ஓவியம் - 1
ஆவோ பாய் தோஸ்த்-அஆயேகா ஆயேகாஜாலி மேல மஜா ஆயேகா
பேட் வைஃப்பு ஜல்டிஜாயேகா ஜாயேகாபீஸ்தான் ப்ரோடென்ஷன் ஜாயேகா
ப்ரியா வுடு காலெஜ்-அபங்க் அடிச்சாலும்டீனுக்குதான் பாடம் எடுத்தாநீதான் பா டான்னு
சில்லா வுடுஜலுக்கு ஜலுக்கு ஜலுக்குஅரியர் அதிகம் உனக்குபட் லைப்ல ஜெயிச்சாநீதான் பா டான்னு
ஆவோ பாய் தோஸ்த்-அஆயேகா ஆயேகாஜாலி மேல மஜா ஆயேகா
பேட் வைஃப்பு ஜல்டிஜாயேகா ஜாயேகாபீஸ்தான் ப்ரோடென்ஷன் ஜாயேகா
ப்ரியா வுடு காலெஜ்-அபங்க் அடிச்சாலும்டீனுக்குதான் பாடம் எடுத்தாநீதான் பா டான்னு
சில்லா வுடுஜலுக்கு ஜலுக்கு ஜலுக்குஅரியர் அதிகம் உனக்குபட் லைப்ல ஜெயிச்சாநீதான் பா டான்னு
காத்தொலிப்பானில் பாடல் கசிந்தாலும் அதை வாய் விட்டுப் பாடிக் கொண்டிருந்தாள் தர்ஷனா. இன்னும் வகுப்புகள் தொடங்கவில்லை. காலையில் வெள்ளென கல்லூரிக்கு வந்து சேரும் இவர்களின் நட்புக் கூட்டத்தின் ஆர்வம் எல்லாம் கேண்டீனில் வெண்மதி அக்காவின் வெண்பொங்கலுக்காக தான். பொங்கலுக்கு ஈடாக நெய் விட்டு குழைத்து அல்(ல)வா ருசியோடு இருக்கும் பொங்கல்.
அதற்கு ஜோடியாக இரு உளுந்த வடை 'ம்ம்ம்... இது போதும் எனக்கு இது போதுமே வேர் என்ன வேணும் நீ போதுமே' என்ற பாடலை, பொங்கலுக்கும் அதன் சுவைக்கும் அதை செய்த வெண்மதி அக்காவுக்கும் அவளது மனமும் வயிறும் டெடிக்கேட் செய்தன.
பாடங்கள் ஈர்க்காத கவனத்தை, தன் சுவையின் மூலம் ஈர்த்து மனதையும் மூளையையும் ஒன்றிணைத்து தியானதிற்கே' டஃப் ' கொடுத்தது அவரது பொங்கல். கையில் ஒட்டிக் கொண்டிருந்ததை நாவால் நக்கி ருசிக்க, அவள் முன் நவீன காளியாக நின்றாள் அபிநயா.
"ஹாய் தோஸ்தே ! இன்னைக்கு ஏன் நீ லேட்டே ? ரைமீங்கில் கேட்டாள் டைமிங்கை அறியாமல். அபி இன்னும் தர்ஷனாவை தான் முறைத்து கொண்டு இருந்தாள். "காலையிலே என்ன ஒரு லாவா பார்வை. ப்பப்பா !" என மக்கள் செல்வத்தைப் போல செய்து காட்டியவள் "பொங்கல்ல கையில் வாங்கிட்டு என்னை கோபமா பாரு பேபி !. ஏன்னா பசியா இருந்தால் நீ நீயா இருக்க மாட்ட !"என்றவள் அடுத்தடுத்த
கமெண்ட்ரிக் கொடுத்தாலும் கவனம் பொங்கலில் இருந்தது.
அபி இன்னும் தன் பார்வையை மாற்றாமல் அவளை சங்காரம் செய்ய நிற்க, தர்ஷனாவுகோ 'எவனுக்கோ வந்த விருந்தாக' இருந்தது.
"வா பாப்பா வந்து சாப்பிடு !"நெய்மணக்க மணக்க கையில் பொங்கலை வைத்திருப்பதைக் கண்டு கோபம் காற்றோடு காற்றானது.பொங்கலின் மணமதை
நுகர்ந்தவள், அவளது வயற்றில் இரைக் கிடைக்காது பல நாள் பசியில் இருந்த சிங்கத்தின் கண்ணில் சிக்கிய மானாய் வெறிக் கொண்டு ஓடுவது போல் இருந்தது. " கொடுங்க அக்கா முதல்ல அத, சாப்பிட்டு தெம்பா அவ கூட சண்டை போடுறேன்" என்று தட்டை வாங்கி கைகள் பரபரக்க பொங்கலை உண்டாள். இருவரும் பசி அடங்க உண்டு விட்டு எழுந்தனர். வெண்மதி அக்காக்கு பறக்கும் முத்தத்தைப் பறக்க விட்டு தன் பையை எடுத்துக் கொண்டு தர்ஷனா வகுப்பிற்கு கிளம்ப, அவளுடன் இணைந்து அமைதியாக வந்தாள் அபி.
"தோஸ்தே ! உன் அமைதி என்னை ரொம்ப கில் பண்ணுதுப்பா ! சொல்லு என்னாச்சி எதுக்கு என் மேல் கோபம்?"அவளை அருகே இழுத்து கையை அவள் தோள் மீது படர விட்டு கேட்டாள். அவள் கையை தட்டிவிட்டவள், "செம்ம கோபத்துல வந்த என்னை பொங்கல் கொடுத்து ஆஃப் பண்ணிட்ட ! இப்போ திட்ட இருந்த கெட்ட வார்த்தையும் மறந்து போச்சி போடி !" என்றாள் நொடித்துக் கொண்டு.
"ஒ.. பேட் வோர்ட்ஸ் போட்டு திட்றளவுக்கு மீ என்னடி பெரிய சாதணை பண்ணினேன்?" அவள் விட்டத்தைப்
பார்த்து யோசித்தவளின் தலையில் தட்டி, "சாத்தான் வேலைய பார்த்துட்டு சாதணையாம்ல ! கொய்யால எதுக்கு என் லவ் பிரேக் அப் பண்ண வச்ச?"கேட்டு மீண்டும் காளியானாள். " ஏதே நானா?நானா அந்த நல்ல காரியத்தை பண்ணினேன்?" முகம் முழுதும் பிரகாசிக்க கேட்டவளை முள்ள விட்டு சாத்தினாலும் தேவல என்றிருந்தது அவளுக்கு.
"எதுக்கு என் லவ்வர் போன் பண்ணப்ப, அவனை அசிங்கமா திட்டி பேசின? அத எங்கிட்ட நீ சொல்லவும் இல்ல. நேத்து ஃபுல்லா சண்டைப் போட்டு காலையில பிரேகப்னு சொல்லிட்டான் " ஆதங்கமாக சொன்னாள். அவள் முன் பத்மினியை போல முகத்தை வைத்துக் கொண்டு உள்ளே'ஏ சாமே வாயா சாமே !" ராஸ்மிக்காவை போல ஆடிக் கொண்டிருந்தாள்.
"ஏய் ஏய் !! உன்னை பத்தி நல்லாவே
தெரியும் உள்ள நீ 'ஊ சொல்றீயா மாமாக்கு தான டான்ஸ் ஆடுன !" தோழியை அக்குவேறாக ஆணி வேறாக தெரிந்து வைத்தவள் அல்லவா அவள். உள்ளுக்குள் அவளது மகிழ்ச்சி தான் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தை கண்டு கொண்டு தான் கேட்டாள் .
"ஈஈ.. இல்ல டி சாமி பாட்டுக்கு ஆடுனேன்"என்றாள் வெட்கம் இல்லாமல் பல்லிளத்த படி ." எதுக்கு டி என் ஆள் கிட்ட நீ அசிங்கமா பேசின?"
"அவனும் அசிங்கமா பேசினான். சோ நானும் என் தன்மானத்தை விட்டு கொடுக்காம பேசிட்டேன் " என்றாள் முனைப்புடன்.
"என்னடி அசிங்கமா பேசினான் அவன்?" பல்லைக் கடித்தப்படி கேட்டாள். "இங்கிலீஷ்ல பேசினான் டி அவன் . அதுவும் அசிங்கமா ஐ லவ் யூனு சொன்னான். அதான் நானும் அசிங்கமா பேசிட்டேன்" என்றாள் உள்ளே சென்ற குரலில்.
"அவன் ஒரு ஆங்ளோ இந்தியன். இங்கலீஷ்ல தான் பேசுவான். என் போன நீ அட்டன் பண்ணது அவனுக்கு எப்படி தெரியும் ? நான் நினைச்சி உனக்கு ஐ லவ் யூ சொல்லிட்டான். உடனே கண்டமேனிக்கு அவன திட்டுவீயா? போயிட்டான் பிரேகப்னு சொல்லிட்டு போயிட்டான். இப்போ சந்தோஷமா உனக்கு !" என்றாள்.
"பகுத் ஹாப்பி !" என்றவள் அவள் முறைப்பைக் கண்டு அசடு வழிய சிரித்தவள் " விடுறீ ஏதோ தெரியாம திட்டிட்டேன் அதுக்கு உன்னை பிரேகப் பண்ணுவானா? இதெல்லாம் லவ்வே இல்ல பேபி ! சொல்வாங்களே எத்தனை பிரச்சினை வந்தாலும் கடைசிவரைக்கும் கூட இருக்கனும், அவன் பாதிலே போயிட்டான் பாரு. ஆனா, நான் கடைசி வரைக்கும் உன் கூடவே இருப்பேன் பேபி" என்று அவளை அணைத்துக் கொள்ள, அபியின் கோபம் எல்லாம் பறந்து போனது.
"சாத்தானுக்கு வாக்கப்பட்டா கடைசிவரைக்கும் சங்க நெறிச்சிட்டு தான் இருக்குமா? வந்து தொல !" என்றாள்.
"ஈஈஈ... நான் வேணா அவன் கிட்ட மன்னிப்பு கேக்கட்டுமா?" என்றாள் நல்லவளை போல். அவள் முகத்தை உற்றுப் பார்த்தவள், "பண்றதையும் பண்ணிட்டு பம்முறீயா நாயே ! வாய மூடிட்டு வா" என்று அவளை இழுத்து கொண்டு வகுப்பிற்குள் வந்தாள்.
அரசு நுண்கலை கல்லூரியில்
பி .ஏ.ஓவியம் மற்றும் வரைதல் பாடப்பிரிவில் மூன்றாமாண்டு பயில்கின்றனர் தர்ஷனாவும் அபிநயாவும்.
தன் வகுப்பிற்குள் நுழைய அங்கே மாணவர்கள் அரட்டை அடித்து கொண்டிருந்தனர். வகுப்புகள் தொடங்க இன்னும் சொற்ப நேரமே இருந்தது.
அபிநயாவும் தர்ஷனாவும் தன் நண்பர்களுடன் ஐக்கியமானர்கள். காலையில் நடந்த நிகழ்வுகளை தர்ஷனா உற்சாகமாகப் பகிர்ந்தாள். அபிநயாவின் முறைப்பையும் அசட்டை செய்தப்படி.'காதலர்களை பிரிக்கறதில அப்படி என்ன ஆனந்தம் அந்த கரடிக்கு!' அவளை நோக்கியவளின் அலைபேசி அலற, எடுத்துக் கொண்டு வெளியே சென்றாள். அவள் சென்ற பின், அஜய் தர்ஷனாவிடம், "அப்படி என்ன ஆனந்தம் உனக்கு அவ லவ்வ பிரிக்கறத்துல?"
" ஆனந்தம் தான். இப்போ இருக்கற லவ் ஃபேக், குரங்குக்கு மரம் கிடைச்சது மாதிரி தான் இவனுங்களுக்கு காதல். பிடிக்கல, தேவை முடிஞ்சிபோச்சினு மரத்துக்கு மரத்துக்கு தாவற குரங்காட்டாம், இவ எனக்கு பிடிக்கல்ல, இவன் எனக்கு சலிச்சிப் போயிட்டான். இவ கிட்ட என் தேவை முடிஞ்சி போச்சினு இன்னொருத்தன இன்னொருத்திய தேடி போறாங்க அது காதலா? மனசுல ஒருத்தர் மேல ஆழமான அன்ப வச்சிட்டு அவங்கள பிரியற சூழ்நிலையிலும் அவங்களை மறக்க முடியாம தவிக்கறது அவங்க காதலே போதும் இருக்கறது தான் உண்மையான காதல். இப்போ இருக்கற டைம் பாசிங் காதல். எனக்கு அது மேல நம்பிக்கை இல்ல !" என்றாள்.
"நீ சொல்றதும் உண்மை தான் தர்ஷு. இப்போ இருக்கற காதல்ல உண்மை கொஞ்சம் கூட இல்ல. எக்ஸ்டரா ரெண்டு மூணு காதலன் காதலிய வைச்சிக்கிறாங்க ! ஒன்னும் போனா இன்னொன்னு ஜாலியா இருக்காணுங்க... இப்படி வாழ்றதுக்கு நான் சிங்கிளா இருந்துடுறேன்"என்று கும்பிடு போட்டான்.
"அதே தான்டா, நம்ம கேங்க்ல எவனும் எவளும் கமிட் ஆகக்கூடாது. எவன் , எவள் கமிட்டானாலும் இந்த சிங்கிள் சங்கம் அவங்க மேல் பாயும்" என்று வெறியாகச் சொன்னாள்.
"ஆமாண்டி பாயும் ! எண்ணத்த பாரு
ரெண்டுதுக்கும்... சிங்கிள் சிங்கிள் சீறிட்டு இருக்கறவங்க தான் குப்புற விழுந்து மிங்கள் ஆகறானுங்க. அப்படி மட்டும் மிங்கிள்னு வாங்க டி, இந்த எக்ஸ் மிங்கிலும் டூடே சிங்களுமான என் சாபம் உங்களை சும்மா விடாது" என்று மிரட்ட "இப்போ தாண்டி சங்க உறுப்பினர் மாதிரி பேசுற நீ !" அவள் தோளை அணைக்க , "
சீ உங்க கூட இருந்தா, வேற என்னத்த கிழிக்க முடியும்"என சலித்துக் கொண்டாள்.
"ஆமா, போன்ல யாரு டி?" தர்ஷனா கேட்க, " அந்த ஆங்ளோ தான்" என்றாள்.
"என்னடி சமாதானம் பேசினானா?"
"ம்ம்... ஒரு கண்டிஷனோட" என்று பீடிகை போட்டாள் அபி. "என்ன கண்டிஷன்?" அஜய் ஆவலில் கேட்டான். "ம்ம்... உங்க பிரண்ட்ஸிப் எல்லாம் கட் பண்ணனுமா?அப்ப தான் என்னை காதலிப்பாராம்"என்றாள் ஆயாசமாக.
"நீ என்ன சொன்ன?" என இருவரும் ஒரு சேர கேட்க, "யோசித்து சொல்றேன் சொல்லிருக்கேன்.ஆனாலும் அந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு"என்று சொன்னது தான் தாமதம் அவள் மேல் சிவப்பு வண்ணப்பூச்சு கொட்டிருந்தது.
"என்னடி சொன்ன? எங்களை விட அந்த வெண்ண உனக்கு முக்கியம் போயிட்டானா?" என காளியாக நின்றாள்." அட முந்திரி கொட்டையே ! முழுசா கேட்காம ஏன் டி இப்படி பண்ண?" என்று தன் மேல் வடிந்த பூச்சை துடைத்தாள்." இதுக்கு மேல என்னடி கேட்கணும்? அதான் உன் காதலுக்கு நம்ம நட்ப காவு கொடுத்துட்டு வந்திருக்கியே ! பளடி ராஸ்கல் " என்றாள் பல்லைக் கடித்தபடி.
"அடச்சீ நிறுத்து. அந்த வெண்ண உன் பிரண்ட்ஸிப் கட் பண்ணிட்டு வா லவ்வுவோம் சொல்வான் நானும் ஆட்டுக்குட்டி மாதிரி போவேன் நினைச்சியா? நட்புனா என்ன தெரியுமா உனக்கு? இந்த அபி னா என்ன தெரியுமா உனக்கு. இப்படி என் நட்ப சந்தேகப்பட்டியே ?" ஆவேசமாக கேட்டாள்.
"ஈஈ... ஸாரி டி அந்த வெண்ண போட்ட டீலுக்கு ஒத்துக்கிட்டியோனு கோவத்துல..."அவளிழுக்க, அப்பறம் என்ன தர்ஷனாவின் மேல் நீல் வண்ண பூச்சை கொட்ட, மாறி மாறி ஊத்திக் கொண்டு ஹோலி பண்டிக்கைப் போல கொண்டாடி வகுப்பறையை வண்ணமையமாக்கினார் இருவரும். அவர்களது கோட்டித்தனத்தை கண்டு மற்றவர்கள் தலையில் அடித்துக் கொண்டனர்.
சரியாக உள்ளே வந்த ஹெச் ஓ.டி "ஸ்டாப் இட் !" என உரக்க குரலில் கத்த இருவரும் சிலைப்போல நின்றனர்.
"வாட் தி ஹெல் ஆர் யூ டூயிங்? இஸ் திஸ் கிளாஸ் ரூம் ஆர் நாட்? ஹு தி ஹெல்?"எனக் கேட்கவும். அனைவரும் தர்ஷனாவையும் அபியையும் பார்த்து வைத்து மாட்டிவிட, " தர்ஷனா ! அபிநயா !" காது கிழிய கத்தினார்.
'சனியனுங்க காட்டி கொடுத்திருச்சிங்க !இந்த ஹிப்போ ஹெச் வேற காது கிழிய கத்தறான்'என எண்ணியபடி முன்னே வந்து நின்றனர். "யூ டூ... சின்ன பசங்களா நீங்க, இப்படி விளையாட? நான்சன்ஸ் !நீங்க பண்ண காரியத்துக்கு உங்களை டூ டேஸ் சஸ்பெண்ட் பண்றேன் " என்றதும் உள்ளுக்குள் மகிழ்ந்தாலும் வெளியே முகத்தை சோகத்தின் வடிவாய் வைத்திருந்தனர்.
"எதுக்கு ஸார் இந்த சின்ன விஷயத்துக்கு எல்லாம் சஸ்பென்ட் குடுக்கறீங்க? இந்த மாதிரி சின்ன சின்ன சேட்டைகள் தான் கல்லூரி நாட்கள்ல அழகாக்கும் ஸார். பனிஸ்மெண்ட் கொடுத்து சேட்டைகள் செய்யாத படி செஞ்சிடாதீங்க ! ப்ளீஸ் லீவ் தெம் " என அவர்களுக்காக புதிதாக வந்தவன் பேச, இருவரும் நிமிர்ந்து அவனைப் பார்த்தனர்.
வசீக்கர சிரிப்போடு இருவரையும் பார்த்தவாறு நின்றிருந்தான் அவன்.
"இல்ல வருமன் ஸார். ஸ்டுடெண்ட்ஸ் கிளாஸ் ரூம்ம இப்படியா வச்சிருக்கிறது. குழந்தைங்களா இதுங்க?" என பல்லை கடிக்க, " ஸார், கிளாஸ் பெர்ஃபெக்ட் இருக்க, இது இன்ஜினியரிங்கோ இல்ல சைன்ஸ் குரூப் இல்ல. ஆர்ட்ஸ் காலேஜ் ஸார். கலை கல்லூரி ஒரு கலை இல்லேன்னா எப்படி? எனக்கு இந்த வண்ண மையமான வரவேற்பு ரொம்ப பிடிச்சிருக்கு ஸார்" என்று வகுப்பைகளை ஒருதரம் பார்த்தவனின் பேச்சு, மாணவர்களின் மனதில் ஓரிடம் பிடித்து விட்டான் வருமன்.
"எதையும் பாசிட்டிவ்வா எடுத்துக்கிறீங்க, குட் மிஸ்டர் வருமன்" என்று தோளில் தட்டிக்கொடுத்து விட்டு, மாணவர்களிடம் திரும்பி, "இவர் தான் மிஸ்டர் வருமன். உங்களுக்கு வந்த நியூ ட்ராயிங் டீச்சர். அண்ட் கையிட்" என்றார். அனைவரும் அவனை வணங்கி வரவேற்றனர்.
" ஓகே ஆல் தி பெஸ்ட்"என்றவர் அபி , தர்ஷனா புறம் திரும்பி "ஆஃபடர் தி கிளாஸ் கம் டூ ஸ்டாப் ரூம்" பல்லைக்கடித்தபடி கூறினார்.
" ஓகே ஸார் " என்றனர். அவர் சென்ற பின்னும் அவர்கள் இருவரும் சிலைப் போல நிக்க, " எவ்வளவு நேரம் இப்படி நிற்கறதா உத்தேசம்? கிளாஸ்க்கு டைம் ஆச்சி. போய் வாஸ் பண்ணிட்டு வாங்க " என்றான்.
"ஓகே ஸார் .தேங்க யூ ஸார்"என்று வெளியே சென்றனர். அதன் பின் நேரங்கள்
விரைய, கல்லூரி முடிந்தது அபியையும் தர்ஷுவையும் வகுப்பறையை சுத்தம் செய்யச் சொல்லி ஹிப்போ ஹெச் கட்டளையிட்டார். இருவரும் சுத்தம் செய்வதைக் கண்டு சிரித்துக் கொண்டே கல்லூரியை விட்டு கிளம்பினான் வருமன்.
சோர்வுடன் இல்லம் நுழைந்தவன், நீள்விருக்கையில் அமர்ந்து தலையை சாய்க்க, அவன் கழுத்தில் மென்மையான இரு கரங்கள் மாலையாகின. நெற்றியில் இதழ்களின் முத்த ஊர்வலம் நடந்தேற, கண்களைமூடி சுகித்துவிட்டு, அவள் கைகளைப் பற்றி முன்னிழுத்து மடியில் போட்டு கொண்டவன்
அவளது காந்தி முகத்தைக் கண்டு மெல்ல தன் சோர்வுகளை அகற்றி விட்டு, அவள் இதழ் நோக்கிக் குனிந்தான். அவனது நெற்றியை தன் ஒற்றை விரலால் தள்ளி விட்டவள், " வரு ! போய் ரெஃபெரஸ் ஆயிட்டு வா !" என்றாள்.
"சீனியர்... கையில சுடச்சுட தேநீர் இருக்கும் போது , எவனாவது போய் பல்லை விளக்குவானா?!" எனக் கேட்டு கண்ணடித்தவன், கேள்வியை அவள் புரிந்துக் கொள்ளும் முன், அவள் இதழை ருசித்து தே(ன்) நீரை பருக ஆரம்பித்து விட்டான். அவன் இதழ் பட்டதும் தன்னுடலை பாம்பாய் சுறுக்கி அவனுக்குள் அடங்கிப் போனாள் அணங்கவள்.
இதழ்களும் விரல்களும் அதன் வேலைகளை கட்சிதமாய் செவ்வனேன்று செய்ய,
நெளிந்து, குழைந்து அவனோடு இசைந்தாள் ஓவியனின் ஓவியமவள்.
முத்தத்தின் நேரம் நீடிக்க, போதும் என்பது போல, "ம்மா ....!" என்று வந்த தன் மகனின் அழைப்பில் இதழையும் தன்னையும் அவனிடமிருந்து பிரித்து, தனது புடவையைச் சரி செய்தபடி எழுந்து நின்றாள்.
"டீ, காஃபிய விட பெஸ்ட் எனர்ஜி ட்ரிங்க் சீனியர் உங்க கிஸ்" என்று கூறி கண்ணடித்தவன், தூக்க கலக்கத்தில் கண்ணைக் கசக்கிக் கொண்டு வந்த மகனை அள்ளி அணைத்து முத்தம் கொடுத்தான் வருமன். அவனைச் செல்லமாக முறைத்தாள் அனீஷா.
தந்தையும் மகனும் பேசி விளையாடுவதைப் பார்த்து ரசித்தபடி இரவு உணவை தாயார் செய்தாள். பின் மூவரும் உணவுண்டு, மகனோடு மெத்தையில் பல கதைகள் பேசி, அவனை உறங்க வைத்த நொடி, கணவனின் விழிகளிலிருந்து அழைப்பு வர, வயிற்றுப் பசிக்கு உணவை அளித்தவளின் அடுத்த கடமையாக, தன்னை உணவாக, தன் பாதியானவனின் உடல்பசிக்கு தந்து அவனோடு இணைந்தாள்.
மனநிறைவோடு பசியடங்க, நெற்றியில் இதழ் வைத்து உறக்கத்தை அவளுடன் தழுவினான் வருமன். நடுசாமத்தில் "அனீனீ..."என்ற அலறலோடு விழித்திறந்தவன் எழுந்தமர்ந்தான்.
அவனது வெற்றுடல் வியர்வையால் நனைந்திருந்தது. மார்பின் வழியே சீரற்ற இதய துடிப்பைக் கேட்டான். படபடவென அடித்துக் கொண்டது போல இருந்தது அவனுக்கு. முகத்தில் வழிந்த வியர்வை துடைத்துவன் கண்ணை மூடிக் கொண்டு அமர்ந்து விட்டான்.
அவன் கழுத்தில் முகம் புதைத்து அவன் முதுகை அழுத்தி, அவளது இரு கைகளை, ஆக்டோப்ஸ் போல அணைத்து அவனை ஆக்கிரமித்தவள். அவனது காதில்" வரு ! உன் அனீ , உன் கூட தான்டா இருக்கா ! திரும்பி பாரு என்னை" என்றாள். காதோரம் கேட்ட குரலை உள்வாங்கிக் கொண்டவன், திரும்பி பாராமல் சீராக மூச்சை விட்டான். இதயம் இப்போது சீராக துடித்தது. ஆனால் மூடிய விழிகளில் மட்டும் கண்ணீர் கரையைத் தாண்டி அருவியாக கன்னமிரண்டையும் நனைத்து கொண்டிருந்தன காரணமின்றியோ காரணத்துடனோ அதை அவன் மட்டுமே அறிவான்.