இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

போட்டு வைத்தக் காதல் திட்டம்!

Status
Not open for further replies.

Andal Arugan

Administrator
Staff member
போட்டு வைத்தக் காதல் திட்டம்!

திட்டம் 1

“இங்க இங்க பாஸ் பண்ணு அர்ஜுன், ஐ அம் ஒபென், இங்க” என்று ராம் அவனது நண்பன் அர்ஜுனிடம் மூச்சிறைக்க ஓடிக்கொண்டே கூவினான்.
காற்றைக் கிழித்துக்கொண்டு தன் புகைச் சுவடுகளை விட்டுச் செல்லும் ‘ஜெட்’ போல வேகமாக ஓடிக் கொண்டிருந்தான் அர்ஜுன் முடியரசன்.
நண்பனின் குரல் கேட்டதும், தன் கால் அசைவுகளின் கட்டுப்பாட்டில் இருந்த அந்த கால்பந்தை அழகாக இரு பாதங்களுக்கு நடுவே வைத்து, ஒற்றைக் கால்கொண்டு சுழற்றியவன், குதித்து அதை எட்டி உதைத்தான். கால்பந்து அவன் அடித்த இலக்கை நோக்கி இலகுவாகப் பறந்து சென்று கச்சிதமாக தரை இறங்கியது.
சுற்றி இருந்த மற்ற அனைவரும் ஓடி வந்து அர்ஜுனை தழுவிக்கொள்ள, ராம் மட்டும் ஒரு அதிருப்தி பாவத்தோடு அவனிடம் ஓடி வந்து,

“குட் டா மச்சான்” என்று அர்ஜுனின் தோளைத தட்டிக்கொடுத்தான்.
எல்லோரும் சிரித்து மகிழ, ராமின் தோரணையை கண்டுகொண்ட அர்ஜுன்

“மச்சான் நில்லுடா. என்ன கோவமா? உன்கிட்ட பாஸ் பண்ணலனு? ம்ம்?”

“ம்ம்ச்ச்ச்.. அதெல்லாம் இல்லடா விடு!”என்று கடந்து செல்ல நினைத்தவனின் வலது தோளைத் தொட்டு இழுத்தான் அர்ஜுன்.

“ப்ரோ ஐ நோ யூ! பாஸ் பண்ணலனு காண்டா? என்ன காண்டா இருந்தாலும் முகத்துக்கு நேரா காண்பிச்சுடு ப்ரொ. இந்த கேர்ள்ஸ் மாதிரி முன்னாடி சிரிச்சுட்டு மனசுக்குள்ள திட்டாத. கமான் ஸ்பிள் இட் அவுட் டியூட்” என்றான் அவனது தோரணையான ஆங்கிலத்தில். இருவரும் பேசத் துவங்கும் முன்பே ‘half-time’ என சொல்லும் விளையாட்டு இடைவேளை வந்துவிட, சுற்றி இருந்த மற்றவர்கள் கலையத் துவங்கியிருந்தனர்.
எல்லோரும் சென்றுவிட, மைதானத்தின் மையத்தை விட்டு வெளியே வேகமாக நடந்து கொண்டிருந்தான் ராம். அவனைப் பின் தொடர்ந்தபடியே தான் அர்ஜுன் பேசிக்கொண்டிருந்தான். அர்ஜுன் கூறியதில் கண்களை இறுக மூடியவன் தனது தயக்கத்தை கைவிட்டு சட்டென்று திரும்பிய ராம்,

“ஆமாம்டா காண்டு தான். அது என்னடா நீ தான் எப்பவும் சென்ட்ர் ஆஃப் அட்டராக்ஷ்னா இருக்கனுமா? ஒரு தடவ நாங்க இருக்க கூடாதா என்ன? நான் தான் சொல்றேன் இல்ல, நான் நின்ன இடத்துல இருந்து பக்கா ஷாட் எனக்கு கிடச்சுருக்கும்! பாஸ் பண்ணா என்ன உன் ‘கிங் ஆஃப் தி காலேஜ்’ கிரீடம் கீழ விழுந்துடுமா என்ன? டூ பேட் மேன்!” என்று பொங்கிவிட்டான் ராம் குல்கர்னி.
ராமின் வெள்ளை முகம் கோவத்தில் சிவப்பேறி இருப்பதைக் கண்டு பக்கென்று வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்கத் துவங்கிவிட்டான் அர்ஜுன்.

“டேய் டேய்.. மரமண்ட.. ஹா ஹா நீ இன்னும் அப்படியே தான் டா இருக்க. சின்ன வயசுல பக்கதுல உக்காந்த ரம்யா உனக்கு சாக்லேட் கொடுக்காம எனக்கு கொடுத்துட்டானு காண்டான பாரு. ஹா ஹா! மடையா நீ முன்னால தான பார்த்த உன் சைட்ல பார்த்தியா, உங்கிட்ட பாஸ் பண்ணிருந்தா சைட்ல ஆபோசிட் டீமா ப்ராக்டிஸ் பண்ண துஷ்யந்த் உன் கிட்ட இருந்து பால ட்ரிபில் பண்ணி போயிருப்பான். ஹா ஹா ஹா! மண்ட கஷாயம் காண்டுல பேசுது பாரு” என்று அர்ஜுனின் சிரிப்பு மேலும் மேலும் அதிகரித்து.
அர்ஜுனின் இரு தோள்களையும் கைவைத்துத் தள்ளி,

“டியூட், உனக்கு சிரிப்பா இருக்கா? என்ன நக்காலா?” என்று கத்தியபடியே ராம் அர்ஜுனை மீண்டும் மீண்டும் தள்ளினான்.
அப்படி அவன் தள்ளும் பொழுதும் சிரித்தபடியே தலையை இட வலமாக அசைத்துக்கு கொண்டு நண்பனின் சிறுபிள்ளைத்தனத்தை நினைத்து பின் எட்டுகள் வைத்து அசைந்தான் அர்ஜுன்.
ஆறடிக்கும் மேல் இருந்த ராம், தன்னைவிட ஒன்று இரண்டு அங்குலம் குறைவான அர்ஜுனை முழு பலத்டோடு இன்னும் ஒரு முறை தள்ள, அர்ஜுன் அப்படியே அந்த புல் தரையில் விழுந்தான்.
விழுந்தும் சிரிப்பை அர்ஜுன் நிறுத்தவில்லை. அதில் ராமின் கோவம் எல்லையைக் கடக்க

“யூ..” என்று கத்தியபடி அவன் மேல் பாய்ந்து ஓங்கி அவன் முகத்தில் குத்தினான் ராம்.
அதுவறை வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்துக்கொண்டிருந்த அர்ஜுன், ராம் தன் மீது பாயவும், அவனது ஜெர்சி காலரைப் பிடித்து இழுத்து ராமை கீழே தள்ளினான். நொடிப் பொழுதில் அர்ஜுன் ராமின் மீது இருந்து, ராம் அர்ஜுனின் பிடியில் இருந்தான்.

அணியின் மற்ற நபர்கள் எல்லோரும் தூரத்தில் இருந்து இவர்கள் உருண்டு புரள்வதை ‘இவனுங்களுக்கு வேற வேலை இல்ல’ என்பது போல் பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டனர்.
அர்ஜுன் ராமின் முகத்தில் ஒரு குத்து விட, இம்முறை ராம் அர்ஜுனின் காலரைப் பிடித்து உலுக்கி உருண்டான். அர்ஜுன் சாதுர்யமாக மீண்டும் அவனைக் கீழே உருட்டி ராம் மீது அமர்ந்து கொண்டு கையை ஓங்கும் தருவாயில்

“மச்சான் மச்சான், அப்படியே நிருத்துடா. உடனே நிமிர்ந்து அங்க ஆடியன்ஸ் அரெனால நின்னுட்டு இருக்க அந்த பொண்ண பாருடா!” என்றான் அர்ஜுனின் கையைப் பிடித்து நிறுத்தி.
சட்டென்று நிமிர்ந்து பார்த்தவனின் ஓங்கிய கை அப்படியே அந்தரத்தில் நின்றது. அர்ஜுன் ஓங்கிய கையை இறக்காமலேயே அந்தப் பெண்ணை புருவங்கள் சுருங்கப் பார்த்தான். அவன் எண்ணத்தில் யோசனை தோன்றியது. ராமின் கழுத்தையும் அர்ஜுன் விடவில்லை. அவன் மீது அமர்ந்தபடியே அர்ஜுன் பார்த்துக் கொண்டிருக்க, ராம் அவனது தலையை இன்னும் அண்ணார்ந்து தலைகீழாக அந்தப் பெண்ணை பார்த்தபடி சிரமப்பட்டு பேசினான்.

“கை கை கையில ட்.. ட்.. ட்.. டெலஸ்கோப் வ.. வ.. வ.. வச்சுகிட்டு நிக்கிறா.. ப்.. ப்.. ப்.. பாருடா!” என்றான் ராம் முக்கி முக்கி.

“முண்டம், அது டெலஸ்கோப் இல்லடா, டெலிஃபோட்டோ லென்ஸ் வச்ச கெமரா” என்றான் அர்ஜுன் அவனது உடல் மொழியிலும் பார்வையிலும் எந்த மாற்றமும் இல்லாமல்.

“ஓ! இ..இ.. இப்ப அ.. அ.. அப்படி ம்.. ம்.. ம் மாத்திட்டாங்களா?” என்றான் ராம்.
ராம் சொன்னதில் மெல்ல அர்ஜுனின் விழிகள் தாழ்ந்தன. இடது புருவத்தை ஏற்றி ராமை முறைத்தான் அர்ஜுன்.

“இ.. இ.. ல்லடா இ.. இ.. இந்தப் பொண்ணு இ.. இப்படி எதுக்குடா நம்மள பாக்கணும்? நம்மள தான்டா பாக்குறா. போன வாரத்துல இருந்து பாத்துட்டு இருக்கேன்டா. நம்ம காலேஜ் கிரவுன்ட்ல ப்ராக்டிஸ் பண்றோம்னா உடனே இவளும் பின்னாடியே வந்தடுறாடா. இ.. இ.. இ.. இன்னும் லாக்கர் ரூம் வ.. வ.. வ.. வரைக்கும் வரதுக்கு முன்னாடி இவள இப்பவே இங்க பிடிச்சு என்னனு வி.. வி வி.. விசாரிக்கணும்டா. ஏதாவது ஸ்பை பண்றாளோ!” என்றான் ராம்.
அர்ஜுன் தனது பிடிகளைத் தளர்த்திவிட்டு ராமின் மேலிருந்து எழுந்தான்.

“ரொம்ப முக்காத, பாத்து குடல் வெளிய வந்துட போகுது. ஆறடிக்கு மேல வளர்ந்தா மட்டும் பத்தாது, கொஞ்சம் மண்டையில மசாலாவும் வேணும். அப்ப தான் சும்மா தேவையில்லாம பொறாமப்படாம கேம் அனாலிசிஸ் பண்ண முடியும். மேல காலி டப்பாவ இருந்தா கண்ட நேரத்துல பாஸ் பண்ண தான் கேட்ப. அதே மாதிரி தேவை இல்லாம இப்படி யோசிக்க தோணும். எந்திரி!” என்று ராமிற்கு கை கொடுத்து எழுப்பிவிட்டவன், இடுப்பில் கைவைத்துக் கொண்டு, தலையை ஏற்றி இறக்கி

“அங்க பாரு அவ கழுத்துல இருக்கற ஐ டி கார்ட் டாக். நம்ம பி எஸ் ஜி ஆர்ட்ஸ் ஆன்ட் சயின்ஸ் காலெஜ் ரெட் டாக். ஏதாவது விஸ் காம் ஸ்டுடென்ட்டா இருக்கும். அசைன்மென்ட்க்கு ஃபோட்டோ எடுக்க வந்துருப்பா. சும்மா கண்டத போட்டு யோசிச்சுக்கிட்டு. முதல்ல இந்த செமெஸ்ட்டர் கிளயர் பண்ற வழிய பாரு, இல்லனா டீம்ல இருந்து உன் பேர தூக்கிடுவாங்க” என்று கூறிவிட்டு திரும்பியவனை ராமின் குரல் தடுத்தது

“ஹெல்லொ கிங் ஆஃப் பி எஸ் ஜி அந்த டெலெஸ்கோப் லென்ஸ் நீ போற இடம் தான் போகுது மேன். நீ சொல்ற மாதிறி அசைன்மென்ட்டாவே இருக்கட்டும், என்ன அது அர்ஜுன் முடியரசன மட்டும் எடுத்து சப்மிட் பண்ற அசைன்மென்ட்டா என்ன? இது வரைக்கும் எத்தன விஸ் காம் கேர்ள்ஸ், கேர்ள்ஸ விடு, ஸ்டுடென்ட்ஸ் இப்படி கேம்பஸ் விட்டு கேம்பஸ் வந்து நின்னு ஃபோட்டோ எடுத்துருக்காங்க, அதுவும் இவ்வளவு பெரிய லென்ஸ் வச்சுகிட்டு?” என்று ராம் மூச்சிறைத்தபடியே பேச, முன்னே நடந்து கொண்டிருந்த அர்ஜுனின் நடை நண்பனின் பேச்சை கேட்கக் கேட்க வேகம் குறைந்தது.

மெல்லத் திரும்பியவனின் முன், தான் கேட்ட கேள்விக்கு தானே பதில் அளிப்பது போல் ராம் காற்றில் தன் வலது கையால் ஒரு பெரிய பூஜ்யத்தை வரைந்து காண்பித்தான். அதாவது அவர்கள் கல்லூரியில் கலைக் கல்லூரியிலிருந்து இதுவரை எந்த காட்சி தகவலியல் (Visual Communication) மாணவர்களும் இந்தப் பக்கம் வந்ததில்லை. மற்ற இடங்களில் அந்த மாணவர்களை கேமராவும் கையுமாகப் பார்த்திருக்கிறார்கள். ஆனாலும் இவ்வளவு பெரிய லென்ஸ் வைத்துக்கொண்டு எவரையும் இதுவரை பார்த்தது இல்லை.
யோசனையாகத் திரும்பியவன் கீழ் உதட்டை மடக்கி பற்களால் கடித்தபடி புருவங்கள் மேலேறி ராமைப் பார்த்தான். இரு கைகளையும், இடுப்பின் கீழ் வைத்துப் பார்த்தவனது பார்வை ராமைத் தாண்டிச் சென்றது. அங்கே அவள் நின்றிருந்தாள்.
அர்ஜுனின் பார்வை செல்லும் இடத்தைப் பார்த்தவன்,

“என்ன, டவுட் வருது இல்ல? இப்ப என்ன சொல்ற? மண்டையில மாசாலா இருக்கு இல்லையா?” என்றான் நக்கலாக.
கைகளை இலகுவாக வீசியபடி முன்னே நடந்தவன், ராமைத் தாண்டிச் செல்ல, ராம் திரும்பாமல் சிரித்துக்கொண்டு இருந்தான்.

“ம்ம்ம் இப்ப பாரு சீன!” என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டிருந்த ராமை, அவன் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில், அவனது சட்டைக் காலரைப் பிடித்து நாய்க்குட்டியை இழுத்துச் செல்வது போல் தனது வலது கையால் இழுத்துக்கொண்டே முன்னே நடந்தான் அர்ஜுன்.

“டேய் டேய்.. என்னடா பண்ற? நீ தான்டா கேப்டன்! நீ தான் போய் கேட்கணும், அது மட்டும் இல்லாம அவ டெலெஸ்ஸ்கோப் உன்ன தான்டா சுத்தி சுத்தி வருது. விடுடா சாலா!” என்று தனது தாய் மொழி ஹிந்தியில் கத்தினான் கோவத்தில்.

“அது என்னடா, நெர்வஸ் ஆனா மட்டும் ஹிந்தில ‘போல்’துற, என்ன? என்ன மட்டும் கோர்த்துவிட்டுட்டு நீ எஸ்கேப் ஆகிடலாம்னு நினச்சியா? போய் பிரச்சனை பண்றதுனு முடிவு பண்ணியாச்சு, அப்புறம் தனியா போய் மாட்ட நான் என்ன கேனா மூனாவா. ஒழுங்கா உன் பத்பூ வாய, அதான் நார வாய ‘பந்து கர்’ த்திட்டு என்னோட பீச்சே ‘ஆயோ’ வர! இல்லனா நான் இதவிட லோக்கல் ஹிந்தில உன்ன ‘காலி தே’வுறேன் (திட்டுறேன்). வாடா சேட்டு பேசாம. என்ன தான் அவ ப்ளான்னு பார்க்கலாம்!” என்று பேசியபடியே மைதானத்தின் மறுபுறம் இருக்கும் ஆடியன்ஸ் அரேனாவிற்கு சென்றான் அர்ஜுன்.

“அரே சோட் சோட் முஜே!” என்று கத்திய ராமால் ஒன்றும் செய்ய இயலவில்லை.
******************************************************

தூரமாக நின்று கொண்டிருந்தவர்கள் தன் பக்கம் நெருங்குவது அந்த கேமராவின் ‘viewfinder’ (கேமாரா பின்னான் இருக்கும் சிறு துவாரை) வாயிலாக தென்பட்டது காத்யாயினிக்கு.
அவ்வளவு நேரமாக தான் தூக்கிக் கொண்டிருந்த நீள லென்ஸ் பொருத்திய கேமராவின் பாரத்தை சற்று மெல்ல இறக்கினாள்.

அங்கிருந்து சென்றுவிடலாம் என்று அவளது பைகளை குனிந்து அவசர அவசரமாக அவள் எடுப்பதற்குள், அதைப் பார்த்துவிட்ட அர்ஜுன், அவனது நடையே வேகப்படுத்தினான்.
அவள் அங்கே உள்ள படிகளில் இறங்குவதற்குள் அவள் முன் சுற்றி வந்து நின்றான், கையில் ராமோடு. ராமை அவன் விடுவதாக இல்லை. ஒருவேளை இந்தப் பெண் முறையான அனுமதியோடு தான் இங்கே வந்திருக்கிறாள் என்றாள் கல்லூரி நிர்வாகத்திடம் இவர்களுக்குத் தான் திட்டு விழும் அவளை சீண்டியதற்கு. ஒருவேளை ராம் சொன்னது போல் அந்தப் பெண் தன்னைத் தான் தொடர்கிறாள் என்றாள், அவளைக் கண்டித்து அனுப்பிவிட வேண்டும். ஏனென்றால் தன்னை மற்றொரு பெண் நெருங்குவதை அவனது காதலி ஷிவானி ஒரு போதும் அனுமதிக்கமாட்டாள். அப்படியோரு உரிமைப் போரட்டம் நடத்திவிடுவாள்.

“டேய் சீக்கிரம் வாடா!” என்று உருண்டு கொண்டிருந்த ராமின் காலரை இன்னும் வேகமாக இழுத்தவனின் நடை ஓட்டமானது. அவளை இவர்கள் நெருங்க நெருங்க அவளது நடையும் ஓட்டமானது.
அவள் மேல் படிகளில் இருக்க, இவர்கள் அப்பொழுதுதான் கீழ் படிக்கு வந்தனர். அவள் மேலே இன்னும் ஏறி பின்னால் இருக்கும் படிக்கட்டுகள் வழியாக பின்பக்கம் இறங்க திட்டமிடுகிறாள் என்று தெரிந்ததும், அர்ஜுன் ராமை விட்டுவிட்டு அவளைப் பின் தொடர்ந்து ஓடினான். அர்ஜுன் தன்னை விடுவித்த நொடி தடுமாறி கீழே விழுந்தான் ராம்.

“டேய் டேய் பன்னாட, இப்படியா விடுவ?” என்று ராம் கத்துவது அர்ஜுனின் காதில் விழுத்தால் தானே. விழும் தூரத்தில் அவன் இருந்தால் தானே. அர்ஜுன் படிகளின் உச்சியில் அவள் முன் நின்றிருந்தான்.
தன் முன் மூச்சிறைக்க நின்றிருந்தவனை நிமிர்ந்து திமிராகப் பார்த்தாள் காத்யாயினி. மனதில் இருக்கும் பதற்றத்தை வெளியே காட்டிக்கொள்ள அவளுக்கு விருப்பம் இல்லை. இம்மாதிரியான தருணங்களில் பெண்கள் எப்பொழுதும் செய்வது, திமிர் என்ற கவசத்தை அணிவது. அதைக் கச்சிதமான செய்தாள் காத்யாயினி.

“ஏய்! எந்த டிபார்ட்மென்ட் நீ? இது எங்க எஞ்சினியரிங்க் காலேஜ் ஃபூட்பால் கிரவுன்ட் இங்க வந்து ஃபோட்டோ எடுக்கணும்னா டீன் கிட்ட பெர்மிஷன் வாங்கி இருக்கணும். நீ வாங்கியிருக்கியா?” என்றான் அர்ஜுன் தனது ஆழ்ந்த குரலில் சற்று சத்தமாக. அவனது குரலும் அவன் தோரணையும் அச்சத்தைத் தந்த போதும் அதைக் குரலில் காண்பித்துத் தந்தியடிக்காமல்,

“நான் எதுக்கு உங்க டீன் கிட்ட பெர்மிஷன் வாங்கணும்? எங்க ஹெச் ஓ டி பெர்மிஷன் கொடுத்திருக்காங்க. நான் ஸ்டுடென்ட் ரிபோர்ட்டர் கார்ட் வச்சுருக்கேன். இங்க கோயமுத்தூர்ல எங்க வேணாலும் நான் ஃபோட்டோ எடுக்கலாம். கோயமுத்தூர்ல எங்க வேணாலும் நான் எடுக்கலாம்ன்ற போது இது நான் படிக்கிற காலேஜோட எஞ்சினியரிங்க் கேம்பஸ். இங்க எடுக்கக் கூடாதா என்ன? ஹ்ம்ம்!”
அவள் சொல்வதைக் கேட்டு அர்ஜுன் சற்று கடுப்பாகித் தான் போனான்.

‘என்ன ரைட் ராயலா பேசுறா? இவள! நேரா விஷயத்துக்கு வருவோம்’

“ஏய்! நீ எங்க வேணாலும் எடுக்கலாம் சரி. அதுக்கு எதுக்கு ஒரு வாரமா என்ன எடுத்துகிட்டு இருக்க?” என்றான் நேரடியாக.

“வாட்? உன்ன எடுத்தேனா? நான்சான்ஸ்!” என்றாள் காத்யாயினி அவன் முகத்திற்கு நேராக. அவளது துவணியில் அர்ஜுனுக்கு தனது கர்வம் சீண்டியது போல் இருக்க,

“பின்ன இல்லையா? இப்படி நீ என் பின்னால சுத்துறது தெரிஞ்சா என் கேர்ள்ஃப்ரெண்ட் உன்ன உண்டு இல்லனு பண்ணிடுவா” என்றான் அர்ஜுன்.

“யாரு அந்த ஷிவானியா? ம்ம்கும்!” என்று காத்யாயினி கூறவும், இம்முறை அர்ஜுனுக்கு உண்மையிலேயே சினம் பொங்கியது.

“உன்ன..” என்று சொன்னவன், “இரு நானே நீ எடுத்த ஃபோட்டோஸ் எல்லாம் இப்ப என்ன பண்றேன்னு பாரு” என்று அவள் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அவளது கையில் இருந்த டிஜிட்டல் கேமராவைப் பிடுங்கி அதில் இருந்த புகைப்படங்களைப் பார்க்க, அர்ஜுனின் கண்கள் விரிந்தன! ஆச்சிரியத்திலும், பொறாமையிலும். ஒவ்வோரு படங்களையும் பார்த்தவன் அவளை நிமிர்ந்து பார்க்க அவள் இமைகள் தாழ்ந்தன.

“அடக் கொடுமையே! இது அவனுக்கு தெரியுமா?” என்றான் அர்ஜுன்.
தலை தாழ்ந்தபடியே இல்லை என்றாள் பெண்.

“ம்ம்ம்” என்றவன் சட்டென்று அவளது கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த அடையாள அட்டையை எக்கி எடுத்துப் பார்த்தான்.

“ஏய் என்ன பண்ற?” என்று கத்தியவள் அவன் அடையாள அட்டையை தான் எடுக்கிறான் என்று தெரிந்ததும் அப்படியே அமைதியானாள்.

“காத்யாயினி அபூயா மைனா!” என்று பார்த்தவனின் விழிகள் அவளை எடை போட்டன. “என்ன ‘யா’ அபூயாவா?” என்று அவன் சிரிக்கவும் வெடுக்கென்று அவனிடமிருந்து அவளது அடையாள அட்டையைப் பிடுங்கியவள்,

“என் கேமராவை கொடுங்க அண்ணா!” என்றாள்.

“என்ன்ன்ன்ன்ன்னாது! அண்ணாவா! ஏய் முதல்ல அப்படி கூப்பிடாத! என் இமேஜ் என்ன ஆகுறது. அப்புறம் அந்த வெள்ள பன்னியதான் வளைச்சு வளைச்சு இத்தன நாள் ஃபோட்டோ எடுத்தியா நீயி ஈஈஈ?” என்று அவன் இழுக்க, அப்பொழுது தான் மூச்சுத் திணற ஏறி வந்தான் ராம்.

“என்னடா மச்சி? விசாரிச்சியா? எதுக்கு உன்னையே சுத்துறாளாம்!” என்று ராம் கேட்க காத்யாயினிக்கு தூக்கிவாரிப் போட்டது.

சட்டென்று அர்ஜுன் அவளைப் பார்க்க, காத்யாயினி கண்களால் அவனிடம் மன்றாடினாள் ‘சொல்லிவிடாதே!’ என்பது போல்.

அர்ஜுன் உதட்டின் ஓரம் ஒரு புன்முறுவல் பூக்க அவளைப் பார்த்துக் கொண்டே ராமிடம்

“எல்லாம் பெர்மிஷனோட தான் மச்சான் எடுக்குறாங்க. நான் செக் பண்ணிட்டேன். இனிமே இங்க நம்ம விளையாடும் போது எல்லாம் வருவாங்க!” என்று கூறியவன் ராமின் கண்கள் காத்யாயினி பக்கம் திரும்பும் போது அவளைப் பார்த்து கண்ணடித்து, ‘உன் ரகசியம் என்னிடம் பத்திரமாக இருக்கிறது’ என்பது போல் இமைகளை மூடித்திறந்தான்.
காத்யாயினியின் மனம், ‘அப்பாடா’ என்று சமன் அடைய மெல்ல முன்னே வந்து கைகளை நீட்டினாள். அதில் அர்ஜுன் அவளது கேமராவை வைத்தான்.

“சரி மச்சான் நான் கீழ போறேன். ஏதோ சம்பவம் இருக்குனு வந்தேன். புஸ்ஸுனு ஆயிடுச்சு” என்று கூறியபடியே ராம் திரும்பி கீழே நடக்க, ராம் தன்னை மறுமுறை பார்க்கமாட்டானா என்று கண்களில் ஏக்கத்துடன் காத்யாயினியின் பார்வை ராமைப் பின் தொடர்ந்தது.

“ஹெல்லோ இவ்ளோ சீன் எல்லாம் இந்த வடக்கனுக்கு ஒவர் ஆயா. சாரி அபூயா. அது என்ன அபூயா?” என்று அவன் அவள் பக்கத்தில் நிற்க, அவன் புறம் மெல்லத் திரும்பி,

“தாங்க்ஸ் அண்ணா” என்றாள் பெண்.

“ஏய் இன்னொரு தடவ அண்ணா மன்னானு சொன்ன அவ்வளவு தான். கால் மீ அர்ஜுன்!” என்று அவன் மிரட்டவும் அவள் சிரித்துவிட்டு

“சரி, சாரி அர்ஜுன்!” என்றாள்.

“ம்ம் இப்ப சொல்லு எத்தன நாளா இந்த வெட்டி பையன் ராம உன் கேமராவும் உன் கண்ணும் ஃபொலொ பண்ணுது?” என்றான் அர்ஜுன். அவனையும் அறியாமல் ஒரு மெல்லிய பொறாமையிலும் அந்தக் கேள்வி எழுந்தது.

“ம்ம்ம்ம் என்ன சொல்ல!” என்று வாய்விட்டு கூறியபடியே யோசித்தாள் காத்யாயினி அபூயா மைனா!

திட்டம் தீட்டப்படும்..
 
Last edited:

Andal Arugan

Administrator
Staff member
திட்டம் 2:

“ம்ம்ம்” என்று அவளது சின்னச் சிணுங்கலை ரசித்தபடி அவளது மென் உதட்டின் துடிப்புகளில் தானும் தொலைந்து போனான் அர்ஜுன். தன் இருகைகளில் இறுகப்பற்றியிருந்த அவளது நூலிடையின் பட்டுச் சருமத்தை மேலும் இறுக்கினான். அதில் மயங்கிக் கிறங்கியவளின் கைகள் அவன் கழுத்தை மேலும் இறுகக் கட்டிக் கொண்டது.

மெல்ல அவளை விடுவித்தவனது நாசி அவள் கழுத்தின் இடுக்கில் வாசம் பிடிக்க அதில் தன்னை மறந்து

“ஐ லவ் யூ அர்ஜுன்” என்றாள்

“ம்ம்ம் மீ டூ” என்றான்” அடுத்தக் கட்ட நடவடிக்கையில் கைகளை நியமித்தபடி அர்ஜுன் முன்னேற, அவனது ‘மீ டூ’ வில் தன் இடுப்பில் இருந்து கடுப்பாக அவன் கையை பிடித்து விலக்கிவிட்டாள் அவள்.

தன் மேல் பசைப் போட்டு ஒட்டிக் கொண்டிருப்பது போல் இருதவனின் மார்பைப் பிடித்து தள்ளிவிட்டவள்

“இத்தன மாசத்துல உனக்கு எத்தன தடவ நான் ஐ லவ் யூ சொல்லிருப்பேன்! நீயே என்னைக்காவது முதல்ல வந்து என்கிட்ட ஐ லவ் யூ சொல்லி இருப்பியா? சரி அதான் இல்ல, நான் சொல்லும் போது ‘ஐ லவ் யூ டூ’நு அட்லீஸ்ட் சொல்லி இருக்கியா? அதுவும் இல்ல! சரி பா அதுவும் வேண்டாம், கேவலம் அந்த ’மீ டூ’ கூட என் பேர அட்லீஸ்ட் சேர்த்து சொல்லலாம் இல்ல? நான் உன் பேர உருகி உருகி சொல்றேன் இல்ல? நீ ஒரு தடவையாவது அப்படி லவ்விங்கா என் பேர சொல்லிருக்கியா?” என்று கத்தினாள் அவள்.

ஈரக் கையால் ஸ்விட்ச் போட்டு மின்சாரம் தாக்கியவனை காப்பாற்ற உருட்டுக் கட்டையால் அடித்து உடலில் பாயும் மின்சாரத்தை துண்டித்தது போல் உணர்ந்தான் அர்ஜுன். மோகம் என்னும் மின்சாரம் தாக்கி உச்சத்தில் இருந்தவனை, சட்டென்று தள்ளிவிட்டதும் தன்னிலை அடைய ஒரு நொடி ஆனது.

தலையை கோதி தன்னைத் தானே சமன் செய்து கொண்டவன், அவளை நிமிர்ந்து நோக்கினான். ஒற்றைக் கை இடுப்பில் இருக்க, மற்றொரு கையால் அவன் அணிந்திருந்த வெள்ளைச் லினென் சட்டையின் காலரை பற்றி பின்னுக்கு இழுத்தான்.

தலையை இடவலமாக அசைத்து,

“ஹெய் என்ன பேபி! காமான் டா” என்று அவளை சமாதானம் செய்ய முயன்று விட்ட இடத்திலிருந்து தொடர எண்ணி முன்னே சென்று அவள் கையை பற்ற முயல, அதை தட்டிவிட்டவள்

“ஸ்டாப் இட். இப்ப கூட ‘ஷிவானி’னு ஒரு தடவ கூப்பிடுறியா பாரு! எப்ப பாரு, ஃபுட்பால், டீம், காலெஜ் இவென்ட், டிபார்ட்மென்ட், மேட்ச்னு தான் சுத்துறியே தவிற, என்னைக்காச்சும் நீயா எனக்கு கால் பண்ணிருக்கியா?” என்று வெடித்தாள் ஷிவானி.

“ஹெய் காமான் டா! நான் எங்க எஞ்சினீயரிங்க் காலேஜ் ஸ்டுடென்ட் ப்ரேசிடென்ட், ஃபூட்பால் டீம் கேப்டன் டீ! எவ்வளவு வேலை இருக்கும் தெரியுமா எனக்கு?” என்றான் லேசான கர்வத்துடன்

“ஆமாம், நாங்க எல்லாம் வெட்டியா சுத்துறோம் பாரு! நானும் தான் பிசி! எங்க ஆர்ட்ஸ் ஆண்ட் சயின்ஸ் காலெஜ் ஸ்டுடென்ட் பாடில நான் விமென் ரெப்! நானும் எங்க மீடியா டிபார்ட்மென்ட்ல நிறைய கிலப்ல இருக்கேன்! எனக்கு இன்ஸ்டால 5lac followers இருக்காங்க. என் ரீல்ஸ்க்கு அவ்வளவு லைக்ஸ் ஆன்ட் கமென்ட்ஸ் வரும்! நானும் சொஷியல் மீடியா இன்ஃப்லுஎன்செர் டா! ஆனா அப்படி பிசியா இருந்தும் உனக்குனு நான் டைம் ஒதுக்குறேன் இல்ல! உன்னால என் கூட இருக்கும் போது கூட ஃபுல் கான்சென்றேஷன் எனக்கு தர முடியல!” என்று கத்த ஆரம்பிதவளின் குரல் மெல்ல மெல்ல குறைந்து விசும்பலில் முடிந்தது.

‘ஐயயோ, இவ அழுக போறாளே! லைப்ரரில இந்த மாதிரி ஒரு சிசிடிவி கேமேரா இல்லாத ஓரம் கிடைக்கிறதே பெரிய விஷயம்! கிடச்ச நேரத்துல கொஞ்சம் யூஸ் பண்ணிக்கலாம்னு பாத்தா இவ இப்படி ட்ராமா குவீனா மாறுவானு தெரியாம போச்சே டா அர்ஜுன்! இவ இத சண்டையா ஆக்குறதுக்கு முன்னாடி எஸ்கேப் ஆகிடுடா தம்பி!’ என்று அவன் மனதில் நினைக்க, அந்த நோடி அவனது கைப்பேசி அலறியது.

திறையில் ‘ராம் காலிங்க்’ என்று வர

‘அட அட நண்பேன் டா! என்ன காப்பாத்துறதுக்கே உன்ன படச்சுருக்கான் டா ஆண்டவன்!’ என்று நண்பனை

“ஒரு நிமிஷம் ஜட் வன் மினிட் டா பேபி. சாரி ராம் கூப்பிடுறான் ஏதாவது முக்கியமான விஷயமா இருக்கும். ஜஸ்ட் ஹோல்ட் தி தாட் ரைட் தெர்! வீ வில் கன்டிநியூ ஆர் டிஸ்கஷன்!” என்று வலது கையின் ஆள்காட்டி விரலை ‘ஒரு நிமிடம் என்பது போல்’ சைகை செய்து விட்டு திரும்பினான்.

“ஆஹான், சொல்லு மச்சி!” என்று அவன் திரும்பியபடிய பக்கத்தில் விழுந்து கிடந்த அவனது பழுப்பு வண்ண ‘ரைடிங்க் லெதர் ஜாக்கெட்டை’ எடுத்தான். அதில் இருந்தே ஷிவானி புரிந்து கொண்டாள், அர்ஜுன் ராமிடம் பேசும் சாக்கில் ஆப்படியே ‘எஸ்கேப்’ என்று.

உடனே கத்த துவங்கி விட்டாள் ஷிவானி

“அர்ஜுன் நில்லு அர்ஜுன், ஸ்டாப் இட் ஐ சே, டோன்ட் இக்னோர் மீ” என்று பின்னால் இருந்து அவள் கத்த,

‘ஷு ஷு இது லைப்ரரி’ என்று ராமுடன் ஏதோ பேசிக்கொண்டே சைகையில் அர்ஜுன் சுட்டிக் காட்டவும், வேறு வழி இல்லாமல் அமைதியானாள் ஷிவானி.

புத்தகங்களின் வரிசைக்கிடையே ஓட்டமும் நடையுமாக வெளியே வந்தான் அர்ஜுன்.

“மச்சான், ஆபத்தில் காப்பான் நண்பனு ப்ரூவ் பண்ணிட்ட டா. இல்லனா இன்னேரம் நான் ஷிவானி கிட்ட மாட்டி சின்னா பின்னம் ஆகியிருப்பேன். சொல்லு டா என்ன விஷயம்” என்றான் அர்ஜுன், தனது வலது கை ஆள்காட்டி விரலை கொக்கி போல் கொண்டு ஜாக்கெட்டை தோளுக்கு பின்னால் தொங்கவிட்டபடியே.

“டேய் ஷிவானி மாதிரி ஒரு பளிச்சுனு ஒரு பொண்ணு உனக்கு கிடைச்சும் அவள இப்படி உன் பின்னாடி சுத்தவைக்கிற பாரு! உனக்கு எல்லாம் நேரம் டா! எப்படி டா எல்லா பொண்ணுங்களுக்கும் உன்ன பிடிக்கிது! நம்ம கேம்ப்பஸ் என்ஜினியரிங் பொண்ணுகள்ல இருந்து எதிர் கேம்பஸ் ஆர்ட்ஸ் காலேஜ் ஹார்ட் த்ரொப் ஷிவானி முதல்கொண்டு, ஏன் நேத்து உன்ன சுத்து வந்த அந்த ஓபாமா கசின் வரைக்கும் உனக்கே அடிக்கிது டா லக்கு! நம்மள எவளும் கண்டுக்க மாடேங்கிறா! ஹம்ம் இத்தனைக்கும் நான் சும்மா ரம்பீர் கனக்கா ஹான்சமா தான் இருக்கேன்!” என்று புலம்பிக் கொண்டே போனவனின் புலம்பலைக் கேட்டு நாக்கை உள்ளே சுருட்டி ஒரு மந்தகாசைப் புன்னகை சிந்தியவனிந் புருவங்கள் முடிச்சிட்டது.

“என்ன ஓபாமா கசின் ஆ! அது யாரு டா அது?” என்றான் அர்ஜுன். பேசிக்கொண்டே அவன் ஆர்ட்ஸ் காலேஜின் மையக் கட்டிடத்தின் உள்ளே வந்திருந்தான். ஷிவானி அவசரமாகப் பேச வேண்டும் என்று அழைத்ததும், அவர்கள் எப்பொழுதும் சந்திக்கும் பி எஸ் ஜி, கலைக் கல்லூரியின் புத்தக நிலயத்திற்கு சென்றிருந்தான். பயிற்சிக்காக மிகவும் சீக்கிரமாக காலேஜ் வந்திருந்ததால் அவர்கள் சந்திக்கும் நேரம் ‘லைபரரியிலும்’ ஆள் நடமாட்டம் இல்லாமல் இருக்க அர்ஜுன் ஒரு ‘குட்டிக் கதை’ படித்து விட்டு உற்சாகமாக வெளியே வந்தான்.

கதை முடிவதற்கும் கல்லூரியின் பரப்பான சூழல் துவங்குவதற்கும் சரியாக இருக்க, மாண்வர்களின் கூட்டத்தின் நடுவே ஓட்டமும் நடையுமாக வந்தான் அர்ஜுன்.

“அதான் டா நேத்து உன்ன வளச்சு வளச்சு ஃபோட்டொ எடுத்தாளே அவ தான்! அந்த ‘ப்ளாக்’ பொண்ணு!” என்றான் ராம்.

ராம் அந்த ‘ப்ளாக்’ பெண்ணைப் பற்றிக் கூறிப்பிடுவதற்கும், கூட்ட நெரிசலில் அவன் மீது குட்டையாக யாரோ ஒருவள் மோதுவதற்கும் சரியாக இருந்தது.

மோதியதில் அவன் ஜாக்கெட் கீழே விழ, அதைக் குனிந்து எடுக்க முயன்றவனின் முன் அவளும் குனிந்தாள்.

“சாரி” என்றாள் அவள். நிமிர்ந்து பார்க்காமலேயே தானும் குனிந்து ஜாக்கெட்டை எடுத்தவன்

“இட்ஸ் ஓகே” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அந்தப் பெண் சட்டென்று எழுந்து திரும்பிச் சென்று விட, பின்னால் அவளது கூந்தலை வைத்து அடையாளம் கண்டு கொண்டான் அர்ஜுன்.

மறு புறம் ராம் “ஹெல்லோ பாஸ் இப்ப யாரு டா உன் மேல விழுந்தது! இப்ப யாரு சுத்தி வாரா உன் பின்னாடி! எப்படியும் எதிர் கேம்பஸ்ல தான் இருப்ப! எங்க இருந்த என்ன உன் ஃபேன்ஸ் கூட்டம் உன்ன சுத்தி வரும்” என்று பெருமூச்சு விட்ட ராமிடம் மனதில் பேசியவாரு

‘அட வடக்கு வாத்தே, இப்ப இடிச்சது என் ஃபேன் இல்லடா, உன் ஃபேன் டா இடியட். உனக்கு தான் வெள்ள தோள தவிர வேற கண்ணுல படாதே! வெள்ளையா கொரில்லவா இருந்தாக் கூட ‘வாவ்’ சொல்லி வழியிற வடிகட்டுன வடக்கன் தானே நீயி!’ என்று மனதில் பொருமியவன்

“டேய் மச்சான் நான் அப்புறம் பேசுறேன் டா!” என்று ராமின் அழைப்பை துண்டிக்க முயன்றான்.

“டேய் டேய்.. நான் ஷிவானி கிட்ட போட்டுக் கொடுத்துடுவேன் டா, யார் கிட்ட டா பேச போற, எனக்கும் இன்ட்ரோ கொடுடா!” என்று ராம் கத்த கத்த அழைப்பை துண்டித்தான் அர்ஜுன்.

மாணவர்களின் கூட்ட நெரிசலில் முன்னே தொலைந்துச் சென்றவளின் பின்னே சற்று இலகுவாக ஒடினான் அர்ஜுன். அர்ஜுன் நல்ல உயரம் தான். ஆறடிக்கும் ஒரு அங்குளம் குறைந்தவன் தான். ஆனால் அங்கே அவனை விட சில மாணவர்கள் உயரமாக இருக்க, லேசாக குதித்து குதித்து அவளை தேடியாவரே முன்னே சென்றான்.

ஆனால் அவள் அவன் கண்களில் பட்டால் தானே! என்ன குதித்தாலும், வெரும் ஐந்தடி இருப்பவளை அந்த கூட்டத்தில் எப்படிக் கண்டுபிடிக்க!

“ச்சை! என்னடா எல்லாரும் பிடியா ஷுவர லிட்டெர் லிட்டரா கூடிச்சீங்களா என்ன! எப்படி செல்ஃபோன் டவர் மாதிரி வளந்து தொலச்சுருக்கானுங்க! நம்மலையே குள்ளமா ஃபீல் பண்ண வைக்கிறாங்க!” என்று வெளியே புலம்பியவாரே குதித்தவனின் கண்களில் அந்த உச்சிக் கொண்டைப் பட்டது.

அவளது கொண்டை தான்! ஐந்தடி இருந்தவளின் மண்டைக்கு மேல் இருந்த கொண்டை ஒரு ஐந்து அங்குலம் இருக்க, அதைச் சுற்றி ஒரு சிகப்பு ‘க்ரன்ச்சீஸ்’ எனச் சொல்லும் பட்டி அனிந்திருந்தாள்.

அதை கண்டதும் மெல்ல புன்னகையித்தவன்

“ஹெய் ஹெய்.. ஸ்டாப் கிர்ள்.. ஐயொ அவ பேரு என்னமோ சொன்னாளே… காட் டேம் இட் அர்ஜுன், இப்படியா பொண்ணுங்க பேர மறப்ப?” என்று முதல் வாக்கியத்தை கத்திக்கொண்டும், இரண்டாவது வாக்கியத்தை தனக்குத் தானே கூறிக்கொண்டும் அந்த நீண்ட ‘காரிடோரின்’ கூட்ட நெரிசலில் குதித்திக் கொண்டே முன்னேறினான்.

“என்ன சொன்னா! ம்ம்ம் ஆஹ்ன்! ஹேய் ஆயா!” என்று நியாபகம் வந்ததில் அவனது புன்னகை மேலும் விரிய கத்தினான்.

பக்கத்தில் ‘காரிடோரை’ பெருக்கிக் கொண்டிருந்த சீருடை அனிந்த மூதாட்டி

“சொல்லுங்க தம்பி” என்று அவன் முன்னே வர, அர்ஜுன் சற்று விக்கித்து அப்ப்டியே நின்றான்.

“இ இ இல்ல பாட்டி! சாரி உங்கள இல்ல, அந்த ஆயாவ” என்று அவன் தனது வலது கையை நீட்டி மின்னே காண்பிக்கவும், நீட்டிய கைகளின் முன் அவள் வந்து நிக்கவும் சரியாக இருந்தது.

“அண்ணா ப்ளீஸ்! என் பேர இப்படி சொல்லாதீங்க!” என்று கண்களில் நீர் கோர்க்க நின்றவளைக் கண்டதும் ‘பக்’ கென்று சிரித்துவிட்டான் அர்ஜுன்.

பக்கத்தில் இருந்த பாட்டி இருவரையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு

“நீ தான் புது ஆயாவாமா! ஹ்ம்ம் இப்ப எல்லாம் கூட்டறவங்க கூட ஸ்டுடென்ட் மாதிரி இருக்காங்க!” என்று கூறிகொண்டு அவர் செல்ல, அதில் மேலும் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்துவிட்டான் அர்ஜுன்.

அந்தப் பாட்டி அப்படிச் சொல்லவும், கடுப்பில் தோளில் மாட்டி இருந்த தனது பேக்பாக்கை முன்னே இழுத்து அதில் இருந்த அடையாள அட்டையை அணிந்தாள் பெண். கண்களில் கலங்கிய நீர் ‘விழுந்துவிடுமோ’ என்று இருந்தது.

அவள் அடையாள அட்டையை அணிவதற்கும், அர்ஜுனின் சிரிப்பு அடங்குவதற்கும் சரியாக இருக்க, அப்பொழுது தான் அவளது கண்களைப் பார்த்தான். சட்டென்று அவனது சிரிப்பு நின்றது.

“ஓவரா போர அர்ஜுன்” என்று அவனது மன்சாட்சி அவனை எட்டி மிதிக்க

“ம்ம்கும்ம்!” என்று செருமிக் கொண்டு முன்னே கையை நீட்டி நேற்று போல் அவளது அடையாள அட்டையை எடுத்துப் பார்த்தான்.

“காத்யாயினி அபூயா மைனா!” என்றவனின் பார்வை நிமிர்ந்து அவளது தோற்றத்தை கவனிக்கத் துவங்கியது. லேசர் ஒளி போல் அவனது பார்வை சட்டென்று உச்சி முதல் பாதம் வரை சட்டென்று அளக்க

‘நல்ல பியான்சீ கலர்! ஃபிசீக்கும் (Physique) ஆஃப்ரோ அமெரிக்கன் (Afro- American) மாதிரி தான் இருக்கு! மண்ட மட்டும் முளப்பாரிய தூக்கி வச்சா மாதிரி இருக்கு! ஸ்ப்ரிங்க் முடி கூட இல்ல! இது பாத்திரம் தக்குற தேங்கா நாரு! ஆனா நல்லா தமிழ் பேசுறா! யாரு இவ!’ என்று யோசித்துக் கொண்டிருந்தவனின் சிந்தனை போகும் திசையை அறிந்துக் கொண்டவள், அவனிடம் விளக்கம் கொடுக்க பிடிக்காமல். சட்டென்று அவனது கைகளில் இருந்த அவளது அடையாள அட்டையை பிடுங்கிவிட்டு விருட்டென்று முன்னே திரும்பி அவள் நடக்கவும் தான் அர்ஜுன் தனது சிந்தனையை விட்டுச் சிதறினான்.

“ஹே ஹே நில்லு நில்லு! நில்லு! ஹேய் ஆயா..” என்று அவன் கத்தவும் , முன்னே நடந்தவாரே அவனைத் திரும்பி தீப் பார்வைப் பார்த்து விட்டு திரும்பி வேகமெடுத்தாள்.

“ஐயையோ கோச்சுகிட்டாளே! ஹே இத சொல்லிட்டுப் போ மேன் நீ என்ன ‘நிக் ஃபூரி’ (Nick Fury) தங்கச்சியா? இல்ல ஓஃப்ரா வின்ஃப்ரீ (Oprah Winfrey) கசின் சிஸ்டரா?” என்றான் அழகிய புன்னகை சிந்தியபடி!

அவள் காதில் விழுந்தாலும் கடுப்பில் காட்டமாக முன்னே நடந்தவளை விடாமல் அவன் துரத்த

“ஹே நில்லு நில்லு.. ஆ” என்று துவங்கியவனை மீண்டும் அவள் திரும்பி முறைக்க “ சாரி சாரி.. ஐயோ வேர என்னமோ பேரு இருந்ததே! ஆஹ் ஹேய் மைனா! மைனா!” என்று அவன் கூவினான்.

“ஹே மைனா! நில்லு மைனா! மைனா!” என்று அவன் கத்தவும்

“யேஸ் ஐ ஆம் மிஸ்டர் மைனா! ஹூ ஆர் யூ யங்க் மேன்!” என்று ஆப்ரிக்க துவணியில் ஆங்கிலம் பேசியவாரே காத்யாயினிக்கும் அவனுக்கும் இடையில் வந்து நின்றார் ஒரு கருப்பினத்தவர்.

அர்ஜுனின் கண்கள் அவர் தோண்டைக் குழிவரை தான் எட்டியது. அவர் கண்களை சந்திக்க அதற்கும் மேலே அவன் நிமிர வேண்டியதாக இருந்தது. மெல்ல மெல்ல அவன் பார்வை நிமிர, அவர் கண்க்ளைச் சந்திதத்தும், அந்த உர்வத்தின் உயரத்தைக் கண்டு அவனுக்கே பீதி ஆகிவிட, எச்சில் விழுங்கியவனின் தொண்டைக்குழி ‘பஞ்சி ஜம்பிங்’ செய்தது.

“யப்பா யாரு டா நீ மைக்கேல் ஜார்டன் அண்ணனா!” என்று அவன் வாய்விட்டு கூற.

“இல்லப்பா அவரு ஒரு வகையில எனக்கு தூரத்து சித்தப்பா பையன் முறை வந்தாலும் வரலாம்! டெக்னிகலி தம்பியா இருந்தாலும் இருக்கலாம். இல்லாமலும் போகலாம் இன்னும் வரலாற நாங்க புரட்டிப் பார்க்கல! ஏன்னா ஆவரு அஃப்ரோ அமெரிகன் நான் கென்யன்” என்று தெள்லத் தெளிவாக தமிழில் அவர் பதில் கூற மேலும் திகைத்தான் அர்ஜுன்.

அவனது திகைப்பை இன்னும் கூட்டியவாரு அவர்கள் முன் வந்து நின்றாள் காத்யாயினி

“மைனா எங்க அப்பா! ஐ ஆம் கேத்தி!” என்றாள் இரு கைகளை மார்பிற்கு குறுக்காக கட்டிக் கொண்டு. அவர்கள் முன் வந்து நின்று அர்ஜுனின் திகைப்பை ‘பீதியாக’ மாற்றினாள் ஷிவானி.

“இதான் உன் முக்கியமான வேலையா? ஏய் ‘நிகேஷ்வரி’ இங்க என்னடி என் பாய் ஃப்ரெண்ட் கிட்ட வழிஞ்சுட்டு நிக்கிற?” என்று அங்கே நின்ற காத்யாயினின் தந்தை ஜுமோ மைனாவை கூட பொருட்படுத்தாமல் துவங்கினாள் ஷிவானி.

அவள் ‘நிகேஷ்வரி’ என்று அழைத்ததில் ஜுமோவின் கண்களின் சிணம் குடி கொள்ள, கேத்தி அவரை நிமிர்ந்து பார்த்து கண்களால் அமைதிக் காக்கும் படி மன்றாடினாள்.

‘செத்தான் டா ஃபூட்பால் கேப்ட்டன்’ என்றது அர்ஜுனின் மனசாட்ச்சி ‘சீனை’ பார்க்க பாப்கார்ன் மென்றபடி!

திட்டம் தீட்டலாம்..
 

Andal Arugan

Administrator
Staff member
திட்டம் 3:



ஒரு நிமிடம் என்ன செய்வதென்று திரு திருவென விழித்தான் அர்ஜுன். ஷிவானியிடம் பதில் சொல்ல அவசியமில்லை என்று அவன் நினைக்கக்கூடியவன் தான், ஆனால் அவனை பொறுத்த வரையில் அவர்கள் இருவரும் ‘கமிட்டட்’! அதனால் அவளிடம் உண்மையாக இருக்க கடமைப்பட்டிருக்கிறான்.

அவளை இப்படி அவசரமாக விட்டுச் சென்றவன் ஏன் இங்கே இவர்களிடம் நின்று பேச வேண்டும்? அவள் கேட்பது சரி தானே.

‘ஐயோ இப்படி சிங்கிலா சிக்கிட்டியே ப்ரொ’ என்று எண்ணியபடியே ஒரு கைக்கொண்டு தலையை சொரிந்தவனை ஷிவானி தனது மார்பிற்கு குறுக்காக கைககளைக் கட்டிக் கொண்டு முறைத்தாள்.

‘இப்ப நான் என்ன சொல்ல!’ என்று அவன் விழித்தவிழியில் ஷிவானியின் எரிச்சல் பார்வை மேலும் கோபத்தை தழுவியது.

ஷிவானியின் பார்வை காத்யாயினியிடம் சென்று மீண்டும் அர்ஜுனிடம் வந்தது.

காத்யாயினியின் தந்தை அங்கே என்ன நடக்கிறது என்று காத்யாயினியைப் பார்க்க, அர்ஜுன் ஷிவானியிடம் ஏதோ சொல்ல வாயை திறப்பதற்குள்

“பாபா” (Baba-கென்யாவில் தந்தையை அழைக்கும் விதம்) என்று அவள் தன் தந்தையிடம் பேசினாலும், அவளது கண்கள் அர்ஜுனிடம் நிலைத்தது

“He is the student President of this college. You wanted to meet him regarding the student exchange program right?”

என்று தனது தந்தையிடம் திரும்பி கூறினாள்.

“வாட்?” என்று ஜுமோ மைனா மகளை குழப்பமாக பார்க்க, மகள் தந்தையிடம் கண்களால்

‘பாபா, ப்ளே அலாங்க்’ (கூட முட்டு கொடுங்க) என்பது போல் பார்த்து வைத்தாள்.

“ஓ ஓ ஓ ஓ.. “ என்று திக்கித் திணறி அவர் “இன்தியோ இன்தியோ!” (ஆம் ஆம்) மகளைடம் தலையை ஆட்டினார்.

அவள் கூறுவதையும் அவர் தலையாட்டுவதையும் கண்ட அர்ஜுனின் கண்கள் குழப்பத்தை தழுவியது, ‘ஏதோ நமக்கு ஹெல்ப் பண்ண என்னமோ சொல்றா, லீட் கொடுக்கறா, அப்படியே லீட பிடிச்சுக்கிட்டு பின்னாடியே போய் தப்பிக்கனுமா? அதுக்கு தான் கண்ண கண்ண உருட்றாளோ? அட மட சாம்பிராணியே! ஆமாம் டா!’ என்று மனதினுல் விவாதம் செய்துக் கொண்டிருந்தவன் ஒரு வழியாய்

“ஹெல்லொ சிர்!” என்றான் தனது வலது கையை நீட்டி.

“இவர் தான் எங்க அப்பா, ஜூமோ மைனா டெல்லில கென்யன் ஹை கமிஷன்ல (ஒரு காமன் வெல்த் நாட்டின் தூதரகம்) கான்சல் ஜெனெரலோட செக்ரடரியா இருக்கார். இங்க உங்க என்ஜினியரிங்க் காலெஜ்ல யுனுவெர்சிடி ஆஃப் நைரொபி (university of Nairobi) கூட ஒரு ஸ்டுடென்ட் எக்ஸ்சேஞ் ப்ரொகிராம் நடக்க போகுது. உன்ன உங்க டீன், ப்ரின்சிபால் ஆன்ட் நம்ம காலேஜ் கரஸ்பாண்டன்ட் கூப்பிடுவாங்க.” என்று மீண்டும் தனது தந்தையைப் பார்த்தாள் காத்யாயினி.

இம்முறை மகள் என்ன செய்கிறாள் என்று புரிந்து கொண்ட ஜுமோ, அவள் நடிப்பிக்கு ஏற்றார் போல் அவரும் முட்டு கொடுத்தார்.

“னைஸ் டூ மீட் யூ யங்க் மேன்! என்ன கோர்ஸ் பண்றீங்க?” என்று ஆங்கிலத்தில் ஆரம்பித்து அழகிய தமிழிலில் முடித்தவரை, அர்ஜுன் கண்கள் விரியப் பார்த்துக் கொண்டே மரியாதை நிமித்தமாக தனது வலது கையை நீட்டினான் அவரிடம் கைக் குலுக்க.

“வாவ்! நீங்களும் தமிழ் பேசுவீங்களா?” என்று வியந்து பார்த்தவனிடம்.

“ஹா ஹா, அழகான தமிழ் பொண்ண கல்யாணம் பண்ணி 27 வருஷம் லவ்லி மேரேஜ்ல இருந்தா தமிழும் அழகா வரும் தானே!” என்று அவர் சொன்ன பின் தாந் அர்ஜுனுக்கு எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைத்தது.

“ஓ!” என்று அந்த ‘ஓ’ வை இழுத்தவனின் கண்கள் கோலிக்குண்டிகள் போல் ஆனது. “அதானா?” என்று அவன் இழுத்தபடியே அவனது பார்வை காத்யாயினியை மேலும் கீழும் பார்த்தது.

அதில் புருவங்கள் சுருங்க அவனைப் பார்த்த காத்யாயினிக்கு புரிந்தது அர்ஜுனின் பார்வையில் இருந்த அர்த்தம். அர்ஜுன் அவளைப் பார்த்த பொழுது ஜூமோவின் கண்கள் மகளை ஆதூரியமாகப் பார்த்துக் கொண்டிருக்க, அர்ஜுன் தனது பார்வையை சட்டென்று மாற்றிக் கொண்டான்.

“எதானா?” என்று கைகளை கட்டிக் கேட்டாள் காத்யாயினி.

“இல்ல இல்ல ஒன்னும் இல்ல!” என்றான்

“என்ன இல்ல?” என்றூ இப்பொழுது விடாமல் லேசான கடுப்புடன்

பின் மண்டையில் ஒன்று போடலாமா என்று இருந்தது ஷிவானிக்கு.

‘அந்த நிகேஷ்வரி அப்பா எதுக்கு இவன பார்க்க வரனும்! என்னமோ, இத சாக்க வச்சு அர்ஜுன மடக்கி போடாம இருந்தா சரி. இவள’ என்று நினைத்த ஷிவானியின் தாடைகள் இறுகியது. அர்ஜுனின் பார்வையை ஜுமோ பார்க்கவில்லை என்றாலும் ஷிவானி பார்த்துவிட்டாளே.

அர்ஜுன் காத்யாயினியின் உடற்கட்டை ஆராய்ந்தான் தான். காத்யாயினி லதின் அமெரிக்க பெண்கள் போல் நிறம் கொண்டிருந்தாலும் அவள் உடல்வாகு ஆப்ரிக்க பெண்களைப் போல் அழகிய வனப்பைக் கொண்டுள்ளது ஏன் என்று அர்ஜுன் புரிந்து கொண்டான்.

‘physique மட்டுமா கென்யன் விமன் மாதிரி இருக்கு, மண்டையில இருக்க ஸ்ப்ரிங்க் முடி கூடதான்’ என்று அவன் ‘மைண்ட் வாயிஸ்’ நக்கலடிக்க,

‘ஏய் அர்ஜுன் நோ பாடி ஷேமிங்க்!’ என்று தன்னைத் தானே கடிந்து கொண்டு சட்டென்று ஜூமொவின் பக்கம் திரும்பினான்.

“Sir, சொல்லுங்க நான் என்ன பண்ணனும்?” என்றான்.

இப்பொழுது திரு திரு என்று விழிக்கும் முறை ஜூமோவுடையதாயிற்று. தன் மகள் சம்பந்தம் இல்லாமல் இவனிடம் தன்னை கோர்த்துவிட்டுவிட்டாள். இப்பொழுது இவனிடம் என்ன சொல்ல என்று விழிக்க,

“பாபா, வாங்க நடந்துகிட்டே பேசலாம். எதிர் கேம்பஸ் தான் அர்ஜுனோட கேம்பஸ். அங்க போய் இவங்க ஸ்டுடென்ட்ஸ் யுனியன் ஆஃபிஸ்ல வச்சு பேசுங்க.” என்று காத்யாயினி கூறவும், அதுதான் சாகென்று அர்ஜுனும்

“வாங்க வாங்க சிர், நானே உங்கள கூட்டிட்டு போறேன்.” என்று அவரை கைபிடித்து இழுக்காத குறையாக அழைத்துக்கொண்டு முன்னே நடந்தான்.

மகளிடம் திரும்பி ‘சரி டியர்! உனக்கு க்ளாசுக்கு லேட் ஆகும்! மறக்காம சாபிடுட்டு க்ளாசுக்கு போ’ என்று கென்ய மொழியில் பேசியவரிடம்.

“Sawaa baabaa!” என்றாள் பெண். இருவரின் சம்பாஷனையை கேட்ட அர்ஜுன்

“என்னது சாகவாவா? அதெல்லாம் செத்துறாத மா! உனக்காக என் நண்பன நான் ரெடி பண்றேன்!” என்று மெல்ல திரும்பி அவள் காதருகில் குணிந்து சொல்லிவிட்டு வேகமாக நட்னஹ்து சென்றான் அர்ஜுன். அவன் வேகத்தை இரேண்டே எட்டுகளில் அவர் தொட்டு பிடித்துக் கொண்டு அவனோடு சிரித்து பேசிய படியே நடந்தார். தன் பெண்ணிடம் திரும்பி கையசத்துவிட்டு விடைப் பெற்றார்.

“அர்ஜுன், அர்ஜுன்” என்று ஷிவானியால் கத்த மட்டும்மே முடிந்தது. அவனை பின் தொடர்வதற்குள் கல்லூரி வகுப்புகளுக்கு மணி அடித்துவிட ஷிவானி வேறு வழி இல்லாமல் தனது கைகளை வெருப்பில் உதறிவிட்டு காத்யாயினியை ஒரு முறை முறைத்துவிட்டு

“ஏய் நிகேஷ்வரி! ஜஸ்ட் ஸ்டே அவே ஃப்ரம் ஹிம்!” என்று எச்சரிப்பது போல் அவள் பேச

“ம்ம்ம் யூ பெட்டர் ஸ்டே இன் யொர் லிமிட்ஸ் ஷிவானி! நீ ஆசப்படுற எந்த ஒரு விஷயத்து மேலைஅயும் எனக்கு துளி கூட இன்ட்ரஸ்ட் இல்ல. அது டிரேசா இருந்தாலும் சரி, ஒரு பையனா இருந்தாலும் சரி. ஏன் தெரியுமா? அது எல்லாமே லோ க்ளாசா தான் இருக்கும்! எனக்குனு ஒரு க்ளாஸ் இருக்கு! அதுனால் இந்த வெட்டி உருட்டு மிரட்டு எல்லாம் எங்கிட்ட வச்சுக்காத!” என்று காத்யாயினி ஒரு நக்கல் சிரிப்புடன் தோள்களை குலுக்கிவிட்டு தான் வகுப்பிற்கு சென்றாள்.

ஷிவானி பற்களை கடித்தபடியே மறூபுறம் திரும்பி தன் வகுபிற்கு சென்றாள்.

“So young man, is she your girlfriend?” என்று ஷிவானியைப் பற்றி அர்ஜுனிடம் கேட்டார் ஜூமோ. நடந்துக் கொண்டே அவரை திரும்பிப் பார்த்தவன்

“Yes Sir!” என்றான் மரியாதையுடன்.

“அதான் அவகிட்ட இருந்து தப்பிக்க என் பொண்ணு உனக்கு ஹெல்ப் பண்ணாளா? ஹா ஹா ஹா! கன்னிங்க் லிட்டில் கிர்ள்!” என்று அவர் உயரத்திற்கு ஏற்ற குரலில் சத்தமாக சிரித்தார் ஜூமோ!

நடந்து கொண்டே தலையை சொரிந்த அர்ஜுன் “அது அது அது! She is very possessive uncle! நான் சாதரணமா ஒரு க்ளாஸ்மேட் கிட்ட பேசுனா கூட அவ்வளவு தான்! என்ன ஒன்னும் செய்ய மாட்டா அந்த பொண்ண போட்டு பாடுத்தி எடுத்துருவா!” என்று கூறிக் கொண்டே, எதிரே இருக்கும் அவனது பொறியியல் கல்லூரி வளாகத்தை வந்தடந்தனர் இருவரும்.

“சொல்லுங்க அங்கிள்! ஹவ் மே ஐ ஹெல்ப் யூ?” என்றான் அர்ஜுன்.

“தாங்க்ஸ் அர்ஜுன். உங்க டீன் ஆன்ட் காலெஜ் மானேஜ்மென்ட் கிட்ட எல்லாம் நாங்க எப்பவோ பேசி MOU(புரிதல் ஒப்பந்தம்) சைன் பண்ணியாச்சு. இன்னைக்கி நான் வந்ததே, கேத்தி காலையில அவுங்க அம்மா கூட கோச்சுகிட்டு சாபிடாம வந்துட்டா, அவளுக்கு சாப்பாடு கொடுத்துட்டு போக வந்தேன். ஆண்ட் இன்னைகி ஆஃப்டெர்னூன் எனக்கு டெல்லிக்கு ஃப்லைட். கேத்தி உன்ன உன் கிர்ள்ஃப்ரெண்ட் கிட்ட இருந்து காப்பாத்த என்ன கோர்த்து விட்டுட்டா! தட்ஸ் ஆல். பட் எனிவேஸ் ஐ வில் நீட் யோர் ஹெல்ப். கென்யால இருந்து வர ஸ்டுடென்ட்ஸ கொஞ்சம் நல்லா பாத்துக்கோங்க. உங்க எஞ்சினியரின் காலேஜ் டார்மெற்றில தான் தங்க போராங்க. சோ யெஸ் கேத்தி பண்ணதும் நல்லதா போச்சு!” என்றா ஜுமோ.

அவ்வளவு பெரிய பதவியில் இருப்பவர், அவனிடம் மிகவும் மறியாதையாகவும், எதார்த்தமாகவும் தன்னுடன் பழுகுவது அர்ஜுனுக்கு சற்று வியப்பாகவே இருந்தது.

ஒரு முறை மட்டுமே பார்த்தவனின் இக்கட்டான சூழ்நிலையை ஒரே பார்வையில் புரிந்து கொண்டு, அந்த நேரத்தில் தந்தையை பலி ஆடாக ஆக்கிய மகள்! மகளிடம் எதிர் கேள்வி கேட்காமல் அவள் போக்கில் தானும் சென்று ஒரு வார்த்தை கேட்காமல், சின்னப் பிள்ளைப் போல் தானும் அவர்களின் கண்ணாமூச்சி விளையாட்டில் இணைந்து கொண்டாரே!

தந்தை மகள் புரிதலைக் கண்டு சற்று போறாமையாகவும் இருந்தது அர்ஜுனுக்கு.

“ஷுவர் அங்கிள். எனிதிங்க் ஃபார் யூ!” என்று அவன் சொல்ல

“பின்ன உன்ன நான் எப்பேர்பட்ட டேஞ்சர்ல இருந்து காப்பத்திருக்கோம் நானும் என் ப்ரின்சஸ்சும்!” என்று அவர் சிரிக்காமல் கூறவும், அர்ஜுன் விழிகள் ரசனைக் கலந்த ஆச்சரியத்தில் விரிந்தது.

“ஐயோ அங்கிள்! சாதாரண டேஞ்சர் இல்ல! கென்யா Wildlifeல இருக்க புலி கிட்ட கூட நான் மாட்டிப்பேன்! ஆனா என் கிர்ள்ஃப்ரென்ட் கேட்குற கேள்வில மட்டும் மாட்டிக்கிட்டா அவ்வளவு தான்!” என்று அர்ஜுன் சிரித்தான்.

அவனுடன் சிரிப்பில் இணைந்துக் கொண்டு, அவனிடம் தன் அலைப்பேசி எண்ணை வாங்கிக் கொண்டு தன்னுடைய எண்ணை தந்தவர், கென்யாவிலிருந்து மாணவர்கள் வரும் பொழுது அவனை அழைப்பார்கள் என்று கூறி விடைப் பெற்றார்.

அர்ஜுன் அவர் அந்த நீண்ட காரிடோரை சட்டென்று கடந்து செல்லும் வேகத்தைப் பார்த்துக் கொண்டு நின்றிந்தவனை ராம் அழைக்கவும்

“ம்ம் இதோ வறேன்!” என்று கூறி திரும்பினான்.

மனதில் என்னற்ற கேள்விகள். அதை அவளிடம் கேட்க மனம் அவசரப்படுத்திய போதும், அதை கட்டுப்படுத்திக் கொண்டு முன்னே நடந்தான் அர்ஜுன்.
பச்சைப் பசேல் என்று வளர்ந்திருந்த புற்கள் வெற்று முதுகில் முற்கள் போல் குத்துவதைக் கூட பொருட்படுத்தாமல் பி எஸ் ஜி கல்லூரியின் ஃபுட்பால் அணி ‘crunches’ செய்து கொண்டிருந்தனர். நூறை தாண்டிக் கொண்டிருந்தான் அர்ஜுன். அவனை ஜெய்க்க முயன்று கொண்டிருந்தான் ராம்.

ஒரு கட்டத்தில் ராமால் முடியாமல் “யப்பா முடில டா சாமி!” என்று அப்படியே படுத்துவிட்டான்.

அர்ஜுனின் இதழ்கள் ஏலனத்தில் வலைய, மூச்சு வாங்கிய படியே

“சு சு சும்மா சி சி சிக்ஸ் ஃபுட் ஒன்னு ஹைட் மட்டும் இருந்தா பத்தாது. ஸ் ஸ் ஸ்டாமினா எண்டுரன்ஸ் வேனும்டா வடக்கா!” என்று crunches செய்துகொண்டே கூறினான்.

“அட போடா! எங்க வீட்ல ஊத்துர நெய்க்கும், பட்டர்க்கும் நான் இவ்வளவு நல்லா என் பாடிய வச்சுருக்கறதே பெருசு! போதும் போடா மதராசி!” என்றான் திரும்பி

ராம் மல்லாக்கபடுத்து கூறியதில் அர்ஜுனுக்கு சிரிப்பு வந்தது.

“ஹே காலையில யாருடா அது வில் ஸ்மித் மாதிரி நல்ல ஹைட்டா செம்ம ஹண்ட்சம்மா ஒருதர் கூட பேசிகிட்டு இருந்த?” என்று ராம் கேட்க்க, அர்ஜுனின் மனதிலும் காத்யாயினியும் ஜூமோவையும் பற்றிய சிந்தனையே ஓடிக்கொண்டிருக்க, செய்து கொண்டிருந்த உடற்பயிற்சியை அப்படியே நிருத்திவிட்டு, பொத்தென்று புல் தறையில் படுத்தான்.

ஜூமோவைப் பற்றியும் காலை நடந்தவற்றை பற்றியும் ராமிடம் பகிர்ந்துகொண்டான்.

“பரவாயில்ல மச்சான்! அந்த பொண்ணும் அவுங்க அப்பாவும் உன்ன காப்பாதி இருக்காங்க! இல்லனா ஷிவானி உன்ன துவச்சு எடுதுருப்பா! பிஎஸ் ஜி காலேஜே பாத்து ரசிக்கும் ஸ்டுடென்ட் ப்ரேசிடென்ட்க்கு இப்படி ஒரு ஹெட் மாஸ்ட்டர்! ஆனா அந்த ஜூமோ பெத்த பொண்ணுக்கு கிடைக்கிற பாய்ஃப்ரெண்ட் கொடுத்துவச்சவன் டா! எப்படி உனக்கே ஹெல்ப் பண்றா பாரு!” என்று அவன் கூற, மனதில் அர்ஜுன்

‘உனக்கு லக் இருந்தா நீ தான் டா அந்த கொடுத்துவச்சவன்! ஆனா நல்லா மார்ஷ்மெல்லொ மாதிரி இருக்க உனக்கு எப்படி டா அது புரியும் பாப் கார்ன் மண்டையா!’ என்று மனதில் பொறுமினான் அர்ஜுன்.

அர்ஜுன் ஏதோ சிந்தனையில் இருக்க

“டேய். பாவி என்ன டா யோசன?” என்று ராம் தனது வெற்றுத் தோளில் பட்டென்று அடித்து ராம் கூப்பிட

“அஹ்? என்ன என்ன சொன்ன?” என்றான் அர்ஜுன்

“நாலைக்கி நம்ம IIT Madras ஒட கல்சுரல்ஸ்க்கு வெர்ஸ்டர்ன் மியுசிக்கு பான்ட் (Band) மெம்பர்ஸ்க்கு ஆடிஷன் பண்றோம்! சார் நீங்க தான் செலெக்ஷன்ல உக்காறனும்! தெரியும் இல்ல? Female lead நம்மக்கிட்ட இல்ல! இந்த தடவ ஆர்ட்ஸ் ஆண்ட்ட் சையின்ஸ் காலேஜ்ல இருந்து கூட பார்டிசிபன்ட்ஸ் பார்கலாம் டா. Saarang (IIT Madrasன் கலிவிழாவின் பெயர்) தான் இண்டியாஸ் நம்பர் ஒன் கல்சுரல்ஸ். கோடி கணக்குல ஸ்பான்சர்ஸ் வருவாங்க! ஆண்ட் அவுங்க வெஸ்ட்டர்ன் மியுசிக் ஷோ இன்டெர்நேஷனல் லெவெல் ஃபேமஸ். நம்ம இந்த தட்வ தட்றோம் தூக்குறோம்! அதுக்கு நம்ம செம்ம மாசா ஒரு female voice பிடிக்கனும் டா!” என்றூ ராம் கூற அர்ஜுனும் ஆமொதிதான்.

“ஆமாம் டா! பார்கலாம்! நம்ம காலேஜ்ல நான் எதிர்பாக்குற மாதிரி வாயிஸ் வச்சுகிட்டு யாரு இருக்கானு தெரியலையே! Arethra Franklin வாயிஸ் மாதிரி வேணும் டா!”

“ம்ம்கும் இது ஓவர்! கேபி சுந்தராம்பாள் வாயிஸ் வேணா கிடக்கும்! ஏன்னா முக்கால்வாசி பொண்ணு கர்னாடிக் கத்துகிட்டு ‘கட்ட’ குரல்ல பாடுதுங்க!” என்று கூறியவனை ‘பட்’ என்று பின்மண்டையில் ஒன்று வைத்தான் அர்ஜுன்.

“அது தான் டா கர்னாட்டிக்கு அழகு!” என்றவனிடம்

“ஆனா வெஸ்டர்ன் பாடும் போதும் அந்த ஆஆஆஆஆ குரல் ஜதி போடுறத என்ன பண்ணாலும் ஸ்டாப் பண்ண முடியலேயே மச்சான்! வெஸ்ற்றங்க்கு ஒரு ஸ்டைல் இருக்கு இல்ல டா! இதுல Arethra Franklin க்கு எங்க போக? சும்மா ஓவரா எக்ஸ்பெக்ட் பண்ணாத! இருக்கறதுலேயே நல்ல குரலா தான் பாருடா மச்சான்!” என்று ராமின் பேச்சுக்கேற்ப தான் மறுநாள் தேர்வும் இருந்தது.

கலந்து கொண்ட எல்லா பெண்களும் நன்றாகத் தான் பாடினார்கள், ஆனால் மேற்கத்திய இசைக்கே உறிய சில ‘ஸ்டைல்’ இல்லை! அர்ஜுன் தேடிய ஏதோ ஒன்று எவரிடமும் இல்லை.

கல்லூரியின் பெரிய அரங்கத்தில் மதியம் மூன்று மணிக்கு மேல் தான் குரல் தேர்வு என்று அறிவித்திருந்த போதும், ஒரு மணியில் இருந்து பெண்கள் பலர் வந்து அங்கு காத்துக் கிடந்தனர். அர்ஜுன் சொன்ன நேரத்திற்கு அவந்து மற்ற செய்ற்குழு மற்றும் இசைக் குழுவினருடன் வந்தவன் உடனே தேர்வை ஆரம்பித்திருந்தான்.

நேரம் போக போக அர்ஜுன் “ம்ச்ச்!” என்று சலிப்புத் தட்ட ஆரம்பித்தது.

மணி ஆறை தோட, அதற்கு மேல் தலை வின் வின் என்று தெறிக்க, ராமிடம் திரும்பி

“டேய் மச்சான், என்னால முடில டா. நீயே ஷார்ட்லிஸ்ட் பண்ண ஏதாவது ஒரு பொண்ண சிலெக்ட் பண்ணு. நான் கிளம்பறேன்!” என்று கூறிவிட்டு அரங்கத்தின் வெளியே வந்தவன் படிகளில் இறங்க, அப்பொழுது

“I'm trying to hold my breath” என்று ஒரு குரல் ஒலி பெருக்கியில் மெல்ல கிசு கிசுத்தது. அந்தப் பாடலின் ராகம் மெல்ல மெல்ல துவங்கியது. அர்ஜுனின் கால்கள் அப்படியே நிற்க, மெல்ல திரும்பியவன், அந்த குரல் வேகம் எடுக்க எடுக்க தன் நடையின் வேகத்தையும் அதிகறித்து அரங்கத்தை அடைந்தான்.

அங்கே மேடையில் காத்யாயினி அபூயா மைனா ‘மைக்’கை பற்றிய படி உயிரை உருக்கும் குரலில் பாடினாள்


“Let it stay this way
Can't let this moment end
You set off a dream in me
Getting louder now
Can you hear it echoing?
Take my hand
Will you share this with me?
'Cause darling, without you

All the shine of a thousand spotlights
All the stars we steal from the night sky
Will never be enough
Never be enough
Towers of gold are still too little
These hands could hold the world but it'll
Never be enough
Never be enough

For me
Never, never
Never, never
Never, for me
For me
Never enough
Never enough
Never enough
For me
For me
For me”

என்று அவள் குரல் விண்ணைத் தொடும் உச்சத்தில் ஒலித்து ஓய, அந்த அரங்கம் முழுதும் நிசப்த்தம்!

அர்ஜுனின் உடல் சிலிர்த்து அடங்கியது. அவன் கேலரி போல் உள்ள அரங்கத்தின் மையப் பகுதியில் இருக்கும் நுழைவாயிலில் நின்றிருக்க, அவள் மேல் மட்டும் ஸ்பாட் லைட் ஒளிர்ந்தது.

அமைதியில் மூழ்கிய அரங்கத்தின் மற்ற பகுதிகள் இருள் கூழ்ந்திருக்க, காத்யாயினியின் மேல் மட்டும் இருந்த ஸ்பாட்லைட் சில நொடிகள் அப்படியே இருந்தது.

விழிகளை மூடி பாடலில் லயித்திருந்தவள் மெல்ல கண் திறந்தாள். எதிரே சூழ்ந்த இருளில் ஒன்றும் தெரியவில்லை அவளுக்கு, நேர் எதிரே உள்ள நுழைவாயில் வெளிச்சத்தில் ஒரு உருவத்தின் வடிவம் மட்டுமே தென்பட்டது.

அமைதியாய் தான் அமர்ந்திருந்த உயரமான முக்காளியில் இருந்து குதித்து நின்றாள். அரங்கமே அமைதி காக்க, என்ன செய்வதென்று தெரியாம

“தேங்க் யூ” என்று மைக்கில் சொல்லிவிட்டு திரும்பியவளை ஒருவனின் கைத்தட்டல் நிருத்தியது.

திட்டம் தீட்டலாம்.






 
Status
Not open for further replies.
Top