இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

Daily update

Matharasi

Moderator
அத்தியாயம் 14
"இந்தத் திருமணத்தில் சுரேனின் பங்கு, தப்பு சுரேன் மட்டுமே தான் முழுக்காரணம்" ,என்றார் தனசேகர் ,அனைவரும் அவரையே பார்க்க. "அப்பா இது வேண்டாமே", என்று மனு தடுக்க வர ,"கண்டிப்பாக அனைத்தும் அனைவருக்கும் தெரிய வேண்டும் ",என்றார் உறுதியாக. மனு தன் கைக்குள் கனியை நிறுத்திக்கொண்டு வண்டி சாவியை மணோவியிடம் கொடுத்து குழந்தைகளை பூங்காவிற்கு அழைத்துப் போகுமாறு கூறினான்.

" உனக்கு இங்கே நடப்பது தெரிந்தே ஆக வேண்டுமா", என்று மனு மணோவை பார்க்க," எனக்கு எதுவும் தேவை இல்லை, என் அண்ணனின் மேல் எனக்கு அசையாத நம்பிக்கை இருக்கிறது ",என்று பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு கிளம்பியவனை ,ரதி அவன் மாமன் மகளும் ,"நமக்கும் எதுவும் தெரிய வேண்டாம் அப்பா நாமும் கிளம்பலாம்", என்றால் .

"ஆமாம் நாங்கள் பிள்ளைகளுடன் அங்கே போகிறோம் எங்களை பொறுத்தவரை, அது உன் குடும்பம் மட்டும் தான் அதனின் பழைய கசடுகள் தேவையற்றது", என்ற சங்கர் குடும்பத்தை அழைத்துக் கொண்டு மனோவை பின்தொடர்ந்தார்.

அவர் சென்றதும் சுரேனின் அப்பா தன் பேச்சைத் தொடர்ந்தார்.சுரேன் இறப்பதற்கு முன் நடந்தது. எப்போதும் கடையை அடைத்து வீட்டுக்கு வருபவர், உண்டுவிட்டு தன் மகனிடம் நேரம் கழிப்பது வளமை.

அன்றும் அப்படித்தான் பேசிக்கொண்டிருந்தார். அப்போது," மனுவை பற்றி என்ன நினைக்கிறீர்கள் ",என்று கேட்டான்.

" நல்ல அருமையான பையன், நமது கஷ்ட காலத்தில் நமக்கு உறுதுணையாக இருக்கிறவன் அல்லவா ",என்றேன்.

" நான் இப்போது சொல்லப்போவது உங்களுக்கு கஷ்டமாக இருக்கலாம், ஆனால் நான் இதுவரை தவறு மட்டுமே செய்துள்ளேன் ,அதை கொஞ்சமாவது சரி செய்ய நினைக்கிறேன்", என்றான்." இது என் கடைசி நாட்கள் கனிக்கும் குழந்தைகளுக்கும் நான் ஒரு நிம்மதியான மகிழ்வான வாழ்வை அமைத்து தர விரும்புகிறேன்", என்றான் உறுதியாக.

" டேய் இப்படியெல்லாம் பேசாதே, அப்பா எல்லாத்தையும் பார்த்துகிறேன்", என்றவரை," எனக்கு தெரியும் ஆனால் உங்கள் காலத்திற்கு பின்பு அவள் இரண்டு பெண்களை வைத்துக்கொண்டு வேலி இல்லாமல், நான் அவளுக்கு ஒரு நிரந்தர வேலியை அமைத்து தர விரும்புகிறேன்", என்றான் .

"டேய் அது எப்படி குழந்தைகளோடு யார் பார்ப்பார்", என்றேன் தடுமாற்றத்துடன். " அது நான் மனு அண்ணனை பேசி சம்மதிக்க வைக்கிறேன், நீங்கள் இதற்கு ஒப்புதல் அளித்து அவருக்கு பக்கபலமாக நிற்க வேண்டும்", என்றான்.


பிறகு என்னை கொஞ்சம் கொஞ்சமாக பேசி சம்மதிக்க வைத்து சத்தியத்தையும் வாங்கிக்கொண்டான், அதற்குப் பின்தான் அவன் நிம்மதியாக இருந்தான், அங்கு அனைவரும் ஊமையாகிப் போக ,அங்கே வந்த வக்கீல் ,"சார் குழந்தைகளை சட்டரீதியாக மனுவுக்கு தத்து கொடுக்க எழுதி வரச் சொன்னீங்க இந்தாங்க பத்திரம்", என்றார்.


அவரும் சீதாவும் அனைத்திலும் கையெழுத்திட அங்கே ஹாசினியை மட்டுமே கொடுப்பதுபோல் பத்திரம் இருக்க, அவர் என்னவென்று வக்கீலை பார்க்க," அது வந்து ஹாசிக்கா பிறப்பு சான்றிதழில் ",என்று அவர் சொல்லத் தயங்க ,ஒரு நிமிடம் மனு உடம்பில் ஒரு மின்சாரம் ஓட அவன் அவளைக் கைப்பிடியில் நிறுத்தி இருந்ததால்,கனியும் அதை உணர்ந்தாள்.


"என்ன சார் சொல்லுங்க ",என்றான் கௌதம் பதற்றமாக.


"அது வந்து தகப்பனார் பெயர் இருக்கும் இடத்தில் , அவர் பெயர் தான் இருக்கிறது ",என்றார் மெல்லமாக. எல்லாரும் அதிர்ந்து மனுவை பார்க்க, இதற்கு அவன் என்ன பதில் சொல்லுவான், முதலில் அது எப்படி நடந்தது என்ற அவனும் யோசிக்காத நாள் இல்லை .


சுரேன் அவனிடம் சம்மதம் பெற்ற விதத்தை அனைவருக்கும் மனு எடுத்துரைக்க ஆரம்பித்தான்.


சுரேன் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவன் முதலில் சம்மதிக்கவில்லை. "உனக்கு ஒன்றும் ஆகா ,நான் விடமாட்டேன் ", என்ற பதிலையே நின்றிருந்தான்.


ஆனால் சுரேன் ,அவன் விடவே இல்லை," அண்ணா இதுவரை அவளுக்கு துரோகம் மட்டுமே செய்திருக்கிறேன், உங்களுக்கு தெரியாதது இல்லை, இப்போது எனக்கு தெரியும் நான் இனிமேல் இருக்க மாட்டேன் என்று, என் குழந்தைகளுக்கு ஒரு தகப்பனாக நான் எதையுமே செய்ததில்லை, அவளுக்கு கணவனாக நான் உண்மையாக நடந்து கொண்டதும் இல்லை ,ஏதோ திருமணமானது நாங்களும் வாழ்ந்தோம் பிள்ளைகளும் பிறந்தது ,அவளுக்கு இருக்கும் சராசரியான ஆசைகளைக் கூட நான் நிறைவேற்றுவதில்லை, பிள்ளைகளை பக்கத்தில் விட்டதே இல்லை .இப்போது எனக்கு நேரம் குறைவாக இருக்கிறது, அது போக எனக்கு தெரியும் உங்களைத் தவிர வேறு யாராலும் அவர்களை நன்றாக பார்க்க முடியாது, முழுமனதாக அவர்களை உங்களுக்கு தாரைவார்க்க விரும்புகிறேன் ," என்றான் தவிப்பாக.


"அப்படியே நான் சம்மதித்தாலும் வீட்டில் ஒருவரும் இதற்கு சம்மதிக்க மாட்டார்கள் சுரேன், உன் அப்பா அம்மா யாருமே ,முதலில் கனி இதற்கு சம்மதிக்கவே மாட்டார்கள் அவர்ளைப்பற்றி எனக்கு நன்றாக தெரியும் ",என்றான் மனு.


"அப்பாவை ஏற்கனவே சம்மதிக்க வைத்து விட்டேன் கனியை சம்மதிக்க வைப்பது உங்கள் பொறுப்பு ,நான் இருக்கும் வரை அவள் இதற்கு சம்மதிக்க மாட்டாள், என் மறைவுக்குப் பின் என் கடைசி ஆசையை நிறைவேற்றுவது ஒரு அண்ணனாக உங்களின் கடமை ",என்றான் முடிவாக.


"டேய் ஏன்டா இப்படி பேசுற ,ஒன்னும் நடக்காது நான் எதையும் நடக்கவும் விடமாட்டேன், இதுவரை காத்த உங்களை இனியும் காப்பேன், என் உயிரைக் கொடுத்தாவது காப்பேன்",என்ற மனுவை, "வேண்டாம் அண்ணா, எனக்காக நீ இதை செய்தால் மட்டுமே போதும் ,என் பாரத்தை உன் தலையில் இறக்கி வைக்கிறேன் என்ற நிம்மதியோடு என்னைப் போகவிடு, உன்னை தவிர வேறு யாராலும் எனக்கு இந்த உதவியை செய்ய முடியாது ,நீ மட்டுமே என்னை புரிந்து கொண்டவன் ,திறமையான பொறுமையான பெண்ணவள், அவள் வாழ்வு என்னால் அழிந்ததாக இருக்கக் கூடாது ,நீ அவளை கண்டிப்பாக ஒளிரச் செய்வாய் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கிறது ",என்றான் சுரேன்.



"திருமணம் செய்துகொண்டு தான் பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் எதுவும் இல்லை ,நான் அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்வை நிச்சயம் அமைத்து தருவேன் அவர்களுக்கு ஒரு படித்த வசதியான மாப்பிள்ளையை நான் பார்த்து திருமணம் செய்து வைக்கிறேன் ",என்றான் அவன் உறுதியாக.



" உன்னைத் தவிர வேறு யாராலும் அவளை திருமணம் செய்து கொள்ள முடியாது, உன்னை தவிர வேறு யாராலும் என் பிள்ளைகளுக்குத் தகப்பனாக இருக்கவும் முடியாது ",என்றான் அவன்.



"பிள்ளைகள் அப்பா அம்மா வளர்கட்டும் ,அவர்களை நான் பார்த்துக் கொள்வேன் அல்லவா, பிள்ளைகளையும் நான் பார்த்துக்கொள்வேன், பிள்ளைகளுக்கு நல்லது கெட்டது எல்லாமே நானே பார்த்துக் கொள்வேன் ,கனி அவர்கள் வாழ்வை பார்க்கட்டும் ",என்றேன் .



அதற்கு மறுப்பாக தலையை அசைத்து," இதற்கு ஒரு நாளும் கனி சம்மதிக்க மாட்டாள் , பிள்ளைகளை ஏற்றுக் கொள்பவனை தான் நான் பார்க்க வேண்டும், அது உன்னைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது", என்றான் உறுதியாக.



இறுதியாக கேட்கிறேன் அண்ணா," எனது கடைசி ஆசையை நிறைவேற்றி வை ,உனக்கு நான் இதை சொல்வதற்கு முக்கிய காரணம் இன்னும் ஒன்று இருக்கிறது, அந்த அலமாரியை திற,அதில் ஒரு ஃபைல் இருக்கிறது அதை எடுத்து வாருங்கள்," என்றான் .


அதை எடுத்து வந்து அவனிடம் கொடுக்க நீங்களே திறந்து பாருங்கள் அதை திறந்து அவன் பார்க்க அதில் சில முக்கிய ஆவணங்கள் இருந்தனர், பிள்ளைகளின் ஆவணங்களிள் , ஹாசிக்காவின் ஆவணத்தை எடுத்து பார்க்கச் சொன்னான். அதை எடுத்துப் படித்துப் பார்த்தபோது தான் எனக்கு தெரிந்தது, இது எப்படி என்று நானும் யோசித்தேன் ,ஒருவேளை அன்று இருந்த குழப்பத்திலும் பதற்றத்திலும் செய்துவிட்டேனோ என்று எனக்கு தெரியவில்லை .


நான் அவனுக்கு அதைப் புரிய வைக்க முயல, அவன் ,"நான் உங்களை சந்தேகப்படவில்லை, அதை ஒருநாளும் நான் செய்ய மாட்டேன், கனியை பற்றியும் எனக்குத் தெரியும் உங்களைப் பற்றியும் எனக்குத் தெரியும், அவள் தூய மணிச்சுடர்,இது பின்பு வேறு யாருக்காவது தெரிய வந்தால் என்னவாகும் கனியை தப்பாக பேச மாட்டார்களா ,இதை விளக்குவதற்கு நானும் இல்லாமல் அவள் என்ன ஆகுவால், யோசித்துப் பாருங்கள் ,இது முழுக்க என் மேல் உள்ள பிழையே நான் அவளுக்கு கொடுத்த பதட்டத்தினால் மட்டுமே இது நடந்திருக்கக் கூடும், ஆனால் அதை நிரூபிக்க அதுற்கு நான் இருக்கவேண்டும் அல்லவா, ஆதலால் வீண் விவாதமும், வீண் அசிங்கமும், வீண் தடுமாற்றமும் எதற்கு,நீங்கள் அவளைத் திருமணம் செய்து கொள்ளுவது தான் இதற்கு ஒரே தீர்வு",என்று அவன் தொடர்ந்து பேசி ஒரு வழியாக என்னை சம்மதிக்க வைத்துவிட்டான்.


இதைக்கேட்டு கொண்டிருந்த கனி உடம்பில் ஒரு மின்னல் ஓட, அவளை அணைத்து நின்ற மனுவுக்கு அது தெரிந்தது .அவள் அதிர்ந்து நின்றது சிறு கணமே அதற்குப் பின் அவள் அன்று நடந்ததை யோசிக்க ஆரம்பித்தாள் .அன்று நடந்த நிகழ்வு அவள் கண்முன் ஓட ஆரம்பிக்க அவளின் நினைவுகளை கௌதமின் அப்பாவின் குரல் தடுத்தது .


"பார்த்தீர்களா நீங்கள் என்னமோ அவன் யோக்கியன் போல் பேசினீர்கள் ",என்று அவர் மனுவை குற்றம் சுமத்த ஆரம்பிக்க ,"நிறுத்துங்க மாமா, அனைத்து தப்பையும் செய்தது அவரா இல்லை நாமளா ,"என்றால் கனி. இதுவரை யாரையும் அதிர்ந்து பேசாத மௌனமே மொழியாய் கொண்ட ஒரு பேதை அந்த வீடே அதிரும் வண்ணம் கத்தியவளை,"இதற்கு விளக்கம் நீ யாருக்கும் சொல்ல வேண்டாம்", என்று மனு அவளை தடுக்க வர ,"முதலில் இதற்குக் காரணம் உங்களுக்கே தெரியாது, பின்பு ஏன் என்னை தடுக்குரேங்க", என்றால் அவனிடம்," எப்படியும் அவள் என் பெண், நீ என் மனைவி ,அதற்கு காரணம் சொல்லத் தேவையில்லை ",என்றான் முடிவாக .


"நான் சொல்லித்தான் தீருவேன், உங்கள் மீது தேவையற்ற பலி விழ வேண்டாம், எனக்கும் நம் குழந்தைகளுக்கும் தாயுமானவர் நீங்கள் ,உங்களை கொச்சைப்படுத்துவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது ",என்றால் உறுதியாக.


"மனு அவளை தடுக்காதே அவள் பேசட்டும் ,அவள் மனதில் இருப்பதை இன்றே பேசி முடிக்கட்டும், அது உன்னை சந்தேகப்பட்டு கூறவில்லை, இது உன்மேல் நானும் என் மகனும் வைத்துள்ள நம்பிக்கையில் கூறுகிறேன் ",என்றார் சுரேனின் தந்தை .



"சின்ன மாமா அன்று நடந்தது தெரியுமா உங்களுக்கு, நிறைமாதமாக இருந்த என்னை கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்று வீட்டில் உங்கள் மகனை நம்பி தானே தனியே விட்டுச் சென்ற சென்றீர்கள், ஆனால் அவர் முழு போதையில் தான் வந்தார், மேலும் குடிக்க என்னிடம் பணம் கேட்டார் நான் தர மறுக்க என்னை தள்ளி விட மர அலமாரியில் மண்டை இடித்து மயங்கி விழுந்துவிட்டேன்".


சற்று நேரத்தில் மயக்கம் கலைந்து தான் விழித்தபோது உங்கள் மகன் வீட்டை திறந்து போட்டு சென்றிருந்தார். அடிவயிற்றில் சுள்ளென வலி எடுக்க என்ன செய்வது என்று தெரியாமல் உங்களுக்கு அழைக்க போனை தேடினேன் கிடைக்கவில்லை. அப்போதுதான் உறைத்தது பணம் தரவில்லை என போனை அதற்கு ஈடாக எடுத்து சென்று விட்டார் என்பது .
என்ன செய்வது என்று திகைத்த போது எனக்கு தான் அப்போது நேரம் சரி இல்லையே, தண்ணீர் குடம் உடைந்தது அது தெரியாமல் அதிலேயே வலிக்கி நான் கீழே விழுந்தேன் மறுபடியும் தலையில் அடிபட்டு மயக்கம் வந்துவிட்டது", என்றவளை அவன் தொடர்ந்தான்.


"அந்தப் போனை அவர் எடுத்துக் கொண்டு வந்தது ,ஸ்டாண்ட்குப் பின் இருக்கும் பாருக்கு அங்கு அவரை நன்றாக தெரியும் அதுவும் அவர் என்னை சார்ந்தவர் என்றும் ,ஆதலால் என்னை அழைத்தார்கள் ,அங்கே போய் அந்த போனை வாங்கி கொண்டு அவரையும் வீட்டுக்கு இழுத்து வந்தேன், நான் வரும்போது என்னை வரவேற்றது திறந்து கிடந்த வீடுதான், உள் மனசில் பயம் எழ , உள்ளே சென்று நான் பார்த்தபோது கனி சுய நினைவில் இல்லாமல் மயங்கி இருந்தாள், அவளை முயற்சி செய்து சுய நினைவுக்கு கொண்டு வந்த போது அவளால் அசையக்கூட முடியவில்லை பெண்கள் யாரையாவது துணைக்கு அழைக்குமாறு கூறினால்.நான் வெளியே சென்று பார்த்தபோது யாரும் இல்லை உள்ளே வந்து பார்த்தால் அவள் படுத்து இருந்த இடம் முழுவதும் ரத்தம் மீண்டும் சுய நினைவுல்லை. ஆபத்துக்குப் பாவமில்லை என்று என் கைகளால் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தேன்", இதைக் கூறும் போது அவன் கண்களில் கண்ணீர் கரித்தது .


"சுயநினைவு இன்றி தான் இருந்தேன் ,ஆனால் இவர் தூக்கிய உடன் எனக்கு நினைவு வந்துவிட்டது ஆனால் வந்து என்ன உபயம், என்னால் ஒன்றுமே தன்னால் செய்ய இயலவில்லை ,பிள்ளை வலி எடுக்க ஆரம்பித்து விட்டது என்பதை உணர்ந்து கொண்டேன், மருத்துவமனை அடைந்தவுடன் 30 நிமிடங்களில் ஹாசிக்கா பிறந்துவிட்டால் .



என் உடல் சுமை இறங்கியது தான் ஆனால் என் மன சுமை என்னை காப்பதற்கே இவரை நாட வேண்டியாதாயிருக்கு ,இதில் இரு பெண் குழந்தைகளை எப்படி காக்கப் போகிறேன் என்று மனதுக்குள் முள்ளாக குத்தியது. உயிர் போகும் வழியில் மனைவி கிடந்த போது கணவன் முழு போதையில் ,அந்த நினைவே என் மனதை ஆக்கிரமித்து இருந்தது. அப்பொழுதுதான் தன் சட்டை முழுவதும் என் ரத்தமாக கையில் குழந்தையை ஏந்தியவாறு நின்று கொண்டிருந்த இவரை பார்த்தேன் .



அவரை அப்படி பார்க்கும் போது எங்களை காக்க வந்த ரட்சகன் ஆகவே எனக்குத் தோன்றினார், அப்போதுதான் குழந்தையின் பயோடேட்டா எழுத செவிலி வந்தாள்.இருந்த வேதனையிலும் மனக் குழப்பத்திலும் நான் தான் அவர் பெயரை கொடுத்து இருக்க வேண்டும் ", என்றால் கனி.


இதைக் கனி கூறும்போது அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது .அப்பொழுது மல்லி அருகே வந்து அவளை அணைத்துக் கொண்டாள். அதில் கொஞ்சம் சுதாரித்தவள் அவளே தொடர்ந்து "ஆனால் இப்பொழுது எனக்கு எதுவும் தவறாக படவில்லை, என்னையும் குழந்தையும் காக்க வேண்டியவரே அதற்கு ஆபத்தை விளைவிக்க ,எங்களை காத்தவரை குற்றம் சொல்வது நியாயமில்லை",என்று முடித்துக் கொண்டால் தன் பேச்சை.



தொடரும்
 
Last edited:

Matharasi

Moderator
அத்தியாயம் 15(final)


சீதா அவள் அருகில் வந்து, "ஏன் இதனுடன் நிறுத்திவிட்டாய் இன்னும் எத்தனை தருணங்கள் நம்மை அவன் தவிக்க விட, இவன் வந்து காத்தான் அதையும் சொல்லு பின்தான் இவர்களுக்கெல்லாம் புத்தியில் உரைக்கும்", என்றார் ஆதரவாக .


" அம்மா இல்லாதவர்களைப் பற்றி பேசுவது தவறு", என்றான் மனு, அவ்வாறு பேசி அந்தப் பேச்சை நிறைவு செய்தான்.


கௌதம் மனு அருகில் வந்து," இந்த சொத்து குழந்தைகளுக்கு உரியது ,அதை ஏன்", என்றவனை," குழந்தைகளுக்கு சொத்து கொடுப்பது ஒரு தகப்பனின் கடமை, உனக்கு என் மேல் நம்பிக்கை இல்லையா", என்று கூறி மனு ,அவன் வாயை அடைத்து விட்டான்.



சுரேனின் அப்பா ," ஆமா கௌதம் அவன் சொல்லுவது சரியே, அவன் பார்த்துக்கொள்வான் அனைத்தையும் ,இந்த வீடு, கடை கூட வேண்டாம் என்றுதான் கூறினான், நான் தான் நீயும் எனது மகன் தான், என் இறுதி யாத்திரைக்கு வழி சொல்லும் என் மகனுக்கு நான் செய்யும் மரியாதை ",என்று கூறி அவன் சம்மதத்தை பெற்றேன் என்றார் அவர் .


எல்லாரும் மௌனமாக இருக்க, வக்கீல் தான் ,"sir, இதில் கனி கையெழுத்திட்டால் எல்லாம் முடிந்தது", என்றார் ,அவள் வந்து கையெழுத்திட சட்டப்படியாக அவர்களை தன் உடைமையாக்கிக் கொண்டான் மனு ரஜீன் ,எல்லாம் முடிந்தது என்று மனோவை வரச்சொல்ல எல்லோருக்கும் இருந்த சிறு சிறு சுணக்கங்கள் கூட அகன்றது. அதனால் அங்கு திரும்பவும் விழாக்கோலம் பூண்டது .இதில் திருப்தி அடையாதது கௌதமின் அப்பா மட்டுமே ,ஏனென்றால் எப்போதும் தன் குடும்பத்தில் தான் வைத்ததே சட்டம் என்று இருக்க, இன்று அது மனு மாற்றியதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.



மதியம் விருந்து முடிந்து அனைவரும் கனியையும் மனுவையும் வாழ்த்தி விட்டு சென்றனர் .லதா மனு அருகில் வந்து ,"உங்களிடம் என்ன சொல்வது என்று தெரியவில்லை, உங்கள் மேல் எனக்கு அளவற்ற நம்பிக்கை இருந்தது, நான் மறுகியதற்கு காரணம் எனது மகளை நினைத்து தான் ,அவள் உங்கள் மீது", என்று அவர் தடுமாற," எனக்குத் தெரியும் ,நாங்கள் எங்கள் குழந்தைகளோடு சந்தோஷமாக இருக்கிறோம் ",என்றான் மனு.


"எனக்குத் தெரியும்…. கனி அப்பா இருந்திருந்தால் ,அவரை கையில் பிடித்திருக்க முடியாது ,இப்போது உங்களை தலையில் வைத்துக் கொண்டாடி இருப்பார் ,அவளை அழைத்துக்கொண்டு குடும்பமாக அவரைப் பார்க்க சீக்கிரமாக வாருங்கள் ",என்றார் லதா .


ஒருவாறு அனைவரும் சென்றபின், வீட்டை ஒதுங்க வைத்து இரவு உணவை முடித்துக் கொண்டு வர மணி ஒன்பதை அடைந்தது. நேற்று போல் சரோஜா அம்மா பிள்ளைகளை வைத்துக் கொள்ள முற்பட ,மனு மறுத்துவிட்டான் எப்போதும்போல் ஹாசினி தொட்டிலிலும் ,ஹாசிக்கா கட்டிலிலும் துயில் கொள்ள, மனு மெத்தை ஒன்றை விரித்து அதில் அமர்ந்து கொண்டு தன் மனைவிக்காக காத்துக் கொண்டிருந்தான் .


அவளுக்கு நேற்று இருந்த தயக்கம் இன்று தகர்ந்ததால், தாமதிக்காமல் வந்து சேர்ந்தவள் கதவை சாற்றி விட்டு விளக்குகளை அணைத்துவிட்டு சிறு விளக்கை ஒளிர விட்டு பாலை மேஜை மீது வைத்தவளை, அவன் பார்த்துக் கொண்டே இருக்க அவன் அருகே வந்து அமர்ந்தாள், அதில் தானாக அவன் முகம் மலர்ந்தது . காலையில் அவன் மனது சுணங்கியது,எங்கே ஹாசிக்காவின் பிறப்புச்சான்றிதழ் வெளியே வந்தால் கனி கலங்கி விடுவாளோ என்று தான், ஏனென்றால் அவனுக்கு தெரியும் இது அவளால் தான் நடந்தது, என்று .அவள் அருகில் அமர்ந்த உடன், அவளை தன் கைக்குள் வைப்பதற்கு முன் எட்டி ஹாசினியை சுற்றி தலையணையை வைத்து விட்டு அவளை கட்டிலிலிருந்து விழாத வண்ணம் செய்து பின் தான் அவளை நெருங்கினான் .


அதில் கனியின் மனது சந்தோசத்தால் நிறம்பி தான் போனது .
"என்மேல் உனக்கு வருத்தம் இல்லையா தங்கம்", என்ற மனு அவளை மார்போடு அணைத்துக் கொண்டு கேட்க,"எதற்கு….,இன்று அல்ல ,நான் உங்களை பார்த்த முதல் நீங்கள் எங்களுக்கு நல்லதை மட்டுமே செய்திருக்கிறீர்கள், இனிமேலும் அதுவேதான்… எனக்கு வேறு என்ன வேண்டும்", என்றாள் மெதுவாக அவனுக்கு மட்டும் கேட்கும் வண்ணம்.



அந்த பதிலில் அவன் மனம் குளிர்ந்தது. " ஆனால் உன் சம்மதம் கேட்காமல் தானே ",என்று ஆரம்பித்தவன் ,"என் சம்மதம் கேட்டுத்தான் என்னை ஒவ்வொரு முறையும் இக்கட்டில் இருந்து காப்பாற்றினீர்களா, ஒருவருக்கு நல்லது செய்ய அவர்களின் சம்மதம் தேவையில்லை ,நீங்கள் எங்கள் மூவருக்கும் எப்போதுமே தாயுமானவர்", என்றவளை இறுகத் தழுவிக் கொண்டான்.


அங்கு மௌனமான மொழிகள் மட்டுமே ஆட்சிபுரிய கனி மனுவின் வாழ்வில் இனி வசந்த காலமே.

முற்றும்


குடியினால் எத்தனையோ குடும்பங்கள் இன்றும் கனியை போல பிள்ளைகளுடன் அனாதையாக இருக்கின்றனர். மனுவை போல நல்ல உள்ளங்கள் கனியை ஏற்றுக் கொண்டதை போல் ,அவர்களை ஏற்றுக் கொண்டால் அதுவே இந்த கதையின் உண்மையான வெற்றி.

மௌனமான மொழிகள் 💞
யாரிவனோ…!
எனை காக்க வந்தானோ…!
இல்லை…!எனை மீட்க வந்தவனோ…!
என் இருள் சூழ்ந்த பக்கங்கள் யாவும்…!
ஒளிப்பெற்றதே உன் வரவால் …!
வலிகள் மறைந்து…!
வழிகள் பிறந்ததே…!
வானதேவனே உன் வருகையால்…!
மணிக்கோவிலில் மணக்கோலம் பூண்டேன்…!
மன்னவனே உனைச்சேர…!
மனம் நிறைந்ததே…!
மாதவனே உன்னாலே…!
பூத்ததே புது வாழ்வும்…!
மார்கழியின் பூங்குளிராய்…!

கவிதை பங்களிப்பு : மு.மொனிஷா
 
Last edited:
Top