இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

சிங்க வேட்டை-கதை திரி

Status
Not open for further replies.
அத்தியாயம் 1

“அதினாபுரம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது” என்ற அந்த தங்கத்தால் பொறிக்கப்பட்ட, பத்து அடிக்கும் உயரமான பெரிய மதில் சுவர்களை கொண்ட நுழைவாயிலின் முன்னால் வந்து நின்றான் அர்ஜுனன். ஆறடிக்கும் சற்று அதிகமான உயரம், அகன்ற புஜங்கள், உடற்பயிற்சியில் முறுக்கேறிய தேகம் உடையவன். கருப்பு நிற கோட் சூட் அணிந்து இருந்தவனோ கண்களை மறைக்கும் வண்ணம் சன்கிளாஸ் அணிந்து இருந்தான். “அதீரனோட சாம்ராஜ்யம்” என முணுமுணுத்த அர்ஜுனனின் இதழ்கள் ஏளனமான புன்னகையை தான் சிந்தியது.
அந்த சாம்ராஜ்யம் பாரிய நிலப்பரப்பை உடைய தங்கத் தீவாகத் தான் திகழ்கின்றது. எந்த ஒரு நாடும் சொந்தம் கொண்டாட முடியாத அத்தீவை தனி சாம்ராஜ்யம் என்றுதான் கூறவேண்டும். காலம் காலமாக அங்கே பரம்பரை அரசாட்சி முறை தான் நிலவிக் கொண்டு இருக்கின்றது. மன்னன் அசுர வேந்தனின் இறப்பிற்குப் பின்னர் அவரின் மூத்த மகன்தான் தற்போது இந்த சாம்ராஜ்யத்தின் அரியாசனத்தை அலங்கரித்து இருக்கின்றான். ஆயுத உற்பத்தி நடக்கும் அங்கு ஏராளமான தங்க சுரங்கங்கள் நிரம்பியுள்ளன என்பதே அதன் சிறப்பாகும். அந்த வகையில் உலகின் சுவர்க்க தீவாக அது திகழ, அந்த மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை கைப்பற்ற பல உலக நாடுகளும் காலங்காலமாக போட்டி போட்டுக் கொண்டு முயன்றாலும் அது எல்லாம் வெறும் கனவாக மட்டுமே தான் இருக்கின்றது. காரணம் அந்த ராஜியத்தின் ஆட்சியாளர்களின் சிறப்பு. அதிலும் இப்போது அந்த அரியாசனத்தில் அமர்ந்து அதினாப்புர சாம்ராஜ்ஜியத்தை ஆளும் அதீரன்.
அந்த சினம் கொண்ட சிங்கத்தை மீறி அங்கே எந்த நபராளும் நுழைந்துவிட முடியாது. “அதீரன்” என்ற பெயரைக் கேட்டாலே அனைவரும் அஞ்சி நடுங்குவார்கள். வாணிப உலகில் கொடி கட்டி பறக்கும் அவனோ, தான் ஒன்றை செய்து விட வேண்டும் என எண்ணிவிட்டால் அதை நினைத்த மாத்திரத்திலேயே தன் விருப்பம் போலவே நடாத்தி முடித்து விடுவான். அவன் இந்த அதினாப்புர அரியணை ஏறி இந்த ஐந்து வருடங்களில் செய்துள்ள குற்றங்கள் ஏராளம், ஆனாலும் அவனை யாராலும் நெருங்க கூட முடியாது. அப்படி நெருங்க நினைப்பவர்களை அவன் நொடிப் பொழுத்திலேயே உருத் தெரியாமல் அழித்து விடுவான். அப்படிப்பட்ட அதீரனுக்கு இன்னும் ஒரு வாரத்தில் திருமணம். அதற்காகவே பல பிரமுகர்கள், உலகின் பணக்காரர்கள் எல்லாம் அங்கே வந்து கொண்டு இருக்கின்றனர்.

அந்த மதில் சுவரில் இருந்த "அதீரன்" எனும் வார்த்தையை உச்சரித்த படியே இருந்த அர்ஜுனனின் தோள் மீது கை வைத்தாள் நிவேதா. அர்ஜுனனோ திரும்பி அவளைப் பார்க்க, அவளோ "அண்ணா நம்ம கல்யாணத்துக்கு தானே வந்து இருக்கோம், இல்ல இப்படி நின்னு இந்த மதில் எல்லாம் வேடிக்கை பாக்கவா? நாழி ஆயிடுத்து வாங்கோ போலாம்" என்றபடி முன்னேற, அர்ஜுனனோ "ம்ம் வா போலாம்" என்றபடி நடக்கத் துவங்கியவன் அதரங்கள் "அதீரன் யுவர் டைம் ஸ்டார்ட் நவ்" என்று தான் கூறிக் கொண்டது.
முதல் நுழைவாயிலில் சோதனை முடிந்து இருவரும் அடுத்த நுழைவாயிலுக்கு அனுப்பப்பட்டனர். இவர்கள் இருவரும் உள்ளே நுழைய, அங்கு இருந்த சிவப்பு கம்பளத்தில் பல பிரமுகர்கள் அந்த மாளிகையை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்குமான திருமண அழைப்பிதழ்கள் உறுதிப்படுத்தப்பட்டே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
அதுவும் அந்த அழைப்பிதழானது தங்க எழுத்துக்களினால் தான் பொறிக்கப்பட்டு இருந்தன. நிவேதாவும் அவர்களின் அழைப்பிதழை கையில் எடுத்துக்கொண்டு போக, அதே நேரம் சோதனை செய்பவர்களோ அங்கு இருவரை உள்ளே செல்ல விடாமல் வழி மறித்துக் கொண்டு இருந்தனர்.

"சார் நாங்க ஜேனலிஸ்ட். சிக்ஸ் மன்தா ட்ரை பண்ணி தான் இங்க வரவே பர்மிஷன் வாங்கி இருக்கோம்" என்றாள் கழுத்தில் மீடியா என்ற அடையாள அட்டையுடன் நின்ற திவ்யா. ஐந்தடிக்கும் சற்று அதிகமான உயரம் கொண்ட மாநிறப் பாவை அவளோ, கருப்பு நிற ஜீன்ஸ் மற்றும் நீல நிற டீசட்டில் இருந்தாள். அங்கு கையில் துப்பாக்கியுடன் நின்ற காவலாளியோ "நோ மேம், உங்க கிட்ட ஒரு இன்விடேஷன் கார்ட் தான் இருக்கு, இத வச்சுக்கிட்டு ரெண்டு பேர எல்லாம் அலோ பண்ண முடியாது, எங்க டுயூட்டிய பார்க்க விடுங்க , பிளீஸ் கிளம்புங்க முதல்ல" என்க, சிவப்பு நிற ஷர்ட் மற்றும் நீல நிற ஜீன்ஸில், கையில் கேமரா சகிதம் நின்ற சிவாவோ, "ஒருத்தர் போனா எப்படி எங்க வேலைய பார்க்க முடியும்? இவங்க ரிப்போர்ட்டர் நான் கேமராமேன். நாங்க ரெண்டு பேரும் கட்டாயம் போகணும்.. பிளீஸ் எங்கள விடுங்க" என்றான்.
காவலாளியோ கையில் இருந்த துப்பாக்கியை வருடியபடி, "நீங்க ஒரு தடவ சொன்னா கேக்க மாட்டீங்க போலவே!” என்றவன் “மரியாதையா ஒருத்தர் மட்டும் உள்ள போறீங்களா? இல்ல....." என இழுக்க, சிவாவோ பயத்தில் எச்சிலை விழுங்கிக் கொண்டான். சிவாவை முறைத்த திவ்யாவோ "கொஞ்சம் உன் வாய மூடிட்டு இருக்க மாட்டியா? இவங்க அலோ பண்ணி இருக்கதே ரொம்ப பெரிய விஷயம், இதுல நீ அவங்களுக்கே ரூல்ஸ் வேற போடுறியா?" என்று பல்லைக் கடித்தபடி கூறியவள், அந்த காவலாளியிடம் திரும்பி "ப்ளீஸ் சார் ரெண்டு பேருக்கும் தான் அலோ பண்ணி இருக்காங்க, சம்யுக்தா மேடம்கு கூட இது பத்தி நல்லாவே தெரியும்" என்க, "இதுக்காக மேடம எல்லாம் கூப்பிடணுமா? இடத்தை காலி பண்ணுங்க முதல்ல" என்ற காவலாளியிடம் சிவா மற்றும் திவ்யா "ப்ளீஸ் சார் ப்ளீஸ்" என்று கெஞ்சி கொண்டு இருந்தனர்.

அந்நேரம் "என்ன ப்ராப்ளம் இங்க?" என்றபடி அங்கே வந்து நின்றான் மாறன். நீல நிற கோட் சூட் கையில் வாக்கி டாக்கி என நின்றவன், முகத்தில் இருந்த இறுக்கம் பார்ப்போரை சற்று மிரட்சி அடைய செய்வதாகவே இருந்தது. அவனோ வேக எட்டுகளுடன் அவர்கள் முன் வந்து நின்றவன் சிவா மற்றும் திவ்யாவை ஆராய்ச்சியாக பார்த்துவிட்டு "என்னாச்சு?" என்றான்.

காவலாளியோ குறிப்பிட்ட பத்திரிகை ஒன்றின் பெயரைக் கூறியவன் "அந்த பத்திரிகையில இருந்து வந்து இருக்க ஜேனலிஸ்ட். ஒரு இன்விடேஷன் கார்ட் தான் வச்சிருக்காங்க. ரெண்டு பேர் உள்ள போகணும்னு பர்மிஷன் கேக்குறாங்க" என்றான். மாறனோ "நோ நோ இன்விடேஷன் இல்லாம யாரையும் உள்ள அலோ பண்ண முடியாது" என்றான் கடினமான குரலில்.
திவ்யாவோ அவசரமாக, "சம்யுக்தா மேடம்கு தெரியும் சார், நாங்க ரெண்டு பேர் வரோம்னு, ஆனா ஒரு இன்விடேஷன் போதும்ன்னு சொன்னாங்க" என்க, நெற்றியை நீவிய மாறனோ , தன் கையில் இருந்த வாக்கி டாக்கியில் யாரிடமோ பேசிவிட்டு அவர்களை உள்ளே போகச் சொல்ல, சிவாவோ "அப்பாடா ஒரு வழியா உள்ள அனுப்புராங்களே! இந்த அரண்மனைக்குள்ள போறதுக்கு இவ்ளோ அக்கப்போறா?" என்றபடி உள்ளே போக, திவ்யாவோ "இது என்ன சாதாரண இடமா? அதீரன் சாரோட சாம்ராஜ்யம். அவரு பர்மிஷன் இல்லாம இங்க காத்து கூட நுழைய முடியாது" என்றாள்.
சிவாவோ "ஹா ஹா காத்து நுழைய முடியாத இடத்தில கூட மீடியா நுழையும் தெறிஞ்சிக்க" என்க, திவ்யாவோ அவனை நக்கலாக பார்த்தபடி, "சுத்தி பார்த்தல எல்லார் கைலயும் AK 47, போதாதத்துக்கு அங்க , அங்க அழகுக்கு பூந்தொட்டி வக்கிறதுக்கு பதிலா பெரிய பெரிய பீரங்கி எல்லாம் வச்சி இருக்காங்க, உன்னோட பேச்சு மட்டும் அவங்களுக்கு கேட்டுச்சினு வையேன்! உன்னை நரகத்துக்கு அனுப்பிடுவாங்க..... போயி விதவிதமா போட்டோ எடுனு" என்றாள். வாயில் கைவைத்த சிவாவோ உள்ளுக்குள் "என்னைப் போட்டுத்தள்ளாம விட மாட்டா போல," என எண்ணிக் கொண்டவன் "போலாம் மேடம்" என்றான் பாவமாக முகத்தை வைத்தபடி.

அங்கிருந்த காவலாளியிடம் நிவேதா மற்றும் அர்ஜுனன் இன்விடேஷன் கார்டை நீட்ட, மாறனோ அர்ஜுனனை ஒரு சந்தேகப் பார்வை பார்த்தபடி அவர்கள் முன்னால் வந்து நின்றவன், ஒற்றை புருவம் உயர்த்தி "நீங்க...." என ஆரம்பிக்க, அதே நேரம் அங்கே ஒரு ஹெலிகப்டர் வந்து சேரவும் நேரம் சரியாக இருந்தது. அர்ஜுனனோ சற்று நக்கலான பார்வையை மாறன் மீது செலுத்த, அவனை ஒரு அழுத்தமான பார்வை பார்த்த மாறனோ ஹெலிகப்டரை நோக்கி சென்றான்.

தரை இறங்கிய அந்த ஹெலிகப்டரில் இருந்து இறங்கினார் பிரபல நடன கலைஞர் அபிராமி. அவருடன் கூடவே அவரது ஜூனியர் திலோத்தமா மற்றும் அவர்களின் (பாடிகாட்) மெய்க்காப்பாளன் கண்ணனும் இருந்தனர். மாறனோ விரைவாக அவ்விடம் சென்று அபிராமியிடம் "வெல்கம் மேம்" என்க "ம்ம்" என்றபடி புன்னகைத்தவர் "மிஸ் சம்யுக்தா" என்க, மாறனோ "இதோ வந்துட்டு இருக்காங்க" என்றவன் "உள்ள வாங்க மேம்" என்றான் மரியாதை நிமித்தமாக, அபிராமியோ "இல்ல, மேடம் வந்தாங்கன்னா நான் சொல்லிட்டு கிளம்புவேன்" என்றபடி இருக்க, அதே நேரம் அங்கே வந்தாள் சம்யுக்தா.
கருப்பு உடையில் கையில் பெரிய துப்பாக்கியுடன் நால்வர் இருக்க, இளஞ்சிவப்பு நிற புடவையில் பெரிய தோடுகள் மட்டும் அணிந்து இருந்தவளின் பார்வை நேராக இருந்தது. அவளோ கர்வமான நடையுடன் முன்னால் நடந்து வர, அந்த காவலாளிகள் அவளுக்குப் பின்னால் நடந்து வந்தனர்.

சம்யுக்தாவோ நேராக அபிராமியின் குழுவின் முன்னால் வந்து நிற்க, மாறனோ சம்யுக்தாவின் பின்னால் வந்து நின்று கொண்டான். சம்யுக்தாவோ எந்த ஒரு முக உணர்வையும் காட்டாமல் "வெல்கம் டு அதினாபுரம்” என்றவள் “ ஆனா இந்த டைம்ல நீங்க எதுக்கு வந்து கஷ்டப்படுறீங்க?" என்க, அபிராமியோ "தேங்ஸ் சம்யுக்தா தட்ஸ் ஓகே, என்னோட பேட்லக், இந்த டைம்ல இப்படி ஆயிடுச்சு, பட் ஷீ இஸ் மை ஜூனியர் திலோத்தமா, பெஸ்ட் டான்ஸர், இவ கண்டிப்பா நீங்க எதிர்பாத்த அளவு பர்போர்ம் பண்ணுவா" என்றபடி திலோத்தமாவை காட்ட, அவளை மேலிருந்து கீழ் பார்த்த சம்யுவோ, "நாங்களும் அதத்தான் எதிர்பார்க்குறோம்" என்றாள். அதன் பின் அபிராமி புறப்பட்டு விட, மாறனிடம் திரும்பிய சம்யுக்தாவோ “கெஸ்ட் எல்லாரும் வர ஆரம்பிச்சிட்டாங்க , யாரையும் நம்ப முடியாது , செக்யூரூட்டி டைட் பண்ணு” என்றவள், அங்கிருந்து வேகமாக மீட்டிங் நடக்கும் அறையை நோக்கி சென்றாள்.

மாறனோ திலோத்தமாவிடம் "இன்விடேஷன் கொண்டு வந்து இருக்கீங்களா?" என்க, அவளோ திரும்பி கண்ணனைப் பார்க்க, அவனோ இரண்டு அழைப்பிதழ்களை எடுத்துக்காட்ட மாறனும் "நீங்க போலாம்" என்றவன் வாக்கிடாக்கியில் "செக்யூரூட்டி டைட் பண்ணுங்க" என்றபடி போக, திலோத்தமாவோ கண்ணனிடம் "போகலாம்" என்றபடி செல்ல கண்ணனும் அவளின் பின்னாலேயே போனான்.

சிவப்பு நிற புடவையில் தங்க நிறம் சேர்ந்து மின்னிய முடியை விரித்து ஐந்தரை அடி உயரத்தில் நேரான பார்வையில் மாளிகையை நோக்கி நடந்து சென்ற திலோத்தமாவை அந்த மாளிகையின் மேல் மாடி அறையில் இருந்து கண்ணாடி வழியாக பார்த்துக் கொண்டிருந்த அந்த உருவமோ கேலிச் சிரிப்பு ஒன்றை உதிர்த்தபடி "மிஷன் ஸ்டார்ட் நவ்" எனக்கூறி கண்ணடித்துக் கொண்டது. திலோத்தமாவின் பின்னால் கருப்பு பேன்ட் மற்றும் ஜிம் செய்து முறுக்கேறிய உடலுக்கு இறுகக்கமான கருப்பு ஷர்ட் அணிந்து, தென்னை மரம் போல நடந்து சென்ற கண்ணனின் போனுக்கு "ரீச்ட்" என்று குறுஞ்செய்தி வந்து சேர, அவனது இதழ்களோ வெற்றிப் புன்னகையை சிந்திக்கொண்டது.

அதேநேரம் அந்த அறையில் இருந்த ஐஸ்வர்யாவோ அந்தப் பெரிய கட்டிலில் கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்து இருந்தாள். படுக்கை அறை என்று கூறவே முடியாத அளவு அத்தனை விசாலமாக காட்சியளித்தது அவ்வறை. ஐஸ்வர்யாவை சுற்றி நின்ற பணிப்பெண்கள் அவளைப் பார்த்தபடி இருக்க, அவளோ "எனக்கு ரெட் கலர்னா சுத்தமா பிடிக்காது, அந்த கலர்ல லெஹெங்கா ரெடி பண்ணி இருக்காங்க, அதுவும் கல்யாணத்துக்கு, பார்த்தாலே எரிச்சலா இருக்கு, இத முதல்ல மாத்தனும்" என புலம்பியவள் ஒருத்தியின் கையில் அந்த லெஹெங்காவை திணித்து விட்டு, "மொதல்ல இந்த கலர் வேணாம்னு சொன்னேனு போய் சொல்லு, அப்புறம் எனக்கு பிடிச்ச பிளாக் கலர்ல கொண்டு வர சொல்லு, என்னோட வைட் ஸ்கின்னுக்கு அது தான் செம்மையா இருக்கும்" என்க, பணிப் பெண்களில் ஒருத்தியோ "கல்யாணத்துக்கு கருப்பு கலரா?" என மற்றவளிடம் முகத்தை சுளிக்க, அவளோ "நீ வேற இத சொல்ற?, இந்த பொண்ணுக்கு விருப்பமில்லாத கல்யாணத்துக்கே இந்த அலப்பறை பண்றாளே! ஒரு வேளை புடிச்ச கல்யாணமா இருந்தா இன்னும் என்ன எல்லாம் பண்ணுவாளோ!" என்றவளிடம் "ஒருவேளை லூசா இருப்பாளோ?" என மற்றையவள் வினவ, அவளோ, "எனக்கு ஆரம்பத்துல இருந்தே அதே டவுட்டுதான், நம்ம ராஜ்யத்துக்கு கெத்து ராணி வரலனாலும் கூட பரவாயில்லை, ஆனா இப்படி லூசு ராணி வர போறாளேனு தான் வருத்தமா இருக்கு" என்றாள்.
 
அ த்தியாயம் 2

அந்த மாளிகைக்கு இடதுபுறமாக அமையப் பெற்று இருந்தது அந்தக் கட்டிடம். அவ்விடம் ஒரு சிறிய அரசசபை போன்று தான் காணப்பட்டது. மிகப்பெரிய மேசையை சுற்றி கதிரைகள் காணப்பட அங்கே அதீரனுக்கு மட்டுமே பெரிய அரியாசனம் காணப்பட்டது. தங்கத்தால் அமைக்கப்பட்ட அந்த அரியாசனத்தில் வாளேந்திய சிங்கங்கள் செதுக்களாக அதை மேலும் அலங்கரித்தன. மங்கலான வெளிச்சத்தில் காணப்பட்ட அங்கே இராஜ்ஜியத்தின் பிரதான நபர்கள் தான் இருந்தனர்.
சம்யுக்தா, மாறன் உட்பட பலரும் அங்கே காத்திருக்க அவர்களின் காத்திருப்பு நாயகனான அதீரன் அங்கே வந்தான். கருப்பு நிற ஆடை அணிந்து கைகளில் துப்பாக்கி சகிதம் 10 காவலாளிகளின் முன்னால் கருப்பு நிற கோட் சூட் சகிதம் ஆறடிக்கும் அதிகமான உயரத்தில் இருந்தவனோ கண்களின் உணர்வை மறைக்கும் வகையில் கருப்பு கண்ணாடி அணிந்து இருந்தான். அடர்ந்த சிகையும் முகத்தை மறைத்து வளர்ந்து இருக்கும் தாடியையும் தாண்டி அவன் முகம் இறுக்கத்தை தெளிவாக எடுத்துரைத்தது. கம்பீரமான நடையில் பலரும் வேட்டையாட நினைத்தாலும் தனியாக நின்று வேட்டையாடும் சினம் கொண்ட சிங்கமான அவன் நடந்து வரும் தோற்றத்திலேயே கூறிவிடலாம், இந்த அதினாபுர ராஜ்யத்தின் அரியாசனத்தை அலங்கரிக்கும் தகுதி அவனைத் தவிர யாருக்கும் நிச்சயமாக இருக்க முடியாது என்று.

அதீரன் அறையை நோக்கி நடந்து வர, தூரமாக திவ்யாவுடன் நின்று இருந்த சிவாவோ அவனை வளைத்து, வளைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்தான். காவலாளிகள் அறையின் வாசலிலேயே நிற்க, உள்ளே நுழைந்த அதீரனை கண்டு அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்றனர். அங்கிருந்த அனைவரையும் அழுத்தமான பார்வை பார்த்தபடி, வந்து அரியாசனத்தில் கம்பீரமாக அமர்ந்தான் அதீரன். கண்ணாடியைக் கழற்றி மேசையில் வைத்தவன் "ம்ம்" என்க அனைவரும் தமக்குரிய ஆசனங்களில் அமர்ந்தனர்.

அதீரனின் அரியாசனத்துக்கு பக்கத்தில் இருந்த கதிரையில் அமர்ந்து இருந்தாள் சம்யுக்தா. அக்கதிரையின் அதிகாரமோ பிரதம மந்திரி போன்றது தான். அப்பதவியின் நபருக்குத் தெரியாமல் இந்த ராஜ்யத்தில் அணு கூட அசைய முடியாது. அங்கு நடக்கும் எந்த ஒரு விடயமும் அந்த பதவியில் இருக்கும் நபருக்கு தெரியாமல் இருக்காது. அப்படிப்பட்ட பதவியை வகிக்க வேண்டியது சம்யுக்தா அல்ல, அதீரனின் ஒன்றி பிறந்த சகோதரன் ராகுல் தான். ஆனால் அவனுக்கு இந்த ராஜ்யம் அரியாசனம் என்று எல்லாவற்றை காட்டிலும் சுதந்திரம் தான் மிக முக்கியமாக இருந்தது. அதனால் தான் பதின் வயதிலேயே அமெரிக்கா சென்று மருத்துவம் படித்து அவனது விருப்பம் போல அந்த நாட்டில் வாழுகின்றான். எனினும் அவ்வப்போது ராஜ்யத்துக்கு வந்து அண்ணன் அதீரனைப் பார்த்து தான் விட்டுச் செல்வான்.

அதீரனோ அங்கிருக்கும் அனைவர் மீது ஒரு அர்த்தம் பொதிந்த பார்வையை செலுத்தியபடி "சொல்லுங்க" என்க, ஒருவனோ "பாஸ் நம்ம இராச்சியத்துல மினிஸ்டர் குருமூர்த்தி ஆளுங்க நுழைய ப்ளான் பண்றதா இன்பர்மேஷன் வந்து இருக்கு, நம்ம கார்ட்ஸ் கூட இன்னைக்கு காலைல ஒரு ஷிப்ப பிடிச்சி இருக்காங்க" என்றான்.
அதீரனும் "ஹாஹாங்" என்றவன் திரும்பி, சம்யுக்தாவிடம் "என்ன சம்யுக்தா?" என்க, அவளோ அதுவரை எதையோ யோசித்துக் கொண்டிருந்தவள் அவன் கேள்வியில் அவசரமாக நிமிர்ந்து "ஆமா பாஸ் நாங்க பிடிச்சிட்டோம்" என்றாள்.
இன்னொருவனோ "ஆனா ஏதோ பெரிய பிளான் போட்டு இருக்கான் அந்த குருமூர்த்தி, அவன் பொண்ண நம்ம கிட்ட இருந்து காப்பாத்தியே தீருவேன்னு இன்டர்வியூ கொடுத்து இருக்கான்" என்க, தாடியை நீவிய அதீரனோ "இன்ட்ரஸ்டிங், குரு மூர்த்தி கூட கொஞ்சம் புத்திசாலியா தான் இருக்கான், நமக்கும் இனிமேல்தான் என்டர்டைமென்ட்" என்றவனை அனைவரும் விசித்திரமாக தான் பார்த்தனர்.
இன்னொருவனோ "ஏதோ சீக்ரட் டீம் ஏற்பாடு பண்ணியிருக்காங்க, இன்ஃபர்மேஷன் வந்து இருக்கு" என்க, அதீரனும் "இன்ட்ரஸ்டட் ,நாமலும் எத்தனை நாளுக்குத்தான் ஆடு, நரிங்க கூட எல்லாம் சண்டை போடுறது, நம்ம தகுதிக்கு ஏத்த மாதிரி சிங்கங்க கூட சண்டை போட்டா தான் ஆட்டம் சூடு பிடிக்கும்" என்றவன், சம்யுக்தாவின் புறம் திரும்பி "ஐ அம் அ கரெக்ட்?" என்க, அதிர்ந்தவளோ சட்டென சுதாகரித்த படி "நம்மள மீறி இங்க காலை வைக்க ஒருத்தன் பிறக்கனும் பாஸ்" என்றவளைப் பார்த்து நக்கலாக புன்னகைத்த அதீரனோ "பொறந்துட்டானே!" என்க, சம்யுக்தாவிற்கோ நெஞ்சில் நீர் வற்றிப் போன உணர்வு தான்.

அதீரனோ கண் ஜாடை காட்ட ஒருவனைப் பிடித்து இழுத்து வந்து முன்னால் நிறுத்தினான் மாறன். அவனை கண்ட சம்யுக்தாவின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்துக் கொள்ளவே செய்தது. அரியாசனத்தில் இருந்து எழுந்த அதீரனோ அவன் முன்னால் வந்து நின்று, அவன் அடிப்பட்ட முகத்தை அப்படியும் இப்படியுமாக திருப்பிப் பார்த்துவிட்டு "ச்சே ச்சே சேதாரம் ரொம்ப அதிகம் போல" என்றபடி, தள்ளிச் சென்றவன் "இவன் தான் சம்யுக்தா நம்ம ராஜ்யத்துக்குள்ள காலை வைக்க பிறந்து வந்து இருக்கவன்" என்க, அவளோ எச்சிலை விழுங்கிக் கொண்டாள். அவள் முக மாற்றங்களை அவதானித்த மாறனோ "சம்யுக்தா மேடம்கு என்ன ஆச்சு? ஒரு மாதிரி இருக்காங்களே!" எனக் கூறிக் கொண்டான்.

அதீரனோ தொடர்ந்து "இருந்தாலும் இவன் தைரியம் எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு, இத்தனை செக்யூரூட்டி தாண்டி நம்ம ராஜ்யத்துல நுழைஞ்சி இருக்கான்...... ஐ லைக் யூ சோ சோ மச்" என்றவன் திரும்பி காவலாளியிடம் கண்ணை காட்ட, அவனோ துப்பாக்கியை எடுத்து அதீரனிடம் நீட்டினான்.

அதைக்கண்ட பிடிபட்டவன் "வேணாம் என்ன விட்டுடு, நான் உண்மையை சொல்லிட்றேன். குருமூர்த்தி தான் என்னை அனுப்பி வச்சான், என்னை எதுவும் பண்ணிடாத, விட்டுடு" என கெஞ்ச ஆரம்பிக்க, துப்பாக்கியிலிருந்த தூசியை தட்டிய அதீரனோ "இப்போ தானே உன்னை தைரியசாலினு பாராட்டினேன் , அதுக்குள்ள இப்படி அசிங்கமா கெஞ்சுறியே வெரி பேட்.. நீ என்னை ஏமாத்திட்ட" என்றவன், அவனை நோக்கி துப்பாக்கியை நீட்டி "ஐ ஹேட் சீட்டர்ஸ்.. ஐ ஹேட் யூ " என கூறியபடி, துப்பாக்கியின் குண்டுகளை அவன் மார்பில் தாராளமாக இறக்க, அதைப் பார்த்து இருந்த சம்யுவுக்கோ வியர்த்து வழிய ஆரம்பித்தது.

அதே நேரம் வெளியே இருந்த சிவா மற்றும் திவ்யாவுக்கும் உள்ளே இருந்து துப்பாக்கிச் சத்தம் கேட்க, சிவாவோ எச்சிலை விழுங்கியபடி "திவி இந்த இடம் வாஸ்து சரியில்ல, வா அந்தப் பக்கம் போயி போட்டோ எடுக்கலாம்" என திவ்யாவை இழுத்துக் கொண்டு போக, அவளோ "ச்சே உன்னை போய் போட்டோ எடுக்க கூட்டிட்டு வந்தேன் பாரு" என தலையில் அடித்து கொண்டு போனாள்.
அதேசமயம் அவர்கள் இருந்த இடத்தில் சற்று மறைவாக சுவருக்கு மறுபக்கம் இருந்த அர்ஜுனனும் துப்பாக்கிச் சத்தத்தில் விழி மூடித் திறக்க, அவன் அருகில் நின்ற நிவேதாவோ "அர்ஜு நம்மளால முடியுமா?" என்க, அவனோ அரசவை அறையில் இருந்து வெளியே சென்ற நபரைப் பார்த்து புன்னகைத்தபடி "முடிச்சுடலாம்" என்றான்.
நிவேதாவும் கை கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தவள் "ஓ மைகாட் டைம் மூணு ஆயிடுச்சு, ஐஸ்வர்யா நமளுக்காக காத்துட்டு இருப்பாங்க" என்க, அவனும் "போலாம், எப்படியாச்சும் இன்னைக்கே அவள தனியா மீட் பண்ணி, நாம எதுக்காக இங்கே வந்து இருக்கோம்ன மேட்டர சொல்லிடணும்" என்றபடி அவளுடன் புறப்பட்டான் ஐஸ்வர்யாவின் அறையை நோக்கி.

வெளியே செல்லும் சம்யுவை நிறுத்திய அதீரனோ "டான்ஸர் வந்துட்டாங்களா?" என்க, அவளோ "ஆமா பாஸ் வந்துட்டாங்க" என்றாள். அவனும் "அப்போ நாளையில இருந்து ஸ்டார்ட் பண்ணிடுங்க" என்றவன் விறுவிறுவேன போக, அவன் முதுகையை வெறித்துப் பார்த்தவளோ, அங்கே காவலாளிகளிடம் வேலைகளை கூறியபடி வந்த மாறனைப் பார்த்து சொடகிட்டு "பேசணும்" என்றாள்.
அவள் பின்னால் அவனும் வந்து சேர, அங்கிருந்த நாற்காலியில் கால் மீது கால் போட்டு அமர்ந்தவளோ, அவனை மேலிருந்து கீழ் ஒரு பார்வைப் பார்த்து விட்டு, "நீ என்கிட்ட அசிஸ்டென்டா இருக்கியா? இல்ல அதீரன் சார்கிட்டயா?" என்றாள் பற்களைக் கடித்தபடி. அவனோ அவளை புரியாமல் பார்த்தபடி "உங்ககிட்ட தான் மேடம்" என்றான்.

அவளோ "அப்போ எதுக்கு என்கிட்ட சொல்லாம போய் பாஸ் கிட்ட சொன்ன?" என்க, அவனோ "மேடம் நீங்க எத பத்தி பேசுறீங்க? எனக்கு புரியல?" என்றவனை பார்த்து கோபமாக கத்திரையை காலால் உதைத்தபடி எழுந்தவளோ, அவன் முகத்திற்கு நேராக விரலை நீட்டி, "இங்க பாரு நீ எனக்கு கீழ தான் இருக்கணும், எனக்கு தெரியாம பாஸ் காதுக்கு உன் மூலமா மறுபடியும் ஏதாவது மேட்டர் போச்சு.... உன் மூச்சை நிறுத்திடுவேன்" என எச்சரித்தவள் கோபமாக அங்கிருந்து செல்ல, மாறனுக்கு மூன்றாவது முறையாக சம்யுக்தாவின் வித்தியாசமான நடத்தையில் சந்தேகத்தை உணர்ந்தான். அவளின் வித்தியாசங்களால் அவனுக்கு தோன்றியது ஒன்று மட்டும்தான் சம்யுக்தா அதீரனுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்து விட்டாள். அதை சீக்கிரமே கண்டு பிடித்து அதீரனிடம் கூற வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டான்.

மீட்டிங் முடிந்து தனது அறைக்குள் வந்த அதீரனுக்கு போன் வர, அதை எடுத்து காதில் வைத்தவன் "ம்ம் சொல்லு" என்றான். மறுபக்கம் இருந்த ராகுல் "கங்கிராட்ஸ் அண்ணா" என்றான் உற்சாகமான குரலில். அதீரனோ "ம்ம் வெறும் வாழ்த்தா?" என்க, ராகுலோ "என்னோட ஒரே அண்ணா.... அதுவும் அதினாப்புர சாம்ராஜ்யத்தோட அரசன் கல்யாணத்துக்கு வெறும் வாழ்த்து மட்டும் சொல்லுவேனா? நேர்ல வந்து பிளஸ் பண்றேன்" என்றான். அதீரனோ "எப்போ கிளம்புற?" என்க, ராகுலோ, "இன்னும் டூ டேஸ்ல வந்துடுவேன்" என்றவன் "ஏதாவது ஸ்பெஷலா ரெடி பண்ணு இந்த வாட்டி கொஞ்சம் அதிகமாவே அங்க ஸ்டே பண்ணுவேன்" என்றான். சிரித்த அதீரனோ "கண்டிப்பா இந்த வாட்டி ஸ்பெஷல் என்டர்டைமென்ட் இருக்கு" என பதில் அளிக்க, மறுபக்கம் சிரித்த ராகுலோ "ஐ க்நொவ் அதீரனோட ராஜ்ஜியத்துல என்டர்டைமென்ட்கு பஞ்சம் இருக்காதுனு எனக்கு நல்லாவே தெரியும்" என கூறிவிட்டு போனை வைக்க, அங்கிருந்த கதிரையில் சாய்ந்து அமர்ந்து கண்மூடிய அதீரனுக்கு திலோத்தமாவின் புன்னகை தோன்ற, "தில்லு தில்லு ஆட்டத்துக்கு ரெடியா இரு" என ஏளன புன்னகையுடன் கூறிக் கொண்டான். அதே நேரம் அறையின் கட்டிலில் அமர்ந்து இருந்த திலோத்தமாவின் இதழகளோ, “அதீரா உன்னோட கதைய முடிக்காம இந்த அதினாப்புரத்த விட்டு போக மாட்டா இந்த திலோத்தமா” என்று தான் கூறியது
 
அத்தியாயம் 3

அந்த மாளிகையின் வலது புறமாக அமைந்து இருந்தது அந்த சிறிய அளவிலான வெள்ளை மாளிகை. அங்கே வரும் விருந்தினர்களுக்கான பிரத்தியோகமான மாளிகை தான் அது. அங்கே தனித்தனி அறைகள் காணப்பட்டிருந்தது. அங்கிருந்த ஒரு அறையில் தான் கட்டிலில் படுத்து இருந்தாள் திலோத்தமா. அவளது அறை கதவு தட்டப்பட அவளுக்கு ஒப்பனை செய்ய அழைத்து வரப்பட்ட பெண் சென்று கதவை திறந்தாள். திலோவோ "யாரு?" என்க, அப்பெண்ணோ "கண்ணன் தான் மேம்" என்றாள். திலோத்தமாவோ "வர சொல்லு", என கூறியபடி எழுந்து அமர்ந்தாள். அவளிடம் வந்த கண்ணனோ "மேடம் நாளைக்கு உங்க ப்ரோக்ராம் ஸ்டார்ட்" என்க, அவளும் "ஓகே நைட் கொஞ்சம் ப்ராக்டிஸ் பண்ணனும் ஏற்பாடு செய்ங்க" என்றவள் ஏதோ கூற எத்தணிக்க, கண்ணனின் போன் அலறியது. அவனோ கட் செய்துவிட்டு "சொல்லுங்க மேடம்" என்க, மறுபடியும் போன் அலற, திலோத்தமாவோ "நீங்க போங்க ஏதும் தேவைனா சொல்றேன்" என்க, அவனும் வெளியே வந்து போனை அட்டென்ட் செய்தவன், "எதுக்கு வேலை டைம்ல கால் பண்ணி டிஸ்டப் பண்ணுற?" என்றான் எரிச்சலாக, மறுபக்கம் இருந்தது வேறு யாருமல்ல அவன் அத்தை பெத்த ரத்தினம் ராதாவே தான்.
அவளோ "எதுக்கு மாமா பொசுக்குன்னு கோவிச்சுக்குற? எப்படி இருக்க? சாப்பிட்டியானு கேட்கத்தானே கால் பண்னேன்" என குழைவாக பேச, அவனோ பல்லைக் கடித்தபடி "நீ கேட்டு தான் நான் கொட்டிக்கணும்னு அவசியம் இல்ல, முதல்ல போன வைடி" என்றபடி கட் பண்ண எத்தணிக்க, அவளோ "மாமா மாமா வேணாம் கட் பண்ணிடாதே!" என கத்த, கண்ணனோ "சொல்லித்தொலை" என்றான்.
ராதாவோ "என் செல்ல மாமா, ஆமா எப்போ நீ ஊருக்கு வர? உன்னைப் பாக்காம இருக்கவே முடியல தெரியுமா? எப்பவுமே எனக்கு உங்க நெனப்பா தான் இருக்கு , சாப்பிட புடிக்கல , தூங்க புடிக்கல , யேன் எனக்கு புடிச்ச சீரியல் கூட பார்க்க புடிக்கல , உனக்கும் அப்படி தானே இருக்கு" என மூச்சு விடாமல் பேச, கண்ணனோ எரிச்சலாக இமை மூடித் திறந்தவன், "மூடிட்டு போன வைடி" என்றபடி போனை கட் செய்து விட்டு திரும்ப, அங்கே நின்றவர்களைக் கண்டவன் புருவம் சுருக்கிப் பார்த்தான்.

அங்கே நின்று இருந்தது வேறுயாருமல்ல சிவா மற்றும் திவ்யாவே தான். சிவாவோ "என்ன பாஸ் லவ்வர் மேல செம கோவத்துல இருக்கீங்க போல?” என்றவன், “ இந்த பொண்ணுங்களே இப்படித் தான் சார் , நம்ம லவ் பண்ணிட்டா போதும் அதுக்கப்புறம் நம்மல மனுஷனா கூட மதிக்க மாட்டாங்க" என்க, திவ்யாவோ "உன்னை போட்டோ எடுக்க தானே கூட்டிட்டு வந்தேன்" என்றவளைப் பார்த்த, சிவாவோ "என்னால ஓவர்டைம் எல்லாம் பார்க்க முடியாது, உனக்கு தேவைனா நீ போ" என்க, அவளும் அவனை முறைத்துவிட்டு அங்கிருந்து சென்றாள்.

கண்ணனின் புறம் திரும்பிய சிவாவோ "நீங்க டான்ஸர் கூட வந்தவரு தானே?" என கேட்க, கண்ணனும் "ஆமா" என்றான். சிவாவோ "உங்க மேடம் எப்படி பர்போர்ம் பண்ணுவாங்க, நல்லா ஆடுவாங்களா?" என்க, கண்ணனோ "நாளைக்கு பார்க்கத்தானே போறீங்க" என்றான். சிவாவோ "அதீரன் சார் கூட மேடம் டான்ஸ பார்க்க ரொம்ப ஆர்வமா இருக்காரு போல" என்றபடி இருக்க, அதே நேரம் அங்கே வந்தான் மாறன்.

இவர்களிடம் வந்தவன் சிவாவை பார்த்து "நீங்க தானே மீடியால இருந்து வந்திருக்கது?" என்க, அவனோ "ஆமா ஆமா நான் தான் கேமராமேன்" என்றவனை பார்த்து "நீங்க அலோ இல்லாத இடங்களுக்கு எல்லாம் போட்டோஸ் எடுக்க போனதா கம்ப்ளைன்ட் வந்து இருக்கு, இனிமே இது மாதிரி நடந்தா உங்களுக்கு நல்லது இல்ல, உங்களுக்கு இந்த இடத்துக்கு வர பர்மிஷன் தந்து இருக்கதே ரொம்ப பெரிய விஷயம்" என்று மிரட்டும் தொனியில் கூற, சிவாவோ மிரண்ட படி மாறனைப் பார்த்தவன், "நோ நோ சார் யாரோ தப்பான தகவல் தந்து இருக்காங்க" என அவசரமாக கூற, மாறனோ "நான் சொன்னது புரியலன்னா விளைவு மோசமாயிடும்” என்க, சிவாவோ "நோ சார்" என்றவன், "அப்போ நான் கிளம்பவா?" என்க, மாறனும் "ம்ம்" என்றான். சிவாவோ "விட்டா போதும்டா சாமி" என்றபடி அங்கிருந்து போக ஆரம்பித்தான்.

கண்ணனின் புறம் திரும்பிய மாறனோ "உங்க மேடத்தோட பிராக்டிஸ் பண்ண ரூம் ரெடி பண்ணியாச்சு, ஸ்டேஜ் பின்னாடி தான் ரூம் இருக்கு, உங்களுக்கு தேவைனா ஸ்டேஜ கூட யூஸ் பண்ணிக்கலாம்" என்க, கண்ணனோ "தேங்ஸ் சார்" என்றான். அதேநேரம் நிவேதா மற்றும் அர்ஜுனனும் அங்கே ஒரு ரூமை தேடி அலைந்து கொண்டிருந்தனர். நிவேதாவோ "அர்ஜு 63 தானா? நோக்கு சரியா தெரியுமா?" என்க, அர்ஜுனனும் "அது தாண்டி..... கன்பார்ம் இந்த ஃப்ளோர்ல தான் இருக்கும்னு நினைக்கிறேன். வா இந்தப் பக்கம் போகலாம்" என்றபடி வர, அங்கே கண்ணனைக் கண்ட நிவேதாவோ "க....." என துவங்க, அர்ஜுனனோ "நோ நிவி, அந்த செக்யூரிட்டி அங்க நிற்கிறான். வா போலாம் அவன் கண்ல படக்கூடாது" என்றபடி அவளை இழுத்துக் கொண்டு அவசரமாக அங்கிருந்து போக, முயலும் முன்னரே அவர்களின் துரதிஷ்டவசமாக மாறனின் பார்வை அவர்கள் மீது படிந்து விட்டது.

கண்ணனோ அவர்களை கண்டு யோசனையாக நெற்றியை நீவ, அர்ஜுனனோ வேறு வழியில்லாமல் நிவேதாவை அழைத்துக் கொண்டு அவர்களை நோக்கி வந்தான். மாறனோ என்ன என்பது போல அவர்கள் இருவரையும் பார்க்க, நிவேதாவோ அவசரமாக "எங்க ரூம மிஸ் பண்ணிட்டோம்" என்றாள்.
மாறனோ "ரூம் நம்பர்" என்க, அர்ஜுனனோ "24,25" என்றான். மாறனோ அவன்மீது ஒரு அழுத்தமான பார்வையை செலுத்தியபடி "அது கீழே பிளார்ல இருக்கும் வாங்க" என்றபடி அழைக்க, வேறு வழியில்லாமல் அவர்களும் அவனுடன் சென்றனர். போகும்போது அர்ஜுனன் கண்ணன் மீது அர்த்தம் பொதிந்த பார்வையை வீச, அவனும் சரி என்பது போல இமை மூடித் திறந்தான்.
நிவேதா மற்றும் அர்ஜுனனுடன் அவர்களின் அறை வரை வந்த மாறனோ, அவர்கள் இருவரும் அறைக்குள் சென்ற பின்னர் அங்கிருந்த ஒரு காவலாளியிடம் "இவங்கள கொஞ்சம் வாட்ச் பண்ணு" என கூறிவிட்டே அங்கிருந்து சென்றான். அறைக்குள் சென்ற பின்னர் தான் நிவேதாவால் மூச்சு விடவே முடிந்தது. அர்ஜுனன் அவளுக்கு போனில் அழைக்க, அவசரமாக எடுத்து காதில் வைத்தவள் "அர்ஜு அவன் போயிட்டானா? இப்போ என்ன பண்றது?" என்க, அர்ஜுனனோ "அவனுக்கு நம்ம மேல டவுட் வந்துடுச்சு நிவே, இப்போ நாம மீட் பண்ண வேணாம், நைட் பாத்துக்கலாம்" என கூறிவிட்டு போனை வைத்தவனுக்கு தாம் நினைக்கும் காரியம் நடக்குமா என ஒரு சிறு சந்தேகம் தோன்றவே செய்தது.

அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே இருந்தாள் சம்யுக்தா. அவளுக்கோ யோசித்து யோசித்து தலைவலி வந்தது மட்டுமே மிச்சமாக இருக்க, போனை எடுத்துப் பார்த்தவள் அதில் வந்த குறுஞ்செய்தியை கண்டு மேலும் எரிச்சலாக போனை தூக்கி கட்டிலின் ஒரு புறம் வீசியவள், கட்டிலின் மீது தொப்பென்று அமர்ந்தாள்.

"ச்சே மாறனுக்கு நம்ம மேல ஏதோ டவுட் வந்து இருக்கு, அதனாலதான் நம்ம கிட்ட சொல்லாம அதீரன் கிட்ட நேராவே சொல்லி இருக்கான். மாறனுக்கு வந்த சந்தேகம் அதீரனுக்கு மட்டும் வந்தா சம்யு முதல் டெட்பாடி நீதான், இத பத்தி அவங்க கிட்ட இப்போவே சொல்லலாம்னு பாத்தா எல்லா இடத்துலையும் டிஸ்டபன்ஸ்" என்றவள், தனது அவிழ்ந்து இருந்த முடியை தூக்கி கொண்டை இட்டுவிட்டு "இன்னைக்கு நைட் இதப்பத்தி எப்படியும் பேசிடனும், இல்லன்னா மாட்டிக்குவோம்" எனக் கூறிக் கொண்டாள்.

வெள்ளை நிற குர்த்தி அணிந்து போனை பார்த்தபடி தேநீர் அருந்திக்கொண்டு இருந்தவனின் கை விரலில் இருந்த வைர மோதிரத்தையே பக்கத்து விருந்தினர் மாளிகையின் அருகில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்த உருவம், " இந்த ரிங் மட்டும் நமக்கு கிடைச்சா போதும் அதினாப்புர சாம்ராஜ்ஜியத்தையே மாத்தி அமச்சிடலாம். பாதி ஆத்த கடந்துட்டா மீதிய ஈசியா கடந்துடலாம்" என அந்த உருவம் கூறிக் கொண்டு இருக்க, அந்த உருவம் நின்ற திசையில் சட்டென அதீரன் திரும்பிப் பார்க்க, அந்த உருவம் சட்டென திரைக்கு பின்னால் மறைந்து கொண்டது. ஏளனமாக இதழ்களை வளைத்த அதீரனோ பக்கத்திலிருந்த காவலாளியிடம் "சிங்கத்தை வேட்டையாட அதோட குகைக்கே சில மிருகங்க வந்து இருக்கு, பாவம் அவங்களுக்கு தெரியல உள்ள இருக்கிறது சாதாரண சிங்கம் இல்ல, வேட்டைக்காக வெறியோட காத்துக்கிடக்க சிங்கம்னு" என்றான்.

இரவு கண்ணனுடன் நடனப் பயிற்சிக்காக சென்று இருந்தாள் திலோத்தமா. காலில் சலங்கையை கட்டியபடி அவள் ஆட ஆரம்பிக்க, கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தபடி கீழே நின்றிருந்தான் கண்ணன். அவனுக்கு அர்ஜுனனிடம் இருந்து “ஒன்பது முப்பதுக்கு நிவி ரூம்” என குறுஞ்செய்தி வர, அவனும் "ஓகே" என பதில் அனுப்பினான். அதே நேரம் அங்கே மாறன், சம்யுக்தா மற்றும் சில காவலாளிகளுடன் வந்தான் அதீரன். கண்ணனோ "அதீரன் எதுக்கு இந்த டைம்ல இங்க வரான்?" என்றபடி யோசிக்க, மேடையை மறைத்து இருந்த திரை சட்டென விலக்கப்பட்டது. அச்செய்கையில் கண்ணனோ அதிரந்த படி பார்க்க, வியர்வை வழிய வழிய ஆடிக்கொண்டிருந்த திலோத்தமாவோ திகைத்தபடி அப்படியே நின்றாள்.

செம்மஞ்சள் நிற புடவையில் கூந்தலை ஒற்றைப் பின்னல் இட்டு, நெற்றியில் செந்நிறத்திலான பெரிய பொட்டுடன் நின்றவளை ரசனையாக பார்த்த அதீரனின் இதழ்கள் கேலி புன்னகையை சிந்தியது. அதைக் கண்ட திலோத்தமாவோ அவனை எரித்து விடுவது போல பார்த்து விட்டு விறுவிறுவென மேடையை விட்டு இறங்கினாள். அதீரனோ "ஏன் நிறுத்திவிட்டாய் திலோத்தமா ஆடு" என்றான் அழுத்தத்துடன் கூடிய நக்கல் குரலில். அவளோ கோபமாக வந்து அதீரன் முன்னால் நின்றவளோ அவனை எரித்துவிடுவது போல பார்த்துவிட்டு "என்ன பண்றீங்க?" என்க, அதீரனோ, "அட இது என்ன கேள்வி? உங்க டான்ஸ பார்க்க வந்து இருக்கோம்" என்றான்.
அவளோ "ப்ரோக்ராம் நாளைக்கு, நீங்க ரிகசல் போயிட்டு இருக்கும்போது கொஞ்சமும் இங்கிதம் இல்லாம ஸ்கிரீன ரிமூவ் பண்றீங்க?" என கூற, அவனோ "ரிகர்சல் பார்த்தா ஒன்னும் தப்பில்லையே திலோத்தமா" என்றான் அவளை மேலிருந்து கீழ் பார்த்தபடி. அவளோ "என் அனுமதி இல்லாம ரிமூவ் பண்ணது தப்பு, நீங்க இந்த ராஜ்யத்துக்கு ராஜாவா இருக்கலாம் ஆனா......." என ஆரம்பிக்க, சம்யுவோ "மேடம் யாருகிட்ட குரல ஒசத்துரீங்க" என்றாள்.

கண்ணனோ "எங்க மேடம்கு பிடிக்காதத பண்ணிட்டு,, அவங்கள தப்பு சொல்றீங்களா?" என முன்னால் வர, "ஹேய்" என்றபடி அவன் மார்பில் கை வைத்த மாறனோ துப்பாக்கியை எடுக்க, அதீரனோ "ஸ்டாபிட்" என கத்தியதில் இருவரும் விலகி நின்றனர்.
மாறனிடம் திரும்பிய அதீரனோ "வந்த கெஸ்ட் கிட்ட இப்படியா நடந்துப்ப?" என்றான் அழுத்தமாக, கண்ணன் மற்றும் மாறன் ஒருவரை ஒருவர் முறைத்தபடி இருக்க, திலோத்தமாவின் புறம் திரும்பியவன் "டான்ச தான் பார்க்க கூடாதுனு சொல்லிட்டீங்க, தட்ஸ் ஓகே சாவகாசமா பார்த்துக்கலாம்" என்றவன், " இன்னைக்கு டின்னருக்கு வரீங்க" என்றான்.
அவளோ ஏதோ கூற வாய் திறக்கும் முன்னர், அவளை அழுத்தமாக பார்த்தவன் "வரணும்" என்க, அவளும் அமைதியாகி விட்டாள். மாறனின் புறம் திரும்பியவனோ "அரேன்ஜ் பண்ணிடு" எனக்கூறிவிட்டு சம்யுவிடம் "நீயும்" என்றவன் "முக்கியமா அதினாபுரத்தோட வருங்கால மகாராணி ஐஸ்வர்யாவையும் வர சொல்லு" என்றான்.
மறுபடியும் திலோத்தமாவின் புறம் திரும்பிய அதீரன் "அப்போ டின்னர்ல மீட் பண்ணலாம்" என்றபடி போக, அவனின் பின்னால் சென்ற சம்யுவோ "இப்போ நாம எப்படி பேசுறது" என யோசிக்க, செல்லும் அதீரனை கோபத்தில் வெறித்துப் பார்த்தபடி நின்று இருந்த திலோவின் பின்னாலிருந்த கண்ணனுக்கும் இதே எண்ணம்தான் ஓடியது.
 
அத்தியாயம் 4

திலோத்தமாவோ அங்கிருந்து விறுவிறுவென அறையை நோக்கிச் செல்ல, கண்ணனோ "மேடம்" என்றபடி அவள் பின்னால் ஓடினான். அறையை நெருங்கியவள் கண்ணனின் புறம் திரும்பி "கண்டவங்க கூப்பிட்டதுக்காக எல்லாம் என்னால சாப்பிட போக முடியாது. நாம இங்க எதுக்கு வந்தோமோ அந்த வேலைய மட்டும் தான் பார்க்க முடியும்" என்றவள் அவன் கூற வருவதை கூட கேட்காமல் அவசரமாக அறைக்குள் நுழைந்து கதவை அறைந்து சாத்தினாள். அதீரன் மீது காட்ட முடியாத கோபத்தை அவள் கதவின் மீது காட்டுகின்றாள் என்பது கண்ணனுக்கு நன்றாகவே புரிந்தது. அவனோ "இந்த பொண்ணு என்ன கொஞ்சம் கூட யோசிக்காம இப்படி நடந்துக்குறா, அந்த அதீரன் என்ன இவ கிட்ட பர்மிஷனா கேட்டான். ஆர்டர் இல்ல போட்டு இருக்கான்" எனக் கூறிக்கொண்டவனுக்கு "நம்ம வந்த வேலைய விட்டுட்டு இவளுக்கு பஞ்சாயத்து பண்ணுற வேலைய தான் முழு நாளும் பார்க்கணும் போல" என்று தான் தோன்றியது.

அறைக்குள் கோபமாக அங்குமிங்கும் நடந்தபடி இருந்தவளுக்கு அதீரனின் பார்வை, நக்கல் நிறைந்த புன்னகை எல்லாம் எரிச்சலைத்தான் கொடுத்தது. நீண்ட நேரமாக யோசித்தபடி இருந்தவளோ சென்று தயாராகி விட்டு கண்ணனுக்கு அழைத்தாள். அவளோ "டின்னருக்கு போகலாம்" என்க, அவனோ "முடியாதுன்னு சொன்னாங்க இப்போ ரெடி ஆகிட்டு வர சொல்றாங்க" என யோசித்தபடி வர, இருவரும் சேர்ந்து இரவு உணவுக்காக தயார் செய்யப்பட்ட இடத்துக்கு புறப்பட்டனர்.

விருந்தினர் மாளிகையில் இருந்து பிரதான மாளிகைக்குள் நுழைந்த திலோத்தமா மற்றும் கண்ணனை இரு காவலர்கள் உள்ளே அழைத்து சென்றனர். அங்கிருந்த ஒவ்வொன்றையும் விழி விரித்தபடி இருவரும் பார்த்து சென்றனர். அங்கு இருக்கும் அலங்காரப் பொருட்கள் எல்லாம் தங்கத்தினால் செய்யப்பட்டதாகவே இருந்தது. அங்கிருக்கும் முன்னறை ஒன்றுக்கு இருவரும் வந்து சேர, சில காவலாளிகளுடன் அங்கே வந்தான் அதீரன்.

திலோத்தமாவைக் கண்ட அதீரனோ ,"வாங்க வாங்க இவ்வளவு சீக்கிரமா வருவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல" என்க, அவளோ கஷ்டப்பட்டு புன்னகையை வரவழைத்தவள் "அதினாபுரத்தோட அரசன் கூப்பிட்டு வர முடியாதுனு சொல்ல முடியுமா?" என்றவளுக்கு உள்ளுக்குள் அத்தனை வன்மம் இருக்கவே செய்தது. கண்ணனோ "என்ன ஆச்சு இந்த பொண்ணுக்கு? இவ பேச்சு சரி இல்லையே!" என மனதிற்குள் குறித்துக்கொண்டான்.

அதீரனோ கேலிப் புன்னகை உதிர்த்தபடி "தட்ஸ் குட்" என்றவன், "டின்னர் ரெடி ஆக இன்னும் டைம் இருக்கு அது வரைக்கும்...." என இழுக்க, அவள் புரியாமல் அவனைப் பார்த்தாள். "அது வரைக்கும் எங்க அரண்மனையை சுத்தி பார்க்கலாம்" என்க, அவளும் "சரி" என்றாள். காவலாளிகளை அங்கேயே நிறுத்திவிட்டு சம்யுவை மட்டும் அழைத்துக் கொண்டு சென்றான் அதீரன்.

அங்கே சுவற்றில் சில புகைப்படங்கள் இருக்க, அவற்றை திலோத்தமாவிடம் கட்டியவன் "இவங்க எல்லாம் இந்த அதினாபுரத்த ஆண்டுவந்த ராஜாக்கள்" என்க, அவளோ அவற்றைப் பார்த்தபடியே வந்தவள் ஒரு முறை திரும்பி அதீரனை வன்மமாக பார்த்து விட்டு, "உன்னையும் கூடிய சீக்கிரம் போட்டோவா தொங்க விடுகிறேனா இல்லையானு பாரு!" என கூறிக் கொண்டாள்.
அதீரனோ அவள் முகத்தை நக்கலாக பார்த்தவன் "என்ன திலோத்தமா அப்படியே நின்னுட்டீங்க? அடுத்து எனக்கு புடிச்ச இடத்துக்கு போலாமா?" என்க, அவளும் "ம்ம்" என்றாள்.

அதீரனோ லிப்டின் மூலம் அவர்களை அழைத்து சென்றது என்னவோ அந்த மாளிகையின் மேல் தளமான ஏழாவது மாடிக்கு தான். இரவு நேரத்தில் அங்கு இருந்து பார்க்க அவனது செழுமை மிகுந்த ராஜ்ஜியமே ஜொலித்தது. அங்கிருந்த அந்த பெரிய நீச்சல் தடாகத்தை பார்த்தவளோ ஒரு நிமிடம் அதிர்ந்து தான் நின்றாள். அதீரனோ அவளது அதிர்ந்த முகத்தை பார்வையால் வருடியபடி , "இதான் என்னோட பெட்ஸ்" என அந்த நீச்சல் தடாகத்தில் இருந்த பெரிய முதலைகளை காட்ட, கண்ணனோ "பெட்ஸ் முதலையா? சூப்பர்" என நினைத்துக் கொண்டான். சிறிது நேரத்திலேயே அவன் அனைவரையும் மீண்டும் கீழே அழைத்துச் செல்ல, அங்கே இரவு உணவும் தயாராகி இருந்தது. கூடவே ஐஸ்வர்யாவும் வந்து அமர்ந்து இருந்தாள். தங்கத் தட்டுகளில் வித விதமான உணவுகள் தான் அவர்களுக்காக அங்கே காத்து இருந்தது.

உள்ளே திலோத்தமா, அதீரன், சம்யு, ஐஸ்வர்யா சாப்பிட ஆரம்பிக்க, கண்ணனோ இதுதான் சரியான நேரம் என உணர்ந்தவன் அர்ஜுனனை சந்திக்கச் சென்றான். அறை கதவை தட்ட கதவைத் திறந்த நிவேதாவோ அக்கம் பக்கம் பார்த்த படி "சீக்கிரம் வா" என்றாள். உள்ளே அர்ஜுனனும் இருக்க, கண்ணானோ , "அவ வர இல்ல.... அதீரனோட டின்னர்ல இருக்கா, தட்ஸ் ஓகே நீ ஐஸ்வர்யாவ மீட் பண்ணியா? " என்க,

"அத ஏன் கேக்குற?, குருமூர்த்தி சாரோட பொண்ணானு அவளை பார்த்தா நம்பவே முடியல" என்ற நிவேதாவை, பார்த்த கண்ணனோ "என்ன சொல்ற நிவே?" என்றான். அர்ஜுனனோ "அவ சரியான பைத்தியம்னு சொல்றா" என்க, நிவேதாவும் நடந்ததை கூற தொடங்கினாள்.

கஷ்டப்பட்டு ஐஸ்வர்யாவின் அறைக்குச் சென்ற நிவேதாவை கண்ட ஐஸ்வர்யாவோ “உன்ன எப்போ வர சொன்னா நீ எப்போ வந்து இருக்க? சரி சரி சீக்கிரம் வந்து பெடிகுர் பண்ணு” என்க, நிவேதாவோ ‘நான் ஒண்ணும் அதுக்கு வரல” என்க, ஐஸ்வர்யாவோ "என்ன அதுக்கு வரலாயா? அப்போ எதுக்கு வந்து இருக்க? ஆமா யாரு நீ?” என்க, அவளோ "ப்ளீஸ் சத்தம் போடாதீங்க, உங்க அப்பா தான் எங்கள அனுப்பினார்" என்க, அக்கம் பக்கம் பார்த்தபடி உள்ளே நுழைந்த அர்ஜுனன் "நாங்க சொல்ற மாதிரி பண்ணுங்க, சீக்கிரமா இங்க இருந்து தப்பிச்சு போயிடலாம்" என்றான்.
அவனைக் கண்ட ஐஸ்வர்யாவோ விழிகள் விரித்து பார்த்தவள், "வாவ் என்னை காப்பாத்த வந்த ராஜகுமாரன் நீ தானா?" என்க, நிவேதா, அர்ஜுனன் இருவரும் புரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

ஐஸ்வர்யாவோ தொடர்ந்து "நான் கூட வரப் போறவன் எப்படி இருப்பான்னு நினைச்சு ரொம்பவும் பயந்துட்டே இருந்தேன், ஆனா நீ செம்மயா இருக்க, பார்க்க ரொம்ப ரொம்ப ஹான்சம் வேற அதுக்கும் மேல" என அவன் பக்கத்தில் வந்து உயரத்தை பார்த்தவள் "எக்ஸலன்ட் நான் நெனச்சது போலவே நீ என்னைவிட ரொம்ப ஹைட்டா தான் இருக்க, ஷாட் கேர்ள், டால்பாய் க்யூட் பெயார்னு சொல்லுவாங்க தெரியுமா?" என்க, நிவேதாவோ பக்கென சிரித்துவிட்டாள். கடுப்பான அர்ஜுனனோ "நிவே இவள கண்டிப்பா காப்பாத்தனுமா? இங்கேயே கிடந்து சாகட்டும்னு விடலாமா?" என்க, நிவியோ "அர்ஜு நாம வந்த வேலைய பாக்கனும்" என்றாள்.

ஐஸ்வர்யாவோ "ஐ அம் ஐஸ்வர்யா, ஐஸ்னு கூப்பிடு" என்றபடி அவனிடம் கையை நீட்ட, அவனோ அவளை முறைத்தபடி "முதல்ல நாங்க சொல்றத கேளு" என்க, முகத்தை சுருக்கியவளோ "முதல்ல பேருதான்" என்றவளிடம் நிவேதாவோ "அர்ஜுனன்" என்றாள்.
ஐஸுவோ "சூப்பர் அர்ஜு, ஐஸு பெர்பெக்ட்" என்க, நிவேதாவோ "ஐஸ்வர்யா நாங்க உங்கள காப்பாத்த வந்தது யாருக்கும் தெரியகூடாது. தக்க சமயத்துல உங்கள இங்க இருந்து கூட்டிட்டு போறோம், அதுவரைக்கும் ஜாக்கிரதையா இருங்கோ" என்க, அவளோ அர்ஜுனனை தான் ரசனையாக பார்த்துக்கொண்டு இருந்தாள்.
அர்ஜுனனோ எரிச்சலாக அவளைப் பார்த்தவன், "அண்டஸ்டாண்ட்" என்க, அவனது கேள்வியில் அதிர்ந்த அவளோ "ஹாங்" என்றாள். அவனோ "புரிஞ்சுதா உனக்கு?" என்றான் குரலை உயர்த்தி, அவனது கர்ஜனையில் மிரண்டவளோ "புரிஞ்சது புரிஞ்சது" என்றாள் அவசரமாக, "குட்" என்றவன், "வா நிவி" என்றபடி அவளுடன் செல்ல, ஐஸ்வர்யாவோ "அர்ஜுனன்..... ஐ லவ் யூ" என்று கண் சிமிட்டிக் கூற, அவனோ "இவள" என திரும்ப, நிவேதாவோ "வா போலாம் லேட்டாச்சு" என்றபடி அவனை அங்கிருந்து அவசரமாக அழைத்து சென்று விட்டாள். காரணம் அர்ஜுனனுக்கு கோபம் வந்தால் அங்கு நடக்கும் காரியமே வேறல்லவா!

நடந்த அனைத்தையும் கேட்ட கண்ணனோ பெருமூச்சு விட்டபடி, "சுத்தம், இந்தப் பொண்ண காப்பாத்துறது கொஞ்சம் ரிஸ்க் தான் போல" என்க, அர்ஜுனனோ "அத விடுடா, மொதல்ல நாம எதுக்கு இங்க வந்தோமோ அத முடிச்சாகனும்.. நம்ம கிட்ட இப்போதகைக்கு டைம் சுத்தமா இல்ல, கல்யாணம் நடக்க முன்னாடி நம்ம மிஷன முடிக்கலன்னா........ கண்டிப்பா நம்ம எல்லார் லைபையும் அதீரன் முடிச்சிடுவான்" என்றபடி இருக்க, அந்த அறைக் கதவு மறுபடியும் தட்டப்பட்டது. மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து விட்டு, நிவேதாவோ சென்று கதவைத் திறக்க, அங்கே சிவா தான் நின்றுக் கொண்டு இருந்தான்.

சிவாவோ நிவேதாவை பார்த்து "தள்ளி நில்லுடி" என கூறியபடி வந்து அங்கிருந்த சோபாவில் அமர, அர்ஜுனனோ "என்னடா போட்டோகிராஃபர் சூட்டிங் எல்லாம் எப்படி போகுது?" என நக்கலாக கூற, சிவாவோ கோபமாக அங்கிருந்த பூச்சாடியை எடுத்து அர்ஜுனன் மீது வீசியடிக்க, அவனோ சிரித்தபடி அதை லாவகமாக பிடித்து கொண்டான்.

சுவற்றில் சாய்ந்த படி நின்ற நிவேதாவோ, "என்னாச்சுடா?" என்க, சிவாவோ "எதுக்குடி என்ன அவ கூட கோத்து விட்டீங்க? அதுவும் போட்டோகிராபரா?, சத்தியமா முடியல....... செல்பி கூட எடுக்க பிடிக்காத என்கிட்ட, அந்த திவ்யா அத அப்படி எடு, இத இப்படி எடுனு படுத்தி எடுக்கிறா!, இதுல அவகிட்ட அப்பப்போ திட்டு வேற வாங்குறேன், மிஷன் மட்டும் முடியட்டும் அவள வெச்சு செய்றேன், என் லைன்ல ரொம்ப க்றாஸ் பண்றா" என புலம்பினான்.

கண்ணனோ "விடு மச்சி அவள அப்புறமா பாத்துக்கலாம், முதல்ல நம்ம மிஷன முடிப்போம். இல்லன்னா அந்த அதீரன் நம்மள வெச்சி செஞ்சிடுவான்" என்றவன் , "ஏதாவது சிக்கிச்சா?" என்க, சிவாவோ "வந்த நேரத்துல இருந்து பஸ்ட் பிளார் எல்லாம் சுத்தியாச்சு. எதுவும் சிக்கல, இங்க அந்த டாட்டு டிசைன் இருக்க அறிகுறி இல்ல" என்றான்.
நிவேதாவோ "அப்போ எதுக்கு அதீரன் சீக்ரெட்னு மீனிங் வர மாதிரி டாட்டு போட்டு இருக்கான்" என்க, கண்ணனோ "முதலைய செல்லப்பிராணியா வளக்குறவன் ரகசியம்னு டாட்டு போடுறதெல்லாம் பெரிய விஷயம் இல்லை" எனக் கூற, அர்ஜுனனோ "முதலையா?" என்றான். கண்ணன் வாய்திறக்க முன்னரே அவனது போனுக்கு குறுஞ்செய்தி வர "டின்னர் முடிய போகுதாம் நான் கிளம்புகிறேன்" என்றபடி அங்கிருந்து அவசரமாக சென்று விட்டான்.
 
அத்தியாயம் 5

அடுத்த நாள் திலோத்தமாவின் நடனம் இடம் பெறும் அந்த நேரமும் வந்து சேர, அனைவரும் அங்கேதான் குழுமியிருந்தனர். அங்கிருந்த காவலாளிகள் கூட அங்கே இருக்க, நுழைவாயிலில் காவலாளிகள் இருந்ததைப் போலவே அந்த அரண்மனையின் ரகசிய அறை ஒன்றையும் பலர் காவல் காத்துக் கொண்டிருந்தனர். நடன அரங்கத்தினுல் பல காவலாளிகளுடன் வந்து அவளது நடனத்தைப் பார்க்க அமர்ந்தான் அதீரன். அவனைக் கண்டவர்கள் அனைவரும் மரியாதை நிமித்தம் எழுந்து அமர, ஐஸ்வர்யாவும் லாவெண்டர் நிற கவுனில் புன்னகையுடன் வந்து அதீரன் பக்கத்தில் இருந்த கதிரையில் அமர்ந்து கொண்டாள்.

அங்கே தூரமாக அவர்களைப் பார்த்தபடி இருந்த நிவேதாவோ, அர்ஜுனனிடம் திரும்பி, "இவ என்ன பொண்ணுடா..... கொஞ்சம் கூட கிட்னாப் பண்ண வருத்தம் இல்லாம.... ஏதோ பிக்னிக் வந்த மாதிரி ஜாலியா வந்து உட்கார்ரா, அதுவும் அவள கடத்திட்டு வந்து கல்யாணம் பண்ண போறவன் பக்கத்திலேயே! , இதுல நோக்கு வேற ஐலவ்யு சொல்றா" என்க, அவனோ "அவ தான் முழு பைத்தியமனு தெறிஞ்சிடுச்சுல, அப்பறம் எதுக்கு அத பத்தி பேசிட்டு, வாய மூடிட்டு இருடி" என்றபடி மேடையை பார்க்கத் துவங்க, அங்கே திரையும் விலக்கப்பட்டது.

அதே நேரம் அங்கே மாறனுடன் வந்து அமர்ந்த சம்யுக்தாவோ சுற்றி ஒரு முறை நோட்டம் விட்டுவிட்டே மேடையை பார்க்க, அங்கே நடனமும் ஆரம்பமானது. தங்க நிற புடவையில் தங்க ஆபரணங்களில் இருந்த திலோத்தமா ஆட ஆரம்பிக்க, அங்கே குண்டூசி விழுந்தாலும் கேட்குமளவு அமைதியாகத்தான் அனைவரும் அவளையே பார்த்திருந்தனர். மை தீட்டிய விழிகளை இங்குமங்கும் சுழற்றிய படி அவள் ஆட, அவளை ரசனையாக தான் பார்த்துக் கொண்டு இருந்தான் அதீரன். அவளின் விழிகளோ அடிக்கடி அமர்ந்து இருந்த அதீரனின் மீது வன்மம் படிந்து மீழ்ந்து கொண்டு தான் இருந்தது. அங்கிருந்த அனைவரும் மெய்மறந்து போய் அவள் நடனத்தை பார்த்தபடி இருக்க, ஒருத்தி மட்டும் தன் பக்கத்தில் இருப்பவனை படாத பாடு படுத்தி எடுத்துக் கொண்டு இருந்தாள்.

அது வேறு யாருமல்ல திவ்யாவே தான். அவளோ சிவாவிடம் "சரியா போட்டோ எடு, முதல்ல ஸ்டேஜ எடு, அத விட்டுட்டு சுவர எல்லாம் எடுத்து தள்ளுற, போட்டோ கிறாபரனு மட்டும் பெருமையா சொல்லிக்க வேண்டியது , ஒரு போட்டோ கூட உருப்படியா எடுத்த வழி இல்ல. இடியட் உன்னை போய் மீடியால சேர்த்து இருக்கானே அந்த சொட்டை அவன சொல்லணும் ஒரு போட்டோ கூட உருப்படி இல்ல" என கோபமாக கூறியபடி இருக்க, சிவாவோ உள்ளுக்குள் "5 அடி பீப்பா மாதிரி இருந்துட்டு என்னையே படுத்துறியாடி..... மிஷன் மட்டும் முடியட்டும் உன் மண்டைய பொலக்குறேன் பாரு" என்று கூறியபடி இருந்தான்.

பலத்த கைத்தட்டலுடன் நடனம் முடிய, புறப்பட தயாரான அதீரனிடம் வந்த மாறனோ "புதுசா ஒரு ஷிப் வந்து இருக்கு, நம்ம ஷிப்ச பார்த்ததும் அது கிளம்பிடுச்சாம். வந்தது போலீஸ் ஷிப்னு கார்ட்ஸ் சொல்றாங்க" என்க, சம்யுவோ ஒரு நொடி பதட்டமாகித் தான் போனாள். அதீரனோ தலையை கோதியவன் "ம்ம்" என்றபடி சம்யுவை ஒரு பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து செல்ல, மாறனும் அவன் பின்னால் சென்றான்.

இப்படியே இரண்டு நாட்கள் நகர, அதீரனின் தம்பி ராகுலும் அதினாபுரம் வந்து சேர்ந்தான். அண்ணனை சந்தித்து வழக்கமான நல விசாரிப்புகளுக்கு பின்னர் ராகுல் "இந்த வாட்டி ஏதோ ஸ்பெஷல் சப்ரைஸ் இருக்குனு சொன்ன?" என்க, அதீரானோ , "நம்ம ராஜ்ஜியத்துல 4 போலீஸ்காரங்க நுழைஞ்சி இருக்காங்க" என்றவனை விழிவிரித்து பார்த்த ராகுலோ "இன்ட்ரஸ்டிங்" என்றான்.

சோபாவில் சாய்ந்து அமர்ந்து தலைக்குப் பின்னால் கைவைத்த அதீரனோ "இத்தனை நாள் ஒரு என்டர்டைமென்ட் இருக்கல, இப்போ தான் திருப்தியா இருக்கு, நம்ம தகுதிக்கு ஏத்த மாதிரி ஆளுங்க கூட மோதுரதுல இருக்க கிக்கே தனி" என்க, சிரித்த ராகுலோ "யா நம்ம ராஜ்யத்துலயே நுழைஞ்சி இருக்காங்கனா அவங்க கண்டிப்பா சிங்கங்களே தான், அவங்க தைரியத்தை பாராட்டியே ஆகணும்" என்றவன் "இனிமே என்ன பண்ண போற?" என்க, அதீரனோ சாவகாசமாக "வேட்டையாட ஆரம்பிக்கலாம். எது சிங்கம் எது நரின்னு பார்த்து பார்த்து அடிக்கணும், இங்கேதானே இருக்கப் போற எல்லாத்தையும் பொறுமையா பாரு" என்றவனைப் பார்த்து சிரித்த ராகுலோ கண்ணடித்தபடி "கண்டிப்பா" என்றான்.

அங்கிருந்த சுவர்களை ஆராய்ச்சியாக நோட்டம் விட்டபடி வந்து கொண்டு இருந்த நிவேதாவோ திடீரென அங்கே வந்தவன் மீது தெரியாமல் மோதி நின்றாள். தன் மீது மோதியவனை நிமிர்ந்து பார்த்தவளோ தன் கண்களையே நம்ப முடியாமல் தான் பார்த்தாள். அவளை மேலிருந்து கீழ் பார்த்த அவனது ஸ்கேன் செய்யும் விழிகளோ அவளை அழகாக படம் பிடித்து கணக்கிட ஆரம்பித்தது.
மெல்லிய தேகம், சாதாரண உயரம், மா நிறம் என இருந்த அவளோ தன் அளவான முடியைத் தூக்கி ஹைபொனிடெல் இட்டு, சிவப்பு மற்றும் நீல நிற ஜீன்ஸில் இருந்தாள். முகத்தில் பெரிய ஒப்பனைகள் இருக்கவில்லை. அவன் விழிகள் தன் மேனியில் ஊர்வலமிடுவதைக் கண்ட நிவேதாவோ சட்டென , " நீங்க? " என்றாள்.
அவனோ "ராகுல்" என்க, "ஓ அவன் தம்பியா? என்ன நம்மள இப்படி பாக்குறான். சரியான பொம்பள பொறுக்கி போல" என நினைத்துக் கொண்டவள், "தாடி மட்டும் வச்சா அப்படியே அதீரன் போல இருப்பான்" என எண்ண, அவனது எண்ண ஓட்டங்களை கலைக்கும் வண்ணம் முத்துப் பற்கள் தெரிய அவளைப் பார்த்து சிரித்த ராகுலோ, "செம்ம ஸ்டக்சர்" என்க, அதிர்ந்த படி அவனைப் பார்த்தவள் "மைன்ட் யுவர் வேர்ட்ஸ்" என்றாள்.
அவனோ "உன்னை பார்த்த உடனே என் மைண்ட்ல இது தான் ஓடிச்சு.... நீ நெஜமாவே நீ சூப்பர் பிகர்..... ஸ்ட்ரெய்ட்டாவே கேக்குறேன், டேட்டிங் வரியா?" என்க, அவளுக்கோ எங்காவது சென்று முட்டிக் கொள்ளலாம் போலத்தான் தோன்றியது. சட்டென அவளது மூளை வேலை செய்தது. "இவன வச்சு அந்த அதீரன பிடிக்கலாம்" என தப்பான யோசனையை சரியான நேரத்தில் கொடுக்க, அவளோ "சுவர்" என்றாள்.

அவனோ சிரித்தபடி "பொண்ணுங்க சைக்காலஜி எனக்கு தெரியும்" என்க, அவளோ "மேய்க்கிறது எருமை இதுல என்ன பெருமை" என கவுண்டர் கொடுத்து கொண்டாள். தொடர்ந்து ராகுலோ "அப்போ இன்னைக்கே டேட் பண்ணலாம்." என்க, அவளோ "இன்னைக்கேவா?” என அதிர்ந்தவள், “இவன் என்ன இவ்வளவு ஸ்பீடா இருக்கான். நிவே சமாளி" என யோசித்து விட்டு, "அது நாளைக்கு பண்ணலாமே?" என்க, அவனோ "யுவர் விஸ், ஐ திங் நான் us திரும்பப் போகும் வரைக்கும் உன்னோட இருக்கலாம்னு நினைக்கிறேன், அதுக்கு உன்னோட பபோமென்ஸ் எப்படின்னு தெரியனும், நாளைக்குப் பார்க்கலாம்" என்றவன் சற்றும் தாமதிக்காமல் அவளை அணைத்து விட்டுப் போக, அவளும் அப்படியே சுவற்றில் சாய்ந்து நின்றாள். அவளோ சாதாரண டேட்ட்டிங் என நினைக்க, அவனோ பொபோமன்ஸ் என்றெல்லாம் அல்லவா பேசி விட்டு செல்கிறான். அதற்கு மேல் இப்படி அதிரடியாக அவளை அணைத்து விடுவான் என அவள் கனவில் கூட நினைக்கவில்லை.

அவளைத் தேடி அங்கே வந்த அர்ஜுனனோ "நிவே நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்க? அது சரி அதீரன் தம்பி ராகுல் இந்த வழியாக போனதைப் பார்த்தேன்" என்க, நிவேதாவோ "அதுக்கு ஏன்டா மூஞ்சிய இப்படி வச்சி இருக்க?" என்றாள் யோசனையாக, அவனும் "இல்ல இந்த டைம்ல பொண்ணுங்க இல்லாம தனியா போறானே!" என்க, அவளோ "என்னடா சொல்லுற? தெளிவா சொல்லு" என்றாள் அவன் பேசுவது புரியாமல்.

அர்ஜுனனோ "ஹேய் அவன பத்தி உனக்கு தெரியுமா? தெரியாதா? அவன் சரியான வுமனைசர் அமெரிக்கால நேரத்துக்கு ஒரு பொண்ணு கூட சுத்துவான் இங்க எந்த பொண்ணு சிக்குவாளோ!" என்க, வரண்டு போன தொண்டையை எச்சில் விழுங்கி சரிசெய்தாள் நிவேதா. அர்ஜுனனும் "அதவிடு எதுக்கு நமக்கு இது எல்லாம்...... வா நாம போலாம்" என்றபடி போக, அவனது பின்னால் சென்ற நிவேதாவோ "பெருமாளே! அபச்சாரம், அபச்சாரம்..... கண்ட கழிசடை கிட்ட சிக்கீன்டு இருக்போம் போலயே!, ச்சி கட்டி வேற புடிச்சின்டு போறான் பாவிப்பய , மொதல்ல போயி நன்னா குளிக்கணும்” என்றவள், “நம்ம ஆத்துக்கு மட்டும் இது தெரிஞ்சா என்ன எண்ண சட்டீல போட்டு வறுத்து எடுத்துடுவா!, நிவேதா அவன் கண்ணுல இனிமே சிக்கிண்டாதே!, நோக்கு அதுதான் நல்லது" என எண்ணிக்கொண்டவள் அறியவில்லை நாளை அவனிடம் வசமாக சிக்க போவதை.

இரவு 11 மணி அளவில் நிவேதாவின் அறையில் அமர்ந்து இருந்தனர் சிவா மற்றும் அர்ஜுனன். நிவேதாவோ போனையும் கதவையும் மாறி, மாறி பார்த்தபடி இருக்க, பொறுமை இழந்த சிவாவோ "இவங்க என்ன தான் பண்றாங்க? எவ்வளவு நேரமாச்சு?" என்க, நிவேதாவோ "நானும் உன்கூட தானே இருக்கேன். வரேன்னு சொல்லி இருக்காங்க பொருள தூக்க வேணாமா?" என்றாள். அர்ஜுனனோ "எடுத்து இருப்பாளா? நமக்கு தேவையானது அதீரன் கிட்ட இருக்கிறது, அவன நெருங்குறது அவ்ளோ ஈஸி கிடையாது" என்றபடி இருக்க அதே நேரம் அறைக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்க, அவர்கள் நால்வரின் முகமும் பிரகாசமானது.

நிவேதா கதவை திறக்க, கண்ணனுடன் உள்ளே நுழைந்தவள் நேராக அர்ஜுனன் மற்றும் சிவா அமர்ந்திருந்த கட்டிலை நோக்கி வந்து கையில் மறைத்து வைத்திருந்த சிறிய சிப்பை தூக்கி அவர்கள் முன்னால் போட்டாள். அவள் வேறு யாருமல்ல நடன கலைஞராக இங்கு வந்திருக்கும் திலோத்தமாவே தான். அர்ஜுனனோ அதைக் கையில் எடுக்க சிவாவோ "பெர்பெக்ட், அதீரன் கைல உள்ள மோதரத்தையே தூக்கி இருக்கியே குட் ஜாப் திலோ” என்றான்.

அங்கிருந்த சோபாவில் வந்து அமர்ந்த திலோத்தமாவோ "அதீரன் நாம நினைச்சத விட பெரிய கிரிமினல் சிவா.... சீக்கிரமா இந்த மிஷன முடிக்கணும்" என்க, கண்ணனோ "ஆமா இப்போ நமக்கு இந்த சிப் மட்டும்தான் கிடைச்சிருக்கு, அந்த சீக்ரெட் ரூம ஓபன் பண்ண கீ தேவை, அது இருக்க க்ளூ மட்டும் தான் நமக்குத் தெரியும், ஒருவேளை அது தப்பா கூட இருக்கலாம்" என்றான். “கல்யாணத்துக்கு இன்னும் ஜஸ்ட் ஆறு நாள் தான் இருக்கு" என்ற நிவேதாவை பார்த்த அர்ஜுனனோ "நம்ம மிஷன் டெட்லைன் கூட 6 டேஸ் தான்" என்க, அனைவரும் யோசனையாக பார்த்துக் கொண்டனர். நிவேதாவோ "அந்த ஐஸ்வர்யாவையும் காப்பாத்தனும்" என்க, சிவாவோ "முதல் ஸ்டெப் தான் முடிச்சி இருக்கோம் அடுத்து இரண்டு ஸ்டெப் இருக்கு, 6 நாள்ல முடிச்சாகணும். இப்போ ராகுல் வேற வந்து இருக்கான் நாம இனிமே அதிகமா ஜாக்கிரதையா இருக்கணும்," என்றபடியிருக்க, மறுபடியும் அறைக்கதவு தட்டப்பட்டது. கண்ணனோ "பில்லர் வந்தாச்சு" என்க, நிவேதாவோ கதவை திறக்கச் சென்றாள்.
 
அத்தியாயம் 6

அவள் கதவைத் திறந்து "வாங்கோ வாங்கோ செக்யூரிட்டி சார்" என்க, டையை கழற்றியபடி உள்ளே நுழைந்தான் மாறன் எனப்படும் வெற்றிமாறன். தனது கோட்டை கழற்றி அங்குள்ள சோபாவில் போட்டவன், தான் மறைத்து எடுத்து வந்த துப்பாக்கிகளையும் அவர்கள் முன்னால் போட்டு விட்டு, சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தபடி "இன்னும் 2 டேஸ்ல அந்த பாக்ஸ கண்டுபிடிச்சாகணும்" என்றான். அவன் புறம் திரும்பிய திலோத்தமாவோ "நாம வந்து நாலு நாளா அத தேடுறோம். ஒரு சின்ன க்ளூ கூட கிடைக்கல மாறா, கண்டிப்பா அந்த டாட்டூ தான் நாம தேடுற அடையாளமா இருக்குமா?" என்றாள் சந்தேகமாக,

மாறனோ "தெரியல திலோ நம்மளோட பெரிய டாஸ்கே அந்த பாக்ஸ கண்டுபிடிக்கிறது தான், நமக்கு தேவை அந்த வைரக்கல்" என்க, சிவாவோ "அதீரன் அத சாதாரணமா கண்டு பிடிக்கிற மாதிரி நிச்சயமா வச்சி இருக்க மாட்டான்" என்றான்.
கண்ணனோ "ஆயிரம் பேரோட உயிர அநியாயமா பறிச்சி , திருடின டயமன அதீரன் அவ்ளோ ஈஸியா யாருக்கும் விட்டுக் மாட்டான்" என்றவன் "போலீஸ் உள்ள வந்துடிச்சினு தெரிஞ்சும் அவன் அமைதியா இருக்கான்னா அவன் மனசுல ஏதோ வேற திட்டம் இருக்கு" என்றான்.

மாறனோ புகையை இழுத்து விட்டபடி , "நிச்சயமா, அவன் அமைதி நல்லதுக்கு இல்ல , இதுல வேற ஏதோ ரகசியம் இருக்கும்னு தோணுது" என்க, அர்ஜுனனோ "இந்த மினிஸ்டர் குருமூர்த்தி பொண்ண எதுக்கு அதீரன் தூக்கி இருக்கான், அதுவும் கல்யாணம் பண்ணப் போறதா ஒரு டிராமா போட்டு இருக்கான்" என்றான் . திலோத்தமாவோ , "இதுக்கு ஆன்ஸர் ரெண்டு பேரு கிட்ட தான் இருக்கு, ஒன்னு அதீரன் சொல்லனும் இல்ல மினிஸ்டர் குருமூர்த்தி சொல்லணும்" என்றாள்.
திலோவை யோசனையாக பார்த்த மாறனோ "திலோ அதீரன் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இரு" என்க, அவளுக்கும் அவன் ஏன் அப்படிக் கூற வருகிறான் என்பது புரியவே செய்தது. சற்று முன்னர் நடந்த நிகழ்வும் அப்படி ஆனது தானே என்று அவளால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.

சிவாவோ "அது சரி திலோ நீ செமையா டான்ஸ் பண்ண தெரியுமா? நான் கூட நீ கரகாட்டம் தான் ஆடுவனு நினைச்சேன்.... நாட்பேட் பரதநாட்டியம் ஆடி இருக்க" என்க, மற்றவர்கள் அதைக் கேட்டு சிரிக்க, திலோவோ சிவாவை முறைத்துப் பார்த்தாள். கண்ணனோ "அவ மட்டும் சரியா ஆடலனா, அதீரனோட ருத்ர தாண்டவத்த நாம எல்லாம் பார்த்து இருக்கணும்" என்க, சத்தமாக சிரித்த சிவாவோ "அது ரணக் கொடூரமால இருக்கும். அதுவும் அதீரன் அந்த தாடி, ஹேயார் ஸ்டைல் எல்லாம் வச்சுக்கிட்டு ஆடினான்னு வையேன்.... பாக்குறவன் கண்டிப்பா டெட் பாடி தான்" என்றான்.

திலோ பக்கத்தில் அமர்ந்து அவளது தோளில் கை போட்ட மாறனோ, "திலோ க்ளாசிகல் டான்சர்டா" என்க, புன்னகைத்த திலோத்தமாவோ "எனக்கு இந்த போலீஸ் வேலை எவ்வளவு பிடிக்குமோ அது மாதிரிதான் இந்த டான்ஸும். என்ன ஒன்னு சின்ன வயசுல இருந்து கத்துக்கிட்ட டான்ஸ் இதுவரைக்கும் அரங்கேற்றம் பண்ணதே இல்ல" என்றாள்.
நிவேதாவோ "அதுக்கு என்னடி? அது தான் அதீரனோட அரசவையில அரங்கேற்றம் எல்லாம் போஷா முடிஞ்சிடுத்தோனோ" என்க, திலோத்தமாவுக்கோ கொஞ்ச நேரத்துக்கு முன்னால் நடந்த நிகழ்வு மனக்கண்ணில் ஓட, சட்டென ஒரு மாதிரித் தான் ஆகிப் போனாள். மாறனோ அவள் முகமாற்றத்தை பார்த்து "என்ன ஆச்சுடி?" என்க, அவளோ எதுவும் இல்லை என்பது போல தலை ஆட்டி சமாளித்தாள்.

அதேநேரம் அர்ஜுனனோ "ஆமா தயிர்சாதம் நீ கூட அக்கிரகாரத்து பொண்ணு தானே? உனக்கு இந்த க்ளாசிகல் டான்ஸ் எல்லாம் தெரியுமா என்ன?" என்க, சிவாவோ "அவளுக்கு க்ளாசிகல் எல்லாம் வராது, வேணா வெஸ்டன் ஆடுவா. என்ன ஒன்னு அத யாராயலையும் பார்க்க தான் முடியாது" என்க, அவனை முறைத்த நிவேதாவோ "உன்னை அந்த திவ்யா திட்றதுல தப்பே இல்ல" என்றவளை பார்த்த, சிவாவோ "இந்த நேரத்துல எதுக்குடி அந்த ராட்சசிய ஞாபகப் படுத்துற?" என்றான் வருத்தமாக, சிரித்த நிவேதாவோ "அது" என்றவள் அர்ஜுனனிடம் திரும்பி "நேக்கு டான்ஸ் எல்லாம் வராது அர்ஜு, நான் நன்னா பாடுவேன்" என்க, சிவாவோ "அம்மாடி பாடித் தொலைச்சிடாத.... அதை கேக்குறத விட நான் அந்த அதீரன் கையால அடிப்பட்டே சாவேன்" என்றான்.

திலோவோ "இப்படியே பேசிட்டு இருந்தா அதுதான் நடக்கும்" என்க, கண்ணனோ "சீக்கிரம் மிச்சமிருக்க ரெண்டு டாஸ்கயும் முடிக்கணும், நமக்கு நேரம் ரொம்ப கம்மியா இருக்கு" என்க, மாறனோ "எது பண்ணாலும் கொஞ்சம் ஜாக்கிரதையா பண்ணுங்க, பெட்ரூம் தவிர இங்க எல்லா இடத்திலயும் கேமரா இருக்கு" என்றான்.
அதன் பின் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டுச் செல்ல, கண்ணனிடம் வந்த சிவாவோ "என்ன புது மாப்பிள்ள கல்யாணம் ஆன உடனேயே ஹனிமூன் போகாம மிஷன் வந்துட்டனு ரொம்ப பீலா இருக்க போல?, மூஞ்சில தாடி எல்லாம் வளர்ந்துடிச்சி?" என்க, அவனோ "எனக்கு பீலிங்.. போடா" என்றபடி அறைக்கு சென்றவனுக்கு அவன் திருமணம் ஆகி அடுத்த நாளே இந்த மிஷனுக்கு வந்துவிட்டான் என கொஞ்சம் கூட வருத்தம் இருக்கவே இல்லை. மாறாக தப்பித்து விட்டோம் என்ற திருப்தி தான் இருந்தது.

ஆறு மாதங்களுக்கு முன்பு இந்தியாவின் ஒரு மிகப் பழமையான சிவன் கோயிலில் ஆயிரம் வருடங்களுக்கு மேல் யாருக்கும் தெரியாமல் மிக பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த உலகின் மிக மிக விலை உயர்ந்த வைரக்கல் திருடப்பட்டது. அதனால் அந்தக் கோயிலே வெடிக்கச் செய்யப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்கள் காவு வாங்கப்பட்டன. அத்தகைய கொடிய செயலை செய்தது என்னவோ அதீரன் தான். ஆனால் அவனின் பண பலம், ஆயுத பலம், படை பலம் என்ற சக்திகளுக்கு முன்னால் யாராலும் அவனை நெருங்க முடியவில்லை. 6 மாதமாக அவனை பிடிப்பதற்கு பாரிய திட்டங்கள் போடப்பட்டு சிறந்த ஆபீஸர்களான மாறன், திலோ, சிவா,அர்ஜுனன், கண்ணன் மற்றும் நிவேதா ஆகிய 6 பேரும் நியமிக்கப்பட்டனர். மூன்று மாதங்களுக்கு முன்னர் இக்குழுவின் தலைவனாக திகழ்ந்த மாறனோ ராஜ்ஜியத்தினுள் சம்யுக்தாவின் கீழ் பணி செய்பவனாக நுழைந்தான். அவனது திறமை புத்தி சாதுரியத்தால் அங்கு யாருக்கும் துளி கூட சந்தேகம் வராமல் தனக்குத் தேவையான வேலைகளை செய்ய ஆரம்பித்தான்.

வைரக்கல் வைக்கப்பட்டு இருக்கும் ரகசிய அறையைத் திறக்க தேவையான முதல் சாவி அதீரனின் வைர மோதிரத்தில் இருப்பதை அறிந்து கொண்டான். அடுத்து அதை வைத்து ஒரு ரகசிய லாக்கரை திறக்க வேண்டும். அதில்தான் ரகசிய அறைக்கான சாவி இருக்கும். ஆனால் அந்த லாக்கர் இருக்கும் இடத்தை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இவர்களின் குழு அதீரனின் ராஜ்ஜியத்துக்குள் நுழைய சரியான நேரத்தை பார்த்துக் கொண்டு இருக்க, அப்போதுதான் அதீரன் மினிஸ்டர் குருமூர்த்தியின் ஒரே மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்வதாக கடத்தி வந்தான். இதனால் அரசியல், பணம் என அதீத பலம் பெற்ற மினிஸ்டர் குருமூர்த்தியின் உதவி கிடைத்தது. தனது பெண்ணை அதீரனிடம் இருந்து மீட்க எந்த உதவியும் செய்கிறோம் என்றார் அவர்.

அத்தோடு அவர்களின் குழு ராஜ்ஜியத்தினுள் நுழைய இந்த திருமணம் சரியான சந்தர்ப்பமாக அமைய, நிவேதா, அர்ஜுனன் அண்ணன் தங்கை ஆகவும், திலோதமா நடன கலைஞராகவும் கண்ணன் அவளது மெய்க்காப்பாளனாகவும் நுழைந்தனர். இம்முறை அதீரனின் திருமணத்துக்காக திவ்யா பணிபுரியும் பத்திரிகைக்கு அனுமதி கொடுக்கப்பட, அது மிக சிறந்த வாய்ப்பு என எண்ணி சிவாவை போட்டோகிராபராக வர வைத்தனர். இப்படியாக அனைவரும் அதீரனுக்கு தெரியாமல் உள்ளே நுழைந்து அந்த வைரக் கல்லை மீட்பதும் குருமூர்த்தியின் மகள் ஐஸ்வர்யாவை காப்பாற்றுவதுமே இவர்கள் திட்டமாகும். இப்போது அவர்களுக்கு இருந்த முதல் டாஸ்கான அதீரன் கையில் இருக்கும் வைர மோதிரத்தில் இருந்த சிப்பை எடுக்கும் செயற்பாட்டை திலோத்தமா செய்து முடித்து விட்டாள்.

அடுத்த நாள் தயாராகி நிவேதா மற்றும் அர்ஜுனன் வந்துகொண்டிருக்க, அவ் வழியாக ராகுல் வந்து கொண்டு இருந்தான். அவனை கண்டு அதிர்ந்த நிவேதா நெஞ்சில் கை வைத்தபடி "இவன் எதுக்கு இந்த பக்கம் வரான், நம்மள மட்டும் பார்த்துட்டா டேட்டிங் கூப்பிடுவானே!" என யோசித்தவள், அர்ஜுனனின் கையை பிடித்து போக விடாமல் தடுத்தபடி "அர்ஜு இந்தப்பக்கம் வேணாம் வா அப்படி போகலாம்" என்க, அவனும் அவளை விசித்திரமாக பார்த்தபடி "எதுக்குடி? சிவா இந்த பக்கம் தான் வெயிட் பண்ணுவான், வா போலாம்" என்றவனைத் தடுத்த நிவேதாவோ "சொன்னா புரிஞ்சுக்கோயேன், சிவாக்கு மெசேஜ் பண்ணி அங்க வர சொல்லு, ப்ளீஸ்" என்க, அவனும் "சரி வா" என்று அவளை அழைத்து செல்ல, அங்கே சிவாவும் வந்து சேர்ந்தான்.

மூவரும் சேர்ந்து அரசசபை இருக்கும் அறைக்குள் நுழைய எத்தணிக்க, அவ்வழியே மீண்டும் ராகுல் வர, மூவரும் அதிர்ந்து போயினர். அங்கிருந்து தப்பித்து வெளியேற அவர்களுக்கு வேறு எந்த வழியும் அங்கே இருக்கவில்லை. அவன் மட்டும் இங்கே வந்தால் மூவரும் அவனிடம் வசமாக சிக்கி விடுவர். அர்ஜுனனோ "இப்போ என்ன பண்ணுறது" என்க, சிவாவும் அவனை புரியாமல் தான் பார்த்தான். நிவேதாவோ சட்டென சிந்தித்தவள் வேறு வழியில்லை என நினைத்தபடி "நீங்க உள்ள போய் தேடுங்க, நான் அவன பாத்துக்கிறேன்" என்றவள் விறுவிறுவென ராகுலை நோக்கி போக, சிவாவோ "ஹேய் எங்கடி போற? அவன்கிட்ட மாட்டிட போற" என்றான். ஆனால் அதற்குள் அவளோ அவனிடம் சென்று விட, அர்ஜுனனோ "வா நாம தேடலாம், அவ எப்படியாச்சும் சமாளிச்சிப்பா" என்க, இருவரும் உள்ளே சென்றனர், அந்த ரகசிய லாக்கரை தேடி எடுப்பதற்காக.

ராகுலிடம் வந்த நிவேதாவோ வலுகட்டாயமாக புன்னகைத்தபடி, "ஹாய்" என்றாள். அவனும் அவளைக் கண்டவுடன் முத்துப் பற்கள் தெரிய சிரித்தபடி "பரவாயில்லையே! நீயே என்னைத் தேடி வந்துட்ட போல, நாட்பேட் இங்கயும் உன்ன மாதிரி இன்டெலிஜென்ட் பொண்ணுங்க இருக்காங்க போலவே!" என்க, அவளோ "ஹிஹி" என சிரித்தவள், உள்ளுக்குள் "நான் உன்னை தேடி வரேன், எல்லாம் என் நேரம்" என கூறிக் கொண்டாள்.

அவனோ "ஹாங் நீ அதினாபுரமா? உன்னை இதுக்கு முன்னாடி இங்க பார்த்ததே இல்லையே!" என்க, அவளோ "இல்ல இல்ல நான் கல்யாணத்துக்கு வந்து இருக்கேன், நேக்கு இந்தியா" என்க, "நீ பிராமணா? " என்றான் ராகுல். அவளோ ஆமா என்பது போல தலையை ஆட்ட, "நைஸ்... ஆனாலும் நீ இதுக்கு எல்லாம் ஓகே சொல்ற?" என்றவனை புரியாமல் பார்த்தவள், "டேட் பண்ண தானே கூப்பிட்டான். எதுக்கு இப்படி பேசுறான்?" என நினைத்தவள், சிரித்தபடி "நேக்கு us கல்ச்சர் தான் ரொம்ப பிடிக்கும்" என வாய் கூசாமல் அவனிடம் பொய் பேசினாள்.

சிரித்த ராகுலோ "தட்ஸ் குட் , அப்போ வா நாம போலாம்" என்க, அவளோ சற்று பதட்டமாக "எங்க? " என்றாள். அவனோ "காபி" என்றான் லேசாக புருவம் உயர்த்திய படி, நிவியோ "பகவானே! முகமெல்லாம் மாறுதே!, ஒருவேளை சந்தேகம் வந்துடுச்சோ? இப்போ முடியாதுன்னு சொன்னா கண்டிப்பா அவனுக்கு டவுட்டு வந்துடும், பேசாம போயிடலாம் " என எண்ணியவள், "போலாம்" என்க, அவனும் அங்கிருந்து ஒரு அறைக்கு அவளை அழைத்து சென்றான்.

அந்த விசாலமான அறையில் உள்ள சோபா செட்டில் இருவரும் அமர, அவனோ காபியை கோப்பைகளில் ஊற்ற ஆரம்பித்தான். அவளோ அந்த அறையை சுற்றிப் பார்க்க, மிகவும் விசாலமாக இருந்த அந்த அறையில் அவர்கள் இருவரையும் தவிர யாரும் இருக்கவில்லை. அவளோ "தனியா வந்து மாட்டீன்டோமே! பெருமாளே! என்ன இவன் கிட்ட இருந்து காப்பாத்தி விடு, அப்படி மட்டும் பண்ணிட்டேன்னா நான் மிஷன் முடிஞ்சதும் நாலு நாளைக்கு பச்சத் தண்ணி பல்லுல படாம விரதம் இருப்பேன்" என வேண்டியபடி இருந்தவள் பாவம் அப்போது அறியவில்லை, இங்கு நடக்கும் அசம்பாவிதத்துக்கு அவள் 40 நாள் விரதம் இருந்தாலும் போதாது என்று.
 
அத்தியாயம் 7

காபி போட்டுக் கொண்டு இருந்த ராகுலோ டீசர்டின் கையை மேலே இழுத்துவிட்டு இருக்க, அவனது கையில் இருந்த அந்த டாட்டுவை கண்டாள் நிவேதா. அதை கண்டவளோ "இவனும் டாட்டு போட்டு இருக்கான். ஆனா இது அதீரன் கையில இருந்த மாதிரி இல்லையே! வித்தியாசமா இல்ல இருக்கு" என யோசித்தபடி அதை உற்றுப் பார்த்தவள் தெரியாமலேயே அவனை மேலும் நெருங்கி அமர்ந்தாள். அதைக் கண்டவனோ சிரித்தபடி "உனக்கும் பொறுமைக்கும் ரொம்ப தூரம் போல" என்க, அதிர்ந்தபடி அவனைப் பார்த்த நிவேதாவோ "எதுக்கு சொல்றான்னு தெரியலையே சரி ஏதாச்சும் சொல்லி சமாளிப்போம்" என எண்ணியவள், "ஆமாமமா நேக்கு சுத்தமா பொறுமை கிடையாது" என்றாள் அவன் என்ன பேசுகிறான் என புரியாமல்.

அவனோ காபியை அவள் முன்னால் வைத்தபடி, "பார்த்தாலே தெரியுது" என்க, அவளோ "பொறுமை இல்லனு எப்படி பார்த்தா தெரியுது. ஒருவேளை காபி சாப்பிட உடனே ஓகே சொன்னதால அப்படி சொல்றானோ!, இருக்கும் இருக்கும்" என எண்ணிக்கொண்டவள் அவனைப் பார்த்து வலுக் கட்டாயமாக புன்னகைத்தாள்.

அவனோ தன் இதழ்களை ஈரமாக்கியப்படி "அப்போ ஆரம்பிக்கலாமா? " என்க, அவன் காபி குடிப்பதை தான் பேசுகிறான் என எண்ணிய நிவேதாவோ "ஆரம்பிக்கலாமே!" என்றவள், காபி கோப்பையை எடுக்க கையை நீட்ட, அவனோ சட்டென அவள் முகத்தை தன் புறம் திருப்பியவன் நொடியும் தாமதிக்காமல் அவள் இதழ்களை தன் இதழ்களால் அழகாக பொருத்திக் கொள்ள, அவளோ அதிர்ச்சியில் விழிவிரித்து போனாள். அவனோ மேற்குலகில் கற்றுவந்த மொத்த முத்த வித்தையையும் அவளது இதழ்களிலில் நிகழ்த்த முயல, அவளின் நிலை தான் கவலைக்கிடமானது. அவளோ தன் மொத்த பலத்தையும் திரட்டி அவனை பிடித்து தன்னிடம் இருந்து தள்ளி விட்டவள், அவசரமாக எழுந்து தன் புறங்கையால் இதழ்களை அழுத்த துடைத்தபடி, அங்கிருந்து வெளியே ஓட, அவனோ "என்னாச்சு இவளுக்கு?" என்றுதான் பார்த்தான்.

"எதுக்கு இப்படி ஓடுறா? அவதானே ஓகே சொன்னா, ஒருவேல" என சிந்திக்க ஆரம்பித்தவனின் சிந்தனையை கலைக்கும் வண்ணம் அமேரிக்காவிலிருந்து அவனது கேர்ள் ப்ரண்ட் மெர்சி கால் செய்ய, அதை எடுத்து காதில் வைத்தவன் "சொல்லு டார்லிங், ஐ மிஸ் யூ சோ மச் டியர்" என குழைவாக பேச ஆரம்பித்தான்.

உதட்டை மேலும் மேலும் துடைத்தபடி ஓடி வந்தவளோ சிவா மற்றும் அர்ஜுனன் வருவதைக் கண்டு அவர்களிடம் ஓடினாள். சிவாவோ "என்னாச்சு உனக்கு? எதுக்கு இப்படி ஓடி வர? " என்க, அர்ஜுனனோ "ராகுல் எங்க?" என்றான். "அத விடுங்க கீ கிடைச்சதா?" என்றவளை விசித்திரமாக பார்த்த சிவாவோ "ஏதாச்சும்.....?" என இழுக்க, அவளோ இமை மூடித் திறந்தவள் , " கிஸ் பண்ணிட்டான்" என்றபடி தலையை குனிந்துக் கொண்டாள்.
தரையில் காலை உதைத்த அர்ஜுனனோ "எதுக்குடி அவன் கூட போன?" என்க, அவளோ “மாட்டிக்க கூடாதுன்னு தான் போனேன். அவன் இதுக்காக கூப்பிட்டான்னு நேக்கு தெரியல, அவன தள்ளி விட்டுட்டு வந்துட்டேன்" என்க, சிவாவோ "மாட்டிடக்கூடாதுனு போனாலாம்,உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா? இப்போ மட்டும் அவனுக்கு சந்தேகம் வராதா? " என்றான் கடுப்பாக.
அர்ஜுனனோ "இனிமே அவன் கண்ணுல இவ படாம பாத்துக்கனும்" என்க, நிவேதாவோ அவசரமாக "சாவி கிடைச்சதா? இல்லையா? அத சொல்லுங்க?" என்றாள். இருபக்கமும் தலையை ஆட்டிய சிவாவோ "இல்லை" என்க, அவளோ "அப்போ என்ன பண்றது?" என்றாள்.
அர்ஜுனனோ "மூன்றாவது இடத்தில தான் பார்க்கணும், ஆனா இப்போ போக முடியாது" என்றவன், "நைட் திலோ ப்ரோக்ராம் இருக்கு அப்போ போகலாம், சிவா லிப்ட் கிட்ட வந்துடு" என்று கூறிவிட்டு நிவேதாவை அழைத்துக்கொண்டு சென்று விட்டான்.

இரவு நடனத்துக்கு சென்று கொண்டிருந்தனர் திலோத்தமா மற்றும் கண்ணன். அவனோ "இது ட்ராமா கல்யாணமா? இல்லை நிஜமாவே நடக்கப் போகுதா?" என்க, அவளோ "எதுக்கு அப்படி சொல்ற?" என்றாள். கண்ணனோ "நடக்குற டெக்கரேஷன் எல்லாம் பார்த்தா நாடாக கல்யாணத்துக்கு எதுக்கு இவ்வளவு செலவு பண்ணனும்னு தோணுது, ஆனா மாறன் சொன்னத பார்க்கும்போது அந்த பொண்ண தூக்கின நேரம் மட்டும் தான் அதீரன் அவள பார்க்கப் போய் இருக்கான், அதுக்கு அப்புறம் அவ கிட்ட ஒரு வார்த்தை கூட அதீரன் பேச இல்ல, அவளை எந்த ஒரு டிஸ்டபும் பண்ணல அதனால தான் அவ ரொம்ப ஜாலியா இருக்கா" என்றான். பெருமூச்சு விட்ட திலோத்தமாவோ "எதுவா இருந்தா நமக்கென்னடா? நமக்கு இந்த மிஷன் தான் முக்கியம்" என்றவள் அலங்காரம் செய்யும் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

ஒரு மணித்தியாலத்தின் பின்னர் அங்கே நடனம் ஆரம்பமாக, திவ்யாவோ சிவாவின் அறைக்கதவை நீண்ட நேரமாக தட்டியபடி இருக்க, அவன் கதவை திறக்க முடியாமல் யோசித்துக் கொண்டிருந்தான். திவ்யாவோ "மரியாதையா கதவை திறக்க போறியா இல்லையா? அங்க எல்லாம் வந்துட்டாங்க ப்ரோக்ராம் கூட ஸ்டார்ட் ஆயிடுச்சு, கதவ தொறடா" என கத்த, அவசரமாக தன் பேன்ட்டை கழட்டி வீசி டவலை எடுத்து இடுப்பில் கட்டிய சிவாவோ கதவை திறந்தவன், மூச்சு வாங்கிக் கொண்டே கதவு நிலையில் சாய, அவளோ மேலிருந்து கீழ் பார்த்தவள் "என்ன கோலம் இது? எதுக்கு இப்படி டவலோட நிக்கிற? இப்படித்தான் அங்கயும் வரப்போறியா? மரியாதையா பேண்ட போட்டுட்டு சீக்கிரம் வா" என மூச்சு விடாமல் பேச, அவனோ "மேடம் என்னால முடியல, சாயந்திரம் சாப்பிட்டது என்னவோ வயித்துக்கு ஒத்துக்கல போல பிடிங்கிட்டு போகுது" என்க, அவளோ முகத்தை சுளித்தவள் "இப்போ எப்படி போட்டோ எடுக்குறது? " என்க, அவனோ உள்ளுக்குள் "அடிப்பாவி ஒருத்தன் வயித்தால போகுதுன்னு சொல்றான், கொஞ்சம் கூட பரிதாபப்படாம முகத்தை சுளிச்சது மட்டுமில்லாம, போட்டோ எடுக்கிறது எப்படினு கேட்கிறாளே! சரியான செல்பிஸ்" என நினைத்தவன் "மேடம் ஒருத்தன் நிக்காம போகுதுனு புலம்புறேன், நீங்க ஃபோட்டோனு சொல்றீங்களே!" என்றவன் வயிற்றைப் பிடித்தபடி "மறுபடியும் வருது என்னால் முடியாது, நீங்க சமாளிச்சிடுங்க" என்றபடி குளியலறைக்குள் ஓட, திவ்யாவோ தலையில் அடித்துக்கொண்டே திலோத்தமாவின் நடனம் நடக்கும் அரங்கத்துக்கு கிளம்பினாள்.

திலோத்தமா மேடையில் ஏறி நடனமாடத் துவங்க, அங்கே ராகுல் மற்றும் சம்யு வந்து அமர, அதீரன் வரவில்லை. அவன் வராததை கவனித்த திலோவோ இதழ்களை வளைத்தபடி தொடர்ந்தும் ஆடத் துவங்கினாள். அதேநேரம் அரச சபையில் இருந்து ரொஹான் என்ற வெளிநாட்டவருடன் பிஸ்னஸ் பேசிக்கொண்டு இருந்தான் அதீரன். சொல்ல போனால் அவன் மட்டும் தான் பேசிக்கொண்டு இருந்தான் மற்றவர்கள் அவன் கட்டளை போல கூறும் விடயங்களுக்கு சரி என்பது போல தலையை ஆட்டிக் கொண்டே இருந்தனர். அவன் கூறிய அனைத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டனர்.

அதே நேரம் யாருக்கும் தெரியாமல் மேல் மாடியை அடைந்திருந்தனர் அர்ஜுனன், நிவேதா மற்றும் சிவா. அர்ஜுனனோ "இன்னும் ஹாபனவர் மட்டும்தான் இருக்கு, மீட்டிங் முடிய போறதா மாறன் மெசேஜ் பண்ணி இருக்கான், அதுகுள்ள நாம கண்டுபிடிக்கணும் கமான் சீக்கிரம் தேடுங்க" என மூவரும் அந்த நீச்சல் தடாகத்தை சுற்றி தேட ஆரம்பித்தனர்.
ஆமாம் அவர்கள் இருந்த இடம் அதீரனின் செல்லப் பிராணிகளான முதலைகள் இருக்கும் அந்த இடமே தான். அவர்கள் அங்கே அந்த சிப்பை செலுத்த ஏதாவது பொருத்தமான இடம் கிடைக்கிறதா என தேடியபடியிருக்க, நீச்சல் தடாகத்தின் இடது பக்கத்தின் தரையில் சிறிய சதுர வடிவிலான செதுக்கள் போன்ற அமைப்பு இருக்க, அதைக் கண்ட நிவேதாவோ "கைஸ் சீக்கிரம் இங்க வாங்க" என்றாள் சத்தமாக. அவர்களும் அவள் இருந்த இடத்தை நோக்கி ஓடிவரும் அதே நேரம் இரு காவலாளிகள் அங்கிருந்த படிகளில் ஏறி பேசியபடி வந்த சத்தம் கேட்க, மூவரும் அதிர்ந்தபடி பார்த்தனர்.

அவர்கள் மேலே வரும் முன்னர் கதவுக்கு இரண்டு புறமும் சென்று ஒளிந்து கொண்ட சிவா மற்றும் அர்ஜுனன் மூச்சுவிடாமல் நின்று இருந்தனர். மேலே வந்த காவலாளர்கள் அங்கே காவலுக்கு நிற்க தயாராக, சிவா மற்றும் அர்ஜுனன் ஒரே நேரத்தில் பாய்ந்து அந்த காவலாளிகளின் கழுத்தை பின்னாலிருந்து நெருக்க, மறைந்து இருந்த நிவேதாவும் அவசரமாக தன் கையிலிருந்த ஸ்பிரேயை அந்த காவலாளிகள் முகத்தில் அடித்தாள். அவர்கள் இருவரும் மயங்கி போக, "இவனுங்க எழ மார்னிங் ஆகும்... சீக்கிரமா எடுக்கலாம்" என்ற படி அந்த சிப்பை அந்த செதுக்கலில் செலுத்தலாம் என முயல, அங்கு அதற்கான எந்தவொரு இடமும் இருக்கவில்லை.

நிவேதாவோ "அப்போ அந்த ரூமுக்கான கீ இங்க இல்லையா?" என்றாள் ஏமாற்றமாக, அதேநேரம் "மீட்டிங் பினிஸ்ட்" என மாறனிடம் இருந்து மெசேஜ் வர, மூவரும் வேறு வழி இல்லை இதற்கு மேல் இங்கே இருந்தால் மாட்டிக் கொள்வோம் என எண்ணி கீழே கிளம்பிச் சென்றனர். மூவரும் மாடிப்படிகளில் இறங்கிய படியிருக்க அர்ஜுனனோ அப்படிகளின் ஓரங்களில் இருந்த சிறிய வித்தியாசமான உருவங்களை கண்டவன், "ஒரு நிமிஷம்" என்றான். சிவா மற்றும் நிவேதா என்ன என்பது போல அவனைப் பார்க்க, அவனோ "இந்த ஸ்டெப்ஸ்ல ஒரு டிசைன் இருக்கு," என்க, இருவரும் அதை ஆராய்ச்சியாக பார்க்க, அர்ஜுனனோ "அடுத்த ஸ்டெப்ஸ்லயும் இருக்கு" என்க, சிவாவோ "எல்லா ஸ்டெப்ஸ்லயும் ஒரு ஒரு சிம்பல் இருக்கு" என்றான்.

அவர்கள் ஒவ்வொரு படியாக பார்த்த படி மேலே ஏற, கடைசிப் படியில் சிறு சதுர வடிவ செதுக்கள் இருந்தது. அதை கீழே முட்டியிட்டு பார்த்த சிவாவோ "இது அதீரன் கைல இருந்த மாதிரி இல்லையே!" என்க, நிவேதாவோ அதை ஆராய்ச்சியாக பார்த்தவள் "இந்த மாதிரி டாட்டுவ எங்கோ பார்த்த மாதிரி நியாபகம் நேக்கு இருக்கு’’ என்றபடி யோசித்தவள், “ஹாங் அந்த ராகுல் கையில பார்த்து இருக்கேன்" என்றாள்.

அர்ஜுனனோ தனது பாக்கெட்டில் இருந்த சிப்பை கையில் எடுத்து அந்த உருவத்திடம் கொண்டு வந்த படி "ஒரு வேலை இதுவா இருக்குமோ? ஆனா இந்த சிப்ப எங்க போடணும்னு தெரியலையே!" என்க, அந்த சிப் அந்தச் செதுக்களின் அருகில் செல்லும் போது ஒரு சிவப்பு நிற ஒளியை எழுப்பியது. அந்த சிவப்பு நிற ஒளி தோன்றிய இடத்தில் சிவாவோ விரல் வைத்து அழுத்தி விட்டபடி அர்ஜுனனிடம் திரும்பி "நீ ஸ்விமிங் பூல் கிட்ட இருக்க சிம்பல போய் செக் பண்ணு" என்க, அவனும் நிவேதாவும் அங்கே ஓடினர். அப்போது அங்கிருந்த செதுக்களும் திறந்துகொள்ள, அர்ஜுனனோ தன் கையில் இருந்த அந்த சிப்பை அதில் செலுத்த, அதே நேரம் அந்த தடாகத்தின் நீர் எல்லாமே தானாகவே உள்ளே செல்ல அந்த நீச்சல் தடாகத்தின் நடுவில் இருந்து தரையை பிளந்தபடி ஒரு பெட்டி மேலே வந்தது. அத்தோடு அந்த தடாகத்தில் முதலைகள் மட்டும் சிறை செய்யப்பட்டு மேலே எஞ்சின. நிவேதாவோ “இந்த முதலய தாண்டிப் போய் அந்த பாக்ஸ திறக்கணும்” என்க, சிவாவோ நொடியும் தாமதிக்காமல் அந்த பெட்டியின் மேல் பாய்ந்தான். அர்ஜுனனோ “சிவா கேர் புள்” என்க, நிவேதாவும் அவனை பதட்டமாகத் தான் பார்த்து இருந்தாள். ஒரு ஆள் நிற்கும் அளவு இருந்த அந்த பெட்டியின் மேல் நின்று இருந்த சிவாவோ மெதுவாக குனிந்து அதில் இருந்த பட்டனை அழுத்த , நிவேதா நின்று இருந்த அந்த சிறிய செதுக்கள் பிளவுற்று ஒரு சாவி மேலே வந்தது.

அதில் இருந்த சாவியை மெதுவாக வெளியே எடுத்தாள் நிவேதா. அதேநேரம் டெக்னிகல் அறையில் ஏதோ அலாரம் அடிக்க ஆரம்பிக்க, முதல் அதை அணைத்து இருந்தான் மாறன். அவன் மட்டும் அதை அணைக்காமல் இருந்திருந்தால் அந்த சப்தம் அந்த ராஜ்ஜியம் முழுக்கவே கேட்டிருக்கும்.

நிவேதா சாவியை கையில் எடுத்த அடுத்த நொடி அந்த பெட்டி உள்ளே செல்ல ஆரம்பிக்க , அர்ஜுனனோ “சிவா ஜம்ப்” என கத்த , சிவாவும் அங்கிருந்து தரையை நோக்கி பாய்ந்தான். ஒரு நொடி தாமதித்து இருந்தாலும் பெட்டி உள்ளே செல்ல ஆரம்பித்த உடனேயே சிறையில் இருந்து விடுபட்ட முதலைகளிடம் அவன் சிக்கி இருப்பான். அர்ஜுனனோ "நாம இரண்டாவது டாஸ்கையும் முடிச்சிட்டோம், இனிமே நாம நினைச்ச மாதிரி வைரத்தை எடுத்துடலாம்" என்ற அதே நேரம் "திருட்டு கும்பலா நீங்க?" என்ற சத்தம் கேட்டு அதிர்ந்து திரும்பினார்கள் மூவரும்.
 
அத்தியாயம் 8

அங்கே நின்று இருந்த திவ்யாவோ "என்ன தைரியம் இருந்தா திருட வந்து இருப்பீங்க? இப்பவே போய் எல்லார்கிட்டயும் சொல்றேன்" என்றபடி திரும்ப, நிவேதாவோ "திவ்யா நாங்க சொல்றத கேளு" என கத்த, அங்கிருந்து கீழே செல்ல முயன்ற திவ்யாவின் முன்னால் பாய்ந்து வந்து நின்றான் சிவா. அவளோ அவனை கோபமாக பார்த்தபடி "என்ன தைரியம் இருந்தா நீ மீடியாவ ஏமாத்தி இருப்ப? உன்னை சும்மா விடமாட்டேன் பார்த்துக்க" என்க, அவனோ "பின்னாடி போடி" என்றான் பல்லைக் கடித்தபடி, திவ்யாவோ "டியா? " என்க, அங்கே வந்த நிவேதாவோ "திவ்யா ப்ளீஸ் சத்தம் போடாத, நாங்க திருடங்க இல்ல, போலீஸ்" என்றாள். திவ்யாவோ "யார ஏமாத்துறீங்க? இப்போவே சப்தம் போட்டு உங்கள மாட்டி விடுறேன்" என்றவள், "யாராவது வாங்க திருடன் திருடன்" என கத்த துவங்க, நிவேதாவோ "திவ்யா ப்ளீஸ் கத்தாத" என்பதையெல்லாம் திவ்யா காது கொடுத்து கேட்கவில்லை.

சிவாவோ "சொல்லிட்டு இருக்கோம்" என்ற படி திவ்யாவின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறையை விட, அவளோ தூரச் சென்று விழுந்தாள். அவன் அறைந்த அறையில் அவள் செவ்விதழ் கிழிந்து ரத்தம் வர, விழிகளும் நீரை சிந்தியது. அவள் முன் வந்து அவளின் தலை முடியை கொத்தாக பிடித்து தூக்கியவன் "நாங்க ஒரு மிஷன்காக வந்து இருக்கோம், அது முடியும் வரைக்கும் நீ வாய தொறக்க கனவுல கூட நினைக்கக்கூடாது, ஏதாச்சும் திருட்டுத்தனம் பண்ண நினைச்ச இப்போவே உன்னை துண்டு துண்டா வெட்டி இந்த முதலைக்கு இறையாகிடுவேன்" என்க, அவளோ பயத்தில் வாயை இறுக்கி பொத்தி கொண்டாள்.

நிவேதாவோ அங்கே கீழே மயங்கி கிடந்த இரண்டு காவலாளிகளை காட்டி "இவங்கள என்ன பண்றது?" என்க, நெற்றியை நீவிய அர்ஜுனனோ அங்கே இருந்த மதுபாட்டில்களை கண்டவுடன் அவசரமாக அதை எடுத்து மயங்கிய இரு காவலாளியின் வாயில் ஊற்றி விட்டு அவர்களை அமரவைத்தவன் "கிளம்பலாம்" என்க, நிவேதாவோ அங்கே வாயில் கை வைத்தபடி அதிர்ந்து நின்ற திவ்யாவை திரும்பிப் பார்த்து "இவ" என்க, திவ்யாவை திரும்பி ஒரு பார்வை பார்த்த சிவாவோ "இனிமே அவ வாய திறக்க மாட்டா. வெளியில சொல்லலாம்னு நெனச்சா அவ சங்க கடிச்சி துப்பிடுவேன்" என்க, திவ்யாவோ அரண்டு விழிக்க, நிவேதாவோ வந்த சிரிப்பை அடக்கியபடி மறு பக்கம் திரும்பிக் கொண்டாள். சிவாவோ திவ்யாவிடம் "என்ன வாய திறப்பியா?" என்க, அவளோ அவசரமாக இல்லை என்பது போல தலையாட்டினாள்.
அவர்கள் அனைவரும் அங்கிருந்து கீழே செல்ல அங்கே வந்தனர் சம்யுக்தா மற்றும் மாறன். சம்யுக்தாவைக் கண்ட அர்ஜுனன் மற்றும் நிவேதா அங்கிருந்த சுவருக்கு பின்னால் மறைந்துக் கொள்ள, சிவாவோ திவ்யாவிடம் குனிந்து , “நான் சொல்ற எல்லாத்துக்கும் ஆமா போடுற” என்க , சம்யுக்தா மற்றும் மாறன் அவர்கள் முன்னால் வந்து நின்றனர். மாறனோ புருவம் உயர்த்தி சிவாவைப் பார்க்க, சிவாவோ இமை மூடித் திறந்தான். சம்யுக்தாவோ சிவா மற்றும் திவ்யாவை சந்தேகமாக பார்த்தபடி “நீங்க அந்த ஜெனலிஸ்ட் இல்ல? ஆமா இங்க என்ன பண்ணுறீங்க” என்க, சிவாவோ அவசரமாக , “மாடில போட்டோ எடுக்க வந்தோம் மேடம், நைட் வீவ் நல்லா இருக்கும்னு சொன்னாங்க , அதுனால தான் மேகஸீன் கவர் பிக்காக போட்டோ எடுக்க வந்தோம்” என்றான்.
சம்யுக்தாவோ “கைல கேமரா இல்லயே!” என்க, “இந்த பொண்ணு கேமராவ கீழ போட்டுட்டா மேடம். அது மாடில இருந்து கீழ விழுந்துடுச்சி” என எந்த தடுமாற்றமும் இல்லாமல் சிவா கூற , திவ்யாவோ “அடப் பாவி கொஞ்சம் கூட அசராம அசால்ட்டா பொய் பேசுரானே!” என்று தான் எண்ணிக் கொண்டாள்.
அப்போதும் அவர்களை நம்பாமல் பார்த்த சம்யுக்தாவோ மாறனின் புறம் திரும்பி “கீழ இருக்க கார்ஸ் கிட்ட விசாரிங்க” என்றபடி போக, மாறனோ “ஓகே மேம் இப்போவே கேக்குறேன்” என்றவன் வாக்கி டாக்கி பேசுவது போல பாவனை செய்த படி சிவாவிடம் இருந்து சாவியை வாங்கிக் கொண்டு சம்யுக்தாவின் பின்னால் அவசரமாக சென்றான். அதன் பின் அங்கிருந்து அர்ஜுனன் மற்றும் நிவேதா சென்று , சிவாவோ “மிஷன் முடியும் வரைக்கும் நீ என் ரூம்ல என் கண்பார்வைல தான் இருக்க” என்றவன் , அவள் மறுப்பு எதையும் காதில் வாங்காமல் தான் அழைத்துச் சென்றான். அறைக்குள் சென்ற சிவாவோ அப்படியே மல்லாக்காக கட்டிலில் விழ, திவ்யாவோ ஓரமாக நின்று முழித்துக் கொண்டு இருந்தாள். அவனோ “எதுக்கு மரம் மாதிரி அப்படியே நிக்குற? அந்த லைட்ட ஆப் பண்ணு” என்க, அதிர்ந்தபடி அவனைப் பார்த்தவளோ “எதுக்கு என்னால முடியாது” என கத்த , அவனோ “வந்தேன்னா உன் சங்குலயே மிதிப்பேன்” என்க, அவளோ அவசரமாக மீன்குமிழை அணைத்தவள், அப்படியே நிற்க , அவனோ “அப்படியே நைட் முழுக்க காவலுக்கு நில்லு” என்றான். அவளோ “கடவுளே! மீடியால பேரு வாங்கலாம்னு ஆசைல இங்க வந்தா? இப்படி ஒரு ரவுடி கிட்ட மாட்டி விட்டியே இது உனக்கே நியாயமா?” என புலம்பியபடி வந்து அமர்ந்தவள் கொஞ்ச நேரத்துக்குப் பின் , அவன் தூங்கி விட்டானா என பார்க்க அவனோ நன்றாக உறக்கத்தில் இருந்தான். அவளோ “அப்பாடா ரவுடி தூங்கிடுச்சு போல நாம சத்தமே போடாம நம்ம ரூமுக்கு எஸ்கேப் ஆயிடலாம்” என்று எண்ணியவள் பூனைப் பாதம் வைத்து கதவின் அருகே சென்று கதவை திறக்க முயல , அதை அசைக்கக் கூட முடியவில்லை. திவ்யாவோ “என்ன ஓபன் பண்ண முடியல” என தடுமாற, சிவாவோ “சாவி போடாம ஓபன் ஆகாது” என்க, அவளோ அதிர்ந்த படி நின்றவள் “இவன் இன்னும் தூங்கல போலயே!” என புலம்ப, அவனோ “நீ மூடிட்டு படுக்குறியா? இல்ல அங்க வந்து உன் கழுத்த கடிச்சி ரத்தத்த குடிக்கவா” என்க, அவளோ அவசரமாக சோபாவை நோக்கி ஓடியவள் “ஆம்பள இரத்தக் காட்டேறியா இருப்பான் போலயே!” என்று தான் புலம்பிக் கொண்டான்.

சம்யுக்தாவோ நேராக சாப்பிடும் அறைக்குள் நுழைய மாறனும் எரிச்சலாக அவள் பின்னாலேயே நுழைந்தான். அங்கே அவளுக்கு உணவுப் பரிமாற ஆள் இல்லாமல் இருக்க, மாறனோ “மேம் நான் சேவ் பண்ண ஆள் வர சொல்றேன்” என்றபடி போக எத்தணிக்க , அவளோ “அதுக்கு எல்லாம் ஆள் இருக்கு” என்றாள். அவனோ யாரு என சுத்திப் பார்க்க, அவனை மேலிருந்து கீழ் நக்கலாக பார்த்த சம்யுக்தாவோ “நீ தான்” என்க, அவனோ வந்த கோபத்தை அடக்கியபடி தான் அவளைப் பார்த்தான்.

அவளோ “ என்ன அப்படி பாக்குற? நீ வேலக்காரன் தானே! ஒன்னும் இந்த அரண்மைக்கு ராஜா இல்லையே! வா வந்து சேவ் பண்ணு” என்க, அவனும் வேறு வழியில்லாமல் , அவளுக்கு பறிமாற ஆரம்பிக்க , அவளோ “இந்த சம்யுக்தாவுக்கு அஸிஸ்டன்டா இருந்தா பரிமாற மட்டும் இல்ல, நான் சாப்பிட்ட எச்சி பிலேட்ட கூட வாஷ் பண்ண தெரியணும். அன்டஸ்டான்ட்” என்றவளின் குரலில் அத்தனை கர்வம். “எஸ் மேம்” என்றபடி பரிமாறி முடித்த மாறனுக்கு அவள் கழுத்தை நெறித்து கொன்று விடலாமா? என்று தான் தோன்றியது. அவளோ உணவை ரசித்து ரசித்து சாப்பிட்டுக் கொண்டு இருக்க , அங்கே நின்று அவளுக்கு தேவையானதை அவ்வப்போது தட்டில் எடுத்து வைத்துக் கொண்டு இருந்த மாறனோ “இவ எப்போ சாப்பிட்டு முடிக்கிறது. நாம எப்போ இந்த கீய கொண்டு போய் அவங்க கிட்ட கொடுக்குறது.” என்று தான் புலம்பியபடி இருந்தான்.


அடுத்த நாளே அவர்களது இறுதி டாஸ்கை முடிக்க ஆயத்தமாகினர் அனைவரும். அன்று மதியம் விருந்தினர் அனைவருக்கும் விசேட விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க, அச் சந்தர்ப்பத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்தனர் நம் போலீஸ் குழு. மாறனோ முதலில் தமது படைக்கு விடயத்தைக் கூறி அவர்களை அதினாப் புறம் நோக்கி வர வைத்து இருந்தான். அதேநேரம் கண்ணன் மற்றும் திலோத்தமா பாதாளத்தில் இருக்கும் ரகசிய அறையை நோக்கி செல்ல, அர்ஜுனனும் ஐஸ்வர்யாவை அழைத்து வரச் சென்றான். நிவேதாவை அறையிலேயே இருக்கச் சொன்ன அர்ஜுனனும் ஐஸ்வர்யாவை அழைக்க தனியாகத்தான் அவள் அறைக்கு சென்றான். அந்த மிஷனில் இருந்த ஒவ்வொருவருக்கும் தெரியும் அதீரன் கையில் பிடிபட்டால் அதுதான் அவர்களின் இறுதி நாள் என்று, இருந்தும் அந்த மரணப் போராட்டத்தில் விரும்பியே விளையாட ஆரம்பித்தனர்.

கண்ணன், திலோ இருவரும் பாதாள அறைக்கு சென்று கொண்டு இருந்தனர். அன்று அரண்மையில் விசேட விருந்து என்பதனால் அங்கு அதிகமான காவலாளிகள் இருக்கவில்லை என்பது இருவருக்கும் சாதகமாக இருக்க அவர்கள் அறையை நோக்கி சென்றனர். நுழைவாயிலில் இருந்த காவலாளி முகத்தில் மறைந்தபடி வந்த கண்ணனோ ஓங்கி குத்த அவனோ கீழே விழுந்தான். இருவரும் கையில் கண்ணை எடுத்துக்கொண்டு மெதுவாகப் படிகளில் இறங்க ஆரம்பிக்க, அங்கே ஷு சப்தம் கேட்டது. மெதுவாகப் படிகளில் இறங்கிய கண்ணனோ அங்கே வந்த காவலாளியை பிடித்து கீழே அழுத்தி அவன் மார்பில் துப்பாக்கி ரவையை இறக்க, அது சைலன்ஸர் துப்பாக்கி என்பதால் வெளியே எந்த சப்தமும் கேட்கவில்லை.

அதே நேரம் இன்னொரு காவலாளியோ "ஹேய்" என கத்தியபடி ஓடிவர, அவனை பாய்ந்து பிடித்த திலோத்தமா அவன் உயிர் நாடியிலேயே காலினால் அடித்தவள், அவன் தலையில் துப்பாக்கி குண்டுகள் இரண்டை இறக்கினாள். கீழே கிடந்த காவலாளிகளை ஓரமாக இழுத்துப் போட்ட இருவரும் அந்த அறையை நோக்கி வந்தார்கள். அறையின் வாயிலில் நின்ற இரண்டு காவலர்களையும் அடித்துப் போட்டு விட்டு அந்த அறையை திறக்க முயன்றனர். கண்ணனோ சாவியை செலுத்த அங்கு அதீரனின் கைரேகை அடையாளம் கேட்டது. அவனோ திரும்பி திலோவைப் பார்க்க அவளோ பாண்டில் வைத்திருந்த அவனது கைரேகை அடையாளத்தை கொடுக்க, அவன் அதை செலுத்தினான். அந்த இரும்பினால் செய்யபட்ட பெரிய கதவுகள் திறக்கப்பட, அந்த விசாலமான அறை அவர்கள் முன் தோன்றியது. அந்த அறையில் இருந்த பொருளை இருவரும் விழித்துப் பார்த்தனர்.

அடுத்த நாள் தனியான ஹெலிகாப்டர் ஒன்றில் சில காவலாளிகளுடன் வந்து அதினாபுரத்தில் இறங்கினார் மினிஸ்டர் குருமூர்த்தி. மேலும் 10 ஹெலிகாப்டரில் அவரது காவலாளிகள் பலர் துப்பாக்கிகளுடன் வர, அதினாபுர மாளிகையில் இருந்தும் பல காவலர்கள் வந்தனர். அவர்கள் அனைவரும் மினிஸ்டர் குருமூர்த்தியின் ஆட்கள் ஆகும். அவர்கள் அனைவரும் கண்ணில்படும் அதீரனின் காவலர்களை சுட்டு வீழ்த்த, குருமூர்த்தி வேக எட்டுகளுடன் பாதாள அறையை அடைந்தார்.

அங்கே திலோத்தமா, மாறன், சிவா, நிவேதா,அர்ஜுனன், கண்ணன், ஐஸ்வர்யா, சம்யுக்தா என அனைவரும் நின்று கொண்டிருக்க, ராகுல் மற்றும் அதீரன் கைகள் விலங்கிடப்பட்டு தரையில் முட்டியிடப்பட்டு இருந்தனர்.

அக்காட்சியை கண்டு புன்னகைத்த குருமூர்த்தியோ "வெல்டன் வெல்டன்..... நீங்க எல்லாரும் சிறந்த போலீஸ்னு நிரூபிச்சுட்டீங்க!" என கத்தியவர் அதீரன் முன்னால் வந்து "அதீரன் அதினாபுரத்தோட அரசன் அதீரன். இனிமே அப்படி ஒருத்தன் இருந்ததுக்கான அடையாளமே இருக்காது. இனிமே இந்த மொத்த அதினாரத்துக்கும் ஒரே அரசன்னா அது இந்த குருமூர்த்தி தான்" என பெறுமையாக மார்பில் தட்டிக் கொள்ள, அங்கிருந்தவர்களோ விசித்திரமாக தான் அவரைப் பார்த்தனர்.

அவரோ எட்டி அதீரனின் மார்பில் உதைத்தவர், "என்ன தைரியம் இருந்தா என்னோட பொண்ணையே தூக்கி இருக்க" என்ற குருமூர்த்தியிடம், மாறனோ "சார் உங்க பொண்ண காப்பாத்திட்டோம் ஆனா வைரக்கல் இங்க இல்ல" என்க, சத்தமாக சிரித்த குருமூர்த்தியோ தன் காவலாளிகளின் புறம் திரும்பி "வைரக்கல் வேணுமாம்...... அந்த வைரக்கல் இந்த போலீஸ் நாய்களுக்கு வேணுமாமே!, அத என்ன பண்ண போற? கொண்டு போயி கவமன்ட் கிட்ட குடுப்பியா?" என்றவர் "அந்த கல்ல எவன் தூக்கினானோ அவன் கிட்ட தான் அது இருக்கும், அந்தக் கல்ல ஆறு மாசத்துக்கு முன்னாடி கோயில்ல இருந்து தூக்கின ஆளு நானே தான், நீங்க புடிச்சு தூக்குல போடணும்னு நினைச்ச அந்த குற்றவாளி இந்த அதீரன் இல்ல இந்த குருமூர்த்தி தான்" என்றார் கர்வமாக, அனைவரும் அவரை அதிர்ச்சி மாறாமல் பார்க்க.

குருமூர்த்தியோ "இந்த அதீரனோட சேர்ந்து இந்த போலீஸ் நாய்களையும் போட்டுடு, நம்மள பாத்தின உண்மை தெரிஞ்ச யாரும் உயிரோட இருக்கக்கூடாது" என்க, ஐஸ்வர்யாவோ "அப்பா" என்றபடி அவரது அருகில் வந்தவள், "அர்ஜுனன விட்டுடுங்கப்பா பிளீஸ்" என்க, அவரோ "எல்லாத்துக்கும் முன்னாடி உன்ன போட்டுடுவேன். போய் வாய மூடிட்டு உட்காரு" என கத்தினார் குருமூர்த்தி.

சம்யுக்தாவை பார்த்த குருமூர்த்தியோ "எல்லாருக்கும் முன்னாடி இவள போடு, ம்ம் எல்லோரையும் போட்டு தள்ளுங்க , ஒருத்தர் கூட இங்க இருந்து உயிரோட போகக் கூடாது" என கத்தியபடி இருக்க, அதே நேரம் ஒரு காவலாளியோ ஒரு பெட்டியைக் கொண்டுவந்து குருமூர்த்தியிடம் நீட்ட, அதை கண்டவரோ அதிர்ந்த படி பார்த்தார்.
 
அத்தியாயம் 9

அந்தப் பெட்டியிலிருந்த வைர கல்லைப் பார்த்து அதிர்ந்த குருமூர்த்தியோ "இ.. இத.... எ.. எதுக்கு இங்க கொண்டு வந்த?" என கத்த, "திருடின ஆளு கிட்ட தானே கல்லு இருக்கணும் மினிஸ்டர் குருமூர்த்தி. அப்படினா நான் திருடப்பட்டதா சொல்லி இத்தனை போலீஸ்காரங்க இவ்வளவு ரிஸ்க் எடுத்து என்னை பிடிக்க வந்து இருக்காங்க, அப்படினா என் கிட்ட தானே இருக்கணும்" என்றபடி எழுந்து நின்று விலங்கை கீழே வீசியபடி சோம்பல் முறித்தான் அதீரன்.

குருமூர்த்தியோ "நீ... நீ...." என அதிர்ந்தபடி பார்த்தவரின் உடல் பயத்தில் நடுங்க , நாவில் வார்த்தைகள் வர மறுத்தது. சிரித்த அதீரானோ “என்ன குருமூர்த்தி வெரும் காத்து தான் வருது போல” என புருவம் உயர்த்தி கேட்க, அதே நேரம் அங்கே வந்த அதீரனின் காவலாளிகள் குருமூர்த்தியின் ஆட்களை நொடிப்பொழுதில் சுட்டுத்தள்ள அவரோ அதிர்ந்து பார்த்தார். அவரின் அருகில் வந்து துப்பாக்கி மூலம் அவர் வதனத்தில் கோலம் போட்ட அதீரனோ "வந்தமா போட்டமானு இருக்கணும் குருமூர்த்தி, அதை விட்டுட்டு வீர வசனம் எல்லாம் நமக்கு எதுக்கு? அதுலயும் நீ பேசின வசனத்தை எண்ணிப் பார்த்தா.... அதுல இவனைப் போடு, அவன போடுன்னு ஒரே வார்த்தை தான் இருக்கு, வெரி பேட் உனக்கு இன்னும் சரியா அரசியல் தெரியல கண்ணா, அதுதான் பிளான் எல்லாம் பக்காவா போட்டுட்டு, அதை சரியா செய்ய முடியாம இப்படி என் முன்னாடி நிக்கிற" என்றவன் "சரி இப்போ எதுக்கு நமக்கு அது எல்லாம், என்னடா அரஸ் பண்ணியாச்சின்னு சொன்னவன் இப்படி நின்னு பேசிட்டு இருக்கான்னு தானே யோசிக்கிற? ஒரு ரீகாப் போலாமா?” என்றான் புருவம் உயர்த்தியபடி.

அறையில் ராகுலுடன் பேசியபடி இருந்த அதீரனிடம் ஓடி வந்த ஒரு காவலாளியோ "பாஸ் பாஸ் மாடில இருக்க சும்மிங் புல் கிட்ட இருந்த ரெண்டு செக்யூரிட்டியும் மயங்கி கிடக்கிறாங்க" என்க, சோம்பல் முறித்த படி எழுந்த அதீரனோ "வேட்டை ஆரம்பமாயிடுச்சு, இனிமே இறங்கி ஆடலாம்" என்றபடி போக, அவன் பின்னால் ராகுலும் போனான். அதே சமயம் அங்கே வேகமாக வந்து கொண்டிருந்த மாறனை பார்த்து சொடக்கிட்ட அதீரனோ "போகலாம்" என்றபடி அவனையும் ஒரு அறைக்கு அழைத்து சென்றான். அங்கிருந்தவர்களை கண்ட மாறனோ ஒரு நொடி அதிர்ச்சியில் விழிக்கவே செய்தான். அங்கு இருந்தது அர்ஜுனன், நிவேதா மற்றும் ஐஸ்வர்யாவே தான்.

அங்கிருந்த காவலாளியோ "இவங்க தான் பாஸ் அந்த போலீஸ்காரங்க" என்க, மாறனோ "அப்போ சிவா, திலோ,கண்ணா மூணு பேரும் இன்னும் மாட்டல" என யோசித்தான்.
சற்று நேரத்திற்கு முன்னால் நிவேதாவை அறையிலேயே இருக்க சொன்ன அர்ஜுனனோ ஐஸ்வர்யாவை காப்பாற்ற அவள் அறைக்குள் சென்றான். அங்கே ஐஸ்வர்யாவோ கட்டிலில் படுத்து விட்டத்தை பார்த்துக் கொண்டு இருக்க அறையில் மெதுவாக நுழைந்தான் அர்ஜுனன். அவனைக் கண்ட ஐஸ்வர்யா துள்ளிக் குதித்து எழுந்தவள் அவனிடம் ஓடி வந்து “அர்ஜு” என கத்த , அவசரமாக அவள் வாயில் கை வைத்து பொத்திய அர்ஜுனனோ “சத்தம் போடாதே!” என்க, அவளோ “ஓகே ஓகே” என்றாள் மெதுவாக. அவனோ அவள் வாயில் இருந்து கையை எடுக்க, அவளோ “என் கிட்ட லவ்வ சொல்ல வந்தியா அர்ஜு” என கண்கள் மின்ன கூற, அவனோ “மண்ணாங்கட்டி ஒன்ன இங்க இருந்து கூட்டிட்டு போக தான் வந்தேன், சத்தம் போடாம வா” என்றபடி அவளை அங்கிருந்து வெளியே அழைத்துப் போக , அங்கே இரண்டு காவலாளிகள் வந்தனர்.

அவளை அங்கிருந்த தூனுக்குப் பின்னால் மறைத்து வைத்த அர்ஜுனனோ, அக் காவளர்களின் பின்னால் சென்று சத்தமே போடாமல் கத்தியை கழுத்தில் இறக்கினான். அவளோ “வாவ் நம்ம ஆளு சூப்பர் ஹீரோ போல , என்னமா பொபோம் பண்றாறு , ஐசு நீ ரொம்ப லக்கி” என கூறியபடி இருக்க , அங்கே வந்த அர்ஜுனனோ அவளது கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போக , அவளும் சிரித்துக் கொண்டே போனாள்.

அங்கிருந்து இருவரும் கொஞ்ச தூரம் தான் சென்று இருப்பர் திடீரென அங்கே நான்கு காவலாளிகள் துப்பாக்கியுடன் அவர்கள் முன்னால் வந்து நிற்க, ஐஸ்வர்யாவோ பயந்து தான் போனாள். அர்ஜுனன் சுதாகரிக்கும் முன்பே அவனது பின் தலையில் துப்பாக்கியால் அடித்தாள் சம்யுக்தா , அவனோ தலையை பிடித்தபடி கீழே விழ, ஐஸ்வர்யாவோ “அர்ஜு” என கத்தியபடி விழுந்தவனைப் பிடிக்க, அவளது முடியைப் பிடித்து தூக்கிய சம்யுக்தாவோ பளார் பளார் என அவள் கன்னங்களில் மாறி மாறி அறைந்து விட்டு “என்ன தைரியம் இருந்தா எங்கலயே ஏமாத்துவீங்க?” என கத்தியவள் ,”இவங்க ரெண்டு பேரையும் ரூமுக்கு இழுத்துட்டு வாங்க..... கூடவே, இவன் கூட வந்தாலே ஒரு போலீஸ்காரி அவளையும் அடிச்சு இழுத்துட்டு வாங்க” என்றபடி முன்னால் போக , காவளர்களோ அர்ஜுனன் மற்றும் ஐஸ்வர்யாவை தர தரவென இழுத்துச் சென்றனர்.
அதன்பின் நிவேதாவையும் அறையிலிருந்து இழுத்து வந்து இருந்தனர் காவலாளிகள். மயங்கி இருந்த அர்ஜுனனின் முகத்தில் நீரை ஊற்ற அவனோ கண் விழித்தான். அங்கே நிவேதாவையும் கொண்டு வந்து இருப்பதைப் பார்த்த அர்ஜுனனோ இமை மூடித்திறக்க, காவலாளிகளோ "யாருடா உன் கூட வந்தா சொல்லு உண்மைய சொல்லு" என்றபடி அர்ஜூனை அடிக்க ஆரம்பித்தனர்.

இடுப்பில் தன் சேலையின் முந்தானையை சொருகிய சம்யுக்தாவோ நிவேதாவிடம் வந்தவள் "சொல்லுடி யாரெல்லாம் உன் கூட வந்தா சொல்லு, உண்மைய சொல்லு , இல்லன்னா நீ உயிரோடயே போக முடியாது" என்று கத்தியபடி நிவேதாவை போட்டு துவைத்து எடுத்தாள். கூடவே அர்ஜுனன் அடி வாங்குவதை பார்த்து பொறுக்க முடியாமல் “அடிக்காதீங்க, அவர அடிக்காதீங்க” என கத்திய ஐஸ்வர்யாவுக்கும் சம்யுகத்தா மூலம் அடிகள் தாராளமாகவே விழச் செய்தது. என்ன தான் அவர்களைப் போட்டு புரட்டி எடுத்தாலும் அங்கே ஐஸ்வர்யாவின் சத்ததை தவிர மற்ற இருவரும் வாய் திறக்கவே இல்லை. அத்தனை அடிகளை வாங்கிக் கொண்டும் மெளனம் தான் காத்தனர்.

அவர்களின் அடிவாங்கிய முகத்தை மாறனோ பார்த்தபடி நிற்க, அதீரனோ "எவ்ளோ அடிச்சாலும் உண்மைய சொல்ல மாட்டேங்குறாங்களாம் நீ கேளு மாறா" என்க, மாறனோ "யெஸ் பாஸ்" என்றபடி கீழே கைகள் கட்டப்பட்டு முட்டி இடப்பட்டிருந்தவர்களிடம் வந்தவன் "உண்மைய சொல்லுடி" என ஓங்கி நிவேதாவின் கன்னத்தில் அறைந்துவிட்டு அர்ஜுனன் மார்பில் எட்டி உதைத்தான்.

நிவேதாவோ "அநியாயம் பண்றிங்கடா, ரொம்ப அநியாயம் பண்றீங்க! டேய் மாறா நீயும் எதுக்குடா அறஞ்ச கன்னத்திலேயே திரும்பத் திரும்ப அறையிற, ஏற்கனவே வலி உயிர் போகுது, அந்தப் பொம்பள டான் அடிச்சதே இன்னும் ஆறல அதுக்குள்ள போலீஸ் அடியா? பெருமாளே இவங்க கிட்ட அடி வாங்கியே போய் சேந்துடுவேன் போலயே!" என புலம்பிய படி திரும்ப, அங்கே இருந்த சோபாவில் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்த ராகுலோ நிவேதாவை தான் மேலிருந்து கீழ் ரசனையாக பார்த்துக் கொண்டிருந்தான்.
நிவேதா அவனைப் பார்க்கவே கண்ணடித்த ராகுலோ பறக்கும் முத்தத்தை வழங்க, "அட சண்டாளா ஒருத்தி உயிர் போற அளவு அடி வாங்கிண்டு இருக்கேன், நீ ப்ளையிங் கிஸ் தர" என புலம்பிய படி இருக்க, "சொல்லுடா சொல்லுடா" என அர்ஜுனனை அடித்துக்கொண்டு இருந்த மாறனோ திரும்பி பளார் என ஒரு அறை கொடுத்தான் நிவேதாவுக்கு. அதைக்கண்ட ராகுலோ வந்த சிரிப்பை அடக்கியபடி அவளைப் பார்த்து இருந்தான்.

திரும்பவும் மாறனோ அர்ஜுனனின் முகத்திலேயே குத்த , அவனோ உள்ளுக்குள் "உனக்கு என்ன பாவம்டா பண்ணுனேன்? இப்படி அநியாயத்துக்கு ஓவர் போபோமெனஸ் பன்றியே! அவனுங்க அடியே பரவாயில்லை போல, இவன் இப்படி வச்சி செய்றானே!" என்றுதான் எண்ணிக் கொண்டு இருந்தான். அடிக்கும் மாறனுக்கே கை வலிக்கச் செய்தது , அப்போது அடிவாங்கும் இருவருக்கும் எப்படி வலிக்கும் என்று நினைத்தாலும் அவனால் அப்போதைக்கு அதீரனை மீறி எதுவும் செய்ய முடியாவில்லை.

அதே நேரம் இருவர் சிவாவைப் பிடித்து இழுத்துக் கொண்டு வர, இன்னும் இரண்டு காவலாளிகள் திவ்யாவை தூக்கியபடி வர, அவளோ காலை தரையில் அடித்தபடி "நான் எதுவும் பண்ணல, எனக்கும் இவங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல என்னை விட்டுடுங்க" என கத்தியபடி வந்தாள்.

அதீரனோ திரும்பிப் பார்த்துவிட்டு "அட நம்ம அடுத்த போலீஸ் போட்டோகிராஃபரா? சூப்பர்ல்ல" என்க, அதே நேரம் அதீரனின் போன் அலாரம் அடிக்க துவங்க, " கேம் ஓவர்" என்றவன் "அப்போ என்ன வெற்றிமாறன் நாம அடுத்த போலீஸ், அதான் டான்ஸர பார்க்கப் போலாமா?" என்க மாறனோ ஏற்கனவே இதை கொஞ்சம் எதிர்பார்த்தான் தான்.

மாறனோ அமைதியாக நிற்க அர்ஜுனனோ "அதுதான் ஏற்கனவே உனக்கு உண்மை தெரிஞ்சிருச்சுல்ல அப்புறம் எதுக்குடா எங்கள போட்டு கொத்து பரோட்டா ஆக்கின" என்றுதான் முணுமுணுத்தான்.

அனைவரையும் அழைத்துக்கொண்டு அதீரன் பாதாள அறைக்கு செல்ல, அதே நேரம் அந்த அறையும் திறக்கப்பட்டது. அறையின் உள்ளே இருந்த பெரிய போர்டில் "மிஷின் ஃபெயிலியர்" என எழுதி இருக்க, அதை அதிர்ந்த படி பார்த்திருந்த திலோ, கண்ணனின் பின்னால் வந்த அதீரன் "மிஷன் பெயிலியர் கேம் ஓவர்" என்றான் நக்கலாக, அவர்கள் கையில் இருந்த துப்பாக்கியை நீட்டியபடி திரும்பிப் பார்க்க அனைவரும் அங்கே அழைத்து வரப்பட்டனர்.

திலோத்தமாவின் முன்னால் வந்து நின்ற அதீரன் பேண்ட் பாக்கெட்டில் கையை போட்ட படி "என்ன டான்ஸர் மேடம்.. நீங்க சலங்க கட்டித் தான் ஆடுவீங்கணு நெனச்சேன் , துப்பாக்கி வச்சு கூட ஆடுவீங்களா என்ன?” என்றவனின் குரலில் நக்கல் ஏகத்திற்கும் இருந்தது. தொடர்ந்து அவளை மேலிருந்து கீழ் ஒரு மார்க்கமாக பார்த்தவன் , தன் இதழ்களை விரல் கொண்டு வருடியபடி “நீங்க தேடிவந்தது கிடைக்கல போலவே! ஏமாத்திட்டாங்களா மேடம்? அச்சச்சோ! சோ ஷாட்" என்க, அவளோ அவனை எரித்துவிடுவது போல தான் பார்த்திருந்தாள்.

அங்கிருந்தவர்களைப் பார்த்த அதீரனோ "ம்ம் எல்லாரும் சேர்ந்து என் கோட்டைக்குள்ள வந்தது மட்டுமில்லாம என் சீக்ரெட் ரூம் வரைக்கும் வந்து இருக்கீங்களே! உங்க தைரியத்த கண்டிப்பா பாராட்டியே ஆகணும்" என்றவன் "அட நெஜம் தான்பா, சந்தேகமா பாக்காதீங்க" என்றான். மேலும் "என்னோட லைப்ல இப்படிப்பட்ட சிங்கங்கள நான் பார்த்ததே இல்ல, மாட்டிகிட்டோம்னு தெரிஞ்சும் இன்னமும் கொஞ்சம் கூட பயப்படாம இருக்கீங்க பாரு ஐ அம் இம்ப்ரெஸ்ட், இம்ப்ரெஸ்ட்" என்பவனை முறைத்த மாறனோ "தப்பிச்சிடோம்னு ஓவரா சந்தோஷப்படாத, நீ பண்ண தப்புக்கு உனக்கு தண்டனை வாங்கிக் கொடுக்காம விட மாட்டோம்" என்க, சத்தமாக சிரித்த அதீரனோ "எல்லாரும் ரொம்ப நேர்மையான அதிகாரிங்க போல, பிரில்லியன்ட் ஆனா குற்றவாளிய தேடி தப்பான இடத்துக்கு சரியான டைம்ல வந்து இருக்கீங்க" என்றவனை புரியாமல் தான் பார்த்தனர் மற்றவர்கள்.

ராகுலிடம் திரும்பிய அதீரனோ "குருமூர்த்தி கிளம்பிட்டானா?" என்க, அவனோ "வந்துட்டே இருக்கான்டா" என்றான். அதீரனோ "ம்ம் காலையில அதினாபுரம் வந்துடுவான்" என்றவன் நிறுத்தி மீண்டும், "ஆட்டத்த ஆரம்பிச்சது வேணாம் குருமூர்த்தியா இருக்கலாம், ஆனா முடிக்கப்போறது இந்த அதீரன் தான்" என்க, போலிஸ் குழுவுக்கு குருமூர்த்தி தான் குற்றவாளி என அதீரன் கூறாமலேயே புரிந்தது.

அதீரனின் முன்னால் நின்ற குருமூர்த்திக்கோ தனது அனைத்து திருகுதாளமும் வெளிப்பட்டு விட்டது என தெரிந்ததும், அதுவரை இருந்த கர்வம் இருந்த இடம் தெரியாமல் புதைய, தான் சிங்கத்தின் கோட்டைக்கே வலுக்கட்டாயமாக வந்து மாட்டிக் கொண்டதை உணர்ந்தார்.

ஆறு மாதங்களுக்கு முன்னர் கோயிலைத் தாக்கி வைரக்கல்லை அபகரித்தவர் பழியை அதீரன் மீது சாமர்த்தியமாக போட்டதன் காரணம் அவனை யாராலும் நெருங்க முடியாது என்பது தான். ஆனால் அப்போது இருந்தே அதீரனை பிடிக்க போலீஸ் படை பல திட்டங்களை போட, குருமூர்த்தியின் நாடகங்கள் அனைத்தும் அதீரனுக்கு தெரியவந்தது.

தன் இடத்திற்கு வரவழைத்து குருமூர்த்தியின் கணக்கை முடிக்க வேண்டும் என முடிவு செய்த அதீரன் அவரின் மகளை கடத்தி திருமணம் என்ற நாடகத்தை ஆட, இது தெரியாத குருமூர்த்தியோ தனது பல வருட கால பேராசையான அதினாபுர சாம்ராஜ்ஜியத்தை ஆள வேண்டும் என்ற கனவை அடைய நினைத்து போலீஸுக்கு தெரியாமல் அவர்களுக்கு உதவி செய்வது போல் ஏமாற்றி காய் நகர்த்தினார். அப்படியாக அதீரன் கைது செய்யப்பட்டு விட்டான் என்ற செய்தி அறிந்து இங்கு வந்த குருமூர்த்திக்கு கிடைத்தது என்னவோ பாரிய ஏமாற்றம் தான்.

அதீரனோ கையிலிருந்த துப்பாக்கியை வருடியபடி, குருமூர்த்தியை பார்க்க, அவரோ எச்சிலை விழுங்கியபடி " அதீரா மரியாதையா என்ன விட்டுடு..... இல்லன்ன நீ விளைவுகள பெருசா சந்திக்க வரும்" என்றபடி தடுமாற, அதீரனோ "எனக்கு என்னோட குகைக்கு வர வச்சு இறைய வேட்டையாடுறது தான் பிடிக்கும், அப்படியான சந்தர்ப்பத்த அவ்வளவு சீக்கிரம் விட முடியுமா குருமூர்த்தி?" என்றவன் "ஹேப்பி ஜர்னி குருமூர்த்தி" என்றபடி துப்பாக்கி ரவைகளை அவர் மார்பில் தாராளமாக இறக்கினான்.
 
அத்தியாயம் 10

போலீஸ் குழுவோ அமைதியாகத்தான் இருந்தது. அதற்கு காரணம் அதீரன் மேலுள்ள பயம் அல்ல, மாறாக தாங்கள் செய்ய நினைத்ததை தான் இப்போது அதீரன் செய்துகொண்டு இருக்கிறான் என்பது மட்டுமே! குருமூர்த்தியின் உடல் கீழே விழ, ஐஸ்வர்யாவோ அதிர்ச்சியில் சுவரோடு ஒன்றிப்போய் காதுகளை இரு கைகளாலும் பொத்தியபடி நின்றாள்.

அதீரனோ துப்பாக்கியை ஊதி மேசையில் வைத்துவிட்டு ஐஸ்வர்யாவை பார்த்து "ம்ம் ஸ்டார்ட் பண்ணு" என்க, அவளோ "அப்பா" என்று அழுதபடி ஓடி வந்து, அவர் அருகே வந்து அமர்ந்து அழ ஆரம்பிக்க, அர்ஜுனனோ திரும்பி அருகிலிருந்த கண்ணனிடம் "உலகத்துலயே பர்மிஷன் வாங்கி அழுறவ இவளாத்தான் இருப்பா, ரியாக்ஷன ரொம்ப லேட்டா காட்றா" என்க, கண்ணனோ "ஏண்டா உனக்கு" என்றான்.

போலீஸ் குழுவை பார்த்த அதீரனோ "நீங்க வந்த மிஷன் சிறப்பா முடிஞ்சிடுச்சி, இனிமே ஷிப்ப ரெடி பண்ணுங்க" என்றவன் "அப்படியே அந்த வைரத்தையும் எடுத்துட்டு போங்க, எனக்கு சுயமா வேட்டையாடி தான் பழக்கம், அடுத்தவன் வேட்டைய வச்சுக்க மாட்டேன்" என்க, மாறனோ அவன் முன்னால் வந்து நின்று "இப்போ நீ தப்பிச்சிட்ட, சீக்கிரமே உன்ன உள்ள தள்ளிடுறேன்" என்க, சிரித்த அதீரனோ "ஆல் த பெஸ்ட்....... மறுபடியும் சந்திக்கலாம்” என்றான்.

சம்யுவின் புறம் திரும்பிய அதீரன் ஆழ்ந்த மூச்சு விட்டு விட்டு "இந்த அதினாபுர சாம்ராஜ்யத்துல முட்டாள்களுக்கு நான் எப்பவும் இடம்கொடுக்க மாட்டேன் அதனால... " என இழுக்க, அவளும் அவன் முகத்தைப் பார்க்க முடியாமல் தலையை குனிந்தபடி தான் நின்றாள். அதே நேரம் சம்யுவின் முன்னால் வந்து நின்ற மாறனோ "உன்னை அரஸ் பண்றேன்" என்க, சட்டென அவனை நிமிர்ந்து பார்த்த அவளோ "என்ன ஆதாரம்" என்றாள் திமிராக. அவனோ "உனக்கு இந்த திமிரு எப்பவும் குறையாதுடி" என எண்ணியவன் "ஆதாரம் தானே!, நிறையவே இருக்கு" என்றவன் தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த தாலியை வெளியே எடுக்க, அவளோ அவனை அதிர்ந்து பார்த்தாள்.

அவனோ சற்றும் தாமதிக்காமல் சம்யுவின் கழுத்தில் தாலியைக் கட்ட, அவள் தடுக்க முயன்றது எல்லாம் அவனிடத்தில் பயனற்று தான் போனது. அங்கு நடப்பதை வாயில் கை வைத்தபடி பார்த்த திவ்யாவோ "விலங்கு போட்டு அரஸ்ட் பண்றத தான் கேள்விப்பட்டு இருக்கேன், தாலி கட்டி அரஸ்ட் பண்றத இப்போதான் முதல் முறை பார்க்குறேன்" என்றவள் "அடுத்த ஹெட் லைன்ஸ்ல இந்த நியூஸ போடலாம் போலையே!, தாலி கட்டி கைது செய்த காவலன், ரொம்ப பொருத்தமா இருக்கும்" என்க, சிவாவோ அவளை திரும்பி முறைத்த முறைப்பில் பக்கென வாயை மூடிக்கொண்டவளோ "போலீஸ் ரவுடி" எனக் கூறிக் கொண்டாள்.

அனைவரும் அங்கிருந்து புறப்படத் தயாராக, திலோவை அழுத்தமான பார்வை பார்த்த அதீரனோ "திலோத்தமா மேடம் நீங்க எங்க கிளம்புறீங்க? இனிமே நீங்க இங்க தான் இருக்கணும்" என்க, அவனை அதிர்ந்து பார்த்தவளோ "முடியாது" என்றாள் பற்களைக் கடித்தபடி.

அவனோ "உனக்கு வாழ்வோ சாவோ இனிமே அதினாபுரத்துல தான்" என்க, கண்ணனோ திரும்பி ஏதோ கூற எத்தணிக்க, திலோவை அழுத்தமாக பார்த்தபடி "எனக்கு இவகிட்ட தீர்க்க வேண்டிய கணக்கு நிறையவே இருக்கு" என்றான் சத்தமாக.

அர்ஜுனனோ "அவ...." என ஆரம்பிக்க, திலோவோ விழிகளாலே வேண்டாம் என கூற, அவன் அமைதியானான். சிவாவோ "அவளுக்கு ஏதாவது ஆச்சுன்னா அதினாபுரத்துக்கு அரசன் இருக்க மாட்டான்" என்றான் கோபமாக.

மற்றவர்கள் கப்பலில் ஏறி இந்தியாவை நோக்கிப் புறப்பட, அதீரன் மற்றும் ராகுல் பேசியபடி உள்ளே செல்ல, அந்த அரண்மனையின் மாடியில் இருந்து தனது நண்பர்கள் செல்லும் கப்பலை பார்த்தபடி இருந்தாள் திலோத்தமா. அங்கே கப்பலிலும் சரி இங்கே கோட்டையிலும் சரி இருந்த நம் நாயக, நாயகிகள் மனநிலை ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமாகத் தான் இருந்தது.

சிங்க வேட்டையில் இருந்த இந்த ஆறு ஆண் சிங்கங்களும் தன் துணையுடன் இணைகின்றனரா என்பதை தனித்தனி பாகங்களாக பார்க்கலாம்.

முதல் கதை அதீரன் மற்றும் திலோத்தமாவின் “வஞ்சம் தீராதோ?”
 
Status
Not open for further replies.
Top