இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

ஓர் இதயம் போதவில்லை உன்னை நான் காதலிக்க - கருத்துத் திரி

Such wonder review monisha 😍😍
Love you loads da❤️❤️❤️
Thank you so much
"தன் நிதானத்தால் வாழ்வின் நிதர்சனத்தை வென்ற மங்கையின் கதை" அவளின் வாழ்க்கைய ஒரே வரில சொல்லிட்டீங்க டியர்..
 
#moni_review
#காதல்_காலமடி_குறுநாவல் _போட்டிக்கதை
கதையின் தலைப்பு: ஓர் இதயம் போதவில்லை உன்னை நான் காதலிக்க
கதை ஆசிரியர் : காதல் 24
நிழலின் நாயகன்: பரத்
நிஜத்தின் நாயகன்: கவின்
நாயகி: நிவேதிதா
வாழ்வியலின் எதார்த்தத்தைப் பறை சாற்றும் அழுத்தமான,ஆழமான,
உணர்ச்சிக்கரமான,என்னை கண்ணீர் சிந்த வைத்த ஒரு நிஜமங்கையின் காதல் கதை.தன் நிதானத்தால் வாழ்வின் நிதர்சனத்தை வென்ற மங்கையின் கதை என்றும் கூறலாம். முதலில் எழுத்தாளர் ஆகிய தங்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அக்கா 😍😍😍...இரு வேறு பார்வைகளில் (தவிப்பு, துடிப்பு என) சிந்தித்து எழுதுவது என்பது அரிய விஷயம், அதை செயல்படுத்தி காட்டிய தங்களின் சிந்தனைக்கும், எழுத்து நடைக்கும் ஒரு பெரிய சலாம் அக்கா
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
#ஓர்_இதயம்_போதவில்லை_உன்னை_நான்_காதலிக்க
காதலின் பாரம் தாங்காமல் கனக்குதடா(டி)…!
என் சிறு இதயமும்…!
கடன் பெற நிற்கின்றேன்…!
காதல் வங்கியின் வரிசையில்…!
கூடுதல் இதயம் வேண்டுமென்று…!
ஏனெனில்…!
ஓர் இதயம் போதவில்லை உன்னை நான் காதலிக்க…!
#தவிப்பு
#பரத்_நிதா
கூட்டை விட்டு வெளிவராத பட்டுப்பூச்சி…!
கூட்டை பிரித்து வெளி வந்ததே…!
தன் காதல் சிறக்கடிக்க...!
மனம் கவ்விய மன்னவனிடம்…!
மடை திறந்த வெள்ளமாய்…!
மனம் திறந்து தன் காதல் சொன்ன காரிகை…!அவளின்…!
மலர்ந்ததே மண வாழ்வு…!
மகிழ்ச்சியாய்…!
மங்கையின் மனக்கூட்டோடு…!
#துடிப்பு
#கவின்_நிவேதிதா
புரிதலில் தொடங்கிய பந்தம்…!
பூத்து குலுங்கவும் இல்லை…!
காய்த்து கருகவும் இல்லை…!
காதலில் உருகவும் இல்லை…!
அன்பு ஒன்றே அடித்தளமாய்…!
அமைந்த இனிய இல்வாழ்வு...!
நிழலை மரித்து நிஜத்தோடு கூடிய…!
மெய்வாழ்க்கை…!
உறவுகளின் சூழ்ச்சியால் உடைந்து போன பெண்ணின் காதலைப் பற்றியும், காதல் தோல்விக்கு பின்னும் இருக்கும் வாழ்வு பற்றியும், பெற்றவரின் உணர்வுக்குகளுக்கு மதிப்பளித்து, தன் உணர்வுகளையும்,கனவுகளையும் தொலைத்து அவள் அனுபவித்த மனக்குமுறல்களையும், மணந்தவனிடம் மறைக்காமல் தன் காதல் சொல்லி அவள் வாழ்ந்த வாழ்வைப் பற்றியும், உங்கள் எழுத்துக்களின் மூலம் மிக அழகாகவும், தெளிவாகவும் கொடுத்தமைக்கு என் நன்றிகளும் வாழ்த்துக்களும் எழுத்தாளர் அவர்களே 😻😻😻
போட்டியில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும் அக்கா 🎊🎊🎊
Such a wonderful review monisha😍😍
Thank you so much ❤️❤️

"தன் நிதானத்தால் வாழ்வின் நிதர்சனத்தை வென்ற மங்கையின் கதை" அவளின் வாழ்க்கைய ஒரே வரில சொல்லிட்டீங்க டியர் 👍🏻👍🏻😍😍
 
#காத்தாடி_ரிவ்யூ

“ஒரு இதயம் போதவில்லை உன்னை நான் காதலிக்க” கதைக்கான ரிவ்யூ...

உண்மையான கதை, மனதைப் பிழிந்த கதைன்னு ரிவ்யூ பார்த்ததில் இருந்து வாசிக்க கொஞ்சம் பயம்.. அதனாலதான் கடைசியில் வாசிக்க்கலாம்ன்னு எடுத்து வைத்திருந்தேன்... உண்மையிலே வாவ் வாவ் தான் எழுத்தாளரே..

தவிப்பு , துடிப்புன்னு இரண்டு பாகத்தை பிரிச்சு, அந்த இரண்டு பாட்டையிலும் குதிரை வெகு லாவகமா செலுத்தி இருக்கிறீங்க...

இன்னைக்கும் நிறைய நிவேதாக்கள் இருக்கிறாங்க, பரத்கள் இருக்கிறாங்க.. அவங்களை பிரிச்ச குடும்பமும் இருக்குது... என்ன சொல்ல, உண்மையா நடந்ததையெல்லாம் வாசிக்கிறப்போ மனசு கனத்தது... ஒரு மாதிரி உள்ளுக்குள் வெறுமை பரவிச்சு... உண்மையான காதலுக்கு நம்ம சமுதாயத்தின்வழி கிடைக்கிற முடிவு இதுதான்னு உரைக்கிரப்போ உண்மையாவோ வருத்தமா இருந்தது...

ஆல்ரெடி இந்த கதையின் ஒவ்வொரு விஷயத்தையும் எல்லாரும் நிறைய அலசிட்டாங்க... எனக்குன்னு எதையும் விட்டுவைக்கலை யாரும்... ஆனா சொல்ல வந்த விஷயம் ஒண்ணே ஒண்ணு இருக்குது..

அது என்னோட சொந்தக்கருத்து மட்டுமே.. அதை மட்டும் இங்கே பதிவிட்டுடறேன்... பல பேருக்கு கவுன்சலிங்கில் நான் சொல்றதை இங்கேயும் சொல்றேன்...

ஆணோ பொண்ணோ யாரா இருந்தாலும் காதலுக்காக போராட தைரியமிருந்தா மட்டும் காதலியுங்க... பேரன்ட்ஸ் ஒத்துக்க மாட்டாங்கன்னு தெரிஞ்சா ப்ளீஸ் தயவு செஞ்சு காதலிக்காதீங்க... இருபது வருஷமோ இருபத்து மூணு வருஷமோ அவங்க கூடவே தானே இருக்கிறோம்.. அவங்களோட எண்ணவோட்டம் தெரியாதா நமக்கு?! அப்படியிருக்கிறப்போ ஏன்?? இந்த காதலை நாம நமக்குள்ளே புதைச்சிட்டு அப்படியே கடந்துட்டா நமக்கு மட்டும்தான் வேதனை.. ஐ மீன் அந்த வேதனையும் காலத்தின் போக்கில் ‘ச்சே... இது ஜஸ்ட் சொல்லாத காதல்’ தானேன்னு மறைஞ்சிடும்.. பட் இரண்டு பக்கமும் மூழ்கிட்டு இருதலைக்கொள்ளி எறும்பா தவிக்கிற நிலை எதிரிக்கும் வரக் கூடாது... மே பீ கதைகள்ல பிரிக்கிற பெத்தவங்களை வில்லன் வில்லி போல சித்தரிக்கலாம், நிஜத்தில் அவங்களுக்கும் நிச்சயமா வருத்தம் இருக்கும்... அதை வெளியே காட்டிக்க மாட்டாங்க அவ்ளோதான்.. அதே போல நமக்கு வர்ற பார்ட்னரும் நல்லவங்களா அமைவாங்கன்னு அறுதியிட்டு சொல்ல முடியாது... நல்லவேளையா பரத், நிவேதா ரெண்டு பேருக்கும் நல்ல பார்ட்னர் அமைஞ்சதால் ஆறுதலா மூச்சுவிட முடிந்தது...

நிவேதா எதார்த்தத்தின் நகலா இருந்தாலும் இன்னும் கொஞ்சம் ட்ரை பண்ணியிருந்து இருக்கலாமோ ன்னு தோணுச்சு.. பரத், கவின் ரெண்டு பேருமே நைஸ்...

மிகவும் ஆழமான, அழுத்தமான, இதயத்தில் வலியை உண்டாக்கிய காதல் கதை... இன்னும் பல நாட்களுக்கு நினைவில் நின்று வருத்தும்...

போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள் எழுத்தாளரே...
 
Thank you so much dear for your beautiful review ❤️❤️❤️
Sorry just saw this review here
 
Top