இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

அத்தியாயம் 19

Matharasi

Moderator
அத்தியாயம் 19

அப்போதுதான் தாங்கள் இருவரும் சாப்பிடாதது நினைவில் வர தன்னையே கடித்துக் கொண்டவன் ,அவளை பூ போல் தலையினையில் கிடத்தி விட்டு போர்வையை அவளுக்கு போர்த்தி விட்டு தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவன் கண்டது அயர்ந்து தூங்கும் மித்தலாவைத்தான்.

திரும்பவும் அவளை அணைக்கும் ஆவல் எழ தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொண்டு அறையை வெளியில் பூட்டி விட்டு சமையலறையை நோக்கிச் சென்றான். அங்கே இருந்த அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு, தங்கள் இருவருக்கும் பாலை மட்டும் காச்சி, சத்து மாவு மட்டும் அதில் கலந்து பருக எடுத்து வந்தான் . விளக்கை மட்டும் போட்டுவிட்டு அவளின் அருகே அமர்ந்தவன் , “மித்தா”, என்று அவளை எழுப்ப அவள் சிணுங்கி கொண்டு தூக்கத்தை தொடர, அவனுக்கு அவர்களின் சிறுவயது ஞாபகம் வந்தது , ஏனோ அது கண்களைக் கரிக்க இன்று எடுத்த முடிவை முதலிலேயே அன்று எடுத்திருந்தால், இவ்வளவு துன்பம் வேதனை அனுபவித்திருக்க மாட்டாள் என்று அவன் சிந்தனை பயணிக்க அதை உதறியவன், அவளின் தலையை தன் தோள் மீது சாய்த்து கிளாசை அவள் வாயின் அருகே கொண்டு போக அதனின் மனம் அவளை அடைய அவள் அதை பருக ஆரம்பித்தாள்,

பின் சுயத்துக்கு வந்தவள் அவன் மீது சாய்ந்திருப்பதை உணர்ந்தால். அவள் மெல்ல சிறு சங்கடத்தோடு விலகப் பார்க்க அவளின் போர்வை விலகி அவளின் நிலையை சொல்ல, மேலும் நகராமல் அவள் வெட்கத்துடன் நெளிய, அதைப் பார்த்தவன், “ இன்னும் என்கிட்ட இருந்து மறைக்க உனக்கு என்ன இருக்கிறது”, என்று அவன் சீண்ட, மேலும் அவள் சிவந்து தான் போனாள்.

அது மறுபடியும் அவனது உணர்வுகளை தட்டி எழுப்ப காலியான கிளாசை வாங்கி மேஜையில் வைத்தவன் அவளின் மீது மறுபடியும் படர்ந்தான். இன்னும் அவர்கள் இருவரும் மனதில் இருக்கும் எதையும் பகிரவில்லை. ஆனால் சிறு வயது முதல் அவனை சார்ந்து பழகியவளுக்கு அவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. இந்த சில வருடங்களில் நடந்த அனைத்திற்கும் அவனுடைய எதிர்வினை அவனுக்கு அவள் மீதான காதலை அவளுக்கு பறைசாற்றியது.

அவளும் அவனோடு முழு மனதோடு கலந்தால். ஒருவாரு இருவரும் கலைத்து கலந்து உறங்கிப் போவதற்கும் விடிவதற்கும் சரியாக இருந்தது. வெகு நேரத்திற்கு பிறகு கண் விழித்த மித்திலாவை ஆள அரவமற்ற அறையே வரவேற்றது. உடனே தன் போர்வையை கொண்டு தன்னை சுற்றிக்கொண்டு குளியலறையை நோக்கி விரைந்தாள். தன்னை தயார்படுத்தி அறையையும் சுத்தப்படுத்திவிட்டு அவள் மணியை பார்க்க அது ஒன்பது என்று காட்டியது. கீழே செல்ல அவள் தயங்கி நிற்க கதவு திறப்பதற்கும் சரியாக இருந்தது. அதற்குள் குழந்தைகள் ஒலி வெகு அருகில் கேட்க இரு குழந்தைகளையும் கையில் ஏந்தி கொண்டு வந்து நின்றான் அவளின் கணவன் மித்திலன்.

அவனை நிமிர்ந்து பார்க்க அவளின் வெட்கம் தடை செய்ய வழக்கம் போல் அவளின் உணர்வுகளை புரிந்து கொண்டவன் , லத்திகாவை அவளிடம் கொடுத்துவிட்டு, “ கோயிலுக்கு போகனும் இருவரையும் கிளப்பு”, என்று கூறிவிட்டு அவனும் கிளம்பச் சென்று விட்டான்.

மித்திகாவை விரிப்பில் விட்டு சென்றான். அவள் அவன் விலகியதும் தன்னிலை அடைந்தவள் இருவருக்கும் ஒரே போல் தன் சேலைக்கு உகந்தது போல் சிவப்பு நிற பட்டு பாவாடை அணிந்து டயப்பர் போட்டு நிமிர்ந்தால் .அதற்குள் கதவு தட்டப்பட அதை திறந்தவள் கண்டது கையில் மல்லிகை மற்றும் ரோஜா பூ உடன் நின்று இருந்த செல்வி அம்மாவை தான். அதை வாங்க அவள் தயங்க அவர் அதை அவள் கையில் திணித்து விட்டு அகன்றார். அதை அவள் மேஜை மீது வைத்தால்.

குழந்தைகள் இருவருக்கும் சிகை அலங்காரத்தை முடித்து இருவருக்கும் ஆளுக்கு ஒரு ரோஜாவை அழுத்தம் கொடுக்காதவாறு பின் செய்துவிட்டு அவள் நிமிருவதற்கும் அவன் கிளம்பி வருவதற்கும் சரியாக இருந்தது. ஒரு நிமிடம் அவளை பார்த்தவன் பின்பு குழந்தைகளை பார்க்க அவர்களின் அலங்காரம் அவனுக்கு திருப்தியை தர கதவைத் திறந்து செல்வி அம்மாவை அழைத்தான் .அவர் வந்த உடன் இரு குழந்தைகளையும் தூக்கி அவரிடம் கொடுத்து, “ அம்மாவிடம் நகைகளை போட்டு விடுமாறு கூறுங்கள்” , என்று கூறிவிட்டு அவர் அகன்றதும் கதவை அடைத்தான்.

அவன் திரும்பி அவளை பார்க்க அவளோ குழந்தைகள் இருக்குமே அந்த இடத்திலேயே அசையாமல் நின்றால். அவளைப் பார்த்துக் கொண்டே நின்றவன், “அப்புறம்” , என்று அந்த மௌனத்தை . அதில் அவள் அவனை நிமிர்ந்து பார்க்க , “அது யாருக்கு”, என்று பூ இருந்த இடத்தை காட்டி கேட்க அவள் மௌனமாக தலைக் கவிழ்ந்தால்.

“ சொல் மித்தா நான் உயிரோடு தானே இருக்கிறேன்”, என்ற அவனது கேள்வி அவளை சரியாக தாக்க வில்லில் இருந்து விடுபட்ட அம்பு போல் அவனை சென்று அணைத்துக் கொண்டாள். அவளது கண்ணீர் பெருக்கெடுத்து ஓட அது அவனது கண்களிலும் கரிக்க ஆரம்பித்தது. இருந்தும் தான் கொஞ்சம் இலகினாலும் அவள் இன்னும் பின்னடைவாள் என்பதால் எப்போதும் போல் தன்னை இறுக்கிக் கொண்டான் .என்னதான் அவன் கைகள் அவளை ஆதரவாக தழுவினாலும் கல்லென இறுகி நின்றான்.

அவள் இவ்வளவு கலங்குவாள் என்பதால்தான் அவன் இதை அவளுக்கு தெரியப்படுத்தவில்லை அவளின் இந்த நிலைமைக்கு காரணம் ஆனவனை வேரோடு அறுக்கும் வெறி எழ தன்னை சமாளித்துக் கொண்டவன், “ நான் இருக்கிறேன் என்னை நம்புகிறாய் அல்லவா”, என்று அவன் அவளைக் கேள்வி கேட்க, அதற்கு “ம்ம்”, என்று கேவலுக்கு நடுவில் பதில் தந்தால் .

“பின் எதற்கு அழுகிறாய், உனக்குத் தெரியும் தானே எனக்கு அழுவது பிடிக்காது என்று, உன் முகத்தை சீர் செய்து கொண்டு வா”, என்று அவன் இறுகிய குரலில் கூற, அது சற்று வேலை செய்தது. அவள் வந்தவுடன் அவளை கண்ணாடி முன் அமர வைத்தான்.

“ மித்தா நீ எனக்கான அடையாளங்களை சுமக்க உனக்கு பிடிக்கவில்லையா” , என்று அவன் பூவை பார்த்துக் கொண்டே கேட்க ,அவள் அதன் பின் தான் செய்யும் செயலின் வீரியத்தை உணர்ந்தாள். அது அவனை எவ்வளவு தாக்கியது என்று புரிந்ததும், மௌனமாக அவள் அதையே பார்த்துக் கொண்டு இருந்தவள் , பின் ஒரு முடிவு வந்தவளாக தன் மூச்சை ஆழ்ந்து இழுத்து விட்டவள் ,அதை எடுக்க தன் கையை நீட்டினால்.

அது ஏனோ அவள் பேச்சைக் கேட்க மறுத்தது. கைகள் நடுக அதைப் பற்றியவள் மேலும் கை நடுங்க அவள் கையில் மீது அவனது கரம் உரிமையாகவும் உறுதியாகவும் பற்றியது. அவன் அதை அவள் கையோடு தலையில் வைக்க உதவி செய்தான். அவர்கள் கண்கள் நேர்கோட்டில் ஒன்றோடு ஒன்று கலந்தது. அவ்வாறே மேஜை மீது இருந்த சிமிழில் குங்குமத்தை எடுத்து அவள் வகுட்டிலும் நெற்றியிலும் வைத்தவன் அங்கு ஒரு முத்தமிட்டு விலக, இப்போது அவள் கரம் அவன் கரத்தை பற்றி கொண்டது .

அவன் என்னவென்று அவளை பார்க்க, அவளின் அந்தப் பார்வையில் ஆயிரம் கேள்விகள் கொண்டிருந்தது. “மித்தா உன் அனைத்து கேள்விகளுக்கும் என்னிடம் பதில் இருக்கிறது ,ஆனால் எடுத்த அணைத்திற்கும் விளக்கங்கள் கொடுத்து தான் இந்த உறவை தக்க வைக்கவும் மேன்மைப்படுத்தவோ நான் விரும்பவில்லை. காலம் அணைத்திற்கும் பதில் சொல்லும் .அதன் போக்கிற்கு வாழப் பழகி கொள். நம் இருவர் நடுவிலும் புரிதல் வரும்”, என்றவன் , “வா நேரம் ஆகிறது கோவில் போய் வருவோம்”, என்று அவளை அழைத்துக்கொண்டு கீழே இறங்கினான்.

இருவரும் ஜோடியாக இறங்கி வருவதை கண்ட ஜானகி அம்மாவிற்கு மித்திலன் முகத்தில் இருந்த கனிவும் ,மித்திலா முகத்தில் இருந்த மங்கலமும் அவர்கள் இருவரின் சங்கமத்தை பறைசாற்ற தன் கண்மூடி கடவுளுக்கு நன்றி கூறினார். மித்திலன் குடும்பம் சகிதமாக ராமநாதபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆலயமான வழிபடும் முருகன் கோயிலை நோக்கி தன் வண்டியை செலுத்தினான்.

கோயிலில் தரிசனம் முடிந்து குடும்பமாக பிரகாரத்தை வலம் வந்த போது அங்கே கந்த சஷ்டி மண்டபத்தில் சந்தோஷின் அன்னை அமர்ந்திருப்பதை கண்ட மித்திலா பின்னடைய அவளை தன் கைப்பிடியில் அவர்கள் அருகில் அழைத்துச் சென்றான். அவரோ எந்த ஒரு முகச் சுனுக்கமும் இல்லாதவாறு சந்தோஷமாகவே அவர்களை வரவேற்றார். மித்திலாவை தன் அருகில் அமர்த்திக் கொண்டு, லத்திகா, மித்திகாவை தன் மடியில் இரு பக்கமும் வைத்துக்கொண்டார்.

மித்திலனை எதிரில் அமரச் செய்தவர் ,அவர் அருகில் இருந்தா அர்ச்சனை தட்டில் இருந்த குங்குமத்தை அவளுக்கு வைக்கச் சொல்லி சொன்னார். அவன் அவ்வாறே செய்ததும் அவர் பூரித்து தான் போனார்.

பின் அவனிடம், “ தம்பி நாளை மறுநாள் நாள் நன்றாக இருக்கிறது இந்தக் கோவிலிலே வைத்து அவளுக்கு ஒரு தாலி சரடை அணிவித்து விடுகிறாயா? என்றார் கோரிக்கையாக , “அம்மா முதலிலேயே சொல்லி இருக்கிறேன் இதை செய் என்றால் அது மட்டும் போதும் இந்த மாதிரி அனுமதி எல்லாம் கேட்க வேண்டாம்” , என்றவன் மித்திலாவை பார்க்க அவளோ இவர்களின் இந்த அழகான தாய்மகனின் உரையாடலை கவனித்துக் கொண்டிருந்தால்.

“சரி அம்மா தேவையான ஏற்பாடை கவனிக்கிறேன்”, என்றவனை இடைமறித்தது அவனது கைபேசி .அதை அவன் எடுத்துப் பார்க்க அழைத்திருந்தது அவனுடைய காரியதரிசி லித்திபன் .அவன் என்ன கூறினானோ அவன் ஜானகி அம்மாவிடம் திரும்பி, “ அம்மா நீங்கள் இவர்களை அழைத்துக் கொண்டு நம் வீட்டிற்கு செல்லுங்கள். ஒரு அவசர வேலை”, என்று கூறிவிட்டு மித்திலாவிடம் சிரித்த முகமாகவே விடை பெற்றுச் சென்றான்.

குழந்தைளுடன் மித்திலா சந்தோஷ் அன்னையை அழைத்துக் கொண்டு அவரின் காரில் மித்திலனின் வீட்டை நோக்கி பயணப்பட்டனர். நேற்று எங்கு மித்திலாவின் வழி மறைக்கப்பட்டதோ அதே இடத்தில் இன்றும் வழிமுறை மறைக்கப்பட்டது. மித்திலா பிரச்சினை கண்டு கொண்டாள். ஓட்டுனர் இடம் திரும்பி, “ தம்பி வண்டியை திறப்பு” , என்று கூற அவனோ காரின் லாக்கை எடுத்துவிட்டு இறங்கி ஓடி விட்டான் .

தொடரும்
 
Top