Janani Naveen
Administrator
கொசு ஏன் உங்களை மட்டுமே கடிக்கிறது?
கூட்டமா இருக்குற இடத்துல உங்கள மட்டும் டார்கெட் பண்ணி கொசுகடிக்கிறதா? அதுக்கு காரணம் நீங்க ‘O+’ வகை ரத்தபிரிவ சேர்ந்தவரா இருக்கலாம். மத்தவகை ரத்த பிரிவ ஒரு முறை சுவைச்சா ‘O+’ ரத்த வகைய மட்டும் இரு முறை சுவைக்குமாம்.
அதோட கொசுக்கு CO2 ரொம்ப முக்கியம் அதாங்க கார்பண்டை ஆக்சைடு அத எந்த உடல் அதிகமா வெளியிடுதோ அவங்க தான் கொசுவுக்கான பெஸ்ட் டோனர்.
உடற்பயிற்சி செய்றப்ப கொசு அங்க இங்க கடிக்குதா? அதுவும் நீங்க கொசுவுக்கு கொடுக்குற சிக்னல் தாங்க…! உடற்பயிற்சி செய்யும் போது நம்ம உடல் லாக்டிக் ஆசிடை தோல் மூலம் வெளியேற்றம் செய்யும் அது கொசுவுக்கு பிடிச்ச வாசனையாம் அதான் உங்கள அங்க இங்க டிச் டிச் பிச்சிவைக்குது…!
இதோட உடல் வெப்பநிலை அதிகமா இருக்குறவங்க கொசுவுக்கு ரொம்ப பிடிச்சவங்க காரணம் என்னான்னா இரத்தத்தின் அடர்த்தி அதிகமாகவும், தோலிற்கு மிக அருகிலும் இருப்பதால் இரத்தத்தை எளிதில் உறிஞ்சுவிடலாம். இதோட போதைல இருக்குறவங்க ரத்தமும் பிடிக்குமாம் (இந்த கொசுக்கு கூட பெக்கு கேட்குது)
ஒகே ஒகே யாரு ரத்தமெல்லாம் பிடிக்கும் சொல்லியாச்சு, அத எப்டி கண்டுபிடிக்கும்ன்னு தெரிஞ்சுக்க வேணா? கண்கள் வழியா…… எஸ் கொசு தன் கண்கள் வழியா தான் இத்தனையும் கணக்கீடு செய்யுமாம்…! நம்மள கடிக்கற முன்ன தரையோட தரையா உட்கார்ந்து நம்மள வாட்ச் செய்யுமாம் பின்ன தான் மத்த ப்ராசஸ் எல்லாம்…..
இப்டி உட்காரும் போது ப்ரைட் கலர்ஸ் தான் அது கண்ணுக்கு தெளிவா தெரியுமாம். அதனால் தான் ப்ரைட் கலர்ஸ் ட்ரெஸ் போட்ட ஆளுங்கள கொசு சுத்தி சுத்தி வந்து ரீங்காரம் பாடுது…
இம்புட்டு ஆராய்ச்சியும் எஃப்டே ந்னு ஒரு மனுஷன் ஆராய்ச்சி செஞ்சு கண்டுபிடிச்சாராம். இதே நாம பட்டுன்னு ஒரு போடு போட்டு பொட்டுன்னு தூக்கி அடிச்சிருப்போம் ஈஈஈஈ நமக்கு ரத்தம் முக்கியம்மில்ல …. வெயிட் வெயிட் போயிராதிங்க கொசுவோட தமிழ் பெயர் நுளம்பு இவங்கள குருதி சிநேகிதர்கள் – ந்னும் சொல்லுவாங்களாம் பதிவு பண்ணிக்கிறேன்ப்பா அப்புறம் கொசு அந்திய மொழி நீ ஆன்டி தமிழினி ந்னு எல்லாம் சொல்ல கூடாது.