இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் [email protected] அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

Daily update

Matharasi

Moderator
அத்தியாயம் 11 2

அதே சந்தோஷத்தோடு அனைவரும் துணி எடுக்க கடைக்கு சென்றனர். மனு அவன் காரை எடுக்க, கோபி அவன் இதனையும் ,சுரேனின் அப்பா ,அம்மா மட்டும் டிரைவர் உடன்வர ,மனுஅவனுக்கு பணம் கொடுத்து அனுப்பிவிட்டு மனோவை அந்த காரை எடுத்து வர செய்தான். ஹாசினி மணோவோடு வர சீதா, தனசேகரன் மனதும் நிரம்பியது. அவர்களுக்குத் தெரியும் தான், ஆனால் பிறர் மனதை கழைக்கும்போது வலிக்கத்தான் செய்தது. ஆனால் இப்போது மனு ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்யவது அவர்கள் காயப்பட்ட மனதிற்கு மருந்தாகவே அமைந்தது .


ஜீவநதியோ மனுவை விட்டு அகலவே இல்லை, ஒரு கையிலும் அவளை மற்றொரு கையில் ஹாசிக்காவை பிடித்துக் கொண்டே, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இன்முகத்தோடு பதில் கூறும் அவனை பார்க்க கனிக்கு திகட்டவே இல்லை.

எப்போதும் அவன் மேல் ஒரு மரியாதை இருக்கும் அதுவும் அவன் சுரேனின் கடைசி நிமிடங்களில் அவளை ஒரு தாயுமானவன் போல் அல்லவா தாங்கினான் .

மௌனமான மொழிகள்…!

காதலனோ…!என் காவலனோ…!
திசை அறியா பேதையாய் நான் தவிக்க…!
திசை காட்ட வந்தவனோ…!
இரு முத்துகளோடு முத்தை ஈன்ற கனியையும்…!
தன் சொத்தாக்கி கொண்டவனோ…!
பெண்டுலமாய் என் நெஞ்சம் ஊஞ்சல் ஆட…
என்னை நிலைப்படுத்த வந்த வித்தகனோ…!
மொழி அறியா மௌனியாய் நானிருக்க…!
மொழி கற்று கொடுப்பானோ…!இல்லை…!
என் மொழியாய் அவன் ஒலிப்பானோ…!
தயக்கங்கள் உடைத்து அவன் தாரமாய் ஆவேனோ…!
என் தாயுமானவனுக்கு…!


அன்புடன் ❤
மு. மோனிஷா ❤(Special thanks to my energy booster)

அன்று மட்டும் இல்லை என்றும் அவர்களை தாங்குவதற்காக பிறப்பெடுத்தது போல் அல்லவா நடந்துகொள்கிறான். துணிக்கடை அடைந்த போது மணி எட்டை நெருங்கியது, மனு முதலில் அவர்களை குழந்தைகளின் பிரிவுக்கு அழைத்துச் சென்றான் .அவன் தான் துணியை தேர்வு செய்தான்.கனி வழக்கம்போல் அமைதியாகவே நிற்க மல்லிகா ,கோபியை தவிர மற்ற மூவரையும் அவர்களுக்கு துணி எடுக்க மணோ உடன் அனுப்பியிருந்தான். மல்லிகா,"கனி நீ தேர்வு செய்யவில்லை", என்று கேட்க அவள் தயக்கத்துடன்," அவர்கள் தேர்வு தான் நன்றாக இருக்கும் ,என்னை விட குழந்தைகளுக்கு எது சரி என்று அவருக்கு தெரியும் ",என்றால். இதைக்கேட்ட மல்லிகாவுக்கு சொல்லில் அடங்காத மகிழ்ச்சி. கோபியோ , "அதுசரி தான்மா, இதே தெளிவு அவரின் மேல் உனக்கு உன் விஷயத்தில் இருக்க வேண்டும்", என்றான் பூடகமாக.


முதலில் முழித்த கனி பின் அவர் கூறிய அர்த்தம் புரிந்து விட ,"நான் அதை எப்படி ",என்று அவள் திணற," நீ ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் கனி, பிள்ளைகளுடன் அவர் உறவை பார்த்தாய் அல்லவா", என்றால் மல்லிகா அவளுக்கு எடுத்துரைப்பது போல் . அவள் நிமிர்ந்து மனுவை பார்க்க அப்போது அவன் கையில் நான்கு பைகளோடு நான்கு குழந்தைகளுடனும் அவர்கள் அருகில் வந்தான்.


மல்லிகா கையில் இரண்டு பையை கொடுக்க அவள் என்ன என்பது போல் பார்க்க," இது குழந்தைகளுக்கு அண்ணி", என்றான் பணிவாக ,"அது வந்து கனி மாப்பிள்ளை ,ஏன் செலவு ஏற்கனவே நீங்கள் எங்களுக்கு எவ்வளவோ", என்று அவள் தயங்கியபடி கூற." நீங்கள் நான் கனிக்கும் பிள்ளைகளுக்கும் செய்வதை கூறுகிறீர்கள் என்றால் இதுவே கடைசியாக இருக்கட்டும், ஏனென்றால் நான் தான் எனது மனைவிக்கும், எனது குழந்தைகளுக்கும் பார்க்கணும் அந்த எனது என்பதில் ஒரு அழுத்தம் கொடுத்து அவன் சொல்ல, ஏன் நீங்கள் கோபி அண்ணா உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் செய்வதற்கு நன்றி சொல்வீர்களா", என்றான் கேள்வியாக.


மல்லிகா அவனை திகைத்துப் பார்க்க, கனிகோ பாவம் ஆகிப்போனது கோபியோ,"மல்லி அவர் உன் தங்கை கணவர் அதை முதலில் மனதில் நினைத்து பேசு, அது போல் இனிமேல் குழந்தைகள் முன்பு இப்படி பேசாதே", என்றான் சிறு கண்டிப்போடு .


மனு," அண்ணி நான் குழந்தைகளுக்கு அவர்கள் முக்காலத்திலும் நான் ஒருவனே தகப்பனாக இருக்க விரும்புகிறேன் ",என்றான் தொடர்ந்து." நான் பேசியது தவறு", என்று அவள் ஆரம்பிக்க கனி தன் தமக்கை மன்னிப்பு வேண்டுவது பொறுக்காமல் வாயை திறக்க வர," நீங்கள் கனியின் அக்கா அவளின் நலனில் உங்களுக்கு அக்கறை அதிகம் தான், இது அன்பினால் விளைந்த தவறு அதற்கு ஏன் என்னிடம் ,வேண்டாம் நான் மூன்றாம் மனிதன் இல்லை, அண்ணா எப்படி கனிக்கு ஒரு சகோதர தகப்பன் உறவோ, அதைப் போல் தான் நானும் உங்களுக்கு, வாங்க நேரம் ஆகிறது உங்களுக்கும் எங்களுக்கும் துணி எடுத்து விட்டு கிளம்ப வேண்டும் வேண்டும் ", என்றவாறு பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு சேலைகளின் பிரிவுக்கு சென்றான்.


சிறு தயக்கம் கூட இல்லாமல் அவளுக்கு ஒரு அழகிய மாந்தளிர் உடம்பு முழுவதும் தங்கச்சரிகையோடு இருந்த புடவையை தேர்ந்தெடுத்தான். அவள் வெறும் பார்வையாளராக மட்டும் இருந்தால்.


ஆண்கள் பிரிவுக்குள் நுழையும் போது மணோ ஏற்கனவே அங்கு மற்றவர்களுக்கு எடுத்ததை கூறிவிட்டு," அண்ணா உங்களுக்கு மட்டும் தான் ",என்று கூறிவிட்டு அவர்கள் இருவரையும் தனியே விட்டு விலகிச் சென்று விட்டான்.


அவள் அமைதியாக நிற்க ,அவள் அருகில் வந்தவன் ,"தங்கம் நீ தான் எனக்கு தேர்வு செய்ய வேண்டும்", என்றான் அவளை பார்த்துக்கொண்டே. அவள் திகைத்து விழிக்க ,"நானா எனக்கு பழக்கம் இல்லை ,உங்களுக்கு தெரியுமல்லவா ",என்றால் ,"அது பழைய கதை ,எனக்கு அது தேவையில்லை ,இதுதான் நிஜம், நிகழ்காலம், நீ எதை எடுத்துக் கொடுத்தாலும் எனக்கு சம்மதம்தான்", என்றான் அன்பாக .


அவள் முதலில் தயங்க, அவளை தன் கைக்குள் நிறுத்தி ,"ம் ,எடு" என்றான், அவனின் அருகாமை அவள் தயக்கத்தைக் விடுபட்டு புது தைரியத்தை கொடுத்தது. அங்கே அடுக்கி இருந்ததில் ஒரு அழகான பச்சை நிறத்தில் தன் சேலையுடன் ஒற்றுப் போவது போல் இருந்த ஒரு சட்டையை எடுத்தால். அவன் எப்போதுமே அணிந்து பார்த்து தான் எடுப்பான் .அவள் தேர்வு செய்ததும், அதை எடுத்துக்கொண்டு அணிந்து பார்க்கும் அறைக்குள் செல்ல, இவள் அறையின் வெளியே நின்று கொண்டாள் .


அவன் உள்ளே அணிந்து கொண்டு கதவைத் திறக்க இவள் அங்கு உள்ள பொம்மைகளை பார்த்துக் கொண்டு நிற்க ,அவளும் சுற்றுப்புறமும் சுதாரிக்கும் முன் அவளை உள்ளே இழுத்து கதவை அடைத்தான் .அவள் பயத்தில் அலற போக அவள் வாயை தன் வாயை கொண்டு அடைத்தான், அவளின் குரல் அவனின் வாய்க்குள் அடங்கியது அவள் அடங்கியதும் அவளை மென்மையாக முத்தமிட்டு அவளை விடுவித்தான் .அவள்," ஆ ",என்று பார்க்க அழகாக கண்ணடித்துவிட்டு அவனின் அக்மார்க் லேசான சிரிப்பை உதிர்த்தான்.


அதில் மேலும் துடித்தவளை அவள் அருகில் வந்து அவன் இறுக்கி அணைக்க அவளது நடுக்கம் குறைந்து தன்னிலைக்கு வந்தால் .


அவள் நாணி கொண்டு குனிய அவள் அருகில் குனிந்து," இந்த நிமிட சந்தோஷம் நிம்மதி மட்டுமே இனிமேல் நம் வாழ்வில் நிலைக்க வேண்டும், தங்கம் வேறு எதையுமே நீ யோசிக்காதே அது ஒன்றை மட்டுமே நான் உன்னிடம் எதிர் பார்க்கிறேன்", என்றான் அன்பாக .அவள் அவனை நிமிர்ந்து பார்க்க, அந்தக் கண்கள் மீது ஆசையுடன் ஒரு முத்தம் வைத்து ,"இந்தக் கண்கள் எப்போதும் என்னிடம் பொய் உரைத்தது இல்லை", என்றான் காதலாக .


அவர்களின் நெருக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது மனுவின் கைப்பேசி .அவளை அணைத்தவாறே அதை உயிர்ப்பித்தவன்,"இதோ வருகிறேன் அண்ணா", என்று வைத்தவன் அவளிடம், "போவோமா", என்றான் ."ம்",என்றால் மெதுவாக ."வந்த வேலை மறந்து போயிற்று பார்த்தாயா, சட்டை எப்படி ",என்றான் கேள்வியாக அவள் நிமிர்ந்து பார்க்க தயங்க," தங்கம்", என்று அவனின் அழைப்பில் அவனை நிமிர்ந்து பார்த்து நன்றாக இருக்கிறது என்பது போல் தலையை ஆட்டினாள்.


இருவரும் ஒருவாறு வெளியே வந்து அனைவருக்கும் எடுத்த துணிகளுக்கும் பணத்தை செலுத்தி வாங்கிக்கொண்டு ஒரு உயர்தர ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான் .

அனைவரும் ஒரு குடும்ப அறைக்கு அழைத்துச் சென்று அவரவர் துணையோடு அமர்ந்துகொள்ள மனோ மடியில் ஹாசினி அமர்ந்து கொள்ள ஹாசிக்கா மனு மடிக்கு வந்தது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த சுரேனின் பெற்றவருக்கு கௌதம் அப்பா சொன்னது நினைவு வந்தது," அவன் குழந்தைகளை நன்றாகப் பார்க்காமல் ,அவர்கள் வாழ்வை அழித்து விடுவான்", என்று திருமணத்திற்கு மறுநாள் கடைக்கு வந்து கத்தி விட்டு சென்றார் .அந்த வார்த்தை அவர்கள் மனதை நெருடினாளும், இப்பொழுது அவர்கள் கண்முன் பார்ப்பது அந்த வார்த்தை ஏற்படுத்திய காயத்திற்கு மருந்தாக அமைந்தது .


கனிக்கு தொந்தரவு தராமல் அவர்கள் இருவருமே குழந்தைகளை பார்த்துக் கொண்டனர். லதாவுக்கு கூட இருந்த சிறு சலனம் தகர்ந்தது ,ஏனென்றால் முன்பு இப்படி எப்போதாவது அதிசயமாக வெளியே வர நேர்ந்தால் குழந்தைகளுடன் கனி சிரமப்படுவால். ஆனால் இப்பொழுது அப்படியில்லை அவள் முகத்தில் நிம்மதி மட்டுமே அல்லாமல் அவள் மறந்து போயிருந்த சிரிப்புக் கூட அரும்பத் தொடங்கி இருந்தது.


கனி என்றால் அவள் அப்பாவிற்கு உயிர் ,அவர் இறக்கும்போது அவள் வாழ்க்கையின் மீது அவருக்கு கவலை. சுரேனின் நடவடிக்கைகளை தான் அதற்கு காரணம் ,பணத்தை பார்த்து ஏமாந்து விட்டோம் என்று ரொம்பவும் மரணப்படுக்கையில் கவலைப்பட்டவர், அதே கவலையுடன் இறந்தும் போனார்.


மனு கனியையிம் குழந்தைகளையும் பார்த்துக் கொள்ளும் விதம் அவருக்கு மனது நிறைந்தது. எல்லாம் முடிந்து சுரேனின் குடும்பம் விடைபெற சீதா கனி அருகில் வந்து," மனு எனது மகன் தான், நான் பெறாமல் கடவுள் எனக்கு வரமாக தந்தவன். அவனை ஒரு குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்", என்றார் அவளை உச்சி முகர்ந்து. கனி அவர்களில் காலில் பணிய அவளைத் தூக்கி சீதா அணைத்துக்கொண்டார்.

தனசேகரோ," அம்மாடி மாமா மனது நிறைந்து கிடக்கு, உனக்கு துரோகம் செய்து விட்டேனோ என்று ஒரு கவலை இருந்தது ,ஆனால் இப்பொழுது தான் பாரம் குறைந்தது, நீ அவனுடன் நூறு ஆண்டு காலம் நன்றாக வாழ வேண்டும் ", என்று மனதார வாழ்த்திவிட்டு விடைபெற்று சென்றார்.



லதா அவர்களுடன் அங்கு சென்று விட்டார். மனோ அவர்களை வீட்டில் இறக்கிவிட்டு நின்றவனை கோபி தன்னுடைய காரில் ஏற்றிக்கொண்டு மனுவின் வீட்டிற்கு வந்தான்

தொடரும்
 
Last edited:

Matharasi

Moderator
அத்தியாயம் 12


மனோவின் அறையை கோபி குடும்பம் தங்க ஏற்பாடு செய்துவிட்டு மனோ தனது ஜாகையயை ஹாலில் விரித்தான். நான்கு குழந்தைகளும் அவனை சித்தா என்று ஒரு வழி ஆக்கியது ,அவர்களுடன் இணைந்து விளையாட ஒன்றின் பின் ஒன்றாக அவனோடு தூங்கி விட்டனர்.


கனி வந்து பார்க்கும்போது ஹாசிக்கா தொட்டிலில் தூங்கிக் கொண்டிருக்க, ஜீவிதா சரோஜா அம்மாவுடன் படுத்திருந்தாள் .ஹாசினி மற்றும் ஜீவநதி மனோவின் இருபுறமும் துயில் கொண்டிருந்தது .மல்லிகா வந்து தூக்க முயல சரோஜா அம்மா மறுத்துவிட்டார்.

"இருக்கட்டும் அம்மா நீ போய் படு ",எழுந்தாள் கூப்பிடுகிறேன் என்றார் .அவள் மறுத்துப் பேச வாயைத் திறக்க மனு அப்பொழுதுதான் வீட்டினுள் நுழைந்தான், அவர்கள் ஹோட்டலை அடைத்து விட்டு அதன் வாயில் இருந்த கூடாரத்தின் அடியில் நிறுத்திவிட்டு வந்தான்.நாளை இதற்கு வேறு ஒரு இடம் பார்க்க வேண்டும். மனு வருவதை பார்த்த மல்லி வாயை மூடிக் கொண்டு ஒரே ஓட்டமாக உள்ளே சென்றுவிட்டால்.


கனிக்கு அப்படி ஒரு சிரிப்பு தன் அக்காவையே ஓட வைத்து விட்டானே.உள்ளே ஓடி வந்த மனைவியை கோபி என்னவென்று வினவ, அவள் நடந்ததை கூற "பரவாயில்லையே, சகல பெரிய ஆளு தான் உன்னுடைய வாயை அடச்சுட்டார்", என்றான் நக்கலாக. "உங்கள அவர் இருந்தார் அதான்", என்றால் மெல்லமாக," முதலில் அவரை நம் குடும்பமாக நினை, அதுதான் கனிக்கும் குழந்தைகளுக்கும் நல்லது", என்றான் முடிவாக.


" சரி சரி சகல இருக்கிற தைரியத்தில் ரொம்பவும் மிரட்டாதீங்க நாளை நம் வீட்டுக்கு செல்ல வேண்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்", என்றால் முறைப்பாக. முறைத்த மனைவியின் வாயை அடைக்க வழி தெரியாதவனா கோபி, "அப்புறம் பிள்ளைகள் இல்லை", என்றவாறு அவளை நெருங்கியவன், அவள் விலகும் முன் விளக்கை அணைத்துவிட்டு அவளின் மேல் சரிந்தான்.

வீட்டுக்கு வந்த மனுவை வரவேற்றது கனியின் சத்தமான சிரிப்பு ,அவளை பார்த்தவனை அவளும் பார்த்துவிட தன் கண்ணின் புருவத்தை ஏற்றி என்னவென்று கேட்க ,அவன் செய்த செய்கையில் சமையல் அறைக்கு ஓடிவிட்டாள். உள்ளே வந்தவன் பிள்ளைகள் மணேவை சுற்றி படுத்திருப்பதை பார்த்தவன், அவன் அருகே சென்று கீழே அமர்ந்தான்.


" என்னடா கஷ்டமா இருக்கா ",என்றான் தயக்கமாக ."ஏன் என்ன என்று", மனோ முழிக்க அப்போது தரையை மனு பார்க்க ,"ஐயோ போங்க அண்ணா நான் எவ்வளவு சந்தோசமாக இருக்கிறேன் தெரியுமா இந்த நான்கு குட்டிகளும் என்னை விடவே இல்லை நான் தொலைந்த என் குழந்தைப் பருவம் இப்போது நிறைவேறியது எனக்கு அந்த குறையுமில்லை, என்னதான் அம்மாவும் நீங்களும் எனக்கு எல்லாமே செய்தாலும் அந்த ஒரு குறை ஆனால் இப்போது மனோ ஃபுல் ஹாப்பி ",என்றான் சந்தோஷமாக.


மனுவுக்கு இப்போது மனோவை பார்க்க வளர்ந்த குழந்தையாகவே தெரிந்தான். செல்லமாக அவன் முடியை கைகளால் கோதிவிட்டு சிறு சிரிப்புடன் முகம் கை கால் கழுவ தோட்டத்திற்கு சென்று விட்டான் .

சரோஜா அம்மா, "அம்மா கனி", என்றார் சத்தமாக ,"என்ன அத்தை", என்றால் பதிலாக ."பசங்களுக்கு பிளாஸ்கில் பால் ஆற்றி வைத்துவிடு மா, சரியா சாப்பிட மாதிரி தெரியலை," என்றார் ."இருக்கட்டும் அத்தை எழுந்த நான் கொடுத்துக்கிறேன்."இல்லம்மா இன்றைக்கு பசங்க வெளியவே தூங்கட்டும் ",என்றார் பதிலாக.


சட்டென மனுவோடு ஒரே அறையில் தனியாகவா இவ்வளவு நாளில் அவள் சந்திக்காத , சிந்திக்காத ஒன்று," அது அத்தை ",என்று அவள் தடுமாற," ஏற்கனவே பசங்களுக்கு ரொம்ப அலைச்சல் விளையாட்டும் ரொம்ப, மேல் வலிக்கும் இதில் நீ தூங்குகிறஇடம் மாற்றினால் அது சினுங்க ஆரம்பித்து விடும் ",என்றார் முடிவாக .


இவள் திருதிருவென முழிக்க அப்போது மனுவின் ஒரு செறுமலில் நிகழ்வுக்கு வந்தவள் ,அவன் மாலை கிளம்பும்போது காரில் என்ன சொன்னான் என்று நினைவு வர ,"நான் ஒன்றும் நினைக்கவில்லையே", என்றால் சமாளிக்க ,முதலில் ஒன்றும் புரியாமல் யோசித்தவனை மனோவின் பேச்சு புரியவைத்தது."அண்ணி நாங்கள் எங்கள் பிள்ளைகளை பத்திரமாக பார்த்துக் கொள்கிறோம், நீங்கள் நிம்மதியாக ஓய்வு எடுங்கள்", என்றான் மனோ .


மனுவுக்கு மெல்ல புரிந்துபோனது தன்னுடன் தனிமையில் ஒரே அறையில் இருக்க தயக்கம் கொள்கிறாள் என்று புரிந்த பதில் தான் அவனுக்கு உவப்பாக இருந்தது. அவள் இன்னும் தன்னை முழுமனதாக ஏற்கவில்லையா அவன் இதையே யோசிக்க ,அவனின் மௌனம் அவளுக்கு மேலும் மனதுக்குள் குளிரை பரப்ப, அது மேலும் அவளுக்கு பதற்றத்தை தர," நான் உங்கள ,பசங்கள தவிர வேறு யாரையும்", என்று பயத்தில் பிதற்ற ஆரம்பிக்க ,அவளின் விரிந்த முகமும், பதட்டமும் அவனுக்குக் கோபத்தை மூட்ட, அதுபோக அப்போ காலையில் இருந்து தன்னுடன் இழைந்தது ,அது வெறும் பயத்தின் நாளா என்பது வேறு அவனுக்கு ஞாபகம் வர , அவனுக்குள் இருக்கும் சண்டியர் தலைதூக்க.



" முதலில் உன் பிதற்றல் நிற்பாட்டு, ஒரு டம்ளர் பாலுடன் அறைக்கு வந்து சேரு", என்று நக்கலாக தன் முழு சண்டியர் தனத்துடன் கூறிவிட்டு சென்றுவிட்டான் . இவள் அந்த குரல், அதே குரல் என்று நடுங்க சமையலறைக்குள் சென்று முடங்க, அங்கையிம் முடங்க முடியாமல் சரோஜா அம்மா வேறு, " நேரம் ஆகிறது கனி, மற்ற வேலைகளை காலையில் பார்க்கலாம் ", என்று கூற, அவன் கேட்ட பாலை எடுத்துக் கொண்டு அவர்களது அறையை நோக்கி செல்ல,எவ்வளவு மெதுவாக சென்றாலும் அறையை அடைந்து விட்டால்.

இவள் பயந்துகொண்டு அறைக்குள் செல்லாமல் வெளியே நின்று, தலையை மட்டும் உள்ளே விட்டு எட்டிப்பார்க்க அதிர்ந்தாள், ஏன்னென்றால் இவ்வளவு நாளில் அவன் அந்தக் கட்டிலில் பகலில் கூட அமர்ந்தது இல்லை ,ஆனால் இப்போது கைகளை தலைக்கு முட்டுக் கொடுத்து சாய்வாக படுத்திருந்தான் .


இவள் வந்து விட்டதை கண்டு கொண்டவன் எழுந்து அவள் அருகில் மெதுவாக ,ஆனால் அழுத்தமாக காலடிகளுடன் நெருங்க, அதை பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவள் ,சுவற்றில் பல்லி போல் ஒட்டிக் கொள்ள, கைகள் பயத்தில் நடுங்க, பால் டம்ளர் குலுங்க, அவளை நெருங்கியவன் பால் டம்ளரை ஒரு கையிலும் மற்றொரு கையால் அவளை உள்ளே இழுத்து கதவை சாத்தி தாழ் போட்டான். அவள் பயத்தில் நடுங்க டம்லரை அருகில் இருந்த மேசை மீது வைத்துவிட்டு, அவளை நெருங்க அவளுடைய கண்கள் பயத்தில் விழிக்க, உடம்பு நடுங்க நின்றிருந்தாள் .


அவளுக்கு ஏனோ சுரேன் உடைய இணக்கமற்ற முரட்டுத்தனமான உறவு நினைவு வர, அது வேறு பயத்தை கூட்டியது. எப்போதும் அவள் கண்களைப் பார்த்து புரிந்து கொள்ளும் மனு இன்றும் அதை பார்த்து தெரிந்து கொள்ள முற்பட, அவளின் நடுக்கம் அவனுக்கு தடையாக இருக்க .

அவளை நெருங்கி அவனது கைகளால் அவளை தூக்கி கொண்டு விளக்கை அமற்றி சின்ன விளக்கை மட்டும் ஒளிர விட்டு, அவளை கட்டிலில் கிடத்தி அவள் யோசிக்கும் முன் அவள் மீது படர்ந்தான் .


மனு கிறக்கத்துடன் ,"தங்கம் ",என்று அழைக்க, கணவனின் பார்வை வீச்சை தாளமுடியாமல் அவள் வேறு புறம் பார்வையைத் திருப்ப ,"நான் எதை செய்தாலும் அது உன் நன்மைக்குத்தான் ,என்று நம்பிக்கை உனக்கு இருக்கிறது அல்லவா", என்று கேள்வி எழுப்பி விட்டு அவள் பதில் காக காத்திருக்க ,ஒரு நிமிடம் கண்ணை மூடி யோசித்தவள் முன் அவன் உடன் அவள் களித்த நிமிடங்களும் குழந்தைகள் மேல் அவனின் பாசமும் கண் முன்னே வர, அவள் முகத்தில் ஒரு தெளிவு பிறக்க ,அதை கண்டவன்," பின் என்ன தயக்கம் தங்கம் ,எனக்கு நீ வேண்டும்", என்றான் காதல் சண்டியர் ஆக .

அவள் அதில் விளித்து நிமிர, அவள் விலகும் முன் ,அவன் அவள் இதழ்களோடு இதழ் பொருத்தினான். பிடிவாதக்காரர் சண்டியராக தங்கத்தை அவன் உரிமை கொண்டாட, அவள் பெண்மை அவனுக்கு வசமாக ,அவன் முரட்டு கரம் பட்டு அவள் அழகாக பூக்க.


அங்கே இரு உடல்களின் சேர்க்கையில் இரு உள்ளங்களும் மௌனமான நிலையில் ஒரு மொழி இதயமாக உருமாறியது.


❤மௌனமான மொழிகள் ❤

வலிகளே வாழ்க்கையாக…!

மோட்சமாய் வந்த தேவதூதனே…!

என் பகலும் இரவும்…!சகலமும்…!

உன் ஆட்சியின் கீழே…! என் ஆதவனே…!

என் ஆருடம் அறிந்த…!மாயவனே…!

தாயாய் சேயாய் எனை தாங்கும்…!என் தாயுமானவனே…!

நிலம் விழும் என் நிழலும் மாறட்டும் உன் பிம்பமாய்…!

ஒப்படைத்தேன் என்னை முழுதாய்…!உன்னிடம்…!

விரல் மீட்டும் வீணையாய் எனை மீட்பாயோ…!

சரணடைந்தேன் உன்னிடம்…!

சர்வமும் நீயே என…!

என் தேவைகள் தீர்த்தாய்…!

என் விழி அசைவில்…!

முரடன் என்னும் முகமூடிக்குள்…!

புதைந்திருக்கும் புன்சிரிப்பைக் காண விழைகிறேன்…!

திரை விலக்கி ஒளி பெருமோ என் சூரியன்…!

மிளிரட்டும் நம் வாழ்வு இனி…!மின்மினியாய் 🌟

இணைந்தேனே உன்னுள்…!

இசையானேன் உன்னாலே…!

ஒளிப்பெற்றேன் உன்னிடம்…!

ஒளிர்ந்தேனே உன்விழியில்..!

விடியட்டும் நம் வாழ்வில்…!

இனியெல்லாம் வசந்தமே…!

அன்புடன் ❤

மு. மோனிஷா ❤(special thanks to my sister in law)


அங்கே மௌனமான ஒரு காதல் யுத்தம் நடைபெற, கனியின் மனதில் சுரேன் , ஏற்படுத்திய கணவன்-மனைவி உறவுக்கு உண்டான அச்சத்தை, மனு அவனின் சண்டித்தனம் ஆனா காதலில் அவள் முதலில் தடுமாறினாலும், பின்பு அவனது நிதானமான மென்மையான அணுகு முறையில், அவள் தயக்கம் தூரத்து அவனுடன் முழுமனதாக ஒன்றினால்.


அங்கு ஒரு மௌனமே மொழியாய் கொண்ட ஒரு அழகிய இல்லறம் அரங்கேறியது .கனியின் காதல் நிறைந்து இணக்கம் விடியும்வரை, அவனின் தேடலை நிறுத்த விடவில்லை. ஒருவாறு கலைத்து கலைந்து போனவளை அவனின் தேவைகளை முழுமையாக நிறைவேற்றியவளை ,தன் நெஞ்சின் மேல் தலையை வைத்து ஒரு கையால் அணைத்துக் கொண்டு போர்வையை போர்த்தி ,தலைகோதி என்றும் இல்லா மனநிறைவுடன் இருவரும் கண் அசந்தனர் அதிகாலையில் .


உடல் மன களைப்பில் அசந்து தூங்கி கொண்டிருந்த கனிக்கு விழிப்பு வந்ததும் ,தன் மேல் பழக்கமற்ற கிடக்கும் பலமான கரத்தைப் பார்த்ததும் நேற்று நடந்த அழகிய கூடல் ஞாபகம் வர, வெட்கத்துடன் அவன் எழும்பாத வண்ணம், மெதுவாக நகர்ந்து எழும்பி தனக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு மணியை பார்த்தால் அது எட்டை நெருங்கி கொண்டு இருந்தது .



"ஐயோ", என்று அதிர்ந்து வேகமாக குளித்து உள்ளேயே துணியை மாற்றி வெளியே வந்தாள் . அவன் இன்னும் தூங்கிக் கொண்டிருக்க அவளுக்கு வசதியாய் போயிற்று அறை கதவை சத்தமில்லாமல் திறந்து சாத்திட்டு சமயலறைக்கு சென்றாள் .


சரோஜா அம்மாவும் மல்லிகாவும் சமைத்துக் கொண்டிருந்தனர்," அதுவந்து அசந்து", என்று அவள் தடுமாற," அதனால் ,என்னம்மா இந்தா உனக்கு காபி நீ குடி ,பசங்க எல்லாம் குடிச்சாச்சு மனு எழுந்தவுடன் சமயலுக்கு வாங்கி வரச் சொல் ,நாளை ஆள் ஏற்பாடு செய்து உள்ளதாக கூறினான் ",என்றார் தொடர்ந்து .


" அக்கா நீ இரு நான் பார்க்கிறேன் ",என்று அவள் மல்லிகை தடுக்க போக ,"இருக்கட்டும் டா ,நான் அத்தையுடன் சேர்ந்து பார்த்துக் கொள்கிறேன், நீ மாப்பிள்ளையை கவனி ",என்றால் தங்கையிடம் முகம் பார்த்து.



அதில் ஏதோ வித்தியாசத்தை கண்டவள், சரோஜா அம்மாவை பார்க்க அவர் மகிழ்வுடன் கண்ணை மூடித் திறக்க மல்லிகாவுக்கு சொல்லில் அடங்காத மகிழ்ச்சி கொண்டாள் . கனிக்கு இருவரின் முகத்தில் இருந்த சிரிப்பு, அவர்கள் கண்டுகொண்டார்கள் என்று காட்டிக் கொடுக்க, அவனுக்கு காபியை தயாரித்து எடுத்துக் கொண்டு அவர்களின் அறைக்குள் சென்றால் தலை நிமிராமல் .



செல்லும் தங்கையே பார்த்துக் கொண்டிருந்த மல்லிகாவின் கண்கள் கண்ணீர் கரித்தது இதைப்பார்த்து சரோஜா அம்மா ,"ஏன் மா ,எதையும் நினைக்காத ,இனிமே அவர்கள் சந்தோஷமாக இருப்பார்கள், இரண்டு பேரும் அவர்களின் முதல் வாழ்வில் சொல்லில் அடங்காத வேதனையை அடைந்தவர்கள் ,ஒருவருக்கொருவர் அனுசரணையாக மருந்தாகவும் இருப்பார்கள் ",என்றார் பரிவாக .


"அது அத்தை, இரண்டு பெண் குழந்தைகளுடன் ,யாருமற்று தகப்பனும் இல்லாமல் உடன் பிறந்தவர்களும் இல்லாமல், அவள் கணவனை இழந்து நின்றபோது ஒரு சகோதரியாக துடித்து தான் போனேன், ஏனென்றால் என்னால் அவளை சரிவர பார்த்துக் கொள்ள முடியுமா , அவளுக்கு சரியான பாதையை அமைத்து தர முடியுமா என்று குழம்பினேன் ",என்றால் தவிப்பாக.



அப்போது அங்கே வந்த மனோ ,"அண்ணி அப்படி இனிமே சொல்லாதீங்க ,உங்கள் இருவருக்கும் நாங்கள் இருக்கிறோம் ,அப்பா உடன் பிறந்தவர் இல்லை என்று, கனி அண்ணி எனக்கு உடன் பிறந்தவர் போல் என்றால் நீங்களும் அவ்விதமே, என் அண்ணன் ஒரு முரடன் தான், ஆனால் அவன் போல் உண்மையான பாசத்தை காட்ட முடியாது ,நீங்கள் கனி அண்ணி பற்றியோ குழந்தைகள் பற்றியோ கவலை வேண்டாம்", என்றான் உண்மையான கரிசனத்துடன் .



"ஆமாம் மா இது மகிழ்வான காலம் ,நீ சஞ்சலப்பட வேண்டாம் ",என்றார் சரோஜா அவளை ஆதரவாக அணைத்து.


அறைக்குள் சென்ற கனியை வரவேற்றது வெற்று அறை தான் .குளியலறையிலும் சத்தம் இல்லை என்றதும் தோட்டத்துக்கு சென்றவள் மனது நிறைந்து,அழகான புன்னகை அரும்பியது.


தொடரும்
 
Last edited:

Matharasi

Moderator
அத்தியாயம் 13


கனி தோட்டத்திற்கு சென்றபோது, கோபி குளித்து முடித்து உள்ளே செல்ல வந்து கொண்டிருந்தார், அவள் காபியை கொண்டுவருவதை பார்த்தவன் அவளை வம்பிழுக்க , அதை வாங்க கையை நீட்ட ,முதலில் திகைத்தவள் அவரின் முகத்தில் இருந்த சிரிப்பு கண்டு கொண்டு," போங்க மச்சான் அக்கா தயாரித்து தருவாள் இது அவங்களுக்கு", என்ற கனியைப் பார்த்து அதிர்ந்து நிற்பது கோபியின் முறை ஆனது.


எப்போதும் இதுபோல் வம்பு இழுத்தாள், மௌனமாக சிரிப்பாலே தவிர பதில் பேச மாட்டாள். ஆனால் இன்று சிரித்தது மட்டுமில்லாமல், அதற்கு தகுந்த பதில் சொல்லும் மச்சினிச்சியை பார்த்தபோது திகைத்தான் .அதை அவனுடன் குளித்து வந்த ஜீவநதி," அப்பா, சித்திக்கு பேச தெரியுமா, இதுவே முதல்முறை உங்களிடம் அவர்கள் பேசுவது ",என்றால் . இதைக்கேட்ட கோபிக்கு நேற்று இருந்த கனிக்கும் இன்று இருக்கும் கனிக்கும் 100 வித்தியாசம் சொல்லலாம் போலவே என்று நினைத்துக் கொண்டே அறைக்குள் நுழைந்தான் .



தோட்டத்திற்கு சென்ற கனி மூவரையும் கண்டு திகைத்தாள். மூவரையும் மனு குளிப்பாட்டி கொண்டிருக்க ஆனால் பார்ப்போருக்கு அந்த மூவரும் அவனை குளிப்பாட்டுவது போல்தான் இருக்கும். அவள் பின்னே வந்த மனோ," நன்றி அண்ணி "என்றான் கனியிடம் ,இவள் திரும்பி ஏன் என்பது போல் பார்க்க, "என் அண்ணன் வாழ்வு இப்படியே போய் விடுமோ என்று கவலையில் இருந்தேன், ஆனால் நீங்களும் குழந்தைகளும் அவன் வாழ்வை வசந்தமாக மாற்றி விட்டீர்கள்", என்றான் உள்மனது சந்தோஷத்துடன்.


" நான் ஒன்று கேட்கலாமா ",என்றால் கேள்வியாக." நீங்கள் என்னிடம் எதை வேண்டுமானாலும் கேட்கலாம் தயக்கம் வேண்டாம்", என்றான்.



" இந்த காலத்தில் சொந்த அண்ணன் குழந்தைகளையே யாரும் நினைப்பதில்லை, நீங்கள்", என்று முடிப்பதற்குள்.

"அண்ணி அவன் உங்களை இங்கு அழைத்து வரும்போதும் , அவர்களை என்னிடம் அறிமுகப்படுத்தும் போது எனது குழந்தைகள் என்றுதான் கூறினான், பிறந்ததிலிருந்து எனக்கு என் தந்தை யார் ,அவருடைய பாசம் என்ன எதுவும் எனக்குத் தெரியாது, அவர் என்னுடைய எட்டாவது வயதில் பிரிந்து போனாலும், அவன் தான் எனக்கு எப்போதும் தந்தையாக நடந்து கொண்டான். அவனுடைய பத்து வயதில் உழைக்க ஆரம்பித்தான் இன்றுவரை உழைத்துக் கொண்டேதான் இருக்கிறான் ,எனக்கு என்ன தேவை என்பது என்னை விட அவனுக்கு தெரியும் , நான் கேட்கும் முன்னே அது எனக்கு கிடைத்து விடும், அவனுடைய ஆசைக்கு என்று இதுவரை எதையும் செய்ததில்லை, அப்படிப்பட்டவன் என்னிடம் வந்து இது என் குழந்தைகள் என்று கூறும் போது அதை எப்படி நான் மறுப்பேன், என் அண்ணன் எது செய்தாலும், அது முதலில் தப்பாக தெரிந்தாலும் பின் முடிவு சரியாக இருக்கும், என்ற அசைக்க முடியாத நம்பிக்கை என்னிடம் உள்ளது ,ஏன் உங்கள் திருமணம் கூட,",என்று அவன் தொடங்க ,"அவர் அப்படி செய்யவில்லை என்றால் அது நடந்திருக்காது ",என்றால் முடிவாக.




"ஆமாம் ஆனால் அதன் முடிவு நன்றாகத்தானே இருக்கிறது ,அவனும், நீங்களும், பிள்ளைகளும், ஒரு குடும்பமாக, நான் உங்களிடம் வேண்டுவது இதை மட்டுமே, உங்களின் கடந்த காலம் பிள்ளைகளுக்கு தெரிய வேண்டாம், அவன் எல்லாவற்றையும் சட்டரீதியாக மாற்றிவிடுவான், அது தான் உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் நல்லது ,எப்பவும் உங்களுக்கு உடன் பிறந்தவனாக நான் இருப்பேன் உங்களுக்கு உறுதுணையாக", என்றான் ஆதரவாக .

அவள் முகம் தன்னால் மலர,மனோ முன்னே போய் குழந்தைகளுடன் சேர, இவள் வருவதைக் கண்ட மனு எழுந்து வந்தான் .அவன் கண்களும், அவள் கண்களும் நேர்கோட்டில் சந்திக்க ,அந்த வீச்சை தாங்காமல் இவள் தலை குனிய ,அவளிடம் நெருங்காமல் அவன் தோட்டத்தின் வேறு பக்கமாக இறங்கி செல்ல முதலில் தயங்கினாலும், அவளும் அவளை பின்தொடர ,அங்கேயே இருந்த கல் மேஜையில், போய் அவன அமர ,இவள் அவன் அருகே வந்து காபியை தர ,அவன் வாங்காமல் இருக்கவும் ,என்ன என்பது போல் அவள் நிமிர்ந்து பார்க்க, அவன் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.


அவளுடைய கேள்வி மிகுந்த பார்வையில் ,"என் மேல் ஏதாவது கோபமா ",என்று அவன் ஆரம்பிக்க ,அவள் அவளுடைய கையால் அவன் வாயை அடைத்து ஒன்றும் பேசி விடாதே என்பது போல் தலையை ஆட்டினாள் . அந்தக் கைகளில் மென்மையாக முத்தம் கொடுத்துவிட்டு அந்த கையை தன்கையுடன் இணைத்து காபியை பருக ஆரம்பித்தான்.


"நீங்கள் எப்போதும் எனக்கு நல்லதை மட்டுமே செய்வீர்கள், என்று எனக்கு தெரியும் ",என்றால் அமைதியாக.


" இந்தத் திடம் நம் வாழ்வின் இறுதிவரை உனக்கு இருக்க வேண்டும் ", என்றான் ஏதோ நினைவாக," வா உள்ளே போகலாம் சமையலுக்கு என்ன வாங்க", என்று அவன் பேச்சை திசை மாற்ற ,அவள் முதலில் யோசித்தாலும் பின்பு எது வந்தாலும் அவனுடன் இருக்கும் போது எது வந்து விடப்போகிறது என்று அவளும் அவனைப் பின் தொடர்ந்து உள்ளே சென்றால்.


அடுத்த நாள் நன்றாக விடிய ,வீடு விழாக்கோலம் பூண்டது. ஆம் அவன் 3 பக்க சொந்தங்களையும் அழைத்திருந்தான் . அவன் வாங்கிக் கொடுத்த சேலையில் அந்த வானுலகத்தில் தேவதையாக வலம் வந்தவளை கண் இமைக்காமல் அவளையே தொடர்ந்தான் மனு. சுரேனின் குடும்பத்தினர் ,அவனுடைய அத்தை, சித்தப்பா மற்றும் கௌதமனின் அக்கா தீபா குடும்பம் அனைவரும் வந்து இறங்க, கனியைத் தன் கைவலையிலேயே வைத்துக் கொண்டான். அவனுக்குத் தெரியும் கௌதமின் அப்பா மற்றும் அக்காவிற்கு அவள் தன்னை திருமணம் செய்து கொண்டதில் விருப்பமில்லை என்று .


ஆனால் அவன் அழைத்ததின் நோக்கம் இன்றோடு அவளுக்கும் ,குழந்தைகளுக்கும், அவர்கள் நாளை எந்த ஒரு பிரச்சினையும் கொண்டு வரக்கூடாது என்பதற்காக மட்டுமே, அது மட்டுமில்லாமல் எல்லாமே எழுத்து மூலமாக ஆவணம் செய்துவிட வேண்டும் என்பது மட்டுமே அவனுடைய நோக்கம் . வந்ததிலிருந்து அவள் தன் கைகளில் எப்போது சிக்கிவால் என்று தீபா பார்த்துதான் கொண்டிருந்தாறள்.


ஏற்கனவே திருமணத்தின்போது தனது தம்பியை விட நிறம் குறைவான கனியை செய்தது அவளுக்கு பிடிக்கவில்லை. முதல் கோணல் முற்றிலும் கோணலாக,கனிக்கு சுரேன் இணக்கம் இல்லாமல் போனது, அதுபோக குடிக்கு அவன் அடிமையான போதும், கணவனை அவள் திருத்த முயற்சி செய்யவில்லை, என்று கனியின் மேலேயே குற்றம் சுமத்தினால் .
இவை அனைத்திற்கும் காரணம் ஒன்றே ,சுரேனின் மீது அவள் வைத்திருந்த பாசம் .தன் தம்பியுடன் இருக்கும் போது எப்போதும் எதையோ பறிகொடுத்தது போல் முகத்தை வைப்பவள் இன்று அவன் கை வளைவுக்குள் சிரித்த முகமாக இருப்பதை ஏற்க முடியவில்லை . சுரேனின் மீது இருந்த கண்மூடித்தனமான அன்பு அவளை சில விசயத்தை யோசிக்க விடவில்லை,கண்ணில் உயிரிழந்த கனிக்கும், இப்போது உயிர்ப்புடன் இருக்கும் கனிக்கும் உள்ள வித்தியாசத்தை.


தன் தம்பி குழந்தைகளை அருகிலே சேர்க்க மாட்டான், ஆனால் மனு குழந்தைகளை கீழே இறக்கி விடவே இல்லை.


அவள் எதிர்பார்த்தது போல் கனி தோட்டத்திற்கு தனியே செல்ல அவளை பின் தொடர்ந்தாள். அவள் மேல் தனக்கு இத்தனை நாள் இருந்த வன்மத்தை கொடும் விஷ வார்த்தையாக உமிழ்தாள் ,"எம்மாடி அம்மா முதல் புருஷன் எப்போ போவான் ஒட்டிக்கிட்டா ஆட்டோ காரனை எப்ப திருமணம் செய்யலாம் என்று காத்துகிட்டு இருந்தாயோ,ஆனா உன்னோட சாமர்த்தியம் யாருக்கும் வராதடி ,என்ன போட்டு இவனை மயக்கின ,யாருக்கோ பிறந்த பிள்ளைகளை இப்படி தாங்குகிறான், இல்ல ஒருவேளை", என்று அவள் எதையோ கூற வர கனிக்கு அப்படி ஒரு அதிர்ச்சி ,இந்த பூமி இரண்டாகப் பிளந்து இந்த நிமிடமே நாம் உள்ளே சென்று புதைந்தால் என்ன என்று, அவள் நினைவில் தீபா சொன்ன வார்த்தைகளும் சொல்லவந்த வார்த்தைகள் அவளுக்குள் தீயாக எறிய, அவள் தன் சுயம் இழக்கும் முன்," தங்கம்", என்ற அவனது அழைப்பு அவள் சிந்தனைகளை தடுத்தது எனில், தீபாவிற்கு தன் வாய் பசைபோட்டு ஓட்டியது, ஏனென்றால் மனுவின் பின்னால் நின்றது அவள் கணவன் செந்தில் அல்லவா.


செந்தில் ஒரு நியாஸ்தன், எப்போதும் உண்மையின் பக்கமே நிற்பவன்.

மனு தங்கத்தின் அருகில் வந்து அவள் பயந்த முகத்தில் கண்ணீர் நிரம்பிய நின்ற கோலத்தைப் பார்த்த போது, தீபாவை கொன்றால் என்ன என்று கூட அவனுக்கு ஒரு நிமிடம் தோன்றியது .ஆனால் முதலில் கனியை அல்லவா கவனிக்க வேண்டும் அவளை தன் கைக்குள் நிறுத்தி, "நீ இப்போது கனி மனுரஜீன், மனுவின் சரிபாதி, நாம் யார் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும் , பிறர் பேச்சை பெரிதாக எடுத்தால் வாழ முடியாது ,அவர்கள் என்ன கேட்டார்கள் இல்லை சொல்ல வந்தார்கள்", என்று அவளிடம் ஆரம்பித்து தீபாவை நோக்கி பார்வையை திருப்ப ,அந்தப் பார்வையே தீபாவை சுற்றேறித்தது, என் குழந்தைகளுக்கு நான் மட்டும்தான் தகப்பனாக இருக்க முடியும் ",என்றான் தெளிவாக .



அந்தக் குரலில் தீபா சற்று ஆடிப் போக ,"என் மனைவியின் நடத்தையை பற்றி பேச என்னை தவிர என்னை சார்ந்த யாருக்கும் பேசும் உரிமை கிடையாது", என்றான் சற்று குரலை தாழ்த்தி , அதில் நிமிர்ந்து அவனைப் பார்க்க," எண்ணில் சரி பாதியான நீ , கோழையாக இருக்கக் கூடாது" என்றான் அவள் தோள்களில் அழுத்தம் கொடுத்து.


இதை பார்த்துக் கொண்டிருந்த செந்தில், தீபா அருகில் வர, அவள் பயத்தில் பின்னே போக மனு," மச்சான்", என்றான் செந்திலை அழைத்து, அவரை நிற்க வைக்க ,"உங்களை அப்படி அழைக்கலாம் அல்லவா", என்றான் கேள்வியாக .


"நன்றாக என் தங்கையின் கணவனுக்கு இல்லாத உரிமையா ,அவள் வேண்டுமானால் சுரேனையிம் உன்னையும் பிரித்துப் பார்க்கலாம், எனக்கு வந்த கொஞ்ச நேரத்தில் புரிந்து போனது ,இன்று நீ குழந்தைகளின் தகப்பனாக வாழவில்லை ,அவர்களின் தகப்பனாகவே பிறப்பெடுத்து இருக்கிறாய் என்று", அவனிடம் கூறியவர், தீபாவிடம் ,"உனது மனதை தொட்டு சொல்லு டி, உன் தம்பி இப்படித்தான் குழந்தைகளை பார்த்தானா அல்லது கனியை ஒரு பெண்ணாகவது மதித்தானா, நீயும் பெண்தானே நான் அப்படி நடத்தி இருந்தால் என்ன செய்திருப்பாய்", என்று அடிக்க அவளை கை ஓங்க.


தீபா பயத்தில் விழிக்க," அண்ணா ",என்று கனி அவளை அடிக்க வேண்டாம் என்று தலையை ஆட்டினாள் .

" இப்படி இன்னும் எதற்கு உனக்கு பொறுமை கனி", என்றான் செந்தில் அவளை கடித்துக்கொண்டு.


"விடுங்க, மச்சான் அவள் குணம் அதுதான் ,தன்னைக் கடித்த பாம்பை பாலூற்றி வளர்த்தவள்", என்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் தீபாவுக்கு மனு பதிலடி தர .


கனி தன் கண்ணசைவில் மனுவை தன் பேச்சை திசை மாற்ற சொல்ல, அதைப் புரிந்து கொண்டவன்,"வாங்க நேரமாகிறது", என்று எல்லோரையும் கிளப்பிக்கொண்டு உள்ளே வந்தவன், கனியை அறைக்குள் அழைத்துச் சென்று முகத்தை சரி செய்து பின்தான் கூடத்திற்கு அழைத்து வந்தான்.


மனுவின் சொந்தம் என அவன் தாய்மாமன் சங்கர் அவர் மனைவி ராதா அவர்கள் பிள்ளைகள் ரதி 22 மற்றும் பரத் 19 மட்டுமே வந்து இருந்தனர் .


லதாவும் சீதாவும் வந்தபோது கனியின் முகத்திலிருந்த ஒளியும் மனுவின் முகத்தில் இருந்த புரிப்பும் அவர்கள் வாழ தொடங்கியதை அறிந்து கொண்டார்கள் .கோபி தன் மனைவியிடம் கனியின் மாற்றத்தை கூற அவள் கூறிய பதில் அவனும் நிம்மதி கொண்டான் .


ஒருவாறு அனைவரும் கூடி கேக்கை வெட்ட தயாராக பிள்ளைகள் முன்னே நிறுத்தி மனுவும் கனியும் அருகே நின்றனர். தீபாவிடம் கூறிய பதிலில் தெளிந்து இருந்தால் கனி. ஒருவாறு எல்லாம் நல்லபடியாக முடிய இந்த அழகிய தருணங்களை மனோ தன் கைப்பேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டான்.


எல்லாம் முடிந்ததும், சுரேனின் குடும்பத்து வக்கிலும் மனுவின் நண்பன் கார்த்தி வக்கீலான அவனும் வந்தனர். முதலில் திகைத்தனர் அனைவரும். அவர்களுக்கு சுரேனின் அப்பா பேச்சு புரிய வைத்தது .




எல்லோரும் கூடத்தில் அமர சுரேனின் அப்பா எழுந்து," எல்லோருக்கும் திகைப்பாக இருக்கிறது வக்கீல் எதற்காக என்று," அதற்கு கௌதமின் அப்பா , "வேறு எதற்கு இவன் எதற்காக இவளை மணந்தானோ அதற்குத் தானே", என்றார் நக்கலாக .



கனி மனுவை நிமிர்ந்து பார்க்க அவன் அமைதியாக நிற்பதை பார்த்தவள் ,இந்த அமைதிக்குப் பின் என்ன பூகம்பம் இருக்கிறதோ என்றுதான் அவளுக்கு தோன்றியது, அவளுக்கு மட்டும் அல்ல ,அங்கு இருந்த பாதி பேருக்கு அப்படித்தான் தோன்றியது .


கௌதம் மனோவிடம்," எங்க அப்பா நல்லா வாங்கப் போகிறார் அண்ணனிடம்", என்றான் ,"டேய் அவர் உங்க அப்பா ",என்ற மணோவை," அதற்காக நியாயம் இல்லாமல் பேசுவதா ",என்றான் கௌதம்.



" தம்பி எதையும் தெரியாமல் பேசாதே ", என்றார் சுரேனின் அப்பா கண்டிப்புடன் .


"அண்ணா நீங்கள் அணைத்தையும் இன்றே தெளிவுபடுத்தி விடுங்கள்,அதுதான் கனிக்கும் குழந்தைகளுக்கும் நல்லது என்றால், சுரேனின் அத்தை வசந்தா முடிவாக.


"இதில் தெளிவு படுத்த என்ன இருக்கிறது", என்றார் கௌதமன் அப்பா கோபமாக," நிறைய" ,என்றார் சுரேனின் அப்பா.



கனியோ மனுவை பார்க்க அவன் அதற்கும் தனக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லாதது போலவே நின்று கொண்டிருந்தான் . சரோஜா அம்மாவிற்கு தன் மகனின் இந்த அசாத்திய அமைதி ,அவருக்கு ஒன்றை உறுதிப்படுத்தியது ஏதோ ஒரு வலுவான காரணம் இல்லாமல் இந்த திருமணம் நடைபெற்று இருக்காது என்று .



"என்ன நிறைய அப்படி என்ன எனக்குத் தெரியாமல்", என்று கௌதமனின் அப்பா கேள்வி எழுப்ப," உனக்குத் தெரிந்து தானே என் மகன் மீது தவறு இருந்தும் எங்களை நிர்கதியாக நிற்க விட்டு உனது சொத்தைப் பிரித்துக் கொண்டு சென்றாய் ,அவன் இறந்து பிறகு ,அவன் இறந்த அன்றும், 30 அன்றும் மற்றும் இப்போ ஏதாவது ஒரு விசேஷத்துக்கு தானே வந்தாய் என்னை பார்க்க ",என்றாள் கோபமாக.


"எனக்குத் தெரியும் யார் இருக்கும் தைரியத்தில் இப்படி பேசுகிறீர்கள் ",என்று மனுவை பார்த்துக்கொண்டே ,"ஆனால் உங்களுக்கு ஒன்று புரியவில்லை உங்கள் சொத்து அவனுக்கு கிடைத்த உடன்", என்று தொடர்ந்தவரை ," போதும் நிப்பாட்டு சொத்து தானே அவன் குறி என்று கூறுகிறாய்", என்றவர் ,"வக்கீல் சார் இங்கே வாங்க", என்று அழைத்தார்.



"நீங்கள் உங்களுக்குத் தெரிந்தவற்றை கூறுங்கள் ",என்றார் சுரேனின் அப்பா.
" சின்னவரே நீங்கள் நினைப்பது போல் எதுவும் கிடையாது ,கனியை திருமணம் செய்த மறுதினமே, இந்தத் தம்பி பெரியவருடன் வந்தது ,அதுவும் கனியும் சேர்த்து கையெழுத்திட்ட வேத்து பத்திரத்துடன்,அதை என்னிடம் கொடுத்து , சுரேனின் சொத்தில் வீட்டையிம் கடையையும் மட்டும் தவிர்த்து ,மற்ற அனைத்து சொத்துக்களையும் உங்கள் பிள்ளைகள் மற்றும் உங்கள் சகோதரியின் பிள்ளைகள் பேரில் சரிக்கு சமமாக பெரியவரை எழுத வைத்தது.அந்தக் கடையும் வீடும் கூட பெரியவர் வற்புறுத்தி சொன்னதாள் மட்டுமே ",என்று கூறிவிட்டு அமர்ந்துகொண்டார்.


அங்கே ஊசி விழுந்தால்கூட அமைதி ,குழந்தைகளின் ஓசையைத் தவிர .வசந்தா கௌதமின் அப்பா அருகில் வந்து, "போதுமா உன் சந்தேகம் தீர்ந்ததா ,அண்ணா ",என்றார் ஆவேசத்துடன் .அவரும் இதன் பிறகு என்ன பேசுவார் . கௌதம் முன்னே வந்து மனுவிடம் ,"ஏன் அண்ணா இப்படி என்றான் பொறுக்காமல்", அதற்கு சுரேனின் அப்பா," இன்னும் இருக்கிறது கௌதம் மொத்தமாக நீ கேட்டு விட்டு அவனிடம் கேள் ",என்றார் அமைதியாக ."இன்னும் என்ன", என்றார் சீதா பொறுமை இல்லாமல் .
தொடரும்
 
Last edited:
Top