இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

New teaser

Saran

Moderator
கதைக்கு இன்னும் பேர் வைக்கல 🙈🙈

மாலை நேரம் வீட்டில் அனைவரும் வரவேற்பு அறையில் அமர்ந்திருக்க... அவர்களுடன் யுகேந்திரனும் இருந்து பேசிக் கொண்டிருந்தான். அப்போது தான் கடைக்கு சென்றுவிட்டு உள்ளே நுழைந்த மகதி அனைவரையும் நோட்டம் விட... யாரும் அவளைக் கவனித்தது போல் தெரியவில்லை.

யுகேனை எப்படி தனியே அழைப்பது என்று அவள் விழித்துக் கொண்டிருந்த சமயம் அவனே அவள் பக்கம் திரும்பிப் பார்த்து என்னவென்று புருவம் உயர்த்திக் கேட்டான். மெதுவாக அவனிடம் மேலே வருமாறு கண்களால் ஜாடை காட்ட... அதைப் புரிந்து கொண்டவன் அவளுக்கு கண்சிமிட்டி சம்மதமாக தலையாட்டிய அடுத்த நிமிடம் , அவள் அங்கிருந்து அகன்றிருந்தாள்.

அவள் சென்றதும் வலது கையால் தலை கோதியவாரே... தொண்டையை செருமிக் கொண்டு மெல்ல எழுந்தவன் அனைவரிடமும், " ஒரு முக்கியமான கால் பேசனும்... நீங்க எல்லாம் பேசிட்டு இருங்க வந்துடறேன்... " என்று கூறி அவ்விடம் விட்டு மகதியைத் தேடி மொட்டை மாடிக்கு விரைந்தான்.

மாடிக்கு வந்தவன் மகதியைத் தேட அவளோ அங்கிருந்த தோட்டத்தில் ரோஜா செடிகளுக்கு மத்தியிலிருந்த கல் மேடையில் மாலை நேர குளிர் காற்றை ரசித்தவாறே அமர்ந்திருந்தாள்.
முதல் முதலாக அவளுள் காதல் பூத்த மாயாமோ என்னவோ அங்கிருந்த பூக்களுக்கு போட்டியாய் அவள் முகமும் மாலை நேர சூர்ய ஒளியில் புது தேஜஸுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

அவளை ரசித்துக் கொண்டே நெருங்கிய யுகேன், "ஹே காட்டன் கேண்டி வாவ் ஈவினிங் சன்செட்ல உன் பேஸ் பிறைட்டா இருக்கு" என்றவாறே அவளை நெருங்கிக் கொண்டு அவள் அருகில் அமர்ந்தான். அவனைப் பார்த்து முறைத்து விட்டு முகத்தை மறுபுறம் திரும்பிக் கொண்டாள் அவள்.

அவள் செய்கை கண்டு விழித்தவன், "டார்லிங்
என்னாச்சு?" என்று அவள் முகம் பற்றி தன் புறம் திருப்பினான். அவளோ அவன் முகத்தைப் பார்க்காமல் தன் விழிகளை மூடிக்கொள்ள… அவள் அழகிய வதனத்தில் கவரப்பட்டவன் அவள் மூடியிருந்த இரு விழிகளிலும் முத்தம் வைக்க அவன் செயலில் மயங்கினாலும் சிறு படபடப்பு ஏற்பட தன் விழிகளை திறந்து கொண்டாள்.

இருவரின் விழிகளும் ஒன்றோடு ஒன்று கலந்து நிற்க அவள் முகம் நோக்கி குனிந்தவன் அவள் காதுமடல் தீண்டியவாறே கிசுகிசுப்பாக, "கேண்டி..." என்க, அவன் நெருக்கத்தில் மூச்சு முட்டியவளோ, "ம்ம்ம்..." என்றாள். அதில் கிறங்கி அவள் கன்னம் தீண்டி அவள் இதழ் நெருங்கியவன், "பர்த்டே கிஃப்ட் எடுத்துக்கவா…?" என்க, "ம்ம்ம்..." என அவள் சம்மதித்த அடுத்த நிமிடம் அவள் இதழ்களில் தன் இதழ்களை பொருத்திக் கொண்டான்.

அவன் முத்தத்தில் கிறங்கியவள் தன்னை மறந்து அவன் மார்பு ச் சட்டையை இறுக்கமாகப் பற்றிக்கொள்ள, அவனோ அவள் இதழ் சுவையில் மேலும் மூழ்கிப் போனான். அவள் மூச்சுக்கு சிரமப்படுவதை உணர்ந்தவன் அவள் இதழை மெல்ல விடுவிக்க அவன் மார்பில் நெற்றி முட்டி இளைப்பாறினாள்.

அவள் முதுகை மெல்ல வருடிக்கொடுத்தவன், "ஓஹோ.. பேபி ரியலி உன் லிப்ஸ் கேண்டி தான்" என்று சொல்ல, தன் தளிர் விரல்கள் கொண்டு அவள் தோளில் அடித்தவள், "போ மேன் உனக்காக கிஃப்ட் வாங்கிட்டு வந்தேன் அது தரதுக்குள்ள என்னவோ பண்ணிட்ட" என்றாள்.

"ஹே காட்டன் கேண்டி அத விட இது பெரிய கிஃப்ட் தெரியுமா?" என்றான் அவள் இதழ்களை வருடி. அதில் மகதி அவனை முறைக்க, "ஓகே கூல் என்ன கிஃப்ட் தா பார்க்கறேன்" என்றான் சமாதானமாக. குறும்பு சிரிப்பு மிளிர அவனை தன் எதிரே எழுந்து நிற்க வைத்தவள், "கண்ண மூடு மேன் நான் சொல்லற வரை ஓபன் பண்ணக் கூடாது" எனவும்…

" ஓகே கேண்டி " என்று அவன் தன் கண்களை மூடிக்கொண்டான். தன் கைப்பையிலிருந்து அவனுக்காக வாங்கிய பொருளை எடுத்தவள் அவன் சட்டையை சிறிது விலக்கி இடையில் கை வைக்க அதில் கூச்சம் வரப்பெற்றவன், " ஹே என்ன பண்ணற" என்றவாறே நெளிய…

அவன் செயலில் கடுப்பானவள், "இப்படி ஆடிட்டே இருந்தா எசக்கு பிசக்கா எதும் ஆகிடும் ஒழுங்கா நில்லு மேன் " என்று அதட்டல் போட அவள் சொன்னது கேட்டு அதிர்ந்தவன் கண்களை திறவாமலே, "ஹே வாட்ஸ் தட் எசக்கு பிசக்கு பேபி" என்று கேட்க தலையில் அடித்துக்கொண்டாள்.

'இந்த பாதி வெள்ளைக்காரனுக்கு நம்ம லோக்கல் லாங்வேஜ் புரிய வச்சே என் பாதி உசுரு போயிரும் போலவே' என்று மனதோடு புலம்பியவள், "கல்யாணத்துக்கு அப்பறம் சொல்லறேன்" என்றவள் தன் வேலைய முடித்துவிட்டு யுகேன் கண்களை திறக்க சொன்னாள்.

கண்களை திறந்தவன் தன் இடுப்பை ஆராய அதில் தங்கத்திலான அரைஞாண் கயிறு வீற்றிருந்தது. அதை பார்த்ததும் முதலில் விழித்தவன் பின், இங்கு குழந்தைகள் இதே போல் அணிந்து இருப்பது நியாபகம் வர, "ஹே காட்டன் கேண்டி என்னது பேபிஸ் போடறது எனக்கு போட்டு விட்டு இருக்க?" என்று கேட்க…

மகதி, "பேபிஸ் மட்டும் இல்லை மேன் இங்க எல்லா ஜென்ட்ஸ்சும் போட்டு இருப்பாங்க சோ நீயும் போட்டுக்கோ " என்று சொல்ல…

யுகேன், "வாட் இவ்ளோ பெருசாகியுமா? ஓகே பைன் பட் எனக்கு இத போய் வாங்க உனக்கு எப்படி ஐடியா வந்துச்சு " என்று புரியாமல் கேட்க… " ம்ம் நேத்து கோவிலுக்கு வேட்டி கட்டும்போது கலண்டு விழ பார்த்துச்சுல்ல… இது இருந்தா சேஃப் வேட்டி நழுவாது… ஏன் பேன்ட்டுக்கு பெல்ட் கூட வேண்டாம் பார்த்துக்கோவேன் " என்று சிரிப்பை அடக்கி கொண்டே சொன்னாள்.





 
Top