இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

அன்பு மனம் கனிந்த பின்னே- கதை திரி

Status
Not open for further replies.
டீசர்
என்றும் போல இன்றும் ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டியை அழகாக கட்டிக் கொண்டான். சட்டையை அணியும் போது அவனையறியாத மென் முறுவல் உதடுகளில் வந்தமர்ந்து கொண்டது. பாற் சொம்பை கைகளில் எடுத்தவன் அவளது அறையை நோக்கி நடக்க யாரோ வம்புக்கு மணமகளே மருமகளே வா---என்ற பாட்டை உல்டாவாகப் பாடிக் கேட்டது.

வேறு யார்??? அக்க்ஷிதன் தான் ---விஷமச் சிரிப்புடன் இவனைப் பார்த்துக் கண்ணடித்து
ஓவரா முரட்டு சிங்கிள் என்று கெத்துக் காட்டின சிங்கம் எல்லாம் சுடிக்கு ஊக் தைக்கப்புறப்பட்டிடிச்சு டோய் என்று கமன்ட் பண்ண

ஹா--- ஹா------ஹா--- அட்டகாசமாக சிரித்துக் கொண்டே மண்டை பத்திரம் என்று சைகையில் காட்டினான். வேறு நாளாக இருந்தால் இந்த சொம்பு அஷியின் முகத்தில் விழுந்திருக்கும் ஆனால் இன்று அப்படிச் செய்ய முடியாதே ---- திருமணநாள்------முதலிரவு---!

இதுவரை அவன் பார்த்த முதலிரவுக் காட்சிகளில் மனைவிதான் நாணிக்கோணி குனிந்ததலை நிமிராமல் அறைக்குள் வருவாள். ஆனால் இங்கோ எல்லாமே தலைகீழாக தான் நடந்து கொண்டிருக்கின்றது.
அறைக்குள் வந்தவன் பாற்சொம்பை அங்கிருந்த டிறெஸ்ஷிங் டேபிளில் வைத்தான். இவன் வந்தது தெரிந்தும் அவள் இவனைத் திரும்பிப் பார்த்தாள் இல்லை. பத்து விரல்களிலும் இருக்கும் அத்தனை நகங்களையும் கடித்தாகி விட்டது. அடுத்து அம்மணி என்னதான் செய்யப் போறாங்க------

இவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். பார்க்க பார்க்க திகட்டாத அழகியாக இருந்தாள். அவளது குறும்புப் பேச்சுக்களை கேளாதவன் போல எத்தனை நாள் ரசித்திருந்திருக்கிறான்.

இன்றோ அவளின் குழந்தைத்தனமான செய்கைகள்------

அவன் வதனத்தில் மந்தகாசப் புன்னகை வந்தமர்ந்து கொண்டது. மெல்ல கட்டிலை நோக்கி வந்தவன் சூட்டிம்மா ----என்றான்.

இவன் அவளை நெருங்க பட்டென்று கட்டிலில் படுத்துக் கொண்டு போர்வையால் தலைமுதல் பாதம்வரை அவள் போர்த்தது இன்னும் சிரிப்பை வரவழைக்க போர்வையுடன் சேர்த்து அவளைத் தூக்கினான்.

மூடியிருந்த போர்வைக்கு மேலால் அவள் விழிகளில் அழுந்த முத்தமிட்டவன் மறுகணம் ஆ---ராட்சசி என்று அலறினான். மூக்கு அப்படி ஒரு வலியைக் கண்டிருந்தது.

இவன் தன்னை மீறி அலறிய சத்தம் வெளியில் கைகளைப் பிசைந்து கொண்டு அந்த பெரிய ஹாலை அளந்து கொண்டிருந்த அவளின் அப்பா அம்மாவிற்கும் கேட்டது.

என்னங்க இது--------என்று பதறினார் அவளது தாய்.

கொஞ்சம் பொறும்மா ---- என்னாயிடப் போகுது.----எதுக்கு எனக்குப் பயம் காட்டுறாய் நீ?

என்னதான் நடந்திருக்கும் -----வேறென்ன அவன் கண்ணாட்டி அவனது மூக்கைக் கடித்து வைத்திருந்தாள்.
 
டீசர் 2
கண்ணில் என்ன கார்காலம்
கன்னங்களில் நீர்க்கோலம்
மனமே நினைவே மறந்து விடு
துணை நான் அழகே துயரம் விடு

விழியில் விழும் துளி
என் மார்பில் வீழ்ந்ததே கண்ணே
அமுதம் சிந்தும் கண்ணில் கண்ணீரா
நியாயமா பெண்ணே ஓ----

மெல்லிய குரலில் பாடியபடி அவளின் தலையைக் கோதி உறங்க வைக்க முயன்று கொண்டிருந்தான் அமலன். அவன் தலையைக் கோதினால் உடனேயே உறக்கத்துக்கு சென்று விடுபவள் இன்று உறங்காது இவன் முகத்தையே பார்த்துக் கொண்டு அவன் மடியில் படுத்திருந்தாள். அவளது நெற்றி புடைத்து பெரிதாக வீங்கியிருந்தது. நீர் நிறைந்த கண்களில் கருமணிகள் இரண்டும் ஏரியில் நீந்தும் மீன்களைபோல நிலைகொள்ளாது அங்கும் இங்கும் அசைந்து கொண்ருந்தன. கண்களில் இருந்து வழியும் நீருடன் அவனை இமைக்காது பார்த்துக் கொண்டிருக்க அவள் அழுவது இன்று அவன் மனதை ரணமாக்கியது .

என் செல்லக் குட்டியில்லை----- என் பட்டுக்குட்டியில்லை---- என் தங்கக்கட்டியில்லை---- அழாதடா கண்ணா!! ரொம்ப வலிக்குதாடா செல்லம்? நீ அழறதைப் பார்க்க தாங்கமுடியாமல் இருக்குடா அம்மா—தவித்தான்.

இந்த தவிப்பு அவனுக்கு மட்டுமல்ல அவளுக்கும் புதிது. எவ்வளவு நாள் எத்தனை தடவை பொங்கி வழியும் கண்ணீருடன் அவனிடம் வாழ்க்கைப் பிச்சையும் காதல் யாசகமும் கேட்டவளை இவனது பாரா முகமும் அசண்டையான பேச்சம் சுட்டுப் பொசுக்கியிருக்கின்றன. அன்று அவளின் கண்ணீருக்கு எந்த மரியாதையும் தராதவன் இன்றோ அவளது கண்ணீரைப் பொறுக்காதவன் போல தன்னைமீறி பிதற்றிக் கொண்டிருந்தான்.

என்னால் என்ரை முட்டாள்தனத்தால் ----- இந்த நிலைக்கு ஆளாகிட்டியே சூட்டிம்மா என்று மனதுக்குள் அரற்றிக் கொண்டான். தன்சிந்தனையின் போக்கில் உழன்றவனது கை தவறி அவளது புடைத்திருந்த நெற்றியின்மீதுபட மீண்டும் அழுகையை ஆரம்பித்தவள் சட்டென அவனது மடியிலிருந்து எழுந்து கொண்டாள். சிறுபிள்ளை போல இரண்டு கைகளாலும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அண்ணா-----என்னை வேணுமின்னே அஷி தள்ளி விட்டுட்டான் என்று புகார் படிக்க-------அவளின் அண்ணா என்ற விழிப்பு அவனைக் கொன்று போட்டது. வேதனை வழிய அவள் முகத்தைப் பார்த்தவன் அண்ணா சொல்லாத சூட்டிம்மா என்றான்.

இல்ல----- அண்ணா தான் சொல்வேன்---நீ தானே சொன்னே அண்ணா என்று கூப்பிடுன்னு-------என்றோ நடந்த அவளைத் தன்னை விட்டு விலத்தி வைக்க அவன் சொன்ன வார்த்தைகளை அவள் நினைவில் வைத்திருந்து சொன்னது அவனுக்கு மரணவலியைத் தர

சரிடா குட்டி அப்போ சொன்னது எதுவும் இப்போ வேணாம்

இனி அத்தான் என்று சொல்லு என்று சொல்லிக் கொடுக்க

அத்தானா??? உவேக்----- என்று வாந்தி செய்வது போல முகபாவம் காட்டியவள்-----அது நல்லாவே இல்ல---நான் வேணும்மின்னா உன்னை தம்பி என்று சொல்லவா என்றாளே பார்க்கலாம்.

தம்பியா???? என்று மனதோடு அலறியவன் கட்டிக்கிட்டபுருஷனை யாராவது தம்பி என்று சொல்லுவாங்களாடா என்று அவளுக்குப் புரிய வைக்க முயன்றவன் அவளது அடுத்த கேள்வியில் அரண்டுதான் போனான்

அப்பிடி என்னதான் அவள் கேட்டிருப்பாள்????? உங்களுக்கு ஏதாவது ஐடியா இருந்தால் சொல்லுங்களேன் பார்க்கலாம்-----
 
Status
Not open for further replies.
Top