இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

Daily update

Matharasi

Moderator
அத்தியாயம் 6 :

கனி அப்படியே மயங்கி அவன் மீதே சரிந்தாள். அவளை ஒரு கையில் தாங்கியவன் அதிர்ந்து நின்ற சீதா மற்றும் லதாவை நோக்கி “என்னை மன்னித்து விடுங்கள். நான் நன்றாக பார்த்துக் கொள்வேன் மூவரையும்.” என்றவனை சுரேனின் அப்பா இடைமறித்து,” நீ ஏன்னப்பா மன்னிப்பு கேட்கிறாய் , நீ ஏன் இப்படிச் செய்தாய் என்பது எனக்குத் தெரியும்", என்றார் அறிவிப்பாக. லதாவும் சீதாவும் கனியை அறையில் படுக்க வைத்தனர்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த கௌதமின் அப்பா, “ யாரை எங்கே வைக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியவில்லை, அதுதான் அது அது தராதரத்தை மீறி நடக்கிறது”, என்றார் ஏக வசனத்துடன் .


மனு வாயை திறக்க வர, யாரும் எதிர்பாராமல் கௌதம் ,” போதும் அப்பா நிறுத்துங்க ,என்ன சொல்றீங்க, அண்ணன், அவர்தான் இந்த வீட்டுக்கு அனைத்தையிம் பார்த்தார் . ஏன் சுரேன் அண்ணனின் கடைசி நிமிடங்கள் கூட அண்ணன் தான் அருகில் இருந்தார். அப்போது எங்கே போனீங்க அனைவரும், ஏன் அண்ணன் நடவடிக்கை தவறு என்பதை சுட்டிக் காட்டாமல், சொத்தை பிரித்துக் கொண்டு, பெரியப்பாவை தனியே விட்டுச் சென்ற நாம் பேசக்கூடாது", என்றான் கவலையாக .

"இப்ப நடந்தது அது அண்ணி சம்பந்தப்பட்டது, அது அவர்கள் தான் முடிவை கூறவேண்டும், ஆனால் என்னைப் பொறுத்தவரை நாம் மனு அண்ணனை வணங்க வேண்டும், இப்படி உதாசீனப் படுத்துவது தவறு”, என்றான் தொடர்ந்து .

சுரேனின் அப்பா,” ஆமாம் நானே கனிக்கு ஒரு நல்ல வாழ்வு அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று தான் நினைத்திருந்தேன் , அது மனுவே என்பது எனக்கு கூடுதல் திருப்தி, எப்போதும் அவன் தான் அனைவருக்கும் பார்த்தான் உரிமை இல்லாமலே, இனிமே உரிமையோடு பார்ப்பான்”, என்றார் .

சீதா கனிவுடன் இருந்தார் ,அவரால் இந்த திடீர் முடிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. லதா ஹாசினியை தூக்கி கொண்டு வந்தார். மனுவின் அருகில் சென்று ,”தம்பி” என்று அழைத்தார் “சொல்லுங்கம்மா”, என்றான் அமைதியாக.

“ நீங்கள் செய்தது ,அவள் பாவம் இந்த ஐந்து வருடத்தில் அவள் ரொம்பவும் அடி பட்டு விட்டால் மறுபடியும் நீங்கள் இப்படி உங்களுக்கு தெரியாதது இல்லை”, என்றார் ஆதங்கமாக.



” நான் மறுபடியும் கூறுவது இதுதான் நான் மூவரையும் நன்றாக பார்த்துக் கொள்வேன், உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் சொத்து நகை அனைத்தையிம் நீங்களே வைத்துக்கொண்டு மூவரை மட்டும் என்னுடன் அனுப்புங்கள்”,என்றான் திடமாக.


அவன் அழைத்து செல்கிறேன் என்ற உடன் எழுந்து வந்த சீதா ,”உங்களை எங்கள் மகன் போல் தானே பார்த்தேன் “,என்றார் தாளாமல் .அவனோ,” இப்போதும் நான் உங்களுக்கு மகன் தான், நீங்கள் என்னை அடிக்க கூட உரிமை இருக்கு”, என்றான் தன்மையாக .



இவ்வளவு நேரம் கடந்தும் அவன் ஹாசிக்காவை இறக்கி விடவில்லை. மனோவை அழைத்து ஒரு மருத்துவரை வீட்டுக்கு அழைத்து வருமாறு கூறினான் நிலைமையைக் கூறி .



இதைப் பார்த்துக் கொண்டிருந்த கனியின் அக்கா மல்லிகா அவன் அருகில் வந்து,” நீங்கள் நிச்சயமாக அவளை நல்லா பார்த்துக்குவீங்க, ஆனால் அவள் மனது இப்போது”, என்றவளை

இடைமறித்து , "இதை இப்போது செய்யவில்லை, என்றால் அவர்கள் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டார்கள்”, என்றான் முடிவாக .


கனியின் அத்தான்,” சரி நடந்தது நடந்து விட்டது உங்கள் வீட்டு ஆட்களை வரச் சொன்னால் பேசி விடலாம்", என்று அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றான் .


அதற்குள் மனோ மருத்துவருடன் வந்துவிடவே அவர் அவளை பரிசோதித்து விட்டு ,அவள் மயக்கத்திலிருந்து ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்று விட்டால்", என்றார், "அவளே எழும்பட்டும் அதுதான் நல்லது ",என்றவரை கௌதம் அழைத்துச் செல்லுமாறு கூறினான் மனு.


மனோவை அழைத்துக்கொண்டு மனு வெளியே செல்ல பார்க்க ஹாசினி ,”சித்தா “,என்றவாறு வந்து மனோவை தூக்கச் சொல்லியது .



அவன் உடனே அவளை தூக்கிக் கொண்டு அவளிடம், “அம்மு என்ன சித்தாவை தேடினாயா”, என்று கேட்டுக் கொள்வதை பார்த்த அனைவரும் வாயடைத்து நின்றனர். இதை எதையும் கண்டு கொள்ளாமல் அவர்கள் வெளியே செல்ல சீதா லதா கண்களில் தாரை தாரையாக கண்ணீர் அரும்பியது. அவர்களை மல்லிகா மற்றும் வசந்தா மடி தாங்கினர் .


வசந்தா தனது மதனிடம்,”கனி இனிமேல் நல்லா இருப்பா. குழந்தைகளும் அப்பா இல்லாதது தெரியாமல் வளரும் “,என்றார் அனுசரணையாக .

கௌதமின் அப்பா மட்டும் தன் மனைவியை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார். கௌதமின் அம்மா போகும்போது சீதாவிடம்," அக்கா பையன் நல்ல மாதிரி தெரிகிறார், கௌதமன் சொன்னான், நீங்க எதுவும் யோசிக்காதீங்க, கனி பிள்ளைகள் தான் முக்கியம் , அவரை நான் பார்த்துக்கொள்கிறேன் காலம் கடத்த வேண்டாம் இன்றே அனுப்பி விடுங்கள்”, என்றார் ஆதரவாக.



எல்லாரும் அதையே சொல்ல. சீதா லதாவை நோக்கிச் சென்றார். அவர் விருப்பத்தை அறிய.

சீதா,” அண்ணி”, என்று அழைத்தார். லதா,”ம்ம”,என்றார். ,” எதையும் யோசிக்காதீங்க மனு நல்ல பையன், எனக்கு நம்பிக்கை இருக்கிறது”, என்றார்,”ம்ம”, என்ற ஒரு வார்த்தை மட்டுமே வந்தது ஏனென்றால் அவருக்கு தெரியும் அவன் நல்ல பையன் என்று ஆனால் அவர் மகள் அவன் மேல் படர வேண்டும் அல்லவா என்று யோசித்தது தாயின் மனது.


சீதாவும் மல்லிகாவும் அவரை சமாதானப்படுத்த முயன்றனர். மனோவிடம் விஷயத்தை கூறினான் மனு .முதலில் அதிர்ந்தவன் பின் இதுவே சரி என்று கூறிவிட்டு அவன் அம்மாவை அழைத்து வரச் சென்று விட்டான் .

முதலில் கோபப்பட்டவர் ,பின்பு அவரும் தன் பெரிய மகன் ஒரு விஷயம் செய்தால் சரி என்று நம்புபவர் ஆயிற்றே அதை ஏற்றுக்கொண்டு கனியை அழைத்து செல்ல வந்துவிட்டார்.



சரோஜா அம்மாவையும் மனோவையும் அனைவரும் வரவேற்று கூடத்தில் அமர வைத்தனர் .சரோஜா அம்மா அங்கே சுரேனின் படத்தை நிமிர்ந்து பார்த்தார் ,”நீயா இப்படி நடந்தாய்”, என்பது போல் ஒரு பார்வை பார்த்துவிட்டு .



சீதாவிடம் திரும்பி,” தம்பி கொஞ்சம் வேகம் எதையும் நினைத்தவுடன் செய்துவிடும், இதையே எல்லாரிடமும் பேசி சம்மதம் பெற்று நடத்தியிருக்கலாம்”, என்றார் ஒருவித பரிதவிப்புடன்.

அதற்கு சுரேனின் அப்பாவோ,” நடந்தது நடந்து விட்டது நாங்கள் என்ன முறை செய்யவேண்டும் என்று சொன்னால் அதை செய்ய தயாராக இருக்கிறோம் “,என்றார் தன் சம்மதத்தை முன்நிறுத்தி, அவர் லதாவை பார்க்க அவர் மௌனமாக இருக்க இதை பார்த்துக் கொண்டிருந்த மல்லிகா தானே முன்வந்து ,”ஆமாம் அத்தை நீங்கள் சொல்லும் படி செய்து விடுகிறோம்”, என்றால் பதிலாக .


மனு இதை எதிர்ப்பது போல்,” இல்லை முறை எல்லாம் வேண்டாம் ,அவர்கள் 3 பேர் மட்டும் போதும். இங்கு இருந்தால் அது சரி வராது, அந்த ஒரு காரணத்துக்காக அழைத்து செல்கிறேன் ,மற்றபடி நானும் உங்கள் பையன் தான் ,நீங்கள் அங்கே எங்களோடு வந்து விடுங்கள் இந்த வீட்டை வாடகைக்கு விட்டு விடலாம்”, என்றான் மல்லிகாவிடம் ஆரம்பித்து சீதாவிடம் முடித்தான் .

அவர் கண்கள் நனைந்தது. சுரேனின் அப்பா மட்டும் சேருமி விட்டு,” இது உனது பெருந்தன்மையைக் காட்டுகிறது. ஆனால் நாங்கள் யார் அவளுடன் வந்தாலும் அவளுக்கு பழையதை ஞாபகப்படுத்துவது போல், நாங்கள் வரவில்லை. எங்களின் வயது முதிரும் போது, எங்களை நிச்சயம் நீ பார்ப்பாய் எனக்கு தெரியும். அந்த நம்பிக்கை எங்களுக்கு நிறையவே இருக்கிறது . மாலை ஐந்தரை மணிக்கு நல்ல நேரம் அழைத்துச் செல் அவளை பிள்ளைகளுடன் “,என்று முடித்து விட்டார்.

ஒருவழியாக அனைத்தையிம் பேசி சாப்பிட்டு அனைவரும் முடித்தபோது ,கனி எழுவதற்கு சரியாக இருந்தது ,முதலில் ஒன்றும் புரியாதது போல் விழித்தவள், தன் கழுத்தில் கனமாக புதிதாக தொங்கிய சங்கிலியை தொட்டுப் பார்த்தபோது அதிலிருந்து இதய வடிவ டாலரில் ஒரு பக்கம் மனுரஜீன் ஒருபக்கம் தங்கக் கனி என்ற பெயர் பொரித்திருந்தது நினைவுபடுத்தியது அதன் உரிமையாளரை, ஒரு நிமிடம் உடலில் ஒரு உதறல் கொண்டால் பின்பு,” அம்மா “,என்று அந்த வீடே அதிரும் வண்ணம் அலறினால்.

அவளுடைய அலறல் முதலில் அவளுடைய அறையை நோக்கி ஓட துடித்த மனதை கட்டுப்படுத்திக்கொண்டு கல்லாக அமர்ந்திருந்தான் மனு, குழந்தைகள் இரண்டும் தன் தாய் கத்திய மிரட்சியில் அழுக அவர்களை கோபி மற்றும் மனோ ஆளுக்கு ஒருவரை தூக்கிக் கொண்டு வெளியே சென்றுவிட்டனர்.



மனுவும் இந்த நிலைமையில் தன்னை பார்த்தால் இன்னும் அதிர்வாள் என்று நினைத்து மறைந்து நின்று கொண்டான். சீதாவும் லதாவும் அவளை எவ்வளவோ சமாதானப்படுத்த, லதாவை நோக்கி அம்மா , "ஏன் எனக்கு இப்படி நான் என்ன செய்தேன்”, என்றால் பரிதவிப்பாக. லதா என்ன சொல்லித் தேற்றுவது என்று யோசிக்க,” அம்மாடி எல்லாம் நல்லதுக்குத்தான் “,என்று வாய் திறக்க சீதாவை எரிப்பது போல் நிறுத்தியது கண்பார்வை ,” அம்மா ப்ளீஸ், அம்மா என்னை அங்கே நம்ம வீட்டுக்கு அழைத்து சென்று விடுங்கள் " ,என்றாள் கதறலாக.



மல்லிகாவும் ,சீதா, லதா எவ்வளவோ சமாதானப்படுத்த படுக்கை யிலிருந்து எழுந்தவள்,” நீங்கள் யாரும் என்னை அழைத்து செல்ல வேண்டாம் நானே எனது பிள்ளைகளுடன் எங்கேயோ சென்று எப்படியோ வாழ்ந்து கொள்கிறோம்”, என்றவாறு அறையை விட்டு வெளியே வந்தவள்,” அம்மா மாமா சொல்லுறேன் கேள்”, என்றவாறு வந்த மாமனாரையும் கண்டு கொள்ளவில்லை.



அதற்குள் ஹாலுக்குள் வந்தவள் சரோஜாவை கண்டு திகைத்தாலும் ஒன்றும் கூறாது ஒரு சுவற்றைப் பிடித்துக் கொண்டே வெளிக் கதவை நோக்கி நடந்தாள்.

இதற்கு மேல் மறைந்து இருந்தால் வேளைக்கு ஆகாது என்று நினைத்தவன், சட்டென்று அவள் முன்னே வந்து நின்றான் ,வெளிக் கதவை மறைத்தவாறு.

அவன் இல்லை வருவதற்குள் வெளியேறி விட வேண்டும் என்ற முடிவுடன் நடந்தவள், இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.



அவள் அப்படியே நின்று விட்டாள், ஒரு நிமிடம் தான் மறுநிமிடமே கழுத்தில் இருந்த செயினை கைப்பற்றி அதை அவிழ்க்க முயல ,அந்தோ பரிதாபம் அவளுடைய இரு கைகளும் அவனின் ஒரு கையில் அடங்கிப் போயிற்று, அவள் எவ்வளவோ போராடியும் ஒரு இன்ச் கூட நகர்த்த முடியவில்லை.


அனைவரும் இருவரையும் வேடிக்கை பார்க்க சற்றே குரலை தாழ்த்தி ஆனால் திடமான குரலில் அழுத்தம் கொடுத்து , ”இப்போது நீங்கள் பிள்ளைகளுடன் நம்ம வீட்டுக்கு கிளம்பி வர வேண்டும் ,ஏதாவது அசட்டுத்தனமாக செய்து யாரையும் கஷ்டப்படுத்த கூடாது, அதுமட்டுமல்லாமல் இந்த மாதிரி வேலை எல்லாம் இனிமே கூடாது ,என்னைப் பற்றி தெரியும் என்று நம்புகிறேன் “,என்றான் உறுதியாக .அந்தக் குரல், அதே குரல் சொன்னதை செய்யும் தெரியும் அவளுக்கு.
அவனை நிமிர்ந்து ஒரு அடிபட்ட பார்வை பார்த்தாள்.
தொடரும்
 
Last edited:
அத்தியாயம் 2 :

ஹாசினி பிறந்த பொழுது கணவன் சுரேந்தர் உடன் அவ்வளவாக ஒட்டுதல் இல்லை. சுரேந்திரனுக்கு அப்போது வயது 26 செம்மையான நிறம் 6அடி உயரத்துக்கு ஏற்ற உடல் அமைப்பு குடித்து விட்டால் மறந்து போகும் நிலை ஆரம்பத்தில் பிடிக்கவில்லை கனியை அவனுக்கு காரணம் கனி திராவிட நிறத்தை விட கொஞ்சம் கறுப்பு , அவனை அவள் மணந்து கொண்டது படித்திருந்தாள் அவன் 10 th தோள்வி என்பதால் ஆதலால் கொஞ்சமாக இருந்த குடி செல்லா அதிகரித்தது.

நாட்கள் செல்ல செல்லா இரண்டாவது குழந்தை வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தான். கனியோ வேண்டாம் என்பதில் திடமாக இருந்தால் முதற்காரணம் ஹாசினி செந்நிறமாக இருந்தாலும் முகச் சாயல் மற்றும் குணம் கணவனை கொண்டே அந்து ஒரு காரண மே ஹாசினியை

சுரேந்திறன் வெறுத்தான் தான் தவறு என்பது அவனுக்கு தெரியும். இறுதியில் அவன் ஆசையே நிறைவேறியது. ஆனால் கடவுள் என்ன நினைத்தாறோ அவனுக்கு தொழிலில் சரிவு. மேலும் குடி அதிகரித்ததை தவிர குறைய வில்லை. இறுதியில் அவன் ஆசையை நிறைவேறியது ஆனால் கடவுள் என்ன நினைத்தாறோ அவனுக்கு தொழிலில் சரிவு குடி மேலும் அதிகரித்ததை தவிர குறைய வில்லை.

அப்போது கனிக்கு 7 மாதம் தனியார் பள்ளியில் வேலை பார்த்துக் கொண்டுருந்தாள் ஹாசினிக்கு இரண்டு வயது நேற்றைய பொழுது கணவன் ஆடிய ருத்திர தாண்டவத்தில் குழந்தை ஹாசினி வீட்டில் அப்பம்மா உடன் இருக்க மறுத்து விட்டாள் .

ஏற்கனவே வேறு தாமதமாக எழுந்ததால் அவளை பள்ளிக்கு அழைத்துக்கொண்டு விரைந்தாள். வீட்டில் இருந்து 20 நிமிடம் நடக்கும் தொலைவு தான் ஆனால் கையிலும் வயிற்றிலும் குழந்தையை கொண்டு முடியவில்லை மெயின் ரோட்டை கடந்த திருப்பத்தில் திரும்பி ரோட்டின் முடிவில் பள்ளி மெயின் ரோட்டை அடையும் போதே சோர்ந்து விட்டாள் .



மெயின் ரோட்டை கடக்க முயலும்போது ஓர் ஆட்டோ அருகில் வந்து நிற்பதை உணர்ந்தாள். ஒரு இளைஞன் திராவிட நிறம் இருபது ஐந்துக்கு மேல் இறுக்கலாம். “எங்கே போகனும்”, என்றான் குழந்தையை பார்த்தவாறே. அவளின் மிரண்ட விழிகள் அவனுக்கு சிரிப்பை அரும்பியது . "அது வந்த, வேண்டாம்” ,என்றாள் கனி பதற்றம்மாக படித்தது பெண்கள் பள்ளி மற்றும் கல்லூரி உடன் பிறந்தோர் யாரும் இல்லை. வேற்று ஆண் மகன் என்றால் கணவனை தவிர யாரும் வில்லை. கலால் எப்பொழுது மே வேறு ஆண்களுடன் இயல்பாக பேச வராது அவனின் தோற்றமே பயத்தை கிளப்பியது .



ஆனால் அவனுக்கோ சிறு தயக்கம் கூட இல்லை போல, “ஏங்க கையிலும் வயிற்றிலும் பிள்ளையை வச்சுக்கிட்டு எப்படி போவீங்க, எங்கே போகனும் சொல்லுங்க “, என்றான் தயவாக .என்று முயன்றும் அவன் தயவாக பேசினாலும் அவனின் தோற்றம் கனியை மிறளச்செய்தது என்னவோ உண்மை தான் “அது வந்து”, என்று தடுமாறி மறுக்கும்போது அவனின் பார்வை அவளிடம் திரும்பியது இமைக்கும் ஓர் நொடி நிமிர்ந்து அவனை பார்த்தாள் அந்த பார்வை தன்னுடைய மனதில் பரப்ப தலை குனிந்து கொண்டாள் பேச மறந்து கையில் இருந்த குழந்தையோ,”மா, மா, டோ, டோ, போ “ என்ற மழலையில் பிதற்றியது.

தற்போது அவன் கவனம் குழந்தையிடம் திரும்பியது. குழந்தையின் பேச்சு அழகில் அந்த முரடனுக்குக் கூட சிரிப்பு வந்தது. “ ஏறுங்க கொண்டு விடுகிறேன் எங்கே போகனுமோ அங்கே. லேட் ஆக போகுது உங்களுக்கு”, என்றான் மலர்ச்சியிடன் அவளின் கூற்றின் உண்மையை உணர்ந்து ஏறினால் அவளை ஏற்றி கொண்டவன்,” எந்தப் பள்ளி “, என்றான் கேள்வியாக ,”st Joseph குழந்தைகள் பள்ளி" என்றால்

“'தினமும் இதே நேரத்துக்தான் போவீர்களா”, என்றான் அடுத்து, “'இல்லை இன்றைக்கு தாமதம்

எப்பவும் 8:20 மணிக்கு " என்றாள் மெதுவாக . ”உங்களுக்கு இஷ்டம் இருந்தால் தினமும் வந்து அழைத்து செல்கிறேன் 8.15 க்கு வீடு எங்கு இருக்கு. மாதம் உங்களால் முடிந்ததை கொடுங்க" என்றார் தன்மையாக அவனுக்கே ஆச்சிரியம் ஏனென்றால் நாம் எப்படி இவ்வளவு மெதுவாக என்று அந்த standல் அவன் பெயரே சண்டியர் அதுவும் பணம் விஷயத்தில் கரார் பேர்வழி.

கண்ணாடி வழியாக அவளை பார்த்தான் பதிலுக்காக. இவளோ அவனுடைய யோசனைகளில் இருந்தாள் . குழந்தையோ அவளிடம் இருந்து விடுபட போராடியது. அவனுக்கு தெரிந்தது அவளது கவனம் குழந்தை மேல் இல்லையென்று சற்றேன வண்டியை நிறுத்தினான். திருப்பி குழந்தையை தூக்கினான் . அவன் முகத்தில் இருந்த சிரிப்பு. அதை அவனிடம் தாவச்செய்தது குழந்தையை தூக்கிய அதிர்வில் தான் நினைவுக்கு வந்தால்.

“சாரி, நான்”, என்றால் தடுமாற்றத்துடன். நீங்க முதல்ல தண்ணீர் குடிங்க ஒர் லேட்டாக போனால் ஒன்றும் இல்லை " என்றான் தொடர்ந்து . அவன் கூறியதை செய்தவன் கைகளை நீட்டினாள் பிள்ளையை வாங்க ஆனால் அவனோ ,”என்னிடம் இருக்கட்டும் எனக்கு சிரமம் இல்லை" என்றான் நான் கேட்டதற்கு பதில் சொல்லலையே " என்றான் தொடர்ந்து. “ அது எனக்கு இந்த மூன்று மாதம் தான், அப்புறம் அதான் யோசித்தேன் " என்றாள் பதிலாக, “தெரியும் இந்த 3 மாசத்திற்க்கு வருகிறேன் அதுக்கு அப்புறம் இந்த குட்டியை பள்ளிக்கு அழைத்துச் செல்கிறேன்”, என்றான் ஹாசினியை கொஞ்சியவாறு ,மறுக்க ஒன்றும் இல்லாததால் " சரி”,என்றால் ஹாசினியோ அவன் மடியில் சமர்த்தாக அமர்ந்து கொண்டு அவள் வண்டியை ஓட்டி கொண்டே, “வீடு எங்கே" என்றான்.”அந்த சிவம் தியேட்டர் பின்னாடி நாதன் இல்லம்”, என்றால் 'நாதன் இல்லமா, அங்கே கௌதமுக்கு நீங்க என்ன வேண்டும் ", என்றான் கேள்வியாக. “ கௌதம் என் கணவருடைய தம்பி சித்தப்பா பையன் உங்களுக்கு தெரியுமா , அவன் என் தம்பி உடைய உயிர் நண்பன்”, என்றான் பதிலாக. அவளுக்கே ஆச்சர்யம் எப்படி நாம் இவரோடு இயல்பாக பேசுகிறோம் என்ன தான் பார்க்க முரடாக இருந்தாலும் பார்வையில் கண்ணியம் நிறைந்திருக்கிறது.பள்ளி வந்தடைந்தார்கள் .



கீழே இறங்கி மனிபர்சை எடுக்க,” மாதம் முடிவில், பார்த்துக்கொள்ளலாம் வேண்டாம் , மாலை எப்போது பள்ளி முடியும் "என்றான் “ஐந்து மணிக்கு”, என்றால்.”மாலை வருகிறேன் எனது கார்டடு என்று கொடுத்தான் ,வைத்துக் கொள்ளுங்கள் வருவதற்கு தாமதம் அழையுங்கள் “, என்றான்



இவள் குழந்தைக்காக கையை நீட்ட, நீங்க பையை தூக்கிக் கொள்ளுங்கள் அவளை தூக்கி கொண்டு நடந்தான் ஹாசினியோ அவனின் மீசையை கிள்ளி கொண்டும் அவனின் சட்டை பட்டனை திருகிக் கொண்டு வந்தது. " உங்க பெயர் என்னடா மா " என்றான் குழந்தையிடம் ,”ஹாஸ்” என்றது மழழையாக அவளை பார்த்து என்ன என்பது போல் புறுவத்தை உயர்த்தினான் ,”ஹாசினி “ என்றால்



பள்ளியில் வேலை பார்க்கும் அக்கா வந்து குழந்தையை தூக்கி கொள்ள விடை பெற்றான். சொன்னதைப் போலவே மாலை வந்து அழைத்து சென்றான் .அப்போது தான் சுரேந்தர் கடைக்கு கிளம்பி கொண்டுருந்தான் ஆள் வரும் அரவம் கேட்கவும் எட்டிப் பார்க்க, இவன் ஹாசினியை தூக்கிக் கொண்டு இறங்கு வருதற்கும் சரியாக இருந்தது. குழந்தையோ இவனை பார்த்து பயந்து இவனை இன்னும் கட்டிக்கொண்டது. அவனுக்கு தெரியும் இது தான் தகப்பன் என்று பக்கத்தில் நிற்கும் அவள் முகத்தை பார்க்க மேலும் அதிர்ந்தான் கனியின் முகத்தில் பதற்றமும் பரிதவிப்பும் இருந்தது. மனுவுக்கு புரிந்தது தன் தம்பியின் நண்பன் அண்ணனின் மீது ஏதோ தவறுயிருப்பதாக……….

தொடரும்
சூப்பர் ❤❤❤❤❤
 
அத்தியாயம் 3 :



சுரேந்தர் மனுவை பார்த்து, “ நீங்க, கௌதம் ….”,என்று யோசித்தவாறே. “ஆமா கௌதம் நண்பன் மனோ உடைய அண்ணன் மனுரஜீன் , உங்களுக்கு பள்ளியிலும் கல்லூரியிலும் சீனியர் “ என்றான் பதிலாக.” இவங்க எப்படி " என்றான் கேள்வியாக. “காலையில் வழியில் பார்த்தேன் அப்புறம் உங்கள் வீடு என்று தெரிந்தது, அதான் சாவாரிக்கு கேட்டுக் கொண்டேன் உங்களுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லையே”, என்றான் கோர்கையாக கனியை பார்த்துக் கொண்டே.

கனிக்கு என்ன சொல்ல என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவனே அழகாய் சமாளித்தது அவளுக்கு நிம்மதி அழித்தது.”அது ஒன்றும் இல்லை பாதுகாப்பு தானே முக்கியம் ஹாசினி உங்களோடு ஒட்டிக் கொண்டாடலே”, என்றான் குழந்தையை பார்த்தவாறு அதுவோ பயந்து இன்னும் அவனை விடவில்லை.



"குழந்தை தானே கொண்டாடும் இடத்தில் ஒட்டிக் கொள்ளும் "என்றான் அவனை பார்த்தவாறு. சுரேந்திரனுக்கு ஒரு நிமிடம் அந்தப் பார்வையில் துணுக்குற்றவன், இவன் என்ன சொல்லுகிறான்

குழந்தையை நான் கொண்டாட வில்லை என்கிறானா என்று நினைத்தவாறே கனியை பார்த்தான், அவளோ அங்கு நிற்கவே சங்கடப்பட்டு கொண்டு இருந்தால்.

“நீ உள்ளே போ கனி “, என்றான் சுரேன் ,“நாளை எத்தனை மணிக்கு பள்ளி என்று சொல்லிவிட்டாய”,என்றான் தன் சம்மதத்தை மறைமுகமாக. கனியின் பதிலை எதிர்பார்க்காமல் நான் 8:15 க்கு வந்து விடுவேன் நீங்க ரெடியாகி நான் கொடுத்த கார்டுக்கு கால் செய்யுங்கள்”, என்றவாறு குழந்தையை சுரேந்தரிடம் நீட்டினான். கனி குழந்தையை முன்னேறி வாங்க வருவதற்குள் .'"'குழந்தையை பிடிங்க சுரேன்”, என்றான் மனு ஒரு வித தீர்கமான பார்வையுடன்

குழந்தை செல்ல அடம்பிடிக்கவே அவனும் தயக்கத்துடன் வாங்க கைநீட்டினான்,” அப்புறம் வருகிறேன் பாப்பா நீங்க அப்பா கிட்ட போங்க என்றான் மனு ,சுரேன் அவனுடைய பார்வையிலும் பேச்சிலும் எதைக் கண்டானோ முகத்தை மலரச் செய்து குழந்தை அருகில் சென்றான் . தந்தை முதன்முதலில் தன்னை பார்த்து சிரிக்கவும் குழந்தை தந்தையிடம் தாவியது.



வெகு நாளைக்கு பிறகு குழந்தையை தூக்கிய சுரேனுக்கு ஒரு வித நடுக்கம்,அதை பார்த்துக்கொண்டிருந்த கனிகோ சொல்ல முடியாத உணர்வு. இதைப் பார்த்துக்கொண்டிருந்த

மனுவுக்கோ ஏதோ போல் இருந்து.ஒரு வழியாக சென்று விட்டான். அவன் போகும் பாதையை பார்த்தவாறே இருவரும் அசையாமல் நின்றனர். அந்த மௌனத்தை ஹாசினியின் அப்பா என்ற அழைப்பு முடித்தது. பிஞ்சு குழந்தையின் குரலில் உணர்வுக்கு வந்தவன் அதன் பாசத்தில் கண்ணின் ஓரம் நீர் அரும்பியது .

குழந்தையை கனியிடம் கொடுத்துவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு திரும்பிக் பார்க்காமல் சென்று விட்டான்.

“அம்மாடி கனி”, என்ற சீதாவின் அழைப்பு அவளை நிகழ் காலத்துக்கு அழைத்து வந்தது. அவளுக்கு இன்றும் மனு தன் மீதும் குழந்தைகள் மீதும் காட்டும் அன்பு எத்தகையது என்று சொல்ல முடியவில்லை சுரேனுக்கு கல்லீரல் செயல் இழந்தது என்று தெரிந்த உடன். சுரேன் அவருடைய வாழ்க்கை முறை மாறியது. சுரேன் தன்னந்தனி மனிதன் நண்பர்கள் அதிகம் கிடையாது, ஆனால் இறுதியில் மனுவும் சுரேனும் நண்பர்கள் என்பதை தாண்டி அண்ணன் தம்பியாக மாறினர், ஆம் சுரேன் மனுவை அண்ணன் என்பான், பிள்ளைகளையும் மனுபா என்று கூப்பிட பழக்கியிருந்தான். அவனின் இறுதி கட்டத்தின் மனுவின் பங்கு அதிகம் .

“கனிமா சாப்பிட வா”, என்றார் சீதா மறுபடியும் அவள் அசையாமல் நிற்கவும்.“வருகிறேன் அத்தை ,நீங்க எல்லாரும் சாப்பிட்டாச்சா”, என்றால் அவரை பார்த்து.” ஆச்சுமா நீயும் ஹாசிக்கா குட்டியும் தான், நீ சாப்பிடு மா நான் ஹாசிக்காவுக்கு ஊட்டுகிறேன் “என்றார் “சரி அத்தை, சாப்பிட்டு அவங்களுக்கு சொல்லுறேன் " என்றாள் கணி



ஆமாம் இன்னும் கனிக்கு மனுவை எப்படி அழைப்பது என்று தெரியவில்லை. அவன் இவளை வாங்க போங்க பேசுவது போல் இவளும் அதையே பின்பற்றுகிறால் இந்த 2 வருடத்தில் தனக்கு குழந்தைகளுக்கு அவன் செய்தது ஏராளம்.லதா சாப்பாட்டை எடுத்து வைக்க சாப்பிட்டு உடன் தன் அறைக்குள் சென்றால். குளித்துவிட்டு அவனுக்கு அழைப்போம் என்று நினைத்து குளிக்க சென்றாள் .

உள்ளே நுழைந்த தன் மகனை சரோஜா அம்மா எதிர்கொண்டு , “ஏன் தம்பி இப்படி இருக்கீங்க ,நடக்க கூடாத ஒன்று தான். ஆனால் உங்களுக்கு முன்னரே தெரியும் தானே, என்றார் பரிதவிப்பாக பெரிய மகனின் மேல் அளவு பாசம் அதைவிட மரியாதை அதிகம் சிறு வயதில் இருந்தே வேலை பார்த்து குடும்ப பாரத்துக்கு தோள் கொடுத்தவன் அவனுக்கு எட்டு வயதாக இருக்கும் போது அவனின் அப்பா பிரிந்து சென்று விட்டார் கருத்து வேறுபாடு காரணம் இன்றும் தனியே தான் வசிக்கிறார். நல்லவர் தான் ஆனால் குடும்பத்தை பார்க்க வில்லை. அன்றிலிருந்து பால் பாக்கேட், செய்தித்தாள் காலை வீடுகளுக்கு போடுவான் அரசு பள்ளியில் படிப்பு. மனோவுக்கு அப்போது ஆறு வயது. அவனையும் ஒரு தந்தை போல் பார்த்துக் கொண்டான்.

எவ்வளவுதான் அவர் சொன்னாலும் அவன் கேட்கவேயில்லை. ஒரு சிறு ஹோட்டல் போல் விட்டுக்கு வெளியே ஆலை போட்டு ஆரம்பித்தார் சரோஜாம்மா ஆதல் வந்த வருமானம் அவர்களுக்கு போதுமானதாக இருந்தது. சொந்த விடு தான் ஆனால் கடனில் இருந்தது. இவருக்கு மனோ பிறந்த போது நடந்த கால் மற்றும் கருப்பை சிகிச்சைக்காக அந்த வயதில் இருந்து உழைக்கிறான். என்ன வேலை கிடைத்தாலும் அனைத்து வேலைகளையும் செய்வான்.சிறுசிறு ஆக சேமித்து கல்லூரியை முடிக்கும் போது கடனையும் செலுத்தி வீட்டையும் மீட்டு விட்டான். அவன் முதுகலை உயிரியல் பட்டதாரி இரண்டு ஆண்டு லேப்பில் வேலை பார்த்தான். சம்பளம் போதுமானதாக இல்லை ஆதலால் சுயகடன் ஆட்டோ வாங்கி கொண்டான்



அவர் ஆரம்பித்த ஹோட்டல் இப்போது கட்டத்துடன் வீட்டுக்கு முன்னால் பதினைந்து நபர் அமர்ந்து சாப்பிடுவது போல் உயர்ந்து இருக்கிறது.அதற்கு காரணமும் அவனே எப்பொழுது ஆட்டோ வாங்கினனோ அப்பொழுதிலிருந்து அவனே தான் வீட்டு செலவு அனைத்தும் பார்க்கிறான் மனோ முதுகலை கணிதம் அவன் இப்போது தாய் உடன் ஹோட்டலை பார்த்துக்கொள்கிறான் கடந்த நான்கு ஆண்டுகளாக .ஆட்டோ வருமானம் வீட்டுச் செலவிற்கு ,ஹோட்டல் வருமானத்தை வட்டிக்கு விடுகிறான் இதில் எதிலும் மனோவின் பங்கு கிடையாது. பண விஷயத்தில் படு கறார் .அதுவே அவனிடம் வாங்குவோர் திருப்பி கொடுத்து விடுவார் உண்மை சொன்னால் ஏற்றுக்கொள் பவன் பொய் சொன்னால் சண்டியராக மாறி விடுவான்.



அவனின் கோபத்துக்கு அவர் கூட தள்ளி தான் நிற்பார். தம்பியிடம் மட்டும் தான் பரிவு. இப்படி பட்ட காலத்தில் தான் அவனுக்கு மாலதி என்ற பெண்ணை மணமுடித்து வைத்தார். அன்னியத்து பெண் தான். ஆனால் திருமணம்மான மூன்று மாதம் தான் ஆனால் மனு முன்னை போல் அல்லாமல் ரொம்ப இறுக்கமாக மாறியிருந்தான். ஒரு நாள் இருவரும் விவாகரத்துக்கு பதிந்து ஒரு வருடத்தில் விவாகரத்தும் பெற்றுவிட்டனர்.

அது முடிந்தவுடன் ஏன் என்று கேட்டார் சரோஜம்மாவிடம் ஒத்துப் போக வில்லை என்றான் ஆனால் அன்று முதல் முழு சண்டியராக மாறியிருந்தான். தள்ளி நின்றான் மனோவிடம் கூட.



“அம்மா கனிமா ,நேற்று என்ன கூப்பிட்டார் “ என்ற மகனின் குரலுக்கு நிகழ் காலத்துக்கு வந்தவர் “என்ன பா. சொன்ன எப்படி இருக்க மகனை பார்த்தவாறு “, என்றார் மகனை பார்த்தவாறே “அம்மா, அது” என்றவாறு கையில் செயின் போல் பாக்கெட்டிலிருந்து எடுத்தான் மகனின் முகத்தில் இருந்த கலக்கத்தில் அதிர்ந்தவர் "என்ன பா” என்றார்.



அதை முழுவதுமாக எடுத்து காண்பித்தான் பார்த்த மனோவும், சரோஜம்மாவும் அதிர்ந்தனர் மகன் கையிலிருந்த தாலிச்சரடு பார்க்க இருவரும் அதிர்ந்தனர். “அம்மா கனியம்மா இதை கழட்டி என்னிடம் கொடுத்தார்கள் என்னால் முடியவில்லைம்மா சுரேன் அவர் தப்பானவன் இல்லை.வாழ்க்கையை வாழத் தெரியாமல் வழி தப்பி போனவன் எவ்வளவோ முயற்சி செய்தேன் அம்மா அவங்களுக்கு இப்பா தான் 24 இந்த பொல்லாத உலகத்திலே இரண்டு பெண் குழந்தை. அப்பா இல்லை மாமனார்வும் மாமியாரும் அம்மாவும் அண்ணன் தம்பி இல்லை இந்த கௌதம் கூட அன்றைக்கு வந்தது தான் அதுக்கு அப்புறம் யாரும் வீட்டுக்கு வரவில்லை.இதுல கனிக்கு பயந்த சுபாவம் வேறு “, என்றான் கவலையாக .



“நீ கவலைபடாத தம்பி நாம் அவங்களுக்கு நல்ல பையனை பார்த்து மறுகல்லியானம் செய்து வைப்போம் “. என்றார் ஆறுதலாக



மனுவும், மனோவும் அதிர்ந்து நின்றனர்

தொடரும்
சகி எழுத்துபிழை பார்த்து பதிவு செய்யுங்கள்.கதை மிகவும் அருமை.👏👏👏👏
 
Top