இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

கொஞ்சும் சலங்கைகள் - Story Thread

Status
Not open for further replies.

F4

Moderator

அத்தியாயம் : 01
மலைதேவி கிராமம் ( கற்பனை ஊர்) இதற்கு பெயர் வர காரணம் சுற்றி வர கொஞ்சம் மலை போல குன்றுகள் அமைந்து இருந்ததால் கூடவே இந்த கிராமத்தின் குல தெய்வம் மலைமகள் ஈசனின் பாதியானவள் சக்தி தான் இந்த ஊரின் குல தெய்வம்… இங்கு பிரதான தொழில்கள் என்றால் விவசாயம் தொடக்கம் காய்கறி வரை பயிரிட்டனர்….. வழமை போல மழை, வெயில் என மாறி மாறி வரும் போது அவர்கள் அதற்கேற்ப தங்கள் வாழ்வாதாரத்தை மாற்றி கொள்வார்கள் இந்த ஊர் பண்ணையார் தர்மசீலன் பெயருக்கேற்ப மனிதர் அவருக்கு ஒரு ஆண், பெண் இருவருமே திருமணம் செய்து கிராமம் வேணாம் எங்க வாசஸ்தலம் இனி வெளிநாடு எங்களை பார்க்க உங்களுக்கு விருப்பம் இருந்தால் வெளிநாட்டுக்கு வாங்க என சராசரி பிள்ளைகள் போல சொல்லி விட…. தர்மசீலன் அவர் மனைவி பங்கஜம் கூட இது எங்க வேர் நாங்க எங்குமே வர முடியாது உங்களுக்கு நாங்க தேவை, அன்பு இருந்தால் இங்கே வாருங்கள் என சொல்லி இந்த ஊரையே தங்கள் பிள்ளைகளாக பார்த்து கொண்டனர்.

அடுத்து அங்கே இருப்பவர்களில் முக்கியமான இரு குடும்பங்கள் ஒன்று கார்மேகம் குடும்பம் அடுத்து தெய்வீகன் குடும்பம்… கார்மேகம் பணம் படைத்தவர் தன் அதிகாரத்தால் எல்லாம் செய்யலாம் என நினைப்பவர் தெய்வீகன் அந்த கிராம தலைவர் பணத்தை விட அன்பு தான் பெரிது என எண்ணி வாழ்பவர்… இதை விட இன்னும் ஒரு விடயம் இருவருமே உறவுகார்கள்… கார்மேகத்தின் மனைவி சகுந்தலா தெய்வீகனின் ஒரேய தங்கை கார்மேகம், தெய்வீகன் இருவருமே நண்பர்களாக இருந்து பிறகு எதிரிகளாக மாறி போனார்கள் வேற ஒன்றுமில்ல கார்மேகத்தின் புதிய நண்பர்கள் சேர்க்கை தான் காரணம் கார்மேகம் வம்பு சண்டையை இழுத்தால் கூட தங்கைக்காக தெய்வீகன் அமைதியாக போய் விடுவது வழக்கம்.

தெய்வீகனுக்கு ஆண் ஒன்று பெண் ஒன்று கார்மேகத்திற்கு மூத்தது பெண் அடுத்து ஆண் குழந்தை தெய்வீகனின் மூத்தவன் அதிரதன் அடுத்த பெண் பெயர் வசுமதி கார்மேகத்திற்கு மூத்தது பெண் பெயர் பிரமிளா அடுத்த ஆண் காந்தன்…. அதிரதன் ராணுவத்தில் உயர்பதவியில் இருந்தான் இப்போ அவனின் தாய் கோதைக்காக அந்த வேலையை ராஜினமா செய்து விட்டு தங்கள் விளைநிலங்களை பார்க்கிறான் அவன் தங்கை வசுமதிக்கு கல்யாணம் ஆகி விட்டது அவள் கல்யாணம் செய்தது வேறு யாருமல்ல அதிரதனின் உயிர் நண்பன் விஷ்ணுவை தான்…. அவனும் அதிரதன் கூட ராணுவத்தில் இருந்தவன் அவனுக்கு என சொல்லி கொள்ளுபடியாக சொந்தம் இல்லை தாய் தந்தை விபத்து ஒன்றில் இறக்க அவனை வளர்த்தது எல்லாம் தாய் வழி பாட்டி அவன் படித்து முடித்து வர அவரும் இறக்க… அவன் தனக்கு குடும்பம் இல்லை நாட்டுக்காக தாராளமாக பயம் இல்லாமல் சேவை செய்யலாம் என வந்தவன் அதிரதன் கூட உயிர் நட்பு கொண்டான்.


அவன் நல்ல குணம் பார்த்து அவனுக்கென ஒரு குடும்பத்தை அமைத்து கொடுக்க வேணும் என நினைத்தவன் தன் தங்கையை கொடுக்க நினைத்து தன் தந்தையிடம் பேச… அவரும் மகனின் நண்பன் ராணுவத்தில் இருப்பவன் ஒழுக்கமாக இருப்பான் என நினைத்தவர் மனைவி மகளிடம் இது பற்றி கேட்க வசுமதி தந்தை அண்ணன் முடிவு தான் தன் முடிவு என சொல்லி விட கோதை தான் ஒரு நிபந்தனை வைத்தார்…. தன் மருமகன் மட்டுமல்ல மகனும் ராணுவத்திற்கு விருப்ப ஓய்வு கொடுத்து விட்டு வர வேணும் இது ஒரு சாதாரண தாயின் ஆசை என சொல்ல தெய்வீகனுக்கு இதில் உடன்பாடு இல்லை தான் இருந்தாலும் கூட அவர் ஒரு தந்தை மகளின் வாழ்க்கை முக்கியம் என நினைத்தவர்… அவரே விஷ்ணு கூட பேச அவனுக்கு வசுமதியை பிடிக்கும் அதை விட அதிரதன் கூட இருப்பது எனவே சரி என அதிரதன் தான் முடியாது என மறுக்க கோதை ,வசுமதியின் கண்ணீர் அவனை கரைக்க விருப்ப ஓய்வு நண்பர்கள் இருவருமே கொடுத்து விட்டு வந்து விட்டார்கள்.

மலை தேவி கிராமத்திற்கு வந்தவர்கள் தர்மசீலனின் அனுமதி பெற்று சின்ன சின்ன மாற்றங்கள் செய்தனர் அதில் ஒன்று கொஞ்சம் சின்னதாக இருந்த பள்ளிகூடத்தை பன்னிரண்டாவது வகுப்பு வரை கொண்டு வந்தனர்… அதிரதனிடம் மென்மை என்பது கிடையாது அவன் அப்படி தான் ஆனால் விஷ்ணு அப்படியல்ல மென்மையானவன் அவன் பாடசாலை தலைமை ஆசிரியர் பொறுப்பை எடுக்க அதிரதன் விவசாயத்தில் இறங்கினான்… ஊருக்கு நிரந்தரமாக மின்சாரம், ஒரு சின்ன கிளினிக், சுத்தமான குடி நீர் என்று எல்லா வசதிகளும் இரு நண்பர்களும் பெற்று கொடுக்க அவர்களை ஊரே கொண்டாட கார்மேகம் அதற்கு இடைஞ்சலாக வந்தார்.

அதிரதன் பெரிதாக கார்மேகம் கூட பேச்சு வைத்து கொள்ள மாட்டான் அவன் பேசினால் முதலில் கை தான் பேசும் அது தன் தந்தையை கவலை கொள்ள செய்யும் காரணம் அவர் தங்கை கணவன் கார்மேகம்….தங்கை கண்ணீர் விட்டால் அவரால் தாங்க முடியாது சகுந்தலாவுக்கும் தமையன் மேலே பாசம் அதிகம் அதனால் தான் தன் மகளை அண்ணன் மகனுக்கு கட்டி கொடுக்க நினைக்க…. கார்மேகம் மட்டுமல்ல பிரமிளாவும் மறுப்பு தெரிவித்து விட்டாள் காரணம் அங்கே வசதி போதாது என்று அதனால் அந்த ஆசை நிராசையாக போய் விட்டது…. பிறகு ஒரு கட்டத்தில் வசுமதியை காந்தனுக்கு கார்மேகமே சகுந்தலாவை விட்டு பெண்ணு கேட்க தெய்வீகன் பேச முன்னே அதிரதன் மறுத்து விட்டான் காந்தன், பிரமிளா இருவருமே கார்மேகத்தின் வார்ப்பு காந்தனின் சேர்க்கை அவ்வளவாக நல்லது இல்லை…. வேலை வெட்டிக்கு போகாமல் தந்தை பணத்தை வைத்து வெட்டி பந்தா காட்டுவது, வம்பு சண்டையை வலிய போய் இழுப்பது அதை விட போற வர பெண்ணுங்களை கிண்டல் பண்ணுவது இதை அதிரதன் கூட பல தடவை தட்டி கேட்க அதை கார்மேகம் பெரிய பிரச்சினையாக்கி அது பண்ணையாரர் வரை போன கதை உண்டு…. அதனால் அதிரதன் நேரடியாக கார்மேகத்தின் முகத்திற்கு நேராகவே சொல்லி விட்டான் என் தங்கைக்கு கல்யாணம் பேசி விட்டோம் என் நண்பனை தான் அவள் கட்டிக்க போகிறாள் என்று அந்த மறுப்பு அவரை இன்னும் இவர்கள் மேலே கோபம் கொள்ள செய்தது அது இப்போ வரை தொடர்ந்து வருகிறது.

தெய்வீகன் வீட்டில் காலையில் சாம்பிராணி புகை வீடு எங்குமே நறுமணத்தை வீசி கொண்டு இருந்தது வாசலில் வசுமதி கோலம் போட்டு கொண்டு இருக்க…. கோதை தான் பூஜை செய்து கடவுளுக்கு ஆரத்தி எடுத்தவர் வீடு எங்கும் கற்பூர ஆரத்தி காட்டி கொண்டு வந்தார்….அப்போது குளித்து முடித்து தெய்வீகன் வெள்ளை வேட்டி,சட்டையில் சிவ சிவா என கூறி கொண்டு வந்தவர் பூஜையறைக்கு போய் சாமியை கும்பிட்டு விட்டு வர கோதை அவருக்கு ஆரத்தி காட்ட அதை தொட்டு கும்பிட்டவர்…. கோதைக்கு நெற்றியில் குங்குமம் வைத்தவர் அவர் தாலியை காட்ட அதற்கும் வைத்தார் இது பொதுவாக கிராமத்தில் இருக்கும் பெண்களின் வழக்கம்…தெய்வீகன் வெளியே உள்ள சாய்வு நாற்காலியில் இருக்க வசுமதி கோலம் போட்டு முடிந்தவள் புடவையை கீழே இறக்கி விட்டு கோல பொடி டப்பாவை எடுத்து கொண்டு திரும்பியவள் தந்தையை காண முகம் மலர அப்பு என அழைக்க. தெய்வீகன்

“ஆத்தா சீக்கிரமாக எழுந்து விட்ட போல காலையில் உன் கோலத்தை வாசலில் பார்க்காமல் போனால்…எனக்கு அன்றையே நாளே ஓடாது தாயி காபி தண்ணி சாப்பிட்டாயா அப்பு எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன் காலையில் வெறும் வயித்தோடு இருக்க கூடாது என்று…. சரி உன் அண்ணன்காரன், மாப்பிள்ளை எங்கே மா வெளியே போய் விட்டாங்களா ஏதும் காபி, தண்ணீ கொடுத்தாயா மா” என கேட்க. கோதை கணவருக்கு கருப்பட்டி காபியை ஆற்றி கொண்டு வந்தவர் அவரிடம் கருப்பட்டி காபி தம்ளரை நீட்ட அவர் அதை வாங்கி கொள்ள. வசுமதி


“நீங்க சொன்னது போல காலையில் கருப்பட்டி காபி சாப்பிட்டு விட்டேன் அப்பு அண்ணனும், மச்சானும் உடற்பயிற்சி கூடத்திற்கு போய் இருக்கிறாங்க அதற்கு பிறகு அண்ணனும் ,மச்சானும் சாப்பிட வருவாங்க அப்பு” என. கோதை

“காலையில் கஞ்சி மட்டும் சாப்பிட்டு விட்டு புள்ள போய் விட்டான் நம்ம மாப்பிள்ளை கூட அப்படி தான் கேட்டால் எங்களுக்கு இப்படி தான் ஆர்மியில் தந்தாங்க அதுவே உடம்புக்கு பழகி விட்டது….நல்லதும் கூட உடம்பு ஆரோக்கியமாக இருக்கும் என சொல்லி விட்டாங்க நீங்க தான் மாமா அவங்களை காலையில் சாப்பிட்டு விட்டு போக சொல்ல வேணும்…. அவங்களுக்காக இட்லி நான்கு வகை சட்னி கூட நானும் பாப்பாவும் காலையில் நான்கு மணிக்கு எழுந்து செய்து வைத்தோம்….ஒரு நாள் கூட காலையில் சாப்பிட மாட்டாங்க காலையில் கஞ்சி மட்டும் சாப்பிட்டு விட்டு உடற்பயிற்ச்சி செய்ய போய் விடுகிறாங்க …பிறகு அவசரம் அவசரமாக வந்து இரண்டு பேருமே ஏதோ பெயருக்கு கொறித்து விட்டு மாப்பிள்ளை ஸ்கூலுக்கும் தம்பி வயலுக்கும் ஓடி விடும்…மதியம் நம்ம கருப்பன் மதிய சாப்பாடு தூக்கு கூடையில் கொண்டு போனால் அங்கே உள்ள பிள்ளைங்களுக்கு மாப்பிள்ளை பாதி கொடுப்பதாக சொல்வான்….தம்பி வயலில் வேலை செய்பவர்களுக்கு அது பரவாயில்ல அவங்க கேட்டால் நான் கொஞ்சம் அதிகமாக கொடுத்து அனுப்புவேன்… சாப்பாடு போடுவது புண்ணியம் ஆனா இவங்க சாப்பிடாமல் உடல் இளைத்து போவதை ஒரு ஆத்தாவாக என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை “என. தெய்வீகன்

“ஆத்தா கோதை உன் ஆதங்கம் புரிகிறது மா ஆனா அவங்க வேலை செய்தது எங்கே ராணுவத்தில் அங்கே இப்படி எல்லாம் வாய்க்கு ருசியாகவும், நிதானமாகவும் சாப்பிட்டு கொண்டு இருக்க முடியுமா… உடல் ஆரோக்கியத்திற்காக மட்டும் தான் சட்டென சாப்பிட்டு விட்டு கடமைக்கு திரும்ப வேணும்…அங்கே இருப்பதை பகிர்ந்து உண்ட பழக்கம் இங்கயும் தொடர்கிறது ஒரு ஆத்தாவாக உன் கவலை எனக்கு புரிகிறது சரி விடு ஆத்தா இது பற்றி நான் அவங்க கிட்ட பேசுகிறேன்… சரி நீ போய் காலை பலகாரத்தை எடுத்து வை அவங்க வரும் நேரம் தாயி வசுமதி நீயும் போ ஆத்தா உன் ஆத்தாள் கூட சேர்ந்து எல்லாம் எடுத்து வை என சொல்ல அவர்கள் இருவருமே உள்ளே சென்று கொஞ்சம் நேரம் கழித்து ஒரு புல்லட்டில் அதிரதன், விஷ்ணு வந்து இறங்கினார்கள்.

சலங்கைகள் கொஞ்சும்…💃 

F4

Moderator

அத்தியாயம்: 02
சிங்கபூர் மலேசிய தீபகற்பத்தின் தென் முனையில் அமைந்துள்ளது இங்கு இயந்திர பொறியில் துறை, உயிரிமருத்துவ அறிவியல் துறை, வேதிப்பொருட்கள், மின்னனு பொருட்கள் என பன்முகத்தன்மை வாய்ந்த பொருளாதாரத்தை கொண்டு உள்ளது… லண்டன், நியூயார்க், டோக்கியோவிற்கு அடுத்து சிங்கபூர் தான் நான்காவது வெளிநாட்டு நாணய பரிமாற்ற மையமாகும் சிங்கபூர் ஒரு கலப்பு பண்பாடு கொண்டது.

இங்கு தமிழர், சீனர், மலாய், அரபு நாட்டு மக்கள் என கலவையாக வாழ்கின்றனர் சிங்கபூரில் பெரும்பாலும் வெகு சிலரை தவிர மற்றவர்கள் எல்லாம் வசதியாக தான் வாழ்கின்றனர் அதுவும் வெளிநாட்டவர் இங்கே முதலீடு செய்து உள்ளதால் பணம் கொஞ்சம் தாராளமாக புழங்கும்… பொருளாதார மாற்றம் வரும் போது மக்கள் கஷ்டப்பட கூடாது என்பதால் தான் பன்முக துறைகளில் அரசு கால் பதித்து உள்ளது… சிங்கப்பூரில் சற்று வசதியான ஆளுங்க வசிக்கும் தெருவில் ஒரு அழகிய இரண்டு மாடி கட்டிட வீடு இருந்தது அதன் நேம் போர்டில் தமிழில் மதுரம் இல்லம் என இருந்தது வாசலில் வாட்ச்மேன் உள்ளே இரண்டு பாரின் கார்கள் என இருந்தது.
உள்ளே சாம்பிராணி, ஊதுபத்தி மட்டுமல்ல தமிழில், ஹிந்தியில் மாறி மாறி பக்தி பாடல்கள் ஒலித்து கொண்டு இருக்க வட இந்திய சாயலில் ஒரு பெண் நெற்றி, வகிட்டில் குங்குமம் வைத்து அழகாக புடவை கட்டி தலையில் ஒரு ரோஜா பூ என தெய்வீக கலையோடு தமிழில் தான் காயத்ரி மந்திரம் சொல்லி கொண்டு இருந்தாள்…அப்போ அஞ்சு மா என சொல்லி கொண்டு நடுத்தர வயதில் ஜாக்கிங் முடித்து வந்த ஒருவர்அவளை அழைத்து கொண்டு வந்தார் அவர் அஞ்சு என அழைத்தவள் பெயர் அஞ்சனா டாக்டர் அஞ்சனா பீடியாட்ரிசன் அவள் மந்திரம் சொல்லி முடிய கண்களை மெதுவாக திறந்தவள் அழகுக்கு குறைவு இல்லாத மங்கை வயது நாற்பத்திரண்டு இருக்கும் அவள் செல்லமாக அவரை முறைத்து விட்டு தமிழில்
“ உங்களுக்கு எத்தனை தடவை சொல்வது சந்தோஷ் நான் சாமி கும்பிடும் போது என்னை டிஸ்டர்ப் செய்ய கூடாது என்று…உங்களுக்கும் உங்க பேட்டிக்கும் இதைய வேலை தான் என சொல்ல அவள் சந்தோஷ் என அழைத்த நபருக்கு ஒரு நாற்பத்தைந்து வயது இருக்கும் சந்தோஷ் ஒரு மனோதத்துவ டாக்டர் சின்ன சிரிப்போடு எழுந்து வந்தவர் மனைவியை அணைக்க வர. அஞ்சனா
“ சந்தோஷ் டோன்ட் டச் மீ நான் குளித்து சாமி கும்பிட்டு விட்டு சுத்தமாக இருக்கிறேன் நீங்க ஜாக்கிங் போய் விட்டு வந்து டர்ட்டியாக இருக்கிறீங்க… போய் முதலில் குளித்து விட்டு வாங்க பிறகு பேசலாம்” என சொல்ல. சந்தோஷ்
“ என்ன அஞ்சு மா இது எங்க ஊரில் புருஷனே கண் கண்ட தெய்வம் என சொல்வாங்க நீ என்ன டா என்றால் ஆசையாக அணைக்க வந்தால் விரட்டுகிற…அதுவும் நம்ம லவ் பண்ணி கல்யாணம் பண்ணி கொண்டவங்க டியர்” என சொல்ல. அஞ்சனா முகம் மாற சந்தோஷ் சட்டென அவள் முகத்தை கையில் ஏந்தி அவள் நெற்றியில் முத்தமிட்டவர். சந்தோஷ்
“ வேணாம் மா பழசை எல்லாம் நினைக்க வேணாம் நமக்கு வலி தான் மிஞ்சும் நம்ம இப்போ வாழும் வாழ்க்கையை மட்டும் பார்க்கலாம் இறந்த காலத்தை நினைத்து நம்ம பெண்ணோட நிகழ், எதிர் காலத்தை தொலைத்து விட கூடாது… சரி நிதி பேபி எங்கே மா இன்னும் தூங்குகிறாளா ஏதோ காலேஜ்ஜில் முக்கிய வேலை இருக்கிறது சீக்கிரமாக போக வேணும் டாடி மம்மி என்னை சீக்கிரமாக எழுப்ப மறந்து விடும் நீங்க தான் எழுப்ப வேணும் என சொன்னாள்” என அஞ்சனா தன் கவலை மறந்து மெல்ல அவர் கன்னத்தில் அடித்தவள். அஞ்சனா
“யாரு நானா அப்பாவுக்கும் பெண்ணுக்கும் என்னை கலாய்க்கவில்லை என்றால் தூக்கம் வராதே எழுப்ப சொன்னவளும் எழுப்பி விடுகிறேன் என சொன்னவரும் தான் மறந்து விட்டாச்சு நான் இல்லை.. உங்க பெண்ணை நான் காலையில் எழுப்பினால் இன்னும் பைப் மினிட்ஸ் மம்மி என சொல்லி சொல்லியே தூங்குவாள் நீங்களே உங்க பெண்ணை போய் எழுப்பி விடுங்க என சொல்ல சந்தோஷ் சரி என சொன்னவர் மாடி ஏறி போக முன் சட்டென மனைவியின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு போக அஞ்சனா முகம் சிவந்தது… அப்போ தொடக்கம் இப்போ வரைக்கும் அவர் காதல் குறையவே இல்லை.முதல் மாடியில் சந்தோஷ், அஞ்சனா ரூம், அடுத்து ஆபிஸ் ரூம் போல ஒன்று இரண்டு கெஸ்ட் ரூம் இரண்டாவது மாடி முழுமையாக அவர் ஒரேய பெண் பரிநிதாவுகுரியது பரி நிதா தமிழ் நாட்டு, வடநாட்டு கலவை தாயின் அழகை விட பல மடங்கு அழகு அவள்…

பாலும் குங்குமம் கலந்த கலவை அவள் நிறம் பச்சை நிற விழிகள் இடை வரை சுருண்ட கூந்தல் சிவந்த இதழ்கள் ஐந்தரையடி உயரம் பூசினாற் போல் உடல் அது வேற ஒன்றுமில்ல அவள் தாய் வட நாடு என்பதால் தாராளமாக சாப்பாடு தொடக்கம் ஸ்வீட் வரை நெய், இனிப்பு புகுந்து விளையாடும்… அதுவும் கூட அவளை அழகியாக காட்டியது பரிநிதா தளத்தில் அவளுக்கு ரூம், ஜிம், அதை விட இரண்டு ரூம் ஒன்று அவள் நண்பர் கூட்டம் வந்தால் தங்குவதற்கு அடுத்த ரூம்மில் தான் ஆராய்ச்சி என்ற பெயரில் ஊரில் உள்ள குப்பைகளை கொண்டு போடுவாள்… மேலே மொட்டை மாடி சந்தோஷ் வெள்ளை நிறத்தில் கோல்ட் டிசைன் போட்ட கதவின் முன் நின்று மெல்ல ரூம் காலிங் பெல்லை அழுத்த உள்ளே இருந்து எந்த சத்தமும் வரவில்ல திரும்ப அழுத்த போக அவர் போன் ரிங் அவர் ஒரு டாக்டர் ஏதும் அவசரமாக இருக்கும் போல என எடுத்து அந்த ஹாலில் இருந்து பேச ஆரம்பித்தார்.

ரூம் உள்ளே பரிநிதா பெரிய டெடிபியார் ஒன்றை கட்டி அணைத்து கொண்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள் அப்போது அவள் காதில் தேவசேனா எனும் குரலும் ஜல் ஜல் என்ற சலங்கை ஒலியும் கேட்டது.. அந்த குரலும் சலங்கை ஒலியும் தந்த இனிமையில் அவள் இதழ்களில் புன்னகை பூக்க சட்டென அவள் வயிற்று பகுதியில் ஒரு வலி பரிநிதா வயிற்றை பற்றி பிடித்தவள் தன்னையறியாமல் மம்மி என சத்தமாக அழைக்க வெளியே போன் பேசி முடிந்து மகள் ரூம்க்கு வந்த சந்தோஷ்… மகள் சத்தம் கேட்டு பேபி என ஓடி போய் பார்க்க பரிநிதா தன் வயிற்றை பிடித்து கொண்டு அழுது கொண்டு இருக்க சந்தோஷ் அஞ்சனா என சத்தம் போட்டவர் மகள் அருகே ஓடி போய் அவளை தூக்கி அவள் தலையை தன் மடியில் வைத்து கொண்டு. சந்தோஷ்
“ பேபி பேபி மா என்ன பண்ணுகிறது டாடியை பாரு கண்ணை திற பேபி என கண்கள் கலங்கி போய் பதறினார் அவருக்கு பரிநிதா உயிர்.. அஞ்சனா கணவனின் சத்தம் கேட்டு ஓடி வந்தவர் மகளை காண குட்டி மா என ஓடி போய் அவள் அருகே அமர்ந்தவர் வயிற்றில் உள்ள அவள் கையை விலக்க. பரிநிதா
“ ஆ வலிக்கிறது என்னை கத்தியால் குத்தி விட்டாங்க மம்மி பாரு பிளட் வருகிறது டாடி என அழ சந்தோஷ் சட்டென மனைவியை பார்க்க அவர்களுக்கு புரிந்தது.. இது எதனால் என்று அஞ்சனா அவள் கையை விலக்கி விட்டு மெதுவாக வயிற்றில் தடவியவர் அவள் காதருகே குனிந்து. அஞ்சனா

“ பரி குட்டி இப்போ வலிக்காது மம்மி மருந்து போட்டு விட்டேன் தூக்கு மம்மி பாட்டு பாடுகிறேன் என அவள் தலையை தடவி விட்டவர் ஹிந்தியில் தன் அன்னை தனக்கு பாடிய தாலாட்டு பாடலை மெதுவாக பாட பரிநிதா ஆழ் நிலை தூக்கத்திற்கு போனாள்… அவள் நன்றாக தூங்கியதும் அவளை பெட்டில் படுக்க வைத்து விட்டு போர்வையை போர்த்தி விட்டு சந்தோஷ் வெளியே முதலில் போக மகளை பார்த்தவாறே அஞ்சனாவும் வெளியே வந்தாள் அவர்கள் இருவருமே அங்கே உள்ள ஹால் சோபாவில் அமர்ந்தார்கள் முதலில் பேச தொடங்கியது. அஞ்சனா
“ இதற்கு தான் சந்தோஷ் உங்க கிட்ட சொன்னேன் நீங்க ராஜ கால கதை, க்ரைம், த்ரில்லர் ஸ்டோரி என சின்ன வயதில் அவள் கதை கேட்கும் போது எல்லாம் சொல்லி சொல்லி இப்போ அவள் அதை எல்லாம் ரிசர்ச் செய்யும் அளவில் வந்து நிற்கிறது…அப்படி நின்றால் கூட பரவாயில்ல அதை நினைத்து கொண்டு தூங்கி இப்போ கனவில் கூட கொலை, கொள்ளை என இப்படி பிதற்றும் அளவில் நிற்கிறது முதலில் இவளுக்கு சீக்கிரமாக ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்க வேணும்” என. சந்தோஷ்

“ என்ன அஞ்சனா நீயும் மற்ற அம்மாக்கள் போல பேசுகிற நீ ஒரு டாக்டர் அதற்கு ஏற்ற போல பேசு ஏன் நீயும் நானும் கனவு காண்பது இல்லையா ஹாஸ்பிட்டல், கத்தி, பிளேடு, மருந்து எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா…அது போல தான் அவளும் விடு நீ போய் மார்னிங் டிபனை மல்லி கூட சேர்ந்து பாரு நான் ப்ரெஷ் அப் செய்து விட்டு வருகிறேன்… பேபி அவளாகவே எழுவாள் அலாரம் வைத்து விட்டு வருகிறேன் என சொன்னவர் மனைவியை அனுப்பி விட்டு மகள் ரூம்க்கு போனவர் டேபிள் அருகே உள்ள கடிகாரத்தில் அலாரம் வைத்து விட்டு கதவை மெதுவாக சாத்தி விட்டு வர… பரிநிதா அருகே ஒரு வெண்புகை தோன்றி
“ தேவசேனா என் இதய அரசியே உனக்காக நான் பல யுகங்கள் காத்து இருக்கிறேன் வந்து விடு தேவி…சேரா காதலை நம் மீண்டும் வாழ்ந்து காட்டலாம் வா தேவி” என்ற கம்பீரமான குரல் அழைக்க… பரிநிதா தன்னையறியாது செந்தமிழில்

“வருகிறேன் அரசே நம் காதலுக்காக மட்டுமல்ல நம் வாழ்வை அழித்தவர்களையும் பழி தீர்க்க வருகிறேன்… யுகங்கள் தாண்டியது நம் காதல் அதற்கு அழிவு என்பது இல்லை” என சொல்ல. மலைதேவி கிராமத்தை தாண்டி சற்று உயரத்தில் உள்ள குகையில் பயங்கர சிரிப்பு சத்தம் கேட்டது. அந்த குரல்

“ வருகிறாயா வா காதலா அதை மீண்டும் மலர விடுவேனா முட்டாள் பேதையே நான் இருக்கும் வரைக்கும் அது நடக்காது… போன ஜென்மத்தில் எனக்கு கிடைக்காத பலதை இந்த ஜென்மத்தில் அடைய போகிறேன் என சத்தமாக சிரிக்க மலை தேவி கிராமத்தில் கர்ப்பக்கிரகத்தில் வீற்றி இருந்த மலைமகளின் கண்கள் ரத்த சிவப்புக்கு மாற அவள் காலில் இருந்து ரத்தம் வடிய ஆரம்பித்தது.
சலங்கைகள் கொஞ்சும்…💃
 
Status
Not open for further replies.
Top