இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

மூச்சுக்காட்டாத நடிகர்களும் முல்லை பெரியாறும்….!

Janani Naveen

Administrator

மூச்சுக்காட்டாத நடிகர்களும் முல்லை பெரியாறும்….!​

தண்ணின்னாவே பிரச்சனை தாங்க….! அது நமக்கு வரதா இருந்தாலும் சரி, நாம அடுத்தவங்களுக்காக கொடுக்கறதா இருந்தாலும் சரி….​

முல்லை பெரியாறு அணை இருக்குற இடம் கேரளாக்கு சொந்தம்ன்னாலும், கைகாசு போட்டு காப்பாதிட்டு வரது என்னவோ தமிழ்நாடு தானுங்க....​

மேற்குதொடர்ச்சி மலைல இருந்து மேற்கு கேரளாக்கு முழுக்க இங்க இருந்து தான் தண்ணி சப்ளை. குடிக்குற பச்ச தண்ணிய தான் சொல்றேன். பெரியாறு மேல கட்டுன அணைன்றதால பெரியாறு அணைன்னு சொன்னாங்க பின்ன முல்லை ஆறும் அந்த பக்கம் வந்து மிங்கிள்ளானதால முல்லைபெரியாறு அணைன்னு பேரு வச்சுட்டாங்க (ஸ்ஸ்ஸ்ப்ப்பா பேரு வைக்கறதுலயே எம்புட்டு அக்கபோரு பாருங்க)​

15.5 டிஎம்சி உள்ள இந்த அணை 155 அடி கொண்டது . மதுரை வைகைல பாயுரபாதி தண்ணி இந்த டேம் உபயம் தான். இந்த பக்கம் கொஞ்சம் அந்தபக்கம் கொஞ்சம் ந்னு பாயுற தண்ணிய வச்சு தான் இப்பொ பஞ்சாயத்து​

அணைக்கு சரியான அரவணைப்பு இல்ல அதுனால அது அமுங்கி தண்ணி எல்லாம் ஆர்பரிச்சு கேரள மக்களுக்கு, பெரியாறு அணை பெரிய ஆப்பு வச்சுடும்ன்னு சொல்றாங்க…. ஆனா பாருங்க 1895ல கர்னல் ஜான் பென்னிகுயிக் – ன்ற ஆங்கிலேயரால் கட்டப்பட்டது தான் இந்த அணை.​

அதனால கட்டுமானம் கட்டுகோப்பா தான் இருக்கும், இப்பொ இருக்குற அரசியல் காப்பான்களால் கட்டப்பட்டதுன்னா கூட பயப்படுறதுல ஒரு நியாயம் இருக்கு!!! போதாகுறைக்கு அணை பாதுக்காப்பா தான் இருக்குன்னு மத்திய அரசு, மாநில அரசு – ந்னு ரெண்டு சேர்ந்து நியமிச்ச குழு அறிக்கவுட்டு, கோர்ட்டு கூட அடிச்சுக்காம அவங்க அவங்க வேலைய பாருங்கன்னு அனுப்பியும் வச்சுட்டு…….​

ஆனா பாருங்க நம்ம மாண்புமிகுங்க அதான் அரசியல் காப்பான்கள் அணைய அணைச்சுகிட்டு இப்பொ அட்ராசிட்டி பண்ணிட்டு இருக்காங்க. துணைக்கு நடிகர் பெருமக்கள் வேற….!!!​

அணையால கேரள மக்களுக்கு பாதுகாப்பு இல்ல அதனால அத இடிக்கனும்ன்னு Decommission Mullaperiyar Dam ஹேஷ்டாக்-க மலையாள நடிகர்கள் ட்ரெண்ட் ஆக்குறாங்க…. அணைய பத்தின உண்மை தெரிஞ்சு செய்றாங்களோ இல்ல தெரியாம செய்றாங்களோ???​

தமிழ்நாடு தனிபெரும் நாடு விவசாயம் அதன் மூச்சு இது தான் என் பேச்சு ந்னு பக்கம் பக்கம்மா டைலாக் பேசி நடிச்ச நம்மூரு சினி விவசாயிக ஒருத்தர் கூட இந்த விஷயதுல வாய் தொறக்கல!!! இங்க பேசுனா கை மேல யாரு காசு கொடுப்பாங்க?? அதோட இப்பொ இவங்களுக்கு எதிரா பேசினா கேரளால திரையிடற தங்களோட படத்தோட வசூல் என்னாகுறது???​

என்னமோ போடா முருகேசா…! நடிகனுக்கு நடிக்கவா சொல்லிதரனும் நமக்கு எதுக்கு ஊர்வம்பு நாம…. நாமஉண்டு நம்ம சோலி உண்டுன்னு போவோம்….!​

…​

 

Ananthalakshmi

New member
லம்போகினி கார்போறதுக்கு ரோடு சரியில்லைன்னு அந்த நடிகர் அம்மா போய் ஆட்சியாளர்கள்ட மனு கொடுத்து அட்ராசிட்டி பண்ணுச்சு .2மாசத்துல அங்க வந்த மழை வெள்ளத்துல மாட்டி பிரியாணிஅண்டால உக்காந்து வீட்டுலயிருந்து வெளியே வந்தாங்க ஆனாலும் திருந்தல இந்தா திரும்ப ஆரம்பிச்சுட்டாங்க
 
Top