இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

மழை 21

Chithu

Moderator
மாலை மஞ்சள் நிற மாலி மறைய காத்திருக்கும் வேளையில் கல்லூரியில் இருந்து புத்தகச் சுமையோடு தலைவலியையும் சுமந்து கொண்டு வந்தாள் யாழினி.
இருவரும் வந்தது இறங்கிய நேரம் வீட்டின் வாயில் கிடக்கும் செருப்பு ஜோடிகள் கண்டு, சைலுவை விடுத்து தப்பிக்கச் சென்ற யாழினியை கையோடு அழைத்து உள்ளே இழுந்திருந்தாள் சைலு.
"எங்கடி ஓட்ற? என்னை விட்டுட்டு எங்க போறா நீ...? ஒழுங்கா என் கூட வா !"இழுக்காத குறையாக யாழினியை இழுத்து கொண்டு போனாள் சைலு.
யாழினி,"சைலுஊஊஊ.... ப்ளீஈஈஈஈஸ்டி. நான் வரல. உள்ள அந்த வைகண்டபுரம் இருந்திட்டு என்னை நக்கலாக பார்க்கும்டி. ப்ளீஈஈஸ்டி நான் இப்படியே போயிடறேனே. ஆல்ரெடி தல வேற வலிக்குதுடி, விட்றீ நான் உள்ள போயி பதுங்கிட்றேன்..." என யாழினி சைலுவின் காலில் விழுகாத குறையாக கெஞ்ச,
"உள்ள ரெண்டு மாம்ஸும் இல்ல... ஆன்ட்டியும் அங்கிளும் மட்டும் தான் வந்திருக்காங்க... உள்ள போங்க"சைத்திரன் சொல்லிவிட்டு போக,
போகும் அவனை முறைத்து கொண்டு நின்றவளை உள்ளிழுத்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.
வீரராகவனும் மாணிக்கமும் அமர்ந்திருக்க, அறிவுமதியும் வானதியும் நின்றிருந்தனர். அவர்களுக்கு எதிரே சரோஜாவும் வெற்றிவேலும் அமர்ந்து அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தனர்
சிரித்த முகத்துடன் அவர்களை வரவேற்றாள் சைலு. அவளை பின் தொடர்ந்து வந்த யாழினி சங்கடமாக எண்ணி தலை குணிந்து நின்றாள்.
அவர்கள் வந்ததும் இருவருக்கும் வாங்கி வந்த பூவை அவர்கள் அருகினில் வந்து கையில் கொடுத்தார் சரோஜா.
"தேங்க்ஸ் அத்தை...!"என்று முகம் மலர வாங்கிக் கொண்டாள் ."தேங்க்ஸ் மா !"என்று சரியான முறையைச் சொல்லி அழைத்தாலும் கொஞ்சம் தயக்கமாகவே சிரித்தாள்.
"இந்தப் பொண்ணுக்கு என்னாச்சி? எதுவும் பேசாம ஏன் ஃபார்மல் நின்னுட்டு இருக்கு??"என்று சைலுவிடம் சரோஜா கேட்டார்
"அது வேற ஒண்ணுமில்ல அண்ணி !அவ கல்யாணம் தள்ளி போயிடுச்சில. அதுனால நீங்க அவளை தப்பா நினைச்சி அவ மேல் கோபப்படுவீங்களோனு பயந்து இப்படி நிக்கறா !" வானதி உண்மையை சொல்ல,
"அச்சோ !!!! இதுக்கு ஏன் மகளே ! நான் உன் மேலே கோபப்பட போறேன்...? உங்க கல்யாணப் பேச்சை நாங்க எடுத்தாலும், அதை முடிவு செய்ய போறது நீங்க தான். கல்யாணம் வேணாம் மறுக்கலையே நீ ! படிச்சி முடிச்சிட்டு பண்ணிக்கறேன் தானே சொல்ற, அவ்வளவு தானே இதுல என்ன நான் கோபப்பட இருக்கு சொல்லு?
நீயும் தனவ்வும் முடிவு பண்ணிட்டீங்க. நாங்க ஏன் இதுல தலையிட போறோம்? சைலு எங்க வீட்டுக்கு முன்னாடி வர போறா ! நீ கொஞ்சம் லேட்டா வர போற, மத்தப்படி நீங்க ரெண்டு பேரும் எங்க வீட்டுக்கு மகளா வந்தா போதும். உங்களுக்காகவே எங்க வீடு காத்திட்டு இருக்கு... சீக்கிரமாக வாங்க மகள்களே !
"என்று அவள் தயக்கத்தை உடைத்து வெகு இயல்பாக பேசினார் சரோஜா.
யாழினிக்கு அவரது பேச்சு மிகவும் பிடித்திருந்தது... ஆனாலும் உள்ளுக்குள் அனைவரையும் ஏமாற்றுகிறோம் என்ற குற்றவுணர்வு உள்ளே அவளை இம்சித்தது. அவர்கள் முன் முகத்தை தெளிவாக வைக்க முயன்றாள்.
"வர சண்டே, நிச்சய புடவை எடுக்கப் போறோம்.... விமல் ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டான் சைலுக்கு பிடிச்சது தான் எடுக்கணுமாம்... அதுனால சைலுவும் யாழுவும் அன்னைக்கி கண்டிப்பா வரணும். சாக்கெல்லாம் சொல்லக் கூடாது என்ன...!"என்று யாழுவை செல்லமாக மிரட்ட,
"நான் இல்லாம இவ நிச்சய புடவை எடுத்துடுவாளா மா? இல்ல நான் தான் விட்டுடு வேணா??? நீங்க கவல படாதீங்க சாரோ மம்மி ! உங்க பர்ஸ்க்கு அன்னைக்கி பெரிய வெட்டா வச்சி கொளுத்திடுறோம்..."என்று தன்னை இயல்பாக காட்ட முயன்றாள் யாழினி.
"அச்சோ ! என் செல்லங்களே ! உங்களுக்காக எவ்வளவு வேணா செலவு பண்ணலாம். செலவு பண்ண மம்மி நான் ரெடி. நீங்க நேரத்துக்கு வந்திடுங்க"என்று இரு பெண்களையும் வழித்து முத்தமிட்டார்.
"அண்ணி ! சாம்பிரதாயம் அது இதுனு சொல்லி இரண்டு பேரையும் கூட்டிட்டு வர்றாம இருந்தீடாங்க... அப்றம் உங்க மருமகன் கோபத்துக்கு நீங்க ஆளாகனும் பார்த்துக்கங்க...." என்று சொல்லிக் கொண்டு இருவரும் கிளம்பிட, அவர்கள் சென்ற பின்னும்
மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தனர்.
"நல்ல மனுசங்கல அண்ணே !" வானதி ஆரம்பிக்க, " ஆமாமா, மாப்பிள்ளை வீட்டுக்காரங்கனு மெதப்பு இல்லாம, பழகுறாங்க, மனசுல எதையும் வச்சிக்காம பேசுறாங்க. இவங்கள போல சம்மந்தி கிடைக்க நீங்க கொடுத்து வச்சுருக்கணும்..."என்றார் வீரராகவன்.
"அதென்ன நீங்க...? நாமனு சொல்லுங்க..."என்று வானதி
திருத்த, அவரோ மகளின் முகத்தை பார்த்தார். அவள் முகம் சற்று மாறிப்போனது.
"எங்க இவ தான் வேணானுட்டாளே! இல்லேன்னா சைலுவோட சேர்ந்து அவளுக்கும் புடவை எடுத்திருக்கலாம்... ரெண்டு பேரோட கல்யாணத்தையும் ஒன்னா வச்சிருக்கலாம்... அவங்களும் அதை தானே சொல்லி வருத்தப்பட்டாங்க... அறிவுமதி சொல்ல, யாழினி அங்கிருந்து வேகமாக தன் வீட்டிற்கு சென்று விட்டாள்.
"இப்போ ஏன் முடிஞ்சத ஆரம்பிக்கற?? சைலு போலவே யாழினியோட மனநிலை இருக்கும் சொல்ல முடியாது . அவளுக்கு இப்போ கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்ல. விருப்பம் இல்லாதவள பிடிச்சு கட்டி வச்சி நீ என்ன சாதிக்க போற அறிவு. அவ இருக்கும் போது இந்த பேச்சை இனி எடுக்காத சொல்லிட்டேன்" என விறுவிறுவென சென்று விட, வாயில் கைவைத்து நின்றார் அறிவு.
"ஆனாலும் வானதி, உன் அண்ணே ! மாறுனாலும் மாறினார் பொண்ணுதாசனா மாறிட்டார்... இப்போ எல்லாம் பொண்ணு பொண்ணு யாழினி பின்னாடி தான் சுத்தறார். எங்க போய் முடிய போகுதோ !" என சலித்து கொண்டு அவரும் சென்று விட, மூவரும் சிரித்துக் கொண்டனர்.
****
முகில்களுக்குள் நடுவே மலர்ந்த மதியாளை ரசித்துக் கொண்டிருந்தான் தனவ்... அவன் பக்கத்தில் முழு சிப்ஸ் பாக்கெட்டை வைத்து ருசித்துக் கொண்டிருந்தான் விமல்.
அவன் ஒருவித ரசனையிலும் இவன் ஒரு ரசனையிலும் இருந்தான்.
"சந்திருடு, சாலா அந்தங்கா உன்னாடு "என்று தனவ் முணங்க, " ஆங்... என்னடா உளற???"என்று சிப்ஸை கடித்தப்படி கேட்டான் விமல்.
"வட்டமா இருக்கற இந்த நிலா எவ்வளவு அழகுல !"வாய் விட்டே சொல்ல,
"ம்ம்ம்... அதை விட வட்டமா இருக்க இந்த சிப்ஸ் ரொம்ப ருசியா இருக்குல !"என்று இன்னொன்றை வாயில் போட்டான்.
அவன் பிடரியில் ஒன்னு விட்டவன்"நான் என்ன சொல்லிட்டு இருக்கேன். நீ என்ன சொல்லிட்டு இருக்க???"
"அடேய் நீ அந்த வட்டமாக இருக்க நிலவ ரசிச்சிட்டு இருக்க... நான் இந்த வட்டமாக இருக்க சிப்ஸை ருசிச்சிட்டு இருக்கேன் அவ்வளவு தான் சிம்பிள். உன் ரசனை வேற என் ரசனை வேற மென். சிப்ஸ் சாப்பிட்றீயா? நிலாவ விட இது செம்மையா இருக்கும்..."என்று நீட்ட அதனை தட்டி விட்டான்.
விமலோ தோளை குலுக்கி விட்டு சாப்பிட ஆரம்பித்தான். அமைதியாக இருளை வெறித்துக் கொண்டிருந்த தனவ்விடம்" எல்லாம் சரியா போகுதுனு நினைக்கறீயா தனவ் ? கிருஷ், ஹரியா பேச ஒத்துப்பானா...?? அவங்க பேசறதுனால அவங்களுக்கு பழைய நியாபகங்கள் வரும் நீ நினைக்கறீயா??? இதுல எத்தனை பெர்ஸன்டேஜ் வாய்ப்புகள் இருக்கு???"மருத்துவனாக கேட்டான்.
"ரெண்டு பேர பொறுத்த வரைக்கும் வாய்ப்புகள் அதிகம் தான் விமல். ரெண்டுபெரும் பேசறதுனால அவங்க மைண்ட்ல மனசுல ஆழமா பதிஞ்சு போனது அவங்க சார்ந்த நியாபகங்கள் கண்டிப்பா நியாபகத்துக்கு வர வாய்ப்புகள் அதிகம் டா !
இப்ப உன் எதிர ஒருத்தர் வர்றாரு, அவருக்கு நீ நல்லா நியாபகத்துல இருக்க, உனக்கு அவர் நியாபகத்துல இல்ல... உடனே அவர் என்ன பண்ணுவார் நீங்க சந்திச்சி கிட்ட இன்சிடெண்ட சொல்லி உனக்கு நினைவூட்டுவார். உனக்குள்ள அந்த இன்சிடெண்ட் பதிஞ்சு இருந்துச்சினா, நீ யோசிக்கவும் அந்த நபரும் யார்னு நியாபகத்துக்கு வரும் இல்லையா? அது போல தான் இதுவும்.
ரதிக்கு, ஹரிய பத்தின நினைவுகள் எல்லாம் உள்ள ஆழமா பதிஞ்சு இருக்கு அவனுக்கும் ரதியினுடைய பதிப்பு இருக்கு. அன்னைக்கி நான் அவன்கிட்ட போட்டோவ காட்டும் போது தெரியாதுனு பொய் சொன்னாலும் அவன் முகம் எனக்கு காட்டிக் கொடுத்திடுச்சி , அவனுக்கு ரதியோட முகம் கொஞ்சம் கொஞ்சமா நியாபகத்துக்கு வருதுனு கண்டுபிடிச்சேன்... ரெண்டு பேருக்கும் கண்டிப்பா எல்லாம் நியாபகத்துக்கு வரும் விமல்..."என்று விளக்கினான்.
"அப்போ கிருஷ்ஷுக்கு பழசெல்லாம் நியாபகம் வந்து, கரண்ட் டேஸ மறந்துட்டா...?"
"வெரி சிம்பிள்... ரதி அவனுக்கு யாழினி எனக்கு..."என்று சிறுப்பிள்ளை போல சொன்னவனை முறைத்தவன்"சரி அவனுக்கு
யாழினியும் ரதியும் நியாபகத்துல இருந்து, அவன் யாழினி தான் வேணும் நின்னா !"
உதட்டை வளைத்து,பாவமாக முகத்தை வைத்தவன், திடீரென வில்லனை போல சிரித்து" என் மாமனை என்னோட சேர்த்து வில்லனாக்கிடுவேன்"என்றவனை புரியாமல் கண்டு விழித்தான்.
"யாழினி எனக்கு தான். நான் இவ்வளவு சீரியஸா இறங்க காரணம்'எங்கிருந்தாலும் வாழ்க'னு பாடவா? போடாங்க... அதெல்லாம் என்னால முடியாது. யாழினி இஸ் மைன். அவ எனக்குனு எனக்கே படைக்கப்பட்டவ , அவளை தாரவார்த்து கொடுக்க, அவ்வளவு நல்லவன் ஒன்னும் இல்ல நான். யாழினினு வந்துட்டால் மீ கெட்டவனா கூட மாறுவேன்... அர்த்தமாயினதா???"எனக் கேட்க அவனோ நான்கு திசைக்கும் ஆட்டி வைத்தான் தலையை.
சரியாக அவனது அலைபேசி அலற, பக்கவாட்டிலிருந்து எடுத்து திரையைக் கண்டதும் விமலின் முகம் பளிச்சிட, யாரென அறிந்து கொண்டான் தனவ்.
"சொல்லுடாமா !"என குழைய,"போன அண்ணா கிட்ட கொடுங்க..."என்றாள்.
"எனக்கு அடிச்சிட்டு நொண்ணன்கிட்ட கொடுக்க சொல்ற? ஏன் உன் நொண்ணன் கிட்ட போன் இல்லையா அங்க அடிக்க வேண்டியது தானே !"என சலித்து கொள்ள, "பச்... இப்ப கொடுக்க போறீயா இல்லையா??? "எனவும்.
"கொடுக்கிறேன்டி"என்று அவனிடம் நீட்ட வாங்கிக் கொண்டு "சொல்லுமா !"என்றான். அவள் இன்று நடந்த அனைத்தையும் சொல்லி "ரொம்ப நன்றிசைலு மா ! எனக்கு விஷயத்தை சொன்னதுக்கு இனி நான் பாத்துகிறேன்"என்று யோசனையுடன் விமிலிடம் போனை கொடுத்தான்.
அவன் பேசிக் கொண்டே நகன்று போக, தனித்திருந்த தனவ் யாழினிக்கு அழைத்திருந்தான் "ஹலோ !! மிஸஸ் தனவ் ஹாவ்... ஆர்... யூ...?" என கேட்டு அவளுக்கு கேட்கும் படி நக்கலாகச் சிரிக்க அவளுக்கு எரிச்சலாக இருந்தது.
"என்ன மிஸஸ் தனவ், உங்க வருங்கால ஹஸ்பண்ட்க்கு ஃபர்ஸ்ட் விகட்ரி கிடைச்சிருக்கு வாழ்த்தலாமே !"என அவளை வெறுப்பேத்த அவளோ அங்கே காளியாக மாறி கொண்டிருந்தாள்.
 
விரும்பியது கிடைக்கும் நிலையில்
விரும்பாத ஒன்றை
வலிய வந்து கொடுக்கும்
விதியை என்ன செய்ய?????
விரும்பிய பெண் கிடைக்க
வில்லனாக கூட மாறுவாயா????
 

Chithu

Moderator
விரும்பியது கிடைக்கும் நிலையில்
விரும்பாத ஒன்றை
வலிய வந்து கொடுக்கும்
விதியை என்ன செய்ய?????
விரும்பிய பெண் கிடைக்க
வில்லனாக கூட மாறுவாயா????
Thanks mA
 
Top