தோற்றமும் கண்ணீர் நிறைந்த விழிகளும் அவனுக்கு அன்று அகிலன் அவனுக்கு காட்டிய புகைப்படத்தில் அவளின் சிரித்த முகம் நினைவு வர அவன் இதயத்தில் ஒரு வலி அதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதய நிபுணரான அவனுக்கு தெரியும் இந்த வலிக்கு அறுவை சிகிச்சை ஒன்றே வழி என்று .அவளை இந்த பயங்கள் கலக்கங்கள் அழிந்து அவள் எழுந்து நின்று அவனை எதிர்க்க வேண்டும் .அதற்கு முதலில் திடம் வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வந்தவன் . “ஆமாம் நினைத்ததை சாதித்து விட்டேன். உன்னால் முடிந்தால் எதிர்த்து நில் இல்லை என்றால் சகித்துக் கொள்”, என்றான் கடுமையான குரலில். அவன் தன்னிடம் மண்ணிப்பை யாசிப்பான், தயவாக திருமணத்திற்கு சம்பந்தம் கேட்பான் என்று எதிர்பார்த்து இருந்தவளுக்கு அவனின் கடுமையான குரல் மேலும் அந்த அவளின் ஏமாற்றத்தில் கோபத்தை மூட்டியது.

தொடரும்
 

Matharasi

Moderator
அத்தியாயம் 27

அதில், “ நான் மறுத்தால்”, என்றால் அவளும் விடாமல், “ தாராளமாக போ போய் மறுத்து அகிலனுடன் மறுபடியும் தனியாய் போய் இரு, உனக்காக அவனும் தனது சகல வித உரிமையையும் வாழ்க்கையும் விட்டு உனக்காக அந்த வீட்டில் வாழட்டும்”, என்றான் பரதன் அசால்ட்டாக. அதில் என்னவென்று பதில் சொல்ல தெரியாமல் அவள் மௌனமாக இருக்க , அதை தனக்கு சாதகமாக மாற்ற எண்ணியவன், “ உன் கோழைத்தனத்தால் பாரதி அகிலனுடைய உரிமையையும் வாழ்வையும் பறித்து விடாது, உனக்கு நான் ஒன்று வேண்டும் என்றால் செய்கிறேன். உன் சம்மதம் இல்லாமல் கணவன் என்கிற உரிமையை கையில் எடுக்க மாட்டேன். ஆனால் பாரதி விஷயத்தை எனக்கு எந்தவித கட்டுப்பாடும் இருக்கக் கூடாது”, என்றவன் அவளை பார்க்க அவள் அசையாமல் இருக்கவும், “ நீயாக போய் சொன்னால்தான் அகிலனும் தாத்தாவும் ஆக வேண்டிய வேலைகளை பார்ப்பார்கள்”, என்றவன் கதவை திறந்து விட்டு அவளை பார்க்க ,மெல்லமாக நடந்து சென்றால்.

ஹாளில் அவரும் அகிலனும் அமர்ந்திருக்க, “ இவள் அவர்கள் அருகில் சென்று, “ எனக்கு சம்மதம்”, என்று கூறிவிட்டு யாரையும் திரும்பி பாராமல், மறுபடியும் அறையினில் சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டாள். தாத்தாவும் அகிலனும் பரதனை கேள்வியாக பார்க்க, “ டேய் என்ன நீ ,அவர்தான் அப்படிப் பார்த்தா, நீயுமா”, என்று அவன் அகிலனை கடிக்க, “ இல்லை அவங்க குணம் இது இல்லையே”, என்று அகிலன் சரியாக கேட்க, “ எனக்கு எதிரி யாரும் இல்லை, என் கூடவே பிறந்திருக்கிறது” என்று அவனை மனதில் வறுத்துக் கொண்டே பரதன், “ அவள் சம்மதம் சொன்னதற்கு எதற்கு என்ன கேட்கிறாய்? உனக்கு வேணும்னா நான் இங்கேயே இருக்கிறேன், நீயே போய் பேசி பார்த்துக்கோ”, என்று அகிலனிடம் கூறிய பரதன் தாத்தாவின் அருகில் வந்த அமர்ந்து கொண்டான்.

அகிலன் பரதன் கூறியவுடன் வேகமாக பரதனின் அறை வாயிலில் நின்று கொண்டு, “ அண்ணி”, என்று அழைத்தான். முதலில் திலகா என்ன என்று முழிக்க பின் நிஜம் உணர்ந்து, “ என்ன தம்பி”, என்றால் அவளும் கேள்வியாக அவன் அருகில் வந்து.

“ உங்களுக்கு முழு சம்மதம் தானே, இல்லை வேண்டாம் என்றாலும் கூறுங்கள், நாம் முன் போல்”, என்று அகிலன் ஆரம்பிக்க, பரதன் கோபத்தில் முறைக்க, தாத்தாவோ வேதனையில் முகத்தை சுரக்க, “ நீங்கள் எதையும் யோசிக்காதீங்க. நான் இருக்கிறேன்”, என்றான் விடாமல். அவளுக்கு பரதம் கூறிய வரிகளின் பொருள் இப்போது நன்றாக புரிய, “இல்லை தம்பி, எனக்கு முழு சம்மதம், இதற்கு மேல் வேறு எதுவும் இல்லை. நான் நன்றாக தான், நீங்கள் சந்தோஷமாக இருங்கள்”, என்று கூறிவிட்டு படுக்கையை நோக்கி சென்று விட்டால் எங்கே தன் கண்ணீர் தன்னை அகிலனிடம் காட்டிக் கொடுத்து விடுமோ என்று. அவளின் பதிலில் அவனுக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் அவளின் திடம் அவனுக்கு புதியது .அதனால் எதையும் பேசாமல் நகர்ந்து விட்டான்.

“என்ன திலகா கொழுந்தனாரே போதுமா”, என்று பரதன் அகிலனை நக்கல் அடிக்க , “ கொஞ்சமாவது எனக்கு தம்பியா நட”, என்று பரதன் தன்னை அவன் நம்பவில்லையே என்ற ஆதங்கப்பட, “ பரதா, அவனிடத்தில் இருந்து யோசித்துப் பார் .அவன் யாருமற்று இருந்த காலத்தில் வசந்தமாக வந்தவர்கள். ஒரு கட்டத்தில் அவளுக்கு அனைத்துமாய் நின்றவன். இப்போது வந்து நமக்காக அவன் மாறினால் அது தப்பு. அவன் சரியாகத்தான் இருக்கிறான்”, என்று தாத்தா அகிலனின் கண்ணோட்டத்தை கூற, “தாத்தா எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது, நீங்கள் என்னை எவ்வளவு சரியாக புரிந்து வைத்துள்ளீர்கள்”,என்று கூறி மறுபடியும் கால்களில் பணிந்தான்.

“ டேய் சும்மா காலில் விழுகாதே. அவனை மொத்தமாக வீழ்த்தி, உன் அண்ணனை மறுபடியும் இருதய நிபுணராக்கி, அவன் குடும்பமாக இருப்பது போல், நீயும் உன் குடும்பமாக வந்து என் கால்களில் வீழு நான் ஆசீர்வதிப்பேன் சந்தோஷமாக”,என்றார் அவர். “ தாத்தா மறுபடியும் மா, நான்தான் ஏற்கனவே என் முடிவை கூறிவிட்டேனே ,எப்போது என்னால் ஒரு உயிர் போனதோ”, என்று பரதன் ஆரம்பிக்க , “அண்ணா அது நீங்கள் சுயநினைவில் செய்யவில்லை தானே. அம்மா மேலோட்டமாக சொன்னார்கள் .உங்கள் கைமீறி நடந்த செயல்”, என்று அகிலன் கூற வர, “ இன்று எனக்காக பேசுகிறாய். ஆனால் அது யார் என்ற உண்மை தெரிந்தால்”, என்று பரதன் மனதிற்குள் வருந்த, “ அகிலா இதே தெளிவு உனக்கு என் மீது கடைசிவரை”, என்று அவன் சிறு தயக்கத்தோடு கூற, “ அண்ணியின் விஷயத்தில் அவர் சிந்திக்க முடியவில்லை, ஆதலால் அவர்களுக்கு நான் துணை நிற்கிறேன், மற்றபடி என் அண்ணன் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. நாம் இருவரும் இன்று அல்ல எப்போதும் ஒன்றாக நின்று நம்மை எதிர்ப்பவர்களை அழிப்போம்”, என்று வாக்கு கொடுத்தான் அகிலன் .அன்று தசரதன் கைகேயிக்கு கொடுத்த வாக்கால் ராமர் வனவாசத்தை அணிவித்தார் இன்று அகிலன் கொடுத்த வாக்கால் யார் எதை அனுப்பிப்பார்களோ காலம்தான் பதிலை சொல்லும் பொறுத்திருந்து பார்ப்போம்.

“ சரி தாத்தா”, நீங்கள் ஓய்வெடுங்கள் என்று அவரை விருந்தினர் அறைக்கு அனுப்பிவிட்டு ஆளுக்கு ஒரு சோப்பாவில் சாய்ந்தனர் . “ அண்ணா அடுத்து என்ன”, என்று அகிலன் கேள்வி கேட்க, “ நீ சொல்வது போல் அவனும் இவனும் ஒருவன் என்றால், அவன் நாம் சுதாரித்து விட்டோம் என்று தெரிந்தால் இன்னும் மிக மோசமாக நம்மை தாக்குவான். அவனின் பிடியில் இருக்கும் திலகா குடும்பத்தினரை முழுவதுமாக விடுவிக்க வேண்டும். அதற்கு தேவையானதை பார்க்க வேண்டும். இங்கு எத்தனை பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருக்கிறார்கள் என்பதை கணித்து அவர்களின் பெற்றோர்களிடம் பேசி அவர்களின் துணையோடு அவர்களுக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு நாம் கண்டிப்பாக காவல்துறையினரின் உதவியை நாட வேண்டும். நியாயமானவராக அவர் இருந்தால் நிச்சயம் நம்மை புரிந்து கொண்டு நமக்கு பாதுகாப்பாகவும் உதவியும் செய்வார்”, என்று பரதன் அடுத்த கட்ட நிகழ்வை வரிசைப்படுத்தினான்.

“அண்ணா இப்போதுதான் ஞாபகம் வருகிறது ஒரு நாள் ஒரு நடு இரவு நம் மாவட்டத்தில் தற்போது டி ஜி பியாக செந்தில்நாதன் இக்கட்டில் இருந்து காப்பாற்றினேன். பின் அவரே எந்த உதவி என்றாலும் கேள் என்றார். நான் தான் செய்த உதவிக்கு பலனை எதிர்பார்க்கக் கூடாது என்று அண்ணி விஷயத்தில் கூட அவரை அணுகவில்லை .இப்போது இது சமூகப் பிரச்சனை தானே. வேண்டும் என்றால் வருகிறீர்களா இருவரும் நேராக சென்று பார்த்து விட்டு வருவோம்” என்று அவன் அகிலன் கேட்க ,எப்போதுமே அவனை பார்த்து பிரமிக்கும் பரதன் இப்போதும் பிரம்மித்தான்.

அவனை கட்டி அணைத்துக் கொண்ட பரதன், “ அப்பாவை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் நினைவுகளில் பதியிம் அளவு ஒன்றும் ஞாபகம் இல்லை. ஆனால் இப்போது தாத்தா அம்மா சொல்வதைக் கேட்டு அப்பா இப்படித்தான் இருந்திருப்பார்களோ என்பதை உன்னிடம் உணர்கிறேன்”, என்றான் உண்மையான பாசத்தோடு, “ அண்ணா நீங்க தான் எனக்கு அப்பா எல்லாமே”, என்று அதே பாசத்துடன் அகிலனும் பரதனை அணைத்தான். இதே பிணைப்பு திலகா விஷயத்திலும் இருவருக்கும் இருக்க வேண்டும். இருவரும் மாலை சென்று அவரை சந்திப்பதாக முடிவு எடுத்துக்கொண்டு சிறிது நேரம் கண்ணை மூடினர். “அகிமா”, என்று பாரதி அவனை எழுப்ப அந்த சத்தத்தில் பரதனும் கண் விழித்தான். நேற்று இருவரும் சரியாக தூங்கவில்லை அல்லவா. அகிலன் பாரதியை அழைத்துக்கொண்டு தோட்டத்திற்கு செல்ல பரதன் தன்னை சுத்தப்படுத்திக் கொள்ளத் தன் அறைக்கு சென்றான். அங்கே திலகா கண்மூடி கால்களை சுருக்கி படுத்திருந்தாள். இவன் உள்ளே நுழைந்த உடனே அவள் உடல் இறுகுவதை அவனால் உணர முடிந்தது. இவள் இதற்கு பழகிக் கொண்டுதான் ஆகவேண்டும்,என்று நினைத்துக் கொண்டு அவன் தன் வேலையை முடித்துக் கொண்டு கிளம்பி வெளியே வர அகிலனும் கிளம்பி தயாராக நின்றான். “டி குடித்துவிட்டு செல்லுங்கள்”, என்று சாரதா அம்மா கூற , “வெளியே பார்த்துக்கொள்கிறோம், முதலில் அவளை வெளியே வந்து நடமாடச் சொல்லுங்கள். இப்படியே இருந்தால் அவள் உடம்புக்கு அது நல்லது இல்லை”, என்று கூறிய பரதன் அகிலனுடன் வெளியேறினான்.

அங்கே வெளியே அவனின் ஆட்டோவிற்கு பதிலாக புது மகேந்திரா தார் கார் அவனுக்கு பிடித்த கருப்பு நிறத்தில் நிற்க, “ அண்ணா”, என்று அவன் இன்ப அதிர்ச்சியில் அசையாமல் இருக்க, அவனின் கைகளில் சாரதாம்மா வண்டி சாவியை வைத்தவர் , “ உனக்குத்தான்”, என்று கூறி .அவன் அசையாமல் இருக்கவும், “ டேய் அகிலா பார்த்தாயா ,எனக்கு ஒரு வண்டி வாங்கித் தர தோணல”, என்று அவன் தோள்களில் கையை போட்டு அகிலனை ஆசுவாசப்படுத்தி கொண்டே பரதன் கேட்க, “ உங்களுக்கு எப்போதும் இந்த அகிலன் தான் சாரதி. எது எப்படி வந்தாலும் அது என்னை மீறி தான் உங்களை தொட முடியும்”, என்று தன்னிலை வந்த அகிலன் கூறினான். ஆமாம் என்று அந்த கயவனும் பரதனிடம் பிரச்சனையை பன்னுபவமும் ஒன்று என்று அவனுக்கு தெரிந்ததோ, அப்பவே முடிவு எடுத்து விட்டான். அவனை பாதுகாப்பது அவனது கடமை என்று. அகிலனின் பேச்சில் பரதனுக்கு அவனின் அன்பு புரிய, “ சரிடா போவோ மா, முதலில் வேலையை பார்ப்போம்”, என்று கூறி அகிலன் தன் புது வண்டியை எடுக்க, இவன் பரதன் அவன் அருகில் அமர்ந்து கொண்டான்.
 

Matharasi

Moderator
அத்தியாயம் 28

செந்தில் நாதனின் தனிப்பட்ட தொலைபேசி எண் அவர் ஏற்கனவே அகிலனுக்கு கொடுத்திருந்ததால் ,அவருக்கு அவன் அழைத்தான். “என்ன மிஸ்டர் அகிலன் இவ்வளவு நாளா என்னை அழைக்கவில்லையே”, என்று உரிமையோடு கடிந்து கொண்டார். பின் அவன் மேலோட்டமாக விபரம் கூறியவுடன், மாலை 6:00 மணி போல் தன்னை தன் வீட்டிலேயே வந்து சந்திக்குமாறு அழைப்பு விடுத்தார் .முதலில் அவன் தயங்க, “ இது ரொம்ப சென்சிடிவ் இஷ்யு அகிலன், வெளிய வைத்து பேசுவது எவ்வளவு சரி என்பது தெரியவில்லை அதனால் தான்”, என்று அவர் எடுத்து கூறவும் தன் அண்ணனை கூட்டிக்கொண்டு பிறப்பிட்டு விட்டான். இவர்களை எதுவும் கேட்காமல் அவர்கள் வந்தவுடன் உள்ள அழைத்துச் சென்று அவரின் அலுவல் அறையில் அமர வைத்தார்கள்.

ஒரு ஐந்து நிமிடத்தில் இருவரும் ஒருவர் போல் உருவ ஒற்றுமை சாயலிள் வந்தார்கள். அதில் வயது முதிர்ந்தவர் வாங்க மிஸ்டர் அகிலன் என்ற அன்போடு அழைத்துக்கொண்டு, “ மிஸ்டர் சாத்விக் இன்று உன் தந்தை நான் உயிரோடு இருப்பதற்காக காரணம்”, என்று அகிலனை அவர் மகனுக்கு அறிமுகப்படுத்தினார். “ தேங்க்ஸ்”, என்பது சின்ன வார்த்தை தான் என்று கூறி மிஸ்டர் சாத்விக் அகிலனுக்கு கைகுலுக்கினார் .தன் தம்பியை அவர் பெருமைப்படுத்துவதை பெருமையாக பார்த்துக் கொண்டிருந்தான் பரதன்.

அகிலன் அவன் அண்ணன் என்று பரதனை அறிமுகப்படுத்த அனைவரும் அமர்ந்த உடன், “மிஸ்டர் சாத்விக் ஐபிஎஸ் தான் மதுரை போதை மருந்து சட்டப்பிரிவில் அதிகாரி, அதனால் அவரும் நம்மோடு இருந்தால் நமக்கு சரியாக இருக்கும்”, என்றார் .பின் பரதன் தங்கள் பற்றியும் தன் தாத்தாவை பற்றி சொல்லிவிட்டு நடந்த அனைத்தையும் அவனின்ன் சந்தேகங்கள் இன்று வரை அவன் எடுத்து வைத்திருக்கும் முயற்சிகள் அனைத்தையும் கூறினான். அவர் அமைதியாக இருக்கவும் சாத்விக் பேச தொடங்கினான். அவனுக்கு இருக்கும் சந்தேகங்கள் அனைத்தையும் தெளிவுபடுத்திக் கொண்டான் .

“மிஸ்டர் பரதன் ஒரு ஆசிரியராக உங்கள் முயற்சிகளை பாராட்டுகிறேன். உங்கள் பள்ளியின் பெயர் கெடும் என்று தெரிந்தும் மாணவர்கள் நலனுக்காக நீங்கள் முயற்சி எடுப்பது சந்தோஷம். நீங்கள் சொல்வதை வைத்து பார்த்தால் மிஸ்டர் கார்த்திகேயனாக இருக்கும் என்பது அனுமானம் தான். நாம் முதலில் குழந்தைகளை மீட்க வேண்டும். அவனுக்கு எதுவாக வலுவான ஆதாரங்களை திரட்ட வேண்டும். முதலில் உங்கள் மனைவியை வைத்து அவனை நாம் திசைதிருப்பி பள்ளி பிரச்சனையை முடிப்போம்”, என்றார் செந்தில்நாதன், “ நீ என்னப்பா சொல்கிறாய்”, என்று சாத்விக்கை பார்க்க, “ அப்பா முதலில் பிள்ளைகள் தான் முக்கியம். அவர்களை நாம் கவனித்தாலே நாம் சுதாரித்து விட்டோம் என்று அவன் தப்பக்கூடும் .ஆதலால் நீங்கள் சொல்வது போல் அவனை திருப்புவது நல்லது”, என்றான் சாத்விக் அவரின் முடிவை ஆதரித்து.

“ ஆதலால் மிஸ்டர் பரதன் நீங்கள் பரிசோதனை நடத்துங்கள். யார் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று கண்டுபிடிங்கள். அதற்கு முன்பாக உங்கள் திருமணத்தை விரைவாக நடத்தி அவனை திசை திருப்பி அனைத்து காரியங்களையும் வேகமாக செய்யுங்கள்”, என்றவர் அகிலனிடம் திரும்பி, “ நீ ஏன் முதலிலே உன் அண்ணி பிரச்சனையை என்னிடம் கூறவில்லை”, என்று உரிமையாக அவனைக் கடிய,” அது வந்து சார்”, என்று அவன் தயங்க, “ எந்த உதவியும் எதிர்பார்த்து நீ என்னை காப்பாற்றவில்லை அந்நேரம், அப்படி இருக்கையில் இதை என்னிடம் கேட்டால் உன்னை தவறாக நினைத்து விடுவேனா”, என்று அவன் நினைத்தை சரியாக கனித்த அவர் கேட்க, அவனின் மௌனமே அதை அவருக்கு உண்மை என்று காட்டியது.

“ எங்கள் தொழிலிலே உங்களின் ஆபத்து காலத்தில் உதவுவது தான் ,நீ முதலிலே வந்து இருந்தால் அவன் இவ்வளவு தூரம் போயிருக்க மாட்டான்”, என்று உண்மையான நிலவரத்தை கூற, “ இதில் ஒரு நன்மை இருக்கிறது சார், இந்த பிரச்சனையில் தானே நான் மதுரை வரை வந்தேன்.வந்ததுனால் தான் என் தம்பியை நான் கண்டுகொள்ள முடிந்தது “,என்று பரதன் அகிலனின் செயலை நியாயப்படுத்த , “அண்ணன் தம்பி என்றும் இப்படி ஒற்றுமையாக இருக்க வேண்டும்”, என்றார் அவர்.

“ இது தொடர்பாக சாத்விக் உங்களோட இருப்பார். எதுவென்றாலும் சொல்லுங்கள் சேர்ந்து செயல்படுவோம்”, என்று அவர் முடித்த ,பின் அவர்களை வீட்டு ஆளாக சிற்றுண்டியும் குடிக்க பானமும் கொடுத்து உபசரித்து அவர்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக சில யோசனைகள் கூறி விடை கொடுத்தார்.

இருவரும் வீட்டை அடையும்போது மணி ஒன்பதை நெருங்கியது. இவர்களுக்காக அனைவரும் காத்திருக்க இவர்களும் ஹாளில் வந்து அமர்ந்தார்கள். அகிலன் தாத்தாவின் அருகில் வந்த அமர, பரதனும் எந்தவித ஒரு யோசனையும் இன்றி திலக அருகில் வந்து அமர்ந்தான். அவள் உடல் அதில் நடுங்கினாலும் அதை அவள் யார் அறியாமல் சமாளிக்க, பரதனும் கண்டு கொண்டான் அவனை நன்கு அறிந்தா அகிலனும் கண்டு கொண்டான்.

“ பாரதி எங்கே அம்மா”, என்று பரதன் தன் அன்னையை பார்த்து கேட்க , “இப்போதுதான் தூங்கினால்”, என்றார். திலகா மெதுவாக எழுந்து அறைக்குள் செல்ல முற்பட, “ அம்மாடி சற்று நில்”, என்றார் பெரியவர் .அவள் நின்று திரும்பி அவரை பார்க்க, “ உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம்”, என்றார். அவள் உட்கார தயங்கியபடியே நிற்க ,அவள் எதிர்பாராத நேரம் அவளின் கைகளை பிடித்து இழுத்து அமர வைத்தான் பரதன். அதில் அவள் அவனை பார்த்து முறைக்க முற்பட, “ டேய் என்னடா நீயும்”, என்று சாராதம்மா பரதனைக் கடிய, “ என்ன எல்லோரும் அவளுக்குத்தானே பேசுவீர்கள்”, என்று அவனும் கடிய, “ அண்ணா, தாத்தா ஏதோ முக்கியம் என்றார், முதலில் அதை பார்ப்போம்”, என்று அகிலன் அந்த பிரச்சனையை முடித்தான்.

“பரதா சிறு குழந்தைகள் இல்லை இருவரும், பொறுப்பான இடத்தில் இருக்கிறீர்கள்”, என்று இருவருக்கும் ஒரு கொட்டு வைத்துவிட்டு , “நாளை காலை 10 மணிக்கு மருதமலையில் திருமணம், காலை விமானத்தில் கோவை சென்று பின் கோயில் செல்லலாம். அனைத்து ஏற்படும் முடிந்தது”, என்றார் அறிவிப்பாக.

அதில் திலகா முகம் இறுக, அகிலனுக்கு சூழ்நிலை புரிந்ததால் எதுவும் கேட்க எண்ணம் வரவில்லை, ஆனால் திலகாவின் முகம் மாற்றத்தில் சாரதா அம்மா கேட்டேவிட்டார், “ ஏன் அவசரம்”, என்று, “ அவசரம் இல்லை , அவசியம். திங்கட்கிழமை அவர்கள் யாரென்று சொல்லி வெளியே தெரிய வரும்போது உரிமையுடன் வெளியே வரவேண்டும்”, என்றார் முதியவர் பதிலாக.

எதிர்த்து பயனில்லை என்றபோது அதை ஏற்றுக் கொண்டுதானே ஆகவேண்டும் என்று முடிவுக்கு வந்துவிட்டால் திலகா, தலையை சம்மதமாக அசைத்து விட்டு, அங்கே இருந்த அகன்றுவிட்டால். போகும் அவளை ஒரு கையால் ஆகாத தனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் அகிலன். அவர்களின் நல்லதுக்கு தான் என்று தன்னை தானே சமாதானமும் செய்து கொண்டான். பரதன் இதை எதிர்பார்த்ததால் எதையும் கேட்கவில்லை.

ஒருவாறு இரவு உணவு உண்ண செல்ல, ஏற்கனவே அவர்கள் உண்டதால் அகிலனும் பரதனும் மட்டும் சாப்பிட அமர சாரதாம்மா பரிமாறினார். “ பரதா கொஞ்சமாக பொறுமையா திலகா கிட்ட நடக்கப் பாரு, அன்பால் சாதிக்க முடியாதது ஒன்றும் இல்லை”, என்றார் ஒரு நல்ல அன்னையாக, “ அம்மா இதையே நீங்கள் அவளிடமும் கூறலாம்”, என்றான் அவன் பதிலாக . “ நாம் அனைவரும் அவளை ஒரு விதத்தில் கட்டாயப்படுத்தி தான் சம்மதிக்க வைத்துள்ளோம். ஆதலால் நம்பிக்கைதான் குடும்பத்தின் அஸ்திவாரம் அதில் அன்பு, பொறுமை, காதலால் கட்ட வேண்டும்”, என்றார் அனுபவம் மிக்கவராக முதியவர், “ சரி தாத்தா”, என்றான் பரதன், அவரின் வார்த்தையில் இருக்கும் உண்மையை புரிந்து கொண்டு. “ இது உனக்கு மட்டுமில்லை அகிலனுக்கும் சேர்த்து தான் ஒரு பிரச்சனை என்றால் ஆணிவேரை தான் பார்க்க வேண்டும், விவேகத்தோடும் வேகமும் புத்திசாலித்தனமும் வெற்றியை தரும்”, என்றவர் , “போய் படுங்கள் காலை 7:00 மணிக்கு விமானம் 5:30 மணிக்கு விமான நிலையத்தில் இருக்க வேண்டும்”, என்று கூறிவிட்டு அவர் சென்று விட்டார் .பரதன் அகிலன் ஹாளில் படுக்க சாரதாம்மா அதற்கு ஏற்பாடு செய்துவிட்டு திலகாவிடம் விஷயத்தை கூறி சென்று விட்டார். அவர் அறைக்கு.

காலையில் அனைவரும் 5:00 மணி போல் தயாராகினர். பாரதி தான் கொஞ்சம் எழுவதற்கு அடம் பிடித்தால். அவளை கிளப்பும் வேளையை அகிலன் கையில் எடுத்து கொண்டான். அனைவரும் கிளம்பி விமான நிலையத்தில் அடைந்து செக்கிங் முடித்து விமானத்தில் ஏறி அமர்ந்தனர் .

திலகா முற்றிலும் மௌனமாகவே நின்றால். அவள் மனதிற்குள் பிரளையமே நடந்து கொண்டிருந்தது. பாரதி ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து இது என்ன அது என்னவென்று கேள்வி எழுப்ப இவள் மௌனமாகவே இருக்க, “ திலகம் இப்படி வா”, என்று பரதன் தன் பொறுமையை இழந்து இருவருக்கும் இடையில் வந்த அமர்ந்தான்.

அகிலன் நடுவில் அமர்ந்து அவனின் இரு பக்கமும் அவனின் அன்னையும் தாத்தாவும் அமர்ந்திருந்தனர். தாத்தா மனதில் அப்படி ஒரு நிறைவு. “ பாரதிராஜா நீ தெய்வமாக நின்று உன் மகன்களுக்கு நல்வழியை காட்டு குடும்பம் உடையாமல் காத்துக் கொடு”, என்ற மகனிடம் கேட்டுக் கொண்டார். விமான பணிப் பெண் வந்து, “ பரதனிடம் சார் விமான விண்ணில் பறக்க உள்ளது அதனால் இருக்கை பெல்ட்டை போடுமாறு பணிந்தால்”, “சரி நான் அவர்களுக்கு போட்டு விடுகிறேன்”, என்று கூறிவிட்டு எந்த ஒரு தயக்கம் இன்றி முதலில் பாரதிக்கு அணிவித்தவன், இந்த பக்கம் திரும்பி அவளின் உடல் இறுகுவதை பொருட்படுத்தாமல் அவளுக்கு அணிவித்துவிட்டு எதுவும் நடக்காதபோல் பத்திரிகை வாசிக்க ஆரம்பித்து விட்டான். அவர்கள் கோவையை அடைய , அங்கே அவர்களுக்காக காத்துக் கொண்டிருந்த அகிலனின் கருப்புத் தார் காரில் அவன் தன் அன்னை தாத்தாவுடன் ஏறிக்கொள்ள, மற்றொரு வெள்ளை பென்சில் பரதன் ஏறி ஓட்டுனர் இருக்கையில் அமர, பாரதி அவனது அருகில் அமர ஆவல், ஆனால் தன் அன்னையை பார்த்தால். அவளோ எங்கே செல்வது என்று அசையாமல் நிற்க்க பரதன் இவளை இன்று பள்லை கடித்துக் கொண்டு இறங்கப் போக, அதற்குள் அகிலன், “ அண்ணி”, என்றான் அவனின் அண்ணி ,நிஜத்தை பொட்டில் அடித்த உணர்த்தினாலும், அதை ஜீரணிக்க தான் அவளால் முடியவில்லை. அவள் அவனை நிமிர்ந்து பார்க்க, “ ஏறுங்கள் அண்ணி, பாரதி உங்கள் முகத்தையே பார்க்கிறாள் பாருங்கள்”, என்றதும் தன் குழந்தையை அவள் பார்க்க பாரதி முகத்தில் கண்ட ஆவல், சிரிப்பு, அகிலனின் பரிதவிப்பு அனைத்தையும் பார்த்தவள், அடங்கு மனமே அடங்க மனமே, இதை ஏற்றுக்கொள் என்று அவள் தன்னைத்தானே ஆஸ்வாசப்படுத்திக் கொண்டு, பரதன் திறந்த முன் பக்க கதவில் ஏறி அவன் அருகில் பாரதியை மடியில் அமர்த்தி அமர்ந்தால். அவர்களின் பாதுகாவலர்கள் வந்து கதவை சாற்ற ,பரதன் பாரதியை தூக்கி அவளை பின் சீட்டில் அமர்த்தி, அவளுக்கு அதில் பொருத்தி உள்ள சிறு தொலைக்காட்சியில் ஒரு ஆங்கில அனிமேட்டட் படத்தை ஒடவிட்டு, ப்ளூடூத் ஹெட்போனை மாட்டிவிட்டு, அதன்பின் திலகாவிற்கு சீப் வெல்டை மாட்டிவிட்டு தன்னுடையதையும் மாட்டி கொண்டு, முன் ஒரு வண்டி இவர்கள் பாதுகாவலர்கள் செல்ல, இவன் அதை தொடர, பின் அகிலன் தொடர்ந்தான். அவனுக்கு பின்னும் பாதுகாவலர்களின் வண்டி. ஏற்கனவே அந்த ஆசிரியரை சாத்விக்கிடம் ஒப்படைந்தனர் அவனின் பாதுகாவலர்கள். சாத்விக் கூறியதன் பெயரில்தான் இத்தனை பாதுகாப்பு வாகனம்.

வண்டியை செலுத்திக் கொண்டே, இவளின் இறுக்கத்தை உணர்ந்த பரதன் இவள் உடல்நிலைக்கு இது சரியில்லை என்று யோசித்தவன்,” என்ன திலகா என்னை கொன்றுவிட்டால் என்ன என்று யோசிக்கிறாயா”, என்று அவளை சீண்ட ஆரம்பித்தான்.” ஆமா முதலில் செய்து இருக்கணும் , முதல்முறையாக என்னை சீண்டும் போது”, என்று சீறினால். அவளின் சீற்றத்தில் அவள் சமநிலையில் இருப்பதை உணர்ந்து கொண்டவன், “ இப்போ என்ன உன் அருகில் தானே இருக்கிறேன்”, என்று அவன் புன்னகை புரிய, “ அகிலன் என்ற அந்த உயர்ந்த மனிதனால் மட்டுமே”, என்றால் அவள் பதிலாக, “ஒ…ஓ…”,என்று அவன் நீட்டி முழக்க, “ அகிலன் இல்லை என்றால் கண்களால் எரித்து விடுவாயோ”, என்றான் நக்கல் நிறைந்த குரலில் மீண்டும் அவனை தொடர்ந்து,” அதில் அவள் தீ என முறைக்க, “ நீ எவ்வாறு வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள் திலகா ,உங்களை முதலில் பார்த்தபோது நீங்கள் என் உடமை என்று தோன்றி விட்டது. நான் சொன்னதுபோல் எப்படி கட்டம் கட்டி தூக்கினேன் பார்த்தாயா”, என்று பரதன் விசில் அடிக்க,” அதில் முழுமையாக சீண்ட பட்டவள், “ கட்டம் கட்டியா தூக்கினீங்க ,இல்லை அகிலன், பாரதியை பகடைக்காய் ஆக்கி என்று சொல்லுங்கள்”, என்றால் தன் மனதில் அழுத்திய பாரத்தை வெளிப்படையாக ,அது அவனை சரியாக தாக்க, “ நான் உனக்கு தேர்ந்தெடுக்கும் உரிமையை கொடுத்தேன்”, என்றான் தன் கண்களை மூடி , “எது அடுப்பா , தனலா என்பது போல் தானே”, என்றால் இப்போது அவள் நக்கலாக கூற, அதில் அவனின் மனதில் ஒரு வலி, ஆனால் அவள் தன் ஓட்டை விட்டு வெளிவருவதில் மகிழ்ச்சியும் கொண்டான்.

இப்படியே சரிக்க சரியாக பேசி அவளின் மனதில் இறுக்கத்தை தளர்த்து இருந்தான் பரதன். சரியாக பத்து மணிக்கு அவர்கள் கோயில் வந்தடைய அங்கே அவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தவர்களை கண்டு அதிர்ந்து நின்றால் திலகா.



தொடரும்.
 

Matharasi

Moderator
அத்தியாயம் 29

“திலா”, என்று அதிர்ச்சியில் நின்றவளை கட்டி அனைத்துக்கொண்டார் ராசாத்தி, அவளின் அன்னை. பாரதியும் பரதனும் ஒன்றாக இறங்க பாரதியை சீதா அனைத்துக்கொண்டார். ராமன் ராஜேந்திரனுக்கு கண்களில் கண்ணீர் நிறைந்தது. திலகாவால் எதையுமே வெளிப்படுத்த முடியாமல் மூர்ச்சையாகி நின்றால். யாரை பார்க்க முடியுமோ என்று நித்தம் நினைத்து வருந்தினாலோ அவர்களின் அனைப்பில் அவள். அங்கே நாள்வரும் கண்ணீரில் மூழ்கினர்.

ராமன் ராஜேந்திரன் வந்து பரதனிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். அகிலனின் வண்டி வந்து நின்றவுடன் அதில் இருந்து அவர்கள் வெளிவரவும், பரதன் அகிலனை ராமன் ராஜேந்திரனுக்கு அறிமுகப்படுத்தவும் சற்று அகிலன் யோசிக்கும் முன், ராஜேந்திரன் அவனின் கால்களில் பணியப்போக,” சார்”, என்று பரதன் அகிலன் இருவரும் பதரி கொண்டு அவரை தடுத்தனர் .

“என்ன ராஜேந்திர இது”, என்ற தாத்தா கோபப்பட, “ அன்று இந்த தம்பி இல்லை என்றால் என் பிள்ளையின் நிலை”, என்ற ராஜேந்திரன் உணர்ச்சி பொங்க கூற ,அவரின் கூற்றில் பரதனின் முகம் கருத்தது .ஆனாலும் அவன் தன் மனதிற்குள், “ நான் இனி மேல் என் மூச்சு உள்ளவரை அவர்களை நன்றாக பார்த்துக் கொள்வேன்”, என்று அவனின் மனதை சமன்படுத்திக் கொண்டான்.

“சார் நீங்கள் இவ்வளவு உணர்ச்சி படும் அளவு நான் பெரிதாக எதையும் செய்யவில்லை”, என்றான் அகிலன் தன்மையாக . “தம்பி நீங்கள், உங்கள் அண்ணன், தாத்தா அனைவரும் ஏதோ ஒரு வழியில் எங்களை காத்திருக்கிறீர்கள். நீங்கள் எல்லாம் இல்லை என்றால் நாங்கள் என்றோ”, என்று ராமன் கூற வர, “ ராமா, ஏதோ போதாத காலம் இனிமேல் நமக்கு நன்மை மட்டும் தான்”, என்று தாத்தா கூறிக் கொண்டிருக்கும்போதே அவர்கள் அருகில் வந்த பாதுகாவலர்களின் தலைவன் போல் இருந்தவர், “ சார்”, என்று அழைத்து ஏதோ கூற, “ சாரதா, அனைத்தும் தயாரா என்று பார்”, என்று மருமகளிடம் கூறியவர், சீதா ராசாத்தியை பார்த்து , “நீங்கள் உங்கள் பெண் இருவரையும் தயார்படுத்தினால், முறையாக அனைத்தையும் முடித்து விடலாம்”, என்று கூறினார்.

“ ஐயா அதுவும் சரிதான் நேரம் ஆகிறது”, என்று இராமன் கூற அதில் அவரை நிமிர்ந்து பார்த்தால் திலகா, அவளின் பார்வையின் பொருளை புரிந்து கொண்ட ராமரோ தன் மனைவியை பார்க்க ,திலகா அருகில் வந்த சீதா, “ திலகமா நீ என்றும் நன்றாக இருக்க வேண்டும் .இந்த திருமணம் எங்களின் முழு சம்மதத்தோடு தான் நடைபெறுகிறது. உன்னை அனுப்பியவுடன் அவன் எங்களை படுத்திய பாட்டில் நாங்கள் உயிரை கையில் பிடித்து வைத்திருந்ததே, உங்கள் இருவரின் நலத்தை காண தான். எப்படியோ அய்யா அவனுக்கு கொடுத்த குடைச்சலில் எங்களை அவன் எதுவும் செய்யவில்லை. இப்போது கூட மாதாந்திர உடல் பரிசோதனைக்கு செல்வது போல் தான் இங்கே வந்தோம். அவனின் அப்பா அல்லது அவனின் அன்னை யாராவது உடன் வருவதாக தான் இருந்தது . ஆனால் ஐயா திடீரென்று நாளை நம் கம்பெனியில் ஏதோ சந்தேகம் இருப்பதாக குழப்பத்தை ஏற்படுத்தி, நாளை அனைத்து பங்குதாரரையும் ஒன்று கூட்டியுள்ளார் .அவர்கள் அது சம்பந்தமாக வீட்டில் இருந்து விட்டார்கள். நீ இன்னும் தனியாக இருந்தால் அவன் மறுபடியும் ஏதாவது செய்வான். தினமும் செத்து செத்து பிழைக்க முடியாது”, என்றார் அவர் அவளுக்கு சூழ்நிலைகளின் தன்மையாக விளக்கி .

அவள் தலை தன்னால் ஆட இருவரும் அவர்களை அழைத்துக் கொண்டு சென்றனர். அகிலன் பரதனை கிளம்பி வர அழைத்துச் சென்றான். பரதனின் இறுகிய முகத்தை கண்டு அகிலன் என்னவென்று வினாவ, “ ஒன்றுமில்லை”, என்று பரதன் கூற, “ அண்ணா மறுபடியும் அவர்களுக்கு நான் பேசுகிறேன் என்று நினைக்காதே .அவர்களோடு இத்தனை வருட பழக்கத்தில் கூறுகிறேன், எனக்கு தெரிந்து அவர்கள் யாருடனும் இவ்வளவு பேசியது கிடையாது. பாரதியை என்னைத் தவிர யாரிடமும் விட்டதும் கிடையாது .அப்படி இருக்கையில் உன்னோடு அவர்கள் இயல்பாக இருக்கிறார்கள் .அதை பார்த்து தான் நான் இதற்கு சம்மதம் தெரிவித்தேன். ஆதலால் மனதை குழப்பிக் கொள்ளாதே, உங்களின் அன்பு அவர்களை மாற்றும்”, என்றான் திலகாவின் நிலைமை துல்லியமாக கணித்து. அவனது பேச்சில், “ டேய் என்னுடைய நிலைமை வேறு” என்று மனதிற்குள் புலம்பியவன் தன்னை சமன்படுத்திக் கொண்டு, “ நீ இருக்கும் போது எனக்கு என்ன கவலை”, என்று கூறி கிளம்பி வந்தான் .

பரதன் அங்கே சன்னிதானத்தில் இருந்த மண்டபத்தில் இருந்த மனையில் அமர ,அங்கு அவர்களை தவிர வேறு யாருமில்லை .பாதுகாப்பு நிமித்தம் தனியே பாதுகாவலர்கள் மட்டுமே . திலகா பச்சை பட்டு உடுத்தி தலையில் மல்லிகை மட்டும் சூடி வர, அந்த குறைவான ஒப்பனை கூட அவளை அழகாக காட்டியது. பாரதி பச்சை பட்டு பாவாடை அணிந்து கொண்டு அகிலனிடம் வந்து நிற்க, “ ரதி மா அப்படியே தேவலோக ரதிதான்டா நீ” ,என்று கொஞ்சி அவளை தூக்கிக்கொண்டு நின்றான்.

திலகா வந்து பரதனின் அருகில் அமர, ஐயர் மந்திரம் ஓத ஆரம்பித்தார். ராமன் சீதா அவர்களுக்கு மாலையை அணிவித்தனர். அதில் திலகாவின் கண்களில் கண்ணீர் நிறைக்க இருக்கும் நிலை கருதி தன்னை சமாளித்த அமர்ந்து இருந்தால். மனதில் ராகேஷ் நினைவா என்று கேட்டால் அங்கு அது எதுவும் இல்லை. அவனோடு அவள் வாழ்ந்தது சந்தோஷமாகத்தான். ஆனால் அங்கு அவர்களுக்குள் காதல் எல்லாம் வளரவில்லை. திருமணமானது ,அடுத்து குழந்தை. அவன் புருஷனாக கடமைகளை சரிவர செய்தான். இவள் மனைவியாக கடமையை ஆற்றினால். ஆனால் ஒருமித்த மனது, அன்யோனியம் எதுவும் வளரவில்லை. அவனும் முன்வரவில்லை ,இவளும் அதற்கு முயற்ச்சிக்கவில்லை.அவனின் இறப்பில் அதிர்ந்து இருந்தவள், ஆண்கள் என்றால் ஒரு தொலைவு ஓடும் அளவுக்கு கார்த்திகேயன் அவளை அந்த இரு மாதத்தில் ஆக்கியிருந்தான். அதன் பின் அகிலனிடம் வரும் வரை அவளுக்கு நேர்ந்த நிகழ்வுகள், அதன் பின் சுற்று புறம் பேசிய பேச்சுக்கள், ஏளனப் பார்வைகள் அவளை இன்னும் இருக்கச் செய்தது. ஆனால் அவளுக்கு புரியாதது ஒன்றே ஒன்றுதான். அது பரதனிடம் மட்டும் தன் உண்மையான குணம் எப்படி வெளிப்பட்டது என்று. அதில் அவள் சிந்திக்க மறந்தது ,அவனின் முகம் சுருங்கும் போது அதனின் காரணத்தை அவள் மனம் ஏன் ஆராய்கிறது என்பதைத்தான். ஆராய்ந்து இருந்தால் அவள் மனதை கண்டு கொண்டிருப்பாள். அவளது இறுகிய தோற்றத்தை உணர்ந்து பரதனின் உடலும் இறுகியது.

இரு வேறு மன நிலையில் ஐயர் தாலியை எடுத்துக் கொடுக்க அதை அவளுக்கு மூன்று முடிச்சுட்டு தன் சரிபாதி ஆக்கிக் கொண்டான் பரதன். அவன் அணிவிக்கும் போது ,அவள் கண்களில் இருந்த கண்ணீர் அவன் கையில் பட்டு தெறித்தது. அதில் ஒரு நிமிடம் பரதன் தன் கண்ணை இருக்க மூடி, இதுதான் இவள் வாழ்வில் இவள் வடிக்கும் இறுதி கண்ணீராக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். ஐயர் குங்குமத்தை கொடுக்க அதை தாலியிலும் ,அவளை தன்னை நோக்கி இழுத்து அனைத்தவாறு அவள் வகுட்டிலும் வைத்தான். அவள் முகத்தில் எந்த ஒரு அருவருப்பும் காணாதது அவனுக்கு ஆறுதலாகவே இருந்தது. பின் ராஜேந்திரன், ராசாத்தி, ராமன், சீதா தம்பதியராக நின்று திலகா, பாரதியை பரதன், அகிலன், சாரதம்மா தாத்தாவிடம் தாரை பார்த்து ஒப்படைத்தனர்.

மேலும் நேரத்தை கடத்த முடியாது என்பதை உணர்ந்த தாத்தா ராமனிடம் நாளை பங்குதாரரின் சந்திப்பில் சந்திப்போம் என்று விடை கொடுக்க, திலகாவிடம் ஆயிரம் அறிவுரைகளை கூறி அவர்கள் விடைபெற்றனர். வந்தது போல் அவர்கள் காரில் ஏற, பரதனின் இல்லம் நோக்கி வண்டி விரைந்தது .வீடு என்று சொல்வதை விட மாளிகை என்றே சொல்ல வேண்டும். இவ்வளவு வசதி வாய்ப்போடு வாழ்ந்தவர்கள், எப்படி அந்த எந்த வசதியும் இல்லாத தங்கள் வீட்டில் எந்த ஒரு முகச்சூளிப்பும் இல்லாமல் மனநிறைவோடு இருந்தார்கள், என்பதை அகிலன் திலகா இருவராலும் யோசிக்காமல் இருக்க முடியவில்லை.

ஒவ்வொருபரதனின் நற்குணங்கள் தெரியவர திலகாவின் மனதிலோ பின் ஏன் தன்னை மட்டும் வற்புறுத்தி திருமணத்தில் இணைத்துக் கொண்டான், என்பதை யோசிக்க ஆரம்பித்தால் .இதன் பின் ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று மட்டும் யோசித்த அவளுக்கு, திருமணம் புரிய காரணம் தேவை இல்லை மனம் ஒன்றுபட்டால் போதும் என்று யார் சொல்வது .

தங்கள் இளவரசரின் வாழ்க்கை இப்படியே போய் விடுமோ என்று பயந்து கொண்டு இருந்த அங்கே பணிபுரிந்த அத்தனை வேலை ஆட்கள் முகமும் பரதனின் திருமண கோலம் கொண்டு பூரித்து போனது .அதில் மூத்த வேலையாளான சங்கரி 52 வயது இருக்கும் ஆரத்தி கரைத்துக் கொண்டு வர ,அவருடன் சாராதம்மாவும் இணைந்து அகிலனுடன் பரதன் குடும்பத்தையிம் சேர்த்து சுற்றி அவர்களின் புதுவரவுகளை உள்ளே அழைத்துக் கொண்டார் சங்கரி.

ஆரத்தியை வெளியே கொட்டுமாறு வேறு ஒருவரை பணிந்து விட்டு, அவரும் இவர்களோடு உள்ளே நுழைந்தார். பரதன் பாரதியை தூக்கிக் கொண்டு வந்தவன் அவரின் கையில் அவளை கொடுத்து , “என் மகள், என்னை போல் இவளையும் நீங்களே பராமரிங்கள்”, என்றான் சிரித்த முகத்தோடு , அதில் அவனை சந்தோஷமாக பார்த்துக் கொண்டே, பாரதிய தூக்கிக் கொண்டவர் , “உங்களை இப்படி பார்க்க எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது” ,என்று கூறினார்.

“ சங்கரிமா எவ்வளவு தடவை கூறியுள்ளேன் மரியாதை வேண்டாம்”, என்று அவரை இவன் கடிய, “ அது அப்படி அல்ல உரியவருக்கு சேர்வதை கண்டிப்பாக தரவேண்டும்” என்று கூறி பாரதியை நெற்றியில் முத்தமிட்டார். அகிலன் மற்றும் திலகா வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருந்தனர். அதற்குள் சாரதாம்மா, “ விளக்கை ஏற்ற வா”, என்று அழைக்க அனைவரும் பூஜை அறையை நோக்கிச் சென்றனர். ஒரு பக்கம் தெய்வத்தின் படங்களாக இருக்க, அங்கே அதன் மத்தியில் மீனாட்சியம்மன் அமைதியின் சொரூபமாக மத்தியில் அமர்ந்திருந்தால். மறுபக்கம் ஆள் உயர அளவு புகைப்படத்தில் தன் தந்தையும் அவரின் அன்னையும் சிரித்த முகமாக, தோள் மீது கை போட்டு மணக்கும் ரோஜா பூ மாலையின் நடுவில் காட்சியளித்தனர்.

சாரதம்மா, “ அகிலனின் தம்பி அப்படியே நம் ஐயாவின் சாயல்”, என்றார் சங்கரி. அப்போதுதான் அகிலன் நன்றாக அவரைப் பார்த்தான். இந்த இரு நாட்களாக அவனை காண்போர் அனைவரும் கூறும் வரி இது, அது எவ்வளவு உண்மை என்பது இப்போது இந்த படத்தை அவன் பார்க்கும் போது தான் அவனுக்கு புரிந்தது. அதனால் தான் தன் தாய் தமையனால் அவனை இனம் காண முடிந்தது என்பதும் புரிந்து போனது. திலகா சாமி விளக்கை ஏற்ற அகிலன் அவர்கள் கீழ் இருந்த விளக்கை ஏற்றினான். பின் அனைவரும் சங்கரி அம்மா சாப்பிட அழைக்க வழக்கம் போல் திலகா பரதனின் அருகில் யாரும் கூறாமலே சென்று அமர்ந்தால். பாரதியை சங்கரி கவனித்துக் கொள்ள, விருந்தை முடித்து பரதனும் அகிலனும் தாத்தாவுடன் அலுவலக அறைக்குச் செல்ல, திலகாவை சாரதாமா மூன்றாவது மாடியான பரதனின் சாம்ராஜ்யம் என்றே சொல்ல வேண்டும் அங்கே அழைத்துச் சென்றார்.

தொடரும்.
 

Matharasi

Moderator
அத்தியாயம் 30

மூன்றாவது மாடியை சுற்றி காட்டியவருக்கு தலை சுற்றவில்லை .ஆனால் பார்த்தவளுக்கு தலை சுற்றுவது. எவ்வளவு நேர்த்தியாக ஒவ்வொன்றையும் அழகாக வடிவமைத்திருக்கிறான். ஆம் பரதனுக்கு அங்கு சகலமும் இருந்தது. ஒரு உடற்பயிற்சி கூடம், நீந்தும் பகுதி, ஒரு சிறு மருத்துவமனை போல் அவனின் தொழிலுக்கு ,அவன் படிக்க வசதியாக ஒரு சிறு நூலகம், பின் நீண்ட விசாலமான படுக்கை அறை மற்றும் குளியல் அறை இணைந்து இருந்தது.

“ நீ ஓய்வெடு திலகா. மாலை 6:00 மணிக்கு கீழே வந்தால் போதும் .அந்த அலமாரியில் உனக்கு வேண்டிய அனைத்தும் இருக்கும்”, என்று கூறி அவளை விட்டு சென்றார். இவள் மெதுவாக அதை திறந்து பார்க்க பல வகையான நிறத்தில் அழகான புடவைகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதில் இருப்பதிலேயே சாதாரணமாக ஒன்றை எடுத்து கொண்டு திரும்பியவள் அப்படியே அசையாமல் நின்று விட்டாள்.

அங்கே பரதனின் படுக்கை இருந்த சுவற்றில் அழகான ஒரு டாக்டராக வெள்ளைக்கோட்டில் கழுத்தில் ஸ்டத்துடன் சிரித்த முகமாக காட்சியளித்தான் பரதன் புகைப்படத்தில் .அந்த சிரிப்பில் ஒரு நிமிடம் தன்னை மறந்தால் என்பதைவிட தன்னை தொலைத்தால் என்பதே கூற வேண்டும். எவ்வளவு நேரம் நின்றாலோ பரதனின், “ திலகா”, என்ற குறளில் தான் நினைவுக்கு வந்தால் .அவன் அவளை என்னவென்று பார்க்க, “ எதற்கு எனது நிழலை முறைக்கிறாய் இதோ நானே இருக்கிறேன் நிஜத்தில்”, என்று அவளை அவன் வம்பு இழுக்க ஆரம்பிக்க, இவள் எதையும் கூறாமல் ஓய்வறைக்கு சென்று விட்டாள். அவள் மௌனமாக செல்வதை யோசனையுடன் பார்த்த பரதன் இந்த மௌனம் சரி வராதே என்று யோசித்தவன் அதை உடைக்க மார்க்கம் தேடினான்.

அவனும் தனக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு மேலே உள்ள மற்றொரு ஓய்வறையில் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்த போது அவன் கண்டது சோபாவில் கண்ணயர்ந்து இருந்த திலகாவை தான். அவள் நாசுக்காக அவர்களின் மீதி வாழ்வை அவனுக்கு உணர்த்த, அதை உணர்ந்தவன் என்னை இன்னும் நீ சரியாக புரிந்து கொள்ளவில்லையே திலகா, நீ என்னை தள்ள தள்ள நான் உன்னை நெருங்கவே செய்வேன் என்று கோணலாக சிரித்தவன், அவன் படுக்கையில் சென்று படுத்தவன் , இருந்த அசதியில் உறங்கிப் போனான்.

யாரோ அழைப்பது போல் இருக்க தூக்கத்திலிருந்து விழித்தவள்,அது அழைப்பு மணி என்று உணர்ந்து அந்த அறையின் கதவை திறந்தாள். அங்கே சங்கரி அம்மா கையில் ட்ரேயுடன் நிற்பதை கண்டவள் அதை வாங்கிக் கொண்டால். “ சின்னய்யாவும் நீங்களும் ஆறு மணி போல் கீழே வருமாறு பெரிய ஐயா சொல்லச் சொன்னாங்க”, என்று கூறியவர், “ பாரதி அகிலன் தம்பியிடம் இருக்கிறாள்”, என்று கூடுதல் தகவலையும் அளித்து விட்டு நகர்ந்தார் .இவள் தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள ஓய்வறைக்குள் நுழைய, பரதன் கண்விழித்தான். அவனும் தனக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு, மற்றொரு அறையில் சென்று கிளம்பி வந்தான். திலகா சேலையை மாற்றாமல் கிளம்பி சோபாவில் அமர்ந்திருப்பதை கண்டவன், நேரே அவள் அருகே வந்து அமர்ந்தான் .அவள் சற்றென்று எழுந்திருக்கவும் அவன் அவள் கையை பிடித்து இழுக்க, பிடிமானம் இல்லாமல் அவன் மீது சரிந்து விழுந்தால். அதில் அவளை இடையோடு பற்றியவன், “ திலகா உனக்கு ஏற்கனவே நிறைய தடவை கூறியிருக்கிறேன், என்னை விட்டு விலக வேண்டும் என்று எதையும் நினைத்து செய்யாதே என்று, நீ அவ்வாறு செய்ய எனக்கு இன்னும் உன்னை நெருங்க வேண்டும் என்று தான் தோன்றும்”, என்று அவளிடம் கூறியவன் அவளை விடுவித்தான்.

அதில் நடுங்கிய உடல் கொஞ்சம் நிலைக்கு வர, “ நீங்கள் கணவன் என்ற உரிமையை”, என்று அவள் பயத்தில் தந்தி அடிக்க , “ஆமாம் கூறினேன் நான் அதை மறுக்கவில்லையே, ஆனால் பிறர் அறிய என் குடும்ப வாழ்வை படம் போட்டு காட்ட நான் தயார் இல்லை. ஆதலால் எது வேண்டும் என்றாலும் இந்த அறைக்குள்ளேதான் .வெளியே நீயும் நானும் சராசரி கணவன் மனைவிதான்”, என்றான் அழுத்தமாக . “இப்போது ஏன் இந்த அறையில்”, என்று நீ கேட்கலாம், “ இப்படியே அதை நான் நீடிக்க விடப்போவதும் இல்லை. ஏற்கனவே பாரதிக்கு பத்து வயது. அவள் நீ எதை காட்டுகிறாயோ அதையே பிரதிபலிக்கிறாள். ஆதலால் நீ என்னிடம் பழகிக் கொள்”, என்றான் முடிவாக.

“ இப்போதும் நீங்கள் கட்டாயம் தான் படுத்துகிறீர்கள்”, என்றால் ஆற்றுமையாக, “ முதலில் இந்த கண்ணீரை நிறுத்து. முதலிலே நீ எதிர்த்து நின்று இருந்தால் இவ்வளவு தூரம் நடந்து இருக்க வாய்ப்பில்லை. தப்பித்து வெளியே வந்தவள் நேராக காவல் நிலையம் சென்றிருக்கலாம். அவனை உண்டு இல்லை என்ற ஆக்கி இருக்கலாம். இது எதையும் செய்யாமல் உனது இந்த பலவீனத்தால் உன் வாழ்வை மட்டும் இல்லாமல் பாரதியின் வாழ்வையும் கெடுத்துவிட்டாய். அகிலனின் கைகளில் கிடைத்ததால் இன்று நலமுடன் வாழ முடிந்தது இல்லை என்றால் யோசித்துப் பார்”, என்ற அவன் அவளை கடிய அவளின் கண்களில் இருந்த கண்ணீர் நின்றது.

முதல் முறையாக தன்னுடைய பலவீனத்தால் விளைந்த விளைவுகளை யோசிக்க ஆரம்பித்தால். அவளுடைய அமைதி அவனை தொடர வைத்தது, “ இங்கே நடக்கும் பிரச்சினைகள் உனக்கு தெரியும் .உன் தாய், தந்தை, அத்தை, மாமா அனைவரும் இதிலிருந்து விடுபட கௌரவமாக நிம்மதியாக வாழ வேண்டும் என்றால், நீ உனது கூட்டத்தில் இருந்து வெளியே வரவேண்டும். என்னை நீ நம்ப வேண்டாம். அகிலனை நம்புவாய் அல்லவா, இத்தனை வருடம் உன் மீது சிறு கீறல் கூட விழாமல் உன்னை காப்பாற்றியவன். அவன் உன் நிழலாக இருப்பான்”, என்றான் பரதன் தன்மையாக.

“ ஐந்தறிவு படைத்த ஜீவன் கூட தன்னை காயப்படுத்தியவர்களை விட்டுவிடுவதில்லை. இன்று நீ தனி ஆளும் கிடையாது. பாரதியும் வளர்ந்து விட்டால். யாரையும் சிறை வைத்து உன்னை வீழ்த்த முடியாது”, என்றான் அவனே தொடர்ந்து ,அவள் அசையாமல் இருக்கவும், “ உனக்கு உன் மீது நம்பிக்கை இருந்தால், அகிலன், தாத்தா இதுவரை உங்களை காத்த அவர்கள் உனக்கு பக்க பலமாக இருக்கிறார்கள், என்று நீ நம்பினால், இந்த வீட்டு மருமகளாக கிளம்பி வா”, என்று கூறிவிட்டு அவன் தனக்கான காபியையும் சிற்றுண்டியையிம் உண்ண அமர்ந்து விட்டான்.

திலகாவோ அவனின் பேச்சில் இருந்த உண்மையும் புரிய மௌனமாக சிந்தித்தால் .அவளை ஓரப்பார்வையால் பார்த்துக் கொண்டே உண்டு முடித்தவன் அறை வாயிலை நோக்கி சென்றான். அவன் வெளியேறுவதை உணர்ந்தவள் அவன் கதவைத் தொடும் முன், தன்னை ஒரு நிலைப்படுத்திக் கொண்டு சாரதா அம்மா அகிலன் தாத்தா இப்போது பரதன் பேசிய பேச்சுக்கள் அத்தனையும் மனதில் ஓட விட்டவள் ,ஒரு முடிவு வந்தவளாக , “என்னால் முடியுமா என்று எனக்கு தெரியாது. ஆனால் இனிமேல் ஓடி ஒழிய விருப்பமும் இல்லை. என் குழந்தைக்கான அங்கீகாரத்திற்கு போராட ஒரு தாயாக விரும்புகிறேன். நான் யாரை நம்புகிறேன் நம்பவில்லை அது இப்போது முக்கியமில்லை. என் குழந்தையின் மீது அனைவருக்கும் அன்பு இருக்கிறது, அதில் எள்ளவும் எனக்கு சந்தேகமும் கிடையாது”, என்றவள், அவளுக்கான உடையை அலமாரியில் எடுத்துக்கொண்டு ஓய்வறையை நோக்கி சென்றாள். அதில் பரதனின் முகத்தில் சிறு புன்னகை தோன்றியது .

அழகான சாப்ட்சில்க் சிவப்பில் தங்க நிற பாடர் கொண்ட சேலையில் கிளம்பி வந்தவளை பார்த்த அசையாமல் இருப்பது இப்போது பரதனின் முறையானது. அவனது அந்த மௌனத்தை அவனின் அலைபேசி சிணுங்கி ஒரு முடிவுக்கு கொண்டு வந்தது. அதில் அவளை பார்த்தவன் ஆடைக்கு ஏற்ற அணிகலன்கள் இல்லாமல் போக ,அவன் கட்டிய தாலி கயிற்றுடன் அவள் எப்போதும் அணியும் மெல்லிய சங்கிலி, ஒரு ஜோடி வளையலும் மட்டுமே அணிந்திருந்தாள் .அதில் அவன் முகம் சுருங்கியது. அவனின் முகம் மாற்றத்தை கண்டு கொண்டவள், சாரதாம்மா திருமணத்திற்கு அணிவித்த நகையை கழட்டி வைத்திருந்த அலமாரியைத் திறந்து அதில் இருந்து ஒரு டாலர் செயினையும் கைக்கு மேலும் மூன்று ஜோடி வளையல்யையும் அணிந்து வந்த அவன் அருகில் நின்றால். அதில் மகிழ்ந்தவன் முன் திரும்பி கீழே இறங்கும் படியை நோக்கி நடந்தான் .அவளும் அவனை பின் தொடர்ந்தால்.

இவர்கள் வருவதற்கும் அனைவரும் ஒரு குட்டி தூக்கம் தூங்கி ஹாளில் சிற்றுண்டி முடித்து அமர்வதற்கும் சரியாக இருந்தது. தெளிந்த முகத்துடனும் நேர்த்தியான உடைகளும் பரதனின் சரிக்கு சரியான இணையாக நடந்து வந்த திலகாவை பார்த்த அகிலனுக்கு மனது நிறைந்து தான் போனது. நேராக வந்தவர்கள் அருகிய அருகே அமர தாத்தா சாரதாம்மா மனதில் இருந்த நெருடலும் விலகித்தான் போனது.

“ திலகா மா இப்போதுதான் நெஞ்சில் இருக்கும் பாரம் குறைந்தது உன்னை ரொம்பவும் கட்டாயப்படுத்தி விட்டோமோ என்று கவலையாக இருந்தது”, என்று தாத்தா தன் மனதை கூற , “ தாத்தா எனக்கு எதை சொல்வது என்று தெரியவில்லை ஆனால் நிச்சயம் அவனை ஒரு வழி பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது .ஆனால்”, என்று திலகா தயங்க , “அண்ணி முதலில் முடியும் என்று நம்புங்கள். அதுவே உங்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கும். இப்போது நீங்கள் தனி ஆள் கிடையாது”, என்று அகிலன் அவளுக்கு நம்பிக்கை ஊட்ட, “ நீங்கள் தந்த நம்பிக்கையில் தான் குழந்தையோடு வாழ ஆரம்பித்தேன். இப்போதும் இதையும் எதிர்கொள்கிறேன்”, என்றால் அவள் பதிலாக. இரு பெரியவர்களுக்கும் அவள் பரதனை நம்புகிறேன் என்று சொல்லாதது நெருடினாலும் நிதர்சனம் உணர்ந்து அமைதி காத்தார்கள்.

தொடரும்
 

Matharasi

Moderator
அத்தியாயம் 31

நாளை பங்கு தாரர்களின் சந்திப்பு இருக்கிறது. அவனை திசை திருப்புவதற்காகவே வெறும் ஒரு சந்தேகம் என்று மொட்டையாக தான் கூட்டத்தைக் கூட்டி இருக்கிறேன். அவனுக்கு ராகேஷ் 35 சதவீத பங்குகளை கொடுத்திருந்தான். திலகா பெயரில் 40%, பாரதி பெயரில் 10% இருக்கிறது. நான் நமது விசுவாசியான ராமனின் நண்பனான ரமேஷ் பெயரில் 10 சதவீத பங்குகளை வாங்கி வைத்திருக்கிறேன். மீதம் 5% வெளிதாரர்களின் பங்கு. ஆகவே நாளை திலகா வந்து அவள் பங்கையும் பாரதி பங்கையும் உரிமை கோர வேண்டும். ராமனை பகடைக்காய் வைத்து தான் அவன் இவ்வளவு நாள் ஆட்டத்தை காட்டினான். அவன் எவ்வளவு சோதனை கொடுத்தாலும், ரமேஷ் பங்கை விடவில்லை. ஆதலால் நாளை நாம் அதிக சதவீத பங்குகளை உடன் உரிமை கோரி, அந்த பதவியை பெற்றுக் கொள்ள வேண்டும். பின் நாம் அவனுக்கு ஒரு நிரந்தர முடிவை கட்டியவுடன் அவள் விருப்பப்படி அதை அவள் செய்யலாம்”, என்று தாத்தா திலகாவுக்கு நாளை நடக்கப்போவதை விளக்கினார்.

“ இவ்வளவு வருடம் அதை பொன் போல் பாதுகாத்தவன் நான் கேட்டவுடன்”, என்று அவள் தயங்க , “கொடுத்தது தான் ஆக வேண்டும், ஏனென்றால் அதை ராகேஷ் மிகவும் சரியாக அதை யாருக்கும் நீ விற்க முடியாத படி, அது உனக்கு பின் தான் பாரதிக்கு, என்று தெளிவாக எழுதி இருக்கிறான்”, என்றார் தாத்தா. “ உனது பயம் தான் அவனின் பலம், நாளை உன்னுடன் நாங்கள் அனைவரும் இருப்போம். அதுபோக நீ சட்டப்படி பரதனின் மனைவி. அவனால் ஒன்றுமே செய்ய முடியாது. பாரதி பரதனின் குழந்தையாக சட்டப்படி பதிந்து ஆயிற்று என்று மேலும் அவளுக்கு திடம் கூட்டினார். இவை அனைத்தையும் மௌனமாக மட்டுமே பரதன் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ திலகமா வந்து விளக்கேற்று”, என்று சாரதம்மா அவளை அழைத்துச் செல்ல, தாத்தாவிடம் சரி என்று தலையை அசைத்து விட்டு அவர்களை பின் தொடர்ந்தால். அங்கே ஏற்கனவே பாரதி சங்கரி அருகில் நின்று கொண்டிருக்க, முதலில் ஏற்றும்போது இருந்த கழகம் நீங்கி ஒரு புது மனநிலையில் பரதன் கூறிய இந்த வீட்டு மருமகளாக விளக்கேற்றினால். “ இதுவரை நானாக எதையும் உன்னிடம் கேட்டதில்லை. நீ எனக்கு எந்த பாதையை வகுத்து தந்தாயோ, அந்த பாதையில் தான் என் பயணம் சென்றது. இன்றும் அப்படித்தான் ஆனால் எனக்கு முதலில் இருந்த கலக்கம் இப்போது இல்லை. ஒரு தெளிந்த மனநிலை எப்பாடுபட்டாவது என் குழந்தைக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை பெற்று தரவேண்டும் என்று நினைப்பு. அதுபோக நான் வெறும் பெண்தானே, பெண் குழந்தை வைத்துக் கொண்டு நான் என்ன செய்து விடப் போகிறான் என்றுதானே ஓட ஓட என்னை துரத்தி வேட்டையாட எண்ணினான். அவனைப் பெற்றவளும் ஒரு பெண் என் என்பதை மறந்து போனவனுக்கு ஒரு பெண்ணால் என்ன செய்ய முடியும் என்பதை காட்ட வேண்டும். எனக்கு துணையாக இரு. இதுவரை எங்களை பாதுகாத்த குடும்பத்திற்கு எந்த ஒரு தலைகுனிவோ பங்கமோ வராமல் பாதுகாத்துக் கொள்”, என்று தன் மனம் உருக வேண்டிக் கொண்டாள் .

அவள் கண்களை திறந்தவுடன், “ அம்மாடி உன் மாமனாரின் விளக்கையும் ஏற்று குழந்தையுடன் சேர்ந்து”, என்று சாரதா அம்மா கூற ,பாரதி அவள் அருகில் , “அம்மா”, என்று வர இரு நீண்ட நாட்கள், மனநிலை இருந்த நிலையில், இன்று ஒரு தெளிவு வந்த பிறகுதான் மகளை காணுகிறாள் .அழகான பிங்க் முழு கௌனில் அதற்கு ஏற்ற தோடு வளையல்கள் அணிந்து சந்தோஷத்தின் முழு ரூபமாக நின்று இருந்தால் பாரதி.

“ அகிமாவின் அலங்காரமா”, என்று திலகா அவளை அரவணைத்துக் கொண்டு கேட்க, “ ஆமாம் ”, என்றால் பாரதி குதுகுலமாக, “ அகிமாவுடன் இருந்தால் உனக்கு அம்மா ஞாபகம் வராது”, என்று திலகா பொய் கோபம் கொள்ள, “ திலகமா பாரதி பாவம்”, என்று குழந்தை தன் அன்னையை கொஞ்ச ,அதில் திலகாவின் முகம் மலர்ந்தது .

“வா தாத்தாவுக்கு விளக்கேற்றலாம்”, என்று திரும்பி அந்த புகைப்படத்தில் அருகில் இருந்த விளக்கை ஏற்றியவல். தன் கண்களை இருக்க மூடிக்கொண்டு, “ என் சம்மதம், இல்லாமல் உங்கள் இரு மகன்களின் கட்டாயத்திலும், வேண்டுதலிலும் இந்த திருமணம் நடந்து உங்கள் மருமகளாக வந்து விட்டேன் . மனதில் வெறுப்பு எதுவும் இல்லை. ஆனால் மனம் ஒருமனப்படுமா என்று தெரியவில்லை. காலத்தை அதுபோக்கில் ஏற்றுக்கொள்ள மனதிடத்தை தாருங்கள். அன்று உங்களின் செயின் என் மகளுக்கு ஆசீர்வாதமாக கிடைத்தது. அதில் நீங்கள் அவளை முழு மனதாக ஏற்றுக் கொண்டதை அறிகிறேன். வீட்டினரும் அவளை வேறாக பார்க்கவில்லை. ஆனால் நான் எவ்வளவு தூரம்”, என்று அவள் நினைக்க, அங்கே சற்று கனமான காற்று வீசியது போல் திலகா உணர, அந்த விளக்கின் அருகில் அவருக்கும் அவர் அன்னைக்கும் சேர்ந்தார் போல் அணிந்திருந்த மாலையில் இருந்து வந்து ஒரு ரோஜாப் பூ விழுந்தது. அவள் அந்த கனத்த காற்றில் கண்னை திறக்க அவள் கண்டது அந்த ரோஜா பூ வைத்தான்.

“” சின்னம்மா பாருங்கள் எங்களின் ஐயா உங்களை மனப்பூர்வமாக பரதன் ஐயாவின் மனைவியாக ஏற்றுக் கொண்டு, உங்களை ஆசீர்வதித்துள்ளார்”, என்ற சங்கரி அந்த பூவை எடுத்து அவளை சூட்டிக்கொள்ள சொல்ல அவளும் எதுவும் மறுப்பு பேசாமல் சூடிக்கொண்டாள். “ அனைத்தும் நல்லபடியாக முடிய துணை நில்லுங்கள்”, என்று வேண்டி சாரதாம்மாவிடம் வந்தால் .

“அம்மாடி உன் மாமா உனக்கும் உன் குழந்தைக்கு சகல செல்வங்களையும் ஆசீர்வாதங்களையும் கொடுப்பார்”, என்று கூறி அங்கே இருந்த குங்குமத்தை எடுத்து அவளின் தாலியிலும் வகுட்டிலும் வைத்தார். பின் பாரதிக்கு அதை போல் செய்வதற்கும் பரதன் அங்கே வருவதற்கும் சரியாக இருந்தது. அவன் வந்தவுடன் பாரதி ஃப்ரெண்ட் என்று தாவ அவளை தூக்கிக் கொண்டவன், “ நான் கூட யாரோ தேவதை தான் நம் வீட்டுக்கு வந்து விட்டாங்கன்னு பார்த்தேன், பார்த்தா நம்ம ரதிமா”, என்று மகளை உச்சிமுகூர்ந்தான் . “ என் அகிமா தான் அலங்காரம்”, என்று பாரதி இல்லாத காலரை தூக்கி விட, “ ஓ உன் அகிமா வா ,அப்போ அவன் எனக்கு தம்பி இல்லையா”, என்று அவள் அவளை கேட்க, “ ஐயோ ப்ரெண்ட் உங்களுக்கு தெரியாதா, என் அகிமா தான் உங்க தம்பி, என் சித்தா”, என்று அவள் கூற, “ சித்தாவாக பரவாயில்லையே என் தம்பிக்கு கூட பதவி உயர்வு கிடைத்து விட்டது”, என்று பரதன் திலகாவை பார்த்துக் கொண்டே கூறினான்.

“ டேய் போக்கிரி உனக்கு அவளை வம்பு இழுக்கனும்”, என்று பரதனை சாரதாம்மா கண்டன பார்வை பார்க்க, குடும்பமாக அவர்கள் பேச ஆரம்பித்த உடன் சங்கரி அம்மா அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அவனின் கூற்றில் திலகா குனிய , பாரதி மௌனம் கொண்டாள். “ சரி டா ரதி வா நாம் நம் உலகிற்கு செல்லலாம்”, என்று அவளை தூக்கிக்கொண்டு அந்த இடத்தை விட்டு பரதன் நகர்ந்தான்.

“அம்மா நீ எதுவும் குழப்பிக் கொள்ளாதே. காலத்தை போல் சிறந்த மருந்து எதுவும் கிடையாது. என்றாவது நினைத்துப் பார்த்தாயா நீ மறுபடியும் கோவையில் வந்து நிற்பாய் என்று. அதுபோல் நானும் நினைத்து கூட பார்க்கவில்லை ஒரு நாள் மட்டுமே பிறந்து என்னோடு இருந்த என் மகன் வாலிபனாக என்னிடம் திரும்பக் கிடைப்பான் என்று. அதுபோக பெண்களின் மேல் வெறுப்பின் உச்சத்தில் இருந்தவன் பரதன் உன்னை மனதாரத்தான் திருமணம் முடித்துக் கொண்டான். அவன் முகத்தில் மறைந்து இருந்த சிரிப்பு அது இப்போதுதான் வளர்கிறது. அதுபோல உன் முகத்திலும் மலர வேண்டும். இதை ஒரு மாமியாராக உனக்கு சொல்லவில்லை. நானும் ஒரு கைப்பெண் என்பதால் கூறுகிறேன். முதலில் மனம் விட்டு பேசுங்க”, என்று கூறி, அவர் இரவு உணவு என்ன என்பதை பார்க்க அவளையும் அழைத்துக் கொண்டு சென்றார்.

இரவு உணவை தயார் செய்துவிட்டு ஆண்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்க வர அங்கே வெளியே இருந்த தோட்டத்தில் அழகான மின்விளக்குகள் மின்ன பாரதி பந்து போட, அகிலன் பந்தை மட்டையை கொண்டு அடிக்க, அங்கே பரதன் அதை பிடிக்க, தாத்தா அதற்கு நடுவராக விளையாடிக் கொண்டிருந்தனர். இவர்கள் சென்ற நேரம் சரியாக பாரதி ஓடி வந்து பந்தைப்போட, அகிலன் அதை ஓங்கி அடிக்க பரதன் அதை சரியாக பிடித்திருந்தான். தாத்தா, “ அவுட்”, என்ற செய்கையை செய்ய, பாரதி ஓடி வந்து பரதனை கட்டிக்கொண்டு அவன் முகத்தில் முத்தம் மழை பொழிய ,அவனின் உடம்பில் ஒரு சிளிர்ப்பு. பின் இருவரும் அகிலனை பார்த்து நக்கல் அடித்தவாறு நடனமாட, அவனோ , “தாத்தா”, என்று சிறு குழந்தை போல் அவரிடம் கொஞ்சிக் கொண்டே தஞ்சம் புகுந்தான். அந்த பசுமையான புல் தரையில் அவர் அமர ,அகிலன் அவர் மடியினில் தலை வைத்து படுக்க, பாரதி ஓடி வந்து, “என்னோட கோல்ட் பா”, என்க, “ இது என் தாத்தா”, என்று அகிலன் அவரை உரிமை கொண்டாட, “ போ அகிமா”, என்று பாரதி கூற, “ பாரதி போங்க என்று கூறவேண்டும் ,எத்தனை தடவை கூறியிருக்கிறேன் “,என்று அங்கே சாரதாம்மாவுடன் வந்த திலகா அதட்ட, “ அண்ணி”, என்று அகிலன் ஏதோ கூற வர, “ அகி, நம்மை அவள் பேசும் போதே அவளை நாம் கண்டித்து விட்டால், வேறு யாரிடமும் அவள் இதை பயன்படுத்த மாட்டாள்”, என்று பரதன் கூறினான்.

“ சாரி பிரிண்ட்”, என்று சொன்ன பாரதி , “போங்க சித்தா”, என்று படுத்திருந்த அகிலன் வயிற்றில் ஏறி அமர்ந்தால். “ அவர் உங்கள் தாத்தா, நீங்கள் என் அகிமா”, என்றால் சிரிப்பாக. “ சரியான வாளு”, என்று சாரதா அம்மா அமர்ந்து அகிலனின் கால்லை மடி மீது வைத்தார் . பரதனோ ,இன்னொரு ஒரு பக்கம் தாத்தாவின் மடியில் தலை வைத்து கால்லை நீட்ட, திலகாதான் எங்கு அமர்வது என்று குழம்பிக் கொண்டு நின்றாள். அதை கண்ட பாரதியோ எழுந்து வந்து, தன் அன்னையின் அருகில் வந்து, அவள் கையைப் பிடித்து பரதனின் அருகில் அமர்த்தி விட்டு. அவள் பரதனின் வயிற்றில் தலையை வைத்து படுத்து திலகாவின் மேல் காலை நீட்டினாள்.

அதை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு குழந்தையின் ஏக்கம் புரிந்தது. அதை பார்த்துக் கொண்டிருந்த திலகாவிற்கு கண்களில் கண்ணீர் அரும்பினாலும் மனது நிறைந்து தான் போனது. பரதன் பாரதியின் தலையைவாஞ்சியோடு, தடவ அவளோ அழகான ஆங்கில பாடலை பாடினாள்

“ I love my gold Pa,

I love my grandma,

I love my father

என்று அவள் இந்த வரியை பாடும்போது மட்டும் தன் கண்களை இருக்க மூடிக்கொண்டால் ,அதை கண்டுகொண்ட பரதன் அவளை தோளோடு அணைத்து அவளின் தலையில் முத்தம் இட்டான். அவள் தன் பாட்டைத் தொடர

I love my mother

I love my chithappa

Happy happy family

happy happy family”

தொடரும்
 

Matharasi

Moderator
அத்தியாயம் 32

“ பரதா, அகிலா இன்று போல் என்றும் குடும்பம் உடையாமல் ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும்”, என்றார் தாத்தா அவர்கள் இருவரின் தலையை கோதியவாறு, “திலகா சாரதாக்கு அடுத்து நீதான், நாளை அகிலனுக்கு என்று ஒருவர் வரும்போதும் அவளையும் அரவணைத்து குழந்தைகள் அனைவரும் ஒருவறே என்ற மனப்பான்மையோடு குடும்பம் நடத்தி வழி நடத்த வேண்டும்”, என்றார் பொறுப்பான குடும்பத் தலைவராக.



“ பரதா நீ உன் என் முன்கோபத்தை குறைக்க வேண்டும். நாளை அவன் எப்படி வேண்டும் என்றாலும் பேசுவாள். பொறுமை ரொம்பவும் முக்கியம்”, என்றார் பரதனை , “அகிலா நீ பாரதியை உன் கைக்குள் வைத்துக்கொள். பரதன் திலகாவுடன் இருப்பான். ரொம்பவும் கவனம் இனிமேல். அவன் எது வேண்டும் என்றாலும் செய்வான், அதனால் தான் சொல்கிறேன். அது போக பரதன் நீ மீண்டும் கண்டிப்பாக உனது தொழிலை பார்க்க வேண்டும். நான் காசு கொடுத்து உனக்கு சீட்டு வாங்கவில்லை .அது முழுவதும் உன் உழைப்பு நீ படித்ததற்கு கிடைத்த சொத்து .அதுவும் அது உன்னதமான தொழில்”, என்று அகிலனிடம் ஆரம்பித்து பரதனிடம் முடித்தார் .

அதில் பரதன் முகம் வாட, “ தாத்தா அண்ணன் இந்த பிரச்சினை எல்லாம் முடியவும் கண்டிப்பாக நீங்கள் கூறியதை செய்வார். அதுவரை அவர் எங்களுக்கு துணையாக எங்களுடன் இருக்கட்டும்”,என்றான் அகிலன் பரதனுக்கு ஆதரவாக.

அகிலனின் பதிலிலும் பரதன் முகம் தெளியாமல் இருக்க அதை கண்ட திலகா, “ ஊருக்குத்தான் உபதேசம் போல ,நம்மை மட்டும் எப்படி துரத்துகிறார். இருக்கட்டும் இன்னும் ஒரு முறை வாய் திறக்கட்டும் திருப்பிக் கொடுக்கிறேன்”, என்று சராசரி மனைவியாக சண்டைக்கோழியாக மாற அதிர்ந்து விட்டால், ஏன் நமக்கு என்ன என்று அவள் தன்னை ஆராய, அய்யோ இவனை நெருங்க கூடாது என்று முடிவெடுத்துக் கொண்டால்.

“ பரதன், நாளை பள்ளியில் பரிசோதனைக்கு எல்லாம் தயார் தானே”, என்று தாத்தாவின் கேள்விக்கு, “ அகிலனுக்கு தெரிந்த பெண் மருத்துவரை வைத்து தான், அது போக சாத்விக் சாரும் அங்கே மஃப்டியில் இருப்பார் ,அவர்களின் ஆட்களுடன். நாம் இங்கு கொஞ்சம் சரி செய்துவிட்டு அங்கேயும் கொஞ்சம் பார்க்க வேண்டும். மணி 9ஐ நெருங்கும்போது தாத்தா அம்மா மாத்திரை போட வேண்டும் அல்லவா வாங்க சாப்பிட”, என்று பரதன் பாரதியை தூக்கிக் கொண்டு எழுந்தான்.

அனைவரும் சாப்பாடு மேஜைக்கு வர பாரதியை தன் அருகில் இருந்த மேஜைமேல் அமர வைத்தான் பரதன், சங்கரிமா, “ அவளுக்கு நான் பார்த்துக் கொள்கிறேன்”, என்று கூற மறுத்துவிட்டான் , அங்கே சாப்பாட்டை திறந்து பார்த்த திலகா, அனைத்தும் மிக எளிமையான செரிக்கக் கூடிய உணவான இட்லி இடியாப்பம் மட்டுமே இருக்க ,அந்த நிமிடம் அவளுக்கு தோன்றியது அகிலனுக்கும் பாரதிக்கும் இட்லி இடியாப்பம் என்றால் சுத்தமாக இறங்காது. அதற்கு துணையாக எதுவும் காட்ட சாட்டமாக இருந்தால் ஒன்று இரண்டும் இறங்கும். ஆனால் இங்கு அனைத்தும் காரம் சற்று குறைவாகவே இருந்தது .

சங்கரி பரிமாற அகிலனின் முகம் ஒரு நிமிடம் கோனி நார்மலானது. அவர் பாரதி தட்டில் வைக்க அவள் கத்தியை விட்டால். “ஐயோ சங்கரி பாட்டி போய் தோசையில் பொடி தூவி நெய் ஊற்றிக் கொண்டு வாங்க, எனக்கும் என் சித்தாவுக்கும்”, என்று அவள் அகிலனை கூட்டு சேர்த்து கூற ,அவரோ பரதனை பார்த்துக்கொண்டு நின்றார். அகிலனோ அடி ரதி குட்டி என்னையும் சேர்த்து போட்டுக் கொடுக்கிறாயே என்று மனதில் அலர,என்று காலை காப்பி டீ கிடையாது சத்து மாவு பானம் தான் என்று தெரிந்ததோ அன்றே பரதன் சாப்பாட்டு விஷயத்தில் கரார் என்பதை புரிந்து கொண்டான்.

பாரதி இது எதையும் சட்டை செய்யாமல், “ போங்க சங்கரி பாட்டி பாப்பாவுக்கு பசிக்குது”, என்றது , அவரோ செய்வது அறியாமல் பரதனை பார்த்துக் கொண்டே நின்றார். சாரதா அம்மா தாத்தா அமைதியாக தாங்கள் தட்டில் இருந்த இட்லியை அளவாக ஊற்றப்பட்ட சாம்பாரை தொட்டு சாப்பிட்டு கொண்டு இருந்தனர் .இங்கு நடப்பதை காணாதது போல். ஆம் அவர்களுக்கு இரவு சட்னி கூட கிடையாது. சாம்பார் தான் அதுவும் அதில் மருந்துக்கு கூட எண்ணெய் இருக்காது. திலகாவோ ஐயோ இவள் வேறு என்று, “ பாரதி அதை காலை அம்மா உனக்கு செய்து தருகிறேன், பார் உன் அகிமா கூட நல்ல பிள்ளையாக சாப்பிடுகிறார்”, என்று அவளை சமாதானப்படுத்த முயல ,அவளோ முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அனைவரையும் ஒரு முறை பார்க்க அவர்கள் மூவரும் தங்களுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லாத போல் சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.

“ஃபிரண்டு ப்ளீஸ், நான் காலையில் கூட நீங்க சொன்னது போல அந்த மாவு குடிக்கிறேன்ல”, என்று பாரதி தன் கண்களை உருட்டி கையை அவன் கன்னத்தில் வைத்து கொஞ்சி கேட்க ,அங்கே அந்த பெறாத மகளின் அதிகாரத்தில், பரதன் மட்டும் என்ன விதிவிலக்கா அவளின் அன்பிலும் கொஞ்சலிலும் விழுந்து தான் போனான். “பட்டுக்குட்டிக்கு இல்லாததா, சங்கரி அம்மா பாப்பாவுக்கு மட்டும் அவள் கேட்ட விதமாக”, என்று அவன் கூறி முடிக்க, “ ஃபிரண்டு அகிமாவுக்கு, நானும் அவரும் தான் எப்பவும் சேர்ந்து சாப்பிடுவோம்”, என்று அந்த பிஞ்சி தன் அன்பின் உரிமையாளனுக்கு பரிய, “ சரிடா பட்டுக்குட்டி அகிலனுக்கும் என்ன பிடிக்குமா”, என்று பாரதம் சங்கரிமாவிடம் கூற, “ அதை நான் பார்த்து இருவருக்கும் கொடுக்கிறேன்”, என்று திலகா வேகமாக சமையல் அறைக்குள் புகுந்தால் .

அகிலனோ அப்பா என்று தன் மூச்சை வெளியிட, “ என்னடா தப்பித்தோம் என்று நினைக்கிறாயா”, என்ற சாரதா அம்மாவி , “ உன் அண்ணன் அவன் நினைத்ததை தான் செய்வான்”, என்றார். “ போங்க அம்மா பாருங்க என் செல்ல குட்டி மீறி எதுவும் நடக்காது”, என்று அவன் பாரதியை பார்த்துக் கொண்டே கூறினான். அதற்குள் திலகா தோசையை பொடி தூவி நெய் ஊத்தி அடுக்க சங்கரி அம்மா அகிலன் பாரதிக்கு பரிமாறினார். பாரதிக்கு பரதன் சட்னி சம்பார்ரில் பட்டுப்படாமல் தொட்டுக் கொடுக்க, “ ஃபிரிண்ட் இப்படி இல்லை நன்றாக சட்னி சாம்பாரின் முக்கி எடுத்து”, என்று சொன்னதை செய்து பரதன் எதிர்பாராத வண்ணம் அவன் வாயில் ஊற்றினால். அதை தன் கண் அகல விரித்தான் பரதன் அவளின் செயல்களில். அவனின் கண்களில் கண்ணீர் சுரந்தது. அவன் அசையாமல் இருக்கவும், “ ஃப்ரண்ட் வேகம் பாப்பாவுக்கு பசிக்குது”, என்று அவனை நிகழ்காலத்திற்கு இழுத்து வந்தால்.

அகிலன் மனதிற்கு சிரித்துக்கொண்டே, பாரதியின் முயற்சியில் வந்த தோசையை விழுங்கிக் கொண்டிருந்தான். பாரதி சொன்ன விதமாக அவள் அவனுக்கு உட்ட என்று ஒரு வழியாக அந்த சாப்பாடு நேரமுடைய திலகாவும் அவர்களோடு வந்து பின் சேர்ந்து கொண்டால். அந்த இட்லியை சாப்பிட போக, “ உனக்கு வேண்டும் என்றால்”, என்று பரதன் ஆரம்பிக்க, “ அது எங்கள் நல்லதுக்கு தானே”, என்று சாப்பிட முடித்தால் .தாத்தா சாரதா அம்மா நடக்க போக, “ அகிலா”, என்ற பரதன் , “என்ன அண்ணா”, என்று கேட்டவனிடம், “ பாரதியை அழைத்துக்கொண்டு தாத்தா அம்மாவோடு நட. இப்படி இரவில் நெய் எல்லாம் கடினமானது அதுதான்”, என்று கூற, “ சாரதாம்மா, அகிலனை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தார்.

அகிலனும் பாரதியும் முகத்தை தூக்கிக் கொண்டு நடக்க சென்றனர் பரதன் சமையல் அறைக்குள் நுழைந்தான். தோட்டத்திற்கு சென்றவர்கள் பெரியவர்கள் மட்டும் மெதுவாக நடக்க ,சிறியவர் இருவரும் ஊஞ்சலில் அமர்ந்த ஆடினர். “ அகிலா வந்து நடை இல்லை என்றால் உன் அண்ணன்”, என்று சாரதாம்மா கூற , “ அடப்போங்க பாட்டி ஃபிரண்டை சமாளிக்க எனக்கு தெரியும்”, என்று பாரதி கூட , “உனக்கு தெரியுமா சமாளிக்க, பாட்டி என்று நீ அலறும் போது பார்த்துக்கொள்கிறேன்”, என்று அவர் நடந்தார். அவர்கள் நடந்து முடிந்தவுடன் தாங்களும் நடந்த விதமாக அகிலன் பாரதியும் நடித்து வண்ணம் வந்தனர்.

அகிலனிடம் ஒரு டம்ளரை நீட்ட, அவன் என்னவென்று பார்க்க, “ சீரகத் தண்ணீர் குடி”, என்றான். பாரதி இதுதான் சரியான சமயம் என்று , “வாங்க பாட்டி எனக்கு கதை சொல்லுங்க நாம் தூங்கப் போவோம்”, என்று ஓடப்பார்க்க, “ அவரோ இரு பாரதி குட்டி உனக்கு உங்க பிரண்டு ஏதாவது வைத்திருப்பார்”, என்று அவர் அவளை நக்கல் அடிக்க, “ என் பட்டுக் குட்டிக்கு சின்ன டம்ளர் தான்”, என்று அவளிடம் ஒன்றை நீட்டினான். அது உடனே, “ அம்மாவுக்கு என்று திலகாவை இழுக்க திலகாவோ ஐயோ என்று மனதுக்குள் அலற, “ அம்மா நல்ல பிள்ளையா நான் கொடுத்ததை மட்டும் தான் சாப்பிட்டா, நீங்கள் இருவரும் தானே”, என்று பரதன் கூற, “ ஓ ஆனா நான் உங்களுக்கு கொடுத்தேன் தானே”,என்ற பாரதி, “ சோ உங்களுக்கும் எனக்கு பாதி பாதி”, என்று பரதனிடம் கூற பரதன் ஒரு மடக்கு குடித்து கொடுக்க, அதுவும் மீதியை குடித்துவிட்டு, “ சீ”, என்று கூறிவிட்டு அகிலனை பார்க்க அவனும் ஒரே மூச்சாக குடித்துவிட்டு பாவமாக முகத்தை வைத்துக் கொண்டான்.

“ நாளை நிறைய வேலை இருக்கிறது”, என்று கூறி தாத்தா அறைக்குள் செல்ல, சாரதாவும் அகிலன்னும் பாரதியை அழைக்க, “ அது எல்லாம் ஒன்றும் வேண்டாம், அவள் எங்களோடு இருக்கட்டும்”, என்று கூறி அவளை தூக்கிக்கொண்டு பரதன் மாடிப்படி ஏறினான். அவனை பார்த்த திலகா நிற்க, சாரதா அம்மா, “ திலகா”, என்று கூப்பிட, “ ஒன்றும் இல்லை நீங்கள் போய் ஓய்வெடுங்கள்”, என்று அவள் கூற அவர் நகர்ந்துவிட்டார். அகிலனும் திலகவும் ஒன்றாக மாடிக்கு படி ஏறினர் .

“அண்ணி “,என்று அகிலன் அழைக்க, “ என்ன தம்பி”, என்று அவள் இருந்த மன நிலையில் சற்று தடுமாற , “ரொம்ப நன்றி”, என்றான் அகிலன். அவள் எதுவும் புரியாமல் அவனைப் பார்க்க, “ எனக்கு தெரியும் நீங்கள் எனக்காக தான் இங்கே வந்தீர்கள், பாரதிக்காக சம்மதித்திருந்தாலும் நான் குடும்பமாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான்”, என்று அவன் முடிக்க, “ அதுவும் ஒரு காரணம் தான். இல்லை என்று சொல்ல மாட்டேன். ஆனால் எத்தனை நாள் நான் ஓடி ஒழிய முடியும். அவர்களையும் விடுவிக்க வேண்டும் அல்லவா. பாரதிக்கு ஒரு அங்கீகாரம்”, என்றவலை, “ உங்களின் விருப்பம்”, என்று அகிலன் கேட்க, இதுவரை தன்னை யாருமே கேட்காத கேள்வி .தன்னை பெற்றவர்கள் கட்டினவர் உடன் இருந்த யாருமே. ஆனால் இவன் யார் எனக்கு. என்னையும் என் மகளையும் தன் உயிர் போல் பாதுகாத்தவன். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல், இன்று தான் அவனின் அண்ணனின் மனைவி என்று தெரிந்த பின்னும் எனக்கும் உணர்வுகள் இருக்கும் என்று நினைத்து என் விருப்பத்தை அறிய முயல்கிறானே ,என்று அவள் கண்களில் ஊற்றெடுக்க, அவன் அவளின் பதிலுக்கு காத்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவள், “1 அது இதில் என் மனது சரியாக சொல்லப்போனால் ,உங்களுக்கு பாரதிக்காக தான் யோசித்தேன், எனக்காக யாரும் கேட்கவில்லை இதுவரை, இப்போது நீங்கள் தான்”, என்று அவள் தடுமாற கண்களில் இருந்து கண்ணீர் சிந்தியது.

“ உறவில் நீங்கள் எனக்கு அண்ணி, என் அண்ணனின் சரி பாதி, அன்னையின் மறு உருவம்”, என்று அகிலன் கூற, “ நீங்கள் இப்படி கூறுகிறீர்கள் ,ஆனால் அவன் அண்ணன் பொண்டாட்டி பாதி”, என்று அவள் அந்த அயோக்கியனை நினைத்து உடல் நடுங்க கூற, “ அண்ணி வேண்டாம், இது எப்படியோ நான் அண்ணன் இருக்கிறோம். உங்கள் நிழலாக. அவனை ஒரு வழி பார்க்காமல் விடப்போவதில்லை. ஆதலால் மனதில் பழைய கசடுகள் வேண்டாம் .எனக்கு தெரியும் நீங்கள் உங்களைப் பற்றி யோசிக்கவில்லை .ஆனால் யோசியுங்கள். உங்கள் முடிவு எதுவாக இருந்தாலும் நான் இருக்கிறேன். அவரும் நல்லவர்தான்”, என்று முடித்துக் கொண்டு ,இரண்டாம் தளத்தில் தன் கோட்டைக்குள் புகுந்து கொண்டான்.

இவள் மெதுவாக தங்கள் தளத்தில் உள்ள தங்கள் அறைக்கு செல்ல, அங்கே அவர்கள் இருவரும் அனைத்தையும் முடித்து படுக்க தயாராக இருந்தனர். இவளும் எதுவும் கூறாமல் தனக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு அவளும் தயாராக, பரதன் ஒரு பக்கம், பாரதி நடுவில் படுத்து பரதன் கூறிய கதையை கேட்டுக் கொண்டு இருந்தாள். அவள் மதியம் போல சோபாவில் படுக்க போக, “ திலகமா இங்கே வாங்க”, என்று பாரதி அழைக்க, அவள் அவனைப் பார்க்க, அவனும் தனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லாதது போல் இருந்து கொண்டான். குழந்தையின் எதிர்பார்ப்பு கொண்ட முகம் அவளை அங்கே இழுத்துச் சென்றது. இவள் வந்து படுத்தவுடன் பரதன் எழுந்து விளக்கை அனைத்தையும் அணைத்துவிட்டு இரவு விளக்கை மட்டும் போட்டுவிட்டு வந்து படுத்தான். அவள் முகத்தில் வேர்வை வழிவதை பார்த்தவன் ஏசியை குறைத்து வைத்தான். மூவருக்கும் சேர்ந்து போர்வையை போர்த்தி பாரதிக்கு கதையை தொடர்ந்தான். அவன் செயலில் இருந்த கலக்கம் அகல முதன்முறை ஆக கண் அசந்தால் படுத்த உடனே திலகா. பாரதியும் சிறிது நேரத்தில் தூங்கிப் போக அவனுக்குத்தான் தூக்கம் பறிபோனது. அவர்கள் இருவரின் நிர்மலான முகத்தை கண்டவனுக்கு அகிலன் காண்பித்த குடும்ப புகைப்படம் நினைவு வந்தது. ஆண்டவனே நான் மீண்டும் இந்த சிரிப்பை தத்தெடுக்க வேண்டும். அது மறையாமல் என் உயிர் இருக்கும் வரை பாதுகாக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான்.

தொடரும்
 
Top