இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

பிழையில்லா கவிதை நீயடி பாகம் 2 - கதைத்திரி

Status
Not open for further replies.

geethusri

Moderator

அத்தியாயம் - 20 :


துள்ளிக் குதித்த குறையாக தன் அலுவலகத்திற்குள் நுழைந்த தேவ்வை பார்த்த அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் ஆச்சர்யத்தில் வாயைப் பிளந்தனர்.


கடந்த மூன்றரை ஆண்டுகளாக சிரிப்பு என்பதையே மறந்து விட்டு உணர்ச்சியற்ற முகத்துடன் இருந்தவனின் முகத்தில் இருந்த புன்னகையை பார்த்த ஊழியர்கள் அனைவரும் தாங்கள் காண்பது கனவோ என்று கூட நினைத்தனர்.


தேவ் அலுவலகத்தில் வேலை பார்த்த ஊழியர்கள் மட்டுமல்ல… அவனின் இந்த மாற்றத்தை பார்த்து மகாதேவன் கூட ஆச்சரியம் அடைந்தார்.


தேவ் தன்னுடைய அறைக்குச் சென்றதும் அவனைப் பின்தொடர்ந்து சென்ற மகாதேவன் அவன் அனுமதி பெற்றுக்கொண்டு உள்ளே நுழைந்தார்.


தன் டேபிளின் மீதிருந்த கண்ணாடி உருண்டையை உருட்டியபடி எதையோ நினைத்து சிரித்துக் கொண்டிருந்த தேவ்வை பார்த்தவர் வேண்டுமென்றே இரண்டு முறை இருமினார்.


அதில் தன் நிலைக்கு திரும்பிய தேவ், “மகாதேவன் சைகாட்ரிஸ்ட் யார்கிட்டயாவது ஒரு அப்பாயிண்ட்மெண்ட் வாங்குங்க” என்றான்.


அவன் சொன்னதை கேட்டதும் அதிர்ச்சியில் தன் கண்களை அகல விரித்த மகாதேவன், “என்னாச்சு சார்… உங்களுக்கு ஏதாவது ப்ராப்ளமா?” என்று பதற்றத்துடன் கேட்டார்.


“சே... சே... எனக்கு ஒன்னும் இல்ல மகாதேவன்… ஒரு சின்ன சஜஷன் கேட்கணும் அதுக்காக தான்”


“ஆனா சார் நீங்க யாருக்காக சஜஷன் கேக்க போறீங்க?”


“மிதுவுக்காக”


“என்னது மிருதுளா மேடத்துக்காகவா ஆனா” என்றவர் அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் தன் பேச்சை நிறுத்தினார்.


“நீங்க என்ன சொல்ல வந்தீங்கன்னு எனக்கு புரியுது மகாதேவன்… மிருதுளா தான் என் கூட இல்லையே… அப்புறம் அவளுக்காக நான் ஏன் சஜஷன் கேட்கணும்னு தானே நினைக்கிறீங்க? நான் சென்னை வரும் போது மிருதுளாவையும் தான் என் கூட கூட்டிட்டு வந்திருக்கேன்”


“சார் நிஜமாவா சொல்றீங்க?”


“ஆமா… அவ இப்போ டிப்ரஷன்ல இருக்கா… அதுக்காக மாத்திரையும் எடுத்துக் கிட்டிருக்கா… அமருக்கும் உடம்பு சரியில்ல… ரெண்டு பேருக்குமே இப்போ ஒருத்தரோட அருகாமை இன்னொருத்தருக்கு தேவைப்படற நேரம்… அவங்க ரெண்டு பேரையும் பிரிச்சி அவங்க உடம்ப கெடுக்க வேணாம்னு தான் நான் மிதுவை என்னோட கூட்டிட்டு வந்துட்டன்”


“ஆனா அவங்க எப்படி சார் உங்களோட வர ஒத்துக்கிட்டாங்க?” என்று அவர் தயக்கத்துடன் கேட்டார்.


அந்தக் கேள்வியை கேட்ட பிறகுதான் தான் அது பற்றி தேவ்விடம் கேட்டிருக்கக் கூடாது என்று அவருக்கு தோன்றியது. ஆனால் தேவ் அந்தக் கேள்வியை தவறாக எடுத்துக் கொள்ளவில்லை.


“எப்பவும்போல மிரட்டி தான்… சரி அதை விடுங்க… முதல்ல ஒரு சைகாட்ரிஸ்ட் கிட்ட அப்பாயின்மென்ட் வாங்குங்க… எப்படியாவது அவளை சீக்கிரம் குணப்படுத்தணும்… எனக்கு என்னவோ இந்த நோய்க்கு மாத்திரை மட்டுமே மருந்தா இருக்கும்னு தோணல” என்று அவன் யோசனையுடன் சொன்னான்.


“நான் ஒன்னு கேட்டா நீங்க தப்பா நினைச்சிக்க மாட்டீங்களே?”


“கேளுங்க மகாதேவன்”


“நீங்க மிருதுளா மேடத்தை இன்னும் காதலிக்கிறீர்களா?”


“நானா? அவளையா சே… சே… அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல மகாதேவன்… உங்களுக்கே தெரியும் மூணு வருஷத்திற்கு முன்னவே நான் அவளை உண்மையா காதலிக்கல… அவ அப்பாவ பழிவாங்குவதற்காக தான் அவள காதலிக்கிற மாதிரி நடிச்சன்னு… அப்படி இருக்கும் போது இப்போ மட்டும் எப்படி அவள காதலிப்பேன்னு நினைக்கிறீங்க? என்னால தான் அவ இந்த நிலைமையில இருக்கான்னு எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு… அதுக்காக தான் நான் அவள குணமாக்கணும்னு நினைக்கிறேனே தவிர மற்றபடி அவ மேல எனக்கு காதலும் இல்ல… ஒரு மண்ணும் இல்ல”


“சார் நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க… எனக்கென்னவோ நீங்க அவங்கள காதலிக்கிறீங்கன்னு தான் தோணுது…”


“சும்மா வாய்க்கு வந்ததை உளறாதீங்க மகாதேவன்”


“ஒருவேளை நீங்க அவங்கள காதலிக்கலனா எதுக்காக அவங்கள மறுபடி கூட்டிட்டு வர போறீங்க? இப்போ சைகாட்ரிஸ்ட் கிட்ட சஜஷன் கேக்க போறீங்க…. காதல் இல்லாம இதெல்லாம் சாத்தியம் இல்லை சார்”


“இல்ல மகாதேவன்… அவ தனசேகரனோட பொண்ணு… அம்முவை கொன்னவனோட பொண்ணை நான் காதலிக்கறதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல”


“இல்ல சார்… அப்படி எல்லாம் நினைச்சு உங்களை நீங்களே ஏமாத்திக்க பாக்கறீங்க? ஒருவேளை நீங்க மிருதுளா மேடத்தை காதலிக்காம இருந்திருந்தா இவ்வளவு நாளா ஏன் சார் யாரையும் கல்யாணம் பண்ணிக்கல… உங்க பாட்டி தான் சாகறதுக்குள்ள உங்க கல்யாணத்த பாக்கணும்னு உங்ககிட்ட கல்யாணம் பண்ணிக்க சொல்லி அவ்வளவு கெஞ்சினாங்களே… அப்போ கூட நீங்க மனசு இறங்கி யாரையும் கல்யாணம் பண்ணிக்கல… அதுல இருந்தே உங்க மனசுல மிருதுளா மேடம் மட்டும் தான் இருக்காங்கன்னு உங்களுக்கு புரியலையா… அது மட்டும் இல்ல அவங்களை பிரிஞ்சிருந்த இந்த மூன்றரை வருஷமா நீங்க எப்படி இருந்தீங்கன்னு எனக்கு தெரியும்… அவங்க திரும்பி வந்த பிறகு இன்னைக்கு எப்படி இருக்கீங்கனு தெரியும்… இவ்வளவு நாள் இருண்டு கிடந்த உங்க முகம் இன்னைக்குதான் சார் பளிச்சுன்னு இருக்கு… இதுல இருந்தே தெரியலையா நீங்க அவங்கள எவ்வளவு லவ் பண்றீங்கன்னு”


“மகாதேவன் தேவையில்லாம திரும்பத் திரும்ப இதையே பேசி என்ன குழப்ப பாக்காதீங்க… நான் ரொம்ப தெளிவா இருக்கன்… என்னால என்னைக்குமே தனசேகரனோட பொண்ண காதலிக்கவும் முடியாது… அவகூட வாழவும் முடியாது”


“எவ்வளவு நாள் சார் உண்மையை மறைக்க முடியும்னு நினைக்கிறீங்க… நீங்க உண்மைய எவ்வளவு ஆழத்தில் புதைத்தாலும் அது ஒருநாள் வெளிவந்தே தீரும்… மூன்றரை வருஷத்துக்கு முன்னாடி தனசேகரனுக்கு தண்டனை கொடுக்கறதா நினைச்சு நீங்க பண்ண காரியம் உண்மையில உங்களுக்கு தான் சார் தண்டனையா அமைஞ்சிடுச்சி”


“என்ன சொல்றீங்க மகாதேவன்?”


“ஆமா சார் நான் உண்மையத்தான் சொல்றன்… மிருதுளா மேடத்தை காதலிக்கிற மாதிரி நடிக்க ஆரம்பிச்சி கடைசியில நீங்க உண்மையாவே காதலிச்சீடீங்க… அதனாலதான் உங்களால வேறே எந்தப் பொண்ணையும் மனசால கூட நினைக்க முடியல… இன்னைக்கு அவங்களுக்கு ஒன்னுன்னதும் இவ்வளவு துடிக்கிறீங்க… இதையெல்லாம் நான் அவங்களுக்காக பேசறதா நினைச்சுக்காதீங்க… நான் உங்களுக்காக தான் பேசறன்… நீங்க அந்த தனசேகரனை பழி வாங்கறதா நினைத்து உங்க வாழ்க்கையை வீணாகிக்காதீங்க… மிருதுளா மேடம் நல்லவங்க… அவங்க அப்பா மாதிரி கிடையாது… அதனால நீங்க அவங்க கூட வாழ்றதுல தப்பு இல்ல”


“இல்ல மகாதேவன்… என்னால அது முடியும்னு தோணல… அப்புறம் என் அம்முவோட ஆத்மா என்னை மன்னிக்காது”


“இல்ல சார் நீங்க நினைக்கிறது தப்பு… அம்முவோட இறப்புக்காக பழிதீர்க்க நீங்க பண்ண காரியம் உங்க வாழ்க்கையையே பாழாக்கறத அம்மு விரும்பமாட்டா… அது மட்டும் இல்ல… இப்போ உங்க ரெண்டு பேருக்கும் குழந்தையும் இருக்குன்னு தெரிய வந்துடுச்சு… இனியாவது நீங்க எல்லாத்தையும் மறந்துட்டு அவங்களோட சந்தோஷமா வாழற வழிய பாருங்க சார்… நான் இப்பவே போயி சைகாடிரிஸ்ட் கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கிடறன்” என்று சொன்ன மகாதேவன் அந்த அறையை விட்டு வெளியேறினார்.


மகாதேவன் அறையை விட்டு வெளியேறியதும் தன் இருக்கையிலிருந்து எழுந்த தேவ் தன் அறையில் இருந்த ஜன்னலை நோக்கி சென்றவன் ஜன்னல் கதவுகளை திறந்து விட்டான்.


‘மிருதுளா மேடத்தை நீங்க காதலிக்கிறீங்க சார்’ என்று மகாதேவன் சொன்ன வார்த்தைகளே திரும்பத் திரும்ப அவன் மனதில் வலம் வந்தன.


“மகாதேவன் சொல்ற மாதிரி உண்மையாவே நான் மிதுவ காதலிக்கிறேனா? ஒருவேளை இது உண்மையா இருந்தால உன்ன கொன்னவனோட பொண்ணு கூட இந்த அண்ணன் வாழறதுல உனக்கு எதுவும் கோபம் இல்லையேடா அம்மு” என்று தனக்கு தானே முணுமுணுத்தவன் சிறிது நேரம் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்தான்.


இப்போதைக்கு இதைப் பற்றி யோசிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தவன் பின்னர் தன் வேலையில் கவனம் செலுத்தத் தொடங்கினான்.


மகாதேவன் மாலை 4 மணிக்கு சைகாட்ரிஸ்ட்டிடம் அப்பாயின்மென்ட் வாங்கி இருந்தார்.


அதனால் மூணரை மணிக்கெல்லாம் தன்னுடைய அலுவலகத்தில் இருந்து கிளம்பியவன் சரியாக 4 மணிக்கு சைகாட்ரிஸ்ட் அறையின் முன்பு நின்றிருந்தான்.


“மே ஐ கம் இன் டாக்டர்” என்று அவன் கதவைத் தட்டி அனுமதி கேட்டதும்


“எஸ் கம்மின்” என்று உள்ளே இருந்து டாக்டர் குரல் கொடுத்தார்.


கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த தேவ் டாக்டரின் மேஜைக்கு முன்பிருந்த இருக்கையில் அமர்ந்தான்.


“காலைல மகாதேவன் கால் பண்ணி இருந்தார்… ஏதோ என்கிட்ட சஜஷன் கேட்கணும்னு சொன்னீங்களாமே… என்ன விஷயம் தேவ்” என்று டாக்டர் கேட்டதும் அவன் மிருதுளாவிற்கு உள்ள பிரச்சனையை பற்றி சொன்னான்.


“இந்தப் பிரச்சனை அவங்களுக்கு எதனால ஏற்பட்டதுன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” என்று அவர் மீண்டும் கேட்டார்.


எந்தவித ஒளிவு மறைவுமின்றி தான் அவளை காதலிப்பது போல நடித்து அவள் வயிற்றில் குழந்தையை கொடுத்தது… பின்னர் குழந்தையை கலைக்க சொன்னதுடன் அவளைப் பிரிந்தது… ஆனால் அவள் தன்னிடம் உண்மையை மறைத்து குழந்தையை பெற்றெடுத்தது என்று தேவ் அனைத்தையும் சொன்னான்.


“ஓ அப்போ நீங்க ஏமாத்தினதாலதான் அவங்களுக்கு இந்த நோய் ஸ்டார்ட் ஆகி இருக்கு இல்லையா?”


“ஆமா டாக்டர்”


“அவங்க அதுக்காக மெடிசன் ஏதாவது எடுக்கறாங்களா?“என்னை பிரிந்து சமயத்திலேயே அவ டாக்டரை கன்சல்ட் பண்ணி மெடிசன் எடுத்துருக்கா… அதுக்கப்புறம் மெடிசன் எடுக்கறத நிறுத்திட்டிருக்கா… இப்போ சமீப நாட்களா திரும்பவும் மெடிசன் எடுக்க ஆரம்பிச்சிருக்கா”


“அவங்களுக்கு குணமாகி இருந்திருந்தா டாக்டரே மெடிசன் எடுக்கறதை நிறுத்த சொல்லி இருப்பாங்க... அதனால அவங்க மெடிசினை ஸ்டாப் பண்ணி இருக்கலாம்… ஆனா திரும்பவும் எதுக்கு மெடிசன் எடுக்க ஆரம்பிச்சிருக்காங்க” என்று டாக்டர் யோசனையுடன் கேட்டார்.


தன்னை ஏமாற்றி குழந்தையை பெற்றெடுத்ததை அறிந்ததும் தான் கோபப்பட்டு அவளிடம் இருந்து அமரை பிரித்ததை பற்றி சொன்ன தேவ் “அமரை பிரிஞ்ச வேதனையை தாங்கமுடியாம தான் அவளுக்கு திரும்பவும் டிப்ரஷன் வந்து இருக்குன்னு நினைக்கிறேன் டாக்டர்” என்றான்.


“இப்பவும் அவங்க ரெண்டுபேரும் பிரிஞ்சு தான் இருக்காங்களா?”


“இல்ல டாக்டர் அவளுக்கு இந்த நோய் இருக்கிறது தெரிஞ்சதுமே நான் அமரும் அவளும் ஒன்னா இருக்க மாதிரி பண்ணிட்டன்”


“அதுதான் நீங்களே எல்லாம் பண்ணிட்டீங்களே… அப்புறம் எதுக்காக என்கிட்ட சஜஷன் கேட்டு வந்திருக்கீங்க”


“இல்ல டாக்டர் அவ இப்பவும் மெடிசன் எடுத்துக்கிட்டு தான் இருக்கா… மெடிசன் தவிர்த்து வேற எதை எல்லாம் பண்ணா அவளுடைய நோய் சீக்கிரம் குணமாகும்னு நான் தெரிஞ்சிக்க விரும்பறன்”


“மெடிசன் தவிர்த்து அவங்கள குணமாக்கற மருந்துன்னா அது நீங்களும் உங்க பையன் அமரும் தான்… மிஸ்டர் தேவ் உங்களை அவங்க உயிருக்குயிரா நேசிச்சதால தான் நீங்க ஏமாத்தினத தாங்கமுடியாம டிப்ரஷன் ஸ்டேஜ்க்கு போயிருக்காங்க… அதே சமயம் நீங்க அவங்க கைவிட்ட நிலையில தன் வயித்துல பொறந்த அமரை அவங்க தன்னோட உலகமா நினைச்சி வாழ்ந்துருக்காங்க… அந்த உலகத்தை நீங்க அவங்க கிட்ட இருந்து பறிச்சதும் திரும்பவும் அவங்க டிப்ரஷன் ஸ்டேஜ்க்கு போயிட்டாங்க… நீங்க ரெண்டு பேரும் அவங்க கூட இருந்தாலே அவங்க சீக்கிரம் குணமாகிடுவாங்க’


“வேற எதுவும் பண்ண வேண்டாமா டாக்டர்”


“முடிஞ்சா அவங்க பழசை நினைக்காத மாதிரி பாத்துக்கோங்க… ஏன்னா பழசை நினைக்க நினைக்க தான் அவங்களுக்கு டிப்ரஷன் அதிகமாகிக்கிட்டே போகும்… அப்புறம் அவங்கள எப்பவும் தனியா விட்டுடாதீங்க… தனியா இருந்தா மனசு கண்டதையும் யோசிக்கும்… இதையெல்லாம் பண்ணினாலே உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும்”


“தேங்க்யூ டாக்டர்” என்ற தேவ் அங்கிருந்து கிளம்பினான்.


அத்தியாயம் - 21 :


மாலை ஐந்து மணி…


தேவ் வந்த போது வீட்டில் மயான அமைதி நிலவியது.


“என்னடா இது… வீடு இவ்வளவு சைலன்ட்டா இருக்கு… அம்மாவும் பையனும் தூங்குறாங்களா என்ன?” என்று அவன் நினைத்த போது தோட்டத்தில் இருந்து அமரின் குரல் கேட்டது.


“அம்மா நல்லா எக்கி எடும்மா”


“இருடா… அதான் எடுக்கறன்ல… கொஞ்ச நேரம் அமைதியா இரு… அப்போதான் அம்மாவால எடுக்க முடியும்” என்று மிருதுளா அமருக்கு பதிலளித்தாள்.


‘என்ன பண்ணிட்டு இருக்காங்க இவங்க ரெண்டு பேரும்?’ என்று நினைத்தவன் வரண்டாவில் இருந்த ஜன்னலிடம் சென்று அவர்களைப் பார்த்தான்.


தோட்டத்தில் இருந்த மரத்தில் ஒரு பட்டம் சிக்கிக் கொண்டிருந்தது. மிருதுளா அதை எடுக்க முயன்று கொண்டிருந்தாள். அமர் தன் அம்மாவை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.


“ஓ பட்டம் எடுக்க தான் ரெண்டு பேரும் இவ்வளவு அலப்பறை பண்ணிக்கிட்டிருக்காங்களா?” என்று முணுமுணுத்தவனின் பார்வையில் அவளின் கொடியிடை விழுந்தது.


“ஒரு பிள்ளை பெத்துட்டாலே இடுப்பு அடுப்பு மாதிரி மாறிடும்ன்னு சொல்வாங்க… ஆனா இவ என்னனா இப்பவும் இப்படி சிக்குன்னு இருக்கா? இவ இவ்வளவு அழகா இருந்தா நான் எப்படி என்னை கண்ட்ரோல் பண்ணிக்க முடியும்?” என்று புலம்பியவன் பூனை போல மெதுவாக அவர்களை நோக்கி சென்றான்.


தேவ்வைப் பார்த்த அமர் அப்பா என்று அழைப்பதற்காக வாயெடுத்தான்.


தேவ் தன் வாயில் விரல் வைத்து பேசாதே என்று சைகை செய்ததும் அமரும் உற்சாகத்துடன் தலையசைத்தான்.


மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து சென்றவன் தூரத்தில் இருந்து தன்னை சுண்டி இழுத்த இடுப்பில் கை போட்டு மிருதுளாவை தூக்கினான்.


திடீரென்று யாரோ தன்னை தூக்கியதும் மிருதுளா பயத்தில் ஆவென்று அலறி விட்டாள்.


“ஐய் அம்மா பயந்துட்டியா... பயந்துட்டியா…” என்று கைதட்டி சிரித்த அமர், “கண்ணை திறந்து பாரும்மா அப்பாதான்” என்றான்.


தன் ஒற்றைக் கண்ணை திறந்து கீழே பார்த்த மிருதுளா தன்னை தூக்கியது தேவ் என்பதை கண்டு கொண்டதும் நிம்மதிப் பெருமூச்சை வெளியேற்றினாள்.


அமரின் முன்பு தேவ்விடம் சண்டை போட விரும்பாதவள் “என்னை கீழ இறக்கி விடு” என்று பல்லை கடித்தபடி சொன்னாள்.


“என்ன மிது இப்படி சொல்லிட்ட… நீ அந்தப் பட்டத்தை எடுக்க கஷ்டப்பட்டியேன்னு தான் நான் உனக்கு ஹெல்ப் பண்றன்… முதல்ல நீ அந்த பட்டத்தை எடு… அதுக்கு பிறகு நான் உன்னை கீழ இறக்கி விடறன்”


“ஆணியே புடுங்க வேண்டாம்… நான் என் பையனுக்கு வேறொரு பட்டத்தை வாங்கி தந்துக்கறன்… நீ முதல்ல என்ன கீழ இருக்கு”


“அமர்குட்டி அம்மா என்னடா இப்படி சொல்றா… பட்டத்தை எடுக்க மாட்டாளாமே பரவாயில்லையா?” என்று அவன் அமரிடம் கேட்டான்.


“அம்மா எனக்கு இந்த பட்டம் தான் வேணும்… எடுத்து தா” என்ற அமர் அழுகைக்கு தயாராவது போல உதட்டை பிதுக்கினான்.


“மிது அங்க பாரு… அமர் அழறதுக்கு ரெடி ஆயிட்டான்… ஏற்கனவே அவனுக்கு உடம்பு சரியில்ல… எதுக்காக இப்படி அவனை அழ வைக்கிற… பட்டத்தை எடுத்துக் கொடு” என்று தேவ் சொன்னதும்


"பிள்ளையையும் கிள்ளி விட்டுட்டு தொட்டிலையும் ஆட்டி விடறியா" என்ற மிருதுளா வேறுவழியில்லாமல் மரத்தில் சிக்கியிருந்த பட்டத்தை முயன்று கிழியாமல் எடுத்தாள்.


அவள் பட்டத்தை கீழே போட்டதும் அமர் அதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் ஓடி விட்டான். அதன் பிறகும் தேவ் அவளைக் கீழே இறக்கி விடவில்லை.


அப்போது பலமாக வீசிய காற்றில் மிருதுளாவின் முந்தானை விலகி அவளின் செழுமைகளின் தரிசனமும் தேவ்விற்கு கிடைத்தது. அதற்குமேல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் அவன் பச்சக்கென்று அவளின் தொப்புளில் மீது ஒரு முத்தத்தை பதித்தான்.


தேவ்விடம் இருந்து இப்படி ஒரு செய்கையை எதிர்பார்க்காத மிருதுளா ஒரு நொடி திகைத்து நின்றாள்.


அடுத்த நொடி தன்னிலைக்கு திரும்பியவள் அவன் பிடியில் இருந்து விடுபட போராடினாள். அவளின் திமிறலில் தன்னிலைக்கு திரும்பியவன் அவளை மெல்ல மெல்ல கீழே இறக்கி விட்டான்.


“இங்க பாரு நீ பண்றதெல்லாம் கொஞ்சம் கூட சரி இல்ல… இனிமேல் இந்த மாதிரி எல்லாம் என்கிட்ட நடந்துகிட்ட அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என்று தேவ்வின் முன்பு தன் விரலை ஆட்டி மிருதுளா மிரட்டலாக சொன்னாள்.


“ஏய் என் முன்னாடியே கை நீட்டி பேசற அளவுக்கு உனக்கு தைரியம் வந்துருச்சா? என்று சொன்னபடி தன் கைகளால் அவளின் விரலைப் பற்றிக் கீழே இறக்கிய தேவ், “ஆமா நான் என்ன பண்ணிட்டேன்னு இந்த குதி குதிக்கிற?” என்று அலட்சியமாக கேட்டான்.


“பண்ண உனக்கு அது என்னன்னு தெரியாதா?”


“தெரியாம தான கேக்கறன்… நான் என்ன பண்ணண்னு முதல்ல சொல்லிட்டு அப்புறம் பேசு” என்றவன் நமுட்டு சிரிப்பு சிரித்தான்.


“நீ இப்போ என்ன கிஸ் பண்ணல?”


“நானா? உன்னையா? கிஸ் பண்ணனா? எப்ப பண்ணன்? எங்க பண்ணன்?”


“பொய் சொல்லாத தேவ்… ஒழுங்கா உண்மையை ஒத்துக்கோ”


“ஏய் என்ன விளையாடறியா? நான் எதுக்காக உன்னை கிஸ் பண்ண போறன்? பாவம் பாத்து உனக்கு ஹெல்ப் பண்ண வந்தா தேவையில்லாம என் மேல பழி போட்டு சண்டை போடறியா? காலையில நடந்ததை பத்தியே நீ நெனச்சிக்கிட்டு இருக்கறதால தான் உனக்கு இப்பயெல்லாம் தோணுதுன்னு நான் நினைக்கிறன்”


“அப்படியெல்லாம் எதுவும் இல்ல… நீ இப்போ என் தொப்புள்ல கிஸ் பண்ணல?”


“இல்லையே”


“பொய் சொல்லாத”


“நான் எதுக்கு பொய் சொல்ல போறன்… உன் சேலை முந்தி என் உதட்டு மேலே பட்டுச்சு… அது ஒரு மாதிரி இருந்ததால நான் என் முகத்தை இப்படியும் அப்படியும் திருப்பினன்… ஒருவேளை அதுல தெரியாம என் உதடு தொப்புள்ல பட்டிருக்குமா இருக்கும்… மத்தபடி நானெல்லாம் உன்னை கிஸ் பண்ணல… போய் வேலை ஏதாவது இருந்தா பாரு” என்று அவன் சொன்னதும் மிருதுளா குழம்பி விட்டாள்.


‘ஒருவேளை அப்படித்தான் இருக்குமோ? இதுக்கு மேல இதை பத்தி பேசினா இவன் மொத்த பழியையும் நம்ம மேலேயே திருப்பி போட்டாலும் போட்டுடுவான்... ஒருபடி மேல போய் உனக்கு கிஸ் வேணும்னா நேரடியா கேக்க வேண்டியது தானேன்னு கூட சொல்லுவான்… பேசாம இத இப்படியே விட்டுடலாம்’ என்று நினைத்தவள் அவனை முறைத்து விட்டு வீட்டிற்குள் செல்வதற்காக திரும்பினாள்.


அவளின் கையை பிடித்து தடுத்து நிறுத்திய தேவ் கையை திருப்பி உள்ளங்கையை பார்த்தவன் “மிது ரத்தம் வருது… என்னாச்சு?” என்று பதறினான்.


மிருதுளா அப்போதுதான் தன் நடுவிரலில் இருந்து லேசாக ரத்தம் வருவதை கவனித்தாள்.


“பட்டம் எடுக்கும் போது ஏதாவது குச்சி லேசாக கீறி இருக்கும்” என்று அவள் அசால்டாக சொன்னாள்.


“ஏண்டி கைல இருந்து இரத்தம் வருது… இவ்வளவு அலட்சியமா சொல்ற” என்று அவளை கடிந்து கொண்டவன் அவளைத் தரதரவென்று இழுத்துக் வந்து சோபாவில் அமர வைத்தவன் அலமாரியில் இருந்த முதலுதவிப் பெட்டியை எடுத்து வந்து அங்கிருந்த டேபிளின் மீது வைத்து விட்டு அவள் அருகில் அமர்ந்தான்.


“கைய காட்ட மிது?”


“எதுக்காக இப்போ இவ்ளோ சீன் போடற… இது சின்ன காயம் தான்”


“கைய காட்டுன்னு சொன்னன்” என்றவன் அவளின் கையை பிடித்து இழுத்து காயத்தை சுத்தம் செய்து மருந்திட்டு பேண்டேஜ் போட்டான்.


அவன் காயத்தை சுத்தம் செய்து மருந்திட்டு கொண்டிருந்த போது மிருதுளா அவனையே தான் வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.


‘என்னால உன்ன புரிஞ்சிக்கவே முடியல… ரெண்டு வருஷத்துக்கு முன்ன இதே மாதிரி தான் என்ன அவ்வளவு நல்லா பாத்துகிட்ட… திடீர்னு ஒருநாள் நான் உன்னை பழிவாங்க தான் இவ்வளவு நாளும் அப்படியெல்லாம் நடிச்சன்னு சொன்ன… நானும் விலகி போயிட்டன்… திரும்ப இத்தனை வருஷம் கழிச்சு புயல் மாதிரி என் வாழ்க்கையில நுழைஞ்சி என் பையன என்கிட்ட இருந்து பிரிச்சி என்ன கஷ்டபடுத்தின.. அப்புறம் என்ன ஆச்சுன்னு தெரியலை திடீர்னு என்கிட்ட ரொம்ப நல்லா நடந்துக்கற… எது உண்மை எது பொய்னு சத்தியமா எனக்கு தெரியல… ஒரு நேரம் நெருப்பா சுடற நீ அடுத்த நேரம் தென்றல் காற்றா என் மனசு வருடற…’


பேண்டேஜ் போட்டு முடித்துவிட்டு நிமிர்ந்த தேவ், "ஒய் என்னடி வச்ச கண்ணு வாங்காம்ம பாக்கற..." என்றான்.


"ஒண்ணுமில்லயே" என்று சொன்ன மிருதுளாவிற்கு தன் தலையில் அடித்து கொள்ளலாம் போல இருந்தது.


தேவ் எதையோ சொல்ல வாயெடுத்தான்.


அதற்குள் அங்கு வந்த அமர், "அம்மா பசிக்குது..." என்றான்.


அமரை தூக்கி தன் மடியில் அமர வைத்துக்கொண்ட மிருதுளா, "என் செல்லத்துக்கு பசிக்குதா... கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு... அம்மா அமருக்கு பிடிச்ச பால்கொழுக்கட்டை செஞ்சி தரன்" என்றாள்.


"ஏய் மிது கைல அடிபட்டிருக்குல்ல... அப்புறம் எப்படி சமைப்ப? நீ ரெஸ்ட் எடு... நான் ஏதாவது பண்ணி தரன்" என்று தேவ் சொன்னான்.


"மனசுல விழுந்த அடியோட இத்தனை வருஷம் வாழ்ந்த எனக்கு கைல பட்ட அடியோட சமைக்கறது ஒரு விஷயமே இல்ல" என்று சொன்னவள் அமரை தூக்கி கொண்டு கிச்சனுக்கு சென்றுவிட்டாள்.
 

geethusri

Moderator

அத்தியாயம் - 22 :


“இனிமே நீ கஷ்டத்தோட வாழவும் வேண்டாம்… காயத்தோட சமைக்கவும் வேண்டாம்… ரெண்டுக்குமே நான் உன்ன அலோவ் பண்ண போறதில்ல” என்றவன் வேகமாக தன்னுடைய அறைக்கு சென்று வீட்டில் அணியும் உடையை மாற்றி கொண்டு நேராக கிச்சனுக்கு சென்றான்.


அவன் கிச்சனுக்குள் நுழைந்த போது “அமர் குட்டி என்ன பண்ற? அம்மா எவ்ளோ கஷ்டப்பட்டு பட்டத்தை எடுத்து கொடுத்தன்… நீ என்னடான்னா இப்படி கிழிச்சிட்டு இருக்க… உதை வேணுமா உனக்கு?” என்று அவள் தன் மகனை கண்டித்துக் கொண்டிருந்தாள்.


அவன் அவள் சொன்னதை காதிலேயே வாங்காமல் தன் கையிலிருந்த பட்டத்தை கிழிப்பதில் மும்முரமாக இருந்தான்.


“சொல்ற பேச்ச கேக்க மாட்டியே… என்னவாவது பண்ணு…” என்று சலிப்புடன் சொன்னவள் மாவை பிசைவதில் கவனம் செலுத்தினாள்.


பட்டத்தை துண்டு துண்டாக கிழித்த அமர் அதைக் கொண்டு வந்து மிருதுளாவின் மீது போட்டவன் “அம்மா பேப்பர் மழை பெய்யுது… பேப்பர் மழை பெய்யுது…” என்று கைதட்டி சிரித்தான்.


“அம்மா மேல பேப்பர் கிழிச்சு போட்டது மட்டுமில்லாம கைதட்டி சிரிக்க வேற செய்றியா… இருடா உன்னை என்ன பண்றேன் பாரு?” என்று சொன்ன மிருதுளா அவனை அடிக்க வருவது போல எழுந்தாள்.


அடுத்த நொடி அமர் அங்கிருந்து ஓடிவிட்டான். புள்ளி மானாய் துள்ளிக் குதித்து ஓடிய தன்மகனை பார்த்த மிருதுளா அப்போதுதான் கிச்சன் கதவின் மீது சாய்ந்து நின்றபடி தன்னையே பார்த்துக் கொண்டிருந்த தேவ்வை கவனித்தாள்.


அவனைப் பார்த்ததும் முகத்தை நொடித்தவள் திரும்பி தன் வேலையை பார்க்க தொடங்கினாள்.


‘இவ பழைய மிதுவே இல்ல… ரொம்ப மாறிட்டா… என் ஒத்த பார்வைக்கே கண்ணம் சிவக்கறவ இப்ப என்னடான்னா என்ன பாத்தாலே முகத்தை திருப்பறா… என் வீட்டுல இருக்கோம்னு கொஞ்சமாவது பயம் இருக்கா பாரு’ என்று முணுமுணுத்தவன் “நான் ஹெல்ப் பண்ணவா மிது?” என்று கேட்டபடி அவள் அருகில் சென்றான்.


அவள் பதில் ஏதும் சொல்லாமல் தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்.


“மிது உன்கிட்ட தான் கேட்கறன்… பதில் சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்?”


“உன்கிட்ட பேச விருப்பம் விருப்பம் இல்லைன்னு அர்த்தம்” என்று அவன் முகம் பார்க்காமல் அவள் பதிலளித்தாள்.


அமர் போட்ட துண்டுக் காகிதங்களில் சில வியர்த்து வழிந்த அவள் முதுகில் ஒட்டி இருந்தன. அதை கவனித்தவன் தன் கைகளால் அவள் முதுகின் மீதிருந்த முடியை தோளின் மறுபுறம் தூக்கி போட்டவன் அந்தப் பேப்பரை வாயால் ஊதினான்.


அவன் தலைமுடியில் கை வைத்ததும் ஒரு நொடி அவள் திகைத்து நின்றாள். அவன் மூச்சு காற்று அவள் உடலில் பட்டதும் அவள் உடல் சிலிர்த்தது. தன் கீழுதட்டை கடித்தவள் கண்களை மூடி அந்த உணர்வை அனுபவித்தாள்.


இதழ்கள் துடிக்க கண்மூடி மோன நிலையில் நின்றவளை பார்த்த தேவ்விற்கு இந்த உலகமே மறந்து விட்டது.


அவள் பின்னால் வந்து நின்று அவளை அணைத்து நின்றவன் “மிது” என்று அவள் காதில் கிசுகிசுத்தான்.


அவள் பதிலேதும் சொல்லாமல் அவன் மார்பின் மீது தன் பின்னந்தலையை அழுத்தி சாய்ந்து நின்றாள்.


"மிது" என்று ஹஸ்கி வாய்ஸில் அழைத்தவன் அவள் கழுத்தில் முத்தமிட்டபடி அவளை இன்னும் இறுக்கி அணைத்தான்.


அப்போது அமர் வராண்டாவில் இருந்து "அம்மா" என்றழைத்தான்.


அடுத்த நொடி மாயஉலகில் இருந்து தன் நிலைக்கு திரும்பிய மிருதுளா அப்போதுதான் தான் தேவ்வின் அணைப்பில் இருப்பதை கவனித்தாள்.


‘அவன் நமக்கு பண்ணத எல்லாம் மறந்துட்டு அவன் தொட்டாலே இப்படி உருகி கரையிறோமே...’ என்று தன்னை நினைத்தே கூசியவளின் கண்கள் கலங்கியது.


கண்களில் நீர் ததும்ப அவனை நிமிர்ந்து பார்த்தவள் “ப்ளீஸ் தேவ்... நீயே என்ன விட்டுடு… என்னால உன் பிடியில இருந்து வெளியில வர முடியும்னு தோணல” என்று கரகரத்த குரலில் சொன்னாள்.


மிருதுளாவின் குரலில் இருந்த மாறுதலைக் கண்டு கொண்டவன் அவளை தன் பக்கமாக திருப்பினான்.


கண்களில் நீர் கோர்க்க நின்றிருந்தவளைப் பார்த்ததும் அவன் மனம் பதறியது.


தன் இரு கைகளாலும் அவள் தாடையை பற்றியவன், “என்னடா? எதுக்கு இப்போ அழற?” என்றான்.


தன் முகத்தின் மீதிருந்த அவன் கைகளை தட்டி விட்டவள் பொங்கி வந்த அழுகையை அடக்கியபடி அங்கிருந்து ஓடிவிட்டாள்.


அவள் பின்னோடு ஓடிவந்த தேவ்வை தடுத்து நிறுத்திய அமர், “அப்பா அம்மாக்கு என்னாச்சு? அவ ஏன் அழுதுகிட்டே போறா?” என்று கேட்டான்.


“அது ஒன்னும் இல்ல ராஜா… அம்மா கண்ணுல தூசி விழுந்திருச்சு… அதான் முகத்தை கழுவிட்டு வர்ற பாத்ரூமுக்கு போய் இருக்கா… அப்பா போய் அம்மாவ கூட்டிட்டு வரன்... அது வரைக்கும் நீ சமத்தா டிவி பாத்துட்டு இரு சரியா” என்று சொன்னவன் அமரை தூக்கிச் சென்று சோபாவில் அமர வைத்து விட்டு டிவியில் கார்ட்டூன் சேனலை போட்டு விட்ட பிறகு மிருதுளா இப்போது தங்கியிருக்கும் அறைக்கு சென்றான்.


அவன் உள்ளே நுழைந்த போது அவள் ஒரு மாத்திரையை விழுங்கி கொண்டிருந்தாள். அது என்ன மாத்திரை என்று அவனுக்கு நன்றாகவே தெரியும். அதை கண்டவன் அதிர்ந்து நின்று விட்டான்.


மாத்திரை சாப்பிட்டதும் அறையில் இருந்த ஜன்னலோரம் சரிந்து அமர்ந்த மிருதுளா தன் கால்களை மடக்கி தன் முகத்தை புதைத்தவள் சத்தம் வராமல் அழத் தொடங்கினாள்.


சிறிது நேரம் கழித்து தன் உணர்வுக்கு திரும்பியவனின் முகம் அப்பட்டமாக வேதனையை வெளிப்படுத்தியது. அவளை நோக்கி மெதுவாக அடி மேல் அடி எடுத்து வைத்து சென்றவன் அவளின் தோள்களைப் பற்றி தூக்கி நிறுத்தினான்.


சிவந்த கண்களுடன் அவனை ஏறிட்டுப் பார்த்தவளிடம் “நீ சாய்ந்து அழ என் தோள் இருக்கும் போது எதுக்காக இப்படி தனியா உட்காந்து அழற?” என்றவன் அவளை அணைத்துக் கொண்டு முதுகை தடவி கொடுத்தான்.


அவனில் ஆறுதலான செய்கையில் நெகிழ்ந்த மிருதுளா உடைந்து அழ தொடங்கினாள்.


வாய்விட்டு கதறி அழுதவளை பார்த்த தேவ் தன் இதயத்தில் யாரோ கத்தியால் குத்தியது போன்ற வலியை உணர்ந்தான்.


தாய் அடித்தது வலித்தாலும் அவளிடமே சென்று ஆறுதல் தேடும் குழந்தையின் நிலையில்தான் இப்போது மிருதுளா இருந்தாள். அவன் தனக்கு இழைத்தது துரோகம் என்று தெரிந்த போதும் அவன் இப்படி அவளிடம் ஆறுதலாகப் பேசி நல்லபடியாக நடந்து கொள்ளும் போது அவளால் அவனை விலக்க முடியவில்லை.


தான் ஏன் இப்படி சுயமரியாதை சிறிதுமின்றி இருக்கிறோம் என்று அவளுக்கே புரியவில்லை.


பாவம்… நாம் ஒருவர் மீது உண்மையான அன்பு வைத்து விட்டால் அவர்கள் மனதை காயப்படுத்தும்படி நம்மால் பேசவோ செய்யவோ முடியாது என்ற உண்மை தெரியாமல் அவள் குழம்பிக் கொண்டிருந்தாள்.


“மிது ப்ளீஸ் காம் டௌன்” என்று அவன் அவளின் தலைமுடியை ஆறுதலாக வருடியபடி மென்மையான குரலில் சொன்னான்.


“என்னால முடியல தேவ்… சத்தியமா முடியல… உன்ன பாக்காம இருந்த போது நீ இருக்க திசைக்கே வரக்கூடாதுன்னு அவ்வளவு உறுதியா இருந்தன்… ஆனா நீ என் பக்கத்துல வந்து என்னைத் தொட்டதும் எல்லாத்தையும் மறந்துட்டு என் மனசு உன் காலடியில விழுது”


“அது ஒன்னும் தப்பில்லையே மிது… நாம ஒருத்தர உண்மையா காதலிச்சா நம்ம மனசு அவங்க கிட்ட தானே போகும்…”


“ஆனா நீ என்ன விட்டு தள்ளிப் போனதும் நீ எனக்கு பண்ண துரோக எல்லாம் எனக்கு ஞாபகம் வருதே… உனக்கு துரோகம் பண்ணவன் காலடியில போய் விழறியேன்னு என் மனசாட்சி என்னை குத்திக் கிழிக்குதே… இந்த வேதனையை என்னால தாங்க முடியல… தயவு செஞ்சு என்னை விட்டுவிடு… நானும் அமரும் எங்கேயாவது போயிடறோம்” என்று அவள் கெஞ்சலாக சொன்னாள்.

“சாரி மிது என்னால இனி உங்களை விட முடியும்னு தோணல” என்று அவன் அமைதியாக சொன்னான்.


தன்னையும் சேர்த்து தான் அவன் சொன்னான் என்பதை புரிந்து கொள்ளாதவள் அவன் அணைப்பிலிருந்து திமிறி வெளியேறினாள்.


அவன் அணிந்திருந்த டீசர்ட்டின் காலரை இறுக்கிப் பிடித்தவள், “உன்னால எங்கள விட முடியுமா? முடியாதா?” என்று வெறி பிடித்தவள் போல அவன் சட்டையை உலுக்கினாள்.


“மிது என்ன பண்ற? ப்ளீஸ் கம் டவுன்” என்று அவளின் கைகளை இறுகப் பற்றியபடி அவன் சொன்னான்.


“சொல்லுடா… உன்னால எங்கள விட முடியுமா? முடியாதா? நீ ஏன் திரும்பவும் என் வாழ்க்கைக்குள்ள வந்து தொலைச்ச… நான் சந்தோஷமா இல்லனாலும் கொஞ்சமாவது நிம்மதியாக இருந்தேனே… அதையும் கெடுத்து என்ன ஒரேடியா சாவடிக்க தான் நீ என் வாழ்க்கைக்குள்ள திரும்ப வந்தியா?” என்று அவள் அவனைப் பார்த்து கத்தினாள்.


அவள் கத்தியதை பார்த்த தேவ் பயந்துவிட்டான்… பொதுவாக மிருதுளாவிற்கு கத்திப் பேசுவது பிடிக்காது… அப்படிப்பட்டவள் உச்சஸ்தாதியில் கத்தினால் அவன் பயப்படாமல் என்ன செய்வான்?


“ப்ளீஸ் மிது… இப்போ நாம எதையும் பேச வேணாம்… அப்புறம் பேசலாம்”


“இல்ல நீ எனக்கு இப்பவே பதில் சொல்லு”


“என்னால இந்த ஜென்மத்துல உங்களை விட முடியாது”


“விட முடியாதா? விட முடியாதா?” என்று பைத்தியக்காரி போல திரும்பத் திரும்ப அதையே சொன்னவள் ஆத்திரத்தில் தனக்கு அருகில் இருந்த பிளவர் வாஷை எடுத்து அவன் மண்டையில் உடைத்தாள்.


அந்தக் பிளவர் வாஷ் துண்டு துண்டாக உடைந்தது. உடைந்த துண்டொன்று தேவ்வின் நெற்றியில் கீறியதில் அவன் நெற்றியில் இருந்து ரத்தம் வழிந்தது. வலியில் ஆவென்று அலறியவன் தன் கைகளால் நெற்றியை பிடித்தான்.


தேவ் வலியில் துடித்ததை பார்த்ததும்தான் தான் எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம் என்பதை மிருதுளா உணர்ந்தாள்.


“சாரி… சாரி தேவ்… என்னை மன்னிச்சிடு… நான் என்னையறியாம…” என்று கோர்வையாக பேச வராமல் திக்கித் திணறியவள் நெற்றியில் இருந்த அவன் கைகளை விலக்கியபோது தான் நெற்றியில் இருந்து ரத்தம் வழிவதை உணர்ந்தாள்.


“அச்சச்சோ… எவ்வளவு ரத்தம்?” என்று சொன்னவளின் உடல் பதற்றத்தில் நடுங்கத் தொடங்கியது.


“என்னால தான்… எல்லாம் என்னால தான்… சாரி… சாரி” என்று திரும்பத் திரும்ப அதையே சொன்னவள் அடுத்த நொடி மயங்கி விழுந்தாள்.


அத்தியாயம் - 23:


மறுநாள் அதிகாலை ஆறு மணிக்குதான் மிருதுளா கண்விழித்தாள். தன் கைகளால் தலையை பிடித்தபடி எழுந்து அமர்ந்தவளுக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகுதான் நேற்று நடந்தது அனைத்தும் நினைவிற்கு வந்தது.


‘சே என்ன காரியம் பண்ணிட்டோம்’ என்று சொன்னபடி தன் தலையில் அடித்துக் கொண்டவள் அப்போதுதான் தனக்கு அருகில் படுத்திருந்த தேவ்வை கவனித்தாள். அமர் தேவ்வின் மார்பின் மீது படுத்து தூங்கிக் கொண்டிருந்தான்.


‘இவன் எதுக்காக நம்ம ரூம்ல வந்து படுத்துருக்கான்?’ என்று யோசித்தவளின் பார்வை அவன் நெற்றியின் மீதிருந்த காயத்தில் விழுந்தது.


ப்ளாஸ்டர் ஒட்டியிருந்த நெற்றியை பார்த்ததும் குற்ற உணர்ச்சியில் அவள் மனம் குமைய தொடங்கியது.


அவன் நெற்றியின் மீதிருந்த காயத்தை வருடியவள் “சாரி தேவ்... சத்தியமா நான் உன்னை காயப்படுத்தணும்னு நினைக்கல… எல்லாமே என்ன மீறி நடந்திருச்சு… நேத்து நான் நடந்துகிட்ட முறையைப் பார்த்து எனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சுன்னு நீ நெனச்சிடலியே” என்று சொன்னவளின் கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது.


அவன் தன்னைப் பற்றி என்ன நினைத்தால் என்னவென்று அவளால் ஒதுக்கித் தள்ள முடியவில்லை. தான் பைத்தியக்காரி என்ற எண்ணம் அவனுக்கு தோன்றி விடக்கூடாது என்று அவள் மனம் விரும்பியது. தான் ஏன் இப்படி முன்னுக்குப் பின் முரணாக யோசிக்கிறோம் என்று அவளுக்கே புரியவில்லை.


‘ஒருவேளை நாம நினைக்கிற மாதிரி தேவ்வை அடியோட வெறுக்கலியோ? அவன் மேல இருக்க காதல் நீரு பூத்த நெருப்பா அடிமனசுல இருக்கோ… அதனாலதான் அவன் என்கிட்ட வந்தாலே நான் மெழுகா உருகுகறேனா?’


தேவ்வின் நெற்றி காயத்தை வருடிக் கொண்டிருந்தவளின் மனதில் பலவித எண்ணங்கள் வலம் வந்தன.


‘இல்ல இனிமே நாம எதைப் பத்தியும் யோசிக்க வேண்டாம்… வாழ்க்கை நம்மை எந்த பாதையில அழைச்சிட்டு போகுதோ அப்படியே போவோம்’ என்று முடிவெடுத்தவள் படுக்கையை விட்டு கீழே இறங்க முயன்றாள்.


அப்போது தேவ்வின் கைகள் அவளின் கைகளை இறுக்கி பிடித்து அவளை இறங்க விடாமல் தடுத்தன.


“ஆர் யூ ஆல்ரைட் மிது?” என்று அவன் ஆழ்ந்த குரலில் கேட்டான்.


அவளால் அவன் முகம் பார்த்து பதில் சொல்ல முடியவில்லை.


அவன் முகம் பார்க்காமல் தலையசைத்தவள், “கைய விடு” என்றாள்.


அவள் சொன்ன அடுத்த நொடி தேவ் அவளின் கையை விட்டுவிட்டான். அவன் அப்படிப் பட்டென்று கையை விட்டதும் அவளின் மனதில் ஏமாற்றம் சூழ்ந்து கொண்டது. அவள் தான் கையை விடச் சொன்னாள். ஆனால் அவன் இன்னும் சிறிது நேரம் தன் கையை பிடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அவள் மனது ஓலமிட்டது. மாறுபட்ட உணர்ச்சிகளுக்கு இடையே சிக்கித் தவித்தவள் அவனிடம் அதை காட்டிக் கொள்ளாமல் பாத்ரூமை நோக்கி சென்றாள்.


செல்பவளின் முதுகையே வெறித்துப் பார்த்தபடி படுத்திருந்தவனுக்கு நேற்று டாக்டர் சொன்ன விஷயங்கள் நினைவிற்கு வந்தன.


மிருதுளா மயங்கி விழுந்ததும் அவன் மிகவும் பயந்துவிட்டான். அவளைத் தூக்கிச் சென்று படுக்கையில் படுக்க வைத்தவன் தன் நெற்றியில் இருந்த காயத்தில் இருந்து ரத்தம் வழிவதை பற்றிக்கூட கவலைப்படாமல் முதலில் சைகாட்ரிஸ்ட்டுக்கு போன் செய்தான்.


“ஹலோ டாக்டர்”


“சொல்லுங்க தேவ்”


“டாக்டர் நான் சொல்லி இருந்தன்ல மிருதுளா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவ ரொம்ப வயலெண்டா பிஹேவ் பண்ணி மயங்கி விழுந்துட்டா… நீங்க கொஞ்சம் வந்து பாக்க முடியுமா? எனக்கு ரொம்ப பயமா இருக்கு…”


“இன்னும் அரை மணி நேரத்துல நான் உங்க வீட்ல இருப்பன்” என்று சொன்ன டாக்டர் சொன்னபடியே அவன் வீட்டிற்கு வந்தார்.


மிருதுளாவை பரிசோதித்தவர் எதனால் அவள் அப்படி நடந்து கொண்டாள் என்பதை தேவ்விடம் கேட்டறிந்தார். அவள் இப்போது என்ன மனநிலையில் இருக்கிறாள் என்பதை அவரால் கணிக்க முடிந்தது.


“தேவ் மிஸ் மிருதுளா காலையிலிருந்து தனியாதான் இருக்காங்களா?”


“இல்ல டாக்டர் என் பையன் கூட தான் இருந்தா”


“அவங்க கூட பேச்சுக் கொடுத்து அவங்க மனச டைவர்ட் பண்ற மாதிரி பெரியவங்க யாராவது அவங்க கூட இருந்தாங்களா?”


“இல்ல டாக்டர்”


“அதுதான் பிரச்சனை… முதல்ல அவங்க கூடவே யாராவது இருக்க மாதிரி ஏற்பாடு பண்ணுங்க… அவங்க கூடவே யாராவது இருந்து அவங்க யோசிக்கிற நேரத்துல அவங்கள டைவர்ட் பண்ணா தான் அவங்க கடந்த காலத்துல நடந்ததை பத்தி யோசிக்கறதை நிறுத்துவாங்க… யோசிக்கறதை நிறுத்தினாலே அவங்க சரி ஆகிடுவாங்க… நீங்க முதல்ல அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க…”


“சரிங்க டாக்டர்”


“அப்புறம் இன்னொரு விஷயம் கொஞ்ச நாள் நீங்க தள்ளியிருந்து அவங்க மேல உங்களுக்கு இருக்க அன்பை வெளிப்படுத்துங்க... உங்க அருகாமை அவங்களுக்கு பிடிச்சிருந்தாலும் கடந்த காலத்துல நீங்க நடந்துகிட்ட முறையால அவங்களால அதை ஏத்துக்க முடியல... பிடித்ததுக்கும் சுயமரியாதைக்கும் இடையில அவங்க சிக்கி தவிச்சதால தான் இப்படி வயலெண்ட்டா பிஹேவ் பண்ணியிருக்காங்க...”


"நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியல டாக்டர்... அவ பக்கத்துலயே போக கூடாதுன்னு சொல்றீங்களா?"


"இல்ல... நான் அப்படி சொல்லல... கட்டி பிடிக்கிறது, முத்தம் கொடுக்கறது, அவங்களை தொட முயற்சிக்கிறது இப்படி எதுவும் பண்ணாம மத்த செயல்கள் மூலமா உங்க அன்பை வெளிப்படுத்துங்க... ஆனா அதுக்காக அவங்களை விட்டு எட்ட தள்ளி நிக்காதீங்க... கூடவே இருங்க"


"சரிங்க டாக்டர்" என்று தேவ் உள்ளே போன குரலில் சொன்னான்.


"என்ன தேவ் வாய்ஸ் டல் அடிக்குது... சியர் அப் மேன்... இதெல்லாம் கொஞ்ச நாளைக்கு தான்... அதுக்கு பிறகு நீங்க அவங்களை நெருங்கலாம்... ஒன்னும் பிரச்சனையில்லை… இப்போதைக்கு புதுசா மெடிசனும் எடுக்க வேண்டிய அவசியமில்லை… அவங்க ஏற்கனவே எடுத்துக்கிட்டு இருக்கறதே நல்ல மெடிசன் தான்… சரி நான் கிளம்பறன்” என்று சொன்ன டாக்டர் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.


நேற்று நடந்ததை எல்லாம் நினைத்து பார்த்தவன் பெருமூச்சை வெளியேற்றினான். பின்னர் தன்மேல் இருந்த அமரை தூக்கி படுக்கையில் படுக்க வைத்து விட்டு கம்பெனிக்கு கிளம்புவதற்காக தன் அறைக்கு சென்றான்.


குளித்து முடித்து விட்டு உடை மாற்றிக் கொண்டு மிருதுளா பாத்ரூமை விட்டு வெளியே வந்த போது தேவ் அங்கில்லை. தூங்கிக் கொண்டிருந்த அமரின் நெற்றியில் முத்தமிட்டவள் சமைப்பதற்காக கிச்சனுக்கு சென்றாள்.


அவள் கிச்சனுக்கு சென்ற போது ஏற்கனவே அங்கு ஒருவர் சமைத்துக் கொண்டிருந்தார்.


அவளைப் பார்த்து புன்னகைத்தவர், “வணக்கம்மா… என் பேரு லட்சுமி… பத்து வருஷமா நான் இந்த வீட்ல தான் வேலை பாக்கறன்” என்றார்.


“ஓஹ்… ஆனா நீங்க திரும்பி வர ரெண்டு நாள் ஆகும்னு அவர் சொன்னாரே”


“ஆமாம்மா… ஆனா நேத்து சாயந்திரம் போன் பண்ணி என்ன பண்ணுவீங்களோ எனக்குத் தெரியாது நாளைக்கு காலைல நீங்க ரெண்டு பேரும் வீட்ல இருக்கணும்னு சொல்லிட்டாரு… பஸ்ல கூட வர வேண்டாம்… வாடகை கார்ல வந்துடுங்க… நானே காசு கொடுத்துடறன்னு சொல்லிட்டாரு… நாங்களும் என்னவோ ஏதோன்னு பதறி அடிச்சிக்கிட்டு போட்டதை போட்டபடி வந்துட்டோம்… இங்க வந்ததும் ஐயாவோட சம்சாரம் நீங்களும் உங்க பையனும் வீட்டுக்கு வந்துருக்க விஷயம் தெரிஞ்சுது… ஐயா கூட ஏற்பட்ட மனஸ்தாபத்துல கோவிச்சிக்கிட்டு போன நீங்க திரும்பி வந்ததுல ரொம்ப சந்தோஷம்மா” என்று காயை வதக்கியபடி சொன்னார்.


தங்கள் இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதைப் பற்றி அவள் வேலைக்காரியிடம் சொல்ல விரும்பவில்லை. அதனால் அவள் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.


“உங்களுக்கு டீ, காப்பி ஏதாவது போட்டு தரவாம்மா”


“இல்ல வேண்டாம்” என்று சொன்னவள் “வீட்டை சுத்தம் பண்றது மட்டும் தான் உங்க வேலன்னு நான் கேள்விப்பட்டேனே… இன்னைக்கு என்ன புதுசா சமைக்கிறீங்க” என்று மெல்லிய குரலில் கேட்டாள்.


“ஆமாமா இதுநாள் வரைக்கும் நான் வீட்டை மட்டும் தான் சுத்தம் பண்ணிட்டு இருந்தன்… சின்னையாவுக்கு உடம்பு சரியில்லையாமே… பையனையும் பாத்துகிட்டு சமைக்கிறது கஷ்டம்… அதனால இனிமே தினமும் நீங்களே சமைச்சிடுங்கன்னு ஐயா காலைல சொன்னாரு… அதான் நான் சமைச்சு கிட்டு இருக்கன்”


“நான் வேணும்னா ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா?”


“வேண்டாம்மா… எல்லா வேலையும் முடிஞ்சிடுச்சு… நீங்க இனி எங்க ஐயாவையும் ஐயா பெத்த தங்கத்தை மட்டும் பாத்தா போதும்… வீட்டு வேலைய எல்லாம் நான் பாத்துக்கறன்”


இனி தனக்கு இங்கு வேலை இல்லை என்பதை புரிந்து கொண்ட மிருதுளா கிச்சனை விட்டு வெளியேறினாள்.
 

geethusri

Moderator

அத்தியாயம் - 24:


தன்னுடைய அறைக்கு வந்த மிருதுளா தூங்கி கொண்டிருந்த அமரை ஒரு பார்வை பார்த்தவள் தன் போனை எடுத்து அமிர்தாவுக்கு அழைத்தாள்.


ஃபோனை அட்டெண்ட் செய்து அமிர்தா “ஹலோ” என்று சொன்னதும் இவள் அழ தொடங்கிவிட்டாள்.


“ஹேய் மிருது என்னடா ஆச்சு? எதுக்காக இப்படி அழற?” என்று அமிர்தா பதட்டத்துடன் கேட்டாள்.


மிருதுளா பதில் சொல்லாமல் அழுது கொண்டே இருந்தாள்.


“மிருது ப்ளீஸ் கன்ட்ரோல் யுவர் செல்ப்… என்னன்னு சொன்னா தான எனக்கு தெரியும்… என்னாச்சு? தேவ் உன்ன ரொம்ப கஷ்டப்படுத்தறனா?”


“அதெல்லாம் இல்ல அமிர்தா” என்று அவள் தேம்பியபடி சொன்னாள்.


“அப்புறம் எதுக்குடா காலையிலேயே போன் போட்டு இப்படி அழற?”


“அமிர்தா எனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சோன்னு தோணுதுடி…”


“என்ன ஆச்சுடி? எதுக்காக பைத்தியம் அது இதுன்னு உளறிக்கிட்டு இருக்க? உனக்கு ஒன்னும் இல்ல… நீ நல்லா தான் இருக்க… புரியுதா? இனி ஒரு முறை இந்த மாதிரி எல்லாம் பேசின உன்னை தேடி வந்து உதைப்பேன் பார்த்துக்கோ”


“இல்லடி… நிஜமாவே எனக்கு பைத்தியம் தான் பிடிச்சிருச்சி… இல்லனா நான் பிளவர் வாஸால தேவ் மண்டையில அடிச்சிருப்பேனா…”


“என்னடி சொல்ற?” என்று அமிர்தா அதிர்ச்சியுடன் கேட்டாள்.


“ஆமாடி… எனக்கு என்ன ஆச்சுன்னே தெரியலை… நேத்து காலையில இருந்தே நான் நானா இல்ல” என்றவள் நேற்று காலையிலிருந்து தேவ் தன்னிடம் நடந்து கொண்ட விதத்தை அமிர்தாவிடம் ஒன்றுவிடாமல் சொன்னாள்.


“என்னால முடியல அமிர்தா… அவன் என்னை நெருங்கினா சூரிய ஒளிபட்ட பனியா நான் உருகிடுவேன்னு இவ்வளவு நாள் எனக்கு தெரியாம போயிடுச்சுடி… ஆனா நான் இப்படி இருக்கறத நெனச்சா ரொம்ப அசிங்கமா இருக்கு… விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையில சிக்கி சின்னாபின்னமாகி கிட்டு இருக்கன்… இப்படியே போனா இதுவரைக்கும் எனக்கு பைத்தியம் பிடிக்கலனாலும் இனி பிடிச்சிடுமோன்னு ரொம்ப பயமா இருக்குடி”


"மிது நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டியே?"


"கேளுடி"


"ஒருவேளை அவன் இப்போ தான் செஞ்சது எல்லாம் தப்புன்னு உணர்ந்து உன்னோட வாழணும்னு முடிவெடுத்திருந்தா உன்னால அவன் பண்ணதை மறந்து அவன்கூட வாழ முடியுமா?"


"தெரியல அமிர்தா... ஆனா ஒன்னு அவன் எதை கேட்டாலும் என்னால மறுக்க முடியும்னு தோணல..."


மிருதுளா சொன்னதை அமைதியாக கேட்ட அமிர்தா “அப்போ அவனை ஏத்துக்க வேண்டியதுதான? தேவ் திரும்பவும் உன்கிட்ட நடிக்கிறான்னு நினைக்கிறியா மிருது?” என்று கேட்டாள்.


“அவன் நடிக்கிறானா இல்லையான்னு எனக்குத் தெரியல அமிர்தா… ஆனா என் மனசு அவனை நம்ப மறுக்குது… அவனை விட்டு தள்ளி இருக்கலாம்னு நான் நெனச்சா… அவன் இந்த ரெண்டு நாளா என்னை நெருங்கி நெருங்கி வரான்... அவன் கிட்ட இருந்து விலகி போக முடிஞ்ச என்னால அவனை விலக்க முடியல… இவ்வளவு நாளும் சொல்லி சொல்லி என்ன கஷ்டப்படுத்தினவன் திடீர்னு என் மேல அன்பு காட்டினா நான் எப்படி நம்பறது? நீயே சொல்லு…”


“எனக்கென்னவோ அவன் மாறிட்டான்னு தான் தோணுது மிருது”


“எப்படி நீ இவ்வளவு உறுதியா சொல்ற?”


“சாரி மிது”


“ஏய் நான் என்ன கேக்கறன்? நீ என்ன பதில் சொல்ற? எதுக்காக எப்போ சம்பந்தமே இல்லாம சாரி கேக்கற”


“சம்மந்தம் இல்லாம எல்லாம் சொல்லல… நீ டிப்ரஷனுக்காக மாத்திரை எடுத்துக்கறது எப்படியோ தேவ்க்கு தெரிஞ்சிருக்கு… அவன் அதை பத்தி தெரிஞ்சுக்கறதுக்காக எனக்கு போன் பண்ணான்”


“நீ சொல்லிட்டியா”


“ஆமா… நான் அவன் கேட்டதும் முதல்ல சொல்லல… எனக்குத் தெரியவே தெரியாதுன்னு சாதிச்சிட்டன்… ஆனா அவன் நம்பவே இல்ல… நான் சொல்லலைன்னா டிடெக்டிவ் வச்சி உன்னை பத்தி விசாரிக்க போறதா சொன்னான்… விசாரிச்சா நீ சின்ன வயசிலேயே டிப்ரஷனுக்கு ட்ரீட்மெண்ட் எடுத்தும் அவனுக்கு தெரிஞ்சிடும்… உனக்குதான் அதைப் பத்தி மத்தவங்களுக்கு தெரியறது சுத்தமா பிடிக்காதே… அதனால அவன் உன்னை ஏமாத்தினதாலதான் உனக்கு டிப்ரஷன் வந்துருச்சுன்னு சொல்லிட்டன்… அது ஒன்னும் பொய்யும் கிடையாதே… சாரிடி…”


மிருதுளா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.


“என்ன மிருது அமைதியாக இருக்க? ஏதாவது சொல்லு? நான் பண்ணது தப்புன்னு நினைக்கிறியா?”


“சே... சே… அதெல்லாம் ஒன்னும் இல்லடி… நான் யார்கிட்டயும் சொல்ல விரும்பாத விஷயங்கள் வெளியில வர கூடாதுன்னு தானே நீ இந்த மாதிரி பண்ணி இருக்க…” என்று அவள் மெல்லிய குரலில் சொன்னாள்.


“ஒன்னும் இல்லனா வாய்ஸ் ஏன் டல் அடிக்குது”


“அமிர்தா ஒருவேளை அமருக்காக அவன் என்ன ஏத்துக்கிட்டானோன்னு நெனச்சன்… ஆனா இப்போதான் அவன் தன்னோட குற்றவுணர்ச்சியை போக்குவதற்காக என்கிட்ட அன்பா நடந்துக்கறான்னு புரியுது… கடைசி வரைக்கும் உண்மையான அன்பை அனுபவிக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கவே கிடைக்காது போலடி”“ஏன் மிருது இப்படி எல்லாம் பேசற? அவன் உன்ன லவ் பண்ணான்னு சத்தியமா எனக்கு தெரியாது… ஆனா நீ அவன் மேல வச்ச காதல் உண்மைடி… அந்தக் காதலே அவன உன்னை காதலிக்க வைக்கும் பாரேன்”


“எனக்கு அந்த நம்பிக்கை இல்லடி… எனக்கு சரியானதும் திரும்பவும் அமரை புடிங்கிகிட்டு என்னை வெளியில தொறத்திடுவான்னு தான் தோணுது… கடைசி வரைக்கும் தனியா வாழ்ந்து சாகணும்னு என் தலையில அந்த ஆண்டவன் எழுதி இருக்கும் போது அதை யாரால மாத்த முடியும்”


“ப்ளீஸ் மிருது… மனச விட்டுடாத…”


“அமிர்தா நான் இப்ப பேசுற மனநிலையில இல்லை… அப்புறம் பேசறன்” என்றவள் அழைப்பைத் துண்டித்தாள்.


அவளை மேலும் சிந்திக்க விடாமல் பேச்சு சத்தம் கேட்டு கண் விழித்த அமர் தன் குட்டி கைகளால் கண்களைத் தேய்த்தபடி எழுந்து அமர்ந்தவன் “அம்மா உனக்கு ஜுரம் போச்சா” என்று கேட்டான்.


அமரை வாரி அணைத்துக் கொண்டவள் “போய்டுச்சிடா கண்ணா” என்று சொன்னபடி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.


பதிலுக்கு அவள் கன்னத்தில் முத்தமிட்ட அமர் “அம்மா சுச்சு வருது” என்றான்.


“நல்லவேளை சொன்ன… இல்லன்னா பெட்டை ஈரம் பண்ணியிருப்ப… வா வா… நாம பாத்ரூமுக்கு போலாம்” என்று சொன்ன மிருதுளா அமரை அழைத்துக் கொண்டு பாத்ரூமிற்கு சென்றாள்.


அடுத்த சிறிது நேரத்தில் அமரை குளிக்க வைத்து உடைமாற்றி அழைத்து வந்தவள் அவனை டைனிங் டேபிள் மீது அமர வைத்து விட்டு “அமர் சமத்தா உட்காந்திருக்கணும்… அம்மா போய் பால் கொண்டு வரன் சரியா” என்றாள்.


“சரிம்மா” என்று அமர் சொல்லும் போதே பாலைக் கொண்டு வந்த லட்சுமி “இந்தங்கம்மா பால்… சின்னையாவுக்கு கொடுங்க” என்றார்.


“எதுக்காக லட்சுமி அம்மா நீங்க கொண்டு வந்தீங்க… நானே வந்து எடுத்துக்க போறன்”


“இதுல என்னமா இருக்கு…” என்றவர் அப்போதுதான் கம்பெனிக்கு செல்ல தயாராகி படிகளில் இறங்கிக் வந்து கொண்டிருந்த தேவ்வை கவனித்தார்.


“அம்மா அய்யா வராரு… நான் போய் சமைச்சத எல்லாம் கொண்டு வந்து வைக்கிறன்” என்று சொல்லிவிட்டு கிச்சனுக்கு சென்றவர் அனைத்தையும் கொண்டு வந்து டைனிங் டேபிளின் மீது வைத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.


தேவ் வந்ததை ஓரக்கண்ணில் கவனித்த மிருதுளா அவனை கண்டுகொள்ளாமல் அமருக்கு பாலை புகட்டி கொண்டிருந்தாள்.


ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்த தேவ் “குட்மார்னிங் அமர் குட்டி” என்றான்.


பால் குடிப்பதை நிறுத்திய அமர் “குட்மார்னிங்ப்பா” என்றான்.


“அமர் ஒழுங்கா பாலை குடி… பால் குடிக்கும் போது என்ன பேச்சு வேண்டி கிடக்கு” என்று மிருதுளா அதட்டினாள்.


தன் உதட்டை பிதுக்கியவன் அமர் பால் குடிக்கும் வரை அமைதியாக இருந்தான்.


அமர் பாலைக் குடித்து முடித்ததும் “லட்சுமிமா கொஞ்சம் வாங்க” என்று தேவ் கிச்சனை பார்த்து குரல் கொடுத்தான்.


“சொல்லுங்க ஐயா” என்றபடி லட்சுமி அங்கு வந்தார்.


“நாங்க சாப்பிடற வரைக்கும் அமரை கொஞ்சம் பாத்துக்கோங்க” என்று அவன் சொன்னதும் லட்சுமி அமரை தூக்கிக் கொண்டு தோட்டத்திற்கு சென்றார்.


“வா மிது வந்து உட்காரு… நாம ஒன்னா சாப்பிடலாம்”


“இல்ல… எனக்கு பசி இல்ல… நான் அப்புறம் சாப்பிட்டுக்குறன்”


“நேத்து நைட்டே நீ ஒன்னும் சாப்பிடல… தயவு செஞ்சு வா… சாப்பிட்டா தான மாத்திரை போட முடியும்”


“போதும் நிறுத்து தேவ்… எனக்கு சீக்கிரம் குணமாகறதுக்காக நீ இந்த மாதிரி அன்பா இருக்க மாதிரி நடிக்க வேண்டிய அவசியம் இல்ல சரியா… உன் குற்ற உணர்ச்சியை போக்கிகறதுக்காக திரும்பவும் அன்பு காட்டி என்னை ஏமாத்தாத.. இன்னொரு முறை என் மனசு உடைஞ்சா நான் உருக்குலைஞ்சு போய்டுவன்… தயவு செஞ்சு நீ நீயாகவே இரு… தேவையில்லாம நடிக்காத” என்று அவள் தேவ்வை பார்த்து கத்தினாள்.


அவள் பேசிய பேச்சில் தேவ்விற்கும் கோபம் வந்துவிட்டது.


“என்னது குற்ற உணர்ச்சியை போக்கிகறதுக்காக நான் உன் மேல அன்பா இருக்க மாதிரி நடிக்கிறேனா? குற்ற உணர்ச்சியில இருக்கவங்களால மத்தவங்க முகத்தையே பாத்து பேச முடியாது… காலைல நீ என் முகம் பாக்க முடியாம தவிச்சியே அந்த மாதிரி… ஒருவேளை நீ சொல்ற மாதிரி இதையெல்லாம் நான் குற்ற உணர்ச்சியை போக்கிகறதுக்காக தான் பண்றேன்னா என்னால எப்படி உன்னை அவ்வளவு ஈசியா நெருங்கி இருக்க முடியும்? உனக்கு மூளைன்னு இருந்தா நீயே யோசிச்சு தெரிஞ்சுக்கோ” என்று பதிலுக்கு அவளை பார்த்து கத்தியவன் சாப்பிடாமல் கிளம்பி சென்று விட்டான்.


அத்தியாயம் - 25:


நேரம் காலை பதினோரு மணி…


மகாதேவன் அலுவலகத்தில் தன் அறையில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரில் போன் ஒலித்தது. யார் அழைப்பது என்பதை கவனிக்காமலேயே அழைப்பை ஏற்று காதில் வைத்தவர் “ஹலோ மகாதேவன் ஹியர்” என்றார்.


“ஹலோ மகாதேவன் சார் நான் மிருதுளா பேசறன்” என்று அவள் மெல்லிய குரலில் சொன்னாள்.


மகாதேவன் திகைத்து விட்டார்.


மறுமுனையில் இருந்து பதில் வராததால் “ஹலோ… ஹலோ மகாதேவன் சார்… நான் பேசறது கேட்கிறதா?” என்று மிருதுளா சத்தமாக கேட்டாள்.


அவள் குரலில் தன் நிலைக்கு திரும்பிய மகாதேவன், “சொல்லுங்க மேடம்” என்றார்.


“சார் அது வந்து… அது வந்து”


ஒரு மிருதுளாவிற்கு தான் கேட்க நினைப்பதை எப்படி கேட்பது என்று தெரியவில்லை. அதனால் அவள் அமைதியானாள்.


“எதுக்கு மேடம் தயங்கறீங்க? என்ன கேட்கணும்னு நினைக்கிறீங்களோ நீங்க அதை என்கிட்ட தாராளமா கேட்கலாம்” என்று மகாதேவன் அவளைப் ஊக்கினார்.


“சார் அது வந்து தேவ் காலைல சாப்பிட்டாரா?” என்று அவள் தயங்கி தயங்கி கேட்டாள்.


அவள் அப்படிக் கேட்டதும் மகாதேவன் மீண்டும் திகைத்து விட்டார்.“சார்… சார் லைன்ல இருக்கீங்களா?”


“ஹான் இருக்கேன் மேடம்” என்று சொன்னவர் “இல்ல மேடம்… காலையில வீட்டிலேயே சாப்பிட்டு வந்ததா சொன்னார்” என்றார்.


“என்னது வீட்டிலேயே சாப்பிட்டதா சொன்னாரா? இல்ல சார் அவர் வீட்ல சாப்பிடல… ப்ளீஸ் அவருக்கு ஏதாவது சாப்பிட வாங்கி கொடுங்க” என்று அவள் கெஞ்சலாக சொன்னாள்.


“சரிங்க மேடம்” என்று மகாதேவன் சொன்னதும்


“ரொம்ப தேங்க்ஸ் சார்… அப்போ நான் போனை வச்சிடறன்” என்று சொன்ன மிருதுளா அழைப்பைத் துண்டிக்க விருந்த தருணம் “மேடம் ஒரு நிமிஷம்” என்றார் மகாதேவன்.


“சொல்லுங்க சார்… மேடம் நான் இதை உங்ககிட்ட சொல்லலாமான்னு எனக்குத் தெரியல… ஆனா என்னால சொல்லாம இருக்க முடியல… தேவ் சார் ரொம்ப நல்லவர் மேடம்… நீங்க எந்த அளவுக்கு அவர லவ் பண்றீங்களோ அவரும் அந்த அளவுக்கு உங்கள லவ் பண்றார். ஆனா சில காரணங்களால் அவர் அந்த லவ்வ தானும் உணராம உங்களுக்கும் உணர்த்த முடியாம இருக்கார்… தயவு செய்து நீங்க அவரை புரிஞ்சுகிட்டு அவர் இதுவரைக்கும் உங்களுக்கு பண்ணத எல்லாம் மறந்து மன்னித்து அவர் கூட சந்தோஷமா வாழுங்க மேடம்”


“எப்படி சார்? உங்களால எப்படி என்கிட்ட இப்படி சொல்ல முடியுது… தேவ் எனக்கு என்னவெல்லாம் பண்ணினான்னு மத்தவங்களுக்கு தெரியாம இருக்கலாம்… ஆனா உங்களுக்கு தெரியும் தானே… அப்படி இருக்கும் போது என்னால எப்படி அவன் பண்ணத மறக்க முடியும்? மன்னிக்க முடியும்?” என்று அவள் வேதனையுடன் கேட்டாள்.


“மேடம் தேவ் சார் அடிப்படையில ரொம்ப நல்லவர்… அப்படிப்பட்டவர் உங்களுக்கு இவ்வளவு பெரிய காயத்தை உண்டு பண்ணி இருக்காருன்னா அதுக்குப் பின்னாடி அவர் பக்கமும் ஏதோ ஒரு நியாயம் இருக்கும்னு உங்களுக்கு புரியலையா?”


“என்ன பெரிய நியாயம்? அவனுக்கு நான் சலிச்சு போயிட்டேன்… வேறு ஒரு பொண்ணு மேல ஆர்வம் வந்துடுச்சு… அதை என்கிட்ட சொல்ல தைரியம் இல்லாம தான் என்னென்னவோ கதைசொல்லி என்ன விரட்டி விட்டுட்டான்”


“இல்ல மேடம்… அது உண்மை கிடையாது… உங்களை விரட்டி விடறதுக்காக தான் அவர் தனக்கு இன்னொரு பெண் மேல ஆர்வம் இருக்க மாதிரி உங்க முன்பு நடித்தார்”


“அது உண்மை இல்லன்னா அவன் ஏன் எனக்கு இவ்ளோ பெரிய துரோகத்தை பண்ணான்னு நீங்கதான் சொல்லுங்களேன்… அதுக்கு பிறகாவது என்னால அவன் பண்ணத மறந்து மன்னித்து அவன் கூட வாழ முடியுதான்னு நானும் பாக்கறன்”


“இல்ல மேடம் அத பத்தி சொல்ல எனக்கு அனுமதியில்லை… தேவ் சார் என்னைக்கு உங்க கிட்ட அதை பத்தி சொல்றாரோ… அப்போ நீங்க தெரிஞ்சுக்கோங்க… ஆனா ஒன்னு மேடம் உண்மையான காதல் எதையும் மறுக்கும் மன்னிக்கும்… நீங்க அவரை உண்மையா காதலிச்சு இருந்தீங்கன்னா உங்களால நிச்சயம் அவரை மன்னிக்க முடியும்… தயவு செய்து நடந்ததை மறந்துட்டு அவர் கூட வாழ முயற்சி பண்ணுங்க… நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா வாழணும்ன்றது அந்த கடவுளுடைய சித்தம்… அதனால்தான் அவர் எவ்வளவோ முயற்சி பண்ணி உங்கள தன் வாழ்க்கையில் இருந்து விலக்கிய பிறகும் இத்தனை வருஷத்துக்கு பிறகு நீங்கள் திரும்பவும் அவர் வாழ்க்கைகுள்ள வந்திருக்கீங்க… அவர் நெனச்சா இப்பவும் உங்கள தன் வாழ்க்கையில் இருந்து விலக்கி வைக்க முடியும் மேடம்… ஆனால் அவர் அதை செய்யவில்லை… அவரை அதை செய்ய விடாமல் தடுக்கறது எதுன்னு நீங்க யோசிச்சி பாருங்க... அப்போ உங்களுக்கு அவரோட காதல் நிச்சயம் புரியும்... அவருக்கே தெரியாததால அவரோட காதல் பொய்னு ஆகிடாது மேடம்... கடந்த காலத்துல நீங்க எந்த அளவுக்கு வலியை அனுபவிச்சீங்களோ அதே அளவு வலியை அவரும் அனுபவிச்சிருக்கார்... இனியாவது நீங்க ரெண்டு பேரும் சந்தோசமா வாழணும்னு நான் நெனைக்கிறேன்... நான் சொன்னதை பத்தி கொஞ்சம் யோசிச்சி பாருங்க... சரி நான் போனை வைக்கிறேன்..." என்ற மகாதேவன் போனை வைத்துவிட்டார்.


அதே நேரம் லட்சுமி தேவ்விற்கு போன் செய்தார்.


தன் வீட்டில் லேண்ட்லைன் எண்ணிலிருந்து அழைப்பு வருவதை கவனித்த தேவ் உடனடியாக அழைப்பை ஏற்றான்.


“ஹலோ ஐயா நான் லட்சுமி பேசறன்”


“சொல்லுங்க லட்சுமி… என்ன விஷயம்? அமர், மிது ரெண்டு பேரும் நல்லா தான இருக்காங்க?” என்று அவன் பதட்டத்துடன் கேட்டான்.


“நல்லா தான் ஐயா இருக்காங்க… ஆனா மிருதுளா அம்மா தான் இது நேரம் வரைக்கும் எதுவுமே சாப்பிடல”


“நீங்க போய் சாப்பிட கூப்பிட வேண்டியது தான?”


“நான் கூப்பிட்டேன்… பசி இல்லைன்னு சொல்லிட்டாங்க… அதான் உங்களுக்கு போன் பண்ணன்… நீங்க ஒரு வார்த்தை சொன்னீங்கன்னா அவங்க சாப்பிடுவாங்கன்னு நினைக்கிறேன்… பாவம் உடம்பு சரியில்லாதவங்க… நீங்க ஒரு வார்த்தை போன் பண்ணி சொல்லுங்களேன்” என்று அவர் கெஞ்சலாக சொன்னார்.


‘ஆமா நான் சொன்னதும் அதைக் கேட்டுட்டு தான் மறுவேலை பார்ப்பா… இதுவே என் பழைய மிதுவா இருந்திருந்தா இப்படி எல்லாம் அடம் பிடிக்க மாட்டா… ஆனா இவ மொத்தமா மாறிப்போய் இல்ல வந்திருக்கா’ என்று வாய்க்குள் முணுமுணுத்தவன் “சரி போனை வைங்க… நான் வீட்டுக்கு வரன்” என்றவன் அழைப்பை துண்டித்தான்.


அப்போது அவன் அறைக்கதவை தட்டி அனுமதி பெற்றுக்கொண்டு உள்ளே வந்த மகாதேவன் ஒரு பார்சலை அவன் முன்பு வைத்தவர், “சார் நீங்க காலையில சாப்பிடலையாமே… ப்ளீஸ் கொஞ்சம் சாப்பிடுங்க” என்றார்.


தன் தாடையை தடவியபடி அவரை யோசனையுடன் பார்த்த தேவ், “நான் சாப்பிடாத விஷயம் உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டான்.


“மிருதுளா மேடம் தான் போன் பண்ணி விஷயத்தை சொல்லி உங்களுக்கு சாப்பிட ஏதாவது வாங்கி தர சொன்னாங்க சார்”


‘இவ இருக்காளே… இவளை எந்த கணக்குல தான் சேர்க்கிறது… கிட்ட போனா நெருப்பாய் சுடறா… விலகியிருந்தா பாசத்த பனிமழையா கொட்றா… இவ என்ன விரும்பறாளா வெறுக்கறாளா ஒண்ணுமே புரிய மாட்டேங்குது’ என்று எண்ணிய தேவ் ஒரு பெருமூச்சை வெளியேற்றியவ்ன் “இதை எடுத்துட்டு போங்க மகாதேவன்” என்றான்.


“சார் நீங்க இத சாப்பிடலைன்னா மிருதுள மேடம் மனசு கஷ்டப்படும்”


அவரைப் பார்த்து புன்னகைத்தவன், “நான் இப்போ வீட்டுக்கு தான் போறன்… நான் சாப்பிடாததால் மேடமும் சாப்பிடாம இருக்காங்களாம்… முதல்ல போய் அவளை சமாதானப்படுத்தி சாப்பிட வைக்கணும்” என்றவன் “என்ன நெனச்சா எனக்கே சிரிப்பா வருது மகாதேவன்… போன வாரம் வரைக்கும் அவ எக்கேடு கெட்டுப் போனா என்கென்னன்னு அவளை கஷ்டப் படுத்த நினைச்சவன் இப்போ அவ ஒருவேளை பட்டினி கிடக்கிறது பொறுக்க முடியாமல் இருக்கற வேலையெல்லாம் விட்டுட்டு அவளை சமாதானப்படுத்த வீட்டுக்கு போகப் போறன்” என்றான்.


“நீங்க அவங்களை கஷ்டப்படுத்தினதுக்கும் காரணம் இருந்துச்சு… இப்போ அவங்களை நல்லபடியா பாத்துக்கணும் நினைக்கிறதுக்கும் காரணம் இருக்கு சார்… எதை நினைத்தும் கவலைப்படாதீங்க… சீக்கிரம் எல்லாம் சரியாகிவிடும்”


“சரி மகாதேவன் நான் கிளம்பறன்… போய் மேடத்தை சாப்பிட வச்சிட்டு முடிஞ்சா வர பாக்கறன்” என்றவன் அடுத்த பத்தாவது நிமிடம் தன் வீட்டில் இருந்தான்.


நேராக மிருதுளாவின் அறைக்கு சென்றவன் படுக்கையில் கண்மூடிப் படுத்திருந்தவளின் அருகே சென்று நின்றான்.


தன் அருகில் யாரோ வந்து நிற்பதை உணர்ந்த மிருதுளா தன் கண்களை கூட திறக்காமல் “எனக்கு பசிக்கலை லட்சுமிமா… தயவு செஞ்சு என்னை கொஞ்ச நேரம் தனியா விடுங்க” என்று சோர்ந்த குரலில் சொன்னாள்.


“ஆனா எனக்கு பசிக்குது… மேடம் வந்தா சாப்பிடலாம்” என்று தேவ் சொன்னதும் அவள் சட்டென்று எழுந்து அமர்ந்தாள்.


“நீ எங்க இங்க?” என்று அவள் ஆச்சரியத்துடன் கேட்டாள்.


“நீ இன்னும் சாப்பிடலன்னு லட்சுமி போன் பண்ணாங்க… அதான் வந்தேன்… ஏன் இப்படி பண்ற? சாப்பிட்டு மருந்து மாத்திரை எடுத்தா தானே உடம்பு சீக்கிரம் குணமாகும்” என்று அவன் கரிசனத்துடன் சொன்னான்.


அவள் ஏதோ சொல்வதற்காக வாயை திறந்தாள்.


தன் கைகளை அவள் முன்பு நீட்டி அவளை பேசவிடாமல் தடுத்தவன், “இங்க பாரு… காலையில பாடின பல்லவியை திரும்ப ஆரம்பிக்காத… என்னால உன்னையும் அமரையும் விட முடியாது… உனக்கு நான் நெருங்கி வர்றது பிடிக்கலையா தள்ளி இருக்கன்… ஆனா அதுக்காக உன்னை விட்டு விலகியும் இருக்க மாட்டேன்… இங்க பாரு மிது உனக்கு தெரிந்தோ தெரியாமலோ நாம ரெண்டு பேரும் திரும்பவும் சேர்றதுக்கு நீ மட்டும்தான் காரணமாக இருந்திருக்க… நான் நினைத்தபடி எல்லாம் நடந்திருந்தா நான் நிச்சயம் உன் வாழ்க்கைக்குள்ள வந்திருக்க மாட்டேன்… ஆனா நீ எல்லாத்தையும் தலைகீழா மாத்திட்ட… அதனால நான் விரும்பினாலும் விரும்பலனாலும்… நீ விரும்பினாலும் விரும்பலனாலும் இனி நாம ரெண்டு பேரும் சேர்ந்து தான் இருக்கப் போறோம்… இதுல நம்ம ரெண்டு பேரோட விருப்புக்கும் வெறுப்புக்கும் இடமில்லை… முடிஞ்ச அளவு நான் உன் மனசறிந்து நடக்க பார்க்கிறேன்… என்னால இப்போதைக்கு அது மட்டும் தான் பண்ண முடியும்… நீயும் கொஞ்சம் நிலைமையை புரிஞ்சுக்கிட்டு வாழப் பழகிக்கோ” என்று ஆழ்ந்த குரலில் சொன்னவன் அவளின் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்தபடி டைனிங் டேபிளை நோக்கி சென்றான்.
 

geethusri

Moderator

அத்தியாயம் - 26:


கண் சிமிட்டும் நேரத்திற்குள் இரண்டு வாரங்கள் கடந்து விட்டன. தேவ் மிருதுளாவிடம் சொன்னபடி அதன் பிறகு அவளை நெருங்க முயற்சிக்கவில்லை. அதற்கு அவன் நிறுவனத்திற்கு புதிதாக கிடைத்த பிராஜெக்ட்டும் உதவியாக இருந்தது.


காலையில் அவள் கண் விழிக்கும் முன்பே அலுவலகத்திற்கு கிளம்பிச் செல்பவன் அவளும் அமரும் தூங்கிய பின்பு தான் வீட்டிற்கு திரும்பினான். முதலில் மிருதுளாவிற்கு தேவ்வின் நடவடிக்கை மகிழ்ச்சியையே கொடுத்தது. அவனை விட்டு விலகி இருப்பதே தனக்கு நிம்மதி என்று அவள் நினைத்தாள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவனின் பாராமுகம் அவளுக்கு ஒருவித எரிச்சலை கொடுத்தது.


மிருதுளா கண் விழிக்கும் போது சற்றே சலிப்புடன் தான் எழுந்தாள்.


‘இன்னைக்கும் அவன் கோழி கூவறதுக்கு முன்னாடியே ஆபீஸ்ல போய் உட்கார்ந்து வேலை பாக்க ஆரம்பிச்சுருப்பான்’ என்று முணுமுணுத்தபடி திரும்பிப் படுத்தவளின் பார்வையில் அமரை கட்டி அணைத்தபடி தூங்கி கொண்டிருந்த தேவ் விழுந்தான்.


அதைக் கண்டு ஆச்சரியத்தில் அவள் தன் கண்களை அகல விரித்தாள்.


மிருதுளாவை விட்டு விலகி இருப்பதாக சொல்லியவன் அவளுடனும் அமருடனும் படுக்கையை பகிர்ந்து கொள்வதை மட்டும் அவள் எவ்வளவோ ஆட்சேபித்தும் மாற்றிக் கொள்ளவில்லை. அவர்கள் இருவருக்கும் உடம்பு சரியில்லாத நிலையில் அவர்களை இரவில் தனியே விடுவது சரியல்ல என்று அவன் நினைத்தான். அதனால் அவன் அந்த ஒரு விஷயத்தில் மட்டும் அவள் விருப்பத்திற்கு இசைந்து கொடுக்கவில்லை.


நீண்ட நாட்கள் கழித்து தேவ்வை இவ்வளவு அருகில் பார்த்த மிருதுளாவால் அவன் முகத்தின் மீதிருந்து தன் கண்களை விலக்க முடியவில்லை.


இந்த இரண்டு வாரத்தில் அவளிடம் பல மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. அதற்கு பெருமளவில் லட்சுமிதான் காரணம். அவளாக அவரிடம் சென்று பேசாவிட்டாலும் அவர் வலிய அவளிடம் தேவ்வை பற்றியும் அவன் குடும்பத்தைப் பற்றியும் அவர்கள் எவ்வளவு நல்லவர்கள் என்பதைப் பற்றி என்று வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டே இருப்பார். அதனால் அவளுமே இப்போதெல்லாம் கடந்த காலத்தை நினைத்து வருந்தி கொண்டிருப்பதில்லை. ஒருவாறு தேவ்வுடன் சேர்ந்து வாழலாம் என்று மனதை தயார்படுத்திவிட்டாள். ஆனால் இந்நேரம் வரை அவள் தேவ்வை நெருங்க முயற்சிக்கவில்லை. அவனையும் நெருங்க அனுமதிக்கவில்லை.

அமருக்காக… தனக்காக… தன் காதலுக்காக… அவனுடன் சேர்ந்து வாழலாம் என்று முடிவெடுத்துவிட்டாலும் அவனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள ஏதோ ஒன்று தடையாக இருந்தது. அந்தத் தடை என்று மனதை விட்டு முழுதாக அகல்கிறதோ அதன் பிறகே அவனுடன் தன்னால் வாழ முடியும் என்று அவளுக்கு நன்றாகவே புரிந்தது.


தன் கைகளால் கண்களைத் தேய்த்த தேவ் மிருதுளாவின் முகத்தில்தான் விழித்தான்.“காலையிலேயே நல்ல தரிசனம்… என்ன முழு தரிசனமும் கிடைச்சிருந்தா இன்னும் சந்தோஷப்பட்டிருப்பன்... ” என்றவன் அவளைப் பார்த்து கண்ணடித்துவிட்டு பாத்ரூமை நோக்கி சென்றான்.


முதலில் அவன் தன் முகத்தில் விழித்ததை பற்றி தான் சொல்கிறான் என்று நினைத்த மிருதுளாவிற்கு அதன் பிறகே அவன் சொன்னதன் அர்த்தம் விளங்கியது. வெட்கத்தில் தன் உதட்டை கடித்தவள் நன்றாக கீழிறங்கி அவளின் பாதி செழுமையை காட்டி கொண்டிருந்த தன் நைட்டியை சரிப்படுத்தியபடி தன் தலையிலேயே அடித்து கொண்டாள்.


“உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல மிது… இப்படியா அவன் முன்னாடி போஸ் கொடுப்ப” என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டவள் அவன் திரும்பி வருவதற்குள் குளித்து விட்டு உடை மாற்றி விடலாம் என்று எண்ணி அடுத்த அறையில் இருந்த பாத்ரூமிற்கு குளிப்பதற்காக சென்றாள்.


அவள் குளித்துவிட்டு வந்த போது தேவ் வராண்டாவில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தான். உறங்கிக் கொண்டிருந்த அமரை எட்டி பார்த்தவள் பின்னர் தானும் சென்று வராண்டாவில் இருந்த சோபாவில் அமர்ந்தாள்.


அவள் அமர்ந்ததும் லட்சுமி சத்துமாவு கஞ்சியை கொண்டு வந்து அவளிடம் கொடுத்தார்.


“லட்சுமிமா இன்னிக்கு ஒரு நாள் எனக்கு காப்பி கொடுங்களேன்” என்று மிருதுளா அவரிடம் சிணுங்கியபடி கேட்டாள்.


இந்த இரண்டு வாரத்தில் லட்சுமிக்கும் அவளுக்கும் இடையே நெருங்கிய பிணைப்பு ஏற்பட்டுவிட்டது. அவள் அவரை தன் அம்மா போல நினைக்க தொடங்கி விட்டாள்.


“இல்லம்மா ஐயா உங்களுக்கு சத்துமாவு கஞ்சிதான் கொடுக்கணும்னு கண்டிப்பா சொல்லியிருக்கிறார்… நீங்க ரொம்ப இளைச்சி போயிட்டீங்களாம்… அதனால உங்களுக்கு சத்தான ஆகாரம் மட்டும் தான் கொடுக்கணும்னு சொல்லிட்டார்… என்னால ஐயா பேச்சை மீற முடியாது… உங்களுக்கு ஏதாவது வேணும்னா ஐயா கிட்டியே கேட்டுக்கோங்க” என்று சொன்ன லட்சுமி சமையலறைக்கு சென்று விட்டார்.


‘ஆமா ரொம்ப தான் அக்கறை… இவர் எங்க மேல அக்கறை காட்டலனா நாங்க சர்க்கரையா கரைந்து போயிடுவோம் பாரு’ என்று முணுமுணுத்தவள் வேண்டா வெறுப்பாக அந்த சத்துமாவு கஞ்சியை குடிப்பதற்காக எடுத்தாள்.


அப்போது அவளின் வாயருகே தன்னுடைய காபி கப்பை கொண்டு வந்து வைத்த தேவ், “இந்தா நீ கேட்ட காபி குடி…” என்றான்.


திடீரென்று அவன் அவ்வளவு நெருங்கமாக வந்தமர்ந்ததும் அவளுக்கு மூச்சடைத்தது. என்ன சொல்வதென்று தெரியாமல் அவள் விழியகற்றாமல் அமைதியாக அவனைப் பார்த்தாள்.


“குடி மிது… ஆனா இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தான்… நாளையிலிருந்து நீ சத்துமாவு கஞ்சிதான் குடிக்கணும்” என்றவன் தன் கையிலிருந்த காப்பியை அவள் கையில் கொடுத்து விட்டு அவளுக்காக வைத்திருந்த சத்துமாவு கஞ்சியை எடுத்துக் குடித்தான்.


அவன் குடித்த காப்பியை தான் குடிப்பதா என்று அவளுக்கு சற்று தயக்கமாக இருந்தாலும் அவள் அதை குடிக்க தவறவில்லை. ஓரக்கண்ணால் அதை கவனித்த தேவ் தன் உதட்டை வளைத்து புன்னகைத்தான்.


காபியை ரசித்து குடித்தவள் பின்னர் தேவ்விடம், “இன்னைக்கு என்ன இவ்வளவு நேரம் வீட்ல இருக்க? ஆபிஸ் கிளம்பலையா?” என்று மெல்லிய குரலில் கேட்டாள்.


“இல்ல மிது… இன்னைக்கு அமர் செக்கப்காக டாக்டர்கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கி இருக்கன்… அவனை செக்கப்க்கு கூட்டிட்டு போயிட்டு வந்த பிறகுதான் ஆபீஸ் போகணும்”


“டாக்டர்கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கினதை பத்தி என்கிட்ட சொல்லவே இல்லையே”


“நேத்து ஈவினிங் தான் மகாதேவன் கிட்ட சொல்லி அப்பாயின்மென்ட் வாங்கினன். அவர் அப்பவே உனக்கு போன் பண்ணி சொல்றேன்னு தான் சொன்னார். நான்தான் வேண்டாம் நானே சொல்லிக்கிறேன்னு சொல்லிட்டேன்… பத்து மணிக்கு அப்பாயின்மெண்ட்” என்று அவன் சொல்லிக் கொண்டிருந்த போது மகாதேவன் அவனுக்கு போன் செய்தார்.


அழைப்பை ஏற்று காதில் வைத்தவன், “சொல்லுங்க மகாதேவன்” என்றான்.


“சார் பாண்டியன் குரூப் எம்.டி அவசர வேலையா எங்கேயோ வெளியூர் போறாராம்… அதான் மதியம் இருக்க மீட்டிங்கை காலைல மாத்த முடியுமான்னு கேட்டார்… நான் அவருக்கு என்ன பதில் சொல்லட்டும்”


‘லாஸ்ட் மினிட்ல மீட்டிங் டைமிங்கை மாத்த சொன்னா என்ன அர்த்தம் மகாதேவன்… அவரை ஊருக்கு போயிட்டு வர சொல்லுங்க… அதுக்கு பிறகு நாம காண்ட்ராக்டில் சைன் பண்ணிக்கலாம்”


“சார் நாம இப்போ காண்ட்ராக்டில் சைன் பண்ணாதான் இந்த ப்ராஜெக்ட்க்கு தேவையான ஆட்களை வேலைக்கு எடுக்க நம்மகிட்ட போதுமான நேரம் இருக்கும்… இது ரொம்ப பெரிய ப்ராஜெக்ட் சார்… போதுமான ஆட்கள் இல்லாம இத நம்மளால ஸ்டார்ட் பண்ண முடியாது… நாம சொன்ன நேரத்துக்கு அவங்களுக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுக்கலைனா அவங்க நமக்கு கொடுக்க வேண்டிய தொகையில மிகப்பெரிய தொகையை கட் பண்ணிடுவாங்க… அப்புறம் நமக்கு மிகப்பெரிய நஷ்டம் ஆயிடும் சார்”


“எனக்கு புரியுது மகாதேவன்… சரி நீங்க மீட்டிங் டைமிங்கை மாத்திட்டு அவருக்கு இன்போர்ம் பண்ணிடுங்க” என்று சொன்ன தேவ் அழைப்பை துண்டித்தான்.


இவ்வளவு நேரமாக அவன் போனில் பேசிக் கொண்டிருந்ததை கேட்ட மிருதுளாவிற்கு அவன் நிலை புரிந்தது. ஆனால் அதேசமயம் இரண்டு வாரங்கள் கழித்து இன்றாவது அவன் சிறிது நேரம் தங்களுடன் இருப்பான் என்று உள்ளுக்குள் மகிழ்ந்தவளுக்கு அவனால் தங்களுடன் வர முடியாது என்பது தெரிந்ததும் சற்று எரிச்சலாக இருந்தது.


அவளை தயக்கத்துடன் பார்த்த தேவ், “மிது இன்னைக்கு என்னால அமர் கூட செக்கப்க்கு வர முடியாது… நீ லட்சுமி அம்மாவை துணைக்கு கூட்டிட்டு டாக்டர்கிட்ட போயிட்டு வந்துடறியா?” என்று கேட்டான்.


“வேற வழி” என்று கடுப்புடன் சொன்னவள் விருட்டென்று அந்த இடத்தை விட்டு எழுந்து சென்று விட்டாள்.


வராண்டாவில் மாட்டியிருந்த கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்த தேவ் இப்போது அவளை சமாதானப்படுத்த நேரம் இல்லை என்பதால் வந்து அவளை சமாதானப்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்தவன் உடைமாற்றிக் கொண்டு அலுவலகத்திற்கு கிளம்பினான்.


மிருதுளா லட்சுமியை அழைத்துக் கொண்டு அமரின் செக்கப்பிற்காக ராயல் மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தாள். அமரை செக்கப் செய்த டாக்டர் முன்பை விட இப்போது அவனுக்கு நன்றாக குணமாகிவிட்டதாகவும் தொடர்ந்து அதே மாத்திரை மருந்தை எடுத்துக் கொள்ளுமாறும் சொன்னார்.


அமரை தூக்கி கொண்டு டாக்டரின் அறையை விட்டு வெளியேறிய மிருதுளா மாத்திரையை வாங்குவதற்காக அங்கிருந்த பார்மசியை நோக்கி சென்ற போது “மிருதுளா” என்று யாரோ அவளை அழைத்தனர்.


அவள் திரும்பிப் பார்த்த போது அவள் அப்பாவிற்கு கீழ் ஜூனியராக வேலை பார்த்த டாக்டர் சியாமா அங்கு நின்றிருந்தார்.


“ஹலோ டாக்டர்… எப்படி இருக்கீங்க?” என்று மிருதுளா கேட்டாள்.


“நான் நல்லா இருக்கேன் மிருதுளா… நீ எப்படி இருக்க? இது உன் பையனா?” என்று கேட்டவர் “ஆமா நீ சென்னையில இருக்கும் போது எதுக்காக உன்னோட அப்பா விஜய் பார்க்ல ரூம் எடுத்து தங்கி இருக்கார்” என்றார்.


“என்ன டாக்டர் சொல்றீங்க? அப்பா சென்னைக்கு வந்துருக்காரா?” என்று அவள் ஆச்சரியத்துடன் கேட்டாள்.


அத்தியாயம் - 27:


“ஆமா… ஒரு மெடிக்கல் கான்பரென்ஸ்காக அவர் வந்திருக்கார்… ஏன் உனக்கு தெரியாதா?” என்று சியாமா கேட்டார்.


“இல்ல டாக்டர் எனக்குத் தெரியாது… என் பையனுக்கு கொஞ்ச நாளா உடம்புக்கு முடியல… அவனோட ட்ரீட்மெண்ட் சம்பந்தமா அலைந்துகிட்டு இருந்ததால நான் அப்பா கிட்ட பேசவே இல்ல… அதான் எனக்கு தெரியல… சரி டாக்டர்… நான் கிளம்பறேன்” என்று அவரிடம் எதையோ சொல்லி சமாளித்த மிருதுளா பார்மசியை நோக்கிச் சென்றாள்.


‘என்னது அப்பா இங்க வந்துருக்காங்களா? சென்னைக்கு வந்திருக்கிறதை பற்றி அவர் ஏன் எனக்கு போன் பண்ணி சொல்லல…. அவருக்கு என்ன வந்து பார்க்க நேரம் கிடைக்கலைனாலும் நானாவது அவரைப் போய் பார்த்திருப்பேனே’ என்று நினைத்தவளுக்கு வருத்தமாக இருந்தது.


ஒரு நொடி யோசித்தவள் பின்னர் அமரை லட்சுமியிடம் கொடுத்துவிட்டு, “லட்சுமிமா நீங்க அமரை தூக்கிட்டு வீட்டுக்கு கிளம்புங்க… நான் போய் என் அப்பாவை பார்த்துட்டு வந்துடறேன்” என்றவள் அவர்களை காரில் அனுப்பி வைத்து விட்டு ஒரு ஆட்டோ பிடித்து விஜய் பார்க் ஹோட்டலை நோக்கி சென்றாள்.


நேராக ரிசப்ஷனுக்கு சென்றவள், “டாக்டர் தனசேகரன் எந்த ரூம்ல இருக்கார்னு சொல்ல முடியுமா?” என்று கேட்டாள்.


“சாரி மேடம்… எங்களால எங்க கஸ்டமரோட ரூம் நம்பரை எல்லாம் சொல்ல முடியாது” என்று ரிசப்ஷனில் அமர்ந்திருந்த பெண் இனிமையான குரலில் சொன்னாள்.


“இங்க பாருங்க நான் அவரோட பொண்ணுதான்… நீங்க என்கிட்ட அவர் ரூம் நம்பரை சொல்வதால் உங்களுக்கு எந்த ப்ராப்ளமும் வராது”


அவளை சந்தேகத்துடன் பார்த்த ரிசப்ஷனில் இருந்த பெண், “என்னது நீங்க அவரோட பொண்ணா? அப்போ அவர்கிட்டயே அவர் எந்த ரூம்ல இருக்கார்னு கேட்டு தெரிஞ்சுக்கலாமே… எதுக்காக என்கிட்ட வந்து கேட்கிறீங்க?” என்றாள்.


“இல்ல நான் போன் பண்ணன்… அவர் எடுக்கல… அதான் உங்ககிட்ட கேட்கிறேன்”


“ஒரு நிமிஷம் இருங்க… நான் அவர்கிட்ட கேட்டு கன்பார்ம் பண்ணிகிட்டு அவர் அனுமதி கொடுத்தா உங்களுக்கு சொல்றேன்” என்றவள் தனசேகரன் அறையில் இருந்த லேண்ட்லைனிற்கு போன் செய்தாள்.


அழைப்பை ஏற்ற தனசேகரன், "ஹலோ" என்றார்.


"சார் மிருதுளான்னு ஒருத்தங்க உங்களை பாக்க வந்திருக்காங்க... உன் ரூம் நம்பர் தெரியாததால எங்ககிட்ட கேக்கறாங்க... நான் சொல்லட்டுமா?"


“என்னது மிருதுளாவா? அவ எதுக்கு இங்க வந்தா… எனக்கு அவளை பார்க்க விருப்பமில்லைன்னு சொல்லி திருப்பி அனுப்பிடுங்க… என்னோட ரூம் நம்பரைச் சொல்லி இங்க அனுப்பி வைக்கிற வேலையெல்லாம் வெச்சுக்காதீங்க… அப்புறம் நான் முக்கியமான வேலையா இருக்கேன் தேவை… இல்லாம இந்த மாதிரி போன் பண்ணி இனி என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க” என்று அவர் சொல்லி கொண்டிருந்த போதே அவர் அருகில் அரைகுறை உடையில் இருந்த பெண் அவரின் காதை பல்பட கடித்தாள்.


“இரு டார்லிங்… அதுக்குள்ள என்ன அவசரம்… இதோ வந்துடறேன்” என்று தன் அருகில் இருந்த பெண்ணிடம் அவர் சொன்னது அந்தப் பெண்ணிற்கு தெளிவாக கேட்டது.


அவர் இப்போது எந்த வேலையில் பிசியாக இருக்கிறார் என்பதை புரிந்த அந்தப் பெண் நக்கலாக சிரித்தவள் பின்னர் அழைப்பை துண்டித்து விட்டாள்.


“சாரி மேடம்… அவர் உங்களை பார்க்க விரும்பல… அதுமட்டுமில்ல தன்னோட ரூம் நம்பரை கூட உங்ககிட்ட சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டாரு” என்று அந்தப் பெண் மிருதுளாவை இரக்கத்துடன் பார்த்தபடி சொன்னாள்.


அந்தப் பெண்ணைப் பார்த்து வலுக்கட்டாயமாக புன்னகைத்த மிருதுளாவிற்கு வாயை விட்டு வார்த்தைகளே வரவில்லை.


பொங்கி வந்த அழுகையை கட்டுப்படுத்தியவள் அந்தப் பெண்ணைப் பார்த்து தலையசைத்து விட்டு அங்கிருந்து கிளம்பினாள்.


‘அவர் என்ன பார்த்து பல வருஷம் ஆகிடுச்சு… அவர் என்ன தேடி வரலனாலும் பரவால்ல… அவரை நான் தேடி வந்த போதும் என்ன பாக்க முடியாதுன்னு சொல்லி அனுப்பறாரே… இவருக்கு என்மேல கொஞ்சம் கூட பாசம் இல்லையா’ என்று வேதனையுடன் நினைத்தவளின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.


தன் கண்ணீரை யாரும் பார்த்து விடக்கூடாது என்று நினைத்தவள் தலையைத் தாழ்த்தியபடி நடந்தாள்.


அதேநேரம் தேவ் இன்று பாண்டியன் குரூப் எம்டியை சந்திப்பதற்காக விஜய் பார்க் ஹோட்டலுக்கு தான் வந்திருந்தான். மீட்டிங்கிற்கு நடுவே அவன் கிளைண்ட்டிற்கு ஒரு போன் வந்தது. மிக முக்கியமான போன் என்பதால் அவர் தேவ்விடம் மன்னிப்பு கேட்டுவிட்டு போனை எடுத்துக் கொண்டு வெளியேறினார்.


நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வராததால் தேவ் அந்த அறையை விட்டு வெளியேறி ஹோட்டல் லாபியில் வந்து வேடிக்கை பார்க்க தொடங்கினான். அப்போதுதான் ரிசப்ஷனில் இருந்த பெண்ணிடம் எதையோ விசாரித்துக் கொண்டிருந்த மிருதுளா அவன் பார்வையில் விழுந்தாள்.


‘இவ எதுக்காக இங்கு வந்தா? இவ இந்நேரம் அமரை செக்கப்புக்கு தான கூட்டிட்டு போய் இருக்கணும்’ என்று நினைத்தவன் தன் நெற்றியை சுருக்கியபடி அவளைப் பார்த்தான்.


அவன் அவர்களை விட்டு சற்று தூரமாக இருந்ததால் அவள் ரிசப்ஷனில் இருந்த பெண்ணிடம் என்ன விசாரித்தால் என்று தெரியவில்லை. ஆனால் அவள் ஏதோ கேட்டதும் அந்தப் பெண் போனை எடுத்து யாருக்கோ அழைத்தவள் பின்னர் மிருதுளாவிடம் எதையோ சொன்னாள். அந்தப் பெண் சொன்னதைக் கேட்டதும் மிருதுளாவின் முகம் வாடிய மலராய் சுருங்கிவிட்டது. ஜீவனற்ற முகத்துடன் முடுக்கிவிட்ட பொம்மை போல தலையை தொங்க போட்டபடி அங்கிருந்து வெளியேறியவளின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் அவன் பார்வையில் இருந்து தப்பவில்லை.


மிருதுளாவிடம் சென்று பேசலாம் என்று அவன் நினைத்த போது அதற்குள் போன் பேசி முடித்து விட்டு அவன் கிளையண்ட் வந்து விட்டார். மிருதுளாவிடம் ஓட துடித் கால்களை கட்டுப்படுத்திக்கொண்டு ஒருவாறு அந்த பிசினஸ் டீலை பேசி முடித்தவன் தன்னுடைய கிளையண்ட்டை வழியனுப்பி வைத்துவிட்டு நேராக ரிசப்ஷனை நோக்கி சென்றான்.


தேவ்வைப் பார்த்ததும் ரிசப்ஷனில் இருந்த பெண், “சொல்லுங்க சார்… உங்களுக்கு நான் என்ன உதவி பண்ணனும்” என்று புன்னகையுடன் கேட்டார்.


“இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணு வந்து உங்க கிட்ட பேசினாங்களே… அவங்க மிருதுளா தானே?”


“ஆமா சார்”


“அவங்களுக்கு இங்கு என்ன வேலைன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”


தேவ் யார் என்பது அந்தப் பெண்ணிற்கு தெரியும் என்பதால் அவள் மிருதுளாவை பற்றி சொல்ல தயங்கவில்லை.


“அவங்க டாக்டர் தனசேகரனை பாக்கறதுக்காக இங்க வந்திருந்தாங்க”


தன் புருவத்தை நெறித்தவன், “என்னது டாக்டர் தனசேகரனை பாக்கறதுக்காக வந்திருந்தாளா?” என்று கேட்டவனின் உள்ளம் ஆத்திரத்தில் எரிமலையாய் கொதித்தது.


பற்களை கடித்தவன் தன் கைமுஷ்டியை இறுக்கி கோபத்தை கட்டுப்படுத்தினான்.


அவன் முக மாற்றத்தை வைத்து ஏதோ சரி இல்லை என்பதை உணர்ந்து கொண்ட அந்தப் பெண், “சார் ஆனா அவர் அவங்களை பாக்க விரும்பலன்னு சொல்லிட்டார்” என்றாள்.


“இது எப்படி சாத்தியம்? அவ அவரோட மகள் ஆச்சே” என்று தேவ் ஆச்சரியத்துடன் கேட்டான்.


“அவர் ஏன் அப்படி சொன்னார்னு எனக்குத் தெரியலை சார்… அவங்க அப்பா பொண்ணா இருந்தாலும் அவர் பேசுவதை பார்க்கும் போது அவர் ஏதோ மூணாவது மனுஷங்களை பத்தி பேசற மாதிரி இருந்தது… நான் போன் பண்ணி உங்க பொண்ணுக்கு உங்க ரூம் நம்பர் சொல்லட்டுமான்னு கேட்டதும் வேண்டாம் எனக்கு அவளை பார்க்க விருப்பமில்லைனு தயக்கமே இல்லாம சொன்னார்… அவரை தொந்தரவு பண்ணாம போக சொல்லி சொன்னதும் அவங்க கிளம்பிட்டாங்க”


‘மூணு வருஷத்துக்கு முன்ன என் பொண்ணு மிருதுளா தான் என்னோட விலைமதிப்பில்லாத பொக்கிஷம்… அவளுக்காக தான் என் மனைவி இறந்த பிறகும் நான் மறுகல்யாணம் பண்ணிக்கலைன்னு டிவி இன்டர்வியூல சொன்ன தனசேகரன் இப்போ எதுக்காக தன் பொண்ணை பார்க்க விருப்பமில்லைனு சொல்லி திருப்பி அனுப்பணும்… அப்போ என்னடான்னா தன் பொண்ணு மேல உயிரையே வச்சிருக்க அப்பா மாதிரி அந்த உருகு உருகினான்… இப்போ என்னடான்னா இப்படி நடந்துக்கிறான்… நிச்சயம் இதுல நமக்குத் தெரியாத ஏதோ ஒரு விஷயம் இருக்கு… முதல்ல அது என்னென்னு நாம கண்டுபிடிக்கணும்’ என்று நினைத்த தேவ் அந்தப் பெண்ணிடம் நன்றி சொல்லிவிட்டு அந்த ஹோட்டலை விட்டு வெளியேறத் திரும்பி நடக்கத் தொடங்கியவன் தன் போனை எடுத்து மகாதேவனுக்கு அழைத்தான்.


“ஹலோ மகாதேவன்”


“சொல்லுங்க சார்”


“மிருதுளாவுக்கும் அவங்க அப்பாவுக்கும் இடையே உள்ள உறவு எப்படிப்பட்டது? சின்ன வயசுல இருந்து அவ எப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்தா? இந்த எல்லா விவரமும் எனக்கு உடனடியா வேணும்… மணிகண்டனுக்கு போன் பண்ணி அவர் அவர் ஆளுங்க கிட்ட சொல்லி உடனடியா இந்த விஷயத்தை பத்தின டீடைல்ல கலெக்ட் பண்ணி தர சொல்லுங்க” என்றவன் அழைப்பை துண்டித்தான்.
 

geethusri

Moderator

அத்தியாயம் - 28:


மாலை 4 மணி…


தேவ் குரூப் ஆஃப் கம்பெனிஸின் தலைமையகத்தில் இருந்த தன் அறையில் தேவ் அமர்ந்திருந்தான். அவனுக்கு முன்பு மகாதேவன் அமர்ந்திருந்தார்.


“நான் சொன்ன டீடைல் எல்லாம் கலெக்ட் பண்ணிட்டீங்களா மகாதேவன்?”


“எஸ் சார்” என்று அவர் வேதனையுடன் சொன்னார்.


“அப்போ எதுக்காக வெயிட் பண்றீங்க? சீக்கிரம் சொல்லுங்க”


“சார் அந்த தனசேகரன் சரியான பொம்பளை பொறுக்கி சார்… வயசு காலத்திலேயே அவனுக்கு பொம்பளைங்க சகவாசம் அதிகம்… அது தெரிஞ்சு அவங்க அப்பா அம்மா அவனை அனுசரிச்சு போற மாதிரி ஏழை வீட்டு பொண்ணா பார்த்து அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க… கல்யாணம் பண்ணி மிருதுளா மேடம் பிறந்த பிறகு கூட அவன் கொஞ்சம் கூட திருந்தவே இல்ல சார்… ஆனா மிருதுளா அம்மா ரொம்ப நல்லவங்க… அப்பாவி… தன் புருஷனை பத்தி தன் பொண்ணுக்கு தப்பான அபிப்பிராயம் வந்துடக் கூடாதுன்னு அவங்ககிட்ட அவரப் பத்தி ஒரு வார்த்தை கூட தப்பா சொன்னது இல்லையாம்… அந்த ஆளோட வேலை காரணமாக குடும்பத்தை கவனிக்க முடியலன்னு அவங்க மிருதுளா கிட்ட சொல்லி வளர்த்திருக்காங்க…”


“அவங்க அம்மா இருந்த வரைக்கும் மிருதுளாவும் மத்த குழந்தை மாதிரிதான் இருந்துருக்காங்க சார்… ஆனா அவங்க அம்மா இறந்ததும் அப்பா இருந்தும் அவங்க அனாதையா ஆயிட்டாங்கன்னு தான் சொல்லணும் சார்… அந்த தனசேகரன் ஒருமுறைகூட அவங்ககிட்ட பாசமான அப்பாவா நடந்துகிட்டது இல்லையாம்… தான் உலகமா நெனச்சா அம்மாவும் இல்லாம அப்பாவோட பாசமும் கிடைக்காம மிருதுளா ஒரு கூட்டுக்குள்ள வாழ தொடங்கிட்டாங்களாம்… அவங்களுக்கு பொதுவாவே யார் கூடயும் பேசி பழக பிடிக்காதாம்… ஸ்கூல் போவாங்க வருவாங்க… எதையாவது படிப்பாங்க… இதுதான் அவங்க வாழ்க்கையாகவே இருந்து இருக்கு…”


“ஸ்கூல்ல பேரன்ஸ் மீட்டிங் வச்சா கூட அந்தாளு வரமாட்டானாம்… மிருதுளா வற்புறுத்தி கூப்பிட்டா திட்டுவானாம்… சின்ன வயசுல அவங்களுக்கு அதற்கான காரணம் புரியல… அதுக்கப்புறம் அப்பாவோட வேலை காரணமாக அப்பா இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் வருவது இல்லை போலன்னு அவங்கள அவங்களே தேத்திக்கிட்டாங்க”


“தன் அப்பாவோட அன்பை அடைஞ்சிடணும்னு அவங்க எவ்வளவு முயற்சி பண்ணி இருக்காங்க சார்… ஆனா கடைசி வரைக்கும் அது நடக்கவே இல்லை… அவன் எப்பவும் தன்னை பற்றி மட்டும்தான் யோசிப்பானாம்… அவனை பொறுத்தவரைக்கும் தன்னோட சுகம் மட்டும் தான் முக்கியமாம்”


“மிருதுளா காலேஜ் படிச்சிட்டு இருக்கும் போது திடீரென்று ஒருநாள் அவன் மிருதுளா கிட்ட நான் பாரின் போக போறேன்னு தகவலா சொல்லி இருக்கான்… நாம பாரின் போய்ட்டா வயசு பொண்ணு தனியா என்ன பண்ணுவா? நம்ம கூட கூட்டிட்டு போகனும்னு கூட அவன் நினைக்கலையாம்… அப்போதான் மிருதுளா மேடத்துக்கு சுத்தமா மனசு விட்டு போச்சாம்… அவங்களும் நான் தனியாவே இருந்துக்கறன்னு சொல்லிட்டாங்களாம்….”


“ஆனாலும் மனசு கேட்காம அப்பப்ப போன் பண்ணுவாங்க போல… அப்போ கூட அந்தாளு அவங்க கிட்ட சரியா பேச மாட்டானாம்… ஏன் இப்போ அவன் மெடிக்கல் கான்பரென்ஸுக்கு வந்தது கூட மிருதுளா மேடத்துக்கு தெரியாது போல… விஷயம் தெரிஞ்சு அவங்கள போனபோதும் பார்க்க முடியாதுன்னு விரட்டி விட்டுட்டானாம்” என்று தலை குனிந்தபடி தான் தெரிந்து கொண்ட அனைத்து விஷயங்களையும் சொன்ன மகாதேவன் தேவ்வை நிமிர்ந்து பார்த்தார்.


அவன் முகம் பாறையாய் இறுகி இருந்தது.


“சார் உண்மை தெரியாம நீங்க மிருதுளா மேடத்துக்கு எவ்வளவு பெரிய பாவம் பண்ணிட்டீங்க சார்? உங்களை விடுங்க என்ன நெனச்சா எனக்கு அசிங்கமா இருக்கு சார்… நீங்க பண்ணதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை… ஆனாலும் எல்லாம் தெரிஞ்சும் நான் கண்டும் காணாமல் இருந்து இருக்கேனே… நானெல்லாம் என்ன மனுஷன்? ஏற்கனவே அன்புக்காக ஏங்கிகிட்டு இருந்த பொண்ணுகிட்ட அன்பு காட்டுற மாதிரி ஏமாத்தி எவ்வளவு பெரிய கொடுமைய அவங்களுக்கு பண்ணி இருக்கீங்க சார்? எனக்குத் தெரியும் இதையெல்லாம் நம்ம அம்முக்காக தான் நீங்க பண்ணீங்கன்னு… ஆனா நீங்க குறி பார்த்து விட்ட அம்பு தன்னோட இலக்க துளைக்காம ஒரு அப்பாவி புறாவை சாய்ச்சிடுச்சே… சொல்லுங்க சார் அந்த தனசேகரன் பண்ணதுக்கும் நீங்க பண்ணதுக்கும் என்ன வித்தியாசம்?” என்று மகாதேவன் தேவ்வின் முகத்தை நேருக்கு நேர் பார்த்து கேட்டார்.


மகாதேவன் சொன்னதைக் கேட்டதும் தேவ் தன் இதயத்தில் யாரோ ஈட்டியால் குத்தியது போல துடிதுடித்தான்.


“எல்லா உண்மையும் தெரிந்த நீங்களே இப்படி சொன்னா எப்படி மகாதேவன்… போயும் போயும் அந்த தனசேகரன் கூட என்ன கம்பேர் பண்ண உங்களுக்கு எப்படி மனசு வந்தது?” என்று அவன் வருத்தத்துடன் கேட்டான்.


“என்னால முடியல சார்… உண்மை தெரியாம ஒரு அப்பாவி பொண்ணுக்கு துரோகம் பண்ணிட்டோம்னு நினைக்கும் போது அப்படியே செத்துடலாம் போல இருக்கு சார்… பாவம் சார் மிருதுளா மேடம்… ஏற்கனவே அப்பாவால பட்ட கஷ்டம் போதாதென்று நாமளும் நம்ம பங்குக்கு அவங்கள கஷ்டப்படுத்திட்டோம்”


“நீங்க சொல்றது உண்மைதான் மகாதேவன்… ஆனா இப்படி ஒரு திருப்பத்தை நான் சத்தியமா எதிர்பார்க்கல… நீங்களும் தான் அந்தாளு கொடுத்த இன்டர்வியூவை பாத்தீங்க… அதுல அந்த ஆளு தன் பொண்ணுதான் தன்னோட உயிர்னு சொன்னான்…. அத பாத்துட்டு தான் இவளுக்கு வலிச்சா அவனுக்கும் வலிக்கும்னு நினைச்சி நான் இப்படி பண்ணன்… ஆனா அந்தப் பொறுக்கி என் மிதுவையும் இவ்வளவு கஷ்டப்படுத்தி இருப்பான்னு நான் சத்தியமா நினைச்சுப் பார்க்கல மகாதேவன்” என்று சொன்ன தேவ்வின் முகத்தில் வேதனை அப்பட்டமாகத் தெரிந்தது.


மகாதேவனுக்கு அவனைப் பார்த்து பாவமாக இருந்தது. அறியாமல் ஒரு பெண்ணிற்கு துரோகம் இழைத்து விட்டு அவன் படும்பாடு அவருக்கு நன்றாகவே விளங்கியது.


“சரி விடுங்க சார்… நடந்து முடிந்ததை நினைச்சு கவலைப்படறதுல எந்த பிரயோஜனமும் இல்ல… இனி நடக்க வேண்டியதை பார்க்கலாம்… நீங்க ஏன் இப்படி எல்லாம் பண்ணீங்கன்னு மிருதுளா மேடத்துக்கிட்ட உண்மைய சொன்னீங்கன்னா அவங்க உங்கள புரிஞ்சுக்குவாங்க சார்… இத்தனை நாள் அவங்களுக்கு கொடுத்த கஷ்டத்துக்கு எல்லாம் சேர்த்து இனி அவங்களை நல்லா பார்த்துக்கோங்க… அதுதான் நீங்க பண்ணின பாவத்துக்கு பண்ற பிராயச்சித்தம்”


“இல்ல மகாதேவன்… நான் மிதுகிட்ட உண்மையை சொல்ல போறது இல்ல” என்பதை தேவ் உறுதியாக சொன்னான்


அவன் சொன்னதைக் கேட்ட மகாதேவன் ஆச்சரியத்துடன் அவனை பார்த்தார்.


“ஏன் சார்?”


“நீங்க என்கிட்ட சொன்ன மாதிரி இத்தனை நாள் நான் மிதுவை காதலிச்சேனா இல்லையான்னு எனக்கு சத்தியமா தெரியல மகாதேவன்… ஆனா இந்த நிமிஷம் என் உயிரே அவதான்… இனி அவ எதுக்காகவும்… எதை நினைத்தும் கஷ்டப்பட கூடாது… இப்போ நான் உண்மைய சொன்னா அவ என்ன புரிஞ்சுக்குவா… ஆனா இத்தன வருஷமா தன் வேலைக்காக தான் தன் அப்பா தன்கிட்ட பாராமுகமாய் நடந்துகிட்டார்னு ஒரு பிம்பத்தை உருவாக்கி வச்சிருக்கா இல்லையா? அந்த பிம்பம் சுக்கு நூறாய் உடைந்து விடும்… இப்போ மிருதுளா இருக்க நிலைமையில அவளால அதை தாங்கிக்க முடியுமான்னு எனக்கு தெரியல… அவ நெனப்புல அந்த நாய் நல்லவனாவே இருந்துட்டு போகட்டும்… அந்த நாய் காரணமா திரும்பவும் என் மிது வேதனைபடறதை நான் பார்க்க விரும்பல…”


“உண்மைய சொல்லலைன்னா அப்புறம் எப்படி சார் மேடம் உங்க கூட வாழ்வாங்க? ஒருவேளை அவங்க உங்கள பிரிஞ்சு போற முடிவு எடுத்துட்டா என்ன பண்றது?”


“அவ அப்படியெல்லாம் பண்ணுவான்னு நினைக்கிறீங்களா மகாதேவன்? உங்களுக்கு ஞாபகம் இருக்கா… அவ வயித்துல இருக்க கருவை நான் கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம அழிக்க நெனச்ச போது கூட அவ என்ன விட்டு போகல… அப்படிப்பட்டவ இப்போ போவான்னு நினைக்கிறீங்களா… இல்ல மகாதேவன்… உண்மையை சொல்லணும்னா நான்தான் அவளை விட்டு இப்பவும் விலகி இருக்கன்… என்னதான் எனக்கு அவளை பிடிச்சாலும் அம்முவை கொன்னவனோட பொண்ணுகூட எப்படி வாழ்வதுன்னு ஒரு தயக்கம் எனக்குள்ள இருந்துக்கிட்டே இருந்துச்சு… ஆனா இனி நான் மிதுவை நெருங்க தயங்க வேண்டியதில்லை… நான் தொட்டா போதும் அவ மெழுகா உருகி கரைஞ்சிடுவா… அவளை எப்படி வழிக்கு கொண்டு வரணும்னு எனக்கு நல்லாவே தெரியும்… அவ என்கூட சந்தோசமா வாழணும்றதுக்காக இந்த உண்மைய அவகிட்ட சொல்லணும்னு அவசியம் இல்லை”


“சரிங்க சார் அந்த தனசேகர் என்ன என்ன பண்ணலாம்? நம்ம அம்முவோட சாவுக்கு காரணமாக இருந்ததோட அவன் மிருதுளா மேடத்துக்கும் நல்ல அப்பாவா இல்லையே?”


“அவன் எல்லாம் இந்த உலகத்திலேயே இருக்கக்கூடாது மகாதேவன்… ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு அவன் உடம்பைத் துண்டு துண்டா வெட்டி யாராலையும் கண்டுபிடிக்க முடியாத இடத்துல புதைச்சிடுங்க… அவன் இந்தியாவை விட்டுப் போறதுக்குள்ள நான் சொன்ன காரியத்தை செய்து முடிச்சிடுங்க… புரிஞ்சுதா” என்றவன் தன் அறையை விட்டு வெளியேறினான்.


அத்தியாயம் - 29:


மாலை 6 மணி…


தன் வீட்டு போர்டிகோவில் காரை நிறுத்திவிட்டு தேவ் கீழே இறங்கினான்.


காரின் சப்தம் கேட்டு தோட்டத்தில் இருந்து ஓடி வந்த அமர், “அப்பா” என்றழைத்தபடி அவன் கால்களை கட்டிக் கொண்டான்.


கீழே குனிந்து அமரை தூக்கிய தேவ் அவன் கண்ணத்தில் முத்தமிட்டவன், “அம்மா எங்க செல்லம்? நீ மட்டும் தனியா வந்திருக்க” என்று கேட்டான்.


அப்போது அங்கு வந்த லட்சுமி, “ஐயா அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு முடியலன்னு சொல்லி என்னை சின்னையாவை பாத்துக்க சொன்னாங்க” என்றார்.

மிருதுளாவின் மனநிலை இப்போது எப்படி இருக்குமென்று தேவ்விற்கு நன்றாகவே விளங்கியது.


அமரை லட்சுமியிடம் கொடுத்தவன், “லட்சுமிமா அமரை கொஞ்சம் குளிக்க வைத்து டிரஸ் மாத்தி விடுங்க… நாங்க மூணு பேரும் இன்னும் கொஞ்ச நேரத்துல வெளில போறோம்” என்றவன் அமரை அவரிடம் கொடுத்து விட்டு நேராக மிருதுளாவின் அறையை நோக்கி சென்றான்.


அவன் வந்ததை கூட அறியாமல் மிருதுளா தன் அறையில் இருந்த பால்கனியில் நின்றபடி வானத்தை வெறித்துக் கொண்டிருந்தாள். சோகப் பதுமையென நின்றிருந்தவளை பார்த்த தேவ்வின் மனம் வேதனையுற்றது.


“சாரி மிது” என்று முணுமுணுத்தவன் அவள் அருகே சென்று நின்றான்.


அப்போதும் அவள் தேவ்வின் வருகையை உணரவில்லை.


“மிது” என்று மென்மையாக அழைத்தவன் அவளின் தோளைப் பற்றி திருப்பி தன்னை பார்க்குமாறு நிறுத்தி அவளின் கண்களை ஆழ்ந்து பார்த்தான்.


தேவ்வின் குரலில் தன் நிலைக்கு திரும்பிய மிருதுளா கண்களில் கேள்வியை தாங்கியபடி அவனைப் பார்த்தாள்.


“சாரி மிது… ரியலி சாரி” என்று அவன் மிருதுளாவிடம் மன்னிப்பு கேட்டான்.


அவளுக்குத் தான் இழைத்த பாவத்திற்காக அவன் மன்னிப்பு கேட்க அவளோ தன்னுடன் ஹாஸ்பிட்டலுக்கு வர இயலாததற்காக மன்னிப்பு கேட்கிறான் என்று எண்ணினாள்.


“இட்ஸ் ஓகே தேவ்… எமர்ஜென்சி வேலை இல்லாம இருந்திருந்தா நீ எங்க கூட வந்துருப்பேன்னு எனக்கு தெரியும்… இதுக்காக எதுக்கு சாரி கேக்கற” என்றவள் பின்னர், “அமர் உண்மையிலேயே கொடுத்து வச்சவன்… ஏன்னா அவனுக்கு உன்ன மாதிரி அப்பா கிடைச்சிருக்கானே” என்றவள் பெருமூச்சை வெளியேற்றினாள்.


அவள் ஏன் இவ்வாறு கூறுகிறாள் என்று அவனுக்கு நன்றாகவே புரிந்தது.


“அப்படி எல்லாம் எதுவும் இல்ல மிது… நானும் என் பையனை கருவிலேயே அழிக்க நெனச்சவன் தான்…” என்று அவன் தழுதழுத்த குரலில் சொன்னான்.


“உண்மைதான் தேவ்… நீ அமரை கருவிலேயே அழிக்க நெனச்ச தான்… நான் இல்லைன்னு சொல்லல… ஆனா என்னைக்கு அவன் உன் மகன்தான்னு உனக்கு தெரிஞ்சதோ அன்னையிலிருந்து நீ ஒரு பொறுப்புள்ள அப்பாவா அவனை நல்லாவே கவனிக்கிற… இந்த காலத்துல எத்தனை அப்பா உன்னை மாதிரி இருக்காங்கன்னு சொல்லு… அமருக்கு உடம்பு முடியலைன்னதும் உன்னோட எல்லா வேலையும் ஒதுக்கி வைத்துவிட்டு கிட்டத்தட்ட ஒரு மாசம் நீ ஹாஸ்பிடலே கதியா இருந்த... ஆனா சில பேர் பெத்ததோட தன் கடமை முடிஞ்சிடுச்சின்னு புள்ளைங்கள கண்டுக்கவே மாட்டாங்க… அந்த மாதிரி அப்பாக்கள் மத்தியில நீ உண்மையாவே பெஸ்ட் அப்பாதான்” என்று அவள் மரத்த குரலில் சொன்னாள்.


“நீ அன்னப்பறவை மாதிரி மிது… அன்னப்பறவை எப்படி பாலையும் தண்ணீரையும் பிரித்து தனக்கு வேண்டிய பாலை மட்டும் எடுத்துக் கொள்ளுமோ அதே மாதிரி நீ மனுஷங்ககிட்ட இருக்க கெட்ட குணத்தை ஒதுக்கிட்டு நல்லதை மட்டுமே பாக்கற” என்று அவளை சிலாகித்தவன் “மிது இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கன்… நீ, நான், அமர் மூணு பேரும் சேர்ந்து கோவிலுக்கு போயிட்டு வரலாமா?” என்று கேட்டான்.


மிருதுளாவிற்கும் மனசு பாரமாக இருக்கவே கோவிலுக்கு சென்று வந்தால் நன்றாக இருக்கும் தோன்றியது. அதனால் அவள் தேவ்விடம் சரி என்றாள்.


“சரி மிது… அமரை லட்சுமிமா ரெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க… நீயும் ரெடி ஆகிடு” என்றவன் தன் அறையை நோக்கி சென்றான்.


அடுத்த சிறிது நேரத்தில் அவர்கள் மூவரும் கிளம்பி அஷ்டலட்சுமி கோவிலுக்கு சென்றனர்.


கோவிலுக்கு சென்று அம்மனை வழிபட்டதும் இருவரின் மனதுமே லேசாகியது. பிரகாரத்தை சுற்றி விட்டு வந்தவர்கள் ஓரிடத்தில் அமர்ந்தனர். அவர்கள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து கடல் நன்றாகவே தெரியும். அதுவரை வாய் ஓயாமல் அவர்களிடம் எதைப் பற்றியாவது கேட்டுக் கொண்டிருந்த அமர் கடலை வேடிக்கை பார்க்கத் தொடங்கி விட்டான்.


சிறிது நேரம் அங்கே அமைதி நிலவியது.


மிருதுளாவின் கைகளின் மீது தன் கையை வைத்த தேவ், “ஆர் யூ ஓகே மிது” என்று கனிவுடன் கேட்டான்.


அவன் அப்படி கேட்டதும் மிருதுளா அவனை ஆச்சரியத்துடன் ஏறிட்டாள்.


“இல்ல… நான் வீட்டுக்கு வரும் போது நீ எதைப் பத்தியோ யோசிச்சு வருத்தப்பட்டுகிட்டு இருந்த மாதிரி இருந்துச்சு… அதான் வெளியில போனா நீ கொஞ்சம் ரிலாக்ஸா பீல் பண்ணுவேன்னு நினைச்சு நான் கோவிலுக்கு கூட்டிட்டு வந்தேன்” என்றவன் அவள் வருத்தமாக இருந்ததற்கான காரணம் தனக்குத் தெரியும் என்பதை காட்டிக் கொள்ளவில்லை.


அவள் அவனைப் பார்த்து தலையசைத்தாள்.


அதன் பின்னரும் தேவ்வால் அவள் முகத்தின் மீதிருந்த பார்வையை விலக்கிக் கொள்ள முடியவில்லை. அவளைப் பார்த்தது பார்த்தபடி அமர்ந்திருந்தான். அவன் கண்களில் இருந்த ஏதோ ஒன்றில் கட்டுண்ட மிருதுளாவாலும் அவனிடம் இருந்து பார்வையை விலக்கிக் கொள்ள முடியவில்லை. இத்தனை வருடங்களில் அவன் கண்களில் காணாத ஏதோ ஒன்றை இன்று அவள் அவன் கண்களில் கண்டாள். அது அவனை முழுதாக நம்ப சொல்லி அவளிடம் சொல்லியது.


இருவரும் எவ்வளவு நேரம் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்து இருந்தனரோ?


அப்போது அங்கு வந்த ஒரு பெண், “அக்கா” என்றழைத்தாள்.


குரல் வந்த திசையை நோக்கி திரும்பிய மிருதுளா, “என்னம்மா?” என்றாள்.


மிருதுளாவின் கேள்விக்கு பதிலளிக்காமல் அவள் தன் அருகில் நின்றிருந்த அம்மாவை பார்த்தாள்.


“அது ஒன்னும் இல்லம்மா… என் பொண்ணுக்கு ரொம்ப நாளா கல்யாணத்துக்கு வரன் தேடிகிட்டு இருக்கோம்… ஒரு வரணும் சரியா அமையல… ஜோசியர் கிட்ட கேட்டதுக்கு ஒன்பது சுமங்கலி பொண்ணுங்களுக்கு மஞ்சள் கயிறு கொடுத்து அவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்க சொல்லுங்க… உங்க பொண்ணுக்கு நிச்சயம் நல்ல வரன் அமையும்னு சொன்னாரு… அதான் புருஷனோடவும் பிள்ளையோடவும் சந்தோசமா வாழற உன்கிட்ட ஆசீர்வாதம் வாங்கலாம்னு என் பொண்ணை கூட்டிட்டு வந்தேன்” என்று அந்தப் பெண்ணின் அம்மா சொன்னார்.


“என்னது என்கிட்டையா?” என்று மிருதுளா திக்கித் திணறியபடி கேட்டாள்.


“ஆமாம்மா”


“இல்ல… வேற யார்கிட்டயாவது ஆசிர்வாதம் வாங்கிகோங்க” என்ற மிருதுளாவிற்கு தேவ் தன் கழுத்தில் தாலி கட்டவில்லை என்பதை அவர்களிடம் எப்படி சொல்வது என்று தெரியவில்லை.


அதை சொன்னால் அவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதை நினைக்கும் போதே அவள் மிகவும் அவமானமாக உணர்ந்தாள். அதுநாள் வரை அவள் புத்திக்கு உரைக்காத விஷயம் அப்போதுதான் உரைத்தது.


தன் கீழ் உதட்டை கடித்தவள் தேவ்வை வேதனையுடன் பார்த்தாள். அவள் என்ன நினைக்கிறாள் என்று அவள் சொல்லாமலேயே அவனுக்கு விளங்கியது.


“அம்மா நீங்க வேற யார்கிட்டயாவது ஆசிர்வாதம் வாங்கிக்கோங்க என்று” அவன் அவர்களிடம் சொன்னான்.


“ஏன் தம்பி இப்படி சொல்றீங்க?” என்று அந்தப் பெண்ணின் அம்மா கேட்டார்.


அவன் அவருக்கு பதில் சொல்வதற்காக வாயெடுத்தான். ஆனால் அதற்குள் அங்கிருக்க பிடிக்காமல் மிருதுளா அமரை தூக்கி கொண்டு கோவிலை விட்டு வெளியேற தொடங்கினாள்.


"தப்பா எடுத்துக்காதீங்க... கொஞ்ச நாளைக்கு முன்ன என் பையனுக்கு உடம்புக்கு முடியாம இருந்துச்சி... அப்போ தன் தாலியை காணிக்கையா உண்டியல்ல செலுத்தறதா அவ இந்த அம்மனுக்கு வேண்டிகிட்டா... அந்த வேண்டுதலை நிறைவேத்த தான் வந்தோம்... அதான் அவ வாழ வேண்டிய பொண்ணுக்கு இன்னைக்கு நாம ஆசிர்வாதம் பண்ண வேண்டாம்னு நெனச்சி வேற யார்கிட்டயாவது ஆசிர்வாதம் வாங்கிக்க சொன்னா" என்றவன் அவர்களின் பதிலை கூட எதிர்பார்க்காமல் கோவிலை விட்டு வெளியேறினான்.
 

geethusri

Moderator

அத்தியாயம் - 30:


பொங்கி வந்த அழுகையை அடக்கியபடி மிருதுளா காரின் அருகில் நின்றிருந்தாள்.


தன்னிடம் இருந்த ரிமோட் கண்ட்ரோல் மூலம் தேவ் காரை அன்லாக் செய்ததும் காரின் கதவைத் திறந்து கொண்டு ஏறி அமர்ந்தவள் தன் கோபத்தை எல்லாம் காரில் கதவின் மீது காட்டி அதை பட்டென்று சாத்தினாள்.


அவள் சாத்திய வேகத்தில் கார் ஒரு நொடி அதிர்ந்து நின்றது.


‘ரொம்ப கோவமா இருக்கா போல… இப்போ நாம எது பேசினாலும் அது நமக்கு எதிரா முடிஞ்சிடும்… பேசாம அமைதியா இருந்திட வேண்டியதுதான்’ என்று தனக்குத்தானே முணுமுணுத்த தேவ் டிரைவர் சீட்டில் ஏறி அமர்ந்தவன் ஒரு வார்த்தை கூட பேசாமல் காரை செலுத்தத் தொடங்கினான்.


கார் கிளம்பிய சிறிது நேரத்திலேயே அமரும் தூங்கி விட்டதால் காரில் அமைதி நிலவியது.


தேவ் தன்னை சமாதானப்படுத்துவான் என்று மிருதுளா நினைத்தாள். ஆனால் அவனோ அதற்கான முயற்சியை எடுக்கவே இல்லை. தான் இப்போது ஒரு வார்த்தை பேசினாலும் அவளின் மொத்த கோபமும் தன் மீது திரும்பி விடும் என்பதை உணர்ந்தவன் அமைதியாகவே இருந்தான்.


தேவ்வின் அமைதி மிருதுளாவிற்கு ஏமாற்றத்தை அளித்தது. கோவிலில் ஏற்பட்ட அவமான உணர்வு… தேவ்வின் அமைதியால் ஏற்பட்ட ஏமாற்றம் என்று அனைத்து உணர்வுகளும் மாறி மாறி அவளை அலைக் கழித்தன.


அதன் அழுத்தம் தாள முடியாமல் அவள் சத்தம் வராமல் அழத் தொடங்கினாள். அவன் அதை கவனித்தாலும் கண்டுகொள்ளவில்லை.


அவன் வீட்டின் முன்பு காரை நிறுத்தியதும் அவனை முறைத்து விட்டு அமரை தூக்கிக் கொண்டு கீழே இறங்கிய மிருதுளா விறுவிறுவென்று தன் அறையை நோக்கி சென்றாள்.


மிருதுளாவை சமாதானப்படுத்த என்ன செய்யலாம் என்று சிறிது நேரம் யோசித்த தேவ் பின்னர் தன் போனை எடுத்து மகாதேவனுக்கு அழைத்தவன் அவரிடம் சில விஷயங்களை செய்யச் சொல்லி உத்தரவிட்ட பின்னர் காரை விட்டு கீழிறங்கி நேராக தன் அறையை நோக்கி சென்றான்.


அதன் பின்னர் அவன் மிருதுளாவை சமாதானம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவன் ஏதாவது செய்வான் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து அவள்தான் ஏமாந்து போனாள்.


ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் அவனிடமே நேரடியாக இதுபற்றி கேட்கலாம் என்று முடிவெடுத்தவள் அவன் வருகைக்காக தூங்காமல் காத்திருந்தாள். அவனோ இரவு பதினோரு மணி ஆன பிறகும் வரவில்லை. தன் அலுவலக அறையில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.


அவனுக்காக காத்திருந்து காத்திருந்து சலித்துப் போய் அவள் அமர்ந்த வாக்கிலேயே தூங்கி விட்டாள்.


இரவு ஒரு மணிக்கு பூனை போல மெதுவாக அறைக்குள் நுழைந்தவன் அவளை நேராக படுக்க வைத்துவிட்டு, “சாரி மிது… நான் உன்ன சமாதானப்படுத்த முயற்சி பண்ணலன்னு நீ என் மேல கோபமா இருக்கேன்னு எனக்கு தெரியும்… ஆனா இனி வெறும் வாய் வார்த்தையா என் காதலை நான் உனக்கு புரிய வைக்க போறதில்ல… செயல்ல காட்டப் போறேன்… அதுக்காக தான் இன்னைக்கு முழுக்க நீ இருந்த திசை பக்கமே நான் வரல… சாரிடி இன்னைக்கு ஒரு நாள் மட்டும் கஷ்டப்பட்டுக்கோ… இனி உன் வாழ்க்கை அகராதியில கஷ்டம்ன்ற வார்த்தையே இல்லாம நான் பாத்துக்கறன்” என்றவன் அவள் நெற்றியின் மீது மென்மையாக முத்தமிட்டுவிட்டு படுக்கையின் மறுஓரத்தில் வந்து படுத்தான்.


மறுநாள் மிருதுளா கண்விழிக்கும் போது பட்டுவேட்டி, சட்டை அணிந்து விசேஷத்திற்கு செல்வது போல தயாராகி தேவ் அவள் முன்பு நின்றிருந்தான்.


ஒரு நொடி ஆச்சரியத்தில் தன் கண்களை அகல விரித்தவளுக்கு பின்னர் நேற்று மாலை நடந்ததெல்லாம் நினைவுக்கு வந்தது. அடுத்த நொடி அவனை முறைத்தபடி தன் மீது இருந்த போர்வையை அகற்றிவிட்டு படுக்கையை விட்டு கீழே இறங்கி பாத்ரூமை நோக்கி செல்லத் தொடங்கினாள்.


அவன் அவளின் கையை பிடித்து தடுத்து நிறுத்திய போதும் அவள் திரும்பிப் பார்க்கவில்லை.


“மிது நீ என்மேல கோபமா இருக்கேன்னு தெரியும்… அதுக்கு என்ன காரணம்னும் தெரியும்… ஆனா ப்ளீஸ் இந்த ஒருமுறை என்ன ஏதுன்னு கேக்காம எனக்காக இந்த புடவையை கட்டிக்கிட்டு தயாராகி வா” என்று அவன் சொன்னதும் அவள் குழப்பத்துடன் திரும்பி பார்த்தாள்.


தேவ்வின் கைகளில் இளஞ்சிவப்பு நிற பட்டுப்புடவை அதற்கான பிளவுஸ் உடன் இருந்தது.


“என்ன இது?” என்று அவள் அவனை முறைத்தபடி கேட்டாள்.


“இது என்னன்னு தெரியலையா… பட்டு புடவை”


“அது தெரியுது... நீ எதுக்காக இப்போ இதை என்கிட்ட கொடுக்கற…”


“நீ கட்டிக்க தான்”


“இத கட்டிட்டு எங்க போக போறோம்? ஏதாவது கல்யாணத்துக்கு போக போறோமா?”


“ஆமா”


“வேணும்னா நீ போ… நான் எங்கேயும் வரல…”


“ப்ளீஸ் மிது… வர மாட்டேன்னு மட்டும் சொல்லிடாத” என்று அவன் கெஞ்சலாக கேட்டதும் அவள் மீண்டும் அவனை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.


பொதுவாக தனக்கு ஏதாவது காரியம் ஆக வேண்டுமென்றால் அவன் கட்டளையிடுவானே தவிர இதுபோல கெஞ்ச மாட்டான்.


அவள் பதில் சொல்லாமல் அமைதியாக இருப்பதை பார்த்தவன், “ப்ளீஸ் ப்ளீஸ் என் செல்லம்ல… இந்த ஒருமுறை என்னோட பேச்சை கேளு” என்று அவன் மீண்டும் கெஞ்சலாக சொன்னதும் அவள் அவன் கையில் இருந்த புடவையை வாங்கி கொண்டு குளிப்பதற்காக சென்றாள்.


அவள் தயாராகி வந்ததும் தேவ் அவளை அழைத்துக் கொண்டு வடபழனி முருகன் கோவிலுக்கு சென்றான். அவர்கள் இருவரும் கோவிலுக்குள் நுழைந்ததும் மகாதேவன் வந்து அவர்களை ஓர் இடத்தை நோக்கி அழைத்துச் சென்றார்.


மகாதேவனை கண்ட ஐயர், “நல்ல நேரம் ஆரம்பிக்க போகுது… பொண்ணும் மாப்பிள்ளையும் இன்னும் வரலையா?” என்று கேட்டார்.


“இதோ வந்துட்டாங்க ஐயரே” என்று சொன்ன மகாதேவன், “சார் டைம் ஆயிடுச்சு… நீங்களும் மேடமும் போய் மணமேடையில் உட்காருங்க” என்றார்.


அப்போதுதான் மிது மணமேடைக்கு அருகில் நின்றிருந்த லட்சுமியையும் அவர் கையில் இருந்த அமரையும் கவனித்தாள்.


அவள் திகைப்புடன் தேவ்வை திரும்பி பார்க்கும் போதே அவன் அவளின் கை பிடித்து அழைத்துச் சென்று மணமேடையில் அமர்ந்தான். அதன் பின்னர் நடந்ததெல்லாம் மிருதுளாவுக்கு கனவில் நடப்பது போலத் தோன்றியது. அவளால் நடப்பதை நம்பவே முடியவில்லை.


ஐயர் தேவ்வின் கையில் தாலியை கொடுத்ததும் அதை வாங்கியவன் மிருதுளாவின் கழுத்தில் கட்டுவதற்கு முன்பு அவள் தாடையைப் பற்றி தன்புறமாக திருப்பியவன் அவள் கண்களை ஆழ்ந்து பார்த்தபடி, “மிது ஐ லவ் யூ… ஐ ரியலி லவ் யூ… நீ என்ன நம்பற தானே” என்று கேட்டான்.


கண்களில் நீர் கோர்க்க அவனை ஏறிட்ட மிருதுளா அதற்கு மாறாக உதட்டில் தோன்றிய புன்னகையுடன் அவனை பார்த்து தலையசைத்தாள்.


“தேங்க்ஸ் மிது… ஆனா ப்ளீஸ் சந்தோஷத்தில் கூட இனி அழாத… நீ சந்தோஷப்படும் போது கூட உன் கண்ணுல இருந்து தண்ணி வரக் கூடாதுன்னு நான் நினைக்கிறேன்” என்றவன் அவள் முகத்தை கண்களால் விழுங்கியபடி தாலி கட்டினான்.


சடங்குகள் அனைத்தும் முடிந்ததும் தன் கணவன் மற்றும் மகனுடன் முருகன் சந்நிதியின் முன்பு கண்மூடி நின்ற மிருதுளா நிறைவாய் உணர்ந்தாள்.


சிறிது நேரம் கழித்து அனைவரும் வீட்டிற்கு புறப்பட்டனர்.


மகாதேவன் காரை ஓட்ட லட்சுமி அவருக்கு அருகில் அமர்ந்திருந்தார். தன் மனைவி மகனுடன் தேவ் பின்சீட்டில் அமர்ந்திருந்தான். மிருதுளாவிற்கு அவனிடம் நிறைய பேச வேண்டும்… கேட்க வேண்டும் என்றெல்லாம் ஆசையாக இருந்தது. ஆனால் அந்த நொடி ஆனந்தத்தை முழுதாக அனுபவிக்க விரும்பியவள் அதைப் பேசி கெடுத்து கொள்ள விரும்பவில்லை.


தேவ்வை ஒட்டி அமர்ந்தவள் தன் கைகளால் அவன் கைகளை இறுக்கி பிடித்தபடி அவன் தோளில் சாய்ந்து கண் மூடினாள். அவளின் தலையை கனிவுடன் வருடிய தேவ் அவள் தோளின் மீது கை போட்டு அவளை தனக்கருகே இழுத்தான். எந்தவித உறுத்தலும் இன்றி தன் மனைவி மகனுடன் இருக்கும் அந்த நிமிடத்தை அவனுமே அனுபவிக்க நினைத்தான்.


வீட்டிற்கு வந்ததும் லட்சுமி அவர்களுக்கு ஆலம் சுற்றி வீட்டிற்குள் அழைத்தார். பின்னர் மிருதுளாவை அழைத்து சென்று விளக்கேற்ற வைத்தவர் அவர்களுக்கு பாலும் பழமும் கொடுத்தார். இரண்டு வயது மகனை வைத்துக் கொண்டு இதுபோன்ற சடங்குகளை செய்ய மிருதுளாவிற்கு கூச்சமாக இருந்தது. ஆனால் தேவ்விற்கு அப்படி எல்லாம் எதுவும் இல்லை… அவன் தன்னவளின் தயக்கத்தையும் கூச்சத்தையும் ரசித்துக் கொண்டிருந்தான்.


அப்போது அமர் திடீரென்று அழுதான். காலையில் சீக்கிரமே எழுந்ததால் அவன் தூக்கத்திற்கு அழுகிறான் என்பதை புரிந்து கொண்ட மிருதுளா அவனை தன் அறைக்கு தூக்கி சென்று தூங்க வைத்தாள். சிறிது நேரத்திலேயே அமர் தூங்கி விட்டான்.


அப்போது அறைக்குள் நுழைந்த தேவ் உதட்டில் புன்னகையுடன் அமரைத் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த மிருதுளாவை பார்த்தவன் அவள் பின்னே சென்று அவளைக் கட்டி அணைத்து, “ஆர் யூ ஹாப்பி மிது” என்று கேட்டான்.


அவன் மார்பில் தன் பின்பக்க தலையை சாய்த்தவள், “ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன் தேவ்… இப்போ இந்த நிமிஷம் செத்தாக்கூட நான் சந்தோசமா சாவேன்… இப்படி ஒரு அங்கீகாரத்தை நீ எனக்கு கொடுப்பன்னு சத்தியமா நான் நெனச்சு பாக்கலை… ரொம்ப தேங்க்ஸ் தேவ்” என்றாள்.


அவள் அருகே அமர்ந்து அவள் உதட்டின் மீது விரல் வைத்து மறுப்பாக தலையசைத்தவன், “இப்போ தான் நாம வாழ்க்கையை தொடங்கியிருக்கோம்… இப்போ போய் சாவு அது இதுன்னு பேசலாமா? ப்ளீஸ் மிது இந்த மாதிரி எல்லாம் பேசாத… உண்மையை சொல்லனும்னா நான் பண்ணத எல்லாம் மறந்து மன்னித்து என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்காக நான்தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்… ரொம்ப தேங்க்ஸ்டி” என்று கரகரத்த குரலில் சொன்னான்.


“நான் உனக்காக உன்னை ஏத்துக்கல தேவ்… எனக்காக ஏத்துக்கிட்டன்… ப்ளீஸ் இனி நாம நடந்து முடிந்ததை பற்றி பேச வேண்டாமே… அதை பேசறதால யாருக்கு என்ன பிரயோஜனம்? வலியும் வேதனையும் மட்டும் தான் மிச்சம்”


“எப்படிடி… உன்னால எப்படி நான் பண்ணத எல்லாம் மறக்க முடிந்தது?”


“நாம ஒருத்தங்களை உண்மையா காதலிச்சா அவங்க நமக்கு எவ்வளவு வேதனையை கொடுத்தாலும் அவங்கள நம்மளால மன்னிக்க முடியும்… அதேசமயம் எந்த காரணத்தைக் கொண்டும் நம்மளால வார்த்தையாலயோ செயல்களாலயோ அவங்கள காயப்படுத்த முடியாது… நான் உன்னை உண்மையா காதலிக்கிறேன்… அதனாலதான் என்னால நீ இவ்வளவு பண்ண பிறகும் உன்னை மறக்கவும் முடியல… வெறுத்து ஒதுக்கவும் முடியல” என்று அவள் சொன்னதும் தேவ் அவளை இறுக்கி அணைத்தான்.


"நான் பண்ணது தவறுதான் மிது... ஆனா அந்த தவறால தான் எனக்கு நீ கிடைச்சிருக்க... நான் பண்ண அழகான தவறு நீ..." என்றவன் அவள் கழுத்தில் முகம் புதைத்தான்.


அவன் மூச்சுக்காற்று அவள் மேனியை தீண்டியதும் அவள் உடல் சிலிர்த்தது. தன் உதடுகளை அவள் கழுத்தில் பதித்தவன் மேலும் முன்னேறுவதற்குள் அவன் போன் ஒலித்தது...


"தேவ் போன் அடிக்குது" என்று அவள் அவன் காதில் கிசுகிசுத்தாள்.


"அடிச்சா அடிக்கட்டும் விடு..." என்றவன் அவள் கூந்தலில் முகம் புதைத்தான்.


மீண்டும் அவன் போன் ஒலித்தது.


அவனை தன்னிடமிருந்து விலக்கியவள், "தேவ் ஏதாவது முக்கியமான போனா இருக்க போகுது... எடுத்து பேசு" என்றாள்.


"இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்ல மிதுக்குட்டி... இப்படியா பட்டுனு தள்ளி நிறுத்துவ... போடி" என்று கொஞ்சலாக சொன்னவன் போனை எடுத்து பேசினான்.


மறுமுனையில் என்ன சொன்னார்களோ? அதை கேட்டவனின் முகம் சீரியஸாக மாறியது.


"சரி நான் உடனே வரேன்... நீங்க அடிபட்டவங்களை ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போங்க" என்றவன் அழைப்பை துண்டித்தான்.


"என்னாச்சு தேவ்?" என்று அவள் கவலையுடன் கேட்டாள்.


"ஒரு சின்ன பிரச்சனை மிது... நான் போய் பாத்துட்டு வந்துடறேன்"


"எனிதிங் சீரியஸ்?"


"நத்திங்டா... வழக்கமா வர பிரச்சனைதான்... இந்த சின்ன மண்டைக்குள்ள இதையெல்லாம் போட்டு குழப்பிக்காத... சாப்பிட்டு மாத்திரை போட்டு ரெஸ்ட் எடு... அப்போதான் நைட் எனக்கு ஈடுகொடுக்க முடியும்" என்றவன் அவளை பார்த்து கண்ணடித்தான்.


"சீ... போ தேவ்" என்றவளின் முகம் அந்திவானமாய் சிவந்தது.


ஒருநொடி அவளின் வெட்கத்தை ரசித்தவன், "சரிடா நான் கிளம்பறேன்" என்றான்.


"பத்திரமா போய்ட்டு வா" என்று அவள் சொன்னதும் தலையசைத்தவன் அறையை விட்டு வெளியேறினான்.


அத்தியாயம் – 31 :


இரவு 10 மணி…


தேவ்வின் வீட்டில் அமைதி நிலவியது.


இரண்டாவது மாடியின் பால்கனியில் நின்றிருந்த மிருதுளா பவுர்ணமி நிலவை ரசித்துக் கொண்டிருந்தாள். திருமணத்திற்காக காலையிலேயே எழுந்தது சோர்வாக இருந்தாலும் அவளுக்கு தூக்கம் வரவில்லை.


தேவ்வின் மனைவி என்ற அங்கீகாரம் இன்று ஊரறிய அவளுக்கு கிடைத்திருந்தது. அதை நினைக்கும் போது அவளுக்கு சந்தோசமாக இருந்தது.


‘என்ன உயிரா நினைக்கிற புருஷன்… அழகான குழந்தை… இதுக்கு மேல எனக்கு வேற என்ன வேணும்…’ என்று நினைத்தவளுக்கு தன் அம்மாவின் நினைவு வந்தது.


'அம்மா நீங்க இப்போ இந்த நிமிஷம் என்னோட இருந்திருந்தா நான் இன்னும் சந்தோசப்பட்டிருப்பேன்...' என்று அவள் வானத்தில் இருந்த நட்சத்திரங்களை பார்த்து முணுமுணுத்து கொண்டிருந்த போது திடீரென்று ஒரு ஜோடி கைகள் அவள் இடுப்பை சுற்றி வளைத்தன.


அதில் அவள் ஒருநொடி திடுக்கிட்டாலும் மறுநொடியே அந்த கைகளுக்கு சொந்தக்காரன் யார் என்பதை அறிந்து கொண்டவளின் இதழ்களில் புன்னகை பூத்தது.


“மாமா” என்று மிருதுளா தன் கணவனை ஹஸ்கி குரலில் அழைத்தாள்.


அவள் அவ்வாறு அழைத்ததும் தேவ் ஒருநொடி சிலையாய் சமைந்து நின்றான்.


மூன்று வருடங்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் ஒன்றாக இருந்த போது காதல் மிகும் பொழுதுகளில் எல்லாம் மிருதுளா இவ்வாறு தான் அவனை அழைப்பாள்.


இப்போது சில நாட்களாக மீண்டும் அவள் அவனிடம் நன்றாக பேசினாலும் மாமா என்று ஒருமுறை கூட அழைத்ததில்லை.


இப்போது அவள் இப்படி அழைக்கவும் அவள் மனப்பூர்வமாக தன்னை மன்னித்துவிட்டாள் என்று தேவ்விற்கு புரிந்தது.


'என்ன காரணத்துக்காக நான் உன்ன காதலிக்கற மாதிரி நடிச்சி ஏமாத்தினன்னு இன்னமும் உனக்கு தெரியாது மிது... ஆனாலும் நீ என்ன மன்னிச்சி ஏத்துக்கிட்ட... அதுக்கு காரணம் நீ என்மேல வச்சிருக்க காதல் தான்... உன்னோட இந்த காதலுக்கு ஈடு இணையே கிடையாதுடி... நீ எனக்கு காதலியா கிடைக்க போன ஜென்மத்துல நான் புண்ணியம் பண்ணியிருக்கணும்...' என்று நினைத்தவன் பின்னால் இருந்து அவளை இறுக்கி அணைத்தான்.


அவன் அணைப்பில் கிறங்கி நின்ற மிருதுளா கண்மூடி அவன் மார்பில் சாய்ந்தாள்.


"மிது" என்று அவன் ஹஸ்கி குரலில் அழைத்தான்.


"ஹ்ம்ம்"


"இங்க நின்னுட்டு என்ன பண்ணிட்டு இருக்க… டயர்ட்டா இல்லை… வா படுக்கலாம்…” என்று சொன்னவன் தன் கைகளால் அவளின் உடலை வலம் வரத் தொடங்கினான்.


இப்போதே அவளை ஆண்டு விட வேண்டும் என்று அவன் உடம்பின் ஒவ்வொரு அணுவும் துடித்தாலும் இருக்கும் இடம் கருதி தன் ஆசையை அடக்கிக் கொண்டவன் அவளை அலேக்காக தூக்கினான்.


திடீரென்று அவன் தூக்கியதும் ஆவென்று அலறிய மிருதுளா அவன் சட்டை காலரை இறுக பற்றியவள் தன் முகத்தை அவன் தோளில் புதைத்தாள்.


அவள் நெற்றியின் மீது முத்தமிட்டவன் அவளை தூக்கி கொண்டு தங்களின் படுக்கை அறைக்கு வந்தான்.


படுக்கை அறைக்குள் வந்ததும் மிருதுளா அங்கிருந்த போட்டோவை பார்த்ததும் ஆச்சரியத்தில் தன் கண்களை அகல விரித்தாள்.


அவர்கள் படுக்கை அறையின் ஒருபக்க சுவரின் அளவிற்கு திருமணத்தில் அவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தேவ் பெரிதுபடுத்தி மாட்டியிருந்தான்...


முகம் முழுக்க மகிழ்ச்சியுடன் மிருதுளாவும் தேவ்வும் ஒருவரை ஒருவர் காதலுடன் பார்த்தபடி இருக்கும் போட்டோ அது…


அவளை கீழே இறக்கி விட்டவன் “எப்படி இருக்கு மிது” என்று அவள் தோளின் மீது தன் தாடையை வைத்தபடி தேவ் கேட்டான்.


“ரொம்ப அழகா இருக்கு தேவ்… நான் எக்ஸ்பெக்டே பண்ணல…” என்றவள் திரும்பி அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.


தன் கைகளால் மிருதுளாவின் முகத்தைப் பற்றி ஒரு நொடி அவள் கண்களை உற்றுப் பார்த்த தேவ் அவள் கண், மூக்கு, கன்னம் என்று முத்தமிட்டு கொண்டே வந்தவன் பின்னர் ஆரஞ்சு சுளை போல இருந்த அவளின் உதடுகளை சுவைக்க தொடங்கினான்.மிருதுளாவின் உதட்டை சுவைத்துக் கொண்டிருந்தவனின் கைகள் அவள் உடலில் வலம் வரத் தொடங்கின.


அவன் கைகள் அத்து மீறுவதை உணர்ந்த மிருதுளா, “தேவ் இன்னும் மூணு நாளைக்கு நாம தள்ளி இருக்கணும்” என்று அவன் காதில் கிசுகிசுத்தாள்.


அவள் எதை பற்றி கூறுகிறாள் என்று தேவ்விற்கு புரிந்தது.


மிருதுளா சொன்னதைக் கேட்டதும் அதுவரை தேவ்விற்குள் கொழுந்து விட்டெறிந்து கொண்டிருந்த உணர்வுகள் அனைத்தும் வடிந்துவிட்டன. அவளை தன் அணைப்பில் இருந்து விடுவித்தவன் பெருமூச்சை வெளியேற்றினான்.


மிருதுளாவிற்கு தேவ்வை பார்க்க பாவமாக இருந்தது. இன்று தான் அவர்களுக்கு ஊரறிய திருமணம் நடந்திருக்கிறது. ஆனாலும் அவன் ஆசையை நிறைவேற்ற முடியாத சூழலில் அவள் இருந்தாள். அவன் கேட்டதை கொடுக்க வேண்டும் என்று அவள் மனம் துடித்தது. ஆனால் அவள் உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை.


“சாரி தேவ்” என்று அவன் கன்னத்தை வருடியபடி மிருதுளா சொன்னாள்.


“ஒன்னும் பிரச்சினை இல்ல... ஃப்ரியா விடு மிருதுளா… சரி வா... போய் படுக்கலாம்" என்றவன் அவளை அழைத்து கொண்டு படுக்கையை நோக்கி சென்றான்.


"சாரி தேவ்" என்று அவள் மீண்டும் மன்னிப்பு கேட்டாள்.


"ஹே விடுடி... இதுக்கெல்லாம் நீ என்ன பண்ண முடியும்... அதுசரி இந்த மாதிரி நேரத்துல உனக்கு வயித்துவலி வருமே இப்போவும் உனக்கு வயிறு வலிக்குதா" என்று அவன் கரிசனத்துடன் கேட்டான்.


"தேவ் உனக்கு அதெல்லாம் கூட நியாபகம் இருக்கா?" என்று அவள் ஆச்சர்யத்துடன் கேட்டாள்.


"உன் சம்பந்தப்பட்ட எதுவுமே எனக்கு மறக்காதுடி என் பொண்டாட்டி" என்று சொன்னபடி அவள் நெற்றியின் மீது முட்டியவன் "சரி நீ தூங்கு" என்றபடி அவளின் தலையை வருடிவிட தொடங்கினான்.


தேவ் சொன்ன வார்த்தை மிருதுளாவிற்கு அப்படி ஒரு மன நிறைவை கொடுத்தது. சந்தோஷத்தில் அவனை இறுக்கக் கட்டிக் கொண்ட மிருதுளா தன் தலையை அவன் மார்பில் புதைத்தாள்.


இந்த நொடி அவள் தான் இந்த உலகிலேயே மிகவும் சந்தோஷமாக இருக்கும் நபர். இப்படி ஒரு சந்தோஷத்தை அவள் தன் வாழ்நாளில் அனுபவித்ததில்லை.


“தேங்க்யூ… தேங்க்யூ சோ மச் தேவ்… இன்னைக்கு மாறியே என்னைக்கும் நாம எப்போதும் இதே காதலோட இருக்கணும்” என்று மிருதுளா தன் அடிமனதின் ஆசையை அவனிடம் சொன்னாள்.


“நிச்சயமா” என்று சொன்ன தேவ் அவளின் உச்சந்தலையில் முத்தமிட்டான்.


நீண்ட நாட்களுக்கு பிறகு மிருதுளா அன்று மாத்திரை எடுத்து கொள்ளாமல் நிம்மதியாக உறங்கினாள்.


கண் சிமிட்டும் நேரத்திற்குள் இரண்டு மாதங்கள் கடந்து சென்றன…


தான் அனுபவித்த வேதனைகள் எல்லாம் மாயையோ என்று மிருதுளா என்னும் வண்ணம் தேவ் அவளை பார்த்து கொண்டான்.


அன்று மிருதுளாவின் பிறந்தநாள்... தேவ்வின் வாழ்த்திற்காக அவள் இரவு பன்னிரெண்டு மணியில் இருந்து காத்திருந்தாள். ஆனால் அவன் அவளுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. காலை விழித்தெழுந்ததுமாவது அவன் வாழ்த்து கூறுவான் என்று எதிர்பார்த்தாள். ஆனால் அப்போதும் அவன் எதுவும் கூறாமல் அமரை அழைத்துச் சென்று பள்ளியில் விட்டுவிட்டு அலுவலகத்திற்கு கிளம்பிவிட்டான்.


அவனிடம் இருந்து வாழ்த்தை எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்த மிருதுளா எரிச்சலடைந்தாள். அப்போது அவள் போன் ஒலித்தது. அழைத்தது யாரென்று பார்க்காமல் போனை அட்டெண்ட் செய்து காதில் வைத்தவள் "ஹலோ" என்று எரிச்சலுடன் சொன்னாள்.


"பிறந்தநாள் வாழ்த்துகள் மிருது" என்று உற்சாகத்துடன் சொன்ன அமிர்தா "அதுசரி என்ன வார்த்தையில இவ்ளோ அனல் வீசுது... உன் தேவ் கூட நீ ஜாலியா இருக்கறத டிஸ்டர்ப் பண்ணிட்டனோ" என்று கேட்டாள்.


"அது ஒன்னு தான் கொறச்சல் இப்போ"


"ஹே என்னடி ஆச்சு... ஏன் இப்படி பேசற"


"வேற எப்படி பேச?"


"என்னடி ஏதாவது அவசர வேலை விஷயமா தேவ் ஆபீஸ் போய்ட்டாரா? அதான் இவ்ளோ கடுப்பா இருக்கியா?"


"அடிப்போடி... இங்க ஒரு வாழ்த்துக்கே வழி இல்ல... இதுல அவன் நாள் முழுக்க என்கூட இருக்கணும்னு நான் ஆசைப்பட்டுட்டாலும்..."


"ஹே என்னடி நீ சொல்றத பாத்தா அப்போ தேவ் உன் பொறந்தநாளைக்கு விஷ் பண்ணலையா?"


"ஆமாடி" என்று அவள் சொல்லி கொண்டிருந்த போதே வெளியே கார் நிற்கும் சப்தம் கேட்டது.


ஜன்னல் வழியாக மிருதுளா எட்டி பார்த்த போது தேவ் காரை விட்டு இறங்கி கொண்டிருந்தான்.


"ஹே தேவ் வந்திருக்கான்டி... என் பொறந்தநாள் அவனுக்கு நியாபகம் வந்து விஷ் பண்ண வந்திருக்கான்னு நினைக்கிறன்... நான் உன்கிட்ட அப்புறம் பேசறன்" என்ற மிருதுளா போனை வைத்துவிட்டு வாசலை நோக்கி ஓடினாள்.
 

geethusri

Moderator

அத்தியாயம் - 32 :


வேகமாக ஓடிவந்த மிருதுளாவை பார்த்த தேவ், "ஹே மிது... எதுக்கு இவ்ளோ வேகமா ஓடி வர?" என்று கேட்டான்.


ஒருவித எதிர்பார்ப்புடன் அவனை பார்த்த மிருதுளா அவன் கேட்டதற்கு பதில் சொல்லாமல் "நீ இப்போ தான போன... அதுக்குள்ள திரும்பி வந்துட்ட... என்ன எதையாவது மறந்துட்டியா?" என்று கேட்டாள்.


"ஆமா... இன்னும் ஒரு மணி நேரத்துல ஒரு கிளைண்ட் மீட்டிங் இருக்கு... அதுக்கு கொண்டு போக வேண்டிய பைலை வீட்டுலயே மறந்து வச்சிட்டு போயிட்டன்... அத எடுத்துட்டு போகதான் வந்தன்..." என்று நமுட்டு சிரிப்புடன் சொன்னவன் வீட்டில் அலுவலக வேலையை பார்க்கும் அறையை நோக்கி சென்றான்.


தேவ்வின் முதுகை முறைத்து பார்த்த மிருதுளா கோபத்தில் பற்களை நறநறவென்று கடித்தாள்.


அப்போது நடப்பதை நிறுத்திவிட்டு திரும்பி பார்த்த தேவ் "மிது கொஞ்சம் காஃபி போட்டு கொண்டு வாயேன்... லைட்டா தலைவலிக்கற மாதிரி இருக்கு" என்றான்.


'பொண்டாட்டி பொறந்தநாளை கூட நியாபகம் வச்சிக்க துப்பில்லை... உனக்கு காஃபி ஒன்னு தான் கேடு...' என்று முணுமுணுத்தாலும் மிருதுளா அவனுக்கு காபி போடுவதற்காக சமையலறையை நோக்கி சென்றாள்.பிரிட்ஜை திறந்து அவள் பாலை எடுத்த போது பால் பாக்கெட்டின் அடியில் ஒரு காதிதம் இருந்தது.


'என்ன இது?' என்று முணுமுணுத்தபடி அவள் அதை பிரித்து பார்த்த போது 'உனக்காக என்ன சர்ப்ரைஸ் காத்துகிட்டு இருக்குன்னு தெரிஞ்சிக்கணும்னா சோபா முன்னாடி இருக்க டேபிள் கிட்ட போ' என்று அதில் எழுதி இருந்தது.


'ஒருவேளை என் பொறந்தநாளைக்கு சர்ப்ரைஸ் கொடுக்க தேவ் ஏதாவது பிளான் பண்ணி இருக்கானோ?' என்று நினைத்தவள் பால் பாக்கெட்டை சமையலறை மேடை மீது வைத்துவிட்டு வராண்டாவை நோக்கி சென்றாள்.


அந்த காகிதத்தில் குறிப்பிட்டிருந்த மேஜையை அடைந்ததும் அவள் அங்கு தேட தொடங்கினாள். அப்போது மேகஸீன்களுக்கு நடுவே இருந்து மீண்டும் ஒரு காகிதம் கிடைத்தது.


அதை பிரித்து படித்த போது "மொட்டை மாடிக்கு சென்று பார்க்கவும்" என்று எழுதி இருந்தது.


மிருதுளா வேகமாக மொட்டை மாடிக்கு ஓடினாள்.


அங்கு சென்று தேடிய போது ஒரு பூந்தொட்டியில் இருந்த காகிதத்தில் "சமையலறை மேடையில் சென்று பார்க்கவும்" என்று எழுதியிருந்தது.


மிருதுளா சமையலறை மேடையை அடைந்த போது அங்கு எதுவும் இல்லை.


'இங்க எதுவும் இல்லையே' என்று முனகியவளின் பார்வையில் காஸ் அடுப்பிற்கு கீழே இருந்த காகிதம் தென்பட்டது.அவள் அதை பிரித்து படித்த போது "ஒழுங்கா காபியை போடுடி என் பொண்டாட்டி" என்று எழுதி இருந்தது.


அதில் இருந்ததை படித்ததும் மிருதுளாவிற்கு கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது.


தன் கையில் இருந்த காகிதத்தை அவள் கசக்கி தூக்கி எறிந்த போது அவள் பின்னால் வந்து அணைத்த தேவ் "என்ன மிது காபி ரெடியா?" என்று கேட்டான்.


"போடா... உனக்கும் காபியும் கிடையாது... ஒரு மண்ணும் கிடையாது..."


"அட என்ன மிதுக்குட்டி... எதுக்கு இவ்ளோ கோபமா இருக்க?"


"ஏன்னு உனக்கு தெரியாதா?"


"எனக்கெப்படி தெரியும்? நீ சொன்னா தான தெரியும்?"


"உனக்கு எதுவும் தெரிய வேண்டாம்... நீ கிளம்பு..." என்றவள் அவனை தன்னிடமிருந்து விலக்கி தள்ளினாள்.


"சரி நான் போறன்... ஆனா அதுக்கு முன்ன..." என்றவன் அவளை தனக்கருகே இழுத்து பின்புறமாக திருப்பி நிறுத்தியவன் அவள் கழுத்தின் மீதிருந்த முடியை முன்னே எடுத்து போட்டான்.


மிருதுளா அவன் பிடியில் இருந்து விலக முயன்றாள். ஆனால் அவன் விடவில்லை.


தன் பாக்கெட்டில் இருந்த மரகத நெக்லஸை எடுத்து அவள் கழுத்தில் அணிவித்தவன் "ஹாப்பி பர்த்டே மிது" என்று அவள் காதில் கிசுகிசுத்தான்.


தன் கழுத்தில் இருந்த மரகத நெக்லஸை ஒரு பார்வை பார்த்தவள் பின்னர் திரும்பி "அப்போ உனக்கு என் பர்த்டே நியாபகம் இருக்கா?" என்று கேட்டாள்.


"ஹ்ம்ம் இருக்கு"


"அப்போ ஏன் நீ நைட்டே விஷ் பண்ணல... நைட் பன்னிரெண்டு மணியில இருந்து நான் விஷ்காக காத்துக்கிட்டிருந்தன் தெரியுமா?" என்று அவள் சிணுங்கலாக சொன்னாள்.


'தெரியும் மிது... ஆனா நான் உனக்கு நைட் விஷ் பண்ணி இருந்தா மொத மொதல்ல நான் உன்ன அடையறதுக்காக உன் பொறந்தநாளை யூஸ் பண்ணிக்கிட்டது ஒருவேளை உனக்கு நியாபகம் வரலாம்... அது நிச்சயம் உனக்கு வேதனையை கொடுக்கும்... அதனால தான் நான் உனக்கு அப்போ விஷ் பண்ணல' என்று உள்ளுக்குள் நினைத்தவன் "என் மிதுக்குட்டி கூட விளையாடி பாக்கணும்னு எனக்கு ஆசை வந்துடிச்சி... அதான் நைட்ல இருந்து உன்ன தவிக்க விட்டு இப்போ கொஞ்சம் அலையவிட்டு விஷ் பண்ணன்..." என்றான்.


அவன் சொன்னதை கேட்ட மிருதுளா அவனை செல்லமாக முறைத்தாள்.


"ஹே உன் பர்த்டேக்கு நான் கிப்ட் கொடுத்தன் இல்ல... நீ ஸ்வீட் கொடு" என்று தேவ் கேட்டான்.


"உனக்கு பிடிக்கும்னு நேத்து நானே என் கையால குளோப்ஜாமூன் பண்ணன்... இரு கொண்டு வரன்" என்ற மிருதுளா பிரிட்ஜை நோக்கி செல்ல தொடங்கினாள்.


அவளின் கையை பற்றி இழுத்து அவளை தடுத்து நிறுத்திய தேவ் "எனக்கு அந்த ஸ்வீட் எல்லாம் வேண்டாம் " என்றான்.


"வேற என்ன ஸ்வீட் வேணும் சொல்லு... நான் டிரைவர் அண்ணா கிட்ட சொல்லி வாங்கிட்டு வர சொல்றன்"


"எனக்கு கடையில இருக்க ஸ்வீட் எல்லாம் வேண்டாம்... உன்கிட்ட இருக்க ஸ்வீட் தான் வேணும்"


"என்கிட்ட என்ன ஸ்வீட் இருக்கு?" என்று குழப்பத்துடன் கேட்டபடி அவள் தேவ்வை பார்த்த போது அவன் பார்வை தன் உதட்டின் மீதிருப்பதை கவனித்தாள்.


"என்ன மிது ஸ்வீட்டை எடுத்துக்கலாமா?"


"பூ கிட்ட கேட்டுட்டு தான் வண்டு தேனை எடுத்துக்குமா என்ன?" என்று அவள் மெல்லிய குரலில் சொன்னாள்.


அடுத்த நொடி அவள் உதடுகள் அவன் உதடுகளிடம் சிறைப்பட்டன.


மூச்சு காற்றுக்காக மிருதுளா சிரமப்பட்ட போதுதான் போனால் போகிறதென்று அவன் அவளின் உதட்டை விடுவித்தான்.


தன் வாயை திறந்து பெரிது பெரிதாக மூச்செடுத்தவள், "ஆனாலும் நீ ரொம்ப மோசம் தேவ்..." என்று சொன்னாள்.


"பொண்டாட்டி கிட்ட மோசமா நடந்துக்கலனா தாண்டி தப்பு" என்று சொல்லிவிட்டு அவளை பார்த்து கண்ணடித்தவன் மீண்டும் அவளின் உதட்டை சிறை பிடித்தான்.


உதடுகள் அதன் வேலையை செவ்வனே செய்ய தன் கைகளால் அவளின் இடுப்பில் இருந்த புடவையை தளர்த்தியவன் அவளின் ஆலிலை வயிற்றை மென்மையாக வருடினான்.


சிறிது நேரம் அமைதியாக அவனின் வருடலை ரசித்தவள், “பகல் நேரத்திலேயே ஏன் தேவ் இப்படி அழிச்சாட்டியம் பண்ற?” என்று கேட்டாள்.


அவள் உதடுகள் அப்படி சொன்னாலும் அவள் கைகள் அதற்கு நேர்மாறாக அவளை இறுக்கி அணைத்தன.


"ஏண்டி பிடிக்கலையா?" என்று அவளின் கழுத்தில் தன் உதட்டால் வலம் வந்தபடி அவன் கேட்டான்.


அவன் உதடுகளும் கைகளும் மாறி மாறி கொடுத்த சுகவதையை தாள முடியாமல் அவள் இன்னும் அவனை இறுக்கி அணைத்து கொண்டாள்.


"பதில் சொல்லுடி... உன்கிட்ட தான கேட்டுட்டிருக்கன்" என்றவனின் கைகள் அவள் உடலில் வலம் வர தொடங்கின.


அவனின் அதிரடியில் உள்ளுக்குள் தவித்தவளுக்கு அவன் தன்னை வெண்ணெயாய் விழுங்க போகிறான் என்று புரிந்தது.


"பிடிக்கலன்னு சொன்னேனா... பகல் நேரமா இருக்கேன்னு தான்..." என்று அவள் தயக்கத்துடன் சொன்னாள்.


“இதுக்கெல்லாம் நேரம் காலமே பாக்கக் கூடாதுடி…” என்று சொன்னவன் அவளின் உதட்டை மீண்டும் சுவைக்க தொடங்கினான்.


சில நிமிடம் கழித்து அவளின் உதட்டை விடுவித்தவன் அவள் எதிர்ப்பாரா நேரம் அவளை தூக்கி தன் தோளில் போட்டு கொண்டு தங்கள் படுக்கை அறையை நோக்கி சென்றான்.அவளை படுக்கையில் கிடத்தியவன் அடுத்த சில நிமிடங்களில் அவளை தன் ஆளுகைக்குள் கொண்டு வந்தான். அடுத்த சில நிமிடங்கள் அந்த அறையில் அவர்களின் இன்ப முனங்கல் மட்டுமே கேட்டன.


அத்தியாயம் - 33 :


நாளொரு வண்ணமாய் பொழுதொரு மேனியாய் மிருதுளாவின் நாட்கள் கழிந்தன. அன்று மிருதுளா எழும் போதே மணி ஒன்பதாகிவிட்டது. கடந்த பத்து நாட்களாக இப்படிதான் அவள் காலை நீண்ட நேரம் கழித்தே கண் விழிக்கிறாள்.


தேவ்வும் அவளை தொந்தரவு செய்வதில்லை. மாத்திரையின் உதவியின்றி அவள் நன்றாக உறங்குவதுதான் அவள் குணமாவதற்கான அறிகுறி என்று மனநல மருத்துவர் கூறி இருந்ததால் அவனுக்கு இதில் மகிழ்ச்சி தான்... அதனால் மிருதுளாவின் தூக்கத்திற்கு இடையூறு விளைவிக்காமல் அவனே அமரை கிளப்பி பள்ளியில் சென்று விட்டுவிட்டு அவனும் அலுவலகத்திற்கு சென்றுவிடுவான்.


அன்று எழும் போதே மிருதுளாவிற்கு லேசாக தலைசுற்றியது. கடந்த சில நாட்களாக நிறைய நேரம் தூங்குவது... இப்போது காலை எழுந்தவுடன் தலைசுற்றல் அனைத்தையும் கணக்கிட்டு பார்த்தவள் 'ஒருவேளை அப்படி இருக்குமோ' என்று முனகினாள்.


பின்னர் படுக்கையை விட்டு இறங்கி நேராக தன்னுடைய அலமாரியை நோக்கி சென்றவள் ஒரு மெடிக்கல் கிட்டை எடுத்து கொண்டு பாத்ரூமை நோக்கி சென்றாள்.


சிறிது நேரம் கழித்து அவள் திரும்பி வந்த போது அவள் முகம் வைரமாய் ஜொலித்தது.


"இந்த விஷயத்தை உடனடியா தேவ் கிட்ட சொல்லலாமா?" என்று அவள் யோசித்த போது அமரை தான் தன் வயிற்றில் சுமக்கும் விஷயம் தெரிந்ததும் தேவ் நடந்துகொண்ட முறை நினைவிற்கு வந்தது.


'இல்ல... இப்போ அதை பத்தி எல்லாம் யோசிக்க கூடாது... அதெல்லாம் நடந்து முடிஞ்சிடிச்சி... அத நெனச்சி இப்போதைய சந்தோஷத்தை கெடுத்துக்க கூடாது...' என்று தனக்கு தானே அறிவுறுத்திக் கொண்டவள் டாக்டரிடம் சென்று உறுதிப்படுத்திய பிறகு தேவ்விடம் சொல்லலாம் என்று முடிவெடுத்தாள்.


பின்னர் அவள் குளித்து முடித்து வராண்டாவிற்கு வந்து சோபாவில் அமர்ந்தாள். அவள் வந்ததை கவனித்ததும் லட்சுமி அவளுக்கு சத்துமாவு கஞ்சியை கொண்டு வந்தார்.


அவரை பார்த்து புன்னகைத்தவள் அவர் கொடுத்த கஞ்சியை வாங்கியபடி "அமரும் தேவ்வும் காலையில சாப்பிட்டு தான கிளம்பினாங்க?" என்று கேட்டாள்.


லட்சுமி எதையோ சொல்ல வாயெடுத்தார். ஆனால் எதுவும் சொல்லாமல் அவளை பார்த்து வெறுமனே தலையசைத்தவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.


வழக்கம் போல் இல்லாமல் லட்சுமியின் முகம் வாடி இருப்பதை போல மிருதுளாவிற்கு தோன்றியது.


'என்ன ஆச்சு இவங்களுக்கு' என்று அவள் யோசித்து கொண்டிருந்த போது தேவ்வின் அலுவலக அறையில் இருந்து ஏதோ சப்தம் கேட்டது.


'என்ன இது தேவ் ஆபீஸ் ரூம்ல இருந்து சத்தம் கேக்கற மாதிரி இருக்கு' என்று முனகியவள் எழுந்து மாடிக்கு சென்றாள்.


அவள் இரண்டு மாதங்களுக்கு மேலாக அந்த வீட்டில் வசித்த போதிலும் தேவையில்லாமல் அவனின் அலுவலக அறைக்கு செல்ல மாட்டாள்.


மாடியேறி சென்றவள் அந்த அறைக்குள் நுழைந்தாள்.


'இங்க இருந்துதான சத்தம் வந்துச்சி...' என்று நினைத்தவள் அந்த அறையை சுற்றி பார்த்தாள். அப்போது கீழே விழுந்து கிடந்த பிளவர்வாஷ் அவளின் பார்வையில் விழுந்தது.


'ஓஹ் இது கீழ விழுந்த சத்தம் தான் கேட்டுச்சு போல' என்று முணுமுணுத்தவள் அந்த பிளவர்வாஷை எடுத்து அருகே இருந்த மேஜை மீது வைத்தாள்.


அப்போது திறந்திருந்த மேஜை ட்ராயரின் முதல் அலமாரி அவள் பார்வையில் விழுந்தது. அதை மூட சென்ற போது அதற்குள் இருந்த புகைப்படத்தை கண்டவள் ஆர்வ மிகுதியில் அதை எடுத்து பார்த்தாள்.


அது ஒரு இளம்பெண்ணின் புகைப்படம்... அதை பார்த்ததுமே அது தேவ்வின் தங்கை தர்ஷினி என்பதை அவள் தெரிந்து கொண்டாள். தர்ஷினி தன் அண்ணனின் ஜாடையில் இருந்ததே அதற்கு காரணம்...


அவளுக்கு தேவ் தங்கையின் பெயர், அவள் சிறுவயதிலேயே இறந்துவிட்டாள் என்பதை தவிர வேறு எதுவும் தெரியாது... அதை கூட அவள் லட்சுமியின் மூலமே தெரிந்து கொண்டாள். தேவ் இன்றுவரை அவன் தங்கையை பற்றி எதையும் அவளுடன் பகிர்ந்து கொண்டதில்லை...


தேவ் தன் தங்கையின் மீது அதிக அன்பு வைத்திருந்ததாகவும் அவளின் இறப்பை அவனால் ஏற்று கொள்ள முடியாததால் அவளை நினைவுபடுத்தும் வண்ணம் வீட்டில் இருந்த அவளின் புகைப்படங்களை அப்புறப்படுத்தியதோடு அவள் பற்றிய பேச்சை எப்போதும் தவிர்த்து விடுவான் என்றும் லட்சுமி அவளிடம் சொல்லியிருந்ததால் அவளும் அவனிடம் அவன் தங்கையை பற்றிய பேச்சை எடுப்பதில்லை.


அதனால் அவள் இன்றுதான் முதல் முறையாக தர்ஷினியின் புகைப்படத்தை பார்க்கிறாள்.


'எவ்ளோ அழகா இருக்கா... இவ்வளவு சின்ன வயசுல இவ இறந்திருக்க வேண்டியதில்லை...' என்றவள் பெருமூச்சை வெளியேற்றியபடி அந்த புகைப்படத்தை எடுத்த இடத்திலேயே வைக்க சென்ற போது அங்கே இருந்த ஒரு டைரி அவள் பார்வையில் விழுந்தது.


'தேவ்வோட டைரியா இருக்குமோ' என்று நினைத்தவள் அதை எடுத்து முதல் பக்கத்தை திருப்பினாள்.


அவள் நினைத்தது போல அது தேவ்வின் டைரி அல்ல... தர்ஷினியின் டைரி... தானும் தன் அண்ணனும் இணைந்திருக்கும் புகைப்படத்தை முதல் பக்கத்தில் ஒட்டி வைத்திருந்தவள் 'ஹி இஸ் மை எவ்ரிதிங்' என்று எழுதி இருந்தாள்.


அதை படித்ததுமே தர்ஷினி தன் அண்ணனின் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தாள் என்று மிருதுளாவிற்கு புரிந்தது.


அவள் அடுத்த பக்கத்தை திரும்பியதும் 'டேய் அண்ணா நான் இல்லாத நேரம் என் டைரியை படிக்கிறியா? சரி சரி படிச்சிக்கோ... ஆனா படிச்சி முடிச்சிட்டு இங்க அந்த வார்த்தையை பிழையா எழுதி இருக்க... அங்க இந்த வார்த்தையை பிழையா எழுதி இருக்கேன்னு சொன்னேன்னு வச்சிக்கோ என்கிட்ட அடிதான் வாங்குவ' என்று எழுதி இருந்தது.


அதை படித்ததும் மிருதுளா பக்கென்று சிரித்துவிட்டாள்.


'ஓஹ் மேடம்கு சரியா தமிழ் எழுத வராது போல' என்று அவள் நினைத்தாள்.


இன்று எனது பிறந்தநாள். இரவு பன்னிரெண்டு மணிக்கு என் அண்ணன் பேய் போல வேடம் போட்டு என்னை பயமுறுத்திய பிறகு எனக்கு பிடித்த சாக்லேட் கேக்கை அவனே செய்து எடுத்து வந்து என்னை வெட்ட வைத்தான். அதோடு இன்று முழுக்க என்னோடு இருந்து நான் சொன்ன அனைத்து இடத்திற்கும் என்னை அழைத்து சென்றான்.


மிருதுளா அடுத்த பக்கத்தை புரட்டினாள்.


தர்ஷினி டைரி முழுவதும் அவளின் அண்ணனை பற்றி தான் எழுதி வைத்திருந்தாள். தன் அண்ணனை திட்டி, கொஞ்சி, பாராட்டி இப்படி அந்த டைரி முழுக்க தேவ்வும் அவளும் ஒன்றாக இருந்த தருணங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன."டேய் அண்ணா... நான் எவ்வளவோ கெஞ்சி கேட்டும் நீ ஆறு மாசம் பிசினஸ் ட்ரிப் போய்ட்ட இல்ல... நான் உன்கிட்ட சொன்ன மாதிரி இனி நீ இந்தியா வந்த பிறகுதான் உன்னோட பேசுவன்... அதுவரைக்கும் போன்ல கூட பேச மாட்டன்... போ போ நான் உன் பேச்சு கா..."


மிருதுளா மீண்டும் அடுத்த பக்கத்தை புரட்டினாள்... அவை எல்லாம் காலியாக இருந்தன.


'ஓஹ் மேடம் அப்போ நெஜமாவே தன் அண்ணன் கூட பேசல போல... அதான் எல்லா பேஜும் காலியா இருக்கு...' என்று நினைத்தவளுக்கு 'அதுசரி இவங்க ரெண்டு பேரும் எப்போ திரும்பி பேசிக்கிட்டாங்கன்னு தெரிஞ்சிக்கணுமே' என்ற ஆர்வத்தில் அடுத்தடுத்த பக்கங்களை புரட்டினாள்.


அப்போதுதான் அந்த பெயர் அவள் பார்வையில் விழுந்தது. அதை கண்டவள் திகைப்பூண்டை மிதித்ததை போல திகைத்தாள்.


தர்ஷினி தன் டைரியில் மிருதுளாவின் அப்பா தனசேகரனை பற்றி குறிப்பிட்டிருந்தாள். அதை கண்டு தான் மிருதுளா திகைத்தாள்.


"இன்று எங்களுக்கு கார்டியோலஜி பற்றி பாடம் எடுக்க தனசேகரன் என்று ஒரு கெஸ்ட் லெக்சரர் வந்திருந்தார்... மிகவும் அருமையாக பாடம் நடத்தினார்... அதோடு மாணவர்களோடு சகஜமாக உரையாடினார்... எனக்கு அவரை மிகவும் பிடித்துவிட்டது... இதை என் அண்ணாவிடம் உடனே சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது... ஆனால் அவன் இந்தியா வந்த பிறகே நான் அவனிடம் இதை சொல்வேன்..."


அதை படித்த மிருதுளாவிற்கு பெருமையாக இருந்தது.


'பரவால்ல என் அப்பா எனக்கு மட்டும் தான் நல்ல அப்பாவா இல்ல... மத்தபடி அவர் தன்னோட மாணவர்களுக்கு நல்ல லெச்சரரா இருந்திருக்கார்' என்று அவள் நினைத்தாள்.


தர்ஷினி அதன் பிறகு அவ்வப்போது தனசேகரனை பற்றி குறிப்பிட்டிருந்தாள். அவளின் ரோல் மாடல் அவர் தான் என்றும் தனக்கும் அவரை போல இதய நோய் நிபுணராக ஆசை ஏற்பட்டுள்ளதாகவும் அதுபற்றி அவரிடம் கூறிய போது அவர் தன்னால் முடிந்தவரை அவளுக்கு உதவுவதாக வாக்களித்ததாகவும் எழுதி இருந்தாள்.


அதை எல்லாம் படிக்க படிக்க மிருதுளாவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.


"இன்று எனக்கு தனசேகரன் சார் எடுத்த பாடம் சுத்தமாக புரியவில்லை... அதுபற்றி அவரிடம் கூறிய போது இந்த வார இறுதியில் தன்னுடைய வீட்டிற்கு வருமாறும் தான் பொறுமையாக விளக்கி கூறுவதாகவும் கூறினார்.மேலும் அவர் மட்டும் தனியாக இருக்கும் இடத்திற்கு நான் வருவதற்கு சங்கடப்படுவேனோ என்று நினைத்து அவர் மகளும் அவருடன் இருப்பாள் என்றும் கூறி அவரின் முகவரியை எனக்கு கொடுத்தார்"


தர்ஷினி எழுதி இருந்த முகவரியை படித்த மிருதுளாவின் புருவங்கள் முடிச்சிட்டன...
 

geethusri

Moderator

அத்தியாயம் - 34 :


தர்ஷினி தன் டைரியில் எழுதியிருந்த முகவரியை பார்த்த மிருதுளாவிற்கு குழப்பமாக இருந்தது. ஏனென்றால் அது அவர்கள் வீட்டு முகவரி அல்ல...


அதை படித்ததும் ஏனென்று தெரியாமல் அவள் மனம் நிலைகொள்ளாமல் தவிக்க தொடங்கியது. பதற்றத்தில் அவள் கைகள் வியர்க்க தொடங்கின.


இதயம் படபடக்க அவள் அடுத்த பக்கத்தை புரட்டி படிக்க தொடங்கினாள்.


"நான் நாளை என்னுடைய லெச்சரரின் வீட்டுக்கு செல்ல போகிறேன்... அவருக்கு என்னை விட சில வருடங்கள் வயதில் மூத்த பெண் இருக்கிறாள்... நான் எப்படியாவது அந்த அக்காவை என் தோழியாக்கி aகொள்ள விரும்புகிறேன்... அப்போதுதானே என்னால் நினைத்த நேரம் அவர் வீட்டிற்கு செல்ல முடியும்..."


தர்ஷினி தன் தந்தையை சந்தித்தாளா? அதன் பிறகு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள மிருதுளா அடுத்த பக்கத்தை புரட்டினாள். ஆனால் அடுத்த சில பக்கங்கள் காலியாகவே இருந்தன.


'இவ அன்னைக்கு அப்பாவை போய் பாத்தாளா? இல்லையா?' என்று டைரியின் பக்கத்தை புரட்டியபடி மிருதுளா முணுமுணுத்த போது கண்ணீரால் பாதி கலைந்திருந்த எழுத்துகள் அவள் பார்வையில் விழுந்தன.


"அண்ணா நான் பெரிய தப்பு பண்ணிட்டன்... அந்த ஆளை நம்பி நான் அவன் சொன்ன அட்ரெஸ்க்கு போயிருக்க கூடாது..."


தர்ஷினி எழுதி இருந்ததை படித்ததும் மிருதுளாவிற்கு திக்கென்று இருந்தது. அவள் மேலும் படிக்க தொடங்கினாள்.


"நான் அன்னைக்கு அந்த ஆள் வீட்டுக்கு போன போது அவரை தவிர யாரும் இல்லை அண்ணா... அவன் பொண்ணு வெளிய போயிருக்கறதாவும் இன்னும் ஐஞ்சு நிமிசத்துல வந்துடுவான்னும் சொன்னான்... நானும் அதை நம்பிட்டேன்... அப்புறம் அவன் குடிக்க ஜூஸ் கொடுத்தான்... நானும் குடிச்சன்... ஆனா அதுக்கு பிறகு என்ன நடந்துச்சின்னு எதுவும் எனக்கு நியாபகம் இல்ல... நான் மயக்கமாகிட்டான்... திரும்ப கண் முழிச்சி பாத்த போது நான் அவன் பெட்ல இருந்தன்... நான் இருந்த கோலத்தை வச்சி அவன் என்னை சீரழிச்சிட்டான்னு எனக்கு புரிஞ்சிடிச்சி... நான் அவன் கிட்ட சண்டை போட்டன்... அவனை பத்தி எல்லார்கிட்டயும் சொல்லிடுவேன்னு சொன்னன்... அதுக்கு அவன் நீ இத பத்தி வெளிய சொன்ன நான் உன்னோட ஒன்னா இருந்ததை வீடியோ பண்ணி வச்சிருக்கன்... அதை வெளியில விட்டுடுவேன்னு மிரட்டினான்... அவன் அப்படி சொன்னதும் நான் பயந்து போய்ட்டன்... எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல... அங்க இருந்து ஓடி வந்துட்டன்… "


"அண்ணா என்னால அன்னைக்கு நடந்துல இருந்து வெளிய வரவே முடியல... பாட்டி என் நடத்தையில இருக்க மாற்றத்தை கண்டுபிடிச்சிட்டாங்க... ஆனா அதுக்கு காரணம் நீ பாரின் போனதுன்னு நெனச்சுக்கிட்டு இருக்காங்க... நான் எனக்கு நடந்த அசிங்கத்தை சொல்லி அவங்களையும் கஷ்டப்படுத்த விரும்பல... ஆனா எனக்கு நடந்த கொடுமையை உன்கிட்ட சொல்லி ஒருமூச்சு அழுதுட்டா என் மனசுல இருக்க பாரம் எல்லாம் கொறைஞ்சிடும்... ஆனா இந்த உண்மை தெரிஞ்சா நீ நிச்சயம் அந்த ஆளை கொன்னுடுட்டு ஜெயிலுக்கு போய்டுவ... அப்படி எதுவும் நடந்துட கூடாது... அதுக்கு பதிலா நான் மட்டும் இந்த வேதனையை தனியா தாங்கிக்கிறன்..."


டைரியில் எழுதி இருந்ததை படிக்க படிக்க மிருதுளாவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. தனசேகரன் நல்ல தந்தையாக இல்லாவிட்டாலும் நல்ல மனிதர் என்று அவள் எண்ணியிருந்தாள். ஆனால் தர்ஷினியின் டைரியை படித்த பிறகுதான் அவர் மனிதனே இல்லை... மிருகத்திற்கும் கீழானவர் என்பதை அவள் புரிந்து கொண்டாள்.


தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தவள் மேலே தொடர்ந்து படித்தாள்.


"அண்ணா நடந்ததை மறந்துட்டு வாழலாம்னு நான் நெனச்சா அந்த தனசேகரன் அதுக்கு விடமாட்றான்... அந்த வீடியோவை சமூக வலைத்தளத்துல ரிலீஸ் பண்ணிடுவன்னு சொல்லி என்ன மிரட்டி அவன் கூப்பிடும் போதெல்லாம் வரணும்னு சொல்றான்... எனக்கு இப்போ என்ன பண்றதுன்னே தெரியல... செத்துடலாம் போல இருக்கு... அந்த வீடியோ வெளிய வந்துச்சின்னா நம்ம குடும்ப மானம் போறதோட நம்ம பாட்டி நிச்சயம் உயிரை விட்டுடுவாங்க... அதுக்கு பேசாம நான் செத்துட்டா எந்த பிரச்சனையும் இல்லல... ஆனா தற்கொலை பண்ணிக்க எனக்கு பயமா இருக்கே..."


மிருதுளா அடுத்த பக்கத்தை புரட்டினாள்.


"நம்ம குடும்ப மானத்தை காப்பாத்த எனக்கு வேற வழி தெரியலன்னா... அதான்… நான் அவன் சொன்னதுக்கு ஒத்துக்கிட்டன்"


"அவன் ரொம்ப மோசம்னா... என்ன ரொம்ப டார்ச்சர் பண்றான்..."


அதன் பிறகு அந்த டைரியின் சில பக்கங்கள் காலியாக இருந்தன.


"அண்ணா இன்னைக்கு உனக்கு போன் போட்டு பேசணும்னு என் மனசு கிடந்து அடிச்சிக்குது... ஆனா என் குரலை வச்சே நீ எனக்கு ஏதோ பிரச்சனைன்னு கண்டுபிடிச்சிடுவ...அதான் நான் உனக்கு பேசல... ஆனா நாளைக்கு நான் உயிரோட இருந்தா நிச்சயம் உன்கிட்ட பேசுவேன்... ஏன் இப்படி சொல்றன்னு பாக்கறியா? அந்த ஆளோட குழந்தை இப்போ என் வயித்துல வளருது அண்ணா... மூணு மாசம் முடிஞ்சிச்சி... இதை நான் மொதல்ல கவனிக்கவே இல்ல... அந்த ஆளும் நான் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்துருப்பேன்னு நெனச்சி இந்த விஷயத்தை கண்டுக்கல... இப்போ விஷயம் தெரிஞ்சதும் வெலவெலத்து போய்ட்டான்... உடனடியா அபார்சன் பண்ண சொல்றான்... நான் அபார்சன் பண்ணிக்கிட்டா என் சம்பந்தப்பட்ட வீடியோக்களை என்கிட்ட கொடுத்துடறதா சொல்றான்... இதுதான் அவன்கிட்ட இருந்து நான் தப்பிக்க நல்ல வாய்ப்பு... ஆனா இதுல ஒரு சின்ன ரிஸ்க் இருக்கு... மூணு மாசம் முடிஞ்சிட்டதால அபார்சன் பண்ணும் போது என் உயிர் போகவும் வாய்ப்பிருக்கு... ஆனா அதை பத்தி எனக்கு கவலை இல்லை... அவனோட குழந்தையை சுமக்க எனக்கு சுத்தமா மனசில்ல... என் உயிரே போனாலும் பரவாயில்லன்னு நான் அந்த கொழந்தையை அபார்சன் பண்ண முடிவெடுத்துட்டன்... நாளைக்கே அவன் சொன்ன ஹாஸ்பிடலுக்கு போக போறன்... நாளைக்கு இந்நேரம் நான் உயிரோட இருந்தா உன்கிட்ட பேசறன்... லவ் யூ அண்ணா "


அதன் பிறகு அந்த டைரியில் எதுவும் எழுதியிருக்கவில்லை... அதை வைத்தே மிருதுளாவிற்கு தர்ஷினியின் முடிவு என்னவாக இருந்திருக்கும் என்பது புரிந்தது.


டைரியை தன் மார்போடு சேர்த்து அணைத்தபடி சரிந்து அமர்ந்தவள் வாய்விட்டு கதறி அழுதாள். தன் தந்தையால் அந்த சிறுபெண்ணிற்கு இழைக்கப்பட்ட அநியாயத்தை அவளால் தாங்கி கொள்ளவே முடியவில்லை.


மிருதுளாவை சாப்பிடுவதற்காக அழைக்க வந்த லட்சுமி மாடியில் இருந்து அழுகை சத்தம் வருவதை கேட்டதும் உடனடியாக மாடியை நோக்கி ஓடினார்.


மேலே சென்றவரின் பார்வையில் நெஞ்சே வெடித்துவிடும் போல கதறி அழுத மிருதுளா விழுந்தாள். அவள் ஏன் அழுகிறாள் என்று அவருக்கு புரியவில்லை. அவளை நோக்கி சென்றவர் அவளை சமாதானபடுத்த முயன்றார். ஆனால் அவரின் சமாதானம் எதுவும் அவளிடம் எடுபடவில்லை.


என்ன செய்வது என்று ஒருநொடி திகைத்தவர் வேறு வழியில்லாமல் தேவ்விற்கு போன் செய்தார்.


அடுத்த சில நிமிடங்களில் தேவ் வீட்டில் இருந்தான்.


தன் காரை விட்டு வேகமாக கீழே இறங்கியவன் தனக்காக வாசலிலேயே காத்திருந்த லட்சுமியிடம் "என்ன ஆச்சு லட்சுமிமா?" என்று பதற்றத்துடன் கேட்டான்.


"என்னனு தெரியலைங்கய்யா... உங்க ஆபீஸ் ரூம்ல உட்காந்து மிருதுளா அம்மா அழுதுகிட்டு இருக்காங்க... விஷயம் என்னனு கேட்டாலும் சொல்ல மாட்றாங்க... என்ன பண்றதுன்னு புரியாம தான் உங்களுக்கு போன் பண்ணன்" என்று தன் கைகளை பிசைந்தபடி சொன்ன லட்சுமி "ஆனா ஐயா அவங்க கையில டைரி மாதிரி ஏதோ இருந்துது... அதுமட்டும் இல்ல நம்ம தர்ஷினி பாப்பா போட்டோவும் அவங்க பக்கத்துல இருந்த டிராயருல இருந்துது..." என்றார்.


அப்போதுதான் தான் மேஜை டிராயரை தான் பூட்டாதது தேவ்விற்கு நினைவு வந்தது.


"ஓஹ் ஷிட்" என்று தன் தலையிலேயே அடித்து கொண்டவன் வேகமாக மாடியை நோக்கி ஓடினான்.


அத்தியாயம் - 35 :


அவன் மேலே சென்ற போது மிருதுளா டைரியை தன் மார்போடு அணைத்து பிடித்தபடி தரையில் படுத்து அழுது கொண்டிருந்தாள்.


வேகமாக அவளை நோக்கி ஓடிய தேவ் அவள் அருகே அமர்ந்து அவளை தூக்கி தன் மார்போடு அணைத்து கொண்டவன் "மிது காம் டவுன்..." என்றபடி அவள் முதுகை தடவி விட்டான்.


அவன் சட்டை காலரை இறுக்கமாக பற்றி கொண்ட மிருதுளா "சாரி தேவ்... சாரி... சாரி" என்று அழுதபடி புலம்பினாள்.


"மிது விடுடா... நடந்ததுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல... அப்படி இருக்கும் போது நீ ஏன் சாரி கேக்கற?"


"அது எப்படி சம்பந்தம் இல்லாம போகும்... அப்பா அம்மா சேத்து வைக்கிற சொத்து சுகம் மட்டும் இல்ல... பாவ புண்ணியத்திலையும் பசங்களுக்கு பங்கிருக்கு...அப்படி பாத்தா என் அப்பா பண்ண பாவத்துக்கு நானும் பொறுப்பாளி தான?"


"இல்ல மிது... அப்படி எல்லாம் எதுவும் இல்ல... ப்ளீஸ் காம் டௌன்" என்று தேவ் சொல்லி கொண்டிருந்த போதே மனஅழுத்தம் தாளாமல் மிருதுளா மயங்கி விழுந்தாள்.


அவள் கையில் இருந்த டைரியை எடுத்து மேஜை மீது வைத்த தேவ் அவளை பூப்போல தூக்கி சென்று தங்கள் படுக்கையில் படுக்க வைத்தான்.


பின்னர் அவள் அருகே அமர்ந்தவன் அவளின் தலையை வருடியபடி "மிது உன் அப்பா பண்ண பாவத்துல உனக்கும் பங்கிருக்குன்னு பைத்தியக்காரன் மாதிரி நெனைச்சதால தான் நான் உன்ன அந்த பாடுபடுத்தினன்... ஆனா அப்படி எதுவும் இல்ல... அவன் உனக்கும் ஒரு நல்ல அப்பாவா இல்லனு என்னைக்கு தெரிஞ்சிகிட்டேனோ அன்னைக்கே நீ அவனோட பொண்ணுன்றத நான் மறந்துட்டன்... என்னை பொறுத்தவரைக்கும் நீ என் பொண்டாட்டி, என் பையனோட அம்மா அவ்ளோதான்... இந்த உண்மை உனக்கு தெரிஞ்சா நீ கஷ்டப்படுவேன்னு தான் நான் இத உன்கிட்ட மறைக்க நெனச்சன்... ஆனா எப்படியோ உனக்கு உண்மை தெரிஞ்சிடிச்சி..." என்று வேதனையுடன் சொன்னவன் அவள் அருகே அமர்ந்து அவளின் தலையை வருடியபடி சீலிங்கை வெறித்து பார்க்க தொடங்கினான்.


எவ்வளவு நேரம் கடந்து சென்றதோ...


"தண்ணீ... தண்ணீ" என்ற மிருதுளாவின் முனகலில் தன்னிலைக்கு திரும்பிய தேவ் அவளுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தான்.


அடுத்த சில நொடிகளில் படுக்கையில் கையூன்றியபடி எழுந்து அமர்ந்த மிருதுளா தேவ்வை பார்த்ததும் தன் உதட்டை பிதுக்கியபடி மீண்டும் அழ தொடங்கினாள்.


அவளை இழுத்து அணைத்த தேவ் "வேண்டாம் மிது... வேண்டாம்டா... ப்ளீஸ் அழாத... நீ அழறதை என்னால பாக்க முடியல" என்றான்.


"சாரி தேவ்... என் அப்பா இப்பேர்ப்பட்ட அயோக்கியனா இருப்பான்னு சத்தியமா நான் நெனச்சி கூட பாக்கல... அவரோட ரத்தம் என் உடம்புல ஓடறதை நினைக்கும் போதே கத்தியால துண்டு துண்டா என் உடம்பை வெட்டி அந்த ரத்தத்தை எல்லாம் வெளியேத்திடணும் போல தோணுது"


மிருதுளா சொன்னதை கேட்ட தேவ் மின்சாரம் தாக்கியதை போல அதிர்ந்தான்.


'ஐயோ என்ன இவ இப்படியெல்லாம் சொல்றா... இவ இப்போ இருக்க மனநிலையை மாத்தலனா அப்புறம் பெரிய பிரச்னையாயிடும்...' என்று நினைத்த தேவ் "மிது... கண்ணம்மா இப்படி எல்லாம் பேசாதடா... இங்க பாரு இப்போதைக்கு நீ இந்த தேவ்வோட பொண்டாட்டி... அதை மட்டும் நெனப்புல வச்சிக்கோ.. அந்த ஆளோட பொண்ணுறதை மறந்துடுடி" என்றான்.


"அதெப்படி சாத்தியம் தேவ்...அதுமட்டும் இல்ல... நான் அந்த ஆளோட பொண்ணுறதால தான நீ என்னை காதலிக்கிற மாதிரி நடிச்சி ஏமாத்தின?"


அவள் அப்படி கேட்டதும் அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.


சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் "மிது இந்த விஷயத்தை பத்தி நாம இப்போ பேசறது தான் கடைசி தடவையா இருக்கணும்" என்றவன் மீண்டும் அமைதியானான்.


பின்னர் தன் தொண்டையை கணைத்தவன் "மிது நீ சொல்றது உண்மைதான்... நீ அந்த ஆளோட பொண்ணுன்றதால தான் நான் உன்னை காதலிக்கிற மாதிரி நடிச்சி ஏமாத்தினன்... அவன் பண்ண தப்புக்கு அவனை பழிவாங்க நான் உன்னை பயன்படுத்திகிட்டது தப்புதான்... ஆனா அப்போ நான் இருந்த மனநிலையில சரி எது தப்பு எதுன்னு என்னால யோசிக்க முடியல... எப்படியாவது என் தங்கச்சியோட சாவுக்கு காரணமான தனசேகரனை பழி வாங்கணும்னு நெனச்சன்... நான் நெனச்சிருந்த ஒரு நிமிசத்துல அவனை இந்த உலகத்தை விட்டு அனுப்பி இருக்கலாம்... ஆனா அவனை மாதிரி அயோக்கியன் எல்லாம் ஒரு நிமிசத்துல சாக கூடாது... தினம் தினம் வேதனையில வெந்து சாகணும்... அப்படி நடக்கணும்னா அவனோட பலவீனத்துல அடிக்கணும்... அவனோட பலவீனம் எதுன்னு நான் தேடிக்கிட்டிருந்த போது தான் ஒருநாள் தற்செயலா அவனோட பேட்டியை பாத்தன்... அதுல அவன் தன் பொண்ணுதான் தன்னோட உயிர்ன்னும் அவளுக்காக தான் அவன் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கலன்னும் சொன்னான். அதை பாத்ததும் அவனோட பலவீனம் நீதான்னு நெனச்சி உன்ன கட்டம் கட்ட தொடங்கினன்"


"அய்யோ அப்படி எல்லாம் எதுவுமில்லை தேவ்... நான் எப்போதும் அவனுக்கு வேண்டாத பொண்ணுதான்"


"அந்த விஷயம் அப்போ எனக்கு தெரியாது கண்ணம்மா... ஆனா உன் அப்பாவை பழிவாங்க நான் உன்ன யூஸ் பண்ண முடிவெடுத்துட்டாலும் அதை செயல்படுத்தறதுக்குள்ள எனக்குள்ள எவ்வளவு பெரிய போராட்டம் நடந்துச்சின்னு எனக்கு மட்டும் தான் தெரியும்... அதுவும் உன்னோட பழக ஆரம்பிச்சதும் நீ நல்லவன்னு எனக்கு தெரிஞ்சிடிச்சி... அப்போ எல்லாம் சில நேரங்கள்ல உன்னை விட்டுடலாம்னு எனக்கு தோணும்... ஆனாலும் உன் அப்பா என் தங்கச்சிக்கு பண்ண அநியாயத்தை நெனச்சி என் மனசை கட்டுப்படுத்திப்பன்...”


"மொதல்ல உன்ன காதலிச்சி உனக்கு தாலி கட்டாமலேயே உன்னோட வாழ்ந்து நீ என் கொழந்தைய சுமந்துக்கிட்டிருக்கும் போது உன்னை தொரத்தி விடணும்னு தான் பிளான் பண்ணன்"என்று தேவ் சொன்னதும் மிருதுளா அவன் கைகளின் மீது தன் கைகளை வைத்தாள்.


அவளின் கைகளை இறுக பற்றி கொண்ட தேவ் "ஆனா என்னால நான் பிளான் பண்ணத முழுசா செயல்படுத்த முடியலடி... எல்லாத்தையும் திட்டம் போட்டு பண்ண நான் கடைசியில உனக்காக சில விஷயங்களை மாத்திட்டேன்... அதுக்கு முழுக்க முழுக்க காரணம் நான் உன்மேல வச்சிருந்த காதல்தான்..." என்று அவன் சொன்னதும் மிருதுளா தன் கண்களை அகல விரித்து அவனை ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.


"என்னடி உன் முட்டை கண்ணை விரிச்சி இப்படி பாக்கற? நான் சொல்றதை உன்னால நம்ப முடியலையா?"


அவள் ஆம் என்று தலையசைத்தாள்.


"என்னாலேயே நம்ப முடியல... அப்புறம் உன்னால எப்படி நம்ப முடியும்... அப்போ உன் அப்பாவை பழிவாங்கணும்ன்ற வெறியோட நான் இருந்ததால எனக்குமே உன்மேல நான் வச்சிருந்த என் காதலை உணர முடியல... அப்படி சொல்றத விட நான் உணர விரும்பல... அதான் உண்மை… கடிவாளம் கட்டின குதிரை மாதிரி உன் அப்பாவை பழிவாங்கறதுல மட்டும் தான் என் கவனம் இருந்திச்சி”


"நீ என்ன பிளான் பண்ணியிருந்த?"


அவளை தயக்கத்துடன் பார்த்த தேவ்,"மிது நான் இப்போ சொல்றதெல்லாம் அப்போ நான் போட்டிருந்த பிளானை பத்திதான்... அதை மனசுல வச்சிக்கிட்டு நான் சொல்றதை கேளு" என்று அவன் சொன்னதும் அவள் தலையசைத்தாள்.


"உன்ன காதலிச்சு ஏமாத்தி நீ உன் வயித்துல என் குழந்தையை சுமந்துக்கிட்டிருக்க போது உன்னை தொரத்தி விடணும்னு நெனச்சன்... எப்படியும் நீ உன் அப்பாகிட்ட தான் போவ... கழுத்துல தாலி இல்லாம வயித்துல கொழந்தையோட இருக்க உன்ன பாத்து உன் அப்பா வேதனைப்படணும்னு நெனச்சன்... அதுவும் உன் நிலைமைக்கு அவன் தான் காரணம்னு அவனுக்கு தெரியும் போது அவன் வேதனை ரெண்டு மடங்காகும் இல்லையா? அதுதான் எனக்கு தேவை பட்டுச்சு"


"அப்புறம் ஏன் அப்போ நீ கொழந்தையை அபார்சன் பண்ண சொன்ன தேவ்?"


"ஏன்னா உன் அப்பா பண்ண தப்புக்கு நீ காலம் முழுக்க கஷ்டப்பட வேண்டாம்னு நான் நெனச்சன்"


"எனக்கு புரியல"


"உன்னோட பழகின கொஞ்ச நாட்கள்லயே நீ எப்படிப்பட்டவன்னு நான் புரிஞ்சிக்கிட்டேன்... நீ சட்டுன்னு ஒருத்தர் மேல அன்பு வைக்க மாட்ட... ஆனா அன்பு வச்சிட்டா அவங்களுக்காக எதையும் பண்ணுவன்னு தெரிஞ்சிகிட்டன்... நான் உன்ன காதலிக்கிற மாதிரி நடிச்சாலும் நீ என்ன காதலிச்சது உண்மைதான... எங்க நான் உன்ன தொரத்தி விட்டதுக்கு பிறகு கொழந்தையை பற்றுக்கோலா வச்சி நீ காலம் முழுக்க தனியா இருந்துடுவியோன்னு எனக்கு பயமா இருந்துச்சி... என் தங்கச்சி சாவுக்கு காரணமா இருந்தவனோட பொண்ணோட நிச்சயம் என்னால வாழ முடியாது... ஆனா அதேசமயம் உன் அப்பா பண்ண தப்புக்கு நீ காலம் முழுக்க தனியா இருக்கறதையும் என்னால ஏத்துக்க முடியல... இந்த குழந்தை இருந்தா தான நீ தனியா இருப்ப... அது இல்லனா நீ கொஞ்ச வருஷம் கழிச்சி எல்லாத்தையும் மறந்துட்டு உனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சுப்பன்னு தோணிச்சி... அதான் அப்படி பண்ணன்"


"ஆனா உன் திட்டம்?"
 

geethusri

Moderator

அத்தியாயம் - 36 :


"அத என்னால முழுசா செயல்படுத்த முடியல தான்... ஆனா எப்படியும் உன்னோட நிலைமைக்கு தான்தான் காரணம்னு உன் அப்பாவுக்கு தெரிஞ்சா அவர் வேதனைப்படுவார் இல்லையா? அதுவே போதும்னு நெனச்சன்... கொஞ்ச நாள் கழிச்சி வேற ஏதாவது பிளான் பண்ணிக்கலாம்னு நெனச்சன்" என்ற தேவ் தான் அவள் அப்பாவை கொல்ல நினைத்திருந்ததை அவளிடம் சொல்லவில்லை.


ஆயிரம் இருந்தாலும் அவர் அவளை பெற்ற தந்தை அல்லவா? அதனால் அதை மட்டுமல்ல அவரை இந்த உலகத்தை விட்டே ஏற்கனவே அனுப்பி வைத்துவிட்டதையும் மறைத்துவிட்டான்...


"ஓஹ்... எல்லாம் சரிதான்... ஆனா தர்ஷினி உன்கிட்ட எதுவும் சொல்லலைன்னு டைரியில எழுதி இருந்தாளே... நீ எப்படி உண்மையை தெரிஞ்சிகிட்ட?"


"உண்மைதான்… அந்த பைத்தியக்காரி என்ன என்னவோ யோசிச்சி எல்லாத்தையும் என்கிட்ட இருந்து மறைச்சிட்டா... அதுக்கு ஒருவகையில நானும் என் பாட்டியும் கூட காரணம் தான்... நாங்க எவ்வளவு பெரிய பணக்காரங்க... எங்களுக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்குன்னு எத பத்தியும் அவகிட்ட சொல்லாம அவளை வளத்தோம்... தான் பெரிய பணக்காரின்னு அவளுக்கு தெரிஞ்சா எங்க அவ நல்லபடியா வளரமாட்டாளோன்னு பாட்டிக்கு ஒரு பயம்... அதனால அவளை ஒரு அப்பர் மிடில் கிளாஸ் பொண்ணு மாதிரி தான் வளத்தோம்... அதுவே எங்களுக்கு எதிரா திரும்பும்னு நாங்க சத்தியமா நினைக்கல..."


"தர்ஷினி விஷயம் உனக்கு எப்போ தெரிய வந்துச்சி?"


"நான் அவ சொல்ல சொல்ல கேக்காம ஆறு மாசம் பிசினஸ் ட்ரிப் போய்ட்டன்... அதுல அவளுக்கு ரொம்ப கோபம்... அதனால அவ என்கிட்ட பேசவே இல்ல... நான் போன் பண்ணாலும் எடுக்க மாட்டா... சரி நேர்ல போய் அவளை சமாதானபடுத்திக்கலாம்னு நானும் என் வேலைய பாக்க ஆரம்பிச்சுட்டன்... நான் போன வேலை ஒரு மாசம் முன்னாடியே முடிஞ்சிடிச்சி... அதனால சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு நெனச்சி யார்கிட்டயும் சொல்லாம நான் வீட்டுக்கு வந்தா பாட்டி அழுதுகிட்டு இருக்காங்க... என்னனு விசாரிச்சா தர்ஷினி இன்னும் வீட்டுக்கு வரலைனும் அவ போன் சுவிட்ச் ஆப்னு வரதாவும் சொன்னாங்க... மொதல்ல நான் அதை பெருசா எடுத்துக்கல... ப்ரண்ட்ஸ் கூட எங்கயாவது வெளிய போய் இருப்பா... சார்ஜ் இல்லாம போன் சுவிட்ச் ஆப் ஆகியிருக்கும்னு நெனச்சன்... ஆனா பத்து மணி ஆகியும் அவ வீட்டுக்கு வரலை... அதுக்கு பிறகு எனக்குமே பயம் வந்துடிச்சி... என்ன பண்றது போலீஸ்க்கு போலாமான்னு நான் யோசிச்ச போதுதான் ஒரு ஹாஸ்பிடல்ல இருந்து எனக்கு போன் வந்துச்சி"என்றவன் மிருதுளாவின் கைகளை இறுக்கி பிடித்தான்.


அதில் அவளுக்கு வலி எடுத்தாலும் அவன் நிலையை புரிந்து கொண்டவள் அமைதியாக இருந்தாள்.


சிறிது நேரத்திற்கு பின்னே தான் அவளின் கைகளை அழுத்தி பிடித்திருப்பதை உணர்ந்த தேவ் "சாரி... சாரி மிது" என்றான்.


"இட்ஸ் ஓகே தேவ்" என்ற மிருதுளா அதன் பிறகு எதுவும் சொல்லவில்லை.


"போன்ல அவங்க சொன்னதை கேட்டு நான் உறைஞ்சி போயிட்டன்... என்னால அவங்க சொன்னதை நம்ப கூட முடியல... பாட்டிகிட்ட தர்ஷினியை போய் கூட்டிட்டு வரதா மட்டும் சொல்லிட்டு நான் மட்டும் ஹாஸ்பிடலுக்கு போனன்"


மிருதுளா அமைதியாக அவன் சொல்வதை கேட்டு கொண்டிருந்தாள்.


"ஹாஸ்பிடலுக்கு நான் போன போது இறந்து கிடந்த என் தங்கச்சியை தான் பாக்க முடிஞ்சிது... அவ மேஜர் கூட கிடையாது... மைனர்... அப்படி இருக்கும் போது அவங்க எப்படி அவளுக்கு அபார்சன் பண்ணாங்க... அதுவும் அவ உயிருக்கே ஆபத்துன்னு தெரிஞ்ச பிறகும்... இப்படி எந்த கேள்வியும் அப்போ எனக்கு வரல... அவங்க சொன்னதை நான் அப்படியே நம்பிட்டன்"


"ஹாஸ்பிடல்ல என்ன சொன்னாங்க?"


"தர்ஷினி தான் யாரோடயோ பழகி கற்பமாகிட்டதாகவும் இது வெளியில தெரிஞ்சா தன் குடும்பத்துக்கே அசிங்கணும் சொல்லி அவங்ககிட்ட அழுது கெஞ்சினதாகவும் அவங்க மொதல்ல மறுத்தாலும் விடாம அவ கெஞ்சினதால வேற வழி இல்லாம அபார்சன் பண்ண ஒத்துக்கிட்டதாகவும் சொன்னாங்க... அதுமட்டும் இல்லாம இந்த அபார்சன்ல இருக்க ரிஸ்க் தெரிஞ்சி ஒருவேளை தனக்கு ஏதாவது ஆகிட்டா தன் குடும்பத்தை சேர்ந்தவங்ககிட்ட கொடுக்க சொல்லி ஒரு கடிதம் எழுதி கொடுத்ததாகவும் அதை படிச்ச பிறகு அவங்க எந்த பிரச்னையும் பண்ண மாட்டாங்கன்னு சொல்லி ஒரு கடிதத்தை என்கிட்ட கொடுத்தாங்க"


"ஓஹ்... அந்த கடிதத்துல தர்ஷினி என்ன எழுதி இருந்தா?"


"அவங்க சொன்ன மாதிரி எழுதி தனக்கு ஏதாவது ஆகிட்டா அபார்சன் பண்ணும் போதுதான் தன்னோட உயிர் பிரிஞ்சதுன்ற விஷயம் யாருக்கும் தெரியாம பாத்துக்க சொல்லி எழுதி இருந்தா... அத படிச்சதும் நான் ஸ்தம்பிச்சிட்டன்... அப்போ அந்த சூழ்நிலையில அதுல இருந்ததை உண்மைன்னு நம்பி அந்த விஷயத்தை அப்படியே மூடி மறைச்சி அவ ஆக்சிடெண்ட்ல இறந்த மாதிரி செட் பண்ணிட்டன்"


"உண்மைன்னு நம்பினன்னா என்ன அர்த்தம்?"


"அந்த கடிதத்தை உண்மையில என் தங்கச்சி எழுதவே இல்ல... எங்க நாங்க பிரச்சனை பண்ணுவோமோன்னு உன் அப்பாவோட பிளான்படி அந்த ஹாஸ்பிடலை சேர்ந்தவங்க அவ எழுதின மாதிரி ஒரு கடிதத்தை எழுதி என்கிட்ட கொடுத்திருக்காங்க..."


"இத நீ எப்படி கண்டுபிடிச்ச?"


"தர்ஷினி இறந்த துக்கத்தை தாங்கிக்க முடியாம என் பாட்டிக்கு ஹார்ட் அட்டாக் வந்துடிச்சி... அப்போதான் அவங்களுக்கு ஹார்ட்ல பிரச்சனை இருக்க விஷயம் தெரிய வந்தது... ஏற்கனவே தர்ஷினி எங்களை விட்டு போனதையே என்னால தாங்கிக்க முடியல...அந்த நேரத்துல என்னை கவனிக்கவே ஒருத்தர் தேவைப்பட்டாங்க... இதுல நான் எங்க பாட்டியை பாக்க... அதனால பாட்டியை தான் கவனிச்சிக்கறதா சொல்லி சித்தப்பா கூட்டிட்டு போய்ட்டார்... கொஞ்ச நாள் கழிச்சி நான் என்னோட ரூம்ல ஒரு பைலை தேடிகிட்டு இருந்த போது தர்ஷினி எழுதினதா சொல்லி ஹாஸ்பிடல்ல என்கிட்ட கொடுத்த அந்த கடிதம் எனக்கு கிடைச்சது... அப்போ அதை பாத்த போதுதான் எனக்கு சந்தேகம் வந்துச்சி"


"என்ன சந்தேகம்?”


"அந்த கடிதத்தை தர்ஷினி எழுதலையோன்னு?"


"ஏன் உனக்கு அப்படி ஒரு சந்தேகம் வந்துச்சி"


"ஏன்னா அந்த கடிதத்துல ஒரு பிழை கூட இல்ல... தர்ஷினிக்கு எப்போதுமே தமிழை பிழை இல்லாம எழுத வராது... " என்று அவன் சொன்னதும் மிருதுளாவிற்கு தர்ஷினி தன் டைரியின் முதல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்ததது நினைவிற்கு வந்தது.


"அப்புறம் என்ன பண்ண?"


"உடனடியா தர்ஷினி ரூம்க்கு போய் அவ டைரியை தேடினன்.. நான் கடிதத்துல இருக்க எழுத்தையும் டைரியில இருக்க எழுத்தையும் ஒப்பிட்டு பாக்க தான் அதை தேடி எடுத்தன்...ஆனா அதை படிச்சதுக்கு பிறகுதான் அவ மூணு மாசத்துக்கு மேல எப்படிப்பட்ட கொடுமையை அனுபவிச்சிருக்கான்றதை தெரிஞ்சிகிட்டன்... அப்போ நான் அனுபவிச்ச அந்த வலியை உன் அப்பாவுக்கும் கொடுக்க நெனச்சன்… அதான் திட்டம் போட்டு எல்லாம் பண்ணன்… சாரி மிது... அப்போ நான் இருந்த மனநிலையில நீ அவனோட பொண்ணா தான் என் கண்ணுக்கு தெரிஞ்ச "


"எனக்கு புரியுது" என்ற மிருதுளா "தேவ் நான் உன்கிட்ட ஒன்னு கேட்டா உண்மைய சொல்லுவியா? என்றாள்.


"கேளு மிது... இனி எப்போதும் நான் உன்கிட்ட பொய் சொல்ல மாட்டேன்"


“இல்ல… நான் அவரோட பொண்ணா இருந்தபோதும் இப்போ அமருக்காக என்ன ஏத்துக்கிட்டு என்னோட வாழறியே... இது உனக்கு கஷ்டமா இருக்கா தேவ்?"


அவளை முறைத்து பார்த்த தேவ் "என்னது அமருக்காக உன்னை ஏத்துக்கிட்டு வாழறனா? இப்போ நான் சொன்னதெல்லாம் மூணு வருஷத்துக்கு முன்ன எனக்கிருந்த மனநிலை தான்... ஆனா எப்போ உன்ன திரும்பவும் பார்த்தேனோ அப்போவே இனி உன்ன விடமுடியாதுன்னு எனக்கு புரிஞ்சிடிச்சி..." என்றான்.


"ஏன்?"


"மிது நான் சொல்ல போறதை நீ நம்புவியான்னு எனக்கு சத்தியமா தெரியல... ஆனா நீ எப்போ என் வாழ்க்கையில இருந்து போனியோ அப்போ இருந்துதான் நான் உன்ன அதிகமா நெனைக்க ஆரம்பிச்சன்... ஆனா தனசேகரனோட பொண்ணை நிச்சயம் என் வாழ்க்கைக்குள்ள அனுமதிக்க முடியாதுன்னு எனக்கு நானே சொல்லி என்னை கட்டுப்படுத்திகிட்டன்... “


"ஓஹ்" என்று மிருதுளா மெல்லிய குரலில் சொன்னாள்.


"ஆமா.. அமரை பத்தி தெரிஞ்சதும் மொதல்ல கோபம் வந்தாலும் அதுக்கு பிறகு சந்தோஷமா தான் இருந்திச்சி... ஆனா அதேசமயம் நீ உன் அப்பாகிட்ட போகாம என் திட்டத்தை எல்லாம் வீணாக்கிட்டியேன்னு உன்மேல ஆத்திரம் வந்துச்சி"


"நானே போனாலும் அவர் என்ன சேத்துக்கவும் மாட்டார்... எனக்காக வருத்தப்படவும் மாட்டார் தேவ்... அதான் நான் அவர் கிட்ட போகல"


"எனக்கு இப்போ எல்லா உண்மையும் தெரியும் கண்ணம்மா... அப்போ நான் இருந்த மனநிலையை தான் இப்போ உன்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கன்..."


"ஹ்ம்ம்"


"ஏற்கனவே உன்னால என்னோட பாதி திட்டத்தை கைவிட்டுட்டன்... இதுல நீ வேற இப்படி பண்ணதும் என் ஈகோ ஹர்ட் ஆகிடிச்சி... அதான் கோவத்துல என்ன என்னவோ பண்ணிட்டன்... ஆனா எப்போ என்னால நீ மனரீதியா பாதிக்க பட்டிருக்கேன்னு தெரிஞ்சிதோ அப்போவே இனி உன்ன தனியா விடக்கூடாதுன்னு முடிவு பண்ணி அமரை வச்சி மிரட்டி உன்ன என்னோட இங்க கூட்டிட்டு வந்தன்”


"ஓஹ்"


"ஆனா உன்ன இங்க கூட்டிட்டு வந்துட்டாலும் என் அம்முவை கொன்னவனோட பொண்ணோட எப்படி வாழ்றதுன்னு எனக்குள்ள ஒரு பெரிய போராட்டமே நடந்துகிட்டு இருந்திச்சி... அப்போதான் உனக்கும் உன் அப்பாவுக்கும் பெருசா ஓட்டுதல் இல்லன்ற விஷயம் எனக்கு தெரிய வந்துச்சி... நீயும் ஒருவகையில அவனால பாதிக்கப்பட்டிருக்கன்னு நான் விசாரிச்சு தெரிஞ்சிகிட்டன்... அதுக்கு பிறகு உன்ன நெருங்க எனக்கு எந்த தடையும் இல்லாததால உன்ன நெருங்கினன்"


"ஆனா நீ இதையெல்லாம் அப்போவே என்கிட்ட சொல்லி இருக்கலாமே... மூணு வருசத்துக்கு முன்ன நீ ஏன் சொல்லலன்னு என்னால புரிஞ்சிக்க முடியுது... ஆனா இப்போ ஏன் சொல்லல"


"ஏன்னா உண்மை தெரிஞ்சா நீ ரொம்ப வேதனைப்படுவ... அவன் உனக்கு நல்ல அப்பனா இல்லனாலும் நல்ல மனுஷனா நல்ல டாக்டரா இருக்கறத நெனச்சி நீ சந்தோஷமா இருக்க... அதை கெடுக்க வேணாம்னு நெனச்சன்..." என்று தேவ் சொன்னதும் மிருதுளா அவனை இறுக்கி அணைத்து கொண்டாள்.


"எனக்காகவா தேவ்" என்றவள் "ஆனா இவ்வளவு பெரிய அநியாயம் பண்ண அவருக்கும் அவருக்கு உறுதுணையா இருந்த அந்த ஹாஸ்பிடலை சேந்தவங்களுக்கும் எந்த தண்டனையும் கிடைக்கலையே?" என்று வருத்தத்துடன் சொன்னாள்.


"அப்படினு யார் சொன்னது? எப்போ எனக்கு உண்மை தெரிஞ்சிதோ அப்போவே மொத வேலையா பிளான் பண்ணி அந்த ஹாஸ்பிடலுக்கு சீல் வைக்கிற மாதிரி பண்ணிட்டன்"


"ஆனா இதுல முக்கிய குற்றவாளி என் அப்பாதான? அவருக்கு எந்த தண்டனையும் கிடைக்கலையே... அவர் ஜாலியா வெளிநாட்டுல இல்ல இருக்கார்"


தேவ் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.


சிறிது நேரம் கழித்து "விடுடா... அவர் பண்ண தப்புக்கு அந்த ஆண்டவன் நிச்சயம் அவருக்கு தண்டனை கொடுப்பான்" என்றான்.


"தேவ் நாலு வருஷத்துக்கு முன்ன நேற்றைய தேதியில நாளை ஹாஸ்பிடலுக்கு போறதா தர்ஷினி எழுதி இருந்தா? அப்போ இன்னைக்கு தான் அவளோட நினைவு நாளா?" என்று மிருதுளா தயக்கத்துடன் கேட்டாள்.


அவன் உணர்ச்சியற்ற முகத்துடன் அவளை பார்த்து தலையசைத்தான். ஆனால் அவன் எவ்வளவு முயன்ற போதும் அவன் கண்கள் அவனுடைய வேதனையை வெளிப்படுத்திவிட்டன...


மிருதுளாவால் அவன் வேதனைப்படுவதை தாங்கிகொள்ள முடியவில்லை.


அவனை முகத்தை தன் மார்போடு சேர்த்து அணைத்தவள் அவன் கைகளால் தன் வயிற்றை தடவியபடி "கவலைப்படாத தேவ்... என்னைக்கு உன் தர்ஷினி உன்னை விட்டு போனாளோ அன்னைக்கே உன்கிட்ட திரும்பி வந்துட்டா" என்றாள்.


அவள் சொன்னதை கேட்டு திகைப்புற்ற தேவ் ஆர்வத்துடன் அவளை பார்த்தான்.


அவனை பார்த்து வெட்கத்துடன் தலையசைத்தவள் "நெஜமா தான் தேவ்... காலைல தான் கன்பார்ம் ஆச்சு" என்றாள்.


அவளை இறுக்கி அணைத்தவன் "தேங்க்ஸ் மிது... தேங்க்யூ சோ மச்... நான் இப்போ எவ்ளோ சந்தோசமா இருக்கன் தெரியுமா… என் தர்ஷினி என்கிட்டயே திரும்பி வர போறதை நினைக்கும் போது நான் அப்படியே சந்தோஷத்துல அந்த வானத்துல மிதக்குறன்... நீ சொன்னது மட்டும் நடந்துட்டா போதும்... இந்த உலகத்துலயே சந்தோசமான மனுஷன் நானாதான் இருக்கும் " என்றான்.


அத்தியாயம் - 37 :


எட்டு மாதங்கள் கழித்து...


தேவ் தன்னுடைய அலுவலக அறையில் இருந்த போது அவனுக்கு போன் வந்தது... போனை எடுத்து அதில் அழைத்தவரின் பெயரை பார்த்தவனின் இதழ்களில் புன்னகை தோன்றியது. அழைத்தது வேறு யாருமல்ல மிருதுளா தான்...


போனை அட்டெண்ட் செய்து காதில் வைத்தவன் "சொல்லுடி என் பொண்டாட்டி" என்றான்.


"தேவ் எனக்கு பிரசவ வலி வந்துடுச்சு… ரொம்ப வலிக்குது… எனக்கு பயமா இருக்கு… கொஞ்சம் வரீயா…” என்று வலியில் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க பேசியவளின் குரலை கேட்டவன் “இன்னும் கொஞ்ச நேரத்துல நான் வந்துடறன்... பயப்படாத சரியா… தைரியமா இருக்கணும்" என்று சொன்னவன் வேகமாக தன் அறையை விட்டு வெளியேறினான்.


மிருதுளாவிற்கு அடுத்த வாரம் தான் குழந்தை பிறக்குமென்று டாக்டர்கள் தேதி குறிப்பிட்டிருந்தார்கள்... ஆனால் ஒரு வாரத்திற்கு முன்பே அவளுக்கு எப்படி வலி வந்ததென்று அவனுக்கு புரியவில்லை. இப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும் என்று தெரியாமல் லட்சுமியின் அண்ணன் நேற்று காலை இறந்த செய்து கிடைத்ததும் அவர்கள் இருவருக்கும் விடுமுறை கொடுத்து அனுப்பி வைத்துவிட்டான்.


மிருதுளா வீட்டில் தனியாக இருப்பதை உணர்ந்தவன் புயல் வேகத்தில் காரை செலுத்தினான்.


அடுத்த பத்து நிமிடத்தில் வீட்டிற்கு வந்தவன் பயத்தில் முகமெல்லாம் வெளுத்து போய் வியர்வையில் குளித்திருந்தவளை பார்த்து பயந்துவிட்டான்.


'அய்யயோ என்ன இவ இப்படி இருக்கா...' என்று அவன் நினைக்கும் போதே அவனை பார்த்துவிட்ட மிருதுளா " தேவ் என்னால முடியல... எனக்கு ரொம்ப வலிக்குது... ப்ளீஸ் சீக்கிரம் என்ன ஹாஸ்பிடல் கூட்டிட்டு போ... எனக்கு ரொம்ப பயமாயிருக்கு..." என்று அழுதபடி சொன்னாள்.


அவள் குரலில் தன்னிலைக்கு திரும்பியவன், "என்ன மிது ரொம்ப வலிக்குதா... இதோ இப்போ ஹாஸ்பிடல்க்கு போய்டலாம்..." என்று சொன்னவன் சோபாவில் அமர்ந்திருந்தவளை எழுப்பி தன் தோளின் மீது சாய்த்துக்கொண்டு அவளை மெதுவாக நடத்தி அழைத்து வந்தவன் தன் காரில் அவளை அமர வைத்துவிட்டு காரை ஹாஸ்பிடலை நோக்கி செலுத்தினான்.


விட்டு விட்டு வந்த வலி நேரம் செல்ல செல்ல அடிக்கடி வந்தது…


"ப்ளீஸ் தேவ் சீக்கிரம் போ... என்னால இந்த வலிய தாங்க முடியல..." என்று அழுகையுடன் சொன்னவளை பார்த்த தேவ்விற்கு வேதனையாக இருந்தது.


"இதோ மிது இன்னும் கொஞ்சம் தூரம் தான்... சீக்கிரமே போய்டலாம்..."


"இந்த பிரசவத்துல எனக்கு ஏதாவது ஆயிடுமோன்னு ரொம்ப பயமா இருக்கு தேவ்.."


"பயப்படாத மிது... உனக்கு எதுவும் ஆகாது... நான் தான் உன்கூட இருக்கன்ல... அப்புறம் எதுக்கு பயப்படற..." என்று அவளிடம் சொன்னவன் காரை இன்னும் வேகமாக செலுத்தினான்.


அடுத்த சிறிது நேரத்தில் ஹாஸ்பிடலை அடைந்தவன் பணத்தை தண்ணீராக வாரி இறைத்து மீராவிற்காக அந்த ஹாஸ்பிடலில் இருந்த விஐபி அறை, பெஸ்ட் கைனகாலஜிஸ்ட், இரண்டு நர்ஸ், சைல்ட் ஸ்பெஷலிஸ்ட் என்று அனைவரையும் ஏற்பாடு செய்துவிட்டு ஆபரேஷன் அறைக்கு வெளியே பதற்றத்துடன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்.


சிறிது நேரத்தில் குழந்தையின் அழுகை சப்தம் கேட்டது. அதன் பிறகே அவனுக்கு நிம்மதியாக இருந்தது.


அடுத்த சில நிமிடங்களில் ஒரு துணியில் இளஞ்சிவப்பு நிற ரோஜா போல இருந்த குழந்தையை கொண்டு வந்து அவன் முன்பு காட்டிய நர்ஸ் "சார் உங்களுக்கு பெண்குழந்தை பிறந்திருக்கு" என்றார்.அதை கேட்டவனின் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தன் தங்கையே தனக்கு பெண்ணாக பிறந்திருப்பதாக நினைத்தான்.


முகம் முழுக்க புன்னகையுடன் தன் குழந்தையை வாங்கியவன் "என் தர்ஷினி குட்டியா நீங்க?" என்று குழந்தையிடம் கேட்டான்.


அதற்கு என்ன புரிந்ததோ அவனை பார்த்து தன் பொக்கைவாயை காட்டி புன்னகைத்தது.


"ஆமானு சொல்றிங்களாடி... என் அம்முவை தான் நான் பாதுகாக்க தவறிட்டன்... ஆனா உன் விசயத்துல அப்பா அப்படி இருக்க மாட்டன்... உன்ன என் கண்ணுக்குள்ள வச்சி பாத்துப்பேன் சரியா?" என்றவனுக்கு அப்போதுதான் மிருதுளாவின் நினைவு வந்தது.


உடனடியாக நர்ஸை நிமிர்ந்து பார்த்தவன் "நர்ஸ் மிது எப்படி இருக்கா?" என்று கேட்டான்.


"அவங்க நல்லா இருக்காங்க சார்... இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்களை ரூம்க்கு மாத்திடுவோம்... இப்போ கொழந்தையை கொடுங்க... சில பேசிக் டெஸ்ட் பண்ணனும்" என்றதும் அவன் அவரிடம் குழந்தையை கொடுத்தான்.


சிறிது நேரம் கழித்து


தன்னுடைய அறையில் படுத்திருந்த மிருதுளாவிற்கு உடம்பெல்லாம் வலித்தது... பேச கூட அவளிடம் இப்போது சக்தியில்லை...


நர்ஸ் கையில் இருந்த தன்னுடைய மகளை பார்த்தவள் உலர்ந்திருந்த உதட்டை நாக்கால் ஈரப்படுத்திக்கொண்டு "நர்ஸ் என் பொண்ணை என்கிட்ட கொஞ்சம் காட்டுங்களேன்..." என்று மெல்லிய குரலில் கேட்டாள்.


புன்னகையுடன் அவளை பார்த்த நர்ஸ் குழந்தையை கவனமாக அவள் அருகில் படுக்க வைத்தார்.


அப்போது கண் விழித்த குழந்தை தன் கையை இறுக்கி வைத்தபடி சீலிங்கில் எரிந்து கொண்டிருந்த விளக்கை பார்த்துவிட்டு கண்களை சிமிட்டியது... தன் மகள் கண் சிமிட்டும் அழகை காண கோடி கண்கள் இருந்தால் கூட போதாதென்று மிருதுளாவிற்கு தோன்றியது.


தன் குழந்தையின் அழகை ரசித்து கொண்டிருந்த மிருதுளா தேவ் உள்ளே நுழைந்ததை கவனிக்கவில்லை.


நர்ஸை வெளியே செல்லுமாறு சைகை காட்டியவன் பூனை போல அவள் அருகே சப்தமெழுப்பாமல் வந்து நின்று தன்னவளின் அழகை ரசிக்க தொடங்கினான்.


சிறிது நேரம் கழித்தே தேவ்வின் இருப்பை உணர்ந்த மிருதுளா "தேவ் நீ எப்போ வந்த?" என்று கேட்டாள்.


"நான் எப்போவோ வந்துட்டன்... மேடம் தான் பொண்ணு வந்ததும் என்னை மறந்துடீங்க" என்று சொன்னாலும் அவன் குரலில் உற்சாகம் பொங்கி வழிந்தது.


அவன் விளையாட்டிற்காக தான் இப்படி பேசுகிறான் என்பதை புரிந்து கொண்ட மிருதுளா அவன் முகத்தை காதலுடன் பார்த்தவள் "இப்போ உனக்கு சந்தோசமா தேவ்?" என்று கேட்டாள்.


"இப்போதைக்கு இந்த உலகத்துலேயே சந்தோஷமான மனுஷன்னா அது நான்தான் மிது... ரொம்ப தேங்க்ஸ்டி... நான் உனக்கு பண்ணதை எல்லாம் மறந்து மன்னிச்சி இன்னைக்கு நான் தொலைச்ச என் பொக்கிஷத்தை எனக்கு திருப்பி கொடுத்திருக்க..."


"நடந்து முடிஞ்சதை பத்தி பேச கூடாதுன்னு நாம ஏற்கனவே டீல் போட்டிருக்கோம்... சார் அத மறந்துடீங்க போல..."


"ஆனா மிது..."


"ஷ்... மூச்... இனி முடிஞ்ச கதைய திரும்ப ஆரம்பிக்காத... அப்புறம் நம்ம கதையை படிச்சிக்கிட்டிருக்கவங்க கடுப்பாகிடுவாங்க"


"ஓஹ் அப்படிங்களா... சரிங்க மேடம்" என்று தேவ் சொல்லி கொண்டிருந்த போது நர்ஸ் அந்த அறைக்குள் வந்தார்.


"என்ன விஷயம் நர்ஸ்?" என்று தேவ் கேட்டான்.


"சார் பர்த் சர்டிபிகேட்டுல உங்க பொண்ணோட பெயர் போடணும்... என்ன பெயர் வச்சிருக்கீங்கன்னு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்"


"தர்ஷினி தேவ்னு போடுங்க நர்ஸ்" என்று மிருதுளா சொன்னாள்.


"ஓகே மேடம்" என்ற நர்ஸ் அறையை விட்டு வெளியேற தொடங்கினார்.


"ஒரு நிமிஷம் நர்ஸ்" என்று தேவ் அவரை தடுத்து நிறுத்தினான்.


அவனை திரும்பி பார்த்த நர்ஸ் "என்ன விஷயம் சார்?" என்றார்.


"திவ்ய தர்ஷினி தேவ்னு என் பொண்ணோட பெயரை போடுங்க"


"ஓஹ்" என்ற நர்ஸ் மிருதுளாவின் சம்மதத்திற்காக அவளை பார்த்தார்.ஆனால் மிருதுளா அவரை கவனிக்காமல் தேவ்வை ஆச்சர்யத்துடன் பார்த்து கொண்டிருந்தாள்.


தன் தோள்களை குலுக்கிய நர்ஸ் "ஓகே சார்" என்றவர் அந்த அறையை விட்டு வெளியேறினார்.


அவர் சென்றதும் கண் இமைக்காமல் தன்னை பார்த்து கொண்டிருந்த மிருதுளாவை பார்த்து கண்ணடித்த தேவ் "எப்புடி?" என்று கேட்டான்.


"தேவ்" என்ற வார்த்தையை தவிர வேறு எந்த வார்த்தையும் மிருதுளாவின் வாயில் இருந்து வரவில்லை.


அவள் திகைப்பில் இருந்தாள். ஏனென்றால் திவ்யகமலம் அவள் அம்மாவின் பெயர். அதையும் இணைத்து தான் தேவ் தன் மகளுக்கு பெயர் வைத்திருந்தான்.


"என்ன மிது... சந்தோஷத்துல பேச்சு வரலையா?நான் எப்படி நம்ம பொண்ணை என் தங்கச்சியே நமக்கு பிறந்து வந்திருக்கிறதா நினைக்கிறேனோ அப்படிதான நீயும் உன் அம்மாவே உனக்கு பொண்ணா பிறந்திருக்கறதா நினைக்கிற... அதான் ரெண்டு பேரோட பேரையும் சேர்த்து நம்ம பொண்ணுக்கு வச்சன்"


"இந்த விஷயம் எப்படி உனக்கு தெரியும்?"


"உன்னோட மூச்சுக்காத்தை வச்சே நீ என்ன நினைக்கிறன்னு என்னால சொல்ல முடியும்டி என் பொண்டாட்டி" என்றவன் அவள் நெற்றியின் மீது தன் நெற்றியை முட்டினான்.


அப்போது அவர்கள் மகள் தன் இருப்பை உணர்த்த அழத் தொடங்கினாள்.


"அச்சோ அம்மாவை கொஞ்சினதும் பொண்ணுக்கு கோபம் வந்துடுச்சா... இனி அப்பா உன்னை தவிர வேற யாரையும் கொஞ்ச மாட்டேன்டா" என்றபடி தேவ் தன் மகளை தூக்கி சமாதானப்படுத்தினான்.


அவனை செல்லமாக முறைத்த மிருதுளா " ஓஹ் அப்போ சார் இனி என்ன கொஞ்ச மாட்டிங்க அப்படித்தான?" என்று கேட்டாள்.


"நான் சொன்னது பகல்ல மட்டும்டி... நைட் உன்ன தவிர நான் வேற யாரையும் கொஞ்ச மாட்டேன் போதுமா" என்றவன் அவளை பார்த்து கண்ணடித்தான்.


"சீ போ தேவ்" என்ற மிருதுளாவின் முகம் அந்தி வானமாய் சிவந்தது.


அதை கண்ட தேவ் வாய்விட்டு சிரித்தான். அவன் சிரிப்பை கண்ட மிருதுளாவின் முகத்திலும் புன்னகை தோன்றியது.


இனி அவர்கள் வாழ்க்கை முழுக்க வசந்தம் மட்டுமே வீச வேண்டும் என்று வாழ்த்தி நாமும் விடைபெறுவோம்.


சுபம்.
 
Status
Not open for further replies.
Top