இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

மழை 19

Chithu

Moderator
ரதியாழினி நாட்குறிப்பிலிருந்த முதல் பக்கம்...
"டென்டத் முடிச்சிட்டு லவந்த் வந்துட்டேன். அப்பா என்னை புது ஸ்கூல்ல சேர்த்து விட்டார்... புது ஸ்கூல் பர்ஸ்ட் டே கொஞ்சம் நெர்வஸா இருந்துச்சி. ஆனா பயந்தது போல இல்ல நல்லாத்தான் போச்சி இன்னைக்கி.
ஆனா பழைய ஸ்கூல் போல இல்ல... என் ஃபிரண்ட்ஸ நான் ரொம்ப மிஸ் பண்றேன். அப்பா கிட்ட அங்கயே படிக்கிறேன் சொன்னேன், பச்... முடியாதுனு சொல்லிட்டார்.
இங்க எனக்கு ஃபிரண்ட்ஸ் இல்ல... இன்னும் யாரையும் நான் ஃபிரண்டா அக்ஸப்ட் பண்ணிக்கல. நான் ஒரு இன்ரோவேர்ட். அதுனால நானா யார்கிட்டயும் போய் பேசவும் இல்ல, யாரும் என் கிட்ட வந்து பேசவும் இல்ல, மே பீ நாளைக்கு எனக்கு ஃபிரண்ட்ஸ் அமையலாம்... யார் எனக்கு ஃபிரண்டஸா வருவாங்க க்யூரியாசிட்டி இருக்கு...
ஆனா ஃபிரண்டு இல்லனு தனியா உட்காரலை... துணைக்கு அவன் குரல் இருந்தது.
'அவன்???' யாரவன்??? தெரியல, முகம் பார்க்கல , அவன் எப்படி இருப்பான் தெரியாது . ஆனா அவனை பிடிச்சது. அவன் குரல் ரொம்ப பிடிச்சது..
அவன் குரல் என்னை ரொம்ப ஈர்த்துடுச்சி முதல் ஈர்ப்பு அவன் மேல...
இத்தனை வருஷம் கடவுள் வாழ்த்து பாட்ட நான் ரசிச்சு கேட்டது இல்ல... ஆனா இன்னைக்கி ரொம்ப ரசிச்சு கேட்டேன். அது மட்டுமில்ல அதை தான் முணங்கிட்டு இருந்தேன் . இப்பையும். கூட..
என் பழைய ஸ்கூல்ல கிரௌண்ட்ல பிரேயர் நடக்கும், ஆனா இங்க கிளாஸ்ல பண்றாங்க... புதுசா இருந்துச்சி எனக்கு... கிரௌண்ட்ல இருந்தால் கூட அவன் முகத்தைப் பார்த்து இருப்பேன்.... பச் இன்னைக்கி எனக்கு கொடுத்து வைக்கல...
ஆனா அவன் பெயர தெரிஞ்சிக்கிட்டேன். பக்கத்தில் இருக்க பையன்" டேய் ஹரி பாட ஆரம்பிச்சிட்டான் டா'னு சொன்னான்.
ஹரி... ஹரி..
ஹரி... நல்லா இருக்கல !!!! அந்த ஹாரி யாரோ?? எனக்கு
ஜூனியரா சீனியரானு தெரியல. ஆனா என்னுடைய முதல் க்ரஸ்.... ஹ... ரிரிரி...!!!
என குறிப்பேட்டில் அழுத்தி எழுதி வைத்திருந்தாள் அவனது பெயரை.
முதல் பக்கம் அதோடு முடிந்திட, இரண்டாம் பக்கத்தை திருப்பினான்.
அதற்குள் கிருஷ்ஷின் தாய் அவன் அருகே வந்து
"நேரமாச்சி பா ! வா வந்து படு. இதுக்கு மேலே நீ முழுச்சிருந்தால் உனக்கு தலை வலிக்கும் வா பா !"என்றழைக்க, மனமின்றி அவர் பின்னே சென்றவன் அவர் அணைப்பில் படுத்துக் கொண்டான்.
"ஹரி... ஹரி... ஹரி..." மூளைக்குள் அவள் அழைப்பது போல இருந்தது. இறுக்கக் கண்ணை மூடிக் கொண்டு படுத்துக் கொண்டான்.
காலைப் புலர்ந்தது...
யாரும் அவளை எழுப்பும் முன்னே தானாகவே எழுந்து அறிவுமதிக்கும் நாராயணனுக்கும் நெஞ்சு வலியை கொடுத்து விட்டு கல்லூரிக்குக் கிளம்பத் தயாரானாள்.
கண்ணாடியில் தலைவாரிக் கொண்டே
தனவ்வை வசைப்பாடினாள். "வைகுண்டபுரம் உனக்கு எவ்வளவு ஏத்தம் இருக்கும்...? என் கிட்டயே நீ சவால் விடறீயா...? இருடி மவனே ! என் கிருஷ்ஷை வச்சே உன் முகத்துல கரிய பூசுறேன்... இன்னைக்கி நீ மூக்கு உடைஞ்சு போகல, நான் யாழினி இல்ல டா !" என்று கிருஷ்ஷின் மேல் அதீத நம்பிக்கை கொண்டு அவள் வீர வசனங்கள் பேச, அவனோ வாரி விடப்போவதை அறியாமல் ஆர்வத்துடன் கிளம்பினாள்.
குதூகலத்துடன் வெளியே வந்து உணவு மேசையில் அமர்ந்த தன் மகளை ஆதூரமாகப் பார்த்தார் ராகவன். இத்தனை நாள் இந்த மகிழ்ச்சி எல்லாம் அவள் முகத்தில் இல்லை. துடைத்து எடுத்தது போல இருந்ததை நினைத்து பார்த்தவருக்கு உள்ளுக்குள் சுருக்கென்று ஏதோ தைத்து போல இருந்தது.
ஆனால் அதை எல்லாம் உணராது, அங்கே ஒரு ஜீவன் தன்னை கவனிப்பதை கூட பொருட்படுத்தாது குதூகலத்துடனே தட்டைத் திருப்பி வைத்து விட்டு" அம்மா " என்றழைத்தாள்.
"அம்மா, தோட்டத்துப்பக்கம் போய் இருக்கா, அப்பா சாப்பிடு எடுத்து வைக்கட்டுமா...?"என்று கேட்ட நொடி தான், தன் அருகே அமர்ந்திருந்த அந்த ஜீவனைப் பார்த்தாள்.
"அப்...பா !" காற்றில் அந்த வார்த்தை கரைந்து போனது. முகமும் சட்டென்று மாறி போனது. அவர் உணவை
வைக்க அவரை வெறித்திருந்தாள்.
"போதுமா டா !"எனக் கேட்கவும் "போதும் பா"என்றவள் அமைதியாக சாப்பிட ஆரம்பித்தாள். அவர் அவளது முகத்தையே பார்த்திருந்தார்.
மகளின் விருப்பத்தை கேளாது செய்ய இருந்த காரியத்தை எண்ணி வருந்தினார். மகளது சிரித்த முகத்தை காணும் போதெல்லாம் குற்றவுணர்வு வந்து போனது.
"இன்னும் வைக்க வா டா !"என்று கேட்க, அவரது அதிரடியான மாற்றத்தை அவளால் நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை... அவளால் ஏற்றுக் கொண்டு அவருடன் ஒன்றவும் முடியவில்லை... அவர் மேல் இருந்து பயம் இன்னும் அவருடன் இணைய விடாமல் தடுக்க தள்ளியே நின்றாள். மேலும் அவருடன் நெருக்கமாகப் பழகி அவரது பாசத்தையும் அன்பையும் அனுபவித்து விட்டு பின் காதல் விவகாரம் தெரிந்து, அத்தை போல தன்னை தலை முழ்கிறது போல் எதுவும் நேர்ந்தால, அந்தப் பிரிவை தாங்க முடியாத காரணத்தினால அவருடன் ஒன்றாமலே இருக்கிறாள்.
"போதும் பா ! நீங்க சாப்பிடுங்க"என்று சொல்லிவிட்டு அவள் எழுந்துக் கொண்டு கல்லூரிக்கு கிளம்பினாள்.
"பத்திரமா போயிட்டுவா மா !"என்றார் அக்கறையாக, அவளும் திரும்பி தலையை ஆட்டிவிட்டுச் சென்றாள்.
காற்றை கிழித்துக் கொண்டு சென்றது அவளது ஸ்கூட்டி. அவளை கேட்டியாக பிடித்துக் கொண்டு பயத்துடன் பின்னே அமர்ந்திருந்தாள் சைலு. வீட்டிலிருந்து பறக்க ஆரம்பித்த வண்டி கல்லூரி வளாகத்தில் தான் நின்றது.
வண்டியை விட்டு இறங்கிய சைலு தள்ளாடி பக்கத்தில் இருந்த கம்பியைப் பிடித்து நின்றாள்.
"என்ன சைலு ! காலையிலே இப்படி தள்ளாட்ற, மாமா வச்ச மிச்ச சரக்க அடிச்சிட்டு வந்துட்டீயா...?"எனக் கேலி செய்தவளின் காதை பிடித்து திருக்கினாள் சைலு.
"வண்டி ஓட்றனு நினைப்பு இருக்கா? பிளைட் ஓட்ற கணக்கா பறக்கற ! நல்ல வேளை எந்த போலீஸ் கிட்டயும் நாம மாட்ல. இல்ல வீட்லே உன்னையும் என்னையும் கைமா பண்ணிருப்பாங்க... ஏன்டி ஸ்பீடா ஓட்ன?எவ்வளவு பயந்துடேன் தெரியுமா?? என் கல்யாணம் நடக்கறது முன்னாடி எனக்கு கருமாதி பண்ணிடுவாங்கடி, இப்படி நீ வண்டி ஓட்னா...? பறக்கற அளவுக்கு என்னடி அவசரம் உனக்கு...?"
"அவசரம் இல்ல... சந்தோசம்டி. இந்த யாழு ! அப்படியே வானத்திலே பறக்கறேன்டி சந்தோசத்துல மிதக்கறேன்"என்று இருக் கையை விரித்து சொன்னாள்.
அவள் கைகளை விரித்து நிற்பதை புரியாமல் பார்த்தவள் அவள் கூற போகும் காரணத்தை கேட்க ஆவலாகப் பார்த்தாள்.
"எதுக்கு இவ, சந்தோசமா இருக்கானு தான பார்க்கற...? அதுக்கு காரணம் இருக்கு சைலு !"என்று விளக்க ஆரம்பித்தாள்.
"என் கிருஷ், இந்த சவாலுக்கு ஒத்துக்கவே மாட்டான். இந்த சவாலுக்கு ஒத்துக்காம, அந்த வைகுண்டபுரத்தோட மூக்கை உடைக்க போறான். அந்த வைகுண்டபுரம் நினைச்ச எதுவுமே நடக்காது... அவன் முன்னாடியே நானும் கிருஷ்ஷும் சேரத்தான் போறோம். கண்டிப்பா சேர்வோம்..."என்று நம்பிக்கையாக சொன்னவளை பாவமாக பார்த்தாள் சைலு.
உண்மைகள் அனைத்தும் தெரிந்தும் வாயைக் கட்டிப் போட்ட நிலையில் தான் இருக்கிறாள் சைலு. அவளுக்கு தன் தோழியை எண்ணி கவலையாக இருந்தது. உண்மை தெரிஞ்சு அவளது நிலை என்ன என்று நினைக்கவே பயமாக இருந்தது.
"சைலு ! ஒரு வேள, கிருஷ் அந்த டீலுக்கு ஓகே சொன்னா என்ன பண்ணுவ...???"
"அவன் ஓகே சொல்ல மாட்டான்" என்றாள் அழுத்தமாக, " சப்போஸ் , அவன் அந்த டீலுக்கு ஓகே சொல்லிட்டா??"
"அப்படியே ஓகே சொன்னாலும்...? அந்தப் பொண்ண குணப்படுத்த தான். அந்தபொண்ண குணப்படுத்திட்டு, என் கிட்ட வந்திடுவான். அந்த வைகுண்டப்புரம் எங்க வாழ்க்கை விட்டு போயிடுவான். நாங்க பிளான் பண்ணிது போல படிச்சி முடிச்சு கல்யாணம் பண்ணிப்போம்..." என்றாள் .
"சரிரிரி ! ஆனா அவன் உன் கிருஷ்ஷா வரலேனா...??"
"அவன் என் கிருஷ்ஷா இல்லேனா கண்டிப்பா நான் செத்திடுவேன்" என்று தீர்க்கமாகச் சொல்லி விட்டு செல்ல, அவளுக்கோ அடிவயிற்றில் புளியை கரைத்தது.
கிருஷ்ஷின் மீதுஅவள் மலை அளவு நம்பிக்கை வைக்க, அதை உடைக்கும். விதமாக, தனவ் சொன்ன டீலுக்கு ஒத்துக்க போவதாக சொல்லி அவனது நெஞ்சில் இடியை இறங்கினான்.
 
நாட்குறிப்பில் தன்னை பற்றி
நினைவில் படித்திட....
நல்ல மனநிலையில்
நம்பிக்கையோடு வரும் யாழினி....
நல்லது நடக்கும்
நடக்கும் நல்லது யாருக்கோ?????
 

Chithu

Moderator
நாட்குறிப்பில் தன்னை பற்றி
நினைவில் படித்திட....
நல்ல மனநிலையில்
நம்பிக்கையோடு வரும் யாழினி....
நல்லது நடக்கும்
நடக்கும் நல்லது யாருக்கோ?????
Thank you
 
Top