இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

அக்கினி சிறகே

saaral3140

Moderator
அக்கினி சிறகே...


பட்டாம்பூச்சியாய் பல வண்ண
கனவுகளோடு பிறந்த
ஒரு சக உயிருக்கு
அக்கினி சிறகை
பரிசளித்தது யாரோ...

எந்த உயிரினத்திலும்
இல்லாத பெரும் சிறப்பு
மானுடத்தில் மட்டுமே...
தனக்கு இணையாய்
படைக்கப்பட்ட ஒரு உயிருக்கு
உன் வாழ்வு எரிமலை சிகரத்தில் தான்...
பொருத்திக்கொள்
அக்கினியால் செய்த சிறகினை
என பெருமையாய் மார்தட்டி கொள்ளும்
அதிசய ஆச்சர்யம் ஆறு அறிவில் மட்டுமே...

சீதை தன் கற்பினை நிரூபிக்க
ஒரு அக்கினி பரிட்சை
பாஞ்சாலி தன் பவித்ரம் உணர்த்த
ஒரு வேள்வியின் அக்கினி...

கணவன் காலம் முடிந்தால்
ஒரு சதி நெருப்பு...
வரதட்சணை கொடுமைக்கு
ஒரு அடுப்பு நெருப்பு...

காதல் மறுத்தால்
ஒரு கந்தக அபிஷேகம்...
காதல் கலப்பு மணம் செய்தால்
அடிமுடி அனைத்திலும் நெருப்பு...

தினம்தினம் எதேனும் ஒரு
வக்கர கனல் தீண்டல்...
சிறு அரும்பும் பழுத்த பழமும்
காவு கொல்லும் வன்கொடுமை கனல்...

ஆதிகாலம் தொட்டு
பெண்களுக்கு மட்டும் ஏன்
அக்கினியோடு ஒரு சாபம்...

எரிந்து உதிர்ந்து
கரையும் சாம்பலில் இருந்து
மீண்டு, மீண்டும் உயிர்த்தெழும்
வன்மை கொண்ட அக்கினி சிறகாய்
அவள் இருப்பதாலோ...
என்னவோ இப்போதெல்லாம்
அந்த சிறகு மிகவும் சுமையாய் வலிக்கிறது...
வாங்கிக் கொள்ளுங்களேன்
அந்த அக்
கினி சிறகினை
அவர்களும் ஆசுவாசம் கொள்ளட்டும்...
 

Revathypitchai

Moderator
ஆதிகாலம் தொட்டு பெண்களுக்கு மட்டும்..... சிந்திக்க வைக்கும் வரிகள்... எதில் மாற்றம் வேண்டும் , எதை மாற்ற வேண்டும் என்பது இன்றும் கேள்விக்குறியே!!!
 
Top