Anjana Subi
Well-known member
இக்கரையும் அக்கரையும்
"ஆயிரம் சொல்லுங்க! வாழ்ந்தா உங்க தம்பி பொண்டாட்டி ஜனனி மாதிரி வாழனும்." கணவன் சந்துருவின் காதில் விழும் படி பேசினாள் தேவி.
தொலைகாட்சியில் மூழ்கி இருந்த சந்துரு
"அது ஏன் அப்படி சொல்ற?" என புருவம் சுழித்தான்.
"ஆமா! உங்க தம்பி ஐடி ல வேலைக்கி சேர்ந்த ரெண்டு வருஷத்துலயே அமெரிக்கா போயிட்டார். கூட வேலை பார்க்குற பெண்ணையே கல்யாணமும் கட்டி கிட்டார். இப்ப குடிஉரிமையும் வாங்கி ஜம் ஜம்னு வீடும் கட்டிட்டாங்க. பத்தாததுக்கு குழந்தைங்களுக்கும் நல்ல படிப்பு, லட்சத்துல சம்பளம்னு சந்தோஷமான வாழ்க்கை! ஆனா நமக்கு ஹூம்ம்!" என ஏக்கப் பெருமூச்செறிந்துவிட்டு அடுப்படிக்குள் புகுந்து கொண்டாள்.
அதை கேட்டு சந்துரு ஒன்றும் அப்படி மனம் தளர்ந்துவிட வில்லை. 'ஏன் நமக்கென்ன கொறைச்சல். நாமளும் சொந்த ஊர்ல சூப்பர் மார்க்கெட், பால் பண்ணைனு வச்சு ராஜா மாதிரி தானே வாழுறோம்.' என மனைவியின் ஆதங்கத்தை புறம் தள்ளினான்.
அதே நேரம் "இந்த வீக் மீட்டிங் இருக்கு எனக்கு. அதனால பாப்பாவோட டீச்சர்ஸ் மீட்டிங் நீ அடென்ட் பண்ணிடு. அப்புறம் அடுத்த வாரம் நீ ஆபீஸ் டிரிப் போற தானே! அப்போ நான் பார்த்துக்கறேன்." என அந்த மாத குடும்ப பொறுப்புகளை பங்கிட்டான் விகாஷ்.
அவன் சொன்னதை எல்லாம் தன் கைபேசி நாட்காட்டியில் குறித்துக் கொண்டிருந்த ஜனனிக்கு அப்போது தான் அடுத்த வாரம் தீபாவளி பண்டிகை என்பது நினைவு வந்தது. இந்த வருடமும் பணிநேரம் மாற்றம் காரணமாக இருவரும் ஒன்றாக சேர்ந்து பண்டிகையை கொண்டாட முடியாது என்ற நிதர்சனம் பொட்டில் அறைய
"உங்க தேவி அண்ணி குடுத்துவச்சவங்க இல்ல. அடுத்த தெருல அம்மா வீடு. புள்ளைங்களை பார்த்துக்க மாமியார் மாமனார். நானே ராஜா நானே மந்திரினு யாருக்கும் பதில் சொல்லாம சொந்த தொழில் பண்ற புருஷன். வருஷம் தவறாம சொந்த பந்தத்தோட எல்லா பண்டிகையும் கொண்டாட முடியுது. ஹூம். வாழ்க்கைனா இப்படி இருக்கணும்."
என உஷ்ணப் பெருமூச்செறிந்தாள் ஜனனி. அதை பற்றி பேச்சு வாக்கில் அண்ணனிடம் விகாஷ் போட்டு உடைத்தவிட 'குபீர்' என சிரித்து விட்டான் சந்துரு.
அதை தேவி காதில் ஓதவும் "இங்க எல்லாரு கிட்டயும் பேச்சு வாங்கிட்டு வாழ்க்கை நடத்துறேன். ஆனா குடுத்துவச்ச மகராசி நிம்மதியா எங்கேயோ சந்தோஷமா இருக்கா…" என்ற தேவியின் புலம்பல் பாத்திரம் உருட்டும் சத்தத்துக்கு இடையே ஸ்பஷ்டமாக அவன் செவி தீண்டியது.
அதில் சமையல்கட்டை எட்டி பார்த்த கணவன் "ஜனனியை விட நீ தான் குடுத்து வச்ச மகராசி தேவி. நினைச்ச நேரம் அம்மா வீட்டுக்கு போய் சீராடி சந்தோஷமா இருந்துட்டு வர முடியுதா அவளால? நாள் கிழமைல குடும்பத்தோட இருந்துட முடியுதா? சம்பாரிக்கிறாங்க தான். இல்லைங்கல. ஆனா அதை அனுபவிக்கவும் ஒரு குடுப்பினை வேணுமே! அவ்வளவு ஏன் போன வருஷம் அவங்க அம்மா உடம்பு முடியாம இருந்தப்போ கூட அவளால உடனே வந்து பார்க்க முடிஞ்சதா? லீவ் கிடைக்காம எவ்வளவு சிரமப்பட்டா?" என வரிசையாக கேள்விகளை அடுக்கினான்.
அதில் அத்தனை நேரம் தை தை என குதித்துக் கொண்டிருந்த தேவி அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டாள். கணவன் உரைப்பது உண்மை தானே! இவள் நினைத்த மாத்திரத்தில் செயல்படுத்தக் கூடிய எந்த விஷயத்தையும் ஜனனியால் உடனே செய்யமுடிவதில்லையே! போன முறை ஊருக்கு வந்த அவர்களின் பிள்ளை உறவுகளுடன் ஒட்ட திணறியது நினைவிலாடியது.
மனமே இல்லாமல் உண்மையை ஒப்புக் கொண்டவள் "நீங்க சொல்றது வாஸ்தவம் தான். ஆனா அவங்க அளவு சம்பாத்தியம் எல்லாம் நம்மாள நினைச்சு பார்க்க முடியுமா?" என மனம் சுணங்கினாள்.
"பணம் வாழ்க்கைக்கு முக்கியம் தான். ஆனா அந்த பணத்தை சந்தோஷமா அனுபவிக்குற வாழ்க்கை ரொம்ப முக்கியம்.நம்ம சந்தோஷம் எதுல இருக்குனு நாம தான் முடிவு பண்ணனும்." என்றவனின் நறுக்குதெறித்தாற் போன்ற வார்த்தை தேவியின் சிந்தையை தெளிய வைத்தது.
அதே நேரம் வரவேற்பறை தொலைகாட்சிபெட்டி
"சொர்கமே என்றாலும் அது நம்மூரப் போலாகும்மா…"
என எட்டுகட்டையில் பாடியது.
முற்றும்