இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

குளிர்ச்சியான கேழ்வரகு கூழ்

Rajasree Murali

New member

வணக்கம் நட்புகளே 🌞🌞🌞🌞🌞🌞🌞இவரின் வெப்பத்தின் சீற்றம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. ஆனால் இவரின் கடாக்ஷமும் நமக்கு தேவைப்படுகிறது 😄. மார்ச் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை உடல் உஷ்ணத்தில் இருந்து நம்மை காத்துக் கொள்ள காலை உணவாக கேழ்வரகு கூழ் எடுத்துக் கொண்டால் நல்லது. (நாங்கள் இதை தான் 10 வருடங்களாக கோடைக்கால காலை உணவாக எடுத்துக் கொள்கிறோம்).

முதல் நாள் இரவு ஒருவருக்கு 3 ஸ்பூன் கேழ்வரகு மாவை சிறிது உப்பு சேர்த்து 1/2டம்ளர் தண்ணீர் விட்டு கரைத்து கொண்டு 3டம்ளர் கொதிக்கும் தண்ணீரில் ஊற்றி அடுப்பில் வைத்து கைவிடாமல் 2 நிமிடங்கள் கிளறினால் கெட்டியாகி விடும். காலை சில்லென்ற மோர் விட்டு நன்கு கரைத்து கொண்டு வெங்காயம், அல்லது மாவடு அல்லது சீரகம், ஓமம் (சம அளவு) வறுத்து பொடித்தது கலந்து 3டம்ளர் வீதம் எடுத்து கொண்டால் உடம்பிற்கு குளிர்ச்சி, (இரும்பு) சத்தும் கிடைக்கும்.IMG-20220504-WA0036.jpg

 
Last edited:
Top