இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் [email protected] அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

ஊரு விட்டு ஊரு வந்து – முன்னோட்டம்

காதல் பூக்களே, 🌹
இந்த முன்னோட்டம், மலரும் என் காதல் மலரின் சின்னஞ்சிறு இதழ்கள் மட்டுமே.
காதலர் தினத்திலிருந்து என் சுந்தர தேசத்து மலரும் மெல்ல மெல்ல தோட்டத்தின் மற்ற மலர்களுடன் மலர்ந்து 💐சாரலாய் நம் சாரலில் மணம் பரப்பும். அதுவரை காதலாய் காத்திருங்கள். 💕

ஊரு விட்டு ஊரு வந்து – முன்னோட்டம்நாளை பரீட்சை என்பதால் இப்பொழுது தான் தன் மனம் உதைக்க புத்தகங்களையும் நோட்டுகளையும் விரித்து அதன் எதிரில் வந்து அமர்ந்திருந்த ஈஸ்வரியின் அருகில் கோபமாக வந்து நின்றாள் ஹர்ஷி.

"ஏன்டி நேனு உங்கிட்ட ஐடியா சொல்லுன் சொன்னா நீ படிக்கிற?"

"ஹ்ம்ம், ஐடியா எல்லாம் நான் விக்கிறதில்ல. வேணும்ன்னா போர்த் யூனிட்ல டௌட் கேளு, அவங்க உனக்கு உடனே சொல்லுவாங்க. மத்தபடி ம்ஹும்ம் எதுவும் பேச மாட்டாங்க."

"ஹ்ம்ம், பார்க்கலாம் பார்க்கலாம். ஆகாசம் அண்டே அன்த ஈசி காது கதா? தூரங்கா உன்டதி. கைக்கு சிக்கடம் கஷ்டம்.”

அவளின் சொல்லும் மனமும் ஈஸ்வரிக்குப் புரிந்தாலும் ஆகாஷைத் தெரிந்தவள் என்பதால், "ஹர்ஷி படிப்பைத் தாண்டி ஆகாஷ் வேற எதுக்கும் உன்னை பேச விட மாட்டான். நீ தேவை இல்லாத வேலை செய்யாத. எதுன்னாலும் எக்ஸாம் முடிஞ்சு பேசலாம். வா டி படிக்கலாம்."

அவள் சொன்னதை மனதில் ஒரு நிமிடம் ஓட்டிப் பார்த்தவளுக்கு சட்டென ஒரு யோசனை மின்னியது. அதில் அவளின் கனவுகளெல்லாம் கலைந்து அவளின் அந்தி வானம் வண்ணம் பூசிக் கொண்டது.

ஈஸ்வரி இன்னும் இவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, "உண்டு வே, நாக்கு இப்புடே ஒக்க மன்சி ஐடியா வச்சிந்தி." என்றாள்.

"நாக்கு மூக்கு எல்லாம் உனக்கு வரும், ஆனா M2 வருமா டி? நாளைக்கு பரீட்சைக்கு படிக்க வா டி. இல்ல என்னையாச்சும் படிக்க விடு. அப்ப தான் என்னால நைட்க்கு சொல்லித் தர முடியும்."

"இனி நீ சொல்லித் தர வேண்டாம். நேனே சூஸ்குண்டா." என்றவள் இழுத்து போர்த்தி படுத்துக் கொண்டாள்.

"ஏய், என்ன டி படுத்துட்ட, நாளைக்கு எக்ஸாம் இருக்கு?"

"இனி எல்லா எக்ஸாமுக்கும் தூங்கினா, உங்க ஆகாஷம் தானாவே நா தக்கற வரும்" என்றவள் ஏதோ முடிவுடன் நிம்மதியான மன நிலையில் தூங்கிப் போனாள்.

"தூங்கினா வருவானா? என்னவோ முடிவு பண்ணிட்டா, இனி பாவம் ஆகாஷ். ஆந்திரால தான் அவன் எதிர்காலம்ன்னு தெரியாம எந்த புக்குக்குள்ள மண்டைய விட்டுட்டு இருக்காங்களோ." என்று எண்ணியபடி தன் புத்தகத்தில் மூழ்கிப் போனாள்.

அவள் சொல்லியதற்கு ஒரு சதவீதமும் மாற்றமின்றி அவன் தன் உலகமே இதனுள் தான் உள்ளது என்பது போல் அவன் அறையில் படித்துக் கொண்டிருந்தான்.


**********************************************************************************************************************************************************************


கொண்டாட்டமும் குதூகலமுமாக ஹர்ஷி கிளம்பிக் கொண்டிருக்க ஈஸ்வரியோ எள்ளும் கொள்ளும் வெடிக்க முணுமுணுத்த வண்ணம் நின்று கொண்டிருந்தாள்.

"ஏன் டி உனக்குக் கொஞ்சமும் கவலையே இல்லையா டி? எனக்கு பயமா இருக்கு. உன் ஆகாசம் இன்னைக்கு செவ்வானமா சும்மா தக தகன்னு இருக்கும். ஆனா நீ என்னவோ இப்ப ஆகாஷ் உன்னை கொஞ்சக் கூப்பிட்ட மாதிரி கிளம்பிகிட்டு இருக்க?"

"ஹ்ம்ம் இன்கா ஒக்க தரம் செப்பு? கொஞ்சல்?" என்றபடி அவளை நோக்கித் திரும்பி சில பறக்கும் முத்தங்களைப் பறக்க விட்டவள், "கொஞ்சல்கும் கூட கூப்பிடுவான். வெயிட் அண்ட் ஸீ." என்று சொன்னபடி மீண்டும் ஒரு முறை தன் அலங்காரத்தைக் கண்ணாடியில் நோட்டமிட்டாள்.

"இந்த ஹேர் ஸ்டைல் ஓகேனா?" ஈஸ்வரியைப் பார்க்க, அவளோ பத்ரகாளியாய் அறையின் வாசலில் நின்றிருந்தாள்.

"ஓகே ஓகே கூல், நேனு ரெடி. செப்பல் போட்டுட்டு வர்றேன்." என்றபடி வேகமாக கிளம்பினாள்.

ஒரு வழியாக விடுதியிலிருந்து ஆகாஷைக் காண கல்லூரி கேன்டீன் நோக்கி நடக்கத் தொடங்கினர்.

அறையிலிருந்து வெளியில் வந்தவள் முதலில் ஈஸ்வரியிடம், "நீக்கு எதுக்கு டென்ஷன்? நா பேசுவேன் ஆகாஷ் கிட்ட. நீ பயப்படாத." என்றாள்.

"எனக்கு பயம் ஆகாஷ் பேசுறதுக்கு இல்ல. நீ பேசுறியே ஒரு மொழி அதுக்குத் தான். ஏன்டி எப்பதான் திருத்தமா தமிழ் பேசுவ? இன்னும் தலுங்குலயே நலுங்கு வைக்கிற." என்று காய்ந்தாள்.

"என் மேல கோபம் எதுக்கு வே? நீ இப்புடு சூடு, ஆகாஷ் அக்கட எந்த ஹாட்கா உன்ட்டாரோ, தப்பு தப்பு உன் ஆகாஷ் எவ்ளவு ஹாட்டா இருப்பான் பாரு." என்றவள் மனதில் பயம் மலையளவு இருந்தாலும் அதைக் கடுகளவாக மாற்றியது அவன் மேலான காதலும் அது தரும் நம்பிக்கையும்.

"ஆனாலும் உன் தைரியம், ஹ்ம்ம் ஆகாஷ் லக்கி தான். என்ன அந்த படிப்ஸ்க்கு இது எப்பப் புரியுமோ?"

"அவன்க்கு புரியும் ஆனா என்னவோ சம்திங் சம்திங் இருக்கு."

"சம்திங் சம்திங்? ஓஹ் சித்தார்த் திரிஷா.. அது சரி." என்று சொன்னவள் முகத்திலும் நீண்ட புன்னகை.

இருவரும் சிரித்த முகமாகப் பேசியபடியே கேன்டீனுக்குள் நுழைய ஆகாஷ் இவர்களுக்கு முன்னமே வந்து இவர்களின் வழக்கமான இருக்கை ஒன்றில் அமர்ந்திருந்தான்.

இருவரும் சென்று அருகில் அமர ஆகாஷின் பார்வை மொத்தமும் ஹர்ஷிதாவின் மேல் மட்டுமே.

ஆனால் அவன் வாயிலிருந்து வந்த அம்புகள் என்னவோ ஈஸ்வரியைத் தான் முதலில் தாக்கியது.

"ஈஸ்வரி, இன்னைக்கு ரிசல்ட் வந்துடுச்சு பார்த்துட்ட தானே? இல்ல எங்கிட்ட இருக்க உன் ரிசல்ட் பேப்பர் வேணுமா?" வார்த்தையின் கூர்மை இதயத்தைத் தைத்தாலும் முகம் முழுவதும் புன்னகையாய் அவன் முன் அமர்ந்திருந்தாள் ஹர்ஷி.

"ஹ்ம்ம், பார்த்துட்டோம் ஆகாஷ்."

"இந்த ரிசல்ட்க்கு என்ன அர்த்தம்ன்னு தெரியுமா? இல்ல நானே சொல்லட்டுமா? இப்படி மொத்தமா வாஷ் அவுட் ஆகுற அளவுக்கு கஷ்டம்ன்னா என் கிட்ட கேட்டிருக்கலாமே?"

"அப்படி இல்ல ஆகாஷ். " என்றவள் மேலும் ஏதோ சொல்ல வர அவளை தன் ஒற்றைக் கை நீட்டித் தடுத்தான் ஆகாஷ்.

"உன் ரிசல்ட் நல்லா தானே இருக்கு. நீ ஏன் பதில் சொல்லுற? மேடம் இனி மீதி பதில் சொல்லுவாங்க" என்றவன் பார்வை இப்போது மொத்தமாக ஹர்ஷியைத் தாக்கியது.

"அன்னிக்கி 'நா பேசமாட்டேன்' அன்னாவு? தரவாத்தா நேனு, ப்ச் , அப்புறம் நா எப்டி கேப்பேன்." என்றவள் பதில் பார்வை அவனை விட்டு சிறிதும் அகலவில்லை.

அவளின் பார்வையில் இருந்த குற்றச்சாட்டும் அவளின் பொங்கித் தழும்பும் காதலும் அவன் அறிந்தாலும் அவளின் வாய் வழி கேட்டறிய அவன் என்றுமே அனுமதிக்க மாட்டான்.
 
Top