இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

காதலே தித்திப்பாய் - கதை திரி

Anu Chandran

Moderator
தித்திப்பு 7

சிக்கலில்லா
வலையினுள்
சிக்கி நெளிந்திடும்
மீனினை போல்
காதலெனும்
வலையினுள்
சிக்கி முக்கி
தவிக்கிறது என் நெஞ்சம்...

ப்ரவாஹன் சென்றதும் மான்சியை அழைத்தபடியே வந்தார் சத்யவதி.
மான்சி ஏற்கனவே அனாயா வீட்டில் தங்கியிருப்பதை பற்றி தன் தந்தைக்கு தெரியப்படுத்தியிருந்தாள்.

சத்யவதி வருவதை கண்டவள்
“மிஸ்டர். தந்தையார். இதோ ஆண்டி வாராங்க.” என்றவள் சத்யவதி புறம் மொபைலை திருப்ப

“அண்ணா எப்படி இருக்கீங்க?” என்று பாசத்துடன் விசாரித்தவரிடம்

“நான் நல்லா இருக்கேன்மா. நீ எப்படி இருக்க? அனாயா அப்பா எப்படி இருக்காங்க?” என்று மான்சியின் தந்தையும் நலம் விசாரிக்க

“அவங்க எல்லா நல்லா தான் இருக்காங்க... நீ எப்போ திரும்பவருவதாக முடிவு பண்ணியிருக்க?” என்று இடைபுகுந்த மான்சி கேட்க

“இடத்தை கிரயம் பண்ணுற வேலை முடிஞ்சதும் கிளம்பிடுவேன் தங்கம். அப்பாவை ரொம்ப மிஸ் பண்ணுறியா செல்லம்மா?”என்று சற்று வருத்தமாக மான்சியின் தந்தை கேட்க

“சேசே... அந்த மாதிரி எதுவுமே இல்லை. இப்ப கூட முடிஞ்சா இன்னும் மூனு மாசம் இருந்துட்டு வாங்கனு சொல்லத்தான் கேட்டேன்.” என்றவளின் வார்த்தைகளில் சிரித்துவிட்டார் சத்யவதி.

தன் கையிலிருந்த கோப்பையில் நிரம்பியிருந்த பாஸ்தாவை மான்சிக்கு ஊட்டியபடியே

“அண்ணா நீங்க கவலை படாதீங்க. நீங்க வரும் வரைக்கும் மான்சி இங்கேயே இருக்கட்டும். நாங்க அவளை பத்திரமாக பார்த்துக்கிறோம்.”என்று சத்யவதி கூறியவாறு மான்சிக்கு ஊட்டி விட்டபடியே பேசினார்.

மறுபுறமோ ஆதீஷ் அனாயாவின் ஆபிஸ் அறையில் அவளுக்காக காத்திருந்தான்.

மீட்டிங்கை முடித்துக்கொண்டு தன்னறைக்கு திரும்பிய அனாயாவை அவளின் தந்தை பரத்வாஜர் அழைத்தார்.

“என்னப்பா?” என்று அனாயா கேட்க

“மான்சிகூட பேசினியா ப்ரின்சஸ்?” என்று பரத்வாஜர் பேச

“இன்னும் இல்லப்பா. இப்போ ஆதீஷ் கூட பேசப்போறேன்.” என்று கூறிய அனாயா நடந்ததை மேலோட்டமாக விவரித்தாள் அனாயா.

அனைத்தையும் பொறுமையாக கேட்ட பரத்வாஜர்
“தென் ஆதீஷ் ஹேட் டன் சம்திங்.” என்று கேட்க

“ஆமா அப்பா. ஆதீஷ் ஏதோ செய்திருக்கான். அவன்கிட்ட பேசுனா தான் என்ன நடந்துச்சுனு தெரியும்...” என்று அனாயா கூற பரத்வாஜருக்குமே அதுவே சரியென்று பட்டது.

“ஓகே ப்ரின்சஸ்... அப்டேட் மீ அபௌட் த மேட்டர்.” என்று பரத்வாஜர் கூற

“ஓகேப்பா... நான் பேசிட்டு சொல்றேன்.” என்றவள் தன்னறையில் காத்திருந்த ஆதீஷை சந்திக்க சென்றாள்.

அறைக்குள் வந்தவளை காலை வணக்கத்துடன் வரவேற்ற ஆதீஷிடம் மன்னிப்பு வேண்டியபடியே தன் இருக்கையில் அமர்ந்தாள் அனாயா.

“சொல்லுடா... என்ன விஷயம் சொல்லனும்?” என்று அனாயா கேட்க சற்று தயங்கிய ஆதீஷ்

“மான்சி கூட அதிகமாக பேசுனது உன்னோட அண்ணா இல்லை. நான் தான்.” என்று கூற அனாயாவோ அவனை கூர்மையாக பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவளின் பார்வைக்கான அர்த்தம் புரியாத ஆதீஷ்
“அனா.... ஏன்.. அது...” என்று உளற

“நீ சொல்ல வந்ததை முழுசா சொல்லிமுடி. நான் அதுக்கு பிறகு என்னோட எண்ணத்தை சொல்றேன்.” என்ற அனாயா அமைதியாகிட

“ப்ரவாவை பத்தி உனக்கே நல்லா தெரியும். அவனை இப்படியே விட்டா சரி வராதுன்னு தான் நானே அவன் ஐடியில இருந்து மான்சி கூட பேசுனேன். ப்ரவாக்கு மான்சி தான் சரியான ஜோடினு தோன்றுனதால தான் அப்படி பண்ணேன் அனா.”என்று ஆதீஷ் கூற

“கரை தேடி வந்த
அலைகளின்
தீண்டலும்
எனை தேடி
வந்த உன் விழிப்பார்வையும்
கணித்திடும்
முன்னே
தடம் மறைந்திடும்
ஜாலங்கள்.” என்ற கவிதையை அனாயா கூறியதும் அவளை அதிர்ந்துபோய் பார்த்தான் ஆதீஷ்.

“இது...இது... உனக்கு.. உனக்கு எப்படி தெரியும்?” என்று ஆதீஷ் தடுமாற்றத்துடன் கேட்க

“சார் எப்படி இடையிடையில அட்டென்டென்ஸை போட்டீங்களோ.. நானும் அதே மாதிரி காத்துவாக்குல வந்துட்டு போனேன்.” என்று அனாயா கூற

“அப்போ உனக்கு ப்ரவாவும் மான்சியும்...” என்றிழுத்த ஆதீஷிடம்

“தெரியும்... ஆனா நான் சீக்கிரம் ப்ரேக்-அப் ஆகிடும்னு தான் நினைச்சேன்.” என்று அனாயா கூற இப்போது அதிர்வது ஆதீஷின் முறையானது.

“நீ என்ன சொல்ற?” என்று ஆதீஷ் கேட்க

“ப்ரவா எப்படியோ அப்படியே தான் மான்சி. அவளுக்கு வந்த லவ் ப்ரபோஸல்சுக்கு அளவே இல்லை. அவ ஓகே சொன்ன எதுவுமே 2 கிழமையை கூட தாண்டுவது இல்லை. நீ எப்படி ப்ரவாக்கு பொண்ணு தேடுனியோ அதே மாதிரி நானும் இவளுக்கு மாப்பிள்ளை தேடுனேன். அதனால அவ அக்கவுண்டை அவளை விட நான் தான் அதிகமாக யூஸ் பண்ணுவேன். அப்போ தான் உன்னோட மேசேஜஸ்ஸை பார்த்தேன். அவளுக்கு பதிலா நான் தான் ரிப்ளை பண்ணுவேன்.”

“அப்போ உனக்கு ஆல்மோஸ்ட் எல்லாமே தெரியும்?”என்று ஆதீஷ் கேட்க

“ஆல்மோஸ்ட்னு இல்லை அவங்க டேட் பண்ண ஆரம்பிக்கும் வரைக்கும் எல்லாமே தெரியும்.” என்று அனாயா கூற

“ஓ... அப்போ வீ ஆர் இன் சேம் போட்.” என்று ஆதீஷ் இருக்கையில் மேலும் சாய்ந்தபடி கேட்க

“ஐ திங்க் சோ...” என்று ஆமோதித்த அனாயா சட்டென்று ஏதோ நினைவு வந்தவளாய்

“அவங்க இரண்டு பேரும் எப்போ ப்ரபோஸ் பண்ணி டேய் பண்ண ஆரம்பிச்சாங்கனு உனக்கு தெரியுமாடா?” என்று ஆதீஷிடம் கேட்க

“எனக்கு தெரியாது அனா. உன் அண்ணன்கிட்ட கேட்டேன். அவன் சரியா ஏதும் சொல்லலை.”என்று ஆதீஷும் கூற அடுத்து என்னவென்று இருவரும் யோசிக்கத்தொடங்கினர்.

“அனா இவங்க இரண்டு பேரும் கூப்பிட்டு நாம் பேசுனா என்ன?”என்று ஆதீஷ் கேட்க

“மான்சி ஓகே... ஆனா ப்ரவா...”என்று அனாயா யோசனையுடன் கேட்க

“ஏதாவது சினிமாடிக்கா பண்ணா?” என்று ஆதீஷ் கேட்க

“ம்ம்... ஒரு விஷயம் பண்ணலாம். நாம நான்கு பேர் மட்டும் போற மாதிரி ஒரு டூர் அரேன்ஜ் பண்ணலாம். லொகேஷன் பாரஸ்ட் ரிசோட்.” என்று அனாயா கூற

“ம்... ஐடியா நல்லா தான் இருக்கு. ஆனா உன் அண்ணனை கன்வின்ஸ் பண்ணுறது தான் கொஞ்சம் கஷ்டம். ம்ம்... சமாளிக்கலாம்.” என்று ஆதீஷ் கூறிய அடுத்து செய்யவேண்டியவற்றை இருவரும் கலந்தாலோசித்தனர்.

அலுவலகம் வந்தடைந்த ப்ரவாஹனுக்கு வேலைகள் குவிந்து கிடந்த போதிலும் மனமோ மான்சியின் வருகைக்கான காரணத்தை தெரிந்துகொள்வதிலேயே தீவிரமாக இருந்தது.

அவளிடமே கேட்டு தெரிந்துகொள்ளலாமென்று நினைத்தவன் அலைபேசியை எடுக்க முயல சரியாக அந்நேரத்தில் அவனது மொபைல் ஒளிர்ந்தது.

அதில் தெரிந்த இலக்கத்தை பார்த்தவன் அழைப்பை ஏற்றான்.

“சொல்லு மேகா.” என்றிட மறுபுறமோ

“டேய் சாமியாரே... எங்கடா இருக்க?” என்று மேகா கேட்க

“நான் ஆபிஸ்ல... என்ன விஷயம் சொல்லு.”

“காலேஜ் ரீ யூனியன் அரேன்ஜ் பண்ணியிருக்கோம்டா. இந்த முறை நீ கட்டாயம் வர.”என்று மேகா கூற

“மேகா எனக்கு வேற கமிட்மெண்ட்ஸ் இருக்கு. சோ ஐ..” என்று ப்ரவாஹன் முடிப்பதற்குள்

“இது ராஜன் சாரோட ரிட்டாயர்மண்ட் பார்ட்டியும் கூட...” என்று மேகா கூற மறுகணமே வருவதாக ஒப்புக்கொண்டான் ப்ரவாஹன்.

“நான் டீடெயில்ஸ் உனக்கு பார்வேர்ட் பண்ணுறேன்.” என்றவள் அழைப்பை துண்டித்து விட்டு தன்னெதிரே அமர்ந்திருந்த சம்யுக்தாவை பார்த்தாள்.

“உனக்கு இப்போ சந்தோஷமா?” என்று மேகா கேட்க வேகமாய் தலையாட்டிவள்

“டபுள் ஹேப்பி...” கூற அவளது தலையை செல்லமாய் கலைத்து விட்டாள் மேகா.

“இந்த முறையும் அவன் உன்னை அவாய்ட் பண்ணமாட்டான்ல...” என்று மேகா சற்று வருத்தத்துடன் கேட்க

“தெரியல.. லெட் மீ ட்ரை...” என்று அதே வருத்தத்துடன் சம்யுக்தா கூற மேகாவிற்கோ ஒரு மாதிரியாகிவிட்டது.

பிடிவாதமென்ற வார்த்தைக்கு அர்த்தம் அறியாது இருந்தவள் இன்று ப்ரவாஹனிடமிருந்து காதல் யாசகத்தை பெற்றிட வருடக்கணக்காய் பிடிவாதமாய் காத்திருக்கிறாள்.

கல்லூரி காலத்தில் ஆரம்பித்த அவளின் சின்ரெல்லா காதல் கல்லூரியின் இறுதி நாளிலேயே வெளிப்பட்டது. ஆனால் அதை ப்ரவாஹன் அப்போதே நிராகரித்துவிட்டான்.

அவனின் நிராகரிப்பில் மனமுடைந்தவள் மேற்படிப்பிற்காக வெளிநாடு பறந்துவிட்டாள். ஆனால் இடமாற்றம் கூட அவளின் மனதினை எவ்விதத்திலும் மாற்றிடவில்லை.

பல மைல் தொலைவில் மறைந்தும் கூட ப்ரவாஹனின் நினைவு தன்னை ஆக்கிரமிப்பதை உணர்ந்தவளுக்கு அதிலிருந்து மீளும் வழி தெரியவில்லை.

தன் மனம் போகும் வழியிலேயே பயணிக்கும் முடிவிற்கு வந்தவள் தன் ரகசிய காதலை ரகசியமாகவே தொடர்ந்தாள்.

படிப்பை முடித்துவிட்டு நாடு திரும்பியவள் ப்ரவாஹனை நெருங்கிட சந்தர்ப்பம் தேடிக்கொண்டிருக்க காலேஜ் ரீயூனியன் என்ற பெயரில் அவளுக்கு அச்சந்தர்ப்பம் கிட்டியது.

நிச்சயம் ப்ரவாஹன் வரமாட்டான் என்று அறிந்தவள் அவனை வரவைப்பதற்காக மேகா மூலம் ஒரு காரணத்தை கூறி அவனை வரவைக்கும் முயற்சியில் இறங்கிட அதுவும் வெற்றியை தந்தது.

இனி யாரின் காதல் தித்திப்பினை அள்ளித்தந்திட போகிறது.....?
 

Anu Chandran

Moderator
தித்திப்பு 8

அளவிலா அன்பும்
மறைக்கப்பட்ட நேசமும்
வெளிப்படும் தருணம்
எரிமலையின் கொதிப்பை
விட
பன்மடங்கு
அழிவை ஏற்படுத்தக்கூடியது...

ஆதீஷும் அனாயாவும் பேசிக்கொண்டிருக்கும் போதே ப்ரவாஹன் ஆதீஷிற்கு அழைத்து ரீயூனியன் பற்றி தெரிவித்தான்.
அதை பற்றி அனாயாவிடமும் தெரிவித்தவன்

“நாம தனியா டூர் ப்ளான் பண்ண வேண்டிய அவசியமில்லைனு நினைக்கிறேன்.” என்று ஆதீஷ் கூற

“ஆனா இது உங்க பேட்ஜ் ரீயூனியன் ஆச்சே... நாங்க எப்படி?” என்று அனாயா கேட்க

“இது ரீயூனியன் மட்டும்னா உங்க அண்ணன் போவானா... இது ராஜா சாரோட பெயாவல் பார்ட்டியும் கூட. அதனால தான் அவன் போறான்...” என்று ஆதீஷ் கூற

“அப்போ எங்களுக்கும் இன்விடேஷன் வரும்னு சொல்லுறியா?”என்று அனாயா கேட்க

“அப்படியே வரலனாலும் வர வச்சிடலாம். நீ மான்சியை கிளப்புறதுக்கான வேலையை பாரு.” என்று ஆதீஷ் கூற சரியென்று ஒப்புக்கொண்டாள் அனாயா.

ஆதீஷ் கூறியது போல் அன்று மாலையே அனாயாவிற்கும் மான்சிக்கும் அழைப்பு வந்தது.

மான்சி எந்தவித மறுப்புமின்றி நிகழ்வில் பங்குகொள்ள தயாரானதோடு அனாயாவிற்கும் வேண்டிய உதவிகளை செய்தாள்.
மான்சி இருந்ததால் அனாயாவின் வீடு இன்னும் கலகலப்பாக இருக்க ப்ரவாஹன் எப்போதும் போல் வருவதும் போவதுமாக இருந்தான்.

ஆனால் வழமைக்கு மாறாக அவனின் எண்ணங்களும் மனதும் மான்சியையே வட்டமிட்டபடியே இருந்தது.

ரியூனியன் நாளும் வந்திட நால்வரும் தனித்தனியே நிகழ்வு நடக்கும் விடுதியை அதிகாலையிலேயே வந்தடைந்தனர்.
ஆதீஷ் அனாயா மற்றும் மான்சியின் வருகையை பற்றி ப்ரவாஹனிடம் தெரிவிக்கவில்லை. மான்சிக்கும் ப்ரவாஹனும் அன்றைய நிகழ்வுக்கு வருவது பற்றி தெரியாது.

நிகழ்வு இடத்தை முதலில் வந்தடைந்த ஆதீஷையும் ப்ரவாஹனையும் அவர்களது நட்பு பட்டாளம் சூழ்ந்து கொள்ள அவர்களுக்கு பின் வந்து சேர்ந்த அனாயாவையும் மான்சியையும் ப்ரவாஹன் கவனிக்கவில்லை.

இருவர் படையும் அவரவர்க்கு ஒதுக்கியிருந்த அறைகளில் தங்கிக்கொள்ள அவர்கள் சந்திக்கும் வாய்ப்பு அமைந்திடவில்லை.
காலை உணவு முடித்துக்கொண்ட மான்சியும் அனாயாவும் அவர்களது தோழிகளுடன் விடுதிக்கு பின்னாலிருந்த ஏரியிற்கருகே கூட்டம் போட்டனர்

நெடுநாட்களுக்கு பின் சேர்ந்த தோழியர் கூட்டமென்பதால் அவர்களுக்குள் பகிர்ந்துகொள்ள பல விஷயங்கள் குவிந்திருந்தன.
ஆறஅமர அமர்ந்து பழைய கதைகளை பேசியவர்களின் பேச்சு கடைசியில் மான்சியிடம் வந்து நின்றது.

அவர்களில் ஒருத்தி
“மான்சி நீ எப்போ செட்டில் ஆகுற ஐடியால இருக்க?” என்று கேட்க மான்சியோ கூலாக

“எனக்கு என்னடி நான் நல்லா செட்டிலாகி தான் இருக்கேன். இதுக்கு மேல என்ன செட்டிலாக இருக்கு?” என்றுகூற அதற்கு இன்னொருவள்

“அது சாரி... உனக்கு என்னப்பா நீ இஷ்டப்பட்டதை மட்டுமே செய்ய உன்னோட அப்பா இருக்காரு. அதனால் நீ ஜாலியா இருப்பா. ஆனா எங்களை பாரு... எப்போடா படிப்பு முடியும்னு காத்திட்டு இருந்தவங்க முடிந்ததும் மேரேஜ் பண்ணி வச்சிட்டாங்க. அதோடு இடுப்புல ஒன்று கைல ஒன்னுனு வேணுமாம்.” என்று ஒரு பெண் சலித்துக்கொள்ள இன்னொருவளோ

“அது என்னமோ உண்மை தான்டி. எத்தனை பெத்துக்கனும்னு கணக்கு சொல்லுறவங்களை பார்க்கும் போது கொலை காண்டாகுது.” என்று கூறியவளிடம் இன்னொருவள்

“உனக்கிட்டேயே ஒரு ஆள் அவ்வளவு தைரியமா அட்வைஸ் பண்ணாங்களா? ரொம்ப தைரியம் தான்டி அவங்களுக்கு.”என்று கூற அந்த பெண்ணோ

“அவ்வளவு சீக்கிரம் விட்டுருவேனா... ரிடன் அட்வைஸ் கொடுத்து அவங்க தெறிச்சி ஓடவச்சதும் தான் எனக்கு திருப்தியா இருந்துச்சு.” என்று கூற அனாயாவோ

“அது சரி லாயர் கிட்டயே பாமிலி லோ பத்தி பேசுனா இது தான் தண்டனை.” என்று கூற அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.
அப்போது அனாயா

“அடி உங்களுக்கெல்லாம் ஒரு ஷாக்கிங் அன்ட் ப்ரேக்கிங் நியூஸ் சொல்லவா?” என்று மான்சியை பார்த்தபடியே கூற மான்சிக்கு அவள் என்ன சொல்லப்போகிறாளென புரிந்தது.

உடனேயே அங்கிருந்து நழுவிட முடிவு செய்தவள்
“ஒரு முக்கியமான க்ளையண்ட் கால் அட்டென்ட் பண்ணவேண்டியிருக்கு. அதை அட்டென்ட் பண்ணிட்டு வரேன்.” என்று எழுந்து ஓட முயன்றவளை இழுத்து பிடித்து அமர வைத்த அனாயா

“இப்படிலாம் பல உல்டாக்களை நான் பார்த்துட்டேன். மரியாதையா நீயே உட்கார்ந்திரு.” என்று கூற மான்சியோ

“நிஜமாவே க்ளையண்ட் கால் டி. சீக்கிரம் அட்டென்ட் பண்ணிட்டு வந்திடுறேன்.” என்று தப்பி ஓட முயன்றவளை இழுத்து பிடித்து அமர வைக்க சுற்றியிருந்த மற்றைய தோழிகள் சுவாரஸ்யமாய் அனாயா கூறப்போவதை கேட்கத்தயாரானார்கள்.

“மிஸ். மான்சி சுமார் மூனு மாசம் கமிட்டெட்டாக இருந்தாங்க...” என்று கூற ஒவ்வொருவரும் ஒவ்வொரு கேள்விகளை எழுப்பினார்கள்.

“ஆர் யூ சீரியஸ்...?”

“நிஜமாவா?”

“ஆர் யூ கிடிங்...?”

“இதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லையே...”

“பூமி ஏதும் தலைகீழா சுத்த ஆரம்பிச்சிடுச்சா?” என்ற கேள்விகளை கண்டு நிஜமாகவே மலைத்துபோனாள் மான்சி.
தன்னை பற்றிய மற்றவர்களின் எண்ணம் அவளுக்கு ஒருபுறம் ஆச்சரியத்தையும் மறுபுறம் அதிர்ச்சியையும் கொடுத்தது.
அதனை வாய்வழியே கேட்டுவிட்டாள் மான்சி.

“நான் கமிடெட் ஆனது அவ்வளவு பெரிய குத்தமாடி?” என்று மான்சி கேட்க அவர்களுள் ஒருத்தி

“நீ ஆனது குத்தமில்லை மான்சி. நீ நிஜமாகவே ஆகிட்டியாங்கிற அதிர்ச்சியோட ரியாக்ஷன் தான் இது... இல்லையாடி...?” என்று மற்றவர்களை பார்த்து கேட்க அவர்களும் ஆமா போட்டு அதனை ஆமோதித்தனர்.

“என்ன ஜோக் காட்டுறீங்களா பீப்ஸ்..” என்று முறைத்த மான்சியை பார்த்து இன்னொருத்தி

“மூனு வருஷமா காலேஜ்ல நீ காட்டாத காமெடியையா நாங்க பண்ணிட்டோம்...” என்று கேட்க இன்னொரு பெண்ணோ

“அதானே...இரண்டு நாளைக்கு மூனு பாய்ப்ரெண்ட் மாத்துற நீ மூனு மாசம் ஒருத்தரோட பொறுமையை சோதிச்சிருக்கனா அது அதிசயம் இல்லையா??”என்று கேட்க அனாயாவும்

“அந்த பொறுமைசாலி யாருனு தெரிஞ்சா நீங்க அத்தனை பேரும் இன்னும் ஷாக் ஆகிடுவீங்க.” என்று கூற அதில் ஒருத்தி

“அது யாரு அனா அது? நமக்கு தெரிஞ்சவங்களா?” என்று கேட்க

“என்னோட உடன்பிறப்பு தான் அந்த பொறுமைசாலி.” என்று கூறிய மறுநொடி முன்னதை விட பல கேள்விகள் பறந்து வந்தது.

“அந்த ரோபோட்டுக்கு பீலிங்ஸ் இருக்கா?”

“மிஸ்டர். பேச்சுலரா...?”

“ஆஞ்சநேயர் பக்தருக்கு அஞ்ஞான வாசம் அவசியமில்லைபோல இருக்கே...”

“பீஷ்மர் சபதம் காத்தோட போச்சா...” என்ற கேள்விகளை கண்டு இப்போது அயர்ந்து போவது மான்சியின் முறையானது.

“ஹேய் காய்ஸ்... என்ன இப்படியெல்லாம் கேட்குறீங்க?” என்று மான்சி கேட்க

“அவங்க எல்லாரும் சரியா தான் கேட்குறாங்க. உனக்கு தான் அவனை பத்தி இன்னும் சரியாக தெரியல.” என்று கூறிய அனாயா மற்றவர்களை பார்த்து

“இதே ஷாக்கு தான் எனக்கும். இவ செகெண்ட் இயர்ல வந்து ஜாயின் பண்ணதால அவனோட வீர தீர பெருமையெல்லாம் இவளுக்கு தெரியாது.” என்று கூற இன்னொருத்தி

“தெரிஞ்சிருந்தா மூனு நிமிஷம் கூட முழுசா பேசியிருக்கமாட்டா. இவளை விடு உன் அண்ணன் எப்படி இவளுக்கு ஒகே சொன்னான்? அவன் கூட பிறந்த உன்கூடயே ஒன்றரை நிமிஷத்துக்கு மேல நின்னு பேசமாட்டான். இவ கூட எப்படி மணிகணக்குல பேசி இருப்பான்?” என்று கேட்க அனாயாவும் மற்றைய தோழிகளும் மான்சியை கேலியாக பார்த்து சிரித்தனர்.

இதற்கு மேல் இங்கிருந்தால் தன்னை ஒரு வழி செய்துவிடுவார்களென புரிந்து கொண்ட மான்சி அங்கிருந்து எழுந்து ஓடிவிட்டாள்.
ஆனால் ஓடியவளின் ஓட்டமோ சற்று தூரத்தில் தெரிந்த இரு உருவங்களை கண்டு தடைபட்டது.
அதில் ஒரு உருவம் பரிட்சயமானதாக தெரிய அவர்களை நோக்கி நடந்தாள்.

அவர்களை சற்று நெருங்கியதும் நின்று கொண்டிருப்பது ப்ரவாஹன் என்று புரிந்தது.

ப்ரவாஹனை இவ்விடத்தில் ஒரு பெண்ணோடு பார்த்ததும் முதலில் அதிர்ந்தவள் பின் தன் மனதை திட்டிக்கொண்டு அங்கிருந்து செல்ல முயன்றாள். ஆனால் அலைபுறுதலால் சலனப்பட்டிருந்த அவளின் மனமோ அவளை அவ்விடத்திலிருந்து நகர அனுமதிக்கவில்லை.

தன் மனதின் நிலையை புரிந்திட முடியாது நின்றிருந்தவளுக்கு சட்டென ப்ரவாஹனை அணைத்த அப்பெண்ணின் செயல் அதிர்ச்சியை கொடுத்தது.

அதிர்ச்சியோடு கோபமும் சேர்ந்திட அப்பெண்ணை விலக்காது நின்றிருந்த ப்ரவாஹன் மீது வெறுப்பும் ஒரு சேர எழுந்தது.
உணர்வுகளின் கோர்வை அவளின் உறுதியை நிலைகுலைக்கும் வழியை செவ்வனே செய்திட கால்கள் வேரூன்றி நின்றவளின் கண்கள் குளம் கட்டியது.

அது அணையுடைக்கும் முன் தன்னிலை மீண்டவள் நொடி நேரம் கூட தாமதிக்காது அங்கிருந்து சென்றுவிட்டாள்.
இது எதனையும் உணராது அப்பெண்ணின் அணைப்பை ஏற்காது கைகட்டி நின்ற ப்ரவாஹன்

“சம்யுக்தா நான் ஜென்டில்மேனாக நடந்துக்கனும்னு நினைக்கிறேன். என்னை வயலண்டா நடந்துக்க வச்சிடாத.” என்று கூறியபடியே கைகளை பின்னால் கட்டியபடி நின்றிருந்தவனிடமிருந்து சட்டென்று விலகினாள் சம்யுக்தா.
விலகி நின்றவளின் பார்வையில் வலியும் வேதனையுமே அளவுக்கதிகமாய் இருந்தது.

அவள் விழிகளில் பல கேள்விகள் நிரம்பி வழிந்த போதிலும் அது எதிரில் நின்றவனை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை.
அது சம்யுக்தாவின் வேதனையை இன்னும் அதிகரிக்க

“நானும் உங்கிட்ட ரொம்ப ஜென்டிலாக தானே நடந்துக்கிட்டேன் ப்ரவா. அப்போ கூட ஏன் உங்களுக்கு என்னை பிடிக்கல...” என்று சம்யுக்தா ஏக்கத்துடன் கேட்க ப்ரவாஹனோ சற்றும் கருணையில்லாமல்

“லுக் சம்யுக்தா. அன்னைக்கு சொன்னது தான் இன்னைக்கும். ஐயம் நாட் இன்டரஸ்டட். டோன்ட் போஸ் மீ.” என்று உறுதியான குரலில் கூறிவிட்டு அங்கிருந்து சென்றிட சம்யுக்தாவிற்கோ அன்றைய நாளை விட இன்று அதிகமாக வலித்தது.

இத்தனை ஆண்டுகள் கடந்தும் அவள் மனம் அவனின் மீதான காதலை மறக்க முடியாமல் தவிக்க இவனோ அன்றைய பதிலை
இன்றும் அதே உறுதியுடன் கூறி அவளுக்கு வேதனை கொடுக்கிறான்.

சில வினாடிகளுக்கு முன்....

போனில் உரையாடிய படியே ஏரியருகே தனியே நின்றிருந்த ப்ரவாஹன் அருகே சென்றாள் சம்யுக்தா.
வந்ததிலிருந்து ப்ரவாஹனுடன் தனித்து பேசிட சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்த சம்யுக்தாவிற்கு இது சாதகமாக அமைந்திட உடனே அதனை பயன்படுத்திடும் நோக்குடன் ப்ரவாஹனருகே சென்றாள் சம்யுக்தா.

தன் பின்னே யாரோ நின்றிருப்பதை உணர்ந்து பின்னே திரும்பி பார்த்த ப்ரவாஹனின் ஒற்றை புருவம் உயர்ந்தது.
“ஐல் கால் யூ பேக்.” என்று அழைப்பை அணைத்தவன் சம்யுக்தா புறம் திரும்பி

“என்ன சம்யுக்தா?” என்றவனின் வார்த்தைகளில் மூன்றாம் மனிதனின் தொனி நிரம்பியிருந்தது சம்யுக்தாவிற்கு நன்றாகவே தெரிந்தது.

“உங்களுக்கு இன்னும் என்னை ஞாபகம் இருக்கா ப்ரவாஹன்?” என்றவளின் குரலில் இருந்த துள்ளலை ப்ரவாஹன் கவனித்த போதிலும் அதனை அவன் பொருட்படுத்தவில்லை.

“என்ன விஷயம்?” என்று கேட்டவனின் குரலிலிருந்த எரிச்சல் எதிரில் நின்றிருந்தவளுக்கு ஏதோவொரு தைரியத்தை கொடுத்தது.

“ஓகே நான் நேரடியாக விஷயத்திற்கே வரேன். ஐ ஸ்டில் லவ் யூ.” என்று சம்யுக்தா கூற

“ஐயம் நாட் இன்டரஸ்டட்.” என்று ப்ரவாஹன் அதே பதிலை கூற சம்யுக்தாவிற்கு வேதனையாக இருந்தபோதிலும் அவள் இதை எதிர்பார்த்திருந்ததால் தன் வேதனையை தனக்குள்ளே மறைத்துக்கொண்டு பேசத் தொடங்கினாள்.

“ப்ரவாஹன் இதுக்கு இவ்வளவு சீக்கிரம் பதில் சொல்லனுமா?”என்று சம்யுக்தா கேட்க

“விருப்பமில்லாத ஒரு விஷயத்தை உடனே இக்னோர் பண்ணுறது தானே புத்திசாலித்தனம்.” என்று கூறியவனின் வார்த்தைகளில் ஏதோவொரு எச்சரிக்கை இருந்தது.

அதை புரிந்தும் புரியாதது போல்
“விருப்பமில்லைனு இக்னோர் பண்றதுக்கு பதிலா அதை ஒரு முறை கன்சிடர் பண்ணி பார்க்கிறதுல என்ன தப்பு இருக்கு?” என்று விவாதம் செய்தவளை யோசனையுடன் பார்த்தவன்

“இப்போ நான் என்ன செய்யனும்னு எதிர்பார்க்கிற சம்யுக்தா?”

“நாம பழகிபார்க்கனும்னு விரும்புறேன்.” என்று சம்யுக்தா நேரடியாகவே கூற

“புல்ஷிட்...” என்றவனின் வார்த்தைகளை பொருட்படுத்தாதவளாய்

“இப்போ அப்படி தான் இருக்கும். பட் மாற்றம் ஒன்று தான் மாறாதது.” என்று சம்யுக்தா கூற ப்ரவாஹனுக்கோ தலை வலிக்கத்தொடங்கியது.

“லுக் சம்யுக்தா. எனக்கு உன்னை பார்க்கும் போது எந்த பீலுமே வரல. ஜஸ்ட் ஒரு ப்ரெண்டா ஹாய் ஹலோனு சொல்லத்தான் தோனுது. இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு புரியல. புரிஞ்சிக்க முயற்சி பண்ணு.”

“நான் உங்களை ஓகே சொல்ல சொல்லலை ப்ரவாஹன். ஜஸ்ட் பழகி பார்க்கலாம்னு தான் சொன்னேன். அதை ஏன் நீங்க தப்பா புரிஞ்சிக்கிறீங்க.” என்று அவனுக்கு புரியவைத்திடும் முயற்சியில் சம்யுக்தா பேச அவனோ அதற்கு வாய்ப்பு கொடுத்திடும் முடிவில் இல்லை.

“நோ. இது எந்த காலத்துலயும் சாத்தியப்படாதுனு தெரிஞ்சிக்கிட்டே எதுக்கு வாய்ப்பு கொடுக்கணும்னு கேட்கிறேன்.” என்றவன் கூறியதும் சட்டென்று அவனை நெருங்கி அவன் தடுக்கும் முன்னே அவன் மார்பில் சாய்ந்து அவனை அணைத்துக்கொண்டாள் சம்யுக்தா.

அவளை தன்னிடமிருந்து பிரிக்கமுற்பட்டவனின் செயலை சம்யுக்தாவின் வார்த்தைகள் தடுத்தது.

“என்னை விலக்கி உங்க பலவீனத்தை காட்டபோறீங்களா ப்ரவாஹன்?” என்று கேட்க ஏற்கனவே அவளின் அணைப்பினால் எரிச்சலிலிருந்தவனுக்கு இப்போது அவளது வார்த்தைகளும் எரிச்சலை கொடுத்தது.

“வாட் யூ மீன்?” என்று எரிச்சல் மேலிட கேட்டவனிடம்

“எப்பவும் பீலிங்ஸ் வராதுன்னு சொன்னீங்களே அதை ப்ரூவ் பண்ணுங்கன்னு சொல்றேன். ஒரு அஞ்சு நிமிஷம் உங்களால எந்த சலனமும் இல்லாமல் இப்படியே நிற்க முடிஞ்சா நான் நீங்க சொன்னதை ஒத்துக்கிறேன். இல்லைனா நீங்க நான் சொன்னதுக்கு ஒத்துக்கனும்.”என்றவளின் பேச்சு எரிச்சலை கொடுத்தபோதிலும் இன்றே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென்ற முடிவுடன் சற்று நேரம் ஏதும் செய்யாது அமைதியாக நின்றான். அப்போது தான் மான்சி இவர்களை பார்த்தாள்.

பார்த்ததோடு நில்லாது இலவச இணைப்பாக வேதனையையும் வேண்டிப்பெற்றுக்கொண்டாள்.

ஒருத்தி மறைந்த காதலுக்காக கலங்கி நின்றிருக்க இன்னொருவள் மறுப்புபெற்ற காதலுக்காக வேதனையில் உழன்றிருக்க இதற்கெல்லாம் காரணமாகவோ தலைவலியின் தாக்கத்தால் உறக்கத்தின் ஆக்கிரமிப்புக்கு சிறைபட்டிருந்தான்.

இனி யாரின் மூலம் காதல் தித்திப்பை அள்ளித்தெளிக்கும்...??
 
Last edited:

Anu Chandran

Moderator
தித்திப்பு 9

எதிர்பாரா
இணைப்புகள் கூட
சில பிணைப்புகளை
பந்தங்களாக
மாற்றக்கூடியவை....

வேதனையுடனும் எரிச்சலுடனும் நடந்து வந்த மான்சி தரையிலிருந்த சிறிய பாறையை கவனிக்கவில்லை.

அழகுக்காக அவ்விடத்தில் அமைக்கப்பட்டிருந்த பாறையில் இடித்துக்கொண்டவள் வலியுடன் காலை பிடித்துக்கொண்டு தரையில் அமர்ந்துவிட்டாள்.

விரல் நன்றாக அடிபட்டிருக்க கால் நகத்திடைவெளியிலிருந்தும் வெளிப்புறமாகவும் இரத்தம் வந்தது.
தன் அடிபட்ட விரலை ஆராய்ந்தபடியிருந்தவளை கலைத்தது அவனின் குரல்.

“என்னாச்சு மிஸ்...” என்று கேட்ட அக்குரல் மிகப்பரிச்சயமானதாக தோன்ற யோசனையோடு திரும்பி பார்த்தாள் மான்சி.

எதிரே நின்றிருந்தவனை பார்த்தும் சற்று நேரம் விழி விரித்தபடியிருந்தவளது முன் கையசைத்தான் அவன்.

“ஹலோ.. மிஸ்.. என்னாச்சு...” என்று குழப்பத்துடன் கேட்டபடியே அவளை ஆராய்ந்தான் அவன்.

ஆனால் அப்போதும் கூட மான்சியின் பாவனையில் எவ்வித மாற்றமும் இல்லை.

மான்சியை கவனித்தவன் உடனடியாக நிலைமையை புரிந்துக்கொண்டு அவளுக்கு உதவினான்.

தன் பாக்கெட்டிலிருந்த கர்சீப்பை எடுத்தவன் அவளுக்கு கட்டுபோட்டுவிட்டு அவளால் எழும்ப முடியுமா என்று விசாரித்தான்.

அவன் கட்டுப்போடும் போதே தன்னிலை மீண்டிருந்த மான்சிக்கு அப்போது தான் தானிருந்த நிலை புரிந்தது.

மனதிற்குள் தன்னிலையை எண்ணி குட்டிக்கொண்டவள் அவனிடம் நன்றி உரைத்தாள்.

“ரொம்ப தேங்க்ஸ் சீனியர். இனி என்னால் மேனேஜ் பண்ணிக்கமுடியும்.” என்று கூறிய மான்சி தன்னை சமாளித்துக்கொண்டு எழுந்து நின்றாள்.
அவளின் நடையிலிருந்து தடுமாற்றத்தை கண்ட அவன்

“நீங்க ஸ்ரெடியா இல்லை. வேணும்னா உங்க ரூம் வரைக்கும் துணைக்கு வரட்டுமா?” என்று அவன் கேட்க மறுக்க நினைத்த மான்சி பின் சரியென்று தலையாட்டிவிட்டாள்.

மான்சி நொண்டி நொண்டி நடக்க அவளுக்கு ஈடுகொடுத்து அவளோடு நடந்து வந்தான் அவன்.

அப்போது மான்சி
“சீனியர் உங்க பேர் நிலவன் தானே...” என்று கேட்க அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்த நிலவன் ஆமென்று தலையாட்ட மேலும் குஷியானாள் மான்சி.

“அப்போ நிஜமாவே அது நீங்க தானா? வாவ்... அன் எக்ஸ்பெக்டட்.” என்றவளை வித்தியாசமாக பார்த்தான் நிலவன்.

ஆனால் அதை கண்டு கொள்ளாது பேசிக்கொண்டே நடந்தாள் மான்சி.
பேச்சில் முழு கவனத்தையும் செலுத்தியவள் பாதையில் கவனம் வைக்க தவிர மீண்டுமொரு கல்லில் மோதிக்கொள்ள சென்றாள்.

அவள் கவனிக்கவில்லை என்பதை ஏற்கனவே கணித்தவனாய் மான்சியின் கையினை சட்டென இறுகப்பற்றினான் நிலவன்.

நிலவனின் செயலில் சிறிது நிலை தடுமாறியவளை சமாளித்துக்கொண்டு நின்று நிலவனை என்னவென்று பார்த்தாள்.

“முன்னாடி பாருங்க.” என்று நிலவன் கூறவும் அப்போது தான் தரையிலிருந்த கல்லை பார்த்தாள் மான்சி.

“ரொம்ப தேங்க்ஸ் சீனியர். இன்னைக்கு எனக்கு கல்லுல தான் கண்டம் போல இருக்கு. காலையிலிருந்து அது கிட்டயே அடிவாங்கிட்டு இருக்கேன். சரி வாங்க போகலாம்.” என்றவள் வளவளத்தபடியே நிலவனின் துணையோடு தன்னறைக்கு வந்து சேர்ந்தாள்.

மான்சி தன் அறைக்கு செல்லும் முன் நிலவனை பார்த்து நன்றி கூறியவள்
“சீனியர் நீங்க இப்பவும் அதே மாதிரி பாடுவீங்களா?” என்று கேட்க இத்தனை நேரம் சாதாரணமாக இருந்தவன் இப்போது வசீகரமாய் சிரித்தான்.

அதே சிரிப்புடன் ஆமென்று தலையசைத்த நிலவன் அங்கிருந்து விடைபெற்று சென்றான்.

இதை பார்த்திருந்த மான்சிக்கோ ஏனோ உள்ளுக்குள் அத்தனை குதூகலமாயிருந்தது.

அதே குதூகலத்துடன் அறையின் கட்டிலில் கவிழ்ந்தவளுக்கு கல்லூரி கால நினைவுகள் படையெடுத்தது.
அவளது கல்லூரி நாட்களில் அவளது க்ரஷ் என்றால் அது நிலவன் தான்.

அப்போது மட்டுமல்ல இப்போதும் கூட அவளின் க்ரஷ் அவன் தான்.

முகமூடியோடு பாடுவதற்காக மேடையேறுபவனுக்கு அளவில்லா பெண் விசிறிகள்.

பலருக்கு அவன் யாரென்றே தெரியாது. அதனாலேயே காலேஜில் அவனால் சுதந்திரமாக திரியமுடிந்தது. அப்படியே அவனை கண்டு கொண்டவர்களையும் உருட்டி மிரட்டி அவனை பற்றிய செய்திகள் வெளியே தெரிந்திடாவண்ணம் அவனது நண்பர்கள் பார்த்துக்கொள்வர்.

அப்படி உருட்டி மிரட்டப் பட்டவர்களில் மான்சியும் ஒருத்தி.
அவர்களுக்காக அன்றி நிலவனின் வேண்டுதலாக அவர்கள் சொன்ன காரணத்துக்காக மான்சியும் விஷயத்தை கசியவிடாது அமைதியாக இருந்துவிட்டாள்.

ஆனால் அந்த கல்லூரியில் அவனது பெண் விசிறிகளில் ஒருவளாக மான்சியும் வலம் வந்தாள்.

காலேஜில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிலும் நிலவனின் பாடல் இருக்கும். பல குரல்களில் பாடும் அவனின் திறமையை கண்டுகளிக்கவே மான்சி அனைத்து நிகழ்வுகளுக்கும் செல்வாள்.

அவனை பற்றி தனிப்பட்ட ரீதியில் தெரிந்துகொள்ளும் ஆவல் இருந்தபோதிலும் அவளுக்கு அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை.

ஆனால் இன்று நிலவனை பார்த்த சில நொடிகளிலேயே அவனை பற்றி புரிந்துகொண்டாள்.

அவனை பற்றிய யோசனையுடனேயே கட்டிலில் கவிழ்ந்திருந்தவள் அவளறியாமலே உறங்கிவிட்டாள்.

மறுபுறம் தன் அறைக்கு மாறாபுன்னகையுடன் வந்த நிலவனை அவனது நண்பன் வருணேஷ் ஆராய்ச்சி பார்வை பார்த்தான்.

தன் பார்த்துக்கொண்டிருந்த வருணேஷின் தோளில் கை போட்டு அவனை இழுத்து பக்கவாட்டில் அணைத்தவனின் செயலில் பதறிய வருணேஷ்
“ஆத்தா மாரியாத்தா. மறுபடியும் இவனுக்கு அந்த கிறுக்கு பிடிச்சிருக்கு. இவன்கிட்ட இருந்து என்னை காப்பாத்து ஆத்தா.” என்றவனின் பதறல் காதில் விழாதது போல் எதையோ நினைத்து சிரித்துக் கொண்டிருந்தான் நிலவன்.

பெரும்பாடு பட்டு அவனது பிடியிலிருந்து விலகிய வருணேஷ் நிலவனை பார்த்தபடியே
“அந்த மாஷாவும் வந்திருக்காளா?” என்று கேட்க முப்பத்தியிரண்டு பற்களையும் காட்டி சிரித்தபடியே ஆமென்று தலையாட்டினான் நிலவன்.

“சரியாப்போச்சு. இனி உன்னோட அதகளம் தாங்காதே... சரி அவ கூட பேசுனியா?” என்று கேட்க நிலவனோ சற்று கெத்தாக

“அவ தான் என்கூட பேசுனா...”என்று கூற இப்போது வருணேஷ் சீரியஸான குரலில்

“இப்பவும் கூட அவ மேல ஜஸ்ட் க்ரஷ் தான்னு உனக்கு தோணலையா நிலவா?” என்று வருணேஷ் கேட்க

“இத்தனை வருஷம் கழிச்சி பார்த்தும் கூட அவ மேல அப்போ என்ன பீல் இருந்துச்சோ அதே தான் இப்பவும் இருக்கு. அப்போ இது ஜஸ்ட் க்ரஷ்னா உனக்கு தோனுது?” என்று நிலவன் கேட்க வருணேஷிற்கோ என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை.

பல்நாட்டு நிறுவனமொன்றில் ரீஜனல் மேனேஜராக பணி புரிபவனின் அசாத்திய திறமையை கண்டு வியந்த வருணேஷிற்கு அவனது இக்காதல் மட்டும் கிறுக்குப் தனமாக தெரிந்தது.

பார்த்ததும் காதல் மலர்ந்துவிட்டதென அவன் கூறிய சம்பவத்தை இன்றுவரை வருணேஷால் ஏற்கமுடியவில்லை.

அச்சம்பவம் நடக்கும் போது அவனும் அருகில் இருந்ததாலேயே அவனுக்கு நிலவனின் உணர்வுகளும் எண்ணங்களும் முட்டாள்தனமாக தெரிந்தது.

ஆனால் இதற்கு இன்று ஏதாவது செய்யாவிடின் நிச்சயம் நிலவன் தன் உணர்வுகளை குழப்பிக்கொள்வானென்று எண்ணிய வருணேஷ் நிலவனிடம் பேசத் தொடங்கினான்.

“நிலவா... நானும் எத்தனையோ தடவை சொல்லிட்டேன். ஆனா நீ புரிஞ்சிக்கமாட்டேங்கிற. எல்லா விஷயத்துலயும் ப்ரில்லியண்டாக இருக்க நீ இந்த விஷயத்தில் ஏன் இவ்வளவு முட்டாளாக இருக்கனு எனக்கு புரியல. இந்த பொண்ணை மனசுல வச்சுக்கிட்டு வீட்டுல பார்த்த அத்தனை பொண்ணுங்களுக்கும் நோ சொல்லிட்ட. இன்னைக்கு நீ இதுக்கு ஒரு முடிவு எடுத்து ஆகனும். ஒன்று நீ போய் அந்த பொண்ணுக்கு ப்ரபோஸ் பண்ணு. இல்லையா நீ நாளைக்கே வீட்டுல பார்க்குற பொண்ணுக்கு ஓகே சொல்லு. இது இரண்டுல ஒன்று இன்னைக்கு நடந்தே ஆகனும்.”என்று வருணேஷ் உறுதியோடு கூற அதே முடிவிலிருந்த நிலவனும் அதற்கு சம்மதித்தான்.

வருணேஷ் நினைப்பது போல் நிலவனின் நிலை இல்லை. தன் மனதில் முதன்முதலாய் முளைத்த அவ்வுணர்வை அவனால் வெகு இலகுவாக மறக்கவோ தட்டிக் கழிக்கவோ முடியவில்லை. ஏனோ நிறைவேறுமா நின்றிடுமா என்று தெரியாத நிலையிலிருந்த உணர்வு அவனுக்குள் ஒரு தித்திப்பை கொடுத்திருந்தது.

அதனாலேயே அவ்வுணர்வை அவனால் அத்தனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளமுடியவில்லை.
அதன் அசாதாரணத்தன்மையே அவனை இத்தனை நாட்களால் பேச்சுலராகவே வலம் வரத் தூண்டியது.
ஆனால் இன்று இங்கு வந்தவன் அவன் உணர்வுகளுக்கு காரணமானவளை சந்திப்பானென்று எதிர்பார்க்கவில்லை.

ஆனால் இன்று அவளிடம் பேசிடவேண்டுமென்ற முடிவுடன் இன்றைய இரவு நேர பார்ட்டிக்காக காத்திருக்கச் தொடங்கினான் நிலவன்.
 

Anu Chandran

Moderator
தித்திப்பு 10

இடையூறெனும்
தடைகள் கூட
சில சமயங்களில்
சிக்கலை
தீர்த்திடும்
தீர்வுகளாகின்றது..

பகல் உணவிற்கு சந்தித்த நண்பர்கள் கூட்டம் மீண்டும் இரவு அவர்களின் முன்னாள் விரிவுரையாளர் ராஜனின் பிரியாவிடை நிகழ்விற்கு ஒன்று கூடினர்.

ப்ரவாஹனும் ஆதீஷூம் அவர்களது நண்பர்களுடன் இருக்க அவர்களோடு மேகாவும் சம்யுக்தாவும் இருந்தனர்.
மதியம் நடந்த சம்பவத்திற்கு பின் ப்ரவாஹனோ சம்யுக்தாவை திரும்பியும் பார்க்கவில்லை. ஆனால் சம்யுக்தாவோ அவனை பின்தொடர்வதை நிறுத்தவில்லை. மறுபுறம் அனாயாவும் மான்சியும் தம் நட்புக்களோடு இருந்தனர். நிலவனும் அவனது நண்பர்களும் இன்னொரு புறம் நின்றிருக்க அவ்விடமே நிரம்பி வழிந்தது. அன்றைய விழா நாயகனான ராஜன் அங்கு வந்ததும் விழா ஆரம்பமானது.

ப்ரவாஹனின் நண்பனான தியாகு அன்றைய விழாவை தொகுத்து வழங்க அனைத்தும் சிறப்பாக நடந்தேறியது.
பிரியாவிடை நிகழ்வு முடிந்ததும் அனைவரும் இரவு விருந்து கலந்துகொண்டனர்.
மான்சி அனாயா மற்றும் இன்னும் சில நட்புக்களுடன் அமர்ந்து வளவளத்துக்கொண்டிருக்க அவளை தூரத்திலிருந்து இரு ஆண்கள் கவனிப்பதை அவள் உணரவில்லை.

நிலவன் தன் மனம் கவர்ந்தவளை மனதால் மகிழ்வோடு ரசித்தபடியிருக்க ப்ரவாஹனோ தன்னை விட்டு விலகியவளை வருத்தத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான். ஆதீஷ் இதனை கவனித்த போதிலும் கண்டுகொள்ளவில்லை.

அப்போது அவன் மனதினுள் ஒரு யோசனை தோன்ற சட்டென்று போனை எடுத்தவன் அனாயாவிற்கு ஒரு மேசேஜை தட்டிவிட்டான். மேசேஜை படித்ததும் அனாயா ஆதீஷை பார்க்க அவன் கண்களால் சைகை செய்தான்.

அதை புரிந்து கொண்டவள் போல் சாப்பிட்டு முடித்துவிட்டு வளவளத்துக்கொண்டிருந்த மான்சியிடம்
“மான்சி கொஞ்சம் என் கூட வர்றீயா?” என்று அழைக்க

“எங்கடி?”

“கொஞ்சம் ரூம் வரைக்கும் போயிட்டு வருவோம்.என்னோட பவர் பேங்க்கை எடுக்கனும்.” என்று அனாயா கூற அவள் இன்னும் உணவு அருந்திக்கொண்டிருப்பதை பார்த்த மான்சி

“இது இப்போ ரொம்ப அவசியமாடி? சாப்பிட்டதும் போய் எடுக்கலாமே...” என்று கேட்க

“அதுவரைக்கும் போன் தாங்காது. டேட்டா வேற ஆஃப் பண்ண முடியாது. உனக்கே தெரியும்ல.” என்று அனாயா பாவமாக கூற

“இவ தொழிலதிபர் ஆனதுக்கு என்னை தொல்லை பண்ணிட்டு இருக்கா. சரி நீ சாப்பிடு நானே போய் எடுத்துட்டு வரேன். எங்க வச்சிருக்க?”என்று கேட்டறிந்துகொண்டு மான்சி அங்கிருந்து சென்றாள்.

அவள் தனியே செல்வதை பார்த்த நிலவனும் அவள் பின்னே சென்றான். ஆதீஷூம் ஏதோ காரணம் கூறி ப்ரவாஹனையும் அங்கிருந்து கிளப்பியிருந்தான்.

மான்சி அவர்களின் அறையை நெருங்குகையில் அவளை அழைத்தான் நிலவன்.

தன்னை யாரோ அழைப்பதை உணர்ந்து திரும்பிப் பார்த்த மான்சி அங்கு நின்றிருந்த நிலவனை கண்டாள்.
“ஹே நிலவன் நீங்க என்ன இங்க?” என்று கேட்க

“உங்கிட்ட கொஞ்சம் பேசனும்.” என்று நிலவனும் சாதாரண குரலில் சொல்ல

“வய் நாட்... பட் ஒரு நிமிஷம்.” என்றவள் அறையை திறந்து உள்ளே சென்றவள் அலறும் சத்தம் கேட்டது.
அவளின் அலறல் நிலவனுக்கு பதற்றத்தை கொடுக்க சட்டென அவனும் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான்.
அறையினுள்ளே ஒளி படர்ந்திருக்க அவ்வறையின் அலங்கோலம் தெளிவாக தெரிந்தது.

அதோடு காலில் உணர்ந்த ஈரம் அவனுக்கு என்ன நடந்திருக்குமென்று உணர்த்த தரையில் விழுந்து வலியில் அலறியபடியிருந்த மான்சியை மெதுவாக அணுகினான் நிலவன்.

தரை முழுதும் தண்ணீர் நிரம்பியிருக்க வலியில் அலறியபடியிருந்தவளை தன் கைகளில் ஏந்தியவன் அவளை தூக்கிக்கொண்டு மெதுவாக அறையிலிருந்து வெளியேறினான்.

மான்சியை தூக்கியபடி நடந்தவன்
“ஆஸ்பிடல் அழைச்சிட்டு போகவா?” என்று வலியினால் முகம் சுழித்தபடியிருந்தவளிடம் நிலவன் கேட்க

“என்னை முதல்ல ஒரு இடத்துல உட்கார வைங்க. அப்போ தான் எங்கெங்க அடிபட்டிருக்குனு தெரியும்.” என்று அவள் தன் நிலையை சொல்ல அவளை நீச்சல் தடாகத்தினருகேயிருந்த இருக்கையில் அமரவைத்தான்.

தூரத்திலேயே நிலவன் மான்சியை அவளறையிலிருந்து தூக்கிக்கொண்டு செல்வதை கண்ட ப்ரவாஹன் அவர்களை பின்தொடர்ந்து வந்திருந்தான்.

மான்சி கேட்டுக்கொண்டதன் படி அவளை அமர வைத்தவன் தன் மொபைலை எடுத்து வருணேஷிற்கு அழைத்து மான்சியின் அறை நிலைமையை கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

பின் மான்சியின் நிலையை ஆராயத்தொடங்கினான். மான்சிக்கு விழுந்தபோது தெரியாத வலி இப்போது அதிகமாக தெரிந்தது.
அப்போது தான் அவளின் இடது அடிப்பாதத்தை அசைக்கமுடியாதபடி உருவாகியிருந்த வலி அவளுக்கு புரிந்தது.
அதை மான்சி நிலவனிடம் கூற அவன் அவளது அடிப்பாதத்தை மெதுவாக பிடிக்க அவளோ வலியில் உயிர்போகும் அளவிற்கு கத்திட நிலவனோ பயந்துவிட்டான்.

இவை அனைத்தையும் பார்த்திருந்த ப்ரவாஹன் நடந்ததை சரியாக யூகித்தபடியே அவர்களுக்கே வந்தான்.

“ஹாஸ்பிடல் போகலாம்.” என்று கூற சட்டென கேட்ட அவன் குரலில் இருவரும் யாரென்று அவனை திரும்பி பார்த்தனர்.
நிலவனின் பார்வையில் கேள்வி தெரிய மான்சியோ

“பேபி பாய் கட்டாயம் போகனுமா? என்னால நடக்க முடியும்னு தோனல.” என்று கூற ப்ரவாஹனோ நிலவன் இருப்பதை பொருட்படுத்தாது அவளருகே வந்து அவளை ஏந்திக்கொண்டவன் நிலவனை பார்த்து

“கேன் யூ அக்கம்பனி அஸ்?” என்று கேட்க நிலவன் மனதில் சற்று சுணக்கம் இருந்தபோதிலும் மான்சியின் நிலையை கருத்தில் கொண்டு அவர்களை தன் கார் இருந்த இடத்திற்கு வழிநடத்தி சென்றான்.

மூவரும் மருத்துவமனையை அடைந்ததும் மான்சியை சிகிச்சைக்காக அனுமதித்துவிட்டு ஆண்கள் இருவரும் காத்திருந்தனர்.
அப்போது நிலவனின் அலைபேசி சிணுங்க அவன் அதனோடு வெளியே செல்ல பாக்கெட்டிலிருந்து தன்னுடைய மொபைலை எடுத்த ப்ரவாஹன் அனாயாவிற்கு அழைத்தான்.

ஏற்கனவே அவர்களின் அறையில் நீர் நிறைந்ததை அறிந்திருந்த அனாயா மான்சியை தேடிக் கொண்டிருந்தாள்.
சரியாக அந்நேரத்தில் ப்ரவாஹன் அழைக்க அழைப்பை ஏற்றாள் அனாயா.

அவள் அழைப்பை ஏற்றதும்
“மான்சியை xxxx ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணியிருக்கோம். நீ ஆதீஷை அழைச்சிக்கிட்டு சீக்கிரம் வா.” என்று கூறியவன் அழைப்பை துண்டித்துவிட்டான்.

அவனை பற்றி நன்கு தெரிந்ததால் அவனது செயலை பற்றி பொருட்படுத்தாமல் ஆதீஷோடு மருத்துவமனைக்கு கிளம்பினாள்.
ஆடவர் இருவரும் தத்தமது அழைப்புகளை பேசிவிட்டு வந்தபின்னும் ஏதும் பேசிக்கொள்ளவில்லை.

நிலவனுக்கு இந்த சூழ்நிலை ஒரு மாதிரி அசௌகரியமாக இருந்தபோதிலும் ப்ரவாஹனோ அதை பற்றிய எந்த எண்ணமுமின்றி நின்றிருந்தான்.

அப்போது மருத்துவர் மான்சி இப்போது நன்றாக இருப்பதாக கூறியவர் தசைப்பிடிப்பு காரணமாக பாதத்திற்கு கட்டுபோட்டிருப்பதாக கூறினார்.

மருத்துவரிடம் நன்றி உரைத்ததும் எதை பற்றிய நினைவும் இன்றி நிலவன் முன்னே சென்றிட ப்ரவாஹனோ அவன் செல்வதை பார்த்தபடியே வெளியே நின்றான்.

உள்ளே சென்ற நிலவன் நர்ஸ் கொடுத்த மருந்தை அருந்திக்கொண்டிருந்த மான்சி அருகே சென்றான்.

அவளின் நலம் விசாரித்தான் நிலவன்.
“இப்போ வலி பரவாயில்லையா?” என்று கேட்க

“இப்போ பரவாயில்லை. ரொம்ப தேங்க்ஸ். நீங்க சரியான நேரத்துக்கு அங்க வந்ததால....” என்று மான்சி இழுக்க அவளை புரியாமல் பார்த்த நிலவன்

“வந்ததால... என்னங்க?” என்று அவன் சீரியஸாக கேட்க

“சாரி... சாரி... காமெடி பண்ணலாம்னு நினைச்சேன். நீங்க இவ்வளவு சீரியஸாக கேட்கும் போது கவுன்டர் கொடுக்க தோனலை பாஸூ.” என்று அவள் கண்ணடிக்க நிலவனோ தலையசைத்தபடியே சிரித்தான்.

“ஆமா நீங்க என்கிட்ட ஏதோ பேசனும்னு சொன்னீங்களே என்ன விஷயம்?” என்று கேட்க

“அதை இன்னொரு நாள் சொல்லுறேன். இப்போ நீங்க நல்லா ரெஸ்ட் எடுக்க. உங்க கூட வந்தவங்களுக்கு இன்னும் தெரியப்படுத்தல. அவங்க நம்பர் தந்தீங்கனா சொல்லிடுவேன்.” என்று நிலவன் கேட்க

“அதுக்கு அவசியம் இல்லைங்க. இந்நேரம் அவங்களுக்கு விஷயம் தெரிஞ்சி இங்க வந்துட்டு இருப்பாங்க.” என்று அவள் கூறிமுடிக்கும் போதே கதவை திறந்துக்கொண்டு அனாயா உள்ளே வந்தாள்.
 

Anu Chandran

Moderator
தித்திப்பு 11

அழித்திடும்
வரம்தனை
அகழ்ந்திடும்
ஆழி
உன் வருகை....

உள்ளே வந்த அனாயா நேராக மான்சியருகே சென்றாள்.

அவள் அருகே வருவதை கவனித்த நிலவன் சற்று தள்ளி நிற்க அதை ஓரக்கண்ணால் கவனித்தபடியே மான்சியிடம் நலம் விசாரித்தாள் அனாயா.

அவள் கேட்ட அனைத்திற்கும் பொறுமையாக பதில் சொன்ன மான்சி நிலவனை அனாயாவிற்கு அறிமுகப்படுத்தினாள்.

“அனா இவரு நிலவன். உனக்கு தெரியும்னு நினைக்கிறேன்.” என்று கூற அவனை மேலிருந்து கீழ் வரை கண்களாலேயே அளந்த அனாயா

“ஹேய் நிஜமாவா? இவரு தானே உன்னோட காலேஜ் டேஸ் க்ரஷ்?” என்று கேட்க அப்போது சரியாக ஆதீஷோடு உள்ளே நுழைந்த ப்ரவாஹனின் காதிலும் இது விழுந்தது.

நிலவனுக்குமே அவளின் வார்த்தைகள் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியை கொடுத்தது.

ஆனால் இதை கேட்ட ப்ரவாஹனுக்கு காதில் புகை வராத குறை தான். ஆனால் உணர்வுகளை வெளிப்படுத்தி பழக்கமில்லாத அவனது வதனம் எப்போதும் போல் அமைதியாக இருந்தது.

மான்சிக்கு தான் இச்சூழ்நிலையை எவ்வாறு சமாளிப்பதென்று தெரியவில்லை. அனாயா அவன் முன்னேயே தன்னை இப்படி கோர்த்துவிடுவாளென்று அவள் எதிர்பார்க்கவில்லை.நறுக்கென்று அனாயாவின் கையை கிள்ளியவள் நிலவனை பார்த்து கஷ்டப்பட்டு சிரித்தாள்.

அவளது செய்கையை ஒருவன் ரசித்துக்கொண்டும் இன்னொருவன் முறைத்துக்கொண்டுமிருக்க அவளோ அதை பதட்டத்தில் கவனித்ததாக தெரியவில்லை.

அன்று ஒருநாள் இரவு மான்சியை மருத்துவமனையில் தங்கச்சொல்லியிருந்ததால் அனாயா மான்சியோடு தங்குவதாக முடிவானது.
பெண்களிருவருக்கும் துணையாக ப்ரவாஹன் இருப்பதாக கூறிட ஆதீஷ் நிலவனோடு ரிசார்ட்டுக்கு கிளம்பினான்.

நிலவனுக்கு கிளம்ப மனமில்லாத போதிலும் தான் தங்குவது சரிப்படாது என்று எண்ணி ஆதீஷோடு கிளம்பியிருந்தான்.

மான்சியுடன் அனாயா அறையினுள்ளே இருக்க ப்ரவாஹன் காரிடோவில் அமர்ந்திருந்தான்.

பெண்கள் இருவரும் உறங்குவதற்காக வெளியே காத்திருந்த ப்ரவாஹன் அவர்கள் உறங்கிவிட்டதை உறுதி செய்துக்கொண்டு மெதுவாக அறைக்கதவை திறந்துகொண்டு உள்ளே வந்தான்.

மான்சி மருந்து உட்கொண்ட மயக்கத்தில் ஆழ்ந்து உறக்கத்திலிருக்க அனாயாவோ கதவு திறக்கும் சத்தம் கேட்டு மெல்ல கண்களை திறந்து பார்க்க ப்ரவாஹன் உள்ளே வருவது தெரிந்தது.

அவன் மனதில் என்ன இருக்கிறது என்று அறிந்திட உறங்குவது போல் பாவனை செய்தாள் அனாயா.
அனாயா உறங்குவதை உறுதி செய்துகொண்ட ப்ரவாஹன் மான்சியருகே வந்தான்.

அயர்ந்து உறங்கும் ஸ்லீப்பிங் பியூட்டி போல் அழகாய் உறங்கிக்கொண்டிருந்தவளின் நளினம் விழிகளால் புகைப்படமெடுக்கப்பட்டு அவனின் மனப்பெட்டகத்தில் அழகாய் சேமிக்கப்பட்டது.

சற்று நேரம் அங்கேயே நின்று பார்த்திருந்தவன் விலகியிருந்த அவளின் போர்வை செய்துவிட்டு பெருமூச்சொன்றை வெளியேற்றியபடியே அறையிலிருந்து வெளியேறினான்.

இதையெல்லாம் உறங்குவது போல் பாசாங்கு செய்தபடி கவனித்துக்கொண்டிருந்த அனாயாவிற்கு ப்ரவாஹனின் எண்ணங்களை முழுதாக புரிந்துகொள்ளமுடியாதபோதிலும் மான்சியின் வருகை அவனின் மனதில் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்று மட்டும் புரிந்தது.

அடுத்து என்ன செய்வதென்று யோசனையோடே உறங்கிவிட்டாள் அனாயா.

இங்கு ப்ரவாஹனின் அன்னை சத்யவதியை அன்று காலையிலிருந்து தேற்ற முயன்று மாய்ந்து போனார் பரத்வாஜர்.

“இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே அழுதுட்டே இருக்கப் போற பேபி?” என்று நொந்து போய் கேட்டவரிடம்

“அந்த வீட்டுல அவங்க மட்டும் தாங்க எனக்கு சார்பாக இருந்தாங்க. அவங்க மட்டும் இல்லைனா நிச்சயம் நான் உயிரோடு இருந்திருக்கமாட்டேங்க.” என்று கூற அவரை அமைதிப்படுத்தும் ஆயுதத்தை கையிலெடுத்தார் பரத்வாஜர்.

“ இப்போவரை உன்னோட பாஸ்ட்டை மறக்கமுடியாம கஷ்டப்படுற தானே பேபி? ஐ டிடின்ட் மேக் இட் பேபி.” என்றவரின் குரலில் பரவியிருந்த வருத்தம் சத்யவதியை எப்போதும் போலும் வாயடைக்கச்செய்யுமென பரத்வாஜர் எதிர்பார்க்க அவரோ கடிந்து கொண்டார்.

“என்ன பரத் பேசுறீங்க? நான் எதை பத்தி சொல்லுறேன் ... நீங்க எதை பத்தி பேசுறீங்க. அவங்க என்னோட அம்மா மாதிரி. நான் இப்போ இப்படி உங்ககூட சந்தோஷமாக இருக்க முக்கிய காரணமே அவங்க தான். அப்படிபட்டவங்க முகத்தை கடைசியாக ஒருமுறை கூட பார்க்கமுடியலையேங்கிற கவலை தான் எனக்கு.” என்று சத்யவதியும் வருத்தத்துடனேயே கூற

“பேபி நீ பார்க்கனும்னு நினைச்சி அங்க போனப்போ அந்த வீட்டாளுங்க உன்னை உள்ள விடலையே. இட்ஸ் நாட் யோர் பால்ட் பேபி.” என்று பரத்வாஜர் இதோடு இருபதாவது தடவையாக இதே வாக்கியத்தை சொல்ல

“அவங்க உடம்புக்கு முடியாமல் ஆஸ்பிடல்ல இருக்கும்போதாவது நாம போய் பார்த்திருக்கனும் பரத்.” என்று கூறிய சத்யவதியை பார்த்தவருக்கு தன்னை தானே குட்டிக்கொள்ள வேண்டும் போலிருந்தது.

சத்யவதியின் இந்த புலம்பலுக்கு காரணமானவர் அவளின் முன்னாள் கணவரின் சித்தி அருந்ததி.

ஆம் சத்யவதிக்கு பரத்வாஜருடன் நடந்தது இரண்டாவது திருமணம்.

முதல் திருமணமென்னும் நரகத்திலிருந்து அவரை அடாவடியாக மீட்டு வந்தே சத்தியவதியை மணம் புரிந்தார் பரத்வாஜர்.

உலகம் தெரியாமல் வீட்டிற்கு அடங்கிய வெகுளிப்பாவையாக வளர்ந்த சத்யவதியை முதலைகள் நிறைந்த அகழிகை போன்றதொரு இடத்தில் மணம்முடித்துகொடுத்தனர் அவரின் உறவுக்காரர்கள்.

பெற்றவர்களின்றி வளர்ந்த விவரம் அறியாப்பெண்ணை விறகொடிய வேலை வாங்கி கொடுமை செய்தனர் அவரின் புகுந்தவீடு. அவரின் முன்னாள் கணவனோ உடல் தேவைக்கு மட்டும் மனைவியை தேடுபவன் மற்ற நேரங்களில் அவள் இருக்கிறாளா இல்லையா என்று கூட கண்டுகொள்வதில்லை.

கூடலின் விளைவால் சத்யவதி கருவுற அதிகபடியான வேலைப்பளு காரணமாக அதைக்கூட அவரால் அறிந்திட முடியவில்லை.

மசக்கை அவருக்குகு மூன்றாம் மாதமே ஆரம்பித்திருக்க அது தந்த அயர்ச்சியில் யாருமற்ற வீட்டில் மயங்கிக்கிடந்தவரை தற்செயலாக அங்கு வந்த அருந்ததி தான் மருத்துவமனை அழைத்து சென்று அவர் கருவுற்றிருப்பதை அறிந்திட வழிசெய்தார்.

ஆனால் அதன்பின்பு கூட சத்யவதியின் புகுந்தவீட்டார் அவர்களின் கொடுமைகள் நிறுத்தவில்லை.

ஒருநாள் அவர்களின் கொடுமைகளிலிருந்து தப்பிப்பதற்காக யாருமறியாமல் வீட்டிலிருந்து வெளியேறிய சத்யவதி செல்லும் வழியில் மயங்கி சரிந்திட அவரை காப்பாற்றி மருத்துவமனையில் பரத்வாஜரே சேர்த்தார்.

உறக்கமின்மை, பல நாள் பட்டினி, கர்ப்பகால கோளாறுகளென்று அனைத்தும் சேர்ந்து மிகமோசமாக அவரை பலவீனப்படுத்தியிருக்க அதன் விளைவாக அவர் ஒரு வாரம் மருத்துவமனையிலேயே மயக்கநிலையிலிருக்கவேண்டி வந்தது.
அவரின் நிலை கண்டு மருத்துவமனையில் சேர்த்த பரத்வாஜர் தன் ஆட்கள் மூலம் சத்யவதியின் குடும்பம் பற்றி தெரிந்துகொண்டார்.

ஆனால் அவரின் நிலை அறிந்தும் கூட அருந்ததி மட்டுமே சத்யவதியை காண வந்தார்.

வெளிநாட்டு கலாச்சாரத்தில் பிறந்து வளர்ந்தவருக்கு அவர்களின் சொந்த விஷயத்தில் தலையிடுவது சரியாகப் படவில்லை.

பண உதவி மட்டும் செய்தவர் அதோடு ஒதுங்கிட நினைக்க அவரை சந்திக்க வந்த அருந்ததியின் வருகை அவரது எண்ணத்தை மாற்றியது.

சத்யவதியின் நிலையை பற்றி எடுத்துக்கூறியவர் அவருக்கு உதவுமாறு வேண்ட யாரென்று தெரியாது எவ்வாறு உதவுவது என்று தயங்கிய பரத்வாஜர் சத்யவதியின் நிலைமையை எண்ணி சரியென்றார்.

ஒரு வாரத்திற்கு பின் கண்விழித்த சத்யவதியோ புகுந்தவீட்டிற்கு செல்ல வேண்டுமென்று அடம்பிடித்து அங்கு சென்றார்.

பரத்வாஜரும் அவரின் விருப்பப்படியே விட்டிட தன் புகுந்த வீட்டிற்கு சென்ற சத்யவதி அடித்து விரட்டப்பட்டார்.

அவரின் நடத்தையை குற்றம் சாட்டி அவரின் புகுந்தவீட்டார் மீண்டும் அவரை வீதிக்கு தள்ள செல்லும் வழி தெரியாது நடுத்தெருவில் அழுதபடி நின்றவரை அருந்ததி பரத்வாஜரின் பொறுப்பிலுள்ள ஒரு மடத்தில் சேர்த்துவிட்டார்.

பரத்வாஜர் மறுபடியும் ஏதேனும் நடந்தால் சத்யவதியை தன் பொறுப்பிலுள்ள மடத்தில் சேர்த்திடுமாறு அருந்ததிக்கு கூறியிருக்க அவரும் அதன்படியே செய்துவிட்டு பரத்வாஜருக்கு தகவல் சொன்னார்.

மடத்தின் பொறுப்பாளரிடம் சத்யவதியை கவனித்துக்கொள்ளுமாறு கூறிய பரத்வாஜர் அவரை அங்கேயே பணிக்கு அமர்த்துமாறும் கூறியிருந்தார்.

பசி, தூக்கம் மறந்து மாடாய் உழைத்து பழகியவருக்கு மூன்று வேலை சாப்பாடும், வேலையில் கிடைத்த சொற்ப சம்பளமும் அவரின் மனநிம்மதியை மீட்டுக்கொடுக்க போதுமானதாக இருந்தது.

இப்படியே நாட்கள் கழிய ப்ரவாஹனும் பிறந்திட அங்கிருந்து வெளியேற முடிவு செய்திருந்தார் சத்யவதி.

இந்த சொற்ப நாட்களிலேயே இத்தனை வருடங்களாக அவரிடமில்லாத தைரியமும் தன்னம்பிக்கையும் வந்திருந்தது.

அதோடு அவரது கடந்த கால வடுக்கள் அவரது இயல்பினை மாற்றியிருக்க ப்ரவாஹனுக்காக தான் தன்னம்பிக்கையோடு இருந்திட வேண்டுமென்று முடிவெடுத்தவர் அம்மடத்தில் பணி புரிந்தபடியே தன் இருப்பிடத்தை மாற்றினார்.

சத்யவதியின் அனைத்து நடவடிக்கையும் அறிந்த பரத்வாஜருக்கு அவர் மீது ஒரு இனம்புரியாத ஈர்ப்பு. முதலில் சத்யவதியை முதுகெலும்பில்லாத கோழையென்று எண்ணியருக்கு சில நாட்களில் நிகழ்ந்த அவரது மாற்றம் பிடித்திருந்தது. அவரின் செயல்கள் உண்டாக்கிய சுவாரஸ்யம் அவரை சந்திக்க தூண்டிட சத்யவதியை சந்திக்க இங்கு வந்தார் பரத்வாஜர்.

ஆனால் சத்யவதிக்கோ பரத்வாஜர் யாரென்று தெரியாது. அவர் மருத்துவமனையில் கண்விழித்த போது அருந்ததி பரத்வாஜரை பற்றி கூறியிருந்தாரே தவிர அவர் யாரென்று அடையாளம் காட்டவில்லை. அதன் பின்னும் கூட அவரை சந்தித்திடும் சந்தர்ப்பம் அவருக்கு அமையவில்லை.
ஆனால் அவரே தனக்கு உதவியர் என்று மட்டும் தெரியும்.
சத்யவதியை பார்க்க நேரே மடத்துக்கு வந்தார் பரத்வாஜர்.

மடப்பொறுப்பாளர் சத்யவதியிடம் அதை பற்றி தெரிவிக்க அவரும் பரத்வாஜரை காணச்சென்றார்.

சத்யவதியை பார்த்த பரத்வாஜர் சற்று வியந்துதான் போனார். அவர் அன்று பார்த்த சத்யவதிக்கும் இன்று பார்க்கும் சத்யவதிக்கும் பல நூறு வித்தியாசம் இருந்தது.

புயலில் சிக்கி சிதைந்த செடியாயிருந்தவர் இன்று ஆணிவேர் படர்ந்து அஸ்திவாரம் பதித்த ஆலமரம் போல் அத்தனை உறுதியுடனிருந்தார்.

அவரின் இந்த பரிமாற்றம் அவருக்கு ஏனோ கவர்ச்சியாக இருந்தது. அதனை வாய்விட்டு கூறி பாராட்டவும் செய்தார் பரத்வாஜர்.

பின் ப்ரவாஹனை பற்றி விசாரித்தவர் சற்று நேரம் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

ஆனால் அவர் அப்போது பார்த்து சென்ற தைரியமான சத்யவதி மறுமுறை அவர் பார்க்க வந்தபோது இருக்கவில்லை.

மகனுக்காக தன்னை தைரியமான பெண்ணாக மாற்றிக்கொண்ட சத்யவதி மீண்டும் மகனுக்காக அவரின் புகுந்தவீட்டினரை நாடிச் செல்ல நேர்ந்தது.

சத்யவதியின் புகுந்தவீட்டார் சத்யவதிக்கு மகன் பிறந்தது தெரிந்ததும் தம் வீட்டு வாரிசு சத்யவதியிடம் வளரக்கூடாதென்ற முடிவில் நீதிமன்றத்தை நாடி ப்ரவாஹனின் பொறுப்பை தம்வசப்படுத்த முயன்றனர்.

சத்யவதியும் அவரின் முன்னாள் கணவரும் பிரிந்திருந்த போதிலும் முறைப்படி விவாகரத்து பெறவில்லை. விவாகரத்து பத்திரத்தை அனுப்பியவர்கள் ப்ரவாஹனின் பொறுப்பினையும் தாம் முறைப்படி பெறப்போவதாக கூறினார்.

ஆனால் அவரது முன்னாள் கணவரோ தனியே சத்யவதியை சந்தித்து தான் தவறு செய்துவிட்டதாக கூறி மன்னிப்பு கேட்டதோடு தனக்கு இந்த விவாகரத்தில் விருப்பமில்லையென்றும் கூறி ஏதேதோ கூறி சத்யவதியை சரிகட்டி தன்னோடு வீட்டிற்கு அழைத்து சென்றார்.

ப்ரவாஹனுக்காக என்று விருப்பமில்லாமல் மீண்டும் தன் புகுந்தவீட்டிற்கு சென்ற சத்யவதியை அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக புகுந்தவீட்டு சொந்தம் தாங்கியது.

முதலில் அனைவரையும் தூர நிறுத்தியவர் பின் அவர்களது தொடர் நன்னடத்தையால் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொண்டார்.

ஆனால் இதுவொரு சதிவலையென்று அவர் அப்போது அறியவில்லை.
அவர் தெரிந்து கொள்ளும் நாளும் அன்று வந்தது.

சத்யவதியிடம் சில கோப்புகளை கொடுத்த அவரின் முன்னாள் கணவர் கையெழுத்திட்டு கேட்க தன்னை இப்போது நன்றாக நடத்தும் கணவரை முழுதாக நம்பிய சத்யவதியும் என்ன ஏதுவென்று கேட்காது கையெழுத்திட்டு கொடுத்தார்.

கையெழுத்திட்ட மறுநாளிலிருந்தே சத்யவதியின் புகுந்தவீட்டார் தம் சுயரூபத்தை காட்டத் தொடங்கினர்.

மீண்டும் பழைய துன்புறுத்தல்கள் தொடர இம்முறை அவர்களை எதிர்த்தார் சத்யவதி. ஆனால் அந்த எதிர்ப்பு கூட அவர்களின் மனிதாபிமானமற்ற தண்டனைகளால் தன்னிடம் மறந்துபோனது.

சத்யவதியை தண்டித்தவர்கள் ப்ரவாஹனையும் அவளுக்கு எதிராக திருப்பமுயன்றனர். மூன்று வயதே ஆகியிருந்த அச்சிறுபாலகனுக்கு பெரியவர்களின் வன்மம் புரியாமல் அவர்கள் சொல்வது போல் நடந்துகொண்டான்.

இனியும் இங்கிருந்தால் ப்ரவாஹனின் வாழ்க்கை கேள்விக்குறியாகிடும் என்ற பயத்தில் ப்ரவாஹனோடு வீட்டை விட்டு செல்ல முயன்றவரை அடித்து துன்புறுத்தி அவருக்கு மனநலம் பாதித்துவிட்டதென கூறி சத்யவதியை மனநல காப்பகத்தில் சேர்த்துவிட்டனர்.

தன் மகனை தன் புகுந்த வீட்டார் ஏதேனும் செய்துவிடுவரோ என்ற பயத்தில் தூக்கமின்றி மன அழுத்தத்திற்கு ஆளானவரை ஆதாரிக்க யாரும் இல்லாதபோது அவரின் நிலை பற்றி கேள்விப்பட்டு ஊரிற்கு வந்தார் அருந்ததி.

அவரின் முட்டாள்தனம் கோபத்தை ககிளர்ந்தெழுச்செய்த போதிலும் அவரது தற்போதைய நிலையை எண்ணி அவருக்கு ஆறுதலாக இருந்தார் அருந்ததி.

விஷயம் கேள்விப்பட்டு பரத்வாஜரும் ஊரிற்கு வந்திருந்தார். இம்முறை சத்யவதியை இந்நிலைமக்கு ஆளாக்கியவர்களை தானே தண்டிக்கவேண்டுமென்று முடிவெடுத்தவர் என்ன நடந்தது என்று தெரிந்துகொண்டார்.

சத்யவதியின் பூர்வீக சொத்தை கைமாற்றவே அவளின் புகுந்தவீட்டார் இத்தனையும் செய்துள்ளனர். அதோடு தம் குடும்பவாரிசான ப்ரவாஹனையும் அவளிடம் இருந்து முழுதாக பிரிக்கவே அவள் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி அவளை மனநல காப்பகத்தில் சேர்த்திருந்தனர்.

இவை அனைத்தையும் தெரிந்துகொண்ட பரத்வாஜர் அனைத்தையும் தன் பணபலத்தால் சரிப்படுத்தியதோடு சத்யவதியும் குணமாக வழி செய்தார்.

பின் ப்ரவாஹனை சத்யவதியிடம் ஒப்படைத்தவர் எந்தவித தயக்கமும் இன்றி திருமணத்திற்கு சம்மதம் கேட்க சத்யவதியோ பயத்தில் வெளிறினார்.

அவர் நிலை புரிந்த பரத்வாஜரும் வேறேதும் கூறாது தன் நாட்டை நோக்கி பயணமானார்.

சத்யவதிக்கு குற்றவுணர்ச்சியே அதிகமாகயிருந்தது. கடந்தகால வடுக்கள் அவரை இப்போது மனதளவில் மிகவும் பலவீனமடையச் செய்திருந்தது. சமூகத்திற்கு முகம்கொடுக்கவே பயந்து ஓடிஒளிந்தவருக்கு மீண்டும் ஒரு வாழ்க்கை என்ற நினைப்பே அச்சத்தை கொடுத்தது.

ஆனால் தயங்கி மறைய நினைத்தவரை முயன்று முட்டி மோதி கரம்பிடித்துவிட்டார் பரத்வாஜர்.

அதோடு தன் காதலால் அவரை சரிப்படுத்தி மகிழ்ச்சியை மட்டுமே இதுநொடிவரை அனுபவிக்கவும் செய்திருந்தார்.

சத்யவதியை சரிப்படுத்திய பரத்வாஜரால் ப்ரவாஹனை சரிப்படுத்தமுடியவில்லை. அவனின் சிறுபராயத்தின் தாக்கம் அவனின் அன்னையிடமிருந்து அவனை தூரநிறுத்தியது.

ஆனால் அவன் நடவடிக்கைகளுக்கான காரணம் தான் யாருக்கும் புரியவில்லை.
சிறுவர் மனநலமருத்துவரிடம் காட்டியபோதும் கூட அவனிடம் பெரிதாக எவ்வித மாற்றமும் இல்லை.

அமைதியே உருவாய் வலம் வந்தவன் யாரிடமும் நெருங்கிப்பழகவில்லை.
தன் அன்னை தந்தையிடம் கூட நெருக்கத்தை காண்பிக்கவில்லை. இப்படியிருந்தவன் தன் அன்னையின் கடந்தகாலம் பற்றி அரைகுறையாக தெரிந்துகொண்டு வெடிக்கவும் தவறவில்லை.

சத்யவதி பெரும்போராட்டத்திற்கு பின் உண்மையை விளக்கவும் மீண்டும் அமைதியாகிப்போனான்.

இந்நொடி வரை பெற்றவர்கள் இருவருக்கும் அவனின் இந்த இடைவெளி எதற்கு என்று புரியவில்லை.
 

Anu Chandran

Moderator
தித்திப்பு 12

காதலின்
சூட்சுமத்தில்
காதலால்
பாதிக்கப்பட்டவர்களே
அதிகம்...

மறுநாள் காலை ஆதீஷூம் நிலவனும் மான்சியை பார்க்க மருத்துவமனைக்கு வந்தனர்.

மான்சியை பார்த்து இருவரும் நலம் விசாரிக்க அனாயா ஆதீஷை இழுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

"என்ன அனா?" என்று ஆதீஷ் கேட்க

"எங்க உன் ப்ரெண்டு?" என்று அனாயா கேட்க

"அவன் காரை எடுத்துட்டு ரிசார்ட் வரைக்கும் போயிருக்கான். அதுசரி நீ இப்போ எதுக்கு அவனை தேடுற?" என்று ஆதீஷ் கேட்க

"நேத்து நைட்டு என்ன நடந்துச்சு தெரியுமா?" என்றவள் முதல் நாள் இரவு நடந்த அனைத்தையும் கூறினாள்.

அனைத்தையும் கேட்க ஆதீஷோ
"அப்போ நிலவன்கிட்ட தான் ஹெல்ப் கேட்கனும்னு சொல்லுற?" என்று ஆதீஷ் கேட்க

"ஆமா. ஆனா நிலவனுக்கு மான்சி மேல இன்ட்ரெஸ்ட் இருக்குதோனு ஒரு டவுட்டு." என்று அனாயா தான் கண்டுகொண்டதை கூற

"என்ன சொல்ற அனா?" என்று ஆதீஷ் கேட்க

"ஆமாடா. அது தான் என்ன செய்றதுனு ஒரே குழப்பமா இருக்கு." என்று அனாயா கூற ஆதீஷிற்கும் என்ன செய்வதென்று புரியவில்லை‌.

மான்சி மற்றும் ப்ரவாஹனுக்காக இன்னொருவரின் உணர்வுகளோடு அவள் விளையாட விரும்பவில்லை. ஒருவேளை மான்சிக்கு நிலவன் மீது நேசம் எழுந்தால் அது தன்னால் கெட்டதாக இருக்கக்கூடாதென்ற எண்ணமும் அவள் மனதில் இருந்தது.

"நாம ஏதும் செய்ய வேண்டாம் ஆதீஷ். அவங்களே ஒரு முடிவுக்கு வரட்டும். ப்ரவாவுக்கு நிஜமாகவே மான்சி மேல காதல் இருந்தா அவன் போட்டி போடட்டும். இதுல நாம் ஒதுங்கி இருக்கிறது தான் நமக்கு நல்லது." என்று அனாயா கூற ஆதீஷிற்கும் அதுவே சரியாக தோன்றியது.

அனாயும் ஆதீஷூம் வெளியே சென்றதும் நிலவன்
"இப்போ வலி பரவாயில்லையா?" என்று கேட்க

"இப்போ பரவாயில்லை. ரொம்ப தேங்க்ஸ் நிலவன். நேத்து நைட்டு நீங்க சரியான நேரத்துக்கு வரலைன்னா நிலைமை ரொம்ப மோசமாகியிருக்கும். ஆமா நேத்து ஏதோ பேசனும்னு சொன்னீங்களே?" என்று மான்சி ஞாபகமாய் கேட்க இப்போது நிலவன் சற்று தயங்கினான்.

அவனின் தயக்கம் மான்சிக்கு சற்று விசித்திரமாய் தெரிய
"என்னாச்சு நிலவன்? ஏன் தயங்குறீங்க?" அவனை பேச உந்த இனியும் தாமதிப்பது சரியல்ல என்று எண்ணியவன்

"நாம டேட் பண்ணலாமா?" என்று கேட்க இப்போது சற்று ஆசுவாசமாக சிரித்தாள் மான்சி. அவளின் சிரிப்பிற்கான அர்த்தம் புரியாத நிலவன்

"என்னாச்சு?" என்று கேட்க

"இதை கேட்கவா இவ்வளவு தயங்குனீங்க?" என்று மான்சி கேட்க

"இல்லை நீங்க தப்பா நினைப்பீங்களோனு..." என்று நிலவன் இப்போதும் தயங்க

"இதுல என்ன தப்பு? இது ரொம்ப சாதாரணமான விஷயம். என்ன நம்ம ஊருல இந்த வார்த்தையை ஏதோ கெட்டவார்த்தைனு சில பேர் நினைச்சிக்கிறாங்க." என்று மான்சி சாதாரணமாக சொல்ல நிலவனுக்கு மகிழ்ச்சிக்கு பதில் ஏமாற்றமே மனதை நிறைத்தது.

நிலவன் நேரடியாக தன் காதலை சொல்லவே நினைத்திருந்தான். ஆனால் மான்சியை பற்றி அவளது தோழிகள் மூலம் அறிந்த நிலவனுக்கு இப்பொழுது அவளிடம் காதலை சொன்னால் அது அவளின் உணர்வாய் பதிவதற்கு பதிலாக பொழுதுபோக்காய் மாறிடுமோ என்று பயந்தே அவ்வாறு கேட்டான். அதோடு நேரடியாக அவள் மறுத்தால் அது இன்னமும் தன்னை பாதிக்கும் என்ற அச்சத்திலேயே அவன் அவ்விதம் கேட்டான்.

ஆனால் அதை அவள் சாதாரணமாக எடுத்துக்கொண்டதே அவனுள் எழுந்த ஏமாற்றத்திற்கான காரணம்.

"உங்க நம்பர்?" என்று மான்சியே கேட்டபடியே மேஜை மீதிருந்த தன் மொபைலை எடுத்து நிலவன் கையில் திணிக்க அதை எடுத்து தன் அழைப்பிற்கு மிஸ்டு கொடுத்தான் நிலவன்.

நிலவன் தன் போனில் மான்சியின் இலக்கத்தை "மாஷா" என்று சேமிக்க மான்சியும் அவனது இலக்கத்தை "க்ரஷ்" என்று சேமித்துக்கொண்டாள்.

அப்போது சரியாக ப்ரவாஹன் உள்ளே வர இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தவனது முகம் மாறியது. அதனை மான்சி கவனிக்காத போதிலும் நிலவனின் கண்கள் கவனிக்கத்தவறவில்லை‌.

"வா பேபி பாய். இவரு நிலவன். என்னோட ப்ரெண்டு. நிலவன் இது ப்ரவாஹன் என்னோட எக்ஸ்- பாய்ப்ரெண்ட்." என்று இருவரையும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகப்படுத்திய முறையில் இரு ஆடவர்களும் சற்று அசௌகரியமாகவே உணர்ந்தனர்.

ஆனால் மான்சியோ இது எதனையும் அறிந்திடாமல்

"பேபி பாய் டிஸ்சார்ஜ் எப்போனு சொன்னாங்களா?" என்று கேட்க

"ஆதீஷூம் அனாயாவும் அதுக்கு தான் போயிருக்காங்க." என்றவனின் வார்த்தைகளில் இப்போது வெறுமை மட்டுமே இருந்தது.

"உனக்கு ஏதாவது வேண்டுமா?" என்று ப்ரவாஹன் கேட்க

"இப்போதைக்கு ஏதும் வேண்டாம் பேபி பாய். அப்படியே வேணும்னாலும் இதோ நிலவன் இருக்காரே. அவருகிட்டேயே கேட்டுக்கிறேன்." என்று மான்சி கூற வேறேதும் பேசாது ப்ரவாஹன் அங்கிருந்து வெளியேறினான்.

அறையிலிருந்து வெளியேறிய ப்ரவாஹன் நேரே ஆதீஷூடமிருந்து தன் கார் சாவியை வாங்கியவன் அவன் கேள்விகள் எதற்கும் பதில் கூறாது அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

அவனது நடவடிக்கையில் குழம்பிய ஆதீஷ்
"இப்போ என்னாச்சுனு இவன் கார் சாவியை பிடிங்கிட்டு போறான்?" என்று அனாயாவிடம் கேட்க

"வேற என்ன சாருக்கு ஈகோ பிரச்சினையாக தான் இருக்கும். அது சரி இப்போ எப்படி போறது? நானும் காரை எடுத்துட்டு வரலையே?" என்று அனாயா காரிற்கு என்ன செய்வதென்று யோசிக்க

"நிலவனோட கார் இருக்கு. அதுனால பிரச்சினை இல்லை. ஆனா இவனுக்கு என்னாச்சு?" என்று ஆதீஷ் அதே யோசனையில் இறங்க

"வா மான்சியை போய் பார்த்தா என்னதுனு தெரிஞ்சிடும்." என்று கூறிய அனாயா ஆதீஷை இழுத்துக்கொண்டு மான்சியிருந்த அறைக்கு சென்றனர்.

உள்ளே மான்சியும் நிலவனும் சிரித்து பேசிக் கொண்டிருந்ததை கண்டதும் அனாயா ஆதீஷிற்கு கண்காட்டினாள். இப்போது ஆதீஷிற்கும் ப்ரவாஹனின் நடவடிக்கைக்கான அர்த்தம் புரிந்தது.

இருவரும் உள்ளே வருவதை கண்ட மான்சி
"பேபி எப்போ டிஸ்சார்ஜினு டாக்டர் சொன்னாரா?" என்று கேட்க

"நாங்க பில் கட்டிட்டோம். உன் லங்கேஜெல்லாம் ரெடி பண்ணிட்டா இப்போ கிளம்பலாம்." என்று அனாயா சொல்ல

"அதெல்லாம் நிலவன் ரெடி பண்ணிட்டாரு. வா நாம கிளம்பலாம்." என்று மான்சி கூற ஆதீஷூம் அனாயாவும் அர்த்தமான பார்வையொன்றை பரிமாறிக் கொண்டனர்.

"நிலவன் ப்ரவாஹன் அவசர வேலையாக வெளியே கிளம்பிட்டான். இஃப் யூ டோண்ட் மைண்ட்..." என்று ஆதீஷ் கேட்டு முடிப்பதற்கு முன்பேயே

"நான் அழைச்சிட்டு போறேன். வாங்க போகலாம்." என்றவன் அனைவரையும் அழைத்துக்கொண்டு காரிற்கு வந்தான்.

மான்சிக்கு இன்னும் காலில் கட்டு இருப்பதால் அவள் அமர்வதற்கும் உதவி செய்தான் நிலவன்.

இவை அனைத்தையும் கவனித்த ஆதீஷிற்கும் அனாயாவிற்கும் ஏதோ புரிந்தது.

ரிசோர்டிற்கு சென்றதும் அனைவரும் மான்சியை நலம் விசாரிக்க அனைவருக்கும் பதில் கூறினாள் மான்சி.

மான்சிக்கு ஓய்வு அவசியமென்று எண்ணிய அனாயா தம் உடைமைகளோடு கிளம்ப தயாரானாள்.

ப்ரவாஹனும் அங்கிருந்து கிளம்பியதை அறிந்த ஆதீஷூம் அவர்களோடு வருவதாக சொன்னான்.

கிளம்புவதற்கு முன் நிலவனுக்கு அழைத்த மான்சி தான் கிளம்புவது பற்றி தெரிவிக்க அவளை வழியனுப்ப வருணேஷோடு அங்கு வந்தான் நிலவன்.

வருணேஷை மான்சிக்கு அறிமுகப்படுத்திய நிலவன்

"ரீச் ஆனதும் கால் பண்ணுங்க." என்று கூறியவன் கையோடு எடுத்துவந்திருந்த தண்ணீர் போத்தல்களையும் திண்பண்டங்களையும் அவளிடம் கொடுத்தான்.

அவர்கள் கிளம்பும் வரை அங்கேயே இருந்தவனை மெதுவாக சுரண்டிய வருணேஷ்
"அந்த பொண்ணுக்கு ப்ரபோஸ் பண்ணிட்டியா?" என்று கேட்க

"டேட் பண்ண கூப்பிட்டிருக்கேன்." என்று நிலவன் கூற இப்போது ஙேவென்று விழித்தான் வருணேஷ்.

"டேய் என்னடா பண்ணி வச்சிருக்க?" என்று வருணேஷ் புரியாமல் கேட்க

"ஏன்டா சரியா தானே கேட்டிருக்கேன்?" என்று நிலவன் கேட்க

"அடேய் இந்த டேட்டிங்கெல்லாம் கொஞ்சம் பெரிய வார்த்தைனு உனக்கு தெரியாதா?" என்று வருணேஷ் கேட்க

"அது உலகம் தெரியாத உன்னை மாதிரி பச்சைப்புள்ளைங்களுக்கு. என்னோட மாஷா அதை கரெக்டா புரிஞ்சிக்கிட்டா." என்று நடந்த அனைத்தையும் வருணேஷிடம் விளக்கினான் நிலவன்.

"உனக்கு இப்படியொரு காதல் தேவை தானா?" என்று வருணேஷ் சிறு ஆற்றாமையுடன் கேட்க

"அவளுக்கு காதல் மேல் நம்பிக்கை இல்லை. ஒரு வேளை என் மூலமாக அந்த நம்பிக்கை கிடைக்கனும்னா தான் விதி இத்தனை நாள் எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்ததாக நான் நினைக்கிறேன்."

"உன் நினைப்பெல்லாம் சரி தான். ஆனா சரிப்படாதுனு தெரிஞ்சே இந்த காதலை கட்டிக்கிட்டு அழனுமா?" என்று வருணேஷ் நிலவனின் மனம் மாறாதா என்ற எண்ணத்தில் கேட்க

"டேய் உனக்கு எத்தனையோ தடவை இதை பத்தி சொல்லிருக்கேன். என் மனசுல இந்த நேசம் ரொம்ப ஆழமாக பதிந்து போச்சு. நான் இதை சுமக்கனும்னு நினைக்கல. ஆனா என் புத்தியும் மனசும் மாமாவோடா காதலுக்காக இத்தனை வருஷம் ஏங்குது. அதை எக்ஸ்ப்ரஸ் பண்ண இது ஒரு வழி. இதை மாஷா ஏத்துக்கிட்டா அது நல்லது தானே?" என்று நிலவன் நம்பிக்கையாய் பேச

"ஏத்துக்கலனா கஷ்டம் உனக்கு தானே?" என்று வருணேஷ் நிலவனுக்கு இதுவும் நடக்கலாமென்று சுட்டிக்காட்ட

"கஷ்டம் தான். ஆனா என் மனசை உரியவர்களுக்கு புரியவச்சிட்டேங்கிற நிம்மதி இருக்குமே." என்று அதற்கும் சாதகமான ஒரு பதிலை நிலவன் கூற வருணேஷிற்கு வேறு என்ன கூறுவதென்று புரியவில்லை.

"நீ எதையும் கேட்குற மனநிலையில் இல்லை. எனிவே ஆல் தி பெஸ்ட்." என்று நண்பனாக நிலவனுக்கு வாழ்த்துக்கூறியவன் நிலவனோடு ரிசோர்ட்டுக்கு சென்றான்.

இங்கு காரில் பயணித்துக்கொண்டிருந்து மூவரும் வெவ்வேறு மனநிலையில் இருந்தனர்.

அனாயா நிலவனுக்கும் மான்சிக்கும் உருவாகியிருந்த உறவை பற்றி யோசித்தபடியிருக்க ஆதீஷோ ப்ரவாஹனின் நிலை பற்றி சிந்தித்தபடியிருந்தான்.

மான்சியோ காலையிலிருந்து நடந்த அனைத்தையும் அசைபோட்டபடியிருந்தாள்.

நிலவனின் அணுகுமுறை ஏனோ அவளை கவர்ந்தது. தன்னை பற்றி முழுமையாக அறிந்த ஒருவராலேயே அவ்வாறு கேட்கமுடியென்று அவள் முழுமையாக நம்பினாள்.

நிச்சயம் நிலவன் தன்னை பற்றி நன்றாக அறிந்திருக்கிறான். ஒரு வேளை வேறு மாதிரி தேவைக்காகவோ என்று எண்ணியவளுக்கு அதற்கான வாய்ப்பே இல்லை என்பது அவளது தோழிகளின் வார்த்தைகளிலிருந்து தெரிந்து கொண்டாள்.

அவனது கம்பெனியில் மான்சியின் தோழியொருவள் பணிபுரிய அவனை கண்டதும் பேசிவிட்டு வந்தவளிடம் மான்சி என்னவென்று விசாரித்தாள்.

"என்னோட கம்பெனி மேனேஜர் டி. ஆளு பக்கா ஜென்டில்மேன். வேலையிலேயும் கன்னு மாதிரி. சாருக்கு பெண்கள் விசிறி அதிகம். ஆனா அவரு யாரையும் திரும்பிப்பார்க்கிறதா இல்லை. அதுனாலேயே இவருக்கு பொண்ணு தேடுறதுக்காகவே ஆபிஸில் ஒரு மேட்ரிமோனி சைட் ரன்னாகுது." என்று அந்த தோழி கூற

"என்னடி சொல்லுற?" என்று மான்சி ஆர்வத்துடன் கேட்க

"அட ஆமாண்டி. அதோடு இவரு யாரையோ வன்சைடா லவ் பண்ணுறாருனு ஒரு புரளி வேற... ஆனா இவரை கட்டிக்க போற பொண்ணு ப்ளஸ்டுனு மட்டும் என்னால உறுதியாக சொல்லமுடியும்." என்ற அத்தோழி நிலவன் பற்றி தனக்கு தெரிந்த அனைத்தையும் கூறினாள்.
 

Anu Chandran

Moderator
தித்திப்பு -13

அவளின்
தேவைகளை
அவளே
அறிந்து தெரிந்து
செய்வதும் கூட
ஒருவகை
தனிமை தான்.

"அப்படி என்ன உன் பாஸூ செய்துட்டாரு?" என்று மான்சி தன் முன்னால் க்ரஷ் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் கேட்க

"ரொம்ப டேலண்ட், பயங்கர ஹேண்ட்சம், பக்கா ஜென்டல் மேன், அப்புறம்..." என்று அத்தோழி ஆரம்பிக்கும் முன்னே

"இதெல்லாம் டிப்பிக்கல் ஹீரோ டெமோன்ஸ்ரேஷன். புதுசா ஏதாவது சொல்லு." என்று கேட்க

"புதுசா தானே... சொல்றேன் கேட்டுக்கோ. வீக்கென்ட் பார்மிங் ஃபெடரேஷன் பத்தி கேள்வி பட்டிருக்கியா?" என்று அப்பெண் கேட்க

"இந்த பேரை எங்கேயோ கேட்ட மாதிரி தான் இருக்கு. அது சரி இப்போ எதுக்கு அதை கேட்குற?" என்று மான்சி கேட்க

"இந்த ஃபெடரேஷனோட பவுண்டிங் மெம்பர்ஸ்ல என்னோட பாஸூம் ஒருத்தர். இன்னும் சொல்லனும்னா இந்த ஐடியா கூட அவரோடது தான்." என்று கூறினாள் அப்பெண்.

வீக்கென்ட் பார்மிங் ஃபெடரேஷன் என்பது கடந்து ஒரு வருடமாக சில இளைஞர்கள் சேர்ந்து விவசாயத்தை தற்கால சமூகத்தில் ஊக்குவிக்கும் முகமாக மேற்கொண்ட ஒரு சிறு முயற்சி. குறிப்பாக விடுமுறை நாட்களில் வேறு கேளிக்கைகளை தேடிசெல்லும் குடும்பங்களையும் இளைஞர் யுவதிகளையும் விவசாயத்தில் ஈடுபடுத்துவதே இவர்களது திட்டம். இதனை இலவசமாக செய்தால் மதிப்பு இராது என்ற காரணத்தில் இதற்கான அனுமதிக்கு சிறு கட்டணமும் உண்டு. மேலும் இந்த வீக்கென்ட் பார்மிங்கில் விவசாயம் செய்யும் அனைத்து முறைகளும் உரிய தேர்ச்சிபெற்றவர்களால் வருபவர்களுக்கு கற்பிக்கப்படும். மேலும் இளம் வயதினரின் வருகையை அதிகரிப்பதற்காக டி.ஜே இசையையும் அக்குழுவினர் ஒழுங்கு செய்திருந்தனர். குறிப்பாக இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காகவே இத்திட்டத்தை இக்குழுவினர் நடைமுறைபடுத்தினர்.

அக்குழுவிலுள்ள அனைவரும் வெவ்வேறு பெரிய நிறுவனங்களில் உயர் பதவிகளிலிருப்பவர்களாததால் ஆட்களை வரவைப்பதில் அத்தனை சிக்கல் இருக்கவில்லை. அதோடு மேல் தட்டு வர்க்கத்தினரை இதில் ஈடுபடுத்தலே இத்திட்டத்திற்கான போதுமான விளம்பரப்படுத்தல் என்ற அவர்களின் எண்ணம் விரைவிலேயே நிஜமாகியது. குறுகிய காலத்திலேயே இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததோடு பலரின் ஆதரவு பணமாகவும் பாராட்டாகவும் அவர்களை வந்தடைந்தது. அதன் விளைவு இப்போது பல்வேறு இடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மேலும் சமீபத்தில் இவர்களின் செயலை பாராட்டும் விதமாக அரசாங்கம் இவர்களுக்கு சில இடங்களை இனாமாக வழங்கியிருந்தது.

"நீ சொன்ன பிறகு தான் ஞாபகம் வருது. கிட்டத்துல அந்த ஃபெடரேஷன் பத்தி ஒரு டாக்குமெண்டரி பார்த்தேன். அவங்க ஐடியாலஜியே ரொம்ப வித்தியாசமாக இருந்தது. அப்போது இந்த பிளானோட மாஸ்டர் மைண்ட் இவர் தானா?" என்று மான்சி கேட்க

"ஆமாடி. இன்னும் நெறைய கமிட்டீஸ்ல இருக்காரு. எங்க கம்பெனியோட சிஎஸ்ஆர் ப்ராஜெக்ட்ஸ்ஸோட ஹெட்டும் இவரு தான்." என அப்பெண் கூறிய அனைத்தையும் இப்போது நினைத்து பார்த்த மான்சிக்கு நிலவனை பற்றி தான் இன்னும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பெருகியது.

அதையெல்லாம் நினைத்து பார்த்தபடி வந்தவளை லேசாக உலுக்கினாள் அனாயா.

"ஹேய் பேபி என்னாச்சு?" என்று கேட்க

"அது... நிலவனை பத்தி யோசிச்சிட்டு வந்தேன்." என்று சற்று தன்மையுடன் கூறியவளை வித்தியாசமாக பார்த்தாள் அனாயா.

"அவரை பத்தி என்ன யோசிக்க இருக்கு?" என்று அனாயா மான்சியின் மனதை ஆராயும் நோக்குடன் கேட்க

"அவரை பத்தி நம்ம கீதா நிறைய சொன்னா. பக்கா ஹீரோ கேரெக்டர். அதை தான் அனலைஸ் பண்ணிட்டு இருக்கேன்." என்றவள் கீதா கூறிய அனைத்தையும் கூறினாள்.

"ஆமா நீ எதுக்கு இப்போ இவரை பத்தி அலசி ஆராய்ந்துட்டு இருக்க?" என்று கேட்க

"டேட்டிங்கிற்கு கேட்டாரு. அது தான் அலசி ஆராய்ந்துட்டு இருக்கேன்." என்று மான்சி கூற இப்போது அனாயாவும் ஆதீஷூம் அதிர்ச்சியான பார்வையை பரிமாறிக்கொண்டனர்.

"ஹேய் இது எப்போ?" என்று அனாயா கேட்க

"இப்போ கொஞ்ச நேரத்துக்கு முதல்ல." என்று மான்சி கூற

"நீ என்ன சொன்ன?" என்று அனாயா சற்று பதட்டத்துடன் கேட்க

"இதுல என்ன சொல்ல இருக்கு? ப்ரபோஸ் பண்ணியிருந்தாருனா யோசிச்சி சொல்லுறேன்னு சொல்லியிருக்கலாம். இவரு டேட்டிங் தானே கேட்டாரு. அதுனால ஓகே சொல்லிட்டேன்." என்று மான்சி கூற அனாயா இப்போது ஆதீஷை பார்த்தாள்.

அவனுக்குமே என்ன செய்வதென்று புரியவில்லை.

"அவரை பத்தி என்ன உனக்கு தெரியும்?" என்று அனாயா கேட்க இப்போது சிரிக்கத்தொடங்கினாள் மான்சி.

"ஹேய் பேபி உனக்கு என்னாச்சு? நல்லா தானே இருந்த?" என்று மான்சி கேலி பண்ண

"பேபி பீ சீரியஸ். இது உன்னோட லைவ் சம்பந்தப்பட்டது." என்று அனாயா கூற

"ஹேய் இப்போ எதுக்கு நீ இவ்வளவு டென்ஷன் ஆகுற? இது எப்பவும் நடக்குறது தானே?" என்று இப்போதும் மான்சி சாதாரணமாக கேட்க

"ஆமா. அது நீயும் ப்ரவாவும் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் வரைக்கும் சாதாரணமான விஷயம் தான். ஆனா இப்போ அப்படி இல்லை." என்று அனாயா கூற இப்போது அனாயாவை கூர்மையாக பார்த்தாள் மான்சி.

"நீ என்ன சொல்லுற பேபி?" என்று அனாயாவின் வார்த்தைகளுக்கான அர்த்தத்தை அறிந்திடும் முனைப்பில் மான்சி கேட்க

"ப்ரவாஹன் ஸ்டில் லவ்ஸ் யூ." என்று அழுத்தமாக கூற மான்சியோ சிரித்தபடியே

"காமெடி பண்ணாத பேபி. அந்த பேபி பாய் இந்நேரம் அந்த ரிலேஷென்ஷிப்பையே மறந்திருப்பான்." என்று கூற

"இல்லை." என்ற அனாயாவின் வார்த்தைகளில் இப்போது அழுத்தம் கூடியிருந்தது.

"அனா முடிஞ்சி போன விஷயத்தை மறுபடியும் ஆரம்பிக்காத." என்ற மான்சியின் வார்த்தைகளில் இப்போது அழுத்தம் கூடியிருந்தது.

"இரண்டு பேரும் முடிஞ்சி போனதுனு வாயால சொல்லுறீங்களே தவிர உங்க செயல் அதுக்கு நேர் மாறாக தான் இருக்கு." என்று அனாயா கூற இப்போது மான்சியினுள் ஒரு அமைதி.

அவளுக்குள்ளேயுமே அந்த சந்தேகம் இருக்கத்தான் செய்தது.

"இப்போ நான் என்ன செய்யனும்னு எதிர்பார்க்கிற?" என்று மான்சி நேரடியாகவே கேட்க

"முதல்ல உன் மனசு எதை விரும்புது தெரிஞ்சிக்கோ. அதுக்கு பிறகு என்ன செய்யனும்னு முடிவெடுக்கலாம்." என்று அனாயா கூற

"அனா என்னை பத்தி தெரிஞ்சிக்கிட்டும் இந்த விஷயத்தை பத்தி மறுபடியும் நீ பேசுறது எனக்கு பிடிக்கல." என்று மான்சி தன் அதிருப்தியை நேரடியாக கூற

"பேபி நீ பயங்கர குழப்பத்துல இருக்க. முதல்ல அந்த குழப்பத்துல இருந்து வெளியில வா. அதுக்கு பிறகு நீ என்ன செய்யப்போறனு முடிவெடு. நீ யாரை தேர்ந்தெடுக்கிறங்கிறது உன்னோட விருப்பம். ஆனா அந்த நபரை நீ மனதால் விரும்பி தான் ஏத்துக்கிறியானு தெரிஞ்சிக்கோ. இது உன் வாழ்க்கை. உன்னோட முடிவு தான் உன் வாழ்க்கை எப்படி இருக்கும்ங்கிற முடிவை தீர்மானிக்கும். அதனால இந்த விஷயத்தில் வழமை போல் அவசரப்படாத." என்று அனாயா கூற மான்சிக்குமே அவள் கூறியது சரியென்றே பட்டது.

"இப்போ நான் நிலவனோட டேட்டிங் போகக்கூடாது அவ்வளவு தானே?" என்று மான்சி கேட்க தலையிலடித்துக்கொண்டாள் அனாயா.

"உனக்கு அட்வைஸ் பண்ணனும்னு நினைச்ச என் புத்தியை அந்த செருப்பாலயே அடிச்சிக்கனும்." என்று அனாயா கூற

"இது என்னடா வம்பா போச்சு. அட்வைஸ் சொன்னது நீ. அதுக்கு அர்த்தம் கேட்டா செருப்பால அடிச்சுப்பேன், சேன்டிலால அடிச்சுப்பேன்னு சொல்லுற?" என்று மான்சி கேட்க

"அம்மா தாயே உனக்கு அட்வைஸ் பண்ணது தப்பு தான். உனக்கு என்ன தோனுதோ அதை செய். இனிமே உனக்கு அட்வைஸே பண்ணமாட்டேன். டேய் ஆதீ இனி இவகிட்ட என்னை பேசச்சொன்ன உன் கதை அவ்வளவு தான் பார்த்துக்கோ." என்று ஆதீஷையும் திட்டிவிட்டு மறுபுறம் திரும்பிக் கொண்டாள் அனாயா.

"ஹே பேபி. ஜஸ்ட் கிடிங்யா. நீ சொன்னதை நான் இனி பாலோ பண்றேன். போதுமா?" என்று தன்னுருகே முறுக்கிக்கொண்டு அமர்ந்திருந்த மான்சியை சமாதானப்படுத்த முயன்றாள் அனாயா.

ஆனால் அவளோ அதை காது கொடுத்து கேட்பதாய் இல்லை.

"பேபி நீ சொல்றது எனக்கு புரியாமல் இல்லை. ஆனால் என் மனசு இப்போ குழப்பத்துல இருக்கு. அதை தெளிவிக்கனும்னா நான் ஏதாவது செய்து தான் ஆகனும். அதுக்கு இது ஒரு வாய்ப்பாக தான் நினைக்கிறேன். நிலவன் எனக்கு ப்ரபோஸ் பண்ணியிருந்தா நிச்சயம் நோ தான் சொல்லியிருப்பேன். ப்ரவாஹனோட பிரேக்கப் ஆனப்போவே இனி எந்த ப்ரபோசலுக்கும் ஓகே சொல்லக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். ஆனா நிலவன் டேட்டிங் தான் கேட்டாரு. ஒருவேளை இந்த டேட்டிங் எனக்கொரு தெளிவை கொடுக்கும்னு நம்பி தான் சரின்னு சொன்னேன். எனக்கு என் மனசு எதை தேடுதுனு தெரிஞ்சிக்கனும் பேபி‌. நீயாவது என்னை புரிஞ்சிக்கோ." என்றவளது கண்கள் இப்போது குளம் குட்டி நின்றது.

சிறுவயதிலேயே தாயை இழந்தவளுக்கு தந்தையே அனைத்துமாகிய போதிலும் அவளின் சில உணர்வுகளை அவளின் தந்தையால் கண்டுகொள்ள முடியவில்லை. அவளாலும் ஒரு எல்லைக்கு மேல் தந்தையிடம் அனைத்து விஷயங்களையும் பகிரமுடியவில்லை. அந்த நேரங்களில் அன்னை இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே என்ற ஏக்கம் அவளுள் அவ்வப்போது எழும். இப்போதும் அதே ஏக்கம் தான் அவளுள் எழுந்து நின்றது.

அனைத்தையும் தனியே முடிவெடுத்து பழகியவளுக்கு தன் சில உள்ளக்குமறல்களையும் குழப்பங்களையும் கொட்டிட கிடைத்த வடிகால் தான் அனாயா. ஆனால் அவளாலும் கூட ஒரு அன்னையின் ஸ்தானத்திற்கு இணையாக முடியாது.

இந்நேரம் தன் அன்னை இருந்திருந்தால் என்னுள் இத்தனை குழப்பங்களும் தடுமாற்றாங்களும் இருந்திருக்காதோ என்ற ஆதங்கமே இப்போது அவளின் கண்கள் குளம் கட்ட காரணமாயிருந்தது.

இது பற்றி மான்சி பலமுறை அனாயாவிடம் சொல்லியிருந்ததால் குளம் கட்டிய அவளின் கண்களை பார்த்த அனாயா அவளை ஆதரவாய் அணைத்துக்கொண்டாள்.

மான்சிக்கும் இப்போது அந்த அணைப்பு தேவையாயிருக்க அவளின் தோளில் தலைசாய்த்தபடியே தன் மனதின் வேதனையை கண்ணீராய் வெளியேற்றிட முயல பெண்களுக்கு தனிமை கொடுக்க எண்ணி ஆதீஷூம் காரை ஓரமாக நிறுத்திவிட்டு காரிலிருந்து இறங்கி வெளியே சென்றான்.
 
Top