இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

விளையாட இது நேரமா? க்ளைமாக்ஸ் டீசர்

Status
Not open for further replies.

Andal Arugan

Administrator
Staff member
லாக்கர் ரூமின் பெஞ்சில் கால்களை அகல விரித்து, முட்டி மேல் கைகளை அழுத்தியபடி அமர்ந்திருந்தான். இன்று அவன் கிரிக்கெட் வாழ்வில் மட்டுமில்ல, தனிப்பட்ட வாழ்கையிலும் முக்கியமான நாள்.

இன்று அவள் தன் மேல் நம்பிக்கை வைத்து இங்கே வர வேண்டும். அதே போல் பல கோடி மக்கள் தன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையையும் காப்பாற்ற வேண்டும்.

இன்று தன் அணியினர் உடன் அவன் எந்த ஒரு சந்திப்பும், திட்டங்களும் விவாதிக்கவில்லை. இத்தனை நாட்கள் போதும் போதும் எனும் அளவு அவர்களை வருத்திவிட்டான். அணியின் பயிற்சியாளர்கள், கோச், ட்ரேயினர், த்ரொடவுன் எக்ஸ்ட்பெர்ட், டேட்டா அனலிஸ்ட் என்று எல்லோருடனும் சேர்ந்து மற்ற அணிகளில் இருக்கும் ஒவ்வொரு வீரர்களின் நிறை குறை, அவர்களின் பந்து வீச்சையோ, அதிரடி பேட்டிங்கையோ முறியடிப்பது எப்படி? ஒவ்வொரு மைதானத்தின் தன்மையை தன் அணி வீரர்களின் விளையாட்டு திறனுக்கு ஏற்ப பயன்படுத்துவது எப்படி? என்று இரவு பகலாக திட்டமிட்டு இருந்தவன் இன்று எதுவும் சொல்லாமல், அமைதியாய் அமர்ந்திருந்தான்.

இந்த உலகக் கோப்பைக்கு அவன் திரட்டியிருந்த அணி சாதாரணமாக திரட்டியது அல்ல. இதற்கு எத்தனை விமர்சனங்களும் எத்தனை தூற்றுலும் வாங்கியிருந்தான். சனவ்வின் வலிமையான ஆதரவு இல்லையென்றால் இதற்கு சாத்தியமே இருக்காது. அதுவும் இந்திய அணி இங்கலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் படு தோல்வி அடைந்தது ஒரு வகையில் ரிஷி சனவ்வின் வாதங்களுக்கு சாதகமாக அமைந்தது.

அதன் பின்னரும் நடந்த பயிற்சி போட்டிகளிலும், முதல் போட்டியிலும் இவன் தேர்ந்தெடுத்தவர்கள் அணியில் இருந்தாலும், அவ்வளவாக அவர்களின் திறன் வெளிப்படவில்லை. அதற்கு ஒரு வகையில் இவனும் காரணம்! அவன் தேர்ந்தெடுத்த யுக்தி அப்படி!
அவன் தேர்ந்தெடுத்த மூவரையும் ஒன்று போல் அணியில் இடம் பெற வைக்க இயலவில்லை. ஒருவர் அணியின் இருக்கும் பொழுது மற்ற இருவரும் ‘சப்ஸ்டிட்யூட்’ ஆக வெளியிலேயே அமர வைக்க நேர்ந்தது.
அவன் வேண்டிய வீரர்கள் உலகக் கோப்பை அணியில் இடம் பெற போராட்டம் தான். அணி வெளியாகும் இறுதி நிமிடம் வரை திரில்லர் படம் பார்ப்பது போல் அங்கே சென்னையில் இளங்கோ மட்டுமல்ல, மும்பையில் ரிஷியும் தான் அமர்ந்திருந்தான். அவன் தேர்ந்தெடுத்த வீரர்கள் யோயோ டெஸ்ட் மற்றும் டெக்சா டெஸ்டிலும் நன்றாக செயல்பட்டிருந்தாலும் ரிஷிக்கு உள்ளுக்குள் ஒரு உதறல் தான். மேலிடத்திலிருந்து என்ன வேண்டும் என்றாலும் நடக்க வாய்ப்புகள் இல்லை என்று கூற முடியாதே!

முதல் போட்டியில், ஆஸ்திரேலியாவுடன் தோல்வி அடைந்த அந்த போட்டியில் பகிரங்கமாகவே ஆரம்பித்த விமர்சனங்கள் தான் லெனியின் இப்போதைய முடிவிற்கு வித்திட்டதா? இல்லை அதற்கு முன்பே அவள் ஆழ்மனதில் இது தான் முடிவு என்று உறுதியாக இருந்தாளோ? எது எப்படியோ, எல்லாம் இன்று தெரிந்து விடும்.
அமைதியாய் அமர்ந்திருந்தவனைச் சுற்றி அவனது அணியினர் திரண்டனர்.

“ஏஸ்” என்று விராஜ் கூப்பிட, விழிகளை மட்டும் உயர்த்தி, அவனைப் பார்த்தான்.

“எனிதிங்க் ஃபார் அஸ்” என்று அவனிடமிருந்து ஏதாவது அறிவுரை வேண்டி நின்றான்.

“ஹும்ம்” என்று பெருமூச்சுடன் எழுந்தவன், விராஜின் தோள் மீது வலது கையை வைத்து, இடது கையை இடுப்பில் வைத்து தோரணையாக நின்றபடி, அங்கே சுற்றி உள்ள அனைவர் மீதும் தன் பார்வையை சுழலவிட்டு,

“ஜஸ்ட் கோ ப்ளே தி கேம் ஆஃப் யோர் லைஃப்! ஜஸ்ட் டூ வாட் யு டூ பெஸ்ட் இன் யோர் லைஃப்! ப்ளே கிரிக்கெட். எஞ்சாய் அவுட் தெர்! அப்படினு நான் சொல்லுவேன்னு நீ எக்ஸ்பெக்ட் பண்ணியா வீர்?” என்று கூறியவன், “நோ” என்றான் ஒற்றைக் கண்ணை சிமிட்டி.
சுற்றி குழுமியிருந்த தன் அணியினர் அனைவரையும் பார்த்தவன், ஒரு சன்னப் புன்னகையுடன் தொடர்ந்தான்.

“யூ நோ பாய்ஸ், இங்க நம்ம எல்லாரும் நிக்கிறோம்னா, அதுக்கு ஒவ்வொருத்தரும் என்ன எல்லாம் தாண்டி வந்துருப்போம். இங்க இந்த இடத்துல நிக்க எத்தன பேர் ஆசை பட்டுருக்காங்க, எத்தன பேர் ஆசைப் பட்டுட்டு இருக்காங்க? திஸ் இஸ் எவ்ரி கிரிக்கெட்டர்ஸ் ட்ரீம்! திஸ் இஸ் தி மொமென்ட் வீ ஆல் வான்டெட் டூ எக்ஸ்பீரியன்ஸ். திஸ் இஸ் தி மொமென்ட் தட் வீ ட்ரீம்ட் ஆஃப். தி டே வீ வில் க்ரீயேட் ஹிஸ்டரி. அப்படி இருக்கும் பொழுது, இப்படி பட்ட ஒரு வாய்ப்ப நாம் தவற விடலாமா? லெட் ஆஸ் சீஸ் தி டே மை பாய்ஸ் அண்ட் ரீரைட் தி ஹிஸ்டரி. இனி வரும் நூறு வருஷத்துக்கு நம்ம ஆடி ஜெய்க்கப் போற இந்த மாட்ச் ஹைலைட்ஸ் தான் இனி வரப் போற ஒவ்வொரு வொர்ல்ட் கப் கவரேஜ்லையும் முதல்ல போடனும். லெட்ஸ் ஜஸ்ட் கோ அவுட் தெர் அண்ட் டூ வாட் வீ ஆர் மென்ட் டூ டூ! கீப் திஸ் ஹெல்ஆஃப் தி கப் வித் அஸ் அட் ஹோம்! இந்த பார்டர் தாண்டி கப் வெளிய போகக் கூடாது. அதுக்கு என்ன செய்யனுமோ செய்வோம். ஆல் ஆஃப் யூ நோ வாட் யூ நீட் டூ டூ. தெர் வில் பீ நோ இஃப்ஸ் ஆன்ட் பட்ஸ். தெர் வில் பீ நோ டவுட்ஸ். கப் நம்மளோடது, இத மனசுல வச்சுட்டு ஃபீல்ட்ல இறங்குங்க. இது நம்ம… நமக்காக தூக்குற கப் இல்ல! நம்ம கன்ட்ரிக்காக தூக்குற கப். கிவ் ஆல் தட் யூ ஹாவ் பாய்ஸ்.!” என்று சொல்லி உறுதியாக இரண்டு தடைவை பலமாக முறுக்கேறிய கைகளை தட்டினான்.

அங்கே இருந்த ஒவ்வொரு வீரனும் ஆர்பரிக்க, ஜெயிக்கும் உறுதியுடன் அனைவரும் களமிறங்க காத்திருந்தனர்.
நரேந்திர மோடி மைதானம், மக்கள் வெள்ளத்தில் பொங்கி வழிய, ஐசிசியின் ஆடை மற்றும் விளையாட்டு அணிகலன்களின் விளம்பரதாரரான அடிடாஸ் வழங்கிய நீல நிற ஜெர்சியின் இருபுறம் தோள்பட்டையில் மூவர்ணம் பளிச்சென்று மின்ன, தன்னம்பிக்கை நிறைந்த நெஞ்சோடு, இயல்பான புன்னகையோடு உள்ளே காலடி வைத்தான் ரிஷி ரங்காச்சாரி.

VIN KB 2.jpg
 
Last edited:
Status
Not open for further replies.
Top