Indu Aarthi
Moderator
Thank you so much for your beautiful reviewஹாய் சிஸ்,
காதல் காலமடி போட்டி கதை
சாரல் நாவல்ஸ்
காதல் எண்: 45 கா(த)ல் தடம்
இக்கதையில நாயகன் - நாயகி என்று நான் யாரையும் குறிப்பிட விரும்பவில்லை.. ஏனென்றால் கதையின் கருவே இக்கதையின் நாயகன்- நாயகியோ என்று எனக்கு தோன்றியது.
மிகவும் அழகான கதை.. எப்போதும் போல் அல்லாது சற்றே வித்தியாசத்துடன் அமைந்த கதைக்களம்.
இக்கதையைப் பற்றி கூறும் முன் நான் இவ்வாக்கியத்தை இங்கு பதிவு செய்ய விழைகிறேன். Love is not defined in such a process of expectation. Love is defined in such a process without any expectations. I do not mean this as an ordinary couple who fall in love. It means to everyone who has love for someone and something.
கா(த)ல் தடம்
தன்னிச்சை செயலாய் காதலை தந்தவர்கள்..
கண்ணீரையும் தந்தது ஏனோ..
இயலாது என்று நினைத்த ஒன்று
இயலும் எனும் நினைக்க வைற்றதோ உன் காதலினால்..
ஆழமான புரிதலில் அழுத்தமான காதலோ..
அழுத்தம் நிறைந்த காதலில் மறக்க முடியா எண்ணங்கள்..
கடமையா? காதலா? கனவா? என போராட இருக்கும் சமயம்..
அழகாய் துணை நின்றது இவ்வழகிய காதலோ..
அன்பு எனும் வேலியில் அழகாய் கைகோர்த்த இரு உறவுகள்..
பாராப்பட்சம் பார்க்காது மெய் அன்பு செய்த வினோத உறவுகள்..
புரிதலான காதலில்
பரஸ்பரமான அன்பு மெய் சிலிர்க்க செய்ததடா..
கண்ணீரால் நிறைந்த இடம்..
அழகிய நினைவுளாம் மாறிய தடம்..
இனிய காதலை இன்பமாய் சுமக்கும்
காதலின் கா(த)ல்தடம்.
அழகிய கதையை அழகாய் கொடுத்த ஆசிரியருக்கு என் மனமார்ந்த நன்றியும், அன்பும், வாழ்த்தும்.
போட்டியில் வெற்றி பெற என் அன்பு வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஸ்ரீராஜ்.



