இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

திலதர்ப்பணபுரிசெதலபதி - செதலபதி

Janani Naveen

Administrator

செதலபதி / திலதர்ப்பணபுரிசெதலபதி / திலதர்ப்பணபுரி​

திலதைப்பதி என்பதே மருவி செதலபதி என்று ஆயிற்று. இக்கோவில் திருவாருர் மாவட்டத்தில் மாயவரம் திருவாரூர் தடத்தில் பூந்தோட்டத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. நான் பூந்தோட்டம் செல்கையில் அங்கு உள்ள அர்ச்சகர் சொல்லக் கேள்விப்பட்டு சென்றேன்…. ப்ரமித்தேன்.​

திலதைப்பதி என்பதே மருவி செதலபதி என்று ஆயிற்று. இக்கோவில் திருவாருர் மாவட்டத்தில் மாயவரம் திருவாரூர் தடத்தில் பூந்தோட்டத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. நான் பூந்தோட்டம் செல்கையில் அங்கு உள்ள அர்ச்சகர் சொல்லக் கேள்விப்பட்டு சென்றேன்…. ப்ரமித்தேன்.​

மிகவும் பழமையான கோவில். சோழர்களால் கற்றளியாக ஆக்கப்பட்டது. காவிரியாற்றின் 58வது தென்கரைத் தலமான இது , அரிசிலாற்றின் கரையில் உள்ளது. தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் 175வது தலம். முக்தி தரும் தலங்களான காசி, ராமேஸ்வரம், கயா, த்ரிவேணி சங்கமம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடுடன் திலதர்ப்பணபுரி ஒன்றாக விளங்குகிறது. ராமர் ஜடாயுவிற்கு ஈமக்கடன் இங்குதான் செய்தார். மூர்த்தி முக்தீஸ்வரர் ஸ்வம்பு மூர்த்தி, அம்பாள் பொற்கொடிநாயகி. தலவிருட்சம் மந்தாரை, தீர்த்தம் சூரிய புஷ்கரிணி, சந்திர தீர்த்தம், அரிசிலாறு. [/இங்கு மிகவும் விஷேஷமாக விளங்குவது நரமுகவிநாயகர் சன்னதி. இதை முதலில் காண்கையில் மிகவும் வியப்புற்றேன், இது போல எங்கும் கண்டதில்லை என்று. ஏனெனில் இங்குள்ள விநாயகருக்கு மனிதமுகம், யானை முகமில்லை. சிவபிரான் அவர்தம் தலையைக் கொய்வதற்க்கு முன் உள்ள உருவம் என்கின்றனர் இங்குள்ளோர். ஆதிவிநாயகர் என்றும் சொல்கிறார்கள்.​

இவரை வணங்குவதன் மூலம் அனைத்து வளங்களும் அடையலாம் என்று கூறுகின்றனர். இத்தகைய உருவம் பாரததேசம் முழுமைக்கும் இத்தலத்தில் மட்டுமே உள்ளது சிறப்பாகும்.

மற்றொரு சிறப்பு சிவன் கோயில்களில் அரிதாகக் காணக்கூடிய பெருமாள் சன்னிதி. ராமர் மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகிய நால்வரை வணங்கி பிடித்து வைத்த நான்கு பிண்டங்கள் நான்கு லிங்கங்கள் ஆயின. மூலஸ்தானத்திற்கு பின்புறம் இந்நான்கு லிங்கங்களையும் ராமரையும் காணலாம். ராமர் தனது வலக்காலை மண்டியிட்டு, வடக்கு நோக்கித் திரும்பி வணங்கியபடி தர்ப்பணம் செய்யும் கோலத்தில் காட்சி தருகிறார்.

இன்னொரு சிறப்பு இங்கு முக்தீஸ்வரரை சூரியன் சந்திரன் இருவரும் ஒரேநேரத்தில் வணங்கியதால் நித்ய அமாவாசை தலம் என போற்றப்பட்டு தினமும் இங்கு வந்து தர்ப்பணம் செய்யலாம் நாள் கிழமை பார்க்க வேண்டியது இல்லை என்கின்றனர்.வாழ்நாளில் ஒருமுறையேனும் இத்தலத்திற்கு சென்று தரிசித்து வரல் நன்று.​

 

Attachments

 • Comp-1.jpg_1504896613724.jpg
  Comp-1.jpg_1504896613724.jpg
  166.7 KB · Views: 0
 • Comp-23.jpeg_1504896146065.jpg
  Comp-23.jpeg_1504896146065.jpg
  297 KB · Views: 0
 • Comp-22.jpg_1504896646182.jpg
  Comp-22.jpg_1504896646182.jpg
  505.9 KB · Views: 0
 • Comp-21.jpg_1504897035357.jpg
  Comp-21.jpg_1504897035357.jpg
  247.6 KB · Views: 0
 • Comp-8.jpg_1504896880897.jpg
  Comp-8.jpg_1504896880897.jpg
  261.1 KB · Views: 0
 • Comp-7.jpg_1504896578909.jpg
  Comp-7.jpg_1504896578909.jpg
  246 KB · Views: 0
Last edited by a moderator:

Kothaisuresh

Active member
அருமை, நான் நிறைய முறை இந்த கோவிலுக்குப் போயிருக்கிறேன்
🙏🙏🙏🙏
 
Top