இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் [email protected] அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

அன்பின்(ல்) வழி(லி)யது - கருத்து திரி

#காத்தாடி_ரிவ்யூ

“அன்பின்(ல்) வழி(லி)யது” கதைக்கான ரிவ்யூ...

முதலில் இப்படி எதார்த்தமான அன்றாட வாழ்க்கையில் நிகழும் மிகச்சாதரணமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்ததற்கு வாழ்த்துகள் எழுத்தாளரே...

இப்ப வரைக்கும் ஆண் – பெண் நட்பு குறித்த புரிதல் நம்ம சமுதாயத்தில் குறைவுதான்... என்னதான் நாம நிறைய படிக்கிறோம், முன்னேருறோம்ன்னு இருந்தாலும் இந்த விஷயத்தில் மட்டும் நம்ம பேரன்ட்ஸ் எப்பவும் ஷக்தியோட பேரன்ட்ஸ் மாதிரிதான் நடந்துக்கறாங்க..

சமயங்களில் பெத்தவங்களே இந்த மாதிரியான விஷயங்களை சரியா ட்ரீட் பண்ண தவருறப்போ மத்தவங்களை என்னன்னு குறை சொல்றது??

இந்த கேட்டகிரியில தான் ரியாவும் வர்றா.. ஒரு பக்கம் அவ நடந்துக்கறது கொஞ்சம் கடுப்பா இருந்தாலும் அவளும் எதார்த்தத்தின் நகல்தான்.. சீரியஸ்லி இன்னைக்கு நிறைய பேர் இப்படித்தான் நடந்துக்கறாங்க... இருந்தாலும் நம்ம ஷக்தி ஷனுவுக்கு கொடுத்த இம்பார்டன்ஸ் இவளுக்கும் கொஞ்சம் கொடுத்திருக்கலாம்..

அப்புறம் நம்ம ஹேமந்த் பேபி.. ஹா ஹா.. பேபிதான்.. முதல்ல வில்லத்தனமா தெரிஞ்சாலும் அப்புறமா ஹீமேன் ஆகி மிக்ஸிக்குள் மாட்டிக்கிட்டான்...

ரொம்பவே எதார்த்தமா இருந்தது டியர் கதையோட்டம்.. ஒரு மெலிதான புன்னகையோட எந்த ஸ்ட்ரெஸ்ம் இல்லாம வாசிச்சு முடிச்சேன்... பலருக்கு சில உறவுகள், உணர்வுகள் குறித்து புரியுறதே இல்லை... ஆனா அதை அழகா தத்ரூபமா ஷக்தி – ஷனு வடிவில் பதிய வச்சிட்டீங்க...

அழகான நிதர்சனத்தை சொல்லும் கதை... போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள் மா...
 
Top