கிரண் சிவரஞ்சனி கேரளா போய் வந்து வரலஷ்மி நிவிக்கா ஏற்பாடு செய்து இருந்த அன்னதானம் முடிந்து அடுத்த நாள் கிரண் வேலைக்கு லேட்டாகி விட்டது என அவசரமாக கிளம்ப ஒரு ஒன்பது மணி போல அவனுக்கு போஸ்ட் வந்தது… சிவரஞ்சனிக்கு டியூட்டிக்கு போகவில்லை காரணம் நிவிக்கு பயிற்ச்சியின் போது ஏற்பட்ட வலியில் ஜுரம் வந்து இருந்தது கிரண் தான் இன்று லேட்டாகி விட்டது என கிளம்பி கொண்டு இருக்க சார் போஸ்ட் என குரல் கொடுக்க…கிரண் யாருக்கு போஸ்ட் பாங்க் ஸ்டேட்மெண்ட் லெட்டர் வந்து விட்டது சிவரஞ்சனி, வரலக்ஷ்மிக்கு லெட்டர் போட யாருமல்ல தனக்கும் டிப்பார்மெண்ட்ல் இருந்து அனுப்ப மாட்டார்கள் வேறு யாரு என யோசனையாக போக.போஸ்ட் மேன்
“சார் இங்கே கிரண் வில்பர் சகாயராஜ்” என கேட்க கிரண் தான் என அவன் சைன் போட சொன்னான் கிரண் பார்க்க கோர்ட் நோட்டீஸ் ரெஜிஸ்டர் லெட்டர் அவன் வாங்கி விட்டு உள்ளே வர… சிவரஞ்சனி யாருக்குங்க லெட்டர் என கேட்க கிரண் கடிதத்தை உடைத்து படித்தவன் முகம் பயங்கரமாக மாறியது சிவரஞ்சனி அவன் கையில் இருந்த லெட்டரை எடுத்து வாசித்தவள்…கண்கள் கலங்கி சோபாவில் இருக்க வரலஷ்மி வாஷ்ரூம் போய் வந்தவர் இருவரின் முகத்தை பார்த்து சிவரஞ்சனி கையில் உள்ள லெட்டரை பார்த்து விட்டு. வரலஷ்மி
“மாப்பிள்ளை, சிவா பாப்பா என்ன ஒரு மாதிரியாக இரண்டு பேரும் இருக்கிறீங்க கையில் என்ன லெட்டர்” என கேட்க சிவரஞ்சனி பாட்டி என அழு… வரலஷ்மி எதுவுமே புரியாமல் அவள் அருகே அமர்ந்து அவளை அணைக்க கிரண் கோபமாக அவள் பக்கம் திரும்பியவன். கிரண்
“இப்போ எதற்கு ரஞ்சனி ஓப்பாரி வைக்கிற நான் என்ன செத்தா போய் விட்டேன் உன் பெண்ணை உன் கிட்ட இருந்து பிரிக்க விடுவேனா… அவளுக்கே இவ்வளவு திமிர் இருந்தால் போலீஸ் ஏசிபி நான் நிவியை பெற்ற அப்பன் எனக்கு தெரியாதா எங்கே எதை கொண்டு அடிக்க வேணும்” என. சிவரஞ்சனி விசும்பியவாறே
“அவள் ராட்சசிங்க என் பெண்ணை என் கிட்ட இருந்து பிரித்து விடுவாள் நிவி இல்லாமல் நான் இருக்க மாட்டேன்... செத்து போய் விடுவேன் என. கிரண் ஏய் என குரல் எழுப்ப வரலஷ்மி “பாப்பா என்ன இது” என்றார். வரலஷ்மி
“கொஞ்சம் உங்க சண்டையை நிறுத்துங்க மாப்பிள்ளை என்ன நடந்தது என சொல்லுங்க எனக்கு புரியவில்லை… நிவி பாப்பாவுக்கு என்ன அவளை யாரு கொண்டு போக போறாங்க” என கேட்க. சிவரஞ்சனி
“பாட்டி அந்த தீபிகா என் பெண்ணை தனக்கு தர சொல்லி கேட்டு கோர்ட் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறாள் பாட்டி” என அழ வரலஷ்மி அதிர்ந்து போய் என்ன மாப்பிள்ளை இது என பார்க்க.கிரண்
“அவளுக்கு மற்றவங்க சந்தோஷமாக இருந்தால் பிடிக்காது பாட்டி இது இப்போ என்று இல்லை காலேஜ் டேஸ்சில் இருந்து மற்றவங்க சிரித்தால் போதும் அவங்களை அழ வைக்க பிளான் பண்ணி தன் பணத்தால் அதை செய்வாள்… அது வளர்ந்தும் கல்யாணமாகி குழந்தைகள் பிறந்த பிறகும் தொடர்கிறது சரியான சாடிஸ்ட் அவள்” என. வரலஷ்மி
“மாப்பிள்ளை அவள் ராட்சசி அவள் கிட்ட ஒரு நிமிஷம் கூட நம்ம குழந்தை போக கூடாது அவளுக்கு தான் ஒன்றுக்கு இரண்டாக இரட்டை குழந்தைகள் ஆண் பெண் இருக்கே பிறகு எதற்காக நம்ம பாப்பா… இவள் தானே வேணாம் என தூக்கியெறிந்து விட்டு போனாள் நீங்க பரஞ்ஜோதி தம்பி கிட்ட பேசி ஒரு வழி கண்டு பிடிங்க நீங்க சட்டம் படித்தவர் தானே” என. கிரண்
“அவள் கிட்ட ஒரு நிமிஷம் கூட என் பெண்ணை விட மாட்டேன் என் பெண்ணுங்கு அம்மா அவள் இல்ல ரஞ்சனி என் பெண்ணை கருவில் இருக்கும் போதே கொலை செய்ய பார்த்தவள்…நிவியை அவள் கிட்ட விட நான் என்ன முட்டாளா ரஞ்சனி நீ அழாதே உன் கிட்ட இருந்து உன் பெண்ணை யாராலும் பிரிக்க முடியாது அதற்கு நான் விட மாட்டேன் கதவை பூட்டி கொள் நான் வரும் வரைக்கும் திறக்க வேணாம்… தீபிகா கிட்நாப் பண்ண கூட தயங்காத ஆள் புரிகிறதா வா வந்து கதவை பூட்டு அவசரம் என்றால் எனக்கு கால் பண்ணு” என கூறி விட்டு கிளம்ப… சிவரஞ்சனி அவன் சொன்னது போல செய்து விட்டு நிவி தூங்கி கொண்டு இருக்க அவள் அருகே இருந்து அவளை அணைக்க வரலஷ்மி கடவுளே என்ன புதுகுழப்பம் வழி காட்டு என வேண்டி கொண்டு இருந்தார்.
கிரண் மனதில் தீ எரிந்தது யாருக்கு யாரு அம்மா குழந்தை பெற்றால் மட்டும் போதுமா அதை பாலூட்டி சீராட்டி வளர்ப்பவள் அன்னை இதில் ஒன்று கூட அந்த தீபிகாவுக்கு இல்லை… அதை விட நிவி வயிற்றில் இருக்கும் போது கலைக்க வேணும் என மாத்திரை எடுத்தவள் இப்போ எங்கே இருந்து மகள் வந்தாள் இவளுக்கு பிறந்த மற்ற குழந்தைகளையே இவளுக்கு வளர்க்க தெரியாது முடியாது இதில் நிவி வேணுமா அவளுக்கு… என் குழந்தைக்கு அம்மா என்றால் அது சிவரஞ்சனி மட்டும் தான் என நினைத்து கொண்டு பரஞ்ஜோதியை பார்க்க போனான்… அவருக்கு தகவல் தெரிவிக்க நேரம் இல்லாமல் போய் அவர் முன் இன்று சல்யுட் அடிக்க அவர் அவனை ஆச்சரியமாக பார்த்தார் என்ன அவசரமாக வந்து இருக்கிறான் என. பரஞ்ஜோதி
“கிரா வா என்ன அவசரமாக வந்து இருக்க ஆபீஷியலா இல்ல அன் ஆபீஷியலா” என கேட்க. கிரண்
“அன் ஆபீஷியல் அங்கிள் உங்களை கமிஷனராக பார்க்க வரவில்ல அங்கிளாக பார்க்க வந்தேன்… இது காலையில் போஸ்ட்ல் வந்தது” என தீபிகா அனுப்பிய லெட்டரை அவர் டேபிளில் வைக்க அவர் எடுத்து வாசித்தவர் முகம் மாற. பரஞ்ஜோதி
“இவள் இன்னும் அடங்கவில்லையா அமைதியாக இருக்கிறாள் என பார்த்தால் இதற்கு தானா கிரண் நீ கவலைபடாதே நிவியை இவளுக்கு கொடுக்க பைத்தியமாக எங்களுக்கு சரி சிவரஞ்சனி எப்படி இருக்கிறாள் அழுது கொண்டு இருக்கிறாளா… பாவம் அவள் நிவியை தான் பெற்ற பெண்ணாக எண்ணி வாழ்கிறாள் அதற்குள் இவள் வேற நாங்க அப்போ விட்ட தப்பை இப்போ விட கூடாது கிரா… அப்போ நம்மால் முடியாமல் பல காரணங்கள் இருந்தது இப்போ இல்லை நீ இந்த சிட்டி ஏசிபி உனக்கு குடும்பம் இருக்கிறது நான் சிட்டியில் டாப் லாயரை ஏற்பாடு செய்கிறேன் நீ யோசிக்க வேணாம் கேஸ் எப்போ ஸ்டாட் ஆகுது” என கேட்க. கிரண்
“இன்னும் மூன்று நாளில் அங்கிள் கோர்ட்க்கு வர சொல்லி இருக்கிறாங்க” என. பரஞ்ஜோதி
“சரி நீ போ இதை பற்றி யோசிக்க வேணாம் நான் பார்க்கிறேன் பாப்பாவுக்கு இதை பற்றி ஒன்றுமே தெரிய கூடாது சரியா ரஞ்சனியை சமாதானப்படுத்து” என கிரண் சரி என கூறி விட்டு வந்தான்… தீபிகாவுக்கு உற்சாகமாக இருந்தது அவளை பொறுத்த வரைக்கும் இது ஒரு விளையாட்டு போல மனிதர்களை அழ வைப்பது இது அவளின் பிறவி குணம் அளவுக்கதிகமாக பணம் செல்லம் அவளை இப்படி மாற்றி இருந்தது…அவளுக்கு தெரியும் கிரண் மகளுக்காக தன் காலில் விழுவான் அப்போ அவனை கதற வைக்கலாம் என பிளான் பண்ணினாள் விஷயம் தன் லாயர் மூலமாக கேள்விப்பட்ட மகேஷ் முதல் தடவையாக மகளை கண்டித்தார். மகேஷ்
“தீபி வாட் இஸ் கோயிங் ஆன் அவன் உறவை வெட்டி விட்டு நான்கு வருடங்களாகிறது கூடவே அவன் மகளை கூட… இப்போ நீ ஆகாஷ் மனைவி அவன் குழந்தைகளுக்கு அம்மா பிறகு எதற்காக திரும்ப அவன் வாரிசை கேட்டு இருக்க நம்ம இமேஜ் என்ன ஆகும்” என கேட்க. தீபிகா
“கமான் டாட் யாரு அவனை நினைப்பது உங்களுக்கு தெரியும் என்னை எதிர்த்தால் எனக்கு பிடிக்காது என அவன் காலேஜ்லில் இருந்து இப்போ வரைக்கும் எனக்கு அடிபணிய மாட்டேன் என்கிறான்… இப்போ புதிதாக கல்யாணம் வேற பண்ணி விட்டான் அது தான் ஜஸ்ட் அவனை நிம்மதியாக வாழ விடாமால் அலைகழிக்க போகிறேன் யாரு அவன் மகளை பார்ப்பது… அதற்கு தான் இருக்கு எத்தனையோ ஹாஸ்டல்கள் பணத்தை கொடுத்தால் அவளை பார்த்து கொள்வாங்க இவனால் அங்கே எல்லாம் போக முடியாது…அவன் புது மனைவிக்கு கூட இவனை விட இவன் பெத்த பெண்ணு மேலே தான் பாசம் அதிகம் அதுவும் மம்மி மம்மி என அவள் பின்னால் திரியும்… அது தான் எல்லோரையும் பழி வாங்க இந்த வழி டாட்” என அங்கு சாப்பாட்டை சேவ் பண்ணி கொண்டு இருந்த பெண்கள் மனதில் இவள் அம்மாவா ராட்சசியா என நினைக்க தோன்றியது ராணி மனதில் கொஞ்சம் இரக்கம் உள்ளது. அவர்
“தீபி வேணாம் விலகி வந்த பிறகு இது எதற்கு முதல் தடவை தான் உன் வாழ்க்கை நம்ம தகுதிக்கு இல்லாதவன் கூட அமைந்தது…நீயும் புரிந்து கொண்டு முற்றாக விலகி வந்து விட்ட பிறகு எதற்கு வேண்டாத வேலை உன் குழந்தைகளுக்கு இது தெரியாது… சின்ன பசங்க அவங்க மனதில் இந்த வயதில் வேற எண்ணங்களை விதைக்க வேணாம் இரண்டு வயது ஆகிறது புரிய தொடங்கும் வயது இது” என. தீபிகா
“லுக் மம் எனக்கு அட்வைஸ் பண்ணும் வேலை வைத்து கொள்ளாதே அவனை கதற வைக்காமல் விட மாட்டேன் யார் சொன்னாலும் கேட்க மாட்டேன்” என எழுந்து போக முதல் முறையாக மகேஷ் மனதில் மகளுக்கு ரொம்ப இடம் கொடுத்து விட்டோமோ என தோன்றியது... கிரண் வீட்டுக்கு வர வரலக்ஷ்மி சிவரஞ்சனி சாப்பிடாமல் அழுது கொண்டு இருப்பதாகவும் தான் எவ்வளவு சொன்னாலும் கேட்கவில்லை என சொல்ல கிரணுக்கு தெரியும் அவனை விட சிவரஞ்சனி நூறு மடங்கு குழந்தை மேல் பாசம் வைத்து இருக்கிறாள் என்று… அவன் பெத்தவன் பாசம் வைப்பது இயற்கை சிவரஞ்சனி அவள் மேல் பாசம் வைக்க ஒரேய காரணம் தான் இருக்க வேணும் தாய்மை தனக்கு மறுக்கப்பட்ட ஒன்றை அவள் மேல் செலுத்தி விட்டாள்… கிரண் தங்கள் ரூம்க்கு போக நிவி தூங்கி கொண்டு இருக்க அவள் தலையை தடவி கொண்டு கண்கள் கலங்க சிவரஞ்சனி அவள் அருகிலே இருந்தாள் கிரண் அவள் தோள் தொட சிவரஞ்சனி நிமிர்ந்து பார்க்க கிரண்… அவள் அவன் இடையை கட்டி கொண்டு மெளனமாக கண்ணீர் விட அவள் தலையை தடவி விட்டு கிரண் அவள் முகம் நிமிர்த்தி முத்தமிட்டு விட்டு கிரண் அவள் அருகிலே அமர்ந்து அவளை தோளோடு அணைத்து கொண்டு. கிரண்
“என்ன ரஞ்சனி இது நீ படித்தவள் நர்ஸ் உனக்கும் சட்டம் தெரியும் அப்படி சட்டென பாப்பாவை நம்ம கிட்ட இருந்து பிரிக்க முடியுமா நான் விடுவேனா அழாதே மா உன் பெண்ணை உன் கிட்ட இருந்து யாராலும் பிரிக்க முடியாது” என்றான்.. நிவிக்கு ஜுரம் குறைய அவளை நர்சரி கூட அனுப்பாமல் சிவரஞ்சனி தான் சிக் லீவு போட்டு விட்டு அவள் கூட இருந்தாள் பயம் தீபிகா அவளை நர்சரியில் வந்து தூக்கி போய் விடுவாள் என கிரண், வரலஷ்மிக்கு அவர்கள் பாசத்தை பார்த்து கண் கலங்கியது… கிரணின் கேஸ்யை வாதாட பரஞ்ஜோதி ஏற்பாடு பண்ணிய லாயர் வேற யாருமல்ல கிரிமனல் லாயர் மட்டுமல்ல பரஞ்ஜோதி, சகாயராஜின் நண்பன் கண்ணன் அவருக்கு விபரம் எல்லாம் பரஞ்ஜோதி, கிரண் சொல்ல…அவர் நண்பன் மகனுக்காக நான் வாதாடாமல் யார் வாதாடுவார் தீபிகா அப்படி கேட்க முடியாது இந்த கேஸ்யை எப்படி உடைக்க வேணும் என நான் பார்க்கிறேன் என சொல்ல… கிரண் தயங்கி பீஸ் எவ்வளவு தர என அவர் அவனை செல்லமாக திட்டு விட்டார் நண்பன் மகனுக்கு பீஸ்சா இதில் வெற்றி பெறுவது தான் என் பீஸ் என்று.
கோர்ட்க்கு கேஸ் வரும் நாள் அன்று சிவரஞ்சனி விரதம் இருக்க கிரண் கோர்ட்க்கு போனான் அங்கே தீபிகாவின் லாயர் பேச தொடங்கினார் ஒரு பெண் குழந்தை விவாகரத்தான பின் தாய் கூட இருப்பது தான் முறை அதை விட தீபிகா பணக்கார பெண் அந்த வசதிகள் வாய்ப்புகள் அந்த குழந்தைக்கு மறுக்கபடுவதா… அவளுக்கு உடல் நிலை வேற சரி இல்ல அதற்கு டிரிட்மெண்ட் செய்ய அவளால் தான் பாரின் கொண்டு போக முடியும் அதை விட கிரண் இரண்டாம் திருமணம் செய்து உள்ளான்…அந்த பெண் சித்தி கொடுமையை காட்டினால் அடுத்து அவர்களுக்கு குழந்தை பிறந்த பிறகு அவளை ஓதுக்கி விட்டாள் என காரணங்களை காட்டி நிவி தீபிகா கூட இருப்பது தான் நியாயம் என வாதாட கண்ணன் தன் பக்க வாதாடலை தொடங்கினார்.
இவ்வளவு நாள் இல்லாத பாசம் ஏன் தீடீரென குழந்தை வேணாம் என அழிக்க போனதால் தான் அவளுக்கு இப்படி ஆனது அதை விட ஹாஸ்பிட்டலில் வைத்து இந்த குழந்தை வேணும் ஊனம், பெண் குழந்தை என ஆர்பாட்டம் செய்தவள் தீபிகா அதற்கு சென்னை கமிஷனர் உட்பட பல சாட்சிகள் இருக்கு ….அது போல தீபிகா கரு கலைப்பு மருந்து எடுத்ததற்கான ரிப்போர்ட். அடுத்து தீபிகாவே டைவர்ஸ் வர முன்னே திரும்ப கல்யாணம் பண்ணி இரட்டை குழந்தைகள் பெறும் போது ஏன் கிரண் கல்யாணம் பண்ண முடியாது சிவரஞ்சனியை விட நிவிக்கு நல்ல தாய் கிடைக்க முடியாது…கிரண் சிவரஞ்சனியை தேர்ந்தெடுக்கவில்லை நிவிவேதனா தான் தன் தாயாக அவளை தேர்தெடுத்தாள் தீபிகா அவர்கள் காலனி போய் இதற்காக கலாட்டா செய்தற்கான சாட்சி இருக்கு ஆகவே தீபிகா கிட்ட குழந்தையை கொடுக்க முடியாது என தன் வாதத்தை வைத்தார். ஜட்ஜ் ஒரு பெண் அவர் தீபிகாவை விசாரிக்க சொல்ல அவள் அழுது கண்ணீர் விட்டு அது தான் தெரியாமல் செய்த தவறு தன்னால் மகளை பிரிந்து இருக்க முடியாது அட்லீஸ்ட் அவள் பதினெட்டு வயது வரைக்குமாவது தன் கூட இருக்கட்டும்….பிறகு அவள் தந்தை கூட போகட்டும் அவள் கால் சரிப்படுத்த ஏசிபி, சம்பளத்தில் முடியாது அது இது என ஆக்ட் கொடுக்க…ஜட்ஜ் யோசித்து விட்டு நிவியை அடுத்த தடவை கொண்டு வர சொன்னார் அவளை பார்க்க வேணும் என அவர்கள் வெளியே வர தீபிகா சிரித்து விட்டு போக. கண்ணன்
“கிரா வெரி டேஞ்சரஸ் கேர்ள் உனக்கு அறிவு இல்லையா டா இவளை லவ் பண்ணி இருக்க சரி விடு ஜட்ஜ் பெண் என்பதால் இவள் நடிப்பை பார்த்து யோசிக்க ஆரம்பித்து விட்டார் இவர் பணத்திற்கு அடிபணிபவர் இல்ல அன்புக்கு மட்டும் தான் அதை விட பெண்களுக்கு தான் முன் உரிமை கொடுப்பார்… அடுத்த ஹியரிங் இவளுக்கு சாதகமாக அமைய கூடாது கிரா அமைந்தது குழந்தை கட்டாயமாக அவளுக்கு போய் விடும் ஆண் குழந்தை என்றாலும் கூட பரவாயில்ல… இப்போ பெண் குழந்தைக்களுக்கு நடக்கும் பாலியல் துஷ்பிரயோகத்தால் அம்மா கிட்ட இருப்பது நியாயம் என சொல்ல விடுவாங்க சரி விடு பார்க்கலாம்” என நம்பிக்கை இல்லாமல் சொல்ல கிரண் தவித்து போனான் அவன் உலகமே நிவி தானே அவன் வீட்டுக்கு வர சிவரஞ்சனி கேட்க விஷயத்தை சொல்ல சிவரஞ்சனி அழாமல் யோசித்து விட்டு பேசாமல் இருந்தாள் …அடுத்த ஹியரிங்கு நிவி கூட சிவரஞ்சனி, வரலஷ்மி போனார்கள் அந்த காலனி பெண்கள் விஷயம் கேள்விபட்டு அவர்களும் போனார்கள்…கோர்ட் ஆரம்பமாக விசாரணை தொடங்க நிவியை அழைத்து வர சொன்னார் ஜட்ஜ் அவள் மெதுவாக நடந்து வர அவள் நிலையை கண்டவர் தீபிகா முகத்தை பார்த்து விட்டு தீர்ப்பு சொல்ல ஆரம்பித்தார். ஜட்ஜ்
“இரு தரப்பு வாத பிரதிவாதங்களை கேட்டு இப்போ நானும் பெண் எனக்கும் மகள் இருக்கிறாள் சில விஷயங்களை தந்தையை தவிர அன்னையால் தான் செய்ய முடியும் என்ன தான் சித்தி இருந்தாலும் அவரால் அம்மாவாக முடியாது… அவருக்கு குழந்தைகள் பிறந்தால் இப்போ இருக்கும் மனநிலை மாறிவிடும் அதனால் தீபிகா” என சொல்ல வர முன் ஒரு நிமிஷம் யுவர் ஆனர் என கோர்ட்டே பார்க்க சிவரஞ்சனி எழுந்தாள் ஜட்ஜ் அவளை பார்க்க அவள் கூண்டில் ஏறி நின்று அவருக்கு வணக்கம் வைத்து விட்டு. சிவரஞ்சனி
“யுவர் ஆனர் ஒரு பெண் அம்மா என்ற முறையில் நான் சில விஷயங்களை பேச நீங்க பெர்மிஷன் தர வேணும்” என தீபிகா லாயர் பேச வர அவரை ஜட்ஜ் கை காட்டி நிறுத்த சொல்லி விட்டு சிவரஞ்சனியை பேச சொன்னார். சிவரஞ்சனி
“யுவர் ஆனர் என் பெயர் சிவரஞ்சனி கிரண் வில்பர் ராஜ் நான் நர்ஸ் அதுவும் சில்ரன் செக்சன் ஓவ்வொரு பெண்ணும் பெண்ணாக உணர்வது தாய்மையின் போது தான் ஆனா அந்த தாய்மை எனக்கு மறுக்கப்பட்டு விட்டது… என்னால் கருவை தாங்க முடியாது இது எவ்வளவு பெரிய வலி தெரியுமா இந்த சமூகத்தில் இதற்கு கிடைக்கும் பெயர் மலடி எங்களை எந்த சுபகாரியத்திலும் முன்னெடுக்க விட மாட்டார்கள்… அப்படிப்பட்ட எனக்கு மகளாக வந்தாள் என் நிவி குட்டி என்னை முதல் சந்திப்பிலேயே மம்மி என அழைத்து நான் குழந்தையை சுமந்து பெறாமல் தாய் ஆக்கியவள் அவளுக்காக தான் எங்க பந்தத்தை நாங்க தொடங்கினோம்.
யுவர் ஆனர் வசதி இருந்தா மட்டும் பத்தாது எந்த குழந்தையாக இருந்தாலும் வளர்க்க அன்பும் மனசும் போதும் மிஸஸ் தீபிகா ஆகாஷ் ஒன்று உங்களை கேட்கிறேன் இதற்கு பதில் சொல்லுங்கள்...உங்க குழந்தைகளுக்கு பிடித்த கலர் என்ன, பிடித்த சாப்பாடு அவங்க எதற்கு அழுவாங்க கோபடுவாங்க என உங்களால் கூற முடியுமா” என கேட்க. தீபிகா அலட்சியமாக
“என்ன உன்னை போல நான் மிடில் கிளாஸ்சா ஹை கிளாஸ் அவங்களை வளர்க்க தான் என் மம், ஆயா வீடு நிறைய வேலைகார்கள் இருக்கிறாங்களே… பிறகு நான் இதை ஏன் தெரிந்து வைத்து கொள்ள வேணும் என ஜட்ஜ் அவளை முகம் மாற பார்க்க அவர் லாயர் தலையில் கை வைக்க. சிவரஞ்சனி சிரித்து விட்டு
“அப்போ அம்மா எதற்கு அவங்களை நீங்க தானே பெத்தீங்க பிறகு என்ன இது தான் ஹை கிளாஸ் இப்போ இந்த மிடில் கிளாஸ் சொல்கிறேன் கேளுங்க…என் பெண்ணுக்கு பிடித்த கலர் மஞ்சள் அவளுக்கு பிடித்த சாப்பாடு பூரி அவளுக்கு பிடித்த டாய்ஸ் முயல் பொம்மை அவள் தூங்கும் டைம் எட்டு மணி எழும் டைம் ஏழு மணி… அவளுக்கு தூங்கும் போது என் மேல் கை கால் போட்டு தூங்கும் பழக்கம் இருக்கு அவளுக்கு நான் என்றால் இஷ்டம் இது தான் அவள் நிவேதனா என் பெண்ணு இதில் ஒன்றை கூட உங்களால் சொல்ல முடியாத நீங்க என் பெண்ணை எப்படி வளர்பீங்க” என கேட்க தீபிகா தன்னிலை மறந்து
“நான் உன்னை போல பிச்சைக்காரியா டி கோடீஸ்வரி அவளை மட்டுமல்ல என் பிள்ளைகளை கூட ஹாஸ்டலில் தான் போட போகிறேன்” என கண்ணன் மனதில் சிரித்தார் மவளே மாட்டினாயா பேசாமல் சிவரஞ்சனி லாயராக வந்து இருக்கலாம் என்னமா பேசுகிறாள் என்று. சிவரஞ்சனி
“என்ன ஹாஸ்டலா இப்போ தானே பெண் குழந்தை அம்மா கிட்ட இருக்க வேணும் சித்தி அப்பா கிட்ட இருக்க கூடாது என்று சொன்னீங்க….பிறகு அது என்ன என் பெண்ணை அவள் என்று உங்கள் பிள்ளைகளை மட்டும் உரிமையாக என் பிள்ளைகள் என்று சொல்றீங்க அப்போ என் புருஷனை பழி வாங்க தான் நிவியை கேட்கிறீங்களா” என. தீபிகா ஆத்திரப்பட்டு
“ஆமாம் டி அந்த கிரணும் நீயும் சந்தோஷமாக இருக்க கூடாது உங்க பெண்ணை கேட்டு காலில் விழுந்து கதற வேணும் அதற்காக தான்…அவள் கிரணின் பெண் பிறகு எப்படி எனக்கு பாசம் வரும்” என. கண்ணன் ரைட் என் வேலை முடிந்தது என தீபிகா லாயர் இவளை போல ஆளுங்களுக்காக வாதாட வந்தேன் பாரு என் புத்தியை செருப்பால் அடிக்க வேணும் என நினைத்தார் கிரண் சிரித்தான் சும்மாவா என்னை திருமணம் செய்ததே நிவிக்கா தானே என. சிவரஞ்சனி
“யுவர் ஆனர் இது தான் இவங்க எல்லா சித்தியும் கெட்டவங்க கிடையாது எல்லா அம்மாக்களும் நல்லவங்க கிடையாது தாய்மை உள்ள எல்லோருமே ஏன் அன்பு காட்ட தெரிந்த திருநங்கைகள் கூட அன்னைகள் தான்… நாங்க இவங்களை போல பணக்காரங்க இல்லை தான் ஆனா என் பெண்ணை நடக்க வைக்க என்னால் முடியும் இப்போ தான் அவளை கேரளாவுக்கு அழைத்து போய் டிரிண்மெண்ட் செய்து கொண்டு வந்தோம்… நான் உங்க கிட்ட கேட்பது அதுவும் மடிப்பிச்சையாக கேட்பது ஒன்று தான் என் பெண்ணை என் கிட்ட கொடுத்து விடுங்க” என தன் முந்தானையை கையில் விரித்து வைத்து கேட்க அங்கு இருப்பவர்கள் கண் கலங்கியது ஜட்ஜ் தன்னை சரி செய்து கொண்டு தீர்ப்பு சொல்ல ஆரம்பித்தார்.
“இந்த கோர்ட் இரு தரப்பு பிரதி வாதங்களை நன்றாக அலசி ஆராய்ந்து பார்த்து சொல்லும் தீர்ப்பு இது பெற்றால் மட்டும் அன்னையாக முடியாது அதற்கு தாய்மை உணர்வு வேணும் தீபிகாவுக்கு அது துளி கூட இல்லை…ஆனா சிவரஞ்சனி மனதால் எப்பவோ நிவிதனாவுக்கு அன்னை ஆகி விட்டாங்க தீபிகா கிட்ட இருப்பதை விட குழந்தை சிவரஞ்சனி, கிரண் பாதுகாப்பில் இருப்பது தான் சிறந்தது...அதை இந்த கோர்ட்க்கு புரிய வைத்த சிவரஞ்சனிக்கு என் நன்றிகள் அடுத்து கோர்ட்ல் பொய் சொல்லி பழிவாங்க பயன்படுத்தி கோர்ட் நேரத்தை வீணாக்கி குற்றத்திற்காக தீபிகாவுக்கு கடும் எச்சரிகை விடுக்கிறது… தீபிகா தண்டப்பணம் இந்த கோர்ட்க்கு பணமாக கட்ட தேவையில்ல மூன்று மாதம் குழந்தை காப்பகத்தில் சேவை செய்ய வேணும் செய்ய தவறினால் மூன்று மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேணும் என இந்த கோர்ட் தீர்ப்பு அளிக்கிறது” என. சிவரஞ்சனி கை எடுத்து கும்பிட்டு விட்டு கூண்டில் இருந்து இறங்கி ஓடி வர நிவி வரலஷ்மி மடியில் இருந்து இறங்கி மம்மி என ஓடி வர அவளை தூக்கி அணைத்து முத்தமிட அந்த காட்சியை கோர்ட்டே நெகிழ்ச்சியான பார்த்தது.
கோர்ட் நிவேதனா கிரண் சிவரஞ்சனிடம் தான் இருக்க வேணும் என தீர்ப்பு அளித்து விட்டது…. சிவரஞ்சனி நிவேதனாவை தூக்கி முத்த மழை பொழிந்தாள் கண் கலங்க கிரண் அவர்களை அணைத்து கொண்டு வர. கண்ணன்
“சிவரஞ்சனி உண்மையை சொல்ல வேணும் என்றால் எனக்கு கூட கொஞ்சம் பயமாக இருந்தது தீபிகா கிட்ட குழந்தை போய் விடுவாளே என்று… ஆனா படிப்பு அறிவை விட தாய்மை தான் ஜெயித்தது நிவேதனாவுக்கு உன்னை விட சிறந்த அம்மா கிடைக்க மாட்டாள் நீங்க சந்தோஷமாக இருக்க வேணும் கடவுள் அருள் இருந்தால் உனக்கு அந்த தாய்மை வரம் கிடைக்கும் மா” என. பரஞ்ஜோதி
“நல்ல வார்த்தை சொன்னாய் கண்ணா தாய்மை என்பது ஒரு வரம் இது எங்கே அந்த தீபிகாவுக்கு புரிய போகிறது… நிச்சயமாக இந்த வரம் உனக்கு கிடைக்கும் மா மனிதர்கள் முடியாது என சொல்ல முடியும் ஆனா கடவுள் நினைத்தால் மட்டும் தான் அந்த முடியாது என்ற சொல்லை முடியும் என மாற்ற முடியும்” என. சிவரஞ்சனி
“வேணாம் அங்கிள் எனக்கு அந்த வரம் அது தான் எனக்கு கிடைத்து விட்டதே என் கண்ணம்மா என் நிவி அவள் மட்டும் எனக்கு போதும் கடவுள் கிட்ட நான் இப்போ வேண்டுவது என்ன தெரியுமா அங்கிள்… நான் எந்த காலத்திலும் அம்மாவாக கூடாது என் பெண்ணின் அன்பை பங்கு போட யாரும் வர கூடாது என் நெஞ்சில் அவளுக்கு மட்டும் தான் தூங்க இடம் வேற யாருக்குமே அந்த இடம் இல்லை” என கூறி விட்டு நிவியை தூக்கி கொண்டு போக போகும் அவளை தான் கிரண், பரஞ்ஜோதி, கண்ணன் பார்த்து கொண்டு இருந்தார்கள் அம்மா என்ற வார்த்தைக்கு இவள் தான் உருவம் கொடுத்து உள்ளாள் என்று.
சிவரஞ்சனி கிரண் வர முன் வரலக்ஷ்மிக்கு கிரண் கால் பண்ணி தங்கள் தீர்ப்பு விஷயத்தை கூறி இருந்ததால் சந்தோஷமாக தங்கத்தின் உதவியோடு ஆரத்தி கரைத்து ரெடி பண்ணி வைத்து இருந்தார்…. அவர்கள் வர ஆரத்தி எடுத்து வரவேற்றனர் கிரண், சிவரஞ்சனி அங்கு உள்ள காலனி பெண்களுக்கு நன்றி சொன்னார்கள் கிரண் நைட் டின்னர் தான் ஆடர் பண்ணுவதாக யாரும் சமைக்க வேணாம் இது எங்கள் அன்பு பரிசு என அவர்களும் சந்தோஷமாக நன்றி சொல்லி விட்டு போனார்கள்…. சிவரஞ்சனி உலகில் உள்ள மொத்த சந்தோஷத்தையும் அனுபவித்தவள் போல உணர்ந்தாள் அவர்கள் வாழ்க்கை வழமை போல நன்றாக போய் கொண்டு இருந்தது கிரண் சிவரஞ்சனி காதல் வாழ்க்கை சந்தோஷமாக இருக்க கிரண் ஏன் இவளை நான் முன்னே சந்திக்கவில்லை என நினைத்தான்.
இதற்கிடைய கிரண் சிவரஞ்சனி சொத்துக்கள் மேலே கேஸ் போட்டு அவளுக்கு வாங்கி கொடுத்தான் அவள் அப்பா, சித்தி,அவர் அண்ணால் ஒன்றுமே செய்ய முடியவில்லை காரணம் கிரண் அவன் ஏசிபி மட்டுமல்ல சிவரஞ்சனி சொத்துகள் சட்டப்படி ரெஜிஸ்டர் பண்ண பட்டு இருந்தது…. எக்ஸ் எம். எல். ஏ பரமாவை கிரண் அவன் பழைய கேஸ் எல்லாம் தோண்டி எடுத்து அவனை காஞ்சிபுரம் ஏசிபி மூலமாக மாட்ட வைத்து நிரந்தரமாக உள்ளே வைத்து விட்டான் காஞ்சிபுர சொத்துக்களை விற்று நிவி பெயரில் சென்னையில் பெரிய டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர் இரண்டு ஆரம்பித்து வரலஷ்மியை அதில் உரிமையாளராக போட்டு விட்டனர் அவருக்கு துணையாக யாரும் இல்லாத தங்கத்தை தங்க கூட வைத்து கொண்டனர்… சிவரஞ்சனி தன் டியூட்டி இல்லாத நேரம் மகளோடு இங்கே வந்து விடுவாள் அவள் நிவியை ஒரு நிமிடம் கூட பிரிய மாட்டாள் அன்று ஸ்டோருக்கு வந்து இருந்த பசங்களை நிவி பார்த்து கொண்டு இருந்தாள் அது அண்ணன் தங்கை அவர்கள் ஒன்றாக விளையாடி கொண்டு இருந்தனர் அந்த பெண் குழந்தை கூட நிவி விளையாட போக அந்த அண்ணகாரன் தன் தங்கச்சி கூட தான் மட்டும் தான் விளையாடுவேன் என அவளை தூக்க முடியாமல் தூக்கி கொண்டு போக… நிவி முகம் அழுகையில் மாறியது அவள் மம்மி என சிவரஞ்சனி கிட்ட போக பில் போட்டு கொண்டு இருந்த சிவரஞ்சனி சுமதி கிட்ட கொடுத்து விட்டு அவளை தூக்கி கொண்டு தன் ரூம்க்கு போனாள்…ஆம் தங்கள் காலனியில் உள்ள பெண்களுக்கு இங்கே சிவரஞ்சனி வேலை கொடுத்து இருக்க அவர்களும் சும்மா இருப்பதற்கு ஒரு வருமானம் வரும் என சந்தோஷமாக வேலையை ஏற்று கொண்டார்கள்.
சிவரஞ்சனி தன் ரூம் வந்து நிவியை மடியில் வைத்து கொண்டு அவள் கண்களை துடைத்து விட்டு அவள் கால் ஆராய்ந்தாள் எங்கேயும் விழுந்து விட்டாளா என்று ஒன்றும் காயம் இல்லாமல் இருக்க. சிவரஞ்சனி
“என்ன டா பட்டு குட்டி ஏன் மா அழுத தூக்கம் வருகிறதா இப்போ டாடி வொர்க் முடிந்து வருவார் நம்ம போகலாம் சரியாக” என. நிவி அவள் கழுத்தை கட்டி கொண்டு
“மம்மி எனக்கு விளையாட தம்பி தா” என கேட்க சிவரஞ்சனி முகம் மாற அவளை அணைத்து கொண்டு. “ஏன் மா தீடீரென பாப்பாவுக்கு தான் டாடி மம்மி, பாட்டி எல்லோருமே இருக்கிறோமே பிறகு என்ன” என கேட்க. நிவி
“இல்ல எனக்கு தம்பி வேணும் நீ தா அவன் அந்த பாப்பா கூட என்னை விளையாத விடவில்லை அது அவன் பாப்பாவாம்” என சிவரஞ்சனிக்கு புரிந்தது ஏதோ நடந்து இருக்கு என அவள் சிசிடிவி கேமராவில் பார்க்க… நிவி ஒரு மூன்று வயது உள்ள பெண் கூட கை தட்டி விளையாடி கொண்டு இருக்க ஒரு ஆறு, ஏழு வயது உள்ள பையன் நிவி கூட பேசி விட்டு அந்த குழந்தையை தூக்க முடியாமல் கொண்டு போவது தெரிந்தது. சிவரஞ்சனி
“பாப்பா அது ரொம்ப குட்டி பாப்பா தானே பசிக்கும் தானே அது தான் அவன் அவளை அம்மா கிட்ட தூக்கி போய் இருப்பான் சரி என் பட்டு கூட இப்போ விளையாட வேணும் மம்மி இருக்கிறேன் விளையாடுவோமா” என அவள் கூட விளையாடி மனதை மாற்றி விட்டோம் என நினைக்க குழந்தைகள் ஒன்றை நினைத்தால் பார்த்தால் லேசில் மறக்காது என அவளுக்கு தெரியவில்லை…வேலை முடிந்து கணக்கு எல்லாம் பார்த்து அனைவரும் கிளம்பிய பின் தான் கிரண் வர சிவரஞ்சனி அவன் கூட போவாள் அவன் இல்லாத நாளில் ஆட்டோ மாரி வருவான் ஆட்டோ மாரிக்கு சிவரஞ்சனி நிரந்தர வருமானத்தை ஏற்படுத்தி கொடுத்து இருந்தாள்… அவர்கள் கடைக்கு சரக்கு எடுக்க போகும் லாரி, டொம்போ ஓட்டும் வேலை, அந்த வேலை இல்லாத நேரத்தில் கடை பெண்களை அவர்கள் வீட்டுக்கு விடுவது என மாதம் சம்பளம் கொடுக்க அவரும் சந்தோஷமாக அந்த வேலையை செய்தார் வரலஷ்மி தங்கத்தை ஏர்லியாக மாரி வீட்டில் கொண்டு விட்டு விடுவான் கிரண் வர சிவரஞ்சனி கடையை பூட்டி வாட்ச்மேன் கிட்ட சொல்லி சரி பார்த்து விட்டு கிளம்பி வீட்டுக்கு வந்தாள்.
வரலக்ஷ்மி, தங்கம் நைட் டின்னர் செய்து வைத்து இருக்க அதை நிவிக்கு ஊட்டி அவர்களும் சாப்பிட்டு விட்டு தூங்க போக. நிவி
“மம்மி தம்பி பாப்பா எப்போ வருவான்” என கேட்க .தலையணைக்கு புதிய பில்லோ கவர் போட்டு கொண்டு இருந்த சிவரஞ்சனி லேப்டாப்பில் வேலை பார்த்து கொண்டு இருந்த கிரண் இருவருமே ஒரேய நேரத்தில் அவளை பார்க்க. சிவரஞ்சனி
“பட்டு மா என்ன டா மம்மி சொன்னேன் தானே பட்டு கூட விளையாட டாடி மம்மி பாட்டி தங்கம் பாட்டி இருக்கிறோம் என்று பிறகு எதற்கு டா தம்பி பாப்பா” என கேட்க. நிவி
“போ மம்மி நீ டாடி,பாட்டி, பிக் தம்பி பாப்பா ஸ்மால். பாட்டி என் கூட கண்ணா மூச்சி விளையாத மாட்டா நீ, டாடி வொர்க் போவ நிவி கூட தம்பி விளையாதும்” என .சிவரஞ்சனி
“சரி டா இனி பாப்பா கூட மம்மி ஓடி பிடித்து கண்ணாமூச்சி எல்லாம் விளையாடுகிறேன் சரியா என் பட்டு” என. நிவி
“நோ எனக்கு தம்பி பாப்பா வேணும் தா மம்மி” என அழ ஆரம்பிக்க கிரண் லேப்டாப்பை ஷாட் டவுண் பண்ணி விட்டு அவளை தூக்கி மடியில் வைத்து கண்களை துடைத்து விட்டு. கிரண்
“நோ என் பேபி குட் கேர்ள் அழ மாட்டாள் இப்போ என்ன தம்பி பாப்பா தானே சரி டாடி வாங்கி தருகிறேன் மம்மியை பாப்பா தொந்தரவு செய்ய கூடாது சரியா… மம்மி பாவம் தானே அது வரைக்கும் பேபி டாடி, மம்மி, பாட்டிங்க கூட விளையாடுங்க என்ன டாடி தம்பி பாப்பாவுக்கு ஆடர் கொடுக்கிறேன்” என நிவி டாய்ஸ் நினைவில் சரி என அவன் கன்னதில் முத்தமிட்டாள் அவளை தூங்க வைத்து விட்டு. சிவரஞ்சனி
“என்னங்க இது அவள் குழந்தை விஷயம் புரியாது தெரியாது உங்களுக்குமா தெரியவில்லை என்னால் எப்படிங்க குழந்தையை சுமக்க முடியும்” என கேட்க. கிரண்
“ரஞ்சனி எனக்கு தெரியும் மா ஆனா அவளுக்கு இப்போ டிரிட்மெண்ட் போய் கொண்டு இருக்கு மனதில் ஏக்கம் வர கூடாது அது உடல் நலத்தை பாதிக்கும்...அது மட்டுமல்ல அவள் நம்ம கிட்ட கேட்ட மாதிரி பொதுவில் கேட்டு விட்டாள் என்றால் உனக்கு சங்கடம் மா இதை விளக்கி கொண்டு இருக்க முடியுமா அது தான் என் கிட்ட கேட்பது போல வைத்தேன் சரி நீ யோசிக்காதே தூங்கு” என. சிவரஞ்சனி
“என்னங்க பாப்பா ஐந்து வயது பர்த்டே வருகிறது கொஞ்சம் பெரிதாக செய்யலாமா அவள் முதல் பிறந்த நாள் கூட நீங்க வீட்டில் செய்தாக சொன்னீங்க ஒரு ஹோட்டலில் செய்யலாம் எனக்கு ஆசையாக இருக்கு” என. கிரண்
“இதை கேட்க வேணுமா மா உன் ஆசையை நிறைவேற்றுவது என் கடமை செய்யலாம் மா நீ எங்கே எப்படி செய்ய வேணும் என சொல்லு ஏற்பாடு செய்கிறேன்…ஆனா அதற்கு எனக்கு நீ பரிசு கொடுக்க வேணும்” என. சிவரஞ்சனி
“போதும் பாப்பா இருக்கிறாள் நீங்க பரிசாக எதை கேட்பீங்க என தெரியும் பேசாமல் தூங்குங்க” என நிவியை அணைத்து கொண்டு தூங்க கிரண் சிரித்து விட்டு அவர்கள் இருவரையுமே அணைத்து கொண்டு தூங்கினான்…. நிவியின் பர்த்டே அடுத்த வாரம் என்று இருக்க ஒரு நல்ல வசதியான ஹோட்டலில் ஹால் புக் பண்ணி அங்கே பார்ட்டி வைப்பது என தீர்மானித்தார்கள் நிவிக்கு பிடித்த மஞ்சள் நீண்ட பார்ட்டி பிராக் அதில் பேபி பிங் கலரில் டிசைன் பண்ணி இருந்தது அவளைக்கு பிடித்த முயல் பொம்மை கேக் என எல்லாம் பார்த்து பார்த்து சிவரஞ்சனி செய்தாள்…. அவள் முகம் களைப்பை காட்டி உடல் மெலிய ஆரம்பிக்க கிரண் தொடக்கம் அந்த காலனி பெண்கள் வரை அவளை திட்டி ரெஸ்ட் எடுக்க சொன்னார்கள் அவள் இது எல்லாம் ஒரு வேலையா என் பெண்ணுக்கு செய்யாமல் வேற யாருக்கு செய்வது என கூறி எல்லா ஏற்பாடுகளும் செய்தாள்… நிவி பர்த்டே அன்று இரவு பன்னிரண்டு மணிக்கு அவளை எழுப்பி விஷ் பண்ணி அவளுக்கு கிரண் செயின் போட சிவரஞ்சனி வளையல், தங்க கொலுசு என போட்டு அவளுக்கு பிடித்த பெரிய சைஸ் முயல் பொம்மை கொடுத்தார்கள்… காலையில் வரலஷ்மி தங்க ஜிமிக்கு கம்மல் கொடுக்க தங்கம் பட்டு பாவடை சட்டை கொடுத்தார் அவர்கள் சர்ச் போய் கோவில் போய் விட்டு மதியம் ஹோட்டல் போய் சாப்பிட்டு விட்டு வந்தனர்…பிறகு வீட்டில் இருந்தே சிவரஞ்சனி அவளை அழகாக டிரஸ் பண்ணி அவளும் டிசைனர் சாரி கிரண் சேட் பேண்ட் டிரஸ் பண்ணி வரலஷ்மி தங்கம் கூட ஹோட்டல் போனார்கள்… அங்கே கிரண், சிவரஞ்சனி கூட வேலை பார்க்கும் ஆளுங்க பரஞ்ஜோதி, ரேவதி அவர்கள் மகன்கள் குடும்பம் காலனி ஆளுங்க, தெரிந்த ஆளுங்க என குறிபிட்ட சிலரை அழைத்து இருந்தனர் .
சரியாக ஆறு மணிக்கு பாட்டு பாடி கேக் கட் பண்ணி முதலில் தாய் தந்தை வரலஷ்மிக்கு ஊட்டி விட்டாள் நிவி அவர்களும் அவளுக்கு ஊட்டி விட்டனர்…பிறகு கேக் கட்டி பண்ணி ஹோட்டல் ஆளுங்களே சேவ் செய்து கொண்டு இருக்க அனைவருமே பேசி கொண்டு இருக்க… நிவியின் பிராக்கில் அவள் கேக் கிரீமை கொட்டி இருக்க அதை துடைக்க டிசு பேப்பர் எடுக்க போன சிவரஞ்சனி கண்கள் இருட்டி கொண்டு வர மயங்கி கீழே விழ நிவி மம்மி என சத்தம் போட பேசி கொண்டு இருந்த அனைவருமே திரும்பி பார்க்க… சிவரஞ்சனி மயங்கி கிடக்க ரஞ்சனி என கிரண் ஓடி வந்தான் தங்கம் தண்ணீர் கொடுக்க கிரண் அவள் முகத்தில் தெளிக்க அவள் மெதுவாக கண் விழித்தவள் கண்டது அழுது கொண்டு தன் அருகே நின்ற நிவியை தான். சிவரஞ்சனி
“அழாதே பட்டு மம்மிக்கு ஒன்றும் இல்ல பாரு ஓகே மம்மி டயர்ட்டாக இருந்தேனா அது தான் இப்போ நம்ம விளையாடலாம்” என அவளை அணைத்து கன்னதில் முத்தமிட அங்கே வந்து இருந்த டாக்டர் சிவரஞ்சனியின் டிபார்ட்ண்மெண்ட் ஸ்டோருக்கு ரெகுலராக வரும் டாக்டர் ஒருவர் அவரையும் சிவரஞ்சனி அழைத்து இருக்க வந்து இருந்தார்…அவர் சிவரஞ்சனி மெதுவாக எழுந்து சேரில் இருக்க .அந்த பெண் அவள் அருகில் வந்து
சிவரஞ்சனி “உங்க இடது கையை காட்டுங்க” என சிவரஞ்சனி யோசனையாக நீட்ட அவர் நாடி பிடித்து செக் பண்ணி பார்த்து விட்டு முகம் மலர அருகில் நின்ற நிவியின் கன்னதில் தட்டி விட்டு
“பேபி மம்மி உனக்கு பெரிய கிப்ட் தர போறாங்க என்ன சொல்லு பார்க்கலாம் பேபிக்கு தம்பி பாப்பா வர போகிறான்” என நிவி ஹே என கத்த… உண்மை தெரிந்த அனைவருமே அதிர்ச்சியாக நிற்க. சிவரஞ்சனி திக்கி திணறி கொண்டு
“டாக்டர் நான் எப்படி என்னால்” என. அந்த டாக்டர்
இதற்காக கேள்வி கடவுள் கிட்ட தான் சிவரஞ்சனி இருக்கு உங்க கேள்வியை அவர் கிட்ட கேளுங்க பட் நீங்க கர்ப்பமாக இருப்பது உண்மை நீங்க அம்மாவாக போகிறீங்க இரட்டை நாடி ஓடுகிறது… .நீங்க ஹாஸ்பிட்டில் போய் கன்பார்ம் பண்ணி கொள்ளுங்கள் என சிவரஞ்சனியின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது… .எந்த வரம் மறுக்கபட்டதோ அது இரண்டு மடங்காக அவளுக்கு கிடைத்து இருக்கு உண்மை தெரியாதவர்கள் கிரண் சிவரஞ்சனிக்கு வாழ்த்து சொல்ல மற்றவர்கள் கடவுள் அருளால் நல்லதாக நடக்கும் என வாழ்த்தினார்கள்…. வரலக்ஷ்மியால் இந்த சந்தோஷத்தை தாங்க முடியவில்லை தன் பேத்திக்கு கல்யாணம் குழந்தை கனவு என நினைத்து இருக்க எல்லாம் கிடைத்து இருக்கு பார்ட்டி முடிய நிவியை வரஷல்மி கூட வீட்டில் விட்டு விட்டு சிவரஞ்சனி வேலைக்கு போகும் ஹாஸ்பிட்டல் அழைத்து போய் காட்ட… . அவர்கள் டெஸ்ட் எடுத்து அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என கன்பார்ம் பண்ணி சொல்ல. சிவரஞ்சனி அவளை செக் செய்த டாக்டரிடம்
“டாக்டர் எனக்கு இந்த குழந்தை வேணாம் பீளிஸ் அபார்ஷன் பண்ணி விடுங்க” என கிரண் மட்டுமல்ல அவளை செக் செய்த டாக்டரும் அதிர்ச்சியாக அவளை பார்த்தார்.
சிவரஞ்சனி குழந்தையை அபார்ஷன் செய்ய சொல்ல அங்கே இருந்த டாக்டர் ,கிரண் அதிர்ந்தனர். கிரண் கோபமாக
“ரஞ்சனி ஆர் யு மேட் என்ன பேசுகிற நம்ம குழந்தையை அபார்ஷன் பண்ண சொல்கிற நீ ஒரு அம்மாவா” என கேட்க. கிரண் சிவரஞ்சனி திருமணம் விஷயம் தெரிந்த டாக்டர் மாலதி இது சிவரஞ்சனிக்கு முதல் குழந்தை என்று தெரியும் அதனால் அவர் கூட கொஞ்சம் கோபமாக. மாலதி
“சிவரஞ்சனி என்ன இது நீ ஒரு நர்ஸ் இப்படி பேசலாமா அதுவும் சில்ரன் வார்ட்டில் டியூட்டி பார்ப்பவள் என்ன இது எதற்காக இப்போ இப்படி சொன்ன… .என்ன ப்ராபிளம் உனக்கு இது உன் முதல் குழந்தை ஸ் ஏ மெடிக்கல் மிராக்கிள் டாக்டர் முடியாது என சொன்ன விஷயத்தை கடவுள் முடியும் நடத்தி காட்டி இருக்கிறார் பிறகு நீ அதை எப்படி பாதுகாக்க வேணும்” என. சிவரஞ்சனி
“டாக்டர் நான் எதற்காக சொல்கிறேன் என உங்க இரண்டு பேருக்குமே இன்னும் புரியவில்லையா நான் ஏற்கெனவே அம்மா என் பெண்ணுக்கு... இந்த குழந்தை அவளுக்கு இடைஞ்சலாக வர கூடாது அவள் பாசத்தை யாருமே பங்கு போட விட மாட்டேன் எனக்கு அவள் தான் முக்கியம் எனக்கு இது வேணாம் பீளிஸ் இதை அபார்ஷன் பண்ணி விடுங்க என” ஏய் என கிரண் அடிக்க கை ஓங்க. மாலதி
“மிஸ்டர் கிரண் கன்ட்ரோல் யுவர்செல்ப் என்ன இது ஒரு பெண்ணை அதுவும் தாலி கட்டி உங்க குழந்தையை சுமந்து கொண்டு இருப்பவளை கை ஓங்குகிறீங்க.. .புருஷன் என்றால் என்ன வேணும் என்றாலும் செய்யலாமா அதுவும் நீங்க ஒரு போலீஸ் பிகேவ் யுவர்செல்ப் முதலில் பேசலாம்” என. கிரண்
“டாக்டர் என்ன பேச சொல்கிறீங்க ஆ இது என் புள்ள டாக்டர் உங்களுக்குமா என் வலி தெரியாது. ...ஒரு உயிரை கொல்வது பாவம் என நர்ஸ்சாக இருக்கும் இவளுக்குமா தெரியாது” என கேட்க. மாலதி
“ஓகே நான் பேசுகிறேன் லுக் சிவரஞ்சனி இப்போ நான் டாக்டராக மட்டுமல்ல ஒரு பெண்ணாக அம்மாவா பேச போகிறேன் முதல் குழந்தை பிறந்த எல்லோருமே இரண்டு மூன்று குழந்தைகள் பெற்று கொள்வது இல்லையா ஏன் அவர்களுக்கு தங்கள் முதல் குழந்தை மேல் பாசம் இல்லை என்றா நினைக்கிற…அவங்களை அப்பா அம்மா ஆகியது அந்த குழந்தை எல்லா வீட்டிலும் பாரு எத்தனை குழந்தை இருந்தாலும் கூட முதல் குழந்தை தான் ஸ்பெஷல்… அதற்காக கடவுள் தருவதை அழிக்க நீ யாரு அதுவும் கூட எப்படி பட்ட வரம் இந்த குழந்தை உன்னால் சுமக்க முடியாது என்று இருந்ததை மாற்ற வந்த குழந்தை மா.. .உனக்கு தெரியும் எத்தனை பேர் இந்த குழந்தைக்காக தவம் இருக்கிறாங்க என்று அதுவும் நீ உயிரே வைத்து இருக்கும் உன் பெண்ணோட ஆசை அவள் தம்பி பாப்பா இவன் நீ அவள் கிட்ட சும்மா பேசி பாரு இந்த குழந்தை வேணாம் என்று பிறகு அவள் சொல்லும் பதிலை வைத்து என்ன செய்யலாம் என யோசிப்போம்” என. கிரண் பேச வர மாலதி கண் காட்டினார் அவர் பார்த்து கொள்வதாக கிரணுக்கு அவளை அடிக்கும் கோபம் இருந்தது ஆனா அதை கட்டுபடுத்தி கொண்டு மெதுவாக அவளை வீட்டுக்கு அழைத்து வந்தான். இவர்கள் வரவை ஆவலாக எதிர்பார்த்தது கொண்டு இருந்தனர் வரலஷ்மி, தங்கம், நிவி.
இவர்கள் உள்ளே வர நிவி தான் முதலில் வரலஷ்மி மடியில் இருந்து இறங்கி மெல்ல மெல்ல ஓடி வந்தாள்.நிவி
“மம்மி தம்பி பாப்பா எங்கே பாட்டி சொன்னா அவன் வருவான் என எங்கே மம்மி” என கேட்க. கிரண் சிவரஞ்சனியை முறைத்து விட்டு நிவியை தூக்கி கொண்டு
“பேபி உங்க மம்மிக்கு தான் உன் தம்பி பாப்பா பிடிக்கவில்லை போல அது தான் வேணாம் என சொல்லி விட்டாள்” என நிவி முகம் அழுகைக்கு மாற. நிவி
“டாடி என் தம்பி பாப்பா எங்கே தா மம்மி எனக்கு வேணும்” என அழ ஆரம்பிக்க சிவரஞ்சனி அவளை கிரண் கிட்ட இருந்து வாங்கி…அவளை மெதுவாக தூக்கி சோபாவில் அவள் இருந்து நிவியை மடியில் இருக்க வைத்து கொண்டு அவள் கண்களை துடைத்து விட்டு
“பாப்பா மம்மி ஒன்று கேட்பேன் நீ மம்மிக்கு பதில் சொல்ல வேணும் சரியா பிறகு உன் தம்பி பாப்பா வருவான்” என. நிவி சரி என தலையாட்ட சிவரஞ்சனி
“உனக்கு தான் மம்மி இருக்கிறேனே பட்டு பிறகு எதற்கு தம்பி பாப்பா மம்மிக்கு என் குட்டி மட்டும் போதும் அவன் வேணாம்” என. வரலஷ்மி தங்கம் அதிர்ச்சியாகி கிரண் முகம் பார்க்க அவன் முகம் கல்லாகி இருந்தது. நிவி
“நோ நோ எனக்கு மம்மி பர்ஸ்ட்,டாடி ,தம்பி பாப்பா, பாட்டி அவன் என் தம்பி பாப்பா நான் அவனை யாருக்குமே கொடுக்க மாட்டேன் மம்மி தம்பி எப்ப வருவான்” என .சிவரஞ்சனி கண் கலங்க அவளை அணைத்து கொண்டு
“சீக்கிரமாக வருவான் மா உன் தம்பி பாப்பா உனக்காக இப்போ மம்மி வயிற்றில் பத்திரமாக இருக்கிறான் பாரு” என. நிவி சிவரஞ்சனி வயிற்றை தடவி முத்தம் கொடுத்து விட்டு மெதுவாக வயிற்றில்
“தம்பி பாப்பா சீக்கிரமாக வா நிவி பாப்பா கூட விளையாடுவோம்” என அங்கு இருப்பவர்கள் கண்கள் கலங்கியது…கிரண் கிட்ட வரலஷ்மி ஹாஸ்பிட்டலில் என்ன நடந்தது என கேட்க அவன் சிவரஞ்சனி அபார்ஷன் பண்ண போனதை சொல்ல நிவி தெரியாமல் நன்றாக சிவரஞ்சனிக்கு கொடுத்து கட்டினார்… இனி இது போல நடந்து கொண்டால் நீ பாட்டியை உயிரோடு பார்க்க மாட்ட என…. சிவரஞ்சனி அழுது ஒருவாறாக அவர் கிட்ட மன்னிப்பு கேட்டாள் நைட் தூங்க தங்கள் ரூம்க்கு வர நிவி தூங்கி இருக்க கிரண் யன்னல் அருகே இருந்து வெளியே பார்த்து கொண்டு இருக்க அவன் இறுகி போய் இருப்பது அவன் உடல் விரைப்பில் தெரிந்தது... சிவரஞ்சனி வந்தது தெரிந்தும் அவன் திரும்பவில்லை சிவரஞ்சனி மெதுவாக அவன் தோள் மேல் கை வைத்து என்னங்க என சட்டென அவள் கையை தட்டி விட்டு அவள் புறம் திரும்பாமல் .கிரண்
“மரியாதையாக போய் விடு என் பிள்ளையை அழிக்க பார்த்தவள் கிட்ட நான் பேச விரும்பவில்லை…என் பிள்ளையை இன்று என் பெண்ணு தான் காப்பாற்றி இருக்கிறாள் தன் தம்பியை தன் அம்மா கிட்ட இருந்து… இனி நமக்குள்ளே எந்த பேச்சு வார்த்தையும் இல்லை நம்ம குழந்தைகள், பாட்டி, ஊர் உறவுக்காக தான் நடிப்போம் புரிகிறதா” என சிவரஞ்சனி சட்டென அவன் முதுகு பக்கமாக அணைத்து கொண்டு…அவன் முதுகில் முகம் பதித்து மெல்ல அழ அவள் கண்ணீர் அவன் முதுகை நனைத்தது. சிவரஞ்சனி
“எல்லாம் தெரிந்த நீங்களே என்னை வெறுக்கலாமா எனக்கு உங்களை விட்டால் யாரு இருக்கா எனக்கு நம்ம பெண்ணு தான் முக்கியமாக தெரிந்தாள்… அது தான் அவள் அன்பை பங்கு போட இவன் வந்து விடுவான் என நினைத்தேன்…ஆனா அவள் இவன் மேலே உயிரே வைத்து இருப்பான் என எனக்கு தெரியாது” என அழ கிரண் சட்டென திரும்பி அவளை அணைத்து கொண்டான். கிரண்
“நீ இப்படி சொல்லமா ரஞ்சனி நம்ம காதலின் பரிசு இல்லையா நம்ம பையன் நம்ம பெண்ணு தன் தம்பியை வெறுப்பாள் என எப்படி நீ நினைக்கலாம் உனக்கு உன் பெண்ணு முக்கியம் என்றால் அவளுக்கு தன் தம்பி முக்கியம்.. இனி நீ நம்ம பெண்ணை பார்த்து கொண்டால் நான் நம்ம பையனை பார்த்து கொள்வேன் இவங்க இருவருமே நம்ம ரத்தம் மா... உன்னை என்னை போல தான் வருவாங்க நீ அபார்ஷன் பண்ண போவதாக சொல்ல எனக்கு அந்த ராட்சசி தான் நினைவுக்கு வந்தாள்…நீ என் தேவதை மா அவளை போல நீ இருக்க கூடாது வேணாம் நான் உங்க மூன்று பேரையுமே பார்த்து கொள்வேன்” என அவளை அணைத்து கொண்டான்.
அதன் பின் கிரண் சிவரஞ்சனி தங்கள் புது வரவை மகிழ்ச்சியாக எதிர்பார்க்க நிவி இவர்களுக்கு மேலே தன் பொம்மைகளை கொண்டு சிவரஞ்சனி வயிற்றுக்கு கிட்ட விளையாட்டு காட்டுவாள்….சிவரஞ்சனி வயிற்றை கிரணை கூட தொட்டு பார்க்க விட மாட்டாள் தன் தம்பி பாப்பாவுக்கு வலிக்கும் என கிரண், வரலஷ்மி, தங்கம் மட்டுமல்ல அந்த காலனி பெண்கள் ரேவதி கூட அவளுக்கு பிடித்த சாப்பாடு செய்து கொண்டு பார்த்து விட்டு போவார்கள்… சிவரஞ்சனி வயிறு பெரிதாக நிவி பயந்து போக சிவரஞ்சனி தான் தம்பி பெரிதாகிறான் சீக்கிரமாக வர போகிறான் என சொன்னாள் நாட்கள் நகர மாதங்கள் கிட்ட வரலஷ்மி ஆசைபடியே கிரண் அவளுக்கு ஏழாம் மாதத்தில் ஊர், உறவுக்கு சொல்லி வளைகாப்பு செய்தான்... சிவரஞ்சனி சொல்லி விட்டாள் நிவிக்கும் இந்த குழந்தைக்கும் எந்த வேறுபாடு காட்ட கூடாது நிவி மனதில் சிவரஞ்சனி பெண்ணு இல்லை என ஏக்கம் வர கூடாது இருவருக்குமே எல்லாம் சமமாக இருக்க வேணும் அதனால் அவனை நிவி போல பாப்டைஸ் பண்ண சொல்லி விட்டாள்.
கிரண், சிவரஞ்சனியின் மகன் ஒன்பதாம் மாதத்தில் தன் அக்காவை காண பூமிக்கு வந்து விட்டான் கிரணின் கம்பீரமும் நிவியின் சாயலையும் கொண்டு பிறந்து இருந்தான் கிரண், சிவரஞ்சனி விட நிவி தான் என் தம்பி பாப்பா என அவன் கூடவே அதிக நேரம் செலவழித்தாள்… ஒரு நல்ல நாளில் கிரணின் மகனுக்கு சர்ச்ல் ஞாஸ்தானம் கொடுத்தார்கள் அவனுக்கு அட்ரியன் நிருபன் ராஜ் என்று பெயர் சூட்டபட்டது… அட்ரியன் என்பது அவனோட ஞானஸ்தான பெயர் அட்ரியன் மற்றது அவன் பெயர் நிவேதனா பெயர் கொண்டு வர வேணும் என்று நிருபன் என வைத்து இருந்தார்கள்…அனைவரும் வந்து அவனை வாழ்த்தி விட்டு போனார்கள் சிவரஞ்சனிக்கு அனைவரை விட நிவேதனா தான் முக்கியம் அவள் பால் கொடுக்க மற்ற வேலைகளை நிருபனுக்கு செய்வாள் அவனை முழுதாக பார்ப்பது என்றால் கிரண்,வரலஷ்மி, தங்கம் தான்… சிவரஞ்சனி நிவேதானா கூடவே சுற்றி திரிந்தாள் நிவிக்கு இப்போ எல்லாம் நிருபன் தான் முக்கியமாக பட்டான் அவன் அழுதால், சிணுங்கினால் எல்லோருக்கும் முன் ஓடி போய் அவனை தூக்க முடியாமல் மற்றவர்களை விரட்டுவாள்… என் தம்பி பாப்பா ஏன் அழகிறான் பசிக்கும் ,பாட்டு பாடுங்க என அனைவருக்குமே அதில் சிரிப்பு வந்தாலும் கூட அவள் பாசம் கண்டு வியப்பார்கள்... சிவரஞ்சனி நிவி வளர்ந்து வருவதால் இனி அவளுக்கு தன் தேவை வேணும் என நர்ஸ் வேலையை விட்டு விட்டாள் கிரண் சம்பளம் அதை விட அவன் அப்பா அம்மா வழி பணம் சிவரஞ்சனி டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர் பணம் என தாரளமாக வரும் போது எதற்காக குழந்தைகள் தனியாக இருந்து கஷ்டபட வேணும் .
நிருபனுக்கு அக்காவின் அருகாமை, குரலுக்கு நன்றாக பழகி இருந்தான் அவள் ஸ்கூல் விட்டு வந்த சத்தம் கேட்டால் போதும் வாசலை பார்த்து அழ தொடங்கி விடுவான் தன்னை பார்க்க தூக்க சொல்லி… இனி அவள் உடை மாற்றாமல்,சாப்பிடாமல் அவன் கிட்ட வந்து விளையாட்டு காட்டி கொண்டு இருக்க சிவரஞ்சனி தான் அவளுக்கு உணவு ஊட்டி விடுவாள்... கிரண் தன் போலீஸ் வேலையில் சாதித்து கொண்டு இருந்தான் பரஞ்ஜோதி தனக்கு பிறகு கமிஷனர் போஸ்ட்க்கு இவனை ரெக்கமெண்ட் செய்தார் தீபிகா இங்கே இருந்தால் இன்னும் வேற பிரச்சனையை கொண்டு வருவாள் இனி அவமானபட முடியாது என்று .மகேஷ் ,ராணி முடிவு எடுத்து பிசினஸ் எல்லாம் விற்று ஆகாஷ், தீபிகா குழந்தைகளை அழைத்து கொண்டு லண்டனில் செட்டில் ஆகிவிட்டனர்.
இவர்கள் வாழ்க்கை நன்றாக போய் கொண்டு இருக்க நிருபனின் முதல் பிறந்த நாள் வந்தது கிரண் சிலதை தீர்மானித்து பிள்ளைகள் பெரிதாகுவதால் தனி வீடு கட்டி மகனின் முதல் பிறந்த நாளை அங்கே கொண்டாடினான்… அவன் வேலைக்கு தன்னால் மற்ற காலனியில் உள்ள வீடுகளுக்கு ஆபத்து வர கூடாது தனி வீடு என்றால் பாதுகாப்பை அதிகப்படுத்தலாம் என எல்லாம் யோசித்து தான் செய்தான்… காலனி ஆளுங்களை பிரிவது கஷ்டமாக இருந்தாலும் பிள்ளைகள் எதிர்காலத்திற்காக சென்றனர் கிரண் அந்த வீட்டை தந்தை ஞாபகமாக இருக்க வேணும் என்பதற்காக அதை விற்காமல் வாடகைக்கு விட்டான் அந்த பணத்தை தாய் தந்தை பெயரால் இல்லங்களுக்கு கொடுத்தான்... நிருபனின் பர்த்டே பார்ட்டிக்கு வழமை போல அனைவைருமே அழைத்து இருந்தனர். அவனுக்கு பாட்டு பாடி கேக் வெட்டி ஊட்ட சொல்ல அவன் தன் அருகே இருந்த நிவிக்கு ஊட்ட அனைவருமே ஆச்சரியமாக பார்க்க சிவரஞ்சனி தூக்கி வைத்து கொண்டு இருந்த நிவியின் கன்னதில் முத்தமிட்டு விட்டு .
“என்ன இதில் ஆச்சரியம் இவளை அன்பு செய்யாமல் யாரால் இருக்க முடியும் என் வாழ்க்கையை முழுமையடைய செய்த என் கண்ணம்மா இவள்... பாரதியார் சொன்னது போல என் பிள்ளை கனியமுதேஎன் கண்ணம்மா அது தான் அவனுக்கு என்னை விட அவன் அக்கா முக்கியம்…எனக்கு என் வாழ்க்கையே என் குட்டி கண்ணம்மா தான் அவள் இல்லை என்றால் இந்த சிவரஞ்சனி இல்லை” என அவள் பாசம் பார்த்து வந்து இருந்த அனைவருமே பிரமித்து போக… நிவி சிவரஞ்சனின் கன்னதில் முத்தமிட கிரண் மகனை தூக்கி கொண்டு அவர்களை அணைத்தவாறே நிற்க அதை போட்டோ கிராபர் அழகாக படம் பிடித்தார்.