அத்தியாயம் - 13 :
இன்று காலையிலிருந்து நடந்ததையெல்லாம் யோசித்தபடி மாணிக்கம் திண்ணையில் அமர்ந்திருந்தான். தாமரையும் விசாலாட்சியும் எதுவுமே நடக்காதது போல மதியத்திற்கு சமைக்க தொடங்கிவிட்டனர்.
இவ்வளவிற்கு பிறகும் தாமரை இயல்பாக இருப்பதை பார்க்க பார்க்க அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
'இதுவே வேற ஒரு பொண்ணுக்கு இந்த மாதிரியெல்லாம் நடந்திருந்தா அவ அதுல இருந்து வெளிவர எவ்ளோ நாள் ஆகியிருக்குமோ? ஆனா தாமரை இவ்ளோ சீக்கிரம் சரியாகிட்டா... எது எப்படியோ இதுவும் நல்லதுக்கு தான்' என்று நினைத்தவனின் மனதில் திடீரென்று அந்த கேள்வி தோன்றியது.
'நாங்க ரெண்டு பேரும் கட்டிப் பிடிச்சிக்கிட்டு நிக்கும் போது எவன் போட்டோ எடுத்திருப்பான்? அது எப்படி முருகன் கைக்கு போயிருக்கும்? அந்த அளவுக்கா இந்த வீடு பாதுகாப்பில்லாம இருக்கு?' என்று யோசித்தபடி அவன் வீட்டை சுற்றி பார்வையை செலுத்தினான்.
அவர்கள் வீடு ஐந்து சென்ட் நிலத்தின் நடுவே இருந்தது. வீட்டிற்கு முன்புறமும் பின்புறமும் காலியாக இருந்தது. அவர்கள் வீட்டை சுற்றி எங்கு நின்று அவன் படம் பிடித்தான் என்பதை கணிப்பது மிகவும் கடினம். அதனால் எவன் அந்த புகைப்படத்தை எடுத்தான் என்பதை கண்டுபிடிக்கும் யோசனையை விட்டுவிட்டான் மாணிக்கம்.
'இந்த வீட்டை சுத்தி முதல்ல ஒரு காம்பவுண்ட் கட்டணும். அப்போதான் தாமரைக்கு பாதுகாப்பு' என்று யோசித்தவனுக்கு அப்போதுதான் இந்த வீட்டின் உரிமையாளர் அதை விற்க போவதாக சொன்னது நினைவிற்கு வந்தது.
'அடச்சே... இதை மறந்துட்டோமே. நாம இங்க இருக்க போறதே இன்னும் ஒரு மாசமோ, ரெண்டு மாசமோ. இப்போ போய் காம்பவுண்ட் கட்டணும்னு யோசிக்கிறோமே... ஆனா அடுத்து எந்த வீட்டுக்கு குடி போனாலும் பாதுகாப்பான இடத்துக்கு தான் போகணும்'
அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போது அவன் வீட்டின் முன்பு யாரோ பைக்கை நிறுத்தும் சத்தம் கேட்டது. அந்த சத்தத்தில் சிந்தனை கலைந்தவன் பார்வையில் அவனை நோக்கி வந்து கொண்டிருந்த முருகனும் விசாலாட்சியின் கணவரும் விழுந்தனர்.
அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவனருகே வந்த முருகன் "என்னடா... கோவில்ல என்னென்னவோ பேசிக்கிறாங்க?" என்றான்.
அவன் எதுவும் சொல்லாமல் அமைதியாக தரையை பார்த்தான்.
"மாணிக்கம் என்னாச்சுப்பா?" என்று அவன் சித்தப்பா பதற்றத்துடன் கேட்டார்.
பெருமூச்சை வெளியேற்றியவன் நடந்ததை சொன்னான்.
அவன் சொன்னதை கேட்டு கோபத்தில் பல்லை கடித்த ஏழுமலை "அந்த நாய் அப்படியா பண்ணான்? பண்ற தப்பையெல்லாம் அவன் பண்ணிட்டு பழியை உங்க மேல போட்டுட்டானா?" என்றான்.
நெற்றி சுருங்க அவனை பார்த்த மாணிக்கம் "என்னடா சொல்ற?" என்றான்.
"ஆமா மச்சான். அவன் எவளையோ லவ் பண்ணி இருக்கான். அது தெரிஞ்சதும் அவன் அம்மா அவனை உருட்டி மிரட்டி கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சிருக்கு. அவனும் அவங்ககிட்ட ஒத்துக்கிற மாதிரி ஒத்துக்கிட்டு இன்னைக்கு காலையில அவ லவ்வரை கூட்டிக்கிட்டு ஊரை விட்டு ஓடிட்டான். அது தெரிஞ்சதும் அவன் அம்மாக்காரி நெஞ்சை பிடிச்சிக்கிட்டு சரிஞ்சிட்டா. அவளை ஹாஸ்ப்பிட்டல்ல சேர்த்திருக்கு. அதான் யாரும் போனை எடுக்கல" என்று ஆதங்கத்துடன் சொன்னான்.
"அவன் சொல்றதெல்லாம் உண்மையா சித்தப்பா?"
அவர் ஆமென்று தலையசைத்தார்.
"ஆமா மாணிக்கம். எனக்கு இந்த விஷயமெல்லாம் தெரியாது. நல்ல குடும்பம், நல்ல பையன். தாமரையை அங்க கொடுத்தா நல்லா இருப்பான்னு நெனச்சி தான் நான் இந்த சம்பந்தத்தை சொன்னேன். ஆனா அந்த பாவிப்பய இப்படி பண்ணுவான்னு நான் நெனச்சி கூட பாக்கல" என்று சங்கடத்துடன் சொன்னார்.
சிறிது நேரம் எதையோ யோசித்தவன் "எல்லாம் சரி, ஆனா ஓடிப்போறவன் எதுக்காக எங்க மேல பழியை போட்டுட்டு போனான்?" என்று முணுமுணுத்தான்.
"ஒருவேளை நம்ம ஊர்ல அவனை நல்லவனா காட்டிக்க நினைச்சானோ என்னவோ?" என்றான் முருகன்.
"அவன் எதுக்காக வேணும்னாலும் இப்படி பண்ணியிருக்கட்டும். ஆனா அவன் மட்டும் என் கையில சிக்கினான் அன்னைக்கு தான் அவன் இந்த பூமியில உயிரோட இருக்க கடைசி நாள்" என்று கோபத்தில் கண்கள் சிவக்க சொன்னவனை பார்த்து ஏழுமலைக்கே பயமாக இருந்தது.
"ஐய்யயோ... இவ்ளோ கோவம் வேண்டாம் மச்சான். அவன் எப்படியோ போய் தொலையட்டும். நீ உன் வாழ்க்கையை பாரு. யோசிக்காம எதையாவது செஞ்சி வச்சிடாத. அப்புறம் தாமரை வாழ்க்கை என்னாகிறது?"
அவனை சமாதானப்படுத்தினான் ஏழுமலை. மாணிக்கம் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.
அவர்கள் பேச்சு சத்தம் கேட்டு வாசலுக்கு வந்த விசாலாட்சி தன் கணவனை பார்த்ததும் "போனா சீக்கிரம் வரமாட்டீங்களா? போனா போன இடம்... வந்தா வந்த இடம் தான் உங்களுக்கு... நீங்க போய்ட்டு வரதுக்குள்ள இங்க என்னென்ன கூத்து நடந்துடிச்சி தெரியுமா?" என்றார்.
"தெரியும் ஆச்சி... கோவிலுக்கு போய்ட்டு தான் இங்க வரோம். வந்ததும் என்ன நடந்துச்சுன்னு மாணிக்கம் சொன்னான்"
"அதுசரி அந்த பையன் ஏன் அப்படி பண்ணானாம்? ஒருவேளை அவனுக்கு இவங்க மேல சந்தேகம் இருந்திருந்தா அதை நம்மகிட்ட முன்னவே சொல்லியிருக்கலாம் இல்லையா? இப்படி ஊரை கூட்டி அசிங்கப்படுத்திட்டானே"
ஒன்றுமறியாதவர் போல அவர் பேசியதை நம்பி அவர் கணவரும் நடந்ததை சங்கடத்துடன் சொன்னார்.
"ஓஹ்... அவன் சந்தோஷமா வாழ நம்மவீட்டு பொண்ணு வாழ்க்கையை கெடுக்க நினைச்சானா? ஆனா தெய்வம்னு ஒன்னு இருக்குங்க. அது இருக்கும் போது மனுஷன் நினைச்சதெல்லாம் நடக்குமா என்ன? அவன் என்ன நினைச்சு இதை பண்ணானோ... ஆனா தாமரைக்கு அவளை தங்க தட்டுல வச்சு தாங்கற புருஷன் கிடைச்சிருக்கான்" என்றவர் பின்னர் "சரி நீங்க ரெண்டு பேரும் சாப்டீங்களா?" என்றார்.
"போன இடத்துல தெரிய வந்த செய்தியில பசியே மரத்துப் போச்சு. இதுல எங்க சாப்பிட?"
"மணி ரெண்டாகப் போகுது. இன்னுமா சாப்பிடலை ரெண்டு பேரும். சரி உள்ள வாங்க. சாப்பாடு தயாரா இருக்கு. வந்து சாப்பிடுங்க" என்றதும் அவர்கள் இருவரும் உள்ளே சென்றனர்.
மாணிக்கம் மட்டும் அப்படியே அமர்ந்திருந்தான்.
"மாணிக்கம் உனக்கு வேற தனியா சொல்லணுமா? வாப்பா... வந்து சாப்பிடு"
"எனக்கு பசியில்லை சின்னம்மா... நீ போ. போய் அவங்களை பாரு"
"இங்க பாரு இப்போ மட்டும் நீ வரல, தாமரை வந்து காலையில பேசின மாதிரி ஏதாவது பேசி வைப்பா. உனக்கு அதுதான் வேணும்னா இப்படியே இரு" என்றதும் அவரை அதிர்ந்து போய் பார்த்தவன் அடுத்த கணம் எழுந்தான்.
மீண்டும் அப்படிப்பட்ட வார்த்தைகளை கேட்க அவன் விரும்பவில்லை.
"அட... பொண்டாட்டி பேரை கேட்டதும் இவ்வளவு நேரம் இல்லாத பசி வந்துடுச்சு போல என் பையனுக்கு" என்று நக்கலடித்தவரை சலிப்புடன் பார்த்தவன் "நீ வேற என் நிலைமை புரியாம கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்க சின்னம்மா. எங்க அவ திரும்ப ஏடாகூடமா எதையாவது பேசி வைப்பாளோன்ற பயத்துல தான் வரேன்" என்றான்.
அவனை கனிவுடன் பார்த்தவர் "இப்போ என்ன நடந்து போச்சுன்னு நீ இப்படி கப்பல் கவிழ்ந்த மாதிரி இருக்க?" என்றார்.
"எங்க மானம், மரியாதை முக்கியமா தாமரையோட மானம், மரியாதை போயிடிச்சே. கப்பல் கவிழறதை விட இது பெருசில்லையா?"
"இங்க பாரு இந்த உலகத்துல அடுத்தவனை குத்தம் சொல்ற அளவுக்கு ஒருத்தனுக்கும் தகுதியில்லை. தன் முதுகுல இருக்க அழுக்கை பார்க்காம அடுத்தவன் முதுகுல இருக்க அழுக்கை பத்தி பேசறவனை பத்தி, அவன் சொன்னதை பத்தி யோசிக்கறதை விட்டுட்டு உன் வாழ்க்கையை பத்தி யோசி. தாமரையை எப்படி நல்லா வச்சிக்கணும்னு யோசி. அதான் உனக்கு நல்லது. புரிஞ்சுதா?"
அவர் சொல்வதெல்லாம் அவனுக்கே தெரியும் தான். ஆனால் அதை செயல்படுத்தத் தான் முடியவில்லை
பெருமூச்சை வெளியேற்றியவன் எதுவும் பேசாமல் அவரை தாண்டி உள்ளே சென்றான். அவரும் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. இன்று நடந்ததை ஜீரணிக்க அவனுக்கு சற்றே காலமெடுக்கும் என்று புரியாதவரா அவர்?
மூவரும் அமர்ந்ததும் "தாமரை எல்லாத்தையும் கொண்டு வாம்மா" என்று குரல் கொடுத்தார் விசாலாட்சி.
தாமரை அனைத்து உணவு பாத்திரங்களையும் கொண்டு வந்து வைத்தாள். பாத்திரங்களின் எண்ணிக்கையை பார்க்கும் போதே விருந்துக்கு தயார் செய்வது போல சமைத்திருப்பது புரிந்தது.
"எதுக்காக இப்போ இவ்ளோ சமைச்சிருக்க சின்னம்மா? சிம்பிளா எதையாவது செஞ்சிருக்க கூடாதா?" என்றான் மாணிக்கம்.
"புதுசா கல்யாணமானவங்களுக்கு முத முதல்ல ஆக்கிப் போடும் போது இப்படித்தான் வடை, பாயசத்தோட விருந்து சமைச்சு போடணும்டா. உனக்கு இதைப் பத்தியெல்லாம் ஒன்னும் தெரியாது. வாயை மூடிக்கிட்டு போட்டதை சாப்பிடு" என்று அதட்டியவர் தாமரையிடம் "நீ போய் அவன் பக்கத்துல உட்காரு தாமரை. நான் எல்லாருக்கும் பரிமாறறேன்" என்றார்.
அவள் அடக்கமான பெண் போல அவர் சொன்னபடி அவனருகே சென்று அமர்ந்தாள்.
'இவளை யாரு இவ்ளோ கிட்ட உட்கார சொன்னா? கொஞ்சம் தள்ளி உட்காந்திருக்கலாம் இல்ல'
லேசாக அசைந்தாலே முட்டிகள் உரசிக் கொள்ளும் அளவிற்கு நெருக்கமாக அமர்ந்தவளை பார்த்து பல்லைக் கடித்தான் அவன். அவள் வயதுக்கு வந்த பிறகு இவ்வளவு நெருக்கமாக அவனருகே அமர்ந்ததில்லை. பெண் அவளே எந்தவித சங்கடமுமின்றி அமர அவன்தான் சங்கடத்தில் நெளிந்தான்.
அவனின் சங்கடம் புரிந்தாலும் தாமரை நகர்ந்து அமரவில்லை.
'ஆமா... பொண்ணுங்க வாசனையே படாத விசுவாமித்திரர் இவர். கண்டவ கூட படுக்கும் போது வராத சங்கடம் என் பக்கத்துல உட்காரும் போது வருதாமா?' என்று உள்ளுக்குள் நக்கலடித்தவள் விசாலாட்சி பரிமாறியதை சாப்பிட ஆரம்பித்தாள்.
அவளின் நெருக்கத்தில் அவன்தான் சாப்பிட முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தான்.
பெயருக்கு சாப்பிட்டவன் சிறிது நேரத்தில் முதல் ஆளாக எழுந்து கொண்டான்.
"அடேய் இப்போ எதுக்காக எழுந்த? தாமரை சாப்பிட்டுக்கிட்டு இருக்கா இல்ல. அவ சாப்பிடற வரைக்கும் கூட உட்காரணும்னு கூடவா தெரியாது?" என்று கடிந்து கொண்டார் விசாலாட்சி.
"நம்ம வீடு தானேன்னு எழுந்துட்டேன் சின்னம்மா"
"நம்ம வீடா இருந்தா மட்டும்..."
அவர் பேச்சில் இடைபுகுந்த தாமரை "விடுங்க ஆயா... இதையெல்லாம் பெருசு பண்ணாதீங்க" என்றாள்.
"சரிம்மா" என்றவர் அவனை முறைத்தபடி "அதான் அவளே சொல்லிட்டா இல்ல. போ" என்றார்.
விட்டால் போதும் என்று விழுந்தடித்துக் கொண்டு பின்பக்கம் சென்ற மாணிக்கம் கைகளை கழுவிவிட்டு பாக்கெட்டில் இருந்து சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான்.
'எப்படி அவளால மட்டும் ஒன்னுமே நடக்காத மாதிரி இருக்க முடியுது? நேத்து நைட்டு வரைக்கும் அவனை தான் கட்டிக்க போறோம்ன்ற நினைப்புல இருந்தா. என்னென்னவோ நடந்து இன்னைக்கு நான் அவ கழுத்துல தாலி கட்ற மாதிரி ஆகிடுச்சு. இதுதான் விதின்னு அவ ஏத்துக்கிட்டதா இருந்தாலும் அதுக்குள்ள அவனை எப்படி மறக்க முடியும்? கொஞ்ச நாளாவது ஆகாதா?'
சிகரெட் பிடித்தபடி யோசித்துக் கொண்டிருந்தவனின் தோளில் தட்டிய ஏழுமலை "அடேய் இப்போ எதுக்காக வீட்டுலயே தம் அடிச்சிக்கிட்டு இருக்க? அங்க பாரு தாமரை உன்னை கண்ணாலேயே எரிச்சிக்கிட்டு இருக்கறதை" என்றதும் மாணிக்கம் திரும்பி பார்த்தான்.
அங்கே பின்கட்டு வாசலில் நின்றபடி தாமரை நிஜமாகவே அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.
அவளை பார்த்ததும் சட்டென்று கையில் இருந்த சிகரெட்டை தூர வீசினான் அவன். அடுத்த கணம் அவனை முறைத்தபடியே உள்ளே சென்றுவிட்டாள் அவள்.
"பொண்டாட்டி முறைச்சுப் பார்த்த அடுத்த செகண்ட் சிகரெட்டை தூக்கி போட்டுட்ட... பரவாயில்லடா... குடும்பம் நடத்தறதுக்கான எல்லா தகுதியும் உன்கிட்ட வந்துடுச்சு போல..." என்று கிண்டலடித்தான் ஏழுமலை.
"நீ வேற ஏன்டா... நான் சிகரெட் பிடிக்கிறது வீட்ல இருக்கவங்களுக்கு தெரிஞ்சாலும் வீட்ல அடிக்க மாட்டேன். இன்னைக்கு ஏதோ நினைப்புல இங்கேயே தம் அடிச்சிட்டேன். அதான் அவ பாத்ததும் தூக்கி போட்டேன்"
ஏழுமலை எதுவும் சொல்லாமல் உதட்டை மடித்து ஒரு மார்க்கமாக சிரித்தான். அவன் சிரிப்பே மாணிக்கம் சொன்னதை அவன் நம்பவில்லை என்றது.
அவன் தோளில் ஒரு அடிப்போட்ட மாணிக்கம் "இப்படியெல்லாம் சிரிச்ச இருக்க கடுப்புக்கு கொன்னே போட்டுடுவேன். வா உள்ள போகலாம்" என்றவன் ஏழுமலையுடன் உள்ளே சென்றான்.
அங்கே விசாலாட்சி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அவனை பார்த்ததும் சாப்பிட்டபடியே "மாணிக்கம் சாப்பிட்டு முடிச்சதும் நானும் உன் சித்தப்பாவும் ஊருக்கு கிளம்பறோம்" என்றார்.
"இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டு போலாம் இல்லையா சின்னம்மா?"
"நான் இங்க வந்து ஒரு மாசத்துக்கும் மேல ஆகிடுச்சு மாணிக்கம். தாமரைக்கு ஒரு பெண் துணை இருந்தா நல்லதுன்னு நீ கேட்டுக்கிட்டதால தான் இவ்ளோ நாள் இங்கே இருந்தேன். இனி அதுக்கு அவசியமில்லையே. இனி நீங்க புருஷன், பொண்டாட்டி. நீங்க ஒன்னா இருந்தா யார் என்ன சொல்ல முடியும்?"
"அட்லீஸ்ட் ஒரு ரெண்டு நாள் கழிச்சாவது போயேன்" என்றவனை முறைத்தவர் "வயசாயிருக்கே தவிர உனக்கு கொஞ்சம் கூட புத்தியே இல்லடா. சின்னம்மா எதுக்காக சொல்றேன்னு கூட புரிஞ்சிக்க மாட்ற. இங்க இருக்கறதே இந்த ஒத்தை வராண்டா தான். நீங்க புதுசா கல்யாணமானவங்க. உங்களோட நான் எப்படி இங்க தங்க முடியும்?" என்றார்.
அவர் சொன்னதை கேட்டவன் திகைப்பூண்டை மிதித்தவன் போல திகைத்தான். அவன் பார்வை அவனையறியாமல் தாமரை மீது விழுந்தது.