இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் [email protected] அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

அழகிய பூகம்பமே காதலடி(டா) - கதை திரி

Status
Not open for further replies.
பூகம்பம் - 10

மும்முரமாக ஆதிரா தோசை வார்த்து கொண்டிருக்க, "முடிஞ்சுதா?" என்று கேட்டவாறு சிவாவும் அவளிடம் வந்தான்.. "ம்ம்ம்ம் மாமா.. குழம்பும் சட்னியும் இருக்கு.. அவங்க சாப்பிட சாப்பிட தோசையை சுட்டரலாம்" என்றவள் சுட்டு வைத்திருந்த தோசையை தட்டில் போட்டு சிவாவிடம் நீட்டினாள்.


துருவினியின் பேச்சை கேட்டிருந்த கோகுல், தட்டுடன் சிவா வருவதை பார்த்து "அண்ணே என்ன இது?" என்று பதறி எழ, "அட ப்ரோ எங்க மாமாவை என்னனு நினைச்சீங்க? அவருதான் எப்பவும் தோசையே சுடுவாருனு உங்ககிட்ட எப்படி சொல்லுவான் நானு" என்று நிலைமையை சகஜமாக்கினாள்.


"வாலு" என்றவாறு அவளின் தலையில் செல்லமாக தட்டிய சிவா "சாப்பிடுடா.. இதுல என்ன இருக்கு" என்று இப்போதும் அதட்டலுடனே கூறினான்.. இல்லையென்றால் மறுப்பதோடும் இல்லாமல் கிளம்பறேன் என்று ஓடி விடுவானே!


கோகுலுக்கு சேர வேண்டிய நிலத்தையும் தன் மகன்களுக்கு பாதியாக வேலுச்சாமி பிரித்து குடுத்து விட்டார் என்பதை அறிந்ததில் இருந்து கோகுலிடம் பேச வேண்டும் என்றிருந்தது சிவாவுக்கு. அவன் மறுக்க மறுக்க விடாமல் தோசையை வைத்த ஆதிரா "சாப்பிடு" என்று கண்களாலே அதட்டினாள்.


ஒரு பக்கம் சிவாவின் நம்பிக்கை.. மறுபக்கம் ஆதிராவின் கள்ளங்கபடமற்ற உரிமை.. வலையில் சிக்கிய மீனாய் இரண்டிற்கும் இடையில் தவித்தவனுக்கு தோசையும் உள்ளிறங்க மறுத்து சண்டிதனம் செய்தது.


"ப்ரோ நல்லா சாப்பிடுங்க.. அப்பதான் என் அக்காவை மாதிரி வர முடியும்" என்று ஆதிராவை நக்கலடித்த துருவினியின் மேல் கரண்டி ஒன்று பறந்து வந்து விழுந்தது..


இளங்கீற்று புன்னகையுடன் கோகுலும் "நீயும் முதல்ல சாப்பிடுமா.. வேகமா காத்தடிச்சா பறந்துட்டு போய்ருவ போல" என்று ஆதிராவை விட்டு குடுக்க மனமில்லாமல் துருவினியை கேலி செய்ய, சிணுங்கலுடன் "போங்க ப்ரோ" என்றாள் துருவினி.


கோகுலின் பாராமுகம் கண்டு உள்ளுக்குள் மருகிய ஆதிராவுக்கு மனது என்னவோ செய்ய, அவன் சாப்பிட்டதும் அங்கிருந்து அகன்றும் விட்டாள் உள்ளிழுத்து கொண்ட நீர்துளிகளுடன்!


தங்கையிடம் சிரித்து பேசுபவன் ஏன் தன்னிடம் மட்டும் அந்நியத்தன்மை காட்டுகிறான் என்று புரியாமல் நடந்தவளுக்கு 'ஒருவேளை அவங்க துருவினியை தான் பார்த்துருப்பாங்களோ? நான்தான் அதைய தப்பா புரிஞ்சுக்கிட்டனோ?' என்று நினைக்கும் போது இதயமே இரண்டாக பிளந்த உணர்வு.


தன்னை மீறி உவர்ந்த உவர்நீரை யாரும் கண்டு விட கூடாது என்பதற்காகவே உள்ளறைக்கு சென்று தாளிட்டும் கொண்டாள்..


பட்டாம்பூச்சியாய் பறந்து

திரிந்தவளை காதல்

என்னும் மாயவலை

கொண்டு வீழ்த்தி..

பின்பு யாரோ போல்

கடந்து செல்கிறாயே

என் மனது என்ன

கல்லால் செய்யப்பட்ட

கற்சிலையா என்ன?

காதலை உணர்ந்த

நொடியே உன் பார்வை

எனக்கானது இல்லை

என்பதை ஏன் அறிந்தேனோ!

காதல்.. காதல்..

இந்த மூன்றெழுத்தில்

அடங்கிய உணர்வுகளின்

வடிகால்கள் தான்

எத்தனையோ..?


அழுக கூறி அவளின் மனது துடிக்க, மாட்டேன் அழுக மாட்டேன் என்று வீம்புடன் கண்ணீர் துளிகளை வீணாக்காமல் உதட்டை கடித்து அழுகையை அடக்கியவாறு அமர்ந்திருந்தாள் ஆதிரா..


ஆதிரா சென்றது கோகுலையும் வருத்தியது தான் அவனும் என்ன தான் செய்வான்? இருதலைக்கொள்ளி எறும்பாய் தவிப்பது வெளியில் தெரிந்து விட கூடாது என்பதில் மட்டும் கவனமாக இருந்தான் கோகுல்.


சிவாவும் கோகுலும் கிளம்பும்போதும் ஆதிரா வெளியில் வராமல் இருக்க, ஏக்கத்துடன் அறைக்கதவில் படிந்தது ஆடவனின் விழிகள் ஒருதடவை என்னை கண்டு விட மாட்டாயா ஆதி என்ற துடிப்பில்!


அமைதியாக அவனுடன் நடந்த சிவா "கேள்விப்பட்டேன்டா.. உன் சித்தப்பாக்கு ஏன் புத்தி இப்படி போகுது?" என்று அவனின் அமைதியை கலைத்தான்..


அதுவரை ஆதிராவின் எண்ணத்தில் இருந்தவன் இக்கேள்வியில் தன்னிலை அடைந்து "என்ன அண்ணே பண்ண முடியும்" என்றான் விரக்தியுடன்.


"உனக்கான உரிமையை நீ கேட்டுருக்கணும்டா.. அப்படியே விட்டது ரொம்ப தப்பு.." - சிவா


"கேட்டா மட்டும் எனக்கு பதில் சொல்லிட்டு தான் மறுவேலை பார்ப்பாரா அண்ணே" - கோகுல்


"அது இல்லடா.." - சிவா


"ப்ச் முடிஞ்சது முடிஞ்சதாவே போகட்டும் அண்ணே.. மறுபடியும் மறுபடியும் அதைய பத்தி பேசுனா நடந்தது இல்லனு ஆகிருமா?" - கோகுல்


"என்னமோ போடா.. இதைய கேள்விப்பட்டதுல இருந்து என்னாலயே ஏத்துக்க முடில.." - சிவா


"இதுதான் நடக்கணும்னு இருந்தா யாரால மாத்த முடியும் விடு அண்ணே.. இனி நடக்கறதை மட்டும் யோசிப்போம்" - கோகுல்


"எந்த பிரச்சனை வந்தாலும் முடிஞ்சதை விட்டுட்டு இனி நடக்கறதை மட்டும் யோசிக்கணும்னு திராவும் சொல்லுவாடா.. அம்மாவை மட்டும் நல்லா பார்த்துக்கடா.." என்று சிவா கூறியதை கேட்டு 'இதைய என்கிட்ட சொன்னதும் அவங்க தான் அண்ணே' என்று நினைத்து கொண்டவன் பதிலாக புன்னகையை மட்டும் அளித்தான்..


தான் கேள்விப்பட்டதை எப்படி கூறுவது என்று பலவிதமான எண்ணங்களில் சிறைப்பட்டிருந்த சிவா பின்பு ஒரு முடிவுடன் "கோகுல் சொல்ல கூடாது தான் இருந்தும் சொல்லாம விடறதுக்கு மனதும் வரல" என்று பீடிகையுடன் நிறுத்தினான்.


சிவாவின் பீடிகையில் 'தான் ஆதியை பார்த்தது இவர்களுக்கும் தெரிந்து விட்டதோ?' என்ற அச்சத்தில் எக்கச்சக்கமாக எகிறி துடித்த இதயதுடிப்பை அடக்கும் வழியின்றி படபடத்தவன் கையை இறுக்க மூடி கொண்டான்.


"உங்க சித்தப்பா நிலத்தை எல்லாம் பெரிய தொகைக்கு விக்கலாம்னு இருக்காருடா.. அப்பாகிட்ட இந்த விசயமா பேசிருக்காரு.. அப்பாக்கும் மனசு கேட்காம வீட்டுல வந்து புலம்பிட்டு இருந்தாருடா.." என்று தான் கூற நினைத்ததை எப்படியோ கூறியும் விட்டான் சிவா.


ஆதியை பற்றி இல்லை என்று கோகுல் பெருமூச்சு விட்டு கொண்டாலும் விடயத்தை கேள்விப்பட்டதும் வலிக்க தான் செய்தது.


தனக்கு உரிமையான ஒன்றை மற்றவர்களுக்கு விட்டு குடுத்து விலகி நிற்க முயற்சித்தாலும் முடியவில்லையே இவனும் சாதாரண மனித பிறவி தான்.. அனைவருக்கும் ஏற்படும் வலியும், இது எனக்கானது என்ற உரிமையுடம் வரும் பொறாமையும் அவனுள் எழுந்ததும் உண்மையே.


ஏதோ யோசித்தவன் "அண்ணே அவங்க யாருக்கு விற்கறாங்கனு தெரிஞ்சா எனக்கு சொல்லுங்க அண்ணே.. அவங்க நிலம் எனக்கு தேவை இல்லை.. அப்பா இருந்த வரைக்கும் அவரோட சந்தோசமோ துக்கமோ எதுவா இருந்தாலும் அவருக்கான நிலத்துல தான் முறையிடுவாரு.."


"சொல்ல போனா அவரோட அதிகபட்ச ஆசையே பாதி நிலத்துல வீடு கட்டி அங்கயே இருக்கணும்னு தான்.. என்னால இப்ப அவரோட ஆசையை நிறைவேத்த முடிலனாலும் எதிர்காலத்துல நிறைவேத்துவேன் அண்ணே.." என்றான் குரல் கம்ம.


"டேய் அந்த நிலமே உனக்கானதுடா.. நீ ஏன்டா மத்தவங்க கிட்ட கேட்டு வாங்கணும்.. உன் சித்தப்பா என்ன பெரிய ஆளா? உனக்கான நிலத்தை உரிமையோட கேட்கறதுக்கு என்னடா? அப்பா வரட்டும் இதுக்கு என்ன பண்ணலாம்னு கேட்கலாம்" என்று சீறினான் சிவா.


மறுத்து தலையசைத்த கோகுல் "இப்ப நான் அந்த நிலத்தை போராடி வாங்குனாலும் மனசார குடுப்பாங்கனு நினைக்கறீங்களா? மாட்டாங்க அண்ணே.. மத்தவங்க சாபத்தோட அந்த நிலத்தை வாங்கறதுக்கு எனக்கு விருப்பமில்லை அண்ணே.. எனக்காக நான் கேட்டதை மட்டும் பண்ணுங்க போதும்.. சித்தப்பா என்ற உறவு இப்படியே இருந்துட்டு போகட்டும்" என்றான் முடிவாக.


கோகுலின் முடிவில் சிவாவுக்கு உடன்பாடு இல்லையென்றாலும் வேறு வழியின்றி அவனின் பேச்சுக்கே தலையாட்டி வைத்தான்.. சிவாவின் மனநிலையை மாற்ற நினைத்து இப்பேச்சிலிருந்து வேறு பேச்சுக்கு கோகுல் தாவிட, மனமிட்டு பேசியவாறு நடந்தனர் இருவரும்..


சிறுவயது குறும்புடன் சிவாவை கேலி செய்து சிலபல செல்ல அடிகளையும் பரிசாக பெற்று கொண்டான் கோகுல்..


ரத்தபந்த உறவிடம்

மட்டும் தான் உரிமை

இருக்குமென்று

யார் சொன்னது?

சொன்னவரிடம் கூறி

விடுங்கள் எங்களின்

உறவும் ரத்த

பந்தமில்லை உரிமையும்

உடன்பிறந்தது

இல்லை என்று!


சிவா சென்றதும் ஆதிராவின் சுருங்கிய முகம் மனக்கண்ணில் வந்து கோகுலை இம்சை செய்ய, பேசுவோமா? என்று பலவாறாக போராட்டம் நடத்தி அதன்பின்பு தான் அவளிடம் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளதா? என்று பார்த்தான்.


ஆடவனின் எண்ணத்தை பொய்யாக்காமல் ஆதிராவின் குறுஞ்செய்தி அவனை ஈர்க்க, "ஆர் யூ ஓக்கே??" என்று பெண்ணவளுக்கு அனுப்பி விட்டான் குறுஞ்செய்தியுடன் கலந்த அவனின் தவிப்பை!


ஐந்து நிமிடங்கள் கடந்தும் மறுமொழி வராமல் போக, சோர்ந்த முகத்துடன் பெண்ணவளின் புகைப்படத்தையே இவன் வெறித்திட, அதே நேரம் ஆதிராவும் ஆண்மகனின் குறுஞ்செய்தியை வெறித்திருந்தாள்.


'ஆதி' என்று இவன் முணுமுணுத்த சமயம் அவளிடம் இருந்து ம்ம்ம்ம் என்ற பதில் மட்டும் இவனை வந்தடைய, மகிழ்வில் இதழை வளைத்ததில் கன்னங்குழியும் சேர்ந்தே விழுந்தது.


"ஏன்மா ஒரு மாதிரி இருந்தீங்க?" - கோகுல்


"நத்திங்.. நான் நல்லா தான் இருக்கேன்.." - ஆதிரா


"இல்லயே.. ஏதாவது பிரச்சனையா?" - கோகுல்


"ஹூம் அதெல்லாம் இல்ல.." - ஆதிரா


"அப்பறம் ஏன் உங்க முகம் சோர்ந்து இருந்துச்சு" - கோகுல்


'எல்லாம் உன்னால தான்' என்று கூற தான் நினைத்தாள் இருந்தும் எப்படி முடியும் அவளால்! வலி மிகுந்த மனதுடன் "நீங்க ஏன் என்கிட்ட பேசல?" என்று கேட்க, அவளின் வினாவில் திகைத்தவனுக்கு என்ன பதில் கூறுவதென்றே புரியவில்லை.


"நீங்க துருவினி கூட தான் பேசுனீங்க அவ கூடவே எப்பவும் பேசிக்கங்க.. நான் எப்படி இருந்தா என்ன உங்களுக்கு?" என்று மனதை தைத்த கேள்வியை அவன்முன் வைத்தவளுக்கு கண்ணீரும் சேர்ந்து வந்தது.


தன்னை மீறி "ஆதி" என்றழைத்து விட்டான்.. அழைத்து விட்டான்.. அவனின் விலகல் எதற்கென்று புரியாமல் பேசும் பெண்ணவளுக்கு என்ன விளக்கம் கூறி சமாளிப்பான்.


"நான் அப்ப சொன்னது தான் இப்பவும் சொல்றேன்.. நீ எப்பவும் எனக்கு ஸ்பெஷல் தான்மா.." என்றவனுக்கு ஒருபுறம் சந்தோசமாக இருந்தாலும் மறுபுறம் காரணமின்றி கவலைகளும் ஆட்கொண்டது.


ஆடவனின் பதிலை கருமணிகள் விரிய ஆதிரா பார்த்திருக்க, இவ்வளவு நேரம் ஆட்கொண்ட இம்சைகள் சட்டென்று அகன்றது போன்ற உணர்வு.


"அப்பறம் ஏன் பேசல?" - ஆதிரா


"உங்களுக்கு பேசாதது தான் கவலையா? சரி இனி உங்க கூட மட்டும் பேசறேன் போதுமா?" - கோகுல்


"நிஜமா? நான் ஏதாவது உங்களைய ஹார்ட் பண்ணிட்டனா?" - ஆதிரா


"இல்லயே.. நீங்க எதுக்கு என்னைய கஷ்டப்படுத்தணும்?" - கோகுல்


"திடீருனு நீங்க பேசாம போனது ஒரு மாதிரி ஆகிருச்சு.." - ஆதிரா


"ஹஹஹ இனி பேசறேன் போதுமா?" - கோகுல்


"ம்ம்ம்ம்.." - ஆதிரா


"ம்ம்ம்ம்" - கோகுல்


அடுத்து என்ன பேசுவதென்று இருவருக்கும் தெரியவில்லை.. ஆதிரா தான் "பாட்டி எப்படி இருக்காங்க?" என்று வினவ, "மோசம்னு சொல்ல முடியாது அதுக்குனு நல்லா இருக்காங்கனும் சொல்ல முடியாதுடா.. வயசாகிருச்சுல" என்றான் எதார்த்த நிலையுடன்.


"நீங்க இதனால தான் வந்தீங்களா?" - ஆதிரா


"ம்ம்ம்ம் ஆமாடா.." - கோகுல்


"வொர்க் இல்லயா?" - ஆதிரா


"இருக்குமா.. அது இல்லாம போகுமா என்ன?" - கோகுல்


"அதுவும் உண்மைதான்" - ஆதிரா


"நீங்க காலேஜ் முடிச்சுட்டிங்களா?" - கோகுல்


"ஹலோ நாங்களும் வொர்க் தான் பண்றோம்.. துருவினியே இந்த வருசம் படிப்பை முடிக்க போறாளாக்கும்.." - ஆதிரா


இதை நேரில் இருந்திருந்தால் எவ்வாறு ஆதிரா கூறி இருப்பாள் என்று நினைக்கும் போதே புன்னகை அரும்புவதை அவனால் தடுக்க இயலவில்லை.


"ஓஹோ சண்முகம் பெரிய இடம் தான் போல.." என்றிட, "ஹய்யோ" என்று வெக்க ஸ்மைலிகளுடன் பதில் வந்தது பெண்ணவளிடம் இருந்து.


வாய்விட்டு சிரித்த கோகுல் "அப்பறம்..." என்று முடிவடையாத புள்ளிகளுடன் அனுப்ப, ஆதிராவும் "ம்ம்ம்ம்ம் அப்பறம்.." என்றாள் வினாவுடன்..


இருவருக்கும் பேச வானளவு ஆசை இருந்தாலும் இருக்கும் சூழ்நிலை கருதி பேச்சை வளர்க்கவும் விரும்பவில்லை..


"அப்பறம் பேசறேன்மா" - கோகுல்


"ம்ம்ம்ம்" - ஆதிரா


"ம்ம்ம்ம்" - கோகுல்


"பேசுவீங்களா?" - ஆதிரா


"ம்ம்ம்ம்ம்" - கோகுல்


"நம்பலாமா??" - ஆதிரா


"ம்ம்ம்ம்" - கோகுல்


"ப்ராமிஸ்??" - ஆதிரா


"என்னைய நம்ப மாட்டியா ஆதி" - கோகுல்


"ஆதி" என்று முதல் தடவையாக அவன் அழைக்கும் போது அவன் மீதிருந்த கோவத்தில் அவ்வளவாக கவனிக்கவில்லை.. இம்முறை உண்மையிலே திக்குமுக்காடி ஆதியா? என்ற திகைப்புடன் "நம்பறேன்" என்றாள் ஒரே வார்த்தையில்.


திடீரென்று ஞாபகம் வந்தவளாக "நான் நாளைக்கு கிளம்பிருவேன்" என்றிட, நாளைக்கேவா? என்று அதிர்ந்தவன் அவளின் வருகையை எதற்கென்று சிவாவின் மூலம் அறிந்திருந்தாலும் "ஏன்மா?" என்று கேட்டான்.


"நாளைக்கு அப்பா அம்மா எல்லாம் வந்துருவாங்கனு நினைக்கறேன்.. அவங்க வந்துட்டா எனக்கு இங்க என்ன வேலை?" - ஆதிரா


"ம்ம்ம்ம் பார்த்து போங்கடா" - கோகுல்


"இதைய கிளம்பும்போது சொல்லுங்க" - ஆதிரா


"சொல்லிருவோம்" - கோகுல்


"ம்ம்ம்ம்" - ஆதிரா


"கிளம்புட்டுமா?" - கோகுல்


"ம்ம்ம்ம்ம்" - ஆதிரா


"ம்ம்ம்ம்ம்" - கோகுல்


இன்னும் சிறிது நேரம் பேசேன் என்று வந்த ஏக்கங்கள் நிறைந்த ம்ம்ம்ம் என்ற வார்த்தையை மற்றவர்கள் உணர்ந்து கொள்வார்களோ என்ன?


ஒருவரின் உணர்வை இன்னொருவர் உணரும்போது இந்த ஏக்கத்தை மட்டும் புரிந்து கொள்ளாமல் விடுவார்களா என்ன? புரிந்தும் சூழ்நிலைக்காக அவர்களின் ஏக்கங்களை ஓரம் கட்டினர்.


மனதளவில் ஏக்கங்கள் நிறைத்திருந்தாலும் அவனி(ளி)டம் பேசி விட்டோம் என்ற மனநிறைவான புன்னகை இதழில் உறைந்திருந்தது இருவரிடமும்!


தமக்கையின் அலைப்பேசியில் என்னமோ செய்திருந்த துருவினிக்கு கோகுலுடன் பேசியது கண்ணில் பட, இவங்க கூட இவ பேசுவாளா? என்ற அதிர்ச்சியில் உறைந்தாள்.


'ஆனா இங்க வந்தப்ப ரெண்டு பேரும் பேசிக்கலயே?' என்ற குழப்பமே அவளை ஆட்கொள்ள, 'இந்த திரா புள்ள என்ன பண்ணுது ஏது பண்ணுதுனு புரிலடி.. உன் திருட்டு தனத்தை என்கிட்டயே மறைக்கறீயா?' என்று மனதினுள் கருவினாள் துருவினி.


பூகம்பம் - 11
அடுத்த நாளே ஆதிராவும் துருவினியும் கிளம்பி விட்டனர். அன்றிரவு கோகுலின் பாட்டியும் தவறி விட, இருவரும் பேசி கொள்ள நேரமும் அமையவில்லை.


தமக்கையிடம் நேரம் பார்த்து பேச காத்திருந்த துருவினிக்கு நேரமும் அமைந்தது. அன்று பெற்றவர்கள் ஏதோ வேலையென வெளியில் சென்றிருக்க சுழலும் மின்விசிறியை பார்த்தவாறு ஆதிரா படுத்திருக்க, "திரா" என்று அவளை இடித்தபடி படுத்தாள் துருவினியும்.


"பிசாசே அதான் அவ்வளவு இடம் இருக்குல்ல?" - ஆதிரா


"இப்ப இதுவா முக்கியம்.. ப்ச் நான் ஒரு விசயம் சொல்லணும்டி" - துருவினி


"அப்படி என்னத்த நீ சொல்ல

போற?" - ஆதிரா


"ரொம்ப முக்கியமான விசயம்" என்ற துருவினி எழுந்தமர்ந்து வெக்கப்படுகிறேன் என்ற பேர்வழியில் உடலை நெளித்தாள்.


"ச்சை என்ன கருமம்டி இது?" - ஆதிரா


"வெக்கம்டி வெக்கம்.." - துருவினி


"எதே? வெக்கமா? வராததை எல்லாம் எதுக்கு வா வானு கூப்பிட்டு என் உயிரை வாங்கிட்டு இருக்க?" - ஆதிரா


"ப்ச்ச் திரா.. ஐ திங்க்.." என்று துருவினி இழுக்க, 'இது அதுல?' என்று யாரடி நீ மோகினி படத்தின் காட்சியை நினைவு கூர்ந்தவள் பெருமூச்சுடன் 'பைத்தியம் முத்திருச்சு இதுக்கு' என்று நொந்து கொண்டாள்.


தமக்கையை விடாமல் "திரா.. ஐ திங்க்.." என்று அவளை உலுக்க, 'கஷ்டம் காலம்டி ஆதி' என்று நினைத்து அஷ்டகோண முகத்துடன் "யூ திங்க்.." என்றாள் விதியை நொந்து.


"ஐ திங்க்.." - துருவினி


"யூ திங்க்.." - ஆதிரா


"திரா.." - துருவினி


"ம்ம்ம்ம்ம்" - ஆதிரா


"ஐ திங்க்.." - துருவினி


"யூ திங்க் என்னனு சொல்லி தொலைடி பிசாசே.." - ஆதிரா


"ஐ லவ்.." - துருவினி


"ஹே ஸ்டாப் ஸ்டாப்.. ஐ லவ் யூ னு என்கிட்ட சொல்லிராதடி.. சேம் சேமா போய்ரும்" என்று தங்கையை முழுவதும் கூற விடாமல் ஆதிரா தடுத்திட, கடுப்பான துருவினி பாராபட்சம் பார்க்காமல் அவளை மொத்தினாள்.


தங்கையை சமாதானப்படுத்தும் விதமாக மனமிறங்கிய ஆதிரா "சரி சரி சொல்லு.. யூ திங்க்.." என்று அவள் கூறியதை போலவே வினவி என்னவென்று கேட்க, "ஐ லவ் கோகுல்.." என்றவள் முகத்தை மூடி கொண்டாள்.


ஆதிரா திகைப்பாள் என்று நினைத்த துருவினியின் எண்ணத்தை பொய்யாக்கி எவ்வித திகைப்பான பாவனையுன்றி "அப்படியா? வாழ்த்துக்கள் பேபி.. மறக்காம டிரீட் வெச்சுரு" என்றதோடு நிற்காமல் தங்கையின் கையை பிடித்தும் குலுக்கினாள்.


கடைசியில் துருவினி தான் அதிர்ந்த நிலைக்கு சென்று ஆதிராவை ஙே வென விழித்து பார்க்க, அவள் தன்னிடம் விளையாட நினைக்கிறாள் என்பதை முதலிலே ஆதிராவும் உணர்ந்திருந்ததால் தான் சாதாரணமாக பதிலளித்தாள்.


"நீ என்ன சொன்ன?" - துருவினி


"டிரீட் வெக்க சொன்னேன் பிசாசு" - ஆதிரா


"எதே?" - துருவினி


"புஜ்ஜிமா காதலிக்கறது தப்பு இல்லமா.." என்று ஆதிரா பேச்சை தொடங்கிய நேரம் சரியாக காவ்யாவும் அங்கு வந்தாள்.


"என்னமோ காதல்னு பேசிட்டு இருந்தீங்க என்னது?" என்று கேட்டவாறு அவர்களின் அருகில் அமர, "அட வா வா காவு.. நம்ம துரு தங்கம் லவ் பண்ணுதாமா.. இப்பதான் என்கிட்டயே சொன்னா.." என்றதும் காவ்யா வாயை பிளக்க, கண்ணடித்து சிரித்தாள் ஆதிரா.


அதன்பிறகு தான் அது பொய்யென்று உணர்ந்த காவ்யா ஓஹோ என்ற கேலியுடன் "வாவ் வாழ்த்துக்கள் தங்கமே.. நீதான் முதல்ல கமிட் ஆகிருக்க.. சோ அக்காவுக்கு மறக்காம டிரீட் வெச்சுரு" என்றவாறு கன்னத்தை கிள்ளினாள்.


"இங்க பாரு புஜ்ஜிமா காதலிக்கறது தப்பு இல்லை.." - ஆதிரா


"அதைய மறைக்கறதும் தப்பு இல்ல தங்கம்.." - காவ்யா


"ஆனா அந்த காதலுக்காக நீதான் போராடணும்" - ஆதிரா


"ஆமா தங்கம்.. வீட்டுல வேணாம்னு தான் சொல்லுவாங்க" - காவ்யா


"ஏன் நாலு மிதியும் கூட இலவசமா குடுப்பாங்க" - ஆதிரா


"அதைய எல்லாம் தாங்கிட்டு அவங்க தான் வேணும்னு அடம்பிடிச்சு சம்மதம் வாங்கணும்" - காவ்யா


"உன் கல்யாணத்துக்கு கையெழுத்து போட கூட நான் வர்றேன்" - ஆதிரா


"ம்ம்ம் ஆமாடா அதுவும் வீட்டுக்கு தெரியாம வந்து உன் கல்யாணத்தை நடத்தி வெப்போம்.." - காவ்யா


"அதுக்கு பதிலா உன் பேபிக்கு எங்க பேரை வைக்கணும்.." - ஆதிரா


"ஆமா தங்கம் நாங்க செஞ்ச உதவிக்கு பரிகாரமா உன் குழந்தைக்கு எங்க பேரை வெச்சு எங்களைய நீ பூஜிக்கணும்" - காவ்யா


"யூ டோன்ட் வொரி புஜ்ஜிமா.. நாங்க இருக்க பயமேன்" என்று தங்கையை ஆதிரா அணைக்க, அதில் தான் சிலைக்கு உயிர் வந்ததை போல் பக்கென்று திகைப்பில் இருந்து முழித்த துருவினி "நீங்க இருக்கறது தான்டி எனக்கு பயமா இருக்கு" என்றாள் கதறலுடன்.


"பாவி பாவி நான் ஒரு வார்த்தை தான் சொன்னேன் நீங்க என்னடானா என் குழந்தை வரைக்கும் போய்ட்டிங்க.. விட்டா என்னைய நீங்களே எவன் கூடயோ துரத்தி விட்டுருவீங்க போல" என்று மூச்சு வாங்க பொரிந்தாள் துருவினி.


"அப்படி இல்ல தங்கம்.." என்று பேச வந்த காவ்யாவை விடாமல் "தெய்வமே வேணாம்.. நான் எவனையும் லவ் பண்ணல.. நல்லா இருக்கற என்னைய வீட்டுல செருப்படி வாங்க வெச்சராதீங்க" என்று பதறினாள்.


"அப்ப உன் லவ்வு.." - ஆதிரா


"நான் எப்ப லவ் பண்ணுனேன்" - துருவினி


"நீதான்டி இப்ப சொன்ன.." - ஆதிரா


"நீ எல்லாம் அக்காவா?" - துருவினி


"எஸ் பேபி மீ அக்கா.. யூ தங்கச்சி.. இதுல என்ன டவுட்டு.." - ஆதிரா


"எல்லாமே சந்தேகம் தான்.. நான் நேராவே கேட்கறேன்.. எப்ப இருந்து நீ கோகுல் கூட பேசிட்டு இருக்க?" என்று இடுப்பில் கை வைத்து துருவினி முறைக்க, "கோகுலா? அது யாருடி?" என்று புரியாத பாவனையை வெளியிட்டாள் ஆதிரா.


'அடிப்பாவி என்னமா நடிக்கறா.. நடிகர் திலகத்துக்கே டஃப் குடுப்பா போல' என்று உள்ளுக்குள் காவ்யா திகைத்தாலும் "யாருடி அது?" என்று புரியாதது போல் ஆதிராவிடம் வினவினாள்.


"எனக்கும் தெரில காவு.. இவளுக்கு என்னமோ ஆகிருச்சு.. ஒருவேளை கனவு ஏதாவது கண்டுட்டு வந்து பேசறாளோ?" என்று அப்படியே திருப்பி துருவினியை குழப்பி விட்டு "துரு தங்கம் உனக்கு என்னமா ஆச்சு?" என்று பாசமாக அவளின் தலையை வருடினாள்.


ஆதிராவின் பேச்சில் நிஜமாக துருவினிக்கு ஒன்றும் புரியவில்லை.. தான் கண்டது நிஜமா? பொய்யா? என்ற குழப்ப நிலைக்கே சென்றிருந்தாள்.


இன்னும் இங்கிருந்தால் தன்னை பைத்தியமாக்காமல் விட மாட்டார்கள் என்பதை அறிந்து "ச்சீ போங்கடி" என்று கோவமாக செல்வதை போல் துருவினி ஓடியே விட, இவ்வளவு நேரம் சிரிக்காததை போல் நடித்திருந்த இருவரும் வாய்விட்டு சிரித்து ஹைபை குடுத்து கொண்டனர்..


"அய்யோ அய்யோ பாவம்டி புள்ள" - காவ்யா


"பெரிய சிபிஐ னு நினைப்பு.. என்னைய கண்டுபிடிக்க வந்துட்டா.." - ஆதிரா


"ஹஹஹ உன் முடிவுல உறுதியா இருக்கறப்ப துரு கிட்ட சொல்றதுக்கு என்ன?" - காவ்யா


"அட போ லூசு.. இங்க நான்தான் அவன் வேணும்னு நிற்கறேன்.. அவன் மனசுல என்ன இருக்குனு இப்ப வரைக்கும் எனக்கு புரிலடி.. இந்த லட்சணத்துல நான் இவகிட்ட எப்படி சொல்றது?" - ஆதிரா


"அவங்க பேசுனாங்களா?" - காவ்யா


"இல்லவே இல்லடி.. அன்னைக்கு நான் நிஜமா பேசுவீங்களானு கேட்டப்ப என்னைய நம்ப மாட்டியானு கேட்டாங்கடி" - ஆதிரா


"ஹஹஹ புலம்பு புலம்பு.. இன்னும் புலம்பு.. எனக்கு சந்தோசமா

இருக்கு" - காவ்யா


"அடிப்பாவி" என்று தலையணையை கொண்டு அவளை ஆதிரா மொத்திட, "நீ அடிச்சாலும் உதைச்சாலும் நோ ப்ராப்ளம் திரா செல்லம்" என்று அவளுக்கு போக்கு காட்டிவிட்டு அறைக்குள் ஓடினாள் காவ்யா.


"என் லவ்வு முதல்ல செட்டாகட்டும் அப்பறம் பார்த்துக்கறேன்" என்ற ஆதிரா முகத்தை தூக்கி வைத்து கொண்டாள்..


"நீ எப்படி வேணாலும் இரு அது எல்லாம் எனக்கு கவலையில்ல.." - காவ்யா


"ஆமா நீ மொதல்ல எதுக்கு இங்க வந்த?" - ஆதிரா


"அடிப்பாவி வீட்டுக்கு வந்தவ கிட்ட கேட்கற கேள்வியா இது?" - காவ்யா


"நடிக்காம என்ன விசயம்னு சொல்லு" - ஆதிரா


"கொடுமையின் உச்சம்.. ப்ரெண்ட்ஸ் எல்லாரும் இந்த மன்த்ல ஒரு நாள் ஊட்டிக்கு போலாம்னு சொல்லி ப்ளான் பண்ணிருக்காங்க ரெண்டு நாளைக்கு முன்னாடி" - காவ்யா


"வாவ் குட் நியூஸ்.." - ஆதிரா


"ஐடியா குடுத்தது ரஞ்சித்" - காவ்யா


"பேட் நியூஸ்.." - ஆதிரா


"அதான் போலாமா? வேணாமானு யோசிக்கலாம் வந்தேன்.." - காவ்யா


'எதே? இவ யோசிக்க வந்தாளா?' என்று பைத்தியத்தை போல் அவளை பார்த்த ஆதிரா "ஏன் மேடம் அங்க இருந்து யோசிச்ச உங்க மூளை யோசிக்க மாட்டேனு சொல்லுதா?" என்றாள் நக்கலுடன்.


"அப்கோர்ஸ்" - காவ்யா


"த்தூ த்தூ" - ஆதிரா


"நீ இல்லாம நான் எங்க போயிருக்கேன் சொல்லுடி போலாமா? வேணாமா?" - காவ்யா


"எதுக்கு நம்ம ரஞ்சித்தை கண்டு பயப்படணும்.. போலாம்டி.. போய் என்ஜாய் பண்ணலாம்.." - ஆதிரா


"டன் டன் டன்.." என்று மகிழ்ச்சியில் ஆதிராவை அணைத்து கொண்டு காவ்யா சுற்ற, "அட லூசே" என்று அவளை விலக்க முயற்சிப்பதை போல் நடித்த ஆதிராவுக்கும் ஏகப்போக ஆனந்தமே.


பாட்டிக்கு செய்ய வேண்டிய சடங்குகள் அனைத்தையும் முடித்த பின்னர் தான் தாயும் மகனும் பெங்களூருக்கு கிளம்பினர்.. நிலத்தை பற்றி வேலுச்சாமியிடம் பேசுகிறேன் என்று நின்ற சிவாவையும் வீரச்சாமியையும் சமாளிக்கவே அவன் ஒருவழியாகி இருந்தான்.


அதுதன் உரிமை என்று அவன் மனது எடுத்துரைத்தாலும், ஏனோ அவர்களிடம் சண்டையிட்டு வாங்கவும் மனதில்லாமல் போனது.. இருக்கும் காலம் வரை தந்தையின் ஒரே ரத்தபந்த உறவிடம் சொந்தமாக இருந்து விடலாம் என்பது தான் அவன் மறுக்க முதல் காரணம்.


விடுமுறை எடுத்ததால் பெங்களூருக்கு சென்றதும் வேலை விடாமல் அவனை துரத்த, உறங்குவதற்கும் நேரமின்றி அலைந்து கொண்டிருந்தான் கோகுல்.


அவ்வப்போது ஆதிராவின் ஞாபகங்களும் அவனுள் எழும்.. ஆனால் அவளிடம் பேச தான் நேரமின்றி வேலையே அவனை ஆட்கொள்ள, அவனும் என்னதான் செய்வான்?


இரண்டு வாரங்களுக்கு பின்னர் மாலை நேரத்தில் சாய்வு நாற்காலியில் காப்பி கோப்பையுடன் சாய்ந்து அமர்ந்திருந்த ஆடவனின் விழிகள் சூரியன் மறையும் காட்சியிலே பதிந்திருந்தாலும் எண்ணம் அனைத்தும் பெண்ணவளை பற்றியே இருந்தது.


'பேசறேனு சொல்லிட்டு பேசாம விட்டுட்டனே? என்ன நினைப்பாங்க?' என்று பலவித வினாக்கள் அவனின் மூளையை குடைந்தது..


"ஹாய்மா" என்று அனுப்பி விட்டு அவளின் பதிலுக்காக காத்திருந்தான்.. நேரங்கள் தான் கடந்து சென்றதே தவிர எதிர்மொழி வராமல் போக, "சாரிமா பாட்டி இறப்பு.. வேலைனு ரொம்ப பிஸியாகிட்டேன்" என்று தன்னிலையை உரைத்து மன்னிப்பும் கோரினான்.


ஆதிரா பதிலுரைக்க ஆன்லைனில் இள்லையே.. பெற்றோருடன் கோவிலுக்கு சென்றிருந்தாள்.. வீட்டிற்கு வந்ததும் தான் ஆடவனின் குறுஞ்செய்தியை இமைகள் சிமிட்டாமல் கண்டவளுக்கு சொல்லவொண்ணா ஆனந்தம்.


"சாரி நான் கோவிலுக்கு போய்ட்டேன்" என்று தன்னிலையை இவளும் எடுத்துரைத்து ஆடவனின் வார்த்தைக்காக காத்திருக்க, அப்போது தான் உண்டு விட்டு பால்கனிக்கு வந்தவன் அந்நேரத்தில் அவன் ஆதியின் குறுஞ்செய்தியை எதிர்பார்க்கவில்லை.


"பரவால்லமா.. எப்படி இருக்கீங்க? வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா?" - கோகுல்


"எல்லாரும் சூப்பரா இருக்கோம்.. நீங்களும் அம்மாவும் எப்படி இருக்கீங்க?" - ஆதிரா


"நல்லா இருக்கோம்டா.." - கோகுல்


"வேலை அதிகமா?" - ஆதிரா


"ம்ம்ம் ஆமாடா.. லீவு எடுத்தேனு வெச்சு செஞ்சுட்டாங்க" - கோகுல்


"அச்சோ பாவம் தான் நீங்க.." - ஆதிரா


"உங்க வொர்க் எப்படி போகுது" - கோகுல்


"அது பாட்டுக்கு போகுது.. பட் வீக் எண்ட்ல மட்டும் ஜாலியா இருக்கும்" - ஆதிரா


"ம்ம்ம்ம்ம் என்ஜாய்டா" - கோகுல்


"ம்ம்ம்ம்" - ஆதிரா


"அப்பறம்..?" - கோகுல்


"ம்ம் அப்பறம்.." - ஆதிரா


இருவரின் தவிப்பான மனநிலைக்கு இடையில் 'அப்பறம்..?' என்ற வார்த்தை சிக்கி தவிக்க, அதை முடிவுக்கு கொண்டு வரும் மனநிலையில் இருவரும் இல்லை..


சட்டென்று ஆதிராவுக்கு தான் துருவினி தன்னிடம் பேசியது ஞாபகம் வர, விளையாடி தான் பார்ப்போம் என்ற முடிவில் "ஐ திங்க்.." என்றனுப்பினாள்.


இதை பார்த்து ஒன்றும் விளங்காமல் "என்னமா..?" என்று கோகுல் கேட்க, 'இவனை வெச்சுக்கிட்டு..? அய்யோ அய்யோ' என்று கட்டலில் முட்டி கொண்டவள் மறுபடியும் "ஐ திங்க்.." என்று அனுப்பி விட்டாள்.


"என்னமா? என்னது?" - கோகுல்


"ஐ திங்க்.." - ஆதிரா


"அட என்னமா ஆச்சு?" - கோகுல்


"ப்ச்.. ஐ திங்க்.." - ஆதிரா


"சொல்லுமா என்ன?"


"ஐ லவ்.." என்று முழுவதையும் கூறாமல் பாதியில் நிறுத்தி அனுப்பி விட, கோகுலுக்கு தான் இதயம் தாறுமாறாக துடிக்க தொடங்கியது.. 'வேணாம் ஆதி..' என்று நினைத்தவாறு பதற்றத்துடன் "என்னமா?" என்றான் வினாக்குறியுடன்.


'ச்சை இவன்கிட்ட போய் இப்படி பேசுனேன்ல என் தப்புதான்' என்று தன்னவனை முடிந்தளவுக்கு திட்டியவள் மறுபடியும் "ஐ லவ்.." என்று முடிக்காமல் அனுப்பினாள்..


"என்ன ஆதி?" என்று கோகுல் வினவ, ஆதியா..? என்று குதூகலித்து "ஐ லவ் பிரியாணி" என்றவள் வெக்க ஸ்மைலிகளை கணக்கின்றி அனுப்பினாள்.


'அட ஆதிமா..' என்று அவளின் விளையாட்டுதனத்தில் சிரித்து கொண்டவனுக்கு இளங்கீற்று புன்னகை.


"இதுக்கா இந்த அலப்பறை?" - கோகுல்


"எஸ்.. வேற என்னனு நினைச்சீங்க?" - ஆதிரா


"அய்யோ நான் எதுவும் நினைக்கலமா.." - கோகுல்


"அது.. அது.. அந்த பயம் இருக்கணும்.." - ஆதிரா


"பயமா? அது சரி.." - கோகுல்


'பேசாம ஐ லவ் யூ னு சொல்லிருக்கலாமோ?' என்ற தீவிர யோசனையில் ஆதிரா ஆழ்ந்த நேரம் "ரொம்ப நேரமாகிருச்சு தூங்குடா.. குட் நைட்" என்று அவனின் குறுஞ்செய்தி இவளை வந்தடைந்தது.


அவன் கிளம்பறேன் என்றதும் இவளை பதற்றம் கூடாரமிட்டு கொள்ள, தைரியத்தை வரவழைத்து கொண்டு "உங்ககிட்டு ஒன்னு கேட்கணும்" என்றாள் பதறிய மனதை கட்டுப்படுத்தி கொண்டு.


"கேளுமா" - கோகுல்


"தப்பா நினைச்சுக்க கூடாது.." - ஆதிரா


"நான் ஏன் தப்பா நினைக்க போறேன்" - கோகுல்


"அப்ப கேட்கட்டுமா?" - ஆதிரா


"ம்ம்ம்ம் தாராளமா.." - கோகுல்


"பதில் சொல்லுவீங்களா?" - ஆதிரா


"கண்டிப்பா.." - கோகுல்


"பயமா இருக்கே.." என்றதை பார்த்து 'இவங்க அப்படி என்ன கேட்க போறாங்க' என்ற குழப்பத்தில் "எதுக்கு பயம் கேளுங்கமா.." என்றான்.


"என்னைய உங்களுக்கு பிடிக்குமா?" என்று கேட்க நினைத்ததை ஒருவழியாக கேட்டும் விட்டாள்.. இருந்தும் அவளின் இதயம் பயத்தில் கொதிநிலையின் உச்சத்தில் காணப்பட்டது.


பெண்ணவளின் வினாவில் அதிகபட்ச திகைப்புடன் விழி விரித்த கோகுல் பின்பு "ஆதியை யாருக்காவது பிடிக்காம இருக்குமா?" என்ற பதிலுடன் கலந்த வினாவையும் தொடுத்தான்.


'இவனுக்கு பிடிக்குமானு கேட்டா மத்தவங்களைய ஏன் இதுல இழுக்கறான்.. அய்யோ ராமா.. இவனுக்கு என் காதலை புரிய வெச்சு.. வீட்டுல சம்மதம் வாங்கி.. எப்ப நான் கல்யாணம் பண்றது?' என்று நினைத்தபோது தலையே சுற்றியது.


கடுப்பு மேலோங்க "நான் கேட்டது உங்களுக்கு தான்.." என்றிட, இதழை கடித்து நகைப்பை அடக்கிய கோகுல் "ம்ம்ம்ம்.. உங்க பேச்சும் சிரிப்பும் எப்பவும் எனக்கு ஸ்பெஷல் தான்மா.." என்றான் உண்மையாக.


இது இரண்டும் தான் அவனை அவள்மேல் பித்து கொள்ள செய்தது.. இக்கேள்வியை அவள் எதற்கு கேட்கிறாள் என்று புரிந்தாலும் பெண்ணவளை ஏற்றுக்கொள்ள முரண்டு பிடித்தது ஆடவனின் மனது.


இதற்கு மேல் ஏதாவது பேசினால் தன் மனம் வெளிப்பட்டு விடும் என்று பயந்து "குட் நைட்டுமா.." என்றவன் அப்போதே அலைப்பேசியையும் அணைத்து விட, அவனின் குறுஞ்செய்தியை வெறித்திருந்த ஆதிராவின் மனநிலை தான் என்னவோ..?


பிடித்தும் பிடிக்காத

நிலை ஏனடா?

மறுக்கும் மனதிடம்

உரைத்து விடு

நான் எப்போதும்

உனக்கானவள்


மட்டுமே என்பதை!
 
Last edited:
Status
Not open for further replies.
Top