அனைவருக்கும் வணக்கம்,
எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். இன்று 'இப்படிக்கு காதலுடன்...' என்ற தலைப்பில் என்னுடைய ஐந்தாவது கதையை துவங்குகிறேன். இது ஒரு சாதரண காதல் கதை! light hearted story! NO TRAUMA!
நாயகி: ஜோட்சனா ஜோதிலிங்கம்
நாயகன்: ப்ரித்விராஜ் நிவேந்தன்
பொறுப்புரை/Disclaimer: My stories will have in-depth descriptions and certain English dialogues as per requirement of the story flow.
Age Limit: 18+
மடல் 1
ஜனவரி 2021
டியர் போசைடன்!
எப்படி இருக்க? நல்லா தான் இருப்பனு தெரியும்! இருந்தாலும் நான் எப்பவும் கேட்குற கேள்விய தவிர்த்து புதுசா எதாவது கேட்கனுமுன்னு தோணுச்சு! அதான் கேட்டேன்! சரி இப்ப எப்பவும் கேட்குற கேள்விய கேட்குறேன்!
குச் குச் ஹோத்தா ஹை இப்பவாச்சும் பார்த்தியா? இதுவரைக்கும் நான் கேட்ட கேள்வியிலே, நீ பதில் தராத கேள்வி இது மட்டும் தான்!
நீ போன கடிதத்துல கேட்ட கேள்வி என்ன? சுற்றி என்னுடைய குடும்பம், நண்பர்கள்னு கூட்டத்துல இருந்தும் தனிச்சு இருக்க மாதிரி நீ உணர்ந்து இருக்கியானு தானே கேட்ட?
என்னை பொறுத்தவரைக்கும் கூட்டமா இருந்தாலும் சரி தனிச்சு இருந்தாலும் சரி, எனக்குனு ஒரு உலகம் என் மனசுல இருக்கு. அந்த உலகத்துல நான் இருப்பேன்! என்னைச் சுத்தி எவ்வளவு பேர் இருந்தாலும், அவுங்களுடைய இருப்பின் அங்கீகாரம் நான் என் மனசுல கொடுக்கறது தான். எதிர்ல இருப்பவங்க செயல், சொல் பிடிக்கலைன்னா ‘ஐ ஜஸ்ட் ட்யூன் தெம் அவுட் ஆஃப் மை தாட்ஸ். சோ அப்படிபட்ட தனிமை நான் என்றைக்குமே உணர்ந்தது இல்ல! அதனால தானோ என்னவோ எனக்கு எந்த கூட்டம் பிடிக்கும், அந்த கூட்டதுல மட்டும் தான் இருப்பேன். அப்படி இருக்குறப்போ தனிமை உணர்வு எப்படி வரும்?
இரு இரு இரு! யெஸ், நான் என் தனிமைய உணரும் கூட்டம், ஆஃபிஸ் மந்த்லி டார்கெட் கூட்டம், அண்ட் பட்ஜெட் கூட்டம்! ஏன்னா? இட் மேக்ஸ் மீ லுக் லைக் அ ஃபூல்! எனக்கு ஃபினான்ஸ் புரியாது! ஃபினான்ஸ்ல என் அறிவு பூஜ்ஜியம்றதால, அங்க மட்டுமே நான் தனிமைய உணர்ந்திருக்கேன்!
இப்ப என் முறை!
நீ எப்பவாச்சும் பாசத்துக்கு,யாசகம் செஞ்சுருக்கியா?
இப்படிக்கு நட்புடன்
உன்னுடைய அரோரா!
பி. எஸ்: உன் லெட்டர் எப்படியும் அடுத்த மாசம் தான் எனக்கு கிடைக்கும்! அதானால இப்பவே சொல்லிடுறேன் அட்வான்ஸ்ட் வாலென்டைன்ஸ் டே விஷ்ஷஸ்! உனக்கு காதல் மேல ரொம்ப பெரிய அபிப்ராயம் இல்லாம இருக்கலாம், ஆனா என்னைக்காவது நீயும் காதலிப்ப.. பை!
அழகான குண்டு குண்டு கையெழுத்தில் அந்த மடலை முடித்து, கைவினை வண்ண காகிதத்தை மெல்ல மடித்து அதன் பிரத்யேக உறைக்குள் இட்டு பசையிட்டாள் ஜ்யோட்சனா! உதட்டில் தவழ்ந்த மெல்லிய புன்னகை அவள் மதி முகத்தை இன்னும் ஒளிரச்செய்தது.
“ஹ்ம்ம்ம்ம்” என்று ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டவள் அந்த கடிதத்தை தனது ‘லண்டன் லெட்டெர் ரைட்டிங் சொசைட்டியின் ‘பி ஓ’ பெட்டி முகவரிக்கு கூரியர் செய்து வைத்தாள். அதன் பின் மனதின் ஓரத்தில் அந்த கடித்ததிற்கான பதில் மடலை எதிர்நோக்கியபடி, அவளின் இயல்பு வாழ்க்கை அழகாக கடந்தது.
ஃபிப்ரவரி 2021
டியரஸ்ட் அரோரா,
விஷ் யு அ ஹாப்பி வேலன்டைன்ஸ் டே! என்னுடைய கணிப்பு சரியா இருந்தா, இந்த லெட்டர் வேலென்டைன்ஸ் டே முடிஞ்சு தான் உனக்கு கிடைக்கும்! உங்க ஊர்ல க்ரீட்டிங்க் கார்ட் விக்கிறவனும், பலூன் விக்கிறவனும், அவன்…அவன் சேல்ச அதிகமாகிக்க பரப்பிவிட்ட இந்த கான்சப்ட, உன்ன மாதிரி லூசுங்க இன்னும் நம்புறதாலதான், எங்கள மாதிரி பிசினஸ் ஆளுங்க பேங்க் பாலன்ஸ் சில பல கோடிகளால அதிகமாகுது! அதனால அதுக்கு முதல்ல நான் நன்றி சொல்றேன் உனக்கு!
அடுத்து நீ கேட்ட புது கேள்விக்கான என்னுடைய பதில்... ஐ அம் ராக்கிங்க்! ரொம்ப நல்லா இருக்கேன். கூல் அண்ட் சில். பட் பிசினஸ்ல அஸ் யூஷுவல் ஸ்ட்ரிக்ட்!
சரி இப்ப உன் அடுத்த கேள்விக்கான பதில்! பாசத்துக்கு யாசகம்! அந்த இரண்டு வார்த்தை என் வாழ்கையின் அடிப்படையவே கோடிட்டு காட்டுதுனு, நான் சொன்னா நீ என்ன செய்வ?
வெல்! மூவிங்க் ஆன்! உனக்கு ஏன் அந்த கரன் ஜொஹர் படமுன்னா,அவ்ளோ பிடிக்கிதுனு தெரியல! நீ காதல் காதல்னு சொல்ற அளவுக்கு அந்த குச் குச் ஹோத்தா ஹைல ஒன்னும் இல்ல! சொல்லப் போனா அந்தப் படத்துல எந்த கேரக்டர்சும் உண்மையாவே காதலிக்கல! எனிவேஸ் ஐ சா தி மூவி ட்வைஸ்! ஃபார் யூவர் சேக்! எனக்கு பிடிக்கல!
அடுத்து! இதுவரைக்கும் உங்கிட்ட கேட்காத ஒன்னு,நான் கேட்கபோறேன்!
எனக்கு உன்ன மீட் பண்ணனும்! இன்னைக்கி தான் பைனல் ஆச்சு! நான் இந்தியா வரேன்! பெங்களூர்க்கு தான் வரேன்! இந்த பாண்டெமிக் சமயத்துல ரொம்ப ரொம்ப அவசியமானதால சிரமப்பட்டு அனுமதி வாங்கிட்டு வரேன்! உன்னப் பார்க்கனும் தப்பா நினைச்சுக்காத (ஹா ஹா ஹா) ஆனா உன்னையும் பார்க்கனுமுன்னு நினச்சுக்கோ!
என்ன? நாம மீட் பண்ணலாமா?
இப்படிக்கு நட்புடன்
உன் பொசைடன்!
பி எஸ்: மீட் பண்ண விருப்பமில்லைனா கண்டிப்பா என் கிட்ட எந்த ஒளிவு மறைவு இல்லாம சொல்லிடு! நான் தப்பா நினைச்சுக்க மாட்டேன்! அதே போல நீ வேண்டாம்னு சொன்னதால நம்மோட கடிதப் போக்குவரத்து நின்னு போகும்னு, நீ நினைக்க வேண்டாம்! நான் எப்பவும் உன் பொசைடன் தான்! என் கோபமோ, ஏமற்றமோ, தண்ணில ஒரு டைவ் அடிச்சேன்னா உடனே போய்டும்! சோ பீ ஓபன்!
ஜோட்சனாவின் கையில் இருந்த அழகிய கைவிணைக் காகிதத்தின் ஓரத்தில் ஆங்கில எழுத்துக்கள் ‘PN’ என்று காலிஃகிராஃபி (calligraphy) முறையில் அச்சடிக்கப்பட்டிருந்தது! அது அவனது கடிதங்கள் எப்பொழுதும் எழுதப்படிருக்கும் காகிதம்! இளம் பழுப்பு வண்ண காகிதம், அந்தகால காகிதம் போல் வடிவமைக்கப்பட்டது. அதில் அவன் கையெழுத்தும் எப்பொழும்போல் காலிஃகிராஃபிக்கென உபயோகிக்கும் பட்டை முனையுடைய எழுதுகோலால் எழுதப்பட்டிருந்தது!
அவன் இறுதியாகக் கேட்ட கேள்வியில் அவளின் பார்வை நிலைத்திருக்க, அவள் புருவங்கள் முடிச்சிட்டு யோசனையில் ஆழ்ந்திருந்தாள்!
“மீட் பண்ணலாமா? வேண்டாமா?” என்று அவள் உதடுகள் முணுமுணுக்க
“ஹ்ம்ம்ம்ம்” என்று எப்பொழுதும் போல் ஒரு ஆழ்ந்த மூச்சுவிட்டு தனது இமைகளை மூடி, சில மணித்துளிகள் அமர்ந்திருந்தாள்.
குடைபோல் விரிந்த இமைகள் மலர, அந்த சில மணித்துளிகள் கிடைத்த தெளிவில் தனது பதிலை அவளின் ‘க்ளிட்டர்’ மை உடைய எழுதுகோலால், அவளின் கைவிணைக் காகிதத்தில் எழுதினாள்.
ஃபிப்ரவரி 2021
டியர் பொசைடன்,
இந்த தடவை நீ கேட்ட கேள்விக்கு என்னுடைய பதில்..
சாரி! இப்ப வேண்டாம்! ஆனால் எப்பவுமே வேண்டாம்னு நான் சொல்லல! இப்போதைக்கு..
என்று எழுதிக் கொண்டிருந்தவளின் சிந்தனைக் குதிரைக்கு அவள் பக்கத்தில் இருந்த கைப்பேசி ஒலி கடிவாளமிட்டது!
தொடுதிரையில் தெரிந்த ‘தேவ் அங்கிள்’ என்னும் பெயரை கண்டதும் கன்னக்குழி சிரிப்பு உதிக்க அழைப்பை ஏற்றாள்.
“ஹை அங்கிள்!” என்று அவளின் வெள்ளிமணிக்குரலில் கினுகினுத்தாள்
எதிர்முனையில்
“பாப்பா, நீ உடனே மெட்ராஸ் கிளம்பி வா!” என்று தோய்ந்து ஒலித்தது தேவராஜ் சக்ரவர்த்தியின் குரல்.
எப்பொழுதும் கம்பீரமாக ஒலிக்கும் தனது மாமனின் குரல் இன்று தோய்ந்து கேட்கிறது என்றால் ஏதோ குழப்பம் என்று யூகித்தவள்,
“எதுக்கு அங்கிள்? என்ன ஆச்சு? எனிதிங்க் சீரியஸ்?” என்று கேட்ட பெண்ணிடம்
“நீ வா டா! நான் கருணாவ அனுப்பியிருக்கேன்! நம்ம கார்லயே வந்துடு! இப்ப இருக்க நிலமையில அதான் சேஃப்! பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட் வேண்டாம்!” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தார் தேவராஜ்.
குழப்பம் சூழ்ந்தாலும் தனது இயல்பான துள்ளல் அவளை மீட்டெடுக்க, தனது நாவல் பழ இதழ்களை ஒரு புறம் இழுத்து சுருக்கி “ம்ச்ச்” என்று சொன்னபடி தோள்களை குலுக்கினாள்.
ஆரம்பித்த கடித்ததை முடித்தவள் அதை கொரியர் செய்துவிட்டு தனது இரண்டு நாள் பயணத்திற்கு எப்பொழுதும் போல் நான்கு பைகளை தயார் செய்தாள் ஜோட்சனா ஜோதிலிங்கம்.
எட்டு மாதங்களுக்குப் பிறகு…
‘சண்டே, சேல் சந்த்தே’ என்ற பெயரில் வருடா வருடம் நடைபெரும் நாகரீகமும் நவீனமும், பழமையோடு இழையும் சந்தை. வித விதமான கலைப்பொருட்கள், கைவினைப்பொருட்கள், உடைகள், அணிகலன்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள் என்று அனைத்தும் சிறு சிறு கூடாரங்கள் போல் அமைக்கப்பட்ட கடைகளில் விற்பனை செய்யப்பட்டன. நடு நடுவே உணவு கடைகள், குளிர்பான கடைகள், கலை நிகழ்ச்சிகள், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று கலைக் கட்டுமிடம்.
இது ‘எது எடுத்தாலும் பத்து ரூபா’ சந்தையில்லை… ‘எதை தொட்டாலும் கண்ணா உன் மாச சம்பளமே பத்தாது டா, பேசாம கீழ வச்சுட்டு ‘வாவ், லவ்லி’நு இங்கலீசுல பீட்டர் விட்டுட்டு, வேடிக்கை மட்டும் பார்த்துட்டு போ’ என்னும் சந்தை. பெங்களூரின் மேல் தட்டு மக்களுக்கும், நவநாகரீக இளைஞர்களுக்கும் உற்ற பொழுதுபோக்கு இடம்... விலைப் பட்டியலை பார்க்காமல் பொருளை மட்டும் பார்த்து, அசால்டாக காசை கொடுத்து வாங்கிப் போகும் செல்வந்தர்கள், தங்கள் மன அழுத்தத்தை செலவு செய்து போக்குமிடம். அக்டோபர் மாதத்தின் ஞாயிற்றுக்கிழமைகளில் நடை பெரும், இந்த சந்தையில் அன்று மாலை ‘ராக்’ இசைக் கச்சேரி. கிட்ட தட்ட நம் ஊர் பக்கம் நடை பெரும் சந்தை தான்! என்ன? இங்கே நாகரிக சாயம் பூசப்பட்டு, மெருகூட்டி நடை பெறும். இந்த வருடம் கோவிட் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடைப்பெற்றுக்கொண்டிருந்தது.
இளமையாக இருந்த மாலைப் பொழுதின் மஞ்சள் ஒளியில் அதே இள மஞ்சள் ஸ்பெகட்டி சன் டிரஸ் எனும் மேர்கத்திய உடை அணிந்து, தனது தோள் வரையிலான அடர் குழலை இரட்டை தளர்ந்த குதிரைவால் போல் பின்னலிட்டு, கூட்டதிற்குள் தனது விழிகளை அலசியபடி வந்தாள் ஜோட்சனா ஜோதிலிங்கம்.. அவளின் ஆடைக்கு ஏற்ப மஞ்சள் நிறத்தில் முக கவசமும் அணிந்திருந்தாள்.
“ஜேஜே.. இங்க... இங்க.. இங்கே இருக்கேன் பார்..” என்று ஒரு குரல் அந்த சத்தத்தில் கூவ, அந்த குரல் வந்த திசை நோக்கி தனது பார்வையை செலுத்தினாள் ஜேஜே.. நண்பர்களுக்கு அவள் ‘ஜேஜே’, குடும்பதிற்கு
அவள் ‘ஜோ..’, வேலை பார்க்கும் இடத்தில் மிஸ் ஜே. தாய்கும், மாமனுக்கும் மட்டும் ‘பாப்பா’.
“ஜே ஜே…..” என்று கூவிய படி ஜோவை கட்டிகொண்டாள் தாரா என்னும் நக்ஷதிரா.. அழகிய ‘பிக்ஸி கட்’ சிகை அலங்காரம், சிறிதுக்கும் மிக சிறிதுக்கும் நடுவில் இருக்கும் அளவு ‘பம் ஷர்ட்ஸ்’ மேலே அதற்கு தோதான கலம்கரி வேலைபாடில் செய்த தொள தொள கிராப் டாப், அவளது தொப்புளில் குத்தியிருக்கும் சின்ன தோட்டை காட்டும் அளவு நீளத்தில் இருந்தது. அணிந்திருந்த முக கவசைத்தை மெல்ல இறக்கிவிட்டபடி
“ஐயோ.. விடுடி.. நேத்து சாயங்காலம் தானே பார்த்தோம்.. என்னமோ போன வருஷம் பார்த்த மாதிரி, இப்படி கட்டிப்பிடிக்காத.. எனக்கு பிடிக்காதுனு உனக்கு தெரியும் தானே..” என்று சிணுங்கியவளை இடது புருவம் தூக்கி நக்கலாக பார்வை பார்த்து வைத்தாள் தாரா..
“சரி சரி.. அதெல்லாம் விடு.. டைம் ஆய்டுச்சா? உன் ஆள பார்த்துட்டியா?” என்று வினவினாள் தாரா.
“என் ஆளு கீளுனு சொன்ன பல்ல பேத்துடுவேன்.. என்னோட ஃபிரண்டு அவன்.”
“ஒ மை கடவுளே.. சரி மா.. சரி.. பிரண்ட..சாரி சாரி பிரண்டு.. அவனத் தான் பார்த்துட்டியா?”
“இன்னும் இல்லடி.. டைம் இருக்கு.. சரியா ஆறு மணிக்கு ராக் ஷோ மேடை பக்கத்துல நிக்க சொல்லிருக்கேன்… கையில மஞ்சள் பலூனோட..” என்றாள் பற்கள் முப்பத்தி இரண்டும் தெரியும் கோல்கேட் சிரிப்புடன்..
கண்களை உருட்டிய தாரா “உன்னையெல்லாம்… எந்த உலகத்துல இருக்க டி நீ! இன்னும் நைன்டீஸ் கிட் ஆவே இருக்க… டிவென்டி டிவென்டி ஸ்வாக் கல்ச்சர்க்கு எப்போடி மாறுவ… கரன் ஜோகர் படம் பாக்காத பாக்காதன்னு சொன்னா கேக்குறியா…. அதெல்லாம் பார்த்துட்டு தான் இப்படி ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ ரேஞ்சுக்கு பாடிகிட்டு திரியிற..”
“அடியேய்…. அந்த பாட்டு விக்ரமன் படம் டி... விட்டா கரன் ஜோகர் விக்கரமனோட அசிஸ்டண்ட்ன்னு சொல்லுவ போல” என்ற ஜோவிடம்..
“அதுல என்ன சந்தேகம்.. நம்ம தமிழுக்கு ஒரு விக்ரமன், ஹிந்திக்கு ஒரு கரன் ஜோகர்… எல்லாம் ஒரே குட்டையில ஊறின மட்டை தான்….”
“போடி.. அவுங்க படங்களோட அருமை உனக்கு என்ன தெரியும்…. ஹவ் ரொமான்டிக்… ஹவ் ஃபமலி ஓரியென்டெட்… ஆனா எனக்கும் போசைடனுக்கும் இத வச்சு தான் எவ்வளவு ஆர்கியுமென்ஸ் இருக்கும் தெரியுமா… எங்க நட்பு ஆரம்பிச்சதே அதுல தான்… அவனும் உன்ன மாதிரி தான் என்ன கிண்டல் பண்ணுவான்” என்று அவளின் நட்பை நினைத்து சிலிர்த்தவாரே அந்த கூட்டத்தில் கண்களை ஓடவிட்டபடி முன்னேறினாள் ஜோட்சனா.
“என்னத்த நட்போ…. பத்து வருஷமா உன்ன நேருக்கு நேர் பாக்குற என்ன விடவா, பதினைஞ்சு வருஷமா பாக்காம லெட்டர்ல மட்டும் பிரண்ட்ஷிப் வச்சுருக்க அவனுக்கு உன்ன பத்தி, என்ன தெரிஞ்சுடப் போகுது பெருசா...போடி இவளே...”
“அதான் டி பிரண்ட்ஷிப்…. எங்க லெட்டர் ரைட்டிங்க் சொசைட்டியோட அடிப்படை வேதாந்தமே அது தான்…. இனம், கலாச்சாரம், நிறம், சாதி, மதம்,சமுதாய அந்தஸ்து, பாலினம் எல்லாத்துக்கும் அப்பாற்பட்ட்து நட்பு மட்டுமே! காதல் கூட சில சமயம் இதெல்லாம் பார்க்கும்.. ஆனா நட்பு… இது எல்லாதையும் மீறியது… அதனால் தான் எங்க உண்மையான பேர்கள் கூட எங்களுக்கு தெரியாது.. போசைடன் என்பது அவனோட புனைப் பெயர்… ஏதோ பை சான்ஸ் அவன் தமிழனா போய்டான்.. அதனால ஆரம்பத்துல ஆங்கிலத்துல இருந்த எங்க லெட்டர்ஸ் சமீபகாலமா தமிழ்ல இருக்கு.. எவ்வளவு எஞ்ஜோய் பண்றேன் தெரியுமா?”
“ம்ம்ம்ம்ம் உன் பூனை .. சே சாரி புனைப் பெயர் என்ன மேடம்… ?”
“அரோரா….. “
“என்னது அரோகராவா? “ என்று வாரிய தனது தோழியை இடுப்பில் கை வைத்து முறைத்த ஜோவை…
“சரி சரி…. நோ முண்டக்கன்னி லுக்.. வா வா.. டைம் ஆகிடுச்சு.. உன் பொசகெட்டவன்… சே போசைடன் வந்துட்டானான்னு பார்க்கலாம்..”
“தாரா வேணாம்….”
“சும்மா வா தங்கம்.. தாராவ அப்பறமா தகரடப்பாவாக்குவோம்…”என்று கொஞ்சி தன் தோழியை அழைத்துச் சென்றாள் தாரா..
தாராவுக்குத் தெரியும் இந்த சந்திப்பு தனது உயிர் தோழிக்கு எவ்வளவு முக்கியம் என்று. இதற்காகத்தான் அவள் ஒரு மாதமாக குதூகலத்துடன் காத்திருக்கிறாள். கடந்த சில மாதங்களாக ஜோ தனது புது முதலாளியிடம் சிக்கிக்கொண்டு வதைபடுகிறாள் என்பது தாராவிற்கு நன்றாக தெரியும். அதைப்பற்றி புலம்புவது அவள் இரண்டே நபர்களிம் மட்டுமே! ஒன்று தன்னிடம் மற்றொன்று அவளின் தாய் ராஜியிடம். ஜோட்சனாவின் புலம்பல் வற்றா ஜீவனதி போல! ‘ஷ்ஷ்ஷ் ஹப்பா! ஓடிகிட்டே இருக்கே’ என்று தாரா மனதில் புலம்புவாள். அப்படிபட்ட தருணங்களில் இருந்து ஜோவை மீட்பது ‘போசைனிடமிருந்து’ வரும் கடிதங்கள். எட்டு மாதங்கள் முன் சந்திக்காலாமா? என்று அவன் கேட்ட கேள்விக்கு ‘இப்பொழுது வேண்டாம்’ என்று பதில் அளித்திருந்தாள்.
“ஏன் டி வேண்டாம்னு சொன்ன? பதினஞ்சு வருஷமா அவன் கூட லெட்டர்ல நட்புனு சொல்ற, அப்புறம் என்ன? பயமா அவன் எதாவது சீரியல் கில்லரா இருப்பானோன்னு?” என்று அப்பொழுது தாரா கூட ஜோட்சனாவிடம் கேள்வி எழுப்பினாள்
“ச்சை! அதெல்லாம் இல்ல! எங்க லண்டன் லெட்டர் ரைட்டிங்க் சொசையிட்டி அப்படி எல்லாம் ஆட்கள விசாரிக்காம மெம்பர்ஷிப் தர மாட்டாங்க! என்னவோ இப்ப வேண்டாம்னு தோணுச்சு! அவ்வளவு தான். எப்பவுமே வேண்டாம்னு சொல்லலையே! கொஞ்ச நாள் போகட்டும்னு தான் சொன்னேன்!” என்று கூறினாள் ஜோ! உண்மையும் அதுவே! தனது கடிதத்திலும் அதை குறிப்பிட, போசைடனும் ஏற்றுக்கொண்டான். அவர்களின் நட்பு இந்த எட்டு மாத காலத்தில் முன்னிலும் அதிகமாய் வளர்ந்திருந்தது! ‘இப்ப தோணல’ என்று தாராவிடம் கூறிவிட்டு தனது மாமன் கட்டளையிட்டபடி சென்னை வந்தவளுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்க, அதற்குப் பின் தான் அவளது சோதனை காலமே ஆரம்பமாகியது! புதிய முதலாளி ‘ஜூராசிக் பார்க்’கில் வரும் ராட்சத முதலையாக, அவள் சொப்பனங்களில் வலம் வந்தான்! வேலை தந்த மன அழுத்திலிருந்து அவளை மீட்டது மில்ஸ் அண்ட் பூன்சும், கரன் ஜோஹரும், போசைடனின் கடிதங்களும் தான். (தாராவை ஜோவின் புலம்பல்களிலிருந்து மீட்டது இவைகள் தான்)
இந்தப் ‘போசைடன்’ ஜோட்சனாவின் வாழ்வில் முக்கிய ஒரு அங்கம்… அவனுக்கு உருவமில்லை.. அவன் வடிவை அவள் எழுத்துக்கள் வாயிலாகத்தான் பார்த்திருக்கிறாள்.. இருந்தும் அவனிடம் அவள் பாரட்டிய நட்பு அவள் மனதின் ஒரு பகுதி என்றே சொல்லலாம். இந்த எட்டு மாதத்தில் அவர்களது கடிதங்களின் எண்ணிக்கை அதிகமாகியிருந்தது! மாதம் ஒன்று அல்லது இரண்டு கடிதங்களாக இருந்தது இப்பொழுது மாதம் நான்காக மாறியிருந்தது!
இன்று தான் முதல் முதலாக அந்த எழுதுக்களின் நிஜ வடிவை காணப் போகும் பூரிப்பில், அவளது மாம்பழக் கன்னங்கள் இன்னும் மின்னியதை தாரா கண்டுகொண்டாள்.
மேடையின் பக்கவாட்டில் தான் குறிப்பிட்ட இடத்திற்கு நெருங்க நெருங்க ஜோவின் நடையின் துள்ளல் இன்னும் அதிகமாகியது ..
“ஜே… அங்க பாரு.. மேடை பக்கதுல.. வெள்ளை சட்டை, கையில எல்லோ பலூன்…” என்று நெட்டையாக தங்களுக்கு முதுகை காட்டிக்கொண்டு நின்றவனை காட்டினாள் தாரா.. அவளின் ஐந்து அடி ஏழு அங்குலத்திற்கு சட்டென தெரிந்துவிட்டது.. ஆனால் பாவம் ஜோவின் ஐந்தடி இரண்டு அங்குலதுக்கு எகிறி குதித்தாலும் தெரியவில்லை…
கூட்டத்திலிருந்து கொஞ்சமாக வெளி வந்தவள் அங்கே முதுகைக் காட்டிக்கொண்டு வலது கையில் பலூனும் இடது கையில் உள்ள கைபேசியில் தனது கண்ணுமாக நின்றிருந்தவனின் பின்புற தோற்றத்தை பார்த்தே ஆனந்தத்தில் துள்ளிய அவளது நெஞ்சம் அவன் சுற்றி முற்றி பார்த்தவாரே திரும்பிய போது சடார்ரென்று தடுக்கி விழுந்தது. முக கவசம் அணிந்திருந்தாளும் அவனை அவள் நன்கு அறிவாள். கையில் இருந்த கைபேசியுடன், மெல்ல அவனது முக கவசத்தை லேசாக கீழே தள்ளி, தனது கைப்பேசியில் யாருக்கோ அழைத்தான். இதுவரை அவன் முகத்தில் அவள் பார்த்திராத சிரிப்பு, அவ்வளவு அழகான அந்த சிரிப்பால் அவன் அழகனாக தெரிந்தான்! அனால் அவள் தான் பேய் அறைந்தார் போல் நின்றாள்.
‘இவனா? இவனா போசைடன்?’ என்று தீபாவளி ராக்கெட் போல் மேலே பறந்துகொண்டிருந்த அவள் மனம், புஸ் என்று புஸ்வானமாய் மாறியது…
இது எதுவும் அறியாமல் முன்னேறிய தாராவை அவள் கைகளைப் பிடித்து நிறுத்தி…
“ஏ.. ஏ.. ஏய் தாரா நில்லு… “
“என்னடி.. அதான் அவன் தான்.. நீ சொன்ன டிரஸ் கோட் கூட கரெக்ட்டா தான் இருக்கு.. வெள்ளை சட்டை நீல ஜீன்ஸ் கையில பெருசா எல்லோ பலூன்.. வா வா…”
என்றவளை பேய் அறைந்தார் போல் பார்த்தாள் ஜோட்சனா…. கண்களை இறுக மூடினாள்.. இரண்டு நாட்கள் முன் அவன் அவள் முகத்தின் மேல் குப் குப் என்று ஊதிய சிகரட் புகை அவள் நுரையீரலை இன்னும் பிடித்து கசக்குவது போல் இருக்க… தீடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது அவளுக்கு.
நன்றாக இருந்தவள் திடீரென்று இப்படி மூச்சுவிட சிரமம்படுவதைப் பார்த்த தாரா பயந்து..
“ஹே ஜேஜே.. என்னடி.. என்ன… என்னன்னு சொல்லித் தொலை.. “ என்று அவள் கைகளைபிடித்து அங்கே இருந்த ஒரு கூடாரத்தின் அருகே அமரச் செய்தாள்…
தோளில் தொங்கவிடப்படிருந்த ஒரு ராஜஸ்தானி துணி பையிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து தோழியை அருந்தச்செய்தவள், ஜோட்சனாவின் முதுகை மெல்ல நீவி விட்டாள்..
ஜோட்சனாவின் விழிகள் விரிந்து அரண்டு இருப்பதை பார்த்துவிட்டு..
“என்னடி என்ன ஆச்சு.. அன்சையிட்டி அட்டாக்கா? எதுக்கு இந்த டென்ஷன்… ஹீ இஸ் ஜஸ்ட் அ பிரண்டு.. வா போய் சந்திப்போம்..” என்று திரும்பியவளை ஜோ மீண்டும் கைபிடித்து இழுக்க கேள்வியாய் நோக்கினாள் தாரா..
“தரு… நீ சொன்னது சரி தான்..!!”
“எது??”
“அவன் போசைடன் இல்ல… பொசகெட்டவன் தான்….!!”
“என்னடி லூசு.. புரியிர மாதிரி சொல்லு.. !”
“அது அது.. அவன் அவன்… “
“அவன்?”
“அவன் தான்டி ப்ரித்விராஜ் …” என்றாள் கண்கள் இடுங்கி..
“வ்வ்வ்வாட்?” என்று ‘வாட்’டால் வேட்டு வைத்தாள் தாரா…
‘ம்ம்ம்ம்ம்’ என்று கோலிகுண்டு கண்களை உருட்டி வேகமாக தலையை ஆட்டினாள் ஜோட்சனா…
“தி ப்ரித்விராஜ்…. ?” என்று அவள் கேட்க அவள் கேள்விகளுக்கு எல்லாம் விழி தெறிக்க ஆம் என்று தலையாட்டினாள் ஜோட்சனா..
“யு மீன்.. உன்ன மொக்கனு சொன்னானே…? அவனா?”
தலை ஆடியது..
“நீ ஒரு வேஸ்ட்னு சொன்னானே அவனா?”
மறுபடியும்.. தலையாடியது..
“உனக்கு ரசனையே இல்ல, நீ ஒரு டியுப்லைட்டு, உனக்கு மேல் மாடி காலினு சொன்னானே அவனா?” இப்பொழுது மிக மிக வேகமாக தலை ஆடியது….
ஒரு நிமிடம் ஜோட்சனாவை உறுத்து விழித்த தாரா.. பக்கென்று வயிற்றைப் பிடித்துகொண்டு கெக்கபிக்கே வென சிரிக்க ஆரம்பித்தாள்….
“யு மீன் நீ பதினஞ்சு வருஷமா வச்சுருக்க பென்பால் (penpal) போசைடன் உன்ன பார்த்தாலே வெறுக்கும் உன் பாஸ் ப்ரிதிவிராஜ் நிவேந்தன், அம் ஐ ரைட்?” என்று மீண்டும் சிரிக்க..
ஜோட்சனா முகம் வெளுத்து வெட வெடத்து நடுங்கி ஒடுங்கி அமர்ந்திருந்தாள்..
‘அடியேய் அவன் ஃப்ரண்ட் இல்லடி உனக்கு.. உன்ன தேடி வந்த ஒரண்ட..’ என்றது அவள் மனம்.
எட்டு மாதங்கள் முன்..
“ஹாய் தேவ் அங்கிள்!!!!” என்று கீறிச்சிட்டபடி உள்ளே நுழைந்த ஜோ அப்பொழுதான் கவனித்தாள், அவர் இருந்த நிலையை! லாக்டவுன், பாண்டெமிக் என்று சூழ்ந்திருந்த சமயம் அவளால் பயணம் செய்ய முடியாத நிலையில் இரண்டு மாதங்கள் கழித்து இப்பொழுது தான் தேவராஜை நேரில் சந்திக்கிறாள். அதுவும் கடந்த இரண்டு வாரங்களாக அவரிடம் காணொளியிலோ அலைப்பேசியிலோ கூட சரியாக பேசவில்லை! காரணம்?
இப்பொழுது தான் தெரிந்தது! அவருக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது! அருகில் நின்று கொண்டிருந்த தாய் ராஜியிடம் திரும்பி
“என்ன மா நீங்க கூட சொல்லல? இது மறைக்க கூடிய விஷயமா?” என்று கூச்சலிட்டவள் தேவ்விடம் திரும்பி
“என்ன அங்கிள் இது? எங்கிட்ட ஏன் சொல்லல?”
“நான் தான் தேவையில்லாம கூட்டம் வேண்டாம்னு சொல்லிட்டேன்!” என்றது ஒரு ஆழ்ந்த குரல். அந்த குரல் வந்த திசையில் திரும்பியவள் முன் போர் தளபதியின் நிமிர்வுடன் நின்றான் அவன்.
“பாப்.. ஹ்ம்ம் ஜோட்சனா மா.. இ இ இ இது, இவர், இவன் அதாவது என் ஒரே மகன் ப்ரித்விராஜ் நிவேந்தன்! இனிமே நம்ம சேனல்ஸ் எல்லாத்துக்கும் இவர் தான் சி ஈ ஓ” என்றார் தேவராஜ் சக்ரவர்த்தி!
ஜோட்சனாவின் கண்கள் அதிர்ச்சியில் விரிய நாவல் பழ இதழ்கள் அகழி போல் அகண்டன! ‘என்னது கல்யாணமே ஆகாத தேவ் அங்கிள்கு இவ்வளவு பெரிய பையனா?’ என்று அவள் பேச்சற்று நிற்க, ஒட்டகத்தின் அக்கா மகன் போல் நெடு நெடுவென்று வளர்ந்திருந்தவன், முகத்தில் சிறிது கூட உணர்வுகளை காட்டாமல், காட்டம் மட்டுமே காட்டிய தொனியில்
“நவ் இஃப் யூ டோன்ட் மைண்ட்! இங்க இப்படி கத்தாம நம்ம பேச வேண்டிய விஷயத்தை என் ஆஃபிஸ் ரூம்ல பேசலாம். லெட் அஸ் டேக் திஸ் இன் மை ஆஃபிஸ்” என்று கூறிய படி முன்னே சென்றான்! அன்று அவனை பின் தொடர ஆரம்பித்தவள் அவனின் ஏச்சிற்கும், பேச்சிற்கும், திட்டிற்கும் குட்டிற்கும் நக்கலுக்கும் செவி சாய்த்தபடி பின்னே சென்றாள்.
இன்று அவன் தான் தனது உயிர் நண்பன் போசைடனா!
‘ஜோ என்ன பண்ண போற?’ என்று அவள் நெஞ்சம் கேட்க அங்கே அதே கேள்வியுடன் நின்றிருந்த தாராவை பார்த்து
“வா!” என்று கைபிடித்து அழைத்துக்கொண்டு முன்னேறினாள் ஜோ!
ஆக்டோபர் 2021
அரோரா!
எட்டு மாசத்திற்கு முன்ன நான் கேட்டேன் சந்திக்கலாமானு? நீ வேண்டாம்னு சொன்ன. போன மாசம் நாம சந்திக்கலாம்னு நீ தான் சொன்ன! உண்மையிலேயே நீ மட்டும் தான் என்ன ஏமாத்தமாட்டனு இத்தன வருஷம் நான் நினைச்சுட்டு இருந்தேன்! ஆனா நீயும் என்ன ஏமாத்திட்ட! அன்னைக்கி ராக் ஷோ ஸ்டேஜ் பக்கத்துல நான் காத்துகிட்டுயிருந்த அத்தனை நொடிகளும், இதுவரை நான் உனக்கு எழுதிய கடிதங்களுக்கு நான் செலவிட்ட நேரங்களும் எல்லாம் என் வாழ்கையில நான் செய்த விரையம்! என்ன காக்க வச்சு ஏமாத்திட்ட! இந்த கோபம் எனக்கு எப்ப தணியிதோ அப்ப நான் உனக்கு எழுதறேன். அதுவரைக்கும் எனக்கு நீ எழுதாத!
வழக்கம் போல் என் கேள்வி! ஆனால் பதில் அனுப்பாத!
வை? வை டிட் யூ டூ திஸ்?
இப்படிக்கு ஏமாற்றத்துடன்
போசைடன்.
அதே கைவினைக் காகிதம் ஓரத்தில் ‘பி.என்’ என்ற ஆங்கில எழுத்துக்கள். கடிதத்தை படித்தவளின் உள்ளம் குழம்பி தவிக்க, ஒரு வாரம் முன்பு அங்கே ப்ரித்விராஜை கண்டுவிட்டு தெறித்து ஓடிவந்தது நினைவுக்கு வந்தது! அதன் பின் இரண்டு வாரங்கள் ‘மெடிக்கல் லீவ்’ (மருத்துவ விடுப்பு) எடுத்துக்கொண்டு தலை தெறிக்க வந்தவள் தான். இன்று அவனிடமிருந்து வந்த கடிதம். அவர்களது பதினைந்து வருட நட்பை அந்த கடிதம் முடிவிற்கு கொண்டு வந்திருந்தது!
பதில் வரும்….

Last edited: