இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

கவிழ்ந்தேனடி உன் காந்தவிழிகளில் - கதைதிரி

Status
Not open for further replies.

Habi

Moderator
கவிழ்ந்தேனடி உன் காந்தவிழிகளில் - கதைதிரி
 

Habi

Moderator

அத்தியாயம் -01



அதிகாலை வேளை சூரியன் தன் வேலையிலிருந்து ஒதுங்கிக்கொள்ள அங்கே கார் முகில்களும் கடும் மழை துளிகளும் தங்கள் ஆட்சியை நிலைநாட்டிக் கொண்டிருக்கும் அந்த மழைக் காலநிலையில் வீசிய குளிர்காற்றின் குளுமையில் போர்வையை நன்றாக இழுத்து போர்த்தித் தூங்கிக் கொண்டிருந்தாள் சாக்ஷிதா..


பிறைநெற்றி மூடிய மீன்விழிகள் தூங்கும் போது சற்றே பிளந்திருந்த மெல்லிய இதழ்கள் வட்ட முகம் மஞ்சள் நிறம் என அழகி என்ற வார்த்தைக்கு பொறுந்திய அழகோடு இதமான காலைவேளையில் உறங்கிக் கொண்டிருந்தவள் தூக்கத்தை களைக்கவென சத்தமிட்டுக் கொண்டிருந்தார் அவள் அன்னை பார்வதி..


"ஏய் எழுந்திரிடி இன்னுமாடி தூங்கிட்டு இருக்க" என்று தன் மூத்த மகளின் துயில் களைக்க சத்தமிட்டுக் கொண்டிருந்தார் பார்வதி..

கணவனை இழந்து தனித்திருந்த போதிலும் தனியொருவராக தன் பிள்ளைகளை நன்றாக வளர்த்து தாய்க்குத் தாயாய் தோழிக்குத் தோழியாய் தன் பிள்ளைகளோடு சேர்ந்து லூட்டி அடிக்கும் கலகலப்பானவர்..


தாயின் குரலைத் தொடர்ந்து ஒலித்தது அவ்வீட்டின் கடைக்குட்டி இளவரசியின் குரல்..

"ம்மா ம்மா அவள எழுப்புமா லேட் ஆகுது" என்று தாயிடம் கெஞ்சினாள் அக்ஷிதா.. தமக்கைக்கு ஈடான அதே அழகு மஞ்சள் நிறம் வட்டமுகம் என அழகியாய் மின்னும் வாயாடி..


தாய் மகள் பேசிக் கொண்டிருக்க துள்ளலான குரலுடன் வந்தான் ஆரவ்..

"நான் ரெடியாகிட்டேன்" என்று தன் ஆடையை சரி செய்தவாறு வந்தவன் நெடுவென வளர்ந்த உயரம் ஒல்லிய உடல்வாகு குழந்தை மனம் கொண்ட வளர்ந்த குழந்தை..


மூவரும் தயாராகி வந்திருக்க இன்னுமே உறக்கம் களையாத பெண்ணவளை பார்த்து முழித்து நின்றனர்..


குடும்பமாய் அருகிலிருக்கும் கோவில் செல்ல முடிவெடுத்து தயாராகி வந்தவர்களுக்கு இன்னுமே தூங்குத்தை தொடரும் பெண்ணவளை எப்படி எழுப்புவது என தெரியாமல் நின்றனர்..


பாருவோ சின்ன மகளிடம்"அக்ஷி குட்டி போய் அக்காவ எழுப்புடா" என்ற தாயை முறைத்தவள்..


"ம்மா என்னால முடியாது இங்க பாரு போன முறை நான் எழுப்பினதுக்கு உன் பொண்ணு தந்த பரிசு இன்னுமே அப்படியே இருக்கு என்னோட ப்ரெண்ட்ஸ் எல்லாரும் இத பார்த்துட்டு எப்பிடி கிண்டல் பண்ணாங்க தெரியுமா?? என்று தன் உதட்டை பிதுக்கி அதில் உள்ள காயத்தை காட்டினாள்..


அவர் அறிந்த ஒன்று தானே தன் மூத்தமகளை தூக்கத்தில் இருந்து யாரும் எழுப்பினாள் அவர்களின் உதட்டை கடிக்கும் விசித்திர பழக்கம் உடையவள் அவள் என்று..


பாவமாய் சின்ன மகளை பார்த்த பார்வதியோ மகனிடம் "ஆரவ் கண்ணா நீயாச்சும் போய் எழுப்புடா" என்க..


அவனோ ஓரடி பின்நகர்ந்தவன் பாவமாய் "ம்மா மீ பாவம் மா" என்றான்..


இருவரும் மறுத்திட "அப்போ யாருதான் அவள எழுப்புறது"என்று சோகமாய் கூறிய தாயிடம்


அக்ஷியோ"வெய்ட் பண்ணுவோம் அதுக்குன்னு ஒரு பலியாடு சிக்காமலா போகும்" என அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சாக்ஷியின் இரண்டு உயிர்த் தோழிகள் காவ்யா காயத்ரி இருவரும் வீடு நுழைந்தனர்..


வீட்டினுள் நுழைந்தவர்களை கண்கள் மின்ன பார்த்த அக்ஷியோ தாயிடம்

"ம்மா நான் சொன்னன்ல பலியாடு சிக்கிடுச்சி ஒன்னு இல்ல இரண்டு

அங்கே பார்" என இருவரையும் கை காட்டினாள்..


அங்கோ "ஹாய் பாரும்மா ஹாய் இரட்டைக் கதிரே" என்றவாறு உள் நுழைந்தனர் இருவரும்..


"ஹாய் குட்டிங்களா வாங்க" என்ற பார்வதி அவர்களை அமர வைக்க ..



அக்ஷி ஆரவ் இருவரும் கள்ளச்சிரிப்புடன் "ஹாய் அக்காஸ் வாங்கோ வாங்கோ வாங்குறதுக்கு வாங்கோ" என்றனர்..


காவ்யாவோ "என்ன உங்க இரண்டுபேரோட வரவேற்பெல்லாம் ஒரு மார்க்கமா இருக்கு வட் இஸ் த மேட்டர்" என சந்தேகமாய் கேட்டவளிடம்..


"ஹிஹி அதுவா அக்கா உங்க உயிர் தோழி இன்னும் எழுந்திரிக்கல அதான் நீங்க போய் எழுப்பி கூட்டிடு வருவிங்கன்னு வரவேற்குறோம்.."என்றிட..


காயத்ரியோ"என்னது அந்த கும்பகர்ணி இன்னும் தூங்குறாளா.. அவள

என்றபடி உள்நுழைந்த சில நிமிடத்திலே "ஆஆஆ" என்ற அவளின் அலறல் சத்தம் கேட்க.. அனைவரும் உள்ளே செல்ல

அங்கு காயத்ரி இருந்த நிலைகண்டு கொள்ளென சிரித்தனர்..


கீழ் உதட்டை தடவிய படி காயத்ரி விழுந்து கிடக்க.. அதைப் பார்த்து சிரித்து வைத்தனர்..


சாக்ஷியோ அப்பாவி போல கண்ணை கசக்கிக் கொண்டு "அம்மா காபி" என்றவள் சிரிப்பு சத்ததில் நன்றாய் விழி விரித்து

"ஹேய் என்னப்பா எல்லாரும் சிரிக்கிறிங்க.. என்றவள் அங்கே நின்ற தோழியை கண்டு "ஹேய் கவி நீ எப்போடி வந்த எங்க காயு அவ வரல.." என்க அனைவரின் பார்வையும் கீழே பார்ப்பதை கண்டு தன் பார்வையையும் திருப்பியவள் கீழிருந்த தோழியை கண்டாள்..


"ஹேய் காயு கீழே என்னடி பண்ற ஏதாச்சும் விழுந்துடிச்சாடி" என்று அப்பாவி போல கேட்டபடி அவள் அருகில் செல்ல

அவள் தலையில் கொட்டி வைத்தாள் காயத்ரி..


"ம்மாஆ ஏன்டி குரங்கு இப்டி பண்ற வலிக்குதுடி" என தலையை தேய்த்திட காயத்ரியோ பொங்கினாள்..



"நானாடி குரங்கு நீ தான்டி ரெத்த காட்டெறி, குட்டி சாத்தான்" என்று திட்டியவள் வலித்த உதட்டை தேய்க்க அப்போதுதா புரிந்து கொண்டாள் என்ன நடந்திருக்கும் என்பதை..


"அச்சோ சாரிடி உனக்கு தான் தெரியும்ல தூக்கத்துல இருந்து எழுப்பினா இப்பிடி பண்ணுவன்னு..அப்புறம் எதுக்குடி வந்த" என்றவளிடம்


"அ.. அது உன்ன எழுப்புற ஆர்வக்கோளாறுல வந்துடன்டி" என்றாள்..


இவர்கள் இருவரின் சம்பாஷனையும் கேட்டுக் கொண்டிருந்த மற்ற நால்வரும் சிரித்துக் கொண்டனர்..



***


டேய் கார்த்தி எங்கடா இவன காணல.. நேரமாச்சுடா வருவானா மாட்டானா என்ற சஞ்சய்யின் பதட்டத்திற்கு மாறாக


"கூல் மச்சான்...நம்ம கிங் எப்போவுமே ஷார்ப்ஆ வந்துடுவான்" என்ற கிஷோரை..சஞ்சய் கார்த்தி இருவரும் முறைத்து வைத்தனர்..


"டேய் கார்த்தி அவனுக்கு போன போடு" என்க அழைப்பை விடுத்தான் கார்த்தி..மறுபுறம் அழைப்பு ஏற்கப்பட

"டேய் சீக்கிரம் வாடா எல்லோரும் உனக்காகதான் வெய்ட் பண்றோம்"


"ஓன்தவே மச்சான்" என்று அழைப்பை துண்டித்தான்..


நிமிடங்கள் நகர புழுதியை கிளப்பியபடி வந்து நின்றது டுகாட்டி வண்டி..அதிலிருந்து தன் ஹெல்மேட்டை கழட்டியபடி அடங்கா சிகை காற்றிலாட அதை கரங்களால் கோதிவிட்டபடி நடந்து வந்தான் அஜய்தேவ்..


அவனது மிடுக்கான தோற்றமே அவன் செல்வச்செழிப்பை எடுத்துக் காட்டியது..கண்ணில் மின்னிய திமிரும்,அலட்சியமுமே நான் யாருக்கும் அடங்காதவன் என்பதை காட்டினாலும் அவனையும் அடக்கும் வல்லமையுடையவர் ஒருவர் உண்டு என்றாள் அது அவன் தாய் லக்ஷ்மி மட்டுமே.. தாயின் அமைதியான அன்பிற்கு மட்டுமே அவன் திமிரும் கர்வமும் தலைவணங்கும்..


தன்சிகையை கோதியவாறு தனக்காக காத்திருக்கும் நண்பர்களை நோக்கிச் சென்றவன்"ஹாய் ஹேய்ஸ்.."என்க..

அவர்களும் "ஹாய் மச்சான்" என்றனர்..


அனைத்தையும் ஓர் நொடி தன் கூர்விழிகளால் அளந்தவன்

"எல்லாம் ரெடியாடா ?? ஆரம்பிக்கலாமா" என்று கேட்டிட அதற்காகவே காக்கிருந்தவர்கள் போன்று

"எல்லாம் பக்காவா ரெடி மச்சான்"

என்றனர்..


"இதுல மட்டும் ஜெயிச்சிட்டன்னு வை பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்டா" என்ற நண்பனிடம் திரும்பிய அஜய்யோ அழுத்தமாய்


"பணம் முக்கியமில்ல மச்சி நமக்கு கிக்கு தான் முக்கியம் அதுமட்டுமில்ல இந்த அஜய் தேவ் யாருன்னு அவனுங்க தெரிஞ்சிகனும்டா."என்றவன் தன் பைக்கை கிளப்பி போட்டி நடக்கும் இடம் நோக்கிச் சென்றான்..


ஆம் ,அங்கு நடைபெற இருப்பது பைக்ரேஸ் அதில் ஒருவனாய் களமிறங்கியிருந்தான் அஜய்தேவ்..


போட்டியும் ஆரம்பமாக சிறிது நேரத்திலே அந்த இடம் முழுவதும்

"ஹூஹூஹூ அஜய் அஜய்"

என்ற கூக்குரல் ஒழிக்க வெற்றிக் கொடியை கையில் ஏந்தியபடி வந்தவனை நோக்கி ஓடியது மொத்தக் கூட்டமும்..


நண்பர்களோ"ஹேய் மச்சான் ஜெய்ச்சிட்டடா" என்ற குதூகலத்தோடு அவனை தூக்கி தூக்கி கொண்டாடியபடி

அவனோடு போட்டியிட்ட மற்றைய பசங்களையும் கலாய்த்துவிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்..


சிறிது நேரத்தில் அங்கிருந்து நண்பர்கள் பட்டாளத்துடன் கிளம்பியவர்கள்

வெற்றியை கொண்டாடுமுகமாக நண்பர்கள் நால்வரும் தங்களது பிளாட்டிற்கு வந்தனர்..


"டேய் ரொம்ப ஹெப்பியா இருக்குடா"என்ற கிஷோர் மகிழ்ச்சியாய் கூறியவன்.. கையிலிருந்த பியரை வாயில் கவிழ்த்துக் கொண்டான்...


சஞ்சய்யோ"இத கண்டிப்பா செலிப்ரேட் பண்ணியே ஆகணும்டா. லெட்ஸ் என்ஜோய தி பார்ட்டி" என்று தன் கையிலிருந்த பீரை திறந்து விட அதுவோ பொங்கி வழிந்தது..


நண்பர்கள் நால்வரும் ஆட்டம் பாட்டம் என சந்தோஷமாய் கொண்டாடியவர்கள் பின் களைத்துப் போய் இருக்கையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க..


பேச்சின் நடுவில் "சந்ருவும் இப்போ இருந்து இருந்தா இதே போல ரொம்ப என்ஜாய் பண்ணி இருப்பான்ல" என்ற கார்த்தியின் வார்த்தையில் அத்தனை நேரமிருந்த சந்தோஷம் வடிய அனைவரும் அமைதியாகினர்..


அவர்களது அந்த மௌனமே அவர்கள் மனதின் வலியை எடுத்துக் காட்டியது..


அஜய்யோ அந்த மௌனத்தை கலைத்தவனாய் "சரி மச்சான் நான் கிளம்புறன்டா ரொம்ப டயர்டா இருக்கு நீங்க என்ஜாய் பண்ணுங்க." என்றவாறு எழ முயல அவனை தடுத்த

சஞ்சய்யோ" நீ இல்லாம நாங்க மட்டும் எப்போடா என்ஜாய் பண்ணியிருக்கோம் வாடா" என்க..


அவனோ மறுப்புடன் "இல்ல மச்சான் நான் பேறன்டா நாளைக்கு பார்க்கலாம்" என்றவன் நண்பர்களின் பதிலை எதிர்பார்க்காமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றான்..


தன்னால் தான் நண்பன் பாதியில் சென்றுவிட்டானோ என்ற வருத்ததில் கார்த்தியோ "ஸாரி டா எல்லாம் என்னால தான்" என சோகமாய் கூறிட..


அவனை சமாதானம் செய்தவனாய் "விடுடா.. சந்ரு இல்லங்குறது நமக்கு எவ்வளவு கஷ்டமோ அத விட பல மடங்கு கஷ்டத அஜய் தான் அனுபவிக்குறான்.."என்ற சஞ்சய்யையும் சோகமாய் அமர்ந்திருந்த கார்த்தியையும் மாறி மாறி பார்த்த கிஷோரோ சூழ்நிலையை மாற்றும் பொருட்டு


"அட போங்கடா பீல் பண்ணியே சரக்கடிக்கிற சான்ஸ் எல்லாதையும் கெடுத்திடுங்கடா படுபாவிங்களா" என்று சோகமாய் கூற அவர்களோ அவனது கேலியுணர்ந்து அவனை துவைத்தெடுத்தனர்...
 

Habi

Moderator
அத்தியாயம்-02




சந்துருவின் நினைவுகளோடு வீட்டினுள் நுழைந்த அஜய்யோ எதிரில் அன்னை நிற்பது அறியாமலே மாடிப்படியேறியவன் சிந்தனையை களைத்தது "அஜய் கண்ணா" என்ற அன்னையின் குரல்..


அன்னையின் குரலில் களைந்தவன் "ஹா..அம்மா இன்னும் தூங்கலியா நீங்க? சாப்பிட்டிங்களா? என அக்கறையாய் கேள்விகள் கேட்ட போதிலும்

மகனின் முகத்தின் கலக்கம் தாய் மனதுக்கு தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது..


"நான் சாப்பிட்டன்பா..நீ சாப்பிட வா கண்ணா" என அழைத்த தாயிடம்

"இல்லமா எனக்கு பசி இல்லை" என்றவன் நகர முற்பட மகனின் முகம் காட்டிய சோர்வை கண்டவரோ..

"என்னாச்சி கண்ணா.. இங்க வா அம்மா மடில கொஞ்சம் சாஞ்சிக்கோ " என்றழைக்க தன் மனநிலையை அறிந்து தன்னை அரவணைக்கும் தன் தாயின் அன்பில் உருகி தாய் மடியில் தலைசாய்ந்தான் அஜய் தேவ்.


சிறுபிள்ளையாய் தன் மடிதூங்கும் மகனின் தலையை கோதிவிட்டவாறு மகனின் மனமறிய "என்னாச்சி கண்ணா ஏன் டல்லா இருக்க.."என கேட்டார்..


தன் மனநிலைக்கு தாயின் மடி ஆறுதலழிக்க தாயின் கேள்வியில் தன் மனநிலையை தாயிடம் கூறத் தொடங்கினான்.


"சந்துரு நியாபகமாவே இருக்குமா சந்துருடயும், அனுடயும் நிலைக்கு நான்தானே காரணம் என்னால தான் எல்லாம்" என்று கண்கலங்கிய

மகனின் கலக்கம் தாய் மனதை நெருட

"எத்தன நாளைக்கு கண்ணா நீ இதையே நினச்சிக்கிட்டு இப்பிடியே இருக்க போற நடந்தது நடந்து போச்சு …இனி நடக்க போறத பார்ப்போம்.. உன்னுடைய வாழ்க்கையை எப்போ ஆரம்பிக்க போற" என்க..


மௌனமாய் சில நிமிடம் அமைதிகாத்தவன் பின்..



"என்னால முடியல மா மறக்க நினைக்குறதெல்லாம் கண்முன்னே வந்து வந்தே இருக்குமா குற்றவுணர்ச்சியாவே இருக்கு"என கலக்கமாய் தாய் முகம் பார்த்தான்..


அவன் முகம் காட்டிய பாவனையில் தாயாய் மனம் கலங்கிய போதிலும் தன் மனதை மறைத்துக் கொண்டவர் மகனின் கலக்கத்தை போக்க முயன்றார்..


"ப்ச்ச்ச் அப்பிடி எல்லாம் பேசாதபா இது கடவுள் போட்ட திட்டம் இதுல நீ என்ன கண்ணா பண்ணுவ"என்ற தாயின் கூற்றிற்கு அமைதியாய் இருந்தான்..


"இங்க பாரு கண்ணா எனக்கின்று இருக்கிறது நீயும் அனுவும் தான் உங்க இரண்டு பேருக்காகவும் தான் நான் வாழ்றேன் எனக்கு ஏதாவது நடக்குறதுக்குள்ள உங்களுக்கு ஒரு நல்லது செஞ்சிடனும் இதுதான் என்னுடைய கடைசி ஆசை" என்ற தாயின் பேச்சில் பதறியெழுந்தவன்


"ப்ச்ச் ம்மா என்னம்மா கடைசி ஆசை அது இதுன்னு பேசுரிங்க உங்களுக்கு ஒன்னும் இல்ல நல்லாதான் இருக்கிங்க இன்னும் நூறு வயசு வர நீங்க கெத்த இருப்பிங்கமா" என்று தாயின் கண்ணம் கிள்ளி செல்லம் கொஞ்சினான்.

தனது மகனின் செய்கையில் வாய்விட்டு மனம் திறந்து சிரித்தார் லஷ்மி..

தாயின் சிரிப்பில் தன் மன இறுக்கம் தளர தாயிடம் கூறி விட்டு தன் அறை நோக்கி சென்றான் அஜய்.



தன்னுடைய அறையில் உள்ள சுவற்றில் மாட்டபட்டுள்ள அந்த அழகிய விழிகளைக் கொண்ட வரைபடத்தை கைகளால் தடவியவன் மனமோ "யார் நீ அடிக்கடி என் அனுமதி இல்லாமலே என் கனவுல வந்து டிஸ்டர்ப் பண்ணுற உன்னோட கண்ண பார்க்கும் பேதே ஏன் என்னுடைய கவலையெல்லாம் மறந்து போகுது..

என் அம்மாகிட்ட எப்பிடி பீல் பண்றனோ அதே போல தான் உன்கிட்டயும் பீல் பண்றேன்.

இந்த விழிக்குசொந்தமான உன்ன எப்பிடியாச்சும் கண்டு பிடிப்பேன்.

என்றவன் அவ்விழிகளை பார்த்தவாறே தூங்கிப் போனான்.



அடுத்த நாள் காலை

சாக்ஷி"ம்மா நான் காவ்யா காயத்ரி கூட ஊர் சுற்றி பார்த்துட்டு வாறேன் மா" என்று கூறி வெளியேற எதிரே பக்கத்துவீட்டு கௌசல்யாவோ

"என்ன டாக்டர் அம்மா எங்களெல்லாம் மறந்திட்டிங்க போல" என்று கேட்க..


அவர் பேச்சில் மகிழ்வுடன் அவரை நெருங்கியவள்

"கௌசிக்கா எப்பிடி இருக்கிங்க??" என்று அவளை அணைத்துக் கொண்டாள் சாஷிதா..


தானும் அவளை அணைத்து விடுவித்தவர் "நான் நல்லா இருக்கன்டா நீ எப்பிடி இருக்க எப்போ ஊருக்கு வந்த ??" என்க..


"நான் நல்லா இருக்கன்கா

வந்து இரண்டு நாள் தான் இப்போதான் வீட்ட விட்டே அம்மா வெளிய விடுறாங்க இரண்டு நாளும் என்ன விடவே இல்ல."என்றாள்.


"எத்தனை வருடமா உன்ன பிரிஞ்சி இருந்துட்டாங்க அந்த ஏக்கம் தான் மா" என்று கூறியவரிடம் ..


"ம்ம் ஆமாக்கா இனியும் அவங்கள பிரிஞ்சி இருக்கமாட்டேன்."என்றாள்..


"ம்ம் உன்னுடைய படிப்பெல்லாம் முடிஞ்சா???" என்றவரிடம் சந்தோசமாய் "முடிஞ்சுக்கா உங்க சாக்ஷி இப்ப டாக்டர் ஆகிட்டா."


"அப்படியா..அப்போ கூடிய சீக்கிரமா நம்ம ஊர்ல டாக்டரா வரபோறன்னு சொல்லு"


"இல்லக்கா அதுக்கு முதல் டாக்டர் ட்ரெய்னிங் ஒரு வருசம் பண்ணணும் பெரிய ஹாஸ்பிடல்ல பிறகு தான் நீங்க சொல்றதெல்லாம்"


"ம்ம் சரிடா உனக்கு எல்லாம் நல்லதே நடக்கும்..

ம்ம் சரிடா எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு" என்று தன்வீட்டை நோக்கிச் சென்றாள்..


சாக்ஷியோ யோசனையுடன் வாசலில் அமர்ந்து இருந்தவள் தன் தோளில் பதிந்த அழுத்தத்தில் நிமிர்ந்து பார்த்தாள்


"என்னடா அம்மு யோசிச்சுகிட்டு இருக்க..

வெளியே போறேன்னு சொன்ன போகாம இருக்க."என்ற தாயிடம் தலையசைத்து

"ஒன்னும் இல்ல மா"என்றவள் மீண்டும் யோசனை மூழ்க..


மகளின் யோசனையை கண்டு கொண்டவர் மகளிடம் "நீ பேசின எல்லாம் நான் கேட்டன்டா"என்றிட அவரை நிமிர்ந்து பார்த்தவள்..ழ்


"இல்லமா இத்துன வருசமா உங்க எல்லோரையும் பிரிஞ்சி இருந்துடேன் இனியும் உங்கள எல்லாம் பிரிஞ்சி இருக்க முடியாதுமா" என்று கண் கலங்க கூறினாள்.


"ப்ச் இப்போ எதுக்குடா பீல் பண்ற…அதை பற்றி பிறகு யோசிப்போம் இப்போ என் அம்மு ஹெப்பியா இருக்கனும் சரியா போ போய் எல்லோரயும் மீட் பண்ணிட்டு வாடா"என்ற தாயின் வார்த்தையில் சமாதானமடைந்தவள் நண்பர்களைக் காணச் சென்றாள்



****


அதன் பின் நாட்கள் அதன் போக்கில் நகர சாக்ஷியோ அவர்களை விட்டு பிரிந்நநு செல்லும் நாளும் வந்து சேர்ந்தது..


"அம்மா போஸ்ட்" என்ற சத்தில் வாசல் நோக்கிச் சென்றாள் அக்ஷிதா..வாசலில் நின்ற தபால்காரனோ

"இங்க சாக்ஷி யாருங்க அவங்களுக்குதான் வந்திருக்கு போஸ்ட்" என்றார்..


"அக்கா உனக்கு தான் வந்து இருக்கு வெளிய வா" என்றவளின் குரலில் "எனக்கா யாரு அனுப்பியிருப்பாங்க.??" என்றபடி வெளியே வந்தவளிடம் குறும்புடன்

"ஆஆ ஏ மாமா அதான் உன் புருஷன் தான் அனுப்பியிருப்பார்" என்றவள்

தமக்கையின் அடியிலிருந்து தப்பித்து சிரித்தபடி ஓடினாள்..


தங்கையின் சேட்டையில் சிரித்தவள் "ஏய் வாலு கைல மாட்டின கைமா பண்ணிடுவேன் வர வர வாய் கூடி போச்சு உனக்கு" என்று கூறி தனக்கான கடிதத்தை பெற்றவள் அதை படித்து அதிர்ந்து நின்றாள்..


சாக்ஷியின் சத்தம் இல்லாமல் போக மீண்டும் அவ்விடம் வந்த அக்ஷியோ அவள் கையிலிருந்ததை வாங்கிபடித்துவிட்டு சந்தோஷத்துடன் கட்டிக் கொண்டாள்..


"அம்மா அம்மா இங்க வாயேன் என்று கத்த ஆரவ் பார்வதி இருவரும் வெளியே வந்தனர்..


"ஏய் குட்டி ஏன்டி இப்பிடி கத்துற..என்ற தாயை தொடர்ந்து..

"அதானே ஏய் குட்டி பிசாசு ஏன் டி கத்துற..என்றான் ஆரவ்..


அவனை முறைத்தவள் "போடா வளர்ந்து கெட்டவனே"என சண்டைக்கு தயாராக..


"அய்யோ நிறுத்துங்க.. நீங்க இரண்டு பேரும் பிறகு சண்டை போடுங்க அக்ஷி எதுக்கு கூப்பிட்ட.. அதென்ன கைல.."என்ற தாயிடம் மகிழ்ச்சி பொங்க..


"அம்மா அக்கா கொழும்புல இருக்குற AAR ஹாஸ்பிடல்ல டாக்டர் ட்ரெய்னிங்க்கு செலெக்ட் ஆகி இருக்காமா" என்று சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தாள்.


பார்வதியோ சாக்ஷியை அணைத்து நெற்றியில் முத்தமிட்டு சந்தோஷத்தை வெளிக்காட்ட..


அக்கா வாழ்த்துக்கள்" என அவளுக்கு வாழ்த்தி தமக்கையை அணைத்துக் கொண்டான்..


அவளோ இது எதுவுமே கவனத்தில் பதியாது தன்யோசனையில் உழன்று கொண்டிருந்தாள்..


"அம்மு எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமாடா" மனம் மகிழ்ந்து கூறினார் பார்வதி..


தாயை தொடர்ந்து அக்ஷியோ "ம்மா அப்போ சந்தோஷத்த பால்பாயசத்தால கொண்டாடினா போச்சி..போய் ரெடிபண்ணுங்க" எனறிட அவள் தலையில் கொட்டிய ஆரவ்

"தீனீ மூட்ட எப்போ பாரு சோத்துட எண்ணம் தான் உனக்கு"என்றான்..


அவளோ தலையை வருடிவிட்டவாறே "சோறு இல்ல கண்ணா பாயாசம் பால்ப்பாயாசம் என்று ஸ்டைலாக சொல்லியவளை பார்த்து சிரித்தனர்..


சாக்ஷியோ அமைதியாய் இருப்பது கண்ட பார்வதியோ "என்னடா அம்மு நாங்க எல்லாரும் எவ்வளவு சந்தோஷமா இருக்கோம் நீ ஏன்டா அமைதியா இருக்க??"என்றார்..


"அ..அது..இல்லமா நான் கொழும்பு போகல நான் உங்க கூடவே இங்கே இருந்துடுறேன்."என்றாள் தயக்கமாய்..


அதில் அதிர்ந்து மற்றவர்கள் அவளைப் பார்க்க அக்ஷியோ "அக்கா லூசாக்கா நீ எவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைச்சியிருக்கு அத விட்டுறேன்னு லூசு போல சொல்ற"என்றாள்..


"அக்கா இது உன் வாழ்க்கை நல்லா யோசிச்சுக்கோ.." என்ற ஆரவ்விடம்..


"உங்கள பிரிஞ்சி வருச கணக்கா இருந்துடண்டா இனியும் என்னால இருக்க முடியாது..அதான் நான் போகல.."என்றாள் உறுதியாய்..


அதில் கோபம் கொண்ட அக்ஷியோ

"அக்கா நீ இவ்வளவு கஸ்ட பட்டு படிச்சது இப்பிடி வீட்டோட முடங்குறதுக்குதானா போக்கா.." என்றுவிட்டு கோபமாய் உள்ளே சென்றிட..


ஆரவ்வும் "நானும் அக்ஷியும் படிச்சு ஒன்னும் செய்ய போறல நாங்களும் வீட்டோட இருக்கோம்.."என்று இருவரும் முகத்தை திருப்பிக் கொண்டு தங்கள் அறைக்குள் புகுந்து கொண்டனர்..


"அம்மு ஏன்டா எங்களுக்கும் நீ இல்லாம ரொம்ப கஷ்டமாதான்டா இருக்கும் இருந்தும் வாழ்க்கைல ஒரு உயர்வுக்கு போக எல்லா கஷ்டங்களையும் நாம சந்திச்சு எதிர்த்து போராடனும் இப்பிடி ஓடி ஒழிய கூடாதுடா நாங்க உன்னுடைய பலமா இருக்கதான் விரும்புறோம் பலகீனமா இல்ல

இது உன்னுடைய கனவு நீயே முடிவு பண்ணுடா" என்ற தாயின் தோள் சாய்ந்தவள்..


"அம்மா பாயாசம் ரெடி பண்ணுங்க என மறைமுகமாய் அவள் சம்மதத்தை கூறிவிட..மகிழ்வோடு


"ரொம்ப சந்தோஷம்டா அம்மு" மகளை அணைத்துக் உச்சிமுகர்ந்தவர் சமையலறைக்குள் நுழைய..


சாக்ஷியோ"யாருக்கெல்லாம் பாயாசம் வேணும் என்று சத்தமாய் கத்த அனையிலிருந்து ஓடிவந்தனர் அக்ஷி ஆரவ் இருவரும்..


"அக்கா அப்போ ஓகேவா என்றபடி அவளை அணைத்துக் கொள்ள ..

அவளும் "ம்ம் ஓகே என்றவள் அவர்கள் காதை மெல்ல திருகியபடி "இரண்டு பேரும் எனக்கு அட்வைஸ் பண்ற அளவுக்கு நல்லா வளர்ந்திட்டிங்களா?? ம்ம்" என செல்லமாய் மிரட்ட..இருவரும் அசட்டுச் சிரிப்பு சிரித்தனர்..


"ஹிஹிஹி எல்லாம் நம்ம குட்டி பிசாசு தான்" .என்றவனை முறைத்தவள்


"போடா நெட்ட கொக்கு"என்க..

அவனும்"போடி குட்டி சாத்தான்"என்று மாறி மாறி இருவரும் சண்டையிட சாக்ஷியோ

"சரி சரி விடுங்க சண்டை போடாதிங்க..என இருவரையும் சமாதானம் செய்தாள்..



அஜய் வீட்டிலோ தன்னறையிலிருந்து வெளிவந்த அஜய்யோ

"அஜய் கண்ணா" என்ற தாயின் அழைப்பில் "சொல்லுங்கம்மா" என்றவன் தாயருகே வந்தமார்ந்தான்..


தன்னருகே அமர்ந்திருந்த மகனிடம் "அனுவ பார்த்துக்க நம்ம ஹாஸ்பிடல்ல இருந்து டாக்டர் ஒருத்தர அனுப்புறன்னு சொன்னாங்க கண்ணா அத பத்தி விசாரிச்சு சொல்லுபா" என்றார்.


"சரி மா நான் பாத்துட்டு சொல்றேன் என்றவன் தங்கையிருக்கும் அறை நோக்கிச் செல்ல அவனை தொடர்ந்து லக்ஷ்மியும் உள்நுழைந்தார்…


அந்த அறை முழுவதும் மருந்தின் நெடி வீச அங்கும் இங்கும் வயறுகள் சூழ கசங்கிய மலர் போல எந்த ஒரு உணர்ச்சிகள் இன்றி உயிருள்ள ஜடம் போல் தூங்கிக் கொண்டிருக்கும் தன் சகோதரியின் நிலை கண்டு அந்த ஆறடி ஆண்மகனும் கண் கலங்கி நின்றான்..

 

Habi

Moderator
அத்தியாயம்-02


சந்துருவின் நினைவுகளோடு வீட்டினுள் நுழைந்த அஜய்யோ எதிரில் அன்னை நிற்பது அறியாமலே மாடிப்படியேறியவன் சிந்தனையை களைத்தது "அஜய் கண்ணா" என்ற அன்னையின் குரல்..

அன்னையின் குரலில் களைந்தவன் "ஹா..அம்மா இன்னும் தூங்கலியா நீங்க? சாப்பிட்டிங்களா? என அக்கறையாய் கேள்விகள் கேட்ட போதிலும்
மகனின் முகத்தின் கலக்கம் தாய் மனதுக்கு தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது..

"நான் சாப்பிட்டன்பா..நீ சாப்பிட வா கண்ணா" என அழைத்த தாயிடம்
"இல்லமா எனக்கு பசி இல்லை" என்றவன் நகர முற்பட மகனின் முகம் காட்டிய சோர்வை கண்டவரோ..

"என்னாச்சி கண்ணா.. இங்க வா அம்மா மடில கொஞ்சம் சாஞ்சிக்கோ " என்றழைக்க தன் மனநிலையை அறிந்து தன்னை அரவணைக்கும் தன் தாயின் அன்பில் உருகி தாய் மடியில் தலைசாய்ந்தான் அஜய் தேவ்.

சிறுபிள்ளையாய் தன் மடிதூங்கும் மகனின் தலையை கோதிவிட்டவாறு மகனின் மனமறிய "என்னாச்சி கண்ணா ஏன் டல்லா இருக்க.."என கேட்டார்..

தன் மனநிலைக்கு தாயின் மடி ஆறுதலழிக்க தாயின் கேள்வியில் தன் மனநிலையை தாயிடம் கூறத் தொடங்கினான்.

"சந்துரு நியாபகமாவே இருக்குமா சந்துருடயும், அனுடயும் நிலைக்கு நான்தானே காரணம் என்னால தான் எல்லாம்" என்று கண்கலங்கிய
மகனின் கலக்கம் தாய் மனதை நெருட

"எத்தன நாளைக்கு கண்ணா நீ இதையே நினச்சிக்கிட்டு இப்பிடியே இருக்க போற நடந்தது நடந்து போச்சு …இனி நடக்க போறத பார்ப்போம்.. உன்னுடைய வாழ்க்கையை எப்போ ஆரம்பிக்க போற" என்க..

மௌனமாய் சில நிமிடம் அமைதிகாத்தவன் பின்..

"என்னால முடியல மா மறக்க நினைக்குறதெல்லாம் கண்முன்னே வந்து வந்தே இருக்குமா குற்றவுணர்ச்சியாவே இருக்கு"என கலக்கமாய் தாய் முகம் பார்த்தான்..

அவன் முகம் காட்டிய பாவனையில் தாயாய் மனம் கலங்கிய போதிலும் தன் மனதை மறைத்துக் கொண்டவர் மகனின் கலக்கத்தை போக்க முயன்றார்..

"ப்ச்ச்ச் அப்பிடி எல்லாம் பேசாதபா இது கடவுள் போட்ட திட்டம் இதுல நீ என்ன கண்ணா பண்ணுவ"என்ற தாயின் கூற்றிற்கு அமைதியாய் இருந்தான்..

"இங்க பாரு கண்ணா எனக்குன்னு இருக்கிறது நீயும் அனுவும் தான் உங்க இரண்டு பேருக்காகவும் தான் நான் வாழ்றேன் எனக்கு ஏதாவது நடக்குறதுக்குள்ள உங்களுக்கு ஒரு நல்லது செஞ்சிடனும் இதுதான் என்னுடைய கடைசி ஆசை" என்ற தாயின் பேச்சில் பதறியெழுந்தவன்

"ப்ச்ச் ம்மா என்னம்மா கடைசி ஆசை அது இதுன்னு பேசுரிங்க உங்களுக்கு ஒன்னும் இல்ல நல்லாதான் இருக்கிங்க இன்னும் நூறு வயசு வர நீங்க கெத்த இருப்பிங்கமா" என்று தாயின் கண்ணம் கிள்ளி செல்லம் கொஞ்சினான்.

தனது மகனின் செய்கையில் வாய்விட்டு மனம் திறந்து சிரித்தார் லஷ்மி..

தாயின் சிரிப்பில் தன் மன இறுக்கம் தளர தாயிடம் கூறி விட்டு தன் அறை நோக்கி சென்றான் அஜய்.

தன்னுடைய அறையில் உள்ள சுவற்றில் மாட்டபட்டுள்ள அந்த அழகிய விழிகளைக் கொண்ட வரைபடத்தை கைகளால் தடவியவன் மனமோ "யார் நீ அடிக்கடி என் அனுமதி இல்லாமலே என் கனவுல வந்து டிஸ்டர்ப் பண்ணுற உன்னோட கண்ண பார்க்கும் பேதே ஏன் என்னுடைய கவலையெல்லாம் மறந்து போகுது..
என் அம்மாகிட்ட எப்பிடி பீல் பண்றனோ அதே போல தான் உன்கிட்டயும் பீல் பண்றேன்.
இந்த விழிக்குசொந்தமான உன்ன எப்பிடியாச்சும் கண்டு பிடிப்பேன்.
என்றவன் அவ்விழிகளை பார்த்தவாறே தூங்கிப் போனான்.

அடுத்த நாள் காலை

சாக்ஷி"ம்மா நான் காவ்யா காயத்ரி கூட ஊர் சுற்றி பார்த்துட்டு வாறேன் மா" என்று கூறி வெளியேற எதிரே பக்கத்துவீட்டு கௌசல்யாவோ

"என்ன டாக்டர் அம்மா எங்களெல்லாம் மறந்திட்டிங்க போல" என்று கேட்க..

அவர் பேச்சில் மகிழ்வுடன் அவரை நெருங்கியவள்
"கௌசிக்கா எப்பிடி இருக்கிங்க??" என்று அவளை அணைத்துக் கொண்டாள் சாஷிதா..

தானும் அவளை அணைத்து விடுவித்தவர் "நான் நல்லா இருக்கன்டா நீ எப்பிடி இருக்க எப்போ ஊருக்கு வந்த ??" என்க..

"நான் நல்லா இருக்கன்கா
வந்து இரண்டு நாள் தான் இப்போதான் வீட்ட விட்டே அம்மா வெளிய விடுறாங்க இரண்டு நாளும் என்ன விடவே இல்ல."என்றாள்.

"எத்தனை வருடமா உன்ன பிரிஞ்சி இருந்துட்டாங்க அந்த ஏக்கம் தான் மா" என்று கூறியவரிடம் ..

"ம்ம் ஆமாக்கா இனியும் அவங்கள பிரிஞ்சி இருக்கமாட்டேன்."என்றாள்..

"ம்ம் உன்னுடைய படிப்பெல்லாம் முடிஞ்சா???" என்றவரிடம் சந்தோசமாய் "முடிஞ்சுக்கா உங்க சாக்ஷி இப்ப டாக்டர் ஆகிட்டா."

"அப்படியா..அப்போ கூடிய சீக்கிரமா நம்ம ஊர்ல டாக்டரா வரபோறன்னு சொல்லு"

"இல்லக்கா அதுக்கு முதல் டாக்டர் ட்ரெய்னிங் ஒரு வருசம் பண்ணணும் பெரிய ஹாஸ்பிடல்ல பிறகு தான் நீங்க சொல்றதெல்லாம்"

"ம்ம் சரிடா உனக்கு எல்லாம் நல்லதே நடக்கும்..
ம்ம் சரிடா எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு" என்று தன்வீட்டை நோக்கிச் சென்றாள்..

சாக்ஷியோ யோசனையுடன் வாசலில் அமர்ந்து இருந்தவள் தன் தோளில் பதிந்த அழுத்தத்தில் நிமிர்ந்து பார்த்தாள்

"என்னடா அம்மு யோசிச்சுகிட்டு இருக்க..

வெளியே போறேன்னு சொன்ன போகாம இருக்க."என்ற தாயிடம் தலையசைத்து..

"ஒன்னும் இல்ல மா"என்றவள் மீண்டும் யோசனை மூழ்க..

மகளின் யோசனையை கண்டு கொண்டவர் மகளிடம் "நீ பேசின எல்லாம் நான் கேட்டன்டா"என்றிட அவரை நிமிர்ந்து பார்த்தவள்..

"இல்லமா இத்துன வருசமா உங்க எல்லோரையும் பிரிஞ்சி இருந்துடேன் இனியும் உங்கள எல்லாம் பிரிஞ்சி இருக்க முடியாதுமா" என்று கண் கலங்க கூறினாள்.

"ப்ச் இப்போ எதுக்குடா பீல் பண்ற…அதை பற்றி பிறகு யோசிப்போம் இப்போ என் அம்மு ஹெப்பியா இருக்கனும் சரியா போ போய் எல்லோரயும் மீட் பண்ணிட்டு வாடா"என்ற தாயின் வார்த்தையில் சமாதானமடைந்தவள் நண்பர்களைக் காணச் சென்றாள்

அதன் பின் நாட்கள் அதன் போக்கில் நகர சாக்ஷியோ அவர்களை விட்டு பிரிந்நநு செல்லும் நாளும் வந்து சேர்ந்தது..

"அம்மா போஸ்ட்" என்ற சத்தில் வாசல் நோக்கிச் சென்றாள் அக்ஷிதா..வாசலில் நின்ற தபால்காரனோ
"இங்க சாக்ஷி யாருங்க அவங்களுக்குதான் வந்திருக்கு போஸ்ட்" என்றார்..

"அக்கா உனக்கு தான் வந்து இருக்கு வெளிய வா" என்றவளின் குரலில் "எனக்கா யாரு அனுப்பியிருப்பாங்க.??" என்றபடி வெளியே வந்தவளிடம் குறும்புடன்

"ஆஆ ஏ மாமா அதான் உன் புருஷன் தான் அனுப்பியிருப்பார்" என்றவள்
தமக்கையின் அடியிலிருந்து தப்பித்து சிரித்தபடி ஓடினாள்..

தங்கையின் சேட்டையில் சிரித்தவள் "ஏய் வாலு கைல மாட்டின கைமா பண்ணிடுவேன் வர வர வாய் கூடி போச்சு உனக்கு" என்று கூறி தனக்கான கடிதத்தை பெற்றவள் அதை படித்து அதிர்ந்து நின்றாள்..

சாக்ஷியின் சத்தம் இல்லாமல் போக மீண்டும் அவ்விடம் வந்த அக்ஷியோ அவள் கையிலிருந்ததை வாங்கிபடித்துவிட்டு சந்தோஷத்துடன் கட்டிக் கொண்டாள்..

"அம்மா அம்மா இங்க வாயேன் என்று கத்த ஆரவ் பார்வதி இருவரும் வெளியே வந்தனர்..

"ஏய் குட்டி ஏன்டி இப்பிடி கத்துற..என்ற தாயை தொடர்ந்து..

"அதானே ஏய் குட்டி பிசாசு ஏன் டி கத்துற..என்றான் ஆரவ்..

அவனை முறைத்தவள் "போடா வளர்ந்து கெட்டவனே"என சண்டைக்கு தயாராக.

"அய்யோ நிறுத்துங்க.. நீங்க இரண்டு பேரும் பிறகு சண்டை போடுங்க அக்ஷி எதுக்கு கூப்பிட்ட.. அதென்ன கைல.."என்ற தாயிடம் மகிழ்ச்சி பொங்க..

"அம்மா அக்கா கொழும்புல இருக்குற AAR ஹாஸ்பிடல்ல டாக்டர் ட்ரெய்னிங்க்கு செலெக்ட் ஆகி இருக்காமா" என்று சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தாள்.

பார்வதியோ சாக்ஷியை அணைத்து நெற்றியில் முத்தமிட்டு சந்தோஷத்தை வெளிக்காட்ட..

அக்கா வாழ்த்துக்கள்" என அவளுக்கு வாழ்த்தி தமக்கையை அணைத்துக் கொண்டான்..

அவளோ இது எதுவுமே கவனத்தில் பதியாது தன்யோசனையில் உழன்று கொண்டிருந்தாள்..

"அம்மு எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமாடா" மனம் மகிழ்ந்து கூறினார் பார்வதி..

தாயை தொடர்ந்து அக்ஷியோ "ம்மா அப்போ சந்தோஷத்த பால்பாயசத்தால கொண்டாடினா போச்சி..போய் ரெடிபண்ணுங்க" எனறிட அவள் தலையில் கொட்டிய ஆரவ்

"தீனீ மூட்ட எப்போ பாரு சோத்துட எண்ணம் தான் உனக்கு"என்றான்..

அவளோ தலையை வருடிவிட்டவாறே "சோறு இல்ல கண்ணா பாயாசம் பால்ப்பாயாசம் என்று ஸ்டைலாக சொல்லியவளை பார்த்து சிரித்தனர்..

சாக்ஷியோ அமைதியாய் இருப்பது கண்ட பார்வதியோ "என்னடா அம்மு நாங்க எல்லாரும் எவ்வளவு சந்தோஷமா இருக்கோம் நீ ஏன்டா அமைதியா இருக்க??"என்றார்..

"அ..அது..இல்லமா நான் கொழும்பு போகல நான் உங்க கூடவே இங்கே இருந்துடுறேன்."என்றாள் தயக்கமாய்..

அதில் அதிர்ந்து மற்றவர்கள் அவளைப் பார்க்க அக்ஷியோ "அக்கா லூசாக்கா நீ எவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைச்சியிருக்கு அத விட்டுறேன்னு லூசு போல சொல்ற"என்றாள்..

"அக்கா இது உன் வாழ்க்கை நல்லா யோசிச்சுக்கோ.." என்ற ஆரவ்விடம்..

"உங்கள பிரிஞ்சி வருச கணக்கா இருந்துடண்டா இனியும் என்னால இருக்க முடியாது..அதான் நான் போகல.."என்றாள் உறுதியாய்..

அதில் கோபம் கொண்ட அக்ஷியோ
"அக்கா நீ இவ்வளவு கஸ்ட பட்டு படிச்சது இப்பிடி வீட்டோட முடங்குறதுக்குதானா போக்கா.." என்றுவிட்டு கோபமாய் உள்ளே சென்றிட..

ஆரவ்வும் "நானும் அக்ஷியும் படிச்சு ஒன்னும் செய்ய போறல நாங்களும் வீட்டோட இருக்கோம்.."என்று இருவரும் முகத்தை திருப்பிக் கொண்டு தங்கள் அறைக்குள் புகுந்து கொண்டனர்..

"அம்மு ஏன்டா எங்களுக்கும் நீ இல்லாம ரொம்ப கஷ்டமாதான்டா இருக்கும் இருந்தும் வாழ்க்கைல ஒரு உயர்வுக்கு போக எல்லா கஷ்டங்களையும் நாம சந்திச்சு எதிர்த்து போராடனும் இப்பிடி ஓடி ஒழிய கூடாதுடா நாங்க உன்னுடைய பலமா இருக்கதான் விரும்புறோம் பலகீனமா இல்ல இது உன்னுடைய கனவு நீயே முடிவு பண்ணுடா" என்ற தாயின் தோள் சாய்ந்தவள்..

"அம்மா பாயாசம் ரெடி பண்ணுங்க என மறைமுகமாய் அவள் சம்மதத்தை கூறிவிட..மகிழ்வோடு

"ரொம்ப சந்தோஷம்டா அம்மு" மகளை அணைத்துக் உச்சிமுகர்ந்தவர் சமையலறைக்குள் நுழைய..

சாக்ஷியோ"யாருக்கெல்லாம் பாயாசம் வேணும் என்று சத்தமாய் கத்த அனையிலிருந்து ஓடிவந்தனர் அக்ஷி ஆரவ் இருவரும்..

"அக்கா அப்போ ஓகேவா என்றபடி அவளை அணைத்துக் கொள்ள ..

அவளும் "ம்ம் ஓகே என்றவள் அவர்கள் காதை மெல்ல திருகியபடி "இரண்டு பேரும் எனக்கு அட்வைஸ் பண்ற அளவுக்கு நல்லா வளர்ந்திட்டிங்களா?? ம்ம்" என செல்லமாய் மிரட்ட..இருவரும் அசட்டுச் சிரிப்பு சிரித்தனர்..

"ஹிஹிஹி எல்லாம் நம்ம குட்டி பிசாசு தான்" .என்றவனை முறைத்தவள்

"போடா நெட்ட கொக்கு"என்க..

அவனும்"போடி குட்டி சாத்தான்"என்று மாறி மாறி இருவரும் சண்டையிட சாக்ஷியோ
"சரி சரி விடுங்க சண்டை போடாதிங்க..என இருவரையும் சமாதானம் செய்தாள்..

அஜய் வீட்டிலோ தன்னறையிலிருந்து வெளிவந்த அஜய்யோ
"அஜய் கண்ணா" என்ற தாயின் அழைப்பில் "சொல்லுங்கம்மா" என்றவன் தாயருகே வந்தமார்ந்தான்..

தன்னருகே அமர்ந்திருந்த மகனிடம் "அனுவ பார்த்துக்க நம்ம ஹாஸ்பிடல்ல இருந்து டாக்டர் ஒருத்தர அனுப்புறன்னு சொன்னாங்க கண்ணா அத பத்தி விசாரிச்சு சொல்லுபா" என்றார்.

"சரி மா நான் பாத்துட்டு சொல்றேன் என்றவன் தங்கையிருக்கும் அறை நோக்கிச் செல்ல அவனை தொடர்ந்து லக்ஷ்மியும் உள்நுழைந்தார்…

அந்த அறை முழுவதும் மருந்தின் நெடி வீச அங்கும் இங்கும் வயறுகள் சூழ கசங்கிய மலர் போல எந்த ஒரு உணர்ச்சிகள் இன்றி உயிருள்ள ஜடம் போல் தூங்கிக் கொண்டிருக்கும் தன் சகோதரியின் நிலை கண்டு அந்த ஆறடி ஆண்மகனும் கண் கலங்கி நின்றான்..

 

Habi

Moderator
அத்தியாயம்-03



சாக்ஷி தன்னுடைய வேலையில் சேரும் நாளும் வந்தது..

இன்னும் இருநாளில் கிளம்ப வேண்டியிருக்க போவதற்குத் தேவையான அனைத்தையும் தயார்படுத்திக் கொண்டிருந்தனர்..

"அம்மு தேவையான எல்லாம் எடுத்து வெச்சிடியாடா.."என்ற பார்வதியோ தன் சின்ன மகளிடம்
"அக்ஷி குட்டி அக்காக்கு ஹெல்ப் பண்ணுடா" என்றுவிட்டு தன் வேலையில் கவனமாகிட அக்ஷியோ தாய் கூறியதுக்கிணங்க தேவையானவற்றை எடுத்து வைத்து உதவினாள்..

அனைவரும் ஒவ்வொரு வேலையில் மூழ்கியிருக்க சாக்ஷியோ அமைதியாய் அமர்ந்திருந்தாள்..

தங்களுக்குள்ளே பேசியபடி பொருட்களை தயார் செய்த தோழியர் இருவருக்குமே அவளின் அமைதி ஏதோ போலிருக்க இருவரும் அவளருகே அமர்ந்தனர்..

"சாக்ஷி ஏன்டி ஒரு மாதிரி இருக்க.." என அவள் தோள் தொட்டு கேட்ட காவ்யாவின் தொடுகையில் அவள் புறம் திரும்பியவள் பதில் கூறாது அப்போதும் அமைதியாய் இருந்தாள்..

அவளின் அமைதி அவளின் மனதின் கவலையை எடுத்துரைக்க அவளை சமாதானம் செய்யும் பொருட்டு பேச ஆரம்பித்தனர்..

"ஹேய் இங்க பாரு உனக்கு போக பிடிக்கலனா விடுடி அம்மா கிட்ட பேசிக்கலாம்.. இவ்வளவு கவலையோட நீ இங்க இருந்து போகவேண்டாம் என்றவர்கள் "இரு நாங்க போய் அம்மாகிட்ட பேசுறோம்" எழுந்திட முயல அவர்களைத் தடுத்தாள்..

"ஹேய் வேணாம்டி சும்மா இருங்க எனக்கு பிடிக்கலன்னு இல்ல இவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சது ஒரு நல்ல நிலமைக்கு வரனும்னு தானே..எனக்கு சந்தோஷம் தான் ஆனா மறுபடியும் எல்லாரையும் பிரிஞ்சி தனியா இருக்கப் போறது கஷ்டம் தான் ஆனா.. அதுக்காகவெல்லாம் இத்தனை வருசமா என் கனவுக்காக கஷ்டப்பட்ட அவங்களுக்கு மேலும் மேலும் கஷ்டத்த கொடுக்கக் கூடாது.. என் அம்மாவோட ஆசையும் கனவும் நான் நல்லா வரனும்னு தான் நிச்சயம் நான் அதை நிறைவேற்றுவேன்.." என இத்தனை நேர மௌனத்தை களைந்தவளாய் படபடவென தன் மனதின் வார்த்தைகளை கொட்டி முடித்தவளையே இடுப்பில் கைகுற்றி பார்த்திருந்தனர்..

அவர்களின் தோரணை கண்டு என்ன என்பது போல் இவள் பார்க்க அவர்களோ ஆளுக்கொரு பங்காய் அவளுக்கு சின்ன அடியொன்றை வைத்தவர்கள் சிறு முறைப்புடன்..
"அதான் இவ்வளவு தெளிவா எல்லாத்தையும் புரிஞ்சு வெச்சியிருக்கல்ல..அப்புறம் எதுக்குடி புருஷன் ஓடிப்போன பொஞ்சாதி மாதிரி.. பறிகொடுத்தவ மாதிரி இருந்த" என கேட்டு வைத்து இன்னும் இரண்டடியை போட..

அவளோ அவர்களை தடுத்தவளாய்.."அடியே அடங்குங்கடி ரொம்பத்தான்.. கொஞ்சமாச்சும் பீல் பண்ண விடுறிங்களா" என சலித்துக் கொண்டாலும் அவள் இதழ்கள் சிரித்துக் கொண்டன..

"ம்ம்..ரொம்ப சலிச்சிக்காதடி உன்னோட மண்டைல ஓடுற மைண்ட் வாய்ஸ் இங்க வர கேக்குது..எங்க தொல்ல இல்லாமா ஹெப்பியா ஒரு வருசம் என்ஜாய் பண்ணலாம்ன்னு தானே நினைச்சுட்டு இருக்க.." என அவளை வேண்டுமென்று சீண்டிட..

அவளும் சளைக்காதவளாய்.."அய்ய் எப்பிடிடி இவ்வளவு கரெக்ட்ஆ சொல்றிங்க..ம்ம் என்கூட சேர்ந்து இப்போ நீங்களும் ப்ரில்லியன்ட் ஆ மாறிட்டிங்க போங்க.." என கெத்தாய் இல்லாத காலரை உயர்த்தி செய்கை செய்தவளை கண்ட தோழிகள் இருவரும் அவளை பிடிபிடியென பிடித்துக் கொண்டனர்..

நண்பர்களின் சேட்டையிலும் கலகலப்பிலும் நேரமும் கழிந்திட சாக்ஷியின் பிரயாண நேரமும் வந்து சேர்ந்தது..

அவளின் உடைமைகளோடும் மற்றவர்களோடும் புகையிரத நிலையம் நோக்கிச் சென்றாள் சாக்ஷிதா..

அவளது பயணத்திற்கு இன்னும் நேரமிருக்க புகையிரத நிலையத்தில் போடப்பட்டிருந்த இருக்கையில் அனைவரும் அமர்ந்திருந்தனர்..

என்னதான் மகளிற்கு ஆயிரம் தைரியம் சொல்லி அவளை அனுப்பி வைக்க முடிவெடுத்திருந்த போதிலும் பார்வதிக்கோ மகளுடனான மீண்டும் ஒரு பிரிவை நினைக்கையில் மனது வலிக்கத் தான் செய்தது..

மருத்துவ படிப்பிற்கென ஓய்வில்லா அவள் ஓடிய ஓட்டத்தில் அவளது குமரிப் பருவமே அதில் ஓடிட.. தாயோடும் உடன்பிறப்போடும் அதிக ஒட்டுதலின்றி எங்கோ தூரத்தில் கல்வி பயின்றவள் அதை முற்றாய் முடித்து இனி தன் குடும்பத்தோடு இருக்க வேண்டும் என்று வந்திருக்க.. அதுக்கு தடையாக மீண்டும் வந்தது இவ் ஓர் வருடப் பிரிவு..

அவளுக்கு அது கஷ்டமானதாய் இருந்தாலும் இத்தனை நாள் எதற்காக கஷ்டபட்டு படித்தோமோ அதற்கு ஒரு பலனுமில்லாமல் போய்விடக் கூடாதே ..தன் ஆசை மட்டுமல்ல தன் தாய் மற்றும் உடன்பிறப்புக்களின் ஆசையும் இது தானே..தான் நல்ல நிலையில் ஓர் சிறந்த மருத்துவராய் திகழ வேண்டும் என்பது..அதற்காகத் தானே இத்தனை வருட ஓட்டமும்..

அனைத்தையும் எண்ணி தன் யோசனையில் மூழ்கியிருந்தவளின் சிந்தையை தாயின் பரிசம் களைத்திட..மெல்ல நிமிர்ந்து அவரைப் பார்த்து புன்னகைத்தாள்..

மகளின் யோசனையும் கவலையும் படிந்த முகம் அவள் மனதை உரைக்க..அவள் தலை வருடியவர் "சீக்கிரம் நாங்களும் அங்க உன்கூடவே வந்துருவோம்டா..கொஞ்ச நாள் பொறுத்துக்கோ" என்க..

அதில் மேலும் முகம் மலர்ந்தவள் அவரை அணைத்து அவர் தோள் சாய்ந்தாள்..

சிறிது நேரத்தில் அவள் செல்லும் நேரமும் வந்திட தன் பொருட்களை ஏற்றிக் கொண்டவள் அனைவரிடமும் விடைபெறும் பொருட்டு அவர்களை பார்த்தாள்..

அனைவருமே அவளையே பார்த்திருந்தனர்..பார்வதிக்கோ மகள் போகப்போகிறாள் என்பதில் கவலை மீதுற "அம்மு பார்த்து போடா அடிக்கடி போன் பண்ணுடா தைரியமா இருக்கணும். சரியா" என ஆயிரம் பத்திரம் கூறும் போதே கண் கலங்கிப் போனது..

அவரின் கண்ணீர் கண்ட மற்றவர்களோ "பாரும்மா ப்ச் என்ன நீங்களே இப்பிடி கண்கலங்கினா எப்பிடிமா" என அவர் கண்ணீரை துடைத்தவர்கள் மேலும்

"நீங்க தான் அவளோட தைரியமே நீங்களே இப்பிடி அழுதா அவ எப்பிடி தைரியமா போவாள்" என கேட்டிட அதில் தன்னை தேற்றிக் கொண்டவர் மகளைப் பார்க்க ..

" அம்மா" என அவரை அணைத்துக் கொண்டவள் அவரை ஆறுதல் செய்துவிட்டு..

மற்றவர்களையும் அணைத்து அவர்களிடம் விடை பெற்றவள் தம்பி தங்கைக்கு ஆயிரம் அறிவுரை கூறிவிட்டு தன் பயணத்தை தொடங்கியிருந்தாள்..

இங்கு அவளறியாமலே அவளின் வாழ்வின் சரிபாதியை நோக்கி தன் பயணத்தை தொடங்கினாள் காந்த விழி அழகி.

.........

இங்கு சஞ்சயின் பிளாட்டிலோ குறுக்கும் நெடுக்குமாய் திரிந்த சஞ்சயின் முகத்தில் ஓர் கலவரம் படிந்திருக்க கால்கள் அதன் போக்கில் நடக்க..அவன் வாயோ இதோடு நூறாவது தடவையாக அந்தக் கேள்வியை கேட்டு வைத்தது..
"டேய் கார்த்தி எங்கடா அஜய்ய இன்னும் காணும்..எப்போதான்டா வருவான்" என..

அவன் தொடர் கேள்வியில் கார்த்தி கிஷோர் இருவருமே ஒருவர் முகம் ஒருவர் பார்த்தவர்கள் பதில் பேசாது கையில் வைத்திருந்த காபியை அருந்திட..அதில் மேலும் காண்டாகிப் போனது என்னவோ சஞ்சய் தான்..

அவன் ஏதோ பேச வருவதற்குள் அங்கு வந்து சேர்ந்தான் அஜய்..

"ஹாய் மச்சீஸ்" என்ற குரலில் நிமிர்ந்தவர்கள் வாசல் புறம் திரும்ப அங்கோ ஆண்மையின் இலக்கணத்தோடு ஸ்டைலிஸாக வந்து கொண்டிருந்தான் அஜய் தேவ்..

அவனைக் கண்ட சஞ்சய்யோ அப்போது தான் இழுத்துபிடித்த மூச்சை வெளிவிட்டவனாய் ..

"அப்பாடா ஒரு வழியா வந்துட்டியா வாடா கிளம்பலாம் இப்போவே ரொம்ப
லேட் ஆகிடிச்சி" என நண்பர்களை இழுக்காத குறையாய் அழைத்திட..

அவன் செய்கையில் மற்ற மூவரும் சத்தமிட்டு சிரித்தனர்..

அஜய்யோ சஞ்சையின் தோளைச்சுற்றி கையிட்டவன் "என்னடா புது மாப்புள்ள அவ்வளவு அவசரமா??" என கேலிபோல் கேட்டிட..

அவனோ"அடப்போடா..உன் தங்கச்சிக்குதான் ரொம்ப அவசரம் நேத்து நைட்ல இருந்து ஆரம்பிச்சவ இப்போவரை போன் மேல போன் போட்டு காட்டு கத்து கத்துறா தெரியுமா உனக்கு??" என அப்பாவியாய் கூறிட மற்ற மூவரும் அவன் முகம் காட்டிய பாவனையில் சிரித்தனர்..

கார்த்திக்கோ அவன் தோள் தட்டியவன் "மச்சான் இதுக்கே இப்பிடி இருக்கியே.. கல்யாணத்துக்கு அப்புறம் இன்னும் பார்க்க வேண்டியது நிறைய இருக்குடா..இப்போவே உன் மனச தேத்திக்கோ" என தைரியம் கூறினான்..

"ம்ம்..அனுபவஸ்தன் சொல்றான் நோட் பண்ணிக்கோ மச்சீ..என்ற அஜயிடம் கையடித்து சிரித்த கிஷோரோ

"டேய் மாப்பிள்ளைங்களா எப்போவுமே சிங்கிள் தான் கெத்துடா..அதுலயும் என்னப் போல முரட்டு சிங்கிள் தான் கெத்தே" என கெத்தாய் கூறியவனை பார்த்த மூவரும் ஒருசேர "தூ" என்றிட அவனோ அதையெல்லாம் கண்டு கொள்ளாதவனாய் இளித்து வைத்தான்..

"பார்ப்போம் பார்ப்போம் உனக்குன்னு ஒருத்தி வருவா பாரு அப்ப பார்க்குறேன்டா..இந்த வாயி என்ன சொல்லுதுன்னு" என சாபம் போல் கூறிய கார்த்தியிடம்..

அஜய்யோ குறும்புச் சிரிப்புடன் "எங்க மச்சீ வந்ததுலயிருந்து மீனாவ காணோம் எங்க அவ" என கார்த்தியின் காதல் மனைவி மீனாவைக் கேட்டிட..

நண்பனின் கேள்வியில் ஜெர்க்கான கார்த்தியோ உசாராக " இப்போ ஏன்டா அவள நியாபகடுத்துற" என கேட்டுவைத்தான்..

அவனுக்கு தான் தெரியுமே எத்தனை முறை இவ்வாறு உளறிக் கொட்டி நண்பனின் தயவால் தன் ஆசைக் காதல் மனைவியிடம் மாட்டி சிக்கி சின்னாபின்னாமானது..

நல்லவேளை அவள் முன்னமே அவள் தோழிகளுடன் ரெஜிஸ்டர் அலுவலகம் சென்றிருக்க இன்று தப்பித்திருந்தான் கார்த்தி..

நண்பனின் கேள்வியில் அஜய்யோ
"தெரியாத போலவே கேக்குறியே மச்சான்..வேற எதுக்கு கேக்க போறன் உன்னை போட்டுக் கொடுக்கதான் கேக்குறேன்" என சிரிப்புடன் கூற

கார்த்தியோ பட்டென கையெடுத்து கும்பிட்டவன் "தெய்வமே மீ பாவம்" என்று கூறிட மற்ற மூவரும் சிரித்தனர்..

அதே சந்தோஷமான மனநிலையோடு வீட்டை விட்டு கிளம்பினர் நண்பர்கள் நால்வரும்..

அஜய் சஞ்சய் இருவரும் ஒரு வண்டியில் ஏறிட கார்த்தி கிஷோர் இருவரும் மற்றுமோர் வண்டியில் ஏறிக் கொண்டனர்..இரு வண்டிகளுமே வெவ்வேறு திசைகளில் பயணித்தன..

அந்த மிகப்பெரிய திருமண மண்டபத்திற்கு பின்பக்கமாய் சற்று தள்ளி வண்டியை நிறுத்திய அஜயின் விழிகளோ அந்த மண்டபத்தையே சுற்றிக் கொண்டிருந்தது..

அவனருகே இருந்த சஞ்சயின் கரமோ அலைபேசியில் அவனது காதலி நந்தினிக்கு அழைப்பை விடுவித்து கொண்டிருக்க மறுபுறத்தில் அழைப்பு ஏற்கப்படாமலே இருந்தது..

"என்னடா நந்தினி கால் ஆன்ஸர் பண்ணலையா" என நண்பனின் பதட்டத்தை வைத்தே உணர்ந்தவனாய் அஜய் கேட்க..அவனுக்கு ஆமென பதிலளித்தவன்..

"நிறையவாட்டி ட்ரை பண்ணிட்டேன்டா ஆன்ஸர் பண்றா இல்ல" என சொல்லிக் கொண்டிருக்கும் போதே போன் அலற..

"டேய் அவ தான் கால் பண்றா" என்றவன் அழைப்பை ஏற்று பேசிட மறுபுறத்தில் என்ன கூறப்பட்டதோ நண்பனின் முகம் பார்த்தவன் "டேய் அவள ரூம்ல போட்டு பூட்டிடாங்களாம்டா ..அவளால வெளிய வரமுடியலையாம்" என்க ..

அவன் கையிலிருந்த அலைபேசியை வாங்கியவன் அவளிடம் "எந்த ரூம்ல இருக்க நந்தினி" என்று கேட்டவன் அவள் பதிலை பெற்றுக் கொண்டு அழைப்பை துண்டித்து வண்டியிலிருந்து இறங்க அவனோடு சஞ்சய்யும் இறங்க முற்பட அவனைத் தடுத்தான் அஜய் ..

"நீ இரு நான் பார்த்துக்குறேன்.." என்றவன் அவன் மறுப்பை பொருட்படுத்தாது மண்டபத்தினுள் நுழைந்தான்..

சஞ்சய்யோ போகும் அவனை கலவரத்துடன் பார்த்திருந்தான்..

சஞ்சய் நந்தினி இருவருமே கடந்த மூன்று வருடங்களாய் ஒருத்தரையொருத்தர் உயிராய் காதலித்திருக்க அவர்களின் காதலுக்கு எதிரியாய் வந்து சேர்ந்தார் நந்தினியின் தந்தை..

அவர் மறுத்ததற்கு ஒரே காரணம் சஞ்சய்க்கென்று யாருமில்லை அவன் அநாதை என்ற காரணமே..

ஆம் சஞ்சய் சிறுவயதிலே தாய் தந்தையை இழந்து சொந்தங்களால் கைவிடப்பட்டு அநாதையாக்கப்பட்டவன் அவன் மட்டுமல்ல அவன் நண்பர்கள் கிஷோர் கார்த்தி இருவரும் அவனைப் போலவே..

யாருமற்ற உறவாய் இருந்தவர்களுக்கு உறவாய் வந்தவரே அஜய்யின் தந்தை கிருஷ்ணதேவ்.. அவரின் உதவியிலே தங்கள் கல்வியை தொடர்ந்தவர்களுக்கு மேலதிகமாக கிடைத்த வரமே அஜய்யின் நட்பும் லக்ஷ்மி அம்மாவின் தாய்ப்பாசமும் அனுவின் தங்கை என்ற உறவும்..

எவ்வித உறவுமின்றி கிடைத்த சொந்ததினாலே இன்று இந்தளவில் அவர்கள் வளர்ந்திருக்க அதனாலோ என்னவோ அவர்கள் மீதும் அஜய்யின் மீதும் அளாதி பிரியம் உண்டு..

நந்தினியின் தந்தையால் சொல்லப்பட்ட அநாதை என்ற சொல்லுக்கு பதிலடியாய் தாயாய் லக்ஷ்மியே பெண் கேட்டு சென்ற போதும் மறுப்பு தெரிவித்தார் நந்தியின் தந்தை..

அதன்பிறகே அவரின் மறுப்புக்கு காரணம் இது அல்ல அது அவரின் தங்கை மகன் அரவிந்தும் அவனின் சொத்துக்களும் என்பதையும் புரிந்து கொண்டனர்..

அடுத்து வந்த நாட்களில் அவசரஅவசரமாய் அரவிந்த் நந்தினி திருமண ஏற்பாட்டை அவர் தொடங்க அதன்பிறகு கேட்கவும் வேண்டுமா நண்பர்கள் நால்வரும் வேறொரு திட்டம் தீட்டினர்..

லஷ்மி அம்மா தலைமையில் இவர்களது திருமணத்தை செய்துவைக்க அவர்கள் நினைக்க அவருக்கோ நந்தினி சார்பில் யாரும் இல்லாது தான் செய்வது சரியில்லை என்பதோடு தானும் ஒரு பெண்பிள்ளைக்குத் தாயாய் யோசித்தவர்.. அதற்கு மறுத்துவிட்டார்...இருந்தும் பிள்ளைகளின் காதலுக்கு குறுக்கே வராது அவர் ஒதுங்கி நின்று கொண்டார்..

அதனாலே இன்று நண்பர்கள் தலைமையில் ரெஜிஸ்டர் ஆபிஸில் வைத்து திருமண ஏற்பாட்டை செய்திருந்தனர்..

சிறிது நேரத்திலே நந்தினியை அழைத்துக் கொண்டு அஜய் வந்திட அவர்களது வண்டியோ ரெஜிஸ்டர் ஆபிஸ் நோக்கிச் சென்றது...

.......

இங்கு ரெஜிஸ்டர் முன்னிலையில் நண்பர்களின் தலைமையிலும் அவர்களது ஆசிர்வதத்துடனும் இனிதே
சஞ்சய் மற்றும் நந்தினி திருமணம் நடை பெற்று முடிந்தது..

நந்தினியின் அருகே கார்த்தியின் மனைவி மீனா நின்றிருக்க சஞ்சயின் அருகே நின்ற கார்த்தியோ அவன் தோள் சுற்றி வளைத்தவன் "என்ன மச்சான் இப்போ சந்தோஷமா??" எனக் கேட்டிட..

அவனை அணைத்துக் கொண்டவன் " ரொம்ப தைங்ஸ்டா" என்றுவிட்டு மற்ற இருவரையும் சேர்த்து அணைத்துக் கொண்டான்..

அவர்களை பார்த்து நின்ற நந்தினியோ "ஹலோ ஹலோ இங்க நானும் இருக்கேன்.." என்றிட அவளை நக்கலாய் பார்த்த அஜய்யோ..

" இருந்தா இருந்திட்டு போ..அதுக்கென்னப்போ" என்று அவளை சீண்டி விட்டு அவளை பார்த்து நக்கலாய் சிரித்தான்..

அவளோ அவன் சிரிப்பில் முறைப்புடன் "என்ன நக்கலா? "என கேட்டிட ..கிஷோரோ அவளை பார்த்து பழிப்புக் காட்டியவனாய் "இல்லம்மா விக்கல்" என்றிட... அடுத்த கணம் அவளோ அவனை அடிக்க விரட்டிக் கொண்டு ஒட அவனும் ஓடிட அங்கு வந்த வண்டியில் இருந்து கோபமாய் இறங்கினார் நந்தினியின் தந்தை..

அவரோடு அவரின் தங்கை மகன் அரவிந்தும் வந்திருக்க..
கோபத்தின் உச்சியில் இவர்களை முறைத்துக் கொண்டு நிற்றனர் இருவரும்..

இவர்களைக் கண்ட பயத்தில் நந்தினியோ வேகமாய் சஞ்சய்யின் அருகில் சென்றவள் அவன் கையை இறுக்கி பிடித்துக் கொண்டாள்.

இதைக் கண்ட அரவிந்துக்கோ கண்மண் தெரியாத கோபம் எகிற வேகமாய் அவர்களை நெருங்க அவனுக்கு குறுக்கே அவன் முன்னே வந்து நின்றான் அஜய்..

அரவிந்த்தோ அவனை அனல் பறக்கும் பார்வை பார்க்க அஜய்யோ கூலாக அவனைப் பார்த்து வைத்தான்..

நந்தியின் தந்தைக்கோ மகள் நின்ற கோலம் கண்டு கோபம் பெருகிட..
"இந்த அநாத பயலுக்காக எங்களை தூக்கி எறிஞ்சிட்டல இனி உனக்கும் எங்களுக்கும் எந்த ஒட்டும் இல்ல உறவும் இல்ல.." என கத்தியவர்.. "அரவிந் வா போகலாம்" என அவனை அழைத்துவிட்டு வண்டியில் ஏறிக் கொண்டார்..

அரவிந்த்தோ அங்கே நின்றிருந்தவர்களை முறைத்துப் பார்த்தவன் தன் முன்னே நக்கலாய் பார்த்து நின்றவனை மேலும் முறைத்தவனாய்..
"நான் கல்யாணம் பண்ண இருந்தவள தூக்கிட்ட இல்ல உன்ன நான் சும்மா விடமாட்டன்டா" என சீறலாய் கூறிட ..

அவனோ "ம்ம் ..சரி சரி கிளம்பு ராசா அதான் உன் மாமா கூப்புடுறாறுல போடா என்று எதுவுமே நடக்காதவன் போல் கூறிட..
வஞ்சத்தோடு அவ்விடம் விட்டு அகன்றான் அரவிந்.

அவர்கள் சென்றதும் நண்பர்கள் புறம் திரும்பியவனோ
"சரிடா மச்சான் ரொம்ப கிக்கா ஒரு வேலை பண்ணியிருக்குறதுனால நான் ரொம்ப டயர்டா இருக்கேன்.. சோ நான் கிளம்புறேன் நீங்க மற்ற ஏற்பாட்ட பாருங்கடா நான் வீட்டுக்கு போறேன் என நண்பர்களிடம் விடைபெற்று வீடு நோக்கிச் சென்றான்..

வீடு வந்தவனோ குளித்து முடித்து தன்னை சுத்தப்படுத்தி கீழே சென்றவன் தாயிடம் சிறிது நேரம் பேசிவிட்டு தங்கையையும் பார்த்துவிட்டு தன்னறைக்குள் நுழைந்தவனோ அறையின் சுவரில் அவனையே பார்த்திருந்த அவ்விழிகளை ஆழ்ந்து நோக்கியவனோ உதட்டோரம் துளிர்த்த புன்னகையோடு நிம்மதியாய் கண்ணயர்ந்தான்..





தொடரும்...[/ICODE]
 

Habi

Moderator
அத்தியாயம் - 04

அடுத்த நாள் அதிகாலைவேளை கொழும்பை வந்தடைந்த ரயிலிலிருந்து தன் உடைமைகளுடன் கீழிறங்கினாள் சாக்ஷிதா..

அந்த காலைவேளையிலும் பரபரப்பாய் இருந்த அந்த புகையிரத நிலையத்திலிருந்து வெளியேறிவந்தவளோ அடுத்து அழைத்தது என்னவோ அவள் அன்னைக்கே..

ஊரை சென்றடைந்ததும் தனக்கு அழைத்து சொல்லவேண்டும் என ஆயிரம் முறையாவது கூறியிருந்த அன்னையின் பேச்சு காதில் ஒலிக்க சிறு புன்னகையுடன் அவருக்கு அழைப்பை விடுத்தாள்..

மகளின் அழைப்பிற்காக காத்திருந்தாரோ அவரும் ஒரு அழைப்பிலே மறுபுறம் ஏற்கப்பட்டிருந்தது..

"ஹலோ அம்மு பத்தரமா போய்ட்டியாடா?? ஏதும் பிரச்னையில்லையே??" என அக்கறையுடனும் கவலையுடனும் அவர் குரல் ஒலித்திட..இவளுக்கோ தாயின் தவிப்பில் மனதில் கவலை கூடியபோதிலும் தன் மனதை மறைத்தவளாய்..

"அம்மா நான் சேஃபா ரீச் ஆகிட்டேன்..எந்த பிரச்சினையும் இல்ல நல்லா இருக்கேன்.." என்ற அவள் குரலை கேட்டபின்பே சற்று ஆசுவாசமடைந்தார்..

"சரிடா என்ன டைம் ஹாஸ்பிடல் போகனும்..??" என கேட்டவருக்கு பதிலாய்..

"ஒன்பது மணிக்கு தான் ஹாஸ்பிடல் போகனும்மா..இன்னும் நேரம் இருக்குறதுனால இப்போதைக்கு ஒரு ரூம் ஒன்ஹவர் போல தங்கி ப்ரெஷ்ஷப்பாகிட்டு கிளம்பினா ஓகேவா இருக்கும்.." என்க..அவரும் சரியென்றவர் சிலநிமிடம் அவளுடன் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தார்..

அதன்பின் சாக்ஷியோ அருகிலிருக்கும் ஓர் விடுதியில் சிறிதுநேரம் தங்கி தயாராகியவள் பின் ஹாஸ்பிடல் நோக்கிச் சென்றாள்..

.........

இங்கு அஜயின் வீட்டிலோ தயாராகி கீழே வந்தவனோ ஹாலில் அமர்ந்திருந்த தாயின் அருகே சென்றமர்ந்தவன்..
"மாம் ராம் அங்கிள் கால் பண்ணியிருந்தாங்க.. நம்ம அனுவ பார்த்துக்குறதுக்கு ஒருஹவுஸ் சேர்ஜேன்ட் அரேன்ஜ் பண்றதா சொல்லியிருந்தாரு..அத பத்தி பேச நான் ஹாஸ்பிடல் போறேன் மாம்" எனக் கூறிட..

லஷ்மியும் " ம்ம் சரி கண்ணா முதல்ல வந்து சாப்பிடு அப்புறம் போகலாம் .. என்றவர் அவனை அழைத்துக் கொண்டு சென்று அவனுக்கான உணவை பரிமாறியவர் தானும் அவனுடன் அமர்ந்து உணவை உண்டு முடித்தார்..

உணவை முடித்துக் கொண்டு தாயிடம் விடைபெற்று அஜய்யும் கிளம்பும் நேரம் வீட்டினுள் நுழைந்தனர் அஜய்யின் நண்பர்கள் பட்டாளம்...

"உள்ளே வரலாமா??" என கோரசாய் கேட்வாறே உள்நுழைந்தவர்களை கண்ட இருவரும் மகிழ்ச்சியுடன் அவர்களை பார்த்தனர்..

"டேய் வாங்கடா.. என்னடா எல்லாரும் சொல்லாம வந்து இருக்கிங்க.." என்ற அஜய்யின் அருகே வந்த நண்பர்கள் மூவரும் .."அதான் மச்சி சர்ப்ரைஸ்.." என அவன் காதிற்குள் கத்திட அவனோ காதை குடைந்து கொண்டான்..

லஷ்மியோ புன்னைகையோடு அவர்களை பார்த்தவர் அவர்களோடு வந்த மீனா நந்தினி இருவரையும் புன்னைகை முகமாய் உள் அழைத்தார்..

சஞ்சய்யோ நந்தினியோடு சேர்ந்து தம்பதி சகிதமாய் லக்ஷ்மியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிட..மனப்பூர்வமாய் இருவரையும் வாழ்த்தியவர் சாமியறையில் அவர்களுக்கென வாங்கிவைத்திருந்த சீர் தட்டையும் அவர்களுக்கு கொடுத்திட மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டனர்..

கிஷோரோ "அம்மா ரொம்ப பசியா இருக்குமா??" என உரிமையாய் அவரிடம் கேட்டிட சிரித்துக் கொண்டவர் அனைவரையும் அழைத்துக் கொண்டு அவர்களுக்கு வயிறார உணவை பரிமாறினார்..

தாயாய் மதிக்கும் அவரிடம் அவர்களுக்கும் எவ்வித தயக்கமும் இதுவரை இருந்ததில்லை..என்பதை விட லக்ஷ்மியும் சரி அஜய்யும் சரி அவர்களுக்குள் ஆரம்பத்தில் உண்டாகிய அந்த தயக்கத்தை முற்றிலும் வெட்டி முறித்ததாலோ இன்று வரை சொந்தப் பிள்ளை போல் உரிமையாய் அவரிடம் அன்பை பெற்று வருகின்றனர்..

அதன்பின்னர் நேரம் நண்பர்களுடன் கழிந்திட சிலமணிநேரத்தில் அவர்களும் கிளம்பிச் சென்ற பின்பே ஹாஸ்பிடல் நோக்கி கிளம்பிச் சென்றான் அஜய்..

..........

AAR என்ற பெயர் பொறிக்கப்பட்டு ஏழடுக்கில் உயர்ந்து நின்ற அந்த ஹாஸ்பிடல் வளாகத்தினுள் நுழைந்தாள் சாக்ஷிதா..

ஹாஸ்பிடல் கட்டிடத்தினுள் நுழைந்தவளோ அங்கிருந்த ரிசெப்ஷனிஸ்ட் பெண்ணிடம் விசாரித்திட அவளும் ஓர் அறையை சுட்டிக் காட்டி அதனுள் காத்திருக்குமாறு கூற அவளிடம் நன்றி கூறி விடைபெற்றவள் அவ்வறையினுள் நுழைந்து கொண்டாள்..

அங்கு இவளைப் போல சிலர் இருக்க அங்கிருந்த ஒரு பெண்ணின் அருகில் அமர்ந்து கொண்டாள்..

அருகிலிருந்த பெண்ணை பார்த்தவள் அவளிடம் நட்பாய் பேச முயன்றிட அவளோ எதுவும் பேசாது அமைதியாகவே அமர்ந்திருக்க சாக்ஷியும் அதற்குமேல் எதுவும் பேசிடாது அமைதியாகினாள்..

அவர்களுக்கான நேர்முகத்தேர்வு நடைபெற ஒவ்வொருவராய் உள்ளே சென்று வெளியேறிச் சென்றனர்..சாக்ஷியும் அவளுக்கான அழைப்பு கிடைத்தவுடன் உள்ளே சென்று வெளியேறிச் சென்றாள்..

அங்கு வந்தவர்களில் ஐந்துபேர் தெரிவு செய்யப்பட்டிருக்க. அதில் சாக்ஷியும் ஒருத்தியாய் தேர்வாகியிருந்தாள்..

புன்னகையோடு வெளியேறியவள் தாய்க்கு அழைத்து விசயத்தை கூறிட மறுபுறம் பார்வதியும் மகிழ்வுடன் வாழ்த்தினார்..தாயிடம் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தவள் அங்கிருந்து கிளம்பும் நேரம் யாரோ அழைக்கும் குரல் கேட்டு அந்த திசையில் திரும்பினாள்...

அங்கோ உள்ளே கண்ட அந்தப் பெண் நின்றிருந்தாள்.. உள்ளே அவளருகில் அமர்ந்திருந்த அவளே..

சாக்ஷியோ அவளை என்ன என்பது போல் புருவம் உயர்த்திக் பார்த்திட அதிலே அவளது கோபத்தை புரிந்து கொண்ட மற்றையவளோ

"ஹேய் ஸாரிங்க..ஸாரி கோபப்படாதிங்க.." என ஆரம்பத்திலே அவள் மன்னிப்பு படலத்தை தொடங்கிவிட இருந்தும்
சாக்ஷியோ அப்போதும் விடாதவளாய் "ஹா நீங்க பேசுவிங்களா?? நீங்க ஊமைன்னு நினைச்சேன்" என வேண்டுமெனக் கூறிட.. சிரித்துவைத்தாள் மற்றையவள்..

"ஸாரிபா ..ஐம் ஸ்வேதா பெர்ஸ்ட் டைம்னால கொஞ்சம் நேர்வஸ்ஸா இருந்தேன் அதான் சைலென்ட்டா உங்கார்ந்துயிருந்தேன்..தப்பா நினைக்காதிங்க ஸாரி" என குழந்தை போல கெஞ்சுபவளை பார்க்கும் போது உதட்டில் சிறு புன்னகை அரும்பியது சாக்ஷிதாவிற்கு...

அவள் சிரிப்பை கண்டுகொண்டவளும் சிரித்துக் கொண்டே அவளுடன் பேசத் தொடங்கிவிட்டாள்..

சிறிதுநேரத்தில் இருவரும் ஒருத்தருக்கொருத்தர் நன்றாய் அறிமுகமாகிக் கொண்டனர்..

சாக்ஷியின் கரத்திலிருந்த பையை கண்டவளோ "என்ன கைல பேக்கோட வந்து இருக்க ஊரவிட்டு ஓடி வந்திட்டியா" என சிரித்துக் கொண்டே கேட்டவளை போலியாய் முறைக்க முயன்று முடியாதவள் தானும் சிரித்துக் கொண்டு

"ஊர் விட்டு எல்லாம் ஓடிவரல மேடம்...இன்னைக்கு மோர்னிங் தான் இங்க ரீச் ஆனேன் இனிதான் லேடிஸ் ஹாஸ்டல்ல சேரனும் என்று விளக்கமாய் கூறியவள் அவளிடம் " நீயும் இந்த ஊருக்கு புதுசா? ?? " எனக் கேட்டிட..

அவளோ"இல்ல இது என் சொந்த ஊர்தான் என் வீடு கூட இங்க கொஞ்சம் தள்ளித்தான் இருக்கு.." என்றாள்..

"அப்போ உனக்கு எந்த கஷ்டமும் இல்ல வந்து போக..எனக்கும் இந்த பக்கமா ஒரு ஹாஸ்டல் கிடைச்சா ஈஸியா இருக்கும் " என்றவளின் பேச்சை மறித்த..
ஸ்வேதாவோ "என்கூட தங்கிக்கிறீயா சாக்ஷி " என பட்டென்று கேட்டுவிட
சாக்ஷியோ தயங்கியவளாய் "இல்ல ஸ்வேதா உனக்கெதுக்கு சிரமம்" எனக் கூறி தன் மறுப்பை தெரிவித்தாள்...

ஸ்வேதாவும் அவள் தயக்கம் உணர்ந்தவள்.. "இதுல எனக்கென்ன சிரமம் சாக்ஷி..நீ என்கூட வந்தா ரொம்ப சந்தோஷப்படுவேன்..
அப்புறம் நீ பயப்புடாத ..என்வீட்ல சொல்லிக்கிற அளவுக்கு எனக்குனு சொந்தம் யாரும் இல்லப்பா.. நான் ஒரு சிங்கிள் லேடி தான்" என்று தனது கவலைகளை மறைத்து சிரிப்புடன் பேசியவளை பார்த்த சாக்ஷிக்கோ அவள் உள் மனவலி புரியாமல் இல்லை..

தாயையும் சகோதரர்களையும் ஒருவருடம் பிரிந்து வருவதற்கே ஏதோபோல் இருந்த அவளுக்கு இவளின் வலி எந்தளவு என்பது புரிய அவள் கரத்தை ஆறுதலாய் பற்றிக் கொண்டாள்..

ஸ்வேதாவோ சிரித்துக் கொண்டவள் தானும் அவள் கரம் பற்றியவள்..
இத்தனை நாளா தனியாவே இருந்துட்டேன்..இனி ப்ரெண்ட் ஆ நீ கிடைச்சியிருக்கன்னு தான் உரிமையோட கேக்குறேன்.. என்கூட தங்கிக்குறீயா " என்றிட அவளுக்கும் அதை மறுக்கமுடியாமல் தான் போனது..

அவளின் சம்மதம் கிடைத்ததும் சந்தோஷமாய் அவளுடன் தன் வீடு நோக்கிக் கிளம்பினாள்..

போகும் வழி முழுவதும் ஓயாது பேசியவளின் பேச்சிலே புரிந்தது அவளின் சந்தோஷ மனநிலை..

கண்டதும் காதல் போல இங்கும் கண்டதும் ஓர் நட்பு உருவாகித்தான் போனது..

……

மதியநேரவேளையில் ஹாஸ்பிடல் வந்த அஜய்யோ அந்த ஹாஸ்பிடலின் தலைமை மருத்துவரும் அவனின் தந்தை கிருஷ்ணதேவ்வின் நண்பருமான ராமின் அறை வாசலில் நின்றவன் "ஹாய் அங்கிள் உள்ளே வரலாமா" என அனுமதி கேட்டு நிற்க அவனைக்கண்டு புன்னகைத்தவர்..

"ஹாய் அஜய் ஹம்மின்..வா உட்காரு" என அவனை உள்அழைத்து அமரச் செய்தார்..

சிறு தலையசைப்புடன் அதை ஏற்றுக் கொண்டு அமர்ந்தவன்...
"ஸாரி அங்கிள் வேர்க் டைம்ல டிஸ்டர்ப் பண்ணிடேனா??" என்றவனின் கேள்வியில் புன்னகைத்தவர்..

"இது உனக்கும் சொந்தமான ஹாஸ்பிடல்..அஜய் நீ எப்போ வேணாம் இங்க வரலாம் போலாம்" என்றார்..

ஆம் அஜய்யின் தந்தை கிருஸ்ண தேவ் மற்றும் ராம் இருவருடைய முயற்சியில் உருவாக்கப்பட்டதே AAR ஹாஸ்பிடல் ஆகும்..

அவர் பதிலில் புன்னகைத்தவன்..
"ஸாரி அங்கிள் காலையில ப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு வந்ததுனால இங்க என்னால வர முடியல"என்றான் மன்னிப்பை யாசிக்கும் குரலில்..

"அதைத்தான் போன்ல சொல்லிடியப்பா விடு" என்றார் ராம்..

"அங்கிள் அனுவோட ட்ரீட்மெண்ட்க்கு ஒரு டாக்டர அனுப்ப சொன்னனே..அந்த விசயம் என்னாச்சு" என்றான்..

"ம்ம் ஆமா அஜய் நேத்து புது ட்ரெய்னிங்க வந்திருந்தாங்க அவங்களில் ஒருத்தங்கள செலெக்ட் பண்ணியிருக்கேன் இன்னும் ஒரு டூடேய்ஸ்ல அவங்கள அனுப்புறேன" என்றிட சரியென்றவன் சிறிது நேரம் அவருடன் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்ப முற்பட அவனைத் தடுத்தார் ராம்..

"அஜய் எத்தனை நாளைக்குடா இப்பிடி இருக்க போற உனக்குன்னு ஒரு லைஃப் அமைச்சிக்கோ" என்றவரைப் பார்த்து உதட்டோரம் ஒரு சின்ன சிரிப்புடன் பதிலேதுமின்றி அமைதியாய் விடை பெற்றுச் சென்றான் அஜய்தேவ்..

போகும் அவனைப் பார்த்திருந்தவர்
"உனக்கான மாற்றம் வரும் போது நீ மாறித் தானே ஆகனும் அஜய்..சீக்கிரமே உனக்கான மாற்றம் வரனும்" என்று மனதில் நினைத்து ஒரு பெருமூச்சை விட்டு தன் வேலையில் மூழ்கிப் போனார்.

........

ஸ்வேதாவின் அன்புக்கட்டளைக்கிணங்க அவள்வீட்டில் தங்கிய சாக்ஷியோ தாயிடமும் தகவலை கூறிட பார்வதிக்கும் அதில் முழு சம்மதமே..

மகள் கஷ்டப்படுவாளோ என்று கவலையோடு இருந்தவருக்கு இது பெரிதும் ஆறுதலை கொடுத்தது..அதனூடு ஸ்வேதாவின் நிலை கேட்டவர் அவளுக்காக கவலை கொண்ட போதிலும் இனி தாங்கள் அவளுக்கு எல்லாமுமாக இருக்க வேண்டும் என்பதை எண்ணிக் கொண்டவர் அதன்பின் அவளோடு பேசிப் பேசியே அவளோடு ஒன்றிப் போனார்..

அவர் மட்டுமல்ல அக்ஷி ஆரவ் இருவரும் கூட ஸ்வேதாவோடு நெருங்கிப் போனார்கள்..

இங்கு வந்த இரு நாட்களில் சாக்ஷியோடு பேசியதை விட இப்போதெல்லாம் ஸ்வேதாவுடன் பேசிய நேரமே அதிகமாகிப் போனது அவர்களுக்கு..

அலைபேசி உரையாடலிலே அங்கு அழகிய உறவுகள் மலர்ந்து போயின..

அடுத்த நாள் விடியலில் எழுந்து கொண்ட சாக்ஷியோ குளித்து முடித்து தயாராகி வந்த போதிலும் இன்னுமே தூக்கம் களையாது கட்டிலில் புரண்டு கொண்டிருந்த ஸ்வேதாவைக் கண்டவளோ தலையிலடித்துக் கொண்டாள்..

"கடவுளே இவ என்ன விட பெரிய கும்பகர்ணியா இருப்பா போலயே" என புலம்பிக் கொண்டவள் அவளை எழுப்பத் தொடங்கினாள்..

"ஸ்வேதா எழுந்திரிடி நேரமாச்சு பாரு முதல் நாளே லேட்ஆ போனா நல்லா இருக்காது எழுந்திரிடி" என எழுப்பியும் எழும்பாது..

"இன்னு ஒரு பை மினிட்ஸ் ப்ளீஸ்" என்று தூக்க கலக்கத்தில் கூறியவளை அதட்டி உருட்டி எழுப்பி தயாராக வைத்தவள் அவளை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடல் நோக்கிச் சென்றாள்..

.......

ஹாஸ்பிடலுக்குள் நுழைந்தவர்களுக்கு முதல் நாள் என்பதால் அவர்களுக்கென ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க அதில் அனைவரும் அமர்ந்திருந்தனர்..

முதலில் ராம் தன் பேச்சை தொடங்கியவராய் ஆரம்பித்தார்..

Hi everybody wellcome to our hospital என்று வரவேற்றவர் தங்கள் ஹாஸ்பிடல் பற்றியும் அதிலுள்ள விதிமுறைகளை பற்றியும் கூறியவர் பின் தலைமை மருத்துவராய் அவர்களது பணி சார்ந்த அறிவுரைகளையும் வழங்கினார்..

"உங்களுடைய அளப்பரிய சேவைகளை இங்குள்ள நோயாளிகளுக்கு செய்யனும் என்பதுதான் என்னுடைய எதிர்ப்பார்ப்பு அதை நீங்க பண்ணுவீங்கன்னு மனமார நம்புகிறேன்" என்றிட அனைவரும் ஆம் என்பது போல் பதிலளித்தனர்..

மேலும் " உங்க ஒவ்வொருத்தருக்கும் டியூட்டி டைம் போடப்பட்டிருக்கு அதன்படி உங்க வேலையை எப்போதும் ஈடுபாட்டோட செய்ங்க.. என்றவர் அங்கிருந்து கிளம்பு முன்னர் சாக்ஷியிடம் "மிஸ் சாக்ஷி நீங்க என்னோட வாங்க" என்று அவருடைய அறைக்கு செல்ல சாக்ஷியும் அவரை பின் தொடர்ந்து சென்றாள்.

அறைக்குள் நுழைந்தவர் அவளை அமரச் சொல்லியவர் அவளிடம் தன் பேச்சை தொடங்கினார்...

சாக்ஷி நான் உங்களுடைய டிடெய்ல்ஸ் எல்லாம் பார்த்தேன் ரொம்ப பிரில்லியன்ட் அன்ட் ஆக்டிவ் பெர்சன் ஆ இருக்கிங்க குட்.." என அவளை பாராட்டிட புன்னகையுடன் அவரிடம் நன்றியை கூறினாள்..

"மெடிகல் கேம்ப் அன்ட் சோஷியல் வேர்க்ஸ்னு ஏகப்பட்ட நல்ல விசயங்கள் செய்து இருங்கிங்க.. இப்பிடி தான் செய்ற வேலையில முழு ஈடுபாட்டோட செய்றவங்க பியூச்சர்ல நல்லா நிலைக்கு வருவீங்க" என அவளிடம் கூறியவர் பின்..

நேத்து உங்க பைல பார்க்கும் போதே உங்களுக்குனு ஒரு வேலையை மனசில பிக்ஸ் பண்ணிட்டேன்..அன்ட் நீங்களும் அதை கண்டிப்பா செய்விங்கன்னு நம்புறேன்" என அவளைப் பார்த்திட..

அவளும் "கண்டிப்பா ஸார் என்னால முடிஞ்சளவு செய்வேன்.." என உறுதியாய் கூறிட புன்னகைத்தவர் அவளிடம் ஒரு பைலை நீட்டிட அதை வாங்கிப் படித்து முடித்தவள் அவரைப் பார்க்க..

அவரோ "பேசென்ட் நேம் அனுபமா ஒருவருசமா கோமாவுல இருக்காங்க நிறைய டெஸ்ட் பண்ணியாச்சு நிறைய ட்ரீட் பண்ணியாச்சு எல்லாத்துலையும் மூளைல எந்தவிதமான ப்ரோப்ளமும் இல்லன்னு தான் ரிசல்ட் வருது..
எப்பிடி இந்த கேஸ்ஸ ஹேண்டில் பண்றதுன்னு தெரியல..
மூளையில பாதிப்புன்னா மருத்துவத்தால குணப்படுத்த ஏதோ ஒரு வழில முயற்சிக்கலாம் ஆனா இங்க பிரச்சனையே வேற பேர்சென்ட் எனக்கும் இந்த ஹாஸ்பிடலுக்கும் ரொம்ப வேண்டபட்டவங்க சோ அதனால தான் அவங்கள வீட்ல வெச்சி பார்த்துக்க ஒரு ஹவுஸ் சேர்ஜென்ட் அப்போய்ன்ட் பண்ணலாம்னு யோசிச்சேன்..

மருத்துவத்தால முடியாதத சைக்கோலஜிக்கலா ட்ரீட் பண்ணலாம்னு யோசிச்சேன்.. அதுக்கு பெஸ்ட் நீங்கன்னு எனக்கு தோணுது.. என்றவர் அவளின் பதிலை எதிர்பார்த்து அமர்ந்திருந்தார்..

"கண்டிப்பா என்னால முடிஞ்சளவு முயற்சி பண்ணுவேன் ஸார்" என நம்பிக்கையாய் உரைத்தவளின் பதில் மென்மையாய் புன்னகைத்தவர்..

"ஓகேமா நான் அவங்களுக்கு இன்போர்ம் பண்ணிடுறேன்..அப்புறம் இந்தாங்க இது அவங்க அட்ரெஸ்.." என ஒரு கார்டை அவளிடம் நீட்ட பெற்றுக் கொண்டாள்..

"அப்புறம் சாக்ஷி ஒரு த்ரீ மன்த்ஸ் பார்த்துக்கோங்க அதுக்கப்புறம் நீங்க இங்க ஹாஸ்பிடல்ல வேலை பார்த்துக்க நான் ஏற்பாடு பண்ணுறேன்..நீங்க புது ட்ரெய்னி உங்களுக்கும் வெளிநோயாளர்களையும் ட்ரீட் பண்ணா தான் இந்த பணிய நல்லவிதமா தொடரலாம்" என்றிட சரியென்று கூறியவள் அவரிடம் விடைபெற்று அங்கிருந்து வெளியேறினாள்..

.......

"ஹேய் நில்லுடி" என ஓட்டமும் நடையுமாக அவளை நோக்கி வந்த ஸ்வேதாவைக் கண்டவள்..

"ஹேய் பார்த்துடி..இப்போ எதுக்கு இந்த ஓட்டம் ஓடி வார" என்று கேட்டுவைக்க அதையெல்லாம் கண்டுகொள்ளாதவள்..

"என்ன விசயம்டி முதல் நாளே சீப் உன் கூட பேசியிருக்காரு" என்று கேட்க.. அவளிடம் அனைத்தையும் கூறினாள் சாக்ஷிதா..

"அச்சோ வந்த முதல் நாளே நம்மள பிரிச்சிட்டாங்களா...ம்ம் உன்கூட சேர்ந்து வேர்க் பண்ணலாம்னு நினைச்சேன்" என சோகம் இழையோடக் கூறியவள் கரத்தை பிடித்துக் கொண்டவள்..

"ஹேய் விடுடி அதான் நாம ஒரே வீட்லான இருக்கோம் ..இது கொஞ்சநேரம் தானே போகட்டும்..அப்புறம் மேடம் முதல் நாள் தான் என்கூட வாய் ஓயாம பேசினிங்க ஆனா அதுக்கப்புறம் எல்லாம் உனக்கு தான் ஆளுங்க கிடைச்சிட்டே" என அவள் தன் தாய் தங்கை தம்பியோடு பேசுவதை கூறிட..

அதில் முகம் மலர்ந்தவள் "ஆமா ஆமா அதான் எனக்குனு மூனு ஜீவன்கள் இருக்கே...நீ போனா போ நான் அவங்க கூட டைம் ஷ்பென்ட் பண்ணிக்குறேன்" என்றவளை அடிப்பாவி எனும் விதமாய் பார்த்து வைத்தாள் சாக்ஷிதா...

"சரி நீ சொன்னா அட்ரெஸ் இங்க இருந்து கொஞ்சம் தொலைவா இருக்கு..உனக்கு போய் வாரது சிரமமா இருக்குமே" என்க..

"ம்ம் பஸ்ல போய் மேனேஜ் பண்ணிக்குவேன் அதவிடு.." என்றாள்..

"ம்ம் நீ பஸ்ல எல்லாம் போகத் தேவையில்லை உன்கிட்ட தான் லைசன்ஸ் இருக்கு தானே..சோ என் வண்டியில போ" என்றவள் அவள் ஏதோ மறுப்பு கூற முன் "எனக்கு வீட்லயிருந்து ஹாஸ்பிடல் பக்கம் தான் நான் நடந்து கூட வந்துடுவேன் நீ ஸ்கூட்டில போ...போற" என முடிவாய் முடித்திட அதற்கு மேல் பேசமுடியாது அமைதியாகிப் போனாள்..

.....

அடுத்தநாள் காலை இருவரும் கிளம்பிட ஸ்வேதாவிடம் விடைபெற்று அவள் வண்டியை கிளப்பிச் சென்றாள்..

அந்த சாலையில் வண்டியில் சென்று கொண்டிருந்தவளுக்கோ திடீரென்று வண்டியில் ஏற்பட்ட கோளாறால் கட்டுப்பாட்டை இழந்திட வண்டியை நிறுத்த முடியாது தடுமாறியவளோ அங்கே வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரின் மீது மோதி கீழே சரிந்திட தானும் வீழ்ந்தாள் சாக்ஷிதா..

நல்ல வேளையாய் அதிக வேகத்தில் வராது மிதமான வேகத்தில் வந்ததாலும் தலைக்கவசம் அணிந்திருந்ததாலும் பெரிதாய் அடியேதும் படாவிடினும் கீழே வீழ்ந்ததில் ஆங்காங்கே கைகளில் சிறுசிராய்ப்புகள் ஏற்பட்டிருக்க மெல்லத் தடுமாறியபடி எழுந்து நின்றாள்..

அவள் கீழே வீழ்ந்ததைக் கண்டதும் சிலர் அங்கே கூடிட ஒரு பெணோ தண்ணீரை கொடுத்து குடிக்க வைத்திட அருந்திக் கொண்டிருந்தவள் பின்னே வந்து நின்றவனோ கத்தத் தொடங்கினான்..

" ஹேய் இடியட் அறிவில்ல நீ விழுந்து சாக ஏன் வண்டிதானா கிடைச்சிச்சா.. ஒழுங்கா வண்டி ஓட்டத் தெரியல..சும்மா நிற்குற வண்டிலையே இப்பிடி கொண்டு மோதுற உனக்கெல்லாம் யாரு லைசன்ஸ் கொடுத்தா இடியட்..படிக்குற வயசில வண்டிய எடுத்துகிட்டு ஊர் சுத்த வேண்டியது பிறகு இப்பிடி ஆகி சாக வேண்டியது.. என்றவனின் திட்டுக்கு என்ன பதில் கூறுவது எனத் தெரியாது திருதிருவென முழித்து நின்றவளுக்கு அவன் முகம் பார்க்கவும் பயமாகவே இருந்தது.. எங்கே திரும்பினாள் அடித்துவிடுவானோ...இத்தனை பேச்சு பேசுபவன் அடிக்கவும் கூடும் என்றே அவனுக்கு முதுகு காட்டி குனிந்து நின்றாள்..

அவனுக்கோ ஏற்கனவே இருந்த கோபம் அவள் அமைதியில் மேலும் எகிறிட..
"ஹேய் உன்னதான் காது கேக்குதில்லையா இங்க பாரு" என்றிட இதற்கு மேல் அமைதியாய் இருப்பது சரியில்லை என்றுணர்ந்தவளும் தயக்கத்துடன்அவன் பக்கம் திரும்பியவள்..

"ஸாரி ஸார் என்னோட மிஸ்டேக் தான் வண்டியில் ஏதோ ப்ரோப்ளமாகிட்டு அதான் கன்ட்ரோல் பண்ண முடியல" என தன் தப்பிற்கு மன்னிப்பை வேண்டி அவன் முகம் நோக்கி நிமிர்ந்தவள் விழிகளோடு சிக்கிக் கொண்டது அவன் விழிகள்..

என்னவென்று சொல்லமுடியா ஓர் உணர்வில் அவன் சிக்கிக் கொள்ள அவளோ அவன் அசையா பார்வை உணர்ந்து எங்கு இன்னும் கோபம் கொள்வானோ எனப் பயந்தவளாய் "ஸாரி ஸார்...தப்பு என்மேல தான் உங்க கார்ல ஏதும் டேமேஜ்னா அதுக்கு நான் பணம் கொடுக்கிறேன்..ப்ளீஸ் இத பெருசுபடுத்த வேணாம்" என கெஞ்சலாய் கேட்டிட ..அதில் மீண்டவன் ஏதோ பேச வாயெடுக்கும் முன்னே அங்கு வந்த கிஷோரோ நண்பனை பிடித்துக் கொண்டவன் அவள்புறம் திரும்பி .."இட்ஸ் ஓகே இனி கவனமா போங்க" என்றுவிட்டு நண்பனை அழைத்துக் கொண்டு வண்டியில் ஏறி வண்டியை செலுத்திட..

அஜய்யின் விழிகளோ அவன் விம்பம் அவன்கண்ணை விட்டு மறையும் வரை அவளிருந்த திசை பக்கமே நிலைத்திருந்தது...

தொடரும்...
 
Status
Not open for further replies.
Top