அத்தியாயம் - 2
சிந்தனை முழுவதும் அவனே நிரம்பியிருந்தான். அவனை கண்களில் நிரப்பி தன் காதல் தாபத்தை தீர்த்துக்கொள்ள சென்றாள். ஆனால் அவளுக்கு தெரியவில்லை அவனை நெருங்க நெருங்க அவளுக்கு வலிகள் தான் கூடும் என்பதை.
தனிமை விரும்பியான அவன், ஒற்றை படுக்கையறை கொண்ட ஒரு வீட்டை கல்லூரிக்கு அருகே வாடகை எடுத்து தங்கியிருந்தான். ஹார்ட் ஒர்க் அவுட் முடித்து அலுப்பு தீர குளித்தவனுக்கு பயங்கரமாக பசித்தது. கையில் கிடைத்த டி-ஷர்ட்டை மாட்டிக்கொண்டு சமையலறைக்குள் நுழைந்து துரிதமாக சமைக்க ஆரம்பித்தான்.
சமையலை முடித்து தட்டில் தேவையானதை பரிமாறி ஹாலுக்கு வந்து தொலைபேசியில் கானொளியை பார்த்தவாறு உணவில் ருசியறியாது பசியில் கிட்டத்தட்ட விழுங்கிக் கொண்டிருந்தான். சாப்பிட்டு முடிக்கும் தருவாயிலில் அவனது விட்டில் அழைப்பு மணி விடாமல் ஒளித்தது.
மணியை பார்க்க அது ஏழை நெருங்கியிருந்தது, 'யாரு வந்திருப்பா?' என்று யோசித்தவாறு கையில் இருந்த தட்டை ஹோபாவில் வைத்து கதவை திறந்தான்.
படப்படக்கும் மனதை மறைத்து அங்கே தேவசேனா நின்றிருந்தாள்.
'எதற்கு வந்தாய்?' என்று குற்றசாட்டு பார்வையை அவன் பார்த்து வைக்க,
'உன்னை பார்க்கத் தான்' என்று கண்களால் சொல்லி அவனை பார்க்க அவனோ அவளை முறைத்து பார்த்தான்.
"வரு உள்ள கூப்பிட மாட்டியா?"
"ம்ப்ச் எதுக்கு வந்த?" என்று அப்பட்டமாய் எரிந்து விழுந்தான்.
"உன்னை பார்க்க வந்தேன்.....
அப்படினு சொன்ன அசிங்கமா கேட்டுட்டீனா என்ன செய்ய....
நான் உன்னை பார்க்கவெல்லாம் வரல... என்னை தனியா ப்ராஜெக்ட் பண்ண சொன்னியே! ஹெல்ப் கூட யாரும் பண்ணாமல் எப்படி பண்ணுவேன்னு யோசிச்சியா?"
பாவம் போல சொன்னவளை ஆழ்ந்து பார்த்து, "என்ன ஹெல்ப் வேணும்?" என்றான்.
"ஹீஹீ சொல்றேன், முதல் வீட்டுக்குள்ள போகலாம்" என்று அவனை தாண்டி உள்ளே சென்றாள்.
அவளுக்கு வழிவிட்டு நின்றவன் உள்ளே சென்று இருக்கையில் வைத்திருந்த தட்டை சமையல் அறையில் வைத்து கையை கழுவி வந்தான்.
இதற்கு முன் நண்பர்களோடு இந்த வீட்டிற்கு வந்திருக்கிறாள் தான் ஆனால் தனியாக இங்கே வருவது இதுவே முதல் முறை.
அவன் வருவதை கண்டவளுக்கு,
'ஹையோ என் ஜிஞ்சர் சோடா இப்படி ஆளை கொல்லுறானே! ஒரே ஒரு லவ் யூ சொன்னால் போதும் இப்படியே இவன் கிட்ட என் மனசு சரண்டர் ஆகிடும்.
ஆனால் இந்த பக்கிக்கு என் காதலும் புரியல என் பீலிங்கும் தெரியல. இன்னேரம் இவன் ஓகே சொல்லியிருந்தால் கல்யாணம் பண்ணி ஹனிமூன் போயிருப்பேன். என்ன செய்ய இவன் தான் கண்டுக்கவே மாட்டேங்கிறானே!' என்று மனதில் அலுத்துக்கொள்ளவும் அவன் அவளிடம் வரவும் சரியாக இருந்தது.
"சொல்லு என்ன ஹெல்ப் வேணும்?" என்று நேரடியாக விட்ட இடத்திற்கு வந்தான்.
'அதானே பார்த்தேன்! இப்படி தான் நீ பேசுவனு தெரிஞ்சும் வந்திருக்கேன் பாரு என்னை சொல்லணும். என்ன பைத்தியம் பிடிச்ச காதலோ. உன்மேல எனக்கு வந்து தொலைக்கணுமா? ஊருல வேற எவனும் இல்லையா?' என்று அவளே அவளை நொந்து,
"அதுக்கும் முன்னாடி நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்!" என்றாள் அழுத்தமாக.
அவளது கண்கள் மின்ன புரியாத மொழி பேசுபவளை போல அவளை பார்த்து, "உன்னோட அன்-வண்டெட் பீலிங்ஸ்கெல்லாம் நான் எப்படி பொறுப்பாக முடியும். அதை தவிர என்ன வேணாலும் பேசு" என்று அவளது உணர்விற்கு தடைச் செய்தான்.
அவள் உணர்வென்ன சிற்றாறா? அவள் மனதில் ஓடுவது காதல் காட்டறாரு அல்லவா? அதை அவனது ஒற்றை வார்த்தை தடை செய்ய முடியுமா? அதை அவனும் உணரும் காலம் வருமா இல்லை அவளின் உணர்வுகள் மறுக்கப்படுமா? இதற்கு பதில் அவனிடம் இருந்தாலும் அவளது உணர்வுகள் கட்டுப்பாடின்றி காற்றோடு கலந்திருப்பதை யார் அறிவார்.
அவனது கத்திரி பேச்சை பலமுறை கேட்டவளுக்கு வழியே தெரியவில்லை அவளது காதலை அவனுக்கு புரியவைக்க. கிட்டத்தட்ட இறைஞ்சும் குரலில், "ப்ளீஸ் வரு என்னால் எதுலையும் கான்சென்ட்ரேட் பண்ண முடியல? அடலீஸ்ட் ஒரு பிரண்ட்டா நினைச்சாவது நான் சொல்றதை புரிஞ்சுக்கோ!"
"முதல் நீ பேசு அதுக்கு அப்பறம் நான் புரிஞ்சுக்க முயற்சி செய்றேன்."
ஆழ்ந்து மூச்சை எடுத்தவள் அவனை நெருங்கி,
"வரு! நிஜமாவே என்னோட லவ்வை உன்னால் பீல் பண்ண முடியலையா?"
"சாத்தியமா இல்லை!"
"அப்போ என்னோட பீலிங் உன் பார்வையில் எப்படி தெரியுது?"
"என்னை உன்னோட மேட்டிங் பார்ட்னரா நீ நினைக்கிற. அம் ஐ ரைட்?"
அவனது கேள்வி அவளை கூறுப்போட்டது இருப்பினும் கடைசியாக ஒரு கேள்வி கேட்டாள், அவள் பேச நினைத்ததை மறந்து.
"உனக்கு யாரு மேலயாச்சும் லவ் மேக் பண்ற தாட் வந்துச்சா?"
"சட் அப் தேவா!" என்று கத்தியவனுக்கு அவளது கேள்வியை ஜீரணிக்க முடியவில்லை.
அவனிடம் இப்படி ஒரு கோபத்தை எதிர்பார்காதவள்
அவனை கட்டுப்படுத்த வாயிக்கு வந்ததை கூற ஆரம்பித்தாள்.
"கூல்டவுன் ஹர்ஷா என்னோட ப்ராஜெக்ட்டுக்கு தேவையான டீடெயில்ஸ் பத்தி தான் உன்கிட்ட அனலைஸ் பண்றேன். நான் லவ் ஹோர்மோன்ஸ் பத்தி தான் ப்ராஜெக்ட் பண்ண போறேன்?".
"வாட்?" என்று வெளிப்படையாக அதிர்ந்து பின் சற்று வியப்பு கலந்த குரலில்," கம் அகைன்!" என்றான்.
"ஹர்ஷா! நான் த்ரீ லவ் ஹோர்மோன்ஸ் பத்தி ஒரு ரிசெர்ச் பண்ண போறேன்"
அதில் ஆர்வமானவன் கோபத்தை மறந்து அவளை கவனித்தான்.
"உனக்கு என்மேல் லவ் பீல் வரலைன்னு சொன்னில. உன்னை ஏன் என்னோட ரிசர்ச்க்கு யூஸ் பண்ணிக்க கூடாது. உன்னோட பீலிங்கை நான் டெஸ்ட் பண்ண போறேன். உனக்கு ஓகே வா?"
பிடிக்கவில்லை என்றாலும் அந்த உணர்வுகளை தெரிந்துகொள்ள தலையை ஆட்டினான்.
"பிரஸ்ட் ஸ்டெப் ஹக்கிங்!" என்று அவனை யோசிக்க விடாது இழுத்து அணைத்தாள்.
அது ஒரு நட்பிற்கான அணைப்பாக இல்லாமல் அவனிடம் அவளுக்கான உணர்வை தேட ஆரம்பித்தாள்.
அவளது திடீர் தாக்குதலை ஏற்க முடியாதவனாக அவளிடம் இருந்து அகன்று அவள் தலையை பின்னே இழுத்து தன் மொத்த கோபத்தின் பரிசாக அவள் கன்னத்தில் ஐவிரலை பதித்தான்.
அதுவரை இருந்த காதல் மயக்கம் தெளிந்து தேவசேனா அவனது முறுக்கு ஏரியா கைகளை பிடித்து, "ஏய் இப்போ எதுக்கு கை நீற்ற?" என்று வலியில் கத்தினாள்.
"உனக்கெல்லாம் ஒரு அறை பத்தாது. மரியாதையா ஹாஸ்டலுக்கு போயிடு! இல்லை என்கிட்ட அடிவாங்கியே செத்துருவ!" என்று குறையாத கோபத்தில் கத்தினான் ஹர்ஷவர்தன்.
"இங்க பாரு வரு! பசங்க மட்டும் தான் தேடி தேடி சைட் அடிக்கணும். கண்டதும் காதல்! லவ் பண்ணும் பொண்ணுகிட்ட கெஞ்சனும், என் அவங்க மேல வர தனிப்பட்ட உணர்வை கடத்தணும்னு இல்லை!
உன்மேல எனக்கிருக்க காதல் உனக்கு புரியலைனால் நான் தான் உனக்கு புரிய வைக்கணும் அதை விட எனக்கு என்ன வேலை!
இப்போ சொல்றேன் கேட்டுக்கோ நாளைக்கு என்கிட்ட உன்னை லவ் யூ சொல்ல வைக்கல நான் தேவசேனா இல்லை. குட் பை!" என்று அவன் அடித்த போது கை நழுவி விழுந்த எடுத்து வந்த புத்தகங்களை கூட எடுத்துச் செல்லாமல் வேகமாக அவன் அறையை விட்டு வெளியேறினாள்.
"ச்சை என்ன எழவு காதலோ இவளும் பின்னாடி அலையுறதை விடமாட்டாள் எனக்கும் அவளோட காதல் புரிய போகிறது இல்லை. எல்லாம் எங்க போய் முடிய போகுதோ!" என்று சத்தமின்றி பேசியவனுக்கு பசி மறந்து போனது.
எல்லாவற்றையும் நேர்த்தியாக செய்து முடிப்பவன் கதவை அடைத்து, அப்படி அப்படியே போட்டப்படி மஞ்சத்தில் விழுந்து உறக்கத்தை நாடினான்.
விடுதிக்கு வந்தவளின் மனம் ஒரு நிலையில் இல்லாமல் பலவிதத்தில் கற்பனையை கழட்டிவிட மனம் சோர்ந்து கட்டிலில் விழுந்தாள்.
'அப்போ ஒரு பொண்ணு பையன்கிட்ட லவ் சொல்ல கூடாதா?'
'அப்படி சொன்னா அது மறுக்கப்படுமா?'
'இல்லையே எத்தனையோ காதல் ஏற்கப்பட்டிருக்கே!'
'எனக்கு அந்த கொடுப்பினை இல்லையா?'
'என்னை விட அவனுக்கு சிறந்த காதல் கிடைக்குமா?'
'அவனை ஹக் பண்ணும் போது மனசு அமைதியா இது தான் உனக்கான இடம்னு சொல்லுச்சே!'
'எனக்கு இவ்வளவு பீலிங் கொட்டுதே! என்மேல அவனுக்கு எதுவும் வரலையா? ஒருவேலை எனக்கு அவன்மேல லவ் இல்லாமல் லஸ்ட்டோ?' என்று கண்டமேனிக்கு கற்பனை செல்ல மௌனமாய் கண்ணீர் வடித்தாள்.
கண்ணில் நீர் வற்றும் வரை அழுது கரைந்தவள் எழுந்து முகத்தை கழுவி,
'அவனை நாளைக்கு பார்த்துக்கொள்ளலாம். அதுக்காக சாப்பிடாமல் படுப்பது தப்பு!' என்று எழுந்து சாப்பிட சென்றாள்.
எதை உண்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் வயிற்றுக்கு ஆகாரத்தை போட்டு அறைக்கு வந்தாள்.
இதையெல்லாம் கண்ட ரியாவிற்கு அவளிடம் பேசவேண்டும் என்று தோன்றியது. ஆனால் எதை கேட்டாலும் அதற்கு ஒரு பதிலை கொடுத்து நியாயம் சொல்பவளிடம் என்ன சொல்லி அவளை சரி செய்வது என்று தெரியாமல் அமைதி காத்தாள்.
நேரம் யாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்காது. இரவு எத்தனை ரகசியத்தை புதைத்து தனக்குள் வைத்திருந்தாலும் என்றாவது வெளிச்சத்தில் அகப்பட்டு தான் ஆகவேண்டும். அகத்தின் தேடல் வெளிச்சத்தில் அகப்படும் நாளை எண்ணி கண்ணயர்ந்தாள் தேவசேனா.
காலையில் அவசர அவசரமாக எழுந்து கிளம்பிக் கொண்டிருந்தாள் தேவசேனா. அவளை கேள்வியாக பார்த்த ரியாவிடம், "ரியா மார்னிங் சீதா மேம் கால் பண்ணாங்க இன்னைக்கு அவங்க லீவ்வாம் அதனால் கெஸ்ட் லெக்ச்சர் கொடுக்க சொன்னாங்க. நான் முன்னாடி போறேன் நீ சீக்கிரம் வந்திரு!" என்று அவளது பதிலை கேட்காமல் வேகமாக கிளம்பி கல்லூரிக்கு சென்றாள்.
மரத்தடியில் அமர்ந்து இன்றைய நாளுக்கான குறிப்புகளை ஒரு கணம் திருப்பி பார்த்தவளுக்கு அவளது மனம் கவர்ந்த மாயவன் எங்கோ அருகாமையில் வருவது போல தோன்ற நிமிர்ந்து பார்த்தாள்.
பிடிக்கவில்லை என்றாலும் தன்னிடம் உதவி என்று கேட்ட ஆசிரியரிடம் மறுப்புக்கூற முடியாமல் அவளுக்கு உதவ வந்திருந்தான்.
அவளின் கண்களில் குறும்பு மின்ன, தன்னை நோக்கி வந்து கொண்டிருந்தவனை பார்த்து, "ஹே என் ஜிஞ்சர் சோடாவே!
என் கறி கொழம்பே! உன் டெடி பியர் நான்! டேக் மீ டேக் மீ!" என்று அவள் பட,
"ஹே அறிவு இல்லை!
நீ லூசு பிள்ளை! லவ் இல்லை இல்லை! டோன்ட் டாக் மீ டாக் மீ!" என்று அவனும் பதிலுக்கு பாடி அவள் வாயை அடைத்தான்.
"என்ன கொழுப்பா?"
"ஆமா கொஞ்சம் உனக்கு தொப்பை தெரியுது. ஜிம் போ"என்றவனை வெட்டவா குத்தவா என்று பார்த்தவள்,
"சரி லவ் யூனு என்னை பார்த்து சொல்லு உன்னை டிஸ்டர்ப் பண்ணவே மாட்டேன்!"
"முடியாது போடி" என்று அவளை கடந்து சென்றவனை சீண்டும் விதமாக, "எல்லார் முன்னாடியும் லவ் சொல்ல வைக்கிறேன் டா! என்று சபதமிட்டு அரங்கத்திற்குள் சென்றாள்.
இதுவரை எத்தனையோ விரிவுரை எடுத்திருந்தாலும், முதல் முறை போல அவளுக்கு ஒரு நடுக்கத்தை கொடுத்தது. கீழே நின்றிருந்தவன் கையில் பேப்பரோடு அவளையே பார்த்திருந்தான். இதில் அவனுக்கு சற்றும் உடன்பாடு இல்லை என்றாலும் அவனுக்கு வேறு வழியில்லை என்பதால் ஊருடன் ஒன்றி வாழ முடிவெடுத்து அமர்ந்திருந்தான்.
"ஹே கைஸ்! டாபிக்குள்ள போகும் முன்னாடி, லெட் மீ டெஸ்ட் யுவர் ஸ்கில்! அப்போ தானே உங்களுக்கு எப்படி லெக்ச்சர் தரலாம்னு எனக்கு ஒரு ஐடியா கிடைக்கும். ஆர் யூ ரெடி?" என்றவளது காந்தக்குரலை தொடர்ந்து 'எஸ்' என்று கோரஸ் பாடினர் அங்கிருந்த மாணவர்கள்.
"ஓகே. சீக்கிரம் நோட் பண்ணிக்கோங்க. ஒன்ஸ் நான் பினிஷ் பண்ணதும் அன்ஸர் தெரிஞ்சவங்க சத்தமா சொல்லுங்க!" என்று நிறுத்தியவள், அனைவரும் நோட்டை எடுத்து எழுதுவதற்கு ஆயத்தமானதை உறுதி செய்து பேச ஆரம்பித்தாள்.
"சி போர் கனடா 8 ஹச் போர் ஹைதராபாத் 11 என் போர் நெல்லை ஓ போர் ஊட்டி 2
+
சி போர் கனடா 10 ஹச் போர் ஹைதராபாத் 12 என் போர் நெல்லை 2 ஓ போர் ஊட்டி
+
சி போர் கனடா 43 ஹச் போர் ஹைதராபாத் 66 என் போர் நெல்லை 12 ஓ போர் ஊட்டி 12 எஸ் போர் சூடன் 2
வித் Second person singular
வில் கிவ்ஸ்?" என்று நிறுத்தி அரங்கத்தை பார்த்தாள்.
அருகே வைத்திருந்த மைக்கை எடுத்தவன் "லவ் வித் யூ " என்றான்.
அவன் பதிலை கேட்டு அங்கு சலசலப்பு ஏற்பட அவனை ஏளனமாக பார்த்தவள், "பிரில்லியண்ட் அன்ஸர்" என்று அமர வைக்க அவன் முகமோ கடுமையை தத்தெடுத்திருந்தது.
அவளுக்கு தெரியாதா எதிலும் தனது முதன்மையை தலைநாட்டும் ஹர்ஷாவிற்கு இந்த சிறு விடயம் பெரிதல்ல என்று. படிப்பு என்று வந்தால் மற்றதை மறந்துவிடுவான் என்பதை மனதில் கொண்டு இப்படி ஒரு விசயத்தை அவள் செய்ய அவனோ கோபத்தின் எல்லைக்கே சென்றுவிட்டான்.
அதை எதையும் கண்டுகொள்ளாமல், "கைஸ் நோட் இட். இட்ஸ்,
C8H11NO2 (Dopamine) + C10H12N2O (Serotonin) + C43H66N12O12S2 (Oxytocin) = LOVE.
டுடேஸ் டாபிக் இஸ் லவ் அண்ட் த்ரீ ஹோர்மோன்ஸ் ஆஃப் லவ்" என்று நிறுத்தி அவனை பார்த்தாள்.
அந்த பார்வை சொல்லாமல் சொன்னது, கூடிய விரைவில் இதே போல் உனது காதல் நான் தான் என்று சொல்ல வைப்பேன் என்பதை. அதை சற்றும் அவனால் ஏற்க முடியாமல் போக, யாரையும் பார்க்காமல் வேகமாக அவ்விடத்தில் இருந்து வெளியேறினான்.
சொன்னதை செய்துவிட்டாள் என்கிற கோபத்தை அவள்மேல் காட்ட முடியாமல் உடல் விறைத்து கோபத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் அங்கிருந்து கிளம்பினான்.
மூடி இருக்கும் கண்களுக்கு நிழல்கள் ஆடுவது தெரிய பட்டென்று விழித்தவனின் கண்கள் இரண்டும் கோவக்காயை போல சிவந்திருந்தது. அவனது பார்வை தன்னை சிறிதும் அச்சப்படுத்தவில்லை என்ற தோணியில் அவன் அருகே அமர்ந்தாள் தேவசேனா.
"தேவசேனா லீவ் மி அலோன்!" என்று வார்த்தைகளை துப்பியவன் மீண்டும் கண்களை மூட,
"ஹர்ஷா ஐ நீட் டூ டாக் வித் யூ" என்று அழுத்தமாக அதே சமயம் மென்மையாக கூறினாள்.
"என்ன வேணும் உனக்கு என்னை எதுக்கு டிஸ்டர்ப் செய்யுற?" என்று எரிந்து விழுந்தான்.
அவன் பேசியதை கேட்டு அங்கிருந்த சிலர் அவர்களை வெறிக்க அப்போது தான் சற்று நிதானத்திற்கு வந்தான்.
"ம்ச் என்னதான் டி உனக்கு இப்போ வேணும்? எதுக்கு நொய் நொய்னு என்ன இம்சை பண்ணுற? எனக்கு தான் உன்மேல எந்த பீலிங்கும் வரலைன்னு சொல்லிட்டேனே அப்பறம் என்ன தான் டி உன் பிரச்சனை. எனக்கு இது வர லவ் பீலிங்ஸ் வந்ததே இல்லை இன்ஃபக்ட் எதுலையுமே கம்ப்ளீட் ஹாப்பினஸ் கிடைச்சதே இல்லை. உன்மேல மட்டும் இல்லை இந்த ஜென்மத்தில் யார் மேலயும் காதல் உணர்வு வராது! நான் பீலிங்ஸ் இல்லாத ஜடம். உனக்கு தேவையான காதலை என்னால் தர முடியாது. வருங்கால டாக்டர் உனக்கு இதுக்கு மேல என் பிரச்சனையை சொல்லணும்னு அவசியம் இல்லை. உடல் தேவையா தான் உன்னோட இந்த காதல் எனக்கு புரியும். பிகாஸ் இதுவரை அந்த உணர்வு எப்படி இருக்கும்னு எனக்கு தெரியாது. ஸ்டே அவே!" என்று கத்திவிட்டு வகுப்பை புறக்கணித்து வீட்டிற்கு சென்றான் ஹர்ஷவர்தன்.
அவன் சென்ற பிறகும் அவ்விடத்தை விட்டு அகலாமல் சிலையாக சமைந்து இருந்தாள். 'நேற்று விளையாட்டிற்கு நான் சொன்னது தான் நிஜத்தில் உன் நிலையா? உன் நிலை அறியதானா இந்த பிரிவை தேர்ந்தெடுத்து படிக்கிறாய்?' என்று பல்வேறு சிந்தனைகள் அவள் மனதில் ஓடியது.
அதை தடுக்க வழியில்லாமல் பதிலை தேடி அவளது தந்தைக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்தாள். நீண்ட நெடிய காத்திருப்பிற்கு பின் அவளது அழைப்பு ஏற்கப்பட்டது.
"ஹலோ தேவாம்மா! கிளாஸ் இல்லையா?" என்று மென்மையின் வாசம் சிறிதும் இல்லாத குரலில் அழைப்பை ஏற்ற ராம்குமார் பேசினார்.
"அப்பா! நான் ஒன்னும் கிளாஸ் கட் அடிக்கல!" என்றவளது குரல் உள்ளே செல்ல ஏதோ சரியில்லை என்று உணர்ந்துகொண்டார், அந்த அனுபவமிக்க மருத்துவர்.
"தேவா வாட் இஸ் ஈட்டிங் யூ?" என்று நேரடியாக கேள்வியை அவர் கேட்க, முதல்முறை தயக்கம் அவள் வாயை கட்டிப்போட்டு பேசாமடந்தை ஆக்கியது.
"தேவா!" என்ற அழுத்தமான அழைப்பில் தன்னிலை பெற்றவள்,
"அப்பா, ஆர் யூ பிரீ? நீட் டு ஹவ் அ லோங் டாக்!"
"வெயிட் அ மினிட் தேவா!" என்று அவளை அழைப்பில் வைத்து வெளியே இருந்த தாதியை அழைத்தார்.
"சிஸ்டர் நான் சொல்ற வரைக்கும் ஓ.பியை ஹோல்டு பண்ணுங்க. ஒரு இம்போர்ட்டண்ட் கால் பேசணும்."
"ஓகே டாக்டர்." என்று அவர் பதில் கொடுத்த நொடி,
"நீங்க இப்போ போகலாம்" என்று தேவாவிடம் வந்தார் ராம்குமார்.
"தேவா வாட்ஸ் தி மேட்டர்?" என்று அழுத்தமாக கேட்டார். அதில் இப்போ பதில் சொல்ல போறியா இல்லை சொல்ல வைக்கவா என்ற கேள்வி ஒளிந்திருப்பதை அவளுக்கு புரியாமல் இல்லை.
"அப்பா ஒரு செகண்ட் அம்மாவையும் கான்பிரென்ஸ் காலில் ஜாயின் பண்ணிக்கிறேன்!" என்று அவரது பதிலை கேட்காமல் அவளது அன்னையை அழைப்பில் இணைக்கும் வேலையை செய்தாள்.
பெற்றவளுக்கு அரசல்புரசலாக ஹர்ஷாவின் மேல் இருக்கும் ஈர்ப்பு தெரியும் என்பதால் துணைக்கு அழைத்து தந்தையிடம் பேச முனைந்தாள்.
அவள் எதையோ பெரிதாக சொல்ல போகிறாள் என்பதை யூகித்து அவளுக்காக காத்திருந்தார்.
அந்த சமயம் அழைப்பில் இணைந்த மாதவி, "என்ன அதிசயம் டாட்ஸ் லிட்டில் பிரின்சஸ் என்னை துணைக்கு கூப்பிட்டுருக்கு?" என்று தேவசேனாவை வாரினார்.
"மாது உன் பொண்ணு எதையோ பெருசா சொல்ல போறான்னு நினைக்கிறேன். என் கெஸ் படி உனக்கு அது தெரிஞ்சுருக்கும் இல்லைனா அவளுக்கு உன்னால் மட்டும் தான் சப்போர்ட் பண்ண முடியும்னு நினைக்கிறேன்" என்று அவர் சரியாக கணித்திருந்தார்.
"அப்பா கொஞ்சமாவது நீங்க நடிக்கலாமே? எல்லாத்தையும் இப்படி கரெக்டா கண்டுபிடிச்சா திருட்டுத்தனம் பண்ற எனக்கு என்ன மரியாதை?" என்றவள் சற்று இடைவெளி விட்டு,
"என்னை இந்த கோர்ஸ் ஏன்பா படிக்க சொன்னிங்க?" என்று அவர் என்ன பதில் கூறுவார் என தெரிந்தும் கேட்டாள்.
"தேவா நான் லீடிங் 'எண்டோக்றினாலொஜிஸ்ட்'. (உட்சுரப்பியலானது உயிரியல் சேர்க்கை, சேமிப்பு, வேதியியல் மற்றும் நொதிகளின் உளவியல் சார்ந்த செயல்பாடு ஆகியவை சார்ந்த படிப்பு) உன் அக்கா உன் அம்மா மாதிரி கைனோ தான் ஆவேன்னு ஒத்தக்காலில் நின்னு படிச்சா. எனக்கு அப்பறம் நம்ப குடும்பத்தில் என் கிளினிக்கை பார்த்துக்கொள்ள ஒருத்தர் வேணும். அதுமில்லாமல் உனக்கு அந்த ஸ்கில் இருந்துச்சு, சோ உனக்கு சஜெஸ்ட் பண்ணேன். இப்போ ஏன் உனக்கு இப்படி ஒரு டவுட் வந்துச்சு?" என்று ராம்குமார் நிறுத்தினார்.
இதையெல்லாம் கேட்டுக்கொண்டு இருந்தாலும் தேவசேனாவின் பதிலை எதிர்பார்த்து காத்திருந்தார் மாதவி.
"அப்பா வாட் டூ யூ திங்க் அபௌட் நோ பீலிங்ஸ் பிபுல்?"
"இட் டிபேன்ட்ஸ் அன் தி நேச்சர் ஆப் பேஷண்ட்!" என்று பதில் கொடுத்தாலும் அவளது விசாரணை எதற்கு என்று புரியாமல் யோசித்தார்.
அவர் கேட்காமல் இருக்கலாம் ஆனால் மாதவியால் அமைதியாக இருக்க முடியவில்லை, "குட்டிமா வாட்ஸ் ராங் வித் யூ? இதுக்கு தான் இந்த கோர்ஸ் வேணாம்னு சொன்னேன் உன் அப்பா மாதிரியே நீயும் ஆகிடுவியோன்னு பயமா இருக்கு?" என்று தான் ஒரு மருத்துவர் என்பதை மறந்து கணவனின் செயலின் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
"மாம் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க எனக்கு அப்பாகிட்ட கொஞ்சம் பேசணும். அதுக்கு அப்பறம் உங்களுக்கு எஸ்பிளைன் பண்றேன்!" என்று அவரை அமைதிப் படுத்தி ராம்குமாரிடம் வந்தாள்.
"அப்பா இன் தி கேஸ் ஆப் நோ பீலிங் இஸ்சு. தி பர்சன் வில் எபக்ட் எய்தர் பை அரோமாண்டிசிம் (காதல் காமம் சார்ந்த உணர்வுகள் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருக்கும் ஒரு வித குறைபாடு) ஆர் அலெக்ஸிதிமியா (பிறர் மீது எவ்வித உணர்வுகளும் தாக்கமும் இல்லாத குறைபாடு)? அம் ஐ ரைட்?"
"எஸ் தேவா பட் இன் ரேர் கேஸ் தே மே பி எபக்ட் பை பார்கின்சன் டிசீஸ்(ஒருவித நரம்பியல் கோளாறு)"
"இதெல்லாம் சரி செய்ய முடியுமா? அதுக்கு மெடிசின் இருக்கா?"
"இல்லை தேவா இதை சரி செய்ய முடியாது ஆனால் கண்ட்ரோல் பண்ணலாம் அண்ட் இம்ப்ரூவ் பண்ணலாம்"
"ஒருவேளை அந்த டிசார்டர் பர்சனே ஒரு எண்டோக்றினாலொஜிஸ்ட்டா இருந்தால்?"
"இது அபூர்வமா நடக்கும். அந்த நபர் தனக்கு என்ன பிரச்சனைன்னு தீர்வு கண்டுபிடிக்க அவங்களே இறங்கி தெரிஞ்சுப்பாங்க. பண்டைய காலத்தில் இது சகஜம் ஆனால் இப்போ இப்படி நடக்கிறது ரொம்ப ரொம்ப அதிசயம் தான்."
சிறிது நேரம் குழப்பத்தில் உழன்றவள் பெற்றவர்களை அதிகம் காக்க வைக்காமல் பேசினாள்.
"அம்மா அப்பா ரெண்டு பேரும் கொஞ்சம் பொறுமையா அதே சமயம் என்னை புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க!
எனக்கு காலேஜ்ல ஒரு பையனை ரொம்ப பிடிச்சுருக்கு. ஹர்ஷவர்தன், வீட்டுக்கு ஒரே பையன். அவனோட அப்பா அம்மா கவர்மென்ட் ரெண்டு பேருமே டீச்சர்ஸ். அவனும் எண்டோக்றினாலொஜிஸ்ட் தான். பட் ஹி இஸ் நோட் அ நார்மல் மேன். அவனுக்கு நோ பீலிங் டிசார்டர் இருக்கு ஆனால் அது எந்த வகைன்னு எனக்கு தெரியல?"
அதுவரை அமைதியாக இருந்த மாதவி, "ஓகே இப்போ என்ன பண்ணலாம்னு இருக்க?" என்று தன் மகளின் பிடிவாதத்தை தெரிந்து கேட்டார்.
"நான் என் பைனல் இயர் ப்ராஜெக்ட் லவ் ஹோர்மோன்ஸ் பத்தி ரிசர்ச் பண்ண போறேன். அதுவும் என்னோட எஸ்பிரிமென்டீயா ஹர்ஷாவை யூஸ் பண்ண போறேன். கண்டிப்பா அவனுக்காக மருந்தை நான் கண்டுபிடிப்பேன் இல்லை அவனை அப்படியே ஏத்துப்பேன்!"
"தேவா நீ பண்ண போறது சரின்னு நினைக்கிறியா? ஒரு டாக்டர் தானே நீ? ஆனால் என்ன செய்ய போறேன்னு சொல்லுற?" என்று அமைதியை உடைத்து பேசினார் ராம்குமார்.
"அக்கா லவ் பன்றேன்னு சொன்னப்போ நீங்களே பேசி மாமாவை கல்யாணம் பண்ணி வைச்சீங்க! எனக்கு மட்டும் அநியாயம் செய்யலாமா?" என்று குற்றச்சாட்டினாள்.
"திவாகரும் ஹர்ஷாவும் ஒன்னா?" என்று மாதவி எதிர்கேள்வி எழுப்ப,
"யார் அப்போஸ் பண்ணாலும் நான் சொன்னதை செய்யதான் போறேன். உங்களுக்கு சொல்லாமல் செய்யலாம் ஆனால் நீங்க அப்படி வளர்க்கலையே! சொல்லிட்டேன் அவ்வளவு தான்" என்று பேச்சை முடித்துக்கொண்டாள்.
"மாது உன் பொண்ணு முடிவு பண்ணிட்டு தான் நம்பகிட்ட பேச வந்திருக்கா! ஒரு டாக்டர் நான் என் பேஷண்டை சரியும் செய்வேன் என் காதலை ஜெயிச்சும் காட்டுறேனு சொன்ன அவளோட பிடிவாதம் முதல் நாளே ஆட்டம் காணும். அவளோட வாழ்க்கை அவளோட கையில். தீ சுடும்னு சொல்லலாம் இல்லை அது என்னை மட்டும் சுடாதுனு பேசும் உன் பொண்ணுகிட்ட பேசவே முடியாது. ஈவினிங் வர கொஞ்சம் பொறுமையா இருக்க சொல்லு நான் யோசிக்கணும்!" என்று அழைப்பை துண்டித்தார்.
அவரது நலிந்த குரலே அவருக்கு இதில் சற்றும் பிடித்தமில்லை என்று அவளுக்கு புரிந்தது. ஆனால் முன்வைத்த காலை பின் வைக்க மறுத்தாள் தேவசேனா.
"குட்டிமா நீ தெரிஞ்சே வலியை வாங்க நினைக்கிற? பசங்களா இல்லை அவனை விட்டுரு. யோசி ஒரே காதல் ஒரு செடியில் ஒரு பூ தான் பூக்கும்னு சில்லியா யோசிக்காதே! அவன் மேல இருக்க ஈர்ப்பை காதல்னு சொல்லி உன்னை நீயே ஏமாற்றிக்காதே. டேக் யுவர் டைம்" என்று மாதவியும் வைத்து விட மனம் கனத்து அமர்ந்திருந்தாள்.
கானலாக போய் விடுமோ என்று பயத்தில் இப்படி ஒரு முடிவை எடுத்தாலும், இதை அவன் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்பதை அவள் அறிவாள். வீட்டில் எப்படியாவது ஒற்றுக்கொள்ள வைத்து விடலாம் ஆனால் தன் காதல் கள்வனிடத்தில் அவளது பேச்சு காற்றில் தீட்டும் ஓவியம் அல்லவா? யோசித்து யோசித்து தலைவலி வந்தது தான் மிச்சம் ஒரு தீர்வு கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் சோர்ந்து அவள் மனமும் உடலும் ஓய்வு கேட்க மெதுவாக விடுதியை நோக்கி நடந்தாள்.
தொடரும்.......
ஹாய் லவ்தீகவாதிகளே சும்மா போகாமல் நாளு வார்த்தை சொல்லிட்டு போங்க.......
Thread 'ல்தகா சைஆ இருக்கா? கருத்து திரி'
https://saaralnovels.com/index.php?threads/ல்தகா-சைஆ-இருக்கா-கருத்து-திரி.234/