இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் [email protected] அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

என்னை கொஞ்சும் காதல் மழையே - கருத்துத்திரி

ஆத்மிகா இன்னும் நாக்க புடுங்கிற போல செருப்பால அடிக்கிற போல திட்டினாலும் கார்த்திக் போல ஆளுகளுக்கு ரோஷம் இல்லை. மானமும் இல்லை. இதே நிலமை இவனுக்கு வந்திருந்தால் இவனுக்கு தெரியும். இவன் அப்பனே கடைஞ்செடுத்த அயோக்கியன். இதுல பொறுக்கி அப்பன் தறுதலை புள்ளைக்கு.. திமிர் வேற.. மானங் கெட்டவனுங்க
 
அப்பாவும் மகனுக்கும் என்னவோ சீக்ரட் டோக்? என்னவா இருக்கும். அதுவும் ஆத்மிகாவை பற்றி!
 
ஆதிரா, இப்படியான நேரத்தில் எல்லாம் வெறுப்பாக விரக்தியாக இருந்தாலும்..இந்த மாதிரி சமயத்தில் தான் தைரியம் உறுதி இருக்கனும். கண்ட கண்ட சைக்கோஸ் பெரிய சாதனை செய்த போல நடமாடும் போது.. தப்பே செய்யாத உன்னை போல பொண்ணுங்க எதுக்கு தப்பான முடிவு எடுக்க நினைக்கிறீங்க. அப்படினா நமக்கு இருக்கிற முகம் மட்டும் தான் அழகு னு ஆண்களை போல உன்னை போல் பெண்களும் நினைக்கிறீங்களா? நம்ம முகம் என்றது பார்க்க, சுவாசிக்க , மூளையை பயன்படுத்தவும் தசைகளை பாதுகாக்க படைக்கபட்டது மட்டுமே! அழகு என்றது மனதில் இருக்கின்றது என்பது பெண்களுக்கும் புரிவதில்லை. வெறும் தோலுக்கு இருக்கிற முக்கியத்துவம் மனதிற்கு இல்ல போல!
 
ஆஹான்.. ஒரு மாதிரி இரண்டு ஜோடிகளும் திருமணத்தில் இணைந்து விட்டனர்
 
அருமையான கதை ஆனால் ஒரு சிறு சந்தேகம். ஆதிரா முகத்தை ஆத்மிகாவிற்கு பிளாஸ்ரிக் சர்ஜரி செய்தது ஓகே. ஆனால் அதை 3 வருடமாக யாருக்கும் பொருத்தல ! எதுக்கு வெறுமன வைச்சிருந்தாங்க. அதில் தோல் பாதிப்பு ஏதும் வர வாய்ப்பு இல்லையா?
 
அருமையான சுவாரஸ்யமான கதை!. சிறந்த கதையை கொடுத்தமைக்கு ஆசிரிய தோழிக்கு பாராட்டுகளும் மனம் நிறைந்த வாழ்த்துகளும்.!
 
Top