இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

மந்திரம் சொன்னேன் வந்துவிடு - ஸ்ரீராஜ் விமர்சனம்

Sriraj

Member
ஹாய் ஹனி,

ஜனனி நவீனின் மந்திரம் சொன்னேன் வந்துவிடு🌹🌹

நாயகன் - ஜோனத்தன் தாமஸ் குரியன்
நாயகி - நிவேதிதா காயத்ரி

ஜோனத்தன் தாமஸ் குரியன் - அழகன் இவன். அழுத்தம் நிறைந்த காளையனவன். அன்பும் - மென்மையும் - கோபமும் - நிதானமும் - திறமை என எல்லாம் அதிகமாக பெற்ற வள்ளல் அவன். உடையவளின் உயிர் சுவாசம் அவன்.🥰

நிவேதிதா காயத்ரி - அழகிய பிராமாணர் வீட்டு நங்கையவள். இயற்கை அழகை அழகுற பெற்று நேசமும்- மென்மையும் - அச்சமும் என இருப்பவள். தந்தையின் அதிக கண்டிப்பில் இருந்தவள். அன்னையின் பாச அரவணைப்பில் நெகிழ்ந்தவள். உடையவனின் இதயத் துடிப்பான சித்திர பாவையவள்.🥰

இரு வேறு பிரிவினர்கள் - துருவங்கள் காதல் என்ற ஒற்றை புள்ளியில் இனைந்தன இவர்களின் மனங்கள்.💞💞

மனங்கள் இனைந்ததால் நிதர்சனத்தை எதிர்த்து போராட சக்தி வந்தனவோ... அதை பற்றி சிறிது கவலை இருந்தாலும் அந்நிமிடம் சந்தோஷத்தை இனிமையாய் களித்து காதல் வானில் மிதந்தன காதலர்கள்.💕💕

காதல் என்றாலே பல தோதனைகள் உண்டல்லவா… அதற்கு இவர்களின் காதலும் விதிவிலக்கு அல்லவே… 😊

இவர்கள் காதலும் சோதனைக்கு உட்பட்டது தங்களின் பெற்றவர்களாலயே... ஆனால் அச்சோதனையில் இவர்கள் கண்டது தான் எத்தனை - எத்தனை போராட்டங்கள்… போராட்டங்கள் என்று சொல்வதற்கு பதில் ரணங்கள் என்றே கூறலாம் அவ்வளவும் அவ்வளவு ரணம் - வலி - வேதனை வடுக்கள்….😔😔

இவ்வனைத்திலும் இருந்து வெளிபட்டு எங்கள் அன்பு ஒருவர் இன்றி ஒருவர் இல்லை நாங்கள் இருவரும் ஒன்றே என பறைசாற்றும் அளவிற்கு இவர்களது நேசம்.🙂🙂

"நான் இன்றி அவளில்லை… அவனின்றி நானில்லை…" என்ற வாக்கியம் இவ் மனங்களுக்கு சால பொருந்தும்…😊😊🥰🥰

இவர்களை அன்றும் - இன்றும் - என்றும் நிலைபெற்று வாழ செய்யும் இவ் இருவரின் பொக்கிஷமான அன்பு.🥰🥰

அதை மேலும் அழகுற செய்வது போல் இவர்களின் குட்டி தேவதை.😘

அழகிய காதல் - பாசம் - நேச போராட்டத்தின் வெளிபாடாய் இவர்களின் இல்லற வாழ்க்கை.😊😊

பல ரணங்களையும் இன்னல்களையும் இரு காதல் உள்ளங்களுக்கு பரிசளித்த சுத்திரதிகாரிகள் தங்கள் வாழ்க்கையில் எது உண்மையான அன்பு - பாசம் - நேசம் - சுயம் என எதுவும் அறிந்தும் அறியாமலும் இழந்து தனிமரமாய் நின்று உற்றார் உறவினர் இல்லாமல் தவித்து மாண்டும் - இருந்தும் இல்லாமல் உயிரடனும் - தயவுடனும் இருக்கிறார்கள். 😏

இவர்களின் இந்நிலைமைக்கு ஒரே வாக்கியம் நன்றாக பொருந்தும் "தன்விணை தன்னை சுடும்… அது செய்யும் விணைகளை பொருத்து அவரவர் விணை பலன் அமையும்…"😏


"இருள் வானில் வளர்பிறை நிலவாய் அவள் இருக்க...
வெளி வானில் ஜொலிக்கும் சூரியனாய் அவன் இருக்க...
அவர்கள் இனைந்ததன் பெயரில் அவர்களின் பிரகாசமான காதல் இருக்க...
பிராகசத்தின் அளவை குறைக்கும்
பொருட்டு பல கிரகணங்கள் இருக்க...
கிரகணங்களின் ஊடுறுவும் ஆக்கிரமிப்பால் காதல் பறவைகள் களை இழக்க...
இழந்த களையை நாயகனவன் அடைய நினைக்க...
அதனின் பாதையில் பல தடைகள் இருக்க...
தடைகள் தாண்டி கடல் ஆழம் சென்று
காதல் செய்ய மன்னவன் நினைக்க...
மனதின் ரணத்தின் அச்சத்தால் ஆழம் செல்ல மங்கையவள் மறுக்க...💞💞

விழியசைவினில் துணிச்சல் தந்து
இதயவாசலை வீரனவன் துறந்து என்றும் ஒன்றாய் நாமாக கலந்திட வழி காண்பிக்க...
அவ்வழியை பின்பற்ற நாயகி இருக்க...🌹🌹

இரு இதயங்களின் சங்கமமாய் அவர்களின் வாழ்வில் மலரும் நந்தவனமாய் அவர்கள் காதலின் மந்திரம் இருக்க... 🌹🌹💕💕

மந்திர குகையின் மந்திரத்தை
தந்திரத்தால் மந்திரம் சொல்ல "மந்திரம் சொன்னேன் வந்துவிடு...."💞💞🌹🌹


அழகிய அழுத்தம் நிறைந்த காதல் கதையை நிறைவுடன் கொடுத்த ஹனிக்கு என் மனமார்ந்த அன்பு முத்தங்களும் - மகிழ்ச்சியும் - அனைப்புகளும்.😘😘🥰🥰


என்னை பாதித்த வரிகள்:

ஜோனத்தனின் ஆழமான வரிகள் - "அவளை எந்த எல்லைக்கும் போய் சரி செய்துடுவேன்… ஆனா வாழ்க்கை முழுக்க இந்த குற்றணர்ச்சி என்னை கொல்லும்."😊

ஜோ - நிவி விரைவில் புத்தகமாக வர என் உள்ளமார்ந்த வாழ்த்துக்கள் ஹனி…💐💐🌹🌹

அடுத்த ஜான்வி - ருத்ரன் காதல் ஆட்டத்தை பார்க்க ஆவலுடன்...😍😍

மேலும் பல கதைகள் படைக்க இதயம் கனிந்த வாழ்த்துக்கள்…🌹🌹💐💐⚘⚘



அன்புடன்
ஸ்ரீராஜ்









 
Top