Matharasi
Moderator
அத்தியாயம் 12
மேலும் நினைவு வந்தவளாக, ஏன் இத்தனை தாள்கள் என்று பார்க்க, அவளின் தலையில் இடியை இறக்குவது போல் சந்தோஷுக்கும் அவளுக்கும் மனம் ஒத்து விவாகரத்தான தாள்களும், அதுவும் அவன் இறப்பதற்கு பத்து நாள் முன்பு பதிவாகி இருந்தது.
அவளுக்கு காலடி கீழ் பூமி நழுவது போல் உணர்ந்தவள் தள்ளாட, அவளை தாங்கி பிடித்தவன் அவளை அருகில் கிடந்த நாற்காலியில் அமர வைத்தான். அதை எல்லாம் கவனிக்கும் மனநிலையில் அவள் இல்லை.
அவள் இது எப்படி சாத்தியம் என்று யோசிக்கும்போது தான் சந்தோஷ் இறப்பதற்கு ஒரு பத்து பன்னிரண்டு நாள் முன்பு அவளிடம் கத்தையாக தாள்களில் கையெழுத்து வாங்கினான். அவளுக்கு அது இன்று தான் நினைவுக்கு வந்தது.
அதுவும் அதை அவன் எவ்வளவு சிரித்து சிரித்து காதல் வார்த்தைகள் பேசி அதை வாங்கினான் என்ற நினைவு வர, இன்று அது அத்தனையும் வேப்பங்காய் கசந்தது அவளுக்கு.
அவனை நம்பி கையெழுத்திட்ட முட்டாள்தனத்தை எண்ணி அவள் தன்னையே நொந்து கொண்டாள்.
எப்பவுமே தன் எதிரில் இருக்கிறவன் தன் மண்டையில் ஓதிய எச்சரிக்கை என்ற வார்த்தை அவளை பார்த்து கைதட்டி சிரித்தது. கடைசியில் நான் நம்பிய இருவருமே எனது நம்பிக்கையை உடைத்து விட்டார்கள் அல்லவா. விவாகரத்து பத்திரம் பின்பு இரு குழந்தைகளும் தனக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்றும் அது முழுக்க மித்திலாவின் பொறுப்பு மட்டுமே என்றும் சந்தோஷ் கையெழுத்திட்ட பத்திரமும் இருந்தது. கடைசியில் இரு குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழில் அதில் தகப்பனின் பெயர் இடத்தில் மித்திலனின் பெயர் இருக்க, அதற்கு மட்டுமே இந்த ரிஜிஸ்டர் திருமண சான்று போல் அதில் இணைக்கப்பட்டு இருந்தது.
அந்த சான்றிதழில் இருந்த தேதியிம் சந்தோஷ் இறந்த தேதியிம் ஒன்றாக இருந்தது. அணைத்துமே இருவரும் பக்காவாக திட்டமிட்டு அழகாக செயல்படுத்தி விட்டார்கள். தன் எதிரே இருந்தவனை வெறுத்த பார்வை பார்க்க ஆரம்பிக்க, அவள் கைகளில் அந்த பைல்லை வாங்கி மேதை மீது வைத்தவன். அங்கே ஏற்கனவே டம்ளரில் அவளுக்காக ஊற்றி வைத்திருந்த நீரை எடுத்து கைகளில் கொடுக்க, அதை வாங்கி ஒரு சொட்டு விடாமல் குடித்து முடித்தாள்.
அது அவளுக்கு மிகவும் தேவையாகவே இருந்தது .அவள் நிதானத்திற்கு வந்தவுடன், “ இப்போது பேசவா, கேட்க நீ தயாராக இருக்கிறாயா”, என்றான் மீண்டும். இந்த முறை தான் அவள் எதிர்க்கவும், கத்துவதற்கும் ஒன்றுமே இல்லையே. அணைத்தையும் முடித்து வைத்திருப்பவனிடம் கேட்க என்ன இருக்கிறது .இவன் என் தோழன் அல்ல, எனக்கு தெரிந்த பழக்கப்பட்டவனும் அல்ல, அவனாக இருந்தால் எனக்கு இப்படி எல்லாம் செய்ய மாட்டான். இப்போது இருப்பவன் புதியவன் முற்றிலும், என அவள் மௌனமாகவே அவனை வெறுத்துப் பார்வையாள் நோக்கினாள்.
“ சரி இன்று உனக்கு அதிகம்படியான உளைச்சல். ஆனால் இது எதற்கும் நான் உனக்கு விளக்கம் கொடுக்கப் போவது கிடையாது. எனக்கு நீயும் குழந்தைகள் வேண்டும் முழுவதாக என் உடமையாக. இது எல்லாம் அதற்கு ஒரு அத்தாட்சி மட்டுமே. அவ்வளவுதான் மற்றபடி உன்னை அது எதிலும் நான் தொடர்பு படுத்த மாட்டேன். அதுவும் நீ நடந்து கொள்வதை பொறுத்து மட்டுமே. நாளை இங்கே நம் வீட்டில் ஒரு சிறு ஒருங்கிணைப்பு , நம் திருமண அறிவிப்பும் மற்றும் குழந்தைகள் அறிமுக விழா. நீ குழந்தைகளுக்கு அம்மாவாக எனக்கு மனைவியாக எந்த ஒரு சிறு சந்தேகமும் பிரச்சனை இல்லாமல் நடந்து கொள்ள வேண்டும்”, என்று அவன் அவளை பார்த்துக் கொண்டே கூற, அவள் அதற்கு எந்த ஒரு எதிர்வினையும் இல்லாமல் தன் வெறுத்த பார்வையால் மட்டுமே அவனை நோக்கினாள் .
அதில் அவன் உள்ளம் கலங்கினாலும் இப்போது இதற்கான விளக்கங்கள் அவன் கொடுத்தாலும் அவள் இன்னும் அவளை விட்டு அகன்று போக மட்டுமே நினைப்பாள். அது சரிவராது .இந்த வாழ்க்கையை அவன் அவளுடன் நல்லபடியாக தொடங்க வேண்டும் என்றாள் அதற்கு முதலில் அவள் பிரியும் எண்ணத்தை கைவிட வேண்டும் என்று தன்னை தானே சமாதானப்படுத்திக் கொண்டவன். “மித்திலா”, என்றான் சிறு அழுத்தத்துடன்.
அவனின் குரலில் அந்த சிலைக்கு உயிர் பெற்றது போல்,” என்ன”, என்பது போல் அவனை ஏறிட்டுப் பார்த்தாள். “ புரிந்ததா ,நான் சொன்னது”, என்று அவன் கேட்ட ஒரு நொடி அவளுக்கு ஒரு நிமிடம் அவன் ராட்சனின் மறுரூபமாகவே தெரிந்தான்.
அவள் முதுகுண்டு சில்லிடப் , “புரிந்தது”, என்பது போல் தலையை அசைத்தாள். உனக்கும் குழந்தைகளுக்கும் வேண்டியது நம் அறையில் இருக்கிறது. காலை 8 மணிக்கு பார்லரில் இருந்து ஆள் வருவார்கள். காலை 10 மணிக்கு விழா என்று முடித்தான்.
அவள் எழுந்து வெளியே செல்ல போக ,அவன் குரல் அவளை தடுப்பது. “ நம்மால் சில விஷயங்களை மாற்ற முடியாது, என்று தெரிந்தால் அதை ஏற்றுக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்”, என்றவனை அவள் திரும்பி , “ஆனால் எனக்குப் பிடிக்காததை செய்ய சொல்லி என் தோழன் ஒருநாளும் என்னை கட்டாயப்படுத்தியது கிடையாது”, என்றவள் அவன் ஏதோ கூற வர, “ எனக்கு தெரியும் நீ எதை கூற போகிறாய்”, என்றவள் பின் அவளே , “ சாரி நீ என்று நான் சொல்வதற்கு நீங்கள் என் தோழன் கிடையாது அல்லவா மறந்து போனேன்”, என்று விட்டு திரும்பி பார்க்காமல் மேலே சென்று விட்டாள்.
தங்களின் அறைக்குள் சென்றவளை வரவேற்றது மித்திகாவின் சிணுங்கல். தன் கலக்கங்களையும் கவலைகளையும் பின் தள்ளியவள் , குழந்தைகளின் தேவையும் தீர்த்து, உடைமாற்றிவிட்டு செல்வி அவர்களைத் தொட்டியில் கிடத்துவிட்டு வெளியேறினார்.
இவள் தூங்காமல் மெத்தையில் உட்கார்ந்து விட்டத்தை பார்த்து அமர்ந்து இருந்தாள் . அவளின் சிந்தனையை கலைத்தது மித்திலனின் குரல், “ இந்த பாலை குடித்துவிட்டு தூங்குவியாம், செல்வி அம்மா கொடுத்தார்கள்”, என்று அவன் அவள் பக்கம் இருந்த மேசை மீது வைத்துவிட்டு அகன்றான் .
அவன் மறுபக்கம் வந்து அமர்ந்தவுடன் அவளை பார்க்க அவளிடம் சிறு அசைவு கூடாமல் இல்லாமல் இருப்பதை உணர்ந்தவன், ஒரு கையை நீட்டி அவளை அழைக்க போக, அவனின் செய்கையில் திடுக்கிற்றவள் வேகமாக பாலை குடித்துவிட்டு காலி டம்ளரை மேஜை மீது வைத்துவிட்டு அவனுக்கு முதுகை காட்டி படுத்து விட்டாள். அதில் அவனுக்கு சிரிப்பு வர எங்கே சிரித்தாள் மறுபடியும் முருங்கை மரம் ஏறி விடுவாளோ என்று அவனும் சிறு ஒலி விளக்கை மட்டும் போட்டுவிட்டு குழந்தைகளை ஒரு பார்வை பார்த்துவிட்டு படுத்து விட்டான். இருவரும் வேறு வேறு நினைவுகளில் இருந்தாலும் இருவருக்கும் மற்றொருவன் அருகாமையை கொடுத்த ஒரு நிறைவு தூக்கம் தன்னால் இருவரையும் ஆட்கொண்டது. தொடரும்