இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

உனது உயிரில் எனது கவிதை அத்தியாயம் - 10

vishwapoomi

Moderator
"பல கோடிகளை போட்டுவிட்டு எத்தனை நாள்தான் நாங்கள் எல்லாம் சரியாகிவிடும் என்று பொறுமையாக இருப்பது. ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டது, அதில் இருந்து எங்கள் குடும்பம் மீண்டு வர ஒரு ஆறு மாத கால அவகாசம் வேண்டும் என்று கேட்டீர்கள். நாங்களும் கடந்து போன ஆறுமாதங்களுக்கு மேலாகவே பொறுமையாக இருந்தோம். ஆனால் எந்த மாற்றமும் வந்தது போல தெரியவில்லை. இனியும் உங்களை நம்பி எங்கள் முதலீட்டை கிணற்றில் போட்ட கல்லாக இருக்க விட எங்களுக்கு சம்மதம் இல்லை. நீங்கள் இனி இந்த கம்பெனிக்கு சிஇஓ வாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. திறமையான ஒருவரின் கீழ்தான் இந்த கம்பெனி இயங்க வேண்டும். எந்த முடிவையுமே தீர்க்கமாக எடுக்க முடியாத உங்களால் இனியும் இந்த கம்பெனியை இழுத்து கொண்டு போக முடியாது. இப்போதே நீங்கள் உங்கள் பதவியில் இருந்து விலகி கொள்ளுங்கள். இந்த முடிவை நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஒருமனதாக எடுத்திருக்கிறோம். அடுத்த வாரம் புது சிஇஓ க்கான எலெக்சன் நடைப்பெறும்." என்று ஒரு பழுத்த பழம் அந்த போர்ட் மீட்டிங்கில் எல்லோருக்கும் பொதுவாக பேச சாய்ஜித் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நின்றிருந்தான். தேவையான அளவுக்கு கால அவகாசம் கேட்டு ஒன்றுமே செய்ய முடியாமல் திணறியதுதான் மிச்சம்.

ஒருவர் எல்லோருக்கும் பொதுவாக பேசியதையே எல்லோரும் வேறு வேறு காரணங்களை சொல்லி சாய்ஜித்தை பேசவிடாமல் செய்துக்கொண்டிருக்க அதை லைவில் அக்னிக்கு காட்டிக்கொண்டிருந்தாள் நிருதியா. சாய்ஜித் சூழ்நிலையை சமாளிக்க முடியாமல் திணறுவதை வீட்டில் இருந்தப்படி அக்னி பார்த்துக்கொண்டு இருந்தான். அவன் கூடவே அர்னியும் இருந்தாள். அக்னி இடையில் எங்கேயும் எழுந்து போய்விட கூடாது என்பதற்காக காலேஜ்க்கு லீவை போட்டுவிட்டு தன் அண்ணனுடன் இருந்தாள் அவள்.

அக்னி அங்கே நடப்பதை அமைதியாகவே பார்த்துக்கொண்டு இருக்க "அண்ணா அப்பாவிடம் நான் சொல்லவா? அப்பா ஏதாச்சும் பண்ணுவாங்க. அண்ணன் பாவம் என்ன செய்யன்னு தெரியாமல் நிற்கிறான். அங்கே இருப்பவர்கள் எல்லோருமே ஏதோ முடிவை எடுத்துவிட்டுத்தான் இப்படி பேசிட்டு இருக்காங்க. அடுத்த வாரம் எலெக்சன் என்பதெல்லாம் கண் துடைப்பு." என்று அர்னி தனக்கு தெரிந்ததை சொல்ல அவளை ஒரு பார்வை பார்த்தான் அக்னி. இதெல்லாம் தெரிந்துதான் அவன் இருக்கிறான் என்பதை அவன் பார்வையே சொன்னது.

"அண்ணா...." என்று அர்னி மறுபடியும் ஆரம்பிக்க அவளை அமைதியாக இருக்கும்படி செய்கை செய்தான் அக்னி. மீண்டும் நடப்பதை பார்க்க தொடங்கினான். அவனுக்கே அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற குழப்பம் இருந்தது என்பதுதான் உண்மை. ஒரு சில நாளில் படிக்கும் பாடம் அல்ல இந்த கம்பெனி நிர்வாகம். அருணாச்சலத்திற்கு பிறகு இவன் அதை எடுத்து வெற்றிகரமாக நடத்தினான் என்றால் அதற்கான படிப்பை ஒரு புகழ் பெற்ற கல்லூரியில் படித்திருந்தான். எதையுமே இறங்கி சாதித்து காட்டிவிட வேண்டும் என்ற வேகம் அவனுக்குள் இருந்தது. அதனால் அதை வெகு விரைவில் அவன் படித்துவிட்டான். ஆனால் சாய்ஜித் அப்படியில்லை. அவனின் படிப்பு வேறு. அவன் படித்திருப்பது இன்ஜினீயரிங்கில் மாஸ்டர் டிகிரி. மேல்படிப்பாக மேலாண்மை படிப்பை படிக்கலாம் என்று அவன் நினைப்பதற்குள் சுமையை அவன் மேல் சுமத்தியிருந்தார்கள். அவனால் அதை சுமக்க முடியவில்லை. குருவி தலையில் பனங்காயை வைத்தது போல உணர்ந்தான் அவன். அவனால் இந்த சூழ்நிலையை போதிய பயிற்சி இல்லாமல் சமாளிக்க முடியாது என்பதை அக்னி உணர்ந்துக்கொண்டான்.

ஆனால் அதே வேளையில் தன் தகப்பனிடமும் இதை கொண்டு போக முடியாது. இந்த தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாகத்தான் அவருக்கு பக்கவாதம் வந்து படுக்கையாகி போனார். இந்த நிலையில் அவரின் உதவியையும் நாட முடியாது. மீதம் இருப்பவன் அவன் மட்டும்தான். ஆனால் அவனால் இப்போது அவனுக்கு என்ன தேவை என்று கூட சிந்தித்து பார்க்க முடியாத நிலை. ஒருநாள் கூட இவனால் மது, புகை இல்லாமல் இருக்க முடியாது. ஒரு இரண்டு மணி நேரத்திற்கு அவன் போதை இல்லாமல் இருப்பதற்காக அவனுடன் அவன் தங்கையை இருக்க வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் இவன் எப்படி இதை சரி செய்ய போகிறான். இதுதான் நிலை. இதைத்தான் அக்னி சிந்தித்துக்கொண்டு இருந்தான். அப்போது அர்னி போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. நிருதியா அனுப்பியிருந்தாள்.

"அர்னி அங்கே என்ன நடக்கிறது? உன் அண்ணன் என்ன இருந்த நிலையில் தவம் செய்துக்கொண்டு இருக்கிறாரா? இங்கே என்னவென்றால் நாளை மண்டையை போடும் மாங்காஸ் எல்லாம் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஏற்கனவே ஒருவனை மனதில் வைத்துக்கொண்டுதான் இந்த பேச்சு நடந்துக்கொண்டு இருக்கிறது. இன்னைக்கு உங்க கம்பெனிக்கு சீல் வைக்காமல் விடமாட்டானுங்க போல. இப்போ பார்த்து உன் அண்ணன் பிரம்மி புராணம் பாடிக்கொண்டிருக்கிறாரா? இன்னைக்கு மட்டும் அவர் ஏதாச்சும் செய்யல அப்புறம் நானே அவருக்கு பாலை ஊற்றிவிடுவேன். உன் பிரம்மியுடன் நிம்மதியா போயிட்டு வா மகனேன்னு." என்று கோபத்தோடு நிருதியா டைப் செய்து அனுப்பியிருக்க அதை அர்னி முழுவதுமாக படிக்கும் முன் அக்னி அவசரமாக எழுந்து போனான்.

மெசேஜ்ஜை படிப்பதை நிறுத்திவிட்டு அர்னி அவள் அண்ணன் பின்னே ஓட அவன் போட்டிருந்த ஒரு சட்டையை கழற்றிவிட்டு மடித்து வைக்கப்பட்டிருந்த ஒரு நல்ல சட்டையை எடுத்துப்போட்டுக்கொண்டு, முகத்தை நீரை அடித்து கழுவிவிட்டு பல நாட்களுக்கு பிறகு தலைமுடிக்கு சீப்பை காட்டினான். தேவ தாஸை போல நலிந்த தோற்றத்துடன் இருந்தவன் கொஞ்சம் தன்னை மாற்றிக்கொண்டு வீடியோவை ஆன் செய்தான். நிருதியா சிரித்துக்கொண்டு அதை அங்கே இருந்த சிஸ்டத்துடன் இணைத்துவிட ஸ்கிரினில் அக்னி தெரிந்தான். இவனை கண்டதும் அங்கே கொஞ்சம் சலசலப்பு கூடி ஒரு அமைதி வந்தது.

"AS இன்டஸ்ட்ரியை இழுத்து மூட இன்னொருவன் பிறந்துதான் வரவேண்டும் என்று தெரியாத அளவுக்கா உங்கள் அனுபவம் இருக்கிறது. அதை உருவாக்கிய அருணாச்சலமும், அக்னி சமர்ஜித்தும் இன்னும் இதே மண்ணில்தான் இருக்கிறார்கள். அவர்கள் குடும்பத்தில் வந்த இன்னொரு வாரிசும் எதற்கும் சளைத்தவன் அல்ல. இந்த ஆறுமாதத்தில் ஏற்பட்ட நஷ்டத்தையும், சரிவையும் அவனே சரிசெய்வான். அதற்கு பிறகு நீங்கள் யாருக்காக இந்த பேச்சு பேசினீர்கள் என்று நான் கண்டு பிடிக்கிறேன். இப்போதைக்கு இந்த மீட்டிங்கை இத்தோடு முடித்துவிட்டு எல்லோரும் கிளம்புங்கள்." என்றான் அக்னி சமர்ஜித் தோரணையுடன். அவனின் தோற்றம் வேறாக இருந்தாலும் அவனின் ஆளுமை பழையமாதிரியாகவே இருந்தது. அந்த ஆளுமையான பேச்சுக்கு முன்பாக எதிர் பேச்சு பேச அங்கே யாருக்கும் துணிவு இல்லாததிருந்ததினால் அத்தோடு அன்றையை மீட்டிங் முடிந்தது.

"ஐய்யோ அண்ணா சூப்பர்!!" என்று அர்னி தன் அண்ணனை கட்டிக்கொள்ள "உன் சின்ன அண்ணனை நேரா வீட்டுக்கு கிளம்பி வர சொல்லு. எதிரே இருப்பவனை பேச விட்டு வேடிக்கை பார்க்கிறான் முட்டாள். எல்லாவற்றுக்கும் பயந்து சாகிறானே எதுக்காக? வர சொல்லு அவனை. கூடவே அந்த வாண்டையும் மறக்காமல் கூட்டிட்டு வரசொல்லு. பயத்துல அவளை அங்கே விட்டுட்டு வந்துவிட போகிறான்." என்றான் அக்னி கோபத்துடன்.

"அண்ணன் பாவம்." என்று கூறிக்கொண்டே நிருதியா அனுப்பிய மெசேஜ்ஜை அக்னியிடம் காட்டினாள் அர்னி. அவன் அதை ஒரு முறைப்புடன்
படிக்க தன் சின்ன அண்ணனுக்கு போன் செய்தாள் அர்னி.

"நிரு போச்சு! அண்ணன் வர சொல்லிருக்கான். இன்னைக்கு என்ன திட்டு விழ போகுதோ!" என்று சாய்ஜித் பயத்தில் பதற

"உங்க அண்ணனுக்கு வேற வேலை என்ன? எப்படியும் நாம் போய் சேர்வதற்குள் அவர் கிளம்பிவிடுவார் தீர்த்தம் அருந்த. நாம மெதுவா போனா போதும். போகும் வழியில் ஒரு நல்ல ஐஸ்கிரீம் பார்லரில் வண்டியை விடு. அர்னிக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும்." என்று அவள் வேறு சொல்ல சாய்ஜித் இருமனதாக செய்தான் அவள் சொன்னதை.

அக்னி நிருதியா சொன்னது போல கிளம்பி சென்று இருப்பான் என்று நினைத்தால் அவனோ கோபத்துடன் சாய்ஜித்காக காத்திருந்தான் ஹாலில். சாய்ஜித் நிருதியா சொன்னதை நம்பி அண்ணன் வீட்டில் இருக்க மாட்டான் என்று தைரியத்தில் அவனும் ஒரு ஐஸ்கிரிமுடன் வர அக்னி கொதித்து போய் காணப்பட்டான். அவனின் கோபம் தெரியாமல் அங்கே இருந்த மற்ற மூன்றும் எனக்கு இது, எனக்கு இது என்று ஒவ்வொரு ப்ளேவர்ருக்கு சண்டை போட

"ஸ்டாப்பிட்" என்று வெடித்தான் அக்னி. அவன் போட்ட சத்தத்தில் கையில் இருந்ததை பின்னே மறைத்து வைத்துக்கொண்டு மூன்று பேரும் ஒரே வரிசையில் நிற்க இவர்களின் சத்தம் கேட்டு ஜானகி ஓடிவந்தார்.

"கொஞ்சமாவது உனக்கு அறிவு இருக்காடா? ஒருத்தன் அவ்வளவு பேசிட்டு இருக்கான் அவன் வாயை அடைக்காமல் நீ வாய் அடைச்சு போய் நின்னுட்டு இருக்க. நீயெல்லாம் என்னத்தை காலேஜ் போயி படிச்ச? எதையாவது பேசி அந்த சூழ்நிலையை சமாளிச்சிருக்க வேண்டாமா?" என்று அக்னி பேசிக்கொண்டு இருக்க சாய்ஜித் பின்னே மறைவாக வைத்திருந்த ஐஸ்கிரீம் உருகி வழிகிறது என்று நிருதியா அதை அவனிடம் இருந்து வாங்கி சாய்ஜித் வாயில் வைத்தாள். அண்ணன் போட்ட போட்டில் பயத்தில் இருந்தவன் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் நிருதியா வாயில் வைத்த ஐஸ்கிரீமை விழுங்க அவனை பார்த்து அர்னியும் தன்னுடையதை சாப்பிட தொடங்கினாள். அவளை தொடர்ந்து நிருதியாவும். இவர்கள் மூன்று பேரையும் முறைத்து பார்த்தவன் தலையில் அடித்துக்கொண்டு மாடி படி ஏறினான் தன் அறைக்கு செல்ல. அவன் திரும்பியதும் ஹாலிலேயே மூன்றும் அடி பிடி போட தொடங்கினார்கள் மீதம் இருந்த ஐஸ்கிரீம்க்காக. அதற்கு மேல் அக்னிக்கு பொறுக்க முடியாமல் போனது.

"சாய்" என்றான் அதட்டலாக. ஏனென்றால் இவர்கள் மூன்று பேரும் அடி பிடி போட்டத்தில் சாய்ஜித் மேலே விழுந்திருந்தாள் நிருதியா. அவளுக்கு மேலே அர்னி. அக்னியின் அதட்டல் கேட்டு ஒரு நிமிடம் ஸ்விட்ச் போட்டது போல ப்ரீசாகி நின்றார்கள் மூவரும். மூன்று பேரில் அக்னி அழைத்தது சாய்ஜித்தை தான் என்றாலும் அவனின் பார்வையும், முறைப்பும் நிருதியாவை மட்டுமே குறி பார்த்தது. நடந்துக்கொண்டிருந்த களபரத்தில் இதை யாரும் பார்த்தார்களோ இல்லையோ, சம்மந்தப்பட்டவள் நன்றாக உணர்ந்தாள் அவன் தன்னைத்தான் முறைக்கிறான் என்று. அந்த நொடியில் அவளுக்கு ஏற்பட்ட கோபத்திற்கு அளவே இல்லை. அதை எவ்வழியிலாவது காட்டிவிட வேண்டும் என்று நினைத்தவள் சாய்ஜித் சாப்பிட்டுக்கொண்டு இருந்த ஐஸ்கிரீமை பிடிங்கி சாப்பிட்டாள் அது அவனுடைய எச்சு என்று தெரிந்தும். அதற்கு மேல் அக்னி அங்கே நிற்கவில்லை. எப்படியும் போய் தொலையுங்கள் என்று விறுவிறுவென்று மேலே சென்றுவிட்டான். ஜானகியோ சிரித்துக்கொண்டு சென்றுவிட்டார். ஒருவழியாக ஆடி தீர்த்து மூன்று பேரும் களைத்திருக்க அக்னி வெளியே செல்ல கார் சாவியுடன் கீழே இறங்கி வந்தான்.

"டேய் சாய் புயல் கிளம்பிடிச்சிடா. இன்னைக்கு இதை விட்டா இனி பிடிக்கவே முடியாது. பயந்து சாகாம படார்ன்னு காலில் விழுந்திரு." என்றாள் நிருதியா ரகசியமாக.

"நான் மாட்டேன், எனக்கு பயமா இருக்கு." என்று சாய்ஜித் கூற

"நாங்களும் துணைக்கு வரோம் வா. முதலில் நான் விழுறேன், அப்புறம் நீ விழு. அர்னி நீ உங்க பெரிய அண்ணன் கையை பிடிச்சுக்கோ." என்று பட்டென்று ஒரு ப்ளானை போட்டுவிட்டு அதை வேகமாக மூன்று பேரும் செயல்படுத்தவும் அக்னி அப்படியே நின்றுவிட்டான் இந்த குரங்குகளை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல்.

"உங்களுக்கு எல்லாம் ஒரு சீரியஸ்நெஸ்சே கிடையாதா? எப்போ பாரு விளையாட்டுதானா!" என்று அக்னி சலிப்பாக கேட்க

"சீரியஸா இருந்தா மட்டும் பதக்கமா தர போறாங்க. இல்ல சீரியஸா இருக்க நாங்க என்ன இழுத்துட்டு கிடக்கோமா?" என்று நிருதியா கேட்க

"நீ பார்க்கிற வேலைக்கும், பேசும் பேச்சுக்கும் கொஞ்சமும் சம்மந்தம் இருப்பதாக எனக்கு தெரியல. காலில் விழுந்துட்டு பேச்சு மட்டும் என்னா திமிரா வருது?" என்று அக்னி அவளிடம் சீற

"என்னிடம் யாரும் கோபமா பேச கூடாது. அந்த உரிமை யாருக்கும் இல்லை. நான் இந்த வீட்டுக்கு விருந்தாளி, அப்படி என்னை நடத்தினா போதும்." என்று இவளும் பதிலுக்கு பேச தொடங்கிவிட்டாள். அங்கே பேச்சு வேறு பாதைக்கு போவதை பார்த்து சாய்ஜித் அண்ணனிடம் மன்னிப்பு கேட்டான்.

"வா என் கூட. முதலில் போகிற இடத்துக்கு எல்லாம் வேதாளம் மாதிரி இவளை சுமந்துட்டு போறதை நிறுத்து." என்றவன் நிருதியாவை முறைத்துவிட்டு சென்றான்.

தம்பியை வெளியே அழைத்து சென்றவன் ஒரு பாரில் வைத்துதான் அவனிடம் பொதுவாக நிர்வாகத்தை பற்றி பேசினான். பிறகு

"தைரியமா இருடா. இனி நீதான் எல்லாத்தையும் பார்த்துக்கணும். அம்மா, அப்பா, அர்னி எல்லோரும் இனி உன் பொறுப்புதான். என்னை நம்பி இனி எதுவும் நடக்க போவது இல்லை. எனக்கு புரிகிறது நான் என் கடமையை சரியாக செய்யவில்லை என்று, அதுக்காக நான் உனக்கு தினமும் கொஞ்சம் நேரத்தை ஒதுக்குறேன். அதுக்குள்ள நீ எல்லாத்தையும் படிச்சிட்டு தைரியத்தையும், திறமையையும் வளர்ந்துக்க." என்றான் அக்னி.

"தேவையில்லை. நீ இல்லாமல் நான் இதையெல்லாம் வளர்த்து என்ன செய்ய போறேன். நீ இப்படியே குடிச்சு, குடிச்சு உன் மனைவி போன இடத்துக்கு போய் சேரு. உன் மனைவி இருந்த போதும் நீ எங்களுக்கு இல்லாம போயிட்ட, இப்போ அவங்க இல்லாத போதும் நீ இல்லாமல்தான் போயிட்ட. உனக்கு எங்களை பற்றி என்ன கவலை?" என்று சாய்ஜித் வருத்தத்துடன் கோபமாக பேசியவன் அக்னி கையில் இருந்த மதுவை பிடுங்கி பட்டென்று வாயில் ராவாக கவிழ்த்துவிட்டான் ஒரு பாட்டிலையும். அக்னி தடுத்தும் பயன் இல்லாமல் ஒரு பாட்டிலையும் ஒரு வெறியுடன் காலி செய்துவிட்டே அவன் கீழே போட்டான். பாட்டில் விழுந்து நொறுங்கிய சத்தத்தை விட சாய்ஜித் கன்னத்தில் விழுந்த அரையின் சத்தம் அதிகமாக கேட்டது.

அடிவாங்கிய கன்னத்தை பிடித்தவன் "இப்போ எதுக்கு என்னை அடிச்ச? நீ மட்டும் உன் கஷ்டத்தை மறக்க குடிக்கலாம், நான் குடிக்க கூடாதா? எனக்கு என்னன்னு நீ இல்லாமல் போன உன் மனைவிக்காக சாக துணிஞ்சு எங்களை கண்டுக்காம விட்டுட்டு திரியுற. எங்களுக்கோ வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் அவஸ்தையாக ஒரு வாழ்க்கை. உனக்கு தெரியுமா அந்த கம்பெனியின் நிர்வாகம் தெரியாமல் தினமும் நான் அங்கே எவ்வளவு அவமானத்தை சந்திக்கிறேன்னு? இன்னைக்கெல்லாம் அப்படியே அங்கேயே சுட்டுட்டு செத்துவிட மாட்டோமான்னு இருந்திச்சு. எனக்கு வேண்டாம் இந்த பணம், பவுசு எல்லாம். நான் படிச்ச படிப்பு இருக்கு, எனக்கு தெரிந்த வேலை இருக்கு. மாத சம்பளம் வாங்கிட்டு நான் சந்தோசமா இருந்துப்பேன். ஆனா.... ஆனா.... அந்த பணத்தை வச்சு நான் எப்படி என் தங்கைக்கு ஒரு நல்ல வாழ்க்கையை கொடுப்பேன்? என் அப்பாவுக்கு நல்ல வைத்தியம் கொடுப்பேன்? என் அம்மாவுக்கு எப்படி ஒரு நிம்மதியான வாழ்க்கையை கொடுப்பேன்? நானும் உன்னை மாதிரியே சுயநலமா இருந்துட்டு போட்டா?" என்று போதை கொடுத்த தைரியத்தில் ஆவேசமாக கேள்விகளை கேட்டான் சாய்ஜித். அவன் பேச்சில் அசையாமல் நின்றவன் அதற்கு பிறகும் அங்கே நிற்க விரும்பவில்லை.

முதல் முறை தவறான பழக்கத்தை தொடரும் போது மட்டும்தான் மனதிற்குள் ஒரு பயம் இருக்கும். தொடர்ந்துவிட்டால் அப்புறம் பயம், மரியாதை, கெவுரவம் என்று எதுவுமே இல்லாமல் போய் அதுவே பழகிவிடும். ஏற்கனவே நாம் ஆனது போதாதா? இனி இவனும் ஆக வேண்டுமா என்று நினைத்தான் அக்னி. ஏனென்றால் சாய்ஜித் மறுபடியும் ஏதாவது கிடைக்குமா வாயில் கவிழ்க்க என்று பார்வையை அலைபாயவிட்டுக்கொண்டு இருந்தான்.

"வாடா..." என்று அவனை இழுத்துக்கொண்டு அக்னி அங்கே இருந்து வெளியே வர காரை ஓடிக்கொண்டு வந்தவன் முழு போதையில் இருக்க, அந்த போதை இல்லாமல் இவனுக்கோ கை கால் ஆட்டம் கொடுக்க தொடங்கியது. இனி டிரைவர் இல்லாமல் வண்டி ஓட்ட முடியாது என்று அக்னி அவன் தங்கைக்கு போன் செய்தான் தாயாருக்கு தெரியாமல் ஒரு டிரைவரை அனுப்பி வைக்கும்படி. அவளோ அதை நேராக நிருதியாவிடம் போய் சொல்லிவிட்டாள்.

"சரியான குடிகார குடும்பமா இருக்கு." என்று திட்டிக்கொண்டே நிருதியா சென்றாள் அவர்களை அழைத்துவர. இவளை அங்கே காணவும்

"அறிவு இருக்கா உனக்கு? இந்த நேரத்தில் இந்தமாதிரி இடத்துக்கு ஒரு பெண் தனியா வரலாமா?" என்று அக்னி கோபத்தில் சீற "வீட்டு ஆம்பிளைகள் சரியில்லை என்றால் பெண்களுக்கு இதைவிட்டா வேறு வழி என்ன இருக்க முடியும்?" என்று கேட்டுக்கொண்டே அக்னி தோளில் சாய்ந்திருந்த சாய்ஜித்தை பிடித்து கோபத்தில் காருக்குள் தள்ளினாள் நிருதியா. அவன் பின் சீட்டில் விழ அக்னியை முன் சீட்டில் ஏற்றிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தாள். ஜானகிக்கு தெரியாமல் அவரின் இளைய மகனை வீட்டுக்குள் அழைத்து வர போதும் போதுமென்றாகிவிட்டது. எப்படியோ அவனை அக்னியின் ரூமில் கொண்டு போட்டுவிட்டாள் நிருதியா. அக்னி இவளை புரியாமல் பார்க்க

"என்ன லுக்கு? வேற பொண்ணுதான் இந்த ரூமுக்கு வர கூடாது. உங்க தம்பி பெண் இல்லை. அவன் வரலாம். அவன் இங்கே இருந்தால் உங்க கூட கம்பெனி விசயமாக பேசிக்கொண்டு இருப்பதாக கூறி அத்தையை சமாளிச்சிடலாம். இல்ல இந்த குடிகாரனை தேடி அத்தை நாற்பது முறை இவன் ரூமுக்கு போயிடுவாங்க. சாயி.. சாயி கண்ணு, சாயி பல்லுன்னு. ச்சீ உங்களுக்கு போய் இப்படி ஒரு அம்மா. குடிகார எருமைகளா!" என்றவள் போதையில் உருண்டவனை நாலு சாத்து சாத்தினாள். அத்தோடு விட மனமில்லாமல் அவனை இரண்டு மிதி வேறு மிதித்துவிட்டு போனாள். அக்னி அவளையே பார்த்துக்கொண்டு நின்றான். கீழே போனவள் வெறும் வயிற்றில் ராவாக குடித்துவிட்டு புரண்டு கொண்டிருப்பவனுக்கு சாப்பாடு கொண்டு வந்தாள். கூடவே அவள் கையில் ஒரு கூல்ட்ரிங்க்ஸ் பாட்டில் வேறு இருந்தது.

"இந்தாங்க இதை நீங்க குடிங்க." என்று அக்னியிடம் நீட்டினாள்.

"எனக்கு வேண்டாம், இவனுக்கு சாப்பாட்டை கொடுத்துவிட்டு நீ கிளம்பு. எனக்கு இப்போ ட்ரிங்க்ஸ் பண்ணனும்." என்றான் அக்னி.

"அதுதான் எனக்கு தெரியுமே! கை கால்தான் காசிக்கும், கன்னியாகுமரிக்கும் போயிட்டு போயிட்டு வருதே! நான் எப்படி இருந்தவ தெரியுமா? இப்படி உங்க மத்தியில வந்து மாட்டிகிட்டு சாவுறேன். இதை பிடிங்க. இது உங்க ஐட்டம்தான். பாட்டில்தான் வேற." என்று அக்னி கையில் அதை தினித்தவள் பெட்டில் மல்லாந்து படுத்திருந்த சாய்ஜித்தை தூக்கி உட்கார வைத்தாள். அவன் சரிந்து விழ மீண்டும் அவனுக்கு நாலு மிதியை போட்டுவிட்டு அவனை நிமிர்த்தி தன் மேல் சாய்த்துக்கொண்டாள். பழக்கம் இல்லாத பழக்கத்தால் அவன் தலை நிலையில்லாமல் துவண்டு துவண்டு விழ அதை ஒரு கையால் பிடித்துக்கொண்டு ஒரு கையால் அவனுக்கு வலுக்கட்டாயமாக சாப்பாட்டை ஊட்டினாள் நிருதியா.

கை தன் வேலையை பார்க்க வாயோ ஓயாமல் அவனை திட்டி தீர்த்துக்கொண்டு இருந்தது. "குடிக்கார நாயே! இனம் இனத்தோடுதான் சேருன்னு காட்டிட்டான் பாரு. போறவன் ஒரு நல்லவன் பின்னாடி போக கூடாதா? பெவுடா!! குடிச்சிட்டு பெப்பரப்பேன்னு மல்லாந்து கிடப்பதை பாரேன்." என்று திட்டிக்கொண்டே இருந்தவள் ஒரு கட்டத்துக்கு மேல் அவனை ஒரு ஒரு குழந்தை போல தடவிகொடுத்துக்கொண்டு உணவை ஊட்டினாள்.

"சாய் நல்ல பிள்ளையில்ல இந்த ஒரு வாயை வாங்கு. குடல் அவிஞ்சி போயிடும் வெறும் வயிற்றோடு படுத்தா. கண்ணு பிள்ள ஒரு வாய்... இன்னும் ஒரு வாய்." என்று அவள் அவனை சீராட்டி சாப்பிட வைத்துக்கொண்டு இருக்க அவர்கள் எதிரே இருந்த சோபாவில் இருந்து மாமன் மகள் தனக்காக யாருக்கும் தெரியாமல் குளிர்பான பாட்டிலில் கொண்டுவந்து கொடுத்த மதுவை குடித்தப்படி அவர்களை பார்த்துக்கொண்டு இருந்தான் அக்னி.

"இவள் எப்படிப்பட்ட பெண்?" என்ற ஆராச்சியில் அவன் இருக்க

"நீயும் அந்த ப்ளேட்டில் இருப்பதை எடுத்து சாப்பிடு. வயிற்றை புன்னாக்கிவிட்டு செத்து தொலையாதே சமரு. ச்ச.. என்ன ஆண்பிள்ளைகளோ!" என்று சலித்தப்படி நிருதியா வேலையை பார்க்க சாய்ஜித் திடீரென்று சாப்பிட்டதை எல்லாம் வாமிட் எடுத்தான்.

"சாய்..." என்றவள் கொஞ்சம் கூட அருவருப்பு பார்க்காமல் அதை கையில் வாங்கவும் அக்னி அதிர்ந்துதான் போனான். தம்பி இனி தாங்க மாட்டான் என்று அவனுக்கு புரிந்தது.

"எதுக்கு வயித்துக்கு இவ்வளவு ஹெவியா கொடுத்த?" என்று கேட்டுக்கொண்டே சாய்ஜித்தை தூக்கிக்கொண்டு குளியல் அறைக்குள் சென்றான் அக்னி. நிருதியா அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு தன்னுடைய உடையை மாற்ற தன் அறைக்குள் சென்றாள். தம்பியை சுத்தம் செய்து, அவனுக்கு உடையை மாற்றிக்கொண்டு இருந்த அக்னியின் கண்ணுக்குள்ளும், கருத்திலும் இருந்தது நிருதியா என்ற ஒரு தாய்தான். பெண் எந்த வயதிலும் தாயாகிவிடுவாள் என்று அவனுக்கு அவள் புரியவைத்திருந்தாள். மாற்றத்தை கொண்டு வருவாளா அவனின் மாமன் மகள்???
 
P Bargavi

New member

Nice
 
Top