இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

சார்லமேன் - Teaser -1 - தலைப்பு காரணம்

AH3

Moderator
வணக்கம் மக்களே, நான் AH3. சார்லமேன், என்னய்யா தலைப்பு இது, ஒன்னும் புரியல னு எல்லாரும் நினைக்கிற mind voice எனக்கு புரியுது. இதோ கதைக்கிறேன் கேளுங்க. நம்மல்ல பல பேரு சீட்டுக்கட்டு விளையாண்டிருப்போம். Ash, Rummy, Poker எதுவா வேணா இருக்கலாம். அதில் மொத்தம் 52 சீட்டுக்கள் இருக்கும் ஜோக்கர் அல்லாது.... தெரியும் தானே . ஒவ்வொரு என் மற்றும் எழுத்திலும் நாலு நாலு சீட்டுக்கள் இருக்கும், சீட்டில் உள்ள பூ மட்டும் மாறுபடும்.
அதே போல ராஜா சீட்டும் நாலு இருக்கும். உங்களுக்கு தெரியுமா இதில் இருக்கிற ராஜா சீட்டு நிஜ வாழ்வில் நாம கேட்ட கேள்விப்பட்ட ராஜாக்களை குறிக்கும். யாரென்றால் - சக்கரவர்த்தி அலெக்சாண்டர், பேரரசர் ஜூலியஸ் சீசர், பைபிளில் வரும் மன்னர் டேவிட் மற்றும் அரசர் சார்லமேன். சரி, அதுல ஏன் குறிப்பா சார்லமேன்? இந்த பதிவில் நான் ஒரு படத்தை இணைச்சுருக்கேன். அத பாருங்க நாலு ராஜா சீட்டும் வேற வேற மாதிரி இருக்கும். அதிலும் குறிப்பாக அந்த சிவப்பு இதய சீட்டை பாருங்க அதில் அந்த அரசர் தன் உறை வாளை வைத்து தன் தலையையே கொய்தது போல் காட்சி இருக்கும். அதை பார்க்க அவரஜினி} தற்கொலை பண்ற மாதிரி இருக்குல. இதனால் அரசர் சார்லமேன் அவர்களை அனைவரும் கேலிக்காக தற்கொலையின் அரசர்(king of suicide) என்று கூறுவர். ஆனால் நிஜத்தில் அவருக்கும் தற்கொலைக்குமே எந்த வித சம்மந்தமும் இல்லை. சீட்டுக்கட்டில் அப்படி காட்சி இருப்பதால் மட்டுமே அவரை அப்படி அழைப்பர். இதற்கும் நம் கதைக்கும் என்ன சம்மந்தம்? நம்ம கதை தற்கொலை சார்ந்தது. 'உங்களுக்கு தற்கொலை பண்ணனுமா, ஒன்னும் கவலை படாதீங்க நாங்கள் இருக்கிறோம், நாங்களே உங்களுக்கு சிறந்த முறையில் சிறந்த வல்லுனர்களால் தற்கொலை செய்து வைக்கிறோம்' என்று கூறும் ரபீக், ஒரு தற்கொலை மையத்தை நடத்தி வருகிறார். அந்த மையத்தின் பெயர் தான் சார்லமேன். அந்த தற்கொலை மையத்தில் நான்கு பேர் தற்கொலை செய்ய வருகிறார்கள். பல திருப்பங்களுடன் இறுதியில் அவர்கள் தற்கொலை செய்கிறார்களா இல்லையா என்பதே இக்கதை.
நன்றி.IMG-20240626-WA0000.jpg
 
Top