இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

பிழையில்லா கவிதை நீயடி - கதைத்திரி

Status
Not open for further replies.

geethusri

Moderator

அத்தியாயம் - 18 :​


மிருதுளாவிடம் எதிர்ப்பு அடங்கியதை உணர்ந்ததும் தேவ் இன்னும் அவள் உதட்டில் ஆழமாக முத்தமிட தொடங்கினான்... உதட்டு முத்தம் தான் மோகத்தின் சாவி என்பதை அவன் உணர்ந்த தருணம் அது... அந்த நொடி அவளை முழுதாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை அவனுள் அலையாய் பொங்கியது...


இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே

இரு கரம் துடிக்குது தனிமையும்

நெருங்கிட இனிமையும் பிறக்குது

இதழில் கதை எழுதும் நேரமிது... என்று காரில் ஒலித்த பாடல் வரிகள் அவன் எண்ணத்திற்கு தூபம் போட்டது.


அவள் வாயோடு வாய் வைத்து முத்தமிட்டபடி தன் கைகளை அவள் மீது அலையவிட்டவனின் கைகள் இறுதியில் அவளின் இடுப்பில் வந்து தஞ்சமடைந்தன… சற்று மேலே ஏறி இருந்த டாப் அவளின் கொடியிடை இடுப்பழகை தொட்டு ரசிக்க அவனுக்கு வசதியாய் போய்விட்டது…


இதுவரை ஆடையின் மேல் தடவி ரசித்த அங்கங்களை எந்த இடையூறும் இன்றி தொட்டு பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையில் தேவ் தன் கைகளை கொஞ்சம் கொஞ்சமாக அவளின் வயிற்றுக்கு நகர்த்தினான்.


அந்த நொடி மிருதுளாவின் உணர்வுகளை சொல்ல வார்த்தைகளே கிடையாது… அவள் ஒரு வித மயக்கத்தில் இருந்தாள்… அவன் உதடுகள் செய்யும் மாயா ஜாலத்தினாலும் கைகள் செய்யும் மாயா ஜாலத்தினாலும் அவள் வேறொரு உலகில் சஞ்சரிக்க தொடங்கினாள்.


அந்த நொடி அவள் மனதில் எதுவுமே இல்லை. தேவ் தன்னிடம் காதலைச் சொன்னது… தான் அவன் காதலை ஒப்புக் கொள்ளாதது… என்று எதுவுமே அவள் நினைவில் இல்லை… அவனால் அவள் உடலில் தட்டி எழுப்பப்பட்ட உணர்ச்சிகள் அவளை யோசிக்க விடவில்லை.


சிறிது நேரம் தன் விரல் கொண்டு அவளின் வயிற்றுப் பகுதியில் விளையாடியவன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தன் கைகளை மேலே கொண்டு சென்றான். என்னதான் அவள் கை மற்றும் வாய் ஜாலத்தில் மயங்கிக் இருந்தாலும் மிருதுளாவின் பெண்மை சட்டென்று விழித்து எழுந்து அவன் கைகளை தடுக்கவே செய்தது.


இனிய பருவமுள்ள இளங்குயிலே

ஏன் இன்னும் தாமதம்

மன்மதக் காவியம் என்னுடன் எழுது

நானும் எழுதிட இளமையும் துடிக்குது

நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது

ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி

ஏக்கம் தனிந்திட ஒரு முறை தழுவடி என்று பாடல் தொடர்ந்து ஒலித்து கொண்டிருந்தது.


அந்த வரிகளை கேட்டதும் மிருதுளாவின் பிடி தளர்ந்தது.


அவள் பிடியில் பலம் இல்லாததை உணர்ந்த தேவ் தன் மறு கையால் அவளின் விரல்களோடு விரல்களை கோர்த்துக் கொண்டவன் தன் நாக்கால் அவள் உதடுகளை பிளந்து அவள் எச்சில் என்னும் அமிர்தத்தை பருகியவாறே தன் மற்றொரு கையை இதுவரை சூரிய வெளிச்சம் கூட படாத அவளின் முன்னழகை நோக்கி கொண்டு சென்றான்.


மிருதுளாவால் அவனை தடுக்க முடியவில்லை. பிடிக்காமல் இருந்தால் என்ன செய்தேனும் அவள் அவனை விலகியிருப்பாள்... ஆனால் அவனின் ஒவ்வொரு செய்கையும் அவளுக்கு பிடித்து தொலைத்தது... தான் அவன் கைப்பொம்மை ஆகிவிட்டோம் என்று அவளுக்குப் புரிந்தது…


இப்போதும் அவள் மனம் அவனிடம் தஞ்சம் அடையவில்லை… ஆனால் அவள் உடல் அவன் விளையாட்டிற்கு அடிமையாகி விட்டது… இப்படியே சென்றிருந்தால் என்ன ஆகியிருக்குமோ?


அப்போது எதிர் சாலையில் வந்த காரில் இருந்து வந்த ஹெட்லைட் வெளிச்சமும் ஹாரன் ஒலியும் அவர்கள் இருவரையும் தன் நிலைக்கு கொண்டு வந்தது.


முதலில் தன் நிலைக்குத் திரும்பிய மிருதுளா தாங்கள் இருக்கும் நிலையை உணர்ந்து வேகமாக அவன் கைகளை தன் மீதிருந்து தட்டி விட்டவள் அவனிடமிருந்து தன் உதட்டை பிரித்து எடுத்தாள்.


இந்த முறை தேவ் அவளை தடுக்கவில்லை…


ஒரு சிறு புன்னகையுடன் அவளைப் பார்த்தவன் எதையோ சொல்வதற்காக வாயை திறந்தான்.


அவனை பேச விடாமல் தடுத்த மிருதுளா, “ப்ளீஸ் சார் தயவு செஞ்சு என்ன என்னோட அபார்ட்மெண்ட்ல விட்டுடுங்க…” என்று அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்காமல் தழுதழுத்த குரலில் சொன்னவள் பின்னர் வெளியே வேடிக்கை பார்ப்பவளை போல முகத்தை திருப்பிக் கொண்டாள்.


தேவ்வும் எதுவும் பேசாமல் காரை கிளப்பினான்… ஆனால் அவன் மனம் மிகவும் சந்தோஷமாக இருந்தது…


‘என்னதான் என் மேல காதல் இல்லைன்னு சொன்னாலும் இவளுக்கு என் மேல ஏதோ ஒரு வித ஈர்ப்பு இருக்கு… இல்லன்னா என்ன இந்த அளவுக்கு அனுமதிச்சிருக்க மாட்டா…’ என்று நினைத்தவன் விசில் அடித்தபடி காரை ஓட்டினான்.


அவனுக்கு எதிர்மாறான மனநிலையில் மிருதுளா இருந்தாள்.


‘நான் எப்படி இந்த அளவுக்கு அவனுக்கு ஒத்துழைப்பு கொடுத்தேன்? அவன் மேல காதல் இல்ல… காதல் இல்லன்னு சொல்லிட்டு இப்போ அவன் கைகளில் உருகி குழைஞ்சா என்ன அர்த்தம்? அவன் என்ன பத்தி என்ன நினைப்பான்… ஒன்னு நான் பொய் சொல்றதா நினைப்பான்… இல்லன்னா எந்த ஆம்பள இந்த மாதிரி என்ன கட்டிப் புடிச்சு முத்தம் கொடுத்தாலும் நான் அவன் கைலயும் இப்படித்தான் குழைவேன்னு நினைப்பான்…’ என்று கண்டபடி யோசித்த மிருதுளாவிற்கு அழுகை வந்தது.


சத்தம் இல்லாமல் கண்ணீர் விட்டவள் தேவ் அதை பார்த்து விடக்கூடாது என்று நினைத்ததால் தொடர்ந்து ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்ப்பது போலவே நடித்தபடி வந்தாள்.


அவளின் செய்கையை தேவ் தவறாக நினைக்கவில்லை… சங்கடத்தினாலோ வெட்கத்தினாலோ தான் அவள் இப்படி செய்கிறாள் என்று நினைத்தான்.


அடுத்த பத்து நிமிடத்தில் அவள் அப்பார்ட்மெண்டின் முன்பு காரை நிறுத்தியவன் “மிது உன்னோட அப்பார்ட்மெண்ட் வந்திடுச்சி…” என்றான்.


மிருதுளா அப்போதும் அவனுக்கு முகம் காட்டாமல் இறங்கிவிட தான் நினைத்தாள்.


ஆனால் அவளின் கைகளை பிடித்து அவளை காரை விட்டு இறங்க விடாமல் செய்தவன் தன் கையால் அவள் முகத்தை திருப்பிய போதுதான் அவள் கன்னத்தில் இருந்த கண்ணீர் கரையை கவனித்தான்.


“என்ன மிது… எதுக்காக இப்போ நீ சின்ன குழந்தை மாதிரி அழுதுகிட்டு இருக்கா… இப்போ நடந்தது ஒரு இயல்பான விஷயம்… அதுக்காகவா இப்படி ஃபீல் பண்ற…” என்று மென்மையான குரலில் கேட்ட தேவ் அவள் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டான்.


மிருதுளா அவனுக்கு பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.


“இங்க பாரு மிது… நிச்சயம் நான் உன்கிட்ட நடந்துகிட்ட முறைக்காக சாரி எல்லாம் கேட்க மாட்டேன்… நான் உன்கிட்ட ஏற்கனவே சொல்லி இருக்கன்… என்ன பொறுத்த வரைக்கும் நீ என்னோட காதலி கூட கிடையாது… பொண்டாட்டி… அதனாலதான் கொஞ்சம் எல்லை மீறிட்டன்… என்ன பொறுத்த வரைக்கும் என் பொண்டாட்டி கிட்ட நான் அப்படி நடந்துகிட்டதுல்ல எந்த தப்பும் இல்லன்னு தான் நினைக்கிறன்… ஆனா ஒருவேளை அதனால நீ ஹர்ட் ஆகி இருந்தா சாரி…” என்று உள்ளே போன குரலில் அவன் சொன்னதும் மிருதுளாவிற்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.


‘இப்போ நடந்ததுக்கு முழுக்க முழுக்க அவன் மட்டும் பொறுப்பில்லையே…’ என்று நினைத்தவள் “இல்ல சார் நான் அதை நினைச்சு அழல… உண்மையை சொல்லனும்னா ரெண்டு பேருமே ஒரு நொடி உணர்ச்சி வசப்பட்டுட்டோம்… இதுல உங்களை மட்டும் குறை சொல்ல எனக்கு மனசு வரல…” என்று அவள் வேகமாக சொன்னதும்


“அப்போ எதுக்காக இப்படி அழுதுகிட்டு இருக்க… சும்மா என்ன சமாதானம் பண்ணனும்னு பொய் சொல்லாத மிது…” என்று சொன்னான்.


“இல்ல சார்… தான் அத நெனச்சு சத்தியமா அழல… உங்கள காதலிக்கல காதலிக்கலன்னு சொல்லிட்டு நீங்க என்னைத் தொட்டதும் உங்கள் கைகள்ல நான் அப்படி உருகி குழைஞ்சத நெனச்சா எனக்கு கொஞ்சம் அசிங்கமா இருக்கு சார்… இது மாதிரி தான் வேற யாராவது என்ன தொட்டாலும் நான் அவங்க கைலயும் உருகி குழைவேனோன்னு ஒரு கேள்வி எனக்குள்ள வந்துச்சு… இப்படிப்பட்ட கேவலமான பொண்ணா நான்னு நினைச்சதும் எனக்கு அழுகை வந்துடுச்சு… அவ்வளவுதான் சார்…”


அவளைக் கனிவுடன் பார்த்த தேவ் “இதுக்காகவா நீ இவ்வளவு நேரம் அழுத… நீ நெனைக்கிறது தப்புடி… வேற யாரு உன்ன தொட்டு இருந்தாலும் நீ அவங்க கூட இப்படி குழைஞ்சி இருப்பியா என்ன… உனக்கு என் மேல ஏதோ ஒருவித ஈர்ப்பு இருக்கு… என்னதான் நான் சொன்ன காதல் மேல நம்பிக்கை இல்லை நம்பிக்கை இல்லைன்னு உன் வாய் சொன்னாலும் உன் உள்மனசு என்னோட காதலை நம்பினதால மட்டும்தான் நீ என்னை நம்பி கார்ல ஏறுன… நான் கொடுத்த முத்தத்தையும் வாங்கி கிட்ட… இனி இந்த மாதிரி கிறுக்குத் தனமா எதையாவது யோசிக்காம என்னோட காதல ஒத்துக்கற வழிய பாரு…” என்றவன் அவள் கைகளை தூக்கி புறங்கையில் முத்தமித்தான்.
 

geethusri

Moderator

அத்தியாயம் - 19 :


தன் கைகளை தேவ்வின் பிடியிலிருந்து விலக்கிய மிருதுளா அவனிடம் எதுவும் சொல்லாமல் காரை விட்டு இறங்கி சென்று விட்டாள்.


சிறு புன்னகையுடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்த தேவ் ‘மிது உன் மனசுல நான் எப்பவோ நுழைஞ்சிட்டன்… அது தெரியாம நீ இன்னும் என் மேல காதல் வரலன்னு சொல்லிக்கிட்டு திரியற… கூடிய சீக்கிரமே உனக்கு என் மேல இருக்க காதல ஒத்துக்க வைக்கிறனா இல்லையான்னு பாரு…’ என்று முணுமுணுத்தவன் விசில் அடித்தபடி காரைக் கிளப்பினான்.


மிருதுளாவின் மனதில் தான் நுழைந்ததை அறிந்த தேவ்விற்கு அவன் மனதில் மிருதுளா சத்தமின்றி நுழைந்துவிட்டது தெரியாமல் போனதுதான் விதி…


தன் அப்பார்ட்மெண்ட்க்கு வந்த மிருதுளாவிற்கு எதைப் பற்றியும் யோசிக்கவே பிடிக்கவில்லை… தான் யோசிக்கத் தொடங்கினால் தன் மனம் தேவ்வின் புறம் சாய்ந்து விட வாய்ப்பு அதிகம் என்று அவளுக்குத் தெரியும். அதனாலேயே அவள் யோசிக்க பயந்தாள்.


நேராக தன் அறைக்குச் சென்று உடையை மாற்றியவள் எதுவும் சாப்பிட பிடிக்காததால் பாலை மட்டும் காய்ச்சிக் குடித்துவிட்டு வந்து படுத்தாள்.


அப்போது அவளின் போன் ஒலித்தது.


‘இந்த நேரத்துல யாருடா நமக்கு போன் பண்றது’ என்று யோசித்தபடி அவள் போனின் திரையை பார்த்த போது அழைப்பது அவளின் ஆடிட்டர் மகேஷ் என்பதை தெரிந்து கொண்டவள் அடுத்த நொடி போனை ஆன் செய்து “ஹலோ சார்” என்றாள்.


“சாரிமா மிருதுளா… இந்த நேரத்துல உன்ன டிஸ்டர்ப் பண்ணிட்டன்…” என்று சொன்னவர் மேலும் தொடர்ந்து “திரும்பவும் ஒரு பிரச்சனை மிருதுளா… அமிர்தா நாளைக்கு காலையில உன்னோட வந்து ஜாயின் பண்றதா இருந்தது இல்லையா? இப்போ அவள வர முடியாத சூழ்நிலை…” என்று சங்கடத்துடன் சொன்னார்.


“என்ன விஷயம் சார்? ஏன் அமிர்தாவால நாளைக்கு வர முடியாது?”


“அவளோட பாட்டி திடீர்னு இன்னைக்கு ஈவ்னிங் இறந்துட்டாங்களாம்… அவங்க இறுதி காரியம் முடிச்சு அவ வரதுக்கு இன்னும் மூணு நாள் ஆகும்… அது மட்டும் இல்லாம அவங்க சைட்ல எல்லாம் ஏழாம் நாளே காரியம் பண்ணிடுவாங்களாம்… அதுக்கும் அவ போகணுமாம்… அதுதான் வந்து வந்து போறது கஷ்டம் சார்ன்னு ஒரு வாரம் லீவ் கொடுங்கன்னு கேட்கறா… இந்த மாதிரி விஷயன்றதனால முடியாதுன்னும் சொல்ல முடியல… நீ என்னம்மா சொல்ற…”


“ஒன்னும் பிரச்சனை இல்ல சார்… என்னால தனியா மேனேஜ் பண்ணிக்க முடியும்… டீடைல்ஸ் எல்லாம் பக்காவா இருக்கு… அது மட்டும் இல்லாம இது இயர் எண்டு ஆடிட் இல்லயே... குவார்ட்டலி ஆடிட் தான... அமிர்தா வரலன்னா ஒன்னும் பிரச்சனை இல்ல… கூட ரெண்டு மணி நேரம் இருந்தா நானே இந்த வாரத்துக்குள்ள எல்லா வேலையையும் முடிச்சிடுவன்… ஆனா தேவ் சார் என்ன சொல்லுவார்ன்னு தெரியல… ஏற்கனவே அமிர்தாவுக்காக ஒருமுறை எக்ஸ்கியூஸ் கேட்டுட்டோம்… திரும்பவும் அவர்கிட்ட எப்படி சார் எக்ஸ்கியூஸ் கேட்கறது?” என்று மிருதுளா தயக்கத்துடன் சொன்னாள்.


“அதைப் பத்தி நீ கவலைப் படாத… தேவ் கிட்ட நான் பேசிக்கிறன்… எடுத்து சொன்னா புரிஞ்சிப்பார்… அதுமட்டுமில்லாம அவருக்கு வேலை முடியறது மட்டும் தான் முக்கியம்… உன்னால இந்த வாரத்துக்குள்ள எல்லா வேலையையும் முடிக்க முடியுமா? அப்படி இல்லேன்னா சொல்லு… நான் பெங்களூர்ல இல்ல டெல்லியில இருந்து யாரையாவது வரவழைக்கிறான்…” என்று அவர் சொன்னார்.


“இல்ல சார்… இங்க அப்படி ஒன்றும் பெருசா வேலை இல்ல… நான் சொன்ன மாதிரி என்னால தனியா மேனேஜ் பண்ணிக்க முடியும்… என்ன ஒரு ரெண்டு மூனு மணி நேரம் எக்ஸ்ட்ரா ஒர்க் பண்ற மாதிரி இருக்கும்… பட் ஐ கேன் மேனேஜ் சார்… நீங்க அமிர்தாவுக்கு லீவ் கொடுத்துடுங்க… அதே சமயம் தேவ் சாருக்கும் விசயத்த இன்பார்ம் பண்ணிடுங்க…” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.


அடுத்த ஐந்தாம் நிமிடம் அவளுக்கு போன் செய்த தேவ் எடுத்த எடுப்பில் “மகேஷ் போன் பண்ணார்… உன்னோட கொலீக் அமிர்தாவுக்கு வர முடியாத சூழ்நிலையாம்… ஆனா நீயே இந்த வாரத்துக்குள்ளயே எல்லா கணக்கையும் முடிச்சிடுவேன்னு சொன்னார் உண்மையா?” என்று கேட்டான்.


“ஆமா சார்… அமிர்தாவோட பாட்டி இறந்துட்டாங்களாம்… அதனாலதான் அவளால வர முடியல சார்… தப்பா எடுத்துக்காதீங்க…”


“இதுல நான் தப்பா எடுத்துக்க என்ன இருக்கு… எனக்கு என் வேலை முடிஞ்சா போதும்… நீங்க எத்தனை பேர் வந்து வேலை பாக்கறீங்கன்றது எனக்கு முக்கியம் கிடையாது… ஆனா நீ டெய்லி கூட கொஞ்ச நேரம் இருந்து எக்ஸ்ட்ரா ஒர்க் பண்ண வேண்டி இருக்கும்னு சொன்னாரே…”


“ஆமா சார்… டெய்லி ஆபீஸ் முடிஞ்ச பிறகு ஒரு மூணு மணி நேரம் இருந்து வேலை பாத்து இந்த வாரத்துக்குள்ள எல்லா கணக்கையும் முடிச்சிடறன்…” என்று அவள் சொன்னதும்


“என்னால அதுக்கு அலோ பண்ண முடியாது மிது… ஆறு மணிக்கு வேலை முடிஞ்சதுக்கப்புறம் ஒன்பது மணி வரைக்கும் வொர்க் பண்ணிட்டு நீ எப்போ வீட்டுக்கு போவ… நைட் ஒன்பது மணிக்கு மேல நீ தனியா போறது உனக்கு சேப் கிடையாது… அதனால நீ என்ன பண்ற மார்னிங் டூ ஹவர்ஸ் முன்னாடியே வந்து ஒர்க்க ஸ்டார்ட் பண்ணிடு… அப்புறம் ஈவினிங் எக்ஸ்ட்ரா ஒன் ஹவர் பண்ணு…” என்று அழுத்தமான குரலில் சொன்னான்.


“மார்னிங் டூ ஹவர்ஸ்ன்னா நான் ஏழு மணிக்கெல்லாம் ஆபீஸ் வர மாதிரி இருக்குமே சார்… அது கொஞ்சம் கஷ்டம்…” என்று அவள் தயக்கத்துடன் சொன்னாள்.


“எனக்கு அத பத்தி எல்லாம் கவலையில்ல… உன்னோட சேப்டி மட்டும் தான் எனக்கு முக்கியம்… ஒன் வீக் தானே… அட்ஜஸ்ட் பண்ணி வா… நான் எப்பவும் ஆபிஸிலேயே இருக்க மாட்டன்… நான் அங்க இருக்கறதா இருந்தா நீ எவ்வளவு நேரம் வேலை பார்த்தாலும் உன்னை கொண்டு போய் வீட்ல விட்டுட்டு அப்புறம் நான் போவன்… அதுக்கு வாய்ப்பே இல்லாத போது என்னால ரிஸ்க் எடுக்க முடியாது… டூ வாட் ஐ சே மிது” என்றவன் அவள் பதில் சொல்ல அவகாசம் கொடுக்காமல் அழைப்பை துண்டித்து விட்டான்.


தன் கையில் இருந்த போனையே வெறித்துப் பார்த்த மிருதுளா ‘அடேய் நான் ஏழு மணிக்கு ஆபீஸ்ல இருக்கணும்னா அஞ்சு மணிக்கு எழுந்து குளிச்சி கிளம்பணும்டா… அது எனக்கு எவ்வளவு கஷ்டம்னு உனக்கு தெரியுமா?’ என்று புலம்பினாலும் தேவ் சொன்னதை செய்தாக வேண்டிய நிலையில் அவள் இருந்ததால் அடுத்த நாள் காலை ஐந்து மணிக்கு எழுந்து தேவ்வை திட்டிக்கொண்டே தயாரானவள் தன் வீட்டை விட்டு கிளம்ப விருந்த தருணம் காலிங் பெல் அடித்தது.


‘யாருடா அது... இவ்வளவு காலையில வந்திருக்கறது…’ என்று யோசித்தபடி கதவைத் திறந்தவள் அங்கே கையில் பொக்கேயுடன் ஒருவன் நின்றிருப்பதை பார்த்தாள்.


ஆனால் நேற்று போல் இன்று அவளுக்கு திகைப்பெல்லாம் ஏற்படவில்லை. இந்த ஒரு நாளிலேயே தேவ்வின் அதிரடிக்கு அவள் பழகி இருந்தாள்.


பொக்கேயை வாங்கி கொண்டு கதவை சாத்தியவள் தன் கையில் இருந்த ஆர்கிட் பூக்களை வருடினாள்.


‘நேத்து ரோஜா… இன்னைக்கு ஆர்கிட்டா கலக்கறடா…’ என்று முணுமுணுத்தவள் வாடியிருந்த ரோஜாவை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு அந்த ஆர்கிட் மலர்களை பிளவர் வாஷில் வைத்து விட்டு வீட்டைப் பூட்டிக் கொண்டு கிளம்பினாள்.


அவள் ஆபீஸ் வந்த போது செக்யூரிட்டியை தவிர யாரும் இல்லை…


‘அடேய் படுபாவி இப்படி ஈ … காக்கா கூட வராத நேரத்திற்கு என்ன ஆபீஸ் வர வச்சிட்டியே… உன்ன எல்லாம் என்ன பண்றது… எல்லாம் என் நேரம்… நீ சொல்றத கேட்க வேண்டிய இடத்துல நான் இருக்கன்…’ என்று புலம்பியபடி தன்னுடைய இருக்கைக்கு சென்றவள் மேஜை டிராயரில் இருந்த பைல்களை எல்லாம் எடுத்து தன் மேஜையின் மீது அடுக்க தொடங்கினாள்.


அப்போது “ஹாய் மிது குட்டி… குட் மார்னிங்…” என்ற குரல் திடீரென்று கேட்டதும் தன் கையில் வைத்திருந்த பைல்களை பயத்தில் கீழே போட்டவள் தன் நெஞ்சை பிடித்தபடி நிமிர்ந்து பார்த்தாள்.


“நீங்க தானா சார்… நான் யாரோன்னு நெனச்சி பயந்துட்டன்…” என்று சொன்னவள் கீழே போட்ட பைல்களை எடுத்து மேஜை மீது வைத்தாள்.



“என்னைத் தவிர வேற யார் உன்னை இப்படி செல்லமா கூப்பிடுவாங்க…” அவளை முறைத்தபடி கேட்டவன் “என்ன மேடம் என்ன திட்டிக்கிட்டே வந்தீங்க போல…” என்று கேட்டுவிட்டு அவளைப் பார்த்து கண்ணடித்தான்.
 

geethusri

Moderator

அத்தியாயம் - 20 :


‘நாம திட்டினது இவனுக்கு எப்படித் தெரியும்?’ என்று நினைத்த மிருதுளா திருதிருவென்று முழித்தபடி அவனைப் பார்த்தாள்.


“என்னடி திருட்டு முழி முழிக்கிற… நீ திட்டினது எப்படி எனக்கு தெரியும்னு யோசிக்கிறியா… நான் தான் உனக்கு முன்னாடியே இங்க வந்து உட்கார்ந்து கிட்டு சிசிடிவி வழியா உன்ன பாத்துக்கிட்டு இருந்தேனே…” என்று புன்னகையுடன் சொன்னான்.


‘அடப்பாவி இவன் இதையே தொழிலா வச்சிக்கிட்டு இருக்கான் போல” என்று நினைத்தவள் “எனக்குதான் வேலை இருக்குன்னு நான் சீக்கிரம் வந்தன்… நீங்க ஏன் இவ்வளவு சீக்கிரம் வந்தீங்க?” என்று கேட்டாள்.


“என்ன மிது குட்டி இப்படி கேட்டுட்ட… உன்னப் பாக்கறத விட மாமனுக்கு வேற வேலை என்ன இருக்கு சொல்லு… உன்கிட்ட இப்படி தனியாப் பேசணும்னு தானே நானே உன்ன காலையில வரவழைச்சன்… ஆபிஸ் முடிஞ்ச பிறகு நீ ஓவர்டைம் வேலை பார்த்தா எப்படியும் ஒன்னு ரெண்டு பேராவது இருப்பானுங்க… என்னால சகஜமா இந்த மாதிரி வந்து உன்கிட்ட பேச முடியாது… இதுவே காலையிலனா எவனும் எட்டு மணிக்கு முன்னாடி வரமாட்டான்… அதான் உன்னை காலைல ஏழு மணிக்கு வர சொன்னன்… எப்படி மாமாவோட ஐடியா…” என்று சொல்லிவிட்டு மீண்டும் அவளைப் பார்த்து கண்ணடித்தான்.


‘அடப்பாவி நீ என்கிட்ட தனியா கடலை போடறதுக்காக தான் என்ன காலையிலயே வர சொன்னியா… நேத்து நைட்டு சேஃப்டி அது இதுன்னு கத உட்டியேடா… நான் கூட ஒரு நிமிஷம் நீ சொன்னதெல்லாம் உண்மைன்னு நம்பிட்டன்…’ என்று உள்ளுக்குள் புலம்பியவள் “அப்போ நேத்து நைட்டு என்னோட சேஃப்டிக்காக தான் காலையில வர சொன்னேன்னு சொன்னது எல்லாம் பொய்யா சார்…” என்று அவனை முறைத்தபடி கேட்டாள்.


“சத்தியமா இல்ல மிது குட்டி… அதுவும் ஒரு காரணம் தான்… ஆனா முக்கியக் காரணம் உன்கிட்ட இந்த மாதிரி தனியா பேசறதுக்காக தான் காலையில சீக்கிரம் வர சொன்னேன்… என் மிது கிட்ட ஒரு மணி நேரம் பேசிட்டு போனா என்னோட பேட்டரி ஃபுல்லாயிடும்… மாமாவும் அன்னைக்கு முழுக்க சந்தோஷமா வேலை பார்ப்பேன் இல்லையா?” என்று அவன் சொன்னதும்


“ஏன் எல்லாரும் இருக்கும் போது நீங்க என்கிட்ட பேசக் கூடாதுன்னு உங்க கம்பெனில ஏதாவது ரூல் இருக்கா?” என்று மிருதுளா எரிச்சலுடன் கேட்டாள்.


அவள் கஷ்டம் அவளுக்கு… ஏற்கனவே காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து கிளம்ப வேண்டி இருந்ததில் கடுப்புடன் இருந்தவள் இப்போது இவன் சொன்ன காரணத்தை கேட்டதும் மேலும் கடுப்பானாள்.


“அப்படியெல்லாம் எந்த ரூலும் இல்லை மிது… ஆனா இதுவரைக்கும் நான் தேவையில்லாம எங்கயும் ரவுண்ட்ஸ் வரமாட்டன்… ஏதாவது முக்கியமான விஷயம் பேசணும்னா கூட அந்தந்த டிபார்ட்மென்ட் ஹெட்ட கூப்பிட்டு பேசிடுவன்… அப்படி இருக்கும் போது திடீர்னு நான் அடிக்கடி உன் டிபார்ட்மென்ட் பக்கம் தலை காட்டினாலோ இல்லனா உன் கிட்ட வந்து ஏதாவது பேசினாலோ தேவையில்லாம நம்ம பத்தின வதந்திகள் இந்த ஆபீஸ்ல பரவிடும்… இந்த மாதிரி வதந்திகளை ஒரு ஆணா என்னால ரொம்ப ஈஸியா இத கடந்து போக முடியும்… ஆனா உன்னால எந்த அளவுக்கு கடந்து போக முடியும்னு தெரியாம நான் ரிஸ்க் எடுக்க விரும்பல… ஆனா அதே சமயம் உன் கூட பேசாமலும் என்னால இருக்க முடியல… ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற கிழமைகளில் ஆபீஸ தவிர மத்த இடத்துல உன்ன மீட் பண்ண முடியாது… இதையெல்லாம் யோசிச்சுதான் நான் இப்படி பண்ணன்…” என்று சொன்னவன் மேஜையின் மீதிருந்த அவளின் கைகளை ஒரு முறை பிடித்து அழுத்தினான்.


‘என்னதான் என் பின்னாடியே சுத்தினாலும் மத்தவங்க என்ன பத்தி தப்பா நினைக்க கூடாதுன்னு எனக்காகவும் யோசிச்சி தான் இப்படி பண்ணி இருக்கான்... ஒரு நிமிஷம் நாம இவனை தப்பா நினைச்சுட்டோமே’ என்று வருந்திய மிருதுளா “சாரி சார்… உங்கள தப்பா நெனச்சிட்டன்…” என்று அவனிடம் மன்னிப்பு கேட்டாள்.


“சாரி கேக்கற அளவுக்கு நீ எதுவும் தப்பா கேக்கல மிது… அதேசமயம் நமக்குள்ள சாரிக்கோ தேங்க்ஸ்கோ அவசியமில்லை… புரிதல் இருந்தால் போதும்…” என்று புன்னகையுடன் சொன்னவன் “ஆமா நேத்து நைட் நல்லா தூங்கினியா?” என்று கேட்டான்.


தீடிரென்று அவன் அப்படி கேட்டதும் ஒரு நொடி திகைத்தவள் “ஏன் சார் இப்படி கேக்கறீங்க… நல்லா தூங்கனன்… அதுவும் காலையில சீக்கிரம் எழுந்திருக்கணும்ன்றதால சீக்கிரமே தூங்கிட்டன்…” என்று குழப்பத்துடன் பதிலளித்தாள்.


“அடிப்பாவி நேத்து நைட் கார்ல நமக்குள்ள இப்படி இப்படி… அப்படி அப்படி எல்லாம் கசமுசா நடந்தத நினைத்து பார்த்து இந்த மாமனோட நெனப்புல கட்டில்ல உருண்டு புரண்டு தூக்கம் வராம புலம்பி இருப்பேன்னு நெனச்சா இப்படி ஒத்த வார்த்தையில என்னோட மனச வச்சுட்டியே ஒடச்சிட்டியே... உன்ன மாதிரி ஒருத்திய நான் எப்போ என்ன லவ் பண்ண வச்சி இருபத்தி நாலு மணி நேரமும் என் நெனப்புலேயே சுத்த விடறது... நான் நெனச்சது நடக்கறதுக்குள்ள எனக்கு நாக்கு தள்ளிடும் போலயே..." என்று புலம்பியவனை பார்த்து சிரித்த மிருதுளா, "புரிஞ்சா சரி... நேத்து நடந்தது ஜஸ்ட் அன் ஆக்சிடென்ட்... நான் அத பத்தி யோசிக்க கூட விரும்பல... நாம சொல்றதை எல்லாம் ரசிக்கிறாளே... அதனால ஈஸியா மடிஞ்சிடுவான்னு தப்பு கணக்கு போடாதீங்க... அப்புறம் நேத்து நடந்ததை வச்சும் கற்பனை கோட்டை கட்டிடாதீங்க... என் உடம்பு உங்க பேச்சை கேட்ட மாதிரி மனசும் கேக்காது... ஏன்னா அது பாறை மாதிரி உறுதியானது... உங்களால அவ்வளவு சீக்கிரம் அசைக்க முடியாது..." என்று சொன்னாள்.


"அத அசைக்கறது மட்டும் இல்ல... அந்த பாறையில விதையா நொழஞ்சி செடியா மொளைக்கறானா இல்லையான்னு மட்டும் பாரு..." என்று தேவ் ஆழ்ந்த குரலில் சொல்லி கொண்டிருந்த போது அங்கு வந்த அவன் செகரட்டரி மகாதேவன்,"சாரி டு டிஸ்டர்ப் யு சார்... ஒரு சின்ன பிரச்சனை... ஆனா அத நீங்களே தான் பாத்தாகணும்... அதான் உங்கள டிஸ்டர்ப் பண்ற மாதிரி ஆயிடிச்சு..." என்றார்.


" என்ன மகாதேவன்... உங்களால அத பாக்க முடியாதா... இவ்வளவு காலையில வந்து டிஸ்டர்ப் பண்றிங்க..."


"இல்ல சார்... இது நீங்களே பாக்க வேண்டியது... அதனாலதான் மேடம் கூட நீங்க பேசிட்டிருக்கும் போது டிஸ்டர்ப் பண்ற மாதிரி ஆயிடிச்சு..." என்று தயக்கத்துடன் சொன்னார்.


"சரி சரி... இங்கிருந்து கிளம்புங்க... நான் இன்னும் ஐஞ்சு நிமிசத்துல வரன்..." என்று அவன் சொன்ன அடுத்த நொடி அவர் அங்கிருந்து மாயமானார்.


மகாதேவன் சென்ற வேகத்தை பார்த்த மிருதுளா,"எதுக்காக சார் அவர் கிட்ட இவ்வளவு ஹார்ஷா பேசறீங்க... அவரோட வேலைய தான அவர் பாத்தாரு... நீங்க அவர் கிட்ட பேசின முறை ரொம்ப தப்பு சார்..." என்று சிறிதும் தயக்கமின்றி நேரடியாக சொன்னாள்.


"என்கிட்ட இதுவரைக்கும் யாரும் இப்படி முகத்துக்கு நேரா நீ பண்ணது தப்புன்னு சொன்னதில்லை மிது... அதுக்கு நான் யாரையும் அனுமதிச்சதில்லை... எனக்கு அது பிடிக்கவும் பிடிக்காது... நீதான் முதல் முறையா இப்படி சொல்லி இருக்க..." என்று ஆழ்ந்த குரலில் சொன்னவனின் கண்களை நேருக்கு நேர் பார்த்தவள்," என் மனசுல தப்புன்னு பட்டதை நான் சொன்னன்... அவ்வளவுதான் சார்... ஆனா இதுக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பெல்லாம் கேக்க மாட்டன்..." என்றாள்.


"நானும் உன்ன மன்னிப்பெல்லாம் கேக்க சொல்லலையே... நீ இப்படி பேசறது கூட எனக்கு பிடிச்சிருக்கு மிது குட்டி... ஐ லவ் யு டி..." என்று உற்சாகமாக சொன்னவனை பார்த்து தன் கைகளால் தலையில் அடித்து கொண்ட மிருதுளா 'இவனுக்கு வேற வேலையே இல்ல... ஒரு சின்ன கேப் கெடச்சா போதும்... தன் காதலை சொல்ல ஆரம்பிச்சிடுவான்...' என்று சலித்தபடி நினைத்தவள், "சார்... மகாதேவன் சார் ஏதோ பிரச்சனைனு சொன்னாரே அத மொதல்ல போய் பாருங்க... எனக்கும் செய்யறதுக்கு நிறைய வேலை இருக்கு" என்று கண்டிப்புடன் சொன்னாள்.


"மேடம் பேச்சுக்கு அப்பீல் ஏது? இதோ கிளம்பிட்டன்..." என்று சிரித்தபடி சொன்னவன் தன்னுடைய அறைக்கு சென்றான்.


இவனுக்காக அங்கு மகாதேவன் காத்திருப்பதை பார்த்தவன்,"சொல்லுங்க மகாதேவன்... என்ன பிரச்சனை?" என்று கேட்டான்.


"பிரச்சனையா? அப்படி எதுவும் இல்லயே சார்... நீங்கதான மிருதுளா கிட்ட நீங்க பேச தொடங்கின பத்தாவது நிமிஷம் வந்து அப்படி சொல்ல சொன்னிங்க..." என்று குழப்பத்துடன் சொன்னார்.
 

geethusri

Moderator

அத்தியாயம் - 21 :


“ஓ… சாரி மகாதேவன்… ஏதோ நியாபகத்துல நான் அத சுத்தமா மறந்துட்டன்… சரி நீங்க கிளம்புங்க…” என்று தேவ் சொன்னான்.


‘என்னது மறந்துட்டாரா… நாமளே இவர் சொன்னதை விட பத்து நிமிஷம் லேட்டா போயி தான் ஆஜரானோம்… அதுக்கே திட்டு விழும்னு பயந்து கிட்டு இருந்தா மறந்துட்டேன்னு சொல்றாரு… எப்படியோ நம்ம தல தப்பிச்சத நினைத்து சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்…’ என்று நினைத்த மகாதேவன் தேவ்வின் அறையை விட்டு கிளம்பினார்…


‘எப்படி நடந்தது இது… நான் இது வரைக்கும் இந்த மாதிரி என்ன மறந்து யார்கிட்டயும் பேசிக்கிட்டு இருந்ததில்லையே… இந்த மிருதுளா கிட்ட பத்து நிமிஷத்துக்கு மேல பேசறதே வேஸ்ட் ஆப் டைம்னு நெனச்சி தானே நான் மகாதேவனை வர சொன்னன்… இப்போ என்னடான்னா அவர வர சொன்னதையே மறந்துட்டு அவ கிட்ட பேசிகிட்டு இருந்திருக்கன்… அப்படி என்ன அவ கிட்ட அவ்வளவு சுவாரசியமா பேசனன்?’ என்று நினைத்தவனுக்கு மிருதுளாவுடன் தான் என்ன பேசினோம் என்பது சுத்தமாக நினைவில் இல்லை.


தற்செயலாக தன் அறையில் இருந்த கடிகாரத்தை பார்த்தவன் ‘என்னது அரைமணி நேரமா அவ கிட்ட பேசிகிட்டு இருந்திருக்கேன்னா… ஆனா என்ன பேசினன்னு எவ்வளவு யோசிச்சாலும் ஞாபகத்துக்கு வர மாட்டேங்குதே…” என்று நினைத்தவன் சிசிடிவியின் மீது பார்வையைப் பதித்தான்.


காலையில் சீக்கிரமே கிளம்பி வர வேண்டி இருந்ததால் மிருதுளாவிற்கு வீட்டில் காபி போட்டு குடிக்க நேரம் கிடைக்கவில்லை… சரி கம்பெனிக்கு சென்று குடித்துக் கொள்ளலாம் என்று நினைத்தவள் தேவ் சொன்ன நேரத்திற்கு சரியாக வந்து விட்டாள்…


ஆனால் அவள் வந்த அடுத்த நொடி தேவ் வந்து அவளிடம் பேச தொடங்கியதால் அவளால் காபி குடிக்க முடியாமல் போய்விட்டது… தினமும் எழுந்ததும் காபி குடித்து பழகியவளுக்கு இன்று குடிக்காததால் தலை வலிக்க தொடங்கியது… அதனால் தேவ் சென்றதும் அந்த தளத்தில் இருந்த காபி மெஷினை நோக்கிச் சென்றவள் ஒரு கப்பில் காபியை பிடித்துக்கொண்டு வந்து தன் இருக்கையில் அமர்ந்தாள்.


ஒரு வாய் தான் அவள் காபி குடித்திருப்பாள்… அடுத்த நொடி அவளின் போன் ஒலிக்கத் தொடங்கியது…


‘காலைல முழிச்ச முகமே சரியில்ல போல… ஒரு வாய் காபி நிம்மதியா குடிக்க முடியுதா…’ என்று சலித்தபடி போனை எடுத்து அதன் திரையை பார்த்தவளின் கண்களில் தேவ் என்ற பெயர் பட்டது.


‘இப்போதானே போனான்… அதுக்குள்ள எதுக்கு போன் பண்றான்… மகாதேவன் வேற ஏதோ பிரச்சனைன்னு சொன்னாரே… அது பத்தி பேசறதுக்காக இருக்குமோ?’ என்று நினைத்தவள் வேகமாக போனை ஆன் செய்து காதில் வைத்தாள்.


அவள் ‘ஹலோ’ என்ற வார்த்தையை கூட சொல்லவில்லை… அதற்குள் மறுமுனையில் இருந்த தேவ் “நான் உன்கிட்ட அன்னைக்கு நைட்டே சொன்னன் தான… காபி குடிக்கிறது உடம்புக்கு நல்லது இல்ல… பால் குடிச்சு பழகுன்னு… நான் சொன்னதை கேட்க கூடாதுன்ற முடிவுல இருக்கியா? நல்லதை யார் சொன்னாலும் கேட்டுக்கணும் மிது…” என்று படபடவென்று பொரிந்தான்.


‘ஐயோ கடவுளே இவன் என்ன சிசிடிவி வழியா என்னோட ஒவ்வொரு அசைவையும் கவனிக்கிறத மட்டுமே வேலையா வச்சிருக்கானோ…’ என்று உள்ளுக்குள் சலித்துக் கொண்டாலும் மனதின் ஒரு ஓரத்தில் அவன் அக்கறை சக்கரையாய் தித்தித்தது.


“அது வந்து சார் டெய்லி காபி குடித்து பழகிட்டன்… அத குடிக்கலனா தலை வலிக்குது… அதனாலதான் இப்போ காபி குடிக்கிறன்… நீங்க என் மேல உள்ள அக்கறையில தான் சொல்றீங்கன்னு எனக்கு புரியுது… ஆனா நீங்களும் என்னை கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க…” என்று தன்மையாகவே பதில் சொன்னாள்.


“சரி நீ இவ்வளவு சொன்னதால விடறன்… ஆனா இனிமே காலைல ஒருவேளை… சாயந்திரம் ஒரு வேளை… ரெண்டு வேலை மட்டும்தான் நீ காபி குடிக்கணும்… மிச்ச நேரமெல்லாம் பால் இல்லனா பிரெஷ் ஜூஸ் மட்டும்தான் குடிக்கணும்…” என்று அவன் கட்டளை போல சொன்னாலும் மிருதுளா இவன் யார் நமக்கு கட்டளையிட என்று கோபம் எல்லாம் படவில்லை…


அவள் மீது இது போல அவள் அம்மாவைத் தவிர வேறு யாருமே அக்கறையுடன் கோபப்பட்டது இல்லை… அதனால் தேவ்வின் கரிசனமான கோபத்தில் அவள் மனம் நெகிழ்ந்தது…


“சரிங்க சார்… இனி நிச்சயம் நீங்க சொல்ற மாதிரியே பண்றன்… இப்போ எனக்கு வேலை இருக்கு நான் போனை வைக்கிறேன்…” என்று சொல்லிவிட்டு வேலை செய்யத் தொடங்கினாள்.


காபி குடித்து முடித்து விட்டு வேலையைத் தொடங்கியவள் தான்… மதிய உணவு இடைவேளை வரை எதைப் பற்றியும் சிந்திக்காமல் வேலை செய்தாள்… மதிய இடைவேளை முடிந்து வந்த பிறகும் இதே கதை தொடர்ந்தது…


தொடர்ந்து வேலை பார்த்ததால் லேசாக தலை வலிப்பது போல உணர்ந்த மிருதுளா தன் கையைத் திருப்பி மணியை பார்த்தாள்.


‘அஞ்சு மணி தான் ஆகுதா… இன்னும் ரெண்டு மணி நேரம் வேலை பார்க்கணுமே… இந்த தலைவலி போட்டு பாடா படுத்துது… பேசாம ஒரு காபி குடிக்கலாம்…’ என்று நினைத்தவள் காபி மெஷினை நோக்கிச் சென்றாள்.


தேவ் காலையில் சொன்னதெல்லாம் அப்போது அவளுக்கு ஞாபகத்தில் இல்லை…


அவள் காபி மெஷினிடம் சென்ற அடுத்த நொடி தேவ்விடம் இருந்து போன் வந்தது.


அழைத்தது யார் என்று பார்க்காமல் அழைப்பை எடுத்தவள் “ஹலோ” என்று சொல்லியபடி அருகிலிருந்த கப்பை எடுத்தாள்.


“ஏண்டி காலையில தானே உன்கிட்ட அவ்வளவு சொன்னன்… அதுக்குள்ள எல்லாத்தையும் மறந்துட்டு காபி மெஷின் கிட்ட போய் நிற்கிற… நான் உன்கிட்ட சொன்ன கோட்டா ஏற்கனவே முடிஞ்சிடுச்சி… ஒழுங்கு மரியாதையா அந்த கப்ப எடுத்த இடத்திலேயே வச்சிட்டு கீழே கேண்டீனில் போய் ஜூஸோ இல்ல பாலோ குடிச்சிட்டு வா…” என்று சொன்னதும் ஆச்சரியத்தில் தன் கண்களை அகல விரித்த மிருதுளா “சார் நீங்களா?” என்று கேட்டாள்.


“நானேதான்… ஒழுங்கு மரியாதையா நான் சொன்னத செய்…”


“ஆனா சார்… நீங்கதான சாயந்திரம் ஒரு வேளை காபி குடிச்சிக்கோன்னு சொன்னீங்க…”


“ஆமா சொன்னன் தான்… ஆனா நீ இன்னைக்கு காலையில டீ பிரேக் விட்ட போதும் மத்தவங்களோட சேந்து காபி குடிச்ச தான… அதனால உன்னோட ரெண்டு காபி கோட்டா முடிஞ்சிருச்சு… ஒழுங்கா கீழே போய் நான் சொன்ன மாதிரி ஜூஸோ இல்ல பாலோ குடி…’ என்று அவன் சொன்னதும்


“சார் தலை வலிக்கிற மாதிரி இருக்கு… அதுதான் காபி குடிக்க வந்தன்… ப்ளீஸ் இப்போ மட்டும் குடிச்சிக்கிறேனே…” என்று கெஞ்சலாக சொன்னாள்.


“மிருதுளா இப்போ நீ கேக்கறன்னு நான் சரின்னு சொன்னா அப்புறம் நாளைக்கும் இதே மாதிரி கேட்டு என்கிட்டே பெர்மிஷன் வாங்குவ… நான் சொல்றதை சொல்லிட்டன்… என் பேச்ச கேட்கறதும் கேட்காததும் உன்னோட விருப்பம்… ஏன்னா உன்ன பொறுத்தவரைக்கும் நான் யாரோ தானா…” என்று சொன்னவன் அழைப்பை துண்டித்து விட்டான்.


அவன் அப்படி பட்டென்று போனை வைத்ததும் மிருதுளாவிற்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது...


'பெரிய இவன் மாதிரி பட்டுன்னு போனை வச்சுட்டான்... போனை வச்சா வை... இங்க யாரும் உன்கிட்ட போன் பேச ஏங்கிகிட்டு இல்ல போடா...' என்று மனதிற்குள் நினைத்தாலும் அதன் பிறகு அவள் காபி குடிக்கவில்லை.


காபி மெஷினை ஒருமுறை ஏக்கமாக பார்த்தவள் தேவ் சொன்னபடி கீழே உள்ள கேண்டினிற்கு சென்று சூடாக பாலை வாங்கி குடித்துவிட்டு வந்தாள்.


தன் இருக்கையில் வந்து அமர்ந்தவள் வேலை செய்யும் எண்ணம் சிறிதுமின்றி அடிக்கடி தன் போனை பார்த்து கொண்டிருந்தாள்.


'உண்மையாவே நம்ம மேல கோவப்பட்டு தான் அப்போ போனை வச்சானோ... அதுதான் அவன் சொன்ன மாதிரி காபி குடிக்காம பால் குடிச்சேன் இல்ல... அதுக்கப்புறமும் அவன் ஏன் போன் பண்ணல...' என்று யோசித்தவள் தன் நகத்தை கடித்து துப்பினாள்.


இன்னும் சிறிது நேரம் சென்றிருந்தால் அவள் விரல் சதையை கூட யோசனையில் கடித்து துப்பி இருப்பாள்... நல்ல வேலையாக அதற்குள் தேவ் போன் செய்துவிட்டான்.


"ஏய் இப்போ எதுக்காக நகத்தை கடிச்சி துப்பிக்கிட்டிருக்க... நகத்தை கடிக்கறது கெட்ட பழக்கம்னு உனக்கு தெரியாதா?" என்று அதட்டலாக கேட்டான்.


மிருதுளா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.


"என்ன மிது குட்டி நான் அப்படி போனை வச்சதுக்காக என் மேல கோவமா இருக்கியா... சாரி நான் அப்படி பண்ணியிருக்க கூடாது... ஆனா எனக்கு வந்த கோவத்துல என்ன பண்றதுன்னு தெரியாமா அப்படி பண்ணிட்டன்..." என்று அவன் வருத்தத்துடன் சொன்னான்.


"இப்போ என்மேல கோவம் இல்லையா சார்?"


"அது எப்படி இருக்கும்... நீதான் என் பேச்சை கேட்டு சமத்தா போய் பால் குடிச்சிட்டு வந்தியே... அப்புறமும் எனக்கெப்படி உன் மேல கோவம் இருக்கும்..." என்று உற்சாகமாக சொன்னான்.


அவன் அப்படி சொன்னதும் தான் மிருதுளாவிற்கு நிம்மதியாக இருந்தது... மேலும் சில நிமிடங்கள் அவனிடம் பேசியவள் பின்னர் உற்சாகத்துடன் தன் வேலையை பார்த்தாள்.

அத்தியாயம் - 22 :


அடுத்த மூன்று நாட்கள் கண் சிமிட்டும் நேரத்திற்குள் ஓடிவிட்டது…


இந்த மூன்று நாளில் தேவ் தினமும் பூக்களை அனுப்புவதையோ காலையில் வந்து மிருதுளாவிடம் கடலை போடுவதையோ… அவன் பேச்சை மீறி அவள் அதிக காபி குடிக்க முற்படும் போதோ அல்லது அதிக நேரம் இருந்து வேலை செய்து கொண்டிருக்கும் போதோ போன் போட்டு அவளை திட்டுவதையோ எதையுமே மாற்றிக் கொள்ளவில்லை.


அதேசமயம் மிருதுளாவும் மாறவில்லை… அவனைக் காதலித்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.


இருவரும் ஒருவித கண்ணாமூச்சி ஆட்டம் கொண்டிருந்தனர்…


சில நேரம் தன் மனநிலையை குறித்து அவளுக்கே குழப்பமாக இருந்தது.


‘அவன் பேசனா ரசிக்கிறோம்… அவன் கோவப்பட்டா அவன சமாதானப்படுத்தற வரைக்கும் எந்த வேலையும் ஓட மாட்டேங்குது… அவனோட அக்கறை சக்கரையா தித்திக்குது… அப்படி இருந்தும் நாம ஏன் அவனை லவ் பண்ணிடக் கூடாதுதுன்னு நினைக்கிறோம்…’ என்ற கேள்வி இப்போதெல்லாம் அடிக்கடி மிருதுளாவிற்குள் எழுந்தது.


‘அவள் அப்பாவிடம் அன்பை எதிர்பார்த்து ஏமாந்து போனதும்… அவள் தோழிகளுக்கு நடந்த லவ் பிரேக்கப்பும் தான் இதற்கு காரணம்…’ என்பது அவளுக்கு விடையாகக் கிடைத்தது…


உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அவளுக்கு தேவ்வை பிடித்திருந்தாலும் எந்த அளவுக்கு அவன் காதலை நம்புவது என்று தெரியவில்லை… அதனாலேயே பிடித்தத்தை காதல் அளவுக்கு கொண்டு செல்ல அவளுக்கு பயமாக இருந்தது.


‘நம்மைப் பற்றி வதந்தி பரவுவதை விரும்பவில்லை…’ என்று சொல்லி அவன் யாரும் இல்லாத நேரத்தில் காலையில் அவளை சந்தித்து பேசினாலும்… அதுவும் அவளுக்கு ஒருவித உறுத்தலை தான் கொடுத்தது… அவன் சொல்லும் போது சரியாக தோன்றிய விஷயம் யோசித்துப் பார்த்தால் அபத்தமாகத் தோன்றியது…


தேவ்வை பார்க்கும் போது தன்னுடைய உறுத்தலை கேட்டுவிட வேண்டும் என்று நினைப்பாள்… ஆனால் அவனை பார்த்து விட்டால் அவனிடம் கேட்க நினைத்ததை மறந்து அவன் பேச்சை ரசித்த தொடங்கி விடுவாள்… ஆகமொத்தம் மதில்மேல் பூனையாக அவள் இருந்தாள்.


அவன் காதல் உண்மையானது என்பதை அவள் மனம் நம்புவது போல ஏதாவது ஒரு விஷயம் நடந்தால் அவள் மனம் நிச்சயம் அவன் பக்கம் சாய்ந்து விடும்… அதேபோல அவன் காதல் பொய் என்பதை அவள் மனம் நம்புவது போல ஏதாவது ஒரு விஷயம் நடந்தால் தேவை விட்டு விலகிச் சென்று விடுவாள்…


ஆனால் அப்படி எதுவும் நடக்காமல் அவள் மனம் தான் புயலில் சிக்கிய கொடியாக அலைக்கழிந்தது…


அன்று வெள்ளிக்கிழமை… வழக்கம் போல சரியாக ஏழு மணிக்கெல்லாம் மிருதுளா வந்துவிட்டாள்… அவள் வந்த அடுத்த நொடி தேவ்வும் ஆஜராகி விட்டான்…


சில நிமிடங்கள் கழித்து எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தவனை பார்த்த மிருதுளா “என்ன சார் எதுவும் பேசாம அமைதியா இருக்கீங்க? இன்னைக்கு நீங்க மௌன விரதமா என்ன?” என்று கிண்டலாக கேட்டாள்.


அவன் பதிலும் சொல்லவில்லை… அவள் முகத்தையும் நிமிர்ந்து பார்க்கவில்லை…


தலையை தொங்கப் போட்டவாறு முகம் சுருங்க அமர்ந்திருந்தவனை பார்த்த மிருதுளாவிற்கு மனம் பிசைந்தது…


‘எப்பவும் இப்படி இருக்க மாட்டாரே… இன்னைக்கு என்ன ஆச்சு…’ என்று நினைத்தவள் மேஜை மீது இருந்த அவன் கையின் மீது தன் கையை வைத்து “என்னாச்சு தேவ்? ஏதாவது பிரச்சனையா?” என்று ஆதுரத்துடன் கேட்டாள்.


இதுவரை அவனை சார் என்று மட்டுமே அழைத்து வந்தவள் முதல் முறையாக தன்னை அறியாமல் அவன் பெயரை சொல்லி அழைத்திருந்தாள். அதை அவள் கவனிக்கவில்லை. ஆனால் அவன் கவனிக்கவே செய்தான்.


இருந்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல் தன் மற்றொரு கையை எடுத்து அவள் கையின் மீது வைத்து அழுத்தியவன் “நாளையில் இருந்து உன்ன பாக்க முடியாது… உன்கிட்ட இப்படி பேச முடியாதுன்னு நெனச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு மிது குட்டி…” என்று சொன்னான்.


“இது உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்ச விஷயம் தானே சார்… இன்னையோட எனக்கு இங்க ஒர்க் முடியுது… வொர்க் முடிஞ்சதும் நான் என்னோட ஆபிஸ் போயிடுவேன்னு உங்களுக்குத் தெரியும்தானே… இதுக்காகவா இப்படி கப்பல் கவிழ்ந்தது போல உட்கார்ந்து இருக்கீங்க… நான் கூட என்னவோ ஏதோன்னு நினைச்சேன்…”


“உனக்கு என்னோட ஃபீலிங்ஸ் கொஞ்சம் கூட புரியல இல்ல… எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடி…” என்று அவன் வருத்தத்துடன் சொன்னான்.


மிருதுளாவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை… அதனால் அமைதியாக இருந்தாள்…


சிறிது நேரம் அமைதியாக இருந்த தேவ் “ஏன் மிது உனக்கு கொஞ்சம் கூடவா என் மேல எந்த பீலிங்கும் வரல…” என்று அவள் கண்களை ஆழ்ந்து பார்த்தபடி கேட்டான்.


அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்து அவன் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது என்று மிருதுளாவிற்கு புரிந்தது.


அதனால் தன் முகத்தைத் திருப்பியவள் “எனக்கு எந்த பீலிங்கும் வரல…” என்று சொன்னாள்.


“மிது மொதல்ல என் முகத்தைப் பாரு…” என்று அவன் அதட்டலாக சொன்னதும் மிருதுளா அவன் வார்த்தைக்கு கட்டுண்டு அவன் முகத்தை பார்த்தாள்.


“பொய் சொல்லாதடி… உனக்கு என்ன பிடிக்காமலா நான் சொல்றதை எல்லாம் தட்டாம கேட்கற… எனக்கு நல்லா தெரியும்… உனக்கு காலைல சீக்கிரம் எழுந்து கிளம்பி வரது சுத்தமா பிடிக்கலன்னு… ஆனா உனக்கு பிடிக்கலனாலும் நான் சொன்னதால மட்டும்தான் இந்த ஒரு வாரமா காலைல நீ வந்துகிட்டு இருக்க… உனக்கு ரொம்ப பிடிக்கும்னு சொன்ன காபியக் கூட நான் சொன்னதற்காக இப்போதெல்லாம் குடிக்கறத குறைச்சிகிட்ட… எதுக்காக மிது… இதெல்லாம் எதுக்காக பண்ண? என்ன தான் நான் இந்த கம்பெனியோட முதலாளியா இருந்தாலும் நீ எந்த நேரத்தில் வந்து ஒர்க் பண்ணணும்னு சொல்ற உரிமை எனக்குக் கூட கிடையாது… அது உனக்கும் நல்லா தெரியும்… அப்படியிருந்தும் நீ எதுக்காக நான் சொன்னதுக்காக தினமும் காலைல ஏழு மணிக்கெல்லாம் வந்த… உனக்கும் என் கூட பேசணும்னு ஆசையா இருந்ததால தான… இதுக்கெல்லாம் என்ன அர்த்தம் மிது… உனக்கு என் மேல எந்த பீலிங்கும் இல்லன்னா நீ எதுக்காக இதெல்லாம் பண்ண…?’ என்று அவன் கோபமாக கேட்டான்.


அப்போதும் மிருதுளா வாய் திறக்கவில்லை… அவளின் மவுனம் தேவ்வின் கோபத்தை அதிகப்படுத்தியது…


“எதுக்காக மிது இப்படி வாய திறக்காம இருந்து சாகடிக்கிற… உனக்கு என்ன பிடிச்சிருக்குன்னு எனக்கு நல்லாவே தெரியும்… என்ன பிடிச்சிருக்க விஷயத்தை என்கிட்ட சொல்ல விடாமல் உன்ன எது தடுக்குது?” என்று அவன் கோபத்தில் கத்தினான்.


இதற்கு மேல் பேசாமல் இருப்பது சரியில்லை என்று நினைத்த மிருதுளா “நீங்க இதுவரைக்கும் என்கிட்ட ரொம்ப அக்கறையா நடந்துகிடீங்க… எனக்கும் அது பிடிச்சிருக்கு தான்… நான் இல்லன்னு சொல்லல… ஆனா என்னால உங்க காதலை நம்ப முடியல சார்… அதனால உங்க காதல என்னால ஏத்துக்கவும் முடியல…” என்று அவள் மெல்லிய குரலில் சொன்னதும்


“ஏன்?” என்று ஒரே வார்த்தையில் தேவ் கேட்டான்.


“என்கிட்ட காரணமெல்லாம் கேட்காதீங்க…”


“காரணம் கேட்காம எப்படி இருக்க முடியும் மிது... நீ என் காதலை நம்ப முடியலன்னு சொல்ற... அப்போ நீ ஏன் அப்படி நினைக்கிறன்னு என்கிட்ட காரணம் சொல்லிதான ஆகணும்?”


சில நொடிகள் அமைதி காத்த மிருதுளா பின்னர் “இதோ இப்ப கூட பாருங்க… யாரும் இல்லாத நேரத்துல தான் நீங்க வந்து என்கிட்ட பேசறீங்க… நீங்க இப்படி நடக்கறதுக்கு அன்னைக்கு சொன்ன காரணம் அப்போ எனக்கு சரியா பட்டாலும் அதுக்கப்புறம் யோசிச்சு பாத்தா ரொம்ப அபத்தமா இருக்கு… ஒருவேளை நீங்க என்ன உண்மையா காதலிச்சா எதுக்காக அத எல்லார்கிட்டயும் இருந்தும் மறைக்க நினைக்கிறீங்கன்னு என்னக்குள்ள சந்தேகம் வருது … உங்க காதல் உண்மைனா நீங்க எல்லாரும் இருக்கும் போது கூட என்கிட்ட பேசலாமே?” இதுநாள் வரை அவனிடம் கேட்க வேண்டும் என்று நினைத்த கேள்வியை கேட்டாள்.


“அப்போ என் காதலை உன்னால நம்ப முடியல… அதனாலதான் என்ன பிடிச்சிருக்கறத நீ என்கிட்ட ஒத்துக்க மறுககிற இல்லையா? சரி இனி இத பத்தி நான் பேச விரும்பல… கிளம்பறன்…” என்றவன் அங்கிருந்து கிளம்பி சென்றான்.


அவன் அப்படி விருட்டென்று அங்கிருந்து கிளம்பியதும் மிருதுளாவிற்கு மனதிற்கு கஷ்டமாக இருந்தது…


‘அவன் ஏற்கனவே ஃபீல் பண்ணிக்கிட்டு இருந்தான்… இதுல நாம வேற அவன்கிட்ட இப்படி பேசிட்டோமே... சா... நாம அவன் கிட்ட இப்படி பேசி இருக்க கூடாது... நாம பேசினதையும் நெனச்சி அவன் இப்போ பீல் பண்ணுவானே…’ என்று நினைத்து மிருதுளா வருந்தினாள்.


ஆனால் இவள் நினைத்ததற்கு மாறாக தன் அறைக்குச் சென்ற தேவ் மகாதேவனை அழைத்தவன் “மகாதேவன் நமக்கு கிடைச்ச ஒரு பெரிய பிராஜெக்ட்காக அடுத்தவாரம் பார்ட்டி அரேஞ்ச் பண்ணோம் இல்லையா… அத நாளைக்கு மாத்திடுங்க…” என்றான்.


“எதுக்காக சார் திடீர்னு மாத்த சொல்றீங்க?”


“நான் சொன்னத மட்டும் செய்ங்க மகாதேவன்… அதுதான் உங்களுடைய வேலை… என்ன கேள்வி கேட்கற உரிமை உங்களுக்கு கிடையாது…” என்று அவன் அழுத்தமாக சொன்னதும்


“சாரி சார்… ஆனா நாளைக்கேனா பார்ட்டி ஹால் கிடைக்கிறது கொஞ்சம் கஷ்டம்…” என்று அவர் சற்று பயத்துடன் சொன்னார்.


“நாம வழக்கமா ஹோட்டல் சோழால தான எல்லா பார்ட்டியும் அரேன்ஜ் பண்ணுவோம்… நாம அவங்களோட ரெகுலர் கஸ்டமர்… அப்படி இருக்கும்போது அவங்க எப்படி நாம கேட்டு இல்லைனு சொல்லுவாங்க… முதல்ல நீங்க அவங்க கிட்ட பேசுங்க… அவங்க என்ன சொல்றாங்கன்னு கேட்டுட்டு வந்து என்கிட்ட சொல்லுங்க… அவங்க சொல்ற பதிலை வச்சு அடுத்து என்ன பண்றதுன்னு நான் சொல்றன்….” என்று தேவ் சொன்னதும் அவன் முன்பே தன் போனை எடுத்து ஹோட்டல் சோழாவிற்கு போன் செய்த மகாதேவன் சில நிமிடங்கள் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.


“என்ன சொன்னாங்க மகாதேவன்? பார்ட்டி ஹால் இருக்கா இல்லையா?”


“இருக்கு சார்… ஆனா வழக்கமா கேட்பதை விட ரொம்ப அதிகமான அமௌன்ட் கேக்கறாங்க…” என்று அவர் தயக்கத்துடன் சொன்னதும்


ஒரு நொடி கூட யோசிக்காமல் “எவ்வளவு பணம் கேட்டாலும் கொடுத்துடுங்க… எனக்கு நாளைக்கு பார்ட்டி ஏற்பாடு பண்ணியே ஆகணும்… அது சம்பந்தமான மெயிலை எல்லாருக்கும் அனுப்பிடுங்க… மிருதுளாவுக்கும் சேர்த்து…” என்று அவன் சொல்லி முடித்ததும் தான் மகாதேவனுக்கு எதுவோ புரிவது போல இருந்தது.


‘சோழியன் குடுமி சும்மா ஆடாதுன்னு சும்மாவா சொன்னாங்க… இவன் ஏதோ ப்ளான் பண்ணிட்டான் போல… அதனாலதான் எவ்வளவு காசு ஆனாலும் பரவாயில்லைன்னு அடுத்த வாரம் இருந்த பார்ட்டிய இந்த வாரம் மாற்றி வச்சிருக்கான்…’ என்று நினைத்த மகாதேவனுக்கு மிருதுளாவை நினைத்து பாவமாக இருந்தது.
 

geethusri

Moderator

அத்தியாயம் - 23 :


தேவ் சொன்னபடி சோழா ஹோட்டலில் மகாதேவன் பார்ட்டியை பக்காவாக ஏற்பாடு செய்திருந்தார்…


ஆபீஸுக்கு வருவது போல் அனைவரும் பார்மலாக உடை அணியாமல் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு டிரெண்டியாக உடை அணிந்து வந்திருந்தனர்… தேவ் கூட தன் ஆபீசுக்கு வருவது போல கோட் சூட்டில் வராமல் ஜீன்ஸ் டீ ஷர்ட்டில் வந்திருந்தான்.


பார்ட்டி ஹாலில் நுழைந்தவன் முதலில் மிருதுளா வந்திருக்கிறாளா என்பதை தான் பார்த்தான். அவள் இன்னும் வராததை கவனித்தவன் ‘பார்ட்டி ஸ்டார்ட் பண்ற டைம் ஆகிடுச்சு… இன்னும் வராம இருக்கானா ஒருவேளை பார்ட்டிக்கு வரலையோ…’ என்று அவன் நினைக்கும் போதே ஸ்லீவ் லெஸ் பிளவுசின் மீது ஒற்றை பட்டையாய் சிவப்பு நிற ஸீத்ரூ சேலையை அணிந்துக்கொண்டு ஒயிலாக நடந்து வந்து கொண்டிருந்தாள் மிருதுளா. எப்போதும் லேசாக மட்டும் மேக்கப் போட்டிருப்பவள் இன்று பார்ட்டிக்கு வருவதால் சற்று அதிக மேக்கப் போட்டிருந்தாள்… இதுவரை கண்ணியமான உடைகளில் மட்டுமே அவளை பார்த்து இருந்தவன் இந்த உடையில் அவளை பார்த்ததும் தலை குப்புற விழுந்து விட்டான்…


அவன் தன்னிலை மறந்து அவளை பார்த்துக் கொண்டிருந்த போது அவன் அருகில் வந்த மிருதுளா” ஹாய் சார்…” என்று புன்னகையுடன் சொன்னாள்.


அவள் குரலில் தன்னிலைக்கு திரும்பியவன் “ரொம்ப அழகா இருக்க மிது… உன் மேலே இருந்து என்னால கண்ணை எடுக்கவே முடியல…” என்று தன் மனதில் இருந்ததை அப்படியே சொன்னான்.


“சார் என்ன பேசறோம்னு புரிஞ்சி தான் பேசறீங்களா… இங்க நீங்களும் நானும் மட்டும் இல்ல… நம்ம சுத்தி நிறைய பேர் இருக்காங்க …” என்று எம்ஜிஆர் பற்களுக்கிடையில் மிருதுளா வார்த்தைகளை கடித்து துப்பினாள்.


“யார் இருந்தாலும் நான் இனி அத பத்தி கவலைப்பட போறது இல்ல மிது… நீ தான நேத்து சொன்ன… உங்க காதல் உண்மையா இருந்தா எல்லார் முன்னாடியும் என்கிட்ட பேசுங்கன்னு… அதனால இனி யார் இருந்தாலும் பரவாயில்ல... நான் என்ன நினைக்கிறேனோ அதை அப்பவே உன் கிட்ட சொல்லிடுவேன்…” என்றான்.


“என்னால உங்கள மாதிரி எல்லாம் நினைக்க முடியாது… நான் வரன்…” என்றவள் அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட் ஆட்களுடன் சேர்ந்து கொண்டாள்.


மிருதுளா வந்தது… தேவ் அவளை வியப்புடன் பார்த்தது… பின்னர் அவளிடம் சிறிது நேரம் பேசியது… என்று அனைத்துமே அங்கிருந்த அனைவரின் பார்வையிலும் விழுந்தது… இதுவரை அவன் தன் கம்பெனியில் வேலை பார்க்கும் எந்த பெண்ணிடமும் தனிப்பட்ட முறையில் பேசியது இல்லை… அதனால் அவன் இப்போது மிருதுளாவிடம் சிறிது நேரம் பேசியது அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தியது… சிலர் அதற்குள்ளேயே தங்கள் கற்பனையை தட்டிவிட்டு கிசுகிசுத்த தொடங்கிவிட்டனர்…


இதை அறியாத தேவ் அந்த பார்ட்டி ஹாலில் இருந்த மேடையின் மீது ஏறியவன் “ஹாய் காய்ஸ்… இந்த பார்ட்டி எதுக்குன்னு உங்க எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கும்… நம்ம கம்பெனிக்கு ஒரு மிகப்பெரிய ப்ராஜெக்ட் கிடைச்சிருக்கு… அத கொண்டாடுவதற்காக தான் இந்த பார்ட்டி… எப்பவும் போல இந்த ப்ராஜெக்டையும் நாம எல்லாரும் சேர்ந்து வெற்றிகரமா முடிக்கணும்… அதுக்கு உங்களோட ஒத்துழைப்பு எனக்கு தேவை… ஒத்துழைப்பீங்களா?” என்று தேவ் கேட்டதும் அங்கிருந்த அனைவரும் “நிச்சயமா சார்…” என்று குரல் கொடுத்தனர்.


“தேங்க்யூ காய்ஸ்… லெட்ஸ் எஞ்சாய் த பார்ட்டி…” என்று சொன்ன தேவ் மேடையை விட்டு கீழே இறங்கினான்.


அடுத்த நொடி டிஜே இசையை போடத் தொடங்கினார்… அங்கிருந்த பலர் இசைக்கேற்ப ஆட தொடங்கினர்…. ஆட தெரியாதவர்கள் வெயிட்டர் கொடுத்த ஆல்கஹாலை குடித்தபடி ஆடுபவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.


கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு ஆடி களைத்தவர்கள் வெயிட்டர் கொடுத்த ஆல்கஹாலை வாங்கிக் கொண்டு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தனர். அப்போது பாட தெரிந்தவர்கள் எல்லாம் மைக்கை எடுத்துக் கொண்டு மேடை ஏறி பாடத் தொடங்கினர்.


இரண்டு பேர் பாடி முடித்த பிறகு தேவ் மைக்கை எடுத்துக் கொண்டு மேடையேறினான்… அதைப் பார்த்த அங்கிருந்த அனைவரும் ஆச்சர்யத்தில் வாயைப் பிளந்தனர்…


‘என்னது தேவ் சார் பாடப் போறாரா?’ என்ற ஒரே கேள்விதான் அனைவருக்குள்ளும் எழுந்தது.


ஏனென்றால் பொதுவாக தேவ் பார்ட்டிக்கு வந்தாலும் சிறிது நேரம் இருந்து விட்டு கிளம்பி விடுவான்… இன்று அவன் இவ்வளவு நேரம் இருந்ததே பெரிய விஷயம் என்று அவர்கள் நினைக்கும் போது அவன் பாடுவதற்காக மேடை ஏறினால் அவர்களுக்கு ஆச்சர்யம் ஏற்படாதா என்ன?


மைக்கை உயர்த்திய தேவ் பாட தொடங்கினான். அடுத்த நொடி அவன் குரல் அறையின் ஒவ்வொரு மூலையிலும் சுற்றி வந்தது.


“மௌனமான மரணம் ஒன்று உயிரை கொண்டு போனதே

உயரமான கனவு இன்று தரையில் வீழ்ந்து போனதே

இசையும் போனது… திமிரும் போனது…

தனிமை தீயிலே வாடினேன்

நிழலும் போனது… நிஜமும் போனது

எனக்குள் எனையே தேடினேன்”

இந்த வரிகளை பாடும் போது… தேவ்வின் கண்கள் சட்டென்று மிருதுளாவின் மீது பதிந்தன. அவளும் அப்போது அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்… அவர்களின் கண்கள் சந்தித்து கொண்டன.


அவன் தனது மனதில் இருந்த வார்த்தைகளை பாடலில் வெளிப்படுத்தினான்.


“கனவே கனவே கலைவதேனோ
கணங்கள் கணமாய் கரைவதேனோ
நினைவே நினைவே அரைவதேனோ
எனது உலகம் உடைவதேனோ”


அவன் பாடுவது நிறுத்தப்பட்டு… மென்மையான இசை மீண்டும் ஒலிக்க தொடங்கியது… தேவ் தனது உதடுகளிடம் இருந்து மைக்கை நகர்த்தவில்லை… அவன் முன்பு போலவே அதை அப்படியே பிடித்தபடி மிருதுளாவின் மீது தனது பார்வையை பதித்திருந்தான்…


அவளுக்கு அது தனது மாயையா என்று உறுதியாக தெரியவில்லை… ஆனால், அவனின் கண்கள் தன்னிடம் பேசுவதை போல அவள் உணர்ந்தாள்.


கனவே கனவே கலைவதேனோ… இந்த பாடலை மிருதுளா முன்பே கேட்டிருக்கிறாள்… இந்தப் பாடலில் உள்ள உணர்ச்சிகள் கடல் போல ஆழமாக இருக்கும்…


அவன் அதை உணர்ச்சியுடன் மட்டும் பாடவில்லை… அந்த பாடலை பாடிய பாடகரை போல அதே உணர்ச்சியுடன் பாடினான்…


மிருதுளா மட்டுமே தேவ்வின் மீது கவனம் செலுத்தவில்லை… ஒருவர் பின் ஒருவராக அறையில் இருந்த அனைவருமே அவனின் மீது தங்களது கவனத்தை பதித்தனர்…


அவன் பாடும் சத்தத்தை தவிர… வேறு எந்த சத்தமும் கேட்காமல் அந்த அறை அமைதியாக இருந்தது…


முதல் பாதி பாடல் பாடப்பட்டு முடிந்ததும்… அதன் நடுவில் இசைக்கருவிகள் ஒலிப்பதற்காக சற்று நேரம் காத்திருந்தவன்… பின்னர் மீண்டும் மைக்கை உயர்த்தி பாடினான்.


“கண்கள் ரெண்டும் நீரிலே

மீனை போல வாழுதே

கடவுளும் பெண் இதயமும்

இருக்குதா அட இல்லையா…

நானும் இங்கே வலியிலே

நீயும் அங்கோ சிரிப்பிலே

காற்றில் எங்கும் தேடினேன்

பேசி போன வார்த்தையை

இது நியாயமா மனம் தாங்குமா…

என் ஆசைகள்… அது பாவமா…”


பாடலின் முடிவில் தேவ் தனது இதயத்திலிருந்து பாடல்களின் வரிகளை மீண்டும் ஒரு முறை மென்மையாக பாடினான்… அவன் தன் கண் முன்னே நிற்பவளுக்காக மட்டும் தான் பாடினான்…


அவன் கடைசி வரியை பாடும் போது… மிருதுளாவின் கண்கள் கண்ணீரால் நிறையத் தொடங்கியது…


இசை முடிந்து விட்டது…


அந்த அறை முழுவதும் அமைதியில் மூழ்கியது… மற்றவர் மூச்சு விடும் சத்தம் கூட கேட்கவில்லை…


ஒரு நிமிடம் கழித்து யாரோ தன்னிலைக்கு திரும்பிய ஒருவர் தனது கைகளை தட்ட தொடங்கினார்…


பின்னர், அறையில் இருந்த அனைவரும் கைத்தட்ட தொடங்கினர்…


ஆனால் தேவ்வும் மிருதுளாவும் தங்களது கண்களை ஒருவரின் மீது ஒருவர் இறுக்கமாக பதித்திருந்தனர்.


தேவ்வின் கண்களில் கட்டுண்டு இருந்த மிருதுளா… அவர்களை சுற்றி உள்ள அனைவரும் உற்சாகமாக கைதட்டியதை கூட கேட்கவில்லை… அவள் இந்த கணத்தில்… எங்கே இருக்கிறாள்… தன்னை சுற்றி என்ன நடக்கிறது… என்பதை முற்றிலும் மறந்து விட்டாள்… தேவ்வின் கண்களில் கட்டுண்டு இருந்தவளுக்கு… தங்கள் இருவரையும் தவிர… சுற்றியுள்ள உலகம் முழுவதுமே காலியாக இருந்ததை போல தோன்றியது…


அவனின் கண்களில் இருந்த பளபளப்பு… அவளை காந்தமாய் கவர்ந்திழுத்து… அவள் தன்னை கட்டுப்படுத்த முடியாமல்… அவனின் உலகத்தில் ஆழமாக… மிகவும் ஆழமாக… எந்தவித எதிர்ப்புமின்றி நுழைந்தாள்.


அந்தத் தருணத்தில்… அவனைப் பார்த்துக் கொண்டே இருப்பதைத் தவிர… அவளின் வாழ்க்கையில் செய்ய வேண்டிய விஷயம் ஏதுமில்லை என்று நினைத்தாள்.


அவன் பார்வை தனது உயிரையே உறிஞ்சுவதை போல உணர்ந்தாள்… அதனால் மிகவும் பயந்து போனவள் அவனின் கண்களை தவிர்க்க… வேகமாக தனது தலையை திருப்பினாள்.


அப்படி இருந்தும் அவன் அவளை இன்னும் பார்த்துக் கொண்டிருப்பதை அவளால் உணர முடிந்தது… அவன் தன்னை வைத்த கண் மாறாமல் பார்க்கும் போது… தனது கால்களில் இருந்து சூடான ரத்தம் தலைக்கு பாய்வதை அவளால் தெளிவாக உணர முடிந்தது… சில காரணங்களால் அவன் காதலை ஏற்று கொள்ள முடியாமல் தவிக்கும் தன்னையே அவள் வெறுத்தாள்…
 

geethusri

Moderator

அத்தியாயம் - 24 :


தேவ் பாடி முடித்து விட்டு மேடையை விட்டு இறங்கிய அடுத்த நொடி அங்கிருந்த அனைவரும் அவனை சூழ்ந்து கொண்டனர்.


“உங்க வாய்ஸ் ரொம்ப சூப்பர் சார்…”


“ரொம்ப சூப்பரா பாடினீங்க சார்…”


“யார நெனச்சு பாடினீங்க சார்…”


என்று அனைவரும் அவனை கேள்விகளால் துளைத்தனர்.


அவர்கள் அனைவரின் கேள்விகளுக்கும் பதில் சொல்லாமல் அதே சமயம் அவர்கள் கேள்வியை அலட்சியபடுத்துவதாக அவர்கள் நினைத்து விடாமல் இருக்க தேவ் அவர்கள் அனைவருக்கும் புன்னகையை பதிலாக கொடுத்தான்.


தேவ் பாடி முடித்த பிறகும் சில நொடிகள் அவனையே வெறித்துப் பார்த்த மிருதுளா பின்னர் அருகில் இருந்த வெயிட்டரை அழைத்தவள் அவர் கையில் இருந்த தட்டில் இருந்து ஒயினை எடுத்து ஒரே கல்பில் அடித்தாள்.


வெயிட்டர் திகைத்துப் போய் அவளைப் பார்த்தார்.


‘என்னடா இது… இப்போதான் நாம இவங்ககிட்ட ட்ரிங்க் வேணுமான்னு கேட்டுட்டு போனோம்… வேணாம்னு சிரிச்சிகிட்டே சொன்னவங்க இப்ப என்னடான்னா ஒயினை ஒரே கல்ப்ல அடிக்கிறாங்க…’ என்று அவன் நினைக்கும் போதே மீரா அடுத்த கிளாஸ் எடுத்து ஒரே கல்பில் குடித்தாள்.


பத்து நிமிடங்களுக்குப் பிறகு அனைவரிடமும் இருந்து தப்பித்து வந்த தேவ் மிருதுளாவை தேடினான்.


அவள் அவன் கண்ணிற்கு தென்படாததால் அருகிலிருந்த மகாதேவனை அழைத்தவன் “மிருதுளா எங்க மகாதேவன்? ஆளே கண்ணுல படல…” என்று கேட்டான்.


“இங்க தான் சார் இருந்தாங்க…” என்று சொன்ன மகாதேவன் தன் பார்வையை சுழற்றத் தொடங்கினார்.


சில நொடிகள் கழித்து “அங்க பாருங்க சார்… மிருதுளா மேடம் அங்க இருக்காங்க…” என்று சொன்னவர் தேவ்வை சங்கடத்துடன் பார்த்தார்.


மகாதேவன் கைகாட்டிய திசையை நோக்கிப் பார்த்த தேவ் அப்போதுதான் தன் முன்னால் இருந்த மேஜையில் தலை சாய்த்தபடி படுத்திருந்த மிருதுளாவை கவனித்தான்.


‘எதுக்காக இவ இப்படி படுத்திருக்கா? உடம்புக்கு ஏதாவது முடியலையா?’ என்று அவன் யோசிக்கும் போதே அந்த மேஜையின் மீதிருந்த காலி கிளாஸ் அவன் கண்ணில் பட்டது.


‘அடிப்பாவி அஞ்சாறு கிளாஸ் ஒயினை குடிச்சிட்டு மட்டையாகி படுத்திருக்கியா… பார்ட்டிக்கு வந்தா ஏதோ பேருக்கு கொஞ்சமா குடிக்கணும்… இப்படியா மட்டையார அளவுக்கு குடிப்ப…’ என்று நினைத்தவன் அவளை நோக்கி சென்றான்.


மகாதேவனும் அவனைப் பின் தொடர்ந்து சென்றார்.


அவள் அருகில் சென்று நின்றவன் சற்றே குனிந்து அவளின் தலையை நிமிர்த்தி அமர வைத்து “மிது கண்ணை திறந்து பாரு…” என்று சொன்னபடி அவள் கன்னத்தில் தட்டினான்.


“டேய் யாருடா அது… என் மேல கை வைக்கிறது… ஒழுங்கு மரியாதையா என் மேல இருந்து கையை எடு… நான் யார் தெரியுமா? எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா? எவ்வளவு தைரியம் இருந்தா நீ என் மேலே கை வைப்ப?” என்று அவள் குடிபோதையில் உளறினாள்.


“மிது நான்தான் தேவ்…” என்று அவன் சொன்னதும்


“தேவ்வா… அவன் என் பக்கத்திலயா இருக்கான்…” என்று தனக்குதானே முணுமுணுத்தவள் தன் தலையை திருப்பி சுற்றும் முற்றும் பார்த்தாள்.


குடிபோதையில் இருந்ததால் தன்முன் இருப்பவனை அவளால் தெளிவாக பார்க்க முடியவில்லை. அவள் கண்கள் தேவ்வையும் மகாதேவனையும் மாறி மாறிப் பார்த்தன. இறுதியில் அவளின் பார்வை மகாதேவனின் மீது விழுந்தது.


ஒருகணம் மகாதேவனை உற்றுப் பார்த்தவள் பின்னர் வாய்விட்டு சிரித்த படி எழுந்து நின்றாள். பின்னர் தேவ்வை சுற்றிக்கொண்டு தள்ளாடியவாறு மகாதேவனை நோக்கி சென்றவள் “நீ இங்கதான் இருக்கியா… ரொம்ப நல்லா பாடின தேவ்… ஆனா இனி பாடாத… முக்கியமா அந்த பாட்ட நீ பாடவே கூடாது…” என்று குழறலாக சொன்னாள்.


‘என்னது நான் தேவ்வா… ஐயையோ மிருதுளா நம்மள தேவ் சார்னு தப்பா நினைச்சுட்டாங்க போலவே…’ என்று நினைத்த மகாதேவனின் பார்வை தன்னை அறியாமலேயே தேவ்வின் புறம் சென்றது.


தேவ் கொலைவெறியுடன் அவரை முறைத்தான்.


‘அய்யய்யோ இந்த பொண்ணு போதையில நம்மள அவரா நெனச்சதுக்கு இந்தாள் நம்மள முறைக்கிறான்… எல்லாம் என் நேரம்...’ என்று நொந்தவர் அவசரமாக மிருதுளாவிடம் “மிருதுளா நான்… நான்…” என்று தடுமாறினார்.


ஆனால் மகாதேவன் சொல்லி முடிப்பதற்குள் போதையில் இருந்த மிருதுளா நடக்க முடியாமல் தடுமாற தொடங்கினாள். அவளின் தடுமாற்றத்தை கவனித்த மகாதேவன் தன்னை அறியாமலேயே தன் கைகளை உயர்த்தி அவளை பிடித்தார். மிருதுளா அவர் மீது சாய்ந்தபடி நேராக நிற்க முயன்றாள்.


அதன் பிறகே மகாதேவன் தேவ்வின் புறம் தன் பார்வையை திருப்பினார். அவன் இன்னும் தன்னை முறைத்தபடி நிற்பதை பார்த்தவர் தன்னை அறியாமலேயே மிருதுளாவை விட்டு இரண்டடி பின்னோக்கி சென்றார். அவர் அப்படி சட்டென்று விலகியதும் குடிபோதையில் இருந்த மிருதுளா தடுமாறி விழப்போனாள்.


“ஏய் எதுக்காக தள்ளி போற… பாரு நான் இந்நேரம் கீழ விழுந்து இருப்பன்…” என்று சொன்ன மிருதுளா மீண்டும் மகாதேவனை நோக்கி சென்றாள்.


மிருதுளாவின் நடத்தையில் ஏற்கனவே தேவ் முகம் இறுக நின்றிருந்தான். இனியும் தன்னால் கோபத்தை கட்டுப்படுத்த முடியாது என்று புரிந்தவன் வேகமாக அவள் அருகில் சென்று அவளை தன் பக்கமாக இழுத்தவன் “மகாதேவன் இவ ரொம்ப போதையில இருக்கா… இவள இங்கேயே விட்டு வைக்கிறது நல்லது கிடையாது… அதனால நான் இவள இங்கிருந்து கூட்டிட்டு போறன்… இவளை இந்த நிலைமையில வீட்டுக்கு கூட்டிட்டு போறது சரிவராது… அதனால நீங்க ஹோட்டல்ல ஒரு ரூமை புக் பண்ணுங்க…” என்று சொன்னான்.


அவன் சொல்லியும் மகாதேவன் அங்கிருந்து செல்லாமல் அங்கேயே நின்றார்.


“என்ன மகாதேவன் எதுக்காக இங்கேயே நிக்கிறீங்க? கிளம்புங்க…”


“அது இல்ல சார்… ஒரு வயசுப் பொண்ண நடுராத்திரில ஹோட்டல் ரூம்ல உங்ககூட தங்க வைக்கிறது அந்த அளவுக்கு சரியா வரும்னு எனக்கு தோணல… நான் வேணும்னா மிருதுளாவை அவங்க வீட்ல கொண்டு போய் விட்டுடட்டுமா?” என்று தயக்கத்துடன் கேட்டார்.


‘நானே அவ கூட ஸ்பெண்ட் பண்ண நல்ல சான்ஸ் கிடைச்சிருக்கேன்னு சந்தாஷப்பட்டா... இவர் நம்ம சந்தோஷத்துல மண்ணள்ளி போட பாக்கறாரே’ என்று கடுப்புடன் நினைத்தவன், “நீங்க இங்க இருந்து போயிட்டீங்கன்னா அப்புறம் மீதி வேலையை யார் பாக்கறது… டு வாட் ஐ சே மகாதேவன்…” என்று அவன் அழுத்தமாக சொன்னதும் மகாதேவன் தயக்கத்துடன் அங்கிருந்து சென்றார்.


அடுத்த சில நிமிடங்களுக்குள் வெயிட்டர் வந்து ஒரு அறை சாவியைக் கொடுத்துவிட்டு சென்றார்.


மிருதுளாவை தன் தோளில் சாய்த்தபடி லிப்ட்டை நோக்கி சென்ற தேவ் முதல் தளம் வந்ததும் லிப்டில் இருந்து இறங்கினான். மகாதேவன் புக் செய்திருந்த அறையை சாவி கொண்டு திறந்தவன் மிருதுளாவை படுக்கையில் படுக்க வைத்தான்.


அவளைப் படுக்க வைத்து விட்டு அவன் நிமிர்வதற்குள் அவன் சட்டை காலரை பற்றிய மிருதுளா “எனக்கு உன்ன பிடிச்சிருக்கு தேவ்… ஆனா நான் உன்னை லவ் பண்ண மாட்டன்… என்னால உன்னை லவ் பண்ண முடியாது… அதனால இனி நீ இந்த மாதிரி பாட்டு பாடி என்ன டிஸ்டர்ப் பண்ணக் கூடாது… நீ இப்படி பாடினா என் மனச என்னவோ பண்ணுது… என் மனசு அப்படியே உன்னை நோக்கி ஓடி வருது… என்னால அதை தடுத்து நிறுத்த முடியல… அதனால நீ இனிமே பாடக்கூடாது… சொல்லு… பாட மாட்டேன்னு சொல்லு…” என்று போதையில் உளறினாள்.


‘எத்தனை கிளாஸ் சரக்கடிச்சான்னு தெரியல… இப்படி உளறி கொட்றா… நாம ஒண்ணு நினைச்சா வேற ஒண்ணு நடக்குது…’ என்று சலித்தபடி நினைத்த தேவ் தன் சட்டை காலரின் மீதிருந்த அவளின் கைகளை அகற்ற முயன்றான்.


“தேவ் எதுக்காக நீ என் கையை எடுக்கற... சொல்லுடா… பாட மாட்டேன்னு சொல்லு… அப்போதான் நான் உன்ன விடுவன்…” என்று குழறியபடி சொன்னவள் அவனை தன்னுடன் சேர்த்தணைத்தாள்.


“சொல்லு… பாட மாட்டேன்னு சொல்லு…” என்று மீண்டும் மீண்டும் அந்த வார்த்தைகளை உளறினாள்.


‘அடியே குடிகாரி… இப்படியா குடிச்சிட்டு உளறுவ... நீ இப்படி தலை கால் தெரியாம குடிக்கிற மொடாகுடிகாரியா இருப்பன்னு நான் நெனச்சு கூட பாத்ததில்ல…’ என்று முணுமுணுத்தவன் “சரி… சரி… நான் இனி பாடல… என்ன விடு…” என்று அவன் சொன்னதும் அவளும் சமத்தாக அவனை விட்டு விட்டாள்.


“குட் பாய்… இந்த மாதிரி தான் நான் சொல்ற பேச்சை எல்லாம் கேட்டு குட் பாயா இருக்கணும் சரியா… சரி நீ போ… நான் தூங்க போறன்…” என்று சொன்னவள் படுக்கையில் புரண்டு படுத்தாள்.


அதில் அவளின் சேலை முழுக்க மேல்பக்கமாக சுருட்டிக்கொண்டு அவளின் முன்னழகையும் ஆளிலை வயிற்றையும் தேவ்வின் கண்களுக்கு விருந்தாக்கியது.


ஏற்கனவே பாதி தெரிந்தும் தெரியாமலும் இருந்த அவளின் பருவ செழிப்பைக் கண்டு கிறங்கி இருந்தவன் இப்போது அதன் தரிசனத்தை கண்டதும் மேலும் கிறங்கினான்.


‘அடிப்பாவி… இப்படி சோதிக்கிறியேடி… எந்த ஒரு ஆம்பளைக்கும் இப்படி ஒரு சோதனை வரக்கூடாது… இப்போ என்ன பண்றது... என் கை வேற பரப்பரங்குதே... ’ என்று அவன் நினைக்கும் போதே திடீரென்று மிருதுளா எழுந்து அமர்ந்தாள்.


‘இவ எதுக்காக இப்போ எழுந்து உட்காந்தா…’ என்று முணுமுணுத்த தேவ் அவளருகில் அமர்ந்தவன் “என்னாச்சு மிருதுளா?” என்று கேட்டான்.


அவனிடம் பதில் சொல்வதற்காக வாயை திறந்த மிருதுளா அடுத்த நொடி அவன் மீது வாந்தி எடுத்தாள்.

அத்தியாயம் – 25 :


ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த மிருதுவிற்கு பாத்ரூம் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இருந்தாலும் படுக்கையைவிட்டு பாத்ரூமிற்கு எழுந்து செல்ல சோம்பேறித்தனப்பட்டவள் தன் அவசரத்தை சகித்துக்கொண்டு மீண்டும் தூங்கி விட்டாள்.


ஆனால் சிறிது நேரத்திலேயே அவளுக்கு மீண்டும் விழிப்பு வந்தது. இனியும் நீண்ட நேரம் இப்படியே இருக்க முடியாது என்பதை உணர்ந்தவள் சலிப்புடன் தன் கண்களைத் பாதி திறந்தாள்.


‘நல்லா தூங்கிகிட்டு இருக்கும் போதுதான் இந்த மாதிரி பாத்ரூம் வரும்…’ என்று நினைத்தவள் அரை தூக்கத்தில் பாத்ரூம் சென்றுவிட்டு வந்தவள் மீண்டும் படுக்கையை நோக்கி சென்றாள்.


படுக்கையில் நன்றாக வசதியாக படுத்தவள் மீண்டும் தூங்க முயன்றபோதுதான் அதை உணர்ந்தாள்.


‘தலகாணி மாதிரி இல்லையே… இளம் சூட்டோட கொஞ்சம் அழுத்தமா இருக்கே…’ என்று நினைத்தவளுக்கு தூக்கம் தூக்கமாக வந்தது.


தன் கண்களைத் திறந்து அது என்னவென்பதை பார்க்க சோம்பேறித்தனபட்டவள் அதை தன் கைகளால் உணர ஆரம்பித்தாள்.


‘என்ன இது?’ என்று யோசித்தவள் அப்படியே தூங்கிவிட நினைத்தாள்.


அப்போதுதான் யாரோ ஒருவன் தன் பக்கத்தில் படுத்து இருக்கிறான் என்பதை உணர்ந்தவள் தன் கண்களை அகல விரித்தபடி தனக்கு அருகில் படுத்திருந்தவனை பார்த்தாள்.


‘தேவ்... ஆனா இவன் எப்படி இங்க?’ என்று நினைத்தவளுக்கு எதுவும் சரியாக ஞாபகத்தில் இல்லை.

எதையோ யோசித்தவள் திடீரென்று தான் அணிந்திருந்த உடையை பார்த்தாள். நேற்று அவள் அணிந்திருந்த புடவைக்கு பதிலாக இப்போது பிங்க் நிற பாத்ரோபில் இருந்தாள். சட்டென்று அவளின் பார்வை அவன் மீது சென்றது. அவனும் பாத்ரோப் தான் அணிந்திருந்தான். ஆனால் நீலநிறம்.


‘இதுக்கு என்ன அர்த்தம்? என்னோட புடவை எங்க போச்சு? அதைவிட முக்கியமா இத யார் எனக்கு போட்டுவிட்டது? இவனா? அய்யய்யோ அப்போ நேத்து நைட் அவன் என்ன முழுசா பாத்துட்டானா என்ன?’ என்று நினைத்த மிருதுளா தன் கைகளால் தன் தலையிலேயே அடித்துக் கொண்டாள்.


அவளின் பார்வை தன்னை அறியாமலேயே தேவ்வின் புறம் சென்றது.


கருகருவென்று இருந்த கேசம்… அகலமான நெற்றி… அழகாக வளைந்த புருவம்… கூர்மையான மூக்கு… இறுக்கமான உதடுகள்… என்று அவனின் ஒவ்வொரு முக அம்சத்தையும் பார்த்தவளின் உடல் நடுங்கத் தொடங்கியது.


‘ஏற்கனவே எனக்கு இவன ரொம்ப பிடிக்கும்… நைட் வேற ரொம்ப குடிச்சிட்டன்… ஒருவேளை போதையில எனக்கே தெரியாம எங்களுக்குள்ள எல்லாம் நடந்துடுச்சோ?’


மிருதுளா நீண்டநேரம் தன் மூளையை கசக்கி பிழிந்து அதைப் பற்றி யோசித்தாள் .ஆனாலும் அவளுக்கு எதுவும் ஞாபகம் வரவில்லை. அதைப் பற்றி யோசிக்க யோசிக்க அவளின் தலை வலிக்க ஆரம்பித்தது. தன் கைகளை உயர்த்தி நெற்றிப் பொட்டை அழுத்தி விட்டவள் தனக்கு அருகில் இருந்தவன் படுக்கையில் புரள்வதை கவனித்தாள்.


‘என்ன இங்கு தவிக்க விட்டுவிட்டு நிம்மதியாக தூங்கறானே… இவன என்ன பண்றது?’ என்று முணுமுணுத்த மிருதுளா “தேவ் எழுந்துரு…” என்று சத்தமாக சொன்னவள் தன் கைகளால் அவனை அடித்து எழுப்பினாள்.


“சு… விடு மிது… எனக்கு தூக்கம் தூக்கமா வருது… நேத்து நைட்டும் உன்னால நான் ஒழுங்காவே தூங்கல…” என்று சொன்னவன் மீண்டும் தூங்க முயன்றான்.


‘என்னது? என்னால நேத்து நைட் ஒழுங்கா தூங்கலையா? அப்போ நாம நெனச்சது போல நேத்து நைட் எல்லாம் முடிஞ்சிடுச்சா?’ என்று நினைத்தவள் பயத்தில் எச்சிலை விழுங்கினாள்.


அவளுக்கு பதற்றமாக இருந்தது.


“தேவ்… ஒழுங்கா எழுந்திருச்சு நேத்து நைட் என்ன நடந்துச்சுன்னு சொல்லு… முதல்ல நீ எதுக்காக என் பக்கத்துல படுத்துருக்க?” என்று மிருதுளா கேட்டாள்.


நன்றாக நிமிர்ந்து படுத்து தன் ஒரு கண்ணை மட்டும் திறந்தபடி அவளைப் பார்த்தவனுக்கு தன் விரல் நகத்தை கடித்தபடி பதற்றத்துடன் தன் முகத்தையே வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டிருந்தவளை கண்டு சிரிப்பு வந்தது.


‘கொஞ்ச நேரம் இவகிட்ட விளையாடலாம்…’ என்று நினைத்தவன் “வேற என்ன நடந்துச்சு… ஃபர்ஸ்ட் நைட் தான்…” என்று சொல்லிவிட்டு அவளைப் பார்த்து கண்ணடித்தான்.


“என்ன சொன்ன ஃபர்ஸ்ட் நைட்டா? டேய் அதெல்லாம் கல்யாணம் பண்ண புருஷன் பொண்டாட்டிக்கு நடக்கறது… நான் உன்ன லவ் கூட பண்ணல… அப்புறம் எப்படி நீ என்ன தொடலாம்… நான்தான் குடிபோதையில் இருந்தன்… உனக்கு எங்க அறிவு போச்சு…?” என்று சொன்ன மிருதுளா அருகில் இருந்த தலையணையை எடுத்து அவனை அடிக்க ஆரம்பித்தாள்.


“ புருஷன் பொண்டாட்டிக்கு நடுவுல தான் அது நடக்கணும்னு அவசியமில்லை மிருதுளா… அதுக்கு ஒரு ஆம்பளையும் பொம்பளையும் இருந்தா போதுமே… நீதான் என்ன லவ் பண்ணல… ஆனா நான் உன்ன லவ் பண்றேன்… அதனால தான் நான் நேத்து நைட் உன்கூட பர்ஸ்ட் நைட் கொண்டாடிட்டன்…” என்று அவளிடம் அடிவாங்கியவாறே சொன்னான்.


சட்டென்று அவனை அடிப்பதை நிறுத்திய மிருதுளா அழத் தொடங்கினாள்.


“ போச்சு… எல்லாம் போச்சு…” என்று முணுமுணுத்தவளின் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாக பொழிந்தது.


அவள் அடித்ததை தாங்கிக் கொண்டவனால் அவளின் அழுகையை தாங்கிக்கொள்ள முடியவில்லை.


படுக்கையிலிருந்து எழுந்த அமர்ந்தவன் அவளின் கண்ணீரை துடைத்து விட்டவாறு “நான் சும்மா உன்கிட்ட விளையாடினன் மிது… நேத்து நைட் நமக்குள்ள எதுவும் நடக்கல… ப்ளீஸ் அழாத… நீ அழுதா எனக்கு கஷ்டமா இருக்கு…” என்று சொன்னான்.


“ இல்ல… நீ பொய் சொல்ற… நான் நம்ப மாட்டன்… என் அழுகையை நிறுத்தறதுக்காக தான நீ இந்த மாதிரி சொல்ற…” என்று அவள் அழுதுகொண்டே சொன்னாள்.


“இல்ல மிதுகுட்டி… சத்தியமா நமக்குள்ள எதுவும் நடக்கல…”


“அப்போ என்னோட புடவை எங்க போச்சு… இந்த ட்ரெஸ்ஸ எனக்கு மாத்திவிட்டது நீதான… எனக்கு இத மாத்திவிடும் போது நீ என்ன முழுசா பார்த்து இருப்பியே… ஒரு பொண்ண முழுசா பாத்த பிறகும் அவளை தொடாம இருக்க நீ என்ன சாமியாரா… நீயே சொன்ன மாதிரி நீ என்ன லவ் பண்றவன்… நிச்சயம் கிடைச்ச வாய்ப்பை பயன்படுத்தி இருப்ப…” என்று தேம்பி கொண்டே சொன்னவள் அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள்.


உண்மையில் தேவ் எதுவும் நடக்கவில்லை என்று சொன்னதுமே மிருதுளா அவன் சொன்னதை நம்பி விட்டாள். இருந்தாலும் ‘எனக்கு நேற்று இரவு யார் உடை மாற்றியது?’ என்ற கேள்வியை அவனிடம் நேரடியாக கேட்க சங்கடப்பட்டவள் வேண்டுமென்றே அவன் சொன்னதை நம்பாதவளை போல தன் மனதில் இருந்ததையும் சேர்த்து கேட்டாள்.


அவளின் சூட்சமத்தை அறியாத தேவ் “ஏய்… நான் ஒன்னும் உனக்கு டிரஸ் மாத்தலடி ரிசப்ஷனுக்கு போன் பண்ணி ஒரு பொண்ண வரவழைச்சு பெட் மேல இருந்த பெட்ஷீட்டை எல்லாம் மாத்திட்டு உன்னை குளிக்க வைத்து டிரஸ் மாத்தி விட சொன்னன்… நீ ஏன் மேலயும் வாமிட் பண்ணதால நானும் குளிச்சிட்டு டிரஸ் மாத்திகிட்டன்…”


“நீ சொல்றது எல்லாம் உண்மைன்னா அப்புறம் எதுக்காக நீ என் பக்கத்துல படுத்திருந்த… சோபாவில் போய் படுத்துருக்க வேண்டியதுதானே… இல்ல… இல்ல… நீ பொய் சொல்ற… நான் நம்ப மாட்டன்…” என்று அவள் மீண்டும் அதையே சொன்னாள்.


“ஏய் லூசு… நான் சோபாவில் தான் படுத்து இருந்தேன்… நீ இருக்கியே… இவ்வளவு பெரிய பெட்ல அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் புரண்டு கிட்டே இருந்த… நான் தான் நீ கார்னற்க்கு உருண்டு போன ஒவ்வொரு முறையும் உன்ன சரியா படுக்கவச்சன்... ஒரு கட்டத்துக்கு மேல எனக்கும் தூக்கம் வந்துடுடிச்சி... நான் சோபாவுல படுத்து தூங்கும் போது நீ எங்க கீழ விழுந்துடுவியோன்ற பயத்தில் தான் உன் பக்கத்துல வந்து உன்னை கட்டிப் பிடிச்சுக்கிட்டு படுத்தன்… இதுல என்ன தப்பு கண்ட நீ… அதுதான் நான் எதுவும் நடக்கலன்னு சொல்றன் இல்ல… அப்புறமும் நம்பாமல திரும்பத் திரும்ப அதையே சொன்னா என்ன அர்த்தம்…” என்று சற்று எரிச்சலுடன் சொன்னவன் “இப்போ என்ன நடந்துச்சுன்னு நீ இப்படி அழுது கிட்டு இருக்க…” என்று சொல்லிவிட்டு அவள் மீது பரவி படர்ந்தவன் அவளின் காதுகளில் “நான் உன்ன என்ன செஞ்சி இருப்பேன்னு நீ நெனச்ச… இதுதான… சரி… நீ நான் சொல்றத நம்பல இல்லையா… அப்போ நீ நெனச்சத நான் செஞ்சு முடிச்சிடறன்... செய்யாத ஒன்னுக்கு பழிசுமக்க நான் என்ன சொம்பையா…” என்று சொன்னான்.


தேவ்வின் முகத்திற்கும் மிருதுளாவின் முகத்திற்கும் இடையே வெறும் பத்து அங்குல இடைவெளி மட்டுமே இருந்தது. அவன் மூச்சுக்காற்று அவள் முகம் எங்கும் பரவியது. மிருதுளாவின் முகம் சிவக்க தொடங்கியது.


“ விடு தேவ்… என்ன விடு… நீ சொல்றத நான் நம்பறன்…” என்று சொன்னவள் அவனைத் தன் மீது இருந்து விலக்க முயன்றாள்.


“ நான் சொன்னத நீ முதல்லயே நம்பி இருக்கணும்… இவ்வளவு நேரம் நம்பாம இப்ப நம்பறன்னு சொன்னா நான் உன்னை விட்டுடுவேனா என்ன…” என்று சொன்ன தேவ் தன் தலையை மேலும் கீழும் தாழ்த்தினான்.


அவன் உதடுகள் அவள் உதடுகளை நெருங்கிய போது மிருதுளா பதற்றத்தில் தன் கண்களை மூடிக் கொண்டாள். சில நொடிகள் காத்திருந்தவள் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை என்பதை தெரிந்த பிறகு தன் கண்களை மெதுவாகத் திறந்தாள். அடுத்த நொடி தேவ்வின் ஆழ்ந்த பார்வையில் அவளின் பார்வை சிக்கிக்கொண்டது.


அவளின் கண்களை உற்றுப் பார்த்தவன் “இங்க பார் மிது… நான் உன்ன லவ் பண்றன் தான்… நீ எனக்கு வேணும்னு என்னோட ஒவ்வொரு நாடி நரம்பும் துடிக்குது தான்… ஆனா நான் உன்ன உன் விருப்பத்தோட தான் எடுத்துக்க விரும்பினேனே தவிர உன் விருப்பம் இல்லாமலோ இல்ல நீ சுயநினைவு இல்லாம இருக்கற போதோ கிடையாது புரிஞ்சுதா…” என்று சொன்னவன் தன் தலையை தாழ்த்தி அவளின் நெற்றியில் செல்லமாக முட்டியவன் பின்னர் அவள் மீது இருந்து விலகி படுத்தான்
 

geethusri

Moderator

அத்தியாயம் - 26 :


தேவ் அவளை விட்டு விலகிய பிறகும் சற்று நேரம் சென்ற பிறகே மிருதுளா தன்னிலைக்கு வந்தாள்.


சிறிது நேரம் அமைதியாக சீலிங்கை வெறித்துக் கொண்டிருந்தவள் பின்னர் தன் கைகளால் மெதுவாக தன் நெற்றியை தொட்டாள். அவன் மூச்சுக்காற்று இன்னும் தன் முகத்தின் மீது படுவது போலவே ஒரு உணர்வு அவளை ஆட்கொண்டது. அந்த உணர்வு சுகவதையாய் இருந்தது.


'சே... இப்போ எதுக்கு விலகி படுத்தான்...' என்ற நினைப்பு அவளுக்குள் தோன்றிய நொடி விதிர்விதிர்த்து போனாள்... தன் உணர்வை அவனிடம் வெளிப்படுத்தி விடக்கூடாது என்று நினைத்தவள் தலையணையை இறுக்கிப் பிடித்து தன் உணர்வுகளை கட்டுப்படுத்தினாள்.


தன் கையை படுக்கையில் ஊன்றி அதில் தன் தலையை வைத்தவன் தன் உடலை ஒரு பக்கமாக திருப்பி மிருதுளாவை பார்த்தான்.


தன் கீழ் உதட்டை கடித்தபடி சீலிங்கை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளின் அழகில் மயங்கியவன் “இவ்வளவு பயம் இருக்கவ… எதுக்காக நேத்து நைட் நிதானம் இல்லாத அளவுக்கு குடிச்ச…” என்று மென்மையாக கேட்டவன் அவளின் பதிலை எதிர்பார்க்காமல் “இந்த காலத்துல நிறைய பொண்ணுங்க குடிக்கிறாங்க தான்… பொண்ணுங்க குடிக்கறத பத்தி நான் தப்பா நினைக்கிறவன் இல்ல... அதுக்காக தனியா வெளியில வந்துருக்க ஒரு பொண்ணு நைட் நிதானம் இல்லாத அளவுக்கு குடிக்கிறது சரி கிடையாது… தனியா இருக்கும் போது ரொம்ப கவனமா இருக்கணும் மிது… உன்னால முடிஞ்சா இனிமே குடிக்காம இரு…” என்று மென்மையான குரலில் சொன்னவன் பேசுவதை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான்.


‘அவன் சொல்றது சரிதான்… தனியா வந்த நான் இந்த அளவுக்கு குடிச்சிருக்கக் கூடாது… ஆனா என்னோட சின்ன வயசுல இருந்து இதுமாதிரி யாருமே என்கிட்ட அக்கறையா எதையும் சொன்னதில்லை… அதுக்காகவே இவன் சொன்னத நாம கேக்கலாம்…’ என்று நினைத்தவள் தேவ்விடம் ‘சரி… இனி நான் குடிக்கவே மாட்டேன்…’ என்று சொல்லப் போனாள்.


ஆனால் அதற்குள் “மிது ஒருவேளை உன்னால குடிக்கிறத நிறுத்த முடியலன்னா என்கிட்ட இன்னொரு ஐடியா இருக்கு…” என்று சொன்ன தேவ் தன் பேச்சை நிறுத்தினான்.


தேவ்விடம் சரி என்று சொல்ல போன மிருதுளா தன் தொண்டையில் இருந்த வார்த்தைகளை விழுங்கி விட்டு அவனை திரும்பி பார்த்தாள்.


அவளை பார்த்து புன்னகைத்தவன் “பேசாம என்னோட லவ்வ அக்சப்ட் பண்ணிக்கோ… நீ எங்க போனாலும் நானும் வால் பிடிச்ச மாதிரி உன் பின்னாடியே வந்துடுவேன்… அப்போ நீ எவ்வளவு குடிச்சாலும் பிரச்சனை இல்ல… நேத்து மாதிரியே நான் உன்ன தள்ளிக்கிட்டு வந்துடுவேன்… என்ன ஒன்னு அப்போ இந்த மாதிரி எதுவும் கசமுசா பண்ணாம படுத்துருக்க வேண்டிய அவசியமில்லை… நீயும் என்னை லவ் பண்றதால ஏகப்பட்ட கசமுசா பண்ணலாம்…” என்று சொல்லிவிட்டு அவளைப் பார்த்து கண்ணடித்தான்.


“யூ இடியட்… உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்ட இப்படி சொல்லுவ… என்ன பாத்தா உனக்கு எப்படி தெரியுது” என்று அவள் சொல்லிக் கொண்டே வந்த போது அவளின் பேச் சில் குறுக்கிட்ட தேவ் “குடிகாரி மாதிரி…” என்று சொல்லிவிட்டு சிரித்தான்.


“டேய் வாய மூடு… நான் ஒன்னும் குடிகாரி எல்லாம் கிடையாது… உண்மையை சொல்லனும்னா குடிச்சா எனக்கு சுத்தமா ஒத்துக்காது… அதனால நான் எந்த பார்ட்டிக்கு போனாலும் குடிக்கவே மாட்டேன்…” என்று பல்லைக் கடித்தபடி சொன்னாள்.


“ஐ...ஐ... யாருகிட்ட கதை விடற… நேத்து நைட்டு நீ மட்டையாற அளவுக்கு குடிச்சிட்டு இருந்த நிலைமையை பாத்த பிறகும் நீ சொல்றதை நான் நம்புவேனா என்ன?” என்று தேவ் சிரித்தபடி சொன்னான்.


“எல்லாம் உன்னால தாண்டா… நீ அந்த பாட்டை பாடினதும் எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு… மனசெல்லாம் பிசைய தொடங்கிடுச்சி… அதனாலதான் என்ன மறக்கற அளவுக்கு நான் குடிச்சிட்டன்… இது எல்லாத்துக்கும் நீதான் காரணம்… எதுக்காக என்னை இப்படி சித்திரவதை பண்ற… நீ இப்படி தொடர்ந்து என்ன எமோஷனலா அட்டாக் பண்ணா நானும் என்னதான் பண்ணுவன்… அதான் என்ன பண்றதுன்னு தெரியாம குடிச்சிட்டன்…” என்று கரகரத்த குரலில் சொன்னாள்.


ஒரு கணம் அவளின் கண்களை ஆழ்ந்து பார்த்த தேவ் பின்னர் தீவிரமான குரலில் “சரி இனி நான் உன்ன எந்த விதத்துலயும் எமோஷனல் அட்டாக் பண்ண மாட்டன்… ஆனா அதே சமயம் உன்ன லவ் பண்றதையும் விட மாட்டேன்… பேசாம நாம ஒன்னு பண்ணலாம்… நாம கொஞ்ச நாள் சேர்ந்து பழகலாம்… அதுக்குப் பிறகும் உனக்கு என்ன பிடிக்கலன்னா நிச்சயம் நான் உன் பக்கமே தலை வைத்து படுக்க மாட்டன்… ஆனா ஒரு விஷயத்தை நல்லா ஞாபகம் வச்சுக்கோ மிது… என் வாழ்க்கையில இனி உனக்கு மட்டும் தான் இடம் இருக்கு… நீ என் வாழ்க்கைக்குள்ள வந்தாலும் சரி… இல்லனாலும் சரி…” என்று சொன்னவன் அவளின் நெற்றியில் முத்தமிட்டான்.


தேவ் சொன்ன வார்த்தைகள் மிருதுளாவின் மனதில் ஆணி அடித்தது போல பதிந்தது. அவன் கொடுத்த முத்தத்தை அவள் கண்மூடி அனுபவித்தாள்.


அப்போது காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து தேவ்வின் போன் ஒலித்தது.


அழைப்பை ஏற்று ஃபோனை காதில் வைத்தவன் “வந்துட்டீங்களா… ஒரு நிமிஷம் இருங்க… இதோ வந்துடறன்…” என்று சொன்னவன் போனை காதில் வைத்தபடியே கதவைத் திறப்பதற்காக சென்றான்.


சில நிமிடங்களுக்குப் பிறகு அவன் மீண்டும் திரும்பி வந்தபோது அவன் கையில் ஒரு பை இருந்ததை பார்த்த மிருதுளா கண்களில் கேள்வியுடன் அவனைப் பார்த்தாள்.


“இப்படி கண்ணால கேள்வி கேட்கறதுக்கு பதிலா வாயைத் திறந்தும் கேள்வி கேட்கலாம்…” என்று சொன்னவன் “நேத்து நீ அடிச்ச கூத்துல நம்ம ரெண்டு பேரோட டிரஸ்ஸும் இப்போ போடற நிலைமையில இல்ல… நான் அத தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டுட்டன்… நம்ம ரெண்டு பேரும் இப்படியே வீட்டுக்கு போக முடியாது இல்லையா… அதான் நான் எப்பவும் டிரஸ் வாங்கற பொட்டிக்கு போன் பண்ணி உனக்கும் எனக்கும் டிரஸ் ஆர்டர் பண்ணன்… அதான் கொண்டு வந்து கொடுத்துட்டு போறாங்க…” என்று சொன்னவன் அவளிடம் ஒரு பையை கொடுத்தான்.


“எல்லாம் சரிதான்… ஆனால் காலையில எப்படி டெலிவெரி பண்ணாங்க…” என்று அவள் குழப்பத்துடன் கேட்டாள்.


“என்னது… காலையிலயா… கொஞ்சம் கடிகாரத்தை பாருங்க மேடம்… நேரம் இப்போ பன்னிரெண்டை தாண்டிடுச்சு… இவ்வளவு நேரம் கும்பகர்ணி மாதிரி தூங்கிட்டு என்னவோ சூரியன் உதிக்கறதுக்கு முன்னாடியே எழுந்தவ மாதிரி பேசாத…” என்று நக்கலாக சொன்னான்.


அதன் பிறகே மிருதுளா கடிகாரத்தைப் பார்த்தாள்…


‘ஆமா அவன் சொல்றது உண்மைதான்… மணி பன்னெண்டே கால் ஆயிடுச்சு…’ என்று நினைத்தவளுக்கு அப்போதுதான் அந்த விஷயம் ஞாபகம் வந்தது.


“அச்சச்சோ அப்பா கிட்ட நாம இன்னைக்கு பன்னெண்டு மணிக்கு பேசறதா சொல்லி இருந்தோமே… நமக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பாரே…” என்று முணுமுணுத்த மிருதுளா வேகமாக தன் போனை எடுத்து தன் அப்பாவின் எண்ணிற்கு அழைத்தாள்.


அவள் முணுத்தது தேவ்வின் காதில் விழுந்தது. அதுவரை அவளிடம் சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தவனின் முகம் இருண்டது. மிருதுளா அதை கவனிக்காமல் தன் அப்பாவின் எண்ணிற்கு அழைத்தாள்.


மறுமுனையில் அவள் அப்பாவின் செயலாளர் தான் போனை எடுத்தார்.


“சாரி மேடம் சார் உங்களுக்காக பன்னெண்டு மணியில் இருந்து வெயிட் பண்ணினார்… இப்போ ஒரு எமர்ஜென்சி கேஸ் வந்ததால அதைப் பாக்கப் போய்ட்டார்… அவர் வந்ததும் நீங்க போன் பண்ண விஷயத்தை நான் அவர்கிட்ட இன்ஃபார்ம் பண்ணிடறன்… வேற ஏதாவது முக்கியமான விஷயம் இருந்தா சொல்லுங்க… அதையும் நான் அவர்கிட்ட கன்வே பண்ணிடறன்…” என்று சொன்னார்.


“இல்ல முக்கியமான விஷயமெல்லாம் எதுவும் இல்ல… நான் அப்பா கிட்ட பேசதான் போன் பண்ணன்… அவர் ஃப்ரீயா இருக்கும்போது எனக்கு போன் பண்ண சொல்லுங்க…” என்று சொன்ன மிருதுளா சலிப்புடன் போனை வைத்தவள் தன் தலையிலேயே அடித்து கொண்டாள்.


“எல்லாமே என்னோட தப்பு தான்… நான் தான் அவர் கிட்ட சொன்ன நேரத்துக்கு போன் பண்ணாம விட்டுட்டேன்…” என்று முணுமுணுத்தவள் தேவ்வின் முகத்தை பார்க்காமல் “நான் போய் குளிச்சுட்டு டிரஸ் மாத்திட்டு வந்திடறன்…” என்று சொல்லிவிட்டு அவன் கொடுத்த பையை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்கு சென்றாள்.


அடுத்த பத்து நிமிடத்தில் உடைமாற்றிக் கொண்டு பாத்ரூமின் கதவை தட்டிய தேவ் “மிருதுளா ஒரு சின்ன ப்ராப்ளம்… நான் போயே ஆகணும்… ரூம் ரெண்ட் மகாதேவன் பே பண்ணிட்டார்… நீ பே பண்ண வேண்டிய அவசியம் இல்ல… உனக்கு பசிச்சா எதையாவது ஆர்டர் பண்ணி சாப்பிட்டுட்டு நீ கிளம்பு…” என்று உணர்ச்சியற்ற குரலில் சொன்னவன் அவளின் பதிலை எதிர்பார்க்காமல் வேகமாக அவளின் அறையை விட்டு வெளியேறினான்.


அறைக் கதவை மூடியவனின் முகம் முழுக்க வெறுப்பு மண்டியிருந்தது. உடனடியாக அங்கிருந்து செல்லாமல் ஒரு கணம் அமைதியாக அங்கேயே நின்றிருந்தவன் பின்னர் லிப்டில் ஏறி கீழ்தளத்தை அடைந்தவன் கார் பார்க்கிங்கிற்கு வந்து காரில் ஏறி அமர்ந்தான்.


ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் வைத்து பற்ற வைத்தவன் ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்தபடி புகைக்க தொடங்கினான்.


சிறிது நேரம் எதையோ யோசித்தவன் பின்னர் தன் போனை எடுத்து மகாதேவனுக்கு அழைத்து “மகாதேவன் நான் முன்ன ஒரு விஷயம் பத்தி சொல்லி இருந்தேனே… அதுக்கான ஏற்பாட்ட பண்ணிட்டீங்களா?” என்று கேட்டான்.



அத்தியாயம் - 27 :


“எல்லாமே ரெடியா இருக்கு சார்” என்று மறுமுனையில் இருந்த மகாதேவன் சொன்னார்.


ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவர் பின்னர், “சார்… நாம இந்த திட்டத்த செயல்படுத்த போறமா” என்று கேட்டார்.


“ஆமா…”


"ஆனா சார்... நீங்க அதுக்கு தேவை இருக்காதுன்னு சொன்னீங்களே..."


"இப்போ தேவை வந்துடுச்சி மகாதேவன்..."


"எப்போ செயல்படுத்த போறீங்க சார்..."


"அடுத்த மாசம்..."


“இவ்ளோ சீக்கிரமாவா” மகாதேவன் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தார்.


"ம்ம்ம்"என்று சொல்லிய தேவ் தனது தலையைத் தாழ்த்தி சிகரெட்டில் ஒரு இழுவை எடுத்தான்.


ஒரு கணம் அமைதியாக இருந்த மகாதேவன் மீண்டும் மெல்லிய குரலில் பேசினார்.

“சார்... நீங்க இதுல உறுதியா இருக்கீங்களா… எல்லாத்துக்கும் மேல தனசேகரன் தான் தப்பு பண்ணார்… அவரோட பொண்ணு மிருதுளா இல்ல… மிருதுளாக்கு அனேகமா அவளோட அப்பாவை பத்தி எதுவும் தெரிஞ்சிருக்காது… அவ”


“நான் எதையும் கேக்க தயாரா இல்ல மகாதேவன்… நான் முடிவு எடுத்துட்டன்… இனி அதை மாத்திக்க மாட்டன்… நடக்கற எதுக்கும் நான் பொறுப்பாளி கிடையாது... ஒருவேளை அவ இதுக்காக யாரையாவது குத்தம் சொல்லணும்னு நெனச்சான்னா அவ அப்பாவை தான் சொல்லணும்..." என்று சொன்ன தேவ் மகாதேவனின் பேச்சை பாதியிலேயே துண்டித்து விட்டான்.


"இந்தளவுக்கு போயே ஆகணுமா சார்"


"வேற வழியில்லை... அவளுக்கு என்ன பிடிச்சிருக்கு... ஆனாலும் என் காதல் உண்மையான்னு சந்தேகமும் இருக்கு... அந்த சந்தேகத்தை போக்கணும்னா இத விட்டா வேற வழி இல்ல..."


"ஆனா சார்... நீங்க போக கொஞ்சம் தாமதம் ஆனாலும் அவங்களுக்கு எதுவும் நடக்கலாம்..."


"அப்படியெல்லாம் நடக்காது மகாதேவன்... ஒருவேளை அப்படியே நடந்தாலும் அது அவளோட தலையெழுத்து... அதுக்கு நாம என்ன பண்ண முடியும்?" என்று அலட்சியமாக சொன்னான்.


தேவ் அப்படி சொன்னதும் மகாதேவன் தனது வாயை மூடிக் கொண்டார்.


அவருக்கு தேவ் ஏன் இவ்வாறு செய்கிறான் என்பது பற்றி தெரியும். அதனால் அவரால் ஒரு எல்லைக்கு மேல் தேவ்விடமும் மிருதுளாவிற்காக பேச முடியவில்லை.


இருபுறமும் அமைதி நிலவியது.


சிறிது நேரம் கழித்து, “சரிங்க சார்… உங்க விருப்பப்படி பண்ணிடலாம்... ஆனா இந்த திட்டத்த செயல்படுத்தும் போது… முடிஞ்ச வரைக்கும் உங்கள காயப்படுத்தாம கவனமாக இருக்கும்படி நம்ம ஆட்கள் கிட்ட சொல்றன்” என்று மகாதேவன் சொன்னார்.


“இல்ல… அப்படி மட்டும் பண்ணிடாதீங்க…” என்று எந்தவித தயக்கமும் இன்றி சொன்ன தேவ் “மிருதுளா அப்பாவியா இருக்கலாம்… ஆனா அவ புத்திசாலி… ஒருவேளை அவங்க உண்மை போலவே தத்ரூபமா நடிக்கலனா அவ அதை நம்ப மாட்டா… அதனால”

இதை சொன்னபோதே அவனின் கண்களில் கடுமை தோன்றியது. “அப்படி நடக்கும் போது… என்ன அடிக்க வேண்டிய நேரத்துல… அவங்க என்ன கடுமையா தாக்கணும்” என்றான்.


“ஆனா சார் அவங்க எல்லாம் ரொம்ப மோசமானவங்க… ஒருவேளை நான் இந்த மாதிரி இன்ஸ்டிரக்ஷன் கொடுத்தா இதனால உங்களுக்கும் பிரச்சனை வர வாய்ப்பு இருக்கு…” என்று மகாதேவன் சிறிது தயக்கத்துடன் சொன்னார்.


“பரவால்ல மகாதேவன் எது வந்தாலும் பேஸ் பண்ண நான் தயாரா இருக்கன்… ஆனா முடிவு மட்டும் நான் நினைச்ச மாதிரி எனக்கு சாதகமா வரணும்… இந்தத் திட்டத்துல மிருதுளாவுக்கு ஒரு சின்ன சந்தேகம் கூட வந்துடக் கூடாது… அவ இதை உண்மைன்னு நம்பினா தான் நான் நினைச்ச மாதிரி எல்லாம் நடக்கும்… நீங்க தயங்காம ப்ரோசீட் பண்ணுங்க…” என்று சொல்லிவிட்டு போனை அணைத்து தன் பாக்கெட்டில் வைத்தவனின் மனதில் “எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் தேவ்… ஆனாலும் நான் உன்னை லவ் பண்ண மாட்டன்… பிடிச்சவங்கள எல்லாம் லவ் பண்ண முடியுமா என்ன? எனக்காக எதையும் செய்ற… எந்த சூழ்நிலையிலும் என்ன கைவிடாத ஒருத்தன தான் நான் லவ் பண்ணுவன்… அதனால நான் நிச்சயம் உன்ன லவ் பண்ண மாட்டேன்… அதனால ப்ளீஸ் இப்படி என் பின்னாடி சுத்தி என்ன எம்பேரசிங்கா பீல் பண்ண வைக்காத… எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்… ஒரு அளவுக்கு மேல என்னால உன்னோட செய்கைகளை தாங்கிக்க முடியலடா…” என்று போதையில் உளறிய வார்த்தைகள் வலம் வந்தன.


“உனக்காக எதையும் செய்ற ஒருத்தன தான் நீ லவ் பண்ணுவ இல்லையா மிது… இந்தத் திட்டத்தை நான் ப்ரோசீட் பண்ணதுக்கு பிறகும் நீ எப்படி என்ன நம்பாம போறன்னு நானும் பாக்கறன்…” என்று முணுமுணுத்த தேவ் காரை கிளப்பினான்.


நாட்கள் அதன் போக்கில் கடந்து சென்றன. இரண்டு மாதங்கள் எப்படி உருண்டோடின என்பதே தெரியாமல் ஓடிவிட்டது. இந்த இரண்டு மாதங்களில் ஒருநாள்கூட தேவ் மிருதுளாவிற்கு பூங்கொத்து அனுப்ப தவறியதில்லை. அவன் போன் செய்த பிறகு அவளின் நாட்கள் விடிந்தன. இரவும் அவளிடம் சிறிது நேரம் பேசிய பிறகே அவன் தூங்க செல்வான்.


தேவ் தன் ஒவ்வொரு செயலிலும் தான் இன்னும் அவளை மறக்கவில்லை என்பதை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தான். ஆனால் அவளிடம் பேசும் போது அவனின் வார்த்தைகளில் அக்கறை வெளிப்படுமே தவிர காதல் வெளிப்படாமல் பார்த்துக் கொண்டான். அதனால் மிருதுளாவும் எந்தவித சங்கடமும் இன்றி அவனிடம் மனம் திறந்து பேசினாள்.


ஒரு நாள் அவன் போன் செய்யாவிட்டாலும் அந்த நாள் முழுக்க அவளுக்கு ஒரு வேலையும் ஓடாது. நாட்கள் செல்ல செல்ல தேவ்வை தான் காதலிக்க தொடங்கி விட்டோம் என்பதை அவள் புரிந்து கொண்டாள். இருந்தாலும் மனம் திறந்து அதை அவனிடம் சொல்வதற்கு ஏதோ ஒன்று தடையாக இருந்தது. அது என்னவென்று அவளுக்கு புரியவில்லை.


ஒருவித தயக்கத்துடனும் குழப்பத்துடனும் அவள் தன்னுடைய நாட்களை கடத்திய போது தான் அவள் தோழி அமிர்தாவின் திருமணம் வந்தது.


அன்று காலையில் அவளுக்கு வழக்கம்போல தேவ் போன் செய்தான்.


“குட்மார்னிங் மிது குட்டி…” வழக்கத்தை விட தேவ்வின் குரல் உற்சாகத்துடன் ஒலித்தது.


“குட் மார்னிங் தேவ்… நேத்து நைட் ரொம்ப வேலையா… போன் பண்ணாம மெசேஜ் மட்டும் அனுப்பி விட்டுருக்க…”


“ஆமா மிது… ரொம்ப முக்கியமான வேலைகளை முடிக்க வேண்டி இருந்தது… அதான் உன் கிட்ட கூட பேச முடியல… நீ என் போனுக்காக வெயிட் பண்ணுவேன்னு தான் மெசேஜ் பண்ணன்… ரொம்ப நேரம் வெயிட் பண்ணியா சாரிடா…”


“எதுக்கு தேவ் சாரி கேக்கற… உன் சாரிய நீயே வச்சிக்கோ… ஆனா இப்போ எல்லாம் நீ அடிக்கடி நைட் நிறைய நேரம் கண்முழிச்சி வேலை பாக்கற… காலையிலயும் சீக்கிரமே எழுந்து ஆபீஸ் போய்டற… இப்படியே போனா உடம்பு என்னத்துக்கு ஆகும்…” என்று கவலையுடன் கேட்டாள்.


“இன்னும் கொஞ்ச நாளைக்கு என்னால எதையும் கவனிக்க முடியாது இல்லையா மிது…. அதனாலதான் நான் என்னால முடிஞ்சளவு நான் பாக்க வேண்டிய வேலை எல்லாத்தையும் சீக்கிரம் முடிக்கிறேன்…” என்று அவன் வாய் தவறி உளறினான்.


“என்ன தேவ்? எதனால இன்னும் கொஞ்ச நாளைக்கு உன்னால எந்த வேலை பார்க்க முடியாதுன்னு சொல்ற…” என்று அவள் கேட்டதும் சுதாரித்துக் கொண்டவன் “அது வந்து மிது… ஒரு பிசினஸ் ட்ரிப்காக நான் பாரின் போக வேண்டி இருக்கு… அதான் அப்படி சொன்னன்…” என்று சமாளித்தவன், “சரி இன்னைக்கு உன்னோட ப்ரோக்ராம் என்ன?” என்று கேட்டான்.


“புதுசா எதுவும் இல்ல வழக்கம் போல தான்…” என்று சொன்னவளுக்கு அப்போதுதான் அந்த விஷயம் ஞாபகத்திற்கு வந்தது.


“அச்சச்சோ நான் சுத்தமா மறந்தே போய்ட்டன் தேவ்… இன்னைக்கு என் ஃப்ரெண்ட் அமிர்தாவோட ரிசப்ஷனுக்கு நான் ஈவினிங் போறன்…” என்று சொன்னாள்.


‘எனக்குதான் இத பத்தி ஏற்கனவே தெரியுமே’ என்று உள்ளுக்குள் நினைத்தவன் வெளியே ஏதும் அறியாதவன் போல “ஓஹ் அப்படியா… ரிசப்ஷன் எங்க நடக்குது…?” என்று கேட்டான்.


“மண்டபம் பெயர் சரியா ஞாபகத்துல இல்ல… ஈசிஆர் ரோடுல இருக்க மண்டபம்னு பத்திரிக்கையில் பார்த்ததா ஞாபகம்…”


“மண்டபம் பேர கூடவாடி மறப்ப… எங்க போறோம்னு தெரியாம எப்படி போவ” என்று தேவ் நக்கலாகக் கேட்டான்.


“டூ வீக்ஸ் பிபோர் பாத்தது அதான் ஞாபகம் இல்ல… கிளம்பும்போது பாத்துக்கிட்டா போச்சு… போகும் போது பாக்க மறந்துட்டாலும் பிரச்சனை இல்ல… அவ இன்விடேஷன் வாட்ஸ்அப்ல இருக்கு…” என்று அவள் அலட்சியமாக பதில் சொன்னாள்.


“இவ்வளவு அலட்சியம் நல்லதுக்கு இல்ல மிது…” என்று சொன்ன தேவ் பின்னர் “சரி எப்போ கிளம்புற? எப்படி போற?” என்று கேட்டான்.


“ஆபீஸ் முடிஞ்சு வந்துதான் கிளம்பி போகணும்… ஸ்கூட்டில தான் போலாம்னு இருக்கன் தேவ்… பஸ் நமக்கு செட்டாகாது… ஆட்டோ, கார் எதையாவது புக் பண்ணி போலாம்னாலும் பீக் ஹவர்ல அதெல்லாம் உடனடியா கிடைக்குமான்னு தெரியாது… அதான் ஸ்கூட்டிலயே போலாம்னு முடிவு பண்ணிட்டன்…” என்று அவள் சொன்னதும் அவனும் மறுப்பு எதுவும் சொல்லாமல் “சரி பார்த்து பத்திரமா போயிட்டு வா… எனக்கு இன்னொரு லைன்ல போன் வருது பை...” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தவனின் கண்களில் வெறுப்பு மண்டியிருந்தது.


'ஸ்கூட்டியில போறியா மிது... ரொம்ப நல்லது... மீன் தான வலைய தேடி வந்தா எனக்கு தான் சௌகர்யம்... இருக்குடி இன்னைக்கு உனக்கு ஒரு ஷாக் டிரீட்மெண்ட்...'
 

geethusri

Moderator

அத்தியாயம் - 28 :


இரவு பத்து மணி…


மண்டபத்தில் இருக்கின்ற பார்க்கிங்கை நோக்கி மிருதுளா நடந்து கொண்டு இருந்தாள். அப்போது அவளின் போன் ஒலித்தது. தன் கைப்பையில் இருந்த போனை எடுத்து அதன் திரையில் வந்த பெயரை பார்த்தவளின் இதழ்களில் இளநகை தோன்றியது.


அழைப்பை ஏற்றவள் “சொல்லு தேவ்…” என்றாள்.


“எங்க இருக்க? கிளம்பிட்டியா?” என்று அவன் கேட்டதும்


“இன்னும் மண்டபத்தில் தான் இருக்கன்… இப்போ கிளம்பிடுவன்…” என்று சொன்னாள்.


“சரி பாத்து பத்திரமா போ… வீட்டுக்குப் போனதும் மறக்காம எனக்கு மெசேஜ் போட்டுடு…” என்று சொன்னவன் அழைப்பை துண்டித்தான்.


ஒரு புன்னகையுடன் தன் ஸ்கூட்டரை கிளப்பிய மிருதுளா ஈசிஆர் ரோட்டில் பயணிக்கத் தொடங்கினாள். பைபாஸில் ஊர்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் அந்த நேரத்திலும் ஓரளவு ஆள் நடமாட்டம் இருந்தது. ஆனால் ஒரு ஊருக்கும் மற்றொரு ஊருக்கும் இடையில் இருந்த தூரத்தில் சுத்தமாக ஆள் நடமாட்டமே இல்லை.


அங்கு நிலவிய சூழல் மிருதுளாவிற்கு பயத்தை ஏற்படுத்தினாலும் அவள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தொடர்ந்து பயணித்தாள்.


‘பேசாம ஒரு காரையோ ஆட்டோவையோ புக் பண்ணி வந்துருக்களாம்… வரும்போது கார் கிடைக்க எவ்வளவு நேரம் ஆகுமோன்னு நெனச்சி ஸ்கூட்டர்ல வந்தது ரொம்ப தப்பா போச்சு… சுற்றிலும் ஒரு ஈ காக்கா கூட இல்லை… நல்லவேளை ஒன்னு ரெண்டு வண்டியாவது போகுதே…’ என்று தனக்குத்தானே அவள் முணுமுணுத்துக் கொண்டபோது திடீரென்று அவளின் ஸ்கூட்டர் அவள் கைகளில் தடுமாறியது. ஏற்கனவே ஒரு வித பயத்துடன் ஸ்கூட்டரை ஓட்டிக் கொண்டு இருந்தவள் அதைக் கீழே போட்டு விட்டு தானும் கீழே விழுந்தாள்.


‘என்ன ஆச்சு திடீர்னு எப்படி என்னோட ஸ்கூட்டர் ஸ்கிட் ஆச்சு?” என்று அவள் யோசிக்கும் போதே அருகிருந்த முந்திரி தோப்பில் இருந்து மாமிச மலைகள் போல இருந்த ஐந்தாறு பேர் அவளை நோக்கி வந்தனர்.


அவர்களைப் பார்த்ததும் பயத்தில் எச்சிலை விழுங்கியவள் தட்டுத் தடுமாறி எழுந்து நின்றாள்.


அந்த நேரத்தில் மிருதுளாவின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. ஏதோ ஒரு பயங்கரமான உணர்வில் அவள் மார்பு பிசைந்தது.


‘இவங்கள பாத்தா ரொம்ப மோசமானவங்க மாதிரி தெரியுது… நாம வேற இப்படி தனியா மாட்டிக்கிட்டிருக்கோம்… இவங்க கிட்ட இருந்து தப்பிச்சு ஓடலாம்னா இந்தப் புடவையை கட்டிக்கிட்டு நாம கொஞ்சம் தூரம் ஓடறதுகுள்ளேயே நிச்சயம் நம்மள பிடிச்சிடுவாங்க… யாரோட உதவியாவது இருந்தாதான் இவனுங்க கிட்ட இருந்து தப்பிக்க முடியும்…’ என்று நினைத்தவள் உடனடியாக தன் கைப்பையை திறந்து போனை எடுத்தாள்.


தட்டுத் தடுமாறி போனை எடுத்து அவள் யாருக்கோ அழைக்க முயன்ற போது திடீரென்று ஒரு கை அவளின் கையில் இருந்த போனை பறித்தது. பின்னர் அந்த கைகளுக்கு சொந்தக்காரன் மிருதுளாவை பிடித்து இழுத்து தன் பிடிக்குள் கொண்டு வந்தான். அவன் செய்கையில் பயந்துபோன மிருதுளா கத்தத் தொடங்கினாள்.


“பரவால்லடா பாப்பா கத்தும் போதே குரல் கேட்க இவ்வளவு நல்லா இருக்கு… இவ வாயால என்ன மாமான்னு கூப்பிட்டா எவ்வளவு நல்லா இருக்கும்?” என்று அந்த மாமிச மலை தனக்கு அருகில் நின்றிருந்தவனை பார்த்து கேட்டு விட்டு உரக்க சிரித்தான்.


“செம குஜாலா இருக்கும்… வேணும்னா பாப்பா கிட்ட சொல்லி ஒரு தடவை உன்னை மாமான்னு கூப்பிட சொல்லு தல…” என்று அவனும் முன்னவனுக்கு ஒத்து ஊதினான்.


“அப்படின்ற… சொல்லிட்டா போச்சு… பாப்பா எங்க உன் வாயால என்னை மாமானு கூப்பிடு…” என்று அவன் சொன்னதும்


“வாய மூடுடா நாயே… நான் செத்தாலும் என் வாயிலிருந்து நீ எதிர்பார்க்கிற வார்த்தை வராது… ஒழுங்கு மரியாதையா என்ன விடுடா…” என்று அவனைப் பார்த்து கத்தியவள் அவன் கையில் இருந்து தன் கையை விடுவிக்க போராடினாள்.


“ரொம்ப தைரியம் தான் உனக்கு… சின்ன பொண்ணாச்சேன்னு பாவம் பாத்து சாப்டா பேசினா நீ என்னையே வாடா போடான்னு சொல்றியா? நீ இப்போ என்கிட்ட மாட்டிகிட்டு இருக்க… அது உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா? ஒழுங்கு மரியாதையா நீ எங்களுக்கு ஒத்துழைச்சா உன் உடம்பு புண்ணாகாம தப்பிக்கும்… எங்க வேலை முடிஞ்சதும் நாங்களும் உன்னை எந்த சேதாரமும் இல்லாம அனுப்பி வச்சிடுவோம்… அப்படி இல்லன்னா உடம்புல இருக்க துணி எல்லாத்தையும் உருவிட்டு இந்த ஊரே உன்ன வேடிக்கை பாக்கிற மாதிரி தான் அனுப்பி வைப்போம்… பாப்பாவுக்கு எப்படி திரும்பி போக வசதின்னு நீயே முடிவு பண்ணிக்கோ…” என்று சொன்னவன் அவளை இழுத்துக் கொண்டு முந்திரி தோப்பிற்குள் நுழைந்தான்.


அவனுக்குப் பின்னால் அவனுடைய ஆட்களும் சென்றனர். தோப்பிற்குள் சென்றவன் மிருதுளாவை ஒரு சுழற்று சுழற்றி கீழே தள்ளியதும் அவள் இரண்டடி தூரம் சென்று விழுந்தாள். அவளால் உடனடியாக எழுந்து கொள்ள முடியாமல் தலை சுற்றத் தொடங்கியது.


மெதுவாக மிருதுளாவை நோக்கிச் சென்ற அந்தக் கூட்டத்தின் தலைவன் தரையில் கையை ஊன்றி எழ முயன்ற மிருதுளாவை கீழே தரையில் சாய்த்து விட்டு அவள் மீது வீழ்ந்தான்.


பின்னர் தன் கைகளால் அவளின் முக வடிவை அளந்தவன் “பரவால்ல பார்க்க அழகா தான் இருக்க…” என்று சொல்லிவிட்டு அவளின் உதட்டில் முத்தம் கொடுக்க முயன்றான்.


மிருதுளா தன் முகத்தை திருப்பி தன் எதிர்ப்பை காட்டினாள்.



“என்னடி என்கிட்டயே திமிர் காட்ரியா? சின்னப் பொண்ணாசேன்னு பாத்தா ஓவரா பண்ற…” என்று சொன்னவன் அவளின் புடவையை உறுவினான்.



அதன் பின்னர் அவன் தன் கண்ணில் பட்ட இடமெல்லாம் மிருதுளாவின் உடலில் முத்தமிடத் தொடங்கினான்.


மிருதுளா அவனிடமிருந்து விடுபட தன்னால் முயன்றவரை போராடினாள். ஆனால் அவள் எவ்வளவு போராடியும் அவனை தன்னிடமிருந்து விலக்க முடியவில்லை. யானை போல இருந்த அந்த ஆளின் முன்பு அவள் பூனை போல் இருந்தாள். அவளின் தாக்குதல்கள் எதுவும் அவனை எந்த விதத்திலும் பாதித்ததாக தெரியவில்லை.


அவன்மீது இருந்து அடித்த சிகரெட்டின் கடினமான நாற்றம் அவளின் நாசிக்குள் நுழைந்தது. அவனது கரடுமுரடான கைகள் அவளின் உடல் முழுவதும் அலைந்தது.


அவன் தன்னுடைய முழு வலிமையையும் பயன்படுத்தி அவளின் ஜாக்கெட்டை கிழித்து தூர தூக்கி போட்டான்.


கண்கள் முழுக்க பயத்துடனும் மனம் முழுக்க திகிலுடனும் இருந்தவளின் உடல் நடுங்கியது. அவள் கண்களில் இருந்து கண்ணீர் அருவியென பொழிந்தது.


‘இல்ல இப்போ நான் அழக்கூடாது… முடிந்த அளவு இவன்கிட்ட இருந்து தப்பிக்க போராடணும்…” என்று தனக்குத் தானே தைரியம் சொல்லிக் கொண்டவள் மீண்டும் தன் சக்தி அனைத்தையும் ஒன்று திரட்டி தன் நகத்தால் அவன் முதுகில் கீறினாள்.


மிருதுளாவின் அழகில் லயித்திருந்தவன் “என்ன பாப்பா… தப்பிக்க ரொம்ப கஷ்டப்படுற போல… நீ என்ன முயற்சி பண்ணாலும் என் கிட்ட இருந்து தப்பிக்க முடியாது… எதுக்காக இவ்வளவு கஷ்டப் படற… பேசாம நீயும் என் கூட சேர்ந்து இந்த சுகத்தை அனுபவி… ரொம்ப நல்லா இருக்கும்…” என்று சொல்லிவிட்டு மீண்டும் அவளில் மூழ்கினான்.


மீண்டும் போராடுவது இப்போது எந்த விதத்திலும் பயனளிக்காது என்று அவளுக்கு புரிந்தது. இருந்தாலும் அவள் அதை பொருட்படுத்தாமல் தன் கண் முன்பு இருந்த அவனின் கன்னத்தில் கடிக்க ஆரம்பித்தாள்.


அதில் கோபமடைந்தவன் சற்றும் இரக்கமின்றி மிருதுளாவின் முகத்தில் அறைந்தான். அவனின் அந்த ஒற்றை அடியில் மிருதுளாவின் காதுகளில் “நொயிங்” என்ற சத்தம் கேட்டது… அவளின் முகம் திகுதிகுவென வலியில் எரிய ஆரம்பித்தது… ஆனாலும் அவள் பின்வாங்கவில்லை…


அவன் கிட்டத்தட்ட மிருகமாக மாறி விட்டான் என்று அவளுக்கு நன்றாக புரிந்தது. இருந்தாலும் அவள் தன்னுடைய வலிமையை எல்லாம் ஒன்று திரட்டி மீண்டும் அவனை கடுமையாக தாக்கத் தொடங்கினாள்.


“சொன்ன பேச்சைக் கேட்க மாட்ட நீ…” என்று சொல்லிவிட்டு அசிங்கமான வார்த்தைகளால் அவளை திட்டியவன் மீண்டும் அவளின் கன்னத்தில் ஒரு அடி வைத்தான்.


அதனால் ஏற்பட்ட தீவிர வலியில் மிருதுளாவிற்கு மயக்கம் வரும் போல இருந்தது. சிறிது நேரம் வேரறுந்த மரம் போல அப்படியே கிடந்தவள்… பின்னர் மெதுவாக தன் நிலைக்கு திரும்பினாள்.


அவன் தனது பற்களைக் கடித்தபடி சொல்வது அவளின் காதுகளில் கேட்டது. “நீயே எனக்கு ஒத்துழைச்சா நல்லது… அப்படி இல்லன்னா நடக்கற சேதாரத்துக்கு நீ என்ன குறை சொல்லக் கூடாது” என்று சொன்னவன் மிருதுளாவின் உடலின் மீது தனது உடலை அழுத்தினான்.


ஏற்கனவே நீண்ட நேரம் வீணடிக்கப்பட்டதால்… அவர்கள் யாரிடமாவது சிக்கிக் கொள்வார்களோ அல்லது போலீஸ் வந்துவிடுவார்களோ என்று அவனின் தோழர்கள் பயந்தனர். மிருதுளாவின் மீது படர்ந்திருந்த அந்த ஆளும் மிகவும் அவசரபட்டான்.



“விட்டுடு… ப்ளீஸ் என்ன விட்டுடு… நான் உன்கிட்ட கெஞ்சி கேட்டுக்குறன்…. தயவு செஞ்சு விட்டுடு” என்று அவள் கதற ஆரம்பித்தாள்.


ஆனால் அவளைச் சுற்றி நின்றிருந்த பொறுக்கிகள்… அவளின் கதறல் அவர்களின் காதுகளில் விழாதது போல அவளை புறக்கணித்தனர். அவள் கதறலை கேட்டு அவர்களில் ஒருவன் சிரிக்கக் கூட செய்தான்.


மற்றொருவன், “அந்தப் பொண்ணு ரொம்ப நல்லா இருக்கா… அவ ஒல்லியா இருந்தாலும்… அவளோட உடம்புல இருக்க வேண்டியதெல்லாம் இருக்க வேண்டிய இடத்துல நல்லாவே இருக்கு… அவளோட இடுப்பு துடுப்பு மாதிரி இருக்கு” என்று மிருதுளாவை கமெண்ட் செய்தான்.


ஒரு பெண்ணின் கற்பு சூறையாடப்படுவதை வக்கிர மனம் கொண்ட நாய்கள் பார்த்து ரசிக்க காத்திருந்தனர்.



முற்றிலும் உடைந்து போன மிருதுளா, “ப்ளீஸ்… தயவு செஞ்சு என்ன விட்டுடுங்க… உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க… நான் அதை உங்களுக்கு தரன்… உங்களுக்கு பணம் வேணும்னா சொல்லுங்க… எவ்வளவு பணம் வேணும்னாலும் நான் உங்களுக்கு தரன்… ப்ளீஸ் என்ன விட்டுடுங்க… தயவுசெஞ்சு என்ன விட்டுடுங்க” என்று அழுதபடியே அவர்களை நோக்கி கெஞ்சினாள்.



ஆனால் அவளின் அழுகை அங்கிருந்த யாரையும் அசைக்கவில்லை.


மிருதுளா பயந்துவிட்டாளா அல்லது தனது நம்பிக்கை முழுவதையும் இழந்துவிட்டாளா என்று தெரியவில்லை. ஏனென்றால் அவளின் முகம் வெளிறிக் காணப்பட்டது. அவளின் கண்கள் கண்ணீரை அருவியாய் பொழிந்தன. அவளால் தனது உடலை அசைக்கக்கூட முடியவில்லை.


அவள் நடப்பதை தடுத்து நிறுத்த விரும்பினாள். ஆனால் அவளால் சிறிது கூட அசைய முடியவில்லை.


அவள் அவர்களிடம் கெஞ்ச நினைத்தாள். ஆனால் அவளின் தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்டதைப் போல உணர்ந்தவளின்… தொண்டை பேச முடியாத அளவுக்கு வறண்டிருந்தது.


இப்போது என்ன நடக்கப்போகிறது என்று அவளது மனதிற்கு நன்றாக புரிந்தது… அவளின் கன்னித்தன்மையை அந்தப் பொறுக்கி அழிக்கப் போகிறான்?


‘அய்யோ கடவுளே... ஏன் எனக்கு இந்த நெலமை... என்ன மட்டுமே உலகமா நெனைக்கிறவன காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா வாழணும்னு நெனைச்சேனே... ஆனால் இப்போது எனக்கு என்ன நடக்குதுன்னு பாத்தியா? இனி நான் எதிர்பார்த்த வாழ்க்கையை என்னால எப்போதாவது வாழ முடியுமா?’ என்று உள்ளுக்குள் புலம்பிய மிருதுளாவிற்கு தன்னுடைய கனவு வாழ்க்கையை பற்றி நினைக்க நினைக்க அவளின் கண்களில் இருந்து கண்ணீர் அருவியென பொழிந்தது.


அப்போது திடீரென்று யாரோ யாரையோ வேகமாக உதைத்தது போல சத்தமும்… அதைத் தொடர்ந்து காதை பிளக்கும் அலறலும் கேட்டது. மிருதுளா ஈரம் படிந்த கண்ணிமைகளை மெதுவாகத் திறந்தாள்.


'அப்பாடி இனி எனக்கு பயமில்ல... நிச்சயம் நான் தப்பிச்சிடுவன்... யாரோ என்ன காப்பாத்த வந்துட்டாங்க...' என்று நினைத்தவள் அருகே கிடந்த தன் புடவையால் தன்னை மூடியவள் ஒரு ஓரமாக நகர்ந்தாள்.


அவளைத் தாக்கியவன் மோசமாக அடித்து நொறுக்கப்பட்டு… அவளுக்கு அருகில் தரையில் கிடந்தான்… அவனின் ஆட்கள் கருப்பு சூட் அணிந்து இருந்தவனை சுற்றி வளைத்தனர்.


அவனின் முதுகுப்புறம் மட்டுமே தெரிந்ததால்… மிருதுளாவால் அவனை அடையாளம் காண முடியவில்லை… அப்போது அவனை சுற்றி இருந்தவர்களில் ஒருவன் முதலில் அவனைத் தாக்க முனைந்தபோது… அவன் தனது முகத்தைத் திருப்பி அவனுக்கு பதிலடி கொடுத்தான்.


அப்போதுதான் மிருதுளா அது தேவ் என்று உணர்ந்தாள். அடுத்த நொடி அவள் மனம் நிம்மதியடைந்தது. அவன் எப்படி இங்கு வந்தான்? என்பதை பற்றியெல்லாம் அவள் யோசிக்கவில்லை.


அப்போது தீடிரென்று ஒரு கோபமான கர்ஜனையை அவள் கேட்டாள்.


“உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் விசயத்துல தலையிடுவ… செத்துத் தொலடா நாயே” என்ற குரல் அவள் காதில் விழுந்தது.


அவள் தனது தலையை திருப்பிய போது… செங்கலை தூக்கிக் கொண்டு சென்ற தேவ்வின் தலையின் பின்புறத்தை கடுமையாக தாக்கியதை பார்த்தவள் உறைந்து விட்டாள்.


ஆறடி உயரத்தில் உடற்பயிற்சியால் முறுக்கேறிய புஜங்களுடன் இருந்த தேவ் ஒருகணம் திணறியவன் பின்னர் தனது கைகளால் தன் பின்புற தலையை தொட்டான். அவன் கைகள் முழுக்க உடனடியாக ரத்தமானது. தன் தலையில் இருந்து அவன் தன் கைகளை எடுத்து பார்ப்பதற்கு முன் அவன் சுயநினைவற்று கீழே விழுந்தான்.


சுமார் மூன்று வினாடிகளுக்கு பிறகு… தேவ்வின் தலையிலிருந்து வழிந்த ரத்தத்தால் அந்த இடம் முழுக்க ரத்த வெள்ளமாக காட்சியளித்தது.


அந்த சத்தம் அந்த தோப்பில் இருந்த கயவர்களை எச்சரித்தது.


அதுவரை அங்கு நிகழ்ந்தவற்றை கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த மிருதுளா தன் கைகளால் சட்டென்று வாயை பொத்தினாள்.


அவள் பெண்மையை சூறையாட நினைத்தவர்கள் அவனை மிகவும் கடினமாக தாக்க நினைத்திருக்கவில்லை.


தரை முழுக்க பரவியிருந்த ரத்த வெள்ளத்தில் தேவ் விழுந்து கிடப்பதைப் பார்த்தவர்கள் ஒவ்வொருவரின் முகத்திலும் பயம் அப்பட்டமாக தெரிந்தது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள் பின்னர் தரையில் விழுந்து கிடந்த தங்களின் ஆட்களுக்கு எழுந்து கொள்ள உதவி செய்தவர்கள் அந்த தோப்பை விட்டு வேகமாக ஓடிச் சென்றனர்.


சிறுது நேரத்தில் தன்னிலைக்கு திரும்பிய மிருதுளா தரையில் அசைவற்றுக் கிடந்த தேவ்வை பார்த்து அழுதவள், “தேவ்” அழுகையுடன் அவன் பெயரை அழைத்தாள்.


ஆனால் அவனிடமிருந்து எந்த சத்தமும் வரவில்லை.


“தேவ்” என்று மீண்டும் அழைத்த மிருதுளா தரையில் ரத்த வெள்ளத்தில் அசைவற்று கிடந்த தேவ்வை வெறித்துப் பார்த்தாள். அவனிடம் அசைவு இல்லாததை பார்த்து பயந்து போனவளின் கால்கள் நடுங்க ஆரம்பித்தன.


பயத்தில் இருந்த மிருதுளா நடுங்கிய குரலில், “தேவ்… தேவ்… தேவ்…” என்று அவன் பெயரை மீண்டும் மீண்டும் அழைத்துப் பார்த்தாள்.


தன் கண்களை இறுக்க மூடி இருந்தவன் அவளின் குரலுக்கு பதில் அளிக்கவில்லை.


அவன் முகமெல்லாம் ரத்த பசையின்றி பயமுறுத்தும் அளவிற்கு வெளிறிவிட்டது. ரத்தத்தில் நனைந்திருந்த அவனின் தலைமுடி நெற்றியில் ஒட்டி இருந்தது. மிருதுளா நடுங்கும் தன் விரல்களால் அவனை மென்மையாக தொட்டாள். அவன் கண் இமைகள் கூட அசையாததை பார்த்தவளுக்கு சுத்தமாக நம்பிக்கை போய்விட்டது.


தனக்கும் முதலுதவி செய்ய தெரியும்... அவனுக்கு முதலுதவி செய்ய வேண்டும் என்ற நினைப்பு சிறிதுமின்றி அவன் இருந்த நிலையை பார்த்து பயந்து போய் அவள் அழுது கொண்டிருந்தாள்.


அப்போது அங்கு வந்த மகாதேவன் தேவ் இருந்த நிலையை பார்த்து பயந்தவர்,"அய்யயோ தேவ் சார்க்கு என்னாச்சு மிருதுளா?" என்று பதற்றத்துடன் கேட்டார்.


மிருதுளா எதுவும் சொல்லாமல் அழுது கொண்டிருந்தாள்.


அவளிடம் இருந்து பதிலை எதிர்பார்க்காமல் தன்னுடைய போனை எடுத்து அம்புலன்சுக்கு போன் செய்தவர் பின்னர் மிருதுளாவின் அருகில் வந்தார்.


தேவ்வின் நிலையை பார்த்த மகாதேவனுக்கு அவன் உயிருக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற கவலை ஏற்பட்டது.


மிருதுளாவிற்கு முதலுதவி செய்ய தெரியும் என்ற விஷயம் அப்போதுதான் அவர் நினைவுக்கு வந்தது. உடனடியாக அவளின் அருகில் சென்றவர்" மிருதுளா உனக்கு முதலுதவி எல்லாம் பண்ண தெரியுமேம்மா... கொஞ்சம் தேவ் சார்க்கு முதலுதவி பண்ணேன்..." என்று சொன்னார்.


அவர் சொன்னது அவள் காதில் விழுந்தது போலவே தெரியவில்லை. அழுது கொண்டிருந்தாளே தவிர அவளிடம் வேறு எந்த எதிர்வினையும் இல்லை.


மிருதுளாவின் தோளை பிடித்து உலுக்கியவர்," இப்படி அழறதால எந்த பிரயோஜனமும் இல்லமா... அவர் தலையில இருந்து ரத்தம் நிக்காம போய்கிட்டு இருக்கு... ப்ளீஸ் ஏதாவது பண்ணு..." என்று சொன்ன பிறகே அவளுக்கு தேவ்வின் நிலை புத்தியில் உரைத்தது.


அடுத்த நொடி தரையில் மண்டியிட்டு அமர்ந்தவள் தன் கைகளை தேவ்வின் மூக்கின் அருகில் வைத்து மூச்சுக்காற்று வருகிறதா என்று சரி பார்த்தாள். பின்னர் அவன் கைகளைப் பிடித்தவள் நாடி துடிப்பு இருக்கிறதா என்று பார்த்தாள்.


அவன் உயிர் போகும் ஆபத்தில் இல்லை என்பதை உறுதிப்படுத்திய பிறகு… தான் போர்த்தியிருந்த புடவையின் ஒரு பகுதியை விரைவாக கிழித்து எடுத்தவள் தேவ்வின் தலையின் மீதிருந்த காயத்தில் அதை இறுக்கமாக கட்டினாள். இது ரத்தம் கசிவதை தடுக்க வில்லை என்றாலும் ரத்தப்போக்கை சற்றாவது குறைக்கும். அவள் எதிர்பார்த்தபடியே ரத்தப்போக்கு சற்று குறைந்தது.


அவள் இருந்த கோலத்தை பார்த்த மகாதேவன் தன்னுடைய சட்டையை கழற்றி அவளிடம் கொடுத்தவர் "தேவ் சார் நல்லா இருக்கார் தானே?" என்று கேட்டார்.


சட்டையை வாங்கிய மிருதுளா அவரை பார்த்து தலையசைத்தவள் பின்னர் அருகில் இருந்த மரத்தை நோக்கி நடந்தாள். அந்த மாமிச மலை அவளை சுழற்றி கீழே தள்ளிய போது அவள் முழங்காலில் காயம் ஏற்பட்டு இருந்ததால் அவளால் விரைவாக நடக்க முடியவில்லை.


சில நிமிடங்களில் சட்டையை போட்டு அதன் மீது புடவையை கட்டிக்கொண்டு வந்தவள் தேவ்வின் அருகில் மண்டியிட்டு அமர்ந்தாள். தன் கண்களை கூட சிமிட்டாமல் மயங்கிக் கிடந்தவனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள் அங்கு ஆம்புலன்ஸ் வந்ததும்தான் தரையில் இருந்து எழுந்தாள்.


ஆம்புலன்சில் வந்த இருவர் தேவ்வை ஸ்டக்சரில் வைத்து தூக்கி சென்று ஆம்புலன்சில் ஏற்றினர். பின்னர் அவளும் ஆம்புலன்சில் ஏறினாள்.


ஆம்புலன்சில் ஏறியவுடன் நர்ஸ் தேவ்வின் தலையிலிருந்து வெளிவரும் ரத்தப்போக்கை நிறுத்த முதலுதவி செய்ய ஆரம்பித்தார். தேவ்வின் அருகில் அமர்ந்து இருந்த மிருதுளா அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.


பின்னர் அவள் நிமிர்ந்து பார்த்த போது அங்கிருந்த கண்ணாடியில் அவள் தனது பிம்பத்தை கண்டாள். அவள் முகத்தில் ஒரு பாதி வீங்கியிருந்தது. அவளுடைய தலைமுடி கலைந்து கிடந்தன. அவளின் முழங்கால்களில் காயங்கள் ஏற்பட்டிருந்தன. சிறிது நேரம் தனது பிம்பத்தையே வெறித்து பார்த்தவள் பின்னர் கண்ணாடியில் இருந்த தனது பார்வையை விலக்கினாள்.
 
Last edited:

geethusri

Moderator

அத்தியாயம் - 30 :​


அடுத்த பத்து நிமிடத்திற்குள்ளேயே ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு வந்து விட்டது.


ஆம்புலன்ஸ் வந்து நின்றதும் உடனடியாக அதன் கதவு திறக்கப்பட்டு ஸ்டெச்சரை கீழிறக்கிய மருத்துவமனை ஊழியர்கள் தேவ்வை மருத்துவமனைக்குள் கொண்டு சென்றனர்.


மிருதுளா தேவ்வை விட்டு ஒரு அடி கூட நகரவில்லை. ஆம்புலன்சில் இருந்து கீழே இறங்கியவள் தேவ்வை பின்தொடர்ந்து சென்றாள். அதற்குள் மகாதேவனும் அங்கு வந்துவிட்டார்.


தேவ்வை எமர்ஜென்சி வார்டில் அட்மிட் செய்தவர் பின்னர் நேராக சென்று சீப் டாக்டரை பார்த்தார். அடுத்த சில நிமிடங்களுக்குள் சீப் டாக்டரே தேவ்வை பரிசோதிக்க நேரில் வந்து விட்டார்.


எமர்ஜென்சி வார்டுக்கு வெளியே இருந்த காலியான இருக்கையில் அமர்ந்திருந்த மிருதுளாவின் கண்களிலிருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தது.


அப்போது அங்கு வந்த மகாதேவன் மிருதுளாவின் நிலையைக் கண்டு பரிதாபப்பட்டவர் “மிருதுளா சீப் டாக்டர் தேவ் சார பாத்துப்பாரு… நீ வாம்மா உனக்கும் போய் ட்ரீட்மென்ட் பாத்துட்டு வந்துடலாம்…” என்று அவளை அழைத்தார்.


அவரின் குரலில் தன் நிலைக்கு திரும்பிய மிருதுளா, “இல்ல வேண்டாம் சார்… தேவ்க்கு ஒன்னும் இல்லன்னு தெரிஞ்சாதான் நான் இந்த இடத்தைவிட்டே நகருவேன்… ப்ளீஸ் என்ன தொந்தரவு பண்ணாதீங்க…” என்று அவரிடம் கொஞ்சலாக சொன்னாள்.


உண்மையில் மிருதுளா அப்போது வலியில் துடித்துக் கொண்டிருந்தாள். முழங்காலில் விண்விண்ணென்று வலித்துக் கொண்டிருந்தது. ஆனால் தன்னுடைய எலும்புகளுக்கும் தசைகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது அவளுக்குத் தெரியும். தன் வீட்டில் இருக்கும் களிம்பை சிறிது பூசினால் அவை நன்றாக விடும் என்றும் அவளுக்குத் தெரியும். அதனால் தன்னுடைய காயங்களுக்கு இப்போது சிகிச்சை எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று அவள் நினைத்தாள்.


‘கடவுளே தேவ்க்கு பெருசா எந்த பிரச்சனையும் இருக்க கூடாது... என்ன காப்பாத்த வந்ததால தான் அவனுக்கு இந்த நெலமை... ப்ளீஸ் அவனை காப்பாத்திடுங்க’ என்று அவள் கடவுளிடம் வேண்டுதல் வைத்தாள்.


அப்போது தேவ்விற்கு சிகிச்சை அளித்த டாக்டர் வெளியே வந்து தன் முகத்தில் இருந்த முகமூடியைக் கழற்றியவர் பின்னர் மகாதேவனிடமும் மிருதுளாவிடமும் “தேவ்க்கு இப்போ எந்த பிரச்சனையும் இல்ல... தலையில இருந்த காயத்துக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்துட்டன்... தலையில பலமான அடியில்ல... அதனால இன்னும் ஒரு நாள் மட்டும் அவர் இங்க இருந்தா போதும்… வேற எந்தப் பிரச்சனையும் இல்லன்னா நாளைக்கே அவரை டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு போய்டலாம்…” என்றார்.


அவரைப் பார்த்து தலையசைத்த மிருதுளா டாக்டருக்கு நன்றி சொன்னாள்.


அந்த அறைக்குள் இருந்த மற்ற டாக்டர்கள் வரிசையாக அறையை விட்டு வெளியேறியதும் மிருதுளா அந்த அறைக்குள் நுழைந்தாள்.


தேவ்வின் தலையில் பெரிதாக கட்டு போடப்பட்டிருந்தது. தேவ் இப்போது விழித்திருந்தாலும் நிறைய ரத்தம் போய்விட்டதால் அவனுக்கு சோர்வாக இருந்தது. அதனால் ஓய்வெடுக்க விரும்பியவன் தன் கண்களை மூடிக்கொண்டான். தனக்கு அருகில் யாரோ நெருங்கி வருவதை உணர்ந்தவன் தன் கண்களை மெதுவாக திறந்தபோது மிருதுளா தன்னை நோக்கி நடந்து வருவதை கண்டான்.


அவர்களின் கண்கள் சந்தித்துக் கொண்டன. மிருதுளா அவனுக்கு அருகில் சென்று அமர நினைத்தாள். ஆனால் நடக்க முடியாமல் அவள் கால்கள் உறைந்துவிட்டன. எவ்வளவு நேரம் கடந்தது என்று கூட தெரியாமல் அவர்கள் ஒருவரை ஒருவர் கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.


முதலில் சுதாரித்த மிருதுளா அவசரமாகத் தன் கண்களை தாழ்த்தினாள். தேவ்வின் பார்வையிலிருந்து தனது பார்வையை விலக்கியவள் அவன் படுக்கையின் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.


பின்னர் மென்மையான குரலில், “இப்போ எப்படி பீல் பண்ற தேவ்... எங்கயாவது வலிக்குதா?” என்று கேட்டாள்.


“லைட்டா வலிக்குது... பட் ஐ ம் கே...” என்று தேவ் சாதாரணமாக பதிலளித்தான்.


அவன் சொன்னதைக் கேட்ட மிருதுளா தன் உதட்டை கடித்தாள். பின்னர் தலை குனிந்தவள் தனது கைகளில் இருந்த நகத்தை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். பின்னர் அவள் இவ்வளவு நேரமாக தன் மனதை அரித்துக் கொண்டிருந்த கேள்வியை அவனிடம் கேட்டாள்.


“நீ ஏன் அப்படி பண்ண… அங்க நிறைய பேர் இருந்ததை பாத்ததும் நீ போலீசை கூப்பிட்டு இருக்கணும்… இல்லன்னா உதவிக்கு யாரையாவது கூப்பிட்டு இருக்கணும்… நீ ஏன் அவங்க கூட தனியா சண்டை போட்ட…”


முகமெல்லாம் வெளிரி போயிருந்த தேவ் சிறிதுநேரம் மிருதுளாவை நேருக்கு நேராக பார்த்தவன் பின்னர், “பிகாஸ் ஐ லவ் யூ” என்றான்.


அவன் சொன்ன பதிலை கேட்டதும் மிருதுளாவின் விரல்கள் நடுங்க ஆரம்பித்தன.


அந்த அறை முழுக்க அமைதியில் மூழ்கியது.


தலையைத் தாழ்த்தி இருந்த மிருதுளாவை விட்டு தேவ்வின் பார்வை சற்றும் நகரவில்லை.


கலைந்திருந்த அவளின் தலையை நீண்டநேரம் பார்த்து கொண்டிருந்தவன் பின்னர் முன்பை விட தீவிரமான தொனியில் பேசினான்.


“மிது நான் உன்ன நிஜமாலுமே விரும்பறன்... எப்போ நீ முதல்முறையா என் பார்வையில் பட்டியோ அப்போ இருந்து உன்னை விரும்பறன்… இதுக்கு முன்ன ஒரு பெண்ணைப் பற்றிய உணர்வுகள் இவ்வளவு தீவிரமா எனக்குள்ள வந்ததில்ல… நானும் ஒருத்திய இந்தளவுக்கு லவ் பண்ணுவேன்னு சத்தியமா நான் நெனைச்சதில்ல... ப்ளீஸ் மிது என்னோட லவ்வ அக்செப்ட் பண்ணிக்கோ... ”



அவள் தன் தலையை நிமிர்த்தவே இல்லை. ஆனால் ஒரு வெட்க சிவப்பு அவள் முகத்தில் இருந்து கழுத்து வரை பரவியது.



சிறிது நேரம் அவள் எதுவும் சொல்லாமல் அமர்ந்திருப்பதைப் பார்த்த தேவ், “எப்படியும் உனக்குன்னு ஒரு வாழ்க்கை துணையை நீ ஒரு நாள் கண்டுபிடிக்க தான போற… அது ஏன் நானா இருக்கக்கூடாது…” என்று கேட்டான்.


மிருதுளாவிற்கு பதற்றமாக இருந்தது... எப்போது அந்த கயவர்களிடம் இருந்து தேவ் அவளை காத்தானோ அப்போதே அவளின் மனம் அவன் காலடியில் வீழ்ந்துவிட்டது. ஆனால் அவன் முகம் பார்த்து தன் காதலை சொல்ல முடியாமல் அவள் தவித்தாள்.


"என்ன மிது... எதுவும் சொல்லாம அமைதியா இருக்க... மௌனம் சம்மதம்னு நான் எடுத்துக்கட்டுமா?" என்று கேட்ட தேவ் தன் கைகளால் அவள் கைகளை பற்றினான்.



தனது தலையை நிமிர்த்தி தேவ்வை பார்த்த மிருதுளா பின்னர் உடனடியாக தனது தலையைத் தாழ்த்தியவள் மென்மையாக "ஹ்ம்ம்" என்றாள்.


பின்னர் அவள் தேவ் பேசுவதற்காக காத்திருக்காமல் மேலும் தொடர்ந்து, “நீ இன்னும் எதுவுமே சாப்பிட்டிருக்க மாட்ட… கண்டிப்பா நீ பசியில இருப்ப… அடிபட்டத்துல நிறைய ரத்தம் வேற போய்டிச்சி… நான் கேண்டீன் போய் உனக்கு சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரன்” என்று சொன்ன மிருதுளா தனது நாற்காலியில் இருந்து எழுந்தவள் அறையை விட்டு வெளியே ஓடிவிட்டாள்.


அறையில் இப்போது முற்றிலும் அமைதி நிலவியது. மிருதுளா சற்று நேரத்திற்கு முன்பு அமர்ந்து இருந்த இருக்கையை தேவ் வெறித்து பார்த்தான்.


பின்னர் படுக்கைக்கு அருகில் இருந்த பெல்லை அவன் அடித்ததும் மகாதேவன் உள்ளே வந்தார்.


"மிருதுளா கேண்டீன் போறதா சொன்னா...போய்ட்டாளா?" என்று தேவ் கேட்டான்.


"போய்ட்டா சார்... நான் போறானன்னு தான் சொன்னன்... ஆனா அவ தானே போறதா சொல்லிட்டா..."


“அத விடுங்க மகாதேவன்… எல்லாம் நல்லபடியா முடிஞ்சிருச்சு… அந்த ஆளுங்களுக்கு பணத்தை அனுப்பிடுங்க… ஞாபகம் வச்சுக்கோங்க… ஒருவேளை மாட்டிக்கற மாதிரி சூழ்நிலை வந்தா எதுவுமே நடக்காத மாதிரி அவங்க நடிக்கணும்னு அவங்க கிட்ட நீங்க சொல்லணும்…” என்று தேவ் சொன்னான்.


மகாதேவன் சிறிது நேரம் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.


“மகாதேவன்” என்று தேவ் மீண்டும் அழுத்தமாக அழைத்தான்.


“சார்… நான் என்ன சொல்ல வரேன்னா…” என்று திக்கிய மகாதேவன் அடுத்து சில நொடிகளுக்கு அமைதியாக இருந்தவர் பின்னர் தொடர்ந்து, “சார் நேத்து நைட் அவங்க கொஞ்சம் ஓவராவே நடந்துகிட்டதா நான் கேள்விப்பட்டன்… நீங்க போக கொஞ்ச நேரம் எடுத்திருந்தாலும் நிஜமாலுமே அவங்க அவளை கெடுத்திருப்பாங்க… இது கொஞ்சம் கொடுமையா இருக்கு… எல்லாத்துக்கும் மேல தனசேகரன் தான் தப்பு பண்ணவர்… அவரோட பொண்ணு இல்ல… அதனால…” என்றவர் அதற்குமேல் எதுவும் சொல்லாமல் பேச்சை நிறுத்தினார்.


ஏதோ வேடிக்கையான ஜோக்கை கேட்பது போல தேவ்வின் முகம் இருந்தது.


“கொடுமையா… அது கொடுமையா… அப்போ அம்முவுக்கு நடந்தது… நம்ம அம்முவுக்கு நடந்தத நீங்க என்னன்னு சொல்வீங்க…”


மகாதேவன் உடனடியாக அமைதியாகிவிட்டார்.


தேவ் அவர் பேசுவதற்காக காத்திருக்கவில்லை. அவன் தொடர்ந்து அழுத்தமான குரலில், “மகாதேவன் நான் சொன்னத மட்டும் செய்ங்க…” என்றான்.


“சரிங்க சார் எல்லாத்தையும் நான் பாத்துக்கறன்… நீங்க ரெஸ்ட் எடுங்க…” என்றவர் அந்த அறையை விட்டு வெளியேறினார்.



அத்தியாயம் - 31 :​


கேன்டீன் சென்ற மிருதுளா திரும்பி வந்த போது கையில் இட்லி பார்சல் உடன் வந்தாள்.


அறைக்குள் நுழைந்தவள் தேவ்வின் படுக்கைக்கு அருகில் இருந்த மேஜை மீது பார்சலை வைத்துவிட்டு ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டு படுக்கைக்கு அருகில் அமர்ந்தவள் தூங்கி கொண்டிருந்தவனின் நெற்றியை மென்மையாக வருடினாள்.


அதுவரை தூங்கிக் கொண்டிருந்த தேவ் அவளின் தொடுகையில் கண்விழித்தவன் மிருதுளாவை பார்த்து புன்னகைத்தான்.


“சாரி மிது… கண் மூடி படுத்திருந்தனா அப்படியே தூங்கிட்டன் போல…” என்று அவன் சொன்னதும்


அவனைப் பார்த்து புன்னகைத்த மிருதுளா “நான்தான் உன் கிட்ட சாரி கேட்கணும்… தூங்கிக்கிட்டு இருந்த உன்ன எழுப்பினதுக்கு… ஆனா நீ இன்னும் சாப்பிடல இல்லையா… அதான் உன்னை எழுப்ப வேண்டியதா போச்சு…” என்று சொன்னவள் பார்சலை பிரித்து இட்லியை பிட்டு அவன் வாய் அருகே கொண்டு சென்றாள்.


“பரவால்ல மிது… என்கிட்ட கொடு… நானே சாப்பிட்டுகறன்…” என்று அவன் சொன்ன போதும் மிருதுளா பிடிவாதமாக தன் கையை கீழ் இறக்காமல் அப்படியே நீட்டிக் கொண்டிருந்தாள்.


அவள் தன் பேச்சைக் கேட்க மாட்டாள் என்பதை புரிந்து கொண்ட தேவ் வாயைத் திறந்து இட்லியை வாங்கிக் கொண்டான். அடுத்த சில நிமிடங்களில் நான்கு இட்லிகள் வேகமாக காலியாகின. அப்போதுதான் தான் எவ்வளவு பசியில் இருந்திருக்கிறோம் என்பது அவனுக்கு புரிந்தது.


மிருதுளாவை பார்த்து சங்கடத்துடன் புன்னகைத்தவன் “ரொம்ப பசி மிது… அதனாலதான் இவ்வளவு வேகமா இட்லி உள்ள போய்டிச்சி…” என்று சொன்னான்.


“இதில் சங்கடப்பட என்ன இருக்கு… பசி வந்தா நானும் இப்படித்தான் எதைப் பற்றியும் யோசிக்காமல் வேகமா சாப்பிடுவன்…. சரி இந்தா தண்ணிய குடி…” என்று சொன்னவள் தான் வாங்கி வந்து இருந்த வாட்டர் பாட்டிலை அவன் முன்பு நீட்டினாள்.


தண்ணீர் குடித்து முடித்த தேவ் அதன் பிறகே அவள் முகத்தில் இருந்த விரல் தடத்தையும் முழங்கையில் இருந்த காயத்தையும் கவனித்தான்.


“என்ன மிது இது… இவ்வளவு நேரம் ஆகியும் நீ காயத்துக்கு ட்ரீட்மென்ட் எடுத்துக்காம இருந்தியா… முதல்ல போய் உன் காயத்துக்கு மருந்து போட்டுட்டு வா… இல்ல வேண்டாம்... நீ இங்கேயே இரு... நான் டாக்டரை இங்க வரவழைக்கிறான்... ” என்று சொன்னவன் அவள் சொல்ல வருவதை கவனிக்காமல் வெளியே நின்றிருந்த மகாதேவனை கத்தி அழைத்தான்.


அடுத்த நொடி மகாதேவன் உள்ளே வந்தார்.


“என்ன மகாதேவன் இது மிருதுளாவோட காயத்துக்கு இன்னும் ட்ரீட்மென்ட் பண்ணாம இருக்கீங்க… உங்க கிட்ட இருந்து நான் இத கொஞ்சம் கூட எக்பெக்ட் பண்ணல… நான் முக்கியம் தான்… அதுக்காக மிருதுளாவை கவனிக்காம விட்டுடுவீங்களா?” என்று அவன் கோபமாக கேட்டதும்


'என்னா நடிப்புடா சாமி... நம்மூர் நடிகருங்க எல்லாரையும் நடிப்புல மிஞ்சிட்டாரு... இவரே காயத்தை ஏற்படுவாராம்... அப்புறம் இவரே மருந்து போட சொல்வாராம்... இந்த கொடுமைய எங்க போய் சொல்ல... இவன் கிட்ட வாங்கற சம்பளத்துக்கு இன்னும் எதையெல்லாம் பாக்கணும்னு என் தலையில எழுதி இருக்கோ' என்று உள்ளுக்குள் புலம்பியவர் தேவ்விடம் “இல்லை சார்… நான் அவங்களை கூப்பிட்டன்… ஆனா அவங்க தான் உங்களுக்கு எதுவும் இல்லன்னு தெரியிற வரைக்கும் நான் இந்த இடத்தைவிட்டு அசைய மாட்டேன்னு சொல்லிட்டாங்க… டாக்டர் நீங்க நல்லா இருக்கறதா சொன்னதும் உடனே ரூமுக்குள்ள வந்துட்டாங்க… என்னால ஒண்ணும் பண்ண முடியல…” என்று அவர் பதிலளித்தார்.


“போதும் நிறுத்துங்க மகாதேவன்… எனக்கு எந்த விளக்கமும் தேவையில்லை… முதல்ல யாராவது டாக்டரை கூட்டிட்டு வந்து மிருதுளாவோட காயத்திற்கு மருந்து போட சொல்லுங்க…” என்று அவன் சொன்னதும் மகாதேவன் டாக்டரை அழைத்து வர சென்றார்.


மகாதேவன் பின்னங்கால் பிடரியில் பட விழுந்தடித்துக்கொண்டு ஓடுவதை பார்த்த மிருதுளா தேவ்வின் கைகளின் மீது தன் கைகளை வைத்தவள், “எதுக்காக அவர் மேல கோவப்படற தேவ்… அவர் சொல்றது உண்மை தான்… நான் தான் பிடிவாதமா இங்கேயே இருந்திட்டன்… எனக்கு எங்கேயும் பெருசா அடிப்படல… ஆயில்மெண்ட் வச்சா சரியாயிடும்…” என்று அவள் மென்மையாக சொன்னாள்.


"உன்மேல காட்ட முடியாத கோவத்தை அவர் மேல காட்றன் போதுமா..." என்று சொன்னவன் அதற்குமேல் எதுவும் சொல்லாமல் தன் கண்களை மூடிக்கொண்டான்.


அவன் குரலில் இருந்த கோபத்தை கண்டுகொண்ட மிருதுளா அதன் பின் வாயை திறக்கவில்லை.


அடுத்த சில நிமிடங்களில் டாக்டருடன் திரும்பி வந்த மகாதேவன் மிருதுளாவை சுட்டிக் காட்டியவர் “இவங்களுக்கு தான் ட்ரீட்மெண்ட் பண்ணனும் டாக்டர்” என்று சொன்னார்.


மிருதுளாவை பார்த்த டாக்டர் திடுக்கிட்டார். ஆனாலும் கேள்வி எதுவும் கேட்காமல் விரைவாக அவளின் அருகில் சென்றவர் தனது மெடிக்கல் கிட்டை திறந்து அவளுக்கு வேகமாக சிகிச்சை அளிக்கத் தொடங்கினார்.


டாக்டர் அவளின் காயங்களை அழுத்தி துடைத்த போது வலியில் துடித்த மிருதுளா பல்லை கடித்து வலியை பொறுத்துக் கொண்டாள். காயத்தைச் சுத்தம் செய்து முடித்த பின்னர் அதில் ஆயின்மென்டை தடவியவர் “மேடம் வேற எங்கேயாவது அடிபட்டு இருக்கா?” என்று கேட்டார்.


அவள் வாயை திறந்து எதுவும் சொல்லாமல் தன் முழங்காலை காட்டினாள். அங்கிருந்த காயத்தையும் துடைத்து சுத்தம் செய்து ஆயில்மெண்ட் போட்டவர் தனது மெடிக்கல் கிட்டிலிருந்து மாத்திரையை எடுத்து அவளிடம் கொடுத்து விட்டு, “இது காயத்து மேல போடற மருந்து… இந்த மாத்திரைய நீங்க காலையிலயும் நைட்டும் எடுத்துக்கணும்… காயம் ரொம்ப ஆழமா இல்ல… அதனால சீக்கிரமே சரியாயிடும்… நான் இன்னைக்கு அதுல மருந்து வச்சு கட்டுப் போட்டுட்டன்… நாளைக்கு நீங்க அதை பிரிச்சுடலாம்… திரும்பவும் கட்டுப் போடணும்னு அவசியம் இல்ல… இன்னைக்கு ஒரு நாள் மட்டும் கட்டு மேல தண்ணி படாம பாத்துக்கோங்க… இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தான்… நாளையில இருந்து நீங்க வழக்கம் போல இருக்கலாம்… எந்த பிரச்சனையும் இல்ல…” என்று சொன்னவர் பின்னர் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.


மகாதேவனும் அவரைப் பின்தொடர்ந்து வெளியே சென்றுவிட்டார்.


இப்போது அந்த அறையில் தேவ்வும் மிருதுளாவும் மட்டுமே இருந்தனர்.


டாக்டர் சிகிச்சை அளித்து முடிக்கும்வரை மிருதுளாவின் முகத்தின் மீதிருந்த தன் பார்வையை அகற்றாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்த தேவ் “ரொம்ப வலிக்குதா மிது?” என்று கேட்டான்.


“டாக்டர் காயத்தை அழுத்தி தொடைக்கும் போது ரொம்ப வலிச்சது… ஆனா இப்போ வலியில்ல…” என்று சொன்ன மிருதுளா அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.


“சரி ரொம்ப நேரம் ஆகிடுச்சு… மகாதேவனை உன்னக் கொண்டு போய் வீட்ல விட சொல்லவா?”


“நான் வீட்டுக்கு போய்ட்டா உன்னை யார் பாத்துப்பாங்க?”


“அதான் மகாதேவன் இருக்கார்ல… அவர் பாத்துப்பார்…”


“சரி உன்னை பாத்துக்க ஆள் இருக்காங்க தான்… நான் ஒத்துக்கறன்… ஆனா அதுக்காக எல்லாம் நான் வீட்டுக்கு போக முடியாது…”


“இல்ல மிது... உனக்கும் அடிபட்டிருக்கு… நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தா தான் நல்லது… வேணும்னா நாளைக்கு காலையிலேயே வந்துடு…” என்று அவன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவன் பேச்சை காது கொடுத்து கேட்காத மிருதுளா பிடிவாதமாக தான்தான் ஹாஸ்பிடலில் இருப்பேன் என்று சொல்லிவிட்டாள்.


தேவ்வும் அதற்கு மேல் அவளை வீட்டுக்கு செல்ல சொல்லி வற்புறுத்தவில்லை.


மருந்து வேலை செய்ய ஆரம்பித்ததால் அவனுக்கு தூக்கமாக வந்தது. அதனால் அவன் தூங்க தொடங்கி விட்டான். அவன் தூங்கிவிட்டதை உறுதிப்படுத்திய மிது பின்னர் அந்த அறையில் போடப்பட்டிருந்த மற்றொரு கட்டிலில் தானும் சென்று படுத்துக் கொண்டாள்.


இரண்டு மணி நேரம் அடித்துப் போட்டது போல தூங்கியவள் எங்கிருந்தோ தெளிவில்லாமல் கேட்ட முனகலில் கண்விழித்தாள். ‘யாரோ முனகற மாதிரி சத்தம் கேக்குது…’ என்று யோசித்தபடி கண்விழித்தவள் அப்போதுதான் தேவ் காய்ச்சலில் பிதற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்.


தேவ் இருந்த நிலை கண்டு பதறியவள் உடனடியாக டாக்டரை அழைத்து வந்து அவனை காட்டினாள். அவனை வந்து பரிசோதித்த டாக்டர் காய்ச்சல் குறைவதற்காக ஊசியைப் போட்டவர் பின்னர் நர்சிடம் சொல்லி அவனுக்கு ட்ரிப்ஸ் போட சொன்னார். ட்ரிப்ஸ் போட்ட சிறிது நேரத்திற்குள் தேவ் தூங்கிவிட்டான்.


ட்ரிப்ஸ் முடிந்த பிறகு தான் கவனிக்காமல் விட்டு விட்டால் ரத்தம் வெளியேறிவிடுமோ என்று பயந்த மிருதுளா அதன் பிறகு தூங்க துணியவில்லை. இருந்த அசதியில் அவளுக்கு தூக்கம் தூக்கமாக வந்தது. அதனால் பாத்ரூமிற்குள் சென்று தன் முகத்தில் நீரை அடித்து கழுவி தூக்கத்தை தூர விரட்டியவள் படுத்தால் மறுபடியும் தூங்கி விடுவோமோ என்ற பயத்தில் பேசாமல் உட்கார்ந்து இருக்கலாம் என்று முடிவெடுத்தாள்.


ஆனால் சிறிது நேரத்தில் போர் அடிக்கவே ஏதாவது பாட்டு கேட்கலாம் என்று முடிவு செய்தவள் மகாதேவன் கொடுத்துவிட்டுச் சென்ற போனில் இருந்த பாடல்களைக் கேட்கத் தொடங்கினாள்.


மூன்று நான்கு பாடல்களைக் கேட்ட பிறகு அந்தப் பாடல் ஒலிக்கத் தொடங்கியது.


‘கனவே கனவே கலைவதேனோ…’


‘இது… இந்தப் பாட்டு… தேவ் அன்னைக்கு பார்ட்டில பாடுனது தான…’ என்று நினைத்தவள் பாட்டை கேட்க தொடங்கினாள்.


அந்த நட்ட நடு ராத்திரியில் அந்த அறையில் அவள் மட்டுமே விழித்திருந்தாள். அவன் தூங்கிக் கொண்டிருந்ததால் பதற்றமின்றி அவன் முகத்தை உற்று பார்த்தவள் அவனுக்கு இன்னும் சற்று நெருக்கமாக நெருங்கி அமர்ந்தாள்.


மிருதுளாவின் பார்வை தேவ்வின் முகத்தை விட்டு அசையவில்லை. அவள் கேட்கும் அந்தப் பாடலை பாடியது உண்மையான பாடகர்… ஆனாலும் அவள் காதுகளில் தேவ் பார்ட்டியின் போது பாடியதுதான் கேட்டது…


அவள் எவ்வளவு நேரம் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தால் என்று அவளுக்கே தெரியவில்லை… திடீரென்று தேவ் எதையோ முனகினான்…


திடீரென்று கேட்ட சப்தத்தில் திடுக்கிட்டவள் தன் நிலைக்கு திரும்பினாள். மிருதுளா அவனைப் பார்த்த போது வலியைப் பொறுத்துக் கொள்வதைப் போல அவன் தன் புருவங்களை நெறித்திருந்தான். அவன் உதடுகள் நடுங்கின.


போனை அணைத்து ஓரமாக வைத்த மிருதுளா தன் கையால் அவன் நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள். காய்ச்சல் அதிகரிக்கவில்லை என்பதை கவனித்தவள் ஒரு நிம்மதி பெருமூச்சை வெளியேற்றினாள்.


அப்போது தேவ் எதையோ முணுமுணுத்தான்.


'ஒருவேளை தூக்கத்துல பேசறானோ' என்று அவள் மனதில் தோன்றிய அடுத்த கணம் தேவ் மீண்டும் பேசத் தொடங்கினான்.


"ஏன் இப்படி பண்ண அம்மு?"


"உன்ன விடமாட்டன்..."


"சாரி" என்று ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் உளறினான்.
 

geethusri

Moderator

அத்தியாயம் - 32 :​

'ஒருவேளை உள் காய்ச்சல் அடிக்குதோ... நாம தான் சரியா கவனிக்கிலையோ... எதுக்கும் இன்னொரு முறை செக் பண்ணிடுவோம்...' என்று நினைத்த மிருதுளா சற்று முன் நோக்கி குனிந்து அவன் நெற்றியின் மீது மீண்டும் கை வைத்து பார்த்தாள்.


‘உடம்பு நல்லா ஜில்லுன்னு தான இருக்கு…’ என்று தனக்குத்தானே முணுமுணுத்தவள் நேராக நிமிர முயன்றபோது கால் தடுக்கி ஏடாகூடமாக அவன் மார்பின் மீது விழுந்து வைத்தாள்.


அதனால் ஏற்பட்ட வலியில் ஆவென முனகிய தேவ் மெதுவாக கண்களைத் திறந்தான்.


தேவ் தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் கொண்டவன். அதனால் அவனின் மார்பு கல்லைப் போல கடினமாக இருந்தது. அதனால் மிருதுளாவின் தலை அவன் மார்பில் மோதிய அடுத்தகணம் வலியில் அவள் கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது.


தன் நெற்றியை தேய்த்தபடி நிமிர்ந்தவள் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த தேவ்வை பார்த்தாள். இருவரின் பார்வையும் ஒன்றையொன்று கவ்விக் கொண்டன.


எவ்வளவு நேரம் சென்றதோ யாருக்கு தெரியும்? முதலில் தன் நிலைக்கு திரும்பிய மிருதுளா அப்போதுதான் தான் இன்னும் தேவ்வின் மார்பின் மீது தன் முகத்தை வைத்திருப்பதை உணர்ந்தாள்.


அடுத்த நொடி வேகமாக விலகியவளை ஒரு வலிய கரம் அவள் இடுப்பை சுற்றி வளைத்து நகரவிடாமல் செய்தது.


தேவ்வின் கைகள் அவள் இடுப்பின் மீது பட்டதும் தன் உடலின் அழுத்தப் புள்ளிகளை யாரோ தாக்கியதை போல திகைத்துப் போனவள் இமைக்காமல் தேவையே பார்த்தாள்.


அவள் கண்களை ஆழ்ந்து பார்த்தபடி அவளைத் தனக்கு நெருக்கமாக கொண்டு வந்தவன் அடுத்த நிமிடம் அவள் உதட்டை மிட்டாயாய் சுவைக்கத் தொடங்கினான்.


அவன் முத்தத்தில் சொக்கி போனவள் தன் கண்களை மூடி முத்தத்தை ரசிக்க தொடங்கினாள்.


மிருதுளாவிடம் எதிர்ப்பு இல்லாததை உணர்ந்தவனின் கைகள் தாறுமாறாக அலையத் தொடங்கின.


மிருதுளாவிற்குள் சொல்ல முடியாத உணர்வு பேரலையாய் எழுந்து அவளை அடித்து சென்றது.


எவ்வளவு நேரம் அந்த முத்த யுத்தம் நீடித்ததோ யாருக்குத் தெரியும்?


தேவ் தானாக மனம் வந்து அவளை விட்ட பிறகே மிருதுளா தன் நிலைக்கு திரும்பினாள்,


அவன் முகத்தைப் பார்க்க வெட்கமாக இருந்ததால் அவன் முகம் பாராமல் “நான் பாத்ரூம் போயிட்டு வந்துடறன்” என்று சொன்னவள் வேகமாக பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டாள்.


பாத்ரூமிற்குள் இருந்த கண்ணாடியின் முன்பு சென்று நின்றவள் தேவ் முத்தம் கொடுத்த தன் உதடுகளை ஆசையுடன் வருடினாள்.


“உன் காதல நான் ஏத்துக்கிட்டு இன்னும் முழுசா ஒரு நாள் கூட ஆகல… அதுக்குள்ள லிப்கிஸ் கொடுக்கற… ஆனாலும் உனக்கு ரொம்ப தைரியம்தான்டா… அது சரி உன்னோட தைரியத்துக்கு என்ன குறைச்சல்… நான் ஒத்துக்கததுக்கு முன்னாடியே என்ன கிஸ் பண்ண ஆள் நான் தானே நீ… ஆனா அப்போ நீ முத்தம் கொடுத்த போது நானும் உனக்கு இழைஞ்சி கொடுத்தாலும் இது மாதிரி நடந்ததை நினைச்சு நினைச்சு சந்தோசப்படத்துல்ல… ஒரு வேளை ஆண் பெண்ணுக்கு இடையே இருக்க ஈர்ப்பால நெருங்கறதுக்கும் காதலுக்கும் இதுதான் வித்தியாசமோ?” என்று தனக்குத் தானே முணுமுணுத்தவள் சிறிது நேரம் கழித்து பாத்ரூமை விட்டு வெளியே வந்தாள்.


தேவ்வின் பக்கம் தன் பார்வையை கூட திருப்பாமல் தன் படுக்கையை நோக்கி சென்றவள் அவனுக்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டாள். தேவ் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவளுக்கு சற்று சங்கடமாக இருந்ததால் போர்வையை தலைவரை இழுத்து போர்த்தி கொண்டாள்.


நேரம் நகர்ந்தது…


தேவ் தூங்கி விட்டான் என்பதை சீராக வரும் அவன் மூச்சுக்காற்றின் சத்தத்தில் தெரிந்து கொண்டவள் தன் முகத்தின் மீது இருந்த போர்வையை அகற்றிவிட்டு தூங்குபவனை ரசிக்க தொடங்கினாள்.


அவன் தலைமுடி, நெற்றி, புருவம், கண், மூக்கு என்று அலைந்தவளின் பார்வை இறுதியில் அவன் உதட்டின் மீது படிந்தன. அதைப் பார்த்ததும் அவன் கொடுத்த முத்தம் அவளுக்கு ஞாபகம் வந்தது.


அந்த அமைதியான இரவில் அவன் உதடுகளை பார்த்தவளுக்கு எழுந்து சென்று தன் உதடுகளை அவன் உதட்டில் பொருத்தி முத்த யுத்தம் நடத்தலாமா என்ற ஆசை வந்தது.


‘ஐய்யய்யோ… என்ன இது கண்டபடி யோசிக்க ஆரம்பிச்சுட்டோம்… அவன் ஏற்கனவே வாய்ப்பு கிடைச்சா புகுந்து விளையாடறவன்… இதுல நாம வேற இந்த மாதிரி எல்லாம் நினைக்கிறது அவனுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்… கல்யாணம் பண்ணிக்கிறது முன்னாடி சீமந்தம் தான் நடக்கும்…’ என்று விளையாட்டாக நினைத்தவளுக்கு உண்மையில் அதுதான் நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை.


அடுத்த நாளே ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன தேவ் அதற்கு அடுத்த நாளே பிசினஸ் விஷயமாக வெளிநாடு சென்று விட்டான். அவன் வேலையைப் பற்றி மிருதுளாவிற்கு நன்றாகவே தெரியும்… அதனால் தேவ் சென்றதை நினைத்து அவளும் வருத்தப்படாமல் தன் வேலையை பார்க்க தொடங்கினாள்.


நாட்கள் அதன் போக்கில் கடந்து சென்றன…


இந்த நாட்களில் தேவ் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவளிடம் பேசவோ… நேரம் கிடைக்காத போது அவளுக்கு மெசேஜ் செய்யவோ தவறியதில்லை… முக்கியமாக தினமும் அவன் அனுப்பும் பூக்கள் இன்னும் அவளுக்கு வந்துகொண்டுதான் இருந்தன…


இந்த பத்து நாளிலேயே மிருதுளா பசலை நோயால் வாட தொடங்கினாள்...


பத்து நாட்களுக்குப் பிறகு சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய தேவ் திரும்பி வரும் வழியில் மிருதுளாவிற்கு போன் செய்தான்.


ஆனால் அவன் போன் செய்த நேரம் சரியான நேரம் அல்ல. மிருதுளா அப்போது ஒரு முக்கிய மீட்டிங்கில் இருந்தாள். அதனால் போனை கட் செய்தவள் அவனுக்கு மெசேஜ் செய்ய முயன்றபோது தேவ்விடமிருந்து மெசேஜ் வந்து விட்டது.


“இன்று இரவு கிராண்ட் ஹோட்டலில் சந்திக்கலாமா?” என்று அவன் கேட்டிருந்தான்.


“சரி” என்று பதில் அனுப்பிய பின்னர் தொடர்ந்து “இப்போ மீட்டிங்கில் இருக்கன்...” என்பதையும் அனுப்பி வைத்தாள்.


மீட்டிங் முடிந்து அவள் வெளியே வந்த போது வானம் நன்றாக இருட்டியிருந்தது.


தன் பாக்கெட்டில் இருந்து போனை எடுத்தவள் தேவ்விற்கு அழைக்க சென்ற போது அவனிடமிருந்து வந்திருந்த மெசேஜை பார்த்தாள்.


“கிராண்ட் ஹோட்டல்… ரூம் நம்பர் 102… அதுல நான் உனக்காக காத்திருக்கன்…” என்று அனுப்பியிருந்தவன் மேலும் தொடர்ந்து “கவலைப்படாத மிருதுளா… நான் உன்னை எதுவும் பண்ண மாட்டன்… தைரியமா வா…” என்றும் அனுப்பி இருந்தான்.


இதுவே முன்பு மாதிரி இருந்திருந்தால் மிருதுளா நிச்சயம் அவன் அழைத்தான் என்று ஓட்டலுக்கு சென்றிருக்க மாட்டாள். ஆனால் இப்போது அனைத்து விஷயங்களும் மாறி இருந்தன. அன்று அவள் குடிபோதையில் இருந்த போது... அவன் நினைத்திருந்தால் அவளை எடுத்து கொண்டிருக்கலாம்... ஆனால் அவன் அவளின் நிலையை பயன்படுத்தி கொள்ளவில்லை... அந்த சம்பவத்திற்கு பிறகு மிருதுளாவிற்கு தேவ்வின் மீது மலையளவு நம்பிக்கை வந்துவிட்டது.


மேலும் அவன் அவள் உயிரை காப்பாற்றி இருக்கிறான். அதற்கும் மேலான அவளின் மானத்தை காப்பாற்றி இருக்கிறான்.


அப்படி ஒரு சூழ்நிலையில் அவள் மாட்டி இருந்தபோது சரியான நேரத்தில் அவன் அங்கு வந்து தன்னை காப்பாற்றியதை இப்போதும் அவளால் நம்ப முடியவில்லை.


சிறிது நேரம் தேவ் அனுப்பி இருந்த மெசேஜையே பார்த்துக் கொண்டிருந்த மிருதுளா பின்னர் வெளியே சென்று ஒரு டாக்ஸியை பிடித்தவள் நேராக கிராண்ட் ஹோட்டலுக்கு சென்றாள்.


பின்னர் நேராக தேவ் சொல்லி இருந்த அறைக்கு முன் வந்து நின்றவள் காலிங் பெல்லை அழுத்தினாள். சிறிதுநேரம் அழுத்தியும் யாரும் வந்து கதவை திறக்காததால் பின்னர் கதவை தட்டினாள். கதவை மூடாமல் இருந்ததால் அது உடனடியாக திறந்து கொண்டது.


கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவள் அப்போதுதான் அந்த அறை முழுக்க இருண்டிருப்பதை பார்த்தாள்.


‘எதுக்காக லைக் போடாம இருக்கான்…’ என்று நினைத்தவள் லைட்டைப் போடுவதற்காக ஸ்விட்சை தேடினாள்.


ஆனால் அவள் ஸ்விட்சை போடுவதற்கு முன்பு வராண்டாவின் மேஜையின் மீது மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டிருப்பது அவள் பார்வையில் விழுந்தது. அதைக் கண்ட மிருதுளாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதனால் லைட்டை ஆன் பண்ணாமலேயே நேராக மெழுகுவர்த்தி எரியும் இடத்திற்கு சென்றவள் அப்போதுதான் அந்த மெழுகுவர்த்தி ஒரு கேக்கின் மீது எரிந்து கொண்டிருப்பதை கண்டாள்.


கேக்கின் மீது சாக்லேட்டால் “ஹாப்பி பர்த்டே மிது…” என்ற வரிகள் எழுதப்பட்டிருந்தன.


என்னோட பிறந்த நாளை கொண்டாடறதுக்கா தேவ் என்ன இங்க வர சொன்னான்?

மிருதுளா திகைத்துப் போய் நின்றிருந்தபோது படுக்கை அறையின் கதவு திறந்தது. அந்த சத்தத்தில் மிருதுளா தனது தலையை திருப்பிப் பார்த்த போது ஒரு பெட்டியை பிடித்தபடி வெளியே வந்த தேவ் பின்னர் அதை திறந்து அவளிடம் கொடுத்தான். அதனுள் பிங்க் வண்ண வைர நெக்லஸ் இருந்தது. அந்த மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் அதிலிருந்து பிரகாசமான ஒளி வெளிவந்தது.


“உனக்கு பிடிச்சிருக்கா…” என்று தன் புருவங்களை உயர்த்தியபடி மென்மையான குரலில் தேவ் கேட்டான்.


மிருதுளா "ஹ்ம்ம்" என்று மட்டுமே சொன்னாள்.


அவளால் எதுவும் பேச முடியவில்லை... வாயடைத்து போய் நின்றிருந்தாள்... உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இன்று அவளின் பிறந்தநாள் என்பதே அவளுக்கு சற்றும் நினைவில்லை... அவள் அம்மா இறந்த பிறகு அவள் பிறந்தநாளை யாருமே கொண்டாடியதில்லை... இத்தனை வருடங்களுக்கு பிறகு தேவ் தான் அவள் பிறந்தநாளை நினைவில் வைத்து கொண்டாடுகிறான்...


மனம் நெகிழ இமைக்காமல் தேவ்வை பார்த்தவளின் கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது.


அத்தியாயம் - 33 :​


பதுமையென நின்றிருந்தவளை தன் அணைப்பில் வைத்து மேஜையை நோக்கி அழைத்து சென்ற தேவ் அவள் கையில் கத்தியை கொடுத்து கேக்கை வெட்ட சொன்னான்.


அவன் கைபொம்மையாக மாறி போன பேதையவள் அவன் சொன்னதை தட்டாமல் செய்தாள்.


கேக்கை எடுத்து அவளுக்கு ஊட்டிய தேவ் " ஹாப்பி பர்த் டே மிது..." என்று அவள் கண்களை பார்த்து சொன்னான்.


மிருதுளா மகுடிக்கு மயங்கும் பாம்பாய் நின்றிருந்தாள்.


பின்னர் தான் கொடுத்த பெட்டியிலிருந்து நெக்லஸை எடுத்தவன்

மிருதுளாவை நெருங்கிச் சென்று அவள் கழுத்தில் அதை போட்டான்.



மிருதுளாவின் நீண்ட தலைமுடியை சற்று ஒதுக்கியவன் அந்த நெக்லஸை அவள் கழுத்தில் அணிவித்தான். நெக்லஸை அணிவித்த பிறகு கவனமாக அவள் தலை முடியை பின்னால் எடுத்து போட்டவன் பின்னர் அவளின் தோளை பற்றி தன்னை பார்க்குமாறு அவளைத் திருப்பினான்.


அவள் மார்பில் தவழ்ந்த அந்த நெக்லஸை சற்று நேரம் வெறித்தவன் பின்னர் அவளின் கண்களைப் பார்த்து “பியூட்டிஃபுல்” என்றான்.


மிருதுளா எதுவும் சொல்லவில்லை. ஆனால் தேவ்வின் கண்களில் வழக்கத்திற்கு மாறாக தோன்றிய பிரகாசத்தை அவள் கவனித்தாள். சற்று நேரம் மிருதுளாவை ரசித்துப் பார்த்த தேவ் பின்னர் சற்றுமுன் நோக்கி வந்தவன் சற்றே குனிந்து அவளின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான்.


அவனின் செய்கை மிருதுளாவின் மொத்த உடலையும் நடுங்க செய்தது. ஆனால் அவள் அவனைத் தடுக்கவில்லை.


பின்னர் அவளின் கண்கள், மூக்கு என்று முத்தமிட்டுக் கொண்டே வந்த தேவ் இறுதியில் அவளின் மென்மையான உதடுகளை சிறைப்பிடித்தான். அவர்கள் முத்தமிட்டுக் கொள்ளும் சத்தத்தைத் தவிர வேறு எந்த சத்தமும் அந்த அறையில் கேட்கவில்லை.


சிறிது நேரம் அவள் உதடுகளில் கவி எழுதிய தேவ் பின்னர் அவள் உதடுகளை விடுவித்தான்.


அவள் கன்னத்தை பற்றி தன்னை பார்க்குமாறு செய்தவன் தன் முத்தத்தால் சிவந்திருந்த அவளின் உதட்டை தன் கைகளால் ஆசையுடன் வருடியவன் “என்னால முடியல மிது... ஒவ்வொரு முறை உன்ன தொட்டுட்டு விலகும் போதும் நான் சாகாம சாகறன்... இன்னைக்கு என்னால என்ன கண்ட்ரோல் பண்ணிக்க முடியும்னு தோணல... நான் உன்ன எடுத்துக்கட்டுமா?” என்றான்.


அவன் அப்படி சொன்னதும் அவளின் உடல் நடுங்க தொடங்கியது.


தனது கண்களை உயர்த்தி தேவ்வை பார்த்தவள் எதுவும் சொல்லாமல் மீண்டும் இமைகளை தாழ்த்தினாள்.



சற்று நேரம் தொடர்ந்து மிருதுளாவையே பார்த்துக் கொண்டிருந்த தேவ் பின்னர் தன் உதடுகளால் மீண்டும் அவள் உதடுகளை சிறைப்பிடித்தான்.


“ப்ளீஸ் பதில் சொல்லு மிது… இன்னைக்கு நைட் நான் உன்னை எடுத்துக்கலாமா…?” அவளின் இதழில் முத்தமிட்டவாறே அவன் கேட்டான்.

தேவ்வின் அதிரடி தாக்குதலால் மிருதுளாவிற்கு மூச்சு விடவே சிரமமாக இருந்தது… அவளின் கண்ணிமைகள் படபடவென்று அடித்தன…


தனது உடைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டதைத் தவிர அவள் நின்ற இடத்திலிருந்து ஒரு அங்குலம் கூட நகர துணியவில்லை. அவனுக்கு பதில் சொல்லவும் இல்லை. ஆனால் அவளின் முகம் படிப்படியாக சிவக்க ஆரம்பித்தது.


மிருதுளா பதிலளிக்காததை பார்த்த தேவ், “உனக்கு இதுல விருப்பம் இல்லையா மிது…” என்று கேட்டவன் சற்று நேரம் அமைதியா இருந்தான்.


மிருதுளா அப்போதும் வாய் திறக்காமல் இருந்ததை பார்த்தவன் “உனக்கு விருப்பம் இல்லனா விடு மிது… எ ன்னால உனக்காக காத்திருக்க முடியும்…” என்று சொன்னான்.


பின்னர் மீண்டும் ஒருமுறை மிருதுளாவின் உதடுகளில் முத்தமிட்டவன் அவளின் தலைமுடியை அன்பாக கோதினான்.


மிருதுளா தன் கண்களை உயர்த்தி தனக்கு முன்னால் நின்று கொண்டிருப்பவனை பார்த்தாள். அவன் முகத்தில் நினைத்தது கிடைக்காத ஏமாற்றம் வெளிப்படையாகவே தெரிந்தது… அவன் முகம் சுருங்க நின்றிருப்பதை பார்த்தவளின் இதயம் பிசைந்தது.


'இவன் இப்படி இருக்கறத என்னால கண்கொண்டு பாக்க முடியலையே... இப்போ என்ன என்னைக்கா இருந்தாலும் நான் அவனுக்கு சொந்தமாக போறவ தான... அப்படி இருக்கும் போது எதுக்காக தயங்கணும்... இவன் நெனச்சிருந்தா அன்னைக்கு குடிபோதையில நான் இருந்த போதே என்ன எடுத்துக்கிட்டு இருக்கலாம்... ஆனா அப்படி எதுவும் பண்ணாம என் கிட்ட அனுமதி கேட்டுகிட்டு இருக்கான்... இப்போ நான் முடியாதுன்னு சொன்னா நிச்சயம் விலகி போயிடுவான் தான்... ஆனா நிச்சயம் என் மறுப்பால கஷ்டப்படுவான்... விரக தாபம் எவ்வளவு கொடுமையானதுன்னு எனக்கும் தெரியுமே?... அத என் தேவ் என்னால அனுபவிக்கறத நான் எப்படி அனுமதிக்க முடியும்?' என்று நினைத்தவள் "தேவ்" என்று அவனை அழைத்தபடி ஒரு அடி முன்னோக்கி எடுத்து வைத்து நகர்ந்தாள்.


பின்னர் தன் கைகளால் அவன் கன்னத்தை பிடித்து அவன் கண்களை ஆழ்ந்து பார்த்தவள், " எப்போ நான் உன்னோட காதலை ஏத்துக்கிட்டேனோ... அப்பவோ நான் மனசால உன் பொண்டாட்டியா மாறிட்டன்... இனி என்னோட உடம்பு மனசு எல்லாமே உன் ஒருத்தனுக்கு மட்டும் தான் சொந்தம்... உனக்கு சொந்தமானதை நீ எடுத்துக்க என்கிட்ட அனுமதி கேக்க வேண்டிய அவசியம் இல்லை புரிஞ்சுதா?" என்றாள்.


"சும்மா எனக்காக சொல்லாத மிது... உனக்கு பயம்... எல்லாம் முடிஞ்சதும் எங்க நான் உன்ன கை விட்டுடுவானோன்னு பயம்... அதனால தான நீ இவ்வளவு யோசிச்ச? ஆனா மிது என்ன பொறுத்தவரைக்கும் நான் உன்ன என் பொண்டாட்டியா தான் பாக்கறன்... அதான் நான் தயங்காம உன்கிட்ட என் மனசுல உள்ளத சொன்னன்..." என்று மெல்லிய குரலில் சொன்னான்.


"சத்தியமா நான் உன்ன சந்தேகப்படல தேவ்..." என்று சொன்ன மிருதுளா அவனுக்கு தன்னை புரிய வைக்க துடித்தவள் அடுத்த நொடி எதை பற்றியும் யோசிக்காமல் தனது காலின் விரல் நுனியைத் தரையில் பதித்தபடி தேவ்வின் உதடுகளை சிறை செய்தாள்.


அவளின் செயலில் உறைந்து நின்ற தேவ் பின்னர் தன் கைகளால் மிருதுளாவின் தலையை அழுத்தி பிடித்து அவனும் அவளை ஆழமாக முத்தமிட தொடங்கினான்.


அவனின் அணைப்பில் அவள் உடல் மெதுவாக இளகியது.


அவள் இடுப்பை தன் கைகளால் வளைத்தவன் அவள் உடலின் அங்கங்களை தன் பார்வையால் மேய ஆரம்பித்தான். அவன் உள்ளங்கைகளின் வெம்மை அவளின் உணர்வுகளை தீப்பற்றி எரியச் செய்தது.


அவள் தன்னை அறியாமலேயே தன் கைகளை உயர்த்தி அவன் சட்டையை பிடித்து கொண்டாள். அவளின் அந்த சின்ன செய்கையில் தன் புருவங்களை உயர்த்தி அவளை பார்த்தவன் அடுத்த நொடி அவளை அலேக்காக தூக்கியவன் படுக்கை அறையை நோக்கி சென்றான். படுக்கையில் அவளை கிடத்தியவன் உதடுகள் நடுங்க கண்மூடி கிடந்தவளை ஒரு நொடி ரசித்துவிட்டு பின்னர் அவள் மீது பாய்ந்தான்


தன் ஒற்றை விரலால் அவள் நெற்றி, மூக்கு, உதடு, கழுத்து என்று கோடிட்டான்.


அவன் விரல்களின் மாயாஜாலத்தில் மிருதுளா துடித்து கொண்டிருந்தாள்.


அவன் இப்படி எல்லாம் செய்து தன்னை சித்ரவதை செய்வதை நிறுத்திவிட்டு எப்போது தன்னை எடுத்து கொள்வான் என்று ஏங்க தொடங்கினாள்.


அவளின் ஏக்கம் புரியாமல் அவள் அணிந்திருந்த சுடிதாரின் டாப்பை மேலே தூக்கியவன் இப்போது அவளின் நாபி சுழியில் தன் விரலால் கோலமிட்டான்.


மிருதுளா தன் கீழுதட்டை கடித்து தன் உணர்வுகளை கட்டுப்படுத்தினாள்.


அதற்கு மேல் அவனாலும் தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை... வேகமாக அவளின் உடைகளை எல்லாம் கழற்றி தூக்கி எறிந்தவன் பிறந்த மேனியுடன் தன் முன் இருப்பவளை ரசிக்க தொடங்கினான்.


"பிறந்தாளுக்கு ஏத்த டிரஸ் இதுதான் இல்லையா மிதுக்குட்டி... இனி உன்னோட ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் நீ என் முன்னாடி இந்த ட்ரஸ்ல தான் இருக்கணும்..." என்று குறும்பாக சொன்னான்.


அவனின் உதடுகளும் கைகளும் அவளின் மென்மையான உடலெங்கும் வலம் வந்த போது அவளால் தாங்க முடியவில்லை. இதற்குமுன் இப்படிப்பட்ட அனுபவத்தை பெறாததால் அவள் உடல் நடுங்கியது.


"தேவ்" என்று அவள் முனகினாள்.


தான் செய்வதை அப்படியே நிறுத்திய தேவ்வின் பார்வை கண்களை மூடி படுத்திருந்த பாவையின் மீது பதிந்தது. தன் கீழுதட்டை கடித்தபடி தன் பெயரை முனகி கொண்டிருந்தவளின் அழகில் அவன் கிறங்கினான்.


அந்த நொடியில் அவனுக்குள் என்ன நிகழ்ந்தது என்று அவனுக்கே தெரியவில்லை. ஆனால் அவன் இதயம் மென்மையாகியது. உண்மையில் அவன் அவளை விட்டு விட விரும்பினான்.


‘இல்ல நீ அப்படி பண்ண கூடாது’ என்று அவனின் மற்றொரு மனம் சொல்லியது.

அவள் தனசேகரனின் மகள் என்று அவன் கண்டு பிடித்ததிலிருந்து இந்த தருணத்திற்காக தான் அவன் காத்திருந்தான். அவள் முன்பு நல்லவனாக தோன்றுவதற்கும் அவளை நம்ப வைப்பதற்கும் அவன் யோசித்து நிறைய வேலைகளை செய்து இருக்கிறான். துன்பத்தில் இருக்கும் பெண்ணை காப்பாற்றும் ஹீரோவைப் போல கூட அவன் ஒரு நாடகத்தை நடத்தி இருக்கிறான்.


‘என்னால இவள ஜஸ்ட் லைக் தட் விட முடியாது… அவளுடைய வேதனைகளுக்கு பழிவாங்குவேன் என்று நான் அம்முவோட இறந்த உடலின் மீது சத்தியம் செய்திருக்கன்’. என்று நினைத்தவனின் மனதில் அந்த பதினேழு வயது பெண்ணின் முகம் தோன்றியது.


அடுத்தநொடி தேவ்வின் முகம் கல்லாய் இறுகியது... அதுவரை அவன் மனதில் இருந்த மென்மை காணாமல் போய் அவன் மிருகமாய் மாறியிருந்தான்...
 
Status
Not open for further replies.
Top