இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

தெவிட்டா தேன்சுவை நீ❤️❤️

Premakameswaran

Moderator
தெவிட்டா தேன்சுவை நீ♥️♥️♥️
யசோ♥️♥️♥️♥️ஆதி

கதைக்குள் கருவினை தேட
கருவே கதையானது இங்கு.....

மறுக்கப்பட்ட தாய்மைக்கு
வடிவம் கொடுக்க
சபிக்கப்பட்ட பெண்ணவளின்
வாழ்நாள் தியாகமே கருவான விந்தை....

போற்றி பூஜித்த பூவையின் ஒற்றை வலிக்கு
ஒரு நூறாயிரம் பழி தாங்கிய பேதையின் கண்ணீர்காவியம்....

பிழையறியா சிறுமொட்டின் சுயமரியாதையில்
வார்த்தை கொண்டு இட்ட பெருநெருப்பில்
மன்னவனின் உரையா காதலின் அருமை
தெரியாது விலகி சென்றவள்
தன்னவனின் காதல் தானாய் உணர்ந்து
கடல் சேரும் நதியாய் தவித்திருந்தவளை
மீண்டும் சோதித்தது அவள் உதிர்த்த ஒற்றை வார்த்தை....

வார்த்தைகளின் விளையாட்டில் வாழ்க்கை மாறிசெல்லுமோ....
சதிராடி விட்டது மங்கையவளின் விதி....

பிரிந்து சென்ற தன்னவனை கண்டவளின் நிலையோ
கண்ணிழந்தான் பெற்றிதழந்தான் கதையானது....
தாய்க்கு உயிர் அளிக்க தர்மத்திற்கு சென்ற இடத்தில்
மனம்கொண்ட மாயவனை கண்டாள்
மற்றொரு மலரின் நாயகனாக.....

இன்னும் இன்னும் இருக்கிறது பெண்ணே விதியின் விளையாட்டு
கண் முன்னே காதலன்
காதலனின் உயிரணுவோ கர்ப்பத்தில்
ஆனால் எதுவும் சொந்தமில்லை....
காதலுக்கும், தாய்மைக்கும் உரிய பாக்கியவதியோ பிரிதொருவள்....

சூல்கொண்ட மதியவளின்
மனமறியா மலர் பெண்ணும் ஆதியானவனும்
எழுதிய நாடகத்தில் நிதம்னிதம் தீக்குளித்தாளோ தேவதை பெண்....

மரணம் நெருங்கும் வேளையிலும்
தனக்காய்
தன் பெற்றோருக்காய்
தன் தாயுமானவனுக்காய் என்று
தாலிகொடி சொந்தம் கொடுத்து
தொப்புள்கொடி சொந்த்ததனை
சத்தியம் என்ற ஒற்றை வார்த்தையில்
மொத்தமாய் அள்ளி சென்றவளுக்காய்
தன்சிசுவுக்கே சித்தியாய் சிதறி போன தன்னிகரில்லா தெய்வபெண்....

என்னதான் தன்னவனின் கரம் பற்றி
காதல், காமம் கரைக்கண்டு களிப்புற்றாலும்
இமை முடியில் கட்டிவைத்தேன் என கர்வம் கொண்டாலும்
விலகி செல்லும் முதல் முத்தின் வலியும்
கலங்கி தவிக்கும் தாய் உள்ளமும்
என்னவோ செய்கிறது மனதினை.....

என்னவோ இந்த கதைல யசோவ தவிர எல்லாரும் அவுட் ஆப் போகஸ்ல தான் இருக்காங்க.... ஹீரோ ஆர்மி நா... ஆனா இதுல யசோ பக்கமே போகுது கண்ணு.....

ஆதிக்கு அப்பா இருந்தாரு, அடுத்து மலர் வந்தா...இப்போ யசோ வந்துட்டா எல்லாத்தையும் அள்ளி குடுக்க..

மலருக்கு உலகத்துல இல்லாத அப்பா அம்மா😡😡😡😡 இருந்தாங்க, அடுத்து சுஜி வந்தா, தாங்கி பிடிக்க ஆதி மாமா இருந்தாரு..... மலருக்கு ஒரு வலி.... தாயாக முடியாது..... அது மட்டும் தான்....

ஆனா யசோக்கு😭😭😭😭😭 தனியா எவ்ளோ வலி, வேதனை...எந்த நல்லதுமே பார்க்காத பாவப்பட்ட பொண்ணு பா😭😭😭😭😭 கடைசில பிள்ளையும் இல்லாம ஆக்கிட்டாங்க படுபாவிங்க🤬🤬🤬🤬🤬

அருமையான கதை👏👏👏👏.... ஒவ்வொருத்தரோட உணர்வுகளையும் அவ்ளோ சிறப்பா சொல்லி இருக்கீங்க...... மொத்தத்தில் மனித மனங்களின் உணர்வுகுவியல் இந்த தேன்சுவை..... அதை மிக அழுத்தமான எழுத்து நடைல ரொம்ப சிறப்பா கொண்டு சேர்த்துட்டீங்க👏👏👏👏 Jaanu Nav ..... இன்னும் இன்னும் நிறைய ஆழமான அழுத்தமான அற்புதமான கதைகளை படைக்க வாழ்த்துகள்........
 
Top