Rajasree Murali
New member
ஹெல்தி(ஸ்வீட்) ரெசிபி
அன்பான நட்புகளே இனிய காலை வணக்கம் 
சிவப்பு அவல் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. குழந்தைகள் மட்டும் அல்ல நாம் எல்லோருமே வாரத்தில் குறந்தது மூன்று முறை காலை உணவாகவோ, மாலையில் ஸ்நாக்ஸ் போலவும் சேர்த்துக் கொள்ளலாம். செய்வதும் சுலபம் வாரத்தில் ஒரு 20 நிமிடங்கள் இதற்கென ஒதுக்கி தேங்காயை துருவி வைத்துக் கொண்டு, வெல்லத்தையும் நன்றாக சீவி வைத்துக் கொள்ளவும் (நாட்டு சர்க்கரை) இருந்தால் இன்னும் நல்லது. தேவைப்படும் போது ஒரு கப் சிவப்பு அவலை எடுத்து கொண்டு தண்ணீர் விட்டு 2 முறை நன்றாக அலசி (கழுவி) 1/2மணி நேரம் ஊற வைத்து பிறகு அதில் உள்ள தண்ணீரை நன்றாக வடித்து விட்டு ஒரு வாயகன்ற பாத்திரத்தில் அவலை சேர்த்து அதனுடன் நாட்டு சர்க்கரை அல்லது சீவி வெல்லம் ஒரு கப், 1/2 கப் தேங்காய் துருவல் சேர்த்து சிறிது ஏலக்காய் பொடி தூவி ஒரு ஜல்லிகரண்டி (அல்லது) ஃபோர்க் வைத்து லேசாக கிளறி னால் சத்தும், சுவையும் மிகுந்த டிபன் ரெடி (விருப்பட்டால் இத்துடன் பாதாம், முந்திரி பேரீச்சம் இவைகளை வறுத்தோ அல்லது அப்படியே வும் சேர்க்கலாம். 



Attachments
Last edited: