இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

பிழையில்லா கவிதை நீயடி - கதைத்திரி

Status
Not open for further replies.

geethusri

Moderator
அத்தியாயம் - 10 :



தன் விரல்களால் நெற்றிப் பொட்டை அழுத்தி விட்டபடி அமர்ந்திருந்தவளின் அருகில் வந்த தேவ், “மிருதுளா ஆர் யூ ஓகே…” என்று கேட்டான்.



திடீரென்று கேட்ட குரலில் ஒரு நொடி திடுக்கிட்டவள் பின்னர் தனக்கு அருகில் நின்றிருந்த தேவ்வை பார்த்ததும் அமைதி அடைந்தாள்.



அதன் பிறகே அவன் கேட்டதற்கு தான் இன்னும் பதில் சொல்லாமல் அமர்ந்திருக்கிறோம் என்பதை உணர்ந்து, “ஐ அம் கே சார்… லேசா தலை வலிக்கிற மாதிரி இருக்கு அவ்வளவுதான்…” என்றாள்.



“நீங்க இன்னும் இரவு உணவை சாப்பிடல இல்லையா… அதனால வந்த தலைவலியா இருக்கும்…” என்று அவன் கரிசனமாக சொன்னதும் மிருதுளாவின் மனம் நெகிழ்ந்தது.



அவள் அம்மா இறந்த பிறகு இப்படி எல்லாம் யாரும் அவளிடம் கரிசனையாக பேசியதில்லை… உண்மை என்னவென்றால் அவள் தான் யாரையும் அந்த அளவிற்கு நெருங்க விட்டது இல்லை… தேவ்வும் அதற்கு விதிவிலக்கு கிடையாது… அப்படி இருந்தும் அவன் அவளிடம் கரிசனையாக பேசியதும் அவள் நெகிழ்ந்து விட்டாள்…



“ஆமா சார்… உண்மைதான்… மதியம் சாப்பிட்டது… அதுக்குப் பிறகு எதுவுமே சாப்பிடவில்லை…”



“சரி வாங்க… இந்த மருத்துவமனையில் கேண்டீன் இருக்கு… நாம போய் ஏதாவது சாப்பிட்டுட்டு வந்துடலாம்…”



“இல்ல சார்… பரவாயில்லை… டாக்டர் வந்து மனோகர் சார்க்கு ஒன்னும் இல்லன்னு சொன்ன பிறகு நான் போய் சாப்பிட்டுக்கறன்… இப்ப போனால் என்னால நிம்மதியாக சாப்பிட கூட முடியாது சார்…”



“டாக்டர் மனோகரை செக் பண்ணி முடிச்சுட்டு வர நேரம் ஆகலாம் மிருதுளா… அதுவரைக்கும் நீங்க பசியோட இருந்தீங்கன்னா உங்களுக்கு தலைவலி அதிகமாகிவிடும்… சரி நாம வேணும்னா இப்படி பண்ணலாம்… நீங்க எதையும் சாப்பிட வேண்டாம்… ஜஸ்ட் காபி இல்லனா ஜூஸ் மட்டும் குடிச்சிட்டு வந்துடலாம் வாங்க…” என்று அவன் மீண்டும் வற்புறுத்தவும் அதை மறுப்பது முட்டாள்தனம் என்பதை அறிந்த முதலாகும் அவனோடு கேண்டீன் சென்றாள்.



கேண்டீன் சென்றதும் காலியாக இருந்த இருக்கையில் மிருதுளாவை அமர வைத்தவன், “நீங்க என்ன சாப்பிடறீங்க… காபி… டீ… பால்… இல்லன்னா ஜூஸ் என்ன சாப்பிட விரும்பறீங்க…” என்று கேட்டான்.



“காபி சார்… தலைவலிக்கு அது குடிச்சா கொஞ்சம் நல்லா இருக்கும்…” என்று அவள் சொன்னதும் அவளுக்கு காபியும் தனக்கு பாலும் வாங்கி வந்தவன் மிருதுளாவிடம் காபியைக் கொடுத்தாள்.



மிருதுளா காபியை அருந்த தொடங்கியதும் அவனும் பாலை அருந்தத் தொடங்கினான். சில நிமிடங்கள் அங்கே அமைதி நிலவியது.



‘என்னடா இது… எதுவுமே பேச மாட்டேங்கறா… எப்பப் பார்த்தாலும் இவகிட்ட நானேதான் வலியப் போய் பேச்சுக் கொடுக்க வேண்டியதா இருக்கு…’ என்று சலித்துக் கொண்டாலும் ‘இல்லை… நாம் இப்போது இப்படி சலித்துக் கொள்ளக் கூடாது… இவளை நம் வலையில் விழ வைக்க வேண்டும்… அது மட்டும் தான் முக்கியம்… இனி ஒருமுறை இதுபோன்ற வாய்ப்பு கிடைக்காது…’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவன் அவளிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினான்.



“மிருதுளா நீங்க எப்போதுமே காபிதான் குடிப்பீங்களா…” என்று அவன் கேட்டதும் மிருதுளா அவனை புரியாத பார்வை பார்த்தாள்.



“நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு எனக்கு புரியுது… இந்த மாதிரி கேள்வி எல்லாம் அவசியமான்னு தானே நினைக்கிறீங்க… ஆனா எவ்வளவு நேரம் தான் பேசாம இருக்கறது… நீங்களும் அதிகமா பேச மாட்டீங்க…. அதான் நாமளே பேச்ச தொடங்கலாம்ன்னு நெனச்சு நான் இப்படி கேட்டேன்… நான் கேட்ட கேள்விக்கு வேற எந்த காரணமும் இல்லை…” என்று அவன் சொன்னதும் அவளின் இதழ்கள் புன்னகையில் லேசாக விரிந்தன…



“ஆமா… எனக்கு காபின்னா ரொம்ப பிடிக்கும்… ஒரு நாளைக்கு எப்படியும் நான்கு காபியாவது குடித்து விடுவேன்… ஒருவேளை என்னால ஏதோ சில காரணங்களால் ஒரு நாள் முழுக்க காபி குடிக்க முடியலன்னா எதையோ இழந்த மாதிரி ஃபீல் பண்ணுவேன்…”



“ஓ… அப்படியா…” என்றவனின் மனதில், ‘நிறைய காபி குடிக்கறது உடம்புக்கு நல்லது இல்ல…’ என்ற குரல் வலம் வரத் தொடங்கியது.



அடுத்த நொடி வில்லேந்திய நாணாக அவன் உடல் விறைத்தது… ஆனால் அது ஒரு நொடி மட்டுமே… மிருதுளா அதைக் கண்டு கொள்வதற்குள் அவன் உடல் தளர்ந்து இயல்பாகிவிட்டான்…



சில நொடிகள் அமைதியாக இருந்தவன், “நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க மிருதுளா… நிறைய காபி குடிக்காதீங்க… அது உடம்புக்கு நல்லது இல்ல…” என்று சொன்னான்.



அவளுக்கும் அது தெரியும்… ஆனால் இதுவரை யாரும் அவள் மீது அக்கறை கொண்டு இப்படி சொன்னதில்லை… மிருதுளாவின் மனம் மீண்டும் நெகிழ்ந்தது…



அவனின் அக்கறையான பேச்சில் கவரப்பட்டவள், “சரிங்க சார் முயற்சி பண்றன்…” என்றாள்.



அவளிடம் அப்படி சொன்ன பிறகு தான் என்ன சொன்னோம் என்பதை தேவ் உணர்ந்தான்.

‘தேவ் நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க… அவ உன் எதிரியோட பொண்ணு… அவ காபி நிறைய குடித்து உடம்பை கெடுத்துக்கிட்டா உனக்கு என்ன வந்தது?’ என்று அவன் மனசாட்சி அவனை கடிந்தது…



‘எனக்கும் அது தெரியும்… அவ மனச என் பக்கம் திருப்புவதற்காகத்தான் நான் அவ மேல அக்கறை இருக்க மாதிரி நடிச்சுட்டு இருக்கன்…’ என்று அவன் தன் மனசாட்சிக்கு பதிலளித்தான்.



பின்னர் அவனும் மிருதுளாவும் மீண்டும் ஐசியூவை நோக்கி சென்றனர்.



அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் மனோகரை பரிசோதித்துவிட்டு வந்த மருத்துவர், “ஹார்ட் அட்டாக்… முதல் முறை… அதனால பெரிதா எந்தப் பிரச்சனையும் இல்ல… ஆனா இன்னும் சில டெஸ்ட்டுகள் எடுக்க வேண்டி இருக்கு… டெஸ்ட் ரிசல்ட் பார்த்துட்டு தான் மேற்கொண்டு என்ன சிகிச்சை அளிக்கலாம்னு முடிவு பண்ணனும்… எப்படியும் ஒரு வாரம் மருத்துவமனையில் இருக்கற மாதிரி இருக்கும்…” என்று அவர்களிடம் சொன்னவர் அங்கிருந்து கிளம்பி விட்டார்.



மனோகருக்கு வந்தது ஹார்ட் அட்டாக் என்பது தான் மிருதுளாவிற்கு முதலிலேயே தெரியுமே… அதனால் மருத்துவர் அப்படி சொன்னதும் அவளுக்கு அதிர்ச்சி எல்லாம் ஏற்படவில்லை… மாறாக அவள் ஆசுவாசமானாள்… ஏனெனில் அவர் முதல் முறை என்பதால் பெரிய பிரச்சனை இல்லை என்று சொல்லிவிட்டாரே…



மருத்துவர் சென்றதும் முகம் ஒளிர நின்றிருந்தவளை பார்த்த தேவ், “என்ன மிருதுளா… என்ன ரொம்ப சந்தோஷமா இருக்க போல…” என்று கேட்டான்.



அவன் பன்மையில் இருந்து ஒருமைக்கு தாவியதை கவனிக்காதவள், “ஆமாம் சார்… இருக்காதா பின்னே… மனோகர் சாருக்கு வந்தது ஹார்ட் அட்டாக்ன்னு எனக்குத் தெரியும்… ஆனா அது சிவியரா இல்ல மைனராக தெரியல… இப்போது டாக்டர் பெருசா எதுவும் பிரச்சனை இல்லைன்னு சொன்னதுக்கு பிறகுதான் எனக்கு நிம்மதியா இருக்கு… இந்த சின்ன வயதிலேயே அவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டது கொஞ்சம் கஷ்டமான விஷயம் என்றாலும்… இனிமேல் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி என்று அவர் வாழ்க்கையை சரியாக கட்டமைத்துக் கொண்டால் அவரோட வாழ்க்கை பெருசா எந்த பிரச்சனையும் இல்லாம போகும்…”



“அட… அட… அட… டாக்டரை விட நம்ம மிருதுளாவிற்கு நிறைய விஷயம் தெரிந்து இருக்கே… உனக்கு இவ்வளவு விஷயம் தெரிஞ்சு இருக்கறது எனக்கு முன்பே தெரிந்திருந்தால் நான் உன்கிட்டயே கேட்டு இருந்திருப்பேனே… டாக்டர் வர வரைக்கும் காத்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது…” என்று கிண்டலாக சொன்னான்.



“இல்ல… அப்படி எல்லாம் இல்ல… எனக்கு பெரிசா எதுவும் தெரியாது… ஆனா என்னோட அப்பா ஒரு இதய நோய் நிபுணர்… அதனால எனக்கு ஓரளவு இந்த நோய் பத்தி தெரியும்…” என்று அவள் சொன்னதும் அவன் முகம் பாறையாக இறுகியது.



அவனால் உடனே இயல்புக்கு திரும்ப முடியாததால் தனது பாக்கெட்டில் இருந்த போனை எடுத்தவன் போனை காதில் வைத்தபடி அவளிடம் இருந்து விலகிச் சென்றான். மிருதுளா அவனின் செயலை தவறாக எடுத்துக் கொள்ளவில்லை… மருத்துவமனை என்பதால் போனை சைலெண்டில் போட்டிருப்பான்… போன் வந்ததும் பேசுவதற்காக சென்றிருக்கிறான் என்று நினைத்தாள்.



அவள் தன் அப்பாவை பற்றி பேசத் தொடங்கியதும் ஆத்திரத்தில் கொதிக்க தொடங்கிய தனது மனதை அமைதிப்படுத்த செல்கிறான் என்று அவளுக்கு எப்படி தெரியும்?



சில நிமிடங்கள் கழித்து தன்னை அமைதிப் படுத்திக் கொண்டு மிருதுளாவின் அருகில் வந்தவன், “மிருதுளா நாம கிளம்பலாமா?” என்று கேட்டான்.



அப்போதுதான் அவளுக்கு தாங்கள் இன்னும் மனோகரின் வீட்டிற்கு அவரை குறித்த தகவல் சொல்லாதது நினைவிற்கு வந்தது…



“சார்… மனோகர் சார் வீட்டுக்கு இன்னும் விஷயம் சொல்லல… முதல்ல அவங்களுக்கு விஷயம் சொல்லணும்… அவங்க வர வரைக்கும் நான் வேணும்னா இங்கேயே இருக்கேன்… உங்களுக்கு ஏதாவது வேலை இருந்தா நீங்க கிளம்புங்க…”



“இல்ல மிருதுளா… இந்த விஷயத்தை போனில் சொல்வது எந்த அளவிற்கு சரி வரும்னு தெரியாது… மனோகர் வீட்டில் யார் யார் இருக்காங்க… இந்த விஷயத்தை அவங்க எப்படி ஹேண்டில் பண்ணுவாங்க… இப்படி எதுவுமே தெரியாமல் போனில் சொல்றது சரி கிடையாது… அதனால நான் மகாதேவனுக்கு போன் செய்து மனோகர் வீட்டிற்கு நேரிலேயே போய் அவங்ககிட்ட விஷயத்தை சொல்லி கூட்டிட்டு வரச் சொல்லிட்டேன்… இனி மற்ற விஷயங்களை மகாதேவன் ஹாண்டில் பண்ணிப்பார்… ஏற்கனவே மணி பத்து ஆகிடுச்சு…. அவங்க வந்த பிறகு நீங்க கிளம்பறது எல்லாம் சரி வராது… நீங்க வாங்க… நானே உங்கள கொண்டு போய் உங்க வீட்ல விட்டுட்டு போறன்…” என்று அவன் எடுத்துச் சொன்னதும் மிருதுளாவும் மேலும் அவனிடம் மறுத்து எதுவும் சொல்லாமல் அவனுடன் கிளம்பினாள்.
 

geethusri

Moderator
அத்தியாயம் - 11 :



மிருதுளாவும் தேவ்வும் அவனுடைய காரில் பயணித்துக் கொண்டிருந்தனர்… மருத்துவமனையை விட்டு கார் கிளம்பி கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் ஆகிவிட்டது… ஆனால் இந்த நொடி வரை காரில் அமைதி மட்டுமே நிலவியது…



காரைக் கிளப்பியதிலிருந்து தேவ் எதையோ யோசித்தபடி வந்தான்… வேறு எதை பற்றி அவன் யோசிக்க போகிறான்?...



‘இது தான் நல்ல சந்தர்ப்பம்… இப்போதே தான் அவளை காதலிப்பதாக சொல்லி அவளிடம் சம்மதம் பெற்று விட வேண்டும்… அதை எப்படி தொடங்குவது என்பதை பற்றி.தான்…’



தேவ்விற்கு ஒரு விஷயம் நன்றாக தெரியும்… தானாக இப்போது அவளிடம் பேசாவிட்டால் அவளும் தன்னிடம் பேச முயலமாட்டாள்... மேலும் இன்னும் ஒரு வாரம் மட்டுமே அவளைத் தன்னுடைய இடத்திற்கு வரவழைக்க முடியும்… அதற்கு மேல் யாருக்கும் சந்தேகம் வராத அளவில் அவள் அவன் நிறுவனத்திற்கு வரும் நாட்களை அவனால் அதிகரிக்க முடியாது… மிருதுளா அவன் நிறுவனத்திற்கு வருவது நின்று விட்டால் அவளை அணுகுவது இன்னும் கடினம் ஆகிவிடும் என்றும் அவனுக்குத் தெரியும்… அதனாலேயே கிடைத்த சந்தர்ப்பத்தில் அவளிடம் காதலை சொல்லி சம்மதம் பெற்று விட வேண்டும் என்பதில் அவன் உறுதியாக இருந்தான்… ஆனால் பேச்சை எப்படி தொடங்குவது என்பதை பற்றி தான் அவனுக்கு யோசனையாக இருந்தது…



அவனின் நினைப்பை பொய்யாக்காமல் கார் கிளம்பியதிலிருந்து மிருதுளாவும் அவனிடம் பேச முயற்சிக்கவில்லை… காரின் ஜன்னல் வழியே வெளியே தெரிந்த காட்சிகளை வேடிக்கை பார்த்தபடி வந்தாள்…



தனது யோசனையில் இருந்து வெளிவந்த தேவ் மிருதுளாவின் செய்கைகளை கவனித்தவன், “ என்ன மிருதுளா… கார் கிளம்பிய நேரத்திலிருந்து பக்கத்தில் இருப்பவன் கிட்ட பேசக்கூட செய்யாமல் அப்படி எதை வேடிக்கை பார்த்துகிட்டு வறீங்க?”



அவ்வளவு நேரம் காரில் நிலவிய அமைதியை தேவ் உடைத்தான்… அவனுக்கு ஒன்று நன்றாக புரிந்து விட்டது… தான்தான் பேச்சைத் தொடங்கியாக வேண்டும்… ஒருவேளை ஈகோ பார்த்துக் கொண்டு தான் பேசாமல் இருந்தால் மிருதுளா இந்த கார் பயணம் முழுக்க வாயை திறக்க வாய்ப்பில்லை என்பதே அது… அதனாலேயே அவன் முதலில் பேச்சைத் தொடங்கினான்.



“தப்பா எடுத்துக்காதீங்க சார்… பொதுவாகவே நான் அதிகம் பேச மாட்டேன்… மேலும் இதுபோன்ற இரவு நேரத்தில் அதிக ஆள் நடமாட்டம் இல்லாத… அமைதியான.. ஆரவாரமற்ற…. சென்னை சாலைகளை பார்ப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்று அவள் பதிலளித்தாள்.



“ ஓ அப்படியா… அப்போ அடிக்கடி இரவு நேர உலா எல்லாம் வருவீங்க போல…”



“இல்ல சார் நான் அந்த மாதிரி எல்லாம் வர மாட்டேன்…”



"ஏன்? இரவில் உலா போவது பிடிக்கும்னா தினமும் இல்லனாலும் எப்போவாவது போகலாமே?"



“தனியா இருக்கறதால எனக்கு பிடித்த விஷயங்களை செய்யணும்னு நினைப்பதை விட என்னோட பாதுகாப்புக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கணும்னு நினைப்பேன்… ஏதாவது இக்கட்டான சூழல் தவிர மற்ற நேரங்களில் நான் இரவு பத்து மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை… நம் நாட்டில் பெண்களுக்கு எதிரா நிறைய வன்முறைகள் நடக்கிறது… வக்ரமான மனம் கொண்ட ஆண்கள் தான் அதற்கு காரணம் என்றாலும்… பெண்கள் சற்று கூடுதல் கவனமாய் இருந்தால் அதுபோன்ற சம்பவங்கள் தங்களுக்கு ஏற்படுவதை தவிர்த்து விடலாம் என்பது என்னோட எண்ணம்… அதனாலேயே நான் எப்போதும் என்னோட பாதுகாப்பில் கொஞ்சம் கூடுதல் கவனமாக இருப்பேன்… இதுபோல கிடைக்கும் சந்தர்ப்பங்களில் மட்டும் எனக்கு பிடித்தமானவற்றை ரசிப்பேன்… அவ்வளவுதான்…”



“ பரவால்ல… மிருதுளாவுக்கு கூட பேச்சு வருது… நான் கூட உங்களால சேர்ந்தாற்போல நாலு வரி பேச முடியாதோன்னு தப்பா நினைச்சிட்டேன்…” என்று அவன் அவளைக் கிண்டல் செய்தான்.



“சார் நீங்க என்னை கிண்டல் செய்றீங்கன்னு எனக்கு நல்லா புரியுது…”



“கிண்டல் எல்லாம் இல்ல மிருதுளா… இந்த ஒரு வாரமா நான் பார்த்த வரைக்கும் நீங்க யாரிடமும் வேலை விஷயம் தவிர மற்ற விஷயங்களை பேசுவதில்லை… நீங்க உண்டு… உங்க, வேலை உண்டு என்று இருக்கீங்க… உண்மையிலேயே இது ரொம்ப ஆச்சரியமான விஷயம் தான்… தேவைக்கு மட்டுமே பேசும் பெண்கள் கூட இருக்காங்கன்னு உங்களைப் பார்த்த பிறகு தான் எனக்கு தெரிந்தது…” என்று சொன்னவனின் மனதில்

‘கொஞ்ச நேரமாவது பேசாம இருக்கியா… எப்போ பார்த்தாலும் திறந்த வாய் மூடாமல் பேசிக்கிட்டே இருக்க…’ என்று தான் சொன்னதும் ‘நான் என்னைக்கு சேர்ந்தாற்போல ஒரு மணி நேரம் பேசாம இருக்கேன்னோ அன்னைக்கு என்னோட மூச்சு நின்னு போச்சுன்னு அர்த்தம்’ என்று அவன் தங்கை பதில் அளித்ததும் அதற்கு அவர்களின் பாட்டி 'இப்படி எல்லாம் அபசகுணமா பேசின வாய்மேலயே போடுவன்' என்று அவளை அதட்டியதும் அவன் நினைவிற்கு வந்தது.



அடுத்த நொடி அவன் முகம் பாறையாக இறுகியது. அவன் தன் கோபத்தை கட்டுப்படுத்த ஸ்டீயரிங் வீலை இறுக்கிப் பிடித்தான்.



மிருதுளா அவனின் முக மாற்றத்தை கவனிக்காமல், “சின்ன வயசிலிருந்தே நான் பொதுவா அதிகம் பேச மாட்டேன்” என்று அவனிடம் சொன்னவள் ‘என் அம்மா இறந்த பிறகு… என் அப்பாவிற்கு என் கூட பேச கூட நேரம் இருந்ததில்லை.. அவரோட பாசத்துக்காக ஏங்கி… உள்ளுக்குள் மறுகிக் கொண்டிருந்த நான் ஒரு கட்டத்தில் பேச்சை குறைத்துக் கொண்டேன்…’ என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டாள்.



அவள் தான் நினைத்ததை அவனிடம் சொல்லி இருக்கலாம்… அப்போது அவனுக்கும் உண்மை புரிந்திருக்கும்… அவனும் தான் போட்ட திட்டத்தில் இருந்த மிகப்பெரிய ஓட்டையை உணர்ந்து அவளை விட்டு விலகி இருப்பான்… ஆனால் அவன் கையில் அவள் பொம்மையாக மாற வேண்டும் என்று விதி இருக்கும்.போது யாரால் என்ன செய்ய முடியும்?



“ ஓ… அப்படியா…” என்றவன் அதற்கு மேலும் தேவையில்லாத விஷயங்களை பேசி நேரத்தை கடத்த விரும்பவில்லை… இன்னும் சிறிது நேரத்தில் அவளின் அப்பார்ட்மெண்ட் வந்து விடும் என்பதால் அதற்குள் தான் நினைத்ததை சொல்லிவிட வேண்டும் என்று முடிவெடுத்தான்.



சில நிமிடங்கள் அமைதி காத்தவன் பின்னர்,” மிருதுளா” என்று அவள் பெயரை ஆழ்ந்த குரலில் அவளை அழைத்தான்.



அவன் குரலில் இருந்த மாற்றத்தை உணர்ந்த மிருதுளா திரும்பி அவன் முகத்தைப் பார்த்தவள், “என்ன சார்?” என்று கேட்டாள்.



“மிருதுளா லவ் அட் பஸ்ட் சைட்… இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?”



“ எதற்காக திடீரென்று என்கிட்ட இப்படி ஒரு கேள்வி கேட்கிறீங்க?”



“ நான் கேட்டதுக்கு நீங்க முதல்ல பதில் சொல்லுங்க… அதுக்கு பிறகு நீங்க கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்றேன்…”



“ எனக்கு அதைப் பற்றி எந்த அபிப்ராயமும் இல்ல சார்… இதுன்னு இல்ல… பொதுவா எனக்கு காதலைப் பற்றியே எந்த ஐடியாவும் இல்லை…”

“என்ன மிருதுளா இப்படி சொல்றீங்க? நீங்க காதலிக்காமல் இருக்கலாம்… ஆனா காதலிக்கிற நண்பர்கள் கூடவா உங்களுக்கு இல்ல… ஜஸ்ட் ஒரு அபிப்ராயம் தான கேட்டன்… அதுக்கு போய் இப்படி பதில் சொல்றீங்க... நான் உங்ககிட்ட இருந்து இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கலை...”



“ நீங்க சொல்ற மாதிரி காதலிக்கிற நண்பர்கள் எனக்கு இருக்கத்தான் செய்றாங்க சார்… ஆனா என்னைப் பொறுத்தவரைக்கும் காதல் என்பது ஒரு உணர்வு… அந்த உணர்வு ஒவ்வொருத்தருக்கும் வித்தியாசப்படும்… மத்தவங்களோட உணர்வை வைத்து நான் என்னோட அபிப்பிராயத்தை சொல்ல விரும்பல… ஒருவேளை என்றாவது நான் காதலிக்க நேர்ந்தால் அந்த உணர்வு எப்படி இருக்கும்னு அனுபவிச்சு பார்த்துட்டு உங்க கிட்ட காதலைப் பற்றிய என்னோட அபிப்ராயத்தை சொல்றேன்…”



“ இந்த வயசு வரைக்கும் நீங்க யாரையும் காதலிக்கலைன்னு சொல்றீங்க ஓகே… அதை நான் ஒத்துக்கறன்… பட் ஒரு க்ரஷ் கூடவா உங்களுக்கு யார்மேலயும் இல்ல…”



“ இல்லை சார்…”



“ஒரு வாரத்திற்கு முன்பு வரை எனக்கும் க்ரஷ் கூட யார்மேலயும் இருந்ததில்லை மிருதுளா… ஆனா என்று உங்களை பார்த்தேனோ அந்த நொடியில் இருந்து காதல் என்னை புரட்டிப் போட தொடங்கிவிட்டது…”



தேவ் ஒருவழியாக அவளிடம் காதலை சொல்லிவிட்டான்.
 

geethusri

Moderator
அத்தியாயம் - 12 :



அவனை ஆச்சரியமாக பார்த்த மிருதுளா, “ இது எப்படி சாத்தியம் சார்? எனக்குத் தெரிஞ்சு நான் இன்னைக்கு தான் உங்கள இரண்டாவது முறை சந்திக்கிறேன்… முதல் முறை சந்தித்தபோது கூட இரண்டு வார்த்தை பேசினேன் அவ்வளவுதான்… அப்படி இருக்கும்போது நீங்க எப்படி என்னை…” என்று தொடங்கியவள் பாதியிலேயே தான் கேட்க வந்ததை நிறுத்தினாள்.



ஆனால் அவள் கேட்க வந்த கேள்வி தேவ்விற்கு புரிந்தது…



“உண்மைய சொல்லனும்னா அந்த ரெண்டு வார்த்தை தான் காரணம் மிருதுளா… பொதுவா என்னைப் பார்க்கிற பெண்கள் தாங்களாவே ஏதாவது ஒரு காரணத்தை ஏற்படுத்திக் கொண்டு என்மீது விழுந்து பழக முயல்வார்கள்… ஆனா நீ அப்படி எதுவும் பண்ணாம இருந்த பார்த்தியா… அதுதான் உன் மேல எனக்கு காதல் ஏற்பட காரணம்… நீ மற்ற பெண்களில் இருந்து சற்று வித்தியாசமாக நடந்து கொண்டதால் உன் மேல எனக்கு ஏற்பட்டது ஜஸ்ட் ஈர்ப்பு… காதல் இல்லன்னு எனக்கு நானே சொல்லிக்கொண்டு இத்தனை நாளா என்னை ஏமாத்திட்டு இருந்தேன்… ஆனா அப்போது கூட நான் உன்னை கவனிக்க தவறியது இல்லை…” என்று அவன் சொன்னதும் மிருதுளா திகைப்பில் தன் விழிகளை விரித்தாள்.



அவள் விழிகளில் திகைப்பை கண்டவன், “என்னடா இவன் லூசு மாதிரி உளறிட்டு இருக்கான்னு நினைக்கிறீங்களா? நேர்ல பார்த்தா தான் பார்த்ததா கணக்கா என்ன? சிசிடிவின்னு ஒன்னு இருக்கே மறந்து விட்டீர்களா? நான் தினமும் சிசிடிவி வழியா இந்த ஒரு வாரமா உன்ன பார்த்துட்டு தான் இருக்கன்… அப்போதுதான் நீ யாரிடமும் அதிகம் பழகாமல்… தேவைக்கு மட்டுமே பேசுவது… உன் வேலைகளை முழுமனதோடு பார்ப்பது… போன்ற விஷயங்களை தெரிந்து.கொண்டேன்… இப்படி உன்கிட்ட இருக்க ஒவ்வொரு குணமும் என்ன உன் பக்கம் ஈர்த்துகிட்டே இருந்துச்சு… அதுவும் இன்னைக்கு நடந்த விஷயம் மொத்தமா என்ன உன் பக்கம் சாச்சிடிச்சி…”



“மனோகருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு இருக்குன்னு உனக்கு சந்தேகம் வந்ததும் உடனடியா பதறாம… பயப்படாம… அவருக்கு வேண்டிய முதலுதவி கொடுத்த… பிறகு அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு போகவேண்டிய அவசரத்தை உணர்ந்து யார் உதவியையும் எதிர்பார்க்காமல் மருத்துவமனைக்கு கொண்டு போக ட்ரை பண்ண பார்த்தியா… அந்த விஷயத்துல நான் மொத்தமாக உன்கிட்ட விழுந்துட்டன் மிருதுளா…”



“எனக்கு வரப்போகிற மனைவிக்கு என்னென்ன தகுதிகள் இருக்கணும்னு நான் நினைத்தேனோ அது அத்தனையும் உங்ககிட்ட இருக்கு… எனக்கு வரப்போற மனைவி அலட்டிக்காம… எல்லோரோடும் இயல்பா பழகணும்… அதே சமயம் தேவைக்கு மட்டுமே பேசணும்… ஏனென்றால் தேவையற்ற பேச்சுக்கள் மற்றவரிடம் நம்முடைய மதிப்பை இழக்க செய்யும்… சக்ரவர்த்தி குரூப்போட சிஇஓ நான்… அதனால என்னோட மனைவிக்கு அந்த தகுதி ரொம்ப முக்கியம்னு நான் நெனச்சேன்… இக்கட்டான சூழல் வரும் போது பதறாம அத அவளே டீல் பண்ணனும்… இது எல்லாத்தையும் விட முக்கியம் காரியம் யாவிலும் கை கொடுக்கும் மனைவிய நான் எதிர்பார்த்தேன்…. நான் சொல்ல வர்றது உனக்குப் புரிந்திருக்கும்னு நினைக்கிறேன்… அதாவது தொழிலிலும் எனக்கு உதவி பண்ணும் மனைவிய எதிர்பார்த்தேன்… இப்படி நான் எதிர்பார்த்த அத்தனை குணங்களும் உன்கிட்ட இருக்கு… மிருதுளா பார்த்த முதல் பார்வையிலேயே உன் மேல எனக்கு காதல் ஏற்பட்டிருந்தாலும் உன்கிட்ட நான் என் மனைவிக்கு என்னென்ன குணங்கள் இருக்கணும்னு எதிர் பார்த்தேனோ அத்தனை குணங்களும் இருக்கின்றன… அதனால் தான் நான் இப்போ உன்கிட்ட என்னோட காதலை சொல்லிக்கிட்டு இருக்கேன்…”



“அப்போ என்கிட்ட இந்த குணங்கள் எல்லாம் இல்லைன்னா நீங்க பார்த்த உடனே காதலிக்க தொடங்கின என்கிட்ட உங்க காதலை சொல்லி இருக்க மாட்டீங்களா?” என்று கேட்ட மிருதுளாவின் குரலில் அவன் பதிலை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தது.



‘ஏண்டி சொல்லியிருக்க மாட்டேன்… உன் கிட்ட இந்த மாதிரி நல்ல குணங்கள் இருக்கு… அதனால இப்போ அதை சொல்லி நான் உன்னை காதலிக்கிறேன்னு சொல்றன்… இதுவே உன் கிட்ட நிறைய கெட்ட குணங்கள் இருந்திருந்தா… நீயும் கெட்டவ… நானும் கெட்டவன்… நமக்குள்ள ஜோடி பொருத்தம் பிரமாதமா இருக்குன்னு சொல்லி காதலைச் சொல்லி இருக்க போறன் அவ்வளவுதான்… எப்படி இருந்தாலும் என் கெரகம் உன்கிட்ட என் காதல நான் சொல்லியே ஆகணுமே…’ என்று உள்ளுக்குள் பொருமினான்.



மனதில் நினைப்பதை எல்லாம் சொல்லிவிட முடியுமா என்ன?



“நான் எதிர்பார்த்த குணங்கள் அனைத்தும் உன்கிட்ட இருக்கறதுனால இவ்வளவு சீக்கிரமா உன்கிட்ட என்னோட மனசுல உள்ள காதலை சொல்லிட்டேன்…. ஒருவேளை நீயும் மற்ற பெண்கள் மாதிரி இருந்திருந்தாலும் என் மனதில் தோன்றிய காதல் மாறாமல் மறையாமல் அப்படியே இருந்து இருந்தால் அப்போதும் உங்ககிட்ட வந்து என்னோட காதலை சொல்லி இருப்பேன்… என்ன இன்னும் கொஞ்சம் காலம் ஆகியிருக்கும் அவ்வளவுதான்…” என்றவன் மிருதுளாவின் அப்பார்ட்மெண்ட்டிற்கு செல்லும் வழியில் இருந்த ஒரு ஹோட்டலில் முன்பு காரை நிறுத்தினான்.



காரை நிறுத்தியவனை திரும்பிப் பார்த்தவள், “எதுக்காக இங்க காரை நிறுத்தனீங்க சார்… உங்களுக்கு பசிக்குதா?” என்று கேட்டாள்.



“எனக்கு பசி இல்ல… நான் எட்டு மணிக்கே உணவை வாங்கி வரச்சொல்லி சாப்பிட்டு விட்டேன்… ஆனால் என் பக்கத்துல இருக்க ஒருத்தவங்க தான் மருத்துவமனையிலேயே பசியினால் தலைவலியில் அவதிப்பட்டாங்க… அத அவங்க மறந்து இருக்கலாம்.. ஆனா நான் மறக்கல …அதான் அவங்க சாப்பிடுவதற்காக இங்க காரை நிறுத்தினேன்…” என்று அவன் சொன்னதும் அன்றைய நாளில் மூன்றாவது முறையாக மிருதுளாவின் மனம் நெகிழ்ந்தது.



அவன் சொல்வது உண்மைதான்… மருத்துவமனையில் இருந்தபோது பசி எடுத்த போதிலும் மனோகரின் நிலை தெரியாமல் அவளுக்கு சாப்பிட பிடிக்கவில்லை… இப்போது அவன் பேசிய பேச்சைக் கேட்டளுக்கு அது பற்றிய நியாபகமே இல்லை… இப்போது அவன் அதை நியாபகப்படுத்தியதும்தான் சிறுகுடலை பெருங்குடல் உண்ணும் அளவிற்கு இருக்கும் பசியை உணர்ந்தாள்… இவன் நியாபகப்படுத்தமலேயே இருந்திருக்கலாம் என்று நினைத்தாலும்… தானே மறந்துவிட்ட ஒன்றை அவன் ஞாபகம் வைத்து அவள் சாப்பிட வேண்டும் என்று ஹோட்டலுக்கு அழைத்து வந்த அவனின் செயல் அவளுக்கு மகிழ்ச்சியைத் தந்தது என்னவோ உண்மை…



காரில் இருந்து இறங்கிய தேவ் அவளையும் அழைத்துக் கொண்டு ஹோட்டலின் உள்ளே சென்றவன் காலியாக இருந்த இருக்கையில் அவளை அமர வைத்தவன் பின்னர் அவளுக்கு எதிர் புறம் இருந்த இருக்கையில் அமர்ந்தான். அவர்கள் இருக்கையில் அமர்ந்த அடுத்த நொடி வெயிட்டர் வந்து அவர்கள் முன்பு நின்றார்.



மிருதுளா வெயிட்டரிடம், “எனக்கு நாலு இட்லி…” என்றவள் தேவ்வை பார்த்து, “சார் நீங்க ஏற்கனவே சாப்பிட்டு இருந்தாலும் எனக்கு கம்பெனி கொடுப்பதற்காக இப்போ சாப்பிடறீங்களா ப்ளீஸ்…” என்று கேட்டாள்.



கண்களை சுருக்கி கெஞ்சும் குரலில் கேட்டவளை பார்த்து புன்னகைத்த தேவ் அவளைப் பார்த்து தலையசைத்தவன் பின்னர் வெயிட்டரிடம், “எனக்கும் நாலு இட்லி கொண்டு வாங்க” என்றான்.



வெயிட்டர் அங்கிருந்து சென்றதும், “ஏன் மிருதுளா இட்லி ஆர்டர் பண்ண நீ… வேற ஏதாவது ஆர்டர் பண்ணி இருக்கலாம் இல்லை… இட்லி பொதுவா நாம வீட்டில் சாப்பிடற உணவு தானே… ஹோட்டலுக்கு வந்தா வீட்ல நம்மால சமைக்க முடியாத… சமைக்க கஷ்டமா இருக்க உணவுகளை தானே எல்லாரும் பொதுவா ஆர்டர் பண்ணுவாங்க… நீ ஏன் இட்லிய ஆர்டர் பண்ண…” என்று கேட்டவனை பார்த்து அவன் மனசாட்சி, ‘அடேய்… கார்ல எவ்வளவு முக்கியமான விஷயம் அவகிட்ட நீ சொன்ன… இப்போ அவளோட பதில் என்னன்னு கேட்காம அதைவிட ரொம்ப முக்கியமான கேள்வி கேட்கிற போல…’ என்று நக்கல் அடித்தது.



‘ரொம்ப பேசாத… என்ன மறுக்கறதுக்கான ஆப்ஷனே அவளுக்கு இல்ல… அப்படி இருக்கும் போது அவளோட பதில் எனக்கு எதுக்கு… அவளோட பதில் எதுவாக இருந்தாலும் இறுதியில் அவ என்ன காதலிச்சே ஆகணும்… அவளை நான் அந்த நிலைக்கு கொண்டு வருவன்… அப்புறம் எதுக்காக நான் அவகிட்ட பதிலை எதிர்பார்க்கணும் சொல்லு…’ என்று திமிராகவே தன் மனசாட்சிக்கு பதில் அளித்தான்.



அவன் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறான் என்பதை அறியாதவளாய், “நானும் அப்படிதான் பண்ணுவேன் சார்… ஆனா இப்போ இரவு ரொம்ப லேட் ஆயிடுச்சு… எளிதில் ஜீரணிக்க உணவு சாப்பிடுவது தான் உடம்புக்கு நல்லது… அதனாலதான்…” என்று அவனிடம் சொன்னவள் ‘எனக்கு உடம்புக்கு முடியாம போனா பார்த்துக்க கூட ஆள் கிடையாது… அதனால நான் தானே முன்னெச்சரிக்கை முத்தம்மாவா இருக்கணும்…’ என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டாள்.



பின்னர் சில நொடிகள் அமைதியாக இருந்தவள் பின் தேவ்வின் மனசாட்சி அவனிடம் கேட்ட அதே கேள்வியை அவளும் கேட்டாள்.



“ஏன் சார் காரில் வரும்போது நீங்க சொன்ன எல்லா விஷயங்களும் உண்மைதானே?” என்று அவள் சந்தேகத்துடன் கேட்டாள்.



“ஏன் மிருதுளா இப்படி கேக்கற… நான் சொன்ன எல்லாமே உண்மைதான்…”



“அது ஒன்னும் இல்ல சார்… நீங்க என்கிட்ட உங்க காதல சொன்னீங்க… ஆனா என்னோட பதில் என்னன்னு தெரிஞ்சுக்க ஆர்வம் காட்டலியா… அதான் ஒருவேளை பிராங்க் பண்ண பார்த்தீங்களோன்னு எனக்கு ஒரு சந்தேகம் வந்துடுச்சு அவ்வளவுதான்…”



“அதுக்கு ஒண்ணும் பெரிய விசேஷமான காரணம் எல்லாம் இல்ல மிருதுளா… எனக்கு உன்கிட்ட இருந்து பதில் வேணும் தான்… ஆனா நல்ல பதில்… நீ பசியோடு யோசிச்சா எனக்கு நல்ல பதில் உன்கிட்ட இருந்து கிடைக்கும்னு தோணல… அதான் முதலில் உன்னோட பசியைப் போக்கிட்டு அதுக்குப் பிறகு உன்கிட்ட இருந்து பதிலை தெரிஞ்சுக்கலாம்னு நினைத்தேன்…” என்று அவன் வாய்க்கு வந்ததை சொல்லி சமாளித்த தருவாயில் வெயிட்டர் அவர்கள் ஆர்டர் செய்த இட்லியை கொண்டு வந்து மேஜை மீது வைத்தார்.



அதன் பிறகு இட்லியை சாப்பிட்டு முடித்தவர்கள் உணவுக்கு உரிய தொகையை கட்டிவிட்டு மீண்டும் காரில் ஏறி பயணிக்கத் தொடங்கினர். அடுத்த ஐந்தாவது நிமிடம் தேவ் மிருதுளாவின் அப்பார்ட்மெண்டின் முன்பு காரை நிறுத்தினான்.



காரை விட்டு இறங்குவதற்காக காரின் கதவை திறந்தவளை பார்த்து, “மிருதுளா” என்று அழைத்த தேவ், “நீ எனக்கு இன்னும் பதில் சொல்லல…” என்றான்.



ஒரு நொடி தயங்கியவள் பின்னர் அவன் முகத்தை நேராகப் பார்த்து, “சார் நான் உங்களோட உணர்வுகளை மதிக்கிறேன்… உங்க மனைவிக்கு என்னென்ன குணங்கள் இருக்கணும்னு நீங்க எதிர் பார்த்தீர்களோ அது என்கிட்ட இருப்பதால் நீங்க என்னை காதலிக்க தொடங்கி இருக்கலாம்… ஆனா எனக்கு உங்க மேல அப்படி எந்த உணர்வும் வரல… சாரி..” என்றாள்.
 

geethusri

Moderator

அத்தியாயம் - 13 :​


"எனக்கு உங்கமேல அந்த மாதிரி எந்த உணர்வும் வரல... சாரி" என்றவள் காரின் கதவை திறந்து கீழே இறங்கியவள் பின்னர் கீழே குனிந்து, " ரொம்ப தேங்க்ஸ் சார்... என்னோட பசி அறிந்து என்ன ஹோட்டல்க்கு கூட்டிட்டு போனதுக்கும்... அப்புறம் வீட்ல ட்ராப் பண்ணதுக்கும்..." என்று சொல்லிவிட்டு நடக்க தொடங்கினாள்.


அவள் இரண்டு அடிதான் எடுத்து வைத்திருப்பாள்... அதற்குள் "மிருதுளா" என்று அழைத்த தேவ்வின் குரலில் அவள் நடப்பதை நிறுத்திவிட்டு அவனை திரும்பி பார்த்தாள்.


கார் கதவை திறந்து இறங்கிய தேவ் அவள் அருகில் சென்றவன், " இப்போ உனக்கு என்மேல காதல் உணர்வு இல்லாமல் இருக்கலாம்... ஆனால் எதிர்காலத்தில் வரலாம் இல்லையா... எனக்கு உன்ன பாத்ததும் வந்த காதல்... நீ என்கூட பழக பழக வரும்னு உனக்கு வரும்னு எனக்கு தோணுது..." என்று சொன்னவனை பார்த்து


"எப்படி சார் அவ்வளவு உறுதியா சொல்றிங்க..." என்று கேட்டாள்.


"ஆமாம்... உறுதியா தான் சொல்றன்... என் காதல் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு... அது உன்னை என்கிட்ட கொண்டு வந்து சேர்க்கும்..." என்று நம்பிக்கையாக சொன்னவனிடம் அவள் எதுவும் சொல்லவில்லை.


சில நொடிகளுக்கு பிறகே அவள் எதுவும் சொல்லாமல் இருப்பதை உணர்ந்தவன், "என்ன மிருதுளா? என்னோட உறுதியை பார்த்து வாய் அடைச்சு போய் நிக்கிறியா?" என்று கேட்டவனை


தன் கைகளை மார்பின் குறுக்காக கட்டியபடி நேருக்கு நேராக பார்த்தவள், "நம்ம நாட்டுல எல்லாருக்கும் பேச்சு சுதந்திரமும் கருத்து சுதந்திரமும் இருக்கு சார்..." என்றாள்.



சில நொடிகள் அவள் சொன்னதன் அர்த்தம் புரியாமல் விழித்தவன் பின்னர் சிரிக்க தொடங்கினான்.... சிரித்து முடித்த பிறகு, "அதாவது நீ என்ன வேணும்னாலும் நெனச்சிக்கோடா மடையா அதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைனு சொல்ற அப்படித்தானே..." என்று சொன்னவனை பார்த்து தோள்களை குலுக்கியவள் மீண்டும் நடக்க தொடங்கினாள்.


அவள் இரண்டு அடி எடுத்து வைப்பதற்கு முன்பே தேவ் அவளுடன் இணைந்து நடக்க தொடங்கினான். எனினும் அவள் நடப்பதை நிறுத்தவில்லை.


அவள் விரைவாக முன்னோக்கி நடந்து செல்லும் போது தேவ் அவளின் முகத்தை பார்த்தபடி திரும்பி பின்னோக்கி தனது கால்களை எடுத்து வைத்து, “உன்னோட போன் நம்பரை எனக்கு தர முடியுமா” என்று கேட்டவனிடம்…


“சாரி… அன்னியர்களுக்கு நான் என்னோட போன் நம்பரை தர மாட்டன்” என்று மிருதுளா பணிவுடன் நிராகரித்தாள்.


“சரி விடு... இதை நான் என்னோட வழியில டீல் பண்ணிக்கிறன்... நான் உன்னோட போன்ல என்னோட நம்பர சேவ் பண்ணட்டுமா” என்று அவளிடம் கேட்ட தேவ் இதை சொன்னபடியே தனது போனை எடுத்து அழைப்பெடுத்தான்.


சுமார் முப்பது வினாடிகள் கழித்து மிருதுளாவின் போனில் அழைப்பு வந்தது… ஒரு அறிமுகம் இல்லாத எண் திரையில் தெரிந்தது…


“இதுதான் என்னோட போன் நம்பர்…” மிருதுளாவை பார்த்தபடியே ஹரிஷ் சொன்னான்.


அவளின் கண்களில் ஆச்சரியம் தோன்றியதை அவன் பார்த்துவிட்டான். அவனுக்கு எப்படி அவளின் எண் கிடைத்தது என்று அவளுக்கு குழப்பமாக இருப்பது அவனுக்கு தெரியும்.

அதனால் அவன் “நான் முதல் பார்வையில காதலிக்க தொடங்கின அந்தப் பெண்ணுக்காக கொஞ்சம் கூட முயற்சி எடுக்கலனா… நான் எப்படி முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துட்டன்னு சொல்ல முடியும்”

தனது எண்ணங்களை அப்படியே படித்த தேவ்வை சுற்றிக் கொண்டு… மிருதுளா லிப்ட் நோக்கி நடந்து சென்று அதில் நுழைந்தாள்.


தேவ் அவளை தடுக்கவில்லை. அவள் லிஃப்டில் ஏறி செல்லும் வரை… இயல்பாக இருந்தவனின் முகத்தில் பின்னர் வெறுப்பு படர்ந்தது… அவனின் கண்களில் கொலைவெறி தாண்டவமாடியது… அவன் மனது உலைக்கலனாக கொதிக்க ஆரம்பித்தது…


சிறிது நேரம் அங்கேயே நின்ற தேவ் பின்னர் தன் காரை நோக்கி நடக்க தொடங்கினான்... அவள் இருக்கும் வரை இயல்பாய் இருப்பது போல நடித்தவனின் முகம் இப்போது கோபத்தில் சிவந்து இருந்தது...


மிருதுளாவிடம் இருந்து தேவ் இப்படிப்பட்ட பதிலை எதிர்பார்க்கவில்லை... அவள் உடனடியாக தன் காதலை ஏற்காவிட்டாலும்... பதில் சொல்ல சில நாட்கள் நேரம் கேட்பாள் என்றே எதிர்பார்த்தான்... ஆனால் அவளோ 'உன் மீது எனக்கு எந்த உணர்வும் ஏற்படவில்லை' என்று முகத்துக்கு நேராக சொல்வாள் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை...


'எவ்வளவு திமிர் இருந்தா என்கிட்டயே இப்படி பதில் சொல்லுவா... பெரிய உலக அழகி இவ... உள்ளூர் கிழவி மாதிரி இருந்துட்டு இவ்ளோ சீன் போடறா' என்று மனதுக்குள் பொறுமியவனிடம்


'டேய் அவ நீ சொன்னதும் உன்னோட காதலை ஏத்துக்கல தான்... அதுக்காக அவளை உள்ளூர் கிழவின்னு சொல்லுவியா... உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா' என்று அவன் மனசாட்சி கேள்வி கேட்டது.


'ஏய் நானே செம கடுப்புல இருக்கன்... தேவையில்லாத நேரத்துல ஆஜராகி என்ன கடுப்பேத்தாத... என்னோட கால் தூசி பெற மாட்டா இவ எல்லாம்... ஆனா இவ கிட்ட நானே போய் அவளை காதலிக்கறதா சொன்ன உன் மேல எனக்கு உணர்வு இல்லை... உப்பு இல்லைனு... சொல்லிட்டு போறா... இருடி மகளே... உனக்கு என் மேல காதல் வரவச்சி உன்ன என் பின்னாடி சுத்த விடல நான் தேவ் இல்லடி...' என்று மனதுக்குள் சங்கல்பம் செய்தவன் தன் காரில் ஏறினான்.


காரில் ஏறியதும் அவன் காரை கிளப்பவில்லை... மாறாக தன் சட்டை பாக்கெட்டில் இருந்த சிகரெட் பாக்கெட்டில் இருந்து ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் வைத்தவன் அதை பற்ற வைத்து புகைக்க தொடங்கினான்.

சிறிது நேரம் எதையோ யோசித்தவன் பின்னர் தனது போனை எடுத்து மகாதேவனுக்கு அழைத்தான். அழைப்பு ஏற்கப்பட்டதும் "ஹலோ மகாதேவன் நான் தேவ்..." என்றான்.


"சொல்லுங்க சார்..." மறுமுனையில் இருந்து மகாதேவனின் பணிவாக குரல் கேட்டது.


"எங்க இருக்கீங்க?"


"ஹாஸ்பிடல்ல சார்..." என்று அவர் சொன்ன பிறகுதான் தான் அவரை மனோகரின் குடும்பத்திற்கு உதவியாக ஹாஸ்பிடலில் இருக்க சொன்னது நினைவு வந்தது.


"மனோகர் கண் விழித்துவிட்டாரா? எதாவது பேசினாரா?"


"ஆமாம் சார்... அரை மணி நேரத்திற்கு முன்பு தான் கண்விழித்து பார்த்து பேசினார்..."

"அவருக்கு துணையா இருக்க அவங்க வீட்ல இருந்து யாராவது வந்து இருக்காங்களா?"


"ஆமா சார்... மனோகரோட மனைவி அவர் கூட இருக்காங்க..."


"மனைவியா? அவருக்கு துணையாய் இருக்க அவங்க வீட்ல இருந்து ஆண்கள் யாரும் வரலையா?"


"அது வந்து சார்... மனோகரோட அப்பா இறந்துட்டார்... அவர் அம்மா, மனைவி, இரண்டு குழந்தைகளோட மனோகர் இருக்கார்... நான் போய் விஷயத்தை சொன்னதும் ரொம்ப பதறிட்டாங்க... அப்புறம் நான் பயப்படும்படி ஒண்ணும் இல்லைனு சொன்ன பிறகுதான் கொஞ்சம் அமைதி ஆனாங்க... அதுக்கு பிறகு குழந்தைகளை அவங்க பாட்டி பொறுப்பில் விட்டுட்டு அவர் மனைவியை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வந்தன்..."


"ஓஹ்... சரி... நீங்க இன்று இரவு எங்க தங்க போறீங்க?"


"எங்க தங்கட்டும் சார்?"


"ஆண் துணை இல்லைனு சொல்றிங்க... அதனால ஹாஸ்ப்பிட்டல்லேயே தங்கிடுங்க..." என்று அவன் சொன்னதும் “சரிங்க சார்” என்று மகாதேவன் பதிலளித்தார்.

"அப்புறம் மகாதேவன் இந்த விஷயத்தையும் பண்ணிடுங்க..." என்ற தேவ் அவரிடம் சில கட்டளைகளை பிறப்பித்துவிட்டு போனை அணைத்தவன் அதை காரின் சீட்டில் தூக்கி போட்டுவிட்டு... எரிந்து முடிந்த சிகரெட்டை தூக்கி வீசினான்.


'நாளையில் இருந்து என்னோட காதல் மழையில நனைய தயாரா இரு பேபி... என்கிட்ட இருந்து இனி உன்னால தப்பிக்க முடியாது...' என்று மனதுக்குள் சொல்லி கொண்டவனின் கைகளில் கார் சீறி பாய தொடங்கியது.

அத்தியாயம் - 14 :​


நான்காம் தளத்தை அடைந்ததும் லிஃப்ட் நின்றது… லிப்டில் இருந்து வெளியேறிய மிருதுளா தனது அப்பார்ட்மெண்டை நோக்கி சென்றவள் தன் கைப்பையில் இருந்து சாவியை எடுத்து கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.


பின்னர் நேராக ப்ரிட்ஜை நோக்கி சென்றவள் அதில் இருந்து தண்ணீர் எடுத்து குடித்தாள். சில்லென்ற தண்ணீர் உள்ளே சென்ற பிறகே அதுவரை தேவ்வின் பேச்சால் ஏற்பட்டிருந்த எரிச்சல் அவளுக்கு குறைந்தது.


‘இவனெல்லாம் என்ன மாதிரி ஆளு… ஒரு பொண்ணு எனக்கு உன்ன புடிக்கலைன்னு சொன்னா ஒதுங்கிப் போக வேண்டாமா? நீ காதலிக்கிற வர நான் உன் பின்னாடியே சுத்துவேன்னு சொல்றது எல்லாம் சுத்த பொறுக்கித்தனம்னு அவனுக்கு தெரியலையா? சுத்தட்டும்… நல்லா சுத்தட்டும்… அப்போதான் இந்த மிருதுளா யாருன்னு அவனுக்கு நல்லா தெரியும்…’


‘இவன் எவ்வளவு பெரிய பணக்காரனா வேணா இருந்துட்டு போகட்டும்… அழகுல மன்மதனா கூட இருந்துட்டு போகட்டும்… அதுக்காக எல்லாம் இவன் என்கிட்ட காதலை சொன்னதும் நான் அவன் காலடியில் வந்து விழுந்துடுவேன்னு எதிர்பார்த்தா அது அவனோட முட்டாள்தனம்…’ என்று அவள் நினைக்கும் போதே


‘ஏன் மிருதுளா அவனுக்கு என்ன குறைச்சல்... நீ ஏன் அவனோட காதலை ஏத்துக்க கூடாது...?’ என்று அவள் மனசாட்சி அவளிடம் கேட்டது


‘என்ன பொறுத்தவரைக்கும் வாழ்க்கைக்கு அழகோ பணமோ முக்கியம் இல்லன்னு நான் நினைக்கிறன்… எனக்கு தேவை அன்பு… அதுவும் மாறாத அன்பு… அது யார் கிட்ட இருந்து கிடைக்கும்னு என்னோட உள் மனசு சொல்லுதோ அவங்கள மட்டும் தான் என்னால் காதலிக்க முடியும்…’


‘ஏன் தேவ் உன் மேல அன்பா இருப்பான்னு உனக்கு தோணலையா?’


‘இல்ல… அவனோட லவ் மேல எனக்கு நம்பிக்கை இல்ல… பார்த்த முதல் நாளே நான் இவன்கிட்ட சிரிச்சு பேசி வழியலையாம்... அதனால இவனுக்கு என் மேல காதல் வந்துடுச்சாம்… காதல் வரதுக்கு இதெல்லாம் ஒரு காரணமா… நான் என்ன நினைக்கிறன்னா எல்லாரும் அவன் மேல விழுந்து பழகும் போது நான் மட்டும் அவனை கண்டுக்காமல் இருந்தது அவனோட ஆம்பளை புத்திய சீண்டி விட்டு இருக்கும்… அதனால என்னை அவன் காலடியில் விழ வைக்கிறதுக்காக காதலை ஒரு ஆயுதமாக பயன்படுத்தறான்னு நினைக்கிறன்…’ என்ற சந்தேகம் அவளுக்கு வந்த போது


‘சரி விடு மிருதுளா… அதுதான் நீ இவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கியே… அவனால நிச்சயம் உன் மனச கலைக்க முடியாது… ஒருவேளை நீ நெனைக்கறது உண்மையா இருந்தா கொஞ்ச நாள் உன் பின்னாடி சுத்திட்டு நீ மடிய மாட்டேன்னு புரிஞ்சதும் அவனே சீ சீ இந்த பழம் புளிக்கும்ன்ற கதையா உன்ன விட்டு விலகி போய்டுவான்... ஒருவேளை அவன் உன்ன உண்மையாவே லவ் பண்ணா கூட இந்த மாதிரி அற்ப காரணத்துக்காக லவ் பண்றவனை நீ லவ் பண்ணுவியா என்ன?’


‘இல்லை… நிச்சயம் இல்லை… இன்னைக்கு என்னோட ஒரு கேரக்டர் புடிச்சி என்ன லவ் பண்றேன்னு சொன்ன இவன்… என்னோட இன்னொரு கேரக்டர் பிடிக்காமல் போனால் பிரேக்கப் சொல்ல மாட்டான்னு என்ன நிச்சயம்? நான் ஒருத்தனை காதலிக்கணும்னா நான் அவன்கிட்ட என் அம்மாவோட பாசத்தையும் அப்பாவோட அரவணைப்பையும் ஒரு நண்பனோட தோழமையையும் உணரனும்… அப்போதான் என்னால முழு மனசோட என் வாழ்க்கைய அவன்கிட்ட ஒப்படைக்க முடியும்… என்னோட அம்மா இறந்ததிலிருந்து நான் என் அப்பா கிட்ட இருந்து இது அத்தனையும் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து போய் நிற்கிறன்… அதனால தேவ் மாதிரி ஆள் கிட்ட எல்லாம் என்னால என் வாழ்க்கையை ஒப்படைக்க முடியாது... இவன் எப்போ என்ன விட்டு போவானோ… இவனுக்கு என்னோட எந்த கேரக்டர் பிடிக்காமல் போயிடுமோன்னு கடைசி வரைக்கும் என்னால ஒரு பயத்தோட வாழ முடியாது… என்னை பொருத்தவரைக்கும் இனி என்ன கல்யாணம் பண்ணிக்க போறவன் மட்டும் தான் என்னோட உலகம்… அவன் கூட நான் இருக்கும்போது எனக்கு சந்தோஷத்தை தவிர வேற எந்த உணர்வும் வரக்கூடாது… அப்படிப்பட்ட ஒருத்தன நான் என்னைக்கு பார்க்கிறானோ அப்போ நிச்சயம் அவன் கிட்ட நானே கூட போய் என்னோட லவ்வ சொல்லுவன்…’ என்று தன் மனச்சாட்சிக்கு பதில் அளித்தவள் பின்னர் படுத்த சென்றாள்.


மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலையில் சீக்கிரம் எழ தேவையில்லை என்பதால் மிருதுளா ஒன்பது மணிவரை தூங்கிக் கொண்டிருந்தாள். அப்போது அவளின் போன் ஒலித்தது.


கண்ணைத் திறக்காமலேயே போனை எடுத்தவள் தூக்கக் கலக்கத்துடன், “ஹலோ” என்றாள்.


“என்ன மிது குட்டி இன்னும் தூங்கி எழுந்திரிகலையா?’


தேவ்வின் உல்லாச குரல் போனில் கேட்டதும் அடித்துப் பிடித்து எழுந்தவள், “என்ன சார்? என்ன விசயம்? ஏதாவது டாக்குமெண்ட் கொடுக்க மறந்துட்டீங்களா? அதை சொல்ல தான் எனக்கு போன் பண்ணீங்களா?” என்று கேட்டாள்.


அவளுக்கு அந்த நொடி தேவ் காதலை அவளிடம் சொன்னதே ஞாபகம் இல்லை… தான் இப்போது அவன் கம்பெனியில் ஆடிட் செய்து கொண்டிருப்பதால் ஏதாவது முக்கியமான டாக்குமெண்டை கொடுக்காமல் விட்டிருப்பான்… அதை சொல்வதற்கே இப்போது போன் செய்திருக்கிறான் என்று அவள் நினைத்தாள்.


அவள் அப்படி கேட்டதும் ஒரு நொடி வாய்விட்டுச் சிரித்த தேவ், “என்ன மிது தூக்கத்துல கூட ஆடிட்… கணக்கு… இதுதான் உனக்கு ஞாபகம் இருக்குமா?” என்று கேட்டவன் “ஆமா நான் மிஸ் பண்ணது உண்மைதான்… ஆனா என்னோட இதயத்தை… அது இப்போ உன் கிட்ட தான் இருக்கு… அதை ஏத்துக்கிட்டு பத்திரமா பாத்துக்கறியா…” என்று ஆழ்ந்த குரலில் கேட்டான்.


அவன் அப்படி கேட்டதும் தான் மிருதுளாவிற்கு நேற்று இரவு நடந்த அத்தனையும் ஞாபகம் வந்தது.


தன் கைகளால் தலையிலேயே அடித்து கொண்டவள், “அவங்க அவங்க பொருளை அவங்க அவங்க தான் சார் பத்திரமா பாத்துக்கணும்… எனக்கு அந்த அவசியம் இல்லைன்னு நினைக்கிறன்…” என்று பொறுமையாகவே பதில் சொன்னாள்.


“நீ சொல்றதை நான் நம்ப மாட்டேன் மிது… என்கிட்ட பேசும் போது என்ன புடிக்காத மாதிரி பேசற நீ அப்போ எதுக்காக நைட் என்ன கிஸ் பண்ண?” என்று அவன் கேட்டதும் அவளுக்கு தூக்கி வாரி போட்டது.


‘இது என்னடா கொடுமையா போச்சி… நல்லா தூங்கிகிட்டிருந்தவளை போன் போட்டு எழுப்பி டார்ச்சர் பண்றான்… இவன நான் புடிக்கலைன்னு சொல்லிட்டேன்... அதுக்கு பிறகும் நீ என்ன கிஸ் பண்ணன்னு எங்கிட்டயே சொல்றான்… இவன் என்ன லூசா மாறிட்டானா… இல்ல நைட் அடிச்ச சரக்கால போதை இன்னும் தெளியாம உளரிகிட்டு இருக்கானா…’ என்று நினைத்த மிருதுளா


“ஏன் சார் இப்படி உளர்றீங்க… நான் எப்போ உங்களை கிஸ் பண்ணன்…” என்று பல்லைக் கடித்தபடி கேட்டாள்.


“ஓஹ் உனக்குத் தெரியாது இல்லையா… நேத்து நீ என் மேல எந்த உணர்வும் வரலன்னு சொல்லிட்டு போயிட்டியா… அதுல மாமா ரொம்ப சூடாயிட்டன்… நேரா வீட்டுக்கு போயி நாலு கட்டிங் போட்ட பிறகுதான் என்னால தூங்கவே முடிஞ்சுது… அப்போ என் கனவுல வந்த நீ மொதல்ல என் நெத்தியில முத்தம் கொடுத்த… அப்புறம் என் கண்ணுல… அப்புறம் என் மூக்குல… அப்புறம் என்னோட உதட்டுல… இப்படி முத்தம் கொடுத்துகிட்டே போன… அப்போ எனக்கு எப்படி இருந்தது தெரியுமா… வானத்துல பறக்கற மாதிரி இருந்தது… அதுக்கப்புறம் நீ என்ன பண்ணனா…” என்று அவன் மேலும் சொல்ல தொடங்கும்போதே


‘போடா பக்கி… சரக்கு அடிச்ச போதையில எல்லாத்தையும் நீயா கற்பனை பண்ணிக்கிட்டு… நான் கனவுல வந்து கண்ட கண்ட இடத்துல உன்ன கிஸ் பண்ணன்னு என்கிட்டயே சொல்றியா... சரியான நெஞ்சழுத்தக்காரன்தான்...’ என்று உள்ளுக்குள் தேவ்வை போட்டு வறுத்தெடுத்தவள் அதற்கு மேலும் அவன் என்னென்ன கற்பனையை பண்ணி தொலைத்திருப்பானோ என்று பயத்தில், “சார்.” என்று கத்தியவள், “போதும் நிறுத்துங்க… இனிமேலும் நீங்க இப்படி பேசறத என்னால பொறுமையா கேட்க முடியாது… நீங்க உங்க மனசுல என்னதான் நெனச்சுக்கிட்டு இருக்கீங்க… ஒரு பொண்ணுகிட்ட இப்படி பேச உங்களுக்கு வெக்கமா இல்லையா…” என்று அவள் கேட்டதற்கு


“இல்லையே… நான் ஒன்னும் யாரோ ஒருத்தி கிட்ட இப்படி பேசலையே… என் பொண்டாட்டி கிட்ட தானே பேசறன்…” என்று அவன் ஆழ்ந்த குரலில் சொன்னதும் மிருதுளா வாயடைத்துப் போனாள்.


“என்னது பொண்டாட்டியா…” என்று அவள் மெல்லிய குரலில் முணுமுணுத்தது பாம்பு காதுக்கு சொந்தக்காரனுக்கு தெளிவாகவே கேட்டது.


“ஆமா பொண்டாட்டி தான்… நான் எந்த நிமிஷம் உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சேனோ அந்த நிமிஷத்துல இருந்து உன்னை என்னோட பொண்டாட்டியா தான் பாக்கறன்… ஊரறிய நான் உன் கழுத்துல கட்ட போற தாலி வெறும் சடங்குதான்…” என்று அவன் மீண்டும் ஆழ்ந்த குரலில் சொன்னதும் மிருதுளாவின் மனம் பிசைந்தது.


‘ப்ளீஸ் தேவ் இப்படி எல்லாம் பேசி என் மனசை கலைக்க முயற்சி பண்ணாத… என்னால உன்ன மாதிரி உணர்ச்சிவசப்பட்டு ஒரு நொடியில முடிவெடுக்க முடியாது… ஏற்கனவே நான் என் அப்பா விஷயத்துல சூடு கண்ட பூனை… அதனால என்னால உன்ன மாதிரி சட்டுன்னு என் வாழ்க்கையோட முக்கிய முடிவை எடுக்க முடியாது… நீ இப்படி பேசறதை கேட்கும் போது என் மனசை என்னவோ பண்ணுது…’ என்று அவள் உள்ளுக்குள் புலம்பும் போதே


“நீ ஏன் இவ்வளவு டென்ஷன் ஆனன்னு எனக்கு புரியுது மிது குட்டி… இவ்வளவு இடத்துல என்னை கிஸ் பண்ண நீ… அதுக்கு மேலயும் போயிருப்பியோன்னு நினைச்சு உனக்கு வெட்கம் வந்திருக்கும் அதானே… மாமா குட் பாய் மிது குட்டி அதுக்கு மேல எல்லாம் போக விடல…” என்று அவன் ஹஸ்கி வாய்சில் சொன்னான்.


அவன் பேச்சைக் கேட்டு தன் தலையில் அடித்துக் கொண்ட மிருதுளா ‘இதெல்லாம் திருந்தாத ஜென்மம்… ஒரு நிமிஷம் நம்மள நெகிழ வைக்கற மாதிரி பேசறான்… அடுத்த நிமிஷமே கடுப்பேத்தற மாதிரி பேசறான்… இவன்கிட்ட பேசறதே நமக்கு தான் டைம் வேஸ்ட்…’ என்று நினைத்தவள்


“சார் தேவையில்லாததை எல்லாம் பேசாதீங்க… என்ன விஷயமா எனக்கு போன் பண்ணீங்க? அத சொல்லுங்க முதல்ல…” என்று சொன்னாள்.


“ஓ அதுவா மிது குட்டி இப்போ உன் வீட்டு காலிங் பெல் அடிக்கும்… நீ போய் கதவ தொற…” என்று அவன் சொல்லும்போதே அவள் வீட்டின் காலிங் பெல் அடித்தது.


‘யாரா இருக்கும்?’ என்று யோசித்தபடி தன் உடையை சீர்படுத்திக் கொண்டு போனை காதில் வைத்தவாறு சென்றவள் கதவை திறந்தாள்.


அங்கு ஒரு இளைஞன் நின்றிருந்தான்.


கதவைத் திறந்தவளைப் பார்த்தவன், “இந்தாங்க மேடம் உங்களுக்கு தான்…” என்று சொல்லி புதிதாக பூத்த ரோஜாக்களை கொண்டு செய்யப்பட்ட பொக்கேயை வளிடம் கொடுத்துவிட்டு சென்றான்.


தன் கைகளில் இருந்த புத்தம்புது ரோஜாக்களை பார்த்த மிருதுளா திகைத்து நின்றாள்.
 

geethusri

Moderator

அத்தியாயம் - 15 :​


“என் மனதிற்கினியவளுடன் மலரப் போகும் உறவை வரவேற்க மலர்களை அனுப்பியுள்ளேன்…” என்று தூய தமிழில் சொன்ன தேவ், “பிடிச்சிருக்கா” என்று ஆழ்ந்த குரலில் கேட்டான்.


தேவ்வின் குரலில் தன் நிலைக்கு திரும்பிய மிருதுளா ‘இவன் சாதாரணமா பேசினா நல்லா இருக்கும்… இப்படி ஆழ்ந்த குரல்ல பேசும் போது என் மனசை என்னவோ பண்ணுது…’ என்று நினைத்தாலும் அதை அவனிடம் காட்டிக் கொள்ளாமல், “ரொம்ப பிடிச்சிருக்கு சார்… பூக்களைப் பிடிக்காத பொண்ணுங்க கூட இருப்பாங்களா என்ன… ஆனா நான் சொன்னது பூக்களை மட்டும் தான்… உங்களை இல்லை…” என்று மிடுக்காகவே பதில் சொன்னாள்.


“ஓ அப்படியா… ரொம்ப சந்தோஷம்… எங்க என்ன பிடிக்கலன்னு சொன்ன மாதிரி நான் அனுப்பிய பூக்களையும் பிடிக்கலன்னு சொல்லிடுவியோன்னு நினைத்தேன்… பரவால்ல… இன்னைக்கு நான் அனுப்பின பூக்களை பிடிச்ச மாதிரி ஒரு நாள் நிச்சயம் உனக்கு என்னையும் பிடிக்கும்… எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு…” என்று அவன் சொன்னதும்


‘நீ என்னவோ பேசிக் கொள்… எனக்கு ஒன்றுமில்லை…’ என்பது போல மிருதுளா அமைதியாக இருந்தாள்.


“ஆனாலும் மிது குட்டி நீ இப்படி அமைதியா இருந்து என்ன ரொம்ப பேச வைக்கிற… பொதுவா நான் இவ்வளவெல்லாம் பேசற ஆள் கிடையாது தெரியுமா…” என்ற தேவ் பின்னர், “சரி நேரம் ஆகிடுச்சு பாரு… போய் சீக்கிரம் எதையாவது சமைத்து சாப்பிடு… நேரம் தப்பி சாப்பிட்டா உடம்புக்கு நல்லது இல்ல…” என்று அக்கறையுடன் சொன்னதும் நேற்று போலவே இன்றும் மிருதுளாவின் மனம் நெகிழ்ந்தது.


‘இவன் எதுக்கு எப்பவுமே என் அம்மாவை ஞாபகப் படுத்துற மாதிரியே பேசறான்…’ என்று நினைத்தவள், “தேங்க்ஸ் பார் தி பிளவர்ஸ் சார்… பாய்…” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.


பின்னர் தன் கைகளில் இருந்த பூக்களை பார்த்தவள் அதன் அழகில் மயங்கி அதை தூக்கிப் போட மனமில்லாமல் தன் வீட்டிலிருந்த பிளவர் வாஷில் வைத்தாள். அதன் பின்னர் அந்த வாரம் முழுக்க வேலைக்கு உடுத்தி சென்ற அனைத்து உடைகளையும் வாஷிங் மெஷினில் போட்டு துவைத்தவள் பின்னர் பேருக்கு எதையோ சமைத்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் தூங்கி விட்டாள்.


மிருதுளா எப்போதுமே அப்படித்தான்… வார நாட்களில் எறும்பு போல சுறுசுறுப்பாக இருப்பவள் ஞாயிறு அன்று மட்டும் சோம்பேறியாய் கிடப்பாள்… மாலை நான்கு மணிக்கு கண்விழித்தவள் வீட்டிலேயே இருந்தால் போர் அடிக்கும் என்பதை உணர்ந்தவளாய் வேக வேகமாக குளித்து முடித்து விட்டு கடற்கரைக்கு கிளம்பினாள்.



சிறு வயதிலிருந்தே மிருதுளா கடற்கரைக்கு செல்வது என்றால் மிகவும் பிடிக்கும்… அதுவும் அவள் அம்மா இறந்த பிறகு அவள் அங்கு செல்வது அதிகமாகி விட்டது… ஏனோ அந்தக் கடல் அலைகளை பார்க்கும்போது தன்னையே பார்ப்பது போல மிருதுளா உணர்வாள்…


கடல் அலையை பார்க்கும் போது யார் யாருக்கு என்ன தோன்றுமோ? ஆனால் மிருதுளாவிற்கு அந்தக் கடலலை எதையோ தேடி கடற்கரையை நோக்கி வந்துவிட்டு அது தேடி வந்தது கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்புவது போல தோன்றும்.


ஒருவேளை அவள் அப்பாவிடம் தொடர்ந்து அன்பை எதிர்பார்த்து எதிர்பார்த்து அவளுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியதால் அவள் கடல் அலைகளையும் தன் மனநிலையுடன் ஒப்பிடுகிறாளோ என்னவோ? யாருக்குத் தெரியும்…


அன்றும் அதே போல கடற்கரைக்கு சென்ற மிருதுளா ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்திற்கு சென்று அமர்ந்தவள் பொங்கி எழும் கடல் அலைகளை வேடிக்கை பார்க்க தொடங்கினாள்.


எவ்வளவு நேரம் சென்றது அவளுக்கு தெரியவில்லை… திடீரென்று அவள் அருகில் யாரோ வந்து அமர்வதை உணர்ந்தவள் தன்னிச்சையாக விலகி அமர்ந்து திரும்பிப் பார்த்தாள்… அங்கு அமர்ந்திருந்த தேவ்வை கண்டதும் ஆச்சர்யத்தில் தன் கண்களை அகல விரித்தவள் வாயை பிளந்தாள்.


இவர் எப்படி இங்க? இந்த மாதிரி இடத்துக்கெல்லாம் கூட இவர் வருவாரா என்ன?


அவளின் மனதில் தோன்றிய கேள்வியை படித்தவனை போல, “காலேஜ் டேஸ்ல அடிக்கடி வருவேன்… கம்பெனி பொறுப்பு ஏற்ற பிறகு இங்க வந்து உன்ன மாதிரி கடலை ரசிக்கறதுக்கு எல்லாம் என்கிட்ட நேரம் இல்லை…” என்று பதிலளித்தான்.


அவள் அவனிடம் எதுவும் சொல்லாமல் மீண்டும் கடலை ரசிக்க தொடங்கி விட்டாள்.


‘இவ பேசுவதற்காக நாம வெயிட் பண்ணினா… இன்னைக்கு முழுக்க இப்படியே இவ பக்கத்துல உட்கார்ந்துகிட்டு இருந்தாலும் அது நடக்குமான்னு தெரியல… இவகிட்ட எல்லா அதிரடி காட்டினா தான் சரிவரும்…’ என்று நினைத்த தேவ் அவளை நெருங்கி அமர்ந்தவன் அவள் விரல்களோடு தன் விரல்களை கோர்த்துக் கொண்டான்.


அவனின் அந்த செய்கையில் அதிர்ச்சி அடைந்த மிருதுளா கோபத்துடன் தேவ்வை திரும்பிப் பார்த்தவள், “சார் நீங்க பண்றது எல்லாம் சரியா?… மொதல்ல கைய விடுங்க…” என்று சொன்னபடி அவன் கைகளில் இருந்து தன் கையை விடுவித்து கொள்ள முயன்றாள்.


“இந்த அழகான கடல தனியா உட்கார்ந்து ரசிக்கறத விட என் கையோடு கை கோர்த்து என் தோள்ல சாஞ்சுகிட்டு ரசிச்சி பாரு… இன்னும் நல்லா இருக்கும்…” என்றவன் அவள் தலையையும் தன் தோளின் மீது சாய்க்க முயன்றான்.


“விடுங்க சார்… நீங்க என்ன பண்றீங்க… எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்கல…”


“ட்ரை பண்ணி பார்க்காமலேயே சொன்னா எப்படி மிருதுளா? நீ என்ன காதலனா நெனச்சி என் தோள்ல சாய வேண்டாம்… ஒரு நண்பனா நெனச்சு தோள் சாஞ்சுக்கோ… அதுக்குப் பிறகு இந்த கடலை பாரு… நிச்சயம் முன்னாடி நூறு மடங்கு உன் கண்ணுக்கு அழகா தெரிஞ்ச இந்த கடல்… இப்போ இருநூறு மடங்கு அழகா தெரியும்…” என்றவன் அவளை வற்புறுத்தி தன் தோளின் மீது சாய்த்துக் கொண்டான்.


‘என்ன காதலனா நெனச்சு தோள்ல சாஞ்சுக்கோ…’ என்று தேவ் சொல்லியிருந்தால் நிச்சயம் மிருதுளா அவன் தோளில் சாய்ந்து இருக்க மாட்டாள். ‘என்னை உன் நண்பனாக நினைத்துக் கொள்…’ என்று அவன் சொன்னதாலேயே அதற்கு மேல் முரண்டு பண்ணாமல் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.


அவன் தோளில் சாய்ந்தபடி கடலை ரசிக்கத் தொடங்கிய மிருதுளாவிற்கு தேவ் எப்போதுதோ தன் மனதில் அவன் கால் தடத்தை பதிக்கத் தொடங்கி விட்டான். அதனாலேயே தான் அவன் தோல் சாய தயக்கம் காட்டவில்லை என்பது புரியவில்லை.


‘நீ சொன்னது உண்மைதான் தேவ்… இதுவரைக்கும் இந்த கடல் அலை எதையோ தேடி வந்து அது கிடைக்காம ஏமாற்றத்துடன் திரும்பிப் போற மாதிரி தோணுச்சி… ஆனா இப்போ தன் காதலனை சந்திக்க ஆர்வத்தோட ஓடிவர காதலி மாதிரி தெரியுதே… எல்லாத்துக்கும் என்னோட மனநிலைதான் காரணம் போல…’ என்று நினைத்தபடி தேவின் தோளில் சாய்ந்து கடலை ரசிக்க தொடங்கிய மிருதுளாவின் மனதில்


இந்த நிமிடம்

இந்த நிமிடம்

இப்படியே உறையாதா?


இந்த நெருக்கம்

இந்த நெருக்கம்

இப்படியே தொடராதா?


இந்த மௌனம்

இந்த மௌனம்

இப்படியே உடையாதா?


இந்த மயக்கம்

இந்த மயக்கம்

இப்படியே நீளாதா? என்ற வரிகள் தோன்றின.




எவ்வளவு நேரம் சென்றதோ? அவர்கள் இருவருக்குமே தெரியவில்லை... இருவருமே ஒருவித மோனநிலையில் இருந்தனர்.


அப்போது சூரியன் கடலுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருந்தான்.


மிருதுளாவின் உச்சந்தலையின் மீது தன் கன்னத்தை பதித்திருந்த தேவ் சூரியன் கடலுக்குள் மறைவதை பார்த்தவன், “மிது நாம இங்க இருந்து பார்க்கும் போது அந்த சூரியன் கடலுக்குள்ள ஐக்கியமாகற மாதிரி தோணுது இல்லையா…” என்று அவன் கேட்டதும்


ஒருவித மோன நிலையில் இருந்த மிருதுளா, “ஆமா” என்று பதில் சொன்னாள்.


“அதைப் பார்க்கும் போது நானும் உன்கூட அந்த மாதிரி கூடிய சீக்கிரம் ஐக்கியம் ஆகணும்னு தோணுது…” என்று அவன் ஏக்கத்துடன் சொன்னான்.


அவன் குரலில் இருந்த ஏக்கத்தை உணர்ந்த மிருதுளாவின் மனம் பிசைந்தது.


‘ஏன் தேவ் இப்படியெல்லாம் பேசி என்னை சித்திரவதை பண்ற… என்னால உன் காதலையும் ஏத்துக்க முடியல… இந்த மாதிரி நீ ஏங்கறதையும் தாங்கிக்க முடியல… ஒரு நண்பனா உன்ன ஏத்துக்க முடிஞ்ச என்னால காதலனா ஏத்துக்க முடியலை… நான் என்ன பண்றது…’ என்று உள்ளுக்குள் புலம்பியவள் சட்டென்று அவனை விட்டு விலகி அமர்ந்து அவன் கைகளோடு கோர்த்திருந்த தன் கைகளை விலக்கிக் கொண்டாள்.
 

geethusri

Moderator

அத்தியாயம் - 16 :​


“என்னாச்சு மிது… ஏன் தள்ளி உட்கார்ந்த…” என்று தேவ் குழப்பத்துடன் கேட்டான்.


அவனை முறைத்துப் பார்த்த மிருதுளா, “ஏன்னு உங்களுக்கு தெரியாதா? பிரண்டா நெனச்சு என் தோள்ல சாஞ்சுகோன்னு சொல்லிட்டு… எப்போ உன் கூட ஐக்கியமாக போறேன்னோ தெரியல அது இதுன்னு பினாத்துனா என்ன அர்த்தம்?” என்று கேட்டாள்.


“ஏண்டி என்னோட ஏக்கம் உனக்கு பெனாத்தலா தெரியுதா…”


“ஆமா… ப்ரெண்டா நெனச்சுக்கோன்னு சொல்லிட்டு இப்படி எல்லாம் பேசனா நான் வேற எப்படி நினைக்கிறது?”


“இங்க பாரு மிது நான் உன்ன தான் என்ன உன்னோட ப்ரெண்டா நினைச்சிக்க சொன்னன்… ஆனா என்னைப் பொறுத்தவரைக்கும் நீ எப்பவுமே என்னோட காதலி தான்… நான் உன்ன அப்படி தான் பார்ப்பேன்…” என்றவன் மேலும் தொடர்ந்தான்.


“ஆனா மிது இப்போ நானும் உன்ன பிரண்டா நெனச்சு தான் என் மனசுல உள்ளத சொன்னேன்…” என்று அவன் சொன்னதும் மிருதுளா அவனை குழப்பத்துடன் பார்த்தாள்.


“ஏன் இப்படி உளர்றீங்க…? எப்பவும் காதலியா பார்ப்பேன்னு சொல்றீங்க? இப்போ என்னடான்னா பிரண்டா நெனச்சு தான் அப்படி பேசினன்னு சொல்றீங்க… உங்களுக்கு புரியற மாதிரியே பேச தெரியாதா? எஸ் ஜே சூர்யா பேனா நீங்க?” என்று அவள் சற்று எரிச்சலுடன் கேட்டாள்.


அவள் அப்படி கேட்டதும் வாய்விட்டு சிரித்த தேவ், “எஸ் ஜே சூர்யா பேனா… ஹா…ஹா…ஹா… என் மிது குட்டிக்கு இப்படி எல்லாம் கூட பேச தெரியுமா… அவளுக்கு பேசவே தெரியாதுன்னு நான் நெனச்சு இருந்தேனே… அச்சச்சோ என் நினைப்பு தப்பாயிடுச்சே…” என்று சொல்லிவிட்டு அவள் மூக்கைப் பிடித்து ஆட்டினான்.


“என் மூக்கை விடுங்க சார்… முதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க…” என்று சொல்லிவிட்டு தன் மூக்கின் மீது இருந்த அவன் கையை தட்டி விட்டாள் மிருதுளா.


“நான் உண்மையை தான் சொன்னன் மிது… நீ என்னைக்கும் என்னோட காதலி தான்… ஆனா அதே சமயம் நிச்சயம் நான் உன்னை என் பிரெண்டா தான் பார்ப்பேன்… ஏன்னா நாம சில விஷயங்களை நம்ம அம்மா அப்பா கிட்ட கூட ஷேர் பண்ண முடியாம மறைப்போம்… ஏன் நாம லவ் பண்றவங்க கிட்ட கூட சில விஷயங்கள பத்தி பேசவே மாட்டோம்… நமக்கு கல்யாணம்னு ஒன்னு ஆயிட்டா கூட நம்மளோட சரிபாதியா இருக்கவங்க கிட்ட கூட நாம் அப்படித்தான் இருப்போம்… ஆனா நாம எந்தவித ஒளிவு மறைவும் இல்லாம இருக்கறது நம்மோட ஃப்ரெண்ட்ஸ் கிட்ட மட்டும் தான்… நம்ம எண்ணங்கள் சரியோ தப்போ எல்லாத்தையும் எந்த வித சென்சாரும் இல்லாம வெளிப்படுத்தறது நம்மோட பிரெண்ட்ஸ் கிட்டயா தான் இருக்கும்… அப்படிப்பட்ட ஒரு பிரண்டா நீ என் வாழ்நாள் முழுக்க இருப்ப… நமக்கு கல்யாணமே ஆனாலும்…” என்று கடலை வெறித்தபடி தேவ் சொன்னதைக் கேட்ட மிருதுளா திகைத்துப்போய் அவனை பார்த்தாள்.


அவளின் திகைப்பை கவனிக்காதவன், “நம்ம நாட்டுல இப்போ எல்லாம் விவாகரத்து ரொம்ப அதிகமாயிடுச்சு மிது… அதுக்கெல்லாம் முக்கிய காரணம் கணவன் மனைவி இரண்டு பேரும் மனசு விட்டுப் பேசிக்காமல் புரிதல் இல்லாமல் போறதுதான்... அரேன்ஜ் மேரேஜ் பண்ணவங்க மட்டும் இல்ல காதல் கல்யாணம் பண்ணிக்கிறவங்க கூட விவாகரத்து பண்றதுக்கு காரணம் என்ன தான் அவங்களுக்குள்ள காதல் இருந்தாலும் பிரண்ட்ஷிப் என்ற ஒன்னு இல்லாததால தானோன்னு எனக்கு அடிக்கடி தோணும்… அதான் நான் யாரை கல்யாணம் பண்ணாலும் அவள பிரண்ட் மாதிரி ட்ரீட் பண்ணனும்னு ஏற்கனவே முடிவு பண்ணி வச்சிருந்தன்… அப்படி உன்ன என் பிரெண்டா நினைத்ததால் தான் என் மனசுல அந்த நிமிஷம் என்ன தோணுச்சோ அதை அப்படியே உன்கிட்ட சொல்லிட்டன்…” என்று சொன்னவன் அதன் பிறகே மிருதுளாவின் முகத்தை பார்த்தான்.


மிருதுளா பிரமிப்புடன் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் இருந்த ஏதோ ஒன்றால் ஈர்க்கப்பட்ட தேவ்வும் கண் சிமிட்டாமல் அவள் முகத்தையே பார்க்கத் தொடங்கினான்.


கண்கள் ஒன்றாக கலந்ததா

காதல் திருக்கோலம் கொண்டதோ

கைகள் ஒன்றாக இணைந்ததா

கவிதை பல பாட மலர்ந்ததோ

ஓ வசந்தங்களே....

வாழ்த்துங்களேன்

வளர்பிறையாய்....

வளருங்களேன் … என்ற பாடல் அருகில் இருந்த கடையில் ஓடிக் கொண்டிருந்தது.


இந்த மோன நிலை எவ்வளவு நேரம் நீடித்ததோ… யாருக்கு தெரியும்?


“எம்மா ஒரு முழம் பூ வாங்கிக்கோமா… பாக்க மகாலட்சுமி மாதிரி இருக்க நீ… இப்படி தலையில பூ இல்லாம இருக்கியேம்மா…” என்ற பெண்ணின் குரலில் இருவரும் தன் நிலைக்கு திரும்பினர்.


“இல்ல… பூ வேண்டாம்… நீங்க கிளம்புங்க…” என்று மிது சொன்னதும்


“சார் நீயாவது உன் ஆளுக்கு பூ வாங்கி கொடு சார்… ஒரு மொழம் முப்பது ரூபா தான் சார்… பூ வச்சா உன் ஆளு செம சூப்பரா இருக்கும்…” என்று அந்தப் பெண் தேவ்விடம் சொன்னதும்


தேவ் தன் பாக்கெட்டில் இருந்து நூறு ரூபாயை எடுத்துக் கொடுத்தவன் “ஒரு முழம் பூ கொடுங்க” என்று சொன்னான்.


அந்தப் பெண் ஒரு முழம் பூவை அறுத்துக் கொடுத்து விட்டு மீதி சில்லறையை கொடுப்பதற்காக முயல்வதை பார்த்தவன் “வேண்டாம்… மீதி பணத்தை நீங்களே வச்சுக்கோங்க…” என்றதும்


அந்தப் பெண் மிகுந்த சந்தோஷத்துடன், “நீங்க ரெண்டு பேரும் ஆயுசுக்கும் நல்லா இருப்பீங்க சார்…” என்று வாழ்த்தி விட்டு சென்றார்.


அவர் அப்படி சொன்ன அந்த நொடி இருவரின் மனமும் நிறைந்துவிட்டது.


பூவை மிருதுளாவின் முன்பு நீட்டிய தேவ், “இந்தா மிது பூ வச்சுக்கோ… என்றவன், “எப்போதும் பூவ மட்டும் வேண்டாம்னு சொல்லாத… பொண்ணுங்க எப்போதும் பூவ வேண்டாம்னு சொல்ல கூடாதுன்னு அடிக்கடி உன்னோட பாட்டி சொல்வாங்க… பூ வச்சா தான் பொண்ணுங்களுக்கு அழகுன்னு அவங்க சொல்வாங்க... அவங்க சொல்றதுல எனக்கு உடன்பாடு இல்லனாலும் பெரியவங்க கிட்ட எதிர்த்து பேச வேண்டாம்னு விட்டுடுவன்... ஆனா நான் அவங்க நெனச்ச மாதிரி அர்த்தத்துல சொல்லல… பொதுவா ஒவ்வொரு பூவுக்கும் ஒரு வாசனை இருக்கும்… அந்த வாசனைக்கு மன அழுத்தத்தை குறைக்கற சக்தி இருக்கறதா நான் ஒரு புக்ல படிச்சன்… பூ வச்சிக்கிறதுனால நம்ம அழகுக்கு அழகு சேர்க்கறதோட நம்ம உடம்புக்கும் ரொம்ப நல்லது… உன்னோட வேலை கூட கொஞ்சம் மன அழுத்தம் நிறைந்ததுதான் இல்லையா… அதனால முடிஞ்சா எப்பவும் நல்ல வாசனை வர பூக்களை வச்சுக்கோ… அது உனக்கு ரொம்ப நல்லது…” என்று சொன்ன தேவ் அப்போது தான் மிருதுளா தன் பேச்சை கவனிக்காமல் தனக்குள் ஆழ்ந்திருப்பதை பார்த்தான்.


‘என்னாச்சு இவளுக்கு… அப்போ இவ இவ்வளவு நேரம் நாம சொல்றத கவனிக்கவே இல்லையா?’ என்று அவன் நினைக்கும் போது


‘மிருது செல்லம்… நம்ம தோட்டத்தில் பூத்த பூவை அம்மாவை அடிச்சு வே பறிச்சி மிருதுக்காக கட்டினன் நல்லா இருக்கா…’ என்று கேட்டுவிட்டு அவள் அம்மா அவள் தலையில் பூ வைத்து விட்ட காட்சிகள் அவள் மனதில் வலம் வந்தன.


‘என்னோட அம்மா கூட எப்பவும் இப்படித்தான் தோட்டத்தில் பூக்கற பூவை எல்லாம் பறித்து வந்து கட்டி என் தலையில வைப்பாங்க… அவங்க இறந்த பிறகு எனக்கு அந்த மாதிரி செய்ய ஆளே இல்லாம போயிடுச்சு… இத்தனை வருஷத்துக்கு பிறகு இவன் தான் எனக்கு பூ வாங்கி கொடுத்து இருக்கான்… இவன் ஏன் தன்னோட ஒவ்வொரு செயல்லயும் என் அம்மாவை ஞாபகப்படுத்தறான்?’ என்று யோசித்தபடி மிருதுளா தனக்குள் மூழ்கி இருந்த போது


அவள் தோளை பற்றி உலுக்கிய தேவ், “மிது… மிது… என்ன யோசிக்கிற…” என்று கேட்டான்.


“ஒன்னும் இல்ல சார்… சும்மா ஏதோ யோசனை…”


“சரி இந்தா வச்சுக்கோ…” என்று அவன் பூவை கொடுத்ததும்


மறுக்காமல் பூவை வாங்கி தலையில் வைத்து கொண்டவள், “சரி சார்… நான் கிளம்பறன்… நேரம் ஆகிடுச்சு…” என்று சொல்லிவிட்டு அவன் பதிலை எதிர்பார்க்காமல் எழுந்து வேகமாக நடக்க தொடங்கி விட்டாள்.


அவளுக்கு இப்போது தேவை தனிமைதான்.


‘இவன் நமக்கு எப்போதும் நம்ம அம்மாவை ஞாபகப்படுத்திக் கிட்டே இருக்கான்... இவன் பக்கத்துல இருந்தாலே நம்மால ஒழுங்கா யோசிக்க முடியல… இப்படியே போனா நாம கூடிய சீக்கிரம் அவன்கிட்ட விழுந்துடுவோம்... இது நமக்கு நல்லது இல்ல... இனி எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு இவன் கிட்ட இருந்து தள்ளி இருக்கணும்...' என்று நினைத்தபடி சென்றாள்.
 

geethusri

Moderator

அத்தியாயம் - 17 :​


எதை எதையோ யோசித்தபடி சென்ற மிருதுளா வாகனங்களை நிறுத்துவதற்காக பிரத்தியேகமாக போடப்பட்டிருந்த சாலையை கடக்க முயன்றாள்.


அதைக் கடந்து இன்னும் சிறிது தூரம் நடந்து சென்றால் தான் மெயின் ரோடு வரும். மெயின் ரோடு சென்று விட்டால் நிறைய ஆட்டோக்களும் கார்களும் கிடைக்கும். அதில் சென்று விடலாம் என்று நினைத்தே மிருதுளா ஓலா ஆப்பில் ஆட்டோவை புக் செய்யவில்லை.


எதையோ யோசித்தபடி ரோட்டின் மையத்தில் நடந்தவளை யாரோ வேகமாக கையை பிடித்து இழுத்தனர். அவ்வளவு வேகமாக இழுத்தும் ஒரு கார் அவள் மீது உரசி விட்டு சென்றது…


அப்போது தான் தனக்கு வேற இருந்த ஆபத்தை மிருதுளாவிற்கு பயத்தில் இதயம் வேகமாக துடிக்க தொடங்கியது. அவளால் சரியாக சுவாசிக்க கூட முடியவில்லை... முகமெல்லாம் வியர்க்க தொடங்கியது.


‘ஐயோ கடவுளே அந்த கார் வந்த வேகத்துக்கு நம்மள இடிச்சிருந்தா நம்ம நிலைமை என்ன ஆயிருக்கும்… ஒன்னு உயிர் போயிருக்கும்... அப்படி இல்லனாலும் கை கால் ஏதாவது நிச்சயம் போயிருக்கும்... ‘என்று நினைத்தவளின் உடல் மழையில் நனைந்த கோழிக் குஞ்சாய் நடுங்கிக் கொண்டிருந்தது.


“மிது குட்டி… இங்க பாருடா ஒன்னும் இல்ல… அதான் நான் வந்துட்டேன் இல்ல… நான் இருக்கும் போது உனக்கு எதுவும் ஆக விடுவேனா என்ன?” என்று சொன்ன தேவ் அவளின் முதுகை வருடி ஆசுவாசப்படுத்த தொடங்கினான்.


தேவ்வின் குரல் காதில் ஒலித்ததும் அதுவரை இருந்த பயம் எல்லாம் போய் ஒருவித நிம்மதியுடன் அவனை பார்த்தவளுக்கு “சார்” என்ற வார்த்தையை தவிர வேறு வார்த்தைகளே வாயில் வரவில்லை.


“ஒன்னுமில்ல மிது குட்டி… நீ பயப்படாத சரியா…” என்ற தேவ் அவள் உடலில் நடுக்கம் குறையும் வரை மேலும் சிறிது நேரம் அவளின் முதுகை வருடி ஆசுவாசப்படுத்தினான்.


அதற்குள் அவர்களை சுற்றி கூட்டம் கூடிவிட்டது.


"என்னாச்சு"


"ஒரு கார்காரன் விட்டிருந்தா இந்த பொண்ணா இடிச்சிருப்பான்... நல்ல வேளை அந்த தம்பி அந்த பொண்ண காப்பாத்திடிச்சி..."


"இப்போல்லாம் நிறைய பேர் இந்த ரோட்ல இப்படி தான் வண்டிய வேகமா ஓட்றாங்க... போன வாரம் கூட இந்த ரோட்ல ஒரு ஆக்ஸிசிடெண்ட் நடந்துச்சு..."


"ஆமா ... எனக்கும் அந்த விஷயம் தெரியும்... போலீஸும் எவ்வளவோ கெடுபிடியா தான் இருக்காங்க... ஆனாலும் சில திருந்தாத ஜென்மங்க இப்படித்தான் வண்டிய வேகமா ஒட்டி அடுத்தவங்க மேல இடிக்க பாக்குதுங்க..." என்று கூட்டத்தில் இருந்த இருவர் தங்களுக்குள் பேசி கொண்டனர்.



இதற்கு மேல் இங்கே அனைவருக்கும் முன்பாக காட்சி பொருளாக இருக்க வேண்டாம் என்று நினைத்த தேவ் அவளை தன் கை அணைப்பிலேயே வைத்து தன் கார் இருக்கும் இடத்திற்கு கூட்டி வந்தவன் அவளை காரில் அமரச் செய்து காரைக் கிளப்பினான்.


மிருதுளா சிறிது நேரத்திலேயே தன் நிலைக்குத் திரும்பி விட்டாள். அந்த இடத்தில் தேவ் இல்லாமல் இருந்திருந்தால் அவளின் கதி என்ன ஆகியிருக்குமோ தெரியவில்லை… ஆனால் தேவ்வின் குரல் அவளுக்கு தெம்பூட்டி நடந்ததில் இருந்து அவளை வெளிவர வைத்திருந்தது.


சிறிது நேரம் காரில் அமைதி நிலவியது.


அவள் பயத்தில் நடுங்கும் போது அவளை அணைத்து ஆறுதல் படுத்திய தேவ் அதற்கு மேல் அவளிடம் எதுவும் பேச முயலவில்லை. அவள் தன் நிலைக்குத் திரும்பியதை உணர்ந்தவன் முகம் சுளித்தபடி காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.


‘இவனுக்கு என்ன ஆச்சு ஒரு சின்ன வாய்ப்பு கிடைச்சாலும்.. ஏன் வாய்ப்பே இல்லனாலும் அதை உருவாக்கிட்டாவது இந்த ரெண்டு நாளா நம்ம கிட்ட காதல் பாட்டு பாடிக்கிட்டு இருந்தான்… இப்போ என்னடான்னா ரெண்டு பேரும் கார்ல தனியா இருக்கோம்… ஆனா ஒரு வார்த்தை கூட பேசாமல் வரான்… முகத்தைப் பாத்தா ஏதோ கோபமா இருக்க மாதிரி இருக்கே… என்னவாயிருக்கும்? இதுவரைக்கும் நல்லா தானே இருந்தான்… ஒருவேளை நாம எதாவது தப்பு பண்ணிட்டோமா... அதான் நம்மமேல கோபமா இருக்கானா? ‘ என்று நினைத்த மிருதுளா ,“சார்… என்ன எதுவும் பேசாம வரீங்க… என்மேல ஏதாவது கோபமா?” என்று தயக்கத்துடன் கேட்டாள்.


தேவ் எதுவும் பதில் சொல்லவில்லை.


சில நிமிடங்கள் கழித்தும் அவனிடமிருந்து பதில் வராததால், “சார்” என்று மீண்டும் அழைத்தவள், “என்ன சார் எதுவுமே சொல்ல மாட்றீங்க… என் மேல அப்படி என்ன கோபம் உங்களுக்கு?” என்று கேட்டாள்.


சட்டென்று காரை நிறுத்திய தேவ், “கோபமா இருக்கேனா… உன்மேல கொலை வெறியில இருக்கன்... அப்போ பயந்து நடுங்குனியேன்னு தான் உன்ன சமாதானப்படுத்தினன்… இல்லன்னா எனக்கு வந்த கோவத்துக்கு அங்கேயே ரெண்டு அறை விட்டிருப்பன்… ஏண்டி ரோட கிராஸ் பண்ணும் போது கவனமா கிராஸ் பண்ணனும்னு தெரியாது… எவனோ ஒரு பைத்தியக்காரன் அந்த ரோட்ல அந்த ஸ்பீட்ல வந்தது தப்புனாலும் நீ கவனமா இருந்திருந்தா இந்த விபத்தை தடுத்து இருக்கலாம் இல்லையா? ஏதோ நான் வந்ததால இப்போ நீ என் கண் முன்னாடி உட்கார்ந்து பேசிகிட்டு இருக்க… ஒருவேளை நான் வராமல் இருந்திருந்தா என்ன ஆயிருக்கும்? அத நெனச்சாலே எனக்கு கை கால் நடுங்குதுடி… உனக்கு ஏதாவது ஆயிருந்தா என்னோட நிலமை என்ன ஆகி இருக்கும்னு கொஞ்சமாவது யோசிச்சு பாத்தியா… நீ இல்லன்னா இந்த உலகத்துல எனக்கு ஒன்னுமே இல்லடி…” என்று சொன்னவன் அவளை இறுக்கி அணைத்தான்.


அவன் செயலில் மிருதுளா ஒரு நொடி திகைத்தாலும் தன் முகத்தை அவன் மார்பில் புதைத்திருந்தவளுக்கு அவனின் இதயம் வேகமாகத் துடிப்பதை நன்றாகவே உணர்ந்து கொள்ள முடிந்தது.


தேவ்வின் முதுகை வருடி அவனை ஆசுவாசப்படுத்தியவள், “அதுதான் எனக்கு ஒன்னும் ஆகல இல்லயா... திரும்பவும் ஏன் நடந்து முடிஞ்சத நினைக்கிறீங்க… ஏதோ கவனத்துல கார் வர்றதை பாக்காம ரோட கிராஸ் பண்ணிட்டன்… இனிமே கவனமா இருக்க நடந்துக்கறன்… முடிந்ததை நினைத்து நீங்க இப்படி இருக்க வேணாம் ப்ளீஸ்…” என்றவள் மேலும் சிறிது நேரம் அவன் முதுகை வருடினாள்.


அடுத்த சில நிமிடத்தில் தேவ்வின் இதயத்துடிப்பு சீரானதிலிருந்து அவன் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டான் என்பதை அவள் புரிந்து கொண்டாள். இருந்தாலும் அவளுக்கு அவனிடமிருந்து விலக மனம் வரவில்லை.


தேவ்வும் அதே நிலையில்தான் இருந்தான். இதுவரை அவனுள் இருந்த ஒரு வித நடுக்கம் விலகிப் போய் அவள் தலையில் வைத்திருந்த மல்லிகைப் பூவின் வாசம் அவனுள் ஏதோதோ உணர்வை தூண்டி விட்டது.


சிறிது நேரம் அவள் கழுத்தில் தன் முகத்தை புதைத்து பூ வாசத்தை நுகர்ந்தவன், “மிது குட்டி இப்படியே உன்னை எங்கேயாவது யாருமே இல்லாத இடத்துக்கு கூட்டிட்டு போயி வாழ்ந்திட மாட்டோமான்னு என்னோட உடம்புல இருக்க ஒவ்வொரு அணுவும் துடிக்குதுடி…” என்று அவன் சொன்னதும் மிருதுளாவின் உடல் விறைத்தது.


‘ஏதோ நம்ம உயிரை காப்பாத்தினான்… நம்ம மேல உள்ள காதலால் நமக்கு என்ன ஆகியிருக்குமோனு நினைச்சு ரொம்ப பயந்துட்டான்னு இவன நாம ஆசுவாசப்படுத்தினா… என்ன இவன் இப்படி எல்லாம் பேசறான்?’ என்று அவள் நினைக்கும் போதே


“ஆனா நீதான் உனக்கு என் மேல எந்த உணர்வும் வரலைன்னு சொல்லிட்டியே… அதனால மட்டும்தான் நான் என் உணர்ச்சிகளை கட்டுப் படுத்திகிட்டு இருக்கன்… இல்லன்னா இந்நேரம் நடந்து இருக்கறதே வேற…” என்று அவன் சொன்ன பிறகே அவள் உடல் தளர்ந்தது.


‘பரவால்ல தன்னோட உணர்வுகளுக்கு அடிமையாகாம… இந்த நேரத்துல கூட என் மனச புரிஞ்சுக்கிட்டு தன்னை கட்டுப்படுத்திக்கறானே… ரொம்ப நல்லவன் தான்… இதே இவன் இடத்துல வேற யாராவது இருந்திருந்தா நிச்சயம் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை மிஸ்யூஸ் கூட பண்ணியிருப்பாங்க…’ என்று அவனைப் பற்றி அவள் நல்ல விதமாக நினைக்கும் போது


தன் கைகளால் அவளின் தாடையை பற்றி தன் முகத்தை பார்க்குமாறு செய்த தேவ், “மிது ப்ளீஸ் என்ன தப்பா நினைச்சுக்காத… என்னதான் நானே என்ன சமாதானம் பண்ணிக்கிட்டாலும் என்னால நடந்ததில் இருந்து வெளியில வர முடியல… நீ இப்போ என் கைகுள்ள இருக்கறதா நம்ப முடியல… அத நான் நம்பறதுக்காக தான் இப்படி பண்றன்… வேற எதுக்காகவும் இல்ல…” என்று அவன் சொன்னதும் மிருதுளா தன் விழிகளை விரித்து அவனை பார்த்தாள்.


‘இப்போ இவன் என்ன சொல்ல வரான்னு சுத்தமா ஒண்ணும் புரியலையே…’


சில நொடிகள் அவள் கண்களையே உற்றுப் பார்த்த தேவ், “என்ன தப்பா நினைச்சுக்காத மிது” என்று மீண்டும் சொன்னவன் அடுத்த நொடி அவளின் இதழ்களை சுவைக்க தொடங்கியிருந்தான்.


ஒரு நீண்ட முத்தம்… தானும் அனுபவித்து தன் இணையும் அனுபவிக்குமாறு ஒரு முத்தம்…


தேவ் தன்மை முத்தமிட தொடங்கியதும் மிருதுளா முதலில் அவனிடமிருந்து விடுபட போராடினாள். அப்போது அவளின் கை பட்டு காரில் இருந்த மியூசிக் பிளேயர் ஒலிக்கத் தொடங்கியது.

இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ...
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது ஆ...


அடுத்த சில சில நொடிகளில் அவளிடமிருந்த எதிர்ப்பு அடங்கி அவளும் முத்தத்தை அனுபவிக்க தொடங்கினாள்.
 
Status
Not open for further replies.
Top