#வனிரிவ்யூ-23
#பிறைஏறிவந்த_கண்ணாளா - காதலே இருபத்தி ஒன்று
இது ரைட்டருக்கு முதல் கதைன்னு தெரியுது... ஒரு சில இடங்களில் சிறு தடுமாற்றம் இருந்தாலும் வெற்றிகரமாக கதையை அழகா அதன் பாதையில் கொண்டு போய் முடித்த விதம் அருமை..

.
ஹீரோ- வாசுதேவ கிருஷ்ணன்
ஹீரோயின்- ஸ்ரீமதி ராதாராணி
சிறு வயதில் தன் பெற்றோரால் வஞ்சகமாய் வீட்டை விட்டு துரத்தியடிக்கபட்ட கிச்சாவை நினைத்து அவன் நினைவால் அவன் தன்னை தேடி வருவான் என்று நினைத்து காலத்தை கழித்த போது அவளை ஆர்.கே.. தீடிரென்று அவளின் பெற்றோர் வாங்கிய கடனுக்காய் திருமணம் செய்கிறான்? ஏன்? எதற்காக ? என்பது கதை...
வாசுதேவன்:
ராதையின் கிருஷ்ணன்....
தூரிகை கொண்டு ஓவியம் படைப்பவன்....
துரோகத்தால் வீட்டை விட்டு துரத்தி அடிக்க பட்டவன்....
தனக்கு யாருமில்லை என்று நினைத்த போது நல்ல நண்பனாய் குகன் அமைந்து அவனை முன்னேற்றினான்...
தன்னை வலிக்க செய்தவர்களுக்கு அதன் வலியை உணர்த்தியவன்....
காத்திருந்த காதலுக்கு கடமைப்பட்டவன்...
தன்னவளை தேடி வந்த கண்ணாளன்...
ராதா:
பெற்றோர் செய்த துரோகத்துக்கு தன் காதலை தொலைத்து தேடிக் கொண்டிருப்பவள்...
கிச்சாவிற்கு மட்டுமே ராதையவள்....
தன்னவனை மனதால் நினைத்து யோகியாய் காலம் தள்ளியவள்....
தன்னவனுக்காய் பிருந்தாவனம் அமைத்தவள்...
கிருஷ்ணனின் ராதையிவள்...
கதையில் வர எத்திராஜ், தீப்தி மாதிரி ஆளுங்களுக்கு அவங்க செய்ய தப்பை புரிஞ்சிக்காம இருக்கிறதை பார்க்கும் போது கடுப்பாக வருது... அவங்க செய்த துரோகத்துக்கு அவங்களை கொல்லாமல் அவங்களுக்கு வழங்கிய தண்டனை அருமை....
பொறுப்பில்லாத பெற்றோரிடம் வளர்ந்த அகில் பாவம்... அவனும் குழலியும் காதலை விட்டு தராத இடம் அழகு....
குகன், பார்த்தா , கமலி, உஷா மாதிரி நம்பிக்கை கொண்ட வங்க அமையுறது வரம்... நட்பு கண்டு லைட்டா பொறாமை வந்துச்சு...
(கதையில் குறைன்னு பார்த்தால் எழுத்துப் பிழைகள் தான்... அதை மட்டும் மாற்றிக்கொள்ள வேண்டும்... ஒரு எழுத்து மாறினாலும் அர்த்தம் வேற மாதிரி ஆகிடும்...)
வாழ்த்துகள் ரைட்டர் மேடம்


அழகாக இருந்தது கதை... இன்னும் நிறைய கதைகள் எழுத வாழ்த்துகிறேன்

...
பிறை ஏறி வந்த கண்ணாளா- நினைவில் நின்றவன்