இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

மீண்டும் ஓரு விடியல் கதை திரி

Matharasi

Moderator
அத்தியாயம் 15

மதியம் மூன்று மணி போல் சோதனை முடிவுகளை வாங்கிக்கொண்டு , கண்களில் சினம் பொங்க வந்து நின்ற தம்பியை கண்டு ஒரு நிமிடம் ஆடி தான் போனான் பரதன். “ என்னடா ஏன் இவ்வளவு கோபம் என்று அவனை பார்த்துக்கொண்டே பள்ளியின் வெளிவாயிலை அடைந்தான் பரதன். “ வெளியே எங்காவது போவோம்”, என்று இறுக்கமான குரலில் அகிலன் கூற, ஏதோ பிரச்சனை என்பதை உணர்ந்தவன், “ இரு”, என்றவன் பள்ளி முதல்வருக்கு அழைத்து ,அரை நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு அவனோடு கிளம்பினான்.

திருப்பரங்குன்றம் கிரிவலம் வரும் பாதையில் வண்டியை நிறுத்தினான் அகிலன். இருவருக்கும் கனத்த மவுனம் நிலவ , “அண்ணா இது அனைத்தும் போதை மருந்து போட பயன்படுத்திய ஊசி. அதுபோக 16 ,17 வயதுடையவர்கள் பயன்படுத்தியிருக்கலாம்” ,என்று அந்த ரிப்போர்ட் கூறுகிறது. பரதன் அமைதியாக இருக்க, “ என்ன அண்ணா அமைதியா இருக்கீங்க, சின்ன பிள்ளைங்க நாளைக்கு என்ன ஆகும் அவங்க வாழ்வு”, என்று ஆதங்கத்தில் பொங்கினான் அகிலன்.

“ இது நான் ஒரு அளவு எதிர்பார்த்த முடிவு தான் இதை எப்படி தடுப்பதுதான் என்பது தான் என் யோசனை . பொங்கி ஒரு பிரயோஜனமும் இல்லை”, என்றான் பரதன். “ அமைதியாக, தெளிவாக நாம் செயல்பட வேண்டிய காலம்”, என்றவன் அவனே தொடர்ந்து, “ இதில் ஒன்று எங்களை அசிங்கப்படுத்த நடத்த வேண்டும், இல்லை என்றால் நாளைய சமுதாயத்தை பாழாக்கும் தேசவிரோத செயலாக இருக்க வேண்டும்”, என்றான் பரதன்.

இருவரும் தீவிர சிந்தனையில் இருக்கையில், “ எனக்கு என்னவோ உங்களை அசிங்கப்படுத்த நடப்பது போல் தான் தெரிகிறது”, என்றான் அகிலன். “ எப்படி கூறுகிறாய்”, என்றான் பரதன் கேள்வியாக. “ இவை அனைத்தும் நம் பள்ளியில் கிடந்தது. அது மட்டும் இல்லாமல் உங்களையும் ஏதோ செய்ய பார்த்து ,அது தவறி தானே இதை இப்போது ஆரம்பித்து இருக்கிறார்கள்” , என்றான் அகிலன் பதிலாக .அவனுடைய கண்ணோட்டம் சரியாக இருப்பதாக பரதனுக்கு பட, தன் தாத்தாவிடம் தொழில் எதிரி ,அது போக திலகாவின் விஷயத்தை தெரியப்படுத்த வேண்டும், என்று நினைத்தவன், “ அகிலா வா கிளம்பலாம் வேளை இருக்கிறது ,இது போல் இனிமேல் நடவாமல் பார்க்கணும்”, என்று பரதன் கூற , “பேசாமல் ஒரு ரைட் செய்யுங்கள் விடுதியை”, என்றான் அகிலன் யோசனையாக. “ நான் இப்போது அப்படி செய்தால் எதிரி முழித்துக் கொள்வான்”, என்றான் பரதன்.

“முதலில் இது யார் மூலமாக உள்ளே வருகிறது ,யார் இதை பசங்களுக்கு கொடுக்குறாங்க கண்டுபிடிக்கணும்”, என்றான் பரதன். “ சரி அண்ணா ஆனால் நாம் வேகமாக செயல்படணும். இல்லைன்னா பசங்க வாழ்க்கை கேள்விக்குறியாகும்”, என்றான் கவலையாக . “அதுவரைக்கும் எல்லாம் போக விடமாட்டேன்”, என்றான் பரதன் அவனுக்கு நம்பிக்கை தரும் வண்ணமாக. பரதனை அவனிடம் சேர்த்து , “ மாலை ஐந்து மணிக்கு வந்த அம்மாவை அழைத்து கோயிலுக்கு செல்கிறேன் என்று கூறி விடுங்கள், அண்ணா ஒரு அவசர சவாரி”, என்று அகிலன் அவன் வேலையை கவனிக்க சென்று விட்டான்.

உள்ளே வந்த பரதன் நேராக முதல்வர் அறைக்கு தான் சென்றான் .அவன் அலுவல் அறைக்கு நுழைந்தவுடனே கண்டுகொண்ட திலகா ,இன்று என்ன செய்வானோ என்று நினைக்க ,ஆனால் அவன் நேராக முதல்வர் அறைக்கு செல்ல அவளுக்கு அப்பாடா என்று இருந்தது .அவன் திரும்பி வருவதற்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பிடித்தது. இவள் அப்போதுதான் மேஜை அடியில் குனிந்து எதையோ தேடிக் கொண்டிருக்க வந்தவனோ, “ ஹலோ மிஸ்ஸஸ் ரதி அம்மா”, என்று குரல் கொடுக்க, அவளுக்கு ஆரம்பிச்சிட்டான் என்று தோன்றியது .அவள் மெதுவாக எழும்பி நின்று, “ இப்ப என்ன”, என்பது போல் பார்க்க ,எப்பவும் பயந்து ஒதுங்கும் கண்கள் இன்று அவனை எந்த ஒரு சலனமும் இல்லாமல் பார்க்க அதில் சுவாரசியம் கொண்டான்.

“செம இது கூட நல்லா இருக்கே, ஆனா இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் என்னவோ”, என்று பரதன் தன் புருவத்தை தூக்கி இறக்க, “ என்னை நீங்கள் நெருங்க வேண்டுமென்றால் அது எங்கள் அகிலனை மீறித்தான் வரவேண்டும். எங்களை கண்னின் மணி போல் காப்பவர்”, என்றால் திடத்தோடு. “ஒ , இது தான் உன் திடத்திற்கு காரணமா”, என்றவன், “ இதையும் நினைவு கொள், அவன் என் தம்பி, உடன் பிறந்து இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, என் நினைப்பை ஒரு நாளும் பொய்யாக்க மாட்டான்”, என்றான் பரதன் கர்வமாக.

“ அது போக நீ கூட நான் என்ன செய்தாலும், அவன் கிட்ட போக மாட்ட ஏன்னா அவனுக்குன்னு ஒரு குடும்பம் அமைரதா நீ கெடுக்க மாட்ட”, என்று தன் இதயத்தில் ஓடும் நினைப்பை சரியாக அவன் சொல்ல, அதில் திகைத்து அவள் அவனைப் பார்க்க, “ வரட்டா”, என்று கூறி சென்று விட்டான். செல்லும் அவனே யோசனையாக பார்த்தவள், “ பார்வையில் தப்பு இல்லை ,ஆனால் செய்வது அத்தனையும் சீண்டுவது போல்”, என்று எண்ணியவள் இது பாம்பா கயிரா என்று தெரியவில்லையே”, என்று மனதிற்குள் புலம்பியவள் தன் வேலை அழைக்க தன் கவனத்தை அதில் செலுத்தினால்.

அங்கிருந்து வெளியேறியவன் நேராகச் சென்றது பள்ளி மைதானத்திற்கு. தன் கண்களை சுற்றி சுழல விட அங்கே ஓரத்தில் அருண் சோர்வாக அமர்ந்திருக்க அவன் அருகில் நெருங்கினான். “ என்னடா விளையாடாமல் இங்கு அமர்ந்து இருக்கிறாய்”, என்றான் பரதன் அவன் அருகில் அமர்ந்து, “ஒன்னும் இல்ல சார்”, என்று அவன் வாய் சொன்னாலும் ஏதோ இருக்கு என்று அவன் முகம் பரதனுக்கு காட்டிக்கொடுத்தது .

“டேய் தோளுக்கு மேல் வளர்ந்தவன் தோழன் .அது நான் உன் தோழன் போல் தான், என்னவென்று சொல்”, என்று நயனமாக பேச ஆரம்பித்தான் .அவனின் நயந்த பேச்சும் ,தோழன் போன்ற அவன் மேல் கையை போட்டு அவனை அரவணைத்து கேட்க, அவனுக்கு தன் மனபாரத்தை யாரிடமாவது பகிர வேண்டும் என்று இருக்க தன் மனக்கவலைகளை கூற ஆரம்பித்தான்.

சென்ற வருடம் அவனுடைய அன்னை யாரோடு போய் தன் வாழ்வை அமைத்துக் கொள்ள .இது பள்ளியின் தெரிந்த அவனை அனைவரும் கேட்க எல்லாரிடமும் இருந்து ஒதுங்க ஆரம்பித்தான் . “சரிடா இதில் தவறு உன் தாய்”, என்று பரதன் ஆரம்பிக்க, “ சார் என் அன்னை”, என்று அவர்களை சொல்லாதீங்க. “சரி சரி இதில் உன் தந்தையின் தவறு என்ன, ஒன்றும் இல்லை தானே”, என்றான் பரதன், பின் அவனே , “நீ ஏன் அவரிடம் முகம் கொடுத்து பேச மறுக்கிறாய்”, என்று கேள்வி கேட்க, “ நான் அப்படி செய்தால் தானே அவர் வேறு திருமணம் செய்து கொள்வார். அவர் பாவம் சார் எங்களுக்காக எவ்வளவு உழைப்பாளர் தெரியுமா. அந்த பொம்பளை மீதுதான் தவறு. அவர் என்னை ரொம்பவும் பிரியமாக நடத்துவார் .அவர் நன்றாக இருக்க வேண்டும்”, என்றான் உள்ளார்ந்த அன்போடு.

“ சரி அதற்கு இப்படி நடந்தால் சரியாகுமா ,அவரிடம் அன்பாக பேசி சம்மதிக்க வை. தேவையில்லாமல் காயப்படுத்தாதே”, என்றான் பரதன். “ சரி சார் இனிமேல் அவர் வந்தால் செய்கிறேன்”, என்ற அருண் முகம் இப்போது வாட்டமாக இல்லாத போதும். அதில் ஒரு சோர்வு இருந்தது . “அன்று எவ்வளவு உற்சாகமாக விளையாடினாய். இன்று ஏன் இவ்வளவு சோர்வு”, என்று பரதன் கேள்வி எழுப்ப, “ தெரியல சார்”, என்று அவன் பதிலாக வர , “டேய் நான் உன்னை பேசிய கோகக்கோ தேசிய மாணவனாக்கி உன் தந்தைக்கு பெருமை சேர்க்க எண்ணினால், நீ என்னடா உன் புத்துணர்ச்சிக்கும் காரணம் சொல்ல மாட்டேங்குற, சோர்வுக்கும் சொல்ல மாட்டேங்குற”, என்று பரதன் ஆதங்கப்பட, “ சார் அது எல்லாம் ஒன்றுமில்லை”, என்று கூறியவன், “ உண்மையிலேயே என்னை தேசிய கோகோ மாணவனாக்க முடியுமா”, என்று கேட்டான்.

“ டேய் நான் பொய் சொல்லல டா சூப்பரா விளையாண்ட, அதனால தான் நீ இங்கு பயிற்சி எடுத்த, விசேஷமா ஏதாவது சாப்பிட்டால் நம்ம பசங்களுக்கு கொடுக்கலாம் என்று தான் கேட்டேன்”, என்றான் பரதன் நயந்த குரலில். “ சார் அது நீங்க”, என்று அவன் தயங்க, “ சும்மா சொல்லுடா”, என்று இவன் ஊக்கப்படுத்த, “ சார் நம்ம பிளஸ் டூ மாணவர்கள் ரொம்ப நேரம் விழித்து படிப்பதற்கு என்று ஒரு மெடிசன் வந்திருக்காம். அதை போட்டுக் கொண்டால் இந்த சோர்வே வராது”, என்று அவன் தயங்கி தயங்கி கூறி முடித்தான்.

உள்ளுக்குள் சினம் தலை தூக்கினாலும், அதை இப்போது வெளிப்படுத்துவது சரியில்லை, என்று உணர்ந்தவன், “ அட நல்ல மெடிசன் போலவே, இது எப்படி உனக்கு தெரியும், எவ்வளவு டா”, என்று பரதன் அவனை மெச்சி கொண்டே கேட்க, “ அது சார் காசு எல்லாம் கிடையாது சார், எனக்கு நான் கவலையா ரொம்ப நாள் தனியே இருக்கிறதை பார்த்து பிளஸ் டூ அண்ணே ஒருவன் தான் கொடுத்தான்”, என்றான் மெல்லமாக. “ சரி அப்போ, நீ எப்போ எல்லாம்”, என்றான் முழுமையான விவரம் அறிவதற்கு. “ முதல்ல இரண்டு நாளுக்கு ஒருமுறைதான். ஆனால் இப்போ எல்லாம் தினமும் போட தோன்றுதா? அதான் தயக்கமா இருக்கு”, என்றான் கவலையாக, “ நல்ல மெடிசன் என்று கூறுகிறாயே, பின் தினமும் போட்டுக் கொள்ள வேண்டியதுதானே”, என்றான் தன் கோபத்தை அடக்கிக் கொண்டு , “அது சார் அதை போட்டால், நன்றாக மிகவும் நன்றாக இருக்கிறது, ஆனால் அதன் பின் ரொம்பவும் சோர்வாக”, என்றான், அதில் பரதனுக்கு முழுவதும் விளங்க ஒரு திட்டம் தீட்டினான்.

“சரி அருண் உனக்குதானே இப்படி, மற்ற யார் யாரெல்லாம்”, என்றான் கேள்வியாக, “ சார் மற்ற அனைவரும் பிளஸ் டூ மாணவர்கள் தான்”, என்றான் அருண் பதிலாக, “ இப்படி பெயர் சொல்லாமல் பொதுவாக சொன்னால் எப்படி”, என்று பரதன் யார் என்று கேட்க, “ சார் எனக்கு தெரிந்து துகிலன், லித்திபன், அப்புறம் எனக்கு கொடுத்த ராகவன்”, என்றான்.

“சார் என்னை மருத்துவமனைக்கு கூட்டிக்கொண்டு போறீங்களா”, என்றான் அருண் ,அவனை தொடர்ந்து, “ ஏன்டா என்ன செய்து?”, என்றான் பரதன் அவனைப் பார்த்துக் கொண்டே, “ சார் எனக்கு படபடன்னு இருக்கு, கைகால் எல்லாம் உதறுது. இந்த மெடிசன் போட்டுக்கனும் போல இருக்கு. என்னால் எதுவும் முடியல”, என்றான் அருண் சிறு பதற்றத்துடன் . “இதுவரை எத்தனை போட்டி இருப்பாய்”,என்றான் பரதன் பரிவாக, “ ஒரு இரண்டு வாரமாக, 10 இருக்கும் சார்”, என்றவனை எழுப்பி தன் வீட்டு பக்கம் அழைத்து சென்றான் பரதன்.

தொடரும்
 

Matharasi

Moderator
அத்தியாயம் 16

“என்னடா பரதா அதற்குள் வந்து விட்டாய்”, என்று சாரதா அம்மா கேட்டதற்கு , “பாலை காய்ச்சி மஞ்சள் மற்றும் மிளகுத்தூள் போட்டு எடுத்து வாருங்கள்”, என்று அவரிடம் கூறி அருணை அழைத்துக் கொண்டு ஒரு சிறு விருந்தினர் அறைக்குள் நுழைந்தான். அகிலனை அழைத்து, “ வீட்டிற்கு வா”, என்று கூறி தொடர்பை துண்டித்தான். “என்ன சார்”, என்று அருண் பயந்து விழிக்க, “ ஒன்றும் இல்லை, ஒரு சிறு பரிசோதனை பின்,நீ விடுதிக்கு சென்று விடு .யாரும் உனக்கு மெடிசன் வேண்டுமா என்று கேட்டால் மறுக்காதே. அவர்கள் முன்னிலையில் போடாமல் வாங்கி வைத்துக் கொண்டு ,பின் யாரும் அறியாத வண்ணம் என்னிடம் கொடுத்துவிடு”, என்றவன் ,அவன் வலது கையில் பெல்டை கட்டி ஊசியில் ரத்தம் மாதிரியை சேகரித்தான்.

பின் அவனின் இதயத்துடிப்பை பிரஷரையும் சரிபார்த்து விடவும், சாரதாம்மா பாலை எடுத்துக் கொண்டு வரவும் சரியாக இருந்தது . அதை அருணிடம் நீட்டி குடிக்க சொன்னவனை சாராத அம்மா கேள்வியாக பார்க்க, “ ஒன்றும் இல்லை அம்மா, படபட என வர மாதிரி இருக்குது சொன்னான், அதான்” பரதன் பதிலாக. அவன் அதை குடித்து முடிக்கவும், “ உனக்கு ஒரு மாதிரி இருந்தா நேரா என்கிட்ட வா”, என்று சாரதமா அவனை தழுவி கூற அதில் அருணின் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது. “ அவர் அவனை அருகில் அழைத்து நான் இருக்கிறேன்”, என்று கூற அதற்கு அருண் தலையை அசைத்து விடைபெற்றான் .

அவன் சென்ற மறுநிமிடம் அகிலன் உள்ளே நுழைந்தான். “ என்னன்னா என்று கேட்டுக் கொண்டே வந்தவன்” சாரதா அம்மாவை கண்டு வாயை அடக்கினான். “ என்னடா எப்பவும் அம்மா என்று தானே வருவ, இப்ப என்னடா அண்ணா என்று”, அவன் தன்னை தேடாததை சுட்டிக்காட்ட, “ அம்மா அண்ணா முன்னாள் நின்றதால் நீங்கள் தெரியல, என் அம்மா “ ,என்று அவரை அணைக்க போக , “டேய் போங்கடா நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து என்னை விட்டுட்டிங்க”, என்று அவர் கூறிய உடன் வேகம் கொண்டு இருவரும் அவர் வாய் பொத்தி, “ விளையாட்டுக் கூட அப்படி சொல்லாதீங்க ,நீங்க தான் முதல்”, என்றார்கள் இருவரும் ஒன்றாக இணைந்து .அதில் அந்த தாயின் மனம் பூரித்து தான் போனது. “ சீ போங்கடா, போய் வேலைய பாருங்க”, என்று வெட்கப்பட்டு சிரித்துக் கொண்டே சமையலறை நோக்கி சென்று விட்டார்.

“ என்னன்னா வீட்டுக்கு வா கூப்பிட்டீங்க”, என்றான் அகிலன் கேள்வியாக . “இந்த ரத்த மாதிரியை நான் எழுதி கொடுத்திருக்க பரிசோதனை பண்ணி முடிவு வாங்கிட்டு வா”,என்றான் சிறு ரத்தம் சேகரித்த இருந்த டப்பாவை கொடுத்து. “யார் என்று பார்த்தீர்களா”, என்று அகிலன் கேட்டதற்கு , “ஆளு யாருன்னு தெரியல ,ஆனா பிளஸ் டூ பசங்கள தான் குறி வச்சுருக்காங்க. அப்ப அது எங்களை அசிங்கப்படுத்த தான்”, என்றான் பரதன் வேகமாக, “ என்ன பண்ணப் போறீங்க, உடனே செய்யுங்க”, என்றான் . “ நான் கொடுத்த இந்த வேலைய வேகமாக பார், நான் வலையை விரிக்கிறேன், பார்ப்போம்”, என்றான் பரதன் முடிவாக . “ஒரு விழிப்புணர்வு முகாம் நடத்தலாம்னு பார்க்கிறேன்”, என்றான் பரதன் அவனே தொடர்ந்து, “ இப்ப வேணாம் ஆளு யாருன்னு கண்டுபிடிச்சுட்டு”, என்று அகிலன் கூற , “ ஏன்டா”, என்றான் பரதன் அவனிடம் கேள்வியாக, “ இப்ப நாம இதை செய்தால் அது நமக்கு சந்தேகம் வந்துருச்சுன்னு சுதாரிச்சுக்குவாங்க”, என்றான் அகிலன் பதிலாக.

“முதல் யார் யார் பாதிக்கப்பட்டிருக்காங்கன்னு கண்டுபிடிக்கணும்”, என்ற பரதன், “ வருகிறாயா நீயும் நானும் ஒரு சின்ன சோதனை செய்து கொண்டு வருவோம்”, என்றான் பரதன் அகிலனிடம்.” எதற்காக சோதனை செய்து முடிவு வந்தால் தான் நீங்க எனக்கு அண்ணணா”, என்று அகிலன் கேட்டான். “ அது எனக்கு அம்மாவுக்கும் தேவை இல்லை, ஆனால் அது கூறிவிட்டால் உன் மனதில் இருக்கும் சிறு சஞ்சலம் கூட இருக்காது. நிம்மதியில் இருப்பாய் அல்லவா”, என்றான் பரதன். “ ஆனால் அது மட்டும் தான் காரணமா? இல்லை வேறு எதுவும்”, என்று அவன் பரதனை ஒரு சிரிப்புடன் பார்க்க.

“ ஆமாடா உன்னோட அரிய கண்டுபிடிப்பு சரிதான், திலகாவையும் பிள்ளையையும் பக்கத்துல வைத்துக் கொள்ளலாம் போதுமா? எப்பா என் வாய புடுங்கு”, என்று பரதன் அவனை கடித்துக்கொள்ள, “ அண்ணா முதலில் அவர்கள் உங்களை ஏற்றுக் கொள்ளட்டும், பாரதி பயப்படுகிறாள். நீங்கள் இருவரும் நடந்து கொள்வதைப் பார்த்து”, என்றான் அகிலன் கவலையாக. “ டேய் அவள் ஒத்துக்கிட்ட பிறகுதான் என்றால் இந்த ஜென்மத்துல நடக்குற காரியம் இல்லை”, என்றான் பரதன். “ பின்ன என்ன செய்யப் போறீங்க”, என்றான் அகிலன்.” நீ தான் சரி கட்டணும், நானும் என்னால ஆனதை செய்கிறேன். நீ அப்போது கண்டுகொள்ள கூடாது”, என்றான் முடிவாக. “ அண்ணா பாவம் அவங்க”, என்றான் பரிதவிப்புடன். “ இப்ப பாவம் பார்த்தால் அப்புறம் குழந்தை வளர்ந்த பின் யோசி. கசப்பு மருந்து கொடுப்பதாக நினைத்துக் கொள்”, என்றான் ஆறுதலாக.

“சரி அண்ணா எதையும் யோசித்து செய்யுங்க, ரொம்ப கடுமை வேண்டாம்”, என்றான் அகிலன், அப்போதும் விடாமல். “ டேய் அகிலா என்னை விட அவள்”, என்று பரதம் கேட்க வர , “அண்ணா எந்த ஒரு ஆதரவும் இல்லாமல் எல்லாவற்றையும் இழந்து உயிரையும் மானத்தையும் குழந்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காக பித்து பிடித்தவள் போல் கையில் கத்தியை சுழல விட்டு, அவர்கள் உட்கார்ந்து இருந்த கோலம் இன்றும் என்னால் மறக்க முடியவில்லை. நான் மட்டும் அந்நேரம் அங்கு செல்லவில்லை என்றால் அவர்களின் கதி என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியல. ஏதோ இந்த மட்டும் அவர்களை காப்பாற்ற முடிந்தது. அதேபோல் நான் என் உயிர் மூச்சு உள்ளவரை பாதுகாப்பாக இருப்பேன். ஆனால் இந்த ஊர் உலகம் எங்களை தப்பாகத் தான் பேசும். நாளை பாரதியின் வாழ்க்கை அதைப் பற்றி மட்டுமே யோசித்து, உங்கள் முடிவுக்கு நான் சரி சொன்னது. நீங்கள் என்னோடு பிறந்திருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி அண்ணன் தான். அதில் எவ்வித மாற்றமும் இல்லை. நீங்கள் சறுக்கும் போது அம்மா உங்களை தாங்குகிறார்கள். அவர்கள் பாவம் அதனால் தயவுசெய்து இந்த கேள்வி வேண்டாம்”, என்று தன் மனதின் உண்மையான வெளிப்பாட்டை அவன் கூற ,பரதனுக்கு தோன்றியது ஒன்றுதான் உண்மை தெரியும் போது தனக்கு இருக்கு என்று பரதன் கண்ணசைக்காமல் பார்க்க, “ அண்ணா நேரம் ஆகிறது நான் சென்று இதை கொடுத்துவிட்டு வருகிறேன்”, என்று விடை பெற நினைக்கும் போது இந்த டிய குடித்துவிட்டு போ”, என்று அவனை தடுத்தார் சாரதா அம்மா.

“ அன்னையின் குரலில் நிகழ்காலத்துக்கு வந்த பரதன், அகிலனை பார்த்து சரி என்று தலை அசைக்க பரதனின் முகத்தில் இருந்த கவலை , அகிலனின் மனதில் பாரத்தை வைத்தது. அந்த நொடி அவன் ஆண்டவனிடம், “ ஆண்டவரே எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல், யாருடைய மனதும் சங்கடப்படாமல் இந்த திருமணம் நல்லபடியாக முடிய வேண்டும்”, என்று மனதார வேண்டிக் கொண்டான். யார் சொல்வது அவனிடம் கழகம் பிறந்தால் தான் வலிப்பழக்கம் என்று.பரதனின் மனதிலோ கடைசி வரை திலகா எனக்கு ரொம்பவும் முக்கியம் என்று சொல்லாமல் சொல்லிச் சென்ற தம்பியின் பின்னே சென்ற மனதை, உண்மை தெரிந்தால் என்ன செய்வானோ என்ற எண்ணம் வேறு சூழ அவன் அதிர்ந்து தான் போனான்.

அவனின் அதிர்ந்த நிலையை முடிவுக்கு கொண்டது அவனின் கைபேசி. அது சிணுங்கி தன் இருப்பிடத்தை அவனுக்கு உணர்த்த அதை எடுத்தவன் முகத்தில் லேசான நம்பிக்கையின் சாயல். ஆம் அழைத்தது அவனின் தாத்தா. அனைத்திலும் அவனுடன் இருந்தவர். அவனின் நம்பிக்கையின் நாயகர். “ பரதா”, என்ற குரலில் வழிந்த நேசத்தில் மூழ்கியவன், “ தாத்தா”, என்றான் உள்ளத்தில் இருந்து. அவனின் குரலில் இருந்த தடுமாற்றமும் கலக்கத்தையும் உணர்ந்தவர், “ தாத்தா இருக்கிறேன், செய்ய நினைத்ததை கலங்காமல் செய்”, என்று அவனிடம் எதையும் கேட்காமல் அவர் கூற, அதில் அவனுக்கு இருந்த கலக்கம் மறைய, மடைதிறந்த வெள்ளம் போல் அவன் விசாரித்த அவனின் சந்தேகங்கள் அனைத்தையும் கூறி முடித்தான். “ சரிப்பா என்ன செய்யப் போகிறாய்”, என்று அவர் கேட்க, “ யோசித்துக் கொண்டிருக்கிறேன் தாத்தா, முதலில் இது யார் மூலம் பள்ளிக்குள் வருகிறது என்று கண்டுபிடிக்கணும்”, என்றான் ,பின் அவர், “ வேறு எதுவும்”, என்று கேட்க, “ ஒன்றுமில்லை”, என்றவனுக்கு ஏனோ திலகா அகிலனை பற்றி கூற முடியவில்லை.

ஆனால் அவன் ஒன்றை மறந்தான் அவன் எங்கு இருந்தாலும் அவனை சுற்றி யார் இருக்கிறார்கள் எப்படி இருக்கிறார்கள் என்று அவர் கண்காணித்துக் கொண்டே தான் இருப்பார் என்பதை. பேரன் தன்னிடம் கூற தயங்குவதை அறிந்தவர் மெதுவாக, “ யாரப்பா என் பேரனின் மாற்றத்திற்கு காரணம்”, என்றார் ,அதில் அப்போதுதான் அவரைப் பற்றி ஞாபகம் வர , “நீங்கள் என்னை சுற்றி நடப்பது உங்களுக்கு தெரியும், ஆனால் இந்த சந்தேகங்களும் பிரச்சனைகளும் முடியட்டும்”, என்று கூறி தொடர்பை துண்டித்தான். அவன் அறியவில்லை அவனை சுற்றி பின்னப்படும் வலையில் அவனும் விழுந்து அதில் திலகாவும் விழப்போகிறாள் என்று. தன் தாத்தாவிடம் பேசியதில் இவன் மனதில் இந்த திடம்பிறந்தது.

பாரதி காணச் சென்றான். பள்ளி விடும் நேரம் என்றதால் பாரதி பள்ளி வாகனத்தில் ஏறுவதற்காக வரிசையில் மாணவர்களுடன் காத்துக் கொண்டிருந்தாள் .அன்று வீட்டில் சந்தித்தபின் இன்று தான் சந்திக்க போகிறான். இவனை கண்டதும் பாரதி முதலில் தன் பார்வையை அலுவல் அறையை நோக்கி சொல்ல விட, அங்கே திலகா இல்லை என்பதை கண்டவல், பின் தான் பரதனை கண்டால். ஆனால் முன் போல் அவள் முகத்தில் சிரிப்பில்லை .அதில் திலகாவை மனதில் வறுத்துவிட்டு பாரதியை நெருங்கினான். ஆனால் அவள் செல்ல வேண்டிய பள்ளி வாகனம் வர அதில் ஏறப்போனவளை தடுத்து, அவளை தன் கரம் பற்றி இழுத்து கண்டக்டர் இடம், “ அண்ணா இவர்களின் அகிமா வந்து அழைத்துச் செல்வதாக ,இவளின் அன்னை கூறச் சொல்லி அழைத்து வர சொன்னாங்க”, என்று கூறிவிட்டு அவளை அழைத்துக்கொண்டு மைதானம் நோக்கி சென்றான் .

பாரதியோ எங்கே தன் அன்னை தன்னை கண்டு கொள்வாளோ என்று பயந்து கொண்டே அவன் பின்னே சென்றார். அவளின் கையை பற்றி கொண்டே நடந்துவனுக்கு அவளின் உடல் மொழியும் அவள் என்ன ஓட்டத்தையும் கூற மேலும் திலகா வறுபெற்றாள் அவன் மனதில்.

“ ஏன்டா மா என்ன பார்க்காம போற”, என்று தாள்வான குரலில் பாரதியிடம் பரதன் கேட்க , “அது அது”, என்று அவள் தயங்க,” நான் உன் பிரண்ட் இல்லையா”, என்று அவன் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு வினவியது ,அந்த சிறு குழந்தையின் நெஞ்சத்தை அசைத்தது .”பிரெண்டுனுனா என் வயசுல தான் இருக்கணுமா”, என்று அந்த பிஞ்சு சொன்னவுடன், “ யாரு சொன்னா”, என்று கேட்டான் பரதன், “ அம்மா”, என்றால் அவள் மெல்லமாக .

“சரி நான் அகிமாவுடைய அண்ணன் தானே”,என்றான் பரதன் விடாமல். “ அப்போ நான் மாமா என்று கூப்பிடவா”, என்று அவள் கேட்க. திகைத்து விட்டான். இதற்கு நான் என்ன சொல்லுவது .அவள் அவளாக உணர வேண்டும். நான் எப்படி அவள் எனது உடமை என்பதை உணர்கிறேனோ, அதை போல் என்று நினைத்தவன். கைபேசியை எடுத்து அகிலனுக்கு அழைத்தான் .அவன் அழைப்பை ஏற்றவுடன், “ பாரதி என்னோடு இருக்கிறாள். நான் அவளை சற்று நேரம் வெளியே அழைத்துச் செல்கிறேன். உன் அக்காவிடம் நீயே சமாளித்துக் கொள்”, என்று அவனுக்கு பேச இடம் கொடுக்காதவாறு கூறிவிட்டு வைத்து விட்டான். இந்த வேகம் ஆகாதே என்று அகிலனுக்கு படபடத்தது.

தொடரும்
 

Matharasi

Moderator
அத்தியாயம் 17

பாரதியை அழைத்துக் கொண்டு ஐஸ்கிரீம் கடைக்கு வந்தவன் அவளிடம், “ என்ன வேண்டும்”, என்று கேட்க, அதில் அவள் மிரண்டு அவனைப் பார்த்தால். அதில் கவலை உற்றவன், “ நான் உன் பிரண்டு மட்டும் தான், வேறு எதுவும் இல்லை”, என்று உறுதியாக கூறியவன், “ பிரிண்ட் ஆவதற்கு வயது எல்லாம் இல்லடா, சரியா அம்மா ஒன்றும் சொல்ல மாட்டாள், நாம் அகிமாகிட்ட சொல்லிட்டு தானே வந்தோம்”, என்றான் தன்மையாக .அதில் கொஞ்சம் அவள் முகம் தெளிந்தது. “ உனக்கு என்ன பிடிக்கும்னு சொன்னால் தானே நான் அதை வாங்கி தர முடியும்”, என்றான் மறுபடியும். அவள், “ குல்பி”, என்றால் இப்போது மெதுவாக.

“ சரி”, என்று அவளை அமர வைத்துவிட்டு அவளுக்கு பிடித்தமானதை வாங்கிக் கொண்டு அந்த அமர்ந்தான் பரதன். “ இந்தா”, என்று அவளுக்கு அவள் கேட்டதை அவள் முன்னே வைத்துவிட்டு இவன் அவள் எதிரில் அமர்ந்து கொண்டான். பாரதி மெதுவாக ஒரு கரண்டி கொஞ்சம் எடுத்து வாயில் வைக்க போக, என்ன நினைத்தாலோ, “ உங்களுக்கு”, என்றால் கேள்வியாக. “ வேண்டாமா நீ சாப்பிடு போதும்”, என்று பரதன் கூற, “ பிரெண்ட்ஸ்”, என்றால் மெதுவாக அதில் அவன் மனது பூரித்தாலும் ,அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் அவன் உம்முனு இருக்க, “அம்மா சொல்வதை அப்படியே கேட்க வேண்டும்”, என்று அகிமாதான் கூறினான். குழந்தை தன்னை அறியாமலே தன் அகிமாவை அவன் அண்ணனிடம் மாட்டி விட, “ எமதாக இது எல்லாம் உன்வேலை தானே”, என்று இப்போது தன் தம்பியை வறுக்க ஆரம்பித்தான் பரதன்.

“ அப்போ உங்க அகிமா அம்மா சொன்னாதான் என்கிட்ட பேசுவியா”, என்று அவன் கேட்க, “ டேய் அது குழந்தை, அவளுக்கு தெரிந்தவர்கள் சொன்னாதான் கேட்கும்”, என்ற உண்மையை எடுத்துரைக்க ,இவன் கேள்வியில் குழந்தை முழித்தது. “ சரி அப்போ நான் யாருமில்லாமல் ஆண்டவனுடைய ஏஞ்சலாவே தனியாவே இருந்துக்கிறேன்”, என்றான் கவலையாக .அதில் தன்னை அனைவரும் அகிமாவையும் அம்மாவையும் அப்பா இல்லை என்று சொல்லி தனிமைப்படுத்தியது ஞாபகம் வர பாரதியின் கண்ணில் நீர் படலம் .

“ஏண்டா மா”, என்று அவன் அவளை அவள் கையை பற்ற , “எனக்கு யாரும் அப்பா இல்லை அப்புறம் அகிமா அம்மாவ”, என்று ஆரம்பித்து அவளின் குரல் தழும்ப ,அவளின் அருகில் வந்து அமர்ந்த பரதன், “ இனிமேல் யாரும் எதுவும் கூற மாட்டார்கள் ,நான் விடமாட்டேன, உங்களுக்கு பாதுகாப்பாக இருப்பேன்”, என்றவன் அவளை அணைக்க போக ,அவள் முதன் முதலில் சொன்ன டோன்ட் கம் நியர் மி நினைவு வர தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான்.

ஆனால் அவன் கூறியதில் என்ன நினைத்தாலோ பாரதி அமர்ந்திருந்தவனை அணைத்துக் கொண்டாள். அவனின் மடியில் தன் முகத்தை வைத்து அழுத்திக் கொண்டால். அவள் போட்டு இருந்த தடையை அவளே நீங்க செய்ய, அவன் மெதுவாக தன் கையைக் கொண்டு அவள் முதுகை தடவ தடவி விட்டான்.

அவனின் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் இரக்கை கட்டி பறப்பது போல் உணர்ந்தான். யார் சொன்னார்கள் பெண்களால் தான் தாய்மையை உணர முடியும் என்று. ஆண்களும் தங்கள் மகவை காணும் போதும் ,அவர்களை அரவணைக்கும் போதும் தாய்மையை உணர்வார்கள். இங்கே அவள் பிறப்புக்கு வேண்டும் ஆனால் இவன் காரணமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவள் அவனை அரவணைத்து மடி சாய்ந்த அந்த நொடி அவளின் தந்தையாக அவன் பிறப்பெடுத்தான் . “ரதி மா”, என்று அவன் அழைக்க அவனிடம் எந்த ஒரு அசைவும் இல்லாமல் போனது.

“ பாப்பு குட்டி”, என்று அவன் அவளுக்கு ஒரு பிரத்தியோக பெயரில் அழைப்பை விடுக்க, எங்கோ அவள் நினைவுகளின் அடுக்கில் ஒரு முகம் தெளிவாக அவள் சிந்தையில் இல்லை, ஆனால் இந்த அழைப்பு அந்த முகத்திற்கு குரல் கொடுத்தது. அதில் குழந்தை பட்டென்று எழுந்து ,தன்னை சுற்றி பார்வையை சுழல விட, பரதன் மீண்டும், “ பாப்பு குட்டி”, என்றவுடன் அவள் நினைவுகளில் இருந்த தெளிவற்ற முகம் மறைந்து இவன் அந்த இடத்தில் அவளை கொண்டாடின குரலோடு உரிமையோடு நின்றான் .

அதில் அவள் மனம் நிறைந்தது சந்தோஷத்தோடு .இதுவரை இவன் தனக்கு என்ன வேண்டும், தாய் சொன்னது போல் பிரண்டாக இருக்க அவனுக்கும் அவளுக்கும் வயது ரொம்ப வித்தியாசம் ,தன் அகிமா உடைய அண்ணன் ,அவ்வளவுதான் ,என்று அவள் மூளை பாரதியிடம் வாதாட மனதோ ஏதோ ஒன்று அவனை பரதனிடம் ஈர்த்தது. தன் தாய் கூறிய, “ அவனை தள்ளிவை”, என்ற அறிவுரையை புத்தி அதை செய்ய வலியுறுத்தினாலும், மனமோ அதை செய்ய விடவில்லை.

ஆனால் இப்போது அவன் யார் என்று மனது மூலைக்கு எடுத்துரைத்தது. அவள் மெல்ல “ப்பா”, என்று வாய் அசைக்க, அவளையே அவள் செய்கையே பார்த்துக் கொண்டிருந்த பரதனுக்கு அது ஒலியாக கேட்கவில்லை ,என்றாலும் அவளின் வாய் அசைவில் உணர்ந்தான். “ என்னடா பாப்பு குட்டி”, என்று அவளின் தலையை அவன் வாஞ்சையோடு தடவ, அவள் எதுவும் கூறாமல் மறுபடியும் அவனை அணைத்துக் கொண்டால்.

அவளுக்குள் ஏதோ ஒன்று, அது தாயின் ஒவ்வாமை கூட காரணமாக இருக்கலாம் .அது அவளை தடுத்தது, அவள் உணர்ந்ததைக் கூற. அதை அவனின் அனைப்பில் புரிந்து கொண்ட பரதன், “நீ உணர்ந்ததை உன் வாயின் மூலம் கூறி, என் அங்கீகாரத்தை நான் பெறுவேன்” , என்று தனக்குள்ளே கூறிக் கொண்டான். அவர்கள் இருவரின் மௌன போராட்டத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தது அகிலனின் அழைப்பு.

தொடரும்
 

Matharasi

Moderator
அத்தியாயம் 18

“அண்ணா அக்கா வரும் நேரம், ரதி குட்டி எங்கே”, என்று அகிலன் கேட்க, அவனிடம் இருப்பிடம் கூறி அவனை அங்கே வரச் சொன்னான் பரதன். அவனும் எழுந்து பாரதிய தூக்கிக் கொண்டான். முதலில் தயங்கிவள் பின் அவனின் அண்பிலும் அரவனைப்பிலும் கரைந்தது. இவர்கள் வெளியே வருவதற்கும் அகிலன் அங்கே வருவதற்கும் சரியாக இருந்தது. வந்தவனுக்கு அதிர்ச்சியே பாரதி இவ்வளவு எளிதில் யாருடனும் ஒட்ட மாட்டாள். ஆனால் இப்போது அவன் தூக்கி வைத்திருக்கும் அளவுக்கு வளர்ந்து இருப்பது, சொல்லில் அடங்காம மகிழ்ச்சி அவனுக்கு ,அவன் பார்த்து பழகின வரை பரதன் மேல் எந்த ஒரு தவறும் இருப்பது போல் தெரியவில்லை.

ஆனால் திலகாகவும் அவனும் எதிரும் புதிரும் ஆக இருப்பது அவனுக்கு கவலையாகவே இருந்தது. “ என்ன அண்ணா ஒரு வழியாக இருவரும் சமாதானம் ஆகிவிட்டீர்கள் போல”, என்று அவர்களை பார்த்து கேட்க, “என்ன அகிமா, நாங்கள் எப்போது சண்டை போட்டோம், நாங்கள் முதலில் இருந்தே பிரண்ட்ஸ்”, என்று அவள் பரதனை கட்டி அனைத்து, அவன் எதிர்பாராத வண்ணம் அவன் கன்னங்களில் தன் முத்தத்தை வைத்தால்.



முத்தம் என்பது காமத்தின் பரிமாணம் அல்ல ,அது உன்னத அன்பின் வெளிப்பாடு. தன் விந்தின் மூலம் பிறக்கும் குழந்தைக்கு தந்தையாகும் ஆண்மகன் ,இன்று இந்த குழந்தையின் முத்தத்தின் மூலம் பிறப்பெடுத்தான் தந்தையாக.

“ அகிமாவுக்கு எல்லாம் இந்த முத்தம் கிடைக்கவில்லை ஆனால் உன் பிரண்டுக்கு மட்டும் வந்த உடனே முத்தமா”, என்று அகிலன் பாரதியை வம்பு இழுக்க, “ அது பரதன் ஸ்பெஷல் என்று சொல்லுடா பாப்பு”, என்று பரதன் அவளுக்கு சொல்லிக் கொடுக்க, “ அது சும்மா அகிமா”, என்று பாரதி வெட்கப்பட்டுக் கொண்டே அகிலனிடம் தாவினால்.

எங்கோ பிறந்தவள் இன்று இருவரின் உயிர் மூச்சாகிப் போனால்.

இருவரும் பரதனிடம் விடை பெற்றுக்கொண்டு சென்றனர். ரத்த மாதிரியின் பரிசோதனை முடிவுகளை பார்த்ததில் 40% போதை மருந்து கலந்திருப்பது உறுதியானது. அருணுக்கு உடனே மருத்துவ ஆலோசனை மற்றும் வைத்தியம் தேவைப்பட்டது .ஆனால் இது வெளியே தெரிந்தால், மிகப் பெரிய பிரச்சினையாக வெடிக்கும். மற்றொன்று பள்ளியின் பெயர் கெட்டுப் போகும். எல்லாவற்றையும் விட மாணவர்களின் வாழ்வு கேள்விக்குறியாகும். பரதனும் அகிலனும் அதே திருப்பரங்குன்ற கிரிவலம் சாலையில் நின்று இதை பற்றி தீவிர ஆலோசனையில் இருந்தனர்.

அவர்கள் நினைத்ததை விட பிரச்சனை பெரிதாக இருந்தது. “ அண்ணா பேசாமல் அருண் கூறிய பசங்களை தனியே அழைத்து விசாரித்து விடுவோமா”, என்றான் அகிலன் கேள்வியாக. “ இல்லைடா, மூவரும் என் கண் பார்வையில் சிக்க கூட மாட்டேறாங்க, பள்ளியில் படிப்பிலும் விடுதியிலும் நல்ல மாதிரி, எந்நேரம் எதை செய்கிறார்கள் என்று தெரியவில்லை, அருணிடம் கூறியுள்ளேன் அவர்கள் கொடுத்தால் வாங்கி வந்து என்னிடம் கொடு என்று”, என்றான் பரதன் பதிலாக .

அந்நேரம் பரதனுக்கு பள்ளி முதல்வரிடம் இருந்து அழைப்பு வர, “ சொல்லுங்க சார்”, என்றான் அதை உயிர்பித்து. “ பரதன் சார் இந்த வருடம் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யும் நேரம் இது, அது செய்தால் தான் நாம் இந்த அரையாண்டு தேர்வு முடியும் போது, மதிப்பெண் பட்டியலுடன் உடல் தகுதி பட்டியலையும் தர முடியும்”, என்றார். “ சரி சார் நான் யார் என்ன என்று முடிவு செய்து உங்களுக்கு அழைக்கிறேன்”, என்று கூறி தொடர்பை துண்டித்தான்.

“நமக்கு நன்கு உதவக்கூடிய ஐந்து டாக்டர்கள் செவிலியர்கள் வேண்டும். அனைவரும் நம்பிக்கை கூறியவர்களாக இருக்க வேண்டும். நான் எனக்கு தெரிந்தவர்களை அழைத்தால் அது சரிவராது .இங்கே மதுரையை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். என்னை பற்றி அறியாதவர்களாக இருப்பது நல்லது”, என்றான் அகிலனிடம்.

அகிலனோ , “சரி அண்ணா எனக்கு தெரிந்த ஒரு வயதான பெண் டாக்டர் இருக்கிறார். அவரின் உதவியை நாடுவோம். இன்று மாலை வாங்க பொய் பேசி பார்ப்போம் நிச்சயம் உதவி செய்வாங்க”, என்றான் ஆலோசனையா. “ சரிதான் ஆனால் அதற்குள் இது யார் மூலம் வருகிறது என்று கண்டுபிடிக்க முயற்சி செய்கிறேன்”, என்று கூறிய பரதனை அகிலன் பள்ளியில் இறக்கி விட்டு தன் வேலையை பார்க்கச் சென்றான். அருண் கூறிய மூவர் அறியாமல் பின் தொடர ஆரம்பித்தான். பரதன் பின்சென்ற வரை யாரும் அவர்களுக்கு எதுவும் தருவது போல் அவனுக்கு தெரியவில்லை. ஏற்கனவே பள்ளி விடுதியையும் கூடங்களையும் வகுப்பறைகளையும் எல்லாவற்றையும் பரிசோதித்து பார்த்து விட்டான். அவனுக்கு ஒன்று தெளிவானது வெளியில் இருந்து தினமும் வருகிறவர் மூலமாக தான் இது உள்ளே வருகிறது என்பதை கண்டு கொண்டான். அதைப்பற்றி தீர விசாரிப்பதற்காக அலுவலக அறையை நோக்கி சென்றான்.

பரதன் திலகா கம்ப்யூட்டரில் வேலையாக இருக்க இவன் நேராக அவளிடம் சென்றான். “ எக்ஸ்கியூஸ் மீ திலகா மேம்”, என்று அவன் அவளை கூப்பிட, தன் காதுகளை நம்பாத வண்ணம் அவன் அவளை நிமிர்ந்து பார்த்தால், ஏன்னென்றால் இந்த குரலில் சொந்தக்காரனுக்கு இவ்வளவு பணிவாகவும் மரியாதையாகவும் பேச தெரியுமா என்பது போல் அவனை பார்த்தால் .ஆனால் அவனின் முகமோ எப்போதும் அவளை காணும் போது இருக்கும் இலகு தன்மையற்று இருக்க, அவன் இடம் என்ன எது என்று கேட்காமல் நேராக, “ என்ன ஆச்சி”, என்று கேட்டால். அவளிடம் தோன்றிய பதட்டமும் அவள் கேட்ட கேள்வியிலும் அவனின் மாற்றத்தையும் பேச்சையும் அவள் கவனிக்கிறாள் .அது அவளை பாதிக்கிறது என்பதை புரிந்து கொண்டான்.

தன் மூச்சை ஆள உள்ள இழுத்து தன்னை அமைதிப்படுத்தி விட்டு, “ ஒன்றுமில்லை நம் பள்ளியில் பணியாற்றும் அத்தனை பணியாளர்கள் இருபால் ஆசிரியர்கள் அனைவரையும் பற்றிய தகவல்கள் எனக்கு வேண்டும்”, என்றான் தன்மையாக ,அவனின் குரலில் பழைய இலகு இல்லை என்றாலும் முன்னுக்கு இப்போது பரவாயில்லை என்ற உடன், “ காத்திருங்கள் எடுத்து தருகிறேன்”, என்றால் அமைதியாக.

அவள் கோப்பை இருக்கும் அறைக்குச் சென்று அவனுக்கு தேவையான கோப்பைகளை எடுத்து வந்தவளை, “ எனக்கு ஒரு உதவி செய்கிறாயா”, என்று அதே தன்மையோடு அவன் கேட்க, “ சரி”, என்பது போல அவன் தலையை அசைக்க, “ இதை நமது வீட்டில் எனது அறையில் வைத்து விடு”, என்று கூறிவிட்டு சென்றுவிட்டான். இவள் அதை எடுத்துக் கொண்டு முதல்வர் அறையை நோக்கி சென்றால் .

இவள் அவரிடம் அவன் வந்து சென்றதை, நடந்துவற்றையும் கூற , “ சரிமா நீ வீட்டுக்கு செல்வது போல் அங்கே செல்”, என்று கூறி அவளுக்கு அனுமதி அளித்தார் .இவள் வீட்டுக்கு கிளம்ப வண்டியை எடுக்க வண்டி வைத்திருந்த பகுதிக்கு செல்ல. அங்கு இருந்த கட்டிடத்தில் மறைவில் இருவர் பேசிக் கொள்வது அவளுக்கு கேட்டது.

“ சார் எனக்கு ஒரு ஐந்து தாங்க”, என்றான் ஒருவன் அந்த குரலில் ஒரு நடுக்கம் தெரிந்தது. “ டேய் தருகிறேன், ஆனால் நீதான் இந்த வாரத்துக்கு புதுசா யாரையும் அழைத்து வரவில்லையே”, என்றது இன்னோரு குரல் .இந்த குரல் அவளுக்கு பரிச்சயமான குரலாக அவளுக்கு தெரிந்தது. இது கண்டிப்பாக ஒரு ஆசிரியரின் குரலாக தான் இருக்கும். ஆனால் பள்ளியில் நிறைய ஆடவர்கள் பணியாற்றுகிறார்கள். யாரென்று எண்ணுவது என்று அவள் யோசிக்க, “ சார் நீங்க சொல்ற மாதிரி எல்லாம் இப்ப ரொம்ப கஷ்டம். விடுதிகள் யாரையும் எதுவும் பண்ண முடியல. பரதன் சார் ரொம்ப கண்டிப்பு அதுவும் ரொம்ப பிரியமாகவும் இருக்கிறார்”, என்றான் முதலில் பேசியவன்.

அவன் மாணவன் அதுவும் விடுதியில் தங்கி படிக்கும் மாணவன் என்பதையும் கண்டுகொண்டால் திலகா. இந்த ஒரு வாரம்மாக அகிலன் பரதனின் நடவடிக்கை பார்த்துக்கொண்டு தானே இருக்கிறால். அதுவும் முதல்வரோடு பரதனின் பேச்சு அவனுக்கு அவர் தரும் முக்கியத்துவம், அவன் ஒவ்வொன்றையும் விசாரிப்பது இப்போது இங்கு நடப்பது அனைத்துமே அவளுக்கு தவறாக பட என்ன செய்வதென்று அவள் வெகுவாக யோசித்தால்.

“ டேய் உனக்கு ஐந்து அல்ல பத்து கூட தருகிறேன், ஆனால் வாரம் ஒரு முறை புதிதாக அழைத்து வந்தால் தான்”, என்றது அந்த ஆசிரியரின் குரல் கரார்ராக. “ சார் இந்த ஒரு முறை மட்டும்”, அதற்கு அவரோ, “ முடியாது சொன்னதை செய்”, என்ற அந்த குரல் அவளை நோக்கி வருவது போல் தெரிய இவள் சட்டென்று அப்போதுதான் அங்கே வருவது போல் வண்டி வைக்கும் இடத்திற்கு வந்தால் .அந்த குரலில் சொந்தக்காரனை பார்த்து இவள் முதலில் அதிர்ந்து பின் எதுவும் நடவாது போல் அவள் வண்டியை நோக்கி சென்றாள். அவன் இவனை பார்த்து அதிர்ந்ததினால் இவள் அதிர்ந்ததை அவன் கவனிக்கவில்லை. ஆனால் அவன் உடனே சுதாரித்து கொண்டு ,”கொடுத்து வைத்தவங்க திலகா மேம் நீங்க, பள்ளி முதல்வரே உங்கள் கையில் நினைத்த உடன் போவது வருவது”, என்று அவளை ஒரு ஏளனப் பார்வையோடு பார்த்துக் கூற, அதில் அவள் அவனை முறைத்து விட்டு, அவள் வண்டியை எடுக்க போக, அவளின் வலியை மறைத்து நின்றான்.

அவன், “ நீங்க எல்லாம் ரொம்ப பெரிய இடத்து ஆளத்தான் பார்ப்பீங்க, என்னைப் போல் சிறியவர்கள் எல்லாம் உங்கள் கண்ணிற்கு தெரியாது”, என்றான் மறுபடியும். திலகா அதில் தன் பொறுமையை இழக்க, “ நான் கூட அவர்கள் போல் இல்லை என்றாலும் ஒரு அளவு உங்களை சந்தோஷமாக”, என்று அவன் முடிக்கவில்லை அவன் அந்த பக்கம் சுருண்டு விழுந்தான். அதில் அவள் யார் என்று நிமிர்ந்து பார்க்க ரௌத்திரத்தில் முழு உருவமாக பரதன் நின்றிருந்தான். அவன் கீழே விழுந்தவன் தடுமாறி எழ, “ சார் சும்மாதான் பேசிக்கிட்டு இருந்தேன்”, என்று தள்ளாடி கொண்டே கூற, “ நீங்கள் இங்கே என்ன வேடிக்கை உங்கள் வண்டியை எடுத்துக் கொண்டு”, என்று அவன் திலகாவிடம் உரும , அவன் குரலில் மிரண்டு பதில் எதுவும் பேசாமல் அந்த இடத்தை விட்டு அகன்றால்.

அவள் சென்ற பின் அவனின் அருகில் வந்த பரதன், “நீ பேசிய அனைத்தையும் கேட்டுவிட்டு தான் வந்தேன் வா முதல்வரின் அறைக்கு”, என்று பரதன் அவனிடம் கூறி அவன் சட்டையை பிடிக்க போக , “ சார் ப்ளீஸ் சார் இனிமே இவ்வாறு செய்ய மாட்டேன்”, என்று பரதனின் கால்லை பிடித்து அவன் கதற , ஏனென்றால் அவனுக்கு தெரியும் இந்த பள்ளி ஒழுக்கத்திற்கு பெயர் போனது, என்றும் அது மட்டும் இல்லாமல் அவன் வந்த வேலை முடியாமல் அவன் வேறு பிரச்சனையில் மாட்டி வெளியேறினால் அவனை அனுப்பியவன் அவனை உயிரோடு விடமாட்டான் என்று .அவன் கால்லை பிடித்ததும் பரதன் ஒரு உதறு உதற , “இதுதான் கடைசி, வேற யார்கிட்டயும் வம்பு வளர்த்து பேசினாய் அல்லது தரக்குறைவாய் நடந்தாய் அவ்வளவுதான்”, என்று கூறி மறுபடியும் அவனுக்கு ஒரு உதை கொடுத்துவிட்டு நகர்ந்தான்.

தொடரும்
 

Matharasi

Moderator
அத்தியாயம் 19

திலகா பின்பக்கம் வழியாக பரதனின் வீட்டுக்குள் நுழைந்தாள். அவளை அன்போடு வரவேற்ற சாரதா அம்மா, அவள் கோப்பையை கொடுத்து விட்டு கிளம்ப நினைக்க, “ இரு அம்மா டியும் சிற்றுண்டியும் சாப்பிட்டுவிட்டு அகிலன் வந்தவுடன் கிளம்பலாம்”, என்றும் வற்புறுத்தினார். அதை அவளால் மறுக்க முடியவில்லை. அவர் உள்ளே சென்று தயார் செய்யப் போக, அவள் அதை மறுத்துவிட்டு ,தானே அனைத்தையும் செய்ய ஆரம்பித்தால். ஏற்கனவே அவர் முந்திரிக்கொத்திற்கு மாவை தயார் செய்து வைத்திருக்க இவள் மற்ற வேலைகளை செய்ய ஆரம்பித்து இருந்தால்.

அதற்குள் வேகமாக கோபமான முகத்தோடு பரதன் வீட்டுக்குள் நுழைந்தான் . “எங்கே அம்மா அவள்”, என்று சாரதம்மாவிடம் வினாவ, “ டேய் அவள் இப்போதுதான் வந்தால், ஏன் அதற்குள்”, என்று அவர் அவனை சமாதானப்படுத்த முயல, அவனின் குரலில், அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் உடன், அவள் வெளியே வந்தால். அவளை கண்டவுடன் அவள் பக்கம் திரும்பி ,அவள் அருகில் இவன் போக, “ உன் கோபம் எல்லாம் அப்பாவியான எங்களிடம் தான்”, என்று அவளிடம் எகிறினான் .அவன் கேட்டதற்கு எந்த ஒரு சலனமும் இல்லாமல் தண்ணீர் டம்ளரை அவனிடம் நீட்டினாள். அது என்னவென்று பார்த்து அவளை மேற்கொண்டு, “ இது ரொம்பவும் முக்கியம். அவன் எப்படி பேசுகிறான்”, என்று பரதன் குதித்தான் .இவள் டம்ளரை நீட்டியவாரு நிற்க, “ டேய் முதலில் வெளியே இருந்து வந்தவன், தண்ணீரைக் குடித்து விட்டு பேசு”, என்றார் சாரதா அம்மா.

அதில் அதை வாங்கி ஒரு மூச்சாக குடித்து முடித்தவன் , “இப்போது கூறு”, என்றான், அவளின் பதிலை எதிர்பார்த்து. ஆனால் முதலில் இருந்த கோபமும் படபடப்பும் அவனுக்கு மட்டுப்பட்டு இருந்தது. “ எத்தனை நாயை தான் நான் கல்லைக் கொண்டு எரிவது, சாக்கடையில் கல் எறிந்தால் அது என் மீதுதான் படும்”, என்றால் அமைதியாக, % அதற்கு முதல்வரிடம் புகார் அளித்திருக்கலாமல்லவா”, என்ற பரதன் ஆதங்கப்பட, இவர்கள் பேச்சை சாரதாம்மாக்கு விஷயம் புரிய, “ டேய் தனியா பெண் இருந்தால் இப்படித்தான், எத்தனை பேரில் மேல் புகார் அளிக்க முடியும்”, என்று அவரும் கூற , “அம்மா நீங்க வேற, பூனைக்கு யாராவது மணி கட்ட வேண்டாமா”, என்று தன் அன்னையை நோக்கி கேள்வி எழுப்பினான்.

“அது எனது வேலை கிடையாது”, என்று கூறி அவள் அந்த இடம் விட்டு அகன்று சமையலறையை நோக்கிச் சென்றால். “டேய் விடு போய் முகத்தை கையை காலை கழுவிக்கொண்டு அகிலனை அழைத்து திலகா இங்கே இருக்கிறால் என்று கூறி வர சொல்”, என்று கூறிய அவனை அனுப்பி வைத்தார். இவன் அகிலனுக்கு அழைத்து திலகாவின் வரவைக்கூறி வா என்று கூறி அழைப்பை துண்டித்து விட்டு தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தான்.

தன் அன்னை தோட்டத்தில் இருக்க இவன் சமையலறையை நோக்கிச் சென்றான் .அவள் அங்கு சமைத்துக் கொண்டு இருக்க . “என்னிடம் மட்டும்தான் தாம் தூம்”, என்று அவன் அவளிடம் மறுபடியும் பொரிய தொடங்க, அவளோ அவன் அருகில் வந்து, “ நான் யாரிடம் பொரிய வேண்டும் என்று எனக்கு தெரியும் ,ஆனால் நான் அமைதியாக நின்றதற்கு முதல் காரணம், அதற்கு முன்பு தான் அவன் யாரோ ஒரு மாணவனோடு எதையோ பற்றி பேசிக் கொண்டிருந்தான்”, என்றால் அமைதியாக.

“ என்ன என்ன சொல்கிறாய் தெளிவாக சொல்”, என்று அவளிடம் அவன் கேட்க, “ சரியாக புரியவில்லை ,ஆனால் இந்த மாணவன் ஏதோ கேட்டதற்கு ஐந்து அல்ல பத்து கூட தருகிறேன் ஆனால் புதிதாக ஒருவனை அழைத்து வந்தால் தான்”, என்று அவன் அந்த மாணவரிடம் கரார்ராக கூறினான்”, என்றால் .அவள் கேட்டதை அவள் கூற பரதனுக்கு அவன் மனதில் இருந்த சந்தேகம் முடிச்சுகளில் ஒன்று அவிழ்ந்தது. “ அவன் பள்ளியில் சேர்ந்து எத்தனை வருடமாகிறது”, என்றான், “ என்ன ஒரு வருடம் அல்லது 10 மாதம் அதற்குள் தான் இருக்கும்”, என்றால் அவள், அவளுக்கு தெரிந்ததை.

“ நீ கொண்டுவந்த கோப்பையில் அவன் புகைப்படமும் மற்ற விவரமும் இருக்கும்தானே”, என்று அவளிடம் கேட்க, “ ஆமாம் நம் பள்ளியில் இருக்கும் அனைவரது அடிப்படை விவரமும் இருக்கும்”, என்றவல் தான் கொண்டு வந்த கோப்பையில் அவனின் விபரத்தை தேடி பரதனுக்கு எடுத்துக் கொடுத்தால். அதை தன் கைபேசியில் பதிவேற்றிக் கொண்டவன் யாருடனோ பேசுவதற்காக வெளி வாசலுக்கு சென்றான். அதற்குள் மாலை சிற்றுண்டி மற்றும் டீயை எடுத்துக்கொண்டு தோட்டத்திற்கு சென்றால்.

சிறிது நேரம் சென்று அகிலனும் பரதனுடன் நுழைந்தான். திலகா முகத்தில் எந்த ஒரு இறுக்கமும் இல்லாமல் அவள் தெளிவோடு இருந்தது அகிலனுக்கு மனதிற்கு இதமாக இருந்தது. அகிலனிடம் அவன் வந்தவுடன் திலகா கூறியதை பரதன் கூறி இருந்தான். “ அண்ணா உடனே அவனை விசாரிக்க வேண்டியது தானே”, என்று அகிலன் வினாவ, “ இல்லை இவனின் பின்னணி நமக்கு தெரிய வேண்டும்”, என்று கூறிவிட்டு , “மருத்துவர் குழுவிற்கு கேட்டு இருந்தேனே”, என்று பரதன் நினைவூட்ட, “ அவர்களிடம் பேசி விட்டேன் உங்களை மாலை வரச் சொன்னார்கள்”, என்றான். “ சரி வா அம்மா தோட்டத்தில் இருக்கிறார்கள்”, என்று பரதன் கூறி அவனை அழைத்துக்கொண்டு சென்றான்.

“ ஏன்டா இவ்வளவு நேரம்” ,என்று அகிலனை பார்த்து சாரதா அம்மா கேட்க, “ கொஞ்சம் வேலை அம்மா”, என்று கூறி, அங்கே இருந்த நாற்காலியில் அமராமல் அவர்களின் அருகில் கீழே தன் காலை நீட்டி அமர்ந்தான். “ அகிலா ஏன் மேலே உட்காராமல்”, என்று கூறி அருகில் இருந்த மற்றொரு நாற்காலியில் அமர்ந்தான். “ பரதன் இல்லை அண்ணா காலையிலிருந்து சவாரி அதிகம், அதுவும் அமர்ந்த நிலையிலேயே உட்கார்ந்து, வண்டியை ஒட்டுவது ,காலில் பிரேக்கில் மிதித்து, முகூர்த்த நாள் வேறையா டிராபிக் வேறு அதிகம்”, என்று அவன் கையையும் காலையும் அசைக்க, முகத்தில் வலியுடன் கூறினான்.

இதை பார்த்துக் கொண்டிருந்த திலகா ஒன்றும் கூறாமல் உள்ளே சென்று, அன்று போல் ஹாட் வாட்டர் போட்டு இரும்பு வாளியில் ஊற்றிக்கொண்டு வந்தவல் அங்கு கண்ட காட்சியில் அவளின் கண்களில் கண்ணீர். ஆனால் முகத்தில் அவ்வளவு சந்தோஷம். சாரதா அம்மா அகிலனின் முதுகை நீவி விட்டவாறு நாற்காளியில் அமர்ந்திருந்தார். பரதனும் அகிலனின் கால்களை பிடித்து விட்டவாறு, அவன் இன்னோரு நாற்காளியில் சாய்ந்து கீழே அமர்ந்திருந்தான். அகினோ, “ போதும்”, என்று பரதனின் கைகளை சங்கடத்தோடு தடுத்துக் கொண்டே இருந்தான். திலகா அசையாமல் நின்று கொண்டிருக்கிறதை கண்ட பரதன் , “அப்படியே நின்றால் எப்படி, வந்து என் தம்பிக்கு அந்த ஹாட் வாட்டரைக் கொண்டு ஒத்தடம் கொடு”, என்று அந்த என் தம்பி என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்துக் கூற, அவளுக்கு இப்போது இந்த பேச்சில் கோபம் வராமல் சிரிப்புதான் வந்தது. அவளுக்கு தெரியும் பரதன் துன்பப்படுத்தக் கூடியவன் அல்ல என்பது.

அவள் வந்த அகிலன் அருகில் அமர்ந்து அவனை நாற்காலியில் அமரச் சொல்லி அவன் கால்களை அவள் பிடித்து தூக்கி தண்ணீரில் வைக்கப் போக, “ நீ இரு திலகா”, என்று பரதன் உள்ளே சென்று ஒரு சிறு தைல பாட்டிலை எடுத்து வந்து அதில் 5 சொட்டு தைலத்தை கலந்து ,அவனே அவனது கால்களை எடுத்து வைத்து மசாஜ் செய்தான். அகிலனுக்கு கண்களில் இருந்து கண்ணீர் கொட்ட, “ டேய்”, என்று சாரதா அம்மாவின் குரல் அதை தடுத்தது.

“ சும்மா கண்ணை கசக்காதே நீயும் உன் அக்காவும், ஏதோ நம்மளுடையது பேதாத நேரம் ,நாம் கஷ்டப்பட்டது. அதை எதுவும் நினைக்காதீங்க”, என்றவர், “ பாரதியும் அழைத்திருக்கலாம், என் கண்கள் உள்ளேயே நிற்கிறாள்”, என்றார் பாசமாக. அகிலன் திலக முகத்தை பார்க்க, அங்கே பரதனும் அவள் முகத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தான். “ இப்போ வேண்டாம் தேர்வு வருகிறது ,விடுமுறை தினத்தில் அகிலன் அவர்களோடு அனுப்பி வைக்கிறேன்”, என்று அவள் கூற, “ சரிமா அகிலன் உன்னைவிட பெரியவன் தான், ஆனால் அவன் உன்னை அக்கா என்று அழைக்க நீ அவனை வா போ என்றே சொல்ல”, என்று சொன்னார் சாரதாம்மா.

“ அது எல்லாம் இதுதான் சரி, அவனை மரியாதை உடன் கூப்பிட வேண்டிய உறவு தான்”, என்று பரதன் அவசரமாக மறுத்து கூற ,அவனையே பார்த்த தன் அன்னையின் பார்வை மாற்றத்தை உணர்ந்தவன் , “அது நாளை அகிலனுக்கு என்று ஒருவர் வரும்போது அவள் சங்கடப்படுவாள் அல்லவா”, என்றான் மெதுவாக .

“அண்ணன் போதும் , இப்போது நன்றாக இருக்கிறேன்”, என்று கூறி கால்களை எடுக்க, திலகா கொண்டு வந்த தூண்டில் கால்லை துடைத்து சரிவர அமர்ந்தான். அவள் அதன் பின் டீயை முந்திரிக்கொத்தையும் எடுத்து கொடுக்க ஒருவாரு இருவரும் சாப்பிட்டு கிளம்பினர். திலகா வண்டியை எடுத்துக்கொண்டு நேராக வீட்டிற்கு செல்ல, அகிலனும் பரதனும் மருத்துவரை பார்க்கச் சென்றனர்.

பரதன் தனக்கு இருக்கும் சந்தேகம் அனைத்தையும் கூற , “அதற்கு அவரும் பிளஸ் 2 பிளஸ் 1 மற்றும் 10வது மாணவர்கள் அனைவரின் ரத்தத்தையிம் சேகரித்து பரிசோதனை பண்ணுவோம்”, என்றார். “ சரி மேம் அப்போதான் யாருக்கும் சந்தேகம் வராது”, என்றான் பரதன். “பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட மாணவர்களுக்கு அந்த பாதிப்பின் அளவு தெரிந்த பின்னே நாம் என்ன செய்யலாம் என்று முடிவு செய்ய முடியும்”, என்றார்.

“ சரி மேல உங்களோடு வருபவர்கள் யார் என்று கூறினீர்கள் என்றால் அதற்கு தக்க நான் அயுத்த படுத்த முடியும்”, என்றான் . “ நாளை மாலை இந்நேரம் அழைத்து கூறுகிறேன். வரும் திங்கட்கிழமை நடத்தி விடலாம். நீங்கள் அதற்குள் யார் என்று கண்டுபிடிக்க பாருங்கள் ,ஏன்னென்றால் பெற்றோருக்கு சொல்லி தான் சிகிச்சை அளிக்க முடியும் அவர்களின் ஒத்துழைப்பு அத்தியாவசியம்”, என்றார்.

“கண்டிப்பாக மேம்”, என்று கூறியவரிடம் விடைப்பெற்று பரதன் வீட்டுக்கு திரும்ப, அகிலன் அவனை இறக்கிவிட்டு தன் சவாரிக்கு சென்றான்.

தொடரும்
 

Matharasi

Moderator
அத்தியாயம் 20

பரதனை இறக்கிவிட்டு அகிலன் தன் சவாரிக்கு செல்லும் முன், “ அண்ணா கவனம் ,அவன் யார் என்று சொன்னீர்கள் என்றால்”, என்றான் தன் பல்லை கடித்துக்கொண்டு, “ டேய் நான் நன்றாக கவனித்து விட்டேன். அதுபோக ,அவன் பின்னால் யார் என்று நாம் பார்க்கணும் அதனால் பொறுமை பின்னால் பார்த்துக் கொள்ளலாம்”, என்று அகிலனை அவன் சமாதானப்படுத்த முயன்றான் , “ இல்லை நீங்கள் கவனித்தது வேறு, நான் கவனிக்க நினைப்பது வேறு, அவன் பேசிய முறையைப் பார்த்தால், ரொம்ப நாளாக அவர்களுக்கு தொல்லை கொடுத்திருக்கிறான் போல்”, என்று கூற, “ எனக்கும் அப்படித்தான் தெரிந்தது, முதலில் எனக்கு அவன் தான் இதை உள்ளே மாணவர்களுக்கு கொடுக்கிறான் என்று தெரியாது, தெரியும் முன் திலகாவை பேசியதற்கு மட்டுமே அவனை அடித்தேன் .அது போக உன் அளவு இல்லை என்றாலும் நானும் ஓரளவு நன்றாக அவளை பார்த்துக் கொள்வேன்”, என்று கூறி அவனை அமைதி படுத்தினான். இருந்தும் அகிலன் தயங்கி, “ ஏதோ இவனால் ஏதோ ஒன்று வரப்போவது போல் உள் மனது அமைதி அடைய மறைக்கிறது ,அவர்கள் நீங்கள் பாரதி அம்மா எனக்கு முக்கியம்”, “ டேய் நீ கவலைப்படாமல் இரு, உனது அண்ணன் நான் இருக்கிறேன் ,எனக்கு பக்கவாதமாக நீ இருக்கிறாய் ,அதனால் எந்த ஆபத்தும் யாருக்கும் வந்தாலும் ஒருவருக்கொருவர் துணையாக நிற்கப் போகிறோம் .நம் இருவர் பாதுகாப்பிலும் அந்த மூவர் அடக்கம் நம்மை மீறிதான் எதுவும் நடக்க வேண்டும். அப்படி எதுவும் நடந்தால் என் உயிரை கொடுத்து” என்று பரதன் கூற , “அது என்னை தாண்டி தான்”, என்று அகிலன் முடித்தான். அவனை பரதன் கட்டி அணைத்துக் கொண்டான்.

அகிலன் இவ்வாறு கூறி சென்றதால் எதற்கும் பள்ளியை சுற்றி மற்றும் அகிலன் திலகா பாரதி சுற்றி வேலி அமைத்து அவர்களை தன் கண் பார்வைக்குள் வைத்துக்கொள்ள திட்டமிட்டு இருந்தான். பரதன் அடுத்த நாள் காலையில் முதல்வர் அறைக்கு சென்று, “ மருத்துவர் குழு திங்கள்கிழமை வருவதாகவும் ,இதை இப்படி தெரிவிக்காமல் வேறு ஏதேனும் கூறி அனைவரையும் வருமாறு செய்ய வேண்டும்” ,என்று கூறி விடைபெற்றுச் சென்றான். திலகா அங்கே தனியே இருக்க எப்போதும் போல் அவளிடம் வம்பு இழுக்கும் ஆவல் எழ அதுவும் இப்போது எல்லாம் எந்த ஒரு சலனமும் பயமும் இன்றி அவள் அவனோடு வார்த்தையாடுவது அவனுக்கு பிடித்திருந்தது. முதல்வர் தன்னுடைய அலுவலுக்காக பள்ளியை பார்வையிட சென்றது இவனுக்கு வசதியாக போயிற்று. அவள் இவன் வந்ததை கவனிக்கவில்லை.

இன்று யாரும் அறியாத ஒன்று அது அவளின் பிறந்தநாள், என்னதான் அகிலனுக்கு அது தெரிந்திருந்தாலும் ,அவன் அதை வெளியே சொல்லவில்லை .அதை கூறினால் எங்கு தனக்கு அவளை பற்றி அனைத்தும் தெரியும் என்று நினைத்து ஓடிவிடுவாளோ என்று மறைத்து விட்டான். ஆனால் இந்த நான்கு வருடத்தின் வளமை போல் காலையிலேயே கோயில் சென்று அவளுக்காக வேண்டிக் கொண்டு அர்ச்சனை செய்து அதை வீட்டில் வந்து கொடுத்தான். உடைத்த தேங்காயில் பூ இருந்தது அது அவன் மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. இவர்கள் அனைவரும் நினைக்கும் சந்தோசம் அவளுக்கு சந்தோஷத்தை தர வேண்டும் என்பதை மறந்து போனார்கள்.

திலகா கணக்கு புத்தகத்தை திறந்து வரவு செலவு சரி பார்ப்பது போல் தெரிந்தாலும் காலையில் இருந்து அவளுடைய சிந்தனை மற்றும் மனது பழையதை அசை போட்டுக் கொண்டே இருந்தது. ஏதோ ஒரு நெருடல் ஆகவும் இருந்தது. அவளுக்கு அவளுடைய உள்ளுணர்வு என்றுமே பொய் உரைப்பதில்லை. அகிலன் பரதன் நடவடிக்கைகளில் ஏதோ பிரச்சனை என்று அவளுக்கு தெரியும். ஆனால் அதன் வீரியம் அவளுக்கு தெரியாது.

அனைத்தையும் சேர்ந்து அவளுக்கு மன அமைதியை தர மறுத்தது. பரதன் அவளை நெருங்குவதற்கும் அவள் மயங்கி சரிவதற்கும் சரியாக இருந்தது. “ ஏய்”, என்று அவள் நாற்காலியில் இருந்து கீழேச்சரியா , அவளைத் தாங்கி பிடித்து மறுபடியும் அவளை நாற்காலியில் அமர்த்தினான். அதை குரோத உணர்வோடு ஒருவன் தன் கைபேசியில் படம் பிடித்தான். இந்தப் பள்ளியில் நான் வந்த வேலை கிட்டத்தட்ட ஓரளவுக்கு முடிந்து விட்டது .நான் இங்கே இருந்து செல்வதற்கு முன் உன்னை என்ன செய்கிறேன் பார் என்று பார்வையில் விஷத்தை கக்கிவிட்டு சென்றான்.

முதல் உதவி அளித்து அவளை நார்மலுக்கு கொண்டு வந்தவன் , அகிலனை அழைத்து , “அவளுக்கு உடல்நிலை , என்று கூறி அவளை அன்னையோடு இருக்க அzனுப்ப போவதாக”, கூறி வைத்தான். “ நான் நன்றாக இருக்கிறேன்”, என்று சொன்ன திலகாவை, “ தெம்பு இல்லாதது போல் தெரிகிறது”, என்றவன், “ நீ வீட்டுக்கு போ ,நான் உனக்கு டிர்ப்ஸ் போட்டுவிட்டு மறுபடியும் வருகிறேன்”, என்று கூறி முடித்தான். அவள் அசையாமல் நிற்கவும், “ உன்னை நான் போகச் சொன்னேன்”, என்று கடின குரலில் கூற ,அவள் முதல்வருக்கு அழைத்து, “ உடம்பு சரியில்லை”, என்று கூறி விட்டு அவள் சாரதா அம்மாவிடம் சென்றால்.

இவனும் சிறு இடைவெளி விட்டு சென்றான். ஆனால் இவர்களையே நோட்டமிட்டு கொண்டிருந்தவன் கண்ணில் இருந்து இருவரும் தப்பவில்லை. வீட்டுக்கு பாதியில் நேரத்தில் வந்து நின்ற திலகாவை பார்த்து அதுவும் சோர்ந்த முகத்தோடு வந்தவளை பார்த்து அதிர்ந்து தான் போனார் சாரதா அம்மா .

“ என்னடா”, என்று அவளை அமர வைத்து , அவளுக்கு பேரிச்சம் பழமும் இதர நட்பஷ்களையும் அடித்து பிரஷ் ஜூஸை கொண்டு வந்து நீட்டினார். அவரின் பரிவிலும் பாசத்திலும் அவளின் இத்தனை நாள் கடினப்பட்டிருந்த இதயம் இளகி, அவளின் பிறவி குணம் தலைதூக்க, அவரின் மடி சாய்ந்து இத்தனை நாள் அவள் மனதில் மறைத்து வைத்திருந்த இறுக்கங்களை யாவையும் கண்ணீராக வெளியேற்றினால். அங்கே சாரதா அம்மாவிடம் தன் அன்னையை கண்டால். மடை திறந்த வெள்ளமாக அவள் உணர்வுகளை, வாய் பேசாமல் கண்ணீராக வெளியேற்றினால்.

அவரும் பெண்தானே அவளை போலவே கணவனை இழந்தவர். ஆனால் அவர் ஆண்மகனை பெற்றவர். அது போக அவருக்கு வேலியாக அவர் மாமனார் இமயமாக நின்றார். ஆனால் இவள் இப்போது அகிலன் இருந்தாலும், அவள் அவனை அடையும் முன் அவள் என்ன கஷ்டங்களை அனுபவித்திருக்க கூடும், என்பதை அவளின் இந்த இறுக்கம் அவருக்கு பறைசாற்றியது .அவளின் ரணங்களில் வெளிவரட்டும் என்று அமைதி காத்தவர் ஒரு கட்டத்தில் அது தானாக நிற்காது என்று தோன்ற , “அவளை அம்மாடி போதும்மா”, என்றார், அவள் முதுகை ஆதரவாக வருடி. அதில் மேலும் அவள் குலுங்க, “ திலகாமா போதும்”, ஏற்கனவே சோர்ந்து தெரிகிறாய்.

உடம்பை மேலும் வதைக்காதே இப்போது நீ தனி ஆள் கிடையாது, “ கர்ஜிக்கும் சிங்கத்தின் பாதுகாப்பில் இருக்கிறாய். ஆம் அகிலன் அமைதியாக தெரிந்தாலும் நீயும் உன் குழந்தை என்று வரும்போது உங்களின் பாதுகாப்பு விஷயத்தில் அவன் கர்ஜிக்கும் சிங்கம் தான் .ஆதலால் பயம் தேவையற்றது”, என்றார் அவளின் வேதனைக்கும் மருந்தாக. அதில் கொஞ்சம் தெளிர்ச்சி அடைந்தவள், அவர் மேலும் கூறியதில் முழு தெளிவு பெற்றதும் புது குழப்பமும் பிறந்தது.

“ அதுபோக இப்போது பரதன் வேறு இருக்கிறான். அவனின் உடமையான பொருட்களை அவன் என்றும் யாரும் தொடுவதற்கோ காயப்படுத்துவதற்கோ அவன் அனுமதிக்க மாட்டான். அகிலனிடம் விவேகம் இருக்கும் என்றால் இவனிடம் வேகம் இருக்கும். இப்போது நீ வேகமும் வேகமும் ஒன்று சேர்ந்த இடத்தில் இருக்கிறாய். உன்னை தொடணும் என்று நினைப்பவன் எமனை அவனே வரவேற்பதற்கு சமம். இந்த கலக்கங்கள் அவசியம் அற்றது”, என்றார். அவரின் வார்த்தைகளில் ஏற்கனவே இருந்த குழப்பத்திற்கு புது வடிவம் கொடுக்க அதிர்ந்து தான் போனால் பாவை.

அதற்குள் பரதன் வந்துவிட, “ அம்மா அவளுக்கு ட்ரிப்ஸ் போட்டு விடுகிறேன் நீங்கள் முடிந்ததும் சாப்பிட குடிக்க கொடுத்து ஓய்வெடுக்க சொல்லுங்கள். மாலை அகிலன் வந்தவுடன் வீட்டுக்கு போகட்டும்”, என்று கூறி அவனின் ஆரோக்கிய அவளை அவன் தன் அறைக்கு அழைத்து செல்ல, திலகா அன்றைய அவன் பேச்சு தயங்க, “ என்ன முதல் மாதிரி தூக்கிக்கொண்டு போகவா”, என்று அவன் அவளிடம் நெருங்க, எங்கே தூக்கி விடுவானோ என்று பயத்தில் அவள் வேகமாக அந்த அறைக்குள் நுழைந்தால்.

சாரதா அம்மா வேறு ஜூசை சமையல் அறைக்கு வைக்க சென்று இருந்தது அவனுக்கு வசதியாகி போனது. அவனுக்கு இருக்கும் நெருக்கடியில் அவளின் செய்கை அவனுக்கு புன்னகை பூக்க செய்தது .அவன் அவளுக்கு டிர்ப்ஸ்ம் அதில் தூக்க மருந்தை செலுத்தி விட்டு, அவள் அருகில் குனிந்து , “இதுவரை உன் வாழ்வில் எது வேண்டுமானாலும் நடந்திருக்கலாம் .அதற்கு நானும் கூட காரணமாக இருந்திருக்கலாம் .ஆனால் இந்த நொடி முதல் புதிதாக பிறப்பது போல் நன்றாக தூங்கி எழுந்திரு. இருக்கும் அனைத்து கலக்கங்களும் பிரச்சினைகளையும் நீ தனியாக சமாளிக்க போகிறாய் என்ற எண்ணம் உனக்கு வேண்டாம். உற்றத் துணையாக நானும் ,நம் மகளும், உன்னை தன் உயிரை விட பொக்கிஷமாக பாதுகாக்கும் உன் உடன் பிறவாத அகிலனும் இருக்கிறோம், என்று திடத்தோடு வாழ வா”, என்று கூறி அவள் அதிர்ந்து அவனைப் பார்க்க அவள் டிரிப்ஸ் போடாத மற்றொரு கையில் சிறு அழுத்தம் கொடுத்தான் .தன் அன்னை வரவும் சென்று விட்டான். டிரிப்ஸ் முடிவதற்குள் அவள் தூக்கத்திற்கு சென்று விட அவர் அதை நிப்பாட்டி பரதனை அழைத்தார்.

அவன் வந்து அனைத்தையும் நீக்கிவிட அதன் வலியில் கூட அவள் முகம் லேசாக சுணங்கியது தவிர வேறு எதுவும் இல்லாமல் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தால். ஆனால் அவள் மனதில் பரதனின் குரல் நான் நம் என்ற ஒலித்துக் கொண்டே இருந்தது. அவளது அந்த நிர்மலான முகம் அவனுக்கு கடும் வலியை கொடுத்தது .அவள் கண்ட துயரங்கள் அனைத்திற்கும் அவன் அருமருந்தாக இருக்கவே விரும்புகிறான். ஆனால் அவள் அவளை மன்னித்து முழு மனதோடு ஏற்க்க வேண்டும் அல்லவா. தன்னால் கண்டிப்பாக முடியும் என்று எண்ணிக் கொண்டிருந்தவனின் சிந்தனையை கலைத்தது அவனது கைபேசியின் சிணுங்கல்.

இவன் யார் என்று பார்க்க நேற்று இவன் அந்த ஆசிரியரின் பயோடேட்டாவை ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்திலும் கொடுத்து விசாரிக்க சொல்லியிருந்தான். அவர்களை இப்போது தொடர்பு கொண்டு இருந்தனர். “ சார் நீங்கள் அனுப்பிய நபரை பற்றிய தகவல்கள் அவர் கூறிய அனைத்தும் பொய், நான் உங்களுக்காக அவரின் உண்மையான தகவல்களை அனுப்பி உள்ளேன். மேலும் இன்னும் ஒரு இரண்டு அல்லது மூன்று நாள் கொடுத்தீர்கள் என்றால் மீதியை கூறிவிடுவோம்”, என்றார்கள்.

“ சரி ஆனால் கூடிய மட்டும் மிக விரைவில் பாருங்கள்”, என்று கூறி வைத்து விட்டான் .நாளை வேறு பள்ளி முழுநேரம் இருக்கிறது என்று நினைத்தவன் தன் பணி பார்க்கச் சென்றான் .இவன் அனைத்தையும் முடித்துவிட்டு பள்ளிக்குள் சென்றவன் சற்று நேரத்திலேயே ஏதோ சரியில்லை என்று உணர்ந்தான். ஏனென்றால் இவனை பார்க்கவும் ஏதோ தங்களுக்குள் பேசவும் சில ஆசிரியர்கள் இருக்க, இவனுக்கு என்ன ஏது என்று புரியவில்லை. ஆனால் பள்ளி முடியும் நேரம் இவனுக்கு முதல்வர் அழைத்து தன் அறைக்குள் வருமாறு கூறினார். அந்த குரலில் படபடப்பை உணர்ந்தவன் ,“இதோ வருகிறேன்”, என்று சென்றான்.

தொடரும்
 

Matharasi

Moderator
அத்தியாயம் 21

அங்கே முதல்வர் என்ன கூறினாரோ ,அவன் முகம் கடுமையாக இறுகி போக, ஒரு நிமிடம் ஆழ்ந்த மூச்சை உள் இழுத்து தன் கண்களை மூடி திறந்தான். “இப்ப என்ன செய்யப் போறீங்க, பள்ளி நடைமுறை என்ன”, என்றான், இறுகிய குரலில். “ அது வந்து நாளை எல்லா ஆசிரியர்களும் ஒன்று கூடி, குற்றம் நிரூபிக்கப்பட்டால்”, என்று அவர் மெதுவாக மென்னு முழுங்கி பேச , “சரி நாளை, அதில் நாங்கள் சந்திக்கிறோம் அதுவரை தாத்தாவிற்கும், திலகாவிற்கும் இது எதுவும் தெரியக்கூடாது”, என்று கூறிவிட்டு பாரதியை அழைத்துக் கொண்டு வீடு நோக்கி நடந்தான்.

திலகா இன்னும் தூக்கத்தில் இருக்க, குழந்தையை அன்னையிடம் ஒப்படைத்துவிட்டு, “ இன்று இங்கே தான் இரவு உணவு அனைவருக்கும்”, என்று கூறி, அகிலனை பார்க்கப் போவதாக கூறினான். அவனின் முகத்தில் இருந்த இறுக்கத்தில், “ பரதா எதுவும் பிரச்சனையா”, என்று சாரதா அம்மா கேட்க, பாரதியும் அவன் முகம் சரியில்லாதாள் ஒன்றும் பேசவில்லை.

“ அம்மா நான் எந்த முடிவு எடுத்தாலும் நீங்கள்”, என்று அவன் ஏதோ கேட்க வர. “கண்டிப்பாக அது நல்லதாக தான் இருக்கும்”, என்று அவர் முடிக்க, “ அம்மா ஏன் என் மீது இவ்வளவு நம்பிக்கை, என்னால் ஏற்கனவே”, என்று அவன் பழையதைப் பற்றி பேச வர, “ அது உன்னை யோசிக்கவிடாமல் செய்த போது நடந்த நிகழ்வு, எதையும் யோசிக்காதே, எதை செய்தாலும் நீயும் அகிலனும் சேர்ந்து செய்யுங்க”, என்று கூறிவிட்டு பாரதியை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றுவிட்டார்.

இவன் அகிலனை அழைத்தான். “ என் அண்ணா”, என்று அவன் கேட்க, “ நான் பள்ளி வெளி வாசலில் நிற்கிறேன்,வா இங்கே, திலகா பாரதி இன்று இங்கேயே இருக்கட்டும்”, என்று கூறி அவனின் பதிலை எதிர்பார்க்காமல் வைத்து விட்டான். அவனால் இந்த குற்றச்சாட்டை ஒன்று இல்லாமல் செய்துவிட முடியும். ஆனால் அந்த வதந்தி புகை பரவிக்கொண்டே தான் இருக்கும் .அவன் அதற்கு மொத்தமாக இனிமேல் யாருமே எதையும் பற்றி பேசவும் அவர்களுக்கு தைரியம் வரக்கூடாது என்றே நினைத்தான் .

அகிலன் வந்தவுடன் அவனுடன் எப்போதும் செல்லும் பரிசோதனை மையத்திற்கு அழைத்துச் செல்ல கூறினான். “ ஏன் அண்ணா எதுவும் பிரச்சனையா”, என்று கேள்வி கேட்டதற்கு, “ நாளை வரை என்னை எதையும் கேட்காதே, ஆனால் என்னுடனே இரு”, என்றான் பரதன் .அவனது அந்த குரலில் ஏதோ சரியில்லை என்று உணர்ந்தவன், அவன் சொல்படி அங்கே சென்றான்.

முதலில் உள்ளே சென்ற பரதன் பின் அகிலனை அழைத்து அவனது இரத்த மாதிரியை தரச் சொன்னான். அகிலன் தயங்க, “ டேய் இது எனக்காகவோ, அம்மாவுக்காகவோ, உனக்காகவோ இல்லை. இது திலகாவிற்காக, தயவு செய்து எதையும் கேட்காதே”,என்று முடித்தான். அவன் என் இரத்த மாதிரியை முதலிலேயே கொடுத்துவிட்டான். அவன் நாளை மதியம் ஒரு மணி போல் வந்து முடிவைப் பெற்றுக் கொள்வதாக கூறிவிட்டு, பின் இருவரும் வீடு திரும்பினார்கள். திரும்பும் வழியில் அகிலன் மீண்டும் என்னவேன்று கேட்க மேலோட்டமாக மட்டும் பரதன் விஷயத்தை சொல்லி ,நாளை மாலை தான் அதுவரை திலகா அம்மா உடனே இருக்கட்டும்.

“அண்ணா நீங்கள் அந்த அலுவலக அறையின் வீடியோவை பள்ளி கண்காணிப்பு கருவியில் எடுக்க வேண்டியதுதானே” என்று அகிலன் கேள்வி எழுப்ப , “அது ஒன்று என்றால் அதை எப்போது செய்து முடித்திருப்பேன். ஆனால் அவர்கள் திலகாவை”, என்று அவன் பல்லை கடிக்க , “என்னோடு சேர்த்து பேசுகிறார்களா”, என்று கேட்ட, “ டேய்”, என்று அவன் வாய் வார்த்தையாக கூறியதை கூட கேட்க முடியாமல் பரதன் கத்தி விட்டான்.

“ அண்ணா அது ஒன்றும் எனக்கும் அவர்களுக்கும் புதுசு கிடையாது”, என்று அவன் சாதாரணமாக கூற, “ நோ இதுவரை எது எப்படி இருந்தாலும் நடந்திருந்தாலும், இனிமேல் அது நடக்காது. இந்த பரதன் இருக்கும்போது என்னை சார்ந்தவர்கள் மேல் ஒரு தூசி பட விட மாட்டேன்”, என்றான் உறுதியாக.

“ அண்ணா பதற்றம் வேண்டாம் பதறும் காரியம் சிதறும்”, என்றான் அகிலன் தன்மையாக . “தெரியும் பதற்றத்தில் எடுக்கும் முடிவு வெற்றியை தராது என்று, ஆனால் எனக்கு இப்போது பதற்றம் இல்லை. என்னால் ஆன ஒன்றை நான்தானே சரி செய்ய வேண்டும். பாரதி பெண் பிள்ளை நாளை அவள் வாழ்வு கேள்விக்குறியாக கூடாது”, என்றவன், அகிலனை அழைத்துக்கொண்டு அவர்களுக்கு மாற்றுத் துணியும் எடுத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார்கள்.

அப்போதுதான் திலகா எழுந்திருந்தாள். மணி 8.30ஐ தாண்டி இருந்தது , அதற்குள் சாரதா அம்மா பாரதிக்கு உணவை கொடுத்து முடித்திருந்தார்கள். இவர்களும் இருவர் வருவதற்கும் திலகா எழுவதற்கும் சரியாக இருந்தது. அவள் அவனின் அறையிலேயே தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியே வந்தால். வந்தவர்களும் தங்களை சுத்தப்படுத்திக் கொண்டு வர, சாரதாம்மா மூவருக்கும் இட்லி சாம்பார் வைத்து சாம்பார் சட்னியை ஊற்றினார். திலகா ஒத்தாசைக்கு வர அவர் மறுத்துவிட்டார். உணவு வேலை முடிந்தவுடன் அகிலன் பரதன் தோட்டத்திற்கு நடக்கப் போக பாரதியும் அவர்களுடன் சென்றாள்.

“ அம்மா ஏன் வீட்டுக்கு கிளம்பாமல் அகிலன்”, என்று அவள் தயங்க, அவருக்கு எதுவும் தெரியவில்லை என்றாலும், “ நான்தான் இன்று இங்கே தங்குங்கள் என்று கூறினேன்”, என்றார் அவளாலும் எதுவும் முடியவில்லை, அதனால் அமைதியாகவே போனால்.

அவர்கள் இருவரும் படுக்க வர சாரதா அம்மாவுடன் திலகா படுத்துக்கொண்டு, பாரதியை அழைக்க அவளும் அகிலனை விட்டு வர மறுத்துவிட்டால். அகிலன் விருந்தினர் அறையில் படுக்க செல்ல, பாரதி டிவி வேண்டும் என்று அடம் பிடிக்க, திலகா அவளை கடிந்து கொண்டு வர, “ இப்ப என்னடா மா டிவி தானே , அப்போ நாம் படுக்கையை போட்டு விடுவோம்” , என்று பரதன் பேசி அந்த பஞ்சாயத்தை முடித்து வைத்தான்.

ஒருவாறு இவர்கள் இருவர் இடையே படுத்து கொண்ட, கேள்விகளை கேட்க கேட்டுக் கொண்டே இருந்தால். அகிலனும் பரதனும் மாற்றி மாற்றி பதில் சொல்லிக்கொண்டே இருக்க, அவள் அப்படியே தூங்கிப் போனால் அகிலனும் அசதியில் தூங்கிவிட்டான்.

அவர்கள் இருவரும் தூங்கியவுடன், ஓசை எழுப்பாமல் எழுந்து மறுபடியும் தோட்டத்திற்கு சென்றான் பரதன். அவனுக்கு நாளை திலகா மேல் வீழ்ந்த இருந்த கரையை துடைக்கும் வரை தூக்கம் என்பது வரப்போவதில்லை. தன் பின்னே நிழல் ஆடுவது போல் தெரிய, இவன் யார் என்று திரும்பிப் பார்க்க அங்கே திலகா நின்று இருந்தால். ஆம் அவளுக்கும் தூக்கம் வரவில்லை. அவனின் குரல் அது அவளுக்குள் ஒளித்துக்கொண்டே இருந்தது . “ என்ன மா ஏன்”, என்று பரதனின் குரல் கரிசனத்தோடு வந்தது. அதில் அவள் அவனை நிமிர்ந்து பார்க்க, “ என்னடா இவனுக்கு இப்படி கூட பேச தெரியுமா என்று பார்க்கிறாயா”, என்றான். “ நாளை வரை பொறுத்துக் கொள் இன்று எதுவும் கேட்காதே”, என்றான் அவளை அவனே தொடர்ந்து .அவள் மௌனமாக இருக்க, “ மனதை போட்டு மேலும் குழப்பிக் கொள்ளாதே, எது நடந்தாலும் நான், எதை செய்தாலும் உனக்கும் பாரதிக்கும் நல்லதாகவே மட்டுமே இருக்கும் என்பதை மட்டும் என்றும் மறந்துவிடாதே”, என்றான் அதே கரிசனத்தோடு. அவளுக்கு எதுவும் புரியவில்லை என்றாலும் தன் வாழ்க்கை அது போகிற போக்கில் தான் இப்போது எல்லாம் செல்கிறாள். அதனால் எதுவும் சொல்லாமல் தலையை மட்டும் அசைத்து விட்டு, “ ஊதக்காத்து உடம்புக்கு ஆகாது உள்ளே வந்து படுங்கள்”, என்றால் .அவன் அசையாமல் இருக்க அவளும் அசையாமல் நின்றால். அதில் மறுப்பு எதுவும் கூறாமல் பரதன் உள்ளே வந்து படுத்தான். படுக்கப் போகும் முன், “ நாளை நீயும் பாரதியும் பள்ளி வர வேண்டாம்”, என்று மட்டும் கூறிவிட்டு படுத்து விட்டான். இவள் கதவையும் லைட்டையும் அமத்தி விட்டு இவளும் சாரதாம்மாவுடன் சென்று படுத்துவிட்டால். இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என்று நினைத்துக் கொண்டு, எப்போது தூங்கினாலோ, ஆனால் சரியாக ஐந்தரை மணிக்கு எழுந்து விட்டால். முதலில் இருக்கும் இடம் என்ன என்று அவள் முழிக்க, பின்பு அனைத்தும் நினைவு வர பக்கத்தில் பார்த்தால் சாரதா அம்மா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.

சரி என்று தன்னை தானே சுத்தப்படுத்திக் கொண்டு, அவள் வெளியே வந்து பார்க்க பார்த்த காட்சியில் நின்று விட்டாள். ஆமாம் பாரதி பரதனின் நெஞ்சில் தலையையும் கால்லை அகிலனின் நெஞ்சிலும் வைத்து படுத்து இருந்தால் .இருவரும் ஒன்று சொல்வது போல் அவளின் மேல் கையை ஆதரவாக போட்டு இருந்தனர்.

எவ்வளவு நேரம் திலகா அப்படியே நின்று இருந்தாலோ பரதனிடம் அசைவு தெரியவும் அவள் அந்த இடத்தை விட்டு அகன்றால் .முன் வாசல் சென்று அதை பெருக்கி தண்ணீர் தெளித்து கோலமிடுவதற்குள் பரதன் அகிலன் இருவரும் காலை உடற்பயிற்சிக்கு செல்ல தயாராக வந்தனர். அவளை கண்ட பரதனுக்கு அது புதுவித அனுபவமாகவே இருந்தது. மனதில் கலக்கமிருந்த இடத்தில் இனிமை வந்து நிறைந்தது.

பரதனும் அகிலனும் காலை உடற்பயிற்சியை முடித்துக் கொண்டு வர சாரதா அம்மா எழுந்திருந்தார். திலகா டி போட தண்ணீரை கொதிக்க வைக்க, “ வேண்டாம் , காலையிலேயே சத்து மாவு பானம் தான், இல்லையென்றால் கத்துவான்”, என்று கூறிவிட்டு ,அவர் பக்குவம் கூற இவள் தயாரித்து வைத்தால். மனதிற்குள் பாரதி இதை எப்படி குடிப்பால் என்று தான் இருந்தது. காலையில் பால் குடி என்றாலே சண்டைக்கு வருவால் என்ற தன் மனதிற்குள் புலம்பிக்கொண்டே இருக்க, “ பாரதி எழுந்து வந்தவள், நேராக திலகாவிடம் அம்மா டி”, என்றால், திலகாவோ, “ போய் பல்லை தேய்த்துவா என்று பிரஷ்ஷை வைத்து கொண்டே கூற, “ நோ என்ன இது புது பழக்கம் எனக்கு வேண்டாம்”, என்று அவள் அடம் பிடிக்க ஆரம்பிப்பதற்கும் அவர்கள் இருவரும் வந்து அமர்வதற்கும் சரியாக இருந்தது.

“ அகிலா நம் பாரதி நல்ல பிள்ளை தானே”, என்ற பரதன் கேட்கா, “ ஆமா அண்ணா அடமே பிடிக்கத் தெரியாத நல்ல பிள்ளை”, என்றான் அகிலன் சிரித்துக் கொண்டே, அதை பார்த்துக்கொண்டிருந்த பாரதியோ, “ ஆமாம் நான் ரொம்ப நல்ல பிள்ளை, அம்மா தான் கெட்ட பிள்ளை”, என்று கூறி அவள் கையில் இருந்த பிரஷ்ஷை வாங்கிக்கொண்டு பல் துலக்க சென்று விட்டால்.

திலகா ஆளுக்கு ஒரு டம்ளர் சத்து பானத்தை தர, “ அம்மா டி எங்கே”, என்று அகிலன் கேட்க, “ டி எல்லாம் கிடையாது”, என்று பரதன் கூறினான். “ டேய் உனக்காவது இனிப்போடு, எனக்கு அதுவும் கிடையாது”, என்று கோணலாக சென்று அகிலன் முகத்தை பார்த்து சாரதாம்மா கூற, “ என்ன பேச்சு குடிக்கும் போது”, என்று அதை ஒரு மடக்கில் குடித்துவிட்டு பரதன் கேட்க, “ இதோ ஒன்றும் இல்லை”, என்ற அகிலனும் சாரதா அம்மாவும் ஒன்றாக அதை குடித்து வைத்தனர்.

அதற்குள் பாரதி வந்துவிட , “டி தாமா”, என்று திலகாவிடம் வர ,அவள் ஒன்றும் கூறாமல் அவளுக்கு ஒரு பானத்தை கொடுக்க அது டி என்று நினைத்து ஒரு வாய் குடித்த பாரதி, “ சீ”, என்று துப்பினால் . “பாரதி”, என்று திலகா அடிக்க வர , “சும்மா கை நீட்ட கூடாது, அது என்னவேன்று, நீ சொல்லிக் கொடுத்திருந்தால் அவள் அப்படி செய்திருக்க மாட்டாள்”, என்று பரதன் பாரதியை தன் பக்கம் இழுத்துக் கொண்டான். “ நீ பிரிண்ட் மாதிரி ஸ்ட்ராங்கா டால வளரும்னா இதத்தான் குடிக்கணும்”, என்று அவளை மடியமறுத்தி கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க கொடுத்தான் .பாரதி அந்த புது பரிமாணத்தில் அதை மறுப்பு ஏதும் கூறாமல் குடித்தால். திலகாவிற்கோ இது எங்க போய் முடியப் போகிறதோ என்று இருந்தது,

ஒருவாறு அகிலனும் பரதனும் சாப்பிட்டு முடிப்பதற்கும் பரதனின் கைபேசி சிணுங்குவதற்கும் சரியாக இருந்தது .அவன் அது பள்ளி முதல்வர் என்று தெரிய, “ குட்மார்னிங் சார்”, என்றவன் , அங்கு என்ன கூற பட்டதோ, “ சார் மாலை என்று தானே கூறினீர்கள்”, என்று அவன் படபடக்க, “ சரி வருகிறோம்”, என்று கூறி வைத்து விட்டான்.

தொடரும்
 

Matharasi

Moderator
அத்தியாயம் 22

அவனிடம் இதுவரை இருந்த இளகுத் தன்மை இழந்து அவன் முகம் இறுகி இருந்தது. “ என்ன அண்ணா”, என்று அகிலன் கேட்க , “கிளம்புங்கள் மூவரும்”, என்று கூறி அவன் அறைக்குள் புகுந்து கொண்டான் .நடக்கப் போவது அவன் பேசப்போவது அனைத்தையும் ஒருமுறை சரிபார்த்துக் கொண்டு கிளம்பி வெளியே வந்தான். அகிலன், “ நானுமா”, என்று தயங்கி நிற்க, “ நீயும்தான்”, என்று கூறி சாமி அறைக்க சென்றான். கண்ணை மூடி ஒரு ஐந்து நிமிடம் நின்றவன் பின் தன் தகப்பன் படத்தில் முன்னிலையில் நின்றான். சாரதாம்மாவிடம் வந்து நின்றவன், “ பரதா எதையும் யோசித்து செய்”, என்றவர் அகிலனை பார்க்க அவன் அருகில் வந்தான். அம்மா ஏன் இந்த கலக்கம், “ நான் அண்ணனோடு இருக்கிறேன்”, என்று அவன் கூற , “அது மட்டும் போதாது இருவரும் எந்த சூழ்நிலையிலும் ஒருவருக்கு ஒருவர் துணையாக நிற்க வேண்டும், மேலும் திலகா பாரதி உங்கள் உடமை”, என்று கூறி முடித்தார்.

மூவரும் அவரிடம் விடைபெற்று பள்ளி வளாகத்திற்குள் உள்ள அந்த பெரிய கான்ஃபரன்ஸ் ஹாளுக்குள் நுழைந்தனர். அங்கே ஏற்கனவே ஒன்று கூடி இருந்த அனைவரும் இவர்களை கண்டதும் தங்களுக்குள் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். பள்ளி முதல்வர் அறைக்குள் நுழைய அங்கே நிசப்தம் நிலவியது. “ குட் மார்னிங் டீச்சர்ஸ்”, என்று கூறி அனைவரும் திருப்பி அவருக்கு, “ குட் மார்னிங் சார்”, என்றனர், “ யூ கேன் பி ஆல் சீட்டட்”, என்று கூறிய உடன் அனைவரும் அமர்ந்தனர் .இன்று ஒரு முக்கிய நம்பர் நம்மை சந்திக்க உள்ளார்”, என்று அவர் சொன்னவுடன், கதவை திறந்து கொண்டு ஒரு 70 வயது மிக்க நபர், ஆனால் பார்த்தால் அப்படி தெரியவில்லை. பரதன் மற்றும் அகிலனின் கலந்த கலவையாக , நேர்கொண்ட பார்வையும், நிமிர்ந்த நடையும் தன் பார்வையாலே தன்னை சுற்றி என்ன இருக்கிறது, யார் இருக்கிறார்கள் அவர்கள் நினைப்பு என்ன அனைத்தையும் ஒரு நொடியில் கணித்து சொல்லும் விதமாக இருந்தது .

அவர் உள்ளே நுழைந்த உடன் பரதன் கண்கள் அகல விரிந்து, பின் முதல்வரை கண்டு விட்டு ஒன்றும் இல்லாதது போல் இருந்து கொண்டான். ஆனால் அவனின் இறுக்கம் மெல்ல தளர்ந்தது. அனைவரும் எழுந்து நின்று புதிதாக வந்தவருக்கு, “ குட் மார்னிங் சார்”, என்றனர், “ அவரும் குட் மார்னிங், ப்ளீஸ் டேக் யுவர் சீட்”, என்று கூறியவரின் குரல் அவ்வளவு கம்பீரமாக ஒலித்தது. அனைவரும் அமரவும் முதல்வர் இவர் தான் நம் பள்ளி தாளாளர் பரத்வாஜ்”, என்று அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார்.

“ என்னடா இவ்வளவு நாள் வராமல் இருந்தவன் இன்று ஏன் வந்து இருக்கிறான் என்று பார்க்கிறீர்களா”, என்றார் அனைவரையும் நோக்கி. அந்த இடத்தில் அப்படி ஒரு நிசப்த அமைதி. இதுவரை தாளாளர் என்பது அவர்களுக்கு வருடம் ஒருமுறை கான்ஃபரன்ஸ் ஹாளில் ஒலிக்கும் ஒரு குரல் மட்டுமே. இங்கே பணிபுரியும் முதிர்ந்த நபர்கள் கூட அவரை பார்த்தது இல்லை. அப்படி இருக்கும்போது அவரே நேராக வந்து இருக்கிறார் என்றால் இன்று ஏதோ பெரிதாக நடக்கப்போகிறது என்பதை உணர்ந்தனர். அதுவும் நேற்று பள்ளியில் கசிந்த விஷயத்தில் பரதனும் திலகாவும் அடிபடுவது உறுதி என்று பரதனின் கையால் அடி வாங்கியவன் சந்தோஷம் அடைந்தார். அனைவரும் மௌனமாக இருக்க என்ன பதிலே காணோம் சரி நானே சொல்லிவிடுகிறேன் என்றவர், “ உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் கூட மறக்க முடியாத நாள்தான். ஏனென்றால் என்னிடம் உங்களுக்கு பகிர்வதற்கு இரண்டு நல்ல விஷயமும் ஒரு கெட்ட விஷயமும் இருக்கிறது .முதலில் உங்களுக்கு எது வேண்டும்”, என்று கேட்டார். நடப்பது அத்தனையும் ஒருவித புன்முறுவளோடு பார்த்துக் கொண்டிருந்தான் பரதன். அவனுக்கு இருக்கும் சிறு கலக்கங்கள் கூட மட்டு பட்டு இருந்தது .அவனுக்கு தெரியும் அவர் எதற்கு வந்திருக்கிறார் என்று. ஆனால் அவனுக்கு அது மட்டும் போதாது. பார்ப்போம் அவர் என்ன செய்கிறார் என்று பிறகு நாம் பார்த்துக் கொள்வோம் என்று முடிவோடு அமர்ந்திருந்தான்.

“ அகிலனோ அண்ணா என்ன நடக்கிறது இங்கே”, என்று பரதனின் காதுகளில் கடிக்க, “ மிஸ்டர் அகிலன் மிஸ்டர் பரதனுக்கு தெரிந்திருந்தால் எப்போதோ உங்களிடம் கூறியிருப்பார். அவரும் இங்கு பார்வையாளர் மட்டுமே”, என்று அவர் தாளாளர் கூற, அகிலனுக்கும் அதிர்ச்சி தன் பெயரை அல்லவா அவர் முழுசாக கூறுகிறார். இவர் யார் என்று தெரியவில்லையே என்று அவன் யோசிக்க, பரதனின் பார்வை லேசாக சுருங்கியது தவிர வேறு மாற்றம் இல்லை.

“ ஓகே நான் உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை, முதலில் நல்ல விஷயம் எனக்கு வயது ரொம்ப ஆகிவிட்டது. ஆதலால் எனது பொறுப்பை நல்ல துடிப்பான வாலிபர்களுக்கு விட்டுத்தர எண்ணுகிறேன். அதுவும் துடிப்பான வேகத்தோடு விவேகமும் சேர்ந்து இருக்க வேண்டும் அல்லவா அதுவும் ,அதை இப்போதே அதை செய்யப் போகிறேன். உங்களின் புது தாலளர் என்று சொல்வதை விட தாளாளர்கள் என்று தான் சொல்ல வேண்டும்”, என்றவர், “ உங்களுக்கு ஆவலாக இருக்கிறதா”, என்று அவர்களைப் பார்த்து அவர் கேட்டார்.

எல்லோரும் ஒரு சேர மண்டையை அசைத்தனர். “ என்னடா இதுக்கே இப்படி என்றால் யார் என்று தெரிந்தால் மொத்தமாக சிலையாகி போய்விடுவீர்கள்”, என்று சொன்னவர் , “இப்போது அந்த புது தாளாளர்களை அறிமுகப்படுத்த என் ஆருயிர் மகனின் பெயரை தாங்கிய என் கொள்ளுப்பேத்தி மிஸ் பாரதி பரதன் பாரதிராஜா பரத்வாஜை இங்கே அழைக்கிறேன்”, என்றார்.

திலகாவோ உச்சகட்ட அதிர்ச்சிக்கு செல்ல, அகிலனா என்னடா இது என்று பரதனை பார்க்க ,பரதனோ எந்த ஒரு அசையும் இல்லாமல் இருந்தான். எல்லாரும் வாசலையே பார்க்க, அவர் மறுபடியும், “ மிஸ் பாரதி பரதன் பாரதிராஜா பரத்வாஜ் மேடைக்கு வாடா பட்டுக்குட்டி”, என்றார்.

அதில் பரதன் தனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அமர்ந்திருந்த பாரதியிடம், “ உன்னை மேடைக்கு கூப்பிடுகிறார்கள் போ”, என்றான். அவள் நிமிர்ந்து தன் அன்னையைப் பார்க்க, “ நீ போ அம்மா ஒன்னும் சொல்ல மாட்டாள்”, என்றான் பரதன். அதில் மெதுவாக அவள் மேடையை நோக்கி செல்ல, அதற்குள் அங்கே உள்ளே வந்தார் சாரதாம்மா தன் பாதுகாவலரோடு. வந்தவர் மிரண்டு இருந்த பாரதியின் ஒரு கையை ஆதரவாக பற்றிக் கொண்டார். அதில் கொஞ்சம் நார்மலான குழந்தை பயப்படாமல் மேடை ஏறியது.

பார்த்த அனைவருக்கும் என்ன பாரதி இவரின் பேத்தியா என்று தங்களுக்கள்ளே பேச ஆரம்பிக்க, “இன்னும் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தால் ,உங்களுக்கு நல்லது”, என்றார் மிகவும் தன்மையாக . “ வா ட பட்டு குட்டி”, என்று அவர் அழைக்க ,அவள் அசையாமல் இருக்கவும், சாரதா அம்மா நகர்ந்து அவளையும் அவரிடம் நகர்த்தினார் .

அங்கே கான்ஃபரன்ஸ் ஹாளில் சுவற்றில் இருக்கும் ப்ரொஜெக்டரில் பெரிய திரை மூடி மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அவர் சிறிய ரிமோட்டை அவளிடம் கொடுத்து, “ இதை அழுத்து”, என்று கூறினார். அவளும் சாவி கொடுத்த பொம்மை போல் செய்தால். பட்டனை அழுத்தியவுடன் அந்த திரை அழகாக இரு பக்கம் பிரிந்து விலக, அங்கே பரதனும் அகிலனும் தோள் மீது கை போட்டு நின்று கொண்டிருப்பது போல் அழகான புகைப்படம். அதனின் கீழ் மிகவும் அழகாக வீ கார்ட்லி இன்வைட் அவர் நியூ கரஸ்பாண்டன்ட்ஸ் மிஸ்டர் பரதன் பாரதிராஜா பரத்வாஜ் அண்ட் மிஸ்டர் அகிலன் பாரதிராஜா பரத்வாஜ் என்று இருந்தது.

அகிலனுக்கு வந்தவர் நிச்சயம் பரதனுக்கு ஏதோ ஒரு உறவு என்பது அவரின் சாயலில் சொல்லியது. ஆனால் தன்னை அவர் ஏற்றுக் கொண்டதை அவனால் நம்ப முடியவில்லை. அவன் அசையாமல் நிற்கவும்.

“ மிஸ்டர் பரதன் பாரதிராஜா பரத்வாஜ் அண்ட் மிஸ்டர் அகிலன் பாரதிராஜா பரத்வாஜை உங்களின் பலத்த கைதட்டுதலோடு மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறேன்”, என்றார் முதல்வர். சிலர் உண்மையான சந்தோஷத்தோடு கைதட்ட, சிலர் கேள்வியோடும் மற்றும் சில குழப்பத்தோடும் ,ஒருவன் மட்டுமே செய்வது அறியாது அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவர் குனிந்து, “ போய் உன் பிரண்டையும் , உன் அகிமாவையும் மேடைக்கு அழைத்து வா”, என்று கூற பாரதி சிட்டாக பறந்து வந்து ,அவர்களை தன் இரு கரங்களில் ஆளுக்கு ஒன்றாக பற்றிக் கொண்டு மேடைக்கு அழைத்து வந்தால். திலகாவோ அங்கே தனியே நிற்க, எங்கே அவள் நிகழ் காலத்தில் இருந்தால் அல்லவா அதை உணர்வதற்கு. இருவரும் வந்து சாரதா அம்மாவின் இருபுறம் நின்றனர்.

“ இப்போது இரண்டாவது நல்ல விஷயம் என்னது என்று சொல்லவா”, என்றவர் , “அது உங்களின் புது தாளாளர் மிஸ்டர் பரதன் பாரதிராஜா பரத்வாஜின் மனைவி திருமதி திலகாபரதனை மேடைக்கு அழைக்கிறேன், ஏற்கனவே ஏற்பட்டிருந்த சிறு மன கசப்பால் கொழுந்தனின் பாதுகாப்பில் இவ்வளவு நாள் தனியே வசித்து, பெண்களால் தனியே வாழ முடியும் என காட்டிய, என் வீட்டு மருமகளே மேலே வா”, என்று முடித்தார். அது எதுவும் அவள் சிந்தையில் படவில்லை. அதை உணர்ந்த பரதனோ, “ பட்டுமா வா போய் உன் அம்மாவை அழைத்து வருவோம், அவர்கள் மட்டும் தனியே இருக்கிறார்கள் பார்”, என்று பாரதியை தன் கைகளில் தூக்கிக்கொண்டு, மறுபடியும் கீழே இறங்கி வந்து அவள் கைகளில் பற்றி மேலே அழைத்து வந்தான். இழுத்து இழுவுக்கு எல்லாம் அவளும் வந்தால். என்ன பேசுவது எது செய்வது எதுவும் அறியாமல் இருக்க அவள் கண்களில் கண்ணீரோ இப்பவே அப்பவே என்று தயாராக இருந்தது .

“என்ன போதுமா? இல்லை வேண்டுமா இவர்களைப் பற்றி ஏதேனும்”, என்று தாளாளர் கேட்க , பள்ளியின் மூத்த பணியாளர் எழுந்து, “ எங்கள் சந்தேகங்கள் எல்லாம் தீர்ந்தது, மனதும் நிறைந்து போனது. புது தாளாளர்களை அன்போடு வரவேற்கிறோம்”, என்று அவர் சொன்னவுடன் பலத்த கரகோஷம்.

இப்போது கெட்ட விஷயம், “ அது இந்த கூட்டத்தில் ஒரு கருப்பு ஆடு இருக்கிறது, அது நம் மாணவர்களின் வாழ்க்கையை பாழாக்கிறது”, என்று அவர் கூறிய உடன் அங்கே ஒரே சலசலப்பு. “ சார் யார் என்று சொன்னீர்கள் என்றால் நாங்களே அவனை”, என்று அதே மூத்த பணியாளர் கூற , “அதை புதுதாளர்கள் பார்த்துக் கொள்வார்கள், உங்களுக்கு மதிய உணவு இல்லை விருந்து ஏற்பாடு ஆகியுள்ளது. அதை சாப்பிட்டு பேரன் பேத்தி கொள்ளு பேத்தியை ஆசீர்வதிக்குமாறு”, கேட்டுக் கொள்கிறேன் என்று முடித்தார் .அவர் கூறியவுடன் அந்த ஆசிரியர் தப்பிக்க பார்க்க அங்கு இருந்த பாதுகாவலர்களால் அவன் சிறை எடுக்கப்பட்டான்.

தொடரும்
 
Top