இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

நதி சேரோயோ நித்திலமே! -கதைத்திரி- on hold

Status
Not open for further replies.

saaral1120

Moderator
நதி-01


கிழக்கு வெளுக்கும் நேரம் இரை தேட கூட்டை விட்டு பறந்து செல்லும் பட்சிகளின் கீச்சிடும் சத்தமும் அந்த அதிகாலை நேர தென்றல் காற்றில் அசைந்தாடிடும் நெற்கதிர்களின் வாசமும் காற்றோடு காற்றாய் கலந்து நாசியை நிரடும் சுகந்தத்தை ஆழ்ந்து உள்ளிழுத்தவாறே தன் வயல் வரப்பில் நடந்து கொண்டிருந்த வேலனின் மனதிலோ அத்தனை புத்துணர்வு.


கிராமம் என்றாலே அழகுதான் அதிலும் புலரும் வேலையில் கிழக்கின் அடிவானத்தில் தன் பொற்கரம் நீட்டி பூமியை தழுவிடும் செங்கதிரோனின் அழகும் குளிர்மையாய் உடலை தழுவிடும் சில்லென்ற காற்றின் இனிமையும் பாலுக்காக ஏங்கும் பசுக்கன்றுகளின் ம்மாஆ என்ற சத்தமும் வாசலை நிறைத்திடும் பெண்களின் அழகிய மா கோலமும் கண்ணையும் கருத்தையும் கவர்ந்திடும் அத்தனை ரம்மியமான காட்சிகளையும் கிராமத்தில் மாத்திரமே காண்ணாற காணமுடியும்.


அந்த புலரா வேளையின் அழகை ரசித்தபடி தன் வயல் வரப்பில் காலாற நடந்த வேலனுக்கோ செழித்துக் கிடந்த தன் உழைப்பின் பலனை பார்க்கும் போது அத்தனை நிம்மதியும் சந்தோஷமும் உள்ளத்தில் குடிகொண்டது..


இன்னும் இரு நாட்களில் அறுவடையென்றிருக்க செழித்து நின்ற நெற்கதிர்களை பார்வையிட்டவாறே நடந்து மோட்டார் ரூம் அருகே சென்றவருக்கு இத்தனை நேரமிருந்த இனிமை காற்றோடு கரைந்து தான் போனது அங்கே கும்மளாய் கிடந்த கூட்டத்தை கண்டு.


அரை போதையில் அலங்கோலமாய் ஒருத்தன் மீது ஒருத்தன் கவிழ்ந்து கிடக்க சுரணையே இல்லாது படுத்திருந்தவர்களைக் கண்டு கடுவன் பூனையாய் கடுகடுவென முகம் மாறிய வேலனோ குப்புறப்படுத்திருந்த ஒருவனின் பிட்டத்தில் ஓங்கி உதைத்திட அவனோ உதையின் வேகத்தில் உருண்டவன் அப்போதும் போதை தெளியாதவனாய் புலம்ப அவருக்கோ கோபம் உச்சியை தொட்டது.


"குடிகார பயலுகளா நான் அத்தனை சொல்லியும் திரும்ப திரும்ப என் வயலையே நாறடிக்குறிங்கல்ல இன்னைக்கு உங்க அம்புட்டு பேருக்கும் சாணி அபிசேகம் பண்றேன் இருங்கடா" என சூளுரைத்துக் கொண்டவர் அடுத்த அரைமணிநேரத்தில் அங்கே படுத்திடுத்திருந்த மொத்தக் கூட்டத்திற்கும் சாணி அபிஷேகம் பண்ணிட ஏற்கனவே வெயில் பட்டு சிறிது சிறிதாய் போதை களைந்திருந்தவர்கள் சில்லென்று வந்து வீழ்ந்த சாணியின் குளிரிலும் வாடையிலும் அடித்துப்பிடித்து எழுந்து நிற்க வேலனோ விடாதவராய் அனைவரையும் குளிப்பாட்டியிருந்தார்.


"அய்யோ ச்ச்சீ உவாக்" என்ற அலறலோடு எழுந்து நின்றவர்களை முறைத்துப் பார்த்தவர்
"குடிகாரப் பயலுகளா இன்னொருவாட்டி என் வயல்ல உங்கள பார்த்தேன் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது ஓடிப் போயிடுங்க" எனமிரட்டியவரின் மிரட்டலில் பாய்ந்தடித்துக் கொண்டு ஓடினர் அனைவரும்.


அதில் ஒருவனோ "அப்பன் என்னடான்னா காலையில சாணி அபிஷேகம் பண்றான் புள்ள என்னடான்னா நைட்டுல சரக்கு அபிஷேகம் பண்றான்.. அய்யோ இவங்க இரண்டு பேருக்கிட்ட மாட்டிட்டு இன்னும் என்னபாடு எல்லாம் பட வேண்டியிருக்கோ" என புலம்பியவன் முதுகில் வந்து வீழ்ந்த சாணியில் "அய்யோ" என்ற அலறிக் கொண்டு ஓடினான்.


போகும் அவர்களை முறைத்து நின்றவர் இதற்கெல்லாம் காரணமான தன் சீமந்த புத்திரனை எண்ணி பல்லை கடித்து அவன் எங்கு எனத் தேடிட


அவன் தேடலுக்குரியவனோ எவ்வித அலட்டலுமின்றி மோட்டார் ரூமில் போடப்பட்டிருந்த கயிற்றுக் கட்டிலில் ஜம்பமாய் கனவில் மிதந்தவனாய் படுத்திருந்தான்.


ஆறடிக்கும் மேலான அவன் உயரத்தில் அந்த சிறிய கட்டிலும் போதாது கால்கள் கட்டிலின் விளிம்புக்கு வெளியே நீட்டிருக்க உரமேறிய கட்டுக்கோப்பான படிகட்டுத் தேகம் அவரைப் பார்த்து பல்லிளிக்க இடையில் வேட்டியுடன் மேல்சட்டையின்றி படுத்துக்கிடந்தான் அவன் ருத்ரேஷ்வரன்.


"தடிப்பய படுத்திருக்க கோலத்த பாரு" என வாய்க்குள் திட்டியபடி அவனை நெருங்கியவர் சுள்ளென்று அடிபோட அவனோ அப்போதும் அசையாது படுத்திருந்தான்.


"அசையுறானா பாரு தடிப்பய" என திட்டியவர் மீண்டும் அடி போட அவனோ கனவில் மிதந்தவனாய் "மைடியர் நயன் பேபி" என .நொடியில் அவர் கைபற்றி இழுத்து தன்னில் போட்டுக் கொண்டவன் அவர் இதழோடு இதழ் பதிக்க முயன்றிட அலறிப் போய்விட்டார் மனிதர்.


"அடேய் கிராதகா என்னடா பண்ற" தந்தையின் காட்டுக் கத்தலில் தன் செய்கையை நிறுத்தியவன் விழி திறவாது "எதுக்கு இந்த நைனா இப்படி கத்துது கொஞ்சம் கூடா விவஸ்த்தை இல்ல இந்த பெருசுக்கு..சின்னஞ் சிறுசுங்க ஜாலியா இருக்கும் போது டிஸ்டர்ப் பண்ணிட்டு பேட் நைனா" என திட்டிக் கொண்டு மீண்டும் தன் வேலையை தொடங்க அவன் குவிந்த இதழில் மனிதர் விட்ட சுள்ளென்ற அடியில்
பட்டென்று விழி திறந்தவன் தன் அணைப்பில் இருந்த அவள் கனவுக் கன்னியை உத்து உத்துப் பார்க்க கத்தை மீசையுடன் தன்னையே முறைத்துப் பார்த்தவரைக் கண்டு "நைனா நீ இங்க என்ன பண்ற எங்க என்னோட நயன்" என்றதுதான் தாமதம் மனிதர் அடித்த அடியில் துள்ளியெழுந்தான் ஆண்மகன்.


"யப்போய் வலிக்குதுப்பா" என துள்ளிக் குதித்தவனோ அவர் கையில் சிக்காது விலகி நிற்க அவரோ மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியவராய் அவனை முறைத்துப் பார்த்தார்.


"யோவ் நைனா எதுக்குய்யா பேய் பூந்தாப் போல இந்த சாத்து சாத்துற.." வலித்த உடலை நெளித்து வளைத்து கேட்டான்.


"எதுக்குடா இந்தகுடிகாரப் பயலுகள திரும்பவும் கூட்டியாந்தே.. உனக்கு எத்தனவாட்டி சொல்றது உம் புத்திக்கு ஏறவே மாட்டா" காட்டுக் கத்தலாய் கத்திய கத்தலைக் கண்டு கொண்டால் அவன் ருத்ரேஷ்வரன் அல்லவே.


சாவகாசமாய் பெரிய கொட்டாவியை விட்டவன் உடலை வளைத்து நெட்டி முறித்து நிமிர்ந்து நிற்க அவனை ஏகத்துக்கும் முறைத்திருந்தார் வேலன்.


"முறைக்காத நைனா இப்போ என்னாச்சுன்னு முறைப் பொண்ணு மாதிரி முறச்சிகிட்டு வெறச்சிகிட்டு நிக்குற.. நேத்து நம்ம பைய லவ்வு செட்டாகிட்டு அது தான் பசங்க எல்லாம் பார்ட்டி கேட்டாங்கனு வாங்கி கொடுத்தேன் இது தப்பா" அப்பாவியாய் விழி விரித்துக் கேட்டது அந்த ஆறடி வளர்ந்த குழந்தை.


"டேய் எருமமாட்டு பயலே எவனோ லவ் பண்ணி செட்டாகினா நீ எதுக்குலே சரக்கு வாங்கி கொடுத்து கொண்டாடுற.. காசு என்ன மரத்திலயாலே காய்க்குது.. இல்ல உங்கொப்பன் பெரிய அம்பானினு நினைச்சிட்டு இருக்கியாலே"
அவருக்கு தன் பெற்ற ஜீவன் மீது அத்தனை கடுப்பு.


எதை பற்றியும் கவலையுமில்லாது வாழ்க்கை பற்றி ஓர் இலக்கு இல்லாது தனக்கென்று ஓர் சேமிப்பில்லாது சுற்றி திரிபவன் எப்படி தானின்றி எதிர்காலத்தில் தனித்து வாழ்வானோ என்ற பயம் எப்போதும் போல இன்று அவருள் எழுந்து அவளை ஆட்டிப் படைத்தது.


தந்தை திட்டியதில் ரோஷம் எழுந்தவனாய் "யோவ் நைனா நான் ஒன்னும் உன் காச எடுத்துக் கொடுக்கல நேத்து சந்தைக்கு போனேன்ல அங்கவெச்சு இருபது மூட்ட தூக்கினேன் அதுல கொஞ்சம் காசு கிடைச்சிதா அதான் அவனுங்க கேக்கவும் எடுத்து கொடுத்துட்டேன்" சாதாரணமாய் கூறியவனின் பேச்சில் தலையிலடித்துக் கொண்டார் வேலன்.


அவன் அப்படித்தான் யார் கேட்டாலும் இல்லையென்று சொல்லாது அள்ளிக் கொடுப்பவன் அது பணம் என்றாலும் சரி பாசம் என்றாலும் சரி. கள்ளமில்லா மனதுக்காரன் தன் மீது பாசம் கொண்டவர்களுக்கு எதையும் செய்யத் துணிபவன். அப்படி இருப்பவனுக்கு தனக்கென்ற ஆசைகள் எதுவுமில்லை.
உனக்கென்று சேர்த்து வையடா என தந்தை அதட்டினாலும் "அது தான் நீ இருக்கியே நைனா என்னோட முழு சொத்தா நீ போதும் எனக்கு" என்ற வார்த்தையைக் கூறியே அவரை வாயடைக்க செய்யும் கள்ளன் அவன். அவன் நைனாவே உலகு என வாழ்பவனுக்கு இந்த காசு பணம் சொத்து பத்து எல்லாம் தூசிக்கு தான் சமன்.


"டேய் ஈஸ்வரா இப்பிடி இருக்காதடா அப்பு.. உழைக்குற வயசுல உனக்குன்னு சேர்த்து வெச்சாதான்டா பிற்காலத்துல உனக்கு அது உதவும்" பாசமாய் கவலை தேய்ந்து வந்தவரின் வார்த்தையில் அவரை நெருங்கி தன் தோளோடு அணைத்துக் கொண்டவன்
"எதுக்கு நைனா கவலபடுற.. எனக்கு தான் நீ இருக்கியே.. ஏன் எனக்கு நீ கஞ்சி ஊத்தமாட்டியா?" என்றான் கண்சிமிட்டி.


அவருக்கு பதில் சொல்ல முடியவில்லை..
தன் ஆயுசுக்கும் அவனை தன் தோள் மேல் சுமப்பது என்றாலும் மனதார தன் பிள்ளையை தூக்கி சுமப்பதற்கு தயார் தான். ஆனால் காலமும் வயோதிகமும் அவரின் வாழ்நாளை குறைத்துக் கொண்டிருக்க எப்போது தனக்கு என்னாகும் என்று சொல்ல முடியாத நிலையில் தன் செல்ல மகன் பொறுப்பற்று திரிவது அவருக்குள் கவலையை கொடுத்தது.


"அப்பு இங்கப் பாரு காலம் பூரா உனக்கு கஞ்சி ஊத்துறதுக்கு எனக்கு ஆச தான் ஆனா காலம் போற போக்குல எனக்கும் வயசு போய்கிட்டே இருக்கு இன்னைக்கு இருக்குற நான் நாளைக்கு இல்லாம போனா என்ன பண்ணுவ அது தான்டா சொல்றேன் நான் இல்லன்னாலும் நீ நல்லா வாழனும் அதுக்கு நீ கொஞ்சம் பொறுப்போட இருடா" என்றார்.


அவ்வளவு தான் இத்தனை நேரம் முகத்திலிருந்த இளக்கத்தை தொலைத்தவனாய் இறுக்கம் குடி கொள்ள அவரை பார்த்து முறைத்தவன் வேக வேகமாய் வெளியேற "அப்பு" என அவர் அழைத்தது காற்றோடு காற்றாய் கரைந்து தான் போனது.


அவர் அறிவார் தன் பேச்சு மகனை எந்தளவுக்கு காயப்படுதிருக்கும் என்பதை.


பிறந்து சில நாட்களிலே தாயை இழந்து பச்சிளம்பிள்ளையாய் அவனை ஏந்தியவர் தன் பிள்ளைக்கு இனி தாயும் நானே தந்தையும் நானே என்று அன்றிலிருந்து மடிதாங்கியவர்.
தந்தையின் தோளையே தாய் மடியாகவும் தூளியாகவும் மாறி தகப்பன்சாமியாய் வளர்ந்தவன் அவன்.
அவர் மீது அத்தனை அன்பு வைத்திருப்பவன் தந்தைக்கு ஏதாவது ஒன்று என வாய் வார்த்தையாய் கேட்டாலும் உள்ளம் துடிதுடித்து போய்விடுவான் அப்பேர்பட்டவனிடம் இத்தகைய பேச்சை பேசினால் கோபம் வராமல் போனால் தான் அதிசயமே.


போகும் அவனை பார்த்திருந்தவரோ வலித்த ஒரு பக்க நெஞ்சை நீவி விட்டபடி "கடவுளே என்னோட ஆயுள் ரொம்ப நாளைக்கு இல்லன்னு என்னோட உடம்பே எனக்கு காட்டிக் கொடுக்குது. அத அவன்கிட்ட சொன்னா அவன் தாங்கமாட்டான்னு தானே இப்பிடி அதட்டி மிரட்டி அவன திருத்தப் பார்க்குறேன். அப்பவும் இப்படி சொல் பேச்சு கேக்காம திரியுறானே" என்ற கவலையோடு வீட்டை நோக்கி நடை போட்டார் வேலன்.


உச்சி வெயில் மண்டையை பிளக்க வாசலில் காய வைத்த வத்தலை கைகளால் பரப்பிக் கொண்டிருந்த நாச்சியோ யாரோ விரைவாய் நடக்கும் சத்ததில் திரும்பிப் பார்க்க எதிர் வீட்டு பேச்சியாத்தாவோ நடக்க முடியாத வயதிலும் விரைவாய் நடையை எட்டி போட்டு நடந்து கொண்டிருந்தார்.


'இந்த மொட்ட வெயில்ல எங்க கிளம்பிட்டு இந்தக் கிழவி' என எண்ணியவர் அவரிடம்
"ஏய் அப்பத்தாக் கிழவி எங்கிட்டு இப்போ மூச்சபிடுச்சி ஓடுற நீ.. உன்னோட வயசுக்கு நடக்குறதே பெரிய விசயம் இதுல நீ ஓட வேற செய்றியா?" என்ற நாச்சியின் குரலில் தன் ஓட்டத்தை நிறுத்திய எதிர்வீட்டு கிழவி பேச்சியாத்தாவோ.


"அடியே நாச்சி என் ஹீரோ அங்க சண்ட போட்டுட்டு இருக்கான்டி அத பார்க்கத்தேன் விரசா போய்ட்டு இருக்கேன்" என்றவர் நடையை எட்டிபோட.


அவர் பேச்சில் வாய் பிளந்த நாச்சியோ
"எத ஹீரோவா? ஏய்க் கிழவி வரவர உன் குசும்பு தாங்கல.. நீ இப்பிடியே பேசிக்கிட்டு இரு எமனுக்கு முன்னாடி பாசக்கயிற நானே உனக்கு போட்டுறேன் பாரு" என்ற நாச்சியின் குரலுக்கு..


"போடி போடி பொசகட்ட சிறுக்கி.. என் சிங்கம் களத்துல இறங்கிட்டு முதல்ல நான் போய் அத பார்த்துட்டு வந்து உன்ன வெச்சிக்குறேன்" என்று சிலிப்பியபடி எட்டி நடையிட்டார் அவர்.


"பல்லுவிழுந்து கண்ணும் போயும் இந்தக் கிழவியோட அலும்பல் தாங்கல அப்பிடி யார இது ஹீரோன்னு சொல்லிட்டு போகுது" என்ற நாச்சியின் முணுமுணுப்பில் வீட்டிலிருந்து வெளிவாசலுக்கு வந்த முருகனோ
"என்ன புள்ள யாரு அந்த ஹீரோனு யோசிக்கிறியா நீ?"


"ஆமா மாமா அப்பிடி யார அது அப்பிடி சொல்லிட்டு போகுதுனு புரியல"


அவரோ நமட்டுச்சிரிப்புடன் "வேற யாரு உன் மருமவன தான் அப்பிடி சொல்லிட்டு போகுது இந்த ஊர்ல இருக்குற மொத்த கிழவிங்களோட நாயகன் உன் அண்ணன் மவேன் தான்.. அவனோட குரளி வித்தைக்கு இந்த ஊர் மொத்தக் கிழவிங்களும் ரசிகையாச்சே.." என்றவரின் பேச்சில் வெகுண்டெழுந்தார் நாச்சி.


"இங்கப் பாருங்கோ மாமா சும்மா சும்மா என் மருமவன அப்பிடி சொல்லாதிங்க அப்புறம் எனக்கு கெட்ட கோவம் வரும்." என்று அண்ணன் மகனுக்கு வரிந்து கட்டினார்.


"ஆமாடி எனக்கு வேண்டுதல் பாரு உன்கிட்ட வாங்கிக் கட்ட.. இந்த ஊருக்கே தெரியும் உம் மருமவன் யோக்கியம்.. இத நான் வேற தனியா சொல்லனுமா போடி" என்றவர் பேச்சில் சிலிர்த்தெழுந்தவர்.


"இப்போ என்ன உங்களுக்கு.. என் தங்கத்துக்கு என்ன குறைனு பேசுறிக.. அவன் ஆள் தான் வளர்ந்திருக்கான் தவிர குழந்தை மனசுக்காரன்.. யாரையும் தப்பா கூட பேசமாட்டான். மரியாதை தெரிஞ்ச பையன்" என்று அண்ணன் மகனை புகழ்ந்து தள்ள.


முருகனோ மனைவியின் பாராட்டையும் தற்போது அந்த தங்கம் எப்படியிருக்கும் என்பதையும் இணைத்து கற்பனை செய்தவருக்கு கற்பனையே சகிக்க முடியாது போக தலையை உலுக்கியவர்
"ஆமா ஆமா தங்கப் பதக்கம் ..சொக்கத் தங்கம் உன்ற மருவன் தான்" என்றவர் "டேய் ஈஸ்வரா இன்னுமாடா இந்த உலகம் உன்னை நல்லவன்னு நம்புது" என்ற பெருமூச்சுடன் அங்கிருந்து நகர்ந்தார்.


இங்கே பேசப்படும் அந்த சொங்கத் தங்கம் தங்க பதக்கம் குழந்தை குட்டி அங்கு மரியாதையை பிழிந்து பிழிந்து தன்னை பெற்றெடுத்த அப்பாவி ஜீவனுக்கு வழங்கிக் கொண்டிருந்தது.


வேட்டி நுனியை ஓர் கையில் தாங்கி இடுப்பில் மறுகையூன்றி கண்ணில் கலர்கண்ணாடியுடன் தன் முன்னே தன்னை முறைத்தபடி நின்ற தகப்பனை கெத்தாய் பார்த்து கொண்டிருந்தான் ருத்ரேஷ்வரன்.


ஊருக்கு ஈஸ்வரன் அவன் தந்தைக்கு மட்டும் இம்சை அரசன்.


காலையில் கோபமாய் போனவன் வேண்டுமென்றே தந்தை வெறுப்பேற்றவே அவர் சேர வேண்டாம் என்ற கும்மலோடு சேர்ந்து சிறு கலாட்டாவை பண்ணி வைத்து பஞ்சாயத்தை இழுத்து வைத்திருந்தான்.


பஞ்சாயத்தை முடித்து வந்தவருக்கு அவன் மீது கோபமிருக்க அதை தூண்டிவிடவே அவர் முன்னே எவ்வித அலட்டலும் இன்றி நின்றவனை கொலைவெறியாய் முறைத்தபடி நின்றார் வேலன்.


தகப்பனும் மகனும் எதிரெதிரே முறைத்தபடி நின்றிருக்க அவர்களை சூழ ஊர் பெருசுகள் ஆவலாய் காத்திருந்தனர் அடுத்த நடக்கவிருக்கும் கலாட்டாவை பார்வையிட.
வாரத்திற்கு ஓர் முறை அப்பனும் மகனும் அடிக்கும் லூட்டிகளே கண்டு ரசிப்பதே அவ்வூர் பெருசுகளின் பொழுதுபோக்கு.


எப்போதடா ஆரம்பிக்கும் என்ற ரீதியில் காத்திருந்தவர்களை ஏமாற்றாது தானே ஆரம்பித்தார் வேலன்.


"டேய் ஈஸ்வரா அந்த நாதாரி நாய்ங்கள விட்டுடு ஒழுங்கா இருப்பேன்னு சொன்னா மட்டும் இந்த படியேறு இல்லையா தெருவுல போய் படுடா" என்றார் கோபமாய்.


அதற்கெல்லாம் அசருபவனா அவன்.


"ஹே ஹே யாரு கிட்ட..யோவ் வழுக்கத்தல வணங்கா முடி இன்றைய நாள் உன் டயரில எழுதிக்கோ" என்றவன் வேலனின் முறைப்பில் "ஹிஹி ஸாரி தகப்பா உன்கிட்ட தான் டயரி இல்லல்ல பரவால அதான் மண்டைல அவ்வளவு பெரிய க்ரவுண்ட் இருக்கே அதுல எழுது சரியா" என்றவன்


"ஆ எதுல விட்டேன்" என யோசித்து நினைவு வந்தவனாய் "இன்றைய நாள் உன் வழுக்கத் தலைல எழுதிவெச்சுக்கோ.. எப்போ என்னைய பார்த்து அந்த வார்த்தையை சொன்னியோ அப்போவே முடிவு பண்ணிட்டேன் இனி இந்த ருத்ரேஷ்வரன் இந்த வீட்டு முன் படியில கால வைக்கமாட்டேன்னு" என்றவனை முறைத்தவர்.


"முன் படியில மட்டும் இல்லடா பின்படியிலயும் காலவெச்சிடாத வெட்டி போட்ருவேன் வெட்டி" என்று அரிவாளை எடுத்து நின்றார்.


"ஆத்தாடி ஆத்தா மிஸ்டர் வணங்காமுடி நிஜமாவே கொல காண்ட்ல இருக்கு போலவே" அடேய் ருத்ரேஷ்வரா இதுக்கு மேல பேசின வெட்டு கன்பேர்ம்.. சோ டக்குனு நம்ம பெர்போமென்ஸ் அ போட்டுடுடா கைப்புள்ள" என்றவன் பட்டென தகப்பனின் காலை கட்டிக் கொண்டு


"எப்போய் காலைல இருந்து எதுவுமே சாப்டல.. கொலை பசியில இருக்கேன் எதாச்சும் கஞ்சி இருந்தா ஊத்துப்போய்" என அழுகையை ஆரம்பிக்க.
அவரோ "அடச்சீ கேவலமா நடிக்காதடா பரதேசி"என்றார்.


'அய்யோ பெர்போமென்ஸ் பத்தலையோ வணங்கா முடி கண்டுபிடிச்சிட்டே' என எண்ணியபடி அவரை பாவமாய் நோக்க.


அவரோ அதற்கெல்லாம் மயங்காதவராய் "நான்சொன்னதுசொன்னதுதான் ஒழுங்கா இந்த ஊதாரிங்களோட சுத்துறதை நிறுத்திட்டு வீட்டோட கிடந்தா உனக்கு சோறு இல்லை உனக்கு பழைய கஞ்சி கூட ஊத்தமாட்டேன் ஓடி போயிரு" என்றார் காட்டமாய்.


அதில் கோபம் கொண்டவனாய் சிலிர்த்தெழுந்தவன் "யோவ் தகப்பா இந்த பச்சபுள்ள சாபம் கொடுக்குறேன் நல்லா கேட்டுக்கோ இந்த ஜென்மம் இல்ல இன்னும் ஏழேழு ஜென்மத்துக்கு உன் பேர்ல வேணா முடி இருக்கலாம் ஆனா உன் வழுக்கத்தலைல ஒரு முடி கூட முளைக்காதுய்யா இது தான் நான் கொடுக்குறசாபம் வாங்கிக்கோ" என்றவன் முகத்தை திருப்பிக் கொண்டு போவது போல் ஈரெட்டு எடுத்து வைக்க


கூட்டத்தில் நின்ற கிழவியோ
"யப்பா வேலா அதான் புள்ள கெஞ்சுதே சோத்தப் போடுய்யா பாவம். ராசா முகமே வாடி போய்ட்டு" என ஒத்து ஊதியதைக் கண்டு கிழவியின் புறம் ஓர் பறக்கும் முத்தத்தைவிட்டு கிழவியை பொக்கை வாயால் வெட்கப்பட்டு சிரிக்க வைத்தவன் தந்தையின் புறம் திரும்பி அப்பாவிப் பிள்ளையாய் பார்க்க.


அந்தப் பாசக்கார தகப்பனுக்கும் அதற்கு மேல் கோபத்தை இழுத்துபிடிக்க முடியாமல் தான் போனது.


தொடரும்..
 

saaral1120

Moderator
நதி - 02



பசியென்ற சொல்லில் தந்தையின் வாயை கட்டிவிட்டவன் வீட்டினுள் நுழைந்து சாப்பிட அமர்ந்தவன் இருந்த பசிக்கு தகப்பன் பரிமாறிய கறிக்குழம்பை ஒரு பிடிபிடித்தான் ருத்ரேஷ்வரன்.



"டேய் மெதுவா சாப்பிடேன்டா எதுக்குடா பல நாள் பட்டினி கிடந்தவன் மாதிரி பதறுற" தகப்பனின் பேச்சு காதிலே ஏறாதவனாய் சாப்பிட்டவன் வாய் நிறைத்த சோற்றோடு "யோவ் நைனா கண்ணு வைக்காத.." என்றுவிட்டு மீண்டும் சாப்பிட அவரோ தலையிலடித்துக் கொண்டார்.


தன் வயிறார உண்டு முடித்து நிமிர்ந்தவன் பெரும் சத்தத்தோட ஏப்பம் விட அவனை முறைத்தார் வேலன்.


"ஹிஹி.. முறைக்காத நைனா நேத்து நைட்டு சாப்பிட்டது காலையிலையும் ஒன்னும் சாப்பிடல அதான் ஒரு கட்டு கட்டிடேன்" அசடுவழிய கூறியவன் தகப்பனின் மடியில் தலை சாய்த்திட அவர் கரமோ தன்னிச்சையாய் அவன் தலை வருடியது.


தந்தையின் தலைகோதலில் அவர் முகம் பார்த்தவன் "ஏன் நைனா நான் உன்ன ரொம்ப கஷ்டபடுத்துறேனா?"


"ஆமான்னு சொன்னா என்ன செய்றதா உத்தேசம்" என்றார் சிறு முறைப்போடு.


"ஒன்னு செய்யமாட்டேன் இன்னும் கொஞ்சம் ஜாஸ்தியா கஷ்டபடுத்தலாம்னு யோசிப்பேன்" என இளித்து வைக்க அவன் தலையில் கொட்டினார் அவர்.


"சரி சரி காண்டாகத நைனா சொல்லு நிஜமாலுமே உன்ன கஷ்டப்படுத்துறேனா? இப்பிடி ஊருக்குள்ள சோம்பேறியா சுத்தி திரியுறேன்னு தான் கவலப்படுறீயா?" என்றவனின் குரலின் பேதத்தில் குனிந்து அவன் முகம் பார்த்தார் வேலன்.


தவறு செய்துவிட்டோமோ என்ற தவிப்புடன் தாய் முகம் பார்க்கும் குழந்தையாய் அவர் முகம் பார்த்திருந்தான்.


மெல்ல அவன் தலை கோதியவர்
"நீ சோம்பேறி கிடையாது அப்பு.. நீ ஒரு ஏமாளி உன்ன சுத்தி இருக்குறவன் எவன் நல்லவன் எவன் கெட்டவன்னு தெரியாத ஒரு முட்டாள் பேக்கு" என அவனை வாரிட

அவரை முறைத்தான் அவன்.


"நைனா நீ என்ன ரொம்ப டேமேஜ் பண்ற பார்த்துக்கோ" என எகிற அவரோ சன்னச் சிரிப்புடன்

"பின்ன என்னடா எப்போ பார்த்தாலும் உழைக்குற பணத்த அடுத்தவனுக்கே செலவு பண்ற உனக்குன்னு எதுவுமே வெச்சிக்காம இப்படியே ஊருக்கு சேவகம் செஞ்சிட்டு இருந்தா உன்ன அப்பிடித்தான் சொல்லலாம்" சிரிப்புடன் ஆரம்பித்து முறைப்புடன் முடித்தார்.


"நைனா நான் யாருக்கு பண்றேன் நம்ம பயலுங்க தானே நம்ம ஊர்காரனுங்களுக்கு தானே பண்றேன் இதுல என்ன தப்பு இருக்கு" என நியாயம் கேட்டான்.


"டேய் நீ கொடுக்குறத தப்பா சொல்லல அப்பு.. ஆனா நீ கொடுக்குறதுல ஒரு குடும்பம் வாழுதா அது சந்தோஷம் ஆனா உன்னோட உழைப்பை சுரண்டி அவனுகள் குடியும் கூத்துமா இருக்கானுங்களே அததான் சொல்றேன்." என்றார் அவனுக்கு புரிய வைத்திடும் நோக்கில்.


"ம்ம் நீ சொல்றது சரிதான் நைனா ஆனா யாருமே என்கிட்ட உதவின்னு வந்து கேட்டா மறுக்க முடியலையே.. இது கூட என் தப்பு இல்ல எல்லாம் உன்னோட ஜீன்ல இருந்து தான் வந்திருக்கும்" என அவர் மீதே பழி போட்டவனை என்ன செய்தால் தகும் என்ற ரீதியில் பார்த்தவர் பின் பெருமூச்சுடன்,

"அப்பு நைனா சொன்னா கேப்பியா" என்றார்.


அவனோ தலை நிமிர்த்தி அவர் முகம் பார்த்து "சொல்லு நைனா நீ சொல்லி கேக்காம இருப்பேன்னா" என்க


அவரோ "ம்க்கும் ஆமா அப்பிடியே கேட்டுட்டாலும்" என
முறுக்கிக் கொண்டு முகம் திருப்பிட அவரை தாஜா செய்து சமாளித்தவன் என்ன எனக் கேட்டான்.


"அப்பு எனக்கு தெரிஞ்ச நண்பன் ஒருத்தன் சென்னைல இருக்கான்டா அவன் கிட்ட உனக்கு ஒரு வேல பார்க்க சொல்லியிருந்தேன் அவனும் பார்த்துட்டு சொல்றேன்னு சொல்லியிருந்தான். நேத்து அவன் கால் பண்ணி ஒரு வேலை இருக்குன்னு சொன்னான்" என்றவரை பார்த்தவன்

"ம்ம் என்ன வேலையாம்" எனக் கேட்க.


வேலனோ மகிழ்ச்சியுடன் "ட்ரைவர் வேலை" என்றார்.


அவ்வளவும் தான் பட்டென்று அவர் மடியிலிருந்து எழுந்து அமர்ந்தவன் "என்னாது ட்ரைவர் வேலையா" என அதிர்ச்சியாய் கேட்க.


அவரும் "ஆமா அப்பு மாசம் முப்பதாயிரம் கிடைக்குமாம்" என்றார்.


"யோவ் நைனா ஒரு தமிழ் பட்டதாரிய போய் ட்ரைவர் வேலை பார்க்க சொல்றீயா நீ.. நோ நோ என்னால முடியாது" என முறுக்கிக் கொண்டான்.



"ஆமா பெரிய பெத்த படிப்பு.. நீ படிச்ச படிப்புக்கு தான் எந்த வேலையும் கொடுக்க மாட்டேனு சொல்லிட்டானுங்களே.. அப்புறம் என்ன வெட்டி வீராப்பு உனக்கு" என்றவரை முறைத்தவன்

"
நீ என்ன சொன்னாலும் சரி நான் அந்த வேலைக்கு போகமாட்டேன்" என்றவன்

அவர் எவ்வளவு கூறியும் அடமாய் நின்றான்.


அதில் வேலனுக்கோ சிறு கோபம் முளையிட "அப்போ சரி.. நான் சொல்றத கேக்க முடியாதுல இனி உனக்கும் எனக்கும் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை நீ யாரோ நான் யாரோ" என்றார்.


எப்போதும் போல் அவர் முறுக்கிக் கொள்ள அவனும் "சரி நைனா நீ பேசாத நான் பேசுறேன். இப்போ எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு போய்ட்டு வரேன் சரியா" என்றவன் வெளியேறிச் சென்றான்.


அவனுக்கு தந்தையின் கோபம் எப்போதும் போல சிறு பிள்ளைத் தனமாய் தான் தெரிந்தது. அவரது கோபமெல்லாம் காலையில் சண்டையிட்டு மதியம் வரை மட்டுமே நீடிக்கும் அப்படியிருக்க அவன் பெரிதாய் அலட்டிக் கொள்ளாதவனாய் வெளியேறிச் சென்றான்.


வேலனோ போகும் அவனை பார்த்திருந்தவர் ஒரு முடிவுடன் வீட்டை பூட்டி விட்டு வெளியேறிச் சென்றார்.


நேரம் செல்ல வீடு வந்த ருத்ரேஷ்வரனோ வீடு பூட்டிக் கிடப்பதைக் கண்டு புருவம் சுருக்கி நின்றான்.

ஒரு போதும் இல்லாது வீடு பூட்டியிருந்ததில் யோசனையோடு நின்றவன் அழைப்பில் தந்தையை அழைக்க மறுபுறம் அழைப்பு துண்டிக்கப்பட்டது.

"பார்ரா" என முணுமுணுத்துக் கொண்டவனாய் மீண்டும் அழைப்பை ஏற்றவனுக்கு பலன் என்னவோ பூஜ்ஜியமே.


"என்னாச்சு இந்த நைனாக்கு எதுக்கு போன கட் பண்ணுது" வாய்க்குள் முணுமுணுத்தவாறே நின்றவனுக்கோ பட்டென்று மதியம் நடந்தது நினைவில் மின்னியது.


"அட இன்னுமா கோபம் குறையல" என நினைத்துக் கொண்டவன் அவர் வழமையாய் செல்லும் இடங்களுக்கு தேடிச் சென்றவனுக்கு ஏமாற்றமே கிட்டியது.


மாலையும் ஆகிவிட இன்னுமே வீடு திரும்பாத தந்தையை எண்ணி அவனுக்குள் பயம் கவ்விக் கொண்டது.


அதற்கு மேல் எங்கு சென்று தேட என்று தெரியாதவனாய் வீட்டின் முற்றத்தில் தலையில் கைவைத்து அமர்ந்தான்.


நேரம் கடக்க இரவு பத்துமணியளவில் வீட்டின் வெளிக் கதவை திறந்து கொண்டு உள்நுழைந்த வேலனோ வாசலில் அமர்ந்திருந்தவனை கண்டு கொள்ளாது வீட்டினுள் நுழைந்து கொண்டார்.


வீடு வந்த தந்தையைக் கண்டு நிம்மதியோடு எழுந்தவன் அவரைத் தொடர்ந்து உள் நுழைந்தான்.


"எங்க போயிருந்த? உன்ன எங்கெல்லாம் தேடினேன்தெரியுமா?" என அவன் கேட்ட கேள்விக்கு பதில் கூறாது படுக்கையை விரித்து சாய்ந்தார்.


"நைனா என்ன தூங்குற சாப்டியா நீ? வா ரெண்டு பேரும் சாப்டலாம் செம்ம பசி பசிக்குது" என்றவன் அவர் கரம் பற்றி இழுக்க அதை தட்டிவிட்டவர் கண்மூடிக் கொண்டார்.


"ப்ச்.. இன்னுமா நைனா உன் கோபம் போகல
" சலிப்பாய் கேட்டபடி அவர் அருகே அமர்ந்து கொண்டவன் "நைனா இங்கப் பாரேன்.. உனக்கென்ன நான் வேலைக்கு தானே போகனும் நான் நம்ம ஊர்லயே ஒரு நல்ல வேலையை பார்க்குறேன். சென்னைக்கு எல்லாம் என்னால போக முடியாது" என்றவன் மறுக்க ஒரே காரணம் அவன் தந்தையை விட்டு அவ்வளவு தூரம் பிரிந்து செல்ல முடியாது என்பதே.


அதை அவரிடம் கூறாது அவன் மாற்று யோசனையை கூற அவரோ பிடிவாதமாய் இருந்தார்.


"நைனா.. நைனா" ஐந்து நிமிடம் வரை அழைத்தும் எந்த சத்தமும் இல்லாது விட அவனும் அவர் அருகில் தூங்கிப் போனான்.


அவனது சீரான மூச்சில் அவன் உறங்கிவிட்டான் என உணர்ந்து கண்விழித்தவர் பசியோடு தூங்கும் தன் மகனை ஆதுரமாய் பார்த்தார்.


பசியோடு தூங்கிவிட்டானே என மனம் கவலை கொண்டாலும் இவனை வழிக்கு கொண்டு வருவது இது ஒன்றே வழி என எண்ணிக் கொண்டே மனதை கல்லாக்கிக் கொண்டார்.


அவருக்கும் அவனை ஊரை விட்டு அனுப்ப வேண்டும் என்ற ஆசையில்லையே இதே ஊரில் நல்ல வேலை கிடைத்தாலும் அவன் மீண்டும் மீண்டும் அதே போலவே நடந்து கொள்வான் என்பது அவருக்கு தெரியுமாதலால் வெளியூர்க்கு அனுப்பி வைக்கும் முடிவில் உறுதியாய் நின்றார்.


ஊர்விட்டு ஊர் சென்று மக்களோடு பழகினாலே அவன் அனைவரையும் புரிந்து கொள்வான் என்றெண்ணியவர் விழிகளோ தூங்கும் போது கூட தன்னை அணைத்துக் கொண்டு தூங்குபவனின் மீது படிந்தது.


அவன் தலை வருடியவர் 'உன் அம்மா உன்ன பெத்து போட்டு அவ நிம்மதியா போய் சேர்ந்துட்டா.. அம்மா இல்லங்குற குறையே இல்லாம வளர்க்க எண்ணி உன்ன ஒன்னும் தெரியாதவனா வளர்த்துட்டேன்னு கவலையா இருக்கு அப்பு. உன் வாழ்க்கையை என் துணை இல்லாமலே நீ தனிய நின்னு வாழனும். அதுக்காகத் தான் இதெல்லாம் பண்றேன்' தன் மனதோடு கூறிக் கொண்டவர் அவனருகே தானும் தூங்கிப் போனார்.


அடுத்து இரு நாட்களும் வேலனோ தன் மௌனப் போராட்டத்தை தொடர தவித்துப் போனது என்னவோ ஈஸ்வரனே.


"நைனா பேசேன்.. ஏன் இப்பிடி இருக்க?" என எத்தனை முறை கேட்டும் அமைதியே உருவாய் தான் உண்டு தன் வேலையுண்டு என நாட்களை கடத்தினார்.


எத்தனை முயன்றும் தந்தையின் மௌனப் போராட்டத்தை உடைக்க முடியாது சோர்ந்து போனவன் அடுத்து உதவி கேட்டதோ அவன் அத்தையிடமே.


.....


மதிய நேரம் உணவு உண்ண வீடு திரும்பிய முருகேசனோ அங்கே அமர்ந்திருந்தவனைக் கண்டு

"என்னடா மாப்ள இந்த பக்கம் .. என்ன மறுபடியும் உன் அப்பன் கூட மல்லுகட்டியாச்சா?" தன் வீட்டின் முற்றத்து தாழ்வாரத்தில் கன்னத்திற்கு கையை முட்டுக் கொடுத்து அமர்ந்திருந்த ருத்ரேஷ்வரன் தோளில் தட்டிக் கொண்டே அமர்ந்து கொண்டார்.


அவருக்கு தான் தெரியுமே.. அப்பன் மகன் குளறுபடி என்றால் மட்டுமே தன் மருமகன் தன் வீட்டு படியேறுவான் என்று.

அவன் புறா தூது அவன் அத்தை அல்லவா.


"சும்மா போ மாமா .. நானே கடுப்புல இருக்கேன்."


"யாரு நீயா கொஞ்ச நேரம் கூட கோவத்த இழுத்துபிடிக்க ஏழாத குழந்தடா மாப்ள நீ நீ கடுப்புல இருக்கியா" என அவன் கன்னம் கிள்ளியவரை முறைத்தான்.


"மாமா இப்பிடி சொல்லி சொல்லியே நீர் ஊருக்குள்ள பரப்பிவிட்ட கதையால தான் எனக்கு இந்த நிலமை" என்றவனை புரியாது பார்த்தார்.


"என்ன பெத்த நைனா நான் இப்பிடி இருக்குறத சொல்லி சொல்லி என்ன ஊரவிட்டு துரத்த பிளான் பண்ணிட்டுயிருக்கு" சோகமாய் கூறியவன் நடந்ததை அவரிடம் விளக்கினான்.


"மச்சான் சொல்றது சரி தானே எவ்வளவு நாளைக்கு இப்பிடியே சுத்தப் போற ஒழுங்கா ஒரு வேல வெட்டிக்கு போகப் பாரேன்" என்றார்.


"நான் வேலைக்கு போகமாட்டேன்னு சொல்லல மாமா .. இந்த ஊர்லயே வேலை
பார்க்குறேன்னு தான் சொல்றேன் ஆனா ட்ரைவர் வேலைக்கு தான் போகனுமான்னு ஒத்தக் கால் தவம் நிற்குறாரு." என்றார் சலிப்பாக.


மாமன் மருமகனின் பேச்சை கேட்டபடி கையில் மோர் குவளையோடு வந்த நாச்சியோ இருவருக்கும் கொடுத்துவிட்டு அமர்ந்தவர் "ஏன் ராசா உனக்கு அந்த வேலை பிடிக்கலையா இல்ல உன் அப்பன விட்டு தூரமா போக முடியாதுன்னு மருகுறியா" மருமகனின் மனம் உணர்ந்தவராய் கேட்க, அத்தையின் முகம் பார்த்தான் ருத்ரேஷ்வரன்.


அவன் பார்வையே அது தான் காரணம் என்றுணர்ந்தவர் முகத்தில் புன்னகை.

தன் மருமகன் அண்ணன் மீது கொண்டுள்ள அளவற்ற அன்பை கண்டு எப்போதும் போல் ஓர் பெருமிதம் அவர் நெஞ்சில் எழுந்தது.


"நான் அண்ணன் கிட்ட பேசுறேன் ராசா நீ விசனப்படாத சரியா?" என்றதும் அவர் கரங்களை பற்றி கொண்டான் ருத்ரேஷ்வரன்.


"எப்பிடியாச்சும் உங்கண்ணன மலையிறக்கிடு அத்தை அவரோட பேசாம எதுவுமே மண்டைல ஓடமாட்டேங்குது." தவிப்போடு கூறியவன் முகம் வருடியவர்.


"எனக்கு உன்னப் போல ஒரு மகன் கிடைச்சியிருக்கலாம் ராசா.. ஆனா அந்த கொடுப்பினை கடவுள் எனக்கு கொடுக்காம போய்ட்டானே" தாய்மையின் தவிப்போடு கூறியவரின் ஏக்கம் அவ்விரு ஆண்மகன்களின் நெஞ்சை தாக்க அவரை கவலையாய் பார்த்தனர்.


அந்த அன்பு நிறைந்த பெண்மணிக்கு ஏனோ கடவுள் தாய்மை என்ற வரத்தை கொடுக்காது செய்திருக்க, குழந்தை செல்வத்திற்காக ஏங்கி நின்றவருக்கென்றே ஒற்றை ஆறுதலாய் வந்தவனே ருத்ரேஷ்வரன்.


எப்போதும் போல அண்ணன் மீது உயிராய் இருக்கும் அண்ணன் மகனைக் கண்டு தனக்கு இப்படியொரு மகன் இல்லையே என்ற கவலை மனதை அழுத்த அது வார்த்தைகளாய் வெளியேறியிருந்தது.


"நாச்சி என்ன பேச்சு இது..நமக்கு வயசு ஏறி போச்சு இதுக்கு மேல குழந்தை இல்லன்னு கவலபட்டு என்னாகப் போகுது விடு பேசாத" என மனைவியை அதட்டினாலும் அவர் குரலிலும் ஓர் ஏக்கம் இழையோடியது என்னவோ உண்மையே.


இருவரையும் மாறி மாறி பார்த்த ருத்ரேஷ்வரன் மனம் கனத்து தான் போனது.

அவன் தந்தைக்கு அடுத்ததாக உயிராய் நேசிக்கும் இரு ஜீவன்கள் கவலை கொண்டிப்பது கண்டு அவன் மனம் வாடினாலும் வெளிக்காட்டாதவன்

"இங்கப் பாருத்தே உன் வயித்துல பொறக்கலன்னாலும் நான்தேன் உம் மகன் உனக்கு புள்ளையே பொறந்திருந்தாலும் நான் தான் உன் மூத்த மகன் சரியா சும்மா எப்போ பாரு மூக்கச் சிந்தாத.." என்றவன் முருகேசனிடம் திரும்பி "மாமோய் இங்காரு உங்களோட வாரிசு நானிருக்கேன். சும்மா சும்மா அத்தைய மிரட்டுற வேலை வெச்சிக்காத.. உம் பையனுக்கு சொத்த சேர்த்து வெச்சி நல்ல பொண்ண பார்த்து அடுத்த முகூர்த்தத்துல கல்யாணம் பண்ணிவெச்சு பேரம் பேத்திகளை கொஞ்சுறத விட்டுடு இரண்டு பேரும் உட்கார்ந்து அழுகாச்சி சீன் வடிக்கிறிங்களா?" என இருவரையும் அதட்டியவனின் அதட்டலில் இருந்த அக்கறையில் மனம் நெகிழ்ந்து தான் போனர் அவ்விரு தம்பதியினரும்.


"அதுக்கென்ன ராசா.. உனக்கேத்த மாதிரி ஒரு மகாலக்ஷ்மியை பார்த்து ஜாம் ஜாம்னு கல்யாணத்த முடிச்சிடலாம் சரியா" அவன் முகம் வருடி பாசமாய் கூறியதில் மனம் நெகிழ்ந்தவன்.


"ம்ம் அந்த மகாலக்ஷ்மி இப்போ எங்கிருக்காளோ.. சீக்கிரமா கண்ணுமுன்னாடி கூட்டிட்டு வாத்தே" என சன்னச் சிரிப்புடன் கூறியவன் இருவரிடமும் விடைபெற்று கிளம்பிச் சென்றான்.


....



சென்னை நடுத்தர
மக்கள் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு.


நான்காவது தளத்தில் அமைந்திருந்த வீட்டில் காட்டுக் கத்தலாய் கத்திக் கொண்டிருந்தாள் அவள்.


"அந்தாள் எதுக்கு இங்க வந்தாரு? அந்தாள தான் இங்க வரக் கூடாதுன்னு சொன்னேன்ல..இப்போ எதுக்கு வந்தாராம் என்ன பழைய பாசம் பொங்குதோ" என தன்னெதிரே நின்ற தாயை முறைத்துக் கொண்டே கத்திக் கொண்டிருந்தாள் மிருணாளினி.


"மிரு பார்த்து பேசு அந்தாளு இந்தாளுன்னு சொல்லாத அவரு உன் அப்பா"


"வாட் த ப***.. யாருக்கு யாரு அப்பா.. அந்தாளயெல்லாம் அப்பானு சொல்லாத.. ஆத்திரமா வருது" என்றவள் அருகிலிருந்த அழகுக்காக வைத்திருந்த பூச்சாடியை தூக்கி வீசியிருந்தாள்.


"மிரு என்ன பண்ற நீ வர வர உன் கோபத்துக்கு ஒரு அளவே இல்லாம போகுது" ஆத்திரமிகுதியில் கத்தினாள் இளந்தளிர்.


இத்தனை நேரமும் அமைதியாய் நின்றிருந்தவளுக்கு தன் சகோதரியின் இந்தக் கோபத்தைக் கண்டு பொறுக்கமுடியாமல் அவள் கோபத்தில் இரைந்திருந்தாள்.


"யூ ஜஸ்ட் ஷெட்டப்" ஒற்றை வார்த்தையில் தங்கையை அடக்கியவள் தாயின் புறம் திரும்பி "நாம வேணானு தானே தூக்கி போட்டுடு ஒதுங்கி போனாரு இப்போ எதுக்கு திரும்ப திரும்ப வந்து டார்ச்சர் பண்றாரு.. நிம்மதியா இருக்குறது பிடிக்கலையாமா?" என்ற போதே அவள் முகம் ஆத்திரமிகுதியில் சிவந்து போனது.


"மிரு இப்போ எதுக்கு இந்தளவு நீ ரியாக்ட் பண்ற.. அவர் வந்தாரு தான் ஆனா நாங்க அவரோட பேசலையே. அதான் திரும்ப போய்ட்டாரே அப்புறம் என்ன" என சலிப்போடு கேட்டாள் இளந்தளிர்.


அவளுக்கோ சின்ன விசயத்திற்கு இத்தனை ஆவேசம் தேவைதானா என்ற எரிச்சல் மண்டியிருக்க அவளோ சாதாரணமாய் கூறியிருக்க.. மிருணாளிக்கோ அது மேலும் கோபத்தை கிளப்பியிருந்தது.


எத்தனை சாதாரணமாய் கூறுகிறாள். அவர்கள் அவரால் பட்ட துன்பத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட்டாளா? அப்படியென்றால் அவர் மீண்டு வந்தால் அவரை ஏற்றுக் கொள்வார்களா? அவர்களைப் போல் என்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா?" தனக்குள்ளாகவே பட்டிமன்றம் நடத்தியவள் தங்கையை வெறித்துவிட்டு விறுவிறுவென தன்னறைக்குள் நுழைந்து கதவை ஓங்கி அடித்துச் சாத்தியதிலே அவள் கோபத்தின் அளவை பறைசாற்ற விக்கித்து நின்றனர் இருவரும்.


புயலாய் ஆட்டிவித்து சென்ற மூத்த மகளின் இந்த ஆக்ரோஷத்தைக் கண்டு "கடவுளே" என தலையில் கைவைத்துக் கொண்டே அங்கிருந்த இருக்கையில் அமர்த பத்மாவிற்கோ அத்தனை மனதிலோ அத்தனை கவலைகள் ஆட்கொள்ள அமைதியாய் கண்மூடி இருக்கையிலே சாய்ந்தார்.


தாயின் நிலையை கண்ட இளந்தளிருக்கோ பாவமாய் இருந்த போதிலும் இதற்கெல்லாம் காரண கர்த்தா அவர்கள் தானே அனுபவிக்கட்டும் என மனம் கூச்சலிட அமைதியாய் தன்னறைக்குள் புகுந்து கொண்டாள்.





தொடரும்..
 
Status
Not open for further replies.
Top