அத்தியாயம் 8
இந்த கேசை வெற்றிகரமாக முடித்து அவனிடம் சொல்லலாம் என்று தான் நினைத்திருந்தாள். ஆனால் ஒரு குற்றவாளி இடமே உண்மையை கண்டுபிடிக்க சொல்லி வந்த தன் மடத்தனத்தை நினைத்து அவளால் எதையுமே சிந்திக்க முடியவில்லை .அப்போது நீவேஷீடம் இருந்து ஒரு அழைப்பு வர முதலில் தவிர்த்தவள் பின்பு எடுத்தால் ,” இளா நீ எங்கே”, என்று பதட்டமாக வினாவ முதலில் கொதித்து எழப்போனவள், இதுவரை அவனின் நிதானமான நடிப்பு நினைவு வர ,ஒரு முடிவுடன் எதுவும் அறியாதவாறு,” இங்கேதான் விடுதியில் நாளை மாலை கிளம்பி விடுவேன், எனக்கு சற்று சோர்வாக இருக்கிறது ,நேரில் வந்து பேசிக் கொள்வோம்”, என்று பதிலளிக்க “, நிவேஷ் அந்த குரலில் இருந்த உண்மையான சோர்வில், அவள் மேல் அவன் வைத்திருந்த உண்மையான காதலின் சாட்சி அவளின் வயிற்றில் வளர்வதை அறிந்து கொண்டவன்,” சரி நான் வேண்டுமானால் கிளம்பி வரவா”, என்றான் சிறு எதிர்பார்ப்புடன் அவன் கூற வந்ததை மறந்து, ஒருவேளை அவன் கூறியிருந்தால் அவள் அதன் உண்மையான தன்மையை ஆராய்ந்து பார்த்து இருந்திருப்பாள் . ஆனால் விதி யாரை விட்டது ,”அது எல்லாம் ஒன்றும் இல்லை, நாளை நம் வாழ்வில் இன்றியமையாத நாளாக இருக்க வேண்டும், ஆதலால் நானே வருகிறேன் உங்களை பார்க்க விலைமதிப்பில்லாத பரிசுடன்”, என்று முடித்துவிட்டு தொடர்பை அனைத்து இருந்தாள் .
இருவரும் இரு பெரும் பொருள் வேறுபாடு உடன் பேசினர் ஆனால் எல்லா சாட்சியங்களையும் மீண்டும் ஆராய்ந்தவள் அதில் நிகேஷ் குடும்பத்தினரின் உண்மையான நிலையும் அவளுக்கு தெரிந்தது. ஆனால் சுகனின் ஈடுப்பாட்டை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. அனைத்து சாட்சியங்களும் நிவேஷீக்கு எதிர்ராகவே அமைந்திருந்தது. அனைத்தையிம் எடுத்துக் கொண்டு அவள் காவல் படையோடு கிளம்ப ஆயூத்தமாக சுகனிடம் இருந்து அவளுக்கு அழைப்பு வந்தது .அவளுக்கு முதலில் பிரமிப்பு, இத்தனை நாட்களில் ஒரு நாள் கூட அவன் அவளை நிமிர்ந்து பார்த்தது கூட கிடையாது . அழைப்பை ஏற்றவள் இளா மா ,நான் சுகன் பேசுகிறேன்”, என்றான்.ஆனால் அவளால் அவனின் நிலையின் தன்மையை அறிய முடியவில்லை. அனைத்து உணர்ச்சிகளையும் துடைக்கப்பட்ட குரல் .”சொல்லுங்கள் “, என்றால் தன் பதவிக்குரிய மிடுக்குடன் .அந்த முதல் குறலிலேயே அவளை திமிரின் பிறப்பிடமாக முத்திரை வைத்து விட்டான் .
“அது வந்து மா, நீ டெல்லியில் இருந்து கிளம்பி விட்டாயா”, என்றான் இல்லாத பொறுமையுடன் . “ஆம்”, என்றால் மிடுக்காக ,”நீ எதற்காக கிளம்பி வருகிறாய் என்று எனக்கு தெரியும் ,ஆனால் நீ அவனை ஒன்றும் சொய்வதற்கு நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் மரியாதையாக சாட்சியங்களை என்னிடம் ஒப்படைத்துவிட்டு உன் பணியை துரத்து அவனுக்கு மனைவியாக மட்டும் நீ வரவேண்டும் ,அப்படி இல்லை என்றால் “, என்றான் கடுமையாக. “என்ன ,என்னை இவ்வளவு தைரியமாக மிரட்டுகிறீர்கள் ,ஆமாம் யார் நீங்கள் முதலில் அந்தக் கயவனின் நண்பன் அல்லவா, நீங்களும் அப்படித்தானே பேசுவீர்கள் “,என்றால் எள்ளலாக.” மிக நல்லது உன் மேல் உயிரையே வைத்திருக்கும் ஜீவன் மீது நீ கொண்ட காதலை பார்க்கும்போது மெய் சிலிர்த்துப் போகிறது”, என்றான் அவனும் அதே எள்ளலுடன் ,பின்பு அவனே தொடர்ந்து ,”இறுதியாக கேட்கிறேன் சாட்சியங்களையும் ஆதாரங்களையும் என்னிடம் கொடுத்துவிட்டு, நீ அவனுடன் வேறு தேசம் சென்று வாழ போகிறாயா இல்லையா”, என்றவனை இடை மறித்து, “ இல்லை என்றால் என்ன செய்து விடுவீர்கள்”, என்றால் ஆக்ரோஷமாக .
“அவன் என் உயிர் போன்றவன் ,அவனைக் காக்க நான் எதையும் செய்வேன், நீ அவனை நெருங்கக் கூட முடியாது, உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள்”, என்று முடித்துவிட்டு கைபேசியை அணைத்து விட்டான். இவள் உடனே ஜிபிஎஸ் மூலம் நிவேஷ் இருப்பிடத்தை ட்ராக் செய்ய ,அது அவர்கள் வீட்டையே காட்ட ,உடனே அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு விறைய செய்தால் ,அவளும் அவன் இருப்பிடம் நோக்கி விமானத்தின் மூலம் அங்கே சென்றால், பின்பு அங்கிருந்து அவளுடைய வாகனத்தில் ஏரி அவளுக்கு ஒரு தெரியாத நம்பரில் இருந்து அழைப்பு வந்தது, அதை உயிர் பித்தவள்,” இளா மா நான் உன்னை விட்டுப் போகிறேன், நீ தயவு செய்து இங்கே இருக்காதே ,அங்கே திருச்சியில் “,என்று முடித்தும் முடிக்காமல் அவன் திணற, “போதும் நிறுத்துங்கள் உங்கள் நடிப்பைப், நான் எதற்காக தலைமறைவாக வாழ வேண்டும் ,நீ ஒரு கயவன் ஒரு பெண் பித்தனைய நான் காதலித்தேன், எனக்கே என்மேல் கோபமாக வருகிறது, உனக்குத் என் கையால் தான் அனைத்தும் ,வருகிறேன் உன் இருப்பிடத்திற்கு”, என்றால் அகங்காரத்துடன் .”இளா மா , இல்லைடா எதையும் கூறும் நிலையில் நான் இல்லை ,தயவு செய்து நீயும் குழந்தையும்”, என்று அவன் திணறுவதற்கும், இவள் வந்த வாகனம் எதிரில் அதிவேகத்துடன் வந்த லாரியுடன் மொதுவதற்கும் சரியாக இருந்தது .
அதன் பின்பு அவள் கண்விழித்தபோது அவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள். ஒரு பார்வையை அவள் சுழல விட அங்கே நிவேஷ்ன் சாயலில் ஒருவனைக் கண்டால்,” நீங்கள்”, என்று அவள் மெல்ல வினாவ, அவள் குரலில் அவளை திரும்பிப் பார்த்தவன் ,அவள் அருகில் வர,” நான் திவேஷ் ,அவனின் தம்பி என்று சொல்ல மனசு வரவில்லை என்னை நீங்கள் உங்களின் பாதுகாவலனாக ஏற்றுக் கொள்ளுங்கள்”, என்றான் அவன் பரிவுடன் . பிறகு அவள் வயிற்றைத் தடவிப் பார்த்துக்கொண்வளுக்கு, அதில் ஏதோ அவளுக்கு புரிய ,அவனை நிமிர்ந்து பார்க்க ,”தெய்வம் யாரை விட்டு வைத்தது ,எப்போது அவன் உயிர் அவனைவிட்டு பிரிந்ததோ, அப்போது அவன் குழந்தையையும் அவன் எடுத்துக் கொண்டான்”, என்றான் வேதனையாக .அவள் மௌனமாக கண்ணீர் வடித்தாள்..திரும்பவும் தன் விதி தன்னை அனாதையாக ஆக்கியதை நினைத்து. அவன் செய்த தவறுக்கு அவனுக்கு தண்டனை வாங்கித்தர நினைத்தாலே தவிர ,தன் குழந்தையை பெற்றுக் கொள்ளவே ஆசைப்பட்டால், நல்ல குழந்தையாக வளர்க்க நினைத்தால் , தன் தாய் தன்னை முறையற்று பெற்று விட்டதை போல, அவள் அந்த குழந்தையை விட நினைக்கவில்லை .
முதலில் திவேஷ் உடன் செல்ல மறுத்தவள்,தீவேஷின் வாதங்களையிம் அதிலிருக்கும் அன்பையும் புரிந்து கொண்டு அவனுடன் சென்றாள் .அதற்கு மற்றொரு காரணம் நீவேஷீன் மேல் இருந்த குற்றம் அனைத்தையும் அவன் கோர விபத்தில் இறந்தை காரணம் காட்டி முடித்திருந்தனர். அதுமட்டுமல்லாமல் ,சுகன் அவன் பேசிய பேச்சு என்ன ,ஆனால் அவனைப் பற்றி தீவேஷுக்கு ஒன்றும் தெரியவில்லை. நிவேஷ் பயணித்த கார் பெட்ரோல் டேங்க் வெடித்து அவன் இறந்ததால் அவன் அஸ்தி மட்டுமே டெல்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருக்க ,அதை பெற கூட சுகன் வரவில்லை ,என்பதே அவளை சிந்திக்க வைத்தது .அவள் கண்விழித்தபோது அவளுக்கு புரிந்து விட்டது, அவள் தென் இந்தியாவுக்கு வந்து விட்டது .அவள் அதைப் பற்றி கேட்டபோது திவேஷ் அவளுக்குத் தெரிந்ததை கூறினான் .
அவன் அந்த சம்பவம் நடக்கும் முன்பே அவனுக்கு ஒரு தெரியாத நம்பரிலிருந்து அழைப்பு வந்தது. அதில் ஒரு ஆண் பேசினான் .” உன் அண்ணன்னால் பாதிக்கப்பட்ட பேதையை வந்து காப்பாற்றி செல், அவள் உன் அண்ணனின் மகவை சுமக்கிறாள் ,இங்கே இருந்து இன்னும் சட்டம் ஒழுங்கு என்று கூறிக்கொண்டே இருந்தாள் என்றால் அவள் உயிருக்கு மற்றும் உடமைக்கு ஆபத்து ,இதை நான் ஏன் உன்னிடம் கூறிக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறாயா ,உன் அண்ணன் உயிருடன் இல்லை ,அதனால் அவன் குழந்தையாவது காப்பாற்றிக் கொள்”, என்று கூறி வைத்து விட்டான். உங்கள் இருப்பிடமும் அவன்தான் குறுந்தகவல் அனுப்பி இருந்தான். நான் வந்த போது அனைத்தும் முடிந்திருந்தது .நான் நீங்கள் அணுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு வந்தபோது இரவு 1 மணி அப்போது உங்கள் அறையை இருவர் நோட்டம் விடுவதை பார்த்தேன் ,அவர்களை பார்த்தாலே தெரிந்தது ஏதோ சரியில்லை என்று ,அவர்கள் கண்ணை குத்தி யாரும் அறியாமல் அங்கே இருந்த எனக்கு தெரிந்த சில நல்ல உள்ளங்களால் உங்களை இங்கே கொண்டுவர முடிந்தது “ என்றான். அவன் கூறியதையும் நடந்த அனைத்தையும் நினைவுபடுத்தியவள், அவள் மீண்டும் தன்னை முழுமையாக தயார் படுத்தி இதற்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று சாட்சிய ஆதாரங்களை திரட்டி பின்னரே,இப்பதவியில் அமரலாம் என்று முடிவு எடுத்தால் .அவள் அதற்காகத்தான் தீவேஷுடன் அவ்வப்போது வெளியிடங்களுக்கு செல்வாள். அப்படி செல்லும் வேலையில் தான் ஒரு நாள் அவள் பலவீனப்பட்டு மயக்கம் வர ,அவன் அவளைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனை விறைந்தான் அதையே புகைப்படமாக எடுத்து அந்த புகைப்படத்தால் தான் இன்று அவளுக்கும் மதனுக்கும் திருமணம் நடைபெற காரணமாக போயிற்று.
ஆனால் அவள் மறுபடியும் பணிக்கு அமர தற்போது என்ன வில்லை, ஏனென்றால் அவள் பட்ட அடிகள் அத்தனை ,என்னதான் அவள் இடம் மாறி , வந்தாலும் அந்த நிவேஷ் பெயர் அவள் பெயருடன் இழிவு பட்டிருக்க அவளுக்கு திருப்பி அந்த பதவியில் அமர மனது இடம் தரவில்லை .அதனால்தான் காலையில் அவன் கூறும் போது அவள் எவ்வளவோ மறுத்து பார்த்தாள்.
அனைத்தையும் முடித்து மதனின் தாயும், அத்தை மாமா வீடு திரும்பும் வேளையில், காரில் சுகந்தா முகம் வாடி இருப்பதை பார்த்த சிங்கமுத்து, ஏன் வாடி இருக்கிறாய் “, என்று கேட்டார் அதற்கு சுகந்தா,” இப்போது என் முதல் பெண் குழந்தை இருந்திருந்தால், அவளுக்கும் இப்படித்தானே திருமணம் முடித்து அனுப்பி வைத்து இருந்திருப்பேன் “,என்றால் கவலையாக. இதைக் கேட்டுக் கொண்டிருந்த வைதேகி, “என்ன பேச்சு இது அதுவும் யாரின் முன்னிலையில் ,அவர் உன்னை முழுமனதோடு ஏற்றுக் கொண்டுவிட்டார், உன் அண்ணன் செய்த பெருந்தவறு ,ஆனால் விதியின் செயலால் அந்த குழந்தை இறந்து போனதை, நீ அறிவாய் அல்லவா பின் ஏன் இப்படி பேசுகிறாய் “,என்றார் கோபமாக. “இல்லை அண்ணி இல்லை, என் குழந்தை இறக்க வில்லை என் உள்மனது கூறுகிறது, என் குழந்தை எங்கோ இன்றும் நலமாக வாழ்கிறது ,என் என் பிறவி முடிவதற்குள் அதை நிச்சயமாக நான் பார்த்து விடுவேன்”, என்றார் ஒரு துடிப்புடன்.
“ அப்படி ஒருவேளை அந்த குழந்தை உயிரோடு இருந்தால் நிச்சயம் அதை உனக்கு நான் கண்டுபிடித்து தருவேன் என்னை முழுதாக நம்பிக்கை அல்லவா “,என்றார் சிங்கமுத்து .' உங்களை நம்பாமல் யாரை நம்புவேன்”, என்றார் தீர்க்கமாக. “பின் கவலையை விடு ,மாப்பிள்ளை எப்படியிம் பதவி ஏற்று விடுவான் பின் அவனிடம் பக்குவமாகப் பேசி இது என்ன என்று நான் பார்க்க சொல்கிறேன் ,அதுவரை பொறுமையாக இரு ,அதுவரை ஐனாரிடம் எதையும் சொல்லாதே ,உன்னை கெஞ்சி கேட்கிறேன் ,அவன் இதற்கு சம்மதிக்க மாட்டான் ,ஏற்கனவே மாப்பிள்ளை செய்த செயலால் அவன் மிகவும் வருத்தமாக இருக்கிறான், நீயும் அவனை வருத்தாதே”, என்றார் தன் நண்பனின் மீது உண்மையான அக்கறையுடன்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த வைதேகி மிகவும் கலங்கிப் போனார். ஏனென்றால் தன் கணவனின் உண்மையான முகம் அவருக்கு தானே தெரியும் .
தொடரும்