இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் [email protected] அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

'உயிரில் உறைந்த உறவே !!' - 3 கதை திரி

Status
Not open for further replies.

Rudhraprarthna

Moderator
உறவு - 21.1

கீர்த்தி கஞ்சி கொடுத்துவிட்டு போகவும் அவளையே பார்த்து கொண்டிருந்த கலைவாணியின் மனம் வெகுவாக கசங்கிட முகத்திலும் வேதனையின் சாயல் அதிகரித்தது. பின்னே எத்தனை எத்தனை சோதனைகளை கடந்து வேதனை மறந்து மகனும் மருமகளும் வாழ்வை தொடங்கிய நிலையும் அதை முழுதாக அனுபவிக்க முடியாத வகையில் மழை விட்டும் தூவனமாக அவர்களின் இன்னல் தீராமல் தொடர்வதை எண்ணி மருகி போனவரின் விழிகளில் நீர் சுரந்தது.

இரவு மாத்திரைகளின் உபயத்தால் சீக்கிரம் உறங்கி விடும் கலைவாணி காலை ஏழரை மணியளவில் எழுந்து குளித்து வெளியே வந்த போது காலை உணவை தயாரித்து கொண்டிருந்த வைதேகி அவருக்கு பால் கொடுக்கவும் வீட்டில் வளர்மதி இல்லாததை கண்டு,

வைதேகி வளர் எங்க..??

'நைட் கதிர் வந்து கூட்டிட்டு போயிட்டான்ம்மா'

'ஏன்..?? மாப்பிள்ளை இங்க இருக்க சொன்னாரே அப்புறம் ஏன் கிளம்பினா..??'

"தெரியலம்மா ஏதோ அவசரம் உடனே மாமா கூட்டிட்டு வர சொன்னாங்கன்னு சொல்லி கூட்டிட்டு போனான்..."

'சரி, சரண் கீர்த்தி இன்னும் எழலையா..??'

"தம்பி எழுந்தாச்சு ஆனா.." என்று அவர் நிறுத்த,

"என்ன..?? எதுக்கு தயங்குற சொல்லு வைதேகி ஆனா என்ன..??"

"காலை நடந்த நிகழ்வை அவருக்கு விளக்கிய வைதேகி ஒன்னும் பயப்படற மாதிரி இல்லம்மா நான் அவரையும் வான்மதி, வெண்மதி வீட்டுக்காரங்களையும் வர சொல்லி இருக்கேன் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க நானும் அவங்களோட போய் பார்த்து தம்பியை கையோட கூட்டிட்டு வரோம் நீங்க எதையும்.." என்றவருக்கு நிலை குத்திய விழிகளோடு அசைவற்று அமர்ந்திருந்த அன்னையை எப்படி தேற்றுவது என்று தெரியவில்லை.

"ம்மா நான் தான் சொல்றேனே நம்புங்க அதோட மாப்பிள்ளையும் அமுலுவும் கூட வந்திருந்தாங்க கண்டிப்பா சரணை கூட்டிட்டு வந்துடுவோம்" என்று உறுதி அளிக்க,

மெல்ல வாய் திறந்த கலைவாணி "மாப்பிள்ளை அதுக்கு தான் வளரை வர சொன்னாரா..??" என்று கேட்க அவர் உள்ளமோ சரண் காவல் நிலையத்திற்கு சென்றிருப்பதை அறிந்து ஏற்கனவே குடும்ப கௌரவத்திற்காக பல முறை வளர்மதியை வசைபாடி இங்கு அனுப்பிய மருமகன் இன்று மகளை என்னவெல்லாம் பேசுவாரோ..?? என்ற பரிதவித்து போனது.

அப்படியும் இருக்குமோ..?? என்று யோசித்தவருக்கு நாதன் இதை வைத்து எந்த அளவிற்கு அடவுகட்டுவாரோ என்ற அச்சம் எழ,"சரியா தெரியலைமா.. ஆனா இப்போ நீங்க கேட்கும் போது தான் தோணுது அதுக்காக தான் அவரசமா வர சொல்லி இருப்பார் போல நீங்க கவலை படாதீங்க நான்.." என்று அவர் பேசிக்கொண்டு இருந்த போதே அவர் கணவரும் மற்றவர்களும் வர அன்னையிடம் விடைபெற்று கிளம்பி இருந்தார் வைதேகி.

"மகனுக்காக பார்ப்பதா..? மகளுக்காக பார்ப்பதா..?" என்று தாயுள்ளம் கலங்கி போக கண்ணீரோடு பூஜை அறையில் சென்று அமர்ந்து கைகூப்பி இருந்தார். பல மணிநேரம் அங்கேயே இருந்தவர் சரணின் கைபேசி அழைப்பில் தான் வெளியே வந்து கீர்த்தியை எழுப்பினார், மருமகளின் முகத்தில் படர்ந்திருந்த செம்மையை கண்ட கலைவாணியின் உள்ளம் அவர்கள் வாழ்வை தொடங்கி இருப்பதை கண்டு ஒரு புறம் பூரித்தாலும் மறுபுறம் கணவன் எங்கே..?? என்று கேட்டு கொண்டு இருப்பவளிடம் அவன் சென்றிருக்கும் இடத்தை பற்றி கூறி அவள் இனிமையாய் கெடுத்து விடக்கூடாதே என்ற அலைப்புருதல்..!! பின்னே அன்று வளைகாப்பில் இருந்தே கடந்த நான்கு தினங்களாக கீர்த்தி கொண்டிருக்கும் வேதனையையும் குற்றஉணர்வையும் பார்த்து கொண்டிருப்பவருக்கு சிறு பெண்ணின் மகிழ்வை கெடுப்பதில் விருப்பம் இல்லை.

சேலத்தில் இருந்து திரும்பி கொண்டிருந்த எழிலுக்கு ஹெட் கான்ஸ்டபிள் நாராயணன் மூலமாக முதலிலேயே விஷயம் தெரிந்துவிட சில கணம் ஒன்றுமே புரியவில்லை திரும்ப அழைக்கிறேன் என்று வைத்தவன் அது நேரம் வரை வளர்மதியிடம் பேசிக்கொண்டு இருந்த அலர் கோவிலில் நடந்த பிரச்சனையை கூறவும் காரை ஓரம் கட்டியவன் வெளியில் வந்து அவருக்கு திரும்ப அழைத்து CRS போட்டாச்சா..?? என்று கேட்க,

"ஆமா தம்பி வந்தவங்க வீடியோ ஆதாரம் எல்லாம் காட்டவும் போன் பண்ணோம் சரண் எடுக்கவே இல்லை. அதான் ஐயா உடனே வீட்டுக்கு ஆள் அனுப்பிட்டார் நானும் இப்போ ஹாஸ்பிட்டல் போயிட்டு இருக்கேன்" என்று கூறவும் வளர்மதி பேசியதை அறிந்திருந்தவனும் வேறு வழி இல்லாமல் அவரிடம் யாரை அனுப்பி இருக்கிறார்கள் என்று கேட்டு அவரும் தனக்கு பரிட்சயமானவர் என்பதால் உடனே மற்றொரு கான்ஸ்டபிளுக்கு அழைத்தவன் சூழலை விளக்கி நாதன் வீட்டிற்கு செல்லுமாறு கூறிவிட்டான்.

இரவில் மப்ட்டியில் என்றாலும் போலீஸ் வீட்டை தேடி வந்ததில் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க தொடங்கியவர் முதலில் அழைத்தது மகளுக்கு தான். அலரிடம் எழில் மறைக்க நினைத்ததை நாதன் போட்டு உடைக்கவும் அலர் ப்ரீத்திக்கு அழைத்து கத்தி தீர்த்துவிட்டாள்.

இருப்பினும் அவளை சமாதானபடுத்தியவன் அலரிடம் கூறி ஆய்வாளர் மித்ரனுக்கும் பேச செய்தான்,

ஆதாரம் சமர்பித்ததாலும் காயம் அதிகம் என்பதாலும் நிச்சயம் வழக்கு பதிய வேண்டும் என்று எதிர்தரப்பினர் கூறி வருவதாக அவர் தெரிவிக்க அவரிடம் பிரகாசம் மூலமாக ஏற்கனவே நிகழ்ந்ததை மேலோட்டமாக கூறிய அலர் இதில் சரண் மீது தவறு இல்லை அதனால் இதை வழக்காக பதிய வைக்கவேண்டாம் என்று கூற,

அவளிடம் இருந்து கைபேசியை பெற்று அவரிடம் பேசிய எழில் எதிர் தரப்பினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி கேசை வாபஸ் வாங்க வைக்கிறோம் என்று அவருக்கு உறுதி கொடுத்து
விரைவாக ஆரணி வந்து இரவே மருத்துவமனைக்கு அலருடன் சென்று முதலில் அடிபட்டவர்களின் நிலையை தெரிந்து கொண்டான்.

இரவு ஒரு மணியளவில் முதலில் அலரை கொண்டு வீட்டில் விட அவளோ, 'இருக்கட்டும் மாமா நானும் வரேன்' என்றாள்.

'நான் பார்த்துக்குறேன்டி நீ போய் ரெஸ்ட் எடு முதல்ல அவிரனை பாரு உன்னை தேடிட்டே இருந்திருக்கான்'

'மாமா நீ தூங்கி ரெண்டு நாள் ஆச்சு இன்னைக்கும் தூக்கம் கெட்டா எப்படி அதுவும் இப்போ போய் என்ன பேச போற..?? வேண்டாம் வா வந்து படு காலையில பார்த்துக்கலாம்' என்று அலர் அவனை அழைக்க,

"இருக்கட்டும்டி, பார்த்த இல்ல உங்கப்பாவை" என்று வெளி வராண்டாவில் இன்னும் தூங்காமல் நடை போட்டு கொண்டிருந்த நாதனை சுட்டி காட்டி ,

இப்போ உங்கப்பா இருக்கிற கோவத்துக்கு உன் மாமனை குத்தி கிழிக்காம விட மாட்டார் பாவம் அவனே எவ்ளோ தாண்டி வந்துட்டான்... இப்போ இவர் திரும்ப ஆரம்பிச்சா என்ன நடக்கும்ன்னு தெரியாது, பிரச்சனை இவர் கிட்ட வராத அளவுக்கு நைட்டோட நைட்டா பேசி சரி கட்ட பார்க்கிறேன்" என்று கூற,

அலருக்கும் அது சரி என்று படவும் சரி என்று தலை அசைத்தாள்.

மீண்டும் மருத்துவமனைக்கு வந்தவன் முதலில் காயம் அடைந்த அவர்களிடம் பேசி பார்க்க சரண் மீது ஆத்திரத்தில் இருந்தவர்கள் எழிலுடன் பேசவே தயாராக இல்லை அவர்களின் பெற்றோர்களோ அவர்களுக்கு மேலாக,

"மினிஸ்டர் மாப்பிள்ளைனா என்ன வேணும்ன்னாலும் பண்ணலாமா..??" என்று எடுத்ததுமே அவர்கள் கேட்க,

இது மட்டும் சரண் காதில் விழுந்தால் இதற்கே அவர்களை கட்டி வைத்து உதைப்பான் என்று நினைத்து கொண்டவன், கொஞ்சம் பொறுமையா பேசுங்க என்றிட,

"ஏன் நாங்க ஏன் பொறுத்து போகணும்..?? மினிஸ்டர் மருமகன்னா அடிக்கிற அடியை வாங்கிட்டு அமைதியா போயிடனுமா..?? ஒருத்தனுக்கு கை உடைஞ்சிருக்கு இன்னொருத்தனுக்கு மண்டையில பலமான அடி கேட்க யாரும் இல்லைன்னு இஷ்டத்துக்கு அடிச்சி போடுவானா..? நேத்து வரைக்கும் மாமனார் செஞ்சிட்டு இருந்த வேலையை இப்போ மாப்பிள்ளை கையில் எடுத்து இருக்கானா..?"

"எதுக்கு இப்போ தேவை இல்லாத பேச்சு பேசுறீங்க இப்படி பேசி தான் உங்க பசங்க அட்மிட் ஆகி இருக்காங்க என்ன பேசுறோம்ன்னு புரிஞ்சி பேசுங்க" என்றிட,

"நாங்க எல்லாம் புரிஞ்சி தான் தம்பி பேசுறோம் அவன் பரவால்ல ஒன்னுக்கு ரெண்டு கல்யாணம் பண்ணிகிட்டான் ஆனா இன்னும் எங்க பசங்களுக்கு கல்யாணம் ஆகல ஒண்ணுகிடக்க ஒன்னு ஆகி இருந்தா என்ன பண்றது" என்று ஆரம்பித்து பேசிக்கொண்டே சென்றவர்களை கட்டுபடுத்துவது எழிலுக்கு பெரும்பாடாகி போனது, அதிலும் வார்த்தைக்கு வார்த்தை சரணை பிரகாசத்தின் மாப்பிள்ளை என்று அடையாளபடுத்துவதை பார்த்தவனுக்கு அவர்கள் பேச்சு பிரச்சனையை முடிப்பதற்க்கானது இல்லை என்று புரிந்து போனது.

'நீ எதுக்கு தம்பி பேச வந்த..?? அடிச்சவனை வர சொல்லு என் பசங்களை வலியில கதறவிட்டு அவன் நிம்மதியா இருப்பானா..?? இங்க பாருங்க எந்த பேச்சு வார்த்தைக்கும் நாங்க தயாரா இல்லை எதுவா இருந்தாலும் ஸ்டேஷன்ல பேசிக்கலாம் முதல்ல அவனை வர சொல்லுங்க' என்றிட,

அதுநேரம் வரை பொறுமையாக பேசிக்கொண்டு இருந்த எழிலும் வேறு வழி இன்றி தன் தொனியை மாற்றி கடுமையை கையில் எடுக்கவும் தான் அவர்கள் சத்தம் அடங்கி விடியும் தருவாயில் ஓரளவிற்கு இறங்கி வந்ததிருந்தனர். அவர்களிடம் மருத்துவ செலவையும் அடித்ததற்கு நஷ்ட ஈடும் ஏற்று கொள்வதற்கு சம்மதிக்க வைத்து விட்டு காலை கம்ப்ளைண்ட்டை வாபஸ் வாங்கிவிட வேண்டும் என்ற உறுதி பெற்றுக்கொண்டு அவன் வீட்டிற்கு வந்து குளித்து முடித்து டீ குடித்து கொண்டிருந்த போது மீண்டும் அழைப்பு வந்தது

மறுபுறம் பேசியது நாராயணன் தான், "இரவு முழுக்க எழில் பேசியதில் ஒத்துகொண்டவர்கள் காலை மீண்டும் காவல் நிலையத்திற்கு சென்று நாங்கள் சமரசத்திற்கு தயார் இல்லை சரண் மீது FIR பதிய சொல்லி வலியுறுத்தவும் சரணுக்கு மீண்டும் அழைத்து பார்த்து அவன் எடுக்காமல் போனதால் சரணை அழைத்து வருவதற்காக போலீஸ் வாகனம் கிளம்பி விட்டது என்று தெரிவித்தார்.

அதை கேட்டு எழில் நெற்றியை பிடித்து கொண்டு சில நொடிகள் அமர்ந்துவிட்டாலும் மேலும் தாமதபடுத்தாமல் உடனே அலருடன் கிளம்பிவிட்டான்.

அவர்கள் சரண் வீட்டிற்கு செல்லவும் போலீஸ் வாகனம் அவன் வீட்டின் முன்பு நிற்கவும் சரியாக இருந்தது. அப்போது தான் குளித்து முடித்து வெளியில் வந்த சரண் திடீரென்ற அவர்கள் வரவை எதிர்பாராமல் நிற்க அவன் கண்ணில் முதலில் பட்டது காவல்துறையின் வாகனம் தான்.

எழில் சரணிடம் பக்குவமாக சூழலை விளக்க சரணோ பல்லை கடித்து கொண்டு, "ண்ணா அங்க என்ன நடந்ததுன்னு அவனுங்க என்ன பேசினாங்கன்னு தெரியாம எப்படி கம்ப்ளைன்ட் எடுத்தாங்க" என்று ஆரம்பிக்கவும்,

'சரண் பிரச்சனை முடிக்க தான் பார்க்கணும் இப்போ இதை எல்லாம் அலசி ஆராய அவகாசம் இல்லை..., காரியம் பெருசா வீரியம் பெருசா..?? கிளம்பு" என்று அழைத்து கொண்டு சென்றான்

அங்கு நாதனோ அலர் எழில் கிளம்பியதுமே கதிரோடு முதல் ஆளாக காவல் நிலையத்திற்கு சென்று விட்டார். போலீஸ் ஸ்டேஷனை மிதிக்க வைத்து விட்ட சரண் மீது அவருக்கு மலை அளவு கோபம் இருந்தாலும் இது அவர் மகள் வாழ்க்கை குறித்தான சிக்கல் அல்லவா..?? அதோடு சேர்த்து அவர் குடும்ப கௌரவம் என்றுமே அவருக்கு பிரதானம் என்பதால் சரணின் நிலை குறித்து அறிந்து கொள்ள ஓடி வந்துவிட்டார்.

இங்கே சமையலறையில் தன் போக்கில் வேலை செய்து கொண்டிருந்த கீர்த்தி சரண் எங்கே சென்றிருக்கிறான் என்று தெரியாது நிலை கொள்ளாமல் தவித்து போனாள். சரணை அணைத்து கொண்டு அவன் மார்பில் தலை சாய்த்த போது கூட அவன் எதையும் பேசிக்கொள்ளவில்லை கண்களை சுழற்றிட அடுத்த கணமே உறங்கியதும் கூட எங்கோ மனதின் ஓரத்தில் நிழற்படமாக சேமித்து வைத்திருந்தவளுக்கு அவன் எப்போது சென்றான் எங்கு சென்றான் ஒருவேளை தூக்கத்தில் இருந்த தன்னிடம் சொல்லி கொண்டு தான் சென்றானா..?? அவள் தான் நினைவு கொள்ள முடியாமல் இருக்கிறாளா..?? என்ற ஏகப்பட்ட சஞ்சலங்கள்.

ஒருவேளை சொல்லாமல் சென்றிருந்தால் அப்படி அவளிடம் சொல்லி கொள்ளாமல் செல்லும் அளவிற்கு என்னாவாகி இருக்கும் என்று யோசிக்க தொடங்கியவளின் சிந்தனை தறி கேட்டு ஓட எங்கெங்கோ பயணித்த பாவையின் எண்ணங்கள் இறுதியில் ஒருவேளை நேற்று அவன் மறுத்தும் அவள் அவர்கள் வாழ்வை முன்னெடுத்ததால் சரண் தன்னை தவறாக நினைத்துவிட்டானோ..?? அதனால் கோபம் கொண்டு தன்னிடம் பேசவில்லையோ என்று யோசித்தவளின் இதயம் ஒரு நொடி தன் இயக்கத்தை நிறுத்தியே விட்டது.

அசைவற்று நின்றவளின் கண்கள் மீண்டும் குளம் கட்டிவிட்டது. ஏற்கனவே தன் மீது ஆத்திரத்தில் இருப்பவன் இப்போது மீண்டும் தன்னை வெறுத்து விடுவானோ என்ற எண்ணம் எழ அதற்கு மேல் ஒரு நொடி கூட கீர்த்தியின் கால்கள் நிற்கும் வல்லமை பெறாது போக அங்கேயே மடங்கி அமர்ந்துவிட்டாள். ஒருபுறம் காதல் மனம் அப்படி இருக்காது என்று ஆணித்தரமாக எடுத்து கூறினாலும் மற்றொரு மனமோ ப்ரீத்தியால் அவன் சந்தித்த நிகழ்வுகளை அசைபோட்டு தன்னையும் தவறாக தான் நினைத்திருப்பான் என்ற முடிவிற்கு வர மனமெனும் குழந்தை மீண்டும் மீண்டும் இருவரின் முதல் சந்திப்பை முட்டி மோதி நீங்காத காவியமான தங்களின் காதல் நாட்களில் தொலைந்து போக அவளையும் அறியாமல் மெல்லிய புன்னகை முகத்தில் இழையோடியது.

ஆனால் அதன் பின் தந்தை மற்றும் தமக்கையின் கோரத்தாண்டவத்தில் சிக்கி சிதைந்து கானல் நீராகி போயிருக்கும் காதலும் தத்தளித்து கொண்டிருக்கும் இருவரின் வாழ்வையும் எண்ணி மருக இருந்த துளி புன்னகையும் துடைக்கப்பட்டு வெறுமை குடிகொள்ள அவளையும் அறியாமல் கண்ணீர் புரண்டோட தொடங்கியது ஒரு கட்டத்தில் அது பெரும் கேவலாக உருமாற சத்தமின்றி வாய் பொத்தி கதற தொடங்கி இருந்தாள்.


எத்தனை நேரம் அப்படி கண்ணீருடன் அமர்ந்திருந்தாலோ ஒரு கட்டத்தில் முகத்தை துடைத்து கொண்டவள் தைரியம் வரபெற்றவளாக கைபேசியை எடுத்து சரணுக்கு அழைத்துவிட்டாள். எத்தனை எத்தனை விடியா இரவுகளில் அவனோடு இதே கைபேசியின் வாயிலாக பேசியவளுக்கு இப்போது அழைப்பு சென்று கொண்டிருக்கும் நிலையில் என்ன பேசுவது எப்படி தொடங்குவது என்று புரியாத நிலை..!! முழு அழைப்பு சென்றும் சரண் எடுக்காமல் போக மனம் தளராதவள் மீண்டும் அழைத்தாள் இம்முறை இறுதி ரிங்கின் போது அவன் அழைப்பை துண்டித்திருந்தான்.

அதை அறியாதவளோ மீண்டும் மீண்டும் அவனுக்கு முயற்சிக்க அடுத்த நான்கு முறையும் அழைப்பை துண்டித்தவன் இம்முறை அழைப்பை ஏற்று, "ஏய் கட் பண்றது தெரியலை, வைடி போனை" என்று உறுமியிருந்தான்.

அவன் குரலில் இருந்த கோபமும் வெறுப்பும் பெண்ணவளின் தீயாய் பொசுக்கும் எண்ணத்திற்கு எண்ணை வார்க்க ஒட்டி கொண்டிருந்த நம்பிக்கையும் அற்று முழுதாக நொறுங்கி போனாள்.

இருப்பினும் என்ன ஆனது என்ற கேள்வி மனதை நெருக்கி பிடிக்க குழாயை திறந்து முகத்தை அடித்து கழுவியவள் உடனே கலைவாணியின் முன்பு சென்று,

“பாட்டி மாமா எங்க போயிருக்காங்க சொல்லுங்க” என்று கேட்டிருந்தாள்.

அதேநேரம் காவல்நிலையத்தில் காலை வந்தவர்கள் சரண் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் அப்போது தான் கேசை திரும்ப பெறுவோம் என்று திடமாக நின்றுவிட சரணும் முடியாது என்று உறுதியுடன் அவர்களை பார்த்தான், அதிலும் எழிலிடம் பேசியது போலவே எதிர்தரப்பினர் சரணை மினிஸ்டர் மாப்பிள்ளை என்று குறிப்பிடவும் காவல் நிலையம் என்றும் பாராமல் சரண் அவரை அடிக்க பாய்ந்துவிட்டான்.

இதற்கும் சேர்த்து சரண் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் பிடிவாதம் பிடிக்க,

நாதனும் சரணை மன்னிப்பு கேட்க சொல்லி வற்புறத்த அதில் இருவருக்கும் முட்டி கொண்டு எழிலின் சமாதான பேச்சுக்கள் எல்லாம் இருவரிடமும் எடுபடாத நிலையில் நாதனுக்கும் சரணுக்குமான வாக்குவாதம் முற்றி போனது.

தன்னை காவல் நிலையத்தில் கொண்டு வந்து நிறுத்தி குடும்ப கௌரவத்தை சரண் ஏலம் விட்டிருக்கும் நிலையில் மன்னிப்பும் கேட்க முடியாது என்று கூறிட அதன் பின் நாதனின் நிலையை விவரிக்கவும் வேண்டுமா..?? ஆம் வழக்கம் போல நாதனின் வார்த்தைகள் தடம் புரள தொடங்கியது. வெற்றியும் கதிரும் நாதனை எத்தனையோ தடுக்க முயன்றும் முடியாமல் போக ஒரு கை பார்ப்பது போல சரணும் சரிக்கு சரியாக நாதன் முன் நின்றுவிட்டான்.

எழிலுக்கோ எத்தனை எளிதாக முடிக்க வேண்டியதை நாதன் தலையிட்டு ஊதி பூதாகரமாக ஆக்கி விட்டதில் கடும் கோபம். ஒருவழியாக சரணை சரிகட்டி தனியே அழைத்து சென்ற எழில் அவன் சார்பாக எதிர் தரப்பினரிடம் மன்னிப்பு கேட்டு பிரச்னையை தீர்க்க அதேநேரம் நாதனின் வார்த்தைகளில் குறையாத ஆவேசத்தோடு அங்கிருந்து கிளம்பிய சரண் இறுகிய முகத்துடன் வீட்டினுள் நுழைந்திருந்தான்.

அவனை கண்டதும் 'மாமா' என்று அழைத்த கீர்த்தியின் நடை அவன் முகத்தில் இருந்த ஆக்ரோஷத்தை கண்டு பின்னடைந்தது.

கதிரோடு வந்தவன் கீர்த்தியை திரும்பியும் பாராமல் எடுத்ததுமே கலைவாணியிடம் "ம்மா நீங்க கதிர் கூட வைதேகி அக்கா வீட்டுக்கு கிளம்புங்க" என்றான்.

'என்ன சரண் சொல்ற..? எதுக்கு அங்க போகணும்..?? உனக்கு ஒன்னும் பிரச்சனை இலையே அந்த பசங்க எப்படி இருக்காங்க' என்று கேட்க,

"ம்மா சொன்னா புரிஞ்சிக்கோங்க கொஞ்ச நாள் அங்க இருந்துட்டு வாங்க" என்று கரகரத்த குரலில் சொன்னவன் பின்னே நின்ற கதிரிடம் 'பத்திரமா கூட்டிட்டு போடா' என்றான்.

அவர்கள் கிளம்பவும் உள்ளே நுழைந்தவன் வீட்டு சாவியை எடுத்து கொண்டு அதுநேரம் அவரை அவனையே பார்த்த வண்ணம் அங்கே ஓரமாக நின்றிருந்த கீர்த்தியை பார்த்து 'கிளம்பு' என்றான்.

'எங்கே..?' என்று கேட்க உதடு துடித்தாலும் அவனிடம் கேட்கும் தைரியம் இல்லாததால் "மா... மா... நீங்க .." என்று அவள் மூச்சை இழுத்து பிடித்து தொடங்கவும்,


'கிளம்புடி ' என்று குறையாத கனலோடு அவன் கர்ஜிக்க அதற்க்கு மேலும் அங்கே இருக்கும் தைரியம் இல்லாதவளாக எங்கே..? எதற்கு..?எதனால்..?? என்று எதுவுமே தெரியாமல் அவனோடு கிளம்பி இருந்தாள்.
 

Rudhraprarthna

Moderator
உறவு - 21.2

"பட்டு கீழ சிந்த போகுது வேண்டாம்டி விடு நான் முடிச்சிட்டு வந்து சாப்பிடுறேன்" என்று தன் முன் உணவை நீட்டியவளை எழில் தடுக்க,

'அதெல்லாம் நான் பார்த்துக்குறேன் மாமா, நீ நேத்து நைட் சாப்பிட்டது காலையில டீயோட கிளம்பிட்ட வந்ததும் லேப் எடுத்து உட்காந்துட்ட, அவசரம்ன்னு புரியுது அதுக்காக உன் வேலை எப்போ முடியறது நீ எப்போ சாப்பிடறது..?? அப்படி எல்லாம் விடமுடியாது' என்று கணினியில் பதிந்திருந்த அவன் முகத்தை ஒரு கையால் திருப்பி,

'நீ வேலையை பாரு நான் சிந்தாம ஊட்டி விடுறேன்' என்று உணவை நீட்ட அதற்கு மேலும் மறுக்க தோன்றாமல் வாங்கி கொண்டவன் 'பிரிண்டர் ஆன் பண்ணுடி' என்று கூற அலரும் எழுந்து சென்று தன் அறையில் இருந்த பிரிண்ட்டரை உயிர்பிக்க அடுத்த சில நொடிகளில்
வந்து விழுந்த தாளை எடுத்து பார்த்தவள் எழிலிடம்,

'என்ன மாமா இது ஏர் டிக்கட்ஸ் போல இருக்கு அதுவும் கொச்சினுக்கு ..??' என்று கேள்வியாய் அவனை பார்க்க,

'ஆமா '

'யாருக்கு..??'

'உன் மாமனுக்கு தான்..!'

'மாமாக்கா..??' என்றவளின் பார்வை மீண்டும் டிக்கெட்டில் விழ

'ஆமா சரண் கீர்த்தி ஹனிமூன் டிக்கெட்ஸ்..!! ரூம் அல்ரெடி டேட் பிக்ஸ் பண்ணாம ஹோல்ட் பண்ணி வச்சி இருந்தேன்..." என்ற எழிலை இடை நிறுத்தியவள்,

"என்ன மாமது இது..?? இன்னைக்கு ஈவினிங் ப்ளைட்க்கு போட்டு இருக்கீங்க எதுக்கு இவ்ளோ அவசரம்..?? நாளைக்கு நாளை மறுநாள் மறுவீடு எல்லாம் இருக்கே மாமா அப்பா நேத்தே சமையல்காரருக்கு அட்வான்ஸ் கொடுத்துட்டார், மாளிகைக்கும் ஆர்டர் கொடுத்தாச்சு இப்போ இது அப்பாக்கு தெரிஞ்சா இருக்கிற டென்ஷன் போதாதுன்னு இன்னும் டென்ஷன் ஆகிடுவாரு அது அவருக்கு நல்லது இல்லை , ஏன் இப்படி இன்னும் சிக்கல் ஆக்குறீங்க"

'ஏன்டி டென்ஷன் ஆககூடாதுங்கிற அறிவு உங்கப்பாக்கு இருக்கணும் இவரை யார் கூப்பிட்டாங்கன்னு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து தையா தக்கான்னு குதிச்சி இருக்கிற பிரச்சனையை முடிக்காம மேலும் சிக்கல் ஆக்கினதே உங்கப்பா தான்..!! அவரை வீட்டோடு இருக்க வைக்க முடியல பெருசா பேச வந்துட்டா..??'

'மாமா காலையில நீங்க அவசரமா கூப்பிடவும் வந்து அப்பாகிட்ட பேசிக்கலாம்ன்னு இருந்தேன் ஆனா நான் அங்க இருந்து வரதுக்குள்ள அவர் கதிரோட கிளம்பிட்டு இருக்காரு நான் என்ன பண்ண..??' என்று அவனை பார்க்க,

'உனக்கு தெரியாது அமுலு உன் மாமனும் உங்கப்பாவும் எப்படி எதிரும் புதிருமா நின்னாங்கன்னு" என்றவன் தலையை உலுக்கி கொண்டு,

" ஏய் என்னடி அவன் உங்கப்பாக்கு மேல இருக்கான் கோபம் வந்தா அவனையே இழந்துடுறான் என்ன பேசுறோம் என்ன செய்யறோம்ன்னு எதுவும் தெரியாத அளவுக்கு அப்படி என்ன கண்மூடித்தனமான ஆத்திரமோ..?? ஆனா ஒன்னு இது எல்லாம் உன் சொத்தப்பனால ஆரம்பிச்சது அதுக்கு முன்னாடி சரண் இப்படி இல்ல, அந்த பரதேசியால அன்னைக்கு ஆரம்பிச்ச அவனோட ஆத்திரம் இன்னும் அடங்கலை..!! எப்பா என்ன பேச்சு பேசுறான்டி, எனக்கே அவன் இவ்ளோ பேசுவான்னு இன்னைக்கு தான் தெரியும் சுத்தமா சமாளிக்கவே முடியலை"

'என்ன மாமா சொல்றீங்க..?? நேத்து வரை சரி ஆனா இப்போ கல்யாணம் ஆன பிறகும் அப்படியே இருந்தா லைப் என்ன ஆகும்'


"ப்ச் அவனை மட்டும் சொல்லி ஆகபோறது ஒன்னும் இல்லடி அவன் கோபத்துக்கு தூபம் போடற மாதிரியே அடுத்தடுத்து நடக்குது இதுல உங்கப்பா வேற அவனை மனுஷனாவே இருக்க விட மாட்டேன்கிறார் அப்படி ஒரு பேச்சு அத்தனை பேர் முன்னாடி...!! ஏன்டி அவன் இவருக்கு மாப்பிள்ளையா இல்லை அடிமையா இவர் நினைக்கிற மாதிரி தான் பேசணும் நடக்கணும்ன்னு எதிர்பார்க்கிறது அவருக்கே முட்டாள்தனமா தெரியலை " என்றவன் ஒரு கணம் நிறுத்தி ஆழ்ந்த மூச்சை எடுத்து,

"நானும் சரணுக்கு பல முறை சொல்லிட்டேன் நீ அடிச்சது தப்பில்லை அதனால யார் சொல்றதையும் காதுல வாங்காத கோபத்தை குறைடான்னு எங்க கேட்டான்..?? அவன் மட்டுமா உங்கப்பாவும் தான் ரெண்டு பேருமே சொல்றதை கேட்க தயாரா இல்லை, விட்டிருந்தா கைகலப்பு ஆகி இருக்கும் இதுக்கு நடுவுல தேவையே இல்லாம உங்க சித்தி சித்தப்பாங்க கூட உங்கப்பா சண்டைக்கு நிக்கிறாருடி" என்று நெற்றியை இருவிரல்களால் வருடி கொண்டவன்

"அதனால தான் ஹனிமூன் ட்ரிப் சீக்கிரமா அரேஞ் பண்ணேன் இனியும் சரண் இங்க இருந்தா அவன் கோபத்தை அதிகமாக்கி நிம்மதியை கெடுக்க உங்கப்பா ஒருத்தர் போதும் என்று கூற அலரின் தலையும் தன்னை அறியாமல் சம்மதமாய் அசைந்தது,

"ஊர்ல இருக்கவன் பார்வை, பேச்சு , உங்கப்பா தொல்லை எதுவும் இல்லாம அவன் கீர்த்தியை கூட்டிட்டு ரிலாக்ஸா போயிட்டு வரட்டும் அப்பவாவது அவன் கோபம் குறையுதானு பார்ப்போம்" என்று கூற,

எழில் கூறுவது போல பிரகாசத்தால் உருவான புதிதான சரணின் கோபத்தை அவளும் பார்த்து கொண்டு தானே இருக்கிறாள் எழில் கூறுவது போல அவன் கோபத்தை குறைக்கும் வழியை அடைக்கும் வகையில் இங்கே சூழல் மேலும் கடினமாகி போய் கொண்டு இருப்பதையும் கீர்த்தியின் மனநிலையும் உணர்ந்த அலருக்கும் எழிலின் முடிவில் மகிழ்ச்சி என்றாலும் சந்தேகமாக அவனை பார்த்தவள், 'இதுக்கு அப்பா சம்மதிப்பாரா மாமா..??' என்றாள்.

'ஏய் அவர் யாருடி சம்மதிக்க ..??' என்று பல்லை கடித்தவன்.

'இன்னொரு முறை அவர் பேச்சை எடுத்த நடக்கிறதே வேற..!! எத்தனை போராட்டத்துக்கு பின்னாடி ஒரு கல்யாணத்தை பண்ணினவனை நிம்மதியா இருக்க விடுறாராடி..?? ஊரார் வாயை கூட அடைச்சிடலாம் போல ஆனா இவர் வாய்க்கு ஒரு ஸ்பீட் ப்ரேக் கூட போட முடியலை.., இதுக்கு அவர் இந்த ஆணியை பிடுங்காமையே இருந்து இருக்கலாம்"

'மாமா என்ன பேசுற..??

'ப்ச் அதான்டி இப்படி பேசுறதுக்கு அவர் இந்த கல்யாணத்தை நடத்தியே இருக்க வேண்டாம்' என்று சலித்து கொண்டவன்,

'சரி ஒரே பத்து நிமிஷம் இரு ரிப்போர்ட் முடிச்சிட்டு வரேன் நாம அவங்களை கிளப்பி கூட்டிட்டு ஏர்போர்ட் கிளம்பலாம் அப்புறம் என்ன பண்றாருன்னு நான் பார்க்கிறேன்' என்று கூற

அரை மனதாய் சம்மதித்த அலருக்கு ஏனோ மனம் நிலை கொள்ளவில்லை.., ஏற்கனவே விஷ்வா விஷயத்தில் எழில் மீது கோபத்தில் இருக்கும் தந்தை இப்போது சரணுக்காக அவரை எதிர்த்து கொண்டு செய்யபோவதில் அவர் என்ன சொல்வாரோ..?? என்ற தவிப்பு இருக்கத்தான் செய்தது .

அதேநேரம் கீழே கூடத்தில் இருந்த டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த நாதனுக்கு வளர்மதி உணவை பரிமாற அவரோ, " ஏன்டி உன் தம்பி குடும்ப மானத்தை சந்தி சிரிக்க வச்சிருக்கான்னு வந்ததுல இருந்து ஒருத்தன் கத்திட்டு இருக்கேன் நீ எதுவும் பேசாம அமைதியா இருந்தா என்னடி அர்த்தம்..?? தப்பையும் பண்ணிட்டு அதை ஒத்துக்காத அளவு நெஞ்சழுத்தமாடி உங்களுக்கு..?? " என்று பல்லை கடித்து கொண்டு அவரை பார்க்க,

'நான் அமைதியா இருக்கிறதால தப்புன்னு அர்த்தம் இல்லை' என்றவர் சாதத்தை அவர் தட்டில் வைக்க

'என்னடி பொடி வச்சி பேசுற..?? இதுவரை என் வாழ்நாள்ல நான் போலீஸ் ஸ்டேஷன் படியே மிதிச்சது இல்லை ஆனா இன்னைக்கு உன் கூட பிறந்தவன் என்னை எங்க கொண்டு போய் நிறுத்தி இருங்கான் பார்த்தியா..?? அவனுக்கு என்ன மனசுல பெரிய சண்டியர்ன்னு நெனப்பா யாரோ என்னமோ பேசிட்டு போறாங்க இவனுக்கு என்ன வந்தது..?? பாவம் அந்த பசங்களை போட்டு அப்படி காட்டுத்தனமா அடிச்சி வச்சி இருக்கான் எல்லாம் கை ஒடஞ்சி கால் ஒடஞ்சி படுத்து இருக்குங்க அது தப்பில்லைன்னு சொல்றியா..??' என்று கேட்கவும் இத்தனை நேரம் பொறுமையாக இருந்த வளர்மதி இனியும் பொறுப்பதற்கு இல்லை என்று நாதனை பார்த்தவர்,

'ஏங்க என்னங்க பேசுறீங்க..? உங்களுக்கு மட்டும் தான் கௌரவம் இருக்கா என் தம்பிக்கு இல்லையா..?? முதல்ல அவங்க என்ன பேசினாங்கன்னு தெரிஞ்சிட்டு வந்து பேசுங்க முன்ன தான் எதுவும் தெரியாம என் தம்பியை விரோதி மாதிரி பார்த்து அவனை ஊருக்கு வர விடாம ஒரு நல்லது கெட்டதுல கலந்துக்க விடாம பண்ணீங்கன்னு பார்த்தா இப்போ அவன் மேல எந்த தப்பும் இல்லைன்னு தெரிஞ்சும் இப்படி பேசுறது உங்களுக்கே அநியாயமா தெரியலையா..??"

"ஏய் என்னடி எனக்கே கிளாஸ் எடுக்குறியா..?? ஊரே பார்க்க பொறுக்கி மாதிரி கோவில் முன்னாடி சண்டை போட்டு இருக்கவனை எதுவும் சொல்லாம என்னையே கேள்வி கேட்கிற..?? என்ன துளிர் விட்டு போச்சா..??" என்று முகம் சிவந்தார்.

"இதே உங்களை யாராவது தரம் தாழ்ந்து பேசினா நீங்க அமைதியா இருந்திடுவீங்களா..?? அதென்ன எப்பவும் உங்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயம்..?? முதல்ல உங்களை யார் அங்க போக சொன்னா..?? அதான் என் தம்பியை கூட்டிட்டு வர எழில் தம்பி, வைதேகி அவங்க வீட்டுக்காரர் எல்லாம் காலையிலேயே கிளம்பி வந்துட்டாங்களே" என்றவாறு அவர் குழம்பை ஊற்ற

"ஏய் உன் தம்பியோட முடியறதா இருந்தா நான் ஏன்டி அதை கண்டுக்க போறேன் எக்கேடோ கெட்டு போறான்னு இருப்பேன் ஆனா இதுல என் பொண்ணு வாழ்க்கையும் அடங்கி இருக்கு, கீர்த்தி மட்டும் இந்த எழவு எடுத்த லவ்வை பண்ணாம இருந்திருந்தா அதுவும் உன் தம்பியை" என்று வளரை அவர் பார்த்த பார்வையே அவரின் வெறுப்பின் அளவை காட்டியது, ஆம் காதலை அறவே வெறுக்கும் காதல் திருமணத்தை எதிர்க்கும் மனிதருக்கு சரண் காதலித்தே அதிர்ச்சி என்றால் அதிலும் தன் தம்பி மகளை என்ற போது அவர் நிலையை சொல்லவும் வேண்டுமா..??

அவரின் இந்த குணம் தெரிந்ததாலேயே என்னதான் கீர்த்தி மீது விருப்பம் இருந்தாலும் அவள் காதலை சொன்னபோது அத்தனை எளிதாக அவன் ஏற்று கொள்ளவில்லை.

"ஏன் என் தம்பிக்கு என்ன குறைச்சல் அவனை லவ் பண்ணதுல கீர்த்தி என்ன கெட்டு போயிட்டா..?? சொல்லபோனா அவளை லவ் பண்ணி என் தம்பி தான் வாழ்க்கையை தொலைச்சி நின்னான்" என்று ஆவேசமாக நாதனை பார்த்தவர்,

'ஏய் நிறுத்துடி என்னை அசிங்க படுத்தனும்ன்னே அவன் எல்லாமே ப்ளான் பண்ணி கீர்த்தி எப்போ தனியா சிக்குவான்னு காத்திருந்து அவ மனசை கலைச்சிட்டான் என் பொண்ணுங்களுக்கு இந்த சூதுவாது எல்லாம் தெரியாதுடி"

என் தம்பிக்கு ஒன்னும் இது வேலை இல்லை ஏன் ஊருல பொண்ணுங்களுக்கா பஞ்சம் அவன் குணத்துக்கே எத்தனை சம்பந்தம் தேடி வந்தது ஒருவேளை அப்போ கீர்த்தி உங்க தம்பி பொண்ணுன்னு தெரிஞ்சி இருந்தா அவன் லவ்வே பண்ணி இருக்க மாட்டான் என்றவர் தொடர்ந்து,

"இங்க பாருங்க நீங்க எவ்ளோ பேசினாலும் சரண் கோபப்பட்டு அடிக்க யார் காரணம்ன்னு யோசிச்சி பாருங்க, அப்போ தெரியும் உங்க குடும்ப கௌரவம் போக என் தம்பி காரணமா இல்லை உங்க தம்பி காரணமான்னு" என்று அவர் முடிக்கும் முன்னமே,


பிரகாசத்தை சுட்டி காட்டி தங்கள் புறமிருக்கும் குறையை வளர் கூறவும் நிதானம் இழந்தவர் அதற்க்கு மறுமொழி கூற முடியாமல், "ச்சை இதுக்கு தான்டி இதுக்கு தான்
பாத்திரம் அறிஞ்சி பிச்சை போடணும்ன்னு பெரியவங்க சும்மாவா சொல்லி வச்சாங்க..!!" என்று வளரை பார்க்க,

அவரோ நாதனை அடிபட்ட பார்வை பார்த்தவர் எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர முயல, அவர் கையை பிடித்து நிறுத்தியவர்,

"பேசிட்டு இருக்கும் போது பாதியில போறதுக்கு என்னடி அர்த்தம்" என்று கேட்டவரின் கரம் வளர்மதியின் மணிக்கட்டில் அழுத்தம் கொடுக்க

அதே நேரம் அறையில் இருந்த எழில் அலரிடம், 'அமுலு வெளியே என்ன சத்தம்..??' என்றிட,

"அப்பா தான்..!! வந்ததுல இருந்து நானும் எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன் மாமா ஆனா அப்பா எதையும் புரிஞ்சிக்கிற மாதிரி இல்லை மாமா குடும்ப மானத்தை வாங்கிட்டதா சொல்லி வந்ததுல இருந்து அம்மாவை திட்டிட்டே இருக்காங்க"

"மாமிக்கும் இதுக்கும் என்னடி சம்பந்தம் என்று நெற்றியை சுருக்கியவன் இவரெல்லாம் எப்போ தான் திருந்த போறாரோ..?? நீ ஏன் மாமியை தனியா விட்டுட்டு வந்த" என்றவன் உடனே செய்து கொண்டிருந்த வேலையை எடுத்து வைத்து விட்டு அவளோடு அலரின் அறையில் இருந்து கீழே வந்தான்.

கண்களில் திரண்டு விட்ட நீருடன் நாதனை பார்த்தவர், "ஏன் பாத்திரத்துக்கு என்ன குறைச்சல்..?? என்று இறுமாப்பாய் அவரை பார்த்தவர், நீங்க சொல்ற அதே பாத்திரத்துல தான் இத்தனை வருஷம் நீங்க சாப்டிட்டு வரீங்க அதை மறந்துடாதீங்க" என்று கூற

வளர்மதியின் கரத்தில் அழுத்தம் கூட்டிய நாதன், 'என்னடி பேச்சு ஒருவிதமா இருக்கு கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு என்று அவரை இழுத்து தன்னருகே நிறுத்த கண்ணீரை துடைத்த வளர்மதி அவர் கையை உதறி, 'என்ன அர்த்தம் என்ன அர்த்தம்ன்னு கேட்டா..?? என்று குரலை உயர்த்தியவர்,

"நல்லா கேட்டுக்கோங்க என் தம்பி மேல எந்த தப்பும் இல்லைன்னு அர்த்தம்..!! நீங்க பேசுறதை எல்லாம் கேட்க இஷ்டம் இல்லைன்னு அர்த்தம், எல்லாத்துக்கு மேல உங்க உளறலுக்கு பதில் சொல்ல விருப்பம் இல்லைன்னு அர்த்தம்..!!" என்றிட

'என்னடி சொன்ன..?? உளறலா..?? ' என்று தட்டை தள்ளியவாறு சீற்றத்துடன் எழுந்தவர் வளர்மதியை நோக்கி எச்சில் கையை ஓங்க,

அதற்குள் ஓடி வந்த எழில் அவர் கரத்தை தடுத்து பிடிக்கவும், 'அப்பா' என்று அதிர்ச்சியுடன் பார்த்த அலர் வளர்மதியை தன் அணைப்பில் கொண்டு வந்திருந்தாள்.

'என்னப்பா இது..?? எதுக்காக அம்மாவை அடிக்க போறீங்க..?? ' என்று மெல்லிய குரலில் கேட்டவளுக்கு கடந்த சில நாட்களாகவே சரண் , கீர்த்தி , ப்ரீத்தி , விஷ்வா இவர்களால் சரியான உணவு, ஓய்வு, தூக்கம் இன்றி ஒரு வித பதட்டத்தில் இருக்கும் மனிதரை அவர் தவறுக்காக கடிந்து பேசவும் முடியவில்லை.

இதோ இப்போது கூட அவரின் கோபம் எங்கே அவருக்கே ஆபத்தாய் முடிந்திடுமோ..?? என்ற அச்சம் அலருக்கு மேலோங்க வளர்மதியை பார்த்தவள், "ஏன்மா நான் தான் அப்பா சாப்பிட வரும் போது கூப்பிட சொன்னேனே..?? நான் பரிமாறி இருப்பேனே அவர் கோபமா இருக்கப்போ நீங்க ஏன் அவர் எதிர்ல வந்தீங்க..??" என்று இறைஞ்சும் குரலில் கேட்கவும்,

"ஏய் அறிவுகெட்டவளே என்னடி பேசிட்டு இருக்க..?? உங்கப்பா அடிக்க போனது தப்பில்லை மாமி எதிர்ல வந்தது தப்புன்னு சொல்ற..??" என்று எழில் அலரை கடிய,

'இல்ல மாமா அப்பா கோபமா இருக்கப்போ..'

தன் எதிரிலேயே தன் மகளை பேசும் எழில் மீதான நாதனின் கோபம் மேலும் பெருக, "கண்டவளுக்காக என் பொண்ணை நீ பேசுவியா..??" என்று கேட்க வளர்மதிக்கு மொத்தமாக வெறுத்து போனது,

'அப்பா அம்மாவை என்ன பேசுறீங்க..??' என்று அலர் கண்டிக்க

அவர் வார்த்தையை கேட்ட எழிலுக்கு கொதித்து போனது அவர் கையை விட்டவன், "என்ன சொன்னீங்க ..?? " என்று கோபமாய் அவரை நெருங்கிய போது கீர்த்தியோடு உள்ளே நுழைந்தான் சரண்.

அவர்களை கண்டதும் எழிலின் பேச்சு நின்று போக மற்றவர்களும் அவர்கள் புறம் திரும்பினர்.

முதலில் சுதாரித்த அலர்விழி அவர்களை நெருங்கி, "வாங்க மாமா.. வா கீர்த்தி.." என்று அழைக்க,

நாதனின் பார்வை சரண் பின்னே நின்றிருந்த கீர்த்தி மீது படிய அங்கு அழுது கரைந்திரா விட்டாலும் அவள் முகம் கசங்கி இருந்ததையும், கண்கள் சிவந்து இருப்பதையும் அவள் பார்வை அச்சத்துடன் சரண் மீது படிவதையும் கண்ட நாதன் ஓடி சென்று, " கீர்த்திம்மா என்னடா ஆச்சு..?? ஏன் கண்ணெல்லாம் சிவந்து இருக்கு..? இந்த காட்டுமிராண்டி உன்னையும் அடிச்சானா..??" என்று கேட்க,

"கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா..?? உங்க கற்பனைக்கு அளவில்லை அவன் என்ன நாதனா எடுத்ததும் பொண்டாட்டியை கை ஒங்க" என்று நாதனை முறைத்தவன் சரணிடம்,

"என்னடா இது திடிர்ன்னு வந்திருக்கீங்க என்ன விஷயம்..??" என்று கேட்க,

அவனோ அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவன், "கீர்த்தியை விட்டுட்டு போக வந்தேன்" என்று கூற,

'என்ன..??' என்று ஒத்த குரலில் அனைவரும் சரணை பார்க்க அவர்கள் முகத்தில் எல்லை இல்லா அதிர்ச்சி, அதிலும் கீர்த்தியின் நிலையை சொல்லவே வேண்டாம் பேரதிர்ச்சியுடன் சரணை பார்த்தவளின் இமைகள் இமைக்கவும் மறந்து போனது..!!

என்னது தன்னை விட்டு போக வந்தானா..?? எதற்காக தன்னை விட வேண்டும்..?? அதற்க்கான அவசியம் என்ன..?? என்று தெரியாமல் தத்தளித்து போனவளின் விழிகள் அவன் மீதே நிலைத்தது. சரண் கொடுத்த அதிர்ச்சியில் அவள் கைகள் சில்லிட்டு போக அதற்கு நேர்மாறாக உடலில் அனல் கூடியது... ஆம் மாத்திரை போட்ட பின்னர் கீர்த்தி ஓய்வெடுக்காமல் தொடர்ந்து துணி துவைத்து, பாத்திரம் கழுவி என்று தண்ணீரில் இருந்ததன் விளைவாக ஜுரம் குறையாமல் இருந்தது இப்போது சரண் கூறிய வார்த்தைகளில் அது இருமடங்காக பெருகி இருந்தது.

கீர்த்தியின் அதிர்ச்சியை முதலில் கண்டு கொண்ட எழில் , 'என்ன சொல்ற..??' என்றதிலேயே அவன் கோபம் புரிந்தாலும் உறுதியாக எழிலை பார்த்தவன்,

'நான் சென்னை கிளம்புறேன் அதனால இவளை இங்க விட்டுட்டு போக வந்தேன்' என்றான்.

'என்னடா பேசுற நாளைக்கு மறுவீட்டு அழைப்பு இருக்கு இப்போ சென்னை போறேன்னு சொன்னா என்ன அர்த்தம்..?? ஊருல இருக்கிறவன் எல்லாம் என்னை காரி துப்பனும்ன்னே ஒவ்வொன்னும் ப்ளான் பண்ணி பண்ணிட்டு இருக்கியா..?? உங்க இஷ்டத்துக்கு பண்ணினா எடுத்து செய்யற எனக்கு என்ன மரியாதை இருக்கு" என்று நாதன் முன்னே வர

"ப்பா நீங்க ஏன் டென்ஷன் ஆகுறீங்க..?? அதான் மாமா பேசிட்டு இருக்காங்களே..! ப்ளீஸ் இப்படி வாங்க" என்று அலர் அவர் கைகளை பிடித்து கொள்ள,

'நீ விடு அமுலு இவன் என் மானத்தை வாங்கனும்னு எல்லாம் திட்டம் போட்டு செஞ்சிட்டு இருக்கான், உனக்கு இவனை பத்தி தெரியாது' என்று அலரிடம் சீற,

வளர்மதியோ விழியகலாது கீர்த்தியை பார்த்தவர் முகத்தில் அவள் குறித்த ஏமாற்றம் அப்பட்டமாய் தெரிந்தது, 'என்ன பெண் இவள் அவள் வாழ்விற்காக இங்கு அனைவரும் போராட இவளோ யாருக்கு வந்த விருந்தோ என்பதாக இருக்கிறாளே' என்ற கோபமே பிரதானமாகி போனது.

மறுபுறம் ஏற்கனவே தந்தையால் அலைக்கழிக்கப்பட்டு வாழ்வின் மீதே பிடிப்பு அற்று இருந்தவள் இன்னும் என்னவெல்லாம் அனுபவிக்க வேண்டுமோ..?? என்று பரிதவித்த எழில்

'சரண் இது என்ன அர்த்தமில்லாத பேச்சு..?? யார் மேலயோ இருக்க கோபத்தை கீர்த்தி மேல காட்டுறது ரொம்ப தப்பு' என்றிட,

'அந்த அளவுக்கு நான் முட்டாள் இல்லை' என்று உடனே பதில் வந்தது சரணிடம் இருந்து.,

"அப்போ கீர்த்தியை விட்டுட்டு போறேன்னு சொல்றதுக்கு என்னடா அர்த்தம்..?? அவ என்ன தப்பு பண்ணா..??" என்று தன்னை கட்டுபடுத்தி கொண்டு அழுத்தமாக கேட்க,

அதுநேரம் வரை இதழ்களை அழுந்த மடித்து இலக்கற்று இருந்த கீர்த்தியின் பார்வை வேகமாக சரண் பதில் வேண்டி அவன் மீது பதிந்தது.


ஹாய் செல்லகுட்டீஸ்...

இதோ 'உயிரில் உறைந்த உறவே !!' அடுத்த அத்தியாயம் பதித்துவிட்டேன் இதன் தொடர்ச்சி நாளை பதியப்படும்... படித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி


ருத்ரபிரார்த்தனா
 

Rudhraprarthna

Moderator
உறவு - 22

"அப்போ கீர்த்தியை விட்டுட்டு போறேன்னு சொல்றதுக்கு என்னடா அர்த்தம்..?? அவ என்ன தப்பு பண்ணா..??" என்று எழில் குரல் உயர்த்தவும்,

'மாமா கொஞ்சம் பொறுமையா இருங்க..!! மாமா இப்படி விடறதுக்கு நிச்சயம் ஏதாவது நியாயமான காரணம் இருக்கும்' என்று அலர் முன்பு ஏற்கனவே ப்ரீத்தி கர்ப்பமாக வந்து நின்ற போது சரணை தவறாக மதிப்பிட்டு பேசியதால் விளைந்த அனுபவத்தில் கூற,

'ஏய் என்னடி பொடலங்கா நியாயம் கல்யாணம் ஆன அடுத்த நாளே கூட்டிட்டு வந்து விடறதுக்கு தான் அவ்ளோ அவசரமா கல்யாணம் பண்ணானா..?? நானும் பார்க்கிறேன் சுத்தமா பொறுமையே இல்லாம எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு பண்ணிட்டு இருக்கான், அப்படி என்ன கண்மூடித்தனமான கோபம்..?? இவன் இப்படி செய்யறதால கீர்த்தி மனசு என்ன பாடுபடும்ன்னு கூட யோசிக்காம இருக்கான்' என்று எழில் குரலை உயர்த்தாமல் அழுத்தமாக கேட்க,

'ப்ளீஸ் உங்களுக்கு மாமாவை தெரியாதா..??'

'இதோ பார் அலர் எனக்கு இப்போ கீர்த்தியை விட வேற யாரும் பெருசு இல்லை' என்றவனின் பார்வை உணர்வற்று போயிருந்த கீர்த்தியின் முகத்தில் படிந்தது.

'கீர்த்தி என்ன தப்பு பண்ணா..?' என்ற எழிலின் கேள்வியில் சரணின் பார்வை ஒரு நொடி அவன் பின்னே நின்றவளின் மீது படிய கீர்த்தியும் இப்போது தயக்கம் இன்றி விழி உயர்த்தி இதே தான் என் கேள்வியும் உன் பதிலுக்காக காத்திருக்கிறேன் என்ற செய்தியோடு அவனை பார்த்தாள்.

அவள் விழி மொழி புரிந்தவனால் இரு நொடிகளுக்கு மேல் அவள் பார்வையை எதிர்கொள்ள முடியாது போக கண்களை மூடி மூச்சை இழுத்து விட்டு தன்னை நிலை படுத்தி கொண்டு முன்னே இருந்தவர்களிடம் பொதுவாக,

'நிரந்தரமா இல்லை ஒரு பத்து நாள் இங்க இருக்கட்டும் நானே வந்து கூட்டிட்டு போறேன்' என்றான்.

அதற்குள் 'என்னது பத்து நாளா..? ஏன் அப்போதான் துரைக்கு நல்ல நாளோ..?? ' என்ற நாதன்

'நீ சென்னைக்கு போறதா இருந்தா கீர்த்தியையும் கூட கூட்டிட்டு போ இல்ல உங்க வீட்ல இருக்கட்டும் அதை விட்டுட்டு கீர்த்தி எதுக்கு இங்க இருக்கணும்..?? இதனால ஊர் என்ன பேசும் தெரியுமா..??'

'யார் என்ன பேசினாலும் எனக்கு கவலை இல்லை, யாருக்கும் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை' என்றவனின் குரலில் அத்தனை அலட்சியம்..!!

அவன் அவ்வாறு கூறவுமே, "எனக்கு கூடவா மாமா..??" என்பதான கேள்வியை விழிகளில் தேக்கி அவனை பார்த்த கீர்த்தியின் மனதோ "செஞ்ச தப்பு என்னன்னு தெரியாம தண்டனை அனுபவிக்கிறது ரொம்ப கொடுமை மாமா அட்லீஸ்ட் உங்க முடிவுக்கு என்ன காரணம்ன்னு சொல்லுங்க அது தெரிஞ்சாலே போதும் நீங்க வந்து கூட்டிட்டு போறவரைக்கும் சந்தோஷமா காத்திருப்பேன்" என்றவாறே ஊமையாய் உள்ளுக்குள் கதறியது.

"டேய் என்ன பழி வாங்குறியா..??' என்று நாதன் எகிற,

'நீங்க அப்படி எடுத்துகிட்டா அதுக்கு நான் பொறுப்பில்லை..!!' என்று கைகளை பின்புறம் கட்டிக்கொண்டு அலட்சியமாகவே பதிலளித்து இருந்தான் சரண்.

'சரண் என்னடா ஆச்சு..?? எதுவா இருந்தாலும் என்கிட்டயாவது சொல்லு பேசி ஒரு முடிவுக்கு வரலாம் ஆனா இப்படி கோபத்துல எந்த முடிவும் எடுக்காத..!! பெரும்பாலும் தப்பா தான் இருக்கும்' என்று இப்போதும் பொறுமையாக எழில்

'யார் என்ன சொன்னாலும் என் முடிவுல மாற்றம் இல்லை, இவ இங்க தான் இருக்கணும் பத்து நாளுல நானே வந்து கூப்ட்டுக்குறேன்'

அவ்வளவு தான் எழில் பொறுமை முற்றிலுமாக தொலைய பாய்ந்து சரண் சட்டையை பிடித்தவன் 'டேய் நீ நெனச்ச மாதிரி பேசுறதுக்கும் செய்யறதுக்கும் வாழ்க்கை என்ன அவ்ளோ விளையாட்டா போச்சா உனக்கு..?? அன்னைக்கு விடுன்னு சொன்னா கீர்த்தியை மொத்தமா விட்டுடுவேன் சொன்னதால அமைதியா இருந்தேன் ஆனா விடமாட்டேன்னு சொல்லி விடாப்பிடியா நின்னு ஊரறிய தாலி கட்டி இப்போ விட்டுட்டு போனா என்ன அர்த்தம்..?? நீ செய்யறது சுத்தமா சரி இல்லை சரண் வேணா என் கோபத்தை கிளராத கீர்த்தியை கூட்டிட்டு வீட்டுக்கு போ நான் வரேன் எதுவா இருந்தாலும் பொறுமையா பேசிக்கலாம்" என்று அடக்கப்பட்ட ஆவேசத்தோடு கூற,

'மாமா என்ன பண்றீங்க..? விடுங்க' என்று எழிலின் கரத்தை பிரித்து அவனை இழுத்து சென்ற அலர்விழி சரணிடம் ,

"என்ன மாமா இது..?? என்ன பேசுறீங்க..?? எதனால பத்து நாளைக்கு அப்புறம்ன்னு சொல்றீங்க..?? ஒருவேளை சென்னையில நீங்க தங்கறதுக்கு வீடு பார்த்து ரெடி பண்ணனும்ன்னு இருந்தா அதுக்கு அவசியம் இல்லையே நம்ம வீட்டு சாவி ஒன்னு ஏற்கனவே உங்ககிட்ட தானே இருக்கு... சென்னை போகும் போது கீர்த்தியை கூட கூட்டிட்டு போங்க, இங்க விட்டா தேவை இல்லாத பேச்சு வரும்' என்றவளிடம்,

'இப்ப அவ இங்க பத்து நாள் இருக்கிறதுல உங்களுக்கு என்ன பிரச்சனை' என்று கேட்க

"பத்து நாள் பிரச்சனை இல்லை காரணமே இல்லாம இன்னைக்கு கூட்டிட்டு வந்து விடறது தான் பிரச்சனை, ஒன்னு காரணம் என்னன்னு சொல்லு இல்லையா கீர்த்தியை கூட்டிட்டு கிளம்பு" என்று தெளிவாக கூறிய எழில் அலரிடம்,

'அமுலு நீ போய் டிக்கெட்ஸ் எடுத்துட்டு வா' என்றான்

'சரி மாமா' என்று அவளும் உடனே மாடிக்கு ஓடினாள்.

இறுகிய முகத்துடன் வழக்கத்திற்கு மாறான பிடிவாதத்துடன் நின்றிருந்த சரனை பார்த்த எழில் இனி அவனிடம் பேசி பலன் இல்லை என்பதால் கீர்த்தியிடம் சென்று, 'கீர்த்தி உங்களுக்குள்ள என்ன பிரச்சனை எதனால இப்படி ஒரு முடிவு..??? ஏதாவது பேசு ஏன் இப்படி அமைதியா இருக்க..??' என்று எழில் கேட்க,

'நடப்பது எதுவுமே ஏன்..?? எதனால்..?? என்று புரியாதவளும் அவன் கேள்விக்கு என்னவென்று பதில் சொல்ல..?? நடுங்கும் இதழ்களை பற்களால் அழுத்தி பிடித்து கண்ணீரை வெளியேற்றாமல் எழிலை வெறுமையாக பார்க்க மட்டுமே முடிந்தது அவளால் ..!!

அதற்குள் கொச்சினுக்கான டிக்கெட்டுடன் வந்த அலர் எழிலிடம் அதை கொடுக்க வாங்கியவன்

"சரி உனக்கு என்கிட்டே சொல்ல முடியாத அளவு ஏதோ டிஸ்டர்பன்ஸ் இருக்கிறதால தான் இப்படி பேசுறன்னு எடுத்துக்குறேன் அதேசமயம் நீ சென்னைக்கும் போக வேண்டாம் கீர்த்தி இங்க இருக்கவும் வேண்டாம்" என்றவன் சரணிடம் டிக்கெட்டை நீட்டி,

"இந்தா இதை எடுத்துட்டு கிளம்பு..!! இனி உனக்கு எந்த பிரச்னையும் வராம நான் பார்த்துக்குறேன் ஹனிமூன் முடிச்சிட்டு இங்க கூட நீங்க வர வேண்டாம் அப்படியே சென்னை கிளம்புங்க உன்னோட அம்மா பத்தின கவலையும் உனக்கு வேண்டாம் அவங்களை நாங்க பார்த்துக்குறோம் முதல்ல நீங்க ரெண்டு பேரும் எல்லா பிரச்னையும் மனசு விட்டு பேசி தீர்த்து ஒரு அண்டர்ஸ்டான்டிங்க்கு வாங்க அது போதும்" என்று கூற,

சில நொடிகள் கையில் இருந்த டிக்கெட்டை வெறித்து பார்த்தவன் மனம் கசங்கி போக மெல்ல அதை மேலே உயர்த்தி இரு துண்டாக கிழித்தான் அதை கண்டு அலர் பதறி தடுக்க முனைய அதற்குள் அதை மேலும் பல துண்டுகளாக கிழித்தவனோ மிக மிக உறுதியான குரலில் ,

'நான் என்ன செய்யணும்ன்னு நான் முடிவு பண்ணிக்கிறேன் யாரும் இதுல தலை இட வேண்டாம்' என்றிட


அவன் பயணசீட்டை கிழித்து போட்டதிலேயே அவன் மீதான அதிருப்தி அதிகரிக்க தன்னை கட்டுபடுத்தி கொண்டு நின்ற எழில் அவன் பேசியதில் ஆவேசத்தோடு அவனிடம்,

"வேண்டாம் சரண் நீ பேசுறதை பார்த்தா மனசுல ஏதோ வச்சிட்டு பேசுற மாதிரி இருக்கு..!! என்ன அந்த கேடுகெட்டவனுக்காக கீர்த்தியை பழி தீர்க்க பார்க்கிறியா..?? அப்படி மட்டும் இருந்தது உனக்கு முதல் எதிரி நான் தான்டா சும்மா விடமாட்டேன் தொலைச்சி கட்டிடுவேன்" என்று அவனை எச்சரிக்க,

கீர்த்தியோ கண்களை இறுக மூடி சுவரில் தலை சாய்த்து கொண்டாள்.

மறுபுறம் 'என்னடி நெனச்சிட்டு இருக்கான்' என்று நாதன் வளர்மதியை தீயாக முறைத்தார்.

நடக்கும் அனைத்தையும் பார்த்து கொண்டு இருந்த வளர்மதிக்கு இப்போது தன்னை விட தம்பியின் வாழ்வு முன்னிலை வகிக்க நாதனிடம்,

"சும்மா எல்லாத்துக்கும் என் தம்பியை குறை சொல்றதை நிறுத்துங்க தன்னோட வாழ்க்கை பத்தின அக்கறை உங்க தம்பி பெண்ணுக்கும் இருக்கணும் அப்படி இல்லன்னா முதல் கோணல் முற்றிலும் கோணலா தான் போகும்" என்றவருக்கு அத்தனை ஆற்றாமையாக இருந்தது நேற்று முழுக்க அழுது கரைந்து ஆர்பாட்டம் செய்தவளிடம் எத்தனை பக்குவமாக எடுத்து கூறி சரண் அறைக்கு அனுப்பி வைத்தும் கீர்த்தி மீண்டும் அழுது வைக்காமல் சாமார்த்தியமாக இருத்திருந்தால் இன்று சரண் அவளை கொண்டு வந்து விடுவானா..?? அல்லது தேன் நிலவிற்க்கான பயண சீட்டையும் கிழித்தெறிவானா..?? என்று..!!

கீர்த்தியும் சரணும் இங்கு வந்ததில் இருந்தே வளர்மதி கீர்த்தியிடம் பேசிக்கொள்ளவில்லை அத்தனை கோபம் அவள் மீது..!!

"என்னடி வாய் நீளுது அக்காவும் தம்பியும் எத்தனை நாள் திட்டம் போட்டு இருந்தீங்க எங்க குடுமி உங்க கையில் சிக்கவும் இப்படி என்னை அசிங்கபடுத்தனும்ன்னு..??" என்றவரின் விழிகளில் குறையாத ஆவேசம்.

'என்ன பேசுறீங்க நாங்க எதுக்கு உங்களை அசிங்க படுத்தனும்',

'ஏய் நிறுத்துடி..!! இத்தனை வருஷமா நான் சொன்னதை மனசுல வச்சிட்டு தானே இன்னிக்கு என் பெண்ணை கூட்டிட்டு வந்து விட்டிருக்கான் அது கூட என்னால புரிஞ்சிக்க முடியாதா..?? ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்காதடி..!! கூட்டு களவாணிகளா..!!' என்று பல்லை கடித்து கொண்டு நாதன் வளர்மதியை நெருங்க,

"என்னைக்கு இப்படி எல்லாத்துக்கும் எங்க அக்காவை காரணம் சொல்றதை நிறுத்த போறீங்க..??" என்று அவர் முன்னே அவருக்கு குறையாத ஆக்ரோஷத்தோடு சரண் வந்து நின்று விட்டான்.

"பேசுடா பேசு..!! உன் நேரம் என் பொண்ணு வாழ்க்கை இப்போ உன் கையில நீ ஏன் பேசமாட்ட..?? என்றவர் எதுக்கோ கற்ப்பூர வாசனை தெரியாதாம் அந்த மாதிரி பொண்ணுங்க அருமை தெரியாதவனுங்களுக்கு கட்டி கொடுத்த என்னை செருப்பால அடிச்சிக்கனும் இப்படி அடுத்த நாளே கொண்டு வந்து விடவா அவசரவசரமா கல்யாணம் பண்ணி வச்சேன்..??" என்ற நாதனின் வார்த்தைகளில் கோபத்தை மீறிய வலி...!!

அதே நேரம் கீர்த்தியின் மீது பார்வை பதித்து கொண்டிருந்த எழிலிடம் இருந்து 'வாயை மூடுடி, இன்னொரு வார்த்தை அவனுக்காக பேசின நடக்குறதே வேற' என்ற கர்ஜனையும் அதை தொடர்ந்த 'மாமா ப்ளீஸ்' என்ற அலரின் கெஞ்சலும் அவரை சென்று சேர திரும்பி பார்த்த நாதனின் ஆத்திரம் இருமடங்காக பெருகியது.

எழில் அவ்வாறு கூறவும் சரணிடம் வந்தவள், 'மாமா ப்ளீஸ் இது தப்பு கொஞ்சம் யோசிச்சி முடிவு பண்ணுங்க' என்றாள் அலர்.

அவள் வார்த்தைகள் அவனை அசைக்க, 'நான் தற்காலிக பிரிவு பத்தி பேசிட்டு இருக்கேன் நீங்க நிரந்தர பிரிவுக்கு வழி வகுத்திடாதிங்க' என்றான்.

அவன் கூற்றில் அர்த்தம் புரியாது விழித்து நின்றவள் பின் கீர்த்தியை நெருங்கி, "கீர்த்தி என்ன அமைதியா இருக்க..?? தற்காலிக பிரிவு நிரந்தர பிரிவுக்கு வழி வகுத்திடும் நீயாவது மாமா கிட்ட சொல்லு" என்று அலர் கூற

விழிகள் கசிய ஓரமாக நின்றிருந்த கீர்த்தியின் முகத்தில் இன்னமும் குறையாத அதிர்ச்சி அவள் சரணை பார்த்த பார்வையே சொன்னது "உன்னிடம் நான் இதை எதிர்பாக்கவில்லை என்று ..!!"

அவள் அதிர்ச்சியும் மௌனமும் புரிந்த அலர் மீண்டும் சரணிடம், "மாமா கீர்த்திக்கும் உங்களுக்கும் சண்டையா..?? அவ ஏதாவது உங்களை கஷ்டபடுத்தி பேசிட்டாளா..?? அதான் இந்த முடிவா..?? எதுவா இருந்தாலும் சொல்லுங்க நான் அவகிட்ட பேசி புரிய வைக்கிறேன் ஆனா ப்ளீஸ் இது வேண்டாம் கீர்த்தியால.." என்றவளுக்குமே கீர்த்தியின் நிலையை கண்டு மனம் வெதும்பி போனது.

எத்தகைய நிலை இது..!!

அதுவும் திருமணம் ஆன அடுத்த நாளே ஏன்..? எதற்கு..? என்று புரியாமல் இப்படி நிர்ப்பது எத்தனை கொடுமை என்று புரிய மீண்டும் சரணை பார்த்தவள், 'ப்ளீஸ் மாமா' என்றிட,

அதேசமயம் நேரே அறையினுள் சென்ற நாதன் சட்டையை மாட்டிகொண்டு வெளியில் வந்து கீர்த்தியிடம், "நீ கிளம்பும்மா இவன் யாரு முடிவெடுக்க நான் அத்தை கிட்ட பேசுறேன்" என்று நாதன் கூற,

'இல்.. இல்ல பெரிப்பா' என்று கீர்த்தி அவரை பார்க்க,

'என்ன இல்ல..??'

'மா.. மாமா சொல்ற மாதிரி நான்..' என்றவளுக்கு தொண்டையை அடைத்து கொண்டு வர அதற்க்கு மேல் பேச முடியாமல் தலை கவிழ்ந்தாள்.

சில நொடிகள் கீர்த்தியையே அழுத்தமாக பார்த்து நின்றவருக்கு சரண் அவளை பயமுறுத்தி இருப்பது புரிய சரண் புறம் திரும்பியவர், "கடைசியா கேட்கறேன்டா கீர்த்தியை கூட்டிட்டு போக முடியுமா முடியாதா..??" என்றார்.

இன்னுமே அழுத்தமாக அவரை பார்த்தவன், 'என் முடிவு இது தான்..!! இங்க இருக்கட்டும் நானே வந்து கூட்டிட்டு போறேன்'

'அப்போ போகும் போது இவளையும் கூட்டிட்டு போடா' என்று ஆவேசமாக வளர்மதியை சரண் முன்பு இழுத்து விட்டார்.

இதுக்கு அப்புறம் எங்க அக்காவை.. என்று சரண் தொடங்கவுமே அலர்விழியை நாதனின் முன் நிறுத்திய எழில், 'அப்போ இவளையும் இங்கயே வச்சிக்கோங்க ' என்று கூற நாதன் அதற்கு மேல் பேச முடியாமல் பல்லை கடித்து கொண்டு அமைதியாக நின்றார்.

அவர் வார்த்தைகளில் பரிதவித்து போன அலரின் கண்களில் நீர் திரண்டு விட்டது. எழில் தந்தையை தடுக்க வேண்டியே அவ்வாறு கூறினான் என்பது அறிவுக்கு புரிந்தாலும் பல மாதங்களாகவே வரும் கனவினால் அலைகழிக்கப்பட்டு கொண்டிருப்பவளுக்கு இப்போது எழில் அதை நிஜமாக்கும் வகையில் நடந்து கொள்ளவும் அவளையும் அறியாமல் கண்ணீர் பெருகியது.

எழில் தணிந்து அமரவும், 'ப்ளீஸ் மாமா எப்போ கனவு நிஜமாகுமோன்னு எனக்கு பயமா இருக்கு அதனால இன்னொரு முறை இப்படி விளையாட்டுக்கு கூட விட்டுட்டு போவேன்னு சொல்லாதடா' என்று கூற,

அவள் பயத்தை அறிந்தவன் 'ஏய் குள்ளச்சி உனக்கு என்னை தெரியாதா..??' என்று அவளை தோளோடு சேர்த்து கொண்டான்.

கைகளை கட்டிக்கொண்டு குறுக்கும் மறுக்கும் நாதன் நடக்க வளர் தம்பியிடம் எதுவும் கேட்டு கொள்ளவில்லை, நேற்றில் இருந்து கீர்த்தி அவனை அலட்சியபடுத்துவதை அருகே இருந்து பார்ப்பவருக்கு கீர்த்தியை அழைத்து செல் என்றும் கூற தோன்றவில்லை.

நாதன் ஏதோ கூற வரவும் அவருக்கான மாத்திரையை கொடுத்தவள் 'ப்ளீஸ்பா நீங்க இதுக்கு மேல பேசாதீங்க' என்று அவரை அமர்த்தி இறுதி முயற்சியாக சரணிடம் பேச முற்ப்பட அதை கண்டு அலர் அருகே வந்த எழில்,

"இனியும் எதுக்குடி கெஞ்சிட்டு இருக்க, தேவையே இல்ல முதல்ல அவனை இங்க இருந்து போக சொல்லு இல்லை இருக்க கோபத்துக்கு அடிச்சிட போறேன்" என்றான் எழில்

அதை கேட்ட சரண் எதுவும் பேசாமல் வாசல் புறம் திரும்பவும், "இப்ப விட்டுட்டு போனா திரும்ப வந்து கூப்பிட்டா அனுப்ப மாட்டேன்" என்று உறுதியான குரலில் கூற,

அவர் புறம் திரும்பாமலே "வரமாட்டேன்ன்னு அவ சொல்லட்டும் அப்போ பார்த்துக்கலாம்" என்று எதிரே நின்ற கீர்த்தியை ஒரு நொடி பார்த்தவன் அடுத்த நொடியே யாருக்கும் சொல்லி கொள்ளாமல் அங்கிருந்து வேகமாக கிளம்பி இருந்தான்.

சரண் கிளம்பவும் அங்கே கனத்த அமைதி யாரும் யாருடனும் பேசும் நிலையில் இல்லை. அதுநேரம் வரை வளர்மதியை வசைபாடி கொண்டு இருந்த நாதனும் இப்போது கீர்த்தியின் நிலை கண்டு தளர்ந்து போனவராக அறையினுள் சென்று அமைதியாக அமர்ந்து விட்டார்.

நாற்காலியில் சாய்ந்து விட்டத்தை வெறித்தவருக்குள் ஆயிரம் யோசனைகள், ஆம் ஆத்திரத்தில் பேசிய பின் அதன் விளைவை கண்டு ஆற அமர யோசிக்க தொடங்கி இருந்தார் மனிதர்.

என்னதான் தன் மீதும் பிரகாசத்தின் மீதும் தவறு என்றாலும் சரண் இப்படி ஒரு முடிவெடுப்பான் என்று அவரும் எதிர்பார்க்கவில்லை. பின்னே சிறுவயதில் இருந்து அவனை பார்த்து கொண்டிருப்பவருக்கு அல்லவா தெரியும் அவன் எத்தனை பக்குவபட்டவன் என்பதும் எத்தனை எளிதாக உறவுகளை விட்டு கொடுக்காதவன் என்பதும்..!! அப்படிபட்டவனே இன்று உயிரினும் மேலான ஒரு உறவை விட்டு செல்கிறான் என்றால் அதன் பொருள் என்ன என்பதை அவரால் கணிக்கவே முடியவில்லை.

வளைகாப்பில் ஊரார் முன்னிலையில் பிரகாசத்தால் அத்தனை நடந்தேறிய பின்பும் கீர்த்தியை மணமுடித்தே தீருவேன் என்று அவன் பிடிவாதமாக நின்ற போது குடும்ப கௌரவத்தை காப்பாற்றியதாலேயே மனதார திருமணத்தை எடுத்து நடத்தி இருந்தார்.

ஆனால் என்ன செய்ய நேரமும் காலமும் அவரை ஆட்டி வைக்கையில் இன்று போலீஸ் ஸ்டேஷன் வரை அவன் கொண்டு சென்றதில் எதை பற்றியும் யோசிக்காமல் ஆத்திரத்தில் வாய்க்கு வந்தபடி பேசிவிட்டார்.

என்னதான் வீம்பாக சரணிடம் அனுப்ப மாட்டேன் என்று கூறி இருந்தாலும் கீர்த்தியை இப்படி வீட்டோடு வைத்து இருப்பதில் அவருக்கு உடன்பாடு இல்லை மணமான பெண் பிறந்த வீட்டோடு இருப்பது எத்தனை யூகங்களுக்கு வழி வகுக்கும் என்று அறிந்தவருக்கு இப்போது சரணிடம் தான் பேசியது அதிகப்படியோ..?? கீர்த்தியின் இந்த நிலைக்கு தானே காரணமோ..?? என்ற எண்ணம் தோன்ற தொடங்கிவிட்டது.


சரண் கிளம்பவும் கீர்த்தியை பார்த்த வளர்மதி,

‘உன் மேல ரொம்ப நம்பிக்கை வச்சி இருந்தேன் ஆனா நீ என்னை ஏமாத்திட்ட’ என்றவருக்கு இன்னமும் நேற்று சரண் தட்டிவிட்ட டம்பளரின் சத்தம் காதினுள் ஒலிக்க ‘அப்படி என்ன பிடிவாதம் உனக்கு..!! கிளிபிள்ளைக்கு சொல்ற மாதிரி நானும் வைதேகியும் எவ்ளோ சொல்லி அனுப்பினோம் அப்பவும் நீ..’ என்று வெறுப்புடன் அவர் பார்த்த பார்வையே அவளை குற்றம் சுமத்த தொடர்ந்தவர்,

‘சரணை மட்டுமில்ல என்னையும் நீ நோகடிச்சிட்ட என்றவருக்கு கண்ணீர் துளிர்த்து விட்டது அதை துடைத்து கொண்டே எப்போ கீர்த்தி என் தம்பியை நிம்மதியா, சந்தோஷமா வாழவைப்ப..??’ என்று கேட்க,

அதிர்ச்சியோடு ‘பெரிம்மா’ என்று உதடு துடிக்க அவரை பார்த்த கீர்த்தி அவர் கேள்விக்கு பதில் சொல்லும் நிலையில் இல்லை.

‘பேசாத..!! இன்னொரு வார்த்தை என்கிட்டே பேசாத நீ..!! நேத்து இருந்து நிறைய கேட்டுட்டேன் இனியும் உன்னோட அபத்தத்தை கேட்க நான் தயாரா இல்லை’ ஆனா ஒன்னு மட்டும் சொல்லுவேன்,

‘உன்னோட இந்த நிலைக்கு நீ தான் காரணம் வேற யாரும் இல்லை, இனி நாங்க பண்றதுக்கு ஒண்ணுமே இல்லை' என்றவர் வேதனையுடன் சமையலறையினுள் சென்றார்.

முக்கிய அழைப்பை ஏற்று பேசிவிட்டு உள்ளே நுழைந்த எழில் அப்போது தான் கீர்த்தி அதே இடத்தில் அசைவற்ற பார்வையுடன் நின்றிருப்பதை கண்டவன், 'என்ன கீர்த்தி இங்கயே நின்னுட்ட..??' என்று கேட்க அவளிடம் பதில் இல்லை

'கீர்த்தி உன்னை தான் கேட்கிறேன்' என்று அவள் முன் சொடக்கிட்டு அழைக்க,

பார்வையை அவன் புறம் திருப்பி 'மாமா' என்று ஈனஸ்வரத்தில் அழைத்தவளின் கால்கள் அதற்க்கு மேலும் நிற்கும் திடம் இல்லாமல் வலுவிழந்து போக தோய்ந்து போனவள் அவன் கரங்களிலேயே மயங்கி விழுந்திருந்தாள்.

அதை எதிர்பாராத எழில் சட்டென அவளை பிடித்து மடி தாங்கியவன் 'கீர்த்தி' என்று கன்னத்தை தட்டி எழுப்ப முயற்சிக்கவும் தான் அவள் உடல் அனலாக கொதிப்பதை உணர்ந்தான்,

அதற்குள் 'என்ன ஆச்சு மாமா..?? என்று ஓடி வந்த அலர் கீர்த்தி இருக்கும் நிலையை பார்த்து, 'திரும்ப மயக்கம் போட்டுட்டாளா..?? என்றவாறு கீர்த்தியின் கரத்தை பிடித்தவளும் அவள் சூட்டை உணர்ந்து நெற்றியில் கழுத்தில் கை வைத்து பார்த்தவள், "என்ன மாமா இப்படி சுடுது" என்றிட

'ஆமாடி பீவர் அதிகமா இருக்கு, ஆனா இதை பத்தி ரெண்டு பேருமே ஒன்னும் சொல்லலை' என்றான் எழில் பதட்டத்துடன்.

'என்ன மாமா பேசிட்டு இருக்கீங்க முதல்ல அவளை தூக்குங்க ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகலாம்' என்றிட எழிலும் கீர்த்தியை காரின் பின்சீட்டில் அலரின் மடியில் கிடத்தியவன் வண்டியை எடுக்க அடுத்த சில நிமிடங்களில்அவளை மருத்துவமனையில் அனுமதித்து இருந்தனர்.

உள்ளே கீர்த்திக்கு சிகிச்சை நடைபெற பதட்டத்துடன் வெளியே காத்திருந்தனர்,

அலர் கைபேசி எடுப்பதை பார்த்தவன்,

'யாருக்கு அமுலு..??' என்றான்

‘மாமாக்கு தான் பண்றேன் அவருக்கு தகவல் சொல்லணும்ல’ என்றிட

'ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம் முதல்ல அதை வை'

"என்ன மாமா பேசுறீங்க..?? கீர்த்தி மயங்கினது தெரிஞ்சா அவரே வந்து கூட்டிட்டு போக வாய்ப்பு இருக்குல்ல அப்புறம் ஏன் வேண்டாம் சொல்றீங்க"

"அது தான்டி வேண்டாங்கிறேன், இது என்ன மத்த உறவு மாதிரியா...?? கூட இருந்தவனுக்கு இவளுக்கு காய்ச்சல் இருக்கிறது தெரியாதா..?? தெரிஞ்சும் கூட்டிட்டு வந்து விட்டிருக்கானா என்ன தைரியம் இருக்கணும்” என்ற எழிலின் கூற்றை அலரும் தலை அசைத்து ஏற்க தொடர்ந்தவன்,

அனுதாபத்தால பொண்டாட்டி கூட்டிட்டு போக கூடாது அருமை தெரிஞ்சி கூட்டிட்டு போகணும். இப்போ நீ செய்யறதால அவனுக்கு கீர்த்தி அருமையே தெரியாம போயிடும்” என்றவன் தீபிகாவிற்கு அழைத்து தகவல் கொடுக்க அடுத்த சில நிமிடங்களில் மருத்துவமனைக்கு வந்து விட்டார்.

மகளின் நிலையை கண்டவருக்கு நெஞ்சம் தாளவில்லை வெளியில் வந்து அவர்களிடம் விசாரிக்க அலரும் நடந்ததை அவரிடம் விவரித்தாள்.

சில நிமிடம் வேதனை தீர மெளனமாக அழுது தீர்த்தவர் பின் எழிலிடம், “என் பெண்ணை நான் கூட்டிட்டு போறேன் எழில் அவ யாருக்கும் பாரமா இருக்க வேண்டாம்” என்றிட,

‘மாமி’ என்றான் அதிர்வுடன்

“எனக்கு யார் மேலயும் கோபம் இல்லை எல்லாம், எங்க தலையெழுத்து நாங்க வாங்கிட்டு வந்த வரம் அப்படி, இதெல்லாம் அனுபவிச்சி தான் ஆகணும். மாமாவும் அக்காவும் இந்த கல்யாணத்தை எடுத்து நடத்தினதே பெருசு இனியும் என் பொண்ணு அங்க இருந்து அதனால அவங்களோட நிம்மதி கெட வேண்டாம், மாப்பிள்ளைக்கு எப்போ தோணுதோ அப்போ வந்து கீர்த்தியை கூட்டிட்டு போகட்டும் அதுவரைக்கும் நான் பார்த்துக்குறேன்”

‘சித்தி என்ன பேசுறீங்க..? அதெல்லாம் ஒன்னும் இல்லை மாமா ஏதோ காரணத்துக்காக தான் இப்படி சொல்லி இருப்பாரு நீங்க வேணும்ன்னா பாருங்க நாளைக்கே கூட வந்து கீர்த்தியை கூட்டிட்டு போவாரு’ என்று அவருக்கு நம்பிக்கை அளிக்க,

“இல்ல அமுலு கீர்த்தியை நான் பத்து மாசம் சுமந்து பெறாமல் போயிருந்தாலும் எனக்கு தான் இப்போ அவ படர வேதனை என்னன்னு தெரியும், அதனால இது சரிவராது அவ கண்முழிச்சதும் நான் கூட்டிட்டு கிளம்புறேன்” என்று உறுதியாக நின்றுவிட்டார்.


ஹாய் ஹனீஸ்...

இதோ 'உயிரில் உறைந்த உறவே !!' அடுத்த அத்தியாயம் பதித்துவிட்டேன். கதை எப்படி போகுதுன்னு உங்கள் கருத்தை சொல்லிட்டு போங்க.
 

Rudhraprarthna

Moderator
உறவு - 23

"வேர் இல்லாத மரம்போல்

என்னை நீ பூமியில் நட்டாயே
ஊர் கண் எந்தன் மேலே பட்டால்
உன் உயிர் நோக துடித்தாயே
உலகத்தின் பந்தங்கள் எல்லாம்

நீ சொல்லி தந்தாயே"

என்று நள்ளிரவில் பெற்றோரின் அறை வாயிலில் நின்று கொண்டு அவனை பார்க்க மாட்டேன் என்ற பிடிவாதத்தோடு அமர்ந்திருந்த வித்யாவை பார்த்தவாறு விஷ்வா பாடிக்கொண்டிருக்க,

இரு கரங்களால் காதை பொத்தி கொண்டு தன் எதிரே இருந்த சிவசங்கரனிடம், 'போதும் நிறுத்த சொல்லுங்க அவனை' என்றிட,

'இதை ஏன் என்கிட்டே சொல்றே..??'

'நானே தூங்குவேன் யாரும் பாட வேண்டாம்' என்று பொதுவாக சொல்ல

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்
வழி நடத்திச் சென்றாயே
உனக்கே ஓர் தொட்டில் கட்டி
நானே தாயாய் மாறிட வேண்டும்"

விஷ்வா இருக்கும் இடத்தை விட்டு அசையாமல் பாடலை தொடர்வதை கண்டு 'இப்போ சொல்ல போறீங்களா இல்லையா..??' என்றார் சற்று குரல் உயர்த்தி,

'தேவிமா இது என்ன புதுசா..?? என்று மனைவியை பார்த்தவர்,

'அது ஏன் கொஞ்ச நாளாவே உங்க ரெண்டு பேருக்கு நடுவுல என்னை இழுக்குற, நீயாச்சு உன் மகனாச்சு நீங்களே பேசி தீர்த்துக்கோங்க எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை '

'என்னங்க' என்று அழைத்து நான் பேச மாட்டேன் என்ற பிடிவாதத்துடன் வித்யா அவரை பார்க்க,

"எனக்கு தெரியாதுமா என்னை ஆளை விடுங்க" என்று தன் இடத்தில் வந்து படுத்தவர் போர்வையை எடுத்து போர்த்த போனவர் மனைவியை பார்த்து,

"ஒன்னு மட்டும் சொல்லிடுறேன் தேவி" என்றிட,

என்ன என்பதாக அவர் திரும்பி பார்க்க,

"அவனுக்கு பிளைட்க்கு நேரமாச்சு" என்றவர் போர்த்தி கொண்டு படுக்க,

"தாய் சொல்கின்ற வார்தைகள் எல்லாம்
நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா
மண் பொன் மேலே ஆசை துறந்த
கண் தூங்காத உயிர் அல்லவா..!!"

என்று விஷ்வா மீண்டும் தொடர அதை கண்டவர் 'எல்லாம் பாட்டு அளவுல தான் நடப்புல கிடையாது' என்று முனுமுனுத்தவர் சிவசங்கரனின் போர்வையை விலக்கி,

'கிளம்பற நேரத்துல இப்போ என்ன பாட்டு வேண்டி கிடக்கு..!! இங்க நின்னு டைம் வேஸ்ட் பண்ணாம பத்திரமா போயிட்டு வர சொல்லுங்க' என்றார்.

'நீ பேசின எதுவும் எனக்கு காதுல விழல நான் தூங்கி ஒரு மணி நேரமாச்சு' என்று போர்வையை இழுத்து கொண்டு அவர் கூற,

'உங்களை' என்று கண்களை சுருக்கி கணவரை பார்த்தவருக்கு தெரியும் இப்போது அவர் பேசாமல் அவன் கிளம்ப மாட்டான் என்பது,

'காலத்தின் கணக்குகளில்
செலவாகும் வரவும் நீ
சுழல்கின்ற பூமியின்
மேலே சுழலாத பூமியும் நீ
இறைவா நீ ஆணையிடு
தாயே நீ எந்தன் மகளாய் மாற..!!'

என்று உருக்கமாக பாடியவாறே விஷ்வா அவர் அருகே வர, தாய் மனம் அத்தனை கோபங்களையும் ஒதுக்கி வைத்து மகனுக்கு தாமதமாவதை எண்ணி தவித்து கொண்டிருந்தது.

ஆம் சில வருடங்களாகவே அவன் பல நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது வழக்கம் என்றாலும் இன்று போல அவசரவசரமாக அதுவும் நள்ளிரவு வேளையில் கிளம்பியது இல்லை அதிலும் டிரைவர் இல்லாமல் அவனே சென்னை வரை வாகனம் ஓட்டி செல்வதில் அவருக்கு உடன்பாடு இல்லை.

'வித்யா ஒரு வார்த்தை சொன்னால் அதை ஏற்று டிரைவர் போட்டு கொண்டு செல்வான் ஆனால் வாழ்வின் முக்கிய முடிவையே தங்களிடம் கலந்தாலோசிக்காமல் தாங்கள் இல்லாமல் அவனாகவே செய்திருப்பதில் அதிருப்தியில் இருப்பவருக்கு இனி எதிலும் அவன் பெற்றோரின் சம்மதத்தை எதிர்பார்க்க வேண்டியது இல்லை ' என்று முடிவுடன் இருக்கிறார்.

ஆனால் இங்கிருந்து சென்னை சென்று அங்கிருந்து மும்பை பின் நியுயார்க் என்று அடுத்த ஒரு நாள் முழுக்க விஷ்வாவின் நேரத்தை பயணமே விழுங்கி கொள்ளும் அதோடு அவனது அலைச்சலும் இதற்க்கு இடையில் அவரது பாராமுகம் நிச்சயம் விஷ்வாவை தூங்கவிடாது என்பது புரிய அதற்கு மேலும் கோபத்தை இறுக்கி பிடித்து அவனை மேலும் தாமதபடுத்த விரும்பாமல், தன் அருகே மண்டியிட்டு அவர் முகம் பார்த்திருந்தவன் புறம் திரும்பியவர் அவன் தலை கோதி,

'ஹாப்பி ஜர்னி..!! பத்திரமா போயிட்டு சீக்கிரம் வா ' என்றிட

'அது உங்க கையில இருக்கு' என்றான்

'என்ன..??' என்பதாக அவர் பார்க்க,

"ப்ரீத்தியை மருமகளா ஏத்துகிட்டேன்னு எப்போ எனக்கு கால் பண்றீங்களோ அடுத்த நாள் இங்க இருப்பேன் " என்று அவன் கூற அவரிடம் மீண்டும் அழுத்தமான மௌனம்,

நாம் இதை பற்றி பேசாமல் இருப்பது நல்லது என்பது போன்ற ஒரு அழுத்தம்.

அதை உணர்ந்த விஷ்வாவின் முகத்தில் குறுநகை படர சில நிமிடங்கள் கழித்து மீண்டும்

"ஆராரிராரோ நான் இங்கே பாட

தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து"

என்று பாட தொடங்க,

'போதும் போதும் இத்தனை நாள் பாடி என்னை தூங்கவச்சது இனி உன் மகனுக்கு தான் நீ தாலாட்டு பாடனும் அதனால சீக்கிரம் வா' என்று அவன் உச்சியில் இதழ் பதித்து விடை கொடுக்க,

"இதை முதல்லே செய்திருக்கலாம் என் தூக்கமாவது கெடாமல் இருந்திருக்கும்" என்ற சிவசங்கரனின் குரல் போர்வையினுள் இருந்து ஒலிக்க,

அதை கேட்ட தாய் மகன் இருவர் முகத்திலும் புன்னகை ,

"சிரிக்காத தேவ்..!! இத்தனை நாள் பத்து மணிக்கு பாடி உங்க அம்மாவை தூங்க வச்ச ஆனா இப்போ மணி ரெண்டாக போகுதுடா இப்பவும் பாடணுமா..?? ஏன் சைலேன்ட்டா சமாதானம் ஆக மாட்டீங்களா நீங்க" என்று அவர்களை கடுப்புடன் பார்த்தவர்,

மனைவி புறம் திரும்பி, "அதான் எவ்ளோ கோபம் இருந்தாலும் அவன் பாட்டு பாடி உன்ன சமாதானம் பண்ணிடுவான்னு உனக்கே தெரியும் அப்புறம் ஏன் தேவிமா என் தூக்கத்தை கெடுக்குறீங்க" என்று எழுந்தமற,

சரி சரிப்பா நான் கிளம்புறேன் நீங்க தூங்குங்க குட் நைட் என்று அவர் அருகே வந்து அவரை அணைத்து கொள்ள,

"ஹாப்பி ஜர்னி தேவ்..!! கம் சூன் " என்று அவர் விடைகொடுக்க வித்யாவை பார்த்தவன்

'சரி கிளம்புறேன்ம்மா' என்று வெளியேற

'இரு தேவ்' என்று விஷ்வாவுடனே கீழே இறங்கி வந்த வித்யாதேவி அவனை பூஜை அறைக்கு அழைத்து சென்று விபூதி கும்குமம் வைத்து விடவும் அவரிடம் ஆசி வாங்கி கொண்டு வாசல் அருகே வந்தவன் தாயின் புறம் திரும்பி


"ம்மா நீங்க கால் பண்றீங்க அப்போதான்" என்று அவன் பேச்சை தொடங்க வித்யாதேவியின் புருவம் முடிச்சிட்டது,

அதை கண்டவன் குரலை செருமி "எஸ் ஐ மீன் இட் ப்ரீத்தியை நீங்க ஏத்துக்கலை எத்தனை வருஷம் ஆனாலும் நான் இங்க வர மாட்டேன்" என்று மிரட்டலான குரலில் கூற,

மகனிடம் இதை எதிர்பார்த்து இருந்தாலும் 'எத்தனை வருடம்' என்ற அவன் வார்த்தையில் சற்று திகைத்து தான் போனார்.

அவர் வலக்கரத்தை எடுத்து அதன் மீது தன் கரத்தை வைத்தவன் "நான் பண்ற ப்ராமிஸ் வேல்யு மத்தவங்களை விட உங்களுக்கு நல்லா தெரியும்" என்று அவரை பார்த்தவன்,

"இட்ஸ் எ பிராமிஸ் நான் சொன்னதுல மாற்றம் இல்லை" என்று கூற,

விழியகலாமல் அவனையே பார்த்திருந்த வித்யாதேவிக்கு மனதில் முதலில் தோன்றிய முகம் பேரனினது தான்..!!

குழந்தையை தந்தையிடம் இருந்து பிரிந்து வைப்பதா ..?? அதுவும் அவரே..!! என்று எண்ணியவருக்கு மகன் மீது இருந்த வருத்தம் கோபமாக உருமாறியது,

"என்ன நினைச்சிட்டு இருக்க தேவ்..?? கிளம்பும் போது இந்த பேச்சு எடுத்து கார்னர் பண்ணி காரியம் சாதிக்க பார்க்கிறியா..?? என்று பொரிந்தவர் அதான் ப்ரீத்தி உன் மனைவியா இந்த வீட்டுக்கு மருமகளா வந்தாச்சே அப்புறம் நான் ஏத்துகிட்டா என்ன..?? ஏற்காமல் போனா என்ன..?? அதுக்காக என் பேரனை தண்டிப்பியா நீ..? " என்று சிவந்த விழிகளுடன் கேட்க,

'அம்மா உலகத்துல எந்த மூலையில இருந்தாலும் என் குழந்தையை பார்க்க வழியா இல்லை ..??' என்று புருவம் உயர்த்தி தாயை பார்க்க,

"அப்போ தண்டனை எனக்கு அப்படி தானே..??" என்று மகனை ஆழ்ந்து பார்த்தவர் , இதனால ப்ரீத்தி மேல வெறுப்பு கூடும் தேவ் புரியுதா உனக்கு..!!

' என் அம்மா அப்படி இல்லை ' என்றான் உடனே

'என் மகனும் இத்தனை நாள் இப்படி இல்லை' என்றார் அவரும் சளைக்காமல்

அதை புரிந்து கொண்டவன் "உங்களை விட முக்கியமான்னு கேட்டா..?? என்னோட பதில் என்னைவிட எனக்கு ப்ரீத்தி முக்கியம்..!!"

அவன் வார்த்தைகளே அவள் மீதான காதலை உணர்த்த 'அப்புறம் ஏன் இந்த ஓட்டம்..?? எதுக்காக..?? யார்கிட்ட இருந்து தப்பிக்க..?? ' என்று அவரும் நேரடியாகவே கேட்டுவிட,

அதற்கு பதிலளிப்பதை தவிர்த்தவன் 'இப்போ என்னை வழி அனுப்ப வந்த மாதிரி என்னை வரவழைக்க ஒரே ஒரு கால் பண்ணுங்க போதும் எங்க இருந்தாலும் வந்துடுவேன்'

"என் மேல அவ்ளோ நம்பிக்கையா..??" என்று கேட்க,

அதற்கும் பதிலளிக்காமல் அவரை பார்த்து புன்னகைத்தவன் அவர் கன்னத்தில் இதழ் பதித்து "பைம்மா குட் நைட்" என்று விடை பெற்று காரில் ஏறி அமர்ந்தான்.

வித்யாதேவி மகனை பார்த்திருக்க காரை ஸ்டார்ட் செய்தவாறு அவரை பார்த்தவன், "மருமகளுக்கான அர்த்தம் உங்களுக்கு தெரியும்..!! வைட்டிங் பார் யுவர் கால் ம்மா" என்றவாறு கிளம்பியிருந்தான்.

மகன் கூறியதன் பொருள் உணர்ந்து பல நிமிடங்கள் அங்கேயே உறைந்து நின்றுவிட்டார் வித்யாதேவி.


********************************************************

இருட்டி இருந்த அறையில் விளக்கை ஒளிரவிட்டவள் அங்கு சற்று நேரத்திற்கு முன் இருந்த பூக்களோ மெழுகுவர்த்திகளோ இல்லாமல் சுத்தமாக இருப்பதையும் விஷ்வா இல்லாததையும் கண்டு ஒரு நொடி கண்கள் சுருங்கி விரிந்ததே தவிர அதை கண்டு பெரிதாக பெரிதாக மகிழ்ந்துவிடவில்லை. பின்னே..!! ஆரணியில் இருந்து கிளம்பி இங்கு வரும் வரையில் கூட அவனுடன் ஒரே அறை என்பதை நினைத்து பார்த்திராத ப்ரீத்தி எப்போது அவனை தண்டனையாக ஏற்று கொள்ள முடிவு செய்துவிட்டாளோ அப்போதே அறையில் அவன் இருப்பையும், சீண்டல்களையும் சகித்து கொள்ளும் மனநிலைக்கு தன்னை தயார் படுத்தி கொண்டாள்.

அதனால் எழிலிடம் பேசி முடித்து வெளியில் வந்தவளுக்கு இப்போது அவன் அங்கு இல்லாதது குறித்த நிம்மதியோ, சந்தோஷமோ எதுவும் அவளிடம் தென்படவில்லை. மிக மிக சமநிலையில் அவள் மனம் இருக்க முகத்திலோ உணர்வுகள் அற்று போய் இருந்தது.

முதல் நாள், புது இடம், அறிமுகமில்லாத முகங்கள், பரிட்சயமற்ற சூழல், அன்னியமானவனின் அறை என்ற சஞ்சலம் ஒரு புறம் இருந்தாலும் அதை எல்லாம் மீறிய இத்தனை நாட்கள் இல்லாத நிம்மதி மனதில் விரவி இருப்பதை கண்டு அவளுக்கே ஆச்சர்யம் தான்..!!

நள்ளிரவு நேரம் விஷ்வா எங்கு சென்றான் என்பது அவளுக்கு தெரியாது..!! எப்போது வருவான் என்ற கணிப்பும் இல்லை..!! அவனை அவள் வாழ்க்கை துணையாக ஏற்றிருந்தால் தானே தேட தோன்றும் அவளுக்கும் அவனுக்குமான உறவை அவனே உறுதிபடுத்தி சென்ற பின் அவனும் அதை எதிர்பார்க்க போவதில்லை என்பதை ப்ரீத்தியும் நன்கு உணர்ந்திருந்தாள்.

அவனை தேட தோன்றவில்லையே தவிர கதவை தாழிட மனமில்லை அவன் அறை எப்போது வேண்டுமானாலும் வந்து செல்லும் உரிமையை தடுக்க அவள் யார்..?? அதோடு விஷ்வா கூறிய காதல் கதை நினைவில் எழ கசப்புடன் புன்னகைத்து கொண்டவள் லேசாக கதவை சாற்றிவிட்டு வந்து உள்ளறையில் இருந்து குழந்தையை தூக்கி கொண்டு வர அது ஈரம் செய்திருப்பதை கண்டு துணி மாற்றிவிட்டு இரண்டு மணி நேரத்திற்கும் மேலானதால் உறங்கி கொண்டிருந்த குழந்தையை எழுப்பி பால் கொடுத்து தட்டி கொடுத்தவாறே சில நிமிடங்கள் அறையினுள் நடக்க தொடங்கினாள்.

எப்போதும் கழிவிரக்கம் கொண்டு அதே இடத்தில் தேங்கி நிர்ப்பது அவள் குணமல்ல "Empathy is better than sympathy" என்ற கொள்கை கொண்டவள் இத்தனை வருடங்களில் அவள் கழிவிரக்கம் கொண்டு சிந்திக்க முடியாமல் தேங்கி நின்றது தன் குழந்தை குறித்து மட்டுமே..!! ஆம் தாலியை கழற்றி கொடுத்த போது கூட தன்னை குறித்த கவலை அவளுக்கு இருக்கவே இல்லை ஆனால் சரண் குழந்தையை ஏற்க மறுத்து சென்ற போது அவள் கொண்ட உயிர்வதை அப்பப்பா மீண்டும் அந்த நிமிடங்களை நினைத்து பார்க்கும் சக்தி கூட அவளுக்கு இல்லை.

பிரகாசமால் புறக்கணிக்க பட்டு தனித்து சமூகத்தோடு போராடி வளர தொடங்கியவளுக்கும் குழந்தை குறித்த கற்பனை உண்டு அதில் முக்கியமானது எக்காலத்திலும் தன் குழந்தையை தன் இடத்தில் நிறுத்தி விடகூடாது என்பது..!! ஆனால் காலம் அவள் குழந்தையை ஓரிரு நாட்கள் அவ்விடத்தில் வைத்த போது மூளை மரத்து தான் போனது ப்ரீத்திக்கு. இப்போது விஷ்வாவிடம் பேசி அவளுக்கான இடம் என்ன என்பதை தெளிவு படுத்தியவளுக்கு தன் நிலை குறித்த கழிவிரக்கம் இல்லை அடுத்து என்ன என்ற யோசனை தான்.

உள்ளே நுழைந்த போது அறையின் அலங்காரம் மட்டுமே அவள் கண்ணையும் கருத்தையும் நிறைத்திருக்க இப்போது விழிகளை சுழலவிட்டவாறு நடக்க அறையில் குவிக்கபட்டிருந்த பொருட்களே அவன் ரசனையை எடுத்துரைக்க மெல்ல தட்டி கொடுத்து குழந்தையை உறங்க வைத்தவள் தானும் அருகே படுக்க மனதில் இருந்த வெகுநாள் பாரம் இறங்கிய நிம்மதியில் உடனே அவளை உறக்கம் தழுவிக்கொண்டது.

ஆம் பாரமே தான்..!! பின்னே அவள் செய்து முடித்திருப்பது என்ன அத்தனை சாதாரண காரியமா..?? எளிதாக கடந்து வந்துவிட ..!! என்ன தான் கீர்த்தியின் போர்வையில் பிரகாசத்தின் வீட்டிற்கு சென்றிருந்தாலும் அதன் பின் அவள் எடுத்தவை யாவும் அவளே கற்பனை செய்து கூட பார்த்திராத விடயங்கள் அல்லவா..?? சரண் வீட்டிற்கு செல்லும் முடிவை எடுப்பதற்கு தன் மனதை அவள் தயார்படுத்திய நாட்கள் தான் அவள் வாழ்வில் கொடுமையிலும் கொடுமையானவை..!! கண்மூடித்தனமான ஆத்திரத்தில் அதை செயல்படுத்திய போது இன்று விஷ்வதேவிடம் அவள் இறுதியாக கூறிய வார்த்தைக்கு உயிர் கொடுப்பது போலல்லவா அன்று நடந்து கொண்டாள்.

அவள் நடத்திய யாகத்தில் அவளையே எரித்த போது புலப்படாத ரணமும் உணராத வலியும் தீ அணைந்த பின்னரும் அவளை விழுங்கி கொண்டிருந்தது. எழில், அலர் என்று யாரிடமும் அதை பகிர முடியாமல் தவித்து கிடந்தவளுக்கு இன்று விஷ்வதேவிடம் அனைத்தையும் இறக்கி வைத்த பின்னர் பல நாட்களுக்கு பிறகு அப்படி ஓர் நிம்மதியான உறக்கம்.

காலையில் இருந்தே விஷ்வாவுடனான போராட்டம், பயணம் செய்தது, இரவு அதிக நேரம் விழித்திருந்தது உறங்கிய பின்பும் அவ்வபோது குழந்தைக்கு பால் கொடுப்பதற்காக எழுந்தது என்று உறக்கம் தடை பட விடியும் தருவாயில் வர்ஷினி குழந்தையை தூக்கி செல்லவும் மேலும் சில மணி நேரம் தூங்கி எழுந்தாள்.

குளியலறை சென்று முகம் துடைத்தவாறு வெளியில் வந்தவள் மணியை பார்க்க அது ஒன்பதே முக்கால் என்று காண்பித்தது இத்தனை நேரமாகவா தூங்கி இருக்கிறேன் குழந்தை பசித்திருக்குமே என்று அறையை திறந்து கொண்டு அவள் வெளியே வர அதே நேரம் வர்ஷினியும் குழந்தையோடு வந்தாள்.

'அண்ணி குட்டி பையனுக்கு பசிக்குது'

'எங்க போயிட்ட வர்ஷு..?? இங்க தான் இருப்பன்னு நெனச்சேன்' என்றவாறு குழந்தையை வாங்கி கொண்டவள் 'இவ்ளோ நேரம் குழந்தை பால் குடிக்காம இருக்க கூடாது.. என்னை எழுப்பி இருக்கலாம்ல' என்று கேட்க

'அண்ணி இவ்ளோ நேரம் சேம்ப் டீப் ஸ்லீப்ல இருந்தாரு எத்தனை முறை ட்ரை பண்ணியும் எந்திரிக்கவே இல்லை, இப்போ அம்மா வந்து எழுப்பி விடவும் முழிச்சவர் ஒரே அழுகை சார்க்கு இப்பதான் பசி தெரியுது ' என்றவள் அங்கிருந்த இண்டர்காமில் தகவல் கொடுக்க அடுத்த சில நிமிடங்களில் ப்ரீத்திக்கான பால் வந்து சேர்ந்தது.

ப்ரீத்தி குழந்தையின் பசி தீர்க்கவும் அவனை வாங்கி கொண்டவள், 'பாட்டி குட்டி பையனை கூட்டிட்டு வர சொன்னாங்க அண்ணி நீங்க பால் குடிச்சிட்டு பிரெஷ் ஆகிட்டு கீழ வந்துடுங்க' என்றுவிட்டு செல்ல,

அவளையே சில நிமிடம் பார்த்தவாறு அமர்ந்திருந்தவள் பின் பாலோடு எழுந்து அவன் அறையோடு அமைக்க பட்டிருந்த பால்கனி கதவை திறந்து கொண்டு சென்று நின்றாள்.

காலை சூரிய கதிர்கள் அவளை வரவேற்க முதல் கண்கள் கூச கை வைத்து மறைத்தவள் அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்தவாறு பாலை குடிக்க தொடங்கினாள். அதேநேரம் அவள் கைபேசி சிணுங்க அதை எடுத்து பார்த்தவளுக்கு தாயின் அழைப்பு என்றதும் முகம் மலர எடுத்தவள்,

"எப்படிம்மா இருக்கீங்க..?? சாப்ட்டீங்களா..?? " என்று கேட்க

வசுமதிக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை நேற்று முழுக்க அவரை பதறவைத்த மகளுக்கு இன்றும் சிறு தயக்கத்துடனே அழைத்திருந்தார் ஆனால் அவள் இயல்பாக பேசுவதை கண்டு வாயடைத்து போனார்.

"ம்மா எப்படி இருக்கீங்கன்னு கேட்டேன்..??"

" நா... நல்லா இருக்கேன் ப்ரீத்தி " என்று துளிர்த்த கண்ணீரை முந்தானையில் துடைத்து கொண்டே அவர் கூற

"அப்பா மத்தவங்க எல்லாம் எப்படி இருக்காங்க" என்று அவர்களை பற்றி பேச தொடங்கி அதன் பின் பத்து நிமிடங்களுக்கும் மேலாக தாய் மகளின் உரையாடல் தொடர்ந்ததில் வசுமதி உள்ளம் பூரித்து போனார் அதுவும் விஷ்வா குறித்து அவர் விசாரித்ததர்க்கு 'நல்லா இருக்கார்ம்மா' என்ற ப்ரீத்தியின் பதிலை நம்ப முடியாமல் வாயில் கரம் வைத்து நின்றுவிட்டார் வசுமதி அத்தனை ஆச்சர்யம் ஆனால் மகளை மாற்றி இருக்கும் மருமகன் மீது அத்தனை உயர்ந்த எண்ணம்.

சரிம்மா அப்புறம் பேசுறேன் என்று அவள் கைபேசியை வைக்கவும் விஷ்வாவின் மெசேஜ் வரவும் சரியாக இருந்தது.

மெசேஜை திறந்து பார்க்க ' பிப்டி நைன் டேஸ் மோர் டார்லிங் ' என்று அவள் கேட்டிருந்த இரண்டு மாத கால அவகாசத்தை நினைவு படுத்தி கூடவே பத்து கிஸ்ஸிங் ஸ்மைலி போட்ருந்தான். அதை கண்ட ப்ரீத்தி முகத்தல் வெறுமை படர ஒரு நொடி கண்களை மூடி திறந்து அதை ஏற்று கொண்டால் அவ்வளவே..!!

பாலை குடித்து முடித்து மேலும் வெயிலில் சில நேரம் நின்றவள் அதன் பின் நின்ற நிலையில் சில அடிப்படை உடற்பயிற்சிகள் செய்து முடித்து குளிக்க சென்றால்.

வெளியில் வந்தவளுக்கு அவன் அறையை உபயோகபடுத்த தயக்கம் எழுந்த போதும் இதை எல்லாம் தவிர்க்க முடியாது என்பதால் இயல்பாக தன் போக்கில் தயாராகி லிப்ட் மூலம் கீழே இறங்கி வந்தால். நேற்றே வர்ஷு அவளை லிப்ட்டை உபயோக படுத்த கூறியிருந்தாலும் காலை வந்த போதும் மீண்டும் அதை நினைவு படுத்தி விட்டு சென்றிருந்தால்.

கீழே தரை தளத்திற்கு வந்தவள் கண்ணில் முதலில் பட்டது வசுந்தராதேவி தான் குழந்தையை வைத்து கொண்டு அமர்ந்திருந்தார்.

'குட் மார்னிங் பாட்டி' என்று அவரிடம் வந்தவள் குழந்தையை வாங்குவதற்க்காக கை நீட்ட, இருக்கட்டும்மா முதல்ல சாப்பிட்டுட்டு வா என்றார்.

சரி பாட்டி என்றவள் நீங்க சாப்ட்டீங்களா..? என்றிட,

"ஆச்சுமா இனி நேரத்தோட வந்துடு இந்த நேரத்திற்கு நீ சாப்பிட்டு எப்போ அது பிள்ளைக்கு பாலாகுறது..??" என்று அவர் கேட்க,

'கண்டிப்பா பாட்டி' என்றவள் அங்கிருந்த உணவு மேஜையில் அமர அவளுக்கான உணவுகள் பரிமாற்ற பட்டது. மூன்று இட்லிகளை போதும் என்று கூறிவிட்டவள் பரிமாறிய பட்டம்மாவிர்க்கு நன்றி கூறி இரு நொடி கண் மூடி பிரார்த்தித்து உண்ண தொடங்கினால்.

பாதி உணவில் அவள் எதிரே வந்து அமர்ந்தார் வித்யாதேவி அவரை கண்டதும் மரியாதை நிமித்தமாக 'குட் மார்னிங் ஆன்டி' என்று சிறு புன்னகையுடன் ப்ரீத்தி எழுந்து நிற்க,

'சாப்பிடும் போது எழக்கூடாது உட்கார்' என்றவர் அமர்ந்து அவள் சாப்பிட தொடங்கவும் அவளையே பார்த்திருந்தார்.

அதில் அசௌகரியமாக உணர்ந்தவள் நிமிர்ந்து, 'நீங்க சாப்பிடலையா ஆன்டி' என்று கேட்க,

"சாப்பிடும் போது பேசவும் கூடாது கவனம் சாப்பாடு மேல தான் இருக்கணும்" என்றார் அழுத்தமாக

'சரி' என்று தலை அசைத்தவள் அமைதியாக உண்ண தொடங்கினாள் அனைத்துமே வித்யாவின் மேற்பார்வையில் பட்டம்மாள் தயாரித்த காரம் குறைந்த உணவுகள் ப்ரீத்தி மூன்று இட்லியோடு எழுந்து கொள்வதை பார்த்தவர், 'உட்கார்' என்றார்.

குரலை உயர்த்தவில்லை, கட்டளை இல்லை ஆணை இடவில்லை, மிரட்டலும் இல்லை ஆனாலும் ப்ரீத்தியால் அந்த குரலை மறுத்து பேச முடியில்லை அமைதியாக அமரவும் மேலும் இரண்டு இட்லியை எடுத்து வைத்தவர் 'சாப்பிடு' என்றார்.

தயக்கமாக அவரை பார்க்கவும், வயித்துல இருக்கும் போது மட்டுமில்லை இப்பவும் இன்னும் சில மாசம் குழந்தைக்கும் சேர்த்து சாப்பிடனும் டாக்டர் உனக்கு நான் சொல்ல தேவை இல்லை அதனால சாப்பிடு என்றவர் பட்டம்மாவிர்க்கு கண் காட்ட அவர் சாம்பார் ஊற்றினார்.

'நேத்து ட்ராவல், அலைச்சல், புது இடம்ன்னு நீ பெருசா சாப்பிடலை' என்ற போது தன்னை இத்தனை தூரம் கவனித்து இருக்கிறாரா..?? என்ற ஆச்சர்யம் அவளிடம்.

'அதனால உனக்கு கட்டாயம் இது தேவை' என்றவர் அவள் தட்டை பார்வையால் சுட்டி காட்ட ப்ரீத்தியும் 'சரி' என்பதாக தலை அசைத்தால் ப்ரீத்தி.

பட்டம்மாள் புறம் திரும்பிய வசுந்தரா அவரிடம், "தினமும் நாள் ஒன்னு போல இருக்காது நாளையில் இருந்து காலை டிபனை ரெண்டு வேலையா பிரிச்சி கொடு, தினமும் காலையில் ஆறரைக்கு ப்ரீத்திக்கான பால் ரூம்க்கு போயிடனும் தென் மார்னிங் எய்ட் ஒ கிளாக் ஷார்ப்பா ப்ரேக்பாஸ்ட் பண்ணிடனும். ப்ரீத்தியால முடியும்ன்னா கீழ வந்து சாப்பிடட்டும் இல்லையா தகவல் கேட்டு ரூம்க்கு அனுப்பிடு தென் சாலட் அப்புறம் ஒரு பதினோரு மணிக்கு ஸ்பிரவுட்ஸ் என்றவர் அதன் பின்பான அவளின் அன்றாட உணவு குறித்து பட்டியலிட சிறு மலைப்புடன் அவரை பார்த்தாள் ப்ரீத்தி.

வித்யா கூறிய அனைத்திற்கும் பட்டம்மால் சரி என்று கூறி டைனிங் டேபிளை சுத்தம் செய்ய அதே நேரம் ப்ரீத்தியும் சாப்பிட்டு முடித்திருந்தால்.

அவள் கை கழுவி வரவும் 'தேவ் எங்க ப்ரீத்தி..?' என்றார்.

'தேவ்' என்று அவரை பார்த்தவளுக்கு அப்போது தான் இரவு மட்டுமல்ல காலை எழுந்ததில் இருந்தே அவனை பார்க்காததும் அவனிடம் இருந்து மெசேஜ் மட்டும் வந்தது புரிய இப்போது அவருக்கு என்ன பதில் சொல்லவது என்ற தடுமாற்றம்.

பின்னே அவன் எங்கிருக்கிறான் என்று அவளுக்கு எப்படி தெரியும் நிச்சயமாக அவன் கூறி வைத்திருக்கும் கதைக்கு இப்போது அவள் 'தெரியாது' என்ற பதிலை சொல்லவே முடியாது.

என்ன செய்யலாம் என்று யோசித்தவளுக்கு அருகே இருந்த கைபேசி கண்ணில் விழ அவன் காலை மெசேஜ் அனுப்பிய நம்பருக்கு மெசேஜ் செய்து கேட்கலாம் என்று வித்யாவின் பார்வையில் படாமல் மெல்ல அதை மேஜை மீது இருந்து எடுத்து அதை திறக்க முற்ப்பட,

'என்ன பண்ற ப்ரீத்தி..??'

'அது.. நீங்க... ' என்றவளுக்கு குற்றம் செய்து பிடிபட்ட நிலை

'நான்..??'

'இல்ல தேவ்..!!' என்று நெற்றி வியர்வையை துடைத்து கொண்டு அவரை பார்க்க,

"ஆமா தேவ் எங்கன்னு கேட்டேன் ஆனா என் கேள்விக்கு பதில் சொல்லாம போன் எடுத்தா என்ன அர்த்தம்..?" என்று அவளை துளையிடும் பார்வை பார்க்க,

'அது கால் வந்த மாதிரி இருந்தது அதான் சாரி ஆன்டி" என்றவளிடம்,

'சாரி ஒருபக்கம் இருக்கட்டும் தேவ் எங்க..??' என்றார் கருமமே கண்ணாக

வறண்டு போன இதழ்களை நாவால் ஈரம் செய்தது கொண்டே அவரை பார்த்தவளை நோக்கி வித்யா புருவம் ஏற்றி இறக்க உடனே ப்ரீத்தி கண்களை மூடி நெற்றி பொட்டில் அழுத்தி கொடுக்க நல்ல வேலையாக நேற்று அவன் மருத்துவமனைக்கு சென்றது நினைவு வர,

"ஹா.. ஹாஸ்... ஹாஸ்பிட்டல் போயிருக்காரு ஆன்டி நேத்து சர்ஜரி பண்ணின கேஸ்ல ஏதோ இஷுன்னு காலையிலேயே கால் வந்ததுன்னு கிளம்பிட்டார், நான் தூக்க கலகத்துல சரியா கவனிக்கலை இப்போதான் நியாபகம் வந்தது" என்று ஏதோ அந்நேரத்திற்கு அவரை சமாளிக்கும் விதமாக அதே விதத்தில் நம்பும் படியான பொய்யை கூறவும்,

ஒற்றை புருவம் 'உயர்த்தி அப்படியா..?' என்பதாக வித்யா அவளை பார்த்தவர் பார்வையில் இருந்த எள்ளலை உணராதவள்,

"ஏன் ஆண்டி உங்க கிட்ட சொல்லலையா..??"

"வைப் கிட்ட சொன்னா போதும்ன்னு நெனச்சி இருப்பான்" என்றவர் இதழ்கள் லேசாக வளைய,

"ஐயோ அப்படி எல்லாம் இல்ல ஆன்டி எமெர்ஜன்சின்னு அவசரமா கிளம்பி இருப்பார் அவருக்கு நீங்க ரொம்ப முக்கியம்" என்று சமாளிக்க,

"அப்படியா..?? உன்கிட்ட சொல்லி இருக்கானா..??" என்று கேட்க

அவன் எப்போது அவளிடம் இதை எல்லாம் சொன்னான், நேற்று மருத்துவமனைக்கு செல்லும் முன் அவன் வித்யாவிடம் விடை பெற்ற விதத்தை வைத்து அவளே யூகித்து சொன்னது தான்.

அவர் கேள்விக்கு ப்ரீத்தியின் முகம் போன போக்கை பார்த்த வித்யாதேவியின் கண்கள் இடுங்கியது.

ஹாய் செல்லகுட்டீஸ்...


இதோ "உயிரில் உறைந்த உறவே !!" அடுத்த அத்தியாயம் பதித்துவிட்டேன் கதை எப்படி போகுதுன்னு மறக்காம சொல்லிட்டு போங்க. சென்ற பதிவிற்கு லைக்ஸ் கமெண்ட்ஸ் செய்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

ருத்ரபிரார்த்தனா
 

Rudhraprarthna

Moderator
உறவு - 24

"அவருக்கு நீங்க ரொம்ப முக்கியம் ஆன்டி..!!" என்று கூறவும் ப்ரீத்தி மீது படிந்திருந்த வித்யாவின் பார்வை மேலும் ஆழம் பெற்றது.

நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்தவர் "அப்படியா..??" என்ற ஆச்சர்யத்தோடு சற்று முன்னே வந்து கைகளை மேஜையில் கோர்த்து கொண்டு ப்ரீத்தியிடம்,

'உன்கிட்ட என்னை பத்தி பேசி இருக்கானா ப்ரீத்தி..?? என்று கேட்டார்,

ப்ரீத்தியோ வழக்கமாகவே மருமகள் வந்த பின் மாமியார்களுக்கு ஏற்படும் பாதுகாப்பின்மை காரணமாக வித்யா அவ்வாறு பேசினார் என்றெண்ணி அவரை சமாதனபடுத்த ப்ரீத்தி கூறிய ஆறுதல் வார்த்தைகளை கொண்டே அவர் எதிர் கேள்வி தொடுப்பார் என்று ப்ரீத்தி துளியும் எதிர்பார்க்கவில்லை.

பின்னே வழக்கமான தாய்மார்களிடம் இருந்து அவர் வித்தியாசமானவர் என்பது ப்ரீத்திக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லையே..!!

"சொல்லு ப்ரீத்தி என்னை பத்தி என் பையன் என்ன சொல்லி இருக்கான்னு தெரிஞ்சிக்க ஈகரா இருக்கேன்" என்று அவர் கேட்கவும்

ப்ரீத்திக்கு ஒன்று மட்டும் புரிந்து போனது "அது..!! நிச்சயம் இந்த வீட்டில் விஷ்வாவை விட வித்யாவை எதிர்கொள்வது தான் அவளுக்கு மிகபெரிய சவால் என்று..!! "

ஆனால் அது குறித்த மனத்தாங்கலோ, வருத்தமோ சுத்தமாக ப்ரீத்திக்கு கிடையாது ஏனெனில் ஒரு தாயாக வீட்டு தலைவியாக அவர் நிலையில் இருந்து அவர் சரியே என்பதால் தன்னை குறுக்கு விசாரணை செய்யும் வித்யா மீது ப்ரீத்தியால் குறைபட முடியவில்லை.

யாராக இருந்தாலும் திடீரென அறிமுகமில்லாத ஒருத்தியை கொண்டு வந்து உங்கள் மருமகள் என்று அறிமுகபடுத்தினால் அதுவும் கைக்குழந்தையோடு கொண்டு வந்து பெற்றோர் முன் நிறுத்தினால் நிச்சயம் கோபம் வர தான் செய்யும்.

அதிலும் விஷ்வா அவர்களுக்கு ஒரே பிள்ளை செல்வாக்கான பெயர் பெற்ற குடும்பம் எத்தனை ஆடம்பரமாக அவன் திருமணத்தை நடத்த பெற்றவர்களாக அவர்கள் எத்தனை எத்தனை கற்பனை வைத்திருந்திருப்பர் அவர்கள் பார்வையில் இப்போது அதை எல்லாம் கைகூட விடாமல் செய்திருக்கும் தன் மீது அவர்களுக்கு கோபம் எழாமல் இருந்தால் தான் ப்ரீத்தி ஆச்சர்யபட்டிருப்பாள்.

அவள் அதிர்ஷ்டம் இங்கே வித்யா தன் ஏமாற்றத்தையும், மனசுணக்கத்தையும் அவள் மீதான கோபத்தையும் கடும் சொற்களால் குத்தி காட்டாமல் வெகு இயல்பாக நிதானமாக கையாளும் விதம் கண்டு ப்ரீத்திக்கே பிரமிப்பு தான்..!! எப்படி இவரால் இப்படி முடிகிறது, இந்த நிதானமும் பக்குவமும் ஏன் தனக்கு இல்லாமல் போனது பிரகாசத்தால் அவள் வஞ்சித்து ஏமாற்றப்பட்ட போது ஆத்திரம் கண்ணை மறைத்து அவளை மற்றவர்கள் பற்றி சிந்திக்க விடாமல் செய்து விட்டதே.., குழந்தை விஷயத்தில் பார்வதி கூட அவளை எவ்வளவோ தடுக்க பார்த்தார் ஆனால் அன்று அவர் வார்த்தைக்கு கட்டுபடாதவளுக்கு இன்று வித்யாவின் பார்வைக்கே கட்டுப்பட்டு நிற்கும் தன்னை குறித்தும் வியப்பே மேலிட்டது.

நேற்று சந்தித்த போது அவர் விஷ்வாவிடம் பேச மறுத்ததை கண்டவளுக்கு அதன் பின் அவர் தன்னிடமும் பேசாமல் பாராமுகம் காட்ட போகிறார் எப்படி அவரை எதிர்கொள்ள போகிறோம் என்ற பெரும் தவிப்புடன் இருந்தவளுக்கு அவர் அவளிடம் பேசுவதே பெரும் வியப்பு தான்..!!

இதே அவர் இடத்தில் வேறொருவர் இருந்திருந்தால் அவளை வீட்டினுள் கூட அனுமதித்து இருக்க மாட்டார்கள் இவரோ அவளை அவமதிக்காமல் அனுமதித்ததோடு குழந்தைக்காவே என்றாலும் சக மனுஷியாக மதித்து அவள் உடல்நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டு கண்ணியமாகவே விசாரித்து கொண்டிருப்பவர் மெல்ல ப்ரீத்தியை தன் ஆளுமையால் வசீகரிக்கவும் செய்திருந்தார் என்பது தான் நிஜம்.

நேற்று தேவ் கூறிய காதல் கதையில் பல இடங்களில் ஓட்டைகள் இருப்பதை அவன் சொல்லும் போதே உணர்ந்திருந்த ப்ரீத்திக்கு இப்போது அவளிடம் கேள்வி கணைகளை தொடுத்து கொண்டிருக்கும் வித்யாதேவியிடம் நிச்சயம் அது அதிக தூரம் செல்லுபடி ஆகாது ஏதேனும் ஒருகட்டத்தில் அவர்களின் குட்டு வெளிப்பட்டு மாட்டிகொள்ள வாய்ப்பு உண்டு என்று புரிந்து போக அதை தடுக்க அவள் முதலில் விஷ்வாவிடம் பேசியாக வேண்டும் ஆனால் இப்போது வித்யா எதிரில் அது சாத்தியமே இல்லை என்பதை உணர்ந்தவளுக்கு சிறு பதட்டம் உண்டானது.

எதேர்ச்சையாக அவர் முகம் பார்க்க வித்யாவோ உன் பதிலுக்காக காத்திருக்கிறேன் என்பதாக கன்னத்தில் கரம் பதித்து அவளையே பார்க்க ப்ரீதிக்கு படபடப்பு கூடியது வித்யா தேவியின் கேள்விக்கு என்ன பதிலளிப்பது என்று கைகளை கோர்த்து கொண்டு அவள் வேகமாக யோசிக்க தொடங்க அதற்குள்,

'என்ன ப்ரீத்தி பதிலை காணோம் அமைதியாகிட்ட..?? ஒருவேள தேவ் என்னை பத்தி எதுவுமே சொல்லலையா..??' என்று அவர் பார்க்க,

'ஹா..ஹான் சொல்லி இருக்கார் ஆன்டி, அது எப்படி உங்களை பத்தி சொல்லாம விடுவாரு எங்களோட பேச்சில் பாதி உங்களை பற்றி தான் இருக்கும் என்று இதழ் மலர அவரை பார்த்து நிறைய சொல்லி இருக்கார் ஆன்டி' என்றவள் மனமோ அடுத்து அவர் கேள்வி என்னவாக இருக்கும் என்று யோசித்து தன்னை தயார்படுத்த முற்ப்பட அருகே இருந்த வித்யாவோ அடுத்து கேட்ட கேள்வி ப்ரீத்தியின் சிந்தனைக்கு அப்பாற்பட்டு இருக்க மூச்சு விடவும் மறந்தவளாக திகைத்து அவரை பார்த்திருந்தாள்.

நாடியில் கரம் பதித்து வித்யா தன் கேள்வியை முடித்த போது ப்ரீத்தியின் முகம் ரத்த பசையை முற்றிலுமாக இழந்து போனது. அதிர்ந்து அவரை பார்த்து கொண்டிருந்தவள் சில நொடிகளுக்கு பின் மேஜையில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்து நெற்றியை நீவிவிட்டு அவர் கேள்வியை உறுதி படுத்த வேண்டி, 'எ... என்ன கேட்..டீங்..க ஆன்..டி' என்றவளுக்கு வார்த்தைகள் தந்தியடிக்க தொடங்கி இருந்தது.

'அப்போ உயிரா காதலிச்ச உங்க இரண்டு பேருக்குள்ள பிரிவு வர நான் காரணமான்னு கேட்டேன் ப்ரீத்தி..??" என்றார்.

'உயிர் காதலா..?? பிரிவா..?? இவர் காரணமா..??' என்று எண்ணியவளுக்கு தலை சுற்ற தொடங்கியது... அவனோடு எப்போது இவள் சேர்ந்திருந்தால் பிரிவதற்கு அதுவும் இவர் எப்படி காரணம்..?? எதற்க்காக இப்படி பேசுகிறார் இவர்..?? என்று யோசிக்க தொடங்கியவளுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை நெற்றியை தட்டி கொண்டே அவரை பார்த்தவளுக்கு அப்போது தான் நேற்று அவன் கூறிய பிரிவு குறித்த கதை நினைவு வர,

உடனே 'இல்லல்ல ஆன்டி அப்படி எல்லாம் இல்ல' என்றாள் அவசரமாக

"அப்புறம் ஏன்மா விஷ்வா குழந்தை வேண்டாம்ன்னு சொன்னான்..??"

"என்னது..??? குழந்தை வேண்டாமா..?? அவனுக்கா..?? அடப்பாவி குழந்தையை எனக்கே தெரியாமல் கொடுத்தவன் அக்குழந்தையை வேண்டாம் என்று சொன்னானா..?? இது எப்போது..??" என்று திகைத்து அமர்ந்திருந்தவளுக்கு ,

"கடவுளே இது என்ன புது கதை..??" என்று தோன்ற ஒன்றும் புரியவில்லை.

ஆம் பெற்றோரிடம் குழந்தையை அவன் கலைக்க சொன்னதால் ப்ரீத்தி பிரிந்து சென்றாள் என்று கூறி இருந்தவன் வேண்டுமென்றே நேற்று ப்ரீத்தியை அவன் கையணைப்பில் வைத்து கொண்டு பேசிய போது கவனமாக அவளிடம் அதை பற்றி கூறாமல் தவிர்த்திருந்தான்.

ஆம் !! ப்ரீத்தியை எதிரே நிற்க வைத்தோ அமர வைத்தோ அவன் கதை கூறி இருந்தால் நிச்சயம் அதை கூர்ந்து கவனித்து அதில் ஆயிரத்தெட்டு கேள்விகளை கேட்டு விளக்கம் பெற்று அவன் கூறிய கதையில் இருக்கும் ஓட்டைகளை எல்லாம் அப்போது அடைக்கும் வழியையும் அவனுக்கே சொல்லி கொடுத்து இருப்பாள். ஆனால் அப்படி எதுவும் நடக்க கூடாது என்பதற்காகவே அவள் யோசிக்க முடியாத நிலையில் அதாவது அவளை தன் அணைப்பில் வைத்து கொண்டு கதை கூறியிருந்தான்.

ப்ரீத்திக்குமே நேற்று அவளே எதிர்பாராத விதமாக இனி அவனை அவன் தொடுகையை ஏற்று கொள்ளும் முடிவு எடுத்து விட்டிருந்தவளுக்கு தன்னை இறுக்கமாக அணைத்து கொண்டு கதை கூறிய அவனை மறுக்கவும் முடியாமல் அவன் அணைப்பை ஏற்கவும் முடியாமல் கிட்டத்தட்ட அவனோடு இருந்த நிமிடங்கள் அவளுக்கு நெருப்பில் நிற்ப்பது போல தான் இருந்தது.

அவன் அணைப்பை ஏற்க முடியாமல் கண்களை இறுக்கமாக மூடி பல்லை கடித்து கொண்டு நின்றவளுக்கு விஷ்வா சொல்லும்போதே ஆங்காங்கே பல ஓட்டைகள் இருப்பதை கண்டு கொண்டாலும் அது குறித்த விளக்கத்தை கேட்க தோன்றவில்லை.

அதற்கு இரு முக்கிய காரணம்..!! ஒன்று அவள் வரவிற்காக அவன் ஏற்கனவே அவன் குடும்பத்தை தயார் படுத்திவிட்டதால் அனைவரும் அவளை மனதார ஏற்று கொண்ட நிலையில் இனி யார் அது குறித்து கேட்க போகிறார்கள் என்ற அலட்சியம் ஒரு புறம் என்றால் எப்போதுடா அவன் கதையை கூறி முடித்து தன்னை விடுவிப்பான் என்ற தவிப்பு மறுபுறம், அதனால் மெளனமாக செவிமடுத்திருந்தாள்.

இறுதியாக 'டேக் கேர்' என்று கூறி அவள் நெற்றியில் இதழ் பதித்து அவன் கையணைப்பில் இருந்து அவளை விடுவித்ததும் ஆசுவாசமாக உணர்ந்தவளுக்கு அப்போது தெரியவில்லை அவளுக்கான தண்டனையை நிறைவேற்ற இங்கு அவள் தன் இருப்பை தக்க வைத்து கொள்ள ப்ரீத்தி பெரிதாக போராட வேண்டி இருக்கும் என்பதும் வித்யாவின் கேள்வி கணைகளை அத்தனை எளிதாக எதிர்கொண்டு அவரை சமாளிக்க முடியாது என்பதும்..!!

விஷ்வா குழந்தை வேண்டாம் என்று சொல்வதற்கு என்ன காரணமாக இருக்க கூடும் என்று பல நிமிடங்களுக்கு யோசித்தவளுக்கு அவனை பற்றியே பெரிதாக தெரிந்திராமல் இருக்கும் போது அவன் முடிவிற்கான காரணம் குறித்து யோசிப்பது எவ்வாறு சாத்தியம். பிரகாசம், சரண், கீர்த்தி ஆகியோர் குறித்து பல மாதங்களாக பின்தொடர்ந்து முழுதாக படித்திருந்தவளுக்கு அவர்களை கையாள்வது எளிதாக இருந்தது.

ஆனால் இங்கே தாய் மகன் இருவர் குறித்தும் எந்த புரிதலும் இல்லாதவளுக்கு சத்தியமாக என்ன பதில் கூறுவது என்று புரியாமல் போக ஆசிரியர் முன் விடை தெரியாமல் திருதிருத்து நிற்கும் மாணவனை விடவும் மோசமாக இருந்தது ப்ரீத்தியின் நிலை..!!

ஒரு கேள்விக்கு பதில் தெரியாமல், கூற முடியாமல் விழி பிதுங்கி ப்ரீத்தி நிற்ப்பது அவள் வாழ்வில் இதுவே முதல் முறை..!!

'சொல்லு ப்ரீத்தி' என்று வித்யா கூறிய அதே நேரம்,

"என்ன காலையிலேயே மாமியார் மருமகள் ஆலோசனை கூட்டம் தீவிரமா தொடங்கிட்டீங்க போல " என்றவாறே ஆர்பாட்டமாக அங்கு வந்த ஆகாஷ் "கூட்டணி பலமா இருக்கே இங்க அடியேனுக்கு அனுமதி உண்டா..??" என்றிட,

கண்களில் சிரிப்புடன் 'உனக்கு இல்லாததா..?? உட்காருடா' என்று தன் அருகே இருந்த நாற்காலியை சுட்டி காட்டினார் வித்யா.

"குட் மார்னிங் தியாம்மா..!! குட் மார்னிங் அண்ணி..!!" என்றவாறே ஆகாஷ் அமர

நெஞ்சில் கை வைத்து ஆசுவாசமடைந்த ப்ரீத்திக்கு ஆகாஷ் தன்னை காக்க வந்த ஆபத்பாந்தவனாக தோன்ற , 'குட் மார்னிங்' என்று அவசரமாக கூற,

வித்யா அருகே அமர்ந்தவன் புறம் திரும்பி 'குட் மார்னிங் கண்ணா' என்றவர்

'எப்போ வந்த..??' என்று கேட்கவும்,

"எர்லி மார்னிங் ஆகிடுச்சிம்மா " என்றவாறு அவரிடம் ஒரு கோப்பை அளித்தான்

அதை வாங்கி மேஜை மீது வைத்து விட்டு தட்டு வைத்து ஆகாஷுக்கு உணவை பரிமாறியவாறே வித்யா அவனிடம், 'மெயில் பண்ணிட்டியா..??' என்றார்.

"நேத்து நீங்க சொல்லவும் reschedule பண்ணிட்டேன் தியாம்மா ரெண்டு பேர் மட்டும் unavoidable off" என்றவன் 'உங்களுக்காக மூர்த்தி வைட் பண்ணிட்டு இருக்கார்' என்றான்.

"சரி என்றவாறு எழுந்தவர் follow ups மட்டும் தானே உனக்கு நான் ஆல்டர் பண்ணிக்கிறேன் நீ சாப்பிட்டு இன்னைக்கு ரெஸ்ட் எடு வரவேண்டாம் ஈவினிங் டேட்டாஸ் கலெக்ட் பண்ணி மெயில் பண்ணா போதும்" என்று கூறவும்,

'சரி' என்பதாக தலை அசைத்தவன் உண்ண ஆரம்பித்தான்.

பைலை எடுத்து கொண்டு வித்யா திரும்பி நடக்க அவர் நாற்காலியில் இருந்து எழுந்த போதே தானும் எழுந்து விட்ட ப்ரீத்தி செல்லும் அவரையே பார்த்து நிற்க வித்யா அவள் புறம் திரும்புவதை கண்டு வேகமாக அவர் எதிரே வந்து நின்றாள்.

பார்வைக்கு அர்த்தம் புரிந்து நடப்பவளை மெச்சும் விதமாக பார்த்தவர், " இன்னும் என் கேள்விக்கு நீ பதில் சொல்லலைன்னு நினைக்கிறேன் ப்ரீத்தி..!! சரி மெதுவா யோசிச்சி வை அதுக்குள்ளே நான் ஹாஸ்பிட்டல் போயிட்டு வரேன் " என்று நடைய தொடர,

வித்யா அவ்வாறு கூறவும், "நீங்களும் டாக்டரா ஆன்டி" என்று ஒரு ஆர்வத்தில் ப்ரீத்தி கேட்டுவிட,

மெல்ல திரும்பி இதழ் வளைய அவளை பார்த்தவர், "ஏன் பேஷண்ட்டா இருக்க கூடாதா..??" என்று கேட்க,

அவர் கூறியவிதமே தன் கேள்விக்கான பதில் அது இல்லை என்பது புரிய 'ஆன்டி' என்று அவரை பார்த்தவளுக்கு அடுத்து என்ன சொல்வது என்று தெரியவில்லை

அவள் அருகே வந்தவர் சம்பந்தமே இல்லாமல் , "உனக்கு எப்பவாவது அடி பட்டிருக்கா..??" என்றார்

'வாட்' என்பதாக அவரை பார்த்தவள், 'புரியலை ஆன்டி' என்றாள்.

'இல்ல உனக்கு சமீபத்துல தலையில எங்கயாவது அடிபட்டதான்னு கேட்டேன்' என்றவர் முகத்தில் சிரிப்பு இருந்ததோ...?? அல்லது அது அவள் பிரம்மையா..?? என்று ப்ரீத்தி திகைத்து நிற்க வித்யா வாசலை கடந்து சென்று கொண்டிருந்தார்.*******************************************************குழந்தையோடு அறையில் வந்து அமர்ந்த ப்ரீத்திக்கு நிலை கொள்ளவில்லை. வித்யாவின் பார்வைக்கும் வார்த்தைக்கும் அர்த்தம் புரியாமல் குழம்பி நின்றவள் உடனே விஷ்வாவிற்கு அழைக்க அவன் எண்ணோ அணைத்து வைக்கபட்டிருந்தது. அப்போது தான் அவன் மெசேஜ் அனுப்பிய வேறு எண்ணிற்கு முயற்சித்து பார்க்க அதிலும் அவனை பிடிக்க முடியவில்லை.

சில நிமிடங்கள் என்ன செய்வது என்று புரியாமல் அறையினுள் நடை பயின்றவளுக்கு அப்போது தான் நேற்று வர்ஷு விஷ்வா குறித்து கூகுல் செய்ய சொன்னது நினைவு வர உடனே கைபேசியை எடுத்தவள் அதில் டாக்டர் விஷ்வதேவ் என்று தேட அடுத்த நொடியே அவன் குறித்த விபரங்கள் வந்து விழுந்தன.

அவன் குடும்பம், படிப்பு, பணி, வாங்கிய விருதுகள், பரிசு பெற்ற ஆய்வு கட்டுரைகள், அவன் நடத்திய கருத்தரங்கங்கள், பங்கு பெற்ற போட்டிகள் இறுதியாக அவன் மேற்கொள்ளும் ஆராய்ச்சி, என்று அவன் குறித்த தகவல்கள் அத்தனையும் கொட்டி கிடந்தது கண்களை ஓடவிட்டு ஒவ்வொன்றையும் படித்து கொண்டு வர அதில் இருந்த செய்திகள் ப்ரீத்தியையே மலைக்க செய்திருந்தது.

அவன் கலந்து கொண்ட போட்டிகள் பரிசுகள் எல்லாம் அவன் எத்தனை சிறந்த பாடகன், விளையாட்டு வீரன் என்பதற்கான சான்றாக அமைய மேலும் சமூக வலைதளங்களில் அவனை குறித்து ஆராய தொடங்கினாள். அதன் முடிவில் அவன் பணிக்கும் பாட்டுக்கும் தனி தனியாகவும் சேர்ந்தும் ரசிக்கும் ரசிகர்களும் அவனை பின்தொடர்பவர்களும் ஏராளம் இருக்க அவன் உயரமும் புகழும் அவளை பிரமிக்க வைத்திருந்தது.

பலர் அவனை முன்னுதாரனமாக கொண்டு அவனை பின்தொடர்வதை அவர்களின் கருத்துக்கள் மூலம் அறிந்து கொண்டவளுக்கு விஷ்வாவின் உயரமும் அவன் நேரத்தின் அருமையும் புரிந்தது. இப்படி பட்டவன் எதற்காக தன் வாழ்வில் நுழைந்து தன் போக்கில் தலையிட்டு அதை திசை மாற்றி கொண்டிருக்கிறான் என்ற கேள்வி அப்போதும் எழ தலையை அழுத்தமாக பிடித்து கொண்டு அமர்ந்துவிட்டாள்.

வேண்டாம் முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும் எது குறித்தும் யோசித்து பயனில்லை அவனுக்கு என்னிடமான தேவை எது என்பதை நேற்று அவனே செய்கையால் உணர்த்திய பின் அவன் யாராகவோ எப்பேர்பட்டவனாகவோ இருந்தால் எனக்கு என்ன..?? என்று யோசித்தவளின் அடிமனதில் நீருபூத்த நெருப்பாக அவன் மீதான வெறுப்பும் கோபமும் மண்டிக்கிடக்க தனக்கு தானே ஆறுதல் கூறி கொண்டவள்

" சரண் கீர்த்தி வாழ்வு செம்மையடைந்து தன் தண்டனை காலம் முடியும் வரையில் அவன் மனைவியாக இங்கு ஏற்றிருக்கும் வேடத்தை சரியாக செய்துவிட வேண்டும் அவ்வளவு தான்..!! அதன் பின் இந்த ஜென்மத்தில் அவன் முகத்தை பார்க்கும் வாய்ப்பு அமையாத வகையில் தொலைதூரத்திற்கு சென்றுவிட வேண்டும்" என்று உறுதியோடு மீண்டும் அவன் குறித்த விபரங்களை பார்வை இட தொடங்கினாள்.

அதில் அவர்களுது மருத்துவமனை எத்தனை புகழ்பெற்றது என்பதும் அது செயல்படும் விதமும் மற்றவர்களில் இருந்து மாறுபட்டு இருப்பதை கண்டு பெரும் வியப்பு ப்ரீத்தியிடம். அடுத்து மீண்டும் குடும்ப உறுப்பினர்கள் குறித்த விவரங்களை நிதானமாக படித்தவளுக்கு உண்மை நெற்றிபொட்டில் அறைய அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் அமர்ந்துவிட அடுத்த சில நிமிடங்களில் தூக்கம் கண்ணை சுழற்ற குழந்தைக்கு பால் கொடுத்து உறங்க வைத்து தானும் உறங்கி போனாள்.

***************************************************


மதியம் இரண்டு மணி போல அவளுக்கான உணவு அறைக்கே வந்துவிட அதை முடித்து கொண்டவளுக்கு நேரமே நகரமாட்டேன் என்பதாக சண்டித்தனம் செய்து கொண்டிருந்தது... குழந்தை தூங்கி கொண்டிருந்த நேரம் கீழே சென்று பார்த்தால் வீடே வெறிச்சோடி கிடந்தது காலையே வர்ஷினி கல்லூரி சென்று விட அதன் பின் சிவசங்கரன், விஷ்வா மருத்துவமனை சென்றிருப்பார்கள் என்று புரிந்து கொண்டவளுக்கு அதன் பின் வித்யாவும் அங்கு கிளம்பியிருக்க ஆகாஷ் நைட் முழுக்க அங்கிருந்து விட்டு வந்தவன் உறங்கி கொண்டிருப்பான் என்று தெரிந்தது.

பேச்சு துணைக்கு பாட்டியை தேடியவளுக்கு அவர் தரை தளத்தில் இல்லாமல் போக பாட்டி எங்கே என்று பட்டம்மாளிடம் விசாரித்ததில் அவர் இந்நேரத்திற்கு பிசியோதெரபி எடுத்து விட்டு உறங்கி விடுவார் என்றார்.

யாருமற்ற இடத்தில் இருக்க பிடிக்காமல் மீண்டும் தன் அறைக்கு வந்து சேர்ந்திருந்தாள். இதற்கு நடுவே பல முறை விஷ்வாவிற்கு அழைத்தும் அவன் எடுக்காமல் போனதில் வேறு சிந்திக்கவும் முடியாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

இப்படி சும்மா அமர்ந்து நேரத்தை விரயமாக்குவது ப்ரீத்தியின் இயல்பே கிடையாது படிப்பு தவிர்த்து வீட்டில் இருக்கும் நேரத்தில் சௌமியுடன் நடனம் அல்லது விளையாட்டு, அன்னையுடன் சமையல் செய்வது, பார்வதியுடன் மருத்துவ விவாதம் அல்லது விளக்கம் என்று எப்போதும் ஏதேனும் ஒன்றில் தன்னை ஈடுபடுத்தி கொள்வாள் அப்படியே யாரேனும் இல்லை என்றாலும் தனிமையில் அவளது உற்ற துணையான இசையோடு இனிமை காண்பது அவள் வழக்கம்.

இங்கு பேச்சு துணைக்கும் ஆளில்லாமல் எந்த வேலையும் செய்வதற்கு இல்லாமல் அடைத்து வைக்கப்பட்டது போல உணர்ந்தவளுக்கு An ideal mind is devil's workshop என்பது போல எங்கே தன் மனம் மீண்டும் சாத்தானின் உலைக்களம் ஆகிபோகுமோ என்ற அச்சம் உண்டானது. உடனே குழந்தையின் பத்திரத்தை உறுதி செய்துகொண்டு வெளியே வந்தவள் கைபேசியில் பாடலை மெலிதாக ஒலிக்க விட்டு அத்தளத்தை சுற்றி பார்க்க தொடங்கினாள்.

விஷ்வாவின் அறைக்கு அருகே இருந்த அறையை திறந்தவளுக்கு பார்த்ததுமே அது அவனுடைய ஜிம் என்பது புரிய அதை சாற்றி விட்டு அதன் எதிரே இருந்த அறையை திறந்தவள் அடுத்த நொடி மலைத்து நின்றாள்.

ஆம் அது அவனுடைய லைப்ரரி மிகப்பெரிய அறையில் இருந்த அனைத்து ரேக்க்குகளிலும் ஆயிரக்கணக்கான மருத்துவ புத்தகங்கள் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. உள்ளே நுழைந்தவள் ஒவ்வொரு அடுக்காக பார்த்து கொண்டு வர அவள் படித்த காலத்தில் சௌமி தன்னிடம் ரெபரென்ஸ்க்காக கொண்டு வந்து கொடுத்த சில புத்தகங்கள் இங்கிருந்து வந்தவை என்பது புரிந்தது. மேலும் முன்னேற போனவளை குழந்தையின் அழுகுரல் தடுக்க அறையை சாற்றிவிட்டு வந்தவள் குழந்தையை எடுத்து அதன் தேவைகளை பூர்த்தி செய்தாள்.

அதன் பின்பான அவள் நிமிடங்கள் குழந்தையுடன் மகிழ்ச்சியாக கழிய மாலை வர்ஷினி கல்லூரியில் இருந்து வந்தவள் குளித்து விட்டு உடனே ப்ரீத்தியை தேடி வந்துவிட்டாள்.

வர்ஷினியை காணவுமே ஓடி சென்று அவளை அணைத்து கொண்ட ப்ரீத்தி உன்னை எதிர்பார்த்துட்டு இருந்தேன் வர்ஷு என்று கூறவும்

"நானும் தான் அண்ணி எனக்கு எப்போ அண்ணி வருவாங்கன்னு எத்தனை வருஷம் காத்திருந்து இருக்கேன் தெரியுமா..?? சௌமிக்கா சின்ன வயசுல இங்க வந்திருந்தாலும் அடிக்கடி வரவே மாட்டாங்க சித்தி கிட்ட கேட்டா அங்கேயே அவங்களுக்கு யாரோ பிரெண்ட் கிடைச்சிட்டாங்கலாம் எப்பவும் அவங்க கூடவே இருகாங்கன்னு சொல்லுவாங்க
என்று ஆரம்பித்தவள் ப்ரீத்தியிடம்..,

"அச்சோ உங்களுக்கு சௌமிக்கா யாருன்னு தெரியாது இல்ல" என்றவள் குழந்தையை தூக்கி கொண்டு,

" சௌமிக்கா என்னோட சித்தி பொண்ணு சென்னையில இருக்காங்க
எனக்கு சின்ன வயசு கம்பேனியன் அவங்க தான் அந்த பிரெண்ட்டால அப்புறம் அவங்களும் இங்க சரியா வராம போகவும் எனக்கு கஷ்டம் ஆகிடுச்சி அப்போ தான் அக்கா வரலைன்னா என்ன உனக்கே உனக்கா அண்ணி வருவாங்கன்னு அம்மா சொன்னங்க அப்போ இருந்து உங்களுக்காக காத்திருக்கேன் அண்ணி" என்று கூறவும்

ப்ரீத்தி எவ்வாறு உணர்ந்தால் என்று அவளுக்கே தெரியவில்லை யார் என்னவென்றே தெரியாமல் ஒரு உறவின் மீது இத்தனை பற்றா..?? பாசமா..?? என்று வியந்தவளுக்கு இது ஏன் தனக்கு தன் உடன் பிறந்த கீர்த்தி மீது இல்லாமல் போனது என்ற எண்ணம் தோன்றவும் அவள் கண்களில் நீர் துளிர்த்துவிட்டது .

தன் விளையாட்டு துணையை பிரிந்த குழந்தைக்கு அன்னை கூறிய ஒரு வார்த்தையில் வேறொருவரை காலம் தனக்கு அனுப்பும் என்ற நிச்சயத்தோடு காத்திருக்கும் பொறுமை இருக்கையில் தனக்கு ஏன் அது இல்லாமல் போனது..?? அவள் கண்ட முதல் ஆண்மகனான சரண் மட்டுமே உலகில் கடைசி ஆண் என்ற முடிவை எடுத்து அவனை கீர்த்தியிடம் இருந்து தட்டி பறிக்க நினைத்தவளுக்கு ஏன் தனக்கான துணையை காலம் நிச்சயம் கொடுக்கும் என்ற பொறுமை கொள்ள முடியாமல் போனது.

கண்ணீரை துடைத்து கொண்டு வர்ஷினியை பார்த்தவளுக்கு எத்தனை ஆசையுடன் தன் ஏக்கத்தை பகிரும் சிறுபெண்ணிடம் உண்மையை மறைக்க தோன்றாமல் "எனக்கு சௌமியை தெரியும் வர்ஷு நீ சொன்னியே உன் அக்காக்கு ஒரு பிரென்ட் கிடைச்ச பிறகு இங்க வராம போனான்னு அது நான் தான்..!!" என்று கூறியவள் அவளை அணைத்து நெற்றியில் இதழ் பதித்து "சாரிடா வர்ஷு உன் அக்காவையும் உன்கிட்ட இருந்து பிரிச்சி இருக்கேன் என்னை மன்னிச்சிடு" என்று கூற,

"அச்சோ அண்ணி என்ன இது..?? எதுக்கு சாரி எல்லாம் சொல்லிக்கிட்டு எனக்கு நீங்க சௌமிக்காவோட பிரென்ட்ன்னு சொன்னதும் எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா..?? என்றவளின் முகத்தில் எல்லை இல்லா ஆனந்தம்..!!

" நீங்க இங்க இருந்தா உங்களை பார்க்கவே சௌமிக்காவும் இனி அடிக்கடி இங்க வருவாங்க ரெண்டு பெரும் என் கூட வாவ் தட்ஸ் அமேசிங் அண்ணி" என்றவளுக்கு சந்தோசம் தாளவில்லை பின் ப்ரீத்தியையும் அழைத்து கொண்டு கீழே வந்தாள்.

மாலை சிற்றுண்டியோடு பாலும் முடித்து விட்டு குழந்தையை பாட்டியிடம் கொடுத்து விட்டு இருவரும் தோட்டத்திற்கு வந்திருந்தனர்.

வந்த நாளே வர்ஷினி அவளிடம் உரிமையோடு ஒட்டி கொள்ள ப்ரீத்திக்கும் அவள் இருப்பு மனதிற்கு இதம் தருவதாக அமைந்திருந்தது. முதலில் ப்ரீத்தி இன்று நாள் முழுக்க அவளும் குழந்தையும் என்ன செய்தார்கள் என்பதை கேட்டு தெரிந்து கொண்ட வர்ஷு பின் கல்லூரியில் நடந்ததை விவரிக்க இருவரின் பேச்சும் மெல்ல மருத்துவம் சார்ந்து திரும்பியது.

ஒரு நிமிஷம் இருங்க என்று புத்தகத்தை எடுத்து வந்த வர்ஷினி இன்றைய பாடத்தில் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் அவளுக்கு ஏற்பட்ட சந்தேகங்களையும் அது குறித்த பேராசிரியரின் விளக்கத்தையும் அவளிடம் பகிர்ந்தவள், 'இப்பவும் எனக்கு அதுல க்ளாரிட்டி இல்லை அண்ணி' என்று தன் சந்தேகத்தை அவளிடம் கேட்க

சில நிமிடங்கள் புத்தகத்தை பார்வையிட்ட ப்ரீத்தி பின் வரைபடம் கொண்டு அது குறித்த விளக்கத்தை மிக எளிமையாக அவளுக்கு புரியும் வகையில் எடுத்து கூற தொடங்கினாள். மேலும் அதன் சம்பந்தமான ஆய்வு கட்டுரைகளையும் வலைதளங்களில் குறிப்பிட்ட தளத்தில் இருந்து எடுத்து கொடுத்தவள் அரை மணி நேரத்திற்கும் மேலாக அத்தலைப்பில் அவளுக்கு இருக்கும் சந்தேகங்களை கேட்டறிந்து அதற்கு விளக்கம் அளித்து பின் அவளை கேள்வி கேட்டு இறுதியாக அவளுடன் இணைந்து அத்தலைப்பை விவாதிக்க அவர்கள் விவாதம் நிறைவு செய்த போது வர்ஷினிக்கு இத்தனை நாட்கள் கிடைக்காத தெளிவு பிறக்க தன்னை தானே கிள்ளிகொண்டவள் மகிழ்ச்சியில் ப்ரீத்தியை கட்டிபிடித்து முத்தம் கொடுத்தாள்.

"தேங்க்ஸ் அண்ணி தேங்க் யு வெறி மச்.... அப்பப்ப்பா எத்தனை மெடிகல் டெர்ம்ஸ் எத்தனை டேபிநிஷன் அதிகமான டீடெயிலிங்க் ரொம்ப கன்பியுஸ் பண்ணுச்சு அண்ணி இந்த டாபிக் எடுக்கவே எப்பவும் பயமா இருக்கும் ஏன்னா மத்த பேப்பர்ஸ் விட இதுக்காக நான் ஸ்பென்ட் பண்ற டைம் அதிகம் எவ்ளோ ரெபரன்ஸ் எடுப்பேன் தெரியுமா..?? எத்தனை க்ளாசஸ் அப்பவும் பதியாம போகும் இப்போ நீங்க நடத்தின விதத்துல இதுல கண்டிப்பா நான் டாப் ஸ்கோர் பண்ணிடுவேன்னு கான்பிடன்ஸ் வந்துடுச்சி" என்றவளுக்கு மிக கடினமான தலைப்பை எளிதாக புரிந்து கொண்டதில் ஏற்ப்பட்ட சந்தோசத்தை தன் தோழிகளிடம் பகிர கைபேசியை எடுக்க வேண்டி உள்ளே ஓடினாள்.


செல்லும் அவளையே புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்த ப்ரீத்தி பேசிக்கொண்டு இருந்ததில் நேரம் போனதே தெரியாமல் நின்றிருந்தவள் அப்போது தான் பனி இறங்குவதை உணர்ந்து தானும் உள்ளே சென்றாள்.
 

Rudhraprarthna

Moderator
உறவு - 25.1

கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் கழித்து ஒரு வழியாக கீர்த்திக்கு ஜுரம் குறைந்து கண் விழிக்கவும் அருகே இருந்த தீபிகா வாஞ்சையோடு அவளை அணைத்து கொண்டார்.

அன்னையின் அணைப்பில் இருந்தாலும் கீர்த்தியின் விழிகள் சரணை தேடி ஒருமுறை அறையை வலம் வந்து அவன் இல்லாமல் போகவும் ஒரு நொடி சுருங்கி விரிந்தது,

'இப்போ எப்படிடா இருக்கு..??' என்று கேட்ட தீபிகாவிடம் 'நீங்க எப்போம்மா வந்தீங்க..??' என்றாள் மெல்லிய குரலில்,

"நான் வந்து ரொம்ப நேரம் ஆகுது கீர்த்தி ... உனக்கு இப்போ பரவால்லையா ..?? என்று மகளின் நெற்றியிலும் கழுத்திலும் கை வைத்து பார்த்தவர் மெல்லிய சூடு இருப்பதை உணர்ந்து டாக்டர் டிஸ்சார்ஜ் பண்ணதும் நாம நம்ம வீட்டுக்கு கிளம்பலாம்டா" என்றார் அலரின் துணையோடு மெதுவாக எழுந்த அமர்ந்த மகளிடம்.

'எதுக்கும்மா..??'

'என்ன கேள்வி இது கீர்த்தி..?? நம்ம வீட்டுக்கு எதுக்கு வரணும்ன்னு கேட்கிறே..??

'இல்லை' என்பதாக தலை அசைத்த கீர்த்தி 'அந்த வீட்டுக்கு மாமா வராதப்போ நான் மட்டும் வருவேன்னு எப்படிம்மா எதிர்பார்க்கிறீங்க..??' என்றிட

'கீர்த்தி என்னடா பேசுற அது நீ இத்தனை வருஷமா வாழ்ந்த வீடு, உனக்கும் மாப்பிள்ளைக்கும் இல்லாத உரிமையா..??' என்றார் வேதனையோடு,

அவர் வலி புரிந்தவள் குரலை செருமி கொண்டு, 'வேண்டாம்மா பழசை கிளறக்கூடிய எதுவுமே இனி வேண்டாம், முக்கியமா அந்த வீடு..!! அங்க..' என்றவளின் நெஞ்சம் வேகமாக துடிக்க கண்களில் அப்பட்டமாக வலி நிரம்பியது ,

"நாங்க பிரிஞ்சதே அங்க தானேமா..?? நான் மாமாவை தப்பா புரிஞ்சிகிட்டு அவர் கூப்பிட்டப்போ கூட போகாம போனது தானே இத்தனை வருஷ பிரிவுக்கான தொடக்க புள்ளி..!! அன்னைக்கு நான் அதை செய்திருந்தா இன்னைக்கு இத்தனை கஷ்டம் இல்லம்மா.., ஒருவேளை மாமா அதை எல்லாம் மறந்திருந்தா என்னை விட்டுட்டு போக அங்கயே வந்திருப்பாரேம்மா எப்போ பெரிப்பா வீட்ல விட்டாரோ அப்போ நான் அங்க இருக்கிறது தானே சரி, நீங்க கூப்பிட்டு நான் அங்க வந்தா அது மாமாவோட உணர்வை அவமதிச்சதா அர்த்தம் ஆகிடும்' என்று தாயை உறுதியாக பார்த்தாள்.

'கீர்த்திமா'

'போதும்மா அவருக்காக யோசிக்கிறேன்னு நெனச்சி என்னையும் அறியாம நிறைய தப்பான முடிவு எடுத்து வாழ்க்கையை சிக்கல் ஆக்கினது போதும் இனி அவருக்கு பிடிக்காததையோ, அவர் மறுக்குறதையோ செய்ய நான் தயாரா இல்ல... மாமா வந்து கூட்டிட்டு போற வரை நான் பெரிப்பா வீட்லயே இருக்கேன் ப்ளீஸ் தப்பா எடுத்துக்காதீங்க' என்றவளுக்கு அல்லவா தெரியும் தன் மீதான தீபிகாவின் அன்பும் பாசமும் இப்போது அவரது ஒரே உறவு பெறாத மகளான அவள் மட்டுமே என்பதும் ..!!'

"அன்று தன் வீட்டிற்கு வந்து சரண் பணத்தை விட்டெறிந்து கீர்த்தியை அழைத்த போது பிரகாசத்தின் மீதிருந்த கண்மூடித்தனமான நம்பிக்கையாலும் பாசத்தாலும் செய்த தவறை இன்று திருத்த முற்பட்டு கணவனின் உணர்வை மதித்து நடக்க நினைக்கும் மகளின் விருப்பத்தை விட அந்த தாய்க்கு வேறு எது முக்கியமாக இருந்திட முடியும்..??" எங்கிருந்தாலும் அவளது நலன் ஒன்று தானே அவரது பிரதானம் இருந்தாலும் மகளை தன் வீட்டில் வைத்து சீராட்ட எண்ணியவர் தன் ஏமாற்றத்தை புன்னகையில் மறைத்து அவளிடம்,

'சரிம்மா எனக்கு புரியுது உன் விருப்படி செய் நான் கட்டாயபடுத்த மாட்டேன் ஆனா மாப்பிள்ளையோட நீ அங்க வர நாளுக்காக நான் காத்திருப்பேன்' என்றவர் கீர்த்தியை டிஸ்சார்ஜ் செய்தபின் அவர்களுடனே நாதன் வீட்டிற்கு சென்றிருந்தார்.

கீர்த்தி மருத்துவமனையில் அனுமதித்து இருப்பதை கேள்விபட்டு அவள் நாத்தனார்கள் அனைவரும் ஒவ்வொருவராக படை எடுத்து நாதன் வீட்டிற்கு வந்த பின் அவளை விட்டு நகராமல் சூழுந்து கொண்டனர். பின்னே ஒரே தம்பி மனைவியான அவளை இந்த நேரத்தில் எப்படி தனியே விடுவார்கள்..?? முன்பு என்ன நடந்து இருந்தாலும் இப்போது அவள் அவர்கள் குடும்பத்தின் பொக்கிஷம் அல்லவா..?? அவள் மகிழ்ச்சிக்கு சரண் மட்டுமல்ல அவர்களுமே பொறுப்பு, ஏதோ காரணத்தால் தம்பி விட்டு சென்றிருந்தால் அவர்களும் விட்டுவிட முடியாதே..!!

'கலைவாணியின் உடல்நிலை கருதி அவரிடம் தெரிவிக்கவில்லை. கீர்த்தி மீது கோபம் ஒருபுறம் இருந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கி வைத்து வளர்மதி அவளுக்கான இரவு உணவை கொண்டு வந்து கொடுத்தவர் கீர்த்தியிடம் விசாரித்து விட்டு சென்றுவிட வெண்மதி இட்லியை ஊட்டிவிட தொடங்கினார்.

'வேண்டாம் சித்தி பரவால்ல என்னால முடியும் நானே சாப்ட்டுக்குறேன்' என்று கீர்த்தி மறுக்க, அதை காதில் வாங்காதவர் இரண்டோடு போதும் என்றவளுக்கு நான்கு இட்டிலிகளை ஊட்டி முடித்த பின்னரே அவளை விட்டார்.

உண்டு முடிக்கவும் வான்மதி அவள் மாத்திரைகளை எடுத்து கொடுக்க அதை கண்ட வைதேகி, 'வான் உடனே கொடுக்காத நடக்க வச்சிட்டு கொஞ்ச நேரம் கழிச்சி கொடு, வெந்நீர் இருக்கு தானே இல்லை எடுத்துட்டு வரட்டா' என்று கேட்க,

'இருக்குக்கா' என்ற பதில் வரவும் வெளியே சென்றவர் கீர்த்தியை தனியே விட்டு சென்ற சரணுக்கு அழைக்க அவனோ கைபேசியை அணைத்து வைத்திருந்ததில் அவனை தொடர்பு கொள்ள முடியாமல் போனது. சரணிடம் இருந்து கீர்த்தி ஒதுங்கி சென்றதால் அவளிடம் கடுமையாக நடந்து கொண்டிருந்த வைதேகிக்கு இப்போது தம்பி இப்படி விட்டு சென்றதில் உடன்பாடு இல்லை.

மேலும் சில நேரம் அங்கே அவளுடன் இருந்தவர்கள் சரண் விட்டு சென்றதற்காக அவன் சார்பாக அவளிடம் மன்னிப்பு கேட்டவர்கள் 'நாங்கள் உடன் இருக்கிறோம் எதற்கும் கலங்காதே' என்று கூறி செல்ல அவர்களின் அன்பில் திக்குமுக்காடி போனாள் கீர்த்தி.

மகளை கொண்டாடும் குடும்பத்தை கண்டு கண்களில் நீர் துளிர்க்க பார்த்திருந்த தீபிகாவிற்கு மனம் நெகிழ்ந்து போனது. அதேசமயம் மாப்பிள்ளை மகளை இங்கு விட்டு சென்றதில் கீர்த்தி மீது ஏதேனும் தவறு இருக்குமோ அதை சரி செய்வது அன்னையாக தன் கடமை என்று நினைத்தவர் கீர்த்தியிடம் பல விதமாக பேச்சு கொடுத்து கொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் சரண் புறம் திசை திரும்ப பதில் கூறிக்கொண்டே வந்தவளுக்கு ஏனோ இறுக்கி பிடித்து மூச்சடைத்து போகும் உணர்வு உண்டாக அவருக்கு பதிலளிக்காமல் சில கணங்கள் அமைதியாக கண்மூடி சாய்ந்து அமர்ந்தவள் பின் அவரிடம்,

'ம்மா யாரோட இடைஞ்சலும் இல்லாம எனக்கு கொஞ்ச நேரம் தனியா இருக்கணும் போல இருக்கு நான் மாடில நடந்துட்டு வரட்டா..??" என்று கேட்க,

மகள் முகத்தை பார்த்தவருக்கு அவள் மாற்றம் புரிய "மாடிக்கா..?? இல்ல வேண்டாம்மா குளிரா இருக்கு உனக்கு ஒத்துக்காது நீ இங்கயே வெளியே ஹால்ல நட நான் கீழே போறேன்" என்றுவிட்டு அவர் வெளியேறிட கட்டிலில் இருந்து இறங்கிய கீர்த்தி முதலில் கைபேசியை தேடி எடுத்து சரணிடம் இருந்து ஏதேனும் அழைப்போ மெசேஜோ வந்திருக்கிறதா..?? என்று பார்த்தவள் அங்கு அதற்கான அறிகுறி இல்லை என்று தெரிய கைபேசியை நெஞ்சோடு சேர்த்து பிடித்தவாறு அமர்ந்துவிட்டாள்.

ஏன் இந்த பாராமுகம், எதனால் தன்னை தவிர்க்கிறான் இப்போது அவனுக்கு அழைக்கலாமா..?? வேண்டாமா..? என்ற இரட்டை மனநிலையில் சில நொடிகள் சிந்தனை வயபட்டவள் என்ன நினைத்தாலோ ஒரு கட்டத்தில் அமைதியாக கைபேசியை வைத்து விட்டு வெளியே வந்து மாடி ஹாலில் நடை பயில தொடங்க அவளையும் அறியாமல் மனப்பெட்டகத்தில் அவள் கடந்த காலம் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக காட்சிபடுத்தப்பட அதில் நிதானமாக தன்னை தேடி பார்த்து பல நிமிடங்களுக்கு பின் களைத்து போனவளுக்கு இறுதியாக அதில் தான் சுயம் தொலைந்து போயிருப்பதை உணர்ந்திருந்தாள்.

*

எழில் வீட்டினுள் நுழைய அலரிடம் பாடம் படித்து கொண்டிருந்த அவிரன் 'அப்பா' என்று ஓடி சென்று அவனை கட்டி கொள்ள மகனை தூக்கி கொஞ்சிக்கொண்டே அலரிடம் வந்தவன், 'கீர்த்திக்கு எப்படி இருக்கு..?? சாப்ட்டாச்சா..?' என்று கேட்க,

'பீவர் சுத்தமா இல்ல மாமா விட்டுருச்சி.., சித்தி சாப்பாடு ஊட்டி மாத்திரையும் கொடுத்துட்டாங்க' என்றவள் 'நீங்க சாப்பிட வாங்க' என்று அழைத்தாள்.

'நீ எடுத்து வைடி நான் கீர்த்தியை பார்த்துட்டு வந்துடுறேன்' என்றவன் மேலே செல்ல கீர்த்தியோ தீவிர யோசனையில் நடந்து கொண்டிருப்பதை கண்டவன் அவளுருகே சென்று,

"என்ன கீர்த்தி நேத்து மாதிரி இப்பவும் அழுதுட்டு இருப்பன்னு நெனச்சேன் ஆனா ரொம்ப அமைதியா இருக்க ..??" என்றிட

தன் நடையை நிறுத்திவிட்டு எழிலை பார்த்து விரக்தியாக புன்னகைத்தவள், 'எதுக்கு மாமா அழனும்..??'

'இல்ல சரண் விட்டுட்டு போனதால..?? அவன் மேல கோபம், வருத்தம் இப்படி ஏதாவது இருந்து... அதனால' என்று எழில் கீர்த்தியை பார்க்க,

"ப்ச் இல்ல மாமா தோணல..!! கோபபடுறதுக்கான அருகதை எனக்கு இருக்கா என்ன..?? என்று தன்னையே ஒருமுறை கேட்டுகொண்டவள் மீண்டும் எழிலிடம் ஆனா இப்பதான் ரொம்ப ரிலாக்ஸா ஒரு மாதிரி நிம்மதியா சுவாசிக்கிற பீல்" என்று கூற,

அதை கேட்ட எழில் உற்சாக குரலில் 'அப்போ சரண் பேசினானா..?? சமாதானம் ஆகிட்டீங்களா..? எப்போ வரானாம்..??' என்று கேள்விகளை அடுக்கி கொண்டே போக ,

'இல்லை' எனும் விதமாக கீர்த்தி தலை அசைப்பதை கண்டவன் தன் பேச்சை நிறுத்தி 'அப்புறம் ஏன்..??' என்பதாக அவளை பார்க்க,

"ஆமா மாமா எனக்கு அப்படி தான் இருக்கு..!! என்னமோ இத்தனை நாளா கழுத்தை இறுக்கி பிடிச்சி மூச்சை அடைச்சி வச்சிருந்து இப்போ தான் யாரும் இல்லாம நிம்மதியா சுவாசிக்கிற ஒரு பீல்" என்று கூற ,

திகைத்து போன எழில், "கீர்த்தி என்ன பேசுற..?? சரண் பத்து நாள் கழிச்சி வரேன் சொல்லி இருக்கானே அதுக்கு ஏதாவது காரணம் இருக்கும் நாம கொஞ்சம் பொறுமையா இருக்கலாம்" என்று கூற,

"நிஜமாவே எனக்கு இப்போ அப்படி தான் இருக்கு..!! இது நான் கனவு கண்ட வாழ்க்கை இல்லை மாமா, ஒரு சடன் ஷாக் அதுல இருந்து நான் வெளியே வரதுக்குள்ளவே இந்த நாலு நாளும் என்னை மீறி என் கண்ட்ரோல் இல்லாம எல்லாமே நடந்துட்டு இருக்கு. என்னமோ பொம்மலாட்டத்துல அடுத்தவங்க கையில ஆட்டி வைக்க படர பொம்மையா நான் இருக்கேனோன்னு இருக்கு..!!" என்றவாறு சோர்வுடன் சுவரில் சாய்ந்து நின்றவள் தொடர்ந்து,

"மாமா எப்போ பெங்களூர் வந்தாரோ அப்போ இருந்து இப்போ வரையுமே நடக்குற எதையும் சரியா உள்வாங்கி உணர்ந்து யோசிச்சி முடிவெடுக்க எனக்கு நேரமே இல்லை எல்லாமே ஏதோ ஒரு அவசரத்துல நடக்கவும் யாருக்கும் எனக்கான நேரம் கொடுக்கவும் தோணலை. இது கூட பரவால மாமா பல ஏமாற்றத்தை அடுத்தடுத்து சந்திக்கவும் என் மனசு ஒரு நிலையில இல்லை எக்கச்சக்கமான குழப்பம் என்றவளின் செவியில் சரண் கூறிய "கற்பனையில் வாழாதே இனி இந்த நான் தான் நிஜம் அதை ஏத்துக்க பழகு" என்ற வார்த்தைகள் ரீங்காரமிட வெறுமையாக புன்னகைத்து கொண்டவள் எழிலிடம்,

"நாம நினைக்கிற மாதிரியே வாழ்க்கை எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்காது நம்ம எதிர்பார்ப்புகள் பொய்க்கும் போது அதை ஏத்துக்க கொஞ்ச நாள் எடுக்கும் தானே மாமா...!! ஆனா இங்க என்னை மனசளவுல தயார்படுத்திக்க கூட எனக்கு நேரம் இல்ல அதுவே என்னை சிந்தித்து செயல்பட விடாம செஞ்சிடுச்சி" என்று இப்போது பேசி கொண்டு சென்றவளின் குரலில் பிறந்திருந்த தெளிவை ஆச்சர்யத்துடன் எழில் பார்க்க,

அதேநேரம் கீர்த்தி மனதில் பிரகாசத்தின் முகம் மின்னி மறைய வியர்த்த கரங்களை ஷாலில் துடைத்தவாறு, 'ஆமா மாமா எல்லாம் தெரிஞ்ச பிறகு நான் இத்தனை நாள் இருந்ததை விட ஏதோ ஒரு வகையில மாமாவோட காதலுக்கு தகுதி இல்லாதவளா அவரை விட தகுதியில குறைஞ்சிட்ட மாதிரி அவருக்கு நான் பொருத்தம் இல்லாதவன்னு எனக்குள்ள ஒரு பீல்..!!'

'நீயா ஏன் கீர்த்தி அப்படி யோசிக்கிற..??'

"வேற எப்படி மாமா யோசிக்க..?? ஒரு குற்றவாளியோட பொண்ணு நான் !! நான் வளர்ந்த விதம் வேற ..!! ரொம்ப செல்லமா வளர்ந்துட்டேன் எந்த கஷ்டமும் தெரியாம கேட்டது கேட்காதது எல்லாம் கொடுத்து எனக்கு அவங்க காட்டின உலகமே வேற மாமா..!! நான் ஆசைப்பட்டு கிடைக்காதது எதுவும் இல்ல ஆனா என்னோட முதல் ஏமாற்றத்தையும் நீங்க நிதானமா குழந்தைக்கு சொல்ற மாதிரி புரிய வச்ச விதத்துல நான் அதை ஈசியா கடந்து வந்துட்டேன், சொல்லப்போனா மாமாவை பார்த்த பிறகு தான் காதலுக்கான அர்த்தமும் அவர் இல்லைன்னா என் வாழ்க்கை முழுமை இல்லைன்னு புரிஞ்சிகிட்டேன்" என்று பேச எழிலோ அவள் அழுத்தம் புரிந்தவனாக அங்கிருந்த சோபாவில் அமர்ந்து அவளுக்கு செவி மடுக்க தொடங்கினான்.

"இந்த மாதிரி கடினமான சூழல் எல்லாம் எனக்கு ரொம்ப புதுசு..!! நான் பார்த்ததே இல்லை, ஸ்கூல் காலேஜ்லயும் எனக்கு எந்த பிரச்சனையும் வந்தது இல்லன்னு சொல்றதை விட வரவிட்டது இல்ல.., அதே போல தான் வேலை செய்த இடத்துலயும் எனக்கு... என்.. னாலா.. அவரால பாதிக்கபட்டவங்களை பார்க்கும் போது என்னால இயல்பா இருக்க முடியலை என்னால தானே எல்லாருக்கும் இத்தனை கஷ்டம் என்ன பிராயச்சித்தம் பண்ணி பாவத்தை கழுவ போறோம் அப்படிங்கிற எண்ணம் தான் அதிகம் ஆகுது. அந்த குற்ற உணர்ச்சியே என்னை.. என்னோட ஆசையை எல்லாம் கொன்னுடுச்சி..!! என்னால யார் எப்படி போனா என்னன்னு சுயநலமா யோசிக்க முடியலை மாமா" என்று எழிலை பார்க்க,

அவள் ப்ரீத்தியை குறிப்பிடுகிறாள் என்பதை புரிந்து கொண்டவனுக்கு கீர்த்தி இறுதியாக கூறியது எத்தனை உண்மையான வார்த்தை என்பதை எழிலை தவிர்த்து வேறு யார் அறிவர்..??

"அன்று மட்டும் கீர்த்தி சுயநலமாக தன் விருப்பமே பிரதானம் என்று இருந்திருந்தால் இன்று அவனுக்கு அலருடனான சுமூகமான வாழ்வு என்பது இல்லையே..!! அன்று கீர்த்தி எழிலை புரிந்து கொண்டு அவளாகவே விலகியதாலேயே இன்று அவன் நிம்மதியான வாழ்வை வாழ்ந்து கொண்டு இருக்கிறான் இல்லையென்றால் மகளை மறுத்ததற்காக பிரகாசத்தின் வன்மம் அவன் மீது படிந்து இன்று சரண் இருக்கும் இடத்தில் அகனெழிலன் இருந்திருப்பான் அதை எல்லாம் தடுத்த கீர்த்தியின் மீது என்றுமே அவனுக்கு தனி பாசமும் அவள் வாழ்க்கை மீதான அக்கறையும் உண்டு அதுவே இன்று சரண் எடுத்த முடிவின் மீதான கோபமாக வெளிப்பட்டது.உறவு - 25.2

கீர்த்தியின் நிலை புரிந்து வாஞ்சையுடன் அவளை பார்த்த எழில், 'கீர்த்தி உன்னை பெத்தவனோட பாவம் அவனுக்கே..!! நீ ஏன் அப்படி நினைக்கிற..?? முதல்ல அந்த எண்ணத்துல இருந்து வெளியே வா, சரண் இப்போ அவனோட கண்ட்ரோல்லயே இல்லை ஆனா நிச்சயம் சீக்கிரமே உன்னை புரிஞ்சிப்பான் நீ...' என்றவனை இடையிட்டவள்,

"மாமா நான் யாரோட வற்புறுத்தலுக்கு உடன்படாம சுயமா சிந்திச்சி என்னோட முடிவுகளை எடுக்குற பொண்ணு ஆனா இந்த நாலு நாளும் எல்லாரும் என்னை சுத்தி ஒருத்தர் மாத்தி ஒருத்தர் அட்வைஸ் பண்ற அளவுக்கு தான் நான் இருந்து இருக்கேன் யோசிச்சி பார்க்கும் போதே எனக்கு சிரிக்கிறதா அழறதான்னு தெரியல அதுவும் மாமாக்காக மத்தவங்க என்கிட்டே பேசுற மாதிரி வச்சிட்டேனே...." என்றவள்,

'உங்களுக்கு இன்னொரு விஷயம் சொல்லட்டா மாமா..??' என்று கேட்க,

'சொல்லு'

"இப்போ எனக்கு ப்ரீத்தி மேல கூட கோபம் இல்லை ஏன்னா அவளை போக விட்டது நான் தானே..!! தப்பு பண்றவங்க மட்டும் இல்ல தப்புக்கு துணை போறவங்களும் குற்றவாளி தான் மாமா..?? மாமா மாதிரியே எனக்கு என்ன வேணும்ங்கிறதுல நான் உறுதியா இருந்திருக்கணும் அதுக்காக போராடி இருக்கணும், நான் நினைச்சி இருந்தா எவ்ளோ விஷயத்தை தடுத்து இருக்கலாம் ஆனா பாருங்க இந்த காதலே ரொம்ப மோசமானது ஏன்னா பல நேரம் ஒருத்தங்க மேல நமக்கு இருக்க அதீதமான நேசம் முக்கியமான தருணத்துல நம்ம மூளையை செயல்பட விடாம சரியா யோசிக்கவிடாம பண்ணிடுது” என்று விரக்தியுடன் புன்னைகைத்து கொண்டவள்,

“நான் எதுவுமே வேணும்ன்னு செய்யலை மாமா ஆனா என்னையும் அறியாம மாமாக்கு நல்லது பண்றேன்னு நெனச்சி இத்தனை நாள் நான் கஷ்டத்தை மட்டும் தான் கொடுத்திருக்கேன் அதுவே மாமா சொன்ன பிறகு தான் எனக்கு புரிஞ்சது" என்று எழில் கேட்காமலே என்னவோ இத்தனை நாட்களாக மனதை அழுத்தி கிடந்த பாரங்களை எல்லாம் யாரிடமாவது கொட்டி விட வேண்டும் என்ற வேகத்தில் இருந்தவள் தன் போக்கில் பேச்சை தொடர்ந்து கொண்டிருந்தாள்.

"இப்படி ஒரு சூழலை என்னோட லைப்ல நான் ரெண்டாவது முறையா பேஸ் பண்றேன் முதல் முறை எங்க அப்பாவால மாமாவை புரிஞ்சிக்காம அவரை வேண்டாம் சொல்லி கன்னத்துல அடிச்சேன் இப்போ பல வருஷம் கழிச்சி திரும்ப வேண்டாம் சொல்லி அவர் மனசுல அடிச்சிட்டேன்" என்று கீர்த்தி மெல்லிய நீர்படலம் திரையிட அவனை பார்த்தவாறு கூற,

கீர்த்தியின் உணர்வுகளை சரண் மீதான அதீத காதலை எழிலை தவிர வேறு யார் சரியாக உணர முடியும்..?? பின்னே அலர் மீதான அவனது ஆழமான உயிர் நேசம் ஒரு கட்டத்தில் அவள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு அவளை விலக்கி, வதைத்து என்று வாழ்நாளில் அவள் சந்தித்திராத துன்பத்தை அளித்தது அவன் மட்டுமே அல்லவா..!! இப்போது கீர்த்தியும் சரண் மீதான உயிர் காதலால் அவனை மட்டுமே கருத்தில் கொண்டு சரணுக்கு அதையே செய்திருப்பதும், சரணின் காயத்தின் ஆழமும் எழிலால் நன்கு உணர முடிந்தது.

"இது என் லைப் மாமா ஆனா இப்போ யோசிச்சி பார்க்கும் போது தான் புரியுது நான் என்னோட இயல்புல இல்லை எனக்கு இருந்த குழப்பத்துல நல்லதுன்னு நெனச்சி பேசினது, நடந்துகிட்டது, அழுதது, மறுத்ததுன்னு எல்லாமே தப்பு..!! ஆனா இத்தனை தப்புக்கும் காரணம் மாமா நல்லா இருக்கனும் என்ற எண்ணம் மட்டும் தான்..!! பொதுவா சொல்லுவாங்களே இந்த beggars are not choosers ன்னு ஒரு பழமொழி இப்போ நான் அந்த நிலமையில தான் இருக்கேன் மாமா எனக்குன்னு விருப்பு, வெறுப்பு தனியா எதுவும் இல்ல மாமாவோட விருப்பம் தான் என்.., " என்று அவள் பேசிக்கொண்டு இருக்கும் போது,

'மாமா' என்று அழைத்தவாறு எழிலுக்கான உணவுடன் அலர் அங்கே வந்தாள்.

அதை கண்ட கீர்த்தி, 'நீங்க இன்னும் சாப்பிடலையா மாமா..??' என்று கேட்டவள் அலரிடம் 'சாரி அமுலு நான் தான் பேசிட்டே .. ' என்றவளை தடுத்த அலர்,

"அட இது எல்லாம் ஒரு விஷயமா கீர்த்தி ..?? எதுக்கு சாரி சொல்லிட்டு இருக்க" என்றவள் 'மாமா கால் பண்ணாரா..?? பேசினியா..??' என்று கேட்க 'இல்லை' என்பதாக தலை அசைத்தவள் நினைவு வந்தவளாக எழிலிடம்,

'உங்களுக்கு மாமா மேல கோபம் போயிடுச்சா..??' என்று கேட்க

'ஏன் கீர்த்தி சரண் மேல கோபப்பட எனக்கு உரிமை இல்லையா..??' என்று மெலிதாக புன்னகைத்தவன் "எப்போ அவனும் நீயும் சேருவீங்கன்னு காத்திருந்த எனக்கு அவன் மேல பெருசா என்ன கோபம் இருந்திட போகுது ..?? என்ற அலரை பார்த்தவனின் பார்வையில் இது உனக்குமான பதில் என்ற செய்தி தாங்கி இருந்தது.

"சரண் எடுத்த முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை, கொஞ்சம் அவசரப்பட்டுடானோன்னு தான் வருத்தம், என் தம்பி பொறுமை இல்லாம அவசரப்படும் போது அதை கண்டிக்கிற உரிமை எனக்கு இருக்கு எங்க யாராவது இல்லன்னு சொல்லுங்க பார்ப்போம்" என்று கேட்க,

‘இருக்கு’ என்பதாக தலை அசைத்த பெண்கள் இருவரின் முகத்திலும் எழிலின் உரிமை உணர்வை கண்டு புன்னகை உதயமானது.

"உண்மைக்கு எழிலுக்கு வருத்தம், கோபம் என்பதை தாண்டி அச்சமே அதிகமாக இருந்தது.."

இருக்காதா பின்னே..!! அவனுக்கு திருமணம் ஆன அடுத்த வருடம் இவர்களுக்கு திருமணம் ஆகியிருக்க வேண்டியது ஆனால் காலத்தின் கோலம் பல வருடங்களுக்கு பிறகு திருமண பந்தத்தில் இணைந்திருப்பவர்கள் எங்கே சரண் எடுத்த முடிவு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி இருவருக்கிடையில் மீண்டுமான ஒரு பிரிவு நிரந்தரமாகி விடக்கூடுமோ என்ற எண்ணமே சரண் மீது கோபமாக உருமாறி இருந்தது".

"அதே சமயம் கீர்த்தி மேல் என்ன கோபம் இருந்தாலும் அதை அவர்களுக்குள் பேசி தீர்க்காமல் இப்படி நாதனிடம் கொண்டு வந்து விட்டு இங்கு தேவை இல்லாத பிரச்சனை..." என்று நெற்றியை அழுத்தமாக நீவிவிட்டவனுக்கு நாதனின் ரத்த அழுத்தம் இந்த சில நாட்களில் உயர்ந்து இருக்கும் நிலையில் இவர்களின் பிணக்கை மற்றவர்களுக்கு பிரகடனபடுத்துகிறானே என்ற ஆதங்கம்..!!

'என்ன மாமா யோசனை..??'

"ஒண்ணுமில்லை என்றவன் சரி கீர்த்தி நீ அதிகமா யோசிக்காம ரெஸ்ட் எடு, சரண் சீக்கிரமே கோபம் தணிஞ்சு வந்துடுவான்" என்று கூறி அலருடன் கிளம்ப

'தேங்க்ஸ் மாமா' என்ற கீர்த்தியின் குரல் அவனை தடுத்த நிறுத்தவும்,

'எதுக்கு' என்பதாக இருவருமே திரும்பி பார்த்தனர்.

'நான் பேசினதை இதுவரை பொறுமையா கேட்டதுக்கு' என்று கூற இருவரும் வியப்புடன் அவளை பார்த்தனர்.

"ஆமா மாமா இங்க வந்ததுல இருந்தே இதை செய், செய்யாதே, அதை செய், செய்யாதே, பேசு, பேசாதேன்னு மத்தவங்க சொல்றதை தான் கேட்டுட்டு இருந்தேனே தவிர நான் பேசுறதை கேட்க யாரும் இல்ல.. பல நேரம் நம்ம பேசுறதை கேட்க ஒருத்தர் கிடைக்கிறதே பெரிய வரம் மாமா..!! அதுலயே நம்ம மனச அழுத்திட்டு இருந்த பாரம் எல்லாம் கரைஞ்சி காணாம போயிடும்.. என்னமோ எனக்கு இப்போ எல்லாத்தையும் கொட்டின பிறகு மனசு ரொம்ப லேசா இருக்கு மைண்ட் ரிலாக்ஸ்ட்டா இருக்கு" என்று கூற இருவருக்குமே வந்ததில் இருந்து சரண் அவளிடம் கோபம் கொண்டு பெரிதாக அவள் பேச்சுக்களை காதில் வாங்காமல் போனதால் அவள் கொண்டிருந்த அழுத்தம் புரிபட உடனே விரைந்து சென்று அவளை அணைத்து கொண்ட அலர்,

'கவலை படாத கீர்த்தி சீக்கிரமே மாமாவும் உன் பேச்சை கேட்பாரு' என்று இலகுவான குரலில் கூற,

"எனக்கும் தெரியும் அமுலு ஆனா இதை எல்லாம் மாமாகிட்ட பேசி எதையும் கிளறி திரும்ப அவரை காயபடுத்த நான் விரும்பல அதுக்கு நான் என்னோட வார்த்தை செயல்ன்னு ஒவ்வொன்னுத்துலயும் கவனமா இருக்கணும் அதுக்கு நான் யோசிக்கணும் நிறைய யோசிக்கணும் முன்ன மாதிரி குழம்பாம எனக்கு என்ன தேவைன்னு சரியான முடிவெடுக்க நான் யோசிக்கணும் அதுக்கான நேரம் இப்போ தான் எனக்கு கிடைச்சி இருக்கு நிச்சயம் இந்த முறை நான் சொதப்ப மாட்டேன்" என்று நம்பிக்கையுடன் கூற அலர் எழில் முகத்தில் புன்னகை,

கீர்த்தியின் தலையை ஆதூரமாக வருடிய எழிலுக்கு அல்லவா தெரியும் கீர்த்திக்கு பிரகாசத்துடனான பிணைப்பு என்ன என்பதும் இப்போது யாரிடம் தன் மனக்குமுறலை வெளிபடுத்த என்று புரியாமல் அவள் தத்தளித்து பின் அவனிடம் கொட்டி இருக்கிறாள் என்பதும்..!!

உறவு முறையில் வேண்டுமானால் எழில் கீர்த்திக்கு அத்தை மகனாக இருக்கலாம் ஆனால் இப்போது தந்தை இன்றி போயிருக்கும் கீர்த்தி, ப்ரீத்தி இருவருக்குமே உடன்பிறவா சகோதரனாக அல்லவா உடன் நின்று செயல்படுகிறான்.,

'உனக்கு அப்பா தான் இல்லை ஆனா அதுக்கும் மேல நான் என்று தொடங்கியவன் அலரின் தோள் அணைத்து நாங்க இருக்கோம், இது உனக்கு எவ்ளோ கஷ்டமான நேரம்ன்னு எங்களுக்கு புரியுது ஆனா நீ கோபபடாம, அழாம, எமோஷனல் ஆகாம, பொறுமையா இந்த அளவு பேசுறதை பார்க்கும் போது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு உனக்கு தனிமை தானே வேணும் அதுக்கு நாங்க பொறுப்பு..!! நீ யோசி கீர்த்தி நிதானமா யாரோட தொந்தரவும் இல்லாம யோசி கண்டிப்பா நல்ல முடிவு எடுப்பன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு' என்றவன் அலரை பார்த்தவாறே,

'ஆனா காலையில உன்னோட முடிவை முதல்ல இவ கிட்ட சொல்லிடு அப்போதான் என்னை நிம்மதியா இருக்க விடுவா இல்ல அவ மாமனுக்காக..' என்று ஆரம்பித்தவனுக்கு அன்று சரணுக்காக அலர் உலக்கையை கொண்டு தன்னை துரத்தியது நினைவில் எழ, புன்னகையுடன் 'ப்ளீஸ் சொல்லிடுமா' என்றான்.

"ஏன் மாமா இல்லாட்டி உங்களுக்கு அடி பலமா விழுமா..??" என்று குறும்புடன் கண்சிமிட்டி கேட்ட கீர்த்தியிடமும் முகம் கொள்ளா சிரிப்பு.

பின்னே எத்தனையோ முறை அவர்கள் வீட்டின் முதல் பேத்தியான அலர் மீது மொத்த குடும்பத்திற்கும் இருக்கும் அன்பையும் அலருக்கு சரண் மீதான அளப்பறியா பாசத்தையும் அவன் வாயிலாகவே கேட்டிருப்பவளுக்கு அல்லவா தெரியும் சரணுக்காக நிச்சயம் அலர் அதையும் செய்வாள் என்று..!!

அதை கேட்ட அலர் 'டேய்' என்று எழிலை முறைக்க,

'ஐயையோ கீர்த்தி உனக்கு ஏன் இந்த கொலவெறி' என்றவன் அலரிடம் 'நான் எதுவும் சொல்லலடி ஆனா பாரேன் நீ பேட்டை ரவுடின்னு ஊருக்கே தெரிஞ்சிருக்கு' என்றவாறு எழில் கீழே இறங்க அதை கேட்டு வாய்விட்டு சிரிக்க தொடங்கினாள் கீர்த்தி.

கீர்த்தியின் சிரிப்பில் தானும் புன்னகைத்தவள் 'குட் நைட் கீர்த்தி' என்ற அலர் வேகமாக செல்பவனிடம், 'டேய் பிராடு மாமா நில்லுடா' என்று அவனை துரத்தி கொண்டு சென்றாள்.

புன்னகையுடன் அவர்களை பார்த்து கொண்டு நின்ற கீர்த்தி சில நிமிடம் கழித்து மீண்டும் நடக்க தொடங்கிட அவளிடம் கனத்த யோசனை..!!

கீழே சென்றவர்கள் தீபிகாவை மேலே செல்ல வேண்டாம் கீர்த்தியை தனியாக இருக்க விடுமாறு கூறி கீழேயே தங்க வைத்து கொள்ள யாரின் இடர்பாடும் இல்லாமல் விடியும் வரையில் கீர்த்தி யோசனையில் ஆழ்ந்தாள்.

அறைக்கு திரும்பி கைபேசியை எடுத்து அதில் சரண் புகைப்படத்தை பார்த்தவாறு அவனிடம் ஏதோ பேச தொடங்கியவள் பின் அதை வைத்துவிட்டு மீண்டும் நேற்றைய இரவை அசைபோட ஒருகட்டத்தில் அவன் விலகலுக்கான காரணம் பிடிபட 'மா..மா' என்ற உற்சாக குரலுடன் அவள் விழிகள் விரிந்தது.

அடுத்த நாள் விடியலில் புத்துணர்ச்சியோடு கண் விழித்தவள் தன் முடிவை குடும்பத்தினரிடம் கூற அனைவருக்கும் அத்தனை மகிழ்ச்சி வளர்மதி ஓடி வந்து கீர்த்தியை அணைத்து கண்ணீருடன் அவள் உச்சியில் இதழ் பதிக்க நாதன் மட்டும் முகம் இறுகி போனார்.


ஹாய் செல்லகுட்டீஸ்...


இதோ "உயிரில் உறைந்த உறவே !!" அடுத்த அத்தியாயம் பதித்துவிட்டேன் கதை எப்படி போகுதுன்னு மறக்காம சொல்லிட்டு போங்க. சென்ற பதிவிற்கு லைக்ஸ் கமெண்ட்ஸ் செய்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

ருத்ரபிரார்த்தனா
 

Rudhraprarthna

Moderator
உறவு - 26.1

பின் மாலை பொழுதில் சென்னை வந்து சேர்ந்த சரண் எழில் வீட்டு கேட்டை திறக்க முற்ப்பட,

'எப்படி இருக்க சரண்..??' என்று கேட்டவாறே பக்கத்து வீட்டு பாக்கியம் அம்மா வந்தார்

'நல்லா இருக்கேன்ம்மா.., நீங்க எப்படி இருக்கீங்க..??'

"நாங்க நல்லா இருகோம்பா, என்ன நீ உன்னை இவ்ளோ நாளா பார்க்கவே முடியலை.., அலர் வீடு காலி பண்ணின அடுத்த நாளே நீ இங்க குடி வருவன்னு சொல்லி இருந்தா நாங்களும் நீ வருவன்னு எதிர்பார்த்தோம் பார்த்தா ஒரு மாசம் மேல ஆகியும் நீ வரவே இல்லை..",

"ஆமாம்மா சின்ன வேலையா ஊருக்கு கிளம்பினேன் அப்புறம் சூழ்நிலையால வரவே முடியலை"

'அவிகுட்டி எப்படி இருக்கான்..??'

'அவருக்கென்ன சூப்பரா இருக்கார்' என்றவாறு அவன் வீட்டு கதவை திறந்தான்.

ப்ரீத்தியை நாதன் அழைத்து சென்ற பின்னர் கடந்த சில மாதங்களாகவே வார இறுதிகளில் சரண் தன் பொழுதுகளை பெரும்பாலும் இங்கே அவிரனுடன் கழித்ததில் அருகே இருப்பவர்களிடம் நல்ல பரிச்சியம்.

சரண் வீட்டின் உள்ளே நுழையவும் அவன் பின்னோடு வந்த பக்கத்து வீட்டு பெண்மணி, 'என்ன சரண் இது..?? எப்போ கல்யாண சாப்பாடு போடபோறன்னு எத்தனை நாள் கேட்டிருப்பேன் இப்படி எங்களுக்கு எல்லாம் ஒரு வார்த்தை கூட சொல்லாம சீக்ரெட்டா கல்யாணம் முடிச்சி இருக்க' என்று உரிமையாக கோபிக்க,

'உங்களுக்கு எப்படி தெரியும் '

சாயங்காலம் உன்னோட பிரெண்ட் ஒருத்தங்க பேர் கூட ஏதோ திலிப், தில்.. என்று அவர் யோசிக்க,

'திலக்கா..??' என்றான்

'ஆமாபா திலக் அவங்க வைப்போட வந்திருந்தாங்க... அவங்க தான் உனக்கு கல்யாணம் ஆச்சுன்னு சொல்லி நீ வருவன்னு உன்னை எதிர்பார்த்து வந்திருந்தாங்க' என்றிட

அப்போது தான் சரணுக்கே திலக்கிடம் இன்று கீர்த்தி மற்றும் அவன் அன்னையுடன் இங்கு வரப்போவதையும் அதற்க்கான ஏற்பாடுகளையும் செய்ய சொல்லி கூறி இருந்தது நினைவு வந்தது. உடனே தன் கைபேசியை எடுத்து பார்த்தான். அதில் திலக்கிடம் இருந்து ஏகப்பட்ட அழைப்புகள் வந்திருப்பதை கண்டவன் நெற்றியை தட்டி கொண்டு பாக்கியத்திடம்,

'சொல்லகூடாதுன்னு இல்லம்மா கொஞ்சம் அவசரமா நடந்து முடிஞ்சிடுச்சி, யாருக்கும் சொல்றதுக்கு அவகாசம் இல்லை' என்றான் இயல்பான குரலில்

'ஆமா இது என்ன புது மாப்பிள்ளை தனியா வந்திருக்க எங்க உன் வீட்ல வரலையா..??' என்று கேட்க,

'எனக்கு கொஞ்சம் அவசர வேலை அதான் நான் முதல்ல வந்துட்டேன் அவங்க இன்னும் கொஞ்ச நாள்ல வருவாங்கம்மா'

"ஒ அப்படியா சரி சரண் நைட்க்கு டின்னர் நான் கொண்டு வரேன்" என்றிட,

"இல்லம்மா பரவால்ல நா.." என்றவனை தடுத்தவர்,

' ஏன் இதுக்கு முன்ன இங்க வந்தப்போ என்னோட சாப்பாடு சாப்பிட்டது இல்லையா இப்போ மட்டும் என்ன புதுசா..?? எப்படியும் நீ ஹோட்டல் சாப்பாடு சாப்பிட போறது இல்லை இதுக்கு மேல என்ன சமைச்சி எப்படி சாப்பிடுவ..?? நான் கொண்டு வரேன் அவ்ளோதான் ' என்றவர் பேச்சு முடிந்ததாக தன் வீட்டிற்கு சென்றார்.

உள்ளே வந்தவன் முதல் வேலையாக கணினியை எடுத்து கொண்டு அமர்ந்து தனக்காக காத்திருந்த தன் குழுவினருடன் இணைந்து வேலையை தொடங்கி இருந்தான்.

ஆம் இங்கிருந்து சரண்யாவின் நிச்சயத்திர்க்காக நான்கு நாட்கள் விடுப்பு எடுத்து கொண்டு கிளம்பியவன் அங்கு அவன் வீட்டிற்கு வந்த கீர்த்தியால்(ப்ரீத்தி) அவள் பிரசவம் முடியும் வரை இரண்டு மாதங்களுக்கு வீட்டில் இருந்தே work from home வேலை செய்வதாக கூறியிருந்தவன் அவள் பிரசவத்திற்கு பின் முடிவு செய்து கொள்ளலாம் என்று இருந்தான்.

ஆனால் எப்போது கீர்த்தியுடனான திருமணத்திற்கு நாள் பார்க்க சொன்னானோ அப்போதே திருமணம் முடிந்த கையோடு கீர்த்தியையும் அன்னையையும் அழைத்து கொண்டு சென்னை சென்றுவிடும் முடிவை எடுத்து இருந்தவன் அலுவலகத்தில் பேசி இந்த வாரம் பணியில் சேர்வதாக அறிவித்து விட்டான்.

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ப்ராஜக்ட் குறித்த குறிப்புகளை திருத்தங்களை குழுவினரிடம் பேசி முடித்து நாளைய வேலைகளையும் பட்டியலிட்டவன் ப்ரேக் எடுத்து கொண்டு நேரத்தை பார்க்க அது எட்டு என்று காட்டியது.

திரும்பியவன் கண்ணில் மேஜை மீது பாக்கியம் வைத்துவிட்டு சென்ற உணவு இருக்க கைகழுவி கொண்டு வந்தவன் தட்டில் போட்டு கொண்டு சப்பாத்தி குருமாவை உண்ண தொடங்க அடுத்த கணமே காரம் பட்டு விரல்களில் சுரீரென்ற வலி பரவியது வலக்கரத்தை விரித்து பார்த்தவனின் பெருவிரல் தொடங்கி மோதிர விரல் மற்றும் உள்ளங்கை வரை ஆங்காங்கு அவள் வளையல்கள் கிழித்து விட்டிருந்த காயம் தென்பட்டது.

இப்போது அதில் காரம் படவும் எரிச்சல் அதிகரிக்க கீர்த்தியை எண்ணி பார்த்தவனின் இதழ்கள் மறுகணமே 'ராட்சசி' என்று முணுமுணுத்தது.

குருமாவை ஒதுக்கி வைத்து விட்டு வெறும் சப்பாத்தியை உண்டு முடித்தவன் மீண்டும் கணினியில் அமர வேலை அவனை இழுத்துகொள்ள தொடங்கிட அவன் முடித்து உறங்கிய போது மணி மூன்று ஆகி இருந்தது.

***************************************

காலை புத்துணர்ச்சியோடு எழுந்த கீர்த்திக்கு இரவு முழுக்க யோசித்து சரணின் விலகலுக்கு இதை தவிர வேறு காரணம் இருக்க முடியாது என்று சரியாக கண்டுபிடித்தவள் மகிழ்ச்சிக்கு அளவற்று போக அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற முடிவுடனே உறங்க சென்றவளுக்கு அன்றைய விடியலே அழகாய் மாறி இருந்தது.

உற்சாகத்தோடு குளித்து முடித்து சரண் அவளின் பிறந்த நாளுக்கு பரிசளித்து இருந்த ஆரஞ்சு வர்ண சுடிதாரை எடுத்து அணிந்து கொண்டவள் ஒப்பனை முடித்து அலரின் அறை முன் வந்து நின்றாள்.

'குட் மார்னிங் கீர்த்தி' என்று அலர் கூற

'இன்னைக்கு நீ ப்ரீயா அமுலு'

இல்.. என்று தொடங்கியவள் கீர்த்தியின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை கண்டு, 'ஹ்ம்ம் ஆமா ப்ரீ தான் என்ன விஷயம் கீர்த்தி' என்று கேட்க

அவளிடம் தன் முடிவை கூறியவள் 'எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்' என்று கேட்க அதே நேரம் அலர் பின்னே வந்து நின்ற எழிலை கண்டவள் 'மாமா நீங்களும் தான்' என்றவள் பின் கீழே சென்று தோட்டத்தில் இருந்த நாதனிடம்,

'குட் மார்னிங் பெரிப்பா' என்றிட,

'ஜுரம் எப்படிமா இருக்கு'

'இப்போ சரி ஆகிடுச்சி பெரிப்பா பாருங்க' என்று தன்னை ஒரு சுற்று சுற்றி காட்டியவள் அங்கு அவருக்கான தேநீரை கொண்டு வந்த வளர்மதியை பார்த்து ஒரு நொடி தன் செயலை நிறுத்தியவள்,

'உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்'

'என்னமா சொல்லு'

'நான் எனக்கு சென்னைக்கு...' என்று தயங்கியவள் 'நான் மாமாகிட்ட போகலா..'

'தகவலா சொல்றியா..?? இல்ல அனுமதி கேட்கிறியா..??' என்ற போது தீபிகாவும் தாயம்மாளும் அங்கு வந்து சேர்ந்தனர்.

அவர் கோபம் புரிந்தவள், 'நீங்க.. உங்களுக்கு இதுல விருப்பம் தானே பெரிப்பா..??'

என் ராசாத்தி என்று கீர்த்தியை நெட்டி முறித்தவர் "யாரை பார்த்து என்ன கேள்வி கேட்கிற..?? எங்க எல்லாருக்கும் விருப்பம் இருக்கபோ என் மகனுக்கு ஏன் இல்லாம போகும் என்று நாதனை பார்த்தவர், கட்டி குடுத்த பொண்ணுங்க புருஷன் கூட வாழ்தாதானே என் மகனுக்கும் மதிப்பு, மரியாதை உன்ன போய் புருஷன் கூட வாழுன்னு சொல்லாம வீட்டோட இருக்கவா சொல்ல போறான்" என்று தாயம்மாள் கேட்க,

தாயை ஒரு பார்வை பார்த்தவர் கண்களை மூடி நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்தார். அதை கண்ட வளர்மதி, தீபிகாவிற்கு நெஞ்சம் அடித்து கொண்டது எங்கே கீர்த்தியின் முடிவை வேண்டாம் என்று மறுத்து இதற்கும் ஒரு பிரச்சனை செய்வாரோ என்று..!!

சில நொடிகளுக்கு பின் கண் திறந்து குரலை செருமி, 'சரி வந்து கூட்டிட்டு போக சொல்லு' என்றார்.

'அதில்ல பெரிப்பா.. மாமா.. நான்' என்றவளுக்கு அவருக்கு எப்படி புரியவைப்பது என்ற தவிப்பில் கீர்த்தி நிற்க

"இப்போ என்ன பிரச்சனை உங்களுக்கு..?? அதான் கீர்த்தியே கிளம்புறேன் சொல்றப்போ போயிட்டு வான்னு அனுப்பி வைக்காம எதுக்கு தேவை இல்லாம பேசிட்டு இருக்கீங்க" என்று அங்கே வந்த எழில்

'அது ஒண்ணுமில்ல கீர்த்தி உன் பெரிப்பாக்கு உன்னை தனியா எப்படி அனுப்புறதுன்னு யோசனை..!! நீ போய் ரெடி ஆகு எங்களுக்கும் சென்னையில வேலை இருக்கு நாங்களே உன்னை விட்டுட்டு வரோம்" என்று கூற,

'அப்படியா பெரிப்பா..??' என்றவள் அவர் அருகே சென்று அவர் கரங்களை பற்றி "தேங்க்ஸ், தேங்க் யு சோ மச் பெரிப்பா" என்று கூறிவிட்டு திரும்பியவளை ஓடி வந்து அணைத்து கொண்ட வளர்மதிக்கு சந்தொஷத்தில் வார்த்தை கிடைக்காமல் போக அவளுச்சியில் கண்ணீருடன் முத்தமிட்டார்.

'இப்போ சந்தோஷமா பெரிம்மா..??' என்று கேட்க புன்னகையுடன் தலை அசைத்தார் அதை கண்ட நாதனின் முகம் இறுகி போனது.

அனைவரிடமும் விடை பெற்ற கீர்த்தி எழில் அலருடன் கிளம்பி நேராக சென்றது வைதேகி வீட்டில் இருந்த கலைவாணியிடம் தான் அவரிடம் விஷயத்தை கூறி ஆசி பெற்றவள் எனக்கு இப்பவே உங்களை கூட்டிட்டு போகணும்ன்னு ஆசை பாட்டி என்று கூற,

"நான் எதுக்குமா அங்க..?? நீங்க சந்தோஷமா இருந்தா போதும், நீ பத்திரமா போயிட்டு வா" என்றிட,

அதற்கு இல்லை என்பதாக தலை அசைத்தவள், " அதெல்லாம் இல்ல நீங்க எப்பவும் தயாரா இருங்க பாட்டி சீக்கிரமே மாமாவோட வந்து உங்களை கூட்டிட்டு போறேன்" என்று கிளம்பினாள்.

*************************************

கைபேசி சிணுங்க போர்வையை விலக்கி அதை தேடி எடுத்து அழைப்பை ஏற்ற சரண் கண்விழித்தது என்னவோ 'மாமா' என்ற உற்சாக குரலோடு வீடியோ காலில் அவனை அழைத்த வருணின் முகத்தில் தான்.

குழந்தையை கண்டு அவன் புன்னகைக்க மறுபுறம் இருந்தவனோ எடுத்ததுமே, 'மாமா நீங்க எங்க இருக்கீங்க..??" என்றான்

'சென்னையில'

அதை கேட்டதும் அவன் உற்சாகம் எல்லாம் வடிய, 'அப்போ அம்மா சொன்னது உண்மையா..??' என்றான்

'என்னடா சொன்னாங்க..??'

'நாளைக்கு நீங்க என் பர்த்டேக்கு வர மாட்டீங்கன்னு சொன்னாங்க'

'ஆமா கண்ணா இங்க கொஞ்சம் வேலை நாளைக்கு வரமுடியாது ஆனா உன்னோட டிரஸ் இன்னைக்கு வந்துடும்' என்று அவனை சமாதனபடுத்தி அழைப்பை துண்டித்தவனுக்கு நாளை தான் அலரின் திருமண நாளும் என்பது நினைவில் வர உடனே எழுந்து சுத்தபடுத்தி கொண்டு வெளியில் வர அழைப்பு மணி ஒலித்தது.

திலக் தான் வந்திருந்தான், கூடவே சரண் கூறி இருந்த வீட்டிற்கு அத்தியாவசியமான பொருட்களான கட்டில், டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின் மாளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளுடன் வந்திருந்தவன் சரணுடன் சேர்ந்து அனைத்தையும் அதற்குரிய இடத்தில் வைத்துவிட்டு நிமிர,

'தேங்க்ஸ் திலக்' என்று அணைத்துகொண்டான் சரண்

"அது இருக்கட்டும் வேர் இஸ் கீர்த்தி..?? வந்ததுல இருந்து பார்க்கலை" என்றான்

'நெக்ஸ்ட் வீக் வருவா !'

'வாட் ..??'

'ஆம்' என்பதாக சரண் தலை அசைக்க,

'என்ன சொல்ற அடுத்த வாரமா..?? கூட கூட்டிட்டு வரேன் சொல்லி இருந்த..??' என்று யோசனையாக அவனை பார்க்க ,

'இல்ல திலக் முதல்ல அப்படி தான் ப்ளான் பண்ணி இருந்தேன் இப்போ அதுல சின்ன சேன்ஜ், அம்மாவும் கீர்த்தியும் சீக்கிரம் வந்துடுவாங்க'

'தென் ஹனிமூன் எங்க..??' என்று அவன் சாதாரணமாக கேட்க,

சில நொடி மெளனமாக இருந்த சரணோ பின் குரலை செருமி 'ப்ராஜக்ட் முடியறவரை எந்த பிளானும் இல்லை அப்புறம் தான் டிஸைட் பண்ணனும்' என்றிட,

"ச்சை இது தான் டியுட் இங்க பிரச்சனையே, இவனுங்களை நம்பி எதுவுமே ப்ளான் பண்ண முடியாது ஹெச் ஆர் பேசினாங்களா..??" என்று கேட்க இல்லையே ஏன்..? என்ற சரணிடம் நேற்று அலுவலகத்தில் நடந்ததை திலக் விளக்க அதன் பின் அவர்களின் பேச்சு வேலை சம்பந்தமாக திரும்பியது.

'ஓகே டியூட் வில் சீ லேட்டர்' என்று அவன் கிளம்ப அவனுடனே வீட்டை பூட்டி கொண்டு சரணும் கிளம்பி இருந்தான்.

உடை எடுக்க வேண்டி மாலுக்கு சென்றவன் வருணுக்கான ஆடையை தேர்ந்தெடுத்துவிட்டு அலர்விழிக்கு புடவை எடுக்க வேண்டி ஐந்தாம் தளத்திற்கு செல்வதற்கு லிப்ட்டிற்க்காக காத்திருந்தவன் அழைப்பு வரவும் சற்று தள்ளி வந்து அதை ஏற்று பேச தொடங்கிட அவன் விழிகளில் விழுந்தாள் கீர்த்தி.

ஆம் அவன் நின்றிருந்த தளத்தில் இருந்து தரை தளத்தை வேடிக்கை பார்த்தவாறு சரண் கைபேசியில் பேச அங்கிருந்த இயங்கும் படிக்கட்டின் (எஸ்கலேட்டர்) முன் கீர்த்தி நின்று கொண்டிருப்பதை கண்டான். எப்போதும் போல கண்களை இறுக மூடி ஒரு கரத்தை அருகே துப்பட்டா கொண்டு முகத்தை மூடி இருந்த பெண்ணின் கரத்தோடு இறுக்கமாய் கோர்த்துக்கொண்டு மற்றொரு கரத்தை தன் கழுத்தில் அணிந்திருந்த டாலரில் அழுந்த பதித்திருந்தாள்.

அதை கண்டவனோ தலையை தட்டி கொண்டு "ச்சை வர வர ரொம்ப மோசமாகிடுச்சி என் நிலைமை" என்று வலக்கரத்தை குவித்து நெற்றியில் தட்டி கொண்டவன்

'ராத்திரி மட்டும் இல்லாம இவளால பகல் கனவு வேற காண ஆரம்பிச்சிட்டேன்.. இவ்ளோ நாள் கண்ணை மூடினா வந்தவ இப்போ கண்ணை திறந்து வச்சிருக்கும் போதும் கண்ணுக்குள்ள வந்து படுத்துறா " என்று கீர்த்தியை திட்டி கொண்டு மீண்டும் லிப்ட்டின் அருகே செல்ல,

"ஹேய் சரண் கம் ஹியர்" என்ற திலக்கின் குரல் அழைக்க,

'என்னடா..?' என்று அங்கு வந்த சரண் அதுக்குள்ள நீ எடுத்து முடிச்சிட்டியா..?? என்று கேட்க.,

அவனோ "லுக் அட் தேர் மேன்" என்று கீழே சுட்டி காட்டிட,

'என்னடா அங்க' என்றான் இன்னமும் எஸ்கலேட்டர் முன் நின்று கொண்டிருந்த கீர்த்தியை பார்த்து ,

"ஹேய் கீர்த்தி மேன்..!! உனக்கு தெரியலை அங்க பாரு எஸ்கலேடர் முன்னாடி நின்னுட்டு இருக்கிறது கீர்த்தி தானே..?? நெக்ஸ்ட் வீக் வருவாங்கன்னு சொன்ன அப்போ இது யாரு ..?? என்று கேட்க,

அப்போது தான் அவளை கண்டது கனவல்ல நிஜம் என்பது புரிய மீண்டும் கண்ணை கசக்கி கொண்டு கீழே பார்த்தான்.

அன்று அவன் கண்ட அதே குழந்தைதனமான முகமும் அதில் குடிகொண்டிருந்த பயத்துடன் கூடிய அப்பாவித்தனமும் மிளிர நெரிந்த புருவங்களின் கீழ் மூடிய இமைகளுக்குள் கருவிழிகள் அசைந்தாட அவள் இதழ்களோ ஓயாது முணுமுணுத்து கொண்டிருப்பதை கண்டான்.

சரண் அவளை பார்த்த அதே நொடி மெல்ல இமைகளை மலர்த்தியவளின் மருண்ட நயனங்கள் சரணை மாய சுழலில் தள்ள அடுத்த நொடி கையில் இருந்ததை திலக்கிடம் திணித்தவன் அவளை நோக்கி ஓடி இருந்தான்.

ஹாய் செல்லகுட்டீஸ்


இதோ "உயிரில் உறைந்த உறவே !!" அடுத்த அத்தியாயத்தின் முதல் பகுதி பதித்துவிட்டேன் அடுத்த பகுதி விரைவில். சென்ற பதிவிற்கு லைக்ஸ் கமெண்ட்ஸ் அளித்தவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் படித்து கதையின் போக்கு எப்படி இருக்குன்னு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
 

Rudhraprarthna

Moderator
'வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே !!'

மூன்றாம் தளத்தில் இருந்து அடுத்த தளத்தை நோக்கி சரண் வேகமாக வந்திருந்தாலும் அவள் மீதிருந்து பார்வையை அகற்றவில்லை. இம்முறை கீர்த்தியின் கரத்தை விட்ட அப்பெண் 'போ' என்பதாக சைகை காட்ட பல படிகள் மேலே சென்ற போதும் தயக்கத்துடன் கழுத்து சங்கிலியில் இருந்து கையை எடுக்காமல் இருந்தவள் ஒரு கட்டத்தில் தைரியத்தை கூட்டி எஸ்கலேட்டரில் கால் வைத்த கீர்த்தி சமநிலை கொள்ள முடியாமல் தடுமாறி கீழே விழ போக பதறி போனவன் தன்னை அறியாமல் "பாப்பு பார்த்து" என்று கத்திவிட்டிருந்தான் சரண்.

சட்டென உரக்க ஒலித்த அவன் குரலில் அனைவரும் அவனை திரும்பி பார்க்க ஓடிக்கொண்டு இருந்த சரணின் கால்கள் ஒரு நொடி நிதானிக்க மாலில் இருந்த கூட்டத்தினரிடையே சலசலப்பு அதை உணர்ந்தவன் சுற்றி இருந்தவர்களிடம் சாரி என்று முணுமுணுத்து தன் ஓட்டத்தை தொடர்ந்து கீழே தரை தளத்திற்கு சரண் வந்து சேர்ந்த போது கீர்த்தி நின்றிருந்த இடம் வெறுமையாக காட்சி அளித்தது.

சுற்றிலும் தன் பார்வையை ஓடவிட்டவனுக்கு முதலில் ஊரில் இருந்தவள் எப்படி இங்கே..?? என்ற கேள்வி எழ அடுத்த நொடியே சற்று முன் நடந்த நிகழ்வை எண்ணி பார்த்திட அவன் வார்த்தையை மதிக்காமல் யாரை கேட்டு இங்கே வந்திருக்கிறாள்..?? அது தான் அவனே வந்து அழைத்து செல்கிறேன் என்று கூறி இருந்தானே அதையும் மீறி எதற்கு வந்தாள்..?? என்று சீற்றம் கொண்டவன் பத்து நாட்களுக்கு அவளுக்கு அழைக்கவே கூடாது என்று தனக்கு தானே கட்டுப்பாடு விதித்திருந்தவன் இப்போது அதையெல்லாம் தூக்கி எரிந்து விட்டு உடனே அவள் எண்ணிற்கு அழைத்திருந்தான்.

ஆனால் மூன்று அழைப்பிற்கு மேலும் அவள் எடுக்காமல் போகவும் மேலும் தாமதிக்காமல் இருபது நிமிடத்திற்கும் மேலாக தரை தளம் முதல் தளம் என்று அனைத்து இடத்திலும் தேடி பார்க்க எங்குமே அவள் இல்லை. ஒருவேளை வெளியேறி இருப்பாளோ என்று முகப்பிற்கு வந்தவன் அங்கும் அவள் முகத்தை தேட எங்குமே அவள் இல்லை.

இரவும் பகலும் அவள் நினைவில் வாடுபவனுக்கு எப்போதும் போலவே காணும் யாவிலும் கீர்த்தியே தெரிகிறாளோ..?? என்று தோன்ற நெற்றி பொட்டை நீவி விட்டு யோசிக்க தொடங்கியவனுக்கு அதே நேரம் அது எப்படி திலக் கண்களுக்கு அவள் தெரிய முடியும் என்ற சந்தேகமும் எழுந்தது.

ஆனால் அவன் அவளை பார்த்தது நிஜம் அவள் விழபோனது நிஜம் அப்படி இருந்தும் அவன் குரலுக்கு அவள் தேடி வரவில்லை என்றால் ஒருவேளை இது பிரம்மை தானோ என்ற முடிவிற்கு வந்தவனுக்கு இத்தனை நேரம் தேடியும் அவள் எங்கும் இல்லாமல் போனதை உணர்ந்தவன் இந்த ஜனத்திரளில் எங்கே சென்று அவளை தேட..? அது வீண் நேர விரயம் என்பது புரிய உடனே வளர்மதிக்கு அழைத்து கீர்த்தி எங்கே..?? என்று கேட்டான்.

அவரோ கீர்த்தி இப்போது தான் தன்னிடம் பேசி விட்டு தூங்க சென்றாள் என்று கூறவும் மதியத்தில் உறங்கும் பழக்கம் அவளுக்கு இல்லையே அப்புறம் எப்படி என்ற சந்தேகத்துடனே கைபேசியை அணைத்தவன் மீண்டும் மாலினுள் சென்று திலக்கிடம் விடைபெற்று கிளம்பினான்.

முக்கிய சாலையை கடந்து கிளை சாலையில் வளையவும் அவனை முந்திக்கொண்டு ஒரு பைக் வேகமாக செல்ல அதில் ஜீன்ஸ் டாப்ஸ் அணிந்த ஒரு பெண் துப்பட்டா கொண்டு முகத்தை மூடியவாறு பின்னே அமர்ந்து சென்று கொண்டிருந்தாள்.

முகத்தை மூடி இருந்தாலும் ஏனோ அது கீர்த்தியை போல இருப்பதாக தோன்ற மெல்ல அவர்களை விரட்டி சென்றவனுக்கு அது கீர்த்தியே தான் என்று மனம் அடித்து சொல்ல, இவள் எப்படி ஒருவருடன் என்று தோன்ற சரணும் தன் வேகத்தை கூட்டியவன் இப்போது முன்னே பைக்கிற்கு பக்கவாட்டில் சென்று மீண்டும் ஒருமுறை பார்க்க முகத்தை மூடி இருந்தாலும் கணப்பொழுதில் அவள் விழிகளை சந்தித்தவனுக்கு அது கீர்த்தி தான் என்பதில் அத்தனை உறுதி.

அவளை கண்டு கொண்டவன் 'கீர்த்தி' என்று அழைக்க அவளோ பார்வையை திருப்பினாள் இல்லை.

தன்னை அலட்சியபடுத்துபவளை கண்டு 'ஏய் கீர்த்தி காது கேட்கலை உன்னை தான்டி கூப்ட்டுட்டு இருக்கேன்' என்றான் சற்று உரக்க

இப்போதும் கீர்த்தி அவனை கண்டு கொள்ளாமல் இருப்பதை கண்டவனுக்கு மேலும் கோபம் அதிகரிக்க,

"ஏய்!!" என்று சினந்தவன்,

"கீர்த்தி உன்னை தான் இங்க பாரு" என்று அவள் பின்னே சில அடி தூர இடைவெளியில் வந்து கொண்டிருந்தவன் ஏய் நில்லுடி யாரை கேட்டு இங்க வந்த..?? கேட்கிறது காதுல விழலை
பதில் சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்" என்று ஒரு கட்டத்தில் கர்ஜித்திருந்தான்.

நல்லவேளை அவர்கள் சென்றது கிளை சாலை என்பதாலும் மதிய வேலை என்பதாலும் பெரிதாக போக்குவரத்து இல்லாது ஆங்காங்கு ஒன்றிரண்டு வாகன போக்குவரத்து மட்டுமே இருந்தது.

ஆனால் அதுவே முன்னே பைக்கை ஒட்டி கொண்டு இருந்தவனுக்கு சாதகமாகிவிட இன்னும் வேகம் எடுத்தான் காற்றை கிழித்து கொண்டு அவன் சென்ற வேகத்தில் கீர்த்தி ஒரு நொடி திணறி பின்னே இருந்த கம்பியை பிடித்து கொண்டு கண்மூடி பயத்துடன் அமர்ந்திருப்பதை கண்டவன்,

இப்போது கோபத்தை விடுத்து, "டேய் யார்ரா நீ..?? இப்படிதான் கண்ட்ரோல் இல்லாம ஓட்டுவியா..??" என்று கேட்டவன் அவன் வேகத்தை குறைக்காமல் இருப்பதை கண்டு, அவர்கள் பின்னேயே சத்தமான குரலில் "வேகமா போகாத அவ விழுந்துட போறா அவளுக்கு ஒழுங்கா உட்கார தெரியாது மெதுவா போ இல்ல நிறுத்துடா" என்று கத்தி கொண்டே அவனை பிடிக்க முயல ஹெல்மெட் அணிந்திருந்தவனோ இன்னும் வேகமெடுத்திருந்தான்.

சரணின் வார்த்தைகளை வண்டி ஓட்டி கொண்டிருந்தவன் மதிக்கவில்லை என்று புரியவும் முதலில் நம்பர் பிளேட்டை பார்த்து எண்ணை மனதினுள் குறித்து கொண்டவன், "டேய் நீ மட்டும் என் கையில மாட்டு அப்போ இருக்கு உனக்கு" என்று கருவிக்கொண்டு இப்போது கீர்த்தியிடம்,

'ஏய் அறிவுகெட்டவளே உனக்கென்ன பெரிய இவன்னு நெனப்பா..?? முன்னாடி தள்ளி உட்காருடி" என்று கூற,

இப்போது அவன் புறம் திரும்பியவளின் பார்வையில் ஏதோ இருக்க அதை என்னெவென்று உணர முடியாதவன்,

"ஏய் இங்க என்னடி பார்வை என்னை அப்புறம் பார்க்கலாம், விழுந்திட போற முதல்ல அவனை பிடிச்சிட்டு பத்திரமா உட்கார்' என்று அவளை கடிந்த பின்னரே முன்னே ஒட்டி கொண்டிருந்தவனை ஒட்டி கொண்டு அவன் வயிறை சுற்றி கரங்களை கோர்த்து கொண்டு அமர்ந்தாள்.

கீர்த்தி நெருங்கி அமர்ந்ததுமே அவன் இன்னமும் வேகமெடுத்து கிளை சாலையில் இருந்து தெருவுக்குள் நுழைய அவர்களை பின்தொடர்ந்த சரணுக்கு எழிலிடம் இருந்து அழைப்பு வந்து கொண்டே இருக்க முதலில் எடுக்காமல் அவர்களை தொடர்ந்தவன் ஒரு கட்டத்தில் வண்டியை ஓரம் நிறுத்தி அதை ஏற்றவன், "என்னண்ணா..??" என்று கேட்க,

" சரண் எங்கடா இருக்க..?? "

"ண்ணா நான் வெளியே இருக்கேன் இங்க கீர்த்தி.." என்று அவன் ஆரம்பிக்கவும்,

"சரண் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் அதான் கால் பண்ணேன்" என்றிட,

அவன் குரலில் இருந்த தீவிரத்தை உணர்ந்தவன் கேட்க வந்ததை கேட்காமல் 'சொல்லுங்கண்ணா' என்றிட,

"என் பிரெண்ட்டோட தங்கச்சி டென் டேஸ் கோர்ஸ் ஒன்னு முடிக்கறதுக்காக சென்னை வந்திருக்கா எங்க தேடியும் அவளுக்கு தங்க இடம் கிடைக்கலை அதான் இங்க நம்ம வீட்ல ஸ்டே பண்ண வைக்கலாம்ன்னு இருக்கேன் அது விஷயமா உன்கிட்ட பேசணும் சீக்கிரம் வா நான் இப்போ வீட்ல தான் இருக்கேன் "

'என்னது..?? என்று திகைத்தவன் 'ண்ணா என்ன பேசிட்டு இருக்கீங்க..??' என்று எழிலிடம் கேட்டுக்கொண்டே அவர்களை தவறவிட்டிருந்தான்.

ஆம் சரண் முன்னே சென்று கொண்டிருந்தவன் ஒரு கட்டத்தில் அவன் கவனம் சிதறிய நேரத்தில் அவன் கண்ணில் மண்ணை தூவிவிட்டு கீர்த்தியோடு எந்த வளைவில் நுழைந்தான் என்றே தெரியவில்லை அதை உணர்ந்து, "வரேன் இருங்கண்ணா" என்று அழைப்பை துண்டித்தவன் விழிகள் அனைத்து புறமும் சூழல ஏதோ ஒரு நம்பிக்கையோடு அடுத்த இரண்டாம் வளைவில் தானும் நுழைந்தவன் விடா முயற்சியுடன் அவர்களை தேடி செல்ல அங்கே இருந்த பெண்கள் விடுதியின் முன் அவர்களை பிடித்திருந்தான்.

வண்டியில் இருந்து இறங்கிய கீர்த்தியும் முன்னே இருந்தவனும் யாரோ ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டு இருப்பதை கண்ட சரண் வண்டியை நிறுத்தி விட்டு இறங்கி ஆவேசத்தோடு "டேய் உனக்கென்ன காது செவிடா..??" என்றவாறு வண்டியை ஒட்டி வந்தவனின் ஹெல்மெட்டை கழற்றியவாறு கை ஓங்க,

அருகே இருந்த பெண் பதறி பின்னே நகர கீர்த்தியோ, "ஹலோ மிஸ்டர் என்ன பண்றீங்க..??" என்று அவன் கரத்தை பிடிக்க.

அதற்குள் "அச்சோ மாமா அடிச்சிடாதீங்க" என்றவாறு ஹெல்மெட்டை பற்றிய அலரின் குரலில் 'அமுலு' என்று சரண் அவளை திகைத்து பார்க்க,

அதற்குள் அவன் முன் சொடக்கிட்டு அவனை தன் புறம் திருப்பிய கீர்த்தி

"மிஸ்டர் உங்களுக்கு என்ன வேணும் எதுக்கு எங்களை சேஸ் பண்ணிட்டு வரீங்க..??" என்று கேட்க

'என்னது மிஸ்டரா..??' என்று குறையாத கோபத்தோடு அவளை பார்த்தவன்,

"என்னடி இதெல்லாம்..??" யாரை கேட்டு இங்க வந்த..??" என்று இன்னும் முகத்தை ஷால் கொண்டு சுற்றி இருந்த கீர்த்தியிடம் சீற,

"எக்ஸ்கியுஸ் மீ மிஸ்டர் என்ன உங்க இஷ்டத்துக்கு பேசிட்டு போறீங்க..?? நான் எங்க போறேன் வரேன்னு கேட்க நீங்க யாரு ..??" என்று கேட்க,

'என்னது நான் யாரா..??' என்று விழிகள் சிவக்க அவளை பார்க்க கீர்த்தியோ அருகே இருந்த பெண்ணிடம் "ஓகே தேங்க்ஸ் இன்னொரு முறை பார்க்கலாம்" என்று கூறி மீண்டும் வண்டியில் அமர்ந்து 'கிளம்பு' என்று கூற

'ஏய் எங்கடி போற நில்லு' என்று அவள் ஷாலை பிடித்து இழுக்க அதற்குள் அலர் வண்டியை கிளப்பி இருந்தாள்.

'அமுலு நிறுத்து' என்ற அவன் குரல் காற்றோடு கலக்க, என்ன நடக்கிறது எதற்காக அலரும் அவளும் இத்தனை வேகமாக சென்றனர் என்று எதுவும் புரியாமல் சில நிமிடம் அங்கேயே நின்று விட்டான்.

பின் அவளை அழைத்து செல்வது அலர் என்பதில் ஆசுவாசம் கொண்டு தன் பைக்கை எடுத்து கொண்டு மிதவேகத்தில் செல்லும் அவர்களை பின்தொடர்ந்தான்.., அவன் எண்ணியது போலவே வீட்டின் முன் பைக்கை நிறுத்தி இருவரும் இறங்கி நின்றிருக்க கைபேசியில் யாருடனோ வீடியோ காலில் பேசிக்கொண்டு இருந்த கீர்த்தி தன் முகத்தை மறைத்திருந்த ஷாலை எடுத்துவிட்டு முன் நெற்றியில் புரண்ட கூந்தலை ஒதுக்கியவாறே பேச்சை தொடர ஒரு கட்டத்தில் அவள் முகத்தில் இது நாள் வரையில் தொலைந்து போயிருந்த சிரிப்பை கண்டவன் மேலும் முன்னேற தோன்றாமல் இமைக்கவும் மறந்து அவள் சிரிப்பில் தன்னை மெல்ல மெல்ல கரைத்து கொண்டிருந்தான்.

'மாமா' என்று அவன் முன்னே வந்து நின்ற அலர் அழைக்கவும் தான் கீர்த்தி மீதிருந்து பார்வையை அகற்றியவன்,

"அமுலு இதென்ன விளையாட்டு..?? எப்பவும் இப்படி தான் பாஸ்ட்டா வண்டி ஓட்டுவியா..?? அதுவும் சென்னையில..!! எங்கயாவது விழுந்து அடிபட்டா என்ன ஆகுறது..?? அப்படி என்ன அவசரம் உனக்கு..?? அதுவும் இவளை பின்னாடி வச்சிட்டு.." என்று பல்லை கடித்து கொண்டு கீர்த்தியை பார்க்க,

எப்போதடா அவளை பேச்சில் இழுப்பான் என்று காத்திருந்தவள் போல உடனே அவனை நெருங்கியவள், "ஹலோ மிஸ்டர் என்ன உங்க பிரச்சனை எதுக்கு எங்களை பாலோ பண்ணிட்டு வந்தீங்க..?? இப்போ எதுக்கு அவளை திட்டறீங்க..??" என்று கேட்க,

இத்தனை நாட்கள் சேலையிலும் சுடிதாரிலும் அவளை கண்டிருந்தவனுக்கு இன்று முதல் முறையாக ஜீன்ஸ் டாப்பில் காணவும் முன்பை விட வயது குறைந்து சிறு பெண்ணாக காட்சி அளித்திருந்தவள் அவன் முன்னே கையை ஆட்டி பேசுவதை கண்டவனுக்கு இதழ்கடையோரம் புன்னகை அரும்பினாலும் அதை மேலும் பரவாமல் தடுத்தவன் 'அடிங்க நானும் போனா போகுதுன்னு விட்டா, என்னடி மிஸ்டர்..??' என்று அவளிடம் செல்ல,

'மாமா இருங்க நான் சொல்றதை கேளுங்க' என்று அலர் அவனை தடுத்து நிறுத்திட அதே நேரம் கீர்த்தி அவனை முறைத்து விட்டு வீட்டினுள் சென்றிருந்தாள்.

'என்ன கேட்கணும்' என்று அலர் புறம் திரும்பியவன்

"முதல்ல நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்கன்னு அண்ணாக்கு தெரியுமா..?? உன்னை தனியா விட்டுட்டு அவர் வீட்டுக்குள்ள என்ன பண்றார்..?? அவிரன் எங்க ..?? ' என்றவாறு அலரை அழைத்து கொண்டு அவசரமாக வீட்டுக்குள் சென்றிருந்தான்.

அங்கே ஹாலில் எழில் அமர்ந்து யாருடனோ பேசிக்கொண்டு இருப்பதை கண்டவன் உடனே,

'கீர்த்தி'

'கீர்த்தி' என்று அழைத்து அவளை தேட,

அதற்குள் பேசி முடித்து 'சரண்' என்று எழில் அவனை நிறுத்தி இருந்தான்.

"அண்ணா என்ன நடக்குது இங்க..?? அக்காக்கு கால் பண்ணி கேட்டா கீர்த்தி தூங்குறான்னு சொன்னங்க ஆனா இவ என்னடான்னா இங்க வந்திருக்கா மால்ல பார்த்துட்டு கீழ வந்தா இல்லை அப்புறம் பைக்ல அமுலுவும் இவளும் எவ்ளோ பாஸ்ட்டா வராங்க ரோடு எவ்ளோ மோசமா இருக்கு அதுல புல் ஸ்பீட்ல வராங்க எங்கயாவது விழுந்து வாரி இருந்தா தெரிஞ்சிருக்கும்" என்றவன் அலர் புறம் திரும்பி

'என்ன அவசரம் உனக்கு ஏன் நான் கூப்பிட்டும் நிறுத்தாம போன..??' என்று கேட்க,

'எனக்கு எதுவும் தெரியாது ஆர்த்தி தான் மாமா நிறுத்தாம பாஸ்ட்டா போக சொன்னா' என்று அவள் பாவமாக அவனை பார்க்க,

'ஆர்த்தியா..?? யார் ஆர்த்தி..??' என்றான் புரியாமல்

'அதை நான் சொல்றேன்டா' என்று சரனை அழைத்து கொண்டு அமர்ந்தவன் உன்கிட்ட சொன்னேனே என் பிரென்ட் தங்கச்சி இங்க தங்க வைக்கிறேன்னு அவளோட பேர் தான் ஆர்த்தி" என்றான்.

'வாட்..??'

'ஆமா' என்றவன் 'ஆர்த்தி' என்று அழைக்க மாடியை சுற்றி பார்த்து கொண்டு இருந்தவள் 'இதோ வரேன் மாமா' என்று குரல் கொடுத்து கீழே வர அவளிடம்,

'நான் சொல்லலை என்னோட தம்பி சரண் அது இவன் தான்' என்று எழில் அறிமுகபடுத்தவும்,

'இவ தான் உங்க பிரென்ட்டோட தங்கச்சியா..??' என்று கேட்டவனின் குரலில் கடுமையும் எள்ளலும் சமவிகிதத்தில் கலந்திருந்தது.

"இல்லையா பின்னே..?? உனக்கே தெரியும் வெற்றி என் பிரெண்ட் அவனுக்கு இவ தங்கச்சி முறை இப்போ கரெக்ட்டா இருக்கா..???" என்று கேட்க,

கேள்வியை எழிலிடம் கேட்டிருந்தாலும் பார்வை புதிதாய் மாடர்ன் உடையில் இருந்தவளை விட்டு அகல மறுக்க முழுதாக அவளை ஆராய்ந்தவன் மேவாயை நீவியவாறே 'இருக்கு இருக்கு ஆனா அதென்ன ஆர்த்தி..??' என்றிட,

"அது தான்டா அவ பேரு" என்றவன்

"என்ன ஆர்த்தி பார்த்துட்டு நிற்கிற, நான் சொல்லி இருக்கேனே என் தம்பி சரண் ரொம்ப நல்லவன், நம்பிக்கையானவன், பொறுமைசாலி, கோபம்ன்னா என்னனே தெரியாது, உன்னை பத்திரமா கண்ணுக்குள்ள வச்சி பார்த்துப்பான்னு சொன்னேனே அது இவன் தான் " என்று மூச்சு வாங்க எழில் பேசி வைத்ததற்கு கீர்த்தியிடம்
'ஓஓ' என்ற இதழ் சுழிப்பு மட்டுமே..!!

என்ன ஆர்த்தி இவ்ளோ சொல்றேன் வெறும் ஓஓ தானா..?? என்று எழில் கேட்க,

"பின்னே ரோட்ல எங்களை துரத்திட்டு வந்தவருக்கு ஓஓஓஹோஒ வா போட முடியும் இவருக்கெல்லாம் இந்த ஓஒவே போதும் என்று சரணை பார்த்து மீண்டும் உதட்டை சுழிக்க சரணின் மனமோ அவளின் சுழிப்பில் சிக்கி தவித்தது.

'வாட்எவர்' என்று தோள்களை குலுக்கி கொண்டு " நீங்க இவ்ளோ தூரம் சொல்றதால ஹாஸ்டல் வேண்டாம் நான் இங்கயே தங்கிக்கிறேன் அதுவும் உங்க தம்பிக்கு நீங்க கொடுக்குற பில்ட்அப் வச்சி பார்க்கிறப்போ நல்லவரா தான் இருப்பாருன்னு தோணுது" என்று சரணை அழுத்தமாக பார்க்க,

'என்னது ஹாஸ்ட்டலா..??' என்று சரண் புரியாமல் அவளை பார்க்க,

"ஹலோ மிஸ்டர் சரண் க்ளாட் டூ மீட் யு..!! நான் ஆர்த்தி உங்களோட ஹவுஸ்மெட்" என்று குறும்புடன் கையை நீட்ட,

' வாட்..?? '

'எஸ் ஹவுஸ்மெட்' என்று அவன் கையை பிடித்து குலுக்கியவள், 'இன்னும் பத்து நாளைக்கு நான் உங்களோட இங்க தான் தங்க போறேன்' என்றாள்.

அதை கேட்டவனிடம் சிறு அதிர்வு ஏற்பட்டாலும் அதை மறைத்தவன் உடனே "ஏய் என்னடி விளையாடுறியா..?? இது என்ன புது நாடகம் என் கோபத்தை கிளறாம ஒழுங்கு மரியாதையா இங்கிருந்து கிளம்பு" என்று சீறிட

கீர்த்தியோ அவன் சீற்றத்தை கணக்கில் கொள்ளாமல் தீர்க்கமாக அவனை பார்த்தவள், "ஹலோ மிஸ்டர் சரண் ஏதோ கட்டின பொண்டாட்டியை பேசுற மாதிரி என்ன உங்க இஷ்டத்துக்கு பேசிட்டு போறீங்க, முன்ன பின்ன தெரியாத பொண்ணு கிட்ட இப்படி தான் பேசுவாங்களா வார்த்தையை அளந்து பேசுங்க " என்று அவளும் பதிலுக்கு மல்லுக்கு நிற்க பல வருடங்கள் கழித்து அவள் குரலிலேயே காதலிக்கும் காலத்தில் அவன் கண்டு ரசித்த குதுகலமான கீர்த்தியை உணர்ந்து கொண்டவனுக்குள் ரசனை மேலும் விரிய அவளுடன் பேச்சை வளர்க்க வேண்டி,

"என்னது மிஸ்டர் சரணா..?? ஏய் அடிச்சேன்னா பேச... " என்று சரண் கையை ஒங்க அதற்குள் அவனை தடுத்து பிடித்த எழில்,

"டேய் அந்த பொண்ணை யாருன்னு நெனச்சி நீ பேசிட்டு இருக்க கொஞ்சம் பொறுமையா இருடா ஹாஸ்டல்ல இருந்துக்குறேன்ன்னு சொன்னவளை கஷ்டப்பட்டு இங்க தங்க வைக்க உன்னை பத்தி நல்ல விதமா சொல்லி சம்மதிக்க வைச்சி இருக்கேன் அதை நீயே கெடுத்துடுவ போல" என்றான்.

"ண்ணா " என்றவனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

'டேய் அவ கீர்த்தி இல்ல ஆர்த்தி' என்று கூற,

அங்கிருந்த மூவரையும் பார்த்தவன் "இது என்ன புது கதை " என்று பல்லை கடித்து கொண்டு கேட்க,

' அது ஒரு பெரிய கதை சரண் எங்களுக்கே நேத்து தான் தெரிஞ்சது ' என்ற எழிலின் குரலில் மெல்லிய நகைப்பு

"அப்படி என்ன கதை..??" என்று கீர்த்தியை பார்த்தவனுக்கு அவர்கள் என்ன தான் செய்யவிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் மிக 'சொல்லுங்க நானும் கேட்கிறேன்' என்றான்.

"இதோ இங்க இருக்காளே என்று அலரை சுட்டி காட்டியவன் இவளோட சொத்தபனுக்கு ரெண்டு பொண்ணு தான் நாங்க நெனச்சி இருந்தோம் ஆனா பாரு நேத்து தான் மூணாவது பொண்ணு இருக்க விஷயமே எங்களுக்கு தெரிஞ்சது" என்றிட,

"மாமா எனக்கு சின்ன வேலை இருக்கு நீங்க பேசிட்டு இருங்க நான் கோர்ட் வரை போயிட்டு வரேன்" என்று அலர் எழுந்து வாசலுக்கு செல்ல,

'அமுலு இப்படியேவாடி போக போற..??' என்று அவள் அணிந்திருந்த ஜீன்ஸை சுட்டி காட்டி எழில் கேட்க,

அப்போது தான் உடையை கவனித்தவள் 'மறந்துட்டேன் மாமா இதோ சேன்ஜ் பண்ணிட்டு கிளம்புறேன்' என்றவள் மாடிக்கு தங்கள் அறைக்கு சென்றவள் 'மாமா ஒரு நிமிஷம் இங்க வா' என்று அழைக்க 'நீயே உன் கதையை சொல்லு ஆர்த்தி நான் கொஞ்ச நேரத்துல வரேன்' என்று எழிலும் மாடிக்கு சென்றான்.

செல்லும் இருவரையும் பார்த்து கொண்டு நின்றிருந்த சரண் அவர்கள் அறைக்குள் செல்லவும் எழுந்து இருகரங்களையும் கோர்த்து நெட்டி முறித்தவாறே தன் எதிரே நின்றிருந்தவள் முன் வந்து நின்றான்.

'என்ன மிஸ்டர் சரண் என்கிட்டே ஏதாவது சொல்லனுமா..??' என்று தன் முன் வந்து நின்றவனை அவள் இமைக்காமல் பார்க்க,

அவனோ அவள் கேள்வியை புறம் தள்ளி பின்னங்கழுத்தை வருடி கொடுத்தவாறு அழுத்தமாக அவளை பார்க்க அவனுக்கு சளைக்காமல் அவளும் திருப்பி அவனை பார்த்து வைத்தாள்.

அவள் பார்வையில் சினம் துளிர்க்க 'ஏய் என்னடி கொழுப்பா' என்று சீறியவன் அவள் சுதாரிக்கும் முன் ஒரு கரத்தால் அவளை தூக்கி தோளில் போட்டுக்கொள்ள அதை எதிர்பாராதவள் உடனே,

'என்ன பண்றீங்க விடுங்க என்னை... மிஸ்டர் சரண் விடுங்க' என்று திமிறியவளை அசட்டை செய்து அருகே இருந்த அறைக்குள் தூக்கி சென்றவன் கதவை தாளிடவும் அவனிடம் இருந்து துள்ளி கீழே இறங்கியவள்,

'வாட் இஸ் திஸ் மிஸ்டர் சரண்..??' என்று அவள் ஆரம்பிக்கவுமே,
'அடிங்க' என்று கை ஓங்கி கொண்டு அவளை நெருங்க ஒரு நொடி திகைத்து பின்னடைந்தாள்.

கண்களில் மிரட்சியுடன் நின்றவளை தலை முதல் கால் வரை அளவிட்டவன்

"ஆளைப்பாரு ஆழாக்கு சைஸ்ல இருந்துட்டு வந்ததுல இருந்து நானும் பார்க்கிறேன் ஓவரா துள்ளிட்டு இருக்க" என்று அவளை சுவரில் சாய்த்து இருபுறமும் கரங்களால் சிறைபிடித்து,

"இன்னொருமுறை மிஸ்டர் சரண் சொல்லி பாருடி தெரியும்.. " என்று எச்சரிக்க,

அவளோ தலை சாய்த்து 'சொன்னா..??' என்று புருவம் ஏற்றி இறக்க,

" மொத்த பல்லையும் தட்டி கையில கொடுத்துடுவேன்"

'ஓஓ' என்று அவள் உதட்டை சுழிக்க,

சுழித்த அவள் இதழ்களை இரு விரலால் பிடித்தவன் 'என்னடி ஓஒ ' என்று தன் மூச்சு காற்று முகத்தில் அறையும் வண்ணம் அவளை நெருங்கி,

'சொல்லகூடாதுன்னா கூடாது' என்று கட்டளையிட்டவனின் கரம் இதழ்களை விடுத்து மெல்ல கீழே இறங்க,

"ஏன் சொல்ல கூடாது அது தானே உங்க பேரு..?? மிஸ்டர் சர.." என்றவளின் பேச்சு அவன் கரம் சென்று சேர்ந்த இடத்தை உணர்ந்து தடை பட்டு போக விக்கித்து போய் அவனை பார்த்தாள்.

ஹாய் செல்லகுட்டீஸ்..


இதோ 'வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே !!' அடுத்த அத்தியாயம் பதித்துவிட்டேன். கதை எப்படி போகுதுன்னு மறக்காமல் சொல்லிட்டு போங்க சென்ற பதிவிற்கு லைக்ஸ் கமெண்ட்ஸ் தெரிவித்தவர்களுக்கு நன்றிகள்.
 

Rudhraprarthna

Moderator
"சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் !!"

SNSN - 27.1


'மருத்துவர்களுடனான ஆலோசனை கூட்டம் முடிந்து கையில் கையெழுத்திட்ட கோப்புடன் தன் அறையில் அமர்ந்திருந்த வித்யா தேவியின் பார்வை எதிரே இருந்த மாமனார் விஷ்வனாதனின் புகைப்படத்தின் மீது படிந்திருக்க அவர் முகத்தில் தீவிர யோசனை'

'கிளம்பலாமா தேவி' என்று அறை கதவை திறந்து கொண்டு அங்கே வந்த சிவசங்கரன் அவர் முகத்தில் இருந்த தீவிரத்தை கண்டு 'என்னமா யோசனை' என்றவாறு அவர் எதிரே அமர,

'என்னோட சந்தேகம் சரியா இருக்குங்க' என்று தன் மௌனத்தை வித்யா தேவி கலைக்க,

'என்னது..??'

'ப்ரீத்தி' ஒற்றை வார்த்தையில் அவர் பதிலளிக்க,

சாய்ந்து அமர்ந்திருந்த சிவசங்கரன் நாற்காலியின் நுனிக்கு வந்தவர் "என்னமா நான் தான் சொன்னேனே.. நம்ம.." என்று தொடங்கவும்,

'ப்ச் அதில்லைங்க' என்றவர் காலை அவளுடனான உரையாடலை அவரிடம் பகிர அதை கேட்டவருக்கு ஏசி அறையிலும் முகத்தில் வியர்வை அரும்ப தொடங்கிவிட்டது அதை துடைத்தவாறே,

'தேவி இப்போ எதுக்கு நீ தேவை இல்லாத ஆராய்ச்சி செஞ்சிட்டு இருக்க..??' என்று சற்று குரலை கடினமாக்கி மனைவியை கேட்க,

அவரோ நிதானமாக மேஜையில் இருந்த தண்ணீரை எடுத்து எதிரே இருந்தவரிடம் நீட்டி, 'அவசியம் இருக்கு, நீங்க முதல்ல தண்ணி குடிங்க சொல்றேன் ' என்றிட,

அவரும் ஒரே மூச்சில் குடித்து முடித்து "அப்படி என்னம்மா அவசியம் உனக்கு..?? நான் தான் சொன்னேனே ப்ரீத்தி நம்ம மகனோட சாய்ஸ் கண்டிப்பா.." என்றவரை இடையிட்ட வித்யாதேவி கையில் இருந்த கோப்பை இழுப்பறையில் வைத்து விட்டு அவரிடம்,

'தேவ் கிளம்பும் முன்ன என்ன சொன்னான் தெரியுமா உங்களுக்கு..??' என்று கேட்டார்

'என்ன சொன்னான்..??' என்றவருக்கு விஷ்வா கிளம்பும் முன் மனைவியை சமாதான படுத்த முயன்று பாடிய பாடல் நினைவில் எழ,

' எனக்கு நியாபகம் இல்ல நீயே சொல்லுமா ' என்று வித்யாவை பார்க்க,

"நான் ப்ரீத்தியை மருமகளாக ஏத்துக்கிட்ட பின்னாடி தான் வீட்டுக்கு வருவானாம் அது எத்தனை வருஷம் ஆனாலும் சரின்னு சொல்லி கடைசியா மருமகளுக்கு அர்த்தம் உங்களுக்கு தெரியும்ன்னு சொல்லிட்டு போயிருக்கான்"

'இதுல என்னம்மா இருக்கு..?? உன்னோட கோபம் தீர தானே அப்படி சொல்லி இருக்கான்" என்று எழுந்து அவர் அருகே வந்து அமர்ந்தவர்,

"இதோ பாரு தேவி உனக்கே நல்லா தெரியும் தேவ் பொறுத்த வரை அவனுக்கு ஐ மீன் அவனோட ப்ரோபஷேனுக்கு பீஸ் ஆப் மைண்ட் இஸ் மஸ்ட்.. மாமியார் மருமகள் நீங்க ரெண்டு பெரும் முறைச்சிகிட்டு தினமும் ஒரு ப்ராப்ளம் அவன் கிட்ட கொண்டு போனா அவன் எப்படி வொர்க்ல கான்சன்ட்ரேட் பண்ண முடியும் அதான் சொல்லி இருக்கான்'

"ஏங்க என்னமோ நாங்க ரெண்டு பெரும் சின்ன பிள்ளைங்க மாதிரி பேசுறீங்க..?? ப்ரீத்தி பார்த்தாலும் எல்லாத்துக்கும் அடுத்தவங்க கிட்ட போய் நிற்கிற பொண்ணு மாதிரி தெரியலை.." என்பதாக அவரை பார்த்தவரின் புருவம் முடிச்சிட ,

'அப்புறம் என்னமா..??' என்றவருக்கோ உள்ளுக்குள் மனைவியிடம் இருந்து அடுத்து என்ன கேள்வி வருமோ என்ற உதறல்.

"
என்னங்க என்ன அவசியம்ன்னு கேட்டீங்களே..??" என்று புருவத்தை நீவியவாறு சிவசங்கரனை பார்த்தவர்,

"நேத்து தேவ் கடைசியா என்கிட்டே சொல்லிட்டு போனது தான் என்னோட அவசியத்துக்கு காரணம்" என்று அவர் நிறுத்திட,

'என்.. என்ன..?? என்ன சொன்னான்..??'

"மாமா ஹாஸ்பிட்டல் தொடங்கின பிறகு யாரை சேர்மேனா நியமிச்சார்..?? என்று வித்யா சம்பந்தம் இல்லாமல் கேட்க,

'இப்போ எதுக்குமா இதை கேட்கிற..?? தேவ் என்ன சொன்னான் சொல்லு' என்றவருக்கோ வெளிநாட்டிற்கு செல்பவனை அமைதியாக செல்லாமல் ஏதோ சிக்கலை இழுத்து வைத்து சென்றிருக்கிறானே என்ற எரிச்சல்.

'சொல்லுங்க..'

'அவரோட அம்மாவை'

அதுக்கு அப்புறம்

'எங்க அம்மா'

'அடுத்து யார்..??'

'நீ'

'எனக்கு அப்புறம்'

'நம்ம மருமகள்' என்று அவர் இயல்பாக கூற,

'ஏன்..?'

'ஏன்னா என்ன அர்த்தம்..?? உனக்கு தெரியாதா தேவி நம்ம குடும்ப வழக்கப்படி ஹாஸ்பிட்டல் நிர்வாகம் மூத்த மருமகள்கள் கையில தானே ..??'

"எனக்கு தெரியாம இல்லை..!! ஆனா தேவ் மருமகளுக்கான அர்த்தம் உங்களுக்கு தெரியும்ன்னு சொன்னான் அப்போ அதோட அர்த்தம் ப்ரீத்திக்கு பொறுப்பை கொடுத்த பிறகு தான் வருவேன்னு சொல்றான் அப்படிதானே..?? என்று புருவம் முடிச்சிட கணவரை பார்க்க அவர் தலையும் தன்னிச்சையாக 'ஆம்' என்று அசைந்தது.

"அது தான் ஏன்..??" என்று வித்யா கேட்க,

சிவசங்கரனோ மகன் என்ன செய்ய முயல்கிறான் என்று புரிந்து கொள்ளவும் முடியாமல் கேள்வி கேட்கும் மனைவிக்கு பதிலளிக்கவும் முடியாமல் மெளனமாக அவரை பார்க்க,

"சொல்லுங்க அதானே அர்த்தம்..!! நம்ம தேவ் எப்பவுமே இப்படி அவசரவரசமா எந்த விஷயத்தையும் செய்ததில்லை ஆனா ப்ரீத்தி..??" என்று கேள்வியாக நிறுத்தியவர்,

"நீங்களே சொல்லுங்க ப்ரீத்தி விஷயத்துல எதுக்கு எல்லாமே இவ்ளோ அவசரமா..?? வர்ஷு ஸ்கூல் போற வயசு வரையுமே அத்தை தான் பொறுப்பில் இருந்தாங்க அதுக்கு அப்புறம் அவங்களே ஒய்வு தேவைன்னு சொல்லி எனக்கு பொறுப்பை கொடுத்தாங்க ஆனா இங்க எதனால் வீட்டுக்கு வந்து ஒரு நாள் கூட முடியாத ப்ரீத்திக்கு பொறுப்பை கொடுக்க சொல்லிட்டு போயிருக்கான்" என்று அவரை பார்க்க,

'அவருக்கு தெரிந்தால் அவர் பதில் சொல்ல மாட்டாரா..?? மனைவியிடம் தன்னை வகையாக சிக்க வைத்து விட்டு சென்ற மகனை உள்ளுக்குள் அர்ச்சித்தபடி மனிதர் மெளனமாக அமர்ந்திருக்க வித்யாதேவியே தொடர்ந்தார்,

"ஏன் இந்த நிர்பந்தம்..?? என்னோட அட்மினிஸ்ட்ரேஷன்ல இதுவரை எந்த ப்ராப்ளமும் வந்ததில்லை அப்புறம் எதுக்கு இது..?? சரி நம்ம பையன் ஆசைபடறதால என்னைக்கு இருந்தாலும் கொடுக்க வேண்டியது தானேன்னு நான் ப்ரீத்திக்கு பொறுப்பை கொடுக்கறேன்னு வச்சிகிட்டாலும் அதுக்கு அவ தகுதியானவளான்னு எனக்கு தெரிய வேண்டாமா..?? என்று கேட்க,

'ஆம்' என்பதாக தலை அசைத்தவருக்கு மகன் மீது ஏக கோபம்

" இங்க அந்த பொண்ணுக்கு அடிப்படையே தெரியலைங்க தேவ்வை லவ் பண்ணினேன்னு சொல்றவளுக்கு தேவ் எங்க போயிருக்கான் தெரியலை, என்கிட்டேயே ஹாஸ்பிட்டல் போயிருக்கேன் சொல்றா..!! " என்று அதிருப்தியுடன் அவரை பார்க்க,

சிவசங்கரனுக்கோ இதற்கு என்ன பதில் கூறுவது என்று புரியாமல் சில நொடிகள் யோசித்தவர் பின் நினைவு வந்தவராக, 'ப்ச் தேவிமா அதான் ப்ரீத்திக்கும் தேவ்க்கும் குழந்தை சம்பந்தமா சண்டை வந்ததுன்னு சொன்னானே அவங்களுக்குள்ள இன்னும் அது தீராம இருக்கலாம் அதனால கூட ப்ரீத்திக்கு தெரியாம போக வாய்ப்பு உண்டு உனக்கு தெரியாததா..??' என்று சமாளித்தார்.

தேவ் அவளிடம் சொல்லாமல் சென்றிருக்கவும் வாய்ப்பு இருக்கு என்பதை உணர்ந்த வித்யாவும், 'சரி அதை கூட விட்டுடலாம் ஆனா நான் என்ன பண்றேன்னு கூட தெரியல இதுல லவ் பண்ணும் போது தேவ் என்னை பத்தி எல்லாமே சொல்லி இருக்கானாம், என்னங்க நடக்குது..??' என்று அவர் தலையை இருகரங்களால் தாங்கி கொள்ள,

மனைவியையும் மருமகளையும் இந்நிலையில் நிறுத்தி விட்டு சென்ற மகனை மனதினுள் கடிந்தவர் இதற்க்கு என்ன காரணம் சொல்லி சமாளிப்பது என்று தீவிர யோசனையில் எழுந்து அறையினுள் நடக்க தொடங்கி விட்டவர் ஒரு கட்டத்தில் மனைவியின் அருகே வந்து அவள் முகம் நிமிர்த்தி,

"தேவிமா ப்ரீத்திக்கு இப்ப தானே டெலிவரி ஆகி இருக்கு அவளுக்கும் போஸ்ட்பார்டமால (postpartum symptoms) மூட் ஸ்விங்ஸ் ஏதாவது இருக்குமே அதனால கூட சரியா பதில் சொல்ல முடியாம போயிருக்கலாம் நீ ஏன் இவ்ளோ சீரியஸா எடுக்குற..? மருமக பொண்ணு இங்க செட்டில் ஆக கொஞ்சம் டைம் கொடு அப்புறம் உன் இன்வெஸ்டிகேஷன நடத்து யார் வேண்டாம்ன்னு சொன்னா..??"

'அப்போ தேவ்..??'

"தேவி அவனோட வேலை முடிய குறைஞ்சது நாலஞ்சு மாசம் ஆகுமாம் யு.எஸ்ல இருந்து அடுத்த மாசம் பிரான்ஸ் போறதா சொல்லி இருந்தான் சோ உனக்கு தாராளமா அவன் சொன்னதை செய்து முடிக்க டைம் இருக்கு கவலை படாத.. ப்ரீத்தியை இன்னும் ஒரு ரெண்டு மூணு மாசத்துக்கு டிஸ்டர்ப் பண்ணாத அவ குழந்தையும் தன்னையும் கவனிச்சிகிட்டு இங்க நம்ம வீட்ல பொருந்துறதுக்கு கொஞ்சம் டைம் கொடு, அப்புறம் தகுதி இருக்கன்னு பார்த்துட்டு பொறுப்பை கொடுக்குறதா வேண்டாமான்னு முடிவு பண்ணி தேவ்க்கு சொல்லு வருவான்" என்று சமாதனம் சொல்ல,

கணவரை பார்த்தவாறே நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தவர் மனதினுள் பல எண்ணங்கள் ஆக்கிரமிக்க சில நொடிகளுக்கு பின் 'சரி கிளம்பலாம்' என்று எழுந்தார்.

'தேவி உனக்கு இப்போ..' என்றவருக்கு தன் சமாதானங்கள் எல்லாம் எந்த அளவு அவரை சென்றடைந்தது என்பது தெரிய வேண்டி இருந்தது.

"இனி கொஞ்ச நாளைக்கு உங்க மருமகளை நான் எந்த கேள்வியும் கேட்கலை போதுமா..??" என்றவர் கைப்பையை எடுத்து கொள்ள மனைவியின் சுணக்கத்தை ரசித்தவர் புன்னகையுடன் 'நம்ம மருமகள்' என்று திருத்தவும் ,

'ஆமா யார் இல்லைன்னு சொன்னா..?? ஆனா எனக்கும் இந்த மாமியார் போஸ்ட்டிங் புதுசு தான்..!! அதுவும் எந்த மாதிரி இடத்துல இருக்கேன்னு உங்களுக்கே நல்லா தெரியும் சோ அதுக்குள்ள பொருந்துறதுக்கு எனக்கும் டைம் வேணும் கொடுப்பீங்க தானே..??' என்று கேட்டவர் அவர் பதிலுக்கு காத்திராமல் வெளியேறி இருந்தார்.

வித்யா செல்லவும் கோட்டை கழற்றி அங்கிருந்த மேஜையில் வைத்து விட்டு கழுத்தில் இருந்த டையை தளர்த்தி கொண்டு நாற்காலியில் தோய்ந்து அமர்ந்த சங்கரனுக்குள் எக்கச்சக்கமான சஞ்சலங்கள்.

மனைவியை நன்கு அறிந்தவருக்கு புரிந்து போனது பிரீத்தியிடம் கேள்வி கேட்காமல் போனாலும் நிச்சயம் இனி ப்ரீத்தி மீதான வித்யாவின் பார்வை ஆழம் பெற்று அவளை பின்தொடரும் என்று..!! எப்படியாவது இதை தடுக்க வேண்டுமே என்று தவித்தவர் உடனே மகனுக்கு அழைக்க அவன் எண் அணைத்து வைக்க பட்டிருந்தது.


**********************************************************************

அன்று இரவு உணவின் போது சிவசங்கரன், ஆகாஷ், வர்ஷினி, வித்யா , வசுந்தரா தேவி அனைவரும் இருக்க விஷ்வா மட்டும் வராமல் இருப்பதை கண்ட ப்ரீத்தி யோசனையில் ஆழ்ந்தாள். உணவை முடிக்கும் வரையில் யாருமே பெரிதாக பேசிக்கொள்ளவில்லை அதன் பின் வசுந்தராவுடன் அமர்ந்து சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தவள் குழந்தையோடு அறைக்கு திரும்பி அவனை உறங்க வைத்துவிட்டு கதவை அடைக்க போனவள் நேற்று போலவே இன்றும் ஏனோ அதை தாழ் போடாமல் வெறுமனே சாற்றி வைத்து விட்டு வந்தாள்.

இப்போது வரையிலுமே அவளுக்கு விஷ்வா எங்கிருக்கிறான் என்று தெரியாது, யாரிடமும் கேட்கவும் தயக்கம்..!!

பின்னே அவள் யாரிடமேனும் கேட்டு அவர்கள் மனைவிக்கு தெரியாதது எங்களுக்கா தெரியும் எனும் விதமாக கேட்டுவைத்தாள் அவள் அதற்கு என்ன பதில் சொல்லவது..?? அதனாலேயே அமைதியாக அறைக்கு வந்தவள் ஒருவேளை அவனுக்கு இன்று வேலை பளு அதிகமாக இருந்திருக்க கூடும் அதனால் தாமதமாக வருவான் போலும் என்று தனக்கு தானே கூறிக்கொண்டவள் அப்படியே உறங்கியும் போனாள்.

அடுத்த நாள் ஞாயிறு என்பதால் சிவசங்கரனும் வித்யாவும் வீட்டில் இருந்தனர்.. குழந்தையை வசுந்தராவிடம் கொடுத்து விட்டு வர்ஷினியோடு அங்கேயே அமர்ந்தவள் அவள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்டிருக்க ஆறு மாத வயிறோடு கணவனின் கரம் கோர்த்து உள்ளே நுழைந்து கொண்டிருந்தாள் சௌமியா.

அவளை கண்டதும் 'சௌமிக்கா' என்று வர்ஷு புத்தகத்தை ப்ரீத்தி கையில் திணித்துவிட்டு ஓட, அதை கண்டதும் புத்தகத்தை நழுவ விட்டவளாக அதிர்வுடன் எழுந்து நின்ற ப்ரீத்தியின் விழிகள் மேடிட்ட அவள் வயிற்றின் மீதே நிலைத்திருந்தது.

"வா சௌமி வாங்க மாப்பிள்ளை" என்று சிவசங்கரனும் வித்யாவும் அவர்களை வரவேற்க பரஸ்பர நலம் விசாரிப்புகள் முடியும் வரையிலுமே ப்ரீத்தியின் முகத்தில் இருந்த அதிர்ச்சி நீங்கவில்லை.

'ப்ரீத்தி' என்று வித்யா அழைக்கவும் அவரிடம் வந்தாள்.

"இது சௌமியா இவர் எங்க மாப்பிள்ளை" என்று அறிமுகபடுத்த ப்ரீத்தி அவர்களுக்கு கைகூப்பி வணக்கம் தெரிவிக்கவும்,

'பெரிம்மா என் பிரெண்டை எனக்கே அறிமுகபடுத்துவீங்களா..??' என்று சௌமி கேட்க,

வித்யாவிற்கு இச்செய்தி புதிது..!!

ஆச்சர்யத்துடன் அவளை பார்க்க அதற்குள் அவள் கணவன் ப்ரீத்தியிடம் "ஹாய் சிஸ்டர் நான் விஷு பிரெண்ட் கார்த்திக்.." என்று தன்னை அறிமுகபடுத்தி கொண்டு "எப்படி இருக்கீங்க..??" என்று கேட்க,

ப்ரீத்தியோ அகலாத அதிர்வுடன் இருவரையும் பார்த்திருந்தவள் கார்த்திக்கிடம் வணக்கம் தெரிவித்து பேச தொடங்க அதேநேரம் குழந்தை பசியில் அழ ஆரம்பித்து இருந்தது உடனே அவர்களிடம் சொல்லிக்கொண்டு குழந்தையை தூக்கி தட்டி கொடுத்தவாறே மேலே அவர்கள் அறைக்கு சென்றிருந்தாள்.


SNSN - 27.2

ஆனால் அவள் சென்ற கொஞ்ச நேரத்திலேயே 'மச்சி' என்று அவளை தேடிக்கொண்டு ஆரவாரத்தோடு வந்து கட்டிக்கொண்ட சௌமியாவிடம்,

'சொல்லுங்க சௌமியா' என்று அவள் கரத்தை விலக்கிட,

'ரித்து'

'சொல்லுங்கன்னு சொன்னேன்' என்று குழந்தைக்கு டையப்பர் மாற்றி கொண்டே ப்ரீத்தி கேட்க,

'ரித்து' என்றவாறு அவள் முன்னே வந்தவள் 'மச்சி என்னடி..?? ஏன் இப்படி திடீர் மரியாதை எல்லாம்' என்று தன்னை தள்ளி நிறுத்தும் தோழியை சிறு தயக்கத்தோடு பார்த்தவள்

"எனக்கு தெரியும் நிச்சயம் நீ என்மேல கோபமா இருப்பன்னு ஆனா கொஞ்சம் பொறுமையா நான் சொல்றதை கேளு ரித்து" என்று தன்னிலை விளக்கம் அளிக்க முற்ப்பட,

"அது தான் நான் உங்களுக்கு ஒண்ணுமே இல்லன்னு சொல்ற மாதிரி இவ்ளோ பெரிய விஷயத்தை" என்றவளின் பார்வை மேடிட்டு இருந்த அவள் வயிற்றின் மீது படிந்து 'ப்ச்' என்று கலங்கிய கண்களை தடுக்கும் முயற்சியாக தலையை குலுக்கி கொண்டவள் மீண்டும் அவளிடம்,

"இதுவரை உன்கிட்ட சொல்லாம நான் எதுவுமே செஞ்சது இல்லை ஆனா வாழ்க்கையில எவ்ளோ முக்கியமான விஷயம் கல்யாணம்..!! குழந்தை..!! அதையே என்கிட்டே சொல்லனும்ன்னு தோணலை இல்ல உனக்கு" என்றவளின் கண்களில் உயிர்தோழியின் புறக்கணிப்பில் உண்டான வலி அப்பட்டமாக கண்ணீரோடு சேர்ந்து வழிந்தது.

'ரித்து' என்று அவள் முகத்தை தாங்கியவள் 'அன்னைக்கு தான் எதுவும் கேட்கிற நிலமையில நீ இல்ல ப்ளீஸ் இப்பவாவது சொல்றதை கேளு'

'விடுங்க சௌமியா இப்போ அதெல்லாம் தெரிஞ்சு நான் என்ன பண்ண போறேன் இல்ல எதை மாத்த போறேன்..?? நீங்க எல்லாரும் ஒரே பேமிலி அதனால என்று எதையோ ஆரம்பித்தவள் வெறுமையுடன்,

"இட் ஹாப்பென்ட் சோ..!! தென் லேட் இட் பீ..!! என்று அவள் கரங்களை விலக்கியவள்,

'உங்களுக்கு குடிக்க ஏதாவது வேணுமா சொல்லுங்க எடுத்துட்டு வரேன்..??' என்றிட,

"ப்ச் ப்ரீத்தி உனக்கு ஐவிஎப் பண்ணும் முன்னாடி என்ன நடந்ததுன்னு தெரியாது அதான் உன்னோட.."

தன் செயலை ஒரு கணம் நிறுத்திய ப்ரீத்தி அவள் புறம் திரும்பி, "அப்போ பாருமா மட்டும் இல்லை உனக்கும் முன்னாடியே இது உங்க அண்ணா குழந்தைன்னு தெரியும் அப்படி தானே..??" என்று கேட்க,

உதட்டை கடித்து கொண்டு தலை குனிந்தவள் பதிலின்றி நிற்க,

'சொல்லுங்க சௌமியா'

"மச்சி அது நீ நினைக்கிற மாதிரி அவ்ளோ ஈசியா நடந்துடல..!! உனக்கு இஞ்சக்ஷன் போட்டு தூங்க வச்ச நாங்க யாருமே அன்னைக்கு விடிய விடிய தூங்கலை கடைசியா சரண் ஹாஸ்பிட்டல் வரவரைக்குமே அத்தைக்கு இதுல உடன்பாடு இல்லை அண்ணா தான் அவங்க கிட்ட பேசி கன்வின்ஸ் பண்ணாங்க, அண்ணாவை அன்னைக்கு நீ பார்த்திருந்தா இப்படி பேச மாட்ட ரித்து அவர் உனக்காக மட்டும்.." என்று ஆரம்பித்தவள் தோழியின் முகத்தில் தெரிந்த அதிருப்தியில் என்று அவள் கையை பிடித்து மெத்தையில் அமர்த்தி " கோபபடாம கேளுடி" என்றிட,

"நான் யார் உங்க மேல கோபபட மிசர்ஸ் சௌமியா..?? அன்னைக்கு நடந்த எல்லாமே உங்க அண்ணனுக்கு என் மேல இருக்க தெய்வீக காதலாலன்னு சொல்ல போறீங்க அதானே..?? நீங்க ப்ரீயா விடுங்க சௌமியா உங்க அண்ணன் காதலோட அளவை நேர்ல பார்த்தவ நான் எனக்கு இதுக்கு மேல எந்த விளக்கமும் தேவை இல்ல" என்று கடினமான குரலில் கூறியவள் குழந்தையை தொட்டிலில் இட்டு ஆட்டியவாறு,

"உங்க அண்ணா எது பண்ணினாலும் அது உனக்கு தப்பா தெரியாதுன்னு எனக்கும் தெரியும்" என்ற ப்ரீத்திக்கு அல்லவா தெரியும் சௌமியாவிற்கு தேவ் எத்தனை உசத்தி என்பது..!!

சிறு வயதில் இருந்தே தேவ் பெயரை அவள் சொல்லி ப்ரீத்தி கேட்டிருக்கிறாள் ஆனால் அவன் சௌமியா வீட்டிற்கு வருவது அரிது என்பதால் சிறு வயதில் ஓரிரு முறை அவனை பார்த்திருக்கிறாள் ஆனால் முகம் நினைவில் இல்லை.. அதே போல பள்ளி இறுதி வருடங்களில் தேவ் குறித்து ஏதேனும் சந்தர்பத்தில் சௌமியா பேசினால் ஆண்கள் மீதான வெறுப்பில் ஆரம்பத்திலேயே அதை தடுத்து விடும் ப்ரீத்தி ..., ஓரிரு வருடத்திற்கு முன் சரணை கண்ட பிறகு கேட்கவா வேண்டும்..?? அதனால் சௌமி அவனை குறித்து ஏதேனும் பேசினாலும் ப்ரீத்தி என்றுமே தேவ்வை ஒரு பொருட்டாக கருதியதில்லை.

" விடுங்க சௌமியா முடிஞ்சு போனது எதுக்கு..?? இப்போ இந்த தெளிவுரை விளக்கவுரை எல்லாம் கேட்டு நான் என்ன பன்னபோறேன்... அட்லீஸ்ட் இத்தனை வருஷ பழக்கத்துக்கு ஒரு வார்த்தை என்கிட்டே சொல்லி இருக்கலாமேன்னு ஆதங்கம் அவ்ளோ தான்"

அவள் குரலில் இருந்த வேதனை சௌமியாவையும் கலங்க செய்ய, "ப்ச் சாரி மச்சி அன்னைக்கு நான், அண்ணா, அத்தை எல்லாருமே ஐ மீன் எங்க எல்லாருக்கும் உன்னோட உயிரை விட வேற எதுவும் முக்கியமா படலை.., தெரியும் உனக்கு உண்மை தெரிய வரும் போது அது எவ்ளோ பெரிய அதிர்ச்சியை கொடுக்கும்ன்னு ஆனா ரித்து அன்னைக்கு நீ நீயாவே இல்லடி..!! பித்து பிடிச்சவ போல அந்த ஆளை பழிதீர்க்கனும் இல்லன்னா உன்னையே அழிச்சிப்பேன்னு எங்களை மிரட்டின அதெல்லாம் உனக்கு நினைவு இருக்கோ இல்லையோ என்னால அன்னைக்கு நாளை மறக்கவே முடியாது" என்றவளின் மனக்கண்ணில் அன்றைய ப்ரீத்தியின் முகம் மின்னி மறைய தலையை குலுக்கி கொண்டவளுக்கு அதை தொடர்ந்த விஷ்வாவின் கோபமும் ஆவேச முகம் மனதை விட்டு அகலாது போக

"அன்னைக்கு அண்ணாவோட கோபம்..!!" என்றவளுக்கு உடல் ஒருமுறை சிலிர்த்து அடங்க ப்ரீத்தியிடம்,

"உனக்கு அண்ணா பத்தி தெரியாது மச்சி அவர் ரொம்ப காம், அதிகம் பேசமாட்டார், எப்பவும் படிப்பு, மியூசிக்ன்னு இருக்கிறவர். இவ்ளோ ஏன் அவருக்கு அதிர்ந்து பேசவே தெரியாது, அதுவும் பொண்ணுங்க கிட்ட அவர் பேசி நான் பார்த்ததே இல்லை எனக்கு தெரிஞ்ச வரையில் அவர் இயல்பா பேசின ரெண்டு பொண்ணுங்க நானும் வர்ஷுவும் தான் அந்த அளவுக்கு அண்ணா ரொம்ப ஸ்வீட்..!!"என்றபோதே ப்ரீத்தியின் முகத்தில் என்ன முயன்றும் கசந்த புன்னகை வெளியேறியது.

உன்கிட்ட சொன்னேனே நியாபகம் இருக்கா..?? ஒரு முறை உன்னை இன்றோ பண்றேன்னு சொன்னப்போ கூட முடியாதுன்னு சொல்லிட்டார் ஆனா எங்க..?? உன்னை பார்த்து எப்படி..?? உனக்காக இந்த அளவு ரிஸ்க்..!! என்றவளுக்குமே தேவ்வின் செயல்கள் அனைத்துமே ஆச்சர்யம் தான் ஆனா ஒன்னு மச்சி அன்னைக்கு நைட் தான் நானே அவர் கோபத்தோட அளவை முதல் முறையா பார்த்தேன்" என்றவள்

"உனக்கு தெரியாது மச்சி சின்ன வயசுல இருந்து அண்ணா என்னை எதுக்குமே திட்டினது இல்லை ஆனா அன்னைக்கு உனக்காக என்னை ரொம்ப திட்டிட்டார்.. அவர்கிட்ட நான் அடி வாங்கலையே தவிர அதைவிட அவர் என்னை கேட்ட ஒவ்வொரு கேள்வியும் என்ன வலிக்க வலிக்க காயபடுத்துச்சி" என்றவளின் கண்கள் கலங்கி போக,

"ப்ச் மச்சி எதுக்கு அழற..?? சம்பந்தமே இல்லாம உன்னை எதுக்கு திட்டனும்" என்று சௌமியின் கண்ணீரை துடைத்த ப்ரீத்திக்கு அவள் கண்ணீருக்கு காரணமான தேவ் மீது இன்னும் அதிருப்தி அதிகரித்தது.

"இல்ல ரித்து அண்ணா சொன்னது கரெக்ட் ..!! நா.. நான் தான் உன்னோட நிலைக்கு காரணம்" என்று கூற,

"வாட் ..?? லூசாடி நீ..?? இது எல்லாமே என்னோட டிஸிஷன் அதுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்..??" என்ற ப்ரீத்திக்கு தன் தோழியை ஒருவன் குறை கூறுவதா என்ற உரிமை தலை தூக்கவும் அவள் பேச்சு இப்போது இயல்பாகி இருந்தது.

"அப்படி இல்லடி ஒரு பிரெண்டா நீ எடுக்கிற முடிவு தப்புன்னு தெரியும் போது உன்னை அதை செய்ய விடாம நான் தடுத்து இருக்கணும்.., ஆனா நான் எங்கயும் அப்படி செய்யவே இல்லையே..!! உன்னை, உன்னோட வலி, கஷ்டத்தை மட்டும் பார்த்தேனே தவிர சரண், கீர்த்தியை நானுமே பார்க்கலையே அது என் தப்பு தானே..??"

"உன் அப்.. அந்த ஆளுக்காக நீ ஆள்மாறாட்டம் பண்ணினது சரி ஆனா அடுத்து நீ.. என்றவளுக்கு அன்றைய நினைவுகள் மீண்டும் எழ,

" ப்ச் போ மச்சி நானாவது சரண் மனசுல கீர்த்தி இருக்கப்போ உன்னை.. என்று நெற்றியை பிடித்து கொண்டவளுக்கு விஷ்வாவின் பேச்சுக்கள் மீண்டும் மனதை ரணப்படுத்த அட்லீஸ்ட் கீர்த்தி உன்னோட தங்கச்சின்னு எடுத்து சொல்லி உன்னை கன்வின்ஸ் பண்ணி திரும்ப வர சொல்லி இருக்கணும் ஆனா உன்மேல இருக்க பாசத்துல பிரெண்ட்ஷிப்க்கு உண்மையா இருக்கிறதா நெனச்சிட்டு முட்டாள் மாதிரி நீ செய்யற எல்லாத்துக்கும் கண்மூடிதனமா உதவி இருக்கேன் என்றவளின் கண்களில் மீண்டும் கண்ணீர் துளிர்க்க,

" நான் நெனச்சி இருந்தா உன்னை இந்த எக்ஸ்ட்ரீம் போக விடாம தடுத்து இருக்க முடியும் ரித்து, ஏன்...?? ஏன் இதெல்லாம் நான் செய்யாம போயிட்டேன்னு ஒவ்வொரு நாளும் என்னை நானே கேட்டுட்டு இருக்கேன்... திரும்ப அந்த நாட்களுக்கு போய்,

" இல்ல மச்சி நீ பண்றது தப்புன்னு சொல்லி உன் கையை பிடிச்சி இழுத்துட்டு வந்திருக்கணும் அப்போ நான் சரியான பிரெண்ட் இல்லாதான..?? நீ இத்தனை கஷ்டம் பட நானும் ஒரு காரணம் ரித்து இதெல்லாம் அண்ணா எடுத்து சொன்னப்போ எனக்கு என்னமோ உன்னோட லைப்பை ஸ்பாயில் பண்ண அந்த பிரகாசத்தை விட நானே பெரிய காரணம் ஆகிட்டேனோன்னு இருக்கு மச்சி" என்றவள் ப்ரீத்தியை கட்டி கொண்டு,

"சாரி ரித்து.. சாரிடி என்னை மன்னிச்சிடு" என்றாள்.

"மச்சி நீ எதுக்குடி சாரி சொல்ற..?? மத்தவங்க பேச்சை பெருசா எடுக்காத வேண்டாம்"

"இல்ல ரித்து அண்ணா சொன்ன மாதிரி ஒருத்தரோட வாழ்க்கையில நட்பு சரியா இல்லாம போனா அவங்க வாழ்க்கை எந்த அளவுக்கு தடம் மாறிபோகும்ங்கிறதுக்கான எடுத்துக்காட்டா உன்னை மாத்திட்டேனேன்னு நெனச்சி எனக்கே என்மேல கோபம்" என்றவளின் முகம் வேதனையில் கசங்கி போக

இதற்கு மேலும் பேச்சை வளர்த்து தோழியை இந்த நிலையில் காயபடுத்த கூடாது என்ற முடிவுடன் அவள் முகம் நிமிர்த்தி, "சௌமி இங்க பார் என் வாழ்க்கைக்கு என்ன குறை..?? இப்போ நான் நல்லா இருக்கேன் நீ எதுக்கு கலங்கிட்டு இருக்க இதெல்லாம் விட்டுட்டு உன்னோட கல்யாணம் எப்படி நடந்தது , ஏன் எனக்கு சொல்லலன்னு சொல்லு" என்றிட,

"அண்ணா தான் இனி நான் உன் கூட அவர் பெர்மிஷன் இல்லாம பேசக்கூடாது அப்படி ஒருவேளை பேசினாலும் அவருக்கு தெரிஞ்சிடும்ன்னு சொன்னார்"

'என் நம்பரை..' என்று ப்ரீத்தி கேட்க,

'ஆம்' என்று தலை அசைத்தவள் "அப்படி தெரிஞ்சதுன்னா என் அப்பா அம்மாகிட்ட சொல்லிடுவேன்னு சொன்னார்டி.. உனக்கே தெரியும் எவ்ளோ பாசமா இருந்தாலும் என் அப்பா இதெல்லாம் ஏத்துக்கவே மாட்டார்ன்னு.., அப்புறம் என்னால அவங்களை பேஸ் பண்ண முடியாது ரித்து அதான் உன்கூட பேசலை"

"உனக்கு ஐவிஎப் பண்ணின பிறகு ரொம்ப தீவிரமா எனக்கு மாப்பிள்ளை பார்த்து கடைசில அவரோட பிரெண்ட்க்கும் எனக்கும் ரெண்டே மாசத்துல கல்யாணம் முடிச்சார் ஆனா என்கிட்டே ஒரு வார்த்தை அவர் பேசவே இல்லை தெரியுமா..??"

ஏன் ..?? என்று கேட்க வேண்டிய அவசியமே ப்ரீதிக்கு இல்லை அதனால் சௌமியிடம்,

"உனக்கு இது கட்டாய கல்யாணமா சௌமி..??"என்று கேட்ட ப்ரீதிக்கு எங்கே தன்னால் தோழியை கட்டாயபடுத்தி திருமணத்திற்கு விஷ்வா சம்மதிக்க வைத்துவிட்டானோ என்ற தவிப்பு..!!

"இல்ல மச்சி..!! அண்ணா தீவிரமா இருந்தாரே தவிர என்னை கட்டாயபடுத்தல, ரெண்டு பேரும் பேசினோம் எனக்கு பிடிச்சி தான் கல்யாணம் பண்ணேன்" என்று கூறவும் தான் ஆசுவாச மூச்சை எடுத்து விட்ட ப்ரீத்தி சகஜமாகினாள்.

" அப்போ அன்னைக்கு அண்ணின்னு சொன்னது "

"அது அண்ணா கேட்டுட்டு இருப்பார்ன்னு அப்படி கூப்ட்டேன், உன்னை அப்படி தான் கூப்பிடணும்ன்னு எனக்கு ஆர்டர்"

"இப்போ..?"

"பல மாசம் கழிச்சி அண்ணாவே எனக்கு கால் பண்ணி உன் பிரெண்டை பார்க்க போகலாம்ன்னு என்கிட்டே சொன்னார்..!! அதனால என் பிரெண்டை அண்ணின்னு சொல்ல தேவை இல்லை"

"அப்போ நீ என்னை மீட் பண்ண கூட ஒருத்தர் பர்மிட் பண்ணனுமா..??" என்று கண்கள் இடுங்க கேட்ட ப்ரீத்தி முகத்தில் குறும்பு கூத்தாடுவதை கண்ட சௌமிக்கு மனதில் நிம்மதி பரவ,

அதன் பின் தோழிகள் இருவரின் நேரம் நீண்டு கொண்டே செல்ல பல கதைகள் பேசிக்கொண்டு இருந்தவர்களின் சிரிப்பு சத்தம் அறையை நிறைத்து ஒரு கட்டத்தில் உறங்கி கொண்டிருந்த குழந்தையின் உறக்கத்தை கலைத்திருந்தது.

*********************************


ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வந்தவன் தனக்காக காத்திருந்த காரில் ஏறி அமர்ந்திட அவன் கரங்களோ அவனனுமதி இல்லாமல் கைபேசியை எடுத்து கேலரியை திறந்து அதில் இருந்த புகைப்படத்தை எடுத்து அதில் புன்னகைத்து கொண்டிருந்த ப்ரீத்தியின் முகத்தை வருடி கொடுத்தது.

ஆம் அன்று ப்ரீத்தியை ஆரணியில் இருந்து கூட்டி வரும் வழியில் ஒரு சந்தர்பத்தில் அனைவரும் வாகனத்தை நிறுத்தி எழிலும் விஷ்வாவும் அருகே இருந்த கடைக்கு சென்று திரும்பிய போது அவன் கண்டதென்னவோ குழந்தையை மடியில் வைத்து கொண்டு அலரிடம் பேசிக்கொண்டு இருந்த ப்ரீத்தியிடம் இருந்து சில கணங்களுக்கே வெளிப்பட்ட புன்னகையை தான்..!! அவன் வரையில் அது எத்தனை அற்புதமான தருணம் என்பதை விஷ்வாவை தவிர வேறு யாரும் அறிந்திருக்க முடியாது.

அவன் முதன் முதலாக கண்ட அவளது கள்ளம் கபடமில்லா புன்னகை முகம் அது..!! இப்புன்னகையை அவள் வாழ்வில் நிரந்தரமாக்க முயற்சித்து கொண்டிருப்பவன் அதை தவறவிடாமல் உடனே தன் கைபேசியில் அழகாக சேமித்து வைத்திருந்தான்.

இப்போது அவள் முகத்தை வருடி கொண்டிருந்தவன் இதழ்களோ தன்னை மீறி,


"அடி நீதான் என் சந்தோஷம் பூவெல்லாம் உன் வாசம்

நீ பேசும் பேச்சேல்லாம் நான் கேட்கும் சங்கீதம்

உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வம்மடி


நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி.."

என்று உயிரை உருக்கும் விதத்தில் முனுமுனுக்க தொடங்கியது.. உடனே கைபேசியில் அவள் எண்ணை எடுத்து "பிப்டி எயிட் டேஸ் மோர் ஸ்வீட்ஹார்ட்" என்று மெசேஜ் அனுப்பி விட்டு இருகரங்களையும் தலைக்கு அணைவாய் கொடுத்து சாய்ந்து அமர்ந்தவனின் பார்வை இப்போது ஜன்னல் வழியே வெளியில் பதிந்ததிட மீண்டும் பாடலை தொடர்ந்தான்


"மழை மேகமாய் உருமாறவா

உன் வாசல் வந்து உயிர் தூவவா..

மனம் வீசிடும் மலராகவா

உன் கூந்தல் மீது தினம் பூக்கவா..


கண்ணாக கருத்தாக

உனை காப்பேன் உயிராக

உனை கண்டேன் கனிந்தேன் கலந்தேனே


அட உன்னுள் உறைந்தேனே "

என்றவன் பாடலை முடித்த போது அன்று இரவு அவள் இறுதியாக கூறிய வார்த்தைகள் மீண்டும் நினைவில் எழுந்து அவன் நெஞ்சை கசக்க, 'நிஜமாவே உனக்கு அப்படி தோணுதா ப்ரீத்தி..??' என்று மனதார அவளிடம் கேட்ட நொடி கார் அவன் தங்கவிருக்கும் இடத்தின் முன் நின்று அவன் சிந்தனையை தடை செய்தது.

ஹாய் செல்லகுட்டீஸ்...


இதோ "சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் !!" அடுத்த அத்தியாயம் பதித்து விட்டேன் படித்து மறக்காமல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். இன்னும் பலருக்கு பதிலளிக்கவில்லை சீக்கிரமே அளிக்கிறேன் .

நன்றிகள்...
 

Rudhraprarthna

Moderator
"சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் !!" - 28

அடுத்த அரைமணி நேரத்தில் செக் இன் செய்து தன் அறைக்குள் நுழைந்தவன் முதலில் பயணக்களைப்பு தீர குளித்து விட்டு வெளியில் வர கைபேசி சிணுங்கியது.., எடுத்து பார்க்க அதில் தந்தையின் எண் ஒளிர்வதை கண்டவன் பிறகு அழைக்கிறேன் என்று அவருக்கு செய்தி அனுப்பிவிட்டு தலையை துவட்டியவாறே அறையோடு இணைந்திருந்த பால்கனியில் சென்று நின்றுவிட்டான்.

அகம் முழுக்க ப்ரீத்தியின் புன்னகை முகமே நிறைந்திருக்க வேறு எதை பற்றியும் சிந்திக்க தோன்றாமல் உயிர்காதல் கொடுக்கும் அவஸ்த்தையை சுகமாய் அனுபவித்தவாறே நீலவானை வெறித்து விழி பதித்தான்.

எத்தனை நேரம் நின்றிருந்தனோ தெரியாது ஆனால் வெறும் டிஷர்ட் ஷார்ட்சோடு இருந்தவனை குளிர் ஊசியாய் துளைக்கவும் தான் இருகரங்களையும் மார்பின் குறுக்காக கட்டி கொண்டு அங்கிருந்த கவுச்சில் அமர்ந்தவன் இதழ்கள் தாமாக..,


"ஊரறிந்த செய்தி காதல் உயிரை வாங்கும் வியாதி


அதை வருமுன் தடுக்கும் தடுப்பு ஊசி உலகில் இல்லையே

உன்னை பற்றி பாட தமிழில் எங்கு வார்தை தேட

அதன் பதினெட்டு மெய்யும் பன்னிரு உயிரும் போதாதல்லவா..!!

நீ ஆசை மொழின் நகரம் தான்


நீ நகர்ந்தால் நகரும் நகரம் தான்"

என்று ப்ரீத்தியை எண்ணி பாட தொடங்கிட அவளை கண்ட நாள் முதலே அவள் கருவிழியின் அசைவிற்கு ஏற்ப நகரும் அவன் மனதை இழுத்து பிடிப்பதே பலநேரம் அவனுக்கு பெரும் பாடாகி போகும்.., இதில் எங்கிருந்து அவள்...?? என்று வெறுமையாக புன்னகைத்து கொண்டவனுக்கு மேலும் மேலும் துரத்தும் ப்ரீத்தியின் நினைவுகளை அணையிடும் மார்க்கம் தெரியாமல் உழன்றிட ஒரு கட்டத்தில் குளிரில் கைகள் சில்லிட்டு உடலே மரத்து போகவும் தான் அறைக்கு திரும்பி ஹீட்டை போட்டு விட்டு படுக்கையில் குப்புற விழுந்திருந்தான்.

அவனிருக்கும் நிலைக்கு குறைந்தது மூன்று பகல் நான்கு இரவுகள் தொடர்ந்து உறங்க வேண்டும் அத்தனை அசதி..!!

ஆனால் கண்களை இறுக மூடியவனுடன் ப்ரீத்தி போலவே உறக்கமும் ஊடல் கொண்டு அவனை தழுவாமல் போக நிமிர்ந்து படுத்து இருகரங்களையும் தலைக்கு அணைவாய் கொடுத்தவனின் இதழ்கள் மீண்டும்,


"காவல் நிலையம் சென்று தூக்கம் களவு போச்சு என்று


என் விழிகள் இரண்டும் யார் யார் மீதோ குற்றம் சாட்டுமே

உன்னை பற்றி மெல்ல நான் தான் உளவு பார்த்து சொல்ல

அடி உன்னை பிடித்து காவல் துறை தான் கூண்டில் ஏற்றுமே

என் இமையை மெதுவாய் வருடாதே


என் துயிலை தினமும் திருடாதே..!!"


என்று புன்னகையுடன் பாடியவனுக்கு அல்லவா தெரியும் பல வருடங்களாக அவன் துயிலை திருடிக்கொண்டு இருப்பவளை பற்றி..!! வளைக்காப்பின் போதே அவளோடு சேலம் திரும்ப வேண்டும் என்று திட்டமிட்டிருந்தான் ஆனால் எதிர்பாராத விதமாக அவளுக்கு பிரசவவலி ஏற்ப்பட வேறு வழி இன்றி ஆரணியிலே தங்கிவிட்டவனுக்கு ப்ரீத்தியை அவன் வீடு கொண்டு வந்து சேர்க்கும் வரையிலான இந்த நான்கு நாட்களும் சுத்தமாக தூக்கம் இல்லை.

'நான்கு நாட்கள் மட்டுமா..??'

'இல்லையே..!!!'


அவன் உணர்ந்த வரையில் அவளை கண்ட நாள் முதலே தினமும் உறக்கத்தில அவனிமைகளை ஊடுருவி நிற்ப்பவளால் அவன் கொள்ளும் காதல் வதை வார்த்தைகளில் வடிக்க முடியாதவை..!!

பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, பொது இடங்கள் என்று எத்தனை எத்தனை பெண்களை கடந்து வந்திருப்பான் ஆனால் ஒருவரும் ப்ரீத்தியை போல முதல் சந்திப்பிலேயே அவனை ஈர்க்கவில்லை. என்றுமே மனித மனதை அறிந்து கொள்ள அவர்களின் விழிமொழி படிப்பவனை அன்று கல்லூரியில் ப்ரீத்தியின் விழிகளில் அவன் கண்ட நிமிர்வு, அச்சமின்மை, நேர்மை, உண்மை , ஆதங்கம், ரௌத்திரம், கருணை அனைத்தும் ஏனோ காரணமே இன்றி அவனை அவள் பால் கட்டி இழுத்துவிட்டது என்பது தான் நிஜம்.

சிறு பொறி போதுமே காதல் நெஞ்சம் தீப்பற்றி கொள்ள அதுபோல அன்று அவன் சௌமியாவை சந்திக்க வேண்டி கல்லூரிக்கு சென்ற போது அத்தனை ஆவேசமாக பேசிய ப்ரீத்தியின் பார்வை நொடிக்கும் குறைவாக கூட்டத்தில் நின்றிருந்த விஷ்வாவின் மீது படிந்த நொடி அவனில் முழுதாக நுழைந்து விட்டாள் ப்ரீத்தி.

'லவ் அட் பிரஸ்ட் சைட்டில்' சுத்தமாக நம்பிக்கை இல்லாத விஷ்வதேவிர்க்கு நண்பர்கள் மத்தியிலும் அவனை கடந்த பெண்கள் மத்தியிலும் மற்றொரு பெயர் உண்டு அதுதான் விஷ்வாமித்திரன்..!! அந்த அளவிற்கு பெண்களிடம் இருந்து ஒதுங்கி காதல் கத்தரிக்காய் என்று நேரத்தை விரயமாக்காமல் படிப்பிலும் இசையிலும் மனதை செலுத்துபவன் தான் அவன். விளையாட்டாக காதல் குறித்து சிவசங்கரன் அவனிடம் கேட்கும் போது எல்லாம் அன்னை பார்க்கும் பெண்ணை மணம் புரிவது என்ற உறுதியுடன் இருந்தவனே எதிர்பாராத வகையில் அன்று அவனில்
துளியாக விழுந்தவள் இன்று கடலாக மாறி அவன் சிந்தை, மனம், செயல் என்று எங்கம் ப்ரீத்தியே நீக்கமற வியாபித்து ததும்பி நிற்கிறாள் என்றால் அவன் காதலின் ஆழமும் அவன் நிலையும் சொல்லிலடங்காதவை ...!!

இதோ இப்போதும் மூடிய இமைகளுக்குள் நுழைந்த ப்ரீத்தி அவன் துயிலை கலைக்க அதற்க்கு மேலும் படுக்க முடியாமல் எழுந்தே அமர்ந்துவிட்டான்.

ஆம் பல வருடம் கழித்து அவளை காணும் வரையில் காதலினால் காதலியினால் உறக்கம் தொலைத்தான் என்றால் அதன் பின் என்று நாடு திரும்பி ப்ரீத்தியை பார்வதியின் அறையில் கண்டானோ எப்போது அவளை தன் குழந்தைக்கு தாயாக்குவது என்ற முடிவை எடுத்தானோ எப்போது அதனை செயல் படுத்தினானோ அன்றிலிருந்தே அவன் உலகமே மாற கண்களை மூடவும் முடியாமல் தவித்து கிடப்பவன்.

குறைந்த பட்சம் இப்போது அவளை அவன் நினைத்தது போல அவன் வீட்டில் கொண்டு வந்து சேர்த்த பின்பாவது உறங்கலாம் என்று நினைத்தால் எங்கே முடிகிறது..?? சுவாசித்தான் ஆனால் அது அவன் வாழ்வதற்க்காகவா..?? என்றால் நிச்சயம் இல்லை ப்ரீத்தியை வாழவைப்பதற்கு..!! தட்டில் என்ன விழுகிறது என்று கூட பார்க்காமல் நேரத்திற்கு உணவை உட்கொண்டான் ஆனால் அதன் ருசி அவன் நாவை கட்டிபோட்டதா..?? வயிறை நிறைத்ததா..?? என்று கேட்டால் நிச்சயம் அவன் பதில் இல்லை தான்..!! அவளை உயிர்ப்பிக்க அவன் உயிர் வாழ வேண்டும் அதற்கு உணவு வேண்டுமே என்பதற்காக உண்டான்.

அவன் கொண்டிருக்கும் உயிர் வதையில் வார்த்தைகளை மறந்து பல நேரம் திண்டாடுபவன் பேச்சு மறந்துவிடக்கூடாதே என்று பேசுகிறான் ஆனால் அது ஆத்மார்த்தமாகவா..?? என்று கேட்டால் நிச்சயம் இல்லை..!! அவள் இல்லையெனில் அவன் இல்லை என்பதை என்று உணர்ந்தானோ அன்று முதலே அவன் பேசும் பேச்சும் வாங்கும் மூச்சும் ப்ரீத்திக்காகவே என்றாகிப்போனது..!!

மீண்டும் அலைபேசி ஒலிக்க, எடுத்து பார்க்க அதில் எழிலின் எண் அதை கண்டவனின் முகம் கசங்க அலைபேசியை உயர்த்தி மீண்டும் பார்த்தவனுக்கு எழில் எதற்க்காக அழைக்கிறார் என்பதை நன்கு உணர்ந்தே இருந்தான். பின்னே ப்ரீத்தி உள்ளறையில் எழிலுக்கு அழைத்து அழுதது பேசியது அனைத்தையும் இவனும் கேட்டிருந்தானே, சென்னை செல்லும் வழியிலேயே எழில் பலமுறை அழைத்தும் விஷ்வா எடுக்கவில்லை என்பதை விட எடுத்து பேசும் மனநிலையில் அவன் இல்லை என்பது தான் நிஜம்.

நல்லவேளை சரண் சம்பந்தமாக எழில் காவல் நிலையத்திற்கும் மருத்துவமனைக்கும் அலைந்து கொண்டு இருந்ததால் விஷ்வா தப்பித்தான் இல்லையென்றால் நடுஇரவு என்றும் பாராமல் மீண்டும் சேலம் வந்து விஷ்வாவை முதல் நாள் சந்தித்த போது கொடுத்த அறையை விட பலமாக இப்போது கொடுத்து ப்ரீத்தியை கையோடு கூட்டி சென்றிருப்பார் என்பதில் விஷ்வாவிற்கு அத்தனை நிச்சயம்.

ஆம் என்று அவள் கீர்த்தி அல்ல ப்ரீத்தி என்று தெரிந்ததோ அன்றே பார்வதியை தேடி சென்னை கிளம்பிய எழில் அவரிடம் தீவிர விசாரணையில் இறங்கி அவர் மூலமாக குழந்தையின் தந்தை விஷ்வா என்பதை அறிந்து கொண்டவன் உடனே அவனை தேடி வந்துவிட்டான். தங்கள் குடும்ப பெண்ணிற்கே தெரியாமல் அவளை தன் குழந்தைக்கு ஒருவன் தாயாக்கி இருப்பதில் விஷ்வாவை ஆத்திரத்தோடு நெருங்கி "எப்படி ஒரு பெண்ணின் சம்மதம் இன்றி அவளை தாயாக்குவாய்..??" என்று கேட்டவன் அவனை ஓங்கி அறைந்து,

"ஒரு தவறுக்கு மற்றொரு தவறு என்றுமே தீர்வாகாது..!! ப்ரீத்தியை விடவும் அவன் செய்தது மாபெரும் குற்றம்" எனக்கூற,

இறுகிய முகத்துடன் நின்ற விஷ்வா அவனின் நியாமான கோபத்திற்கு மதிப்பு கொடுத்து சில நிமிடம் அமைதியாக இருந்தவன் பின் தன் தரப்பை எடுத்து கூற எழிலும் ப்ரீத்தி பற்றி விவரிக்க 'தனக்கும் எல்லாம் தெரியும்' என்றவன் 'எப்படி..??' என்று தன்னிலை விளக்கம் அளித்து ப்ரீத்தியை தன் உயிரினும் மேலாக பாதுகாப்பான் என்ற உறுதியை எழிலுக்கு அளித்து அதன் பின்பும் சில மணி நேரத்திற்கு பிறகே எழிலை சமாதானபடுத்தி இருந்தான்.

கண்ணீர் என்றால் என்ன விலை..?? என்று கேட்கக்கூடிய ப்ரீத்தியின் கண்ணீரிலும் அழுகையிலும் எழில் எத்தகைய வேதனை கொண்டு இருப்பான் என்பதை புரிந்தவன் இப்போது பேசியை எடுக்க...,

மறுகணமே, "விஷ்வா" என்ற எழிலின் குரலில் அத்தனை ஆவேசம்

குரலை செருமி "அண்ணா" என்றிட,

அடுத்த நொடியே 'ப்ரீத்தியை என்ன சொன்ன..??' என்று பற்களுக்கிடையில் எழில் வார்த்தைகளை அரைத்து துப்பியிருந்தான்.

எதிர்பார்த்த கேள்வி என்பதால் சிறுதயக்கமும் இன்றி, "ண்ணா இந்த கேள்விக்கு நான் எதுவும் சொல்லலைன்னு சொன்னா நீங்க நம்புவீங்களா..??" என்று அவன் எதிர் கேள்வி கேட்டான்.

"உன்மேல நம்பிக்கை வச்சி தான் ப்ரீத்தியை அனுப்பினதா எனக்கு நியாபகம் விஷ்வா"என்றான் அடக்கப்பட்ட சீற்றத்துடன்,

"அப்போ அதே நம்பிக்கையோடு இருங்க ஐ ப்ராமிஸ் யு அகைன்"

"அப்புறம் ஏன் ப்ரீத்தியை அழவிட்ட..??"

கண்களை இறுக மூடி திறந்தவன், "இது தான் ப்ரீத்தியோட கடைசி அழுகையா இருக்கும்ண்ணா" என்றான்.

"இன்னொரு முறை அவ அழரவரைக்கும் உன்னை விட்டுவைப்பேன்னு நினைக்கிறியா..??" என்று எழில் ஆத்திரத்துடன் கேட்க

'இல்லை' என்ற விஷ்வா "ண்ணா எல்லா வியாதியையும் ஒரே மருந்துல குணப்படுத்த முடியாது அதனோட தன்மை, வீரியம் பொறுத்து மருத்துவமும் மருந்தும் மாறுபடும்... பெரும்பான்மையான மருந்து கசக்கதாண்ணா செய்யும் அதுக்காக அது கொடுக்காம இருக்க முடியாது தேவைபட்டா டோசெஜ் கூட்டி கொடுத்து குணப்படுத்த தான் பார்ப்பேனே தவிர கடைசி வரை பின்வாங்க மாட்டேன்"

"நான் கண்ணீருக்கான காரணம் கேட்டேன்"

கசந்த முறுவலுடன் "இருக்கிறதுலேயே ரொம்ப கசப்பான மருந்தை கொடுத்தேன், எப்படி அதை குடிக்கும் போது குழந்தைங்க அழுமோ அதே போல தான் உங்க குழந்தையும் உங்ககிட்ட அழுதிருக்கா பட் ஐ ப்ராமிஸ் யு அகைன், இனி நான் கொடுத்த கசப்பு மருந்துக்கான தேவை இருக்காது அவ அழவும் மாட்டா.., நான் விடவும் மாட்டேன் "என்று உறுதியான குரலில் கூற,

விஷ்வா குரலிலும் வார்த்தையிலும் நம்பிக்கை வரபெற்ற எழில், "ஏன் ப்ரீத்தியை தனியே விட்டுட்டு போன" என்று விஷ்வாவின் தந்தை மூலமாக அவன் வெளிநாட்டிற்கு சென்றிருப்பது குறித்து கேட்க

'ட்ரீட்மென்ட்ல இது அடுத்த கட்டம்ண்ணா, சீக்கிரமே அவ குணமாகி நீங்க புது ப்ரீத்தியை பார்ப்பீங்க' என்றிட,

"உன் மேல இருக்க நம்பிக்கை இன்னும் அப்படியே தான் இருக்கு விஷ்வா அதை கெடுத்துக்க மாட்டேன்னு நம்புறேன் ஆனா ட்ரீட்மென்ட்ன்னு சொல்லி ப்ரீத்தியை இன்னொருமுறை என்கிட்டே அப்படி ஒரு கேள்வி கேட்க வச்சிடாத..!!" என்று கலங்கிய குரலில் கூற,

ப்ரீத்தியின் கேள்வியில் எழிலை விடவும் நூறு மடங்கு கலங்கி நிற்ப்பவனுக்கு பல நிமிடங்களுக்கு வார்த்தை எழாமல் தொண்டையை அடைத்து கொள்ள இரண்டு மூன்று முறை 'விஷ்வா' என்று எழில் அழைக்கவும் குரலை செருமி 'ப்ராமிஸ்ண்ணா' என்றவன் அதற்கு மேலும் பேசும் சக்தி அற்றவனாக 'அப்புறம் பேசுறண்ணா' என்று கைபேசியை வைத்தான்.

எழிலுடனான பேச்சை அசைபோட்டவாறே அறைக்குள் நடந்து கொண்டிருந்தவனுக்கு எழிலுடனான முதல் சந்திப்பு அதன் பின் ப்ரீத்தியை அவனுடன் அழைத்து வருவதற்கு தடையாக இருந்த தாய் , தந்தை அடுத்து நாதன் என்று ஒவ்வொருவரையும் சமாதனபடுத்தி நிமிர்ந்தவன் முன் இருந்த மிகப்பெரிய சவாலே ப்ரீத்தி தான்..!!

'நிச்சயம் இது தன் குழந்தை' என்று கூறியதும் அவள் ஒன்றும் அதை ஏற்றுக்கொண்டு உடனே அவனுடன் வாழவரப்போவது இல்லை என்பதை அறிந்திருந்தவன் வேறு வழி இன்றி ப்ரீத்தியையும் மிரட்டியே அழைத்து வரவேண்டியதாகி போனது. இவை அனைத்தும் ஒருபுறம் என்றால் ஒரு நாள் முழுவதையும் விழுங்கிய பயண களைப்பு மறுபுறம் அவனை சோர்வுற செய்ய மேலும் நடையை தொடராமல் விளக்கை அணைத்துவிட்டு மெத்தையில் படுத்து கண் மூடிட அவன் விழிகளை மீண்டும் ஊடுருவி நின்றாள் ப்ரீத்தி.

அதுவும் அன்று இரவு அவள் கூறிய 'I am not a whore as you think..!!' என்ற வாக்கியமே இந்த நொடி வரை அவன் உயிரை சிறுக சிறுக குடித்து கொண்டிருக்க எங்கிருந்து உறக்கம் வரும்..?? எந்த வார்த்தையை அவளிடம் இருந்து கேட்டுவிடக் கூடாது என்று இத்தனை பாடுபட்டானோ அதை அவனிடமே கூறி விட்டவளுக்கு தெரியாது அவள் வார்த்தைகள் அவனை எத்தனை ஆயிரமாக, லட்சமாக கூறு போட்டு கொண்டிருக்கிறது என்று...!!

திறந்த விழிகளுடன் இருட்டறையை வெறித்து கொண்டிருந்தவனின் இமையோரத்தில் கண்ணீர் கோடுகள் இறங்கி தலையணையை நனைத்து கொண்டிருக்க அன்று அவள் வாக்கியத்தை தொடங்கிய போதே தெரியும் அதை தாங்கும் வல்லமையை அவன் பெறவில்லை என்பது..!! இதோ இப்போது அதை நினைத்தாலும் அவள் வலியை தனதாக உணர்ந்து துடிப்பவனின் நெஞ்சில் குருதி கசிகிறதே அதை எங்கனம் அவனும் தடுக்க..??

ப்ரீத்தி வெடிப்பாள் என்பதை கணித்திருந்தவனுக்கு அதனால் அவன் கொள்ள போகும் காயத்தின் ஆழத்தை கணக்கிட தவறி இருந்தான். எனினும் அதற்குள் மேல் அவளுடன் அங்கே இருந்தால் எங்கே தன்னை கட்டுபடுத்த முடியாமல் வெளிபடுத்திவிடுவோமோ என்ற அச்சத்திலேயே பத்து நாட்களுக்கு பிறகு நடக்ககூடிய கருத்தரங்கம் , ஆய்வுகளில் கலந்து கொள்ள முன்னரே திட்டமிட்டு வந்துவிட்டவனுக்கும் தன்னை தேற்றி கொள்வதற்கான அவகாசம் கிடைக்கபெற அடுத்த ஒருவாரத்திற்கு அறையை விட்டு எங்கும் அவன் வெளியேறவில்லை யாரிடமும் பேசவில்லை அறையில் அடைந்து கிடந்தவன் கிட்டத்தட்ட பித்து பிடித்த நிலையில் இருந்தான் என்று தான் சொல்ல வேண்டும் அத்தனை தூரம் ப்ரீத்தி கூறிய வார்த்தைகள் அவனை கொன்று தின்று கொண்டிருந்தது.

இந்த அளவு தன்னிலை மறந்து இருப்பவனல்ல அவன் ஆனால் காதல் அவனை அந்த அளவு படுத்தி எடுத்தது, இத்தோடு அவன் வேதனைகள் தீரப்போவதில்லை என்பதை நன்கு அறிந்திருந்தவன் இனியும் காலம் முழுக்க தொடரக்கூடிய நாட்களுக்கும் சேர்த்தே அந்த ஒருவாரத்தில் தன்னை செதுக்கி கொண்டான்.

கைபேசியில் இருந்த அவள் நிழற்படத்தை பார்த்தவாறே நாட்களை கடத்தியவன் அவளிடம் தினமும், "என்னை இன்னும் மோசமா கூட பேசு ப்ரீத்தி கேவலமா திட்டு, அடி, ஆத்திரம் தீர குத்தி கிழி ஆனா இன்னொருமுறை உன்னை அன்.. அந்த வார்..த்..தை" என்றவனின் குரல் உடைய நா தழுதழுக்க மீண்டும் கண்ணீர் துளிர்க்க தொடங்கி விட்டது. அதை தொடர்ந்து சில நொடிகள் கண்மூடி தன்னை கட்டுக்குள் கொண்டுவர போராடியவனுக்கு வாய்விட்டு கதற தோன்றிட அரும்பாடு பட்டு தன் அழுகையை மென்று தொண்டைக்குழியினுள் தள்ளியவன்,

"ஐ பெக் யூ.. ஐ பெக் யூ புவர்லி ப்ரீத்தி (I beg you poorly..!!) ப்ளீஸ்... ப்ளீஸ்.. இன்னொருமுறை அப்படி சொல்லாத" என்று நொடிக்கொருமுறை அவளிடமே அவளுக்காக மன்றாடி கொண்டிருந்தான்.

*****************************************************

சௌமியா ப்ரீத்தியுடன் இருந்த இரண்டு நாட்களும் எப்படி போனது என்றே தெரியாத வகையில் அத்தனை வேகமாக சென்றிருந்தது... வர்ஷினியும் விடுமுறை இருந்ததில் தோழிகளுடன் உடன் சேர்ந்துக்கொள்ள இரவும் பகலும் மூவரின் கூட்டணியில் வீடே நிறம் மாறி போயிருந்தது. மகிழ்ச்சியும், சிரிப்பும், ஆரவாரமுமாக அவர்கள் வீட்டை வளைய வர அங்கே ததும்பி வழிந்த சந்தோஷத்தில் மனம் பூரித்து போனார் வசுந்தரா தேவி.

ப்ரீத்தியின் புன்னகை முகத்தை கண்ட சிவசங்கரன் மனைவியை பார்க்க வித்யாவோ ப்ரீத்தி வந்த போது இருந்ததற்கும் இப்போதைய அவள் மாற்றத்தையும் சத்தமில்லாமல் தனக்குள் ஒப்பிட்டு பார்த்து கொண்டிருந்தார்.

சௌமியாவின் வரவிற்கு பின் விஷ்வா குறித்த தகவல்களை மேலும் விரிவாக தெரிந்து கொண்ட ப்ரீத்திக்கு முன்பு போல வித்யாவை எதிர்கொள்வதில் இருந்த அச்சமும் தயக்கமும் இப்போது இல்லை. என்னதான் சௌமியா உடன் இருந்ததில் பெரிதாக தெரியாமல் போனாலும் தொடர்ந்த நாட்களிலும் விஷ்வா வீட்டிற்கு வராமல் இருந்ததில் இம்முறை ப்ரீத்தியால் ஏனோ கண்டுகொள்ளாமல் இருக்க முடியவில்லை.

விஷ்வா எங்கு சென்றிருப்பான் என்று சௌமியாவை கேட்டதற்கு அவளுக்கும் தெரியவில்லை என்று கூற வர்ஷினியிடம் கேட்க தயக்கம் கொண்டவள் தினமும் அவனுக்கு தொடர்ந்து அழைக்க ஆரம்பித்து விட்டாள். ஆனால் அவளிடம் இருந்த எண்ணிற்கு அவள் எப்போது அழைத்த போதும் அது அணைத்து வைக்கப்பட்டு இருந்ததில் விஷ்வா மீது ஆதங்கம் மேலோங்கியது.

யாரிடம் சென்று கேட்பது என்று விழித்து கொண்டிருந்தவள் உடனே சௌமியாவிற்கு அழைத்து அவள் கணவனிடம் கேட்க சொல்ல அதன் பின்பே அவன் வெளிநாடு சென்றிருப்பதும் அது அவன் பெற்றோருக்கும் தெரியும் என்றும் தெரியவந்தது. கார்த்திக் மூலமாக ஓரளவிற்கு அவன் பயணத்திட்டம் அறிந்து கொண்டவள் மனதின் ஓரம் தன்னிடம் ஏன் சொல்லவில்லை என்ற கேள்வி எழுவதை தடுக்க முடியவில்லை.

ப்ரீத்தி வந்து ஒரு வாரம் ஆகி இருக்கும் நிலையில் குழந்தைக்கும் அவளுக்கும் செய்ய வேண்டிய சம்பிரதாயம் குறித்து பேசுவதற்காக சிவசங்கரன் நாதனுக்கு அழைத்திருக்க அழைப்பை ஏற்ற கதிர் நாதன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருப்பதாக கூற அதை அறிந்த ப்ரீத்தி மனம் நிலைகொள்ளாமல் தவித்து போனது எங்கே தன்னால் அவரது உடல் நிலை சீர்கெட்டு போனதோ இன்னும் அவளால் அவர் என்னவெல்லாம் சந்திக்க வேண்டும் என்று உடைந்து போனவள் உடனே நாதனை பார்க்கவேண்டும் என்று கண்ணீருடன் அவரிடம் கேட்க சிவசங்கரனும் வித்யா மற்றும் ப்ரீத்தியோடு ஆரணி சென்று திரும்பி இருந்தார்.

ஆராய்ச்சி கூடத்தில் இருந்து அறைக்கு திரும்பிய விஷ்வாவிற்கு மீண்டும் சிவசங்கரனிடம் இருந்து அழைப்பு வந்தது. பல நாட்களாக சிவசங்கரின் அழைப்பை ஏற்காமல் இருந்தவன் குளித்து முடித்த பின் நிதானமாக அவருக்கு எடுக்க,

'தேவ்' என்றவரின் குரலில் அத்தனை எரிச்சல்,

'சொல்லுங்கப்பா'

"தேவ் ஏன் இத்தனை நாளா கால் பண்ணலை எடுத்து பாரு தினமும் பத்து முறையாவது உனக்கு கால் பண்ணி இருப்பேன் அவசரத்துக்கு எடுக்க மாட்டியா..??" என்று அவனை கடிய

'ப்பா ஒரு வாரமா லேப்ல இருந்தேன்பா எப்படி எடுக்க சொல்றீங்க..??உங்களுக்கு தெரியாதா..??' என்று அவரையே திருப்பி கேட்டவன் தந்தையிடம் இருந்தும் தன் வலியை மறைத்திருந்தான்.

பின்னே அவன் கொண்டிருக்கும் உயிர் வேதனையை அறிந்தால் மனிதர் துடிதுடித்து போய் அவன் திட்டம் அனைத்தையும் கெடுத்து விடுவாரே அதனால் அவரிடம் சாதாரணமாக கேட்க,

தன் கேள்வியில் இருந்த அபத்தம் புரிந்தவர், "சாரி கண்ணா மறந்துட்டேன்..!! ஆனா இங்க என்ன நடந்துட்டு இருக்குன்னு உனக்கு தெரியுமா..??" என்று பதட்டத்துடன் கேட்க,

'என்ன நடக்குது இப்போ சொல்லுங்க கேட்கிறேன்'

'தேவ் நீ ப்ரீத்தி கிட்ட எதுவும் சொல்லலையா..??'

'என்னப்பா சொல்லணும்..??'

'என்ன சொல்லனுமா..??' என்று மகனை திருப்பி கேட்டவர் 'நீ யூ.எஸ் போறதை பத்தி ப்ரீத்தி கிட்ட ஏன் சொல்லலை..??' என்று நேரிடையாக கேட்க

''எதுக்குப்பா சொல்லணும்"

'தேவ்' என்றார் அதிர்வுடன்

'ரிலாக்ஸ்பா' என்று அவர் அதிர்ச்சி புரிந்தவனாக கூற,

"தேவ் நீ எதுவும் சொல்லாம கிளம்பிட்ட இங்க உன் அம்மா இன்வெஸ்டிகேஷன் ஆரம்பிச்சாச்சுடா"

"ஆரம்பிக்கட்டுமேப்பா அதுக்கு ஏன் நீங்க இவ்ளோ டென்ஷனா இருக்கீங்க..??"

"டேய் ஏன்டா சொல்ல மாட்ட..?? உங்க அம்மாக்கு ப்ரீத்தி மேல இருந்த சந்தேகம் இப்போ கொஞ்சம் கொஞ்சமா ஊர்ஜிதம் ஆகிற மாதிரியே ப்ரீத்தியும் நடந்துட்டு இருக்கு.., நீ சொன்ன மாதிரி ப்ரீத்தி ஒன்னும் ஸ்மார்ட் இல்ல முதல் நாளே உங்க அம்மா கேட்ட பல கேள்விக்கு சொதப்பி வச்சி இருக்கு நான் தான் உங்க அம்மாகிட்ட மருமகளுக்கு டைம் கொடுன்னு இழுத்து பிடிச்சி இருக்கேன் ஆனா இப்படியே போனா சீக்கிரம் உங்க அம்மாக்கு எல்லாமே தெரிஞ்சிடும் போல இருக்குடா" என்று தவிப்புடன் கூற

'தெரியட்டுமேப்பா அதனால என்ன..??'

'தேவ் என்ன பேசுற..?'

'சரியா தான்பா பேசுறேன்' என்றவனின் வார்த்தைகளை உச்சபட்ச அதிர்வில் திகைத்து நின்றான் சிவசங்கரன்.


ஹாய் செல்லகுட்டீஸ்...

இதோ "உயிரில் உறைந்த உறவே !!" அடுத்த அத்தியாயம் பதித்துவிட்டேன் படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். கதை எப்படி போகுது விஷ்வா தரப்பு விளக்கங்கள் ஆரம்பம் ஆகிடுச்சி கன்வின்சிங்கா இருக்கான்னு சொல்லிட்டு போங்க.

நன்றிகள்


ருத்ரபிரார்த்தனா
 
Status
Not open for further replies.
Top