இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

கருத்து திரி

Vidhushini

New member
ஜனனி sis-ன் "அர்ஜுன பார்வை" - எனது பார்வையில்....

தன் காதலை வெளிப்படுத்தும் வகையில் ஆரம்பமாகும் கதைக்களம், பின் நகர்வது எல்லாம் மனோவேகம்தான்.

பாடல்கள், தேவதைகளின் பெயர்கள் சூழ அறிமுகமாகும் மூர்க்கமானவனின் செயல்களனைத்தும், கொடூரத்தின் உச்சம்.

சந்தேகங்கள், யூகங்கள் எனப் பலர்மீது தோன்றச்செய்து, இடையில் எந்த இடத்திலும் தொய்வின்றி நகரும் கதையின் காட்சியமைப்பு சூப்பர்👌

தன் தாயின் மரணம் மூலமாக பாதிப்படைந்தவர்கள், அடுத்துத் தாம் தேர்ந்தெடுத்த பாதையின் மூலமாகவே, ஒரே புள்ளியில் சந்திக்கும்படியாக கதையை நகர்த்தியவிதம் அருமை @Janani Naveen sis👏👏👏

மொத்தத்தில் 'அர்ஜுன பார்வை', குறி/இலக்கு தவறவில்லை.
 
Last edited:

Zeenath Sabeeha

New member
Jaanu Nav சிஸ்டர் எழுதிய "அர்ஜுன பார்வை"
வாவ்... சூப்பரான psychopath த்ரில்லிங் கதை 👏 எப்படி அர்ஜுனனுக்கு தன் குறி ஒன்றே இலக்கோ அப்படியே நம் போலீஸ்க்கும் குற்றவாளிகள் மட்டுமே இலக்கு..நடுநடுவில் காதல் கொண்டு தன்னை மணந்த மனைவியையும் கொஞ்சி கொள்கிறான்😀🥰
சுபாஷ் சந்திர போஸ் அசிஸ்டன்ட் கமிஷனர் ஆப் போலீஸ்.. செம்ம கெத்தான மாஸ் ஆன சூப்பரான டெரர் போலீஸ் 🥰 யூகங்கள் கொண்டு குற்றவாளிகளை இவன் நெருங்கும் விதமும் தன்னுடன் வேலை பார்க்கும் சக காவலர்களை வேலை வாங்கும் விதமும் அருமை 👏
ஹேமா.. இக்கட்டான சூழ்நிலையில் தன் பெற்றோர்களே தன்னை நம்பாத நிலையில் தன்னை காப்பாற்றி கூட்டிச்செல்லும் காவலனின் மீது காதல் ஏற்படுகிறது இவளுக்கு..வயது வித்தியாசத்தினாலும் திருமணத்தின் மீது பெரிதாக நாட்டம் இல்லாததாலும் வேண்டாம் என மறுக்க வந்தவன் அவளின் பார்வையால் கட்டுண்டு அவளுக்கு சம்மதம் என தலையாட்டி செல்கிறான் 🥰 காதலாக செல்லும் இவர்கள் வாழ்வு அவளவு அழகு 🥰❤️
பெண்களை கொல்லும் சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்கும் விதம் அருமை 👏👏 எப்போதும் போல இந்த கதையும் அதிரடி சரவேடி தான்👏👏👏 விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்ந்தது கதை வாழ்த்துக்கள் டியர் 🥰
Good luck dear 🥰❤️💐
Keep rocking 🌹❤️🥰
 
Top