இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

மீண்டும் ஓரு விடியல் கதை திரி

Matharasi

Moderator
அத்தியாயம் 11

இவ்வாறு நாட்கள் செல்லும்போது வெள்ளிக்கிழமை பரதனுக்கு மதியம் இரண்டாம் நேரம் 11-ஆம் வகுப்பு ஆ பிரிவு மாணவ மாணவிகளுக்கு உடற்கல்வி . மாணவர்களை அவர்களுக்கு பிடித்தமான விளையாட்டு விளையாடும்மாறு பணிந்து விட்டு இவன் கோ கோ மாணவர்களுக்கு பயிற்சி அளித்து கொண்டிருந்தான். அப்போது அந்த குழுவில் துரத்துவதற்காக எழுந்த மாணவன் அபாரமாக ஓடி, எதிர்த்து களம் இறங்கிய யாருக்கும் வாய்ப்பளிக்காதவாரு தாவி பிடித்தான்.

அப்போது அங்கு வந்த பாரதி, “சூப்பர் ஃப்ரெண்ட், உங்க ஸ்டுடென்ட் செமையா விளையாடுகிறார். சூப்பர் மேன் மாதிரி”, என்று அவள் கைதட்டி ஆர்ப்பரிக்க அப்போதுதான் அந்த மாணவனை கவனித்தான். அவன் முகத்தில் அப்படி ஒரு புத்துணர்வு ஓடிய கலைப்பு அவன் முகத்தில் இல்லை. அவனது குழுவில் இருந்த மாணவர்கள் அவனை கொண்டாட அவனது முகத்தில் சந்தோஷம் தாண்டவம் ஆடியது.

அவனையே பார்த்துக் கொண்டிருந்த பரதனுக்கு ஏனோ மனம் நெருடியது. அதை மேலும் கூட்டும் விதமாக பாரதி, “ அந்த அண்ணா சந்தோஷமாய் இருப்பதை இப்பதான் பார்க்கிறேன்”, என்றவலை, “ ஏண்டா மா”, என்றான். “ அது தெரியாது எப்போதும் , ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்து இருக்கும், நானும் நிறைய தடவை பேச முயற்சிப்பேன் .ஆனா அண்ணன் பேசாது. இப்போ பாருங்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு” , என்றால் கபடமற்று.

அதில் சிறியதாக நெருடிய மனம் பெரிதாக நெருட, “ நீ வகுப்புக்குப் போமா, நான் அப்புறம வந்து உன்ன பார்க்கிறேன்” , என்று கூறிவிட்டு பரதன் அந்த மாணவனை நோக்கிச் சென்றான். இவன் அவனை நெருங்குவதற்கும் அவனை அவர்கள் இறக்கி விடுவதற்கும் சரியாக இருந்தது. “ யுவர் சேஸ் வாஸ் குட்”, என்று கூறி அவனிடம் தன் கையை குலுக்க நீட்டினான் பரதன்.

அவன் தன் கையை நீட்ட அதைப்பற்றிய பரதனுக்கு அதில் சிறு நடுக்கம் இருப்பது போல் உணர்ந்தான். அதைக் குறித்துக் கொண்டவன் அவனின் கையை பற்றி கொண்டு அவனிடம் தன் பேச்சை தொடங்கினான். “ இதற்கு முன் பயிற்சி பெற்று இருக்கிறாயா? உன் பெயர் என்ன” , என்று அவனிடம் கேள்வி எழுப்பிக் கொண்டே அவனது நாடித்துடிப்பை சரிபார்த்தான் .ஆனால் அது சரியாக இருப்பது போல் தோன்றினாலும் அந்த இருதய நிபுணருக்கு சந்தேகம் வலுவடைந்ததே தவிர குறையவில்லை.

“ என் பெயர் அருண், பயிற்சி எல்லாம் இல்லை” , என்றான் சற்று நெலிந்து கொண்டே, “ ரொம்ப பிரமாதமா விளையாடுற, உனக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது ,அதான் உனக்கு தொடர்ந்து பயிற்சி கொடுக்கணும்”, என்றான் அவனை தன்னிலைக்கு கொண்டு வருவது போல் பேச்சு கொடுத்தான். “ ரொம்பவும் வேகமாக செயல்பட்டாய் தண்ணீர் குடி”, என்றான் பரதன். “இல்லை இப்போது வேண்டாம்”, என்று அவன் மறுக்க , “டே ஏற்கனவே 10 நிமிடம் ஆகிவிட்டது அதனால் குடிக்கலாம்”, என்றான் பரதன் தன்மையாக .

“இல்ல சார் எனக்கு வேண்டாம்”, என்றான் அவன் திட்டவட்டமாக. அவனது முகத்தில் அந்த நிமிடத்தில் ஒரு பரபரப்பு இருந்தது. பின் தன் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டவன், “ சார் நான் போகணும்”, என்றவாரு பரதனிடம் இருந்து தன் கையை விடுவித்துக் கொண்டு ஓடி விட்டான். செல்லும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவனின் சிந்தனையை கலைத்தது அகிலனின் தொலைபேசி அழைப்பு. “ என்ன அகில்”, என்றான் அழைப்பை உயிர்பித்து.

“ அண்ணா உடனே நம் வீட்டுக்கு பின்னாடி இருக்கும் தோட்டத்திற்கு வாருங்கள்”, என்றான் சிறு பதட்டத்தோடு. அவனின் பதற்றம் உணர்ந்து இவன் அங்கே இருந்த மற்றொரு உடற்பயிற்சி ஆசிரியரிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு இவன் தன் வீடு நோக்கி விரைந்தான். அவன் அன்னை ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்க இவன் ஓசை எழுப்பாமல் வீட்டின் பின் சென்றான். அங்கே அகில் எதையோ குச்சியை வைத்து ஒதுக்கி கொண்டிருக்க இவன் அவன் அருகில் கவனித்தான். அவன் தோண்டிக் கொண்டிருந்த இடத்தில் ஊசி நீடில் என கிடந்தது.

“ எதையும் தொட்டாய ஆகில்”, என்றான் பரதன் அதை பார்வையிட்டுக் கொண்டே. “இல்லை அண்ணா. நான் இந்த பக்கம் வந்தேன். அம்மா சற்று நேரத்தில் எழுந்து விடுவார்கள் அல்லவா .அதுவரை தோட்டத்தை பார்த்துக் கொண்டே இருந்தேன். நடக்கும்போது இந்த இடத்தில் மட்டும் மண்ணில் கால் புதைந்துச்சு .அதனால தோண்டினேன். ஊசியா கிடந்தது .அதான் உங்களை கூப்பிட்டேன்”, என்றான் அகிலன் நடந்தவற்றை கூறியவாறு.

“இரு அகில்”, என்று சொன்னவன், உள்ளே சென்று தன் கையுரையை மற்றும் ஒரு கவரை எடுத்துக் கொண்டு வந்தான். கையுறையை அணிந்து கொண்டு, அந்த இடத்தில் கிடந்த ஊசி மற்றும் நீடில்லை கவரில் சேகரித்தான். “அகில் இதை நம்பிக்கையான ஆளிடம் கொடுத்து பரிசோதனை செய்ய வேண்டும்”, என்றான் பரதன். “ என்ன சோதனை என்று சொன்னீங்கன்னா நானே பார்த்துக் கொள்வேன்”, என்றான் அகிலன் ஆதரவாக .

அவன் எழுதிக் கொடுத்ததையும் சேகரித்ததையும் தன் ஆட்டோவின் லாக்கரில் இவன் வைத்து விட்டு வருவதற்கும் சாரதாம்மா எழுந்து வருவதற்கும் சரியாக இருந்தது. “ என்னடா அகிலா இப்போதான் வருகிறாயா”, என்றார் சாரதாம்மா அகிலனை பார்த்து கேள்வியாக. அவன் ஏதோ கூற வர, “ இல்லை அம்மா அப்போதே வந்து விட்டான் போல, நீங்க தூங்குனீங்க அதனால தோட்டத்துல இருந்தான் எனக்கு ஓய்வு நேரம் அதான் நானும்” ,என்று கூறினான் பரதன் நடந்தவற்றை மறைத்து கோர்வையாக அவர் நம்பும் வண்ணமாக கூறி முடித்தான்.

இவர் அதில் அகிலனை பார்க்க அவனும் அவரை திசை திருப்பும் எண்ணம் கொண்டு, “ அம்மா ஒரே தலைவலி, தொண்டை வலியுமாக இருக்குது ஒரு டீ கிடைக்குமா”, என்று அவன் முகத்தை சுருக்கி கேட்க, “ லூசாடா நீ வந்த உடனே எழுப்ப வேண்டியதுதானே”, என்ற அவனை கடித்துக்கொண்டு, “ பேருக்குத்தான் அண்ணன் டாக்டர் ,ஆனால் நமக்கு ஒன்னுன வெளியே ஒரு மருத்துவரை தான் தேடணும்”, என்று பரதனுக்கு ஒரு கொட்டு வைத்து சமையலறை நோக்கி சென்றார்.

“ ஏன்டா இப்படி”, என்று பரதன் அகிலனை பாவமாக பார்க்க, “ விடுங்க அண்ணா அம்மா சொல்லுவதும் ஒருவிதத்தில் உண்மை தானே. நான் பழையதை எதையும் கேட்கல ஆனால் நடந்தது நடந்து போச்சு, அதை நினைக்காமல் நீங்க மாறுங்க அம்மாவுக்காகவும் எனக்காகவும் .அக்கா பழையதை நினைக்கிறா தானே கோபப்பட்டீங்க .அப்போ நீங்க செய்கிறது சரியா”, என்று கேட்ட அகிலனை பரதன் நிமிர்ந்து பார்க்க, “ நான் உங்களை விட சின்ன பையன் தான் ஆனா நினைத்தது கிடைக்காமல் வாழ பழக்கப்பட்டவன். ஆனா நினைத்தது கிடைக்கலைன்னா அந்த வலி எப்படி இருக்கும்னு எனக்கு தெரியும். இதைவிட கொடுமை ஆசைப்பட்டதை கஷ்டப்பட்டு அடைந்து யாரோ செய்த தவறுக்காக அதை தொடர முடியாமல் போகிறது”, என்று கூறிய அகிலனை பரதனின் மௌனம் மேலும் பேசத் தூண்டியது.

அம்மா வெளியே சொல்லலைனாலும் அவங்க மனசுல அது ஒரு குறை தான் என்றான். “தெரியும் என்னால சில விஷயங்களை ஏத்துக்க முடியல”, என்றான் சிறு தடுமாற்றத்தோடு பரதன். “ஆனால் என்னால் கொஞ்சம் புரிஞ்சுக்க முடியுது ,நீங்கள் ஏதோ ஒரு மாற்றத்திற்காக தானே வந்தீங்க ,அப்போ அந்த மாற்றத்துக்கு நீங்கதானே ஆரம்பிக்கணும்”, என்று அகிலன் கூறிக் கொண்டே இருக்கும்போதே சூடான சுக்குமல்லி காப்பியோடு வந்து நின்றார் சாரதா அம்மா .அவர்களின் பேச்சு நின்றது. “இந்தா இதை குடி. கொஞ்ச நேரம் கண்மூடி தூங்கினால் என்ன”, என்று அவனுக்கு அருந்த கொடுத்துவிட்டு பரதனையை நோக்கி சென்றவர் , “அவனுக்கு என்னவென்று தான் பாரேன்”, என்றார் வாஞ்சையாக.

“ ஐயோ அம்மா நான் என்ன சின்ன குழந்தையா. லேசான தலைவலி தான் ஒன்னும் இல்ல. நீங்க ஏன் அண்ணாவை சத்தம் போடுறீங்க .அவங்க மாறுவாங்க அப்படித்தானே அண்ணா”, என்றான் அகிலன் சாரதாமாவிடம் ஆரம்பித்து பரதனிடம் முடித்தான். அவனின் அண்ணா என்று அழைப்பில் தான் வேறு சிந்தனையில் இருந்த பரதன் தன்னிலை வந்தவன் , “ஆமாம் அம்மா”, என்றான் பொதுப்படையாக.

காபியை அருந்தியா அகிலனோ, “ஹா, அம்மா இது என்ன இவ்வளவு காட்டம்”, என்று அலறினான். “டேய் இது ஒரு காட்டமா, போற இடத்துல எல்லாம் மாத்தி தண்ணீர் குடிச்ச இப்படித்தான் ஜலதோஷம் பிடிக்க தலைவலி ஆரம்பம். அதுக்கு இத குடிச்சா தான் நல்லா இருக்கும்”, என்று அவன் தலையையும் முதுகையும் நீவினார். அகிலனின் கண்கள் கரிக்க , “எனக்கு இந்த மாதிரி எடுத்துச் சொல்வதற்கும் செய்வதற்கும் யாரும் இல்லை. அக்கா வரும் வரை முடியாமல் படுத்தா கூட நானா எழுந்து நடமாடுரவர பட்டினி தான். பாப்பா வந்ததுக்கு அப்புறம்தான். அதுவும் முதன்முதலாய் எங்களை பார்க்கிறவங்க தப்பா தான் பேசுவாங்க. அதுவே அக்காவ ஒதுங்க வச்சது. எல்லார்கிட்ட இருந்தும் ஆனா. இப்போ நீங்க வந்ததுக்கு அப்புறம் தான் கொஞ்சம் கொஞ்சம் வெளியே வராங்க”, என்றான் நாவு தளும்ப.

“டேய் மறுபடியும் என்ன சொல்ல வைக்காத, நீ என்னோட மகன், திரும்பவும் உன்னோட பழைய வாழ்க்கையை பத்தி பேசுனா”, என்றார் சாரதா அம்மா கோபமாக. “ அகிலா அப்போ அண்ணா அம்மா என்று மனதார கூறவில்லையா நீ”, என்றவன், “ இனிமே இப்படி இன்னும் ஒருக்க பேசு யாரும் இல்லைனு, அது இதுன்னு, சட்டப்படி நிரூபிக்கணும்னா சொல்லு ஒரு டேஸ்ட் போதும் உனக்கும் எனக்கும் என்னென்ன அது சொல்லும் .ஆனா அது அவசியம்னு எனக்கு தோணல. இருக்கட்டும் நான் வந்த வேளை முடியட்டும் பார்ப்போம்”, என்று பரதன் கூறியவன், “ அம்மா நீங்க எதுக்கு கோபப்படுறீங்க. அவன் நம்மகிட்ட சொல்லாம யாரிடம் சொல்லுவான். நம்ம உள்ளுணர்வு சொன்னா மட்டும் அவன் பட்ட கஷ்டம் இல்லை என்று ஆயிருமா? அவன் மனசு ஆறாது .பார்ப்போம் அவனே சட்ட ரீதியாக உரிமைக் கொண்டாட கால அவகாசம் வேணும்”, என்றான் பாரதன் அவரை தேற்றுதலாக.

“ அண்ணா நான் எனக்கு அப்படி இல்லை”, என்று அகிலன் தடுமாற, “ டேய் எதையும் பேசி விடாதே பார்ப்போம்”, என்று அவர் அகிலனின் வாயை அடைத்தார் சாரதா அம்மா.

தொடரும்
 
Last edited:

Matharasi

Moderator
அத்தியாயம் 12

அகிலன் அவர்களிடமிருந்து விடைபெற்று கிளம்ப, பரதன் தான் தன் கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும் என்று முடிவு எடுத்துக் கொண்டான். அந்த வார இறுதி, விடுதியில் தங்கி இருக்கும் மாணவர்கள் பெற்றோர்களை சந்திக்கும் நாள். ஆனால் அன்று தான் அவன் அகிலன் வீடு சென்று குழந்தையை பார்க்கவும் திட்டமிட்டு இருந்தான். ஆனால் அவனால் செல்ல முடியாது. ஏனென்றால் அவனுக்கு அருணை கண்காணிக்கும் பொறுப்பும் அவனின் பெற்றோர்கள் யார் என்றும் அவனுக்கு தெரிய வேண்டும்.

ஆதலால் ஞாயிறு அன்று அகிலனை காலையிலேயே வந்து அம்மாவை அழைத்துச் செல்லுமாறு பணிந்துவிட்டு அவன் விடுதியை நோக்கி சென்று விட்டான். முன் போல் ரொம்பவும் ஒதுங்காமல் தேவைக்கு ஏற்ப பேச்சாக திலகா சாரதா அம்மாவுடன் ஒன்றினாள். குழந்தை பாரதியோ சாரதாம்மாவின் மனதை முழுவதும் அள்ளிவிட்டால். ஆம் இவளும் இவர்கள் இரண்டு பேரை மட்டுமே பார்த்து வளர்ந்தவள் அல்லவா. முதல் ஐந்து வருடம் பாரதியை போல் சீராட்டி வளர்க்கப்பட்டவர் யாருமில்லை. அகிலன் அவளை சகலவிதமாக சீராட்டினாலும், ஆனால் அது சிறு குழந்தை தானே. புது சொந்தங்களை அது மனதார ஏற்றுக்கொண்டது.

இதில் திலகாதான் திணறிப் போனால் சாரதாம்மா ஓய்வு எடுக்கும் நேரம் தாண்ட, “ ரதிமா வா நாம் வெளியே சென்று வருவோம்”, என்று அகிலன் அழைத்ததற்கு அவள் மறுத்துவிட்டால். அவன் அவர் ஓய்வு நேரம் என்ற தயங்க, “ டேய் நான் நல்லாத்தான் இருக்கிறேன் எனது பேத்தியோடு எனது நேரத்தை செலவிட விடு”, என்று கடித்துக் கொண்டது மட்டுமில்லாமல் அவளோடு அவளுக்கு சரிசமமாக அவர் இறங்கி விளையாண்டார். அதை பார்த்தபோது திலகாக்கு தான் அது தன் தாயை நினைவு படுத்தியது.

அங்கே பரதனுக்கு நிற்க நேரமில்லாமல் இருந்தது மொத்தம் ஒரு 50 மாணவர்களும் 30 மாணவிகளும் தங்கி படிக்கின்றனர் அவர்களை கண்காணிக்கவே அவனுக்கு நேரம் சரியாக இருந்தது. அதனால் மதிய உணவுக்கு கூட அவனால் செல்ல முடியவில்லை. அருணை தன் பார்வை வட்டத்திலேயே வைத்திருந்தான். அவனைக் காண யாரும் வரவில்லை. மதியம் ஒரு மணி போல் நடத்துற வர்கத்தினர் போல் ஒருவர் அருணை காண வந்தார். அருணின் சாயல் அவரிடம் இருந்தது .அவனுக்கு ஒரு பை நிறைய தின்பண்டங்கள் கொண்டு வந்தார். ஆனால் மருந்துக்கு கூட அருணின் முகத்தில் சந்தோஷம் இல்லை. அவன் அவருடன் சிரித்தும் பேசவில்லை. அவர்தான் ஓயாமல் பேசினார் சிரித்தார். ஆனால் அவன் மௌனமாகவே இருந்தான்.

ஒரு பிளஸ் டூ மாணவன் சரணின் அப்பா, பரதன் அவர்களை தாண்டி செல்லும்போது, “ பரதன் சார் தானே நீங்கள்”, என்று அவர் அவனை சரியாக அடையாளம் கண்டு கேட்க, அவன் அசையாமல் நின்று விட்டான். அவனை அவ்வளவு எளிதில் யாருக்கும் தெரியாது. இவர் இவ்வளவு சரியாக சொல்ல வேண்டும் என்றால் இவர் தாத்தாவை நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும். அவன் அவர் கூப்பிட்டதில் திரும்பி அவரை அளவிட, அவன் பார்த்த பார்வையில் அவரிடம் ஒரு நடுக்கம் இருந்தது போல் பரதன் மனதில் பட்டது. ஆனால் அது தவறோ என்பது போல் அவர் பார்வை மாறியிருந்தது.

“ என்னை தெரியுமா உங்களுக்கு”, என்று வினவியவாரு பரதன் அவர்களை நெருங்கினான். “இல்லை சார் என் மகன்தான் ,எங்கள் புது வாத்தியார், என்று கூறினான், அதான் உங்களிடம் அறிமுகம் ஆவதற்காக கூப்பிட்டேன்”, என்றார் கோர்வையாக. ஆனால் அவர் அவனை கூப்பிட்டபோது இருந்த அந்த தோரணை அவர் இப்போது கூறியதை தவறு என்று சொன்னது. அவன் எதுவும் சொல்லாமல், “ ஆமாம் புது வாத்தியார் தான்”, என்று தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டு அங்கிருந்த அகன்றான்.

இவ்வாறு அவன் அங்கிருந்த ஒவ்வொரு மாணவ மாணவியின் பெற்றோர்களை நுணுக்கமாக கவனித்தான். இந்நிலையில் மணி மூணு போல் அகிலன் பரதனை அழைத்தான். “அண்ணா சிறிது நேரம் இங்கே வரவேண்டியது தானே”, என்று வினவினான். “ எங்கடா இன்னும் சாப்பிடவே இல்லை, வேளை சரியாக இருக்கிறது”, என்று கூறி அழைப்பை துண்டித்து விட்டான். அவனின் சோர்ந்த குரலே அவனின் பசியின் அளவை சொல்ல, திலகாவிடம் கூறி அவனுக்கு சாப்பாட்டை டிபன் டப்பாவில் வாங்கிக் கொண்டு பள்ளியை நோக்கி விரைந்தான்.

அகிலனை கண்ட பரதனுக்கு வியப்பு, “ என்னடா அங்க அம்மாவுடன் இல்லாமல் இங்கு வந்து இருக்க”, என்று கேட்க, “ இல்ல உங்க குரலே சரி இல்ல அதான் சாப்பாடு கொண்டு வந்தேன்”, என்று அவன் கூற, “ நீ ஏன் தேவையில்லாமல் அலைகிறாய், ஏற்கனவே தினமும் நீங்க வந்து செல்வது பெட்ரோல் எவ்வளவு செலவு”, என்று அவன் பொறுப்பான தமையனாக அவனின் செலவுகளைப் பற்றி பேச, அவனும், “ சிறுவயதில் இருந்தே தனித்தே இருந்த எனக்கு, உங்கள் அன்பு, அக்கா ,குழந்தை ,அம்மா என்ற வரவு எதிர்பாராமல் கிடைத்த வரம், அதை அனுபவிப்பதை விடவா எனக்கு பணம் காசு முக்கியம்”, என்று அகிலன் அவனின் மனநிலையை கூற, பணத்துக்காக தன்னை ஒருவள் எவ்வளவு பெரிய பாதாளத்திற்கு தள்ள முயன்றால் என்ற எண்ணம் வர, “ ஆனால் உலகில் பணம் காசுக்காக எவ்வளவு இழிவான செயல்களை செய்யும் மனிதர்கள் இருக்கிறார்கள் தெரியுமா உனக்கு”, என்று அவன் கசந்த குரலில் கூற, “ அண்ணா நான் தான் சொன்னேன் அல்லவா பழசை நினைக்காதீங்க, விடு அண்ணா அவனவன் செய்ததற்கு தண்டனை ஆண்டவன் கொடுப்பான். நாம் நம் வேலை நம்மை சார்ந்தவங்க அவங்க நிம்மதி சந்தோஷம் என்று வாழ்ந்து கொள்ளனும்”, என்றான் அவனுக்கு ஆறுதல் கூறும் வண்ணமாக இப்படியே பேசிக்கொண்டு பரதன் சாப்பிட்டு முடித்தான்.

“டேய் நீ தான் என்னை விட பெரிய மனிதன் அல்லவா” ,என்றான் புன் சிரிப்பாக , “பெரிய மனிதன் எல்லாம் இல்லை அண்ணா யாரும் அற்ற தன்மை அதில் வரும் முதிர்ச்சி என்று வைத்துக் கொள்ளலாம்”, என்றான் பதிலாக, “ டேய் நேத்து தானே சொன்னேன், நீ என்னிடம் இதை பகிர்வதோடு சரி, ஆனால் அம்மா இருக்கும்போது வேண்டாம் பாவம் தவித்து போகிறார்கள்”, என்றான் தன் அன்னையை முன்னிறுத்தி.

“ சரியண்ணா இனிமே கவனமாக இருக்கிறேன்”, என்றான் அகிலன் பரதனின் கூற்றில் உண்மை அறிந்து. “ டேய் நாளைக்கு அந்த முடிவை வாங்கவும் மறந்துடாத”, என்று பரதன் அந்த சோதனைக்கு கொடுத்திருக்கும் ஊசி நீடில்லை நினைவு படுத்த , “ ஆமாம் அண்ணா 12 மணி போல் வரச் சொன்னான், இன்று ஏதேனும் தெரிய வந்ததா”, என்று கேட்க, “ சந்தேகம்தான் இருக்கிறது. ஆனால் சாட்சிகள் இல்லை. முதலில் நாம் இன்னும் கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும். அதுபோக எனக்கு நிறைய புது சந்தேகங்கள் எல்லாம் தோன்றுகிறது .அதற்கு ஏற்ப சோதனை முடிவு வரவேண்டும். பின்பு தான் நான் முடிவு செய்ய முடியும்”, என்றான் பரதன் .

பின் அவனே, “ கேட்டால் தப்பாக எடுத்துக் கொள்ளாதே, உன் அக்காவின் கடந்த காலத்தை பற்றி ஏதேனும் விசாரித்தாயா”, என்றான். அவனுக்கே வியப்பு, தான் ஏன் எதற்கு இதைப் பற்றி கேள்வி கேட்கிறோம் என்று தெரியவில்லை. முதலில் அவன் கேட்டவுடன் வியந்து பார்த்த அகிலன் பின்பு , “அவள் ஒன்றும் கூறியதில்லை அண்ணா நான் கேட்டால் அவள் உடம்பு வெளிப்படையாகவே நடுங்கும், அது போக அவள் கணவர் உயிருடன் இல்லை என்பது உறுதி. ஆனால் வசதியான வீட்டுப் பெண் என்பது என் அனுமானம். அவர்களின் பழக்கவழக்கங்களை வைத்து சொல்கிறேன் அவர்களின் பெற்றோர்கள் அருமையானவர்கள்”, என்று கூறியவனிடம்," நீ எதுவும் முயற்சி செய்யவில்லையா இப்போதுதான் நிறைய வழிகள் இருக்கிறது”, என்று சொல்ல முதலில் தயங்கியா அகிலன் , அவன் அவளிடம் நடந்து கொள்ளும் முறையில், அவளின் மீது அவனின் அக்கறையும், சாரதா அம்மா அவளுடன் பழகும் விதமும், பாரதியை அவர் நன்றாக பார்த்துக் கொண்டது ,இவை அனைத்தையும் அவனின் தயக்கத்தை அகற்றியது.

மடைத்திறந்த வெள்ளமாக அவளை பற்றி அவன் அறிந்து கொண்ட அனைத்தையும் கூறி முடித்தான். அவள் கோவையை சார்ந்தவள் என்று அவன் கூறிய நொடி பரதனின் முகத்தில் ஒரு இதம், ஆனால் அகிலன் அனைத்தையும் கூறிய நொடி, “ என்ன சொல்கிறாய் அன்றைய தினமா”, என்றான். அதிர்ச்சியாக. “ ஆமாம் அண்ணா டிசம்பர் 22 காங்கேயம் சாலையில் நான்கு வருடங்களுக்கு முன்பு தான் ஒரு விபத்தில் அவர் இறந்தார்”, என்றான் விளக்கமாக.” அவரின் புகைப்படம் எதுவும்”, என்று தளர்ந்து குரலில் அவன் கேட்க, அகிலன் தன் கைபேசியில் ரகசிய கடவுச்சொல் போட்டு மறைத்து வைத்திருந்த அவளின் கடந்த காலத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தான்.

பரதன் யார் அந்த புகைப்படத்தில் இருக்கக் கூடாது என்று மனதார வேண்டினானோ அவனே திலகாவின் தோள்களிலும் பாரதியை கைகளில் தூக்கிக்கொண்டு இன்முகத்தோடு காட்சியளித்தான் . திலகா முகத்தில் அப்படி ஒரு நிறைவு சந்தோஷம். அந்த குழந்தை எங்கோ பார்த்தது போல் இருக்கு என்று அவன் யோசிக்க அந்த நிமிடம் அவன் முகத்தில் முன் பாரதி வந்தால்.

"இது குழந்தை பாரதி. திலகாவுடைய குழந்தையா”, என்று படபடப்பாக கேட்க, “ ஆமா அண்ணா என் உயிர்”, என்று அகிலன் கூற ,அந்த நிமிடம் அவன் மனதில் ஒரு பயம் தோன்றியது. "உயிர் என்று கூறுகிறானே, ஆனால் இவர்கள் உயிராக இருந்த ஒன்று, இறப்பதற்கு நான் தான் காரணம், என்று இவன் அறிந்தால், அவன் மனது அடித்து சொல்லியது இவன் தன்னை முழுமையாக வெறுத்துவிடுவான், அது மட்டும் இல்லாமல் தன்னையும் ஏதாவது", அது கூட அவனுக்கு பெரிதாக தெரியவில்லை. தான் மற்றும் தன் அன்னை அவன் மீது உயிரே வைத்து உள்ளோம். இது தெரிந்த பின் எத்தனை சாட்சி கொண்டு வந்து நிரூபித்தாலும் தன்னை இவன் ஏற்கமாட்டான் என்பது பரதனுக்கு நிச்சயமாகிப் போனது.

“ நோ”, என்று அவன் உடம்பு வெளிப்படையாகவே பதர அதில் பதரிய அகிலன், “ என்ன அண்ணா”, என்று அவனை நெருங்கி அவன் கையை பற்றினான். அவன் கைப்பற்றிய நொடி பரதனின் உடம்பில் ஒரு மின்சாரம் பாய்ந்தது போல் உணர்ந்தான். அந்த உணர்வு அவனுக்கு யானை பலத்தை கொடுத்தது. யாருக்காவும் எதற்காகவும் இதை நான் இழக்க மாட்டேன். நான் தவறிய அந்த ஒரு நொடியால் ஏற்பட்ட விளைவுகளை அகிலன் வாய்மூலம் கேட்டவன், “ இனிமேல் எந்த தவறும் இந்த பரதன் நடக்க விடமாட்டான்”, என்று அவன் கூற, “ அண்ணா”, என்று அகிலா அவனை உலுக்கினான். அதில் தன்னிலைக்கு வந்தவன், “ அகிலா”, என்றான் .

அவன் பற்றி இருந்த கைகளில் மேல் தன் கையை வைத்து, “ என்ன அண்ணா” ,என்றான் பரதனை பார்த்துக்கொண்டே. “ என்ன நடந்தாலும், யார் வந்து என்ன கூறினாலும், எனக்கு எதிராக”, என்று பரதன் தொடர போக , “அண்ணா அந்த தெய்வமே இறங்கி வந்து உங்களுக்கு எதிராக சாட்சி கூறினாலும் இந்த அகிலன் உங்களின் பக்கம் தான் நிற்பான்”, என்றான் அகிலன் அவனை அணைத்துக் கொண்டு.

தொடரும்
 
Last edited:

Matharasi

Moderator
அத்தியாயம் 13

அதில் திடம் பெற்றவன், “ எப்படி உன் கையில் கிடைத்தார்கள் இவர்கள்”, என்று கேட்க ,அந்த நாளில் நடைபெற இருந்த கொடூரத்தையும் அவள் எப்படி கோவையிலிருந்து எந்த நிலைமையில் ஓடி வந்தால் என்பதையும் அவன் விசாரித்து அறிந்திருந்த முழு விவரத்தையும் அகிலன் பரதன் இடம் பகிர்ந்தான் .இப்போது புரிந்தது, அவளின் நடுக்கம், ஒதுக்கம், குழந்தையை மறைக்கும் எண்ணம், ஏன் என்று அவளின் சகல நடவடிக்கைக்கும் காரணம் அறிந்தவன் .தன்னால் வாழ்வை இழந்தவளின் வாழ்வை எப்படி சீர்படுத்துவது ,அது போக பாரதியின் அந்த உயிர்ப்பு உடைய முகம் அதை என்றும் அழிக்காமல் காக்க வேண்டும் என்று முடிவு எடுத்தான்.

“ இதுவரை நீ ஒருவனாக அவர்களை பாதுகாத்தாய், இப்போது நாம் இருவர் இருக்கிறோம். அகில் சட்டப்படி இதில் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது. இனியும் அவர்களுக்கு இந்த மறைவு வாழ்க்கை அவசியம் இல்லை. பார்த்துக் கொள்வோம்”, என்று கூறிய பரதனை, அகிலன் , “ சட்டப்படி எப்படி அண்ணா சீர் செய்வது”, என்றான் கேள்வியாக. “ அது சொல்கிறேன் ,முதலில் அவள் யார் அவள் முகவரி பின்னணி பற்றி எனக்கு சொல்”, என்றவன் அவன் கூறியதைக் குறித்துக் கொண்டு அதை தன் தாத்தா மூலம் நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

இவர்கள் பேச்சை முடிவதற்கும் பார்வையாளர் நேரம் முடிவதற்கும் சரியாக இருந்தது .அனைவரும் சென்ற பின் மாணவ மாணவிகளை சரி பார்த்து அவர்களை இருப்பிடம் சேர்த்து அகிலனுடன் பரதன் ஒரு முடிவு எடுத்தவனாக புறப்பட்டான்.

செல்லும் வழியில் பரதனிடம் கனத்த மௌனம் .அகிலன் பரதனின் பார்வையும் அவனின் உடல் மொழியையிம் வைத்து அவன் தீவிர சிந்தனையில் இருப்பதை புரிந்து கொண்டவன், அதை கலைக்காதவாறு அவனும் மௌனமாகவே வண்டியை செலுத்தினான். திடீரென்று, “ பாரதிக்கு நொருக்குத்தீணி எது ரொம்ப பிடிக்கும்”,என்று அவன் வினாவ அகிலன் அதில் திகைத்துப் பின், “ ஏன் அண்ணா”, என்றான் .

“முதன்முதலில் அவளை பார்க்க போகிறேன் ,அதான் ஏதாவது அவளுக்கு பிடித்தமாக”, என்றான் பதிலாக. “ அண்ணா ,அக்கா முதலில் பாரதியை உங்களோடு பழக விடுவாளா தெரியல, குழந்தையும் எப்படி”, என்று அவன் தயங்க, “ டேய் அது என் பிரச்சனை, நீ என்னுடன் இருந்தால் அது போதும், எதையும் நான் வென்று விடுவேன்”, என்றான் சிரிப்பாக . “குழந்தையை ஏற்றுக் கொள்ளும், உன் அக்கா தான் முரண்டு பிடிப்பாள்”, என்றான் பரதன் வேறு சிந்தனையாக , “அண்ணா நீங்கள்”, என்று அவன் கூறியதின் உள்பொருளை உணர்ந்த அகிலன் கேட்க, “ ஆமாம் ஒரு முடிவோடு தான் இருக்கிறேன் ,ஆனால் எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை, பார்க்கலாம், நீ எதையும் யாரிடமும் கூறாதே”, என்று அகிலனை அடக்கினான்.

“அண்ணா அதற்கு அக்கா மற்றும் அவள் சார்ந்தவர்கள்”, என்று அகிலன் தயங்க , ஆமாம் இதில் அவனுக்கு சம்மதம் தான், என்று சாரதா அம்மா முதன் முதலில் அவனிடம் அப்படி ஒரு கேள்வி கேட்டாரோ அன்றே முடிவெடுத்துவிட்டான். ஆனால் அதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்று அவனுக்கு தெரியவில்லை. எப்படி அவளை சம்மதிக்க வைப்பது ,மேலும் அவர்களோடு அவனுடைய உறவை எத்தனை பேர் சரிவர எடுத்துக் கொள்வார்கள் ,என்று அவனுக்கு தெரியவில்லை .இதை எல்லாத்தை விடவும் அவளை துரத்தும் பிரச்சனையிலிருந்து அவளை பாதுகாக்க அவனால் முடியும். ஆனால் அதை சட்டரீதியாக அணுகுவதற்கு அவனுக்கு துணை இல்லை. அதற்கு பரதனின் இந்த முடிவும் அவனுக்கு பெரும் மன நிம்மதியை கொடுத்தது.

அதிலும் ஒருவருக்கு இருவராக சேரும்போது பலமும் கூடும் அல்லவா. இருவரும் காலவாசல் சிக்னல் அருகே இருந்த ஜெயராம் பேக்கரியில் வண்டியை நிறுத்தினார்.இருவரும் ஒன்றாக உள்ளே சென்று வேண்டியதை வாங்கினார். பாரதிக்கு ஓம் மேட் சாக்லேட் பிடிக்கும் என்று அதையும் தனக்கு பிடித்த ரசகுல்லாவையும் காரத்துக்கு சிறுமுருக்குகளையும் வாங்கினார்.

அது போக பக்கத்தில் இருந்த துணி கடைக்குள் பரதன் நுழையப் போக, “ போதும் வீடு தாங்காது அண்ணா, இதுக்கே அக்கா என்ன கூறுவாளோ நீங்கள் வேறு”, என்று அவன் அலற, “ டேய் நான் அண்ணா, அவள் அக்காவா”, என்று அவன் அக்கா என்று கூறுவதை தடுக்க, “ அண்ணா இந்த ஜெட் வேகம், என் உடம்பு தாங்காது பார்த்து மெதுவா” என்று அவன் மீண்டும் அலறினான்.

“சரி விடு பார்த்துக் கொள்ளலாம்”, என்று துணிக்கடையை தவிர்த்து விட்டு வீட்டை நோக்கி சென்றனர் .பரதன் மீண்டும் மௌனத்தை தத்தெடுத்துக் கொண்டான். அவன் சிந்தனையில் திலகாவின் முகமும் பாரதியின் முகமும் தான் ,அவனால் அந்த புகைப்படத்தில் இருந்து அவர்களது அழகிய சிறு கூட்டை தான் தன் பழக்கவழக்கத்தால் கல்லை விட்டு எரிந்து கலைத்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் அந்த தவறை சீர் செய்ய ஆண்டவன் தான் தன்னை இங்கு அனுப்பி அகிலன் மூலமாக அவர்களை தன் கண்களுக்கு காட்டினான் என்பதையும் முழு மனதாக நம்பினான்.

அவனுக்கு ஏற்கனவே திலகா மேல் ஏற்பட்டிருந்த உணர்வை அவன் கண்டு கொண்டான். இது அவன் பாவத்துக்கு செய்யும் பிராய்ச்சித்தமாக அவன் நினைக்கவில்லை .அவள் மேலும் அந்த பாரதி பெண்மேலும் அவனுக்கு தோன்றிய உணர்வு, இவை அனைத்துமே அறிவதற்கு முன் ,ஆதலால் அவன் பரிதாபத்தையிம், தூய அன்பையும் குழப்பவில்லை. ஆனால் இந்த தெளிவு அவனுக்கு மட்டும் இருந்தால் போதாது அவளுக்கு வரவேண்டும். பாரதியும் அவனை ஏற்றுக்கொள்ள வேண்டும். இவை அனைத்தும் உண்மை தெரிவதற்கு முன்னால் நடைபெற வேண்டும். பள்ளி பிரச்சனை, அகிலனின் பிறப்பின் ரகசியம், திலகாவின் பிரச்சினை, இவை அனைத்தையும் ஒரு முடிவுக்கு கொண்டு வர அவனுக்கு நினைக்கவே கண்ணை கட்டியது. ஆனால் தன் தாத்தா தான், நான் மாறி இந்த பள்ளி பிரச்சனை தீர்ப்பேன் என்று தன் மீது கொண்ட நம்பிக்கையில் தான் தன் அன்னையை தனக்கு பக்கபலமாக இங்கு அனுப்பினார். அனைத்தையும் நான் சரி செய்து ஆக வேண்டிய கட்டாயத்தில் நிற்கிறேன், என்பதை உணர்ந்தவன். நாளை சோதனை முடிவு வரட்டும் ஒன்றன் பின் ஒன்றாக முடிச்சுகளை அவிழ்ப்போம்.

இவனின் சிந்தனையை கலைத்தது, “ அகிமா வந்தாச்சு”, என்ற பாரதியின் குரல். அவனுக்கு அப்போதுதான் உரைத்தது பாரதியின் அகிமா தான் தன் தம்பியாக கருதும் அகிலன் தான் என்று அதில் அவன் உள்ளம் புன்னகைத்துக் கொண்டது. அவனை ஏற்றுக் கொண்டது போல் தன்னை ஏற்றுக் கொள்வாளா என்பதுதான் அவன் மனதில் வந்த முதல் கேள்வி. பின் தன்னை நண்பனாக ஏற்றுக் கொண்டவள் தன்னை யாதுமாக ஏற்றுக்கொள்ள அவன் அதற்கு ஏற்ப மாற வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டான்.

பாரதி ஓடி வந்த அகிலனை அணைக்கு வர ,அவனுக்கு பின் இறங்கிய பரதனை கண்டு திகைத்து ஆச்சரியத்தில் தன் முட்டை கண்களை விரித்து நின்று விட்டால் .இவர் நம்ம பிரண்டுல எப்படி அகிமா உடன் , ஐயோ நான் யார்கிட்டயும் சொல்லலையே, அம்மாவுக்கு தெரிந்தால் அவ்வளவுதான் ,என்று அவள் யோசனை உளாவ, அவளை பார்த்துக் கொண்டே உள்ளே வந்த பரதனுக்கு பாரதியின் சிந்தனை ஓட்டம் புரிந்தது. ஆனால் அவள் அவளை வரவேற்காதது அவனுக்கு சிறிய ஏமாற்றம்தான். அதற்குள் பாரதியை அடைந்திருந்த அகிலன், “ என்னடா இது ,என் ரதி குட்டியா இப்படி அமைதியா நிக்குது ,நான் கூட ஏதோ வழி மாறி வேறு வீட்டுக்கு போய் விட்டேனோ என்று யோசித்தேன்”, என்று கிண்டல் அடித்துக் கொண்டே தூக்க, பாரதியின் கண்கள் பரதனை விட்டு அகலவில்லை.

அதற்குள் பாரதியில் சத்தம் நின்று போனதை ஒட்டி என்னவென்று பார்க்க வந்த திலகா கண்டது ,பாரதியும் பரதனும் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டே இருப்பதைத்தான். அதில் மனதிற்குள் அவளுக்கு திக் என்று ஆனது. ஏற்கனவே அவளுக்கும் பரதனோடு நல்ல உறவு கிடையாது. இதில் இவனிடம் குழந்தை வேறா என்று தோன்றியது .முதலில் இருவரின் மௌனத்தை கலைத்தது பரதன் தான்.

“ ஏன் அகிலா நீ சொன்ன ரதி இந்த குட்டி தானா ,படுசுட்டி என்று சொன்ன, இவங்களும் அவங்க அம்மா மாதிரி காசு கேப்பாங்க போலவே பேசுறதுக்கு”, என்று பாரதியை முதலில் பார்ப்பது போல் பரதன் பேசிக்கொண்டே, யாரும் பாராமல் பாரதியை பார்த்து தன் கண்ணை சிமிட்ட அதில் பாரதியின் மனம் அமைதி கொண்டது. ஏனென்றால் அகிலனும் சரி திலகாவும் சரி அவளிடம் இதுவரை அறிவுறுத்தியது ஒன்றே அந்நிய ஆண்களிடம் தள்ளி நிற்க வேண்டும் என்பதே .ஆனால் இவனிடம் பேசியது தெரிந்தால் என்னவாகும் என்று தான் பயந்து போனால். ஆனால் அவள் ஃபிரண்ட் அதை அழகாக கையாள அவனை பெருமிதத்தோடு கண்டால் .

“ஐயோ அண்ணா நீங்க புதியவர் தானே, அதான் ரதிமா யோசிக்குது”, என்று பரதனிடம் கூறியவன் , ரதியிடம் திரும்பி, “ இது என் அண்ணா டா”, என்று அவளுக்கு பரதனை அறிமுகப்படுத்தினான். அவள் “ம்”, என்று சொல்லி பரதனை பார்த்தால். அவன் சிரித்துக் கொண்டே, “ ஆமாடா நான் உங்கள் அகிமாவின் அண்ணன்” ,என்று கூறி தான் வாங்கி வந்த தின்பண்டங்களின் பையை நீட்டினான். அதில் அகிலன் திலகாவின் முகம் பார்க்க குழந்தையும் தன் தாயின் முகத்தை பார்த்தது. அவளோ அவ்வளவு வேகமாக வந்து, “ யாரும் என் மகளுக்கு எதுவும் வாங்கித் தரக்கூடாது”, என்று கூறி பாரதியை அவள் அகிலன் இடமிருந்து வாங்க போக, அந்தோ பரிதாபம் அவளின் குணம் அறிந்தவன் ஆயிற்றே பரதன், அவள் அவளை வாங்குவதற்குள் அவன் குழந்தையை வாங்கி இருந்தான்.

அதில் பரதனை அவள் முறைத்து அகிலனை அவள் அடிபட்ட பார்வை பார்க்க, அகிலனோ, “ அண்ணா”, என்று முன்னே வர ,குழந்தை பாரதி பெரிய பெண் தான் ஆனாலும் பெரியவர்களின் இந்த செயலில் அவள் தவித்து தான் போனால் .அவளைப் பற்றி இருந்தவனுக்கு அந்த பதற்றம் புரிந்தது.

“ ஏய், நீயும் பதரி குழந்தையும் பதற்றம் அடையச் செய்யாதே”, என்று இறுகிய குரலில் கூறியவன் , “இந்தா”, என்ற குழந்தையை அவளிடம் நீட்டினான்.

தொடரும்
 
Last edited:

Matharasi

Moderator
அத்தியாயம் 14

குழந்தை பயத்தில் இருந்ததினால், அவனின் கழுத்தை இறுக்கப்பட்டு இருந்தது. இவன் அவளிடம் குழந்தையை நீட்ட அதில் அவனின் கழுத்தில் இருக்கும், அவன் எப்போதும் அணிந்திருக்கும் செயின் பாரதியின் ஆடையோடு அவளிடம் வந்தது. கழுத்தில் இருந்து செயின் அவிழ்வதை உணர்ந்தவன், பாரதியை பற்றி கொண்டு திலகா திரும்ப , “ஒரு நிமிடம்”, என்றான். அவள் அருகே வந்தவன் தன்னையே தவிப்போடு பார்த்துக் கொண்டிருந்த குழந்தையை ஒருமுறை பார்த்தவன், அவளின் ஆடையின் நடுவே இருந்த பட்டனில் செயின் சிக்கி கொண்டிருப்பதை கண்டான்.



திலகாவிடம் நெருங்கினான். அவனின் நெருக்கத்தை உணர்ந்த திலகா மேலும் விலக பார்க்க ,அவள் ஒரு கையை இறுக்கப்பற்றி விலகாதவாறு மற்றொரு கையினால் பாரதி ஆடையில் சிக்கி இருந்த செயினை எடுத்து தன் பல்கொண்ட அந்த கொக்கியை சரி செய்து, “ தின்பண்டங்களை தானே வேண்டாம் என்றாய், பார்த்தாயா குழந்தைக்கு அந்த ஆண்டவனே கழுத்தில் இருந்த செயினை போடு என்று சொன்னது போல் அது அவளுடன் சேர்கிறது”, என்றவன் திலகாவின் ஒரு கையை பற்றியவாரு அதில் சிறு அழுத்தம் கொடுத்து, “ இது என் அப்பாவுடையது என்று ,என் அம்மா என்னுடன் இருக்கட்டும் என்று, என்னுடைய பத்தாவது பிறந்தநாளில் அணிவித்தார். இப்போது நான் என்”, என்று ஆரம்பித்து ,விழித்த திலகாவின் கண்களுக்கு நேராக தன் கண்களை கலக்க விட்டு, “ என் செல்ல அகிமா உடைய ரதிமாவுக்கு போடுகிறேன்”, என்று அணிவித்து விட்டான்.

அவன் என்ன கூறப் போகிறானோ என்று அவனையே கண்ட அகிலன் அப்போதுதான் தன்னுடைய இறுக்க பிடித்திருந்த மூச்சை வெளியேற்றினான். அதை அவிழ்க்கப்போன திலகா, “ திலா”, என்ற சாரதா அம்மா குரலில் அசையாமல் நின்று விட்டாள் . “இப்போது எதற்காக அவிழ்க்கப் போகிறாய்? நானே அவளுக்கு ஏதாவது வாங்கி கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அதற்குள் அவரின் ஆசிர்வாதம் போல் அந்த செயின் அவளிடம் சேர்ந்து விட்டது. அதனால் என்ன எப்படி பார்த்தாலும் பாரதி தான் என் முதல் பேரக் குழந்தை .என்னை பாட்டி என்று அழைத்து என்னை பாட்டி ஆக்கியவள் . என்மேல் உனக்கு உண்மையான மதிப்பெருந்தால் அதை நீ கழட்டக்கூடாது”, என்று கூறியவர், “ என்னடா அதற்குள் உங்கள் அண்ணன் கிட்ட போ கிட்ட போல”, என்று அங்கிருக்கும் சூழலை இலகு ஆக்குவது போல் தன் பேச்சை மாற்றினார்.

“ ஆமாம் நீங்கள் ரதிகமாக கூட சேர்ந்துக்கிட்டு என்னை தனியா விட்டுட்டிங்க, அதான்”, என்றான் அதற்கு பதிலாக .திலகா அதற்குள் பாரதியை தூக்கிக் கொண்டு உள்ளே செல்ல பரதன் கோபத்தில் தன் பற்களின் நறநற என கடித்தான் . “அண்ணா அவர்களைப் பற்றிதான் தெரியுமே ,ஏதோ அம்மா சொன்னதினால் அந்த செயினை அவிழ்க்கவில்லை. இந்நேரம் அதை கழட்டித்தான் மறுவேலை பார்த்திருப்பார்கள்”, என்று திலகாவின் குணம் அறிந்து அகிலன் கூறினான்.

“ நீ ஏண்டா எப்போதும் அவளிடமே முட்டுகிறாய்”, என்ற சாரதா அம்மா கேட்க, “ ஆசை தான், நான் சின்ன குழந்தை அல்லவா விளையாட ஆளே இல்லை ,அதான் அவளோடு போய் முட்டுகிறேன்”, என்றான் பரதன். மேலும் என்னை இப்படியே வாசலோடு வீட்டுக்கு அழைத்துப் போகும் எண்ணம்மா”, என்று கேட்டவுடன் தான் ,இன்னும் அவனை வாசலிலே நிற்பது அவர்கள் இருவருக்கும் உரைத்தது. அகிலன் , “வா அண்ணா உள்ளே போவோம்”, என்று அவனையும் சாரதாம்மாவை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான். உள்ளே நுழைந்தவன் அவள் எங்கே என்று தேட அவளோ அடுப்பில் பாலை ஒரு பக்கமும் பஜ்ஜியை ஒரு பக்கமும் வறுத்துக்கொண்டிருந்தாள்.

குழந்தை பாரதியோ பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு டிவியில் ஏதோ ஒரு பொம்மை படத்தை பார்த்துக் கொண்டிருந்தது .அவர்கள் இருவர் முகமும் சோர்ந்து தெரிய பரதனின் மனக்கண்ணில் அவர்கள் குடும்பமாக நிறைந்து மனதோடு சந்தோஷத்தோடு இருந்த விதம் வந்து மறைந்தது .அந்த நொடி அவன் மனதில் ஒரு பெரும் வலி, “ விடமாட்டேன் நீ எவ்வளவு என்னை கஷ்டப்படுத்தினாலும் விலகினாலும் என்னிடம் இருந்து உங்கள் இருவரையும் யாரும் பிரிக்க முடியாது”, என்று சூளுரைத்துக் கொண்டான்.

சாரதாம்மா அகிலன் பாரதியை சமாதானப்படுத்துவதில் இறங்கிவிட இவன் சமையலுக்கு என்று அகிலன் திரையிட்டு மறைத்து ஒதுக்கி இருந்த இடத்திற்கு யாரும் அறிய வண்ணம் நுழைந்தான்.” மேலும் மேலும் தப்பு செய்கிறாய்”, என்று பரதனின் தாழ்வான தெளிவான குரலில் தூக்கி வாரி போட திலகா அதிர்ந்து அவனை திரும்பிப் பார்த்தால். அதில் மேலும் பரதன் தான் தொடர்ந்தான். “ஏற்கனவே உனக்கு நான் கொடுத்த கெடு முடிந்து போயிட்டு. மேலும் மேலும் என்னிடம் இருந்து விலக முயற்சிக்காதே. குழந்தையை ஏதாவது சொன்னாய் செய்தாய் அவ்வளவுதான்”, என்று வெளியே அமர்ந்திருப்பவர்கள் கவனம் சிதறாமல் இவன் மெதுவாக பேச , “அவள் என் பெண். நான்தான் அவள் யாருடன் எவருடன் பழக வேண்டும் என்பதை கூறுவேன். அதற்கு யாருக்கும் உரிமை கிடையாது”, என்றால் திலகா தன் பயத்தை கட்டுப்படுத்திக்கொண்டு.

“ ஓ அவ்வளவு தூரம் என் மேல் பயமற்ற போய்யிற்ற, எனக்கு இதுவும் நன்றாகத் தான் இருக்கிறது .நான் முதலில் ஒரு கோகோ வீரன், தெரியுமா உனக்கு, பின் தான் இருதய நிபுணர்”, என்றான் அவளிடம் .அவள் அவனை கேள்வியாக பார்க்க, “ எனக்கு துரத்தி தட்டி தூக்கவும் தெரியும், பதுங்கி ஓடவும் தெரியும்”, என்றான் .அவள் புரியாமல் அவனைப் பார்த்து விழிக்க , “அதாவது என்னிடம் இருந்து, என் குறியில் இருந்து யாரும் எப்போதும் தப்பிக்க முடியாது, அதே போல் ஒரு முறை வேண்டும் என்று என் குறி தப்பும், அதுவும் கூட என் எதிராளியின் திறமையை அளவிடத்தான், அதனால் என்னிடமிருந்து எப்படி விலகலாம் என்று யோசிக்காதே. நான் கட்டம் கட்டி தூக்கி விடுவேன் .எனக்கு எதிராக உன் ஒரு கை விரலை கூட அசைக்க முடியாதபடி உன்னை நிறுத்தி விடுவேன்”, என்றவனை அவள் அதிர்ந்து பார்க்க, “ இன்று குழந்தைக்கு என் செயினை அணிவித்து என் முத்திரையை குத்தியது போல், அவள் அன்னைக்கும் முத்திரையிடும் நாள் வெகு தூரத்தில் இல்லை”, என்று கூறி சென்றவனை என்ன செய்தால் தகும் என்பது போல் அவள் பார்க்க ,அதற்குள் அகிலன் , “என்ன கா எண்ணெய் காய்கிறது நீ என்னடா என்றால்”, அவளை கடிந்து கொண்டே அடுப்பை அனைத்தான்.அதில் தன்னிலை அடைந்தவல், “ ஒன்றுமில்லை ஏதோ சிந்தனை”, என்றால், ஏனோ அகிலனிடம் பரதன் தன்னிடம் நடக்கும் முறையை பற்றி கூற அவளால் முடியவில்லை.

முதல் காரணம் அகிலன் பரதன் மீது கொண்டுள்ள பாசம் மற்றொன்று, சாரதா அம்மா அவன் மேல் வைத்துள்ள அன்பு. அவள் நம்பிய முதல் வேற்று ஆடவன் அகிலன் தான் .பார்வையில் மட்டுமல்ல நினைப்பில் கூட ஒரு பிழை அவனிடம் காண முடியாது .அவளை மற்றும் குழந்தையையும் சிறு எதிர்பார்ப்பு கூட இல்லாமல் தாங்கியவன். பாதுகாத்தவன். அவனுக்கு ஒரு குடும்பம் அமைய தான் எந்த ஒரு தடையுமாக இருக்கக் கூடாது என்பதில் முழு கவனமாக இருந்தால்.

“ அக்கா நீ எதையும் என்னிடம் கூறவில்லை என்றாலும் நான் உன் நல்லதுக்கும் பாரதியின் வாழ்க்கைக்கு எதுவும் செய்வேன் என்பதை நீ எந்த நிலையில் மறந்து விடக்கூடாது”, என்றான் அகிலன் அவளின் உண்மையான நலம் விரும்பியாக. “ எனக்கு யாருமே இல்லாமல் நானும் குழந்தையும் நின்றபோது, எங்களை ஒரு தந்தையாக நின்று எங்களை காத்தவர் நீங்கள், உங்களைப் பற்றி எனக்கு நீங்கள் சொல்லி தெரிய வேண்டும், என்று எந்த அவசியமும் இல்லை, நீங்கள் இல்லை என்றால் இந்த நான்கு ஆண்டுகளில் நானும் என் பிள்ளையும் புதைந்த இடத்தில் மரமே வளர்ந்திருக்கும்”, என்று உணர்ச்சி வசப்பட்டு அவள் கூற, அங்கே வந்த சாரதா அம்மா , “டேய் அவளுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் ஆண்களை நம்ப மறுக்கிறாள் ,ஏன் உன் அண்ணன் கூட வேறு பெண்னை நம்ப மாட்டான். போய் அவனை சரி பண்ணு முதல ,அதை விட்டு அவளை போட்டு நீயும் அவனை மாதிரி படுத்தாதே”, என்று கடித்தவர் அவளிடம் டீ மற்றும் பலகாரத்துடன் ஹாளுக்கு வா”, என்று கூறிவிட்டு சென்றவர் .இவளும் இவர்கள் இருவரை மீறியா அவன் தன்னிடம் நெருங்க முடியும் என்று அவனை குறைத்து மதிப்பீட்டுக்கொண்டு அவர்கள் சொன்னதை செய்து எடுத்துக் கொண்டு சென்றாள்.

பரதன் பாரதியிடம் வம்பு இழுத்துக் கொண்டும், அவள் அகிலனிடம் உட்கார்ந்து அவனை பார்த்துக் கொண்டும் அமர்ந்திருந்ததால். குழந்தைக்கு தாயிக்கு பிடிக்காததை செய்ய விரும்பவில்லை. ஆனால் அவனிடம் பேசாமலும் அவளால் இருக்க முடியவில்லை. இவள் அனைவருக்கும் சிற்றுண்டி பரிமாற பரதன் பாரதிய வம்பு இழுப்பதில் மும்மரமாக இருக்க இவளை கண்டுகொள்ளவில்லை .ஒருவாறு இரவு உணவை உண்டு விட்டு தான் பரதன் சாரதாம்மா இருவரும் தன் கூட்டுக்கு திரும்பினார்.

தொடரும்
 
Top