இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

உனது உயிரில் எனது கவிதை - அத்தியாயம் 31 (Last episode)

vishwapoomi

Moderator

"என்னடி இது அநியாயமா இருக்கு? கல்யாணத்துக்கு முன்னே அவனுடன் அவன் ரூமில்தான் தங்குவேன் என்று ஒத்தை காலில் நின்ன. கல்யாணத்துக்கு பிறகு நான் தனி ரூமில்தான் இருப்பேன்னு ஒத்தை காலில் நிக்குற. உண்மையாலுமே உன்னை வச்சிக்கிட்டு என்னால் சமாளிக்க முடியல. இரண்டாவது வரும் மருமவளையாவது கொஞ்சமாவது சொல் பேச்சு கேட்கிறவளா பாத்து கொண்டு வாங்கடா. எதுக்கு ஆம்பிளை பிள்ளைகளை பெத்தொமுன்னு புலம்ப வச்சிட்டா இவ. அக்னி நீயாவது ஏதாச்சும் சொல்லேண்டா." என்றார் ஜானகி ஆத்தாமையுடன்.​

"உங்க அண்ணன் மகள் நான் சொன்னவுடன் சரின்னு கேட்டுட்டுதான் அடுத்த வேலை பார்ப்பா. அவட்ட அடிப்பட என்னால் முடியாது. நீங்க இந்த வீட்டில் நிம்மதியா இருக்கணுமுன்னா அவளை அவ போக்கிற்கு விடுங்க. என்னிடம் எதையும் கேட்காதிங்க. எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் ரூம் கதவு எப்பவும் திறந்துதான் இருக்கும். அவ விருப்பப்படும் போது வரட்டும்." என்று அவன் முடித்துவிட​

"அப்புறம் என்னத்தே? என் புருஷனுக்கே நான் தனியா இருக்கிறதிலே வருத்தம் இல்ல, உங்களுக்கு ஏன் இவ்வளவு வருத்தம்?" என்றாள் அவள். அவள் பேச்சில் இருந்த குத்தல் அக்னிக்கு புரியாமல் இல்லை. இத்தனை நாளில் இவளைப்பற்றி அவன் அறிந்தது அவள் கெஞ்சினால் மிஞ்சுவாள், மிஞ்சினால் கெஞ்சுவாள் என்பதுதான். 'ஆடுடி ஆடு, எதுவரைக்கும் ஆடுறன்னு பார்க்கிறேன்.' என்று வீராப்புடன் அவன் முகத்தை திருப்பிக்கொண்டான்.​

"கடவுள்தான் என்னை காப்பாற்ற வேண்டும். நீங்க என்னை பாட்டியாக்கிடிவிங்கன்னு நான் கனவு கண்டுட்டு இருக்க வேண்டியதுதான்." என்றார் ஜானகி பெருமூச்சுடன்.​

மீண்டும் தொடங்கியது நிருதியாவின் ஆட்சி அந்த வீட்டில். அர்னிக்கும் அவளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை அங்கே. அர்னியை சேர்த்துக்கொண்டு அவள் கொட்டம் அடிக்க,வெளியே அவர்கள் சென்றால் காவல் காக்கும் வேலையை மட்டும் அண்ணனும், தம்பியும் செய்தார்கள். வீட்டில் உள்ள எல்லோரிடமும் அவள் நன்றாக பேசி பழகுவாள். ஆனால் அக்னியை மட்டும் எட்ட நிறுத்தியிருந்தாள். அவன் அத்தானாக இருக்கும் போது கூட நன்றாக பேசி பழகினாள். இப்போ எதுவுமே இல்லை. அவன் மாடியில் இருந்தால் இவள் கீழே இருப்பாள், அவன் கீழே இருந்தால் இவள் மாடியில் இருப்பான். ஜானகிக்கு இது பெரிய வருத்தம். ஆனால் குழந்தையாக குதித்துக்கொண்டு இருக்கும் மருமகளை என்ன செய்ய என்று அவருக்கே தெரியவில்லை. மகனிடம் கூட பேசி பார்த்தார்.​

"அக்னி அவதான் சின்ன பொண்ணு, நீயாவது அவக்கூட கொஞ்சம் ஒட்டுதலா இருக்க கூடாதா?" என்று கேட்டார்.​

"அவ கால பிடிக்க சொல்றிங்களா என்னை" என்று சிலுப்பிக்கொண்டு போய்விட்டான் அவன். அவனுக்கு கோபமும், வருத்தமும் சேர்ந்து இருந்தது. அவனும் பிடிவாதமாகவே இருக்க ஜானகிதான் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார். இவரின் வேதனை கடவுளுக்கு புரிந்து சென்னையில் மழை கொட்டி தீர்ந்தது. அடித்த வெயிலில் மழை வந்து மண்ணை குளிர வைக்க அதில் ஆட்டம் போட்டு காய்ச்சலை இழுத்துவைத்துக்கொண்டாள் நிருதியா.​

காய்ச்சல், சளி, ஜலதோஷம் என்று எல்லாமும் மொத்தமாக வர இதை வச்சாவது அவளை மகன் அறைக்கு அனுப்பிவிட வேண்டும் என்று நினைத்தார் ஜானகி. எங்கேயாவது ஊருக்கு சென்றுவிடலாம் என்று கூட யோசித்தார். அவர் இங்கே இருந்தால் பிறகு எப்படி மருமகள் மகனை தேடி போவாள் என்று அவர் யோசிக்க நிருதியாவோ மாமியாரை தேடாமல் அக்னி அறையின் கதவை கூட தட்டாமல் "அத்தான்.." என்று வெளியே வராத குரலுடன் பெட்ஷீட்டால் தன்னை மூடிக்கொண்டு சிறு பிள்ளை போல உதட்டை பிதுக்கிக்கொண்டு போனாள் அவன் அறைக்கு.​

அப்போதான் வந்திருந்தவன் டையை தளர்த்திவிட்டுக்கொண்டு கொஞ்சம் ரிலாக்ஸாக சோபாவில் சாய்ந்திருந்தான்.​

"அத்தான்" என்று அழைத்துக்கொண்டே இவள் போக ஒரு நிமிசம் அவள் கோலத்தை பார்த்து திகைத்தவன்​

"என்னடா? வா" என்று இரண்டு கையையும் விரித்தான்.​

"அத்தான் பாப்பாவுக்கு காய்ச்சல் அடிக்கு." என்றாள் இவள் சினிங்கிக்கொண்டே . அவன் மடியில் போய் இருந்து அவன் கழுத்தை கட்டிக்கொண்டாள். பெட்ஷீட்டை தாண்டியும் அவள் உடல் சூடு அவனை சுட்டது.​

"மழையில் குளிச்சிதானே இழுத்துவச்சிருக்க." என்றவன் அவளை இறுக்கமாக அணைத்துக்கொண்டான்.​

"இருமல் இருமலா வருது, கண்ணெல்லாம் எரியுது, ரன்னிங் நோஸ் வேற. கஷ்டமா இருக்கு அத்தான்." என்றவள் லேசாக அழ ஆரம்பிக்க​

"செல்லம் அழ கூடாது. டாக்டரை வர சொல்றேன். ஒரு ஊசி போட்டு டேபிலேட் போட்டா காய்ச்சல் போயிடும். அம்மாவை சூப் வச்சு தர சொல்றேன் சளி போயிடும் சரியா." என்றவன் டாக்டருக்கு போன் போட்டான். நிருதியாவுக்கு காய்ச்சல் என்று மகனிடம் சொல்ல படி ஏறி வந்த ஜானகி நிருதியாவே இவன் அறைக்கு செல்லவும் கீழே சென்றுவிட்டார் தனக்கு இங்கே வேலை இல்லை என்று.​

நிருதியாவுக்கு எல்லாம் சரியாக மூன்று நாள் எடுத்துக்கொண்டது. அதுவரை அக்னியை விட்டு ஒரு நொடி கூட அவள் அங்கே இங்கே அகலவில்லை. அத்தான்...அத்தான் என்று எதையாவது புலம்பிக்கொண்டே இருப்பாள். இவனும் சலிக்காமல் அவளுக்கு பதில் சொல்லிக்கொண்டு இருப்பான். அவனை அப்பிக்கொண்டு இருப்பவள் திடீரெண்டு அவன் கன்னத்தில் முத்தம் கொடுப்பாள். இவன் திரும்பி பார்க்க ஏதாவது யோசனைக்குள் போய்விடுவாள். அவள் இப்படி ஆரம்பிக்க இவன் அதை முழுதாக முடித்தான். இருந்தால் முத்தம், நடந்தால் முத்தம், முத்தம் முத்தம் என்று கமல் ஸ்டைலில் பேசும் படி நடந்துக்கொண்டான். எல்லாமே கன்னத்தில் மட்டும்தான்.​

நன்றாக தேறிய பிறகு "அத்தான் நான் என் ரூமுக்கு போகட்டா" என்று தயங்கியபடி கேட்டாள் நிருதியா. அவளை ஒரு நொடி பார்த்தவன் "போ" என்றான்.​

"போயிடுவேன்" என்றாள்.​

"போன்னுதான் சொன்னேன்" என்றான். அவளும் போய்விட்டாள். அதன் பிறகு அக்னி நடவடிக்கையில் ஏக மாற்றம். வீட்டில் இருப்பதையே தவிர்த்தான். ஒரு வேளை சாப்பாட்டையே வீட்டில் சாப்பிடுவது பெரிதாக இருந்தது. சாய்ஜித் எப்போதும் போல ஆபிஸ் முடிந்ததும் வீட்டுக்கு வந்துவிட அக்னி வெகுநேரம் கழித்தே வந்தான். அவனை வீட்டில் பார்ப்பதே கஷ்டமாக இருந்தது.​

"சாய் அண்ணன் புதுசா எதுவும் தொழில் தொடங்கியிருக்கானா?" என்று அருணாச்சலம் சின்ன மகனிடம் கேட்டார்.​

"உங்களிடம் சொல்லாமல் எதுவும் செய்யவானாப்பா?" என்றான் அவன்.​

"உன் மகனை வீட்டில் பார்த்தே ஒரு வாரம் ஆகிறது, வீட்டுக்கு வருகிறானா இல்லையா?" என்று ஜானகியிடம் கேட்டார் அருணாச்சலம்.​

"யாருக்கு தெரியுது. எப்போ வரான், போறான் என்றே தெரியல. பழைய மாதிரி ஆகிட்டானோ என்னவோ?" என்று ஜானகி வேதனையுடன் சொல்ல​

"ஏன் உன் மருமகள் எங்கே போனாள்?" என்றார் அவர்.​

"என்னத்த சொல்ல? இரண்டும் சண்டை போட்டுட்டு இப்படி இருக்குதுங்களான்னும் தெரியுல." என்றார் ஜானகி. மருமகள் மீது கோபம் வந்தாலும் அதை வெளியே காட்டாமல் இருந்தார் அவர்.​

அக்னியை விட்டு விலகி இருந்தாலும் எப்படியும் காலை, மாலை என்று இரண்டு வேலையாக அவனை பார்த்துவிடுவாள் நிருதியா. அவளும் ஒரு வாரமாக அவனை பார்க்கவே இல்லை. ஒரு நாள் செல்ல செல்ல அவளின் முகமும் வாட்டமாகவே இருந்தது. போன் அடித்தாலும் எடுப்பதில்லை அவன். எடுத்தாலும் வேலை இருப்பதாக சொல்லி வைத்துவிடுகிறான். இதை யாரிடம் சொல்ல என்று நொந்து போய் இருந்தாள் நிருதியா. இனியும் இப்படியே இருந்தால் வேலைக்கு ஆகாது என்று "அத்தே உங்க மகனை எங்கே? கண்ணாம்பூச்சி காட்டிட்டு அலையுறாரு." என்றாள் குற்றம் சாட்டும் குரலில்.​

"நிரு இப்படி என் அத்தையிடம் கேட்டேன் என்று வெளியே சொல்லிவிடாதே! கேட்கிறவங்க சிரிப்பாங்க. அவன் எங்கே என்று நான்தான் உன்னிடம் கேட்க வேண்டும். உனக்குத்தான் தெரிந்திருக்க வேண்டும். அழிஞ்சிட்டு இருந்தவனை நீதான் மீட்டு கொண்டுவந்த. மீண்டும் அவனை நீயே அப்படி ஆக்கிவிடாதே பார்த்துக்க. ஒரு நேரம் பழகியது விடாது." என்று அவர் இவளை பயமுறுத்திவிட்டு போக அன்று இரவு தூங்காமல் ஜன்னலை திறந்துவைத்து பார்த்துக்கொண்டிருந்தாள். ஒரு மணி தாண்டிய பிறகுதான் அவன் வந்தான். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாள். அவன் தூங்கும் வரை இருந்தாளோ என்னவோ? அப்புறம் பூனை போல அவன் அறைக்குள் சென்றாள். இவள் நினைத்தது போல அவன் நல்ல உறக்கத்தில் இருந்தான். மெல்ல நடந்துச்சென்று அவன் பக்கத்தில் படுத்து தலையை தூக்கி அவன் முகத்துக்கு அருகே தன் முகத்தை கொண்டு போனாள் மதுவின் வாடை வருகிறதா என்று பார்க்க.​

அப்படி எந்த வாடையும் வரவில்லை. பிறகு மெல்ல அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். மெதுவாகத்தான் முத்தமிட்டாள் ஆனால் அவன் விழித்துவிட்டான். இவன் மனைவி படுத்தும் பாட்டில் அவன் நிம்மதியாக தூங்கி நாளாகிறது. மேலோட்டாக தூக்கியதால் சட்டென்று விழித்துவிட்டான்.​

"இவ்வளவு நேரம் எங்கே போயிட்டு வர?" என்று அவனுக்கு முன் இவள் முந்தி கேள்வி கேட்டாள்.​

"நீ இங்கே என்ன பண்ணுற?" என்று கேட்டுக்கொண்டே அவன் இவளுக்கு முதுகை காட்டி திரும்பிக்கொண்டான். இவளுக்கு கோபம் வர வெடுக்கென்று அவனை இழுத்தாள் தன்னை நோக்கி.​

"என்ன?" என்று சலித்துக்கொண்டே அவன் திரும்ப அவனை முறைத்து பார்த்தவள் பெரிய மூச்சாக எடுத்து தன் கோப முகத்தை காட்டினாள். ஆனால் அவன் அசாராமல் "என்ன வேணும் உனக்கு? தூக்கம் வருது தொந்திரவு பண்ணாதே" என்று கண்ணை மூட இவளுக்கு ஆத்திரம் அதிகமாகிவிட்டது. உடனே கோபத்தில் அவனின் இரண்டு கையையும் விரித்து பிடித்து சிறைவைத்துக்கொண்டு அவனின் இதழை சிறை பிடித்தாள் வேகமாக. அவன் தலையை லேசாக அங்கேயும் இங்கேயும் ஆட்டிக்கொண்டு அவனின் கையை விடுவிக்க முயன்றான். இவள் விடாமல் அழுத்தமாக பிடித்துக்கொண்டு தன் முத்தத்தை நிறுத்தாமல் தொடர அவன் வேகத்துடன் தன் கைகள் இரண்டையும் இழுத்துக்கொண்டு இவளை பிடித்து கீழே தள்ளி அவளைப்போல அவள் கையை சிறைப்பிடித்தான்.​

"என்ன பண்ணுற? நார்மலா இருக்க மாட்டியா நீ?" என்றவன் அவளின் கோபமான முகத்தை பார்த்து "கோபம் வந்தா என்ன செய்யுறன்னு தெரியாமல் செய்ய வேண்டியது." என்றவன் அவளைபோல இல்லாமல் நிதானமாக, ரசித்து, ருசித்து ஆழமாக முத்தமிட்டான். நிருதியாவின் கோபம் வடிந்து, ஆத்திரம் அணைந்து அவளும் அணைந்து போய்விட்டாள். அவனின் கை சிறைக்குள் இருந்து தன் கையை மென்மையாக விடுவித்து கொண்டவள் அதை அவனின் பின்னந்தலையில் கோர்த்தாள். இரண்டுமே தன்னிலை மறந்து முத்தத்தில் லயித்திருக்க எங்கோ அடித்த மணிஓசை நிருதியாவை இழுத்துக்கொண்டு வந்தது. பட்டென்று கண்ணை திறந்தவள் இவனை வேகமாக தள்ளிவிட்டுவிட்டு ஓடிவிட்டாள் தன் அறைக்கு. ஓடியவள் அப்படியே குப்புற போய் விழுந்தாள் கட்டிலில். அவள் அப்படி ஓடியது இவனுக்கு ஆத்திரத்தை கிளப்ப அதற்கு மேல் இருந்தது அவனின் ஆசையின் வேகம். ஆசைக்கு முன்பு அவனின் ஈகோ ஒளிந்துக்கொண்டது போல. அதே வேகத்துடன் எழுந்து அவள் அறைக்கு போனான் இவன். அவள் படுத்திருந்த நிலையை பார்த்தவன் அப்படியே அவளை அள்ளிக்கொண்டு தன் அறைக்கு வந்தான்.​

"விடு அத்தான். தெரியாமல் செய்துட்டேன்." என்றாள் அவள் அவனிடம் தன் முகத்தை காட்டாமல் அவன் தோளில் மறைத்துக்கொண்டு.​

"எனக்கு தெரியும் நீ தெரியாமல் செய்தாய் என்று. ஆனால்..." என்றவன் மேலே எதுவுமே பேசாமல் அவளையும் பேச விடாமல் செய்தான். அவளின் உடல் எங்கும் முத்தத்தில் அர்ச்சித்தவன் அதற்கு மேல் போகாமல் அவளை அள்ளி மார்பில் போட்டுக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டான். அவள் புரியாமல் அவன் போட்ட இடத்தில் அப்படியே இருந்தாள்.​

"ஆபிஸில்தான் இருந்தேன். இன்னைக்கு மட்டுமல்ல எல்லா நாளும் அங்கேதான் இருந்தேன். எதிலேயாவது என்னை தொலைக்க நினைக்கிறேன். ஆனால் மீண்டும் கெட்ட வழியில் போய்விட கூடாது என்று ஆபிஸில் இருந்தேன். நீ என்னை எப்படி ஒதுக்கி வைப்பதற்கு என்னை உன் கையாள கொன்னே போட்டிருக்கலாம். இல்ல உன் அப்பா அம்மாவுடன் போயிருக்கலாம். சாகடிக்கிற நீ. நான் தப்பு பண்ணினவன்னு நான் ஒத்துக்கிறேன். ஆனால் அதுக்காக எனக்கு நீ இப்படி தண்டனை தருவியா? காதலிச்சு கல்யாணம் பண்ணனும் என்பது என் ஆசை. என் மனசு முழுசும் இருக்கும் காதலை ஒருத்திக்கு கொடுத்து அதே காதலை அவளிடம் இருந்து வாங்கி, போதும் போதும் என்கிற அளவுக்கு காதலோடு வாழனும் என்று ஆசைப்பட்டேன். அதுக்காகத்தான் அந்த பிரம்மிக்காவை அப்படி காதலித்தேன். ஆனால்..." என்றவன் அதை அப்படியே நிறுத்திவிட்டு​

"அது பொய்யா போக வாழ்க்கை முடிஞ்சு போச்சு, இனி ஒரு பெண்ணின் வாடையே வேண்டாம் என்று நான் ஒதுங்கி போன நேரம் நீ கிளம்பின. முத்தம் தந்த, படுக்க மடி தந்த, கட்டிபிடிச்ச. நான் நிறைய ஆசைகளை கொண்ட ஒரு சாதாரண மனுஷன்தான். உன் மேல் எனக்கு வெறும் காதல் மட்டும் வரவில்லை, ஆசையும் சேர்ந்து வந்தது. ஆனாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் கற்பனையிலேயே உன்னுடன் வாழ்ந்து குழந்தையும் பெற்றுவிட்டேன். இவ நமக்கு இல்லைங்கிற நேரம்தான் போனில் என்னை பாப்பதை தவிர்த்து உன்னை எனக்கு காட்டின நீ. எனக்காக அழுறாளேன்னு மறுபடியும் உன்னை தேடினேன். அப்போ கூட எனக்கு நீ நிஜத்தில் மனைவியா வரணும் என்ற ஆசை எனக்கு இல்லை. ஆனால் என் கண்ணை பார்த்து உனக்கு நீயே கட்டிய தாலியை கழற்றாமல் நீ இருந்தது எனக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தது நீ என்னை தான் நினைச்சிட்டு இருக்குரன்னு. அந்த நம்பிக்கையில்தான் நான் இதுவரை வந்தது. ஆனால் நீ என்னை மன்னிக்கவே இல்லை. உனக்கு என் மேல் காதல் இருந்தும், ஆசை இருந்தும் என் தப்புதான் அதைவிட பெருசா தெரியுது.​

செத்துடலாம் போல இருக்குடி. ஒருத்தனுக்கு குடும்ப வாழ்க்கை ஒரு முறை தோற்று போகலாம். அடுத்ததும் அப்படியே போகணும் என்றால் அது கொடுமை. என் காதல் என் மனசுக்குள்ளே இருந்து அப்படியே இறுகி என் மூச்சு குழாயை நசுக்குது. வாழவே பிடிக்கல. எனக்கு மட்டும் ஏன் நான் கேட்ட காதல் கிடைக்கவே மாட்டேங்குது என்று நினைக்கும் போது." என்றான் அவன் வேதனையான குரலில்.​

அவனின் பேச்சை கேட்டவள் எதுவுமே பேசவில்லை. தலையை தூக்கி கண் மூடி இருந்த அவனின் முகத்தை வருடிக்கொடுத்து அவன் நெற்றியில் முத்தமிட்டாள். அப்போதும் அவன் கண்ணை திறக்கவே இல்லை. பிறகு அவன் கையை எடுத்து தனது மாங்கல்யத்தை பிடிக்கவைத்தாள். அவனுக்கு பிடித்தது, அதை தொட்டவுடன் என்னவென்று அறிந்துக்கொண்டவன் அதை அழுத்தமாக பிடித்துக்கொண்டான். கண்ணை திறக்காமலேயே அவளை உருட்டி கீழே கொண்டுவந்தவன் அவளின் மார்பில் தலைவைத்து படுத்துக்கொண்டான். அவனின் தலையை கோதிவிட்டுக்கொண்டே படுத்திருந்தாள் இவள். அப்படியே அவன் தூங்கிவிட்டான்.​

இரவு தாமதமாக வந்து காலையில் யாரும் எழும் முன் ஓடி செல்பவன் மறுநாள் மணி எட்டை தொட்ட பிறகும் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தான். இவள் படுத்திருந்த இடத்தில் ஒரு தலையணையை அவன் கை அணைப்புக்கு கொடுத்துவிட்டு அவள் எழுந்து போயிருந்தாள். அசந்து தூங்கிக்கொண்டு இருந்தவனை தட்டி எழுப்பினாள் நிருதியா.​

"சமரு எழுந்திரு, ஏய் சமரு." என்று​

"என்னடி வேணும் உனக்கு விடியும் முன்னே!" என்று அவன் சலித்துக்கொண்டே கண்ணை திறந்தான். திறந்தவன் அடித்து பிடித்து எழுந்து அமர்ந்து கண்ணை நான்றாக கசக்கிக்கொண்டு மீண்டும் பார்த்தான். நிருதியா குளித்து முடித்து தலையில் துண்டுடன் ஒரு புடவையை சுருட்டி பிடித்து தன் மார்பை மறைத்தப்படி நின்றிருந்தாள்.​

"ஏண்டி பாதகத்தி ஏன் இப்படி என் முன்னே அரையும் குறையுமா வந்து நின்னு என் பாவத்தை கொட்டிக்குற." என்றான்.​

"சமரு ஒழுங்கா பாரு. நான் ட்ரெஸ் போட்டிருக்கேன்." என்றாள் அவள்.​

"அப்போ இது என்ன?" என்றவன் அவள் சுருட்டி மார்போடு வைத்திருந்த புடவையை இழுத்து கீழே போட்டான்.​

"ஆஆஆஆ" என்று அதை குனிந்து அள்ளிக்கொண்டவள் "இந்த புடவையை கட்டிவிடு சமரு. ஒரு மணி நேரமா ட்ரை பண்ணுறேன். வரவே மாட்டேங்குது." என்று சுருட்டிய புடவையை அவனிடம் நீட்டினாள். அக்னி இமைக்க மறந்து அவளை பார்த்தான். பிறகு "ரதி" என்றழைத்தான்.​

அவள் "ம்" என்று கூற கண்ணால் மறைக்க படாமல் இருந்த அவளின் அழகை காட்டினான்.​

"அதான் ஜாக்கெட் போட்டிருக்கேனே! நீதானே பார்க்கிற பார்த்துட்டு போ." என்றவள் அவனுக்கு முதுகு காட்டி அவன் மடியில் போய் இருந்தாள். இப்போது அவனுக்கு எந்த உணர்ச்சியும் தோன்றவில்லை ஒரு ஆண்மகனாக. கணவன் மனைவி உறவில் தாம்பத்தியம் உணர்த்துவது நீயும், நானும் வேறல்ல. உனக்கு தெரியாமல் என்னிடம் எதுவுமே இல்லை, எனக்கு தெரியாமல் உன்னிடம் எதுவுமே இல்லை என்ற ஒரு வெளிப்படையான உணர்வைதான். அதைத்தான் இப்போது நிருதியா அவனை உணர வைத்தாள். மனைவியை இடையோடு கட்டிக்கொண்டவன் அவள் வெற்று முதுகில் அழுத்தமாக முத்தமிட்டான். பிறகு​

"கொஞ்சம் வெயிட் பண்ணு, முகத்தை கழுவிட்டு வரேன்." என்று எழுந்து போனான். போயிட்டு வந்தவன் போனை ஆன் செய்து அதை பார்த்து பார்த்து மனைவிக்கு புடவை கட்டிவிட்டான். அவன் எப்படி கட்டுகிறான் என்று அவள் பார்த்துக்கொண்டு நின்றாள். பிறகு கண்ணாடி முன் அவளை அமர்ந்தி தலைவாரிவிட்டவன்​

"கொஞ்சம் இரு வரேன்" என்று தாயிடம் ஓடினான். வரும் போது கைநிறைய பூவையும், நகைகளையும் கொண்டு வந்தான். அதையும் அவளுக்கு போட்டுவிட்டான். தலையில் பூவை வைத்து மறுபடியும் போனை பார்த்து லேசாக மேக்கப் போட்டுவிட்டான். செய்த வரைக்கும் அவனுக்கு திருப்தி ஆகிவிட, அதுவரை கண்ணாடி முன்னே இருந்தாலும் ஒரு முறை கூட கண்ணாடியை பாராமல் இவனின் கண்ணையே பார்த்துக்கொண்டு இருந்தவளை திருப்பி கண்ணாடி பார்க்க வைத்தான். அவள் அதில் அதிகம் ஆர்வம் காட்டாமல் எழுந்து நின்றாள். தன்னை குனிந்து பார்த்தவள் அவனை பார்த்து கேட்டாள். "எப்படி இருக்கேன் அத்தான்?" என்று.​

அவன் பதிலே சொல்லவில்லை, வார்த்தைக்கு பதிலாக அவன் கண்கள் கலங்கியது. அதை பார்த்தவள்​

"அவ்வளவு அசிங்கமாகவா இருக்கேன்." என்று கேட்டாள்.​

"இல்ல, இல்ல. என் தங்கம், செல்லம், அம்முகுட்டி, பட்டுகுட்டி தேவதை மாதிரி இருக்கா. எனக்குன்னே இந்த மண்ணில் பிறந்த மாசு மரு இல்லாத பொன் மாதிரி இருக்கா. உன்னை எப்படி தொலைச்சேன்னு எனக்கு தெரியல. உன்னை தொலைச்ச தப்புக்குதான் எனக்கு இவ்வளவு தண்டனை. இப்போ கண்டு பிடிச்சிட்டேன். இனி நான் எல்லா சந்தோசத்தையும் மொத்தமா அனுபவிப்பேன்." என்றான் அவன் ஆனந்த கண்ணீருடன்.​

அவன் கண்ணை அழுத்தமாக துடைத்துவிட்டவள் "சமரு நான் அழகா இருக்கேனா?" என்று கேட்டாள். இப்போதான் அதற்கான பதிலை சொன்னான். ஆனாலும் அவள் இரண்டாவது முறையாக கேட்பதின் காரணத்தை புரிந்துக்கொண்டவன் ஒரு கணவனாக பதில் சொன்னான். அதை கேட்டு வெட்கத்தில் சிவந்து நின்றவள் அவன் மார்பிலேயே போய் முகத்தை புதைத்து கொண்டாள்.​

"இப்போ உன்னை டச் பண்ணினா மேக்கப் கலைஞ்சு போயிடும். அம்மாவிடம் எதுவுமே சொல்லாமல் பூவையும், நகைகளையும் வாங்கிட்டு வந்தேன். வா அவங்ககிட்ட இதை காட்டிட்டு வந்து மிச்ச வேலையை வச்சுக்குறேன்." என்றவன் தன் தாயாரிடம் அவளை அழைத்து போனான். இவர்கள் இருவரும் மேலே இருந்து கீழே இறங்கும் முன்பே எதேச்சையாக மேலே பார்த்த சாய்ஜித்​

"ஏஏஏ அண்ணீ" என்று சந்தோசத்தில் கத்தினான். அவன் பார்த்த திசையை பார்த்த அர்னி குதித்துக்கொண்டு மேலே ஓடி வந்தாள்.​

"அம்மா, அப்பா இங்கே வாங்க சீக்கிரமா" என்று கூச்சலிட்டாள். அவர்கள் இருவரும் வந்து பார்த்துவிட்டு மகிழ்ச்சியுடன் மருமகளை தழுவிக்கொண்டனர். மகனை வாஞ்சையுடன் பார்த்த ஜானகி "அக்னி ஓடி போய் குளிச்சிட்டு டிரஸ் பண்ணிட்டு வா. இரண்டு பேரும் இப்படியே கோவிலுக்கு போயிட்டு வந்திடுங்க." என்றார்.​

"சரிம்மா" என்று அவன் திரும்ப "சமரு" என்று அவனை நோக்கி கையை நீட்டினாள் நிருதியா. இரண்டு எட்டு எடுத்து வச்சு அவள் கையை பிடித்தவனிடம் "ஆசீர்வாதம் வாங்கிக்கலாம்." என்றாள். தன் உடையை குனிந்து பார்த்தான் அக்னி. டீஷர்ட்டும் ஷாட்ஸும் போட்டிருந்தான்.​

"பரவாயில்லை, வாங்க" என்றாள் அவள். இருவருமே பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொண்டார்கள். அவர்கள் மன நிறைவுடன் வாழ்த்தினார்கள்.​

"வரவேற்பு அன்னைக்குதான் விழுந்து விழுந்து ஆசிர்வாதம் வாங்கினீங்களே! மறுபடியும் ஏன்?" என்று சாய்ஜித் கேலியாக கேட்க​

"அப்போ என் மனசுல என் சமரு மேலே கோபம் இருந்தது. அந்த கோபம் என்னை என்னன்னவோ செய்ய வைத்தது. அந்த கோபத்தோடு வாங்கிய ஆசிர்வாதம் எனக்கு பத்தல. இப்போ எனக்கு எந்த கோபமும் இல்லை. என் புருஷனை நான் ரொம்ப சந்தோசமா, பத்திரமா பார்த்துப்பேன். இப்போ இந்த ஆசிர்வாதம் எனக்கு நிறைவா இருக்கு." என்றாள் நிருதியா.​

"அண்ணி அத்தை வீடியோ காலில். பேசு பேசு" என்று அர்னி போனில் நிருதியாவை காட்டினாள் ஆனந்திக்கு. அவர்கள் சந்தோசத்துடன் பேச தொடங்க அக்னி குளிக்க சென்றான். ரெடியாகி வந்து மனைவியை கோவிலுக்கு கூட்டிட்டு போனான்.​

அவர்கள் திரும்பி வரும் போது சின்னவர்கள் அவரவர் வேலையை பார்க்க சென்றிருக்க, ஜானகி தன் கணவருடன் தொழிற்சாலைக்கு சென்றிருந்தார். தங்களுக்கு தனிமையை கொடுக்க நினைத்திருக்கிறார்கள் என்று நினைத்தான் அக்னி. வழக்கமாக நிருதியாவை வீட்டில் தனியாக விட்டுவிட்டு ஜானகி எங்கும் செல்லமாட்டார். எங்கேயாவது போகணும் என்றால் அவளையும் உடன் அழைத்து செல்வார். இன்று விட்டுவிட்டு சென்றுவிட்டார்.​

"அத்தை என்னை தனியா விட்டுட்டு போயிட்டாங்க."என்று குறைபட்டுக்கொண்டே வந்தாள் நிருதியா ஜானகியை தேடி காணாமல்.​

"தனியா இருக்கியா? நான் இல்லையா என்ன?" என்றவன் மனைவியை தள்ளிக்கொண்டு தங்கள் அறைக்குள் சென்றான்.​

"சமரு தப்பான நினைப்புடன் என் பக்கத்தில் வராதே, அப்புறம் நான் சத்தம் போட்டுவிடுவேன்." என்றாள் அவள்.​

"நீ சத்தம் போடுவன்னு தெரிஞ்சுதான் உன் அத்தை வீட்டில் ஒருத்தரையும் விட்டுவைக்காம ஆளுக்கொரு வெளி வேலையை கொடுத்து அனுப்பிட்டு போயிருக்காங்க." என்றவன் அவளை தன்னிடம் இழுத்து காலையில் கஷ்டப்பட்டு கட்டிவிட்ட புடவையை இப்போ எளிதாக கழற்ற முயன்றான்.​

அவனை திட்டி, அடித்து, கெஞ்சி, கொஞ்சி ஒன்றுமே பயன் அளிக்காமல் தோற்றுபோய் நின்றாள் நிருதியா.​

"இப்போ எதுக்கு இவ்வளவு போராட்டம் பண்ணுற. என்னை பிடிக்குமா பிடிக்காதா உனக்கு? அதை தெளிவா சொல்லு." என்று அவன் கடுப்பில் கேட்க​

"நீ எனக்கு ஐ லவ் யூ சொல்லல. சொல்லாமலேயே அதிரடி பண்ணுற. ஸ்லோவா ஸ்லோவா போகணும்." என்றாள் அவள்.​

"நான் நிறைய டைம் ஐ லவ் யூ சொல்லிட்டேன். நீதான் சொல்லாம சுத்திட்டு இருக்க கழுதை. இனி நான் எதையும் ஸ்டார்ட் பண்ணமாட்டேன். நீ லவ் யூ சொல்லிட்டு நீயே ஸ்லோவா ஸ்லோவா ஸ்டார்ட் பண்ணு." என்றான் அவன்.​

"அதுக்கு வேற எவளாச்சையும் போய் பாரு. உனக்கு வேணுமுன்னா நீ வா. இல்ல " என்று வாயை மூடி இவள் காட்ட​

"அடிங்க..." என்றவன் அவளை தூக்கிக்கொண்டு கட்டில் போட்டான். போட்டவன் அவள் எழும்ப முடியாத வண்ணம் அழுத்தமாக பிடித்துவைத்துக்கொண்டு எதுவுமே பேசாமல் அவள் முகத்தையே பார்த்தான். முதலில் திமிறியவள் மெல்ல மெல்ல அவன் விழியில் தன்னை தொலைத்து நின்றாள்.​

"ரதி சொல்லு." என்றான் அவன் மென்மையாக.​

"நீ சொல்லு" என்றாள் அவள்.​

"ஐ லவ் யூ" என்றான் அவன்.​

"ஏன் எனக்கு பேரு எதுவும் இல்லையா?" என்று அவள் கேட்க​

"ஐ லவ் யூ டி பொண்டாட்டி." என்றான் அவன் அவள் உதட்டை பிடித்துக்கொண்டு.​

அவன் கையை விலக்கியவள் "ஐ லவ் யூ புருஷா. ஐ லவ் யூ ஸோ மச் என் ஆசை அத்தான்" என்றாள்.​

"அத்தான் இல்ல, அத்தான் இல்ல. ஐ லவ் யூ சமரு சொல்லுடி. சமரு சொல்லு." என்றான் அவன் கிறக்கமாக.​

"ஐ லவ் யூ சமரு. என் செல்ல சமரு, என் புஜ்ஜி சமரு. என் தங்க சமரு." என்று அவள் ஆசை தீர கொஞ்ச கள்ளன் கொஞ்சம் கொஞ்சமாக புதையலை தேட தொடங்கினான். புதையல் வேட்டையில் அன்று வெற்றி யாருக்கு என்று அவர்களுக்குத்தான் தெரியும். அவர்களின் உறவு ஆசையில் ஆரம்பிக்கவில்லை. எங்கோ காடு மேடு என்று பாய்ந்து பாதை மாறி ஓடி, கடலில் கலந்து வீணாகி போய்விடுமோ என்று நினைத்த வேளையில் பாசனத்துக்கு பாய்ந்து நெல்லும், உணவும் விளைவித்த மழைநீரை போல நல்லதொரு சங்கமிப்பாக இருந்தது அவர்களின் சங்கமிப்பு.​

'உனது உயிரில் எனது கவிதையை எழுதி விடுகிறேன்' என்ற வேகத்தில் மனைவியின் உயிர் வரை தொட்டு அவளை மீண்டும் ஜென்மம் எடுக்க வைத்தான். அவனின் வேகம் அவனின் காதலின் அளவு. புலியிடம் அடைக்கலம் கேட்டு அண்டும் புள்ளிமானாய் அவன் மனைவி. அடைக்கலம் கொடுப்பது போல அவளை ஆட்கொண்ட அவனது கணவன். காதல் வானில் கவிதை எழுதின இரு உள்ளத்தை அந்த பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் சூரியன் கூட வாட்டி வதைக்காமல் மந்தகாசமான உடையை போட்டுக்கொண்டு நின்றது.​

"சமரு கடன்காரா கொஞ்சம் மூச்சு எடுக்க கேப் தாடா பக்கி. நான் எங்கே போயிட போறேன்." என்று அவள் அவனை திட்ட​

"வாயாடி இப்போவாச்சும் உன் வாய்க்கு ரெஸ்ட் கொடுக்கமாட்டியா?" என்றவன் அவளை பேசவிடாமல் செய்தான்.​

மாலை வரும் போதே சாய்ஜித் பல கோப்புக்களை கையோடு கொண்டு வந்திருந்தான்.​

"என்னடா இது? ஆபிஸை வீட்டுக்கு மாற்ற போறியா?" என்று ஜானகி கேட்க​

"இனி கொஞ்ச நாளைக்கு அண்ணன் ஆபிஸ் பக்கம் வரப்போவதில்லை. இதில் எல்லாம் அவன் கையெழுத்து வேணும். அதான் வீட்டுக்கு தூக்கிட்டு வந்தேன்." என்றான் சாய்ஜித். ஜானகி சிரித்துக்கொண்டார்.​

"அண்ணா எந்த ஊருக்கு, எந்த நாட்டுக்கு டிக்கெட் போடணுமுன்னு சொல்லு நாளைக்கே போட்டுவிடுகிறேன். நீ போயிட்டு ஒரு மாசம் கழிச்சு வந்து சேரு." என்றான் சாய்ஜித்.​

"மாலத்தீவு." என்றான் அக்னி.​

"அதே ஹோட்டலா?" என்று சாய்ஜித் கேட்க​

"அதே ரூம்" என்றான் அக்னி.​

"ஜமாய். உன்னை இவ்வளவு அவசரமாக எதுக்கு ஹனிமூன் அனுப்புறோம் தெரியுமா? வீட்டில் இரண்டு வாலிப பிள்ளைங்க இருக்கோம். நீ அடிக்கிற லூட்டியில் நாங்க கெட்டு போயிட கூடாது பாரு அதான்." என்றான் சாய்ஜித்.​

"டேய் என்ன ரொம்ப பேசுற? அப்படி என்ன பண்ணிட்டாங்க நீங்க கெட்டு போற அளவுக்கு. எப்போதும் போலத்தானே இருக்கோம்." என்றான் அக்னி.​

"பூனை கண்ணை மூடிட்டு உலகமே இருட்டுன்னு சொல்லுமாம். அப்படி இருக்கு உன் கதை. ஒன்னா ரெண்டா லைனா சொல்ல. அதை விடு. எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் இருந்துட்டே இருக்கு அதை மட்டும் க்ளியர் பண்ணிட்டு போ." என்றான் சாய்ஜித்.​

ஏதோ உருப்படியான சந்தேகம் கேட்க போகிறான் என்று நினைத்து "கேளு சொல்றேன்." என்றான்.​

"அதுண்ணா அன்னைக்கு நீ மிளகாய் தின்ன அதனால வாய் எரிச்சல் அடங்க அம்மா உனக்கு தயிர் தந்தாங்க. ஆனா நீ எதுக்கு மிளகாய் திங்காத நிருக்கு தயிர் கொடுத்த. அவ வேற மிளகாயை தின்னது போல உஸ் உஸ்ன்னு இருந்தா." என்று ரொம்ப முக்கியமான சந்தேகத்தை கேட்டான் சாய்ஜித்.​

"நீயும் உன் சந்தேகமும். போடா மண்டை கசாயம்." என்று எழுந்து போக போனான் அக்னி.​

"அண்ணா ப்ளீஸ் சொல்லிட்டு போ" என்று அவனை நிறுத்தினான் சாய்ஜித்.​

"ஹாங் எனக்கு வாய் ரொம்ப எரிச்சலா இருந்திச்சு, அதான் அவ வாயில இருந்து மருந்து போட்டேன். அதனால அவளுக்கும் எரிச்சல் பரவியதால் தயிர் கொடுத்தேன். போதுமா விளக்கம். இல்ல இன்னும் விளக்கமா சொல்லனுமா அவளை கிஸ் பண்ணினேன் என்று." என்று அக்னி சொல்லிவிட்டு போக சாய்ஜித் வாயை பிளந்துக்கொண்டு இருந்தான்.​

அண்ணன் தம்பி பேசிய எதுவும் அறியாத நிருதியா கையில் வெட்டிய ஆப்பிளுடன் வந்தாள். ஒரு துண்டை எடுத்து சாய்ஜித் வாயில் வைத்தவள் "நான் ஆப்பிள் கொண்டு வருவேன் என்று தெரிந்தே வாயை பிளந்து வச்சிட்டு இருக்கியா?" என்று கேட்டுக்கொண்டே எதிரே உட்கார்ந்தாள். ஆப்பிளை வேகமாக கடித்த சாய்ஜித்​

"திருட்டு எருமைகளா வீட்டில் இத்தனை பேர் இருக்கையிலேயே மிளகாயை தின்னுட்டு இப்படி கிஸ் அடிச்சிருக்கீங்களே, அங்கே மாலத்தீவில் தனியா என்னென்ன அட்டூழியம் செய்திருப்பீங்க?" என்று சாய்ஜித் கேட்க நிருதியா வாயில் இருந்த ஆப்பிள் அப்படியே இருந்துவிட்டது. மடியில் இருந்த தட்டை எடுத்து சாய்ஜித் கையில் கொடுத்தவள் "சமரூ..." என்று கத்திக்கொண்டு கணவனை தேடி போனாள்.​

"போஸ்டர் அடிச்சு ஒட்ட வேண்டியதுதானே" என்று வாட்டசாட்டமான ஆண் மகனை குப்புற போட்டு முதுகில் ஏறி அமர்ந்து குத்திக்கொண்டு இருந்தாள் நிருதியா வெறியுடன்.​

"ஏய் விடுடி. திரும்பினேன்னு வை அப்புறம் உனக்கு பேச்சு மறந்து போயிடும். அப்புறம் சமரு சமருன்னு என் பேரை மட்டும்தான் உரு போட்டுட்டு இருப்ப. உன் வாயை அடைக்க எப்படி மேட்டரை கண்டு பிடிச்சு வச்சிருக்கேன் பார்த்தியா. முதல் நாள் நீ என்ன துள்ளு துள்ளுன. இப்போ எப்படி மாற்றி வச்சிருக்கேன்! ஒழுங்கா இறங்கிடு. இல்ல ஹாசினி ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கா எதுக்கு மிளகாய் இமேஜ்ஜை ஆறு மாசமா அனுப்புனன்னு. போன் போட்டு அவளுக்கும் சொல்லிவிடுவேன். தினமும் அதே மாதிரி கிஸ் பண்ணணுமுன்னு தோணிச்சு அதான் அனுப்பி வச்சேன்னு வேற சொல்லுவேன்." என்றான் அக்னி சிரித்துக்கொண்டு.​

"இப்படி செய்யாதே சமரு. இனி சாய் என்னை பார்க்கும் போதேல்லாம் கிண்டல் பண்ணுவான்." என்று சிணுங்கியவள் அவன் முதுகிலே படுக்க​

"ரதி லவ் யூ டி" என்றான் அக்னி.​

"இப்போ லவ் யூ கிடையாது போடா. உனக்கு நேரம் காலமே இல்ல." என்று மறுபடியும் அவனை அடிக்க தொடங்கினாள் நிருதியா.​

நான்கு வருடம் கழித்து "எல்லாம் உன்னால்தான்." என்று அக்னிக்கு அடி விழ ஜானகி மகனை அவளிடம் இருந்து விலக்கினாள்.​

"அவளுக்கு குழந்தை பிறக்கும் வரை அவ பக்கத்தில் போகாதேன்னு எத்தனை தடவ உனக்கு சொல்றது. என்னவோ அவளுக்கு இதுல எந்த சம்பந்தமும் இல்லாத மாதிரியே உன்னை போட்டு அடிக்குறா, நீயும் வாங்கிட்டு இருக்குற. இந்த முறை பெண் குழந்தை பிறக்காட்டியும் பரவாயில்லை இத்தோடு நிறுத்திக்க. நாலு வருஷத்தில் இது மூணாவது குழந்தை."என்றார் ஜானகி.​

நிருதியா பிரசவ வலியில் துடிக்க, அக்னி தாயார் கையை விலக்கிக்கொண்டு மீண்டும் மனைவியிடம் போனான்.​

"அவன் கேட்கமாட்டான்னு தெரியாதா உனக்கு. இரண்டு ஆண் குழந்தை போதுமுன்னு அவ சொன்ன பிறகும் கேட்காமல் குட்டி நிருதியா வேணுமுன்னு பிடிவாதத்தில் நின்றான். அனுபவிக்கிறான். நீ அமைதியா இரு." என்று அருணாச்சலம் சொல்ல ஜானகி அமைதியாகிவிட்டார்.​

ஹாஸ்பிடலை ஒரு உலுக்கு உலுக்கி ஒருவழியாக மூன்றாவதாக பெண் குழந்தையை பெற்று எடுத்தாள் நிருதியா.​

"அம்மா குட்டி ரதி" என்று பூரிப்புடன் தன் மகளை கையில் ஏந்தியபடி வந்தான் அக்னி. ஆசையுடன் குட்டி ரதியை கையில் வாங்கி கொண்டார் ஜானகி. பேத்தியை முத்தமிட்டவர் ஐந்து வருடத்து முன் மகன் இருந்த நிலையை நினைத்து பார்த்தார். குடியுடன் இருந்தவன் இன்று மூன்று குழந்தைக்கு தகப்பனாகி சிரிக்கிறான். எல்லாம் இந்த மகராசியால் என்று நினைத்தார் அவர்.​

மனைவியை பார்க்க வந்தவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு "லவ் யூ டி பொண்டாட்டி." என்றான்.​

"சமரு போயிடு. இன்னொரு முறை இடுப்பு வலியில் துடிக்க என்னால முடியாது. உன் லவ் யூவை கொண்டு வேற எவளுக்காச்சும் கொடு." என்றாள் நிருதியா பல்லை கடித்துக்கொண்டு.​

"உன்னை தவிர என் கண் எவளையும் பார்க்காது. ஆப்ரேசன் பண்ணியாச்சு. இனி இஷ்டத்துக்கு லவ் யூ சொல்லலாம்." என்றான் அவன் கண்ணடித்துக்கொண்டு.​

"அப்போ நானும் லவ் யூ." என்றாள் அவன் ஆசை மனைவி. இவன் மிஞ்சும் போது அவள் கொஞ்சி, அவள் மிஞ்சும் போது இவன் கொஞ்சி நினைக்கும் போதேல்லாம் லவ் யூ சொல்லி வாழ்க்கையை கலகலப்பாக கொண்டு செல்லும் இந்த அன்பான தம்பதியினரை போல இனிக்க இனிக்க நாமும் வாழ முயற்சிப்போம். இன்பம் மட்டும் அல்ல வாழ்க்கை. துன்பத்துக்குள் இன்பமாக இருப்பதே வாழ்க்கை!!!!.​

முற்றும்.​

Radha Nagaraj

New member

Super story
 
P Bargavi

"அப்போ நானும் லவ் யூ." என்றாள் அவன் ஆசை மனைவி. இவன் மிஞ்சும் போது அவள் கொஞ்சி, அவள் மிஞ்சும் போது இவன் கொஞ்சி நினைக்கும் போது எல்லாம் லவ் யூ சொல்லி வாழ்க்கையை கலகலப்பாக கொண்டு செல்லும் இந்த அன்பான தம்பதியினரை போல இனிக்க இனிக்க நாமும் வாழ முயற்சிப்போம். இன்பம் மட்டும் அல்ல வாழ்க்கை. துன்பத்திற்குள் இன்பமாக இருப்பதே வாழ்க்கை!!!!.​

முற்றும்.​

Nice story
 
Top