இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

வேள்வியாய் ஒரு காதல்🔥❤️🔥❤️

Premakameswaran

Moderator
வேள்வியாய் ஒரு காதல்❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
ஜனனி நவீன் ♥️♥️♥️

கருகொண்ட நாள்முதல்
வாழ்த்தும் வசவும் பெற்ற
அதிசய ஜனனம்
முழுமை பெற்று மலர்ந்து சிரிக்கிறது
வாழ்த்துக்கள் ஜனனி...

இரு முறை காதல்
அதுவும் ஒரு பெண்ணிற்கு
ஏற்றுக்கொள்ளுமோ உலகம்?
இயல்பாய் நகர்த்தி செல்கிறாய்
அந்த விபரீத சூழலை!

சிம்மங்கள் இரண்டின் பிரம்மாண்ட காதலில்
கர்வமாய் கர்ஜிக்கிறது பெண்சிங்கம்...

ஆளபிறந்தவனின் ஆளுமையில்
சரிந்த சாம்ராஜ்ஜயத்தை மீட்டெடுத்த தன்னம்பிக்கையில்
கட்டி இழுக்கும் காந்தபார்வையில்
கர்வம் தாங்கிய சிறுபுன்னகையில்
வேகம் கொள்ளும் வீறுநடையில்
சுகமாய் தொலைந்த பெண்ணவளின்
சுயம் விழித்ததோ அர்ஷ்ஷனின் அவசரத்தில்....

சொல்ல வேண்டிய விசயத்தை
சொல்ல வேண்டிய நேரத்தில்
சொல்ல இயலாது தவித்தவளின்
உயிர் தாங்கிய மடலை
காண வேண்டியவனின் கர்வ பிழையால்
காணாது போனதன் விளைவு
துர்கனவாய் போனதுவே காரிகையின் முதல் காதல்....

துச்சமென தூக்கி எறிந்தால்
துவண்டு போக மலர்க்கொடியா திலோத்தமை...
சிலிர்த்து எழுந்தாள்
சினந்து எழுந்தவள்
சிவந்த விழிகளோடு
கொடுத்த பதிலடி தனில்
தான் எனும் கர்வம் அடிபட்ட
உடையவனாய் தரித்திருந்தவனின் எள்ளலில்
உற்றத்தின் உணர்வுகளில்
சுற்றத்தின் இகழ்ச்சிகளில்
தனித்திருந்தவளின் கரம் கோர்த்தான் தன்முனைப்பாளன்....
தாங்கிகொண்டான் தாயுமானவனாய்...

கைக்கிட்டாது போனதே வாழ்வு என
தவித்து சிதறியவன்
சிந்தாமல் ஏந்தி கொண்டான்
தன் உயிரானவளின் கண்ணீரினை....

சின்னஞ்சிறு வயது முதல் கைகோர்த்து திரிந்த
இனம் புரியா அன்பின்
வகை தெரிந்து காதலாய் உணர்ந்த
நேரத்தில் கைமாற்றி சென்றவளின்
காதலுக்காய் போராடி வென்ற வினோதன் விதுரன்.....

தான் கொண்ட காதலால்
காயம் பெற்றவளுக்கு
தன் காதல் கொண்டு
காயமாற்றிய கந்தர்வன்...

வா என்று சொல்
மரணத்தோடும் போராடி வருகிறேன் உன்னிடம்...
போ என்று சொல்லாதே
புதைந்து போவேன் உன்னோடே என
சரண்புகுந்து அவளின் சரணாகதி பெற்றவன்...

ஆண்மையின் ஆலிங்கனம்
ஆதிக்கத்தில் இல்லை
அன்போடு இணை நடப்பதில் மட்டுமே என
நொடிக்கு நொடி உணர வைத்த உயர்ந்தவன்...

தன்னவளின் இமைமுடி அசைவின் அர்த்தம் உரைப்பவன்
மௌனத்தை மொழிபெயர்ப்பவன்
கண்ணீரின் கணம் அறிந்தவன்
இக்கட்டான சூழலில்
பெண்ணவள் விழிவழி மொழிந்த தயக்கத்தில்
கொண்ட முதல் கோபம்...
எத்துணை அழகு...
காதல் கொள்ளும் கற்சிலையும்
இவர்தம் காதல் உணர்ந்து...
 
Top